KavithaigaL by Rasikas

Post Reply
arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

சிரிதரரே...
அத்தி பூப்பது போல் உம் ஒரு பா...
ஆகா!


அத்தனை பேராலும் ஆகாது, போம் :(
ஆகாத்தியமும் அராச‌கமுமாய், மருள் கொண்டு
இவர் தமிழர் என்ற பேரில் நாட்டை வெறும்
ஈ மொய்க்கும் பண்டமாக்கியதை உண்டும் களிப்பரோ?

உத்தம நாட்டின் உயிர் நாடி கொல்வரோ?
ஊக்கம், ஆக்கம் விட்டு-- பதவி, பொருள் தானோ?

எத்தர்கள் இவர் எத்தனை பேர்! எத்தனை அணி!
ஏமாந்தவர் எளிய மக்களே! பவர் ஹீரோ ஏது செய்வார்?

ஐயம் இதில் உண்டோ? அத்தனை தில்லு முல்லுகள்!
ஒத்துழைப்பென்பதிவர் அறிந்ததில்ல--ஐயன் காந்தி
ஓதினான் ஒத்துழையாமையென--அநீதி நீக்கிட--
ஔடதமென--அறிவீலிகளோ? நாட்டையழிப்பார்!

அக்கக்கக்கக்கக் :( ஏதும் கற்றோமில்லையே :(

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: KavithaigaL by Rasikas

Post by sridhar_ranga »

மிக்க நன்றி அரசியாரே!

அ முதல் ஃ வரை தங்கள் எண்ணங்கள் மிக அருமை.

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

அகர முதல எழுத்தெல்லாம் சாற்றுவது
ஆள்பவர்தம் அயோக்கிய தனமே அந்தோ !

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

.
இது நீரோ வாசிக்கும் பிடில் அல்ல

அக்கினி குஞ்சு .

பஞ்சிலே பற்றி , பின் அஞ்சு மாடி கடந்து ,
அஞ்சிலே ஒன்றை நோக்கி விசும்பிய
அஞ்சிலே ஒன்றை அணைக்க வந்த வண்டிகளில்
அஞ்சிலே ஒன்று போதுமான அளவு இல்லை.!
பஞ்சவடி நின்று வழி செல்வோர்க்கருள்
அஞ்சனை மைந்தா வாலறிவன் நீ உன்
நெஞ்சில் கூடவா கொஞ்சம் ஈரமில்லை ? ஈர்
அஞ்சு தலையோன் தலைநகர் , எழில்
கொஞ்சும் மதுரையுடன் சென்னையையும் எண்ணி
அஞ்சி நடுங்கிட செய்தனையே , நங்கைநல்லூரா !!

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

PB,
No idea about the context, but powerful lines (anjilE onRu et al). Please let me know..

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

Arasi thanks.The chennai silks at t nagar was completely destroyed in fire and all the five floors were destroyed. The fire engines which came to the spot did not have enough water. In panchavadi village near pondicherry there is ahuge statue of five faced Hanuman 36 feet tall like the one at nanganallor.
Now it appears that anjile onru petran has flown to London.unfortunate too bad.the ire of the fire is unabated.

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: KavithaigaL by Rasikas

Post by vgovindan »

Deleted

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: KavithaigaL by Rasikas

Post by vgovindan »

புதுமையின் மோகம் கண்ணை மறைக்கலாச்சே;
பதுமையெனப் பெண்ணைக் கருதி பிழைப்பு நடத்தலாச்சே;
ஒழுக்கமும் நெறியும் வெறும் ஏட்டுச் சுரைக்காயாச்சே;
பழித்ததை ஒழித்திட வள்ளுவன் பகன்றது வெறும் பழஞ்சொல்லாச்சே!

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

.
ஐயே, மெத்தப் பொருத்தம் !!


(1)
383
சேட்டைச் சாமியார் !

ஆட்டம் ஆடுவார்; வேடம் போடுவார்.
கூட்டம் கூட்டுவார்; நோட்டை நாடுவார்.
ஊட்டம் தேடுவார்; வேட்டை ஆடுவார் - எதிர்த்தால்
நீட்டிச் சாடுவார்; பின் ஓட்டம் பிடிப்பார் !

ப்ரத்யக்ஷம் பாலா,
27.02.2015.



(2)
382
ஆலயம் செல்வது சாலவும் நன்று

ஆலயம் இருக்கையில் ஆசிரமம் எதற்கையா ?
கோலத்தைக் கண்டு கைகட்டி நிற்கவா ?
சாமி இருக்கையில் சாமியார் எதற்கையா ?
சேமித்ததனைத்தும் தொலைத்து நிற்கவா ?

ஆலயம் செல்வது சாலவும் நன்று !

ப்ரத்யக்ஷம் பாலா,
27.02.2015.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: KavithaigaL by Rasikas

Post by thanjavooran »

Pratyaksham Bala,
Excellent !
Very meaningful words clearly portraying the current situation.
Vaazhga valamudan!
Thanjavooran
31 08 2017

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

P.B யின் முதல் கவிதையை தொடர்ந்து ஒரு அந்தாதி

……...பின் ஓட்டம் பிடிப்பார் .

ஓட்டம் பிடித்தவரை சட்டம் தேடி பிடித்தவுடன்
ஆட்டம் காட்டுவார் சமூக சேவகன் தான் என
ரோட்டில் பெரும் ரவுடிகள் கூட்டம் கூட்டுவார்
கொட்டம் அடித்து மூட்டுவார் பெரும் தீயை.

மூட்டிய தீ அடங்கும் முன்பே அவர் தோட்டத்து லீலைகள்
வீட்டுக்கு வீடு வண்ண T. V யில் காட்டப்பட
கிருட்டிணன் நான் பெண்ணை உய்வித்து விட்டேன் என்பார்.
கெட்ட கேட்டுக்கு கீதாச்சார்யன் பெயரா ? அப்

பெயரைச் சொல்லாதே அவர் பிறந்த சிறைக்கு
கயவன் நீ இருபது ஆண்டுகள் செல் எனும் நீதி கேட்டு
பயந்து பேடி அவன் விழுந்து புரண்டழுதாலும்
நயமிக்க வெறும் நடிப்பிது நாமறிவோம்
Last edited by Ponbhairavi on 31 Aug 2017, 15:32, edited 3 times in total.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

thanjavooran,
THANKS !

Ponbhairavi,
மிக்க அருமை !
ஆனால், ஜாக்கிரதை ! சாமியாரின் சீடர்களில் யாரேனும் ஓரிருவர் குரங்கு கோட்டான் என்றெல்லாம் சாடக்கூடும் !

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: KavithaigaL by Rasikas

Post by thanjavooran »

பேஷ் பேஷ் சரியான போட்டி.

ப்ரத்யக்ஷம் பாலா

நடிப்பிது நாம் அறிவோம் நன்றாகவே ஆனாலும்

அருமையான வரிகள்
.
வாழ்க வளமுடன்

தஞ்சாவூரான்
01 09 2017

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

தஞ்சாவூரான் ,

போட்டி இதில் ஏதுமில்லை . பாலா நீட்டிய baton ஐ வாங்கி கொண்டு (அந்தாதி ) நான் relay ரேஸ் ஓடினேன் அவ்வளவு தான்.பாராட்டைப் பகிர்ந்து கொள்கிறேன்.
நன்றி .

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

.
ஆசிரியர் தினம்
(ஸம்ஸ்க்ருத ஆசான் நினைவு)

ஊசி உடல், கொடும் உள்ளம், கடுமுகம் கொண்ட
ஆசிரியர் தினம் அடித்து உதைத்தது மறக்குமோ ?
ஏசி சுடும் மனம் எமன் குணத்துக்கும் நீசம்.
பேசி முடியாது ! பெரும் பேய்க்கதை போம் அது !

ப்ரத்யக்ஷம் பாலா,
05.09.2017.

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

ஆசான் ஒரு சாத்தான், அ ந்தோ!
ஈசனவன் செயலால், ஏனையோர்
நேசமிகு நல்லோராய் ஆசிரியராய்
வசை விடுத்து உம் மதி வளர்த்தனர்!

அவருக்கெல்லாம் வணக்கங்கள்...

Made me go back to my terror of teachers line up! And then to the great ones. Salutations to them!

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

arasi wrote: 05 Sep 2017, 20:36 ஆசான் ஒரு சாத்தான், அந்தோ! ...
Made me go back to my terror of teachers line up! ...
http://indiatoday.intoday.in/story/teac ... 41165.html

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

524
சாமியார் விட்ட பெருமூச்சு

நல்ல வேளை முடிந்தது நம்ம கேஸ் சென்ற ஆண்டே !
இல்லையெனில் நமக்கும் இருபதாண்டு கிடைத்திருக்கும்.
சொல்ல ஒரு பக்தரில்லை; சொர்ணமழை பொழிவாரில்லை.
மெல்லச் சில ஆண்டு தள்ளி மேலுலகம் ஓடிவிடலாம் !

ப்ரத்யக்ஷம் பாலா,
06.09.2017.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

525
ஒரே ஒரு ஊரிலே

எப்போதோ ஒரு ராசா
தப்பெல்லாம் செய்தவர்
அப்போதே மறைந்தவர்
அவரை
இப்போதும் துதிபாடி
ஒப்பிலாத் தலைவரென
எம்பிக் குதித்தாடுவர் !

ப்ரத்யக்ஷம் பாலா,
10.09.2017.

rshankar
Posts: 13754
Joined: 02 Feb 2010, 22:26

Re: KavithaigaL by Rasikas

Post by rshankar »

Pratyaksham Bala wrote: 10 Sep 2017, 06:15 525
ஒரே ஒரு ஊரிலே

எப்போதோ ஒரு ராசா
தப்பெல்லாம் செய்தவர்
அப்போதே மறைந்தவர்
அவரை
இப்போதும் துதிபாடி
ஒப்பிலாத் தலைவரென
எம்பிக் குதித்தாடுவர் !

ப்ரத்யக்ஷம் பாலா,
10.09.2017.
Priceless - The sad thing is that this could apply to so many rAgAngams... ;)

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

rshankar:
THANKS !

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

526
ஆசிரமவாசியின் அங்கலாய்ப்பு

கோடு கிழித்து என்னைக் குடிமை ஆக்கினரே !
ஆடு போல பட்டியில் அடைந்து கிடந்தேனே !
கேடுகெட்டு உழைத்துக் குலைந்து போனேனே !
காடு செல்லும் நேரம் விழித்தென் பயன் தேவே ?

ப்ரத்யக்ஷம் பாலா,
28.05.2017.

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »


Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெயிது
ஓங்கு பெரும் சென் நெல் ஊடு கயல் உகள
ஓங்கு பெரும்சென்நெல் குத்தி அரிசி யாக்கி வெண்
பொங்கல் உண்ணும்போது மூட நெய் முழங்கை வழி வார
நங்காய் உணவை நீ நன்றாய் தான் பாடி வைத்தாய்
ஆயிரம் ஏக்கர் நிலம் உனக்கு அடியார் எழுதி வைத்தார்
ஆயிரம் வாரணம் சூழ வந்தாலும் இவ்விளை நெல் போதுமே
ஆயினும் உன்னைப் பட்டினி போடுகின்ற பாவிகளை
கோயிலில் இருக்கும் நீ தண்டிக்க தாமத மேன்?

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

527
என் சொல

தேடிப் பலகாத தூரம் சென்று
வாடிப் பொருள் மிகச் செலவு செய்து
கூடிப் பழம் பெருமை பேசி ஆட
நாடி வரும் கூட்டம் குறைந்து போனதே !

ப்ரத்யக்ஷம் பாலா,
19.09.2017

rshankar
Posts: 13754
Joined: 02 Feb 2010, 22:26

Re: KavithaigaL by Rasikas

Post by rshankar »

Ponbhairavi wrote: 15 Sep 2017, 11:15 தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெயிது
ஓங்கு பெரும் சென் நெல் ஊடு கயல் உகள
ஓங்கு பெரும்சென்நெல் குத்தி அரிசி யாக்கி வெண்
பொங்கல் உண்ணும்போது மூட நெய் முழங்கை வழி வார
நங்காய் உணவை நீ நன்றாய் தான் பாடி வைத்தாய்
ஆயிரம் ஏக்கர் நிலம் உனக்கு அடியார் எழுதி வைத்தார்
ஆயிரம் வாரணம் சூழ வந்தாலும் இவ்விளை நெல் போதுமே
ஆயினும் உன்னைப் பட்டினி போடுகின்ற பாவிகளை
கோயிலில் இருக்கும் நீ தண்டிக்க தாமத மேன்?
Very samayOcitam!!

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

527
கதைப்பு

செத்துச் சுவர்க்கம் தேட
சத்தம் களேபரம் தாண்டி
வெத்துக் கதைகள் வேண்டி
நித்தம் செல்லப் போமோ ?

ப்ரத்யக்ஷம் பாலா,
20.09.2017
Last edited by Pratyaksham Bala on 20 Sep 2017, 09:39, edited 1 time in total.

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

rshankar,
Thanks

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

.
கதைப்பு = கதா காலட்சேபம்

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

deleted.
Last edited by Pratyaksham Bala on 24 Sep 2017, 05:59, edited 1 time in total.

rshankar
Posts: 13754
Joined: 02 Feb 2010, 22:26

Re: KavithaigaL by Rasikas

Post by rshankar »

Pratyaksham Bala wrote: 23 Sep 2017, 18:12 .
கவிதைக்கு ஒரு கரு
http://indianexpress.com/article/india/ ... t-4857374/
Was this the link you meant to post?

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

528
அடுத்தது

பழம் தின்னும் ராசா பாழ் இடம் போவரோ ?
தொழும் இனிய தலத்திலே தொலைந்ததோ புனிதம் ?
அழும் குரல்கள் நித்தமும் அனலாய் தகிக்குமோ ?
விழும் மந்தைக் கூட்டமும் வேறு இடம் ஓடுமோ ?

ப்ரத்யக்ஷம் பாலா,
26.09.2017.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

529
பணமா பெரிது ?

ஆஸ்தி கரைந்த பின்னே அலறி என்ன பயன் ?
நாஸ்தி நாஸ்தி என்றே நாளெல்லாம் குமுறிக் கிட.
உண்டியலில் கொட்டியது உலகுக்குத் தெரியாது.
விண்டாலும் ஏற்காது ; வீணே புலம்பாதே.

ப்ரத்யக்ஷம் பாலா,
09.10.2017.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

214
தலைவன்

ஆறு படை வீடுடையோன் இங்கிருக்க
வேறு விடை தேடவும் வேண்டுமோ ?
கூறு குகன் வேடவன் கோமகன் - மயில்
ஏறி வரும் வேலவனே தலைவனென !

ப்ரத்யக்ஷம் பாலா,
12.07.2012.

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

பதினோரு தபால் தலைக்கு
பதினோரு வரியில் தலை வணக்கம்
வண் ண தபால் தலையில் தம் தலை
கண் ட தலைவர்கள் எண்ணிலார் ,எனினும்
மண் டோதரி கணவன் தலைகள் பத்தினையும்-கோ
தண் டத்தால் துண்டித்த கோசலை தலை மகன்
விண் ண்ணோர் தலைவன் பத்து ரதன் புத்திரனின்
பண் பு மிகு வரலாற்றை தலையான கலை நயத்தில்
பணம் பத்தின் பாதி விலையில் தலைகள் பத்தும்
பணம் பத்துடன் பாதி கூட்டிய விலையில் தலை நடுவில்
கண் கவர் சித்திரமாய் திகழும் தபால் தலைகள் !!
மண் வந்த அவதாரம் பத்தில் தலை சிறந்த திது - கார்
வண் ண தலைவனை நாம் தலை தாழ்த்தி வணங்கிடுவோம்.
Picture of stamps in
https://drive.google.com/file/d/0B85HwZ ... sp=sharing

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: KavithaigaL by Rasikas

Post by thanjavooran »

Ponbhairavi,
Excellent! I like the way the letter 'Na' garam is handled.
With wishes,
Thanjavooran
14 11 2017

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

thanjavooran,
thanks. very kind of you
ponbhairavi

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

மாயன், கானக் கண்ணன் செய்யும் சாலம்!


சாதி மண் விளையும் பயிர்களுக்குண்டோ?
விதி! மண் மறை மனிதர்க்குத்தானோ?
வாதிடவும், பகைக்கவுமே சாதியோ?
சாதி, சாதியென்று சாதித்ததென்னவோ? சுய
வாதியோ? பாதியும் பாலிடிக்ஸோ? மன‌
வியாதி கொண்டவர் போல் நடந்திடும்
மாதிரி ஏனோ? எம் முறைகளெல்லாம்
காதில் விழாது நடப்பதும் ஏனோ?
மீதிக் கதை என்னவோ? நீதி விளங்குமோ?
Last edited by arasi on 04 Dec 2017, 14:52, edited 1 time in total.

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

deleted...

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: KavithaigaL by Rasikas

Post by thanjavooran »

மிக்க அருமை !

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

விஷமக்கார கண்ணன் பொல்லாத
விஷமக்கார கண்ணன்
விளம்ப கால ராகம் பாடி விஸ்தாரமாய் ஸ்வரமும் பாடி
நாளுக்கொரு புரட்சி செய்யும் நந்த கோபாலன்---அவன்

பக்கத்து தெரு பெண்ணை அழைப்பான்
தலை கீழாக பாட்டு ஒன்று பாட ச்சொல்லுவான்
எனக்கது தெரியாதென்றால் தன்
கைகள் ரெண்டை கீழே ஊன்றி காலை மேலே தூக்கி நின்று
சிரசாசன வித்தை காட்டி மூச்சும் பாட்டும் இழுத்து பாடும் ---(-வி )

பாடும் போது பேசக்கூடாது -பேசிவிட்டால்
அட்டகாசம் தாங்க வொண்ணாது
இது முறையோ என்று யாரும் கேட்கக்கூடாது
சும்மா ஒரு பேச்சுக்காக சம்பிரதாயம் இல்லை என்றால்
அரியக்குடி செம்மங்குடி அத்தனை பேரும் பார்ப்பான் என்பான் -


குயிலின் பாட்டை புகழக்கூடாது ---புகழ்ந்துவிட்டால்
பொங்கும் சீற்றம் தாங்க வொண்ணாது
அதன் பிறப்பை சுட்டிக்காட்டி பேசி
ஜாதி சேற்றை வாரி தூற்றி
சிவப்புகொடி பஜனைக்கு ஜால்ரா போட செல்லும் அந்த --


பேத்தல் காடு சங்கட கவி .

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: KavithaigaL by Rasikas

Post by thanjavooran »

Ponbhairavi Avl,
Excellent ! Nicely hit the present scenario with your cleaver words.
With wishes,
Thanjavooran
04 12 2017

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

Indeed,Thanjavooran!
And your typo adds more to it--clever, cleaver-like :) veTTonRu, thuNDiraNDu!
May be, it wasn't a typo, after all :)

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: KavithaigaL by Rasikas

Post by thanjavooran »

Araseeee...Avl,
Really the needle not only pierced but also cut the banana into two.
With wishes,
Thanjavooran,
05 12 2017

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

deleted
Last edited by Ponbhairavi on 05 Dec 2017, 11:36, edited 1 time in total.

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

மிக்க நன்றி தஞ்சாவூரான். cleaver எனக்கு நினைவு படுத்தியது "ஆப்பு வைப்பது " என்பதை
நன்றி Arasi. இந்த விஷமக்கார கண்ணனை எழுதியது சங்கட கவி.. or may be vishamakkaara kannan is an Inspiring "title "

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

விளம்ப காலக் கண்ணனானாலும்
விளம்பரக் கால துரிதனவன், எங்கும்
களேபரம் செய்யும் கலை வாணன்--
களமிறங்கி, சொற்போர் புரிந்திட‌--கலை
வளம் விட்டு, எங்கோ ஒதுங்கியவன்

தேர்ந்த கலை விடுத்து, ஏதேதோ நினைந்து,
தாழ்ந்தவர் தம் தூதனெனத் தன்னை நினைந்து
பாய்ந்து கிளை தாவுகிறார், பலதும் பேசுகிறார்
மாய்ந்து போகிறாரோயென நினைந்தால்
பாய்ந்து வருகிறார் மீண்டும்! புதிய புதிருடன்!

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

மதி நிறையும் நன்னாள் ? திருப் பள்ளியெழுச்சி

மாதங்களில் நான் மார்கழி என்றார் கிருஷ்ணர்
பேதம் இன்றி சென்னை சந்து பொந்தெல்லாம் நல்
கீதம் ஒலிக்குதடா நந்தலாலா .உன் திறனில்
பாதி கூட இல்லாதவர்களுக்கும் பத்துக்கும் மேல் கச்சேரி
காதில் பஞ்சை கெட்டியாய் அடைத்துக்கொண்டு
கதவையும் சாத்திக்கொண்டு பொய் தூக்கம் (துக்கம் ) ஏன் ?

இசை வீசை என்ன விலை என கேட்கும் கட்சிகள்
நாசத்துக்கே வழி சொல்லும் நம்பிவிடாதே அவர்கள்
நேசம் உன் மூளையை சலவை செயதுவிடும் உஷார்
மோசடி விருதுகள் கடத்தப்படும் குழந்தைக்கு தரும் சாக்லேட்
தேச அடுத்த ஜனாதிபதி நம்ம ஆள் தான் அப்போ இப்போ
லேசாக கை நழுவிய பாரத ரத்னா உனக்குத்தான் - எம் எஸ் க்கு இணை- என்று
ஆசை காட்டி பேசி மயக்குவார்கள் வேசிகள் போல்
சாசுவதத்தை உனக்கு தரக்கூடியது உன் வசம் உள்ள
இசை செல்வம் மட்டும் தான் ;இதையே நம்பு .

குளியல் அறைமேல் கோபித்துக்கொண்டு பொறம்போக்கு குப்பம் வயல்
வெளி என்று போவதால் குளியல் அறைக்கு நஷ்டமில்லை

எல் ஜி பெருங்காய டப்பா வெகு நாள் திறந்து கிடந்தால் வாசம் பறந்துவிடும்
நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் ஏறி வதுண்டோ ?

பிள்ளாய் எழுந்திராய் இன்னும் என்ன பேர் உறக்கம் ?
உள்ளம் மகிழ கூடி இசை பாடேலோ ரெம்பாவாய் .

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

திசை தேடி...

இசை ஓர் இசைவான வெள்ளமெனில்,
வசை பாட வைக்கும் அரசியல், சாக்கடை!
நசியுமோ திறனும், உன் குரல் வளமும்
திசை தெரியாதலைக்கும் அவலங்களில்?

'முத்துக தம்பூர பட்டி' மூத்தோர் இசையோ,
முத்தென ஒலிக்கும் புதிய கவியோ-- நீ
பித்துக் கொள்ள‌ப் பாடுவது விடுத்தே
'பெத்த' பேச்சுப் பேசிப் பேதலிப்பாயோ?

வித்தகன் நீ! எத்தனை திறனுனக்குண்டோ,
அத்தனையும் 'அம்போ'வென்றழித்திடுவாயோ?

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: KavithaigaL by Rasikas

Post by vgovindan »

அதுவும் இதுவும்

அதுவே இதுவென்றறிந்து
இதுவும் அதனில் கரைந்து
அது அதுவாகவே நிற்பது
மெதுவாய்த் தெளிவுற்றதுவே!

(Inspired by the poem of Sri A Srinivasa Raghavan - posted by Pasupati - #3381 (Nostalgia)

Post Reply