Kannan Kadhai Amudham (in tamil script)

sankark
Posts: 2338
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

நீருணர இவ்வுருவில் யான்வந்தேன் மெய்ப்பொருளே வந்ததென்றுச் சொல்லித்தன்
பேருருவஞ் சுருக்கியோர் சிசுவானான் மாயவன் அவன்மாயை கோகுலத்து
நந்தன் இல்லத்தே தான்பிறந்தாள் அந்நேரம் தாழ்திறந்த காவலரும்
சிந்தை தான்மயங்கிச் சோர்ந்தார் மற்றோர் தூக்கத்திற் காட்பட்டார் (௬௭)

sankark
Posts: 2338
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

வான்திறந்து கொட்டியது தூரத்தே இடிமுழக்கம் சேயவனைச் செய்யவனைத்
தான்சுமந்து செல்கின்றான் தந்தை வசுதேவன் ஆயிரந் தலையுடையான்
நானிலத்து நாயகனுக் கோர்குடையாய்த் தான்தொடர்ந்தான் சேவை நனிசெய்து
வானிழிந்த நீர்பெருகிப் பாய்ந்தோடக் காளிந்தி மாகடல் தனையொத்தாள் (௬௮)

அன்றொருநாள் கோசலத்து கோமகற்கு வழிகொடுத்த ஆழியினைப் போல்யமுனை
குன்றெடுத்துப் பின்னாளில் கோகுலத்தைக் காத்தவனைத் தாங்கும் யாதவன்
தடையின்றிச் செல்லத்தன் வெள்ளத்தின் நடுவில் வழியொன்று ஏற்படுத்தி
குடைபிடித்த நாகத்தைப் போலிறைக்குத் தன்பங்காய் நற்சேவை செய்தனளே (௬௯)

காரிருள் கவிந்திருக்க வீட்டிலுள்ளோர் தூங்கையி லேவசுதே வனருள்
வாரிதியை ஆங்கே யசோதை யின்புறம் கிடத்தியவள் பெண்மகவைத்
தானெடுத்து வெஞ்சிறை அடைந்தாங்கே தேவகியின் புறம்வைத்து முன்போல்
தானிருந்தான் மாதவனின் மாயை கண்மறைக்க யாருமிதைத் தானுணரார் (௭௦)

With that canto 3rd is wrapped up. Be back after a little break..

arasi
Posts: 16789
Joined: 22 Jun 2006, 09:30

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by arasi »

Look forward to more!
Have been reading a little at a time.
Take that break. We all need one, it seems ;)
We will come back with renewed energy to our writing on the forum...

sankark
Posts: 2338
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

Felt that the 70th verse didn't have a good flow, so revisited it..

கும்மிருட்டு சூழ்ந்திருந்த ஊருறங்கும் நேரமதில் தேவகியின் ஆவியினை
நம்பொருட்டு பூமியிலே வந்தவனைத் தன்னுயிரை நந்தனவன் வீட்டினிலே
தான்விடுத்து மாதவங்கள் செய்யசோதை பெண்மகவைக் வெஞ்சிறைக்கு கொண்டுவந்தான்
வான்முகிலின் வண்ணமுடை யான்மாயம் ஏனையோர் கண்மறைத்த தேயம்மா (௭௦)

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by cmlover »

Your Canto numbers follow Bhagavatha puranam or what?

sankark
Posts: 2338
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

cml, each chapter of the SB Canto 10 is a kaandam here. So we have covered 10.1, 10.2 & 10.3 so far.

sankark
Posts: 2338
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

காண்டம் ௪ (அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

கார்வண்ணன் தந்தை மீண்டும் வெஞ்சிறை புக்கவை யேமழை
நீர்பொழி மேகமும் ஓய்ந்தன மூடின ஆம்பெருங் கதவுகாவல்
வீரரும் மயக்கமற்றார்ம்போய் வீலெனக் குழவி அழும்குரல் மடுத்துத்
தீரனாம் போயவேந்தன் கஞ்சன் தனக்குச் சொன்னரேவி ரைந்துசேதி (௭௧)
Last edited by sankark on 08 Jul 2012, 21:43, edited 1 time in total.

arasi
Posts: 16789
Joined: 22 Jun 2006, 09:30

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by arasi »

Welcome back!
Dramatic opening verse...

sankark
Posts: 2338
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

காலனவன் வந்தான் தன்னுயிரைத் தானெடுக்க என்றயர்ந்த தலைகலைந்த
கோலமதாய் மாமன்சி றைபோந்தான் முக்குணமும் மூவிடமும் முக்கூறு
காலமதும் தான்கடந்த மாயவனைத் தான்பயந்த மாதவளோ கண்கலங்கி
ஞாலமதில் வேறெதுவும் வேண்டாது பெண்சிசுவின் வாழ்வதையே யாசித்தாள் (௭௨)

sankark
Posts: 2338
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

One more

என்முன்னே தான்பிறந்த தீரநின் பெற்றி இவளழிய ஓங்கிடுமோ
நன்மகவைப் பற்றியென தாயுளெல்லாம் இன்பமுற விட்டிடுவாய் பின்னொருநாள்
கண்மணியாய்த் தான்வருவாள் உன்னில்லம் ஈரிரண்டும்மூவிரண்டும் இன்னொன்றும் தானிழந்த
பெண்ணெனக்கு இப்பரிசை நீதருவாய் என்றழுது வேண்டினளே நெஞ்சுருக (௭௩)
Last edited by sankark on 11 Jul 2012, 14:09, edited 1 time in total.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by cmlover »

இன்பமுற விட்டிடுவாய் பின்னொருநாள்
கண்மணியாய்த் தான்வருவாள் உன்னில்லம்
Beautiful imagination of the cultural practice...

sankark
Posts: 2338
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

விழிநீர் பொங்கநின்ற தங்கைதன் கையணைந்த பெண்சிசுவைக் கஞ்சன்தீ
விழியால் சுட்டெரித்துத் தன்னாவி போக்கவந்த தென்புலத்து தெய்வமிதைப்
பழிதீர் நாளிந்த நாளென்று தானுவந்து தேவகியைத் கொடுஞ்சொல்லால்
இழித்தான் பறித்தானே கையிருந்து தாய்கலங்கக் கல்மனத்துப் பாவியையோ (௭௪)

arasi
Posts: 16789
Joined: 22 Jun 2006, 09:30

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by arasi »

Lovely...

sankark
Posts: 2338
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

மாயவனின் மாயமொரு பெண்மகவாய் வந்ததென்று தானுணரா மூர்க்கனவன்
தாயவளின் தாளவொன்னாண்ணா ஆந்துயரம் ஓர்நிமிடம் சிந்தியாத தூர்த்தனவன்
நேயமிலா மாமனவன் தேவகியின் கண்மணியைக் கால்பிடித்து கற்சுவரில்
தேயவைத்து கூற்றுவன்பால் சேர்க்கவெண்ண காணவருங் காட்சியினைத் தான்கண்டான் (௭௫)
Last edited by sankark on 16 Jul 2012, 22:35, edited 1 time in total.

arasi
Posts: 16789
Joined: 22 Jun 2006, 09:30

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by arasi »

The lines just flow...

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by cmlover »

It must be
"தாளவொண்ணா"
"சேர்க்கவென்ன"
ணகர னகரங்கள் தமிழின் சிறப்பெழுத்துக்கள்...

sankark
Posts: 2338
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

தாளவொண்ணா - will check

சேர்க்கவெண்ண - this is correct; it is சேர்க்க + எண்ண (thought) not சேர்க்க + என்ன (what).

arasi
Posts: 16789
Joined: 22 Jun 2006, 09:30

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by arasi »

I noticed the thALavoNNA (as thALavonnA) and wondered if it was a transliteration error.

sankark
Posts: 2338
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

Been totally occupied with work and other stuff to do. So, it will be a week or so before I come back with more.

sankark
Posts: 2338
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

சந்தனம் குழைத்த கொங்கை மீதில் நன்மலர்மா லையாடப்
புந்தியில் கடையன் முன்னே அணிமணி பலவும் சூடி
வந்தனை புரியும் சித்தர் சாரணர் உரகர்சூ ழத்துர்க்கை
சிந்தனைக் மயங்கத் தானே பல்லாயு தம்தாங்கி நின்றாள் (௭௬)

மூடனே கொடியாய் என்னைக் கொல்லவும் ஆமோ உன்னால்
வாடின பயிருக் கெல்லாம் நீரினை ஒத்தான் இன்று
தேடினால் கிடைக்கா வண்ணம் மாயமே செய்து வேறோர்
பீடுடை குடிலில் தன்னை ஒளித்தனன் கேளாய் என்றாள் (௭௭)

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by cmlover »

புந்தியில் கடையன் ..
nice concept कम्sen(se) ...

sankark
Posts: 2338
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

மறைபொருள் அவனைக் கொல்ல நீநினைப் பதுநடக் குமோடா
குறையிலா உடன்பிறந் தவளை வாட்டினாய் பெருமை உண்டோ
இறையவன் மறைத்தான் தன்னை காலத்தில் வீழ்வாய் நீயும்
பறைகிறேன் உனக்கு நானும் மேலும் கொடுமைகள் செய்திடாதே (௭௮)

அங்ஙனம் உரைத்த துர்க்கை பாரினில் பலவி டத்தில்
தங்கினாள் மனிதர் எல்லாம் பூசனை புரிந்தார் நித்தம்
காசியில் அவள்பேர் அன்ன பூரணி என்றே ஆகும்
காசிலா அவளை மக்கள் காளிஇ எனவும் சொன்னார் (௭௯)

sankark
Posts: 2338
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

தாதுறு மலர்கள் சூடிக் கேள்வனின் மடியில் இன்பம்
தீதிலா வகையில் துய்த்துக் கோடிநாள் மகிழ வந்த
கோதிலா வசுதே வன்ம னையாள் அண்ணன் கேட்டப்
போதிலே தளைகள் நீக்கிப் பின்வரும் மொழிகள் சொன்னான் (௮௦)

sankark
Posts: 2338
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

நாயினும் கடையேன் யானே ஓர்நலம் புரியா நின்றேன்
மாயினும் விலகா தன்றோ பேரிழிச் செயலின் தாக்கம்
தீயினும் கொடியன் என்னை அண்ணனாய் அடைந்த பெண்ணே
தாயினும் மிகுந்து பரிவாய்க் கோபமே விடுதி என்றான் (௮௧)

sankark
Posts: 2338
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

தயவிலாக் குரூரன் யானுன் னையுமு றவைநட் பையென்
நயமிலா செயல்கள் மூலம் தள்ளினேன் புறத்தே இன்று
அந்தணன் ஒருவன் தன்னைக் கொன்றவன் நிலையில் வாழ்வில்
அந்தகன் பிடியில் எங்கே செல்வனோ அறியா நின்றேன் (௮௨)

arasi
Posts: 16789
Joined: 22 Jun 2006, 09:30

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by arasi »

Well-wrought words of kamsan's ruing...

sankark
Posts: 2338
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

விதியது உரைத்தது ஒருசொல் லேபொய் யாதென நினைத்து
மதியது மழுங்கிய நிலையில் என்தங் கைகருப் பிறந்த
மதிமுக மலரெல் லாமழித் ததோரென் போற்பா வஞ்செய்
பதியொரு பதியோ வென்றவ னுமுள்ளம் நைந்தே சொன்னான் (௮௩)

arasi
Posts: 16789
Joined: 22 Jun 2006, 09:30

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by arasi »

Waiting for the next one!

sankark
Posts: 2338
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

அவரவர் விதிவழி அடைந்தனர் கதியென இருவரும் உணர்வது
தவறல கடவுளின் கழிபெரும் இயக்கமே புவிமிசை மனிதரின்
வளர்ச்சியும் தளர்ச்சியும் பலப்பல புலம்பலில் அடைவமோ அமைதியே
களங்கமில் குணத்தரே நிலமிசை உயிர்களும் மடிவது இயல்பதே (௮௪)

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by cmlover »

Is it Devaki saying this?
Did she forgive Kamsan?
How can she address him as களங்கமில் குணத்தரே ?
The உரிச்சொல் does not participate in புணரியல்
It must be 'பல பல'....

sankark
Posts: 2338
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

cml, இவையாவும் கம்சனின் கூற்று.

சிவந்தமண் தனிலே தோன்றிப் பின்சிதை வுறும்பாண் டங்கள்
தவத்திரு முனிவர் ஆடை வண்ணமண் உருவே ஆகும்
அழிவுறும் உடலின் உள்ளே தங்கிடும் அழிவில் லான்மா
அழிவன அழிந்த பின்னும் நிற்குமே முடிவில் எஞ்சி (௮௫)

sankark
Posts: 2338
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

cml - பலப்பல என்பதே சரி (வணங்கும் துறைகள் பலப் பலவாக்கி மதிவிகற்பால் பிணங்கும்
சமயம் பலப்பலவாக்கி அவை அவை தோறும் அணங்கும் பலப்பல
ஆக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்” (திருவிருத். 69))

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by cmlover »

சிவந்தமண் தனிலே தோன்றிப் பின்சிதை வுறும்பாண் டங்கள்
தவத்திரு முனிவர் ஆடை வண்ணமண் உருவே ஆகும்
very beautiful உவமை
By the by with analogy will it be சிலச்சில
(never seen it!)

sankark
Posts: 2338
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

because it becomes சிற்சில. And பற்பல would also be correct instead of பலப்பல, I guess.

arasi
Posts: 16789
Joined: 22 Jun 2006, 09:30

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by arasi »

azhagAna uvamai...

sankark
Posts: 2338
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

தன்னுடல் தனதெனத் தனதுயிர் நிலையென நினைத்து மாந்தரிம்
மண்ணிலே மனைவியே மக்களே மருவிய சுற்றமே அவரொடு
சேர்வது பிரிவது எனப்பல மயக்கமே அறாததால் நசையறத்
தேர்வது நடக்குமோ சுழலிலே விடுபடக் கிடைக்குமோ மருகரே (௮௬)

என்னரும் தங்கையே தேவகி கேளொரு சேதியே நலம்பல
உன்னிடம் சேருமே உன்னரும் பிள்ளை கள்தம் வினைப்பயன்
தன்னை யேஉற் றனர்வருத் தமேதவிர் உலகினில் அவரவர்
தன்வினைப் பயன்தரும் நன்மை யும்தீ மையும் பெறுவரே (௮௭)

arasi
Posts: 16789
Joined: 22 Jun 2006, 09:30

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by arasi »

Sankark,
Beautifully said.
Are there more verses, though the story has been told? Some summing up lines are in the works, I guess...

sankark
Posts: 2338
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

Quite occupied and going to take a week or so before I come back to this.

arasi - doing it as I go without any planning on which verse(s) to use. So, I also don't know how it will go :)

arasi
Posts: 16789
Joined: 22 Jun 2006, 09:30

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by arasi »

You sound like me ;)

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by cmlover »

Family/works schedule and health (myself) comes first :D

arasi
Posts: 16789
Joined: 22 Jun 2006, 09:30

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by arasi »

We don't know how it will go--
Willy nilly, will it really?
We will wait and see--

Will it, want it?
Whether or not,
We shall know

As with all other
World play of His--
Our word play and all--
We will it or not,
Will play out--

That's the thing,
The essence--
Of kaNNan kadai amudam...

sankark
Posts: 2338
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

கண்கள் நன்கு பனிக்கத் தன்குற்ற மேயுணர்ந் தகஞ்சன்
பெண்குலப் பெருமை சாற்றும் தன்தங் கையின் பதியின்
பாதம் தாழ்ந்தனன் குறைகள் பொறுத்துக் கொடுஞ்செயல் மறப்பீர்
போதம் பொங்கிடும் புனிதர் நீவிரென் றரற்றியவா றேமாதோ (௮௮)

sankark
Posts: 2338
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

ஈரைந்து மாதம் தான்சுமந் தமகவெல் லாமழித்த தன்தாய்
ஈரைந்து மாதம் தான்சுமந் தமகவின் மருகல் தங்கையின்
மனக்குமு றலாற்றிவி டமருக னுந்தன் உள்ளத்துக் கனன்ற
சினமே தவிர்ந்தாங் கேசில வார்த்தை சொல்ல லானான் (௮௯)

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by cmlover »

What did he say?
Just curious...

arasi
Posts: 16789
Joined: 22 Jun 2006, 09:30

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by arasi »

kaNNan thoDar kadai pOl nam Avalaith thUNDugiRAn!

sankark
Posts: 2338
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

எனதிது உனதது எனப்பிரித் தறிகுவர் மதியிலா மனிதர்கள்
தனதென பிரிதென தானென பிரிதென இயலுவ தெதுவுமே
ஒருபொருள் பலவுரு உடையது எனமனம் தெளிந்தபின் உலகிலே
ஒருபொழு தாகிலும் மனமது கலங்குமோ எனவுரை இயம்பினான் (௯௦)

arasi
Posts: 16789
Joined: 22 Jun 2006, 09:30

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by arasi »

Beautiful...

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by cmlover »

So instead of being contrite he philosophizes!
சாத்தான் வேதமோதுகிறது|
(The Devil quoting Vedanta|)

arasi
Posts: 16789
Joined: 22 Jun 2006, 09:30

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by arasi »

CML,
Whatever.
In the din of today's hundreds of godly kadai solligaL(upanyAskargaL), these words are worth pondering over and are inspiring enough to try and live up to, if only we can strive to do so and succeed!
avan mAyAvi enbadaRindadE. anda mAyaminRi nAmilli, ivvulagillai...
Last edited by arasi on 19 Sep 2012, 00:38, edited 1 time in total.

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sridhar_ranga »

sankark wrote:எனதிது உனதது எனப்பிரித் தறிகுவர் மதியிலா மனிதர்கள்
தனதென பிரிதென தானென பிரிதென இயலுவ தெதுவுமே
ஒருபொருள் பலவுரு உடையது எனமனம் தெளிந்தபின் உலகிலே
ஒருபொழு தாகிலும் மனமது கலங்குமோ எனவுரை இயம்பினான் (௯௦)
Brilliant!

Post Reply