Kannan Kadhai Amudham (in tamil script)

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by arasi »

Well-wrought words of kamsan's ruing...

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

விதியது உரைத்தது ஒருசொல் லேபொய் யாதென நினைத்து
மதியது மழுங்கிய நிலையில் என்தங் கைகருப் பிறந்த
மதிமுக மலரெல் லாமழித் ததோரென் போற்பா வஞ்செய்
பதியொரு பதியோ வென்றவ னுமுள்ளம் நைந்தே சொன்னான் (௮௩)

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by arasi »

Waiting for the next one!

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

அவரவர் விதிவழி அடைந்தனர் கதியென இருவரும் உணர்வது
தவறல கடவுளின் கழிபெரும் இயக்கமே புவிமிசை மனிதரின்
வளர்ச்சியும் தளர்ச்சியும் பலப்பல புலம்பலில் அடைவமோ அமைதியே
களங்கமில் குணத்தரே நிலமிசை உயிர்களும் மடிவது இயல்பதே (௮௪)

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by cmlover »

Is it Devaki saying this?
Did she forgive Kamsan?
How can she address him as களங்கமில் குணத்தரே ?
The உரிச்சொல் does not participate in புணரியல்
It must be 'பல பல'....

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

cml, இவையாவும் கம்சனின் கூற்று.

சிவந்தமண் தனிலே தோன்றிப் பின்சிதை வுறும்பாண் டங்கள்
தவத்திரு முனிவர் ஆடை வண்ணமண் உருவே ஆகும்
அழிவுறும் உடலின் உள்ளே தங்கிடும் அழிவில் லான்மா
அழிவன அழிந்த பின்னும் நிற்குமே முடிவில் எஞ்சி (௮௫)

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

cml - பலப்பல என்பதே சரி (வணங்கும் துறைகள் பலப் பலவாக்கி மதிவிகற்பால் பிணங்கும்
சமயம் பலப்பலவாக்கி அவை அவை தோறும் அணங்கும் பலப்பல
ஆக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்” (திருவிருத். 69))

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by cmlover »

சிவந்தமண் தனிலே தோன்றிப் பின்சிதை வுறும்பாண் டங்கள்
தவத்திரு முனிவர் ஆடை வண்ணமண் உருவே ஆகும்
very beautiful உவமை
By the by with analogy will it be சிலச்சில
(never seen it!)

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

because it becomes சிற்சில. And பற்பல would also be correct instead of பலப்பல, I guess.

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by arasi »

azhagAna uvamai...

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

தன்னுடல் தனதெனத் தனதுயிர் நிலையென நினைத்து மாந்தரிம்
மண்ணிலே மனைவியே மக்களே மருவிய சுற்றமே அவரொடு
சேர்வது பிரிவது எனப்பல மயக்கமே அறாததால் நசையறத்
தேர்வது நடக்குமோ சுழலிலே விடுபடக் கிடைக்குமோ மருகரே (௮௬)

என்னரும் தங்கையே தேவகி கேளொரு சேதியே நலம்பல
உன்னிடம் சேருமே உன்னரும் பிள்ளை கள்தம் வினைப்பயன்
தன்னை யேஉற் றனர்வருத் தமேதவிர் உலகினில் அவரவர்
தன்வினைப் பயன்தரும் நன்மை யும்தீ மையும் பெறுவரே (௮௭)

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by arasi »

Sankark,
Beautifully said.
Are there more verses, though the story has been told? Some summing up lines are in the works, I guess...

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

Quite occupied and going to take a week or so before I come back to this.

arasi - doing it as I go without any planning on which verse(s) to use. So, I also don't know how it will go :)

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by arasi »

You sound like me ;)

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by cmlover »

Family/works schedule and health (myself) comes first :D

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by arasi »

We don't know how it will go--
Willy nilly, will it really?
We will wait and see--

Will it, want it?
Whether or not,
We shall know

As with all other
World play of His--
Our word play and all--
We will it or not,
Will play out--

That's the thing,
The essence--
Of kaNNan kadai amudam...

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

கண்கள் நன்கு பனிக்கத் தன்குற்ற மேயுணர்ந் தகஞ்சன்
பெண்குலப் பெருமை சாற்றும் தன்தங் கையின் பதியின்
பாதம் தாழ்ந்தனன் குறைகள் பொறுத்துக் கொடுஞ்செயல் மறப்பீர்
போதம் பொங்கிடும் புனிதர் நீவிரென் றரற்றியவா றேமாதோ (௮௮)

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

ஈரைந்து மாதம் தான்சுமந் தமகவெல் லாமழித்த தன்தாய்
ஈரைந்து மாதம் தான்சுமந் தமகவின் மருகல் தங்கையின்
மனக்குமு றலாற்றிவி டமருக னுந்தன் உள்ளத்துக் கனன்ற
சினமே தவிர்ந்தாங் கேசில வார்த்தை சொல்ல லானான் (௮௯)

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by cmlover »

What did he say?
Just curious...

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by arasi »

kaNNan thoDar kadai pOl nam Avalaith thUNDugiRAn!

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

எனதிது உனதது எனப்பிரித் தறிகுவர் மதியிலா மனிதர்கள்
தனதென பிரிதென தானென பிரிதென இயலுவ தெதுவுமே
ஒருபொருள் பலவுரு உடையது எனமனம் தெளிந்தபின் உலகிலே
ஒருபொழு தாகிலும் மனமது கலங்குமோ எனவுரை இயம்பினான் (௯௦)

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by arasi »

Beautiful...

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by cmlover »

So instead of being contrite he philosophizes!
சாத்தான் வேதமோதுகிறது|
(The Devil quoting Vedanta|)

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by arasi »

CML,
Whatever.
In the din of today's hundreds of godly kadai solligaL(upanyAskargaL), these words are worth pondering over and are inspiring enough to try and live up to, if only we can strive to do so and succeed!
avan mAyAvi enbadaRindadE. anda mAyaminRi nAmilli, ivvulagillai...
Last edited by arasi on 19 Sep 2012, 00:38, edited 1 time in total.

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sridhar_ranga »

sankark wrote:எனதிது உனதது எனப்பிரித் தறிகுவர் மதியிலா மனிதர்கள்
தனதென பிரிதென தானென பிரிதென இயலுவ தெதுவுமே
ஒருபொருள் பலவுரு உடையது எனமனம் தெளிந்தபின் உலகிலே
ஒருபொழு தாகிலும் மனமது கலங்குமோ எனவுரை இயம்பினான் (௯௦)
Brilliant!

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

cml, hope you aren't calling vasudeva the devil. As you can see from 89th verse, the 90th is vasudeva's (marugan's).

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by cmlover »

OMG! I thought those are the words of Kamsan himself!
Now I realize my mistake!

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by arasi »

Well, I thought it was the marugan of Kamsan, KaNNan, and assuming that CML thought the same, I took them to be marugan's (KaNNan's) words.
Also thought that CML was commenting about KaNNan, the kathA nAyakan ;)

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by cmlover »

Correction Arasi
I thought it was Kamsan
That is why I said The devil quoting Vedanta..
So we all got confused..

kvchellappa
Posts: 3598
Joined: 04 Aug 2011, 13:54

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by kvchellappa »

A few thoughts on pala pala or palappala:

இஃதன்றிப் பல பல காட்சிகள் (Bharathi)
பலபல வேடமாகும் பரனாரி பாகன் (Sambandar)

Like sirsila I have seen parpala also.

Hats off to the poetry of Sri Sankar.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by cmlover »

Certainly you would not have come across
சிலச்சில or படப்பட or கடக்கட or வெடவ்வெட or many such double ups :D

kvchellappa
Posts: 3598
Joined: 04 Aug 2011, 13:54

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by kvchellappa »

True.

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

வெஞ்சிறைக் குடியிருந் ததங்கை யைமண வாளன் தன்னை
எஞ்சிய வாணாள் எல்லாம் இன்பமாய் வாழச் சொல்லி
நெஞ்சிலே அமைதி சேர விடுதலை புரிந்து இல்லம்
கஞ்சனும் அடைந்து துர்க்கை சொன்னதை நினைந்து சோர்ந்தான் (௯௧)

Work keeps me occupied. So this will be going a little slow.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by cmlover »

No problem!
Lets us enjoy the beauty verse by verse..

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

தானிழைத் தகொடுஞ் செயலைத் தானினைந் துவருந் தினானைக்
கூனியொத் தகூட்டந் தான்கரைக்கத் தன்னியல் புதானடைந் தகஞ்சன்
நானிலத் தில்நான் மறையான் பேர்மனத் தேதோய்ந்த நல்லவரைப்
பானினைந்த பாலகரைக் கொன்றுவிட தன்னடியார்க் காணை யிட்டான் (௯௨)

With that we wrap http://vedabase.net/sb/10/4/en

One thing - even though SB 10.4.31 talks about killing of children, after that there is no such allusion. SB 10.4.44 refers to "saintly persons" only and not children. Is it inferred that even children were to be killed?

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by arasi »

Thanks, Sankark.
Wish your wonderful work hadn't come to an end. Then again, all good things have to come to completion.
Will go through the whole work again when things quieten down for me.

How eloquent your first two lines of this last verse are!
Thanks again for your admirable effort ;)

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by cmlover »

अनिर्दशान्‌ निर्दशांश्च हनिष्यामॊ अद्य वै शिशून्‌ । (SB 10.4.31)
clearly shows his order to kill children below ten days and within ten days . SB 10.4.44 suggests the over enthusiastic servants harassing the good folks.

Why are you splitting words unnaturally as
தானிழைத் தகொடுஞ்
கூனியொத் தகூட்டந் etc.,

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sridhar_ranga »

cmlover wrote: Why are you splitting words unnaturally as
தானிழைத் தகொடுஞ்
கூனியொத் தகூட்டந் etc.,
CML, sometimes it becomes unavoidable to fit the grammar / prosody rules...the taLai (e.g. iyaRcIr or veNcIr veN taLai in a veNbA) is very important and no compromise can be made in taLai rules.

Such splitting of words to fit the grammar and for the sake of 'Osai ' is called vagaiyuLi (வகையுளி).

Too much of VagaiyuLi does have an effect of reducing the appeal / attractiveness of the verses. In veNbAs and kuRaL, you do find them but typically in the last sIr of the last aDi.

The below extracts from https://groups.google.com/forum/#!msg/y ... 1yaajHLrwJ may help:

***
* வாக்கியங்கள் எழுதும்போது , முடிந்தவரை சொற்களை ஒரு சீரில் ஒரு பாதி, அடுத்த சீரில் இன்னொரு பாதி என்று பிரிக்காமல் எழுதுவது அழகு. தளை சரியாக இருக்கச் சிலசமயம் இப்படிச் செய்ய வேண்டும். இதற்கு 'வகையுளி' என்பார்கள்.
***
வெண்பாக்களில் முடிந்தவரை வகையுளி இல்லாமல் இருப்பது நலம். சிலசமயம் , வகையுளி தவிர்க்க முடியாமல் போய்விடும். முக்கியமாக, வெண்பாவின் கடைசி அடியில் இதைப் பலமுறை பார்க்கலாம்.

காட்டுகள்: (காளமேகத்தின் வெண்பாக்களில் இருந்து சில ஈற்றடிகள்)

தீரமுள்ள சூரிக்கத் தி
குடத்திலே கங்கையடங் கும்

****

வகையுளி வெண்பாக்களில் பயன்படுத்தப் படுவதைப் பார்க்கலாம்.
காட்டுகள்: (காளமேகத்தின் சில ஈற்றடிகள்.)

ஐயாநீ ஏழையா னால்
வடப்பாகு சேலைசோ மன்.
இருகாலும் சந்துபோ னால்.

'கண்ணதா சக்கவிஞன்' 'சாமிநா தைய்யன்' போன்ற வகையுளிகள் வெண்பாவின் மற்ற அடிகளிலும் வரும்.
****

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by cmlover »

Thanks for the clarification.
It is like cutting your feet to fit the shoes :D
வகையுளி கொண்டு வாக்குகளை தறிப்பதால்
புகையுண்டு பொருள் மாறுமாம்!
( Sorry, I couldn't resist :D
Remember the story of the one who asked for
சுக்குமு ளகுதி பிலி

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

We are back @ http://vedabase.net/sb/10/5/

காண்டம் ஐந்து (இன்னிசை வெண்பா)

கோகுலத்து மன்னனவன் நந்தனவன் நான்மறையார்க்
காகுலம்தீர் தானமெல்லாம் செய்தனனே பால்சொரியும்
ஆகுலமும் தானியமும் பொற்குவியல் என்றுபல
தன்குலத்து புத்தொளியின் பொருட்டு (௯௩)

sridhar_rang - thanks for that link. Quite informative.

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sridhar_ranga »

Nice one Sankar...I can see the effort to avoid vagaiyuLi. :)

That series of articles by prof Pasupathi is indeed a great resource.... I came to know about it when fellow member MSM referred to it long back in the Venba thread started by you. Prof Pasupathi occasionally posts in the sangeethapriya yahoo group, I have wondered if he could be reading our forum too....

Coming to the above one I feel in line 3, ஆக்குலம் fits better than ஆகுலம் (ஒற்று மிக வேண்டும்).....ஆகுலம் with the meaning of suffering/ sorrow as used by you in line 2 is not what you intend on line 3 I guess, you are referring to a herd of cows instead....

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by cmlover »

Smart observation sridhar!
By the same token
தன் +குலம் =தங்குலம்

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

உள்ளம் மிகவுவந்தான் ஓர்மகவாய் வந்தவனோ
வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தகனே
என்றுணரா நந்தனவன் நான்மறை வித்தகரைக்
கொண்டுபல பூசனைகள் செய்து (௯௪)

sridhar_rang - ஆகுலம் - hear I meant ஆ + குலம் (cows) not கவலை. ஆக்குலம் sounds odd.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by cmlover »

Welcome back!
Now you have to complete the hanging verse soon :D

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

Just one more. Work and other stuff keeps one occupied :(

மறையொலித்த வேதியரும் நற்புராண வல்லுனரும்
குறையிலாத இல்லமென (ஆக்கிய)ஆகியதோர் நேரமதில்
பறையொலித்து மாந்தரெல்லாம் பாடினரே ஆடினரே
கரையிலாத இன்பவெள்ளம் கண்டு (௯௫)

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
Last edited by sankark on 11 Nov 2012, 14:08, edited 1 time in total.

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

மாவிலைத் தோரணங்கள் பூமாலை சாற்றியெங்கும்
தூவினரே பூவிதழ்கள் ஆநிரைக்கு செம்மைசேர்
மஞ்சளும் வண்ணமிகு சாந்தும் பலபூசி
துஞ்சா திருந்தாரே மகிழ்ந்து (௯௬)

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by Ponbhairavi »

post 144,
நற் புரா ?"
(வேதியரும் புராண வல்லுனரும் ) ஆக் கியதோர் ?

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

one more

அஞ்சனம் தீட்டிய கண்கள் குழைத்தந(ல்)று
மஞ்சளைத் தாங்கிய கன்னம் சிவந்தநற்
குங்கும நெற்றித் துணைவியர் இன்பமாய்ச்
சங்கமித்தார் நந்தன்ம னையில் (௯௭)

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

சங்கமம் ஆனார் அங்கு (௯௭)

கஞ்ச மலர்முகம் பொங்கியொளி வீசதம்
நெஞ்ச மதன்மீதில் ஆரம் அசைந்தாட
மெல்லிடை யாட வளையாட வந்தாஅர்
நல்லமலர் வாசம் சுமந்து (௯௮)

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

ஆலிலையில் தான்துயின்ற நான்மறையின் உட்பொருளைப்
பாலகனாய்த் தானடைந்த மாளிகையின் நாற்றிசையும்
நல்லிசையில் தோய்ந்திருக்க தாயவளும் மன்னவனும்
இல்லையெ னாதுசெய்தார் தானம் (௯௯)

Post Reply