Kanchi Maha Periyava

Post Reply
rshankar
Posts: 13754
Joined: 02 Feb 2010, 22:26

Re: Kanchi Maha Periyava

Post by rshankar »

Rsachi wrote:Also, if yAntha means ra, shouldn't pAntha be pha? Why ma?
My interpretation - pa anta refers to the end (anta) of the pa varga of letters (the labials), which is ma (pa pha ba bha ma)

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Kanchi Maha Periyava

Post by Pratyaksham Bala »

Rsachi wrote:yAntha pAntha - in which Thyagaraja kriti does it occur? ...
"yAnta bhAnta"
C1 of -
http://thyagaraja-vaibhavam.blogspot.in ... -raga.html

Rsachi
Posts: 5039
Joined: 31 Aug 2009, 13:54

Re: Kanchi Maha Periyava

Post by Rsachi »

Perfect. That is consistent ya - > ra, bha - > ma

Thank you sir.

Rsachi
Posts: 5039
Joined: 31 Aug 2009, 13:54

Re: Kanchi Maha Periyava

Post by Rsachi »

I also found a thread from 10 years ago!
http://www.rasikas.org/forums/viewtopic.php?f=11&t=1466

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Papanasam Sivan and Maha Periava

Read at this link..

https://vandeguruparamparaam.wordpress. ... sam-sivan/

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share

காஞ்சி மாமுனி மஹாபெரியவாளின் நிகழ்வுகள்
மாமுனியின் கருணையா – கொடையா

(ஸ்ரீ மும்பை விஜயன் ஸ்வாமிகளின் சொற்பொழிவிலிருந்து...)

விதவைத் தாய்க்கு கிடைத்த அமுதசுரபி

அடியேன் கல்கத்தாவில் பயணிகள் கப்பலில் வரும் என் நண்பரைக் காணத் துறைமுகம் சென்றேன். கப்பல் இரண்டு மணி நேரம் தாமதம் எனத் தெரிந்தது. அவருக்காக காத்திருக்க முடிவு செய்து அந்த சாலையில் இருந்த ஒரு ஹோட்டலின் முன் இருந்த பெஞ்சில் அமர்ந்தேன். அது ஒரு சிறிய ஹோட்டல். வருவோர் போவோர் அதிகம் இருந்த நிலையில் அந்த ஹோட்டல் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. என் பார்வை கல்லாவில் இருந்தவரின் மீது செல்ல, அவர் அமர்ந்து இருந்த இருக்கைக்குப் பின்னால் ஒரு படம் பூக்களாலும், வண்ணக் காகிதங்களாலும் அலங்கரிக்கப்பட்டு பார்வையை இழுக்கும் வகையில் இருந்தது.. அந்தப் படம் என்னை ஈர்க்க, நான் அருகே சென்று பார்க்க, அது மஹா பெரியவாளின் படம். கல்கத்தாவில் 90 சதவிகித இடங்களில் காளி மற்றும் ராம கிருஷண பரமஹம்சர் விவேகானந்தர் படங்களைப் பார்த்த எனக்கு, என் குரு நாதரைக் கண்டவுடன் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கியது.

கல்லாவில் அமர்ந்திருந்தவரிடம். படத்தைக் காட்டி யார் இவர் என வினவ அந்த நபர் உள்ளம் பூரித்து கண்கள் விரிய “என் தாக்குர்ஜி என் தாக்குர்ஜி” என பரவசப் பட்டார். இவரைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் என அடியேன் கேட்க அந்த கேள்விக்கு காத்திருந்தவர் போல நொடியும் தாமதிக்காது மிகுந்த உணர்ச்சி வசப்பட்டவராய் பேசத் தொடங்கினார். அவர் உள்ளத்தில் பெருகிய பக்தி – மடை திறந்த வெள்ளம் என வார்த்தைகளாக பெருக்கெடுத்தது. பக்தியில் நனைந்து நனைந்து வந்து விழுந்த குரு நாதரைப் பற்றிய ஒவ்வொரு சொல்லும் தேனாக என் காதில் பாய்ந்தது. பக்தியில் பொங்கி பொங்கி கொப்பளித்த அவர் உள்ளம் சற்று சம நிலை அடைய, அடியேன் அவர் பேச்சின் இடை இடையே மஹாபெரியவாளைப் பற்றி ஒரிரு வரிகள் சொல்ல, தன் பேச்சை நிறுத்தியவர் கண்களில் வியப்புடன் தாக்குர்ஜி பற்றி தெரிந்தும் என்னிடம் தெரியாதது போல் கேட்டீர்களா என வாய் விட்டு சிரிக்க அந்த சிரிப்பில் கள்ளம் கபடம் இல்லா அவரின் குழந்தை உள்ளம் தெரிந்தது.

அருகே இருந்த பணியாளரிடம் கல்லாவைப் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு, என் கைகளைப் பிடித்து அழைத்து ஒரு இருக்கையில் அமர்த்தினார். இருவரும் மஹாபெரியவாளைப் பற்றி பேசி பேசி களிப்படைய, நேரம் போனதே தெரியவில்லை. கப்பல் வந்துவிட்ட அறிவிப்பு வர அவரிடம் விடை பெற்றுக் கொண்டேன். என் கைகளை அழுத்திப் பிடித்தவர் உங்களைப் பிரிய ஏனோ மனம் வரவில்லை, இன்று மாலை என் இல்லம் வாருங்கள். தாக்குர்ஜி என் குடும்பத்துக்கு செய்த ஒரு உன்னதமான அதிசயத்தை சொல்லுகிறேன், வருவீர்களா என ஏக்கத்துடன் கேட்க - அவரிடம் , ஐயா அதை விட பெரும் பாக்கியம் என்ன இருக்க முடியும் கட்டாயம் வருகிறேன் என சொல்லி அவர் முகவரியைப் பெற்றுக் கொண்டு விடை பெற்றேன்.
அன்று மாலை அவர் இல்லம் சென்றேன். அழகான எளிமையான சிறிய இல்லம். மணம் கமழும் ஒரு சிறு அறையில் மஹா பெரியவாளின் படம். மஹா பெரியவாளின் முன்னிலையில் ஒரு சிறு பெட்டி இருக்க அதிலிருந்து ஒரு பாத்திரத்தை பய பக்தியுடன் வெளியே எடுத்து வைத்தார், அந்த புனிதப் பாத்திரம் சொல்லாமல் சொன்ன நிகழ்வு இது.

கல்கத்தாவைச் சேர்ந்த இளம் விதவை. கணவர் குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக செக்கு வைத்து எண்ணெய் வியாபாரம் செய்து வந்தனர். கணவர் காலத்தில் வியாபாரம் முடங்க ஆரம்பிக்க, அவள் திருமணம் முடித்த சில வருடங்களில் வியாபாரம் முழுதுமாக நொடித்து விட்டது. வியாபாரத் தோல்வி கணவர் உள்ளத்தையும் உடலையும் உருக்க, நோய்வாய்ப்பட்டு சில வருடங்களிலேயே அவர் இறந்தும் போனார். இளம் விதவை - ஐந்து குழந்தைகளுக்குத் தாய் - கணவர் இறந்த மறு நாளே புகுந்த வீட்டினர் அவளை அண்ட விடாது ஒதுக்கியும் ஒதுங்கியும் விட்டனர். பிறந்த வீட்டில் பாதுகாப்பு கிடைக்கும் எனக் கதவைத் தட்டியவளுக்கு, பிறந்த வீட்டார் ராசியில்லாதவள் அமங்கலி என இரட்டைத் தாழ்ப்பாள் போட்டனர்.

தன் உடலையும் மானத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு - ஒன்றும் புரியாத பிஞ்சுகளாய் இருக்கும் ஐந்து குழந்தைகளை வளர்க்க வேண்டிய பாரம் - எல்லாவற்றுக்கும் மேலாக சமுதாயம் ராசியில்லாதவள் என சூட்டிய முள் கிரீடம் - எல்லாம் அவளை அழுத்தியது. கணவர் சேமித்து வைத்து விட்டுப் போன சிறு தொகையைக் கொண்டு பசி பட்டினி இல்லாது குடும்பத்தை நடத்தினாள். அதுவும் சில காலமே. வருடங்கள் செல்ல செல்ல இரு வேளை சோறு ஒரு வேளையானது. பின்னர் அதுவும் கஞ்சியாக மாறியது. கைப் பணம் கரைய கரைய அச்சமும் கவலையும் சூழ்ந்தது. குடும்ப வருமானத்திற்கு குப்பை பொறுக்குவது என முடிவு செய்தாள். நாள் முழுதும் அலைந்து பெரிய அலுவலகங்களாக சென்று காகிதங்களை பொறுக்கி, அவற்றை விற்று அதன் மூலம் வரும் வருமானம் கொண்டு குடும்பம் நடத்தினாள். துறைமுகப் பகுதியில் வாகனங்களிலிருந்து விழும் நெல் அரிசி கோதுமை போன்ற தானியங்களை சாலையைப் பெருக்கி எடுத்து வந்தாள். சிதறிய தானியங்களைக் கொண்டு தன் பிள்ளைகளின் வயிற்றுக்கு கஞ்சி ஊற்றினாள். ஆனால் எப்படி ஐந்து பிள்ளைகளையும் கரை சேர்ப்பேன் என்ற கவலை அவளைத் தினமும் வாட்டியது. குடும்பம் மிகவும் பரிதாப நிலையில் இருந்தது. கணவர் இறந்து இப்படியே ஐந்து வருடங்கள் போய்விட்டது.
இந் நிலையில் நமது மஹாபெரியவா கல்கத்தாவில் முகாமிட்டிருந்தார். அவரைத் தரிசித்த மக்கள் அவரைப் பற்றி பலவாறு ப்ரமிப்புடனும் பக்தியுடனும் பேச பேச அந்த பேச்சுக்கள் இவள் காதையும் எட்டியது. அவளுக்கும் அவர்கள் சொல்லும் தாக்குர்ஜியை பார்க்க வேண்டும் என ஆவல் பிறந்தது. அவரை தரிசித்து விட்டு வந்தால் என் வாழ்வில் ஒரு விடியல் இருக்கும் என எண்ணினாள். இரவெல்லாம் அதே நினைவுடன் உறங்கியவள், மறு நாள் ஸ்நானம் செய்து விட்டு, கையில் ஒரு காலி எண்ணெய் தூக்கை எடுத்துக் கொண்டு மஹா பெரியவா முகாமிட்டிருந்த இடம் வந்தாள். தாக்குர்ஜியை சுலபமாக சந்தித்து ஆசி பெற்றுவிடலாம் என நினைத்து வந்தவள் அங்கிருந்த கூட்டத்தைக் கண்டு திகைத்து நின்றாள். வருவோர் போவோரின் ஏளனப் பார்வையும், அவர்கள் அவளைக் கண்டு விலகிச் செல்வதையும் கண்ட பொழுது தான் - அவளுக்கு அவளின் நிலைப் புரிந்தது. தாக்குர்ஜியை காண வந்த கூட்டத்தினரின் மீது அவள் பார்வை சென்றது. அனைவரும் நல்ல ஆடை அணிந்தவர்கள் – படித்தவர்கள் – உயர் அதிகாரிகள் – என பலதரப்பட்ட மக்கள். தன்னை எண்ணினாள். எண்ணெய் ஆட்டுவதைக் குலத் தொழிலாக கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவளின் தலையில் ஒரு சொட்டு எண்ணெய் இல்லை. வறண்ட கூந்தல்; எத்தனை துவைத்தும் நீங்காது அழுக்குப் படிந்து போன சேலை; தன் வாழ்க்கை தரத்தையே வெளிச்சம் போட்டுக் காட்டும் கிழிந்த ஒட்டுப் போட்ட ஆடை. எப்படி இந்தக் கூட்டதில் நம்மை இணைத்துக் கொள்வது; கூட்டத்தில் கலக்க முயற்சித்தால் நிச்சயம் விரட்டப் படுவோம் என புரிந்துக் கொண்டாள். அந்தக் கூட்டத்தைப் பார்க்க பார்க்க உள்ளத்தில் அச்சம் சூழ்ந்தது. ஆனால் தாகுர்ஜியிடம் ஆசி பெற வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் போகவில்லை.

கூட்டத்திலிருந்து சற்று விலகி நின்றாள். கூட்டத்தினர் பார்வையாலையே அவளை விரட்ட தள்ளி நின்றாள். அங்கிருந்தவர்கள் மேலும் அவளை விரட்ட - மேலும் மேலும் ஒதுங்கினாள் . இப்படியே கூட்டத்தை விட்டு 60 - 70 அடி தள்ளி விரட்டப்பட்டாள். கூட்டம் கலைந்தவுடன் அவரைத் தரிசிக்கலாம் எனக் காத்திருந்தாள். ஆனால் வருவதும் போவதுமாக இருந்த மக்கள் கூட்டம் குறையவில்லை. நேரம் நகர்ந்துக் கொண்டே போனது. மனதில் தன் வாழ்க்கையில் நடந்த அத்தனை சம்பவங்களும் வந்து போயின. தன் வாழ்க்கை சம்பவங்களால் கண்களும் மனதும் பொங்கியது, தன் நிலையைப் புரிந்துக் கொண்டவள் தாகுர்ஜியை அருகில் சென்று ஆசி பெறும் எண்ணத்தைக் கைவிட்டாள். அவரை தூரத்திலிருந்தாவது தரிசித்து விட்டால் போதும் , தன் வாழ்க்கையில் மாற்றம் வரும் என பரிபூரணமாக நம்பினாள் .கூட்டத்தை விட்டு தள்ளி ஒடுங்கி நின்றவளின் பார்வை மட்டும் தாக்குர்ஜி இருந்த இடத்தை விட்டு விலகாது இருந்தது.
சுமார் ஐந்து மணி நேரம் காத்திருந்தவளுக்கு இன்னும் மஹா பெரியவாளின் தூர தரிசனம் கிடைக்கவில்லை. ஆனால் மஹா பெரியவா அவளைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தார் – உள் முகமாக. அருகே இருந்த தன் உதவியாளரை அழைத்தார். சில குறிப்புகள் சொல்லி அவளிடம் இருக்கும் பாத்திரத்தை வாங்கி வரும் படி சொன்னார். உதவியாளரிடம் பாத்திரத்தை தந்தவளின் கண்கள் தாக்குர்ஜியை காணத் துடித்தது. தாக்குர்ஜி என்னை உள்முகமாக பார்த்துவிட்டார். எனக்கு அவரின் தரிசின பாக்கியம் கிடைக்குமா என உள்ளம் ஏங்கியது. உதவியாளார் சென்ற பாதையிலேயே தன் கண் பார்வையை செலுத்தினாள். உதவியாளர் சென்ற பொழுது ஒரு இடைவெளி கிடைக்க அந்த இடைவெளியில் தாக்குர்ஜியைப் பார்த்தாள். பரவசப்பட்டாள். கை தொழுது நின்றவளின் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது. தாகுர்ஜியின் முன் பாத்திரம் வைக்கப் பட அதில் மஹாபெரியவா தன் கமண்டத்திலிருந்து நீரை ஊற்றுவதைக் கண்டாள். கூட்டம் மறைக்க இந்த தரிசினமே போதுமானது என திருப்தி அடைந்தாள். உதவியாளர் கொண்டு வந்து தந்த பாத்திரத்தைத் தன் சேலைத் தலைப்பில் மடிப் பிச்சையாக வாங்கிக் கொண்டாள். அதை பவித்திரமாக பாவித்து தன்னுடன் அணைத்துக் கொண்டு கண்ணீர் மல்க நன்றி சொன்னாள். அவள் உடலும் உள்ளமும் ஆனந்தப் பரவசப் பட கால்கள் சிறிது தள்ளாட அருகே இருந்த சுவரில் சாய்ந்தாள்.

கண்கள் மூடிய பரவச நிலையில் இருந்தவளுக்கு மஹாபெரியவாளின் வார்த்தைகள் இடி முழக்கமாக கேட்டது. “பரவாயில்லை இத்தனை நேரம் காத்திருந்தாயே. உண்மையில் நீ மிகவும் பொறுமைசாலி” என சொல்ல, அந்தப் பெண், “ தாக்குர்ஜி நான் பொறுமைசாலியல்ல. எத்தனையோ மக்கள் தங்களிடம் ஆசி பெறவும் அனுக்ரஹம் பெறவும் காத்திருக்க, வந்த அனைவருக்கும் பல மணி நேரமாக இடை விடாது ஆசி தந்து கருணை மழை பொழிந்துக் கொண்டிருப்பதோடு எங்கோ நின்று கொண்டிருந்த இந்த விதவைக்கும் அல்லவா அனுக்ரஹம் காட்டினீர். என் காத்திருப்பில் சுய நலம் இருக்கிறது. ஆனால் தங்களை நாடி வந்த பக்தர்களின் நலம் கருதிய தங்களின் பொறுமையிலோ அன்பும் கருணையும் அல்லவா வழிந்துக் கொண்டிருக்கிறது. நான் பொறுமைசாலி அல்ல. தாங்கள் தான் பொறுமையின் பிறப்பிடமும் அதிபதியும்” என்றாள். “அம்மா உன் நிலை அறிவேன். இதைக் கொண்டு 17 ஆண்டுக் காலம் உன் குடும்பத்தை நடத்தி நீயும் ஜீவித்து வா. இதுவே உன் வாழ்வாதாரம். துளிர்த்து தழைக்கும்” என ஆசி வழங்கினார். பரவச நிலையிலிருந்து வெளி வந்து சம நிலை அடைந்தாள். தாகுர்ஜியின் திசை நோக்கி மீண்டும் நன்றியோடு வணங்கினாள். பாத்திரத்தை இறுக்கி பிடித்தபடி தன் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
மனதில் தாக்குர்ஜியின் தரிசனமும் அவரின் வார்த்தைகளுமே வியாபித்திருந்தது. ஐந்து கிலோமீட்டருக்கும் மேலான நடை பயணம் களைப்பைத் தரவில்லை. பரவச நிலைக்குப் பின் உலகமே அவளுக்கு புதிதாகத் தோன்றியது. மனதை அழுத்திக் கொண்டிருந்த பாராமும் - பிறர் சூட்டிய பட்டங்களும் - கவலையும் போன இடம் தெரியவில்லை. தாகுர்ஜியின் தரிசனம் கிடைத்துவிட்டது. அவரின் ஆசி வார்தைகளையும் கேட்டு விட்டேன் . இனி தாக்குர்ஜியின் ஆசியே என் குடும்பத்தை வழி நடத்தும் என திடம் கொண்டாள். ஒரு வழியாக தாக்குர்ஜியை தரிசித்த மகிழ்வுடன் வீடு வந்து சேர்ந்தாள். தான் கொண்டு சென்ற பாத்திரத்தில் தாக்குர்ஜி ப்ரசாதமாக கொடுத்த நீர் , பாத்திரம் முழுதுமாக சுமார் ஒன்றரை லிட்டர் நிரம்பி இருக்க, அதை வேறு பாத்திரத்தில் நிரப்ப நினைத்து மற்றொரு பாத்திரத்தில் ஊற்றினாள். ஊற்றிய பொழுது நடந்த அதிசயத்தை அவள் கண்களால் நம்ப முடியவில்லை.

அவள் கொண்டு சென்ற பாத்திரத்திலிருந்தது ப்ரசாத நீர். ஆனால் அதை மற்றொரு பாத்திரத்தில் நிரப்பிய பொழுது அது எண்ணெய்யாக வழிந்தது. வழிந்துக் கொண்டே இருந்தது. நடக்கும் ஆச்சர்யத்தை அவளால் நம்ப முடியவில்லை. தாக்குர்ஜி ப்ரசாதமாக தந்தது நீர் தானா என பார்த்தாள் . நீர் தான் இருந்தது. அது எப்படி வழியும் பொழுது எண்ணெய் ஆயிற்று? தாக்குர்ஜி தாகுர்ஜி என வாய் முணுமுணுத்தது. உள்ளம் ஆச்சர்யத்திலும் சந்தோஷத்திலும் திளைத்திருக்க , மஹா பெரியவாளின் ஆசி வார்த்தைகள் அவள் மனதில் மோதின. “இதைக் கொண்டு 17 ஆண்டுக் காலம் உன் குடும்பத்தை நடத்தி நீயும் ஜீவித்து வா. இதுவே உன் வாழ்வாதாரம். துளிர்த்து தழைக்கும்” ஆசி வார்த்தைகளின் அர்த்தம் இப்பொழுது புரிய ஆரம்பித்தது. பட்டுப் போன குலத்தொழிலான எண்ணெய் வியாபாரத்தை தாக்குர்ஜி மீண்டும் துளிர்க்க வைத்துவிட்டார் எனப் புரிந்துக் கொண்டாள். இனி இந்த எண்ணெய்யை விற்று குடும்பத்தை நடத்துவது என முடிவு செய்தாள்.
‘தாக்குர்ஜியை நான் அருகில் சென்று கூட வணங்கவில்லை. அவர் முன் என் நிலையை எடுத்தும் சொல்லவில்லை. எங்கோ ஒதுக்கப்பட்டு ஓரமாக நின்ற இந்த விதவையின் மீது தன் உள்ளக் கருத்தைப் பதித்து எத்தனை பெரிய அதிசயத்தையும் அற்புதத்தையும் நிகழ்த்தி ஆசியும் அளித்தார். இதுவரை ஒரு முறை கூட இந்த தாக்குர்ஜியைப் பற்றி நான் அறிந்ததும் இல்லை. நாளும் தொழுததும் இல்லை. ஆனால் எத்தனை பெரிய கருணையைப் பொழிந்திருக்கிறார்’ என எண்ணி எண்ணி அவள் உள்ளம் கசிந்தது. என் தாகுர்ஜிக்கு எப்படி நன்றி செலுத்துவேன் என கலங்கினாள். அவள் துக்கம் சந்தோஷம் ஆச்சர்யம் என அனைத்தும் அழுகையிலேயே கலந்து கரைந்தது. மனதில் தாகுர்ஜியின் ஆசிகளும் அவருக்கான நன்றிகளுமே பதிந்து இருந்தது. தெளிவுக் கொண்டு எழுந்தவள் அந்த பாத்திரத்தை ஒரு பெட்டியில் வைத்துப் பூட்டினாள். பாத்திரத்தோடு ரகசியத்தைக் காக்க தன் வாயையும் மனதையும் சேர்த்து அந்தப் பெட்டியில் பூட்டினாள்.

மறு நாள் ஸ்நானம் செய்து விட்டு பெட்டியிலிருந்த தாக்குர்ஜி ஆசிர்வதித்து தந்த பாத்திரத்தை தொட்டு வணங்கினாள். மனதில் தாகுர்ஜியை நினைத்தாள். வார்த்தைகள் உள்ளத்திலிருந்த வெடித்துக் கிளம்பின.

நான் விழுந்துப் போன நேரத்தில் என் மக்கள்
எல்லோரும் நகைத்தனர்
வியாதியஸ்தி (ராசியில்லாதவள்) என சொல்லி என்
ஜனமே என்னை வெறுத்தது
என்னை சுகப்படுத்தி புது வாழ்வு தந்த தாக்குருவே!

என்று மனம் உருகிப் பிரார்த்தித்தாள். (இதுவே அவளின் குரு மந்திரம் ஆனது. ஒவ்வொரு நாளும் இதை சொல்லியப் பின்னே எண்ணெய் எடுத்தாள்)

மஹா பெரியவா ஆசிக் கொடுத்தப் பாத்திரத்தை சாய்த்தாள். ஒரு குடம் நிறைய நிரப்பினாள். பாத்திரத்தைப் பூட்டினாள். எண்ணெய்யை எடுத்துக் கொண்டு அக்கம் பக்கத்தினர் அறியா வண்ணம் மூன்று நான்கு மைல்களுக்கு அப்பால் சென்று வியாபாரம் செய்தாள். கையில் குரு நாதரின் கருணையால் கிடைத்தப் பணம் அவளுக்கு திடனைத் தந்தது. அந்த வருவாய் அவளின் குடும்ப ஜீவனத்திற்குப் போதுமானதாக இருந்தது. தாகுர்ஜிக்கு மறவாது நன்றி செலுத்தினாள்.

மறு நாள் பாத்திரத்திலிருந்து ஒரு குடம் நிறைய எண்ணெய் எடுத்தாள். வியாபாரம் செய்தாள். ஒவ்வொரு நாளும் ஒரு குடம் என்பதை அளவாக வைத்துக் கொண்டாள். அவள் அதற்கு மேல் என்றுமே எடுக்கவில்லை. அந்தக் கட்டுப்பாட்டை அவள் தனக்குத் தானே விதித்துக் கொண்டாள். இப்படியே காஞ்சி மாமுனியின் வாக்குப்படி அவள் தன் குடும்பத்தை நடத்தினாள்.

வருடங்கள் கடந்தன. பரிதாப நிலையில் இருந்த குடும்பம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறியது. மூத்த மகன் டீக் கடை வைத்து வியாபாரம் செய்தான். நான்கு பெண் குழந்தைகளுக்கும் உரிய வயதில் கடன் இல்லாது திருமணமும் முடித்தார் அந்தத் தாய். ஒரு சிறு வீடும் அவர்களுக்கு சொந்தமானது. தாகுர்ஜியின் ஆசியில் மகனின் வியாபாரம் சிறக்க அவன் சிறு ஹோட்டல் வைக்கும் அளவு உயர்ந்தான். மகனின் திருமணமும் நடந்தது. பாரத்தை எப்படி சுமப்பேன் என போராடித் தவித்த அந்த விதவைத் தாய் மாமுனியின் கருணையால் இப்பொழுது பெரும் நிம்மதி அடைந்தாள். 17 ஆண்டுக் காலம் அவரின் கருணையால் ஜீவிதம் நடந்தது. இனி தனக்கு வாழ்க்கையில் என்ன வேண்டும் என உள்ளம் நிறைவுக் கொள்ள நினைவெல்லாம் தாக்குர்ஜியாகிப் போனார்.

ஒரு நாள் இரவு தாக்குர்ஜியின் கருணையை நினைத்து நினைத்து கண்ணீர் பெருக தொழுது நின்றாள். இரவு தாக்குருஜியின் தரிசினம் கிடைத்தது.
மஹரிஷியே மாமுனியே
சித்தனே சுத்தனே
சர்வனே சத்தியனே
நீர் செய்த உபகாரங்கள்
கணக்காலே எண்ண முடியுமா
என தொழ

தாக்குருஜியின் வார்த்தைகள் இடியாய் அவளுள் ஒலித்தன.
ஆதி அன்பு என்றும் குன்றிடாமல்
பேரின்பம் என்றும் பொங்கிட
நீடித்த ஆசிகள் இருக்கும்.

என்றார் மாமுனி கருணை நாதர்.

17 ஆண்டுக் காலம் முடியும் தருவாயில் அவள் சிறு நோய்வாய்ப் பட தாக்குர்ஜி குறிப்பிட்டக் காலம் முடிந்து விட்டதை அறிந்தாள். தன் ஜீவிதம் முடியப் போவதையும் அறிந்தவள் தன் மகனிடம் பாத்திரத்தை ஒப்படைத்து அனைத்து ரகசியத்தையும் கூறினாள். இனி இதிலிருந்து எண்ணெய் வராது. அதன் பெலன் முடிந்தது. தாகுர்ஜியின் கருணையால் நாமும் நன்றாக இருக்கிறோம் என்றாள். ஒரிரு நாளில் தாக்குர்ஜியின் நினைவாலேயே அவள் உயிரும் பிரிந்தது.
“ என் தாய் இத்தனை ஆண்டுக் காலம் எங்கள் குடும்பத்துக்குக் கூடத் தெரியாது ரகசியத்தைக் காத்து வந்தது எனக்கு பிரமிப்பைத் தந்தது. என் தாய் சிறு வயது முதல் எங்களுக்கு யார் மூலமோ கிடைக்கப் பட்ட தாக்குர்ஜியின் படத்தைக் காட்டி காட்டி பக்தியை ஊட்டி வளர்த்திந்தார். எங்களுக்கு நினைவு தெரிந்தது முதல் தாக்குர்ஜியைத் தவிர வேறு தெய்வம் தெரியாது. என் தாய் மூலம் எப்பொழுது அந்த ரகசியத்தை அறிந்துக் கொண்டேனோ அன்று முதல் என் தாக்குர்ஜியின் மீது எனக்கு இருந்த பக்தி பன்மடங்காகியது. என் தாய் மூலம் ஆறு ஜீவன்களின் வாழ்வைக் காத்து உயர்த்திய அவரின் கருணையை நினைத்து நினைத்து கண்ணீர் வந்தது. அவரை காஞ்சி சென்று சந்தித்த பின் தான் என் மனம் அமைதி அடைந்தது. என் தாய் அந்த பவித்ர பாத்திரத்தை என்னிடம் தந்து இதை பாதுகாத்து போற்று – என்றும் நம் தாகுர்ஜிக்கு நன்றி சொல்ல மறக்காதே என்றார். என் தாக்குருஜியின் கருணையாலும் கொடையாலும் ஆசியாலும் ஒவ்வொரு நாளும் எனக்கு மூவாயிரம் ரூபாய்க்கு குறையாமல் வியாபாரம் நடந்துக் கொண்டிருக்கிறது” எனக் கண்கள் கலங்க பக்தியோடு கூறினார் அந்த ஹோட்டல் உரிமையாளர்.

இந்த நிகழ்வைக் கேட்ட அடியேன் என் குரு நாதர் மஹா பெரியவாளின் சூட்சும வார்த்தைகளைக் கண்டு வியந்தேன். பட்டுப் போன தொழில் துளிர்த்து தழைக்கும் அதாவது பெருகும் என்ற ஆசி வார்த்தைகள். தன் சிறு கமண்டத்திலிருந்து வார்த்த நீர் எப்படி ஒன்றரை லிட்டர் பாத்திரத்தை நிரப்பியது. அங்கேயே குரு நாதர் அமுதசுரபியின் தத்துவத்தைக் காட்டி விட்டாரே. குரு நாதர் இப்படி ஒரு அமுத சுரபியை அப் பெண்ணுக்கு வழங்கினார் என்றால் அந்தத் தாய் எப்படிப்பட்ட குணவதியாக இருந்திருக்க வேண்டும். குரு நாதர் அவரைப் பொறுமைசாலி என்ற பொழுது அவள் பெருமைக் கொள்ளவில்லை. தன்னைத் தாழ்த்தி குருவை வாழ்த்தி வணங்கினாள். அவரின் அடக்கமும் நன்றியுமே அவரின் தூய மனதைக் காட்டுகிறது. ராசியில்லாதவள் என தூற்றிய மக்களின் வார்த்தைகளை பொய்ப்பிக்கும் விதமாக மஹா பெரியவா ஆசி கொடுத்த அமுத சுரபி ஒவ்வொரு நாளும் அவள் ஊற்ற ஊற்ற பொங்கிப் பெருகும் படி அல்லவா ஆசிக் கொடுத்தார். அந்தத் தாயோ கிடைத்த அமுத சுரபியை அந்த வறுமை நிலையிலும் துஷ்பிரயோகம் செய்யாது இது போதும் என்று கட்டுப்பாட்டுடன் வாழ்ந்தாள் என்றாள், மஹா பெரியவா அவளின் குணத்தைப் புரிந்து அல்லவா இப்படிபட்ட அமுத சுரபியை வழங்கியுள்ளார். அவள் தன் குடும்பப் பொறுப்பை முடிக்கவும் மற்றும் அவள் ஜீவிதக் காலத்தையும் தன் தீர்க்க தரிசனத்தில் அறிந்து 17 ஆண்டுகள் அந்த அமுதசுரபிக்கு பெலன் தந்தார். மஹா பெரியவா கொடுக்கும் ஆசியில் தான் எத்தனை நுணுக்கங்கள்! பரிதாப நிலையிலிருந்த அந்தத் தாயின் நிலையை உயர்த்தி பல ஜீவன்களை தழைக்கச் செய்த மஹா பெரியவாளின் கருணை மனதில் கசிய கண்களில் கண்ணீர் துளிர்க்க விடை பெற்றேன்

.
பக்தர் குறைக் கேட்டு
அச்சத்தை நீக்கி அருள காத்திருக்கின்றீரே
அக் கருணை எங்களைக் காத்தருளட்டும்!
(ஸ்ரீ மும்பை விஜயம் ஸ்வாமிகள் அருளிய காஞ்சி 6-10-8 ம் பீடாதிபதியின் ஸ்தோத்ரமாலா விலிருந்து..)

மாமுனியே சரணம் சரணமையா!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: New series on Maha Periva

Post by venkatakailasam »

மாமி யார்?
சண்டி ஹோமப் பதிவுகளில் இந்தக் கேள்வி மறுபடி மறுபடி கேட்கப்பட்டுக் கொண்டே இருந்தது. இதோ, மாமி.
சுமார் இருபத்தெட்டு வயது ஆகும் போது பூந்தமல்லி சாலையில் ஒரு ஜாகையில் வைத்து முதல் தரிசனம். ஸ்ரீ பெரியவா போகிற போக்கில் 'நீ அமோகமா இருப்பே' என்று சொல்லிவிட்டு மாமியை கடந்து சென்றார்.
பின், பெங்களூரு வாசம். எழுபதுகளின் பிற்பகுதி வரை குடும்ப பாரத்தில் ஸ்வாமி மாமி மனதில் ஓரமாய் உட்கார்ந்து கொண்டார். அதற்குப் பின் ஸ்ரீ பெரியவாளின் நேரடி, கனவு தரிசனங்கள். ஏராளமான கைங்கர்யங்கள், பிக்ஷைகள்.
சிருங்கேரியில் தங்கி இருந்த போது, தேவி மஹாத்மீயம் படித்துக் கொண்டு வருகையில் மாமாவின் வேஷ்டியை மேல் கொடியிலிருந்து எடுக்கும் போது கீழே விழுந்து அடிபட்டுக் கொண்டு அங்கேயே ஹாஸ்பிட்டலில் சேர்க்கப்பட்டு மயக்க மருந்து கொடுத்து கட்டுப் போட்டு வெளியே வரும் போது தேவி மஹிஷனை வென்று வெற்றி வாகை சூடி தன் படை சூழ ரதத்தில் பவனி வரும் காட்சி அவர் மனக்கண்ணில் தெரிந்தது.
அதிமஹா ருத்ரம், ஸ்ரீ ராம பட்டாபிஷேகம் (12 நாட்களுக்கு மேல், ஒரு நாளைக்கு சுமார் 4000 பேருக்கு சாப்பாடு, நஷ்டக்கணக்கு, அதற்கென புடவை, சமையலறை சாமான்கள் வியாபாரம்), அதனைத் தொடர்ந்து ஸ்ரீ ஹனுமன் பவன ஹோமம். ஆஞ்சநேயன் அக்னியில் ப்ரதிக்க்ஷம்.
1994ல் ஸ்ரீ மஹா பெரியவா சித்திக்குப் பின் ஒரு வருடம் விடாமல் இன்று வரை ஸ்ரீ ஸ்வாமிகளின் ஜெயந்தி, வைகாசி அனுஷத்தில்.
பின், திருச்சிக்கு மாறினார். அகிலாண்டேஸ்வரி கோவில், ஸ்ரீ மடம் என்று ஸ்ரீ பெரியவா கைங்கர்யம் தொடர்ந்தது. ஆலயத்தில் நடந்த சண்டி ஹோமத்தில் அக்னி ஜுவாலைகளுக்கு இடையே அம்பிகை ப்ரத்திக்க்ஷமானாள்.
சுமார் ஐந்து வருடங்களுக்கு முன் கொள்ளிடத்துக்கும், அய்யன் வாய்க்காலுக்கு இடையேயான (திருவரங்கத்தைப் போல்) பகுதியை தன்னிடமிருந்த பணத்தைப் போட்டு வாங்கி தன்னந் தனியே அங்கேயே இருந்து கொண்டு கோவிலைக் கட்டி இன்று ஸ்ரீ லலிதா மஹா திரிபுர சுந்தரி, தன் இரு மகன்கள், ஸ்ரீ வ்யாஸ பகவான், ஸ்ரீ ஆதி சங்கரர், ஸ்ரீ பெரியவாளுடன் ஜகஜ்ஜோதியாக அருள் பாலித்துக் கொண்டிருக்கிறாள்.
* இன்னும் ஏராளமாக இருக்கிறது மாமியைப் பற்றி எழுத. சுமார் 50 பதிவுகளில் சொன்னதை இந்த ஒரு பதிவில் அடக்கி விட முடியாது. இன்றும் கூட ஒரு ஆச்சர்யமான நிகழ்வு நடந்தேறியிருக்கிறது. யாரோ ஒரு விவசாயி முப்பது கட்டு வைக்கோலை வெளியூரிலிருந்து கொண்டு வந்து இறக்கி வைத்து விட்டு காசு எதுவும் வாங்காமல் போயிருக்கிறார், நாளைக்கு என்ன பண்ணப் போகிறோம் என்று மாமி கவலைப் பட்டுக் கொண்டிருந்த நேரத்தில். கோ ஸம்ரக்ஷணை தொடர்கிறது.
மாமிக்கு இப்போது தேவைப் படுவதெல்லாம் ஆஸ்ரமத்தில் சர்வீஸ் செய்ய ஸ்ரீ மஹா பெரியவா அத்யந்த பக்தர்கள். ஒவ்வொரு தம்பதியும் 3-5 நாட்களுக்கு சேவை செய்தால் கூட போதுமானது. ஆர்வம் இருப்பின் என்னுடன் தொடர்பு கொள்ளவும் (98430 18991). அதற்கான ஏற்பாடுகளை செய்து தருகிறேன்.

Shared from: Krishnamurthy Krishnaiyer

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share

தெரியறதா?

தெரியலை.

கட்டுரையாளர்: திரு.பிச்சை ஐயர் சுவாமிநாதன் அவர்கள்

பல வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வு இது
மஹாபெரியவா அப்போது காஞ்சி ஸ்ரீமடத்தில் இருந்தார். மாலை வேளை….

மடத்து வாசலில் ஒரு சைக்கிள் ரிக்ஷா வந்து நின்றது. ரிக்ஷா ஓட்டி கீழிறங்கி வண்டியில் அமர்ந்திருந்த பெரியவர் ஒருவரைக் கைத்தாங்கலாக கீழே இறக்கி விட்டான். ‘என்னை மடத்துக்குள் கொண்டு விடப்பா’ என்பதாக அவனிடம் ஜாடையும் பேச்சும் கலந்து பெரியவர் சொல்ல மடத்துக்குள் அழைத்துச் செல்ல முற்பட்டான் ரிக்‌ஷா ஓட்டி.

கலைந்த தலையும் அழுக்கு லுங்கி அணிந்தபடியும் இருந்ததால், தான் இதே கோலத்தில் ஸ்ரீமடத்துக்குள் செல்வது உசிதமாக இருக்காது என்று ரிக்ஷா ஓட்டியே தீர்மானித்தான் போலும். எனவே, அங்கிருந்த மடத்துச் சிப்பந்தி ஒருவரை அழைத்து ‘ஐயா…இந்தப் பெரியவரு மடத்து சாமியைப் (மஹாபெரியவா) பார்க்கணுமாம்.
கூட்டியாந்திருக்கேன். கையைப் புடிச்சுக் கூட்டினு போ. சாமியைப் பார்த்து முடிச்சதும் வெளில என் வண்டி கிட்ட கொண்டு வுட்டுரு’ என்று சொல்லிட்டு வெளியே போனான்.

பெரியவர் கைமாறினார்.

பெரியவருக்கு எப்படியும் வயது எண்பதுக்கு மேல் இருக்கும் என்று தோற்றம் சொன்னது.

உள்ளடங்கிய கண்கள், கோணல் மாணலாகக் கட்டிய நாலு முழ வேஷ்டி.. கசங்கிய வெள்ளைச் சட்டை. மேல் சட்டைப் பைக்குள் ஒரு மூக்குப் பொடி டப்பாவும் பத்துப் பதினைந்து ரூபாயும் தெரிந்தன.

தனியாக நடப்பதற்கே பெரிதும் சிரமப்பட்ட அந்தப் பெரியவரைக் கைத்தாங்கலாகப் பிடித்து, பெரியவா இருந்த இடம் அருகே விட்டார் சிப்பந்தி. மேடை போல் இருந்த ஓரிடத்தில் வசதியாக உட்கார்ந்து கொண்டார் பெரியவர். வலக் கையை நெற்றியில் வைத்து பெரியவா அமர்ந்திருந்த இடத்தைப் பார்த்தார்.

தான் இருந்த இடத்துக்கு எதிரே மஹாபெரியவா அமர்ந்திருப்பது அரைகுறையாக அவருக்குத் தெரிந்தது. இருந்த இடத்தில் இருந்தபடியே கன்னத்தில் போட்டுக் கொண்டு தரிசித்தார் பெரியவா.

பெரியவரைப் பார்த்துப் புன்னகைத்தார் மஹாபெரியவா. இந்தப் பெரியவர் இந்த சாயங்கால வேளையில் ஏன் இங்கே வந்திருக்கிறார் என்பதை அறியாதவரா அந்த மகான்?

ஒரு சிஷ்யன் ஓடோடி வந்து பெரியவா அருகே நின்றான். வாய் பொத்தி, ஏதோ ஒரு தகவலை குசுகுசுப்பாகச் சொன்னான். அதாவது பெரியவா தரிசனத்துக்காக அப்போது ஸ்ரீமடத்துக்கு சில முக்கிய பிரமுகர்கள் வந்திருப்பதாகவும், வெளியே அவர்கள் காத்திருப்பதாகவும் தகவல் சொன்னான். அன்று யாரையும் பார்க்க இயலாது என்றும் மறுநாள் காலை வருமாறும் தகவல் சொல்லி அனுப்பினார் மஹாபெரியவா. சிஷ்யன் ஓடிப் போய் விட்டான்.

தரிசனத்துக்கு வந்திருந்த ஒரு சிலருக்கும் பிரசாதம் கொடுத்து அனுப்பிவிட்டார் மஹாபெரியவா.
இப்போது அங்கு இருப்பது மஹாபெரியவாளும், உள்ளூர்ப் பெரியவரும் தான்.

இன்னமும் அந்தப் பெரியவர் தன் கண்களை இடுக்கிக் கொண்டு மஹாபெரியவா அமர்ந்திருந்த இடத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.
மஹாபெரியவா தன் ஸ்தானத்தில் இருந்து எழுந்தார். இறங்கினார். பெரியவரை நோக்கி நடந்தார்.

சிஷ்யர்கள் பிரமித்துப் போனார்கள். ஏனென்றால் எந்த ஒரு பக்தருக்கும் அனுக்ரஹம் செய்வதற்காக மஹாபெரியவா இது போல் எழுந்து சென்று அவர்கள் பார்த்ததில்லை.

காஞ்சிபுரத்துப் பெரியவர் தான் அமர்ந்த இடத்திலேயே இருக்கிறார். தள்ளாத வயது அல்லவா! அவர் அருகில் சென்ற மஹாபெரியவா தன் தலையில் வில்வமாலை ஒன்றை வைத்துக் கொண்டு ‘தெரியறதா” என்று கேட்டார் தீர்க்கமாக.
கண்களை மிகவும் இடுக்கிக் கொண்டு பார்த்த பெரியவர் ‘ தெரியலை’ என்றார்.

இதை அடுத்து தனக்கும் அந்த பெரியவருக்கும் நடுவில் இருந்த இடைவெளியை இன்னும் கொஞ்சம் சுருக்கினார் மஹாபெரியவா. அருகில் இருந்த ஒரு புத்தம் புது ரோஜா மாலையைக் கையில் எடுத்தார் மஹாபெரியவா. தலையில் வைத்துக் கொண்டார். அதை பெரியவா தன் சிரசில் அணிந்த பிறகு அந்த ரோஜா மாலை இன்னும் அழகாகத் தெரிந்தது. இப்போது பெரியவரைப் பார்த்து ‘இப்ப தெரியறதா? என்று கேட்டார் மஹாபெரியவா.

ரொம்பவும் சிரமப்பட்டு உற்றுப் பார்த்த பெரியவர் ‘தெரியலை’ என்றார் மீண்டும்.

ரோஜா மாலையை எடுத்துத் தன் சிஷ்யனிடம் நீட்டினார் பெரியவா. அவன் ஓடோடி வந்து அதை வாங்கிக் கொண்டான். பிறகு ஒரு காஷாய வஸ்திரத்தை எடுத்து அதைத் தன் தலையில் வைத்துக் கொண்டார் மஹாபெரியவா. ‘இப்ப தெரியறதா…. பாருங்கோ” என்றார் மஹாபெரியவா.

“ஊஹும்” என்பதாகத் தன் உதட்டைப் பிதுக்கினார் பெரியவர்.

அப்போது அந்த இடத்தில் இருந்த சிஷ்யர்கள் குழம்பிப் போனார்கள். ‘தெரியறதா? என்று பெரியவா எதைக் கேட்கிறார், ‘தெரியல’ என்று பெரியவர் எதைச் சொல்கிறார் என்பது புரியாமல் தவித்துப் போனார்கள். சிஷ்யர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் கேள்விக் குறியுடன் பார்த்துக் கொண்டனர்.

அதற்குள் யாரோ ஒரு சில பக்தர்கள் பெரியவா இருந்த இடத்துக்குள் நுழைய முற்பட்டு அவரை தரிசிக்க யத்தனித்தார்கள். இதை அறிந்த பெரியவா அவர்களை சைகை காட்டி வெளியே அனுப்பினார். சிஷ்யர்களும் அவர்களிடம் ஓடிப் போய் ‘இப்ப பெரியவா உங்களைப் பார்க்க மாட்டார்’ என்று சொல்லி அனுப்பினார்.
அந்த இடத்தில் பெரும் அமைதி நிலவியது.
தான் எதிர்பார்த்து வந்தது இன்னமும் நிறைவேறவில்லை என்பதாக இருந்தது

காஞ்சிபுரத்துப் பெரியவரின் முகம்.
காஞ்சிபுரத்துப் பெரியவர் எதை எதிர்பார்த்து வந்திருக்கிறார்?

அது மகா பெரியவாளுக்கும் அந்தப் பெரியவருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்.
தண்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, பெரிய பெரிய ருத்திராட்ச மணிகளால் கோர்த்து வைக்கப்பட்டிருந்த ஒரு மாலையை எடுத்துத் தலையில் வைத்தவாறு ‘தெரியறதா’ என்று கேட்டார் பெரியவா.

அவ்வளவு தான்…அதுவரை ஏமாந்து போயிருந்த பெரியவரின் முகம் திடீரென பிரகாசம் ஆனது. அவரது விழிகளில் இருந்து தாரை தாரையாக நீர் வழிந்தது. ஏதேதோ பேச வாய் எடுத்தவருக்கு அந்தக் கணத்தில் அது முடியாமல் போனது.
மெள்ளச் சுதாரித்துக் கொண்டு ‘எல்லாமே தெரியறது பெரியவா. நல்லா தெரியறது பெரியவா’ என்று கன்னத்தில் மாறி மாறி அறைந்து கொண்டு அந்த பரப்பிரம்மத்தை நன்றியுடன் பார்த்தார். தன் இரு கைகளையும் கஷ்டப்பட்டு உயரே தூக்கி நெகிழ்ச்சியுடன் கும்பிட்டார் பெரியவர். பிறகு உடல் வளைந்து கொடுக்காவிட்டாலும் சிரமப்பட்டுத் தரையில் விழுந்து அந்தக் கருணை தெய்வத்தை உளமார வணங்கினார்.

பிறகு அந்தப் பெரியவரே மெள்ள எழுந்தார். பெரியவாளுக்கு முன்பாக நின்றார். அவரது திருமுகத்தையே நன்றியுடன் பார்த்துக் கொண்டிருந்தார். கண்களில் இருந்து கசியத் துவங்கிய நீர் வரத்து இன்னும் நிற்கவில்லை.

விரலைச் சொடுக்கி, சிஷ்யர்களை அருகே வரச் சொன்னார் மஹாபெரியவா. ஓடோடி வந்தனர்.

‘இவா வந்த ரிக்ஷா வெளில நிக்கும். அதுல பத்திரமா இவரை ஏத்தி அனுப்ச்சுட்டு வாங்கோ. சந்தோஷமாப் புறப்படட்டும்’ என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று அங்கிருந்து வெளியேறியது அந்தக் கலியுக தெய்வம்.

உடலிலும் உள்ளத்திலும் சந்தோஷம் கொப்பளித்த பெரியவரைக் கைத்தாங்கலாகக் கூட்டிக் கொண்டு ஸ்ரீமடத்தின் வாசலுக்குப் போனார்கள் சிஷ்யர்கள். தான் கூட்டி வந்த பெரியவர் வெளியே வருவதைப் பார்த்தவுடன், தரையில் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்த ரிக்ஷாக்காரன் ஓடோடி வந்தான். ‘வுடுங்க சாமி… இனிமே நா அவரை இட்டுகினு போயிடறேன்’ என்று சொல்லிவிட்டு, ரிக்ஷாவுக்குள் பெரியவர் ஏறி அமர்வதற்கு உதவி செய்தான்.

பெரியவரை ரிக்ஷாவுக்குள் ஏற்றி அனுப்பிய சிஷ்யர்கள் இருவரும் மடத்துக்குள் நுழையும் போது பேசிக் கொண்டார்கள்.

‘உனக்குப் புரியறதாடா பெரியவா ‘தெரியறதா?ன்னு எதைக் கேட்டார்னு?- முதலாமவன்.

இல்லேடா…என்னைவிட ரொம்ப வருஷமா நீ பெரியவாளுக்குக் கைங்கர்யம் பண்ணிண்டு இருக்கே….. உனக்கே புரியலேன்னா எனக்கு எப்படிப் புரியும்? இது இரண்டாமவன்.

நானும் எத்தனையோ பேரைப் பார்த்திருக்கேன். ஆனா, இது மாதிரி ஒரு அனுபவத்தைப் பார்த்ததில்லை. பெரியவா தெரியறதா? ன்னு எதைக் கேட்டார்னும் புரியல. ‘தெரியல’னு அடிக்கடி அந்தப் பெரியவர் எதைச் சொன்னார்னும் புரியலை. ஆனா அவர் கண்ல ஜலம் வந்ததைப் பார்த்த உடனே என் கண்களும் ஈரமாயிடுச்சு. சமாச்சாரம்தான் என்னன்னு புரியாம ஒரே குழப்பமா இருக்கு’ என்று சொன்ன முதலாமவன் கொட்டாவி விட்டுக் கொண்டு தூங்கப் போயிட்டான்.

இதற்கான விளக்கம் அடுத்த நாளே அனைவருக்கும் தெரிந்தது.

அடுத்த நாள் அதிகாலை அந்தப் பெரியவர் இறைவனடி சேர்ந்த செய்தி ஸ்ரீமடத்துக்கு யார் மூலமாகவோ வந்து சேர்ந்தது.

முதல் நாள் மாலை ஸ்ரீமடத்துக்கு இந்தப் பெரியவர் வந்த போது அவருக்கு உதவிய ஊழியர்களும் சிப்பந்திகளும் சிஷ்யர்களும் ஏகத்துக்கும் அதிர்ந்து போனார்கள்.

அனுபவம் வாய்ந்த ஸ்ரீமடத்து காரியதரிசிகளின் பேச்சில் இருந்து இதற்கான விளக்கம் அனைவருக்கும் கிடைத்தது.

தன் வாழ்நாளின் கடைசி நிமிடங்களில் இருப்பதை எப்படியோ உணர்ந்து கொண்டார் காஞ்சிபுரத்துப் பெரியவர். தன் தேகம் இந்தப் பூவுலகில் இருந்து மறைவதற்கு முன் கயிலைக் காட்சியைக் கண்டு தரிசிக்க விரும்பியிருக்கிறார். தான் விரும்பும் தரிசனம் எப்படியாவது மஹாபெரியவாளிடம் கிடைக்கும் என்று பரிபூரணமாக நம்பி ஒரு ரிக்ஷாக்காரரை அமர்த்திக் கொண்டு ஸ்ரீமடத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறார்.

தன்னை நாடி வந்த உள்ளூர்ப்பெரியவரின் ஏக்கத்தைத் தன் ஞான திருஷ்டியால் அறிந்து கொண்ட மஹாபெரியவா, கயிலைவாசியான அந்த ஈசனின் சொரூபத்தை அவருக்குக் காட்டி அனுக்ரஹித்து மோட்ச கதி கொடுத்தார் என்று இதற்கு விளக்கம் சொல்லப்பட்டது.

ஆக, பெரியவாளின் திருமுகத்தில் ஈஸ்வர தரிசனத்தைக் கண்டு பரவசம் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அந்தப் பெரியவர் ஸ்ரீமடத்துக்கு வந்திருந்தார் என்பது உறுதியானது.

சிவபெருமானின் ஓர் அம்சம் தான் மஹாபெரியவா என்று சொல்லப்படுவதுண்டு. இதை அனுபவப்பூர்வமாக உணர்ந்த சில பக்தர்கள் மஹாபெரியவாளை தரிசித்து, அத்தகைய தரிசனம் பெற்றிருக்கிறார்கள். அந்த வகையில் காஞ்சிபுரத்துப் பெரியவர் மறைவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன், அவருக்கு அத்தகைய ஒரு தரிசனத்தைக் காட்டி அருளி அருக்கிறார் மஹாபெரியவா.

அதனால் தான் ஒவ்வொரு முறையும் ‘தெரியறதா? என்று பெரியவா கேட்ட போதும் ‘தெரியல’ என்று சொல்லிக் கொண்டே வந்தவர், ருத்திராட்ச மாலையை எடுத்துத் தன் தலையில் வைத்துக் கொண்டதும், சாட்சாத் அந்த சிவபெருமானே பெரியவா முகத்திலே தரிசனம் தந்திருக்கிறார். இதன் பின்னால் அந்தக் காஞ்சிபுரத்துப் பெரியவருக்கு மோட்சம் கிட்டாமலா இருக்கும்?

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share

எனக்கு கல்பூரம் காட்டு!…
ஸமுத்ரகரையோரம் இருக்கும் மணல்களையும், வானத்து நக்ஷத்ரங்களையும் எண்ணுவது எப்படி அஸாத்யமோ… அப்படித்தான் நம் பெரியவாளுடைய அனுக்ரஹத்தை அனுபவித்த ஜீவகோடிகளை எண்ணுவது!

திருச்சியை சேர்ந்த ஒரு பக்தை ஸ்ரீமதி நாகலக்ஷ்மி. காமாக்ஷிதான் பெரியவா! என்ற அஸாத்ய நம்பிக்கை! ஆனால் பெரியவாளை வெளியூரில் வந்து தர்ஶனம் பண்ணுவதற்கு மனஸு முழுக்க ஆசை இருந்தாலும், குடும்ப சூழ்நிலை அதற்கு இடம் கொடுக்கவில்லை.

திருச்சிக்கு பக்கத்தில் ஏதோ ஒரு இடத்தில் பெரியவா முகாம். ஒருநாள் எப்படியோ ஸம்ஸார சூழலிலிருந்து விடுபட்டு, பெரியவாளை தர்ஶனம் பண்ண அந்த முகாமுக்கு வந்துவிட்டாள் அந்த அம்மா.

மத்யானவேளை. பெரியவா ஸ்ரீ சந்த்ரமௌளீஶ்வரர் பூஜை பண்ணிய மேடையிலேயே ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டு, அங்கு வந்தவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

நாகலக்ஷ்மியும் ஒரு தட்டில் கல்பூரத்தை ஏற்றிக்கொண்டு பெரியவாளான காமாக்ஷிக்கு, கல்பூர ஹாரத்தி காட்டுவதற்காக, பெரியவாளுக்கு அருகில் சென்று ஹாரத்தி தட்டை உயர்த்தியதும், படக்கென்று பெரியவா முகத்தை வேறு பக்கமாக திருப்பிக் கொண்டுவிட்டார்!

‘யதேச்சையாக நடந்தது இல்லை’ என்பது போல், மறுபடி மறுபடி ஹாரத்தி தட்டு உயரும் போதெல்லாம், பெரியவா முகத்தை வேறுபக்கமாக திருப்பிக் கொண்டுவிடுவார்!

கடைஸியில், பெரியவா ஏதோ முகத்தை கொஞ்சம் காட்டிய ஸமயத்தில், இந்த அம்மா ஹாரத்தி காட்டியதும், விருட்டென்று பெரியவா எழுந்து உள்ளே போய்விட்டார்!

” அம்பிகே! என்ன மஹாபாவம் செய்தேன்? அம்மா! காமாக்ஷி! ஏம்மா இந்த ஸோதனை?..”

பாவம்! அழுது கொண்டே, ஸ்ரீ சந்த்ரமௌளீஶ்வரருக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த ஸ்ரீ த்ருபுரஸுந்தரிக்கு அந்த ஹாரத்தியை காட்டிவிட்டு, கண்ணீரும் கம்பலையுமாக முகாமுக்கு வெளியே வந்துவிட்டாள்.

“அம்மா…. அம்மா! நில்லுங்கோ! பெரியவா உத்தரவாறது…”

பின்னாலேயே ஒருவர் ஓடி வந்தார்…..

“என்னையா? பெரியவாளா?….. இருக்காது….”

நொந்த மனஸு, நம்ப மறுத்தது.

“ஒங்களத்தாம்மா….. கூப்படறார்…. வாங்கோ!..”

பெரியவா சுவரில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தார். தயங்கியபடி உள்ளே நுழைந்து நமஸ்காரம் செய்தாள்.

“எனக்கு காட்டணும்-னு கல்பூரத்தை ஏத்திட்டு, அங்க… பூஜைல அம்பாளுக்கு காட்டிட்டோம்-னு கொறைப்பட்டுக்காதே! ம்….! இப்போ ஹாரத்தி எடு….”

கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டார்.

தட்டு, கல்பூரம், வத்திப்பெட்டி எல்லாம் கைகள் நடுங்க, பையிலிருந்து வெளியே வந்தன!

ஆனந்தமும் ஒருவித ஷாக்-தானே!

இதோ…… தீபமங்கள ஜோதி நமோ நமோ….. !

ஜிலுஜிலுவென்று சுடர்விடும் கல்பூர தீபத்தை, பெரியவாளுடைய திருமுகமண்டலத்தை நோக்கி உயர்த்தி அந்த தீப ஒளியில் பெரியவாளைப் பார்த்தாளோ இல்லையோ…….

“அம்மா! அம்மா!…….”

மயங்கி விழாத குறையாக கண்களிலிருந்து கண்ணீர் ஆறாக பெருக, கன்னத்தில் போட்டுக் கொண்டாள் அந்த பரமபக்தை!

என்ன கண்டாள்?……

செங்கையிற் கரும்புவில்லும், மலரம்பும், பாஶாங்குஶமும் கொண்டு, பங்கயத் திருவதன புன்னகையும் தான் கண்டு….. என்று ஸாக்ஷாத் பாரமாம்பிகையே அங்கு ‘ஜம்மென்று’ அமர்ந்திருக்கக் கண்டிருக்கிறாள்!

நாம-ரூபமில்லாத ப்ரஹ்மம், வேண்டியவர் வேண்டியபடி, இஷ்ட ரூபத்தில் காட்சி கொடுக்கும், அவரவர் பக்திக்கேற்ப!

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share


சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை. - காஞ்சிப் பெரியவர்

காஞ்சிப் பெரியவரின் கூடவே இருந்து, அவருக்கு 40 ஆண்டுக் காலம் சேவை செய்யும் பாக்கியம் பெற்றவர் லக்ஷ்மிநாராயணன் என்னும் 76 வயதுப் பெரியவர். மாங்காட்டில் இருக்கிறார். சக்தி விகடனில் காஞ்சிப் பெரியவர் பற்றிய அனுபவங்களை எழுதச் சொல்லலாம் என்று, எழுத்தாளர் சாருகேசியுடன் சென்று, அவரைச் சந்தித்துப் பேசினேன். காஞ்சிப் பெரியவர் பற்றி அவர் சொன்ன ஒரு விஷயம் எனக்கு புதுசாக இருந்தது.

காஞ்சிப் பெரியவர் தமது பரிவாரங்களுடன் நடந்து வருகிறார். லஸ் அருகில், அவரையும் அவரது அடியவர் கூட்டத்தையும் தாக்குவதற்காக திராவிடர் கழகத்தினர் கழி, கட்டைகளோடு நின்றுகொண்டு இருக்கிறார்கள். காஞ்சிப் பெரியவருக்கு ஏதேனும் சங்கடம் நேர்ந்துவிட்டால், தங்களால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாதே என்கிற பதைப்போடு டி.டி.கே., சதாசிவம் போன்றோர் கையைப் பிசைந்துகொண்டு நிற்கிறார்கள். பெரியவரை மேலே முன்னேறி வர வேண்டாம் என்று அவர்கள் கேட்டுக் கொள்கிறார்கள். அவரது பாதுகாப்புக்கு போலீஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள். இருந்தாலும், அவர்களும் தங்களை மீறி பெரியவருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிடுமோ என்கிற பயத்தில், அவரை மேலே செல்ல வேண்டாம் என்று தயவுடன் கேட்டுக் கொள்கிறார்கள்.

பெரியவர் புன்னகைக்கிறார். “ஏன் வீணா பயப்படறேள்? அவா என்னை ஒண்ணும் பண்ண மாட்டா!” என்று சொல்லிவிட்டு, அருகே இருந்த அம்பாள் கோவில் எதிரே நின்று சிறிது நேரம் கண்களை மூடிப் பிரார்த்தனை செய்துகொண்டுவிட்டு, மேலே நடக்கத் தொடங்குகிறார். கூடவே நடந்து செல்லும் அனைவரின் மனதிலும் திக்… திக்..! என்ன ஆகப் போகிறதோ என்று படபடப்பு!

அந்த நேரத்தில், ஈ.வே.ரா. பெரியார் அங்கே வருகிறார். திராவிடர் கழகத் தொண்டர்களைப் பார்த்து உரத்த குரலில், “எல்லாரும் கட்டைகளைக் கீழே போட்டுட்டு, ஒதுங்கி நில்லுங்க. பெரியவரை வழி மறிக்கிறது, தாக்குறது எல்லாம் கூடாது, சொல்லிட்டேன்! அவர் எங்கே போகணுமோ, அங்கே அவரை ஒரு ஆபத்தும் இல்லாம கொண்டு போய்ச் சேர்க்க வேண்டியது உங்க பொறுப்பு!” என்று கட்டளை இடுகிறார். அந்தக் கணீர்க் குரல் பெரியவருக்கும் அவரைச் சுற்றி நிற்கும் அனைவருக்கும் கேட்கிறது. “நான்தான் சொன்னேனே, பார்த்தீர்களா!” என்பதுபோல் பெரியவர் தம் அருகில் இருப்பவர்களைப் பார்த்துப் புன்னகை பூத்தபடி, தொடர்ந்து நடக்கிறார்.

பெரியாரின் கட்டளையைச் சிரமேற்கொண்டு, பெரியவரைப் பாதுகாப்பாக அழைத்துக் கொண்டுபோய் விடுகிறார்கள் திராவிடர் கழகத் தொண்டர்கள். இந்தச் சம்பவம் நடக்கும்போது கூடவே இருந்தவர் லக்ஷ்மிநாராயணன். இதை அவர் விவரித்தபோது, அன்றைக்கிருந்த படபடப்பு அவரது வர்ணனையில் இருந்தது.

இந்தச் சம்பவத்துக்குச் சில ஆண்டுகளுக்கு முன்னால் வரை, காஞ்சிப் பெரியவர் ‘மேனா’ என்று சொல்லக்கூடிய சிவிகையில்தான் சென்றுகொண்டு இருந்தார். சிவிகை என்பது பல்லக்கு. பழைய காலத் திரைப் படங்களில் இளவரசியை ஒரு பல்லக்கில் வைத்து, முன்னால் நான்கு பேர், பின்னால் நான்கு பேர் தூக்கிச் செல்வதைப் பார்த்திருக்கலாம். பெரியவரையும் அதுபோல்தான் அடியவர்கள் தூக்கிச் செல்வார்கள்.

ஒருமுறை, பெரியவர் அதுபோல் மேனாவில் சென்றுகொண்டு இருந்தபோது, வழியில் மேடை போட்டுப் பெரியார் பேசிக்கொண்டு இருக்கிறார். “மற்றவர்கள் சிரமப்பட்டுத் தூக்கிச் செல்ல, சொகுசாக உட்கார்ந்துகொண்டு போகிறாரே, இவரெல்லாம் ஒரு துறவியா? மனிதனை மனிதன் சுமப்பது எத்தனைக் கேவலமானது! துறவி என்றால் எல்லாச் சுகங்களையும் துறக்க வேண்டும். இப்படி அடுத்தவர் தோளில் உட்கார்ந்து போகும் இவரைத் துறவி என்று எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?” என்று பெரியார் முழங்கிக்கொண்டு இருப்பது பெரியவரின் காதுகளில் விழுந்தது.

அவ்வளவுதான்… மேனாவை அங்கேயே தரையிறக்கச் சொல்லி இறங்கிவிட்டார் பெரியவர். “அவர் ஏதோ சொல்றார்; சொல்லிட்டுப் போறார். அதைப் பெரிசா எடுத்துக்காதீங்கோ! உங்களைச் சுமந்துண்டு போறதை நாங்க பாக்கியமா கருதறோம்!” என்று மடத்தைச் சேர்ந்தவர்கள் பெரியவரிடம் கெஞ்சியிருக்கிறார்கள்.

“இல்லை. அவர் சொல்றதுதான் சரி! சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை. இனிமே எனக்கு இந்த மேனா வேண்டாம். இனி நான் எங்கே போகணும்னாலும் நடந்துதான் போகப் போறேன்” என்று தீர்மானமான முடிவெடுத்துவிட்டார் காஞ்சிப் பெரியவர்.

கடைசி வரையிலும், அவர் அந்த முடிவிலிருந்து மாறவில்லை. அவர் கால்கள் தெம்பு இருக்கும்வரை நடந்துகொண்டே இருந்தன

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: Kanchi Maha Periyava

Post by vgovindan »

தமிழில் ஒரு கதை. இளம்பெண்களின் கும்பல் ஒன்று ஆற்றங்கரைக்குச் சென்றுகொண்டிரு ந்ததாம். அங்கே ஒரு காவி உடை உடுத்த துறவி, ஒரு செங்கல் மீது தலைவைத்துப் படுத்துக்கொண்டிருந்தாராம். பெண்களில் ஒருத்தி "இதோ பாருடி, இந்தத் துறவிக்குத் தலையணை வேண்டியிருக்கு" என்று. சொல்லிவிட்டுப் பெண்கள் சென்றுவிட்டனர். இதைக் கேட்ட துறவி, தான் இனி செங்கல் கூட தலைக்கு வைத்துக்கொள்ளமாட்டேன் என்று தீர்மானித்து, செங்கல்லை எறிந்துவிட்டு, படுத்திருந்தானாம். பெண்கள் கும்பல் திரும்பி அதே வழியில் வரும்போது திரும்பவும் துறவியைக் கண்டனர். அதே பெண் திரும்பவும் கூறினாள் "பாருங்கடி, நாம் சொன்னதும் இவருக்கு ரோஷம் வந்துவிட்டது" என்று. இப்போது துறவி என்ன செய்வார்?

அதிலிருந்து அந்தத் துறவி தெரிந்துகொண்டது - உலகோரின் சொல்லுக்காக அஞ்சி ஒரு செயல் செய்வதோ, அல்லது செய்யாமலிருப்பதோ, தவறென்று.

எனவே, காஞ்சி மகாபெரியவர் மேனாவை விடுத்தது யாரோ ஒருவர் குறை கூறினதால் என்று நான் நம்பத்தயாராக இல்லை.

நான் தவறாகக்கூறியிருந்தால் மன்னிக்கவும்.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share

அண்மையில் குளித்தலை அருகே ஒரு வாஜபேய யாகம் நடந்தது. அனுஷ்டித்தவர் மாத்வ ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்த ருக்வேத வித்வான் ப்ரஹ்மஶ்ரீ ராமக்ருஷ்ண ஆச்சார். அவரது யாக பூர்த்தி தினத்தன்று மாத்வ ஸம்ப்ரதாய பாலிமாரு மடத்தைச் சேர்ந்த ஸ்வாமிகள் இருவர் வந்திருந்தனர். அவர்கள் முன்னிலையில் யாகம் செய்தவரின் தம்பி ருக்வேத வித்வான் ப்ரஹ்மஶ்ரீ தாமோதர ஆச்சார் பொதுசபையில் கூறியது மற்றும் அவர்கள் வெளியிட்டுள்ள புஸ்தகத்திலிருந்து கிடைத்த தகவல்கள் -

இன்று மாத்வ ஸம்ப்ரதாயத்தில் ருக்வேதத்திற்கு மக்கள் இருக்கிறார்களென்றால் அதற்குக் காரணம் காஞ்சீ காமகோடி பீடத்தின் 68வது ஆசார்யர் ஶ்ரீ சந்த்ரஶேகரேந்த்ர ஸரஸ்வதீ ஶ்ரீசரணர். முன்பொருமுறை வேத பாராயணம் ஒன்று நடந்துகொண்டிருந்த பொழுது அநேக ஸ்மார்த்த வித்வான்கள், சில வைஷ்ணவ வித்வான்கள், தவிர ஒரே ஒரு மாத்வ வித்வான்தான் அமர்ந்திருந்து பாராயணம் செய்துகொண்டிருந்தார். அவர் பெயர் பத்மநாப ஆச்சார்.

எல்லோருக்கும் சம்பாவனை செய்யும்பொழுது பெரியவா அவரை அழைத்து “யாரிடம் அத்யயனம் செய்தீர்” முதலிய விவரத்தைக் கேட்டார். அவரது வேத குரு திருவானைக்காவல் மடத்தில் இருந்த ஒரு ஸ்மார்த்த கனபாடிகள். விவரங்களைக் கேட்டு பாராட்டி இருமடங்கு சம்பாவனை கொடுத்து அனுப்பினார்கள். அது ஆச்சார் அவர்கள் மிகவும் வறுமையில் இருந்த சமயம். இருப்பினும் வீட்டிற்கு வந்து மிகவும் மன உறுத்தலில் சரியாக தூக்கம் வராமலிருந்து மறுநாள் பெரியவாளிடம் சென்று கொடுத்த இருமடங்கு சம்பாவனையைத் திருப்பி ஸமர்ப்பித்து “எனக்கு இதற்குத் தகுதியில்லை. வேதம் போதுமான அளவு எனக்கு மனப்பாடமாக இல்லை.” என்று கூறியிருக்கிறார்.

பெரியவா சிரித்து “கவலைப்படாதே” என்று சொல்லி வேறிரண்டு வித்வான்களைக் குறிப்பிட்டு “அவர்களுடன் ஆவர்த்தி செய்து வா, வேதம் உனக்கு சித்திக்கும்” என்று சொல்லி ஆசீர்வதித்து அனுப்பினார்கள். மேலும் “மாத்வ ஸம்ப்ரதாயத்தில் அத்யயனம் செய்தவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. ஆகவே பாடம் சொல்வதற்கு முக்கியத்துவம் கொடு. உனது மூன்று ஆண் பிள்ளைகளையும் வேதத்திற்கே சேர்ப்பி” என்று. அவரும் அவ்வாறே செய்தார். அவரது பிள்ளைகள் ராமக்ருஷ்ண ஆச்சார், பரசுராம ஆச்சார், தாமோதர ஆச்சார் மூவரும் ருக்வேத அத்யயனம் செய்தனர்.

அப்பொழுதே பெரியவா வேத ரக்ஷண நிதி ட்ரஸ்டை ஏற்படுபத்தும்பொழுது “இது சங்கர மடத்துடையது மட்டும் என்று யாரும் எண்ணக்கூடாது. வேதம் என்பது ஸ்மார்த்தர்கள், வைஷ்ணவர்கள், மாத்வர்கள் எல்லோருக்கும் பொதுவானது.” என்று சொல்லி மாத்வ குழந்தைகள் வேதம் கற்பதற்கும் இப்படி தனி கவனம் கொடுத்து ஊக்குவித்திருக்கிறார்கள் பெரியவா.

பிறகு பத்மநாப ஆச்சாரிடம் பெரியவா “மாத்வ ஸம்ப்ரதாயத்தில் அக்னிஹோத்ரிகள் யாரும் இல்லை. ஆகவே அக்னிஹோத்ரம் எடுத்துக்கொள்.” என்று ஊக்குவித்தார். சில காலம் பிறகு ஸோம யாகம் செய்யவும், பிறகு அதிலும் குறிப்பாக வாஜபேய யாகம் செய்யவும் பெரியவா தான் ஊக்குவித்திருக்கிறார். 1980களில் இந்த யாகம் நடந்திருக்கிறது.

பத்மநாப ஆச்சாரின் மகன்கள் ஒவ்வொருவரும் ருக்வேத மூலம் முடித்த பிறகு மேலும் பதம் க்ரமம் முதலியவையைக் கற்கவும் பிறகு ஷடங்கம் கற்கவும் ஊக்குவித்தார் பெரியவா. மேலும் அவர்களது ஸம்ப்ரதாயப்படி மாத்வ வேதாந்தம் கற்பதற்கு பம்பாயில் மாத்வ பண்டிதர் ஒருவரிடம் ஏற்பாடு செய்து அங்கு தங்குமிடம் மற்றும் ஊக்குவிப்புத் தொகை மாதாந்தரம் ௹ 200 ஏற்பாடு செய்தார்கள் பெரியவா.

நடுவில் ஒருசமயம் பெரியவா தரிசனத்திற்கு அவர்கள் வந்த பொழுது பெரியவா என்ன பாடம் ஆகிக்கொண்டிருக்கிறது என்று கேட்டார்கள். அதற்கு பதில் சொல்ல இவர்கள் தயங்கினார்கள். ஏனென்றால் அவர்களுக்கு ஆகிக்கொண்டிருந்த பாடம் மாயா வாத கண்டனம், அதாவது அத்வைதத்தைத் தவறு என்று சொல்வது. அத்வைத பீடாதிபதியான பெரியவாளிடம் எப்படி இதைச் சொல்வது என்று தயங்கினார்கள். அவர்களது தயக்கத்தைப் புரிந்துகொண்டு “பாதகமில்லை, சொல்லு” என்று ஊக்குவித்து நடந்த பாடத்தைச் சொல்லிக்காட்டும்படியும் தூண்டி கேட்டு மகிழ்ந்து சால்வை போர்த்தி ௹ 300 சம்பாவனையும் செய்து அனுப்பினார்கள்!

அத்வைதமென்றால் அதில் த்வைதத்திற்கும் இடம் உண்டு. ஏனெனில் நாமும் வ்யவஹார காலத்தில் த்வைதமாகத் தானே (அதாவது நீ வேறு நான் வேறு என்றுதானே) இருந்துகொண்டிருக்கிறோம். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒருவர் பேரிலும் த்வேஷமின்றி அவரவர்கள் ஸம்ப்ரதாயப்படி அனைவரும் இருக்கவேண்டும் என்பதே பெரியவாளின் கருத்து.

தந்தை அக்னிஹோத்ரம் எடுத்துக்கொண்டதற்கு சுமார் 30 வருடங்களுக்குப் பிகு அவரது மகன்கள் மூவரும் மந்த்ராலயத்தில் அக்னிஹோத்ரம் செய்துகொண்டனர். அதிலும் மூத்த மகனை மந்த்ராலயத்தில் இருந்து மாத்வர்களிடையே வேதாத்யயனம் செய்தவர்கள் எண்ணிக்கை மேலும் பெருக ருக்வேத அத்யாபனம் செய்துவரும்படி ஆஜ்ஞாபித்தததும் பெரியவாளே. மூன்று மகன்களும் நமது இன்றைய பெரியவா நடத்தும் ஶ்ரீமடத்து அக்னிஹோத்ர ஸதஸ்ஸில் பங்கேற்றுள்ளனர். மூத்தவரும் நடுவரும் ஸோம யாகம் செய்துள்ளார்கள். (நடுவர் தற்சமயம் இல்லை. அவர் காலகதி அடைந்து அக்னிஹோத்ரிகளுக்கான சிறப்பு விதிப்படி அவரது சடங்குகள் நடந்தேறின.)

மூத்தவர் தற்சமயம் வாஜபேய யாகம் செய்திருக்கிறார். இளையவரும் ஸோம யாகம் செய்யவிருக்கிறார். அவரவர்கள் இருக்குமிடத்தில் மாத்வ ஸம்ப்ரதாய மாணவர்களுக்கு ருக்வேதம் சொல்லிவைத்து அவர்களது ஸம்ப்ரதாய ஆசாரங்கள் மற்றும் பூஜை முதலியவற்றையும் அக்னிஹோத்ரத்தையும் அனுசரித்து வருகிறார்கள். இன்றும் எங்கள் ஸம்ப்ரதாயத்தில் இவ்வாறு வேதம் அக்னிஹோத்ரம் ஸோம யாகம் முதலியவை தொடர்ந்து வந்து இத்தனை வித்யார்த்திகள் வேதம் கற்றிருப்பதற்குக் காரணம் பெரியவாளே என்றும் அவர்களது குடும்பங்களுக்கு பல வகையிலும் பெரியவா செய்த அனுக்ரஹத்தையும் சொல்லி மகிழ்கிறார்கள் பத்மநாப ஆச்சார் குடும்பத்தினர்.

kvchellappa
Posts: 3597
Joined: 04 Aug 2011, 13:54

Re: Kanchi Maha Periyava

Post by kvchellappa »

repeat, deleted.
Last edited by kvchellappa on 12 Jan 2017, 10:13, edited 1 time in total.

kvchellappa
Posts: 3597
Joined: 04 Aug 2011, 13:54

Re: Kanchi Maha Periyava

Post by kvchellappa »

Experience With Maha Periyava : January 8th 1994
https://www.youtube.com/watch?v=Fn8sEIlsVo0

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

Shri KVC avl,
Excellent ! Thanx for sharing.

A share

கர்த்தர் யார் ?-
காஞ்சி மஹான்

ஒரு பாதிரியார் பெரியவாளை தர்சனம் பண்ண வந்தார்.

ஒரு பெரிய தட்டு நிறைய பழங்களை சமர்ப்பித்து விட்டு, தங்கள் மத வழக்கப்படி தலை, மார்பு, தோள்கள் இவற்றை விரல்களால் தொட்டு, ஒரு கிராஸ் போட்டுவிட்டு தன்
வணக்கத்தை தெரிவித்துக் கொண்டார்.

அவர் நிறைய படித்தவர்; அபரிமிதமான பேச்சாற்றலால், மதக் கொள்கைகளை அடுக்கிக் கொண்டே போனார்.

தங்கள் மதத்தைத் தவிர வேறு எந்த மதத்திலும் இப்பேர்ப்பட்ட அருமையான கொள்கைகள் இல்லவேயில்லை என்று நிலை நாட்ட விரும்பிய வேகம், வெறி அவர் பேச்சில் தொனித்தது......யாரிடம்?

"அன்புதான் எங்க கொள்கையில ரொம்ப முக்கியமானது; எல்லோரிடமும் வேற்றுமை பாராட்டாமல், அன்பு செலுத்தியவர் எங்கள் பிதா.." மேற்கொண்டு அவரை பேசவிடாமல் அவருடைய மனசாக்ஷியே தடுத்தது போல், பேச்சை நிறுத்திக் கொண்டார்.

காரணம், எங்கள் பிதா...என்று அவர் சொல்லி முடித்ததும் பெரியவா லேஸாக புன்னகைத்ததும், பாதிரியாரின் பேச்சு நின்றது.

"ஹிந்து மதத்லேயும் அன்புக்கு ரொம்ப முக்யத்வம் உண்டு! "அன்பே சிவம்"...ங்கறது பெரியவால்லாம் சொன்ன வாக்கு!

திருமூலர்ன்னு ஒரு பெரியவர் திருமந்திரம்ன்னு ரொம்ப ஒசத்தியான புஸ்தகம் எழுதியிருக்கார்.

அதுல அன்பைப்பத்தி, மனித நேயத்தைப் பத்தி ரொம்ப அழுத்தமா சொல்லியிருக்கார்.

விஷ்ணு சஹஸ்ரநாமம்...ன்னு மஹாபாரதத்ல வருது.

அதுல, "கரணம், காரணம், கர்த்தா, விகர்த்தா"ன்னு பகவானுக்கு பேர் சொல்லப்பட்டிருக்கு.


நீங்களும் ஜீஸஸ்ஸை கர்த்தர்..ன்னு சொல்லறேள். உங்க மதத்துக்கு எத்தனையோ காலத்துக்கு முன்னாடியிலிருந்தே.... நாங்க பகவானை "கர்த்தர்"ன்னு சொல்லிண்டிருக்கோம்!

ஒங்களோட மதப்ரசாரங்கள் எல்லாத்துலயும், எங்களோட மதம், இதிஹாஸ புராணங்கள்,கடவுள்கள் எல்லாத்தையும் நிந்தை பண்றேள்!

ஆனா, நாங்க எந்த மதத்தையோ, மதத் தலைவர்களையோ, தெய்வத்தையோ நிந்தனையாவோ, கொறையாவோ பேசறதில்லை!

ஏன்னா ஹிந்து மதம்தான் மிச்ச எல்லா மதங்களுக்கும் தாயார் மாதிரி !

ஒரு தாயார், தன்னோட கொழந்தை துஷ்டனா இருந்தாக் கூட திட்ட மாட்டா!.....

நீங்கள்ளாம் ஹிந்து சமயப் பண்டிதாளை மீட் பண்ணறதுக்கு விரும்பாம, எதுவுமே தெரியாத பாமர ஜனங்கள் கிட்டப் போய் வாசாலகமா [வாய் ஜாலமாக] பேசறேள் !

எங்களுக்கு அனுஷ்டானம் முக்யம் ; ஒங்களுக்கு ப்ரசாரம் முக்யம்; அதோட பாமர ஜனங்கள் ..ட்ட போனதுமே ஒங்களோட மதத் தத்துவத்தை சொல்றதில்லை; பால் பவுடர், ரொட்டி, துணிமணி...ன்னு குடுத்து ஆசை காட்டி இழுத்துக்கறேள்! மொதல்ல அவாளுக்கு காப்பு மாதிரி பணம் குடுக்கறேள்... அப்றமா மதத்தைப் பத்தி பேசறேள்...."

பாதிரியார் சங்கடமாக நெளிந்தார்!

உண்மையை அவரால் ஜீரணிக்க முடியவில்லை.


ஆனாலும் பெரியவாளுடைய ஒவ்வொரு சொல்லும் அவரைக் கட்டிப் போட்டுவிட்டது!

"எங்கள் கர்த்தர்....தன் ரத்தத்தாலே பாவிகளின் பாவங்களைக் கழுவுகிறார்" கட்டக்கடைசியாக எதையோ சொல்ல வேண்டும் என்று சொன்னார்.

பெரியவா மறுபடியும் புன்னகைத்தார்....

"கர்த்தர்...ரொம்ப கருணையானவர்...ங்கற ஸ்துதி ஞாயந்தான்!

ஆனா மத்தவாளை நிந்திக்கக் கூடாதுங்கறதும் ஞாயந்தானே ?...."

பாதிரியார், "நிந்தனை பத்தி என்னை சிந்தனை செய்ய வெச்சிட்டீங்க!.." என்று முக மலர்ச்சியோடு கூறவும், ஒரு பழத்தை ப்ரசாதமாக குடுத்தார் பெரியவா.

அவருக்கும் திருக்கரத்தை உயர்த்தி ஆசி வழங்கினார்.

நம்முடைய மதத்தைப் பற்றி நாம் யாரிடமும் ப்ரசாரம் பண்ணி எதையும் ஸ்தாபிக்க அவச்யமேயில்லை!

ப்ரசாரம் பண்ணுவதற்கு "இவ்வளவுதான் இதில் இருக்கிறது" என்ற full stop ப்பை நம்முடைய மத நூல்களுக்கு [இதிஹாஸ,புராணங்கள்,சாஸ்த்ரங்கள் என்று நீண்டு கொண்டே போகும்] நம்மால் வைக்க முடியாது.

சங்கரர், மத்வர், ராமானுஜர், ஆழ்வார்கள், நாயன்மார்கள் இன்னும் ஏகப்பட்ட பக்த சிரோன்மணிகள் கூட ப்ரசாரம் பண்ணாமல், சாஸ்த்ர சம்மதமான தங்கள் அனுஷ்டானத்தில் நமக்கெல்லாம் வாழ்ந்து காடடியிருக்கிறார்கள்.

எனவே அவரவர் எந்தக் கடமையை செய்ய வேண்டுமோ, அதை ஒழுங்காக பண்ணிக் கொண்டிருந்தாலே, நம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது என்பதே மஹான்களின் வாக்கு!

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர !
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர!

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share

Artist Silpi’s works are indeed masterpieces.

Those were the Days, when, Ananda Vikatan used to bring some amazing sketches of Shilpi of almost all the Temples of Tamil Nadu and Bhaskara Thondaiman used to elaborately write about these Ancient Temples!

It was a moment in unsung history when the Mahaperivar of Kanchipuram granted Aritst Silpi an audience, a moment that the artist had waited for over a month foregoing his work; it was a moment that changed the life of Artist completely.

In the late hours of the night, after the entire world had sunk into deep slumber, a dialog commenced between two people. One was a revered saint, loved and respected by all and the other was an artist, talented but unsung. Within the sacred room, in the light of an oil lamp, the bright and clear eyes of the saint lit up as he whispered the truth to the painter. He said, “You have lived many lives, and in all of them you have worshipped the Lord sincerely. You have been a Sthapathi at various temples in your past lives where you have sculpted various forms of the Divine. This is your last birth. Do not dilute this sacred skill anymore. Take a vow that you shall paint the form of the divine alone hence forth. Your talent is divine, you are blessed, and you are already aware of the sciences of the Shila Shastra and Samudrika Lakshanam, you need no more education. Go into the world again, at sunrise tomorrow, with a goal to bring the divine into every home, through your paintings.”

The artist took leave and went across the land, to the remotest temples across the country to capture the very form of the Divine into his canvas. It was not an easy task that lay ahead, for the restrictions were tough, and only the orthodox and pure hearted could perform such a miraculous feet. He was told, “You shall not use your imagination, you shall not change anything that you see within the shrine chambers, you shall follow the law of Shilpa Shastra, and you shall capture the character of the Divine in various forms as described in the Samudrika Lakshanam. You shall not use extra lights, you shall work within the limited lamps lit within the chamber, and capture the changing swarupa(features) of the Divine as you meditate through the experience of painting. In this way, you shall capture the power of the Divine within the shrine chamber into your painting, the secret of which shall be expressed through the strokes of your brush.”

The artist did as told, and started a whole new life dedicated to the Lord, to his Guru, his guide who blessed his every breath through the rest of his life.

Artist Silpi, was a family man, and his wife was a staunch devotee of the Paramacharya. As age took over, she was unable to visit the saint at the Kanchi Matt and seek His divine blessings. She requested her husband to go and capture the essence of the Paramacharya in his painting and make a portrait that she could worship at home for the rest of her life. In the year 1956, Artist Silpi made another visit to the Saint to capture His portrait, for his wife. It was a difficult proposition as the Saint did anything but co-operate. He moved around, to make it extremely difficult for the artist, testing his devotion and his patience to capture His being. When it finally ended, the painter held a master piece in his hand. An expression of devotion, one that captured every finger and toe that the Saint otherwise hid, one that even captured the divine light the enveloped the form of the Saint. It was a true masterpiece. Within the color the Saint stares on, the clarity in His eyes so beautifully captured, the vilva leaves still so fresh, the divine glow of spiritualism in His being which no photograph could ever catch. The only lamp that lit the room lay at His feet, a light that lit up so much of his Divine form, this celebrated Saint has never been captured such. Within the chamber where he posed and watched an artist paint, He blessed this work by granting us a vision of His divine presence for the world to feel, to imbibe.

Kanchi Mahaperivar Sri Jagath Guru Chandrasekarendra Saraswathy Swamigal lives on in the painting of Artist Silpi.

Nadamadum Deivam!

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share

"மிகவும் பழைய காலத்து வாய்ஸ் ரிகார்டர் எதுவென்று யாருக்காவது தெரியுமா?"-பெரியவா கேள்வி

(2)"விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது?"

சொன்னவர்-பட்டு ஸாஸ்திரிகள்
நன்றி-பால ஹனுமான்.

1950-களில் ஒருநாள் ஒரு வானொலி நிருபர் ஸ்ரீமஹாபெரியவாளை பேட்டிகண்டு அதனை டேப்ரிகார்டரில் பதிவு செய்துகொண்டிருந்தார். திடீரென்று பெரியவா அவரிடமும்,அங்கு இருந்தவர்களிடமும்,"மிகவும் பழைய காலத்து வாய்ஸ் ரிகார்டர் எதுவென்று யாருக்காவது தெரியுமா?" என்று கேட்டார். யாரும் பதில் சொல்லவில்லை.

பெரியவா மற்றொரு கேள்வியைக் கேட்டார்,"விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது?"

...
யாரோ ஒருவர்,"விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பீஷ்மர் நமக்குத் தந்தார்" என்றார். அனைவரும் "ஆம்" என்று ஒப்புக்கொண்டனர். பெரியவா சிரித்துக்கொண்டே தலையசைத்துவிட்டு, மற்றொரு கேள்வியை வீசினார்,"குருக்ஷேத்திரத்தில் அனைவரும் பீஷ்மர் சொன்ன விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பக்தியோடு கேட்டுக் கொண்டிருந்தபோது, அதனை குறிப்பெடுத்ததோ, எழுதிக்கொண்டதோ யார்?" மீண்டும் அமைதி.

ஸ்ரீசரணர் புன்னகையுடன் சொல்ல ஆரம்பித்தார்.........

“பீஷ்மர், ஸ்ரீகிருஷணரின் புகழையும், பெருமைகளையும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தால் விளக்கிக் கொண்டிருந்தபோது, ஸ்ரீகிருஷணரும், வியாசரும் உட்பட அனைவரும் வேறு எந்த நினைப்புமின்றி அவரையே உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தனர். பிதாமகர் பீஷ்மர் ஆயிரம் நாமங்களையும் சொல்லி முடித்தபின்பு அனைவரும் விழிப்படைந்தனர்.

முதலில் யுதிஷ்ட்டிரர் பேசினார்,"பிதாமகர், ஸ்ரீவாசுதேவரின் ஒப்பற்ற பெருமை வாய்ந்த ஆயிரம் புனித நாமாக்களை சொன்னார். அவற்றைக் கேட்பதில் கவனமாக இருந்த நாம் அனைவரும் அவற்றை குறிப்பெடுக்கவோ, எழுதிக்கொள்ளவோ தவறிவிட்டோம். நாம் அற்புதமான விஷயத்தை இழந்து நிற்கின்றோம்" என்றார். அப்போதுதான் அனைவரும் எப்படிப்பட்ட தவறு நேர்ந்துவிட்டதென்று உணர்ந்து திகைத்தனர்.

பிறகு யுதிஷ்டிரர் ஸ்ரீகிருஷணரிடம் திரும்பி,"ஆயிரம் புனித நாமாக்களை மீட்டுத்தர தாங்களாவது உதவக்கூடாதா" என்று கேட்டார். ஸ்ரீகிருஷ்ணர் வழக்கம்போல், "என்னால் மட்டும் என்ன செய்ய முடியும்? உங்கள் எல்லோரையும் போல நானும் ஆச்சார்யர் பீஷ்மரைத்தான் பார்த்துக்கொண்டிருந்தேன் என்றார்.

அனைவரும் சேர்ந்து ஸ்ரீகிருஷ்ணரிடம், "ஹே.. வாசுதேவா, நீ ஆனைத்தும் அறிந்தவர். உம்மால் இயலாததென்பது எதுவுமே இல்லை. தாங்கள் தயைகூர்ந்து எங்களுக்கு உதவ வேண்டும். அந்த ஒப்புயர்வற்ற பெருமைவாய்ந்த பரந்தாமனின் ஆயிரம் புனித நாமாக்களை மீட்டுத்தர வேணடும். அது தங்களால் மட்டுமே முடியும்" என்று வேண்டினர்.

அதற்கு ஸ்ரீகிருஷ்ணர்,"இதனை செய்ய முடிந்த ஒருவர் உங்களுக்குள்ளேயே இருக்கின்றார்" என்றார். எவருக்கும் ஒன்றும் புரியவில்லை. ஸ்ரீவாசுதேவர் தொடர்ந்தார்,"சகாதேவன் அதனை மீட்டு சொல்ல, வியாசர் எழுதுவார்" என்றார். அனைவரும் சகாதேவனால் எப்படி சஹஸ்ரநாமத்தை மீட்க முடியும் என்பதை அறிய ஆவலாக இருந்தனர். ஸ்ரீவாசுதேவர் கூறினார்,"உங்கள் அனைவருள்ளும் சகாதேவன் மட்டுமே 'சுத்த ஸ்படிக' மாலை அணிந்திருந்தான். சகாதேவன் சிவபெருமானை பிரார்த்தனை செய்து தியானித்து 'சுத்த ஸ்படிகம்' உள்வாங்கியுள்ள சஹஸ்ரநாமத்தை சப்த அலைகளாக மாற்ற, அதனை வியாசர் எழுதிக்கொள்ளுவார்" என்றார்.

'சுத்த ஸ்படிகம்' அமைதியான சூழ்நிலையில் எழும் சப்தங்களை கிரகித்துக்கொள்ளும். இது ஸ்படிகத்தின் குணம், தன்மை. 'ஸ்வேதம்பரராகவும்' 'ஸ்படிகமாகவும்' இருக்கும் சிவபெருமானை தியானித்து அந்த சப்தங்களை மீட்க முடியும்.

உடனே சகாதேவனும் வியாசரும், பீஷ்மர் சஹஸ்ரநாமம் சொல்லிய அதே இடத்தில் அமர்ந்தனர். சகாதேவன் மஹாதேவரை பிரார்த்தித்து, தியானம் செய்து சஹஸ்ரநாமத்தை மீட்கத் துவங்கினர்.

அந்த 'சுத்த ஸ்படிக' மாலையே உலகின் முதல் 'வாய்ஸ் ரிகார்டராக', அற்புதமான விஷ்ணு சஹஸ்ரநாமத்தை நமக்குத் தந்தது...........”

என்று சொல்லி குழந்தைபோல சிரித்தார் ஸ்ரீசரணர்.

ஹர ஹர சங்கர, ஜய ஜய சங்கர.
ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்..

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: Kanchi Maha Periyava

Post by vgovindan »

thanjavooran wrote: A share

கர்த்தர் யார் ?-
காஞ்சி மஹான்
மன்னிக்கவேண்டுகின்றேன். இது உண்மையா அல்லது கட்டுக்கதையா? என் கருத்தில் இது நம்பத்தக்கதாக இல்லை. உண்மையென்றால், தயவு செய்து ஆதாரம் கூறவும்.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share



" நீ வெறும் ராமன் இல்லே; தயாள ராமன்!"

(தயாளச் செயல்களைப் பாராட்டுவதில் ரொம்ப தாராளம்,!-தாயும் ஆன பெரியவாளுக்கு)

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-143
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்

ஒரு குடியானவப் பெண்மணி, கருவுற்றிருந்த தன் பெண்ணை அழைத்துக் கொண்டு பெரியவாள் தரிசனத்துக்கு வந்தாள்.

"ரொம்ப நாள் கழிச்சு முழுகாமல் இருக்கு. அதான் கவலையாயிருக்கு. நல்லபடியா குளி குளிக்கணும்.
ரொம்பத் தொலைவிலேர்ந்து நடந்து வர்றோம்.சாமி ஆசீர்வாதம் பண்ணணும்" -பெண்மணி

பெரியவாள் கையைத் தூக்கி ஆசி வழங்கினார்கள்.

தாயார் தொடர்ந்து பேசினாள்; " நாங்க ரொம்ப ஏழைங்க சாமி, முழுகாமல் இருக்கிற மவளுக்கு, வாய்க்கு வேண்டிய பதார்த்தங்களை வாங்கிக் கொடுக்கக்கூட முடியலை. சரியா சாப்பாடு போடவும் வசதியில்லை. அடுப்புச் சாம்பலை துண்ணுது."

அந்த சமயம் ஸ்டேட் பாங்க் ரங்கநாதன், ஒரு டப்பா நிறைய கட்டித் தயிர் கொண்டுவந்து சமர்ப்பித்தார்.

"நீயே அந்த டப்பாவை அந்த அம்மாகிட்டே கொடுத்துடேன்."- தயிர் டப்பா இடம் மாறியது.

கோபாலய்யர் (என்ஜினியர்) பிறந்தநாள் வழக்கப்படி, ஒரு டின் நிறைய இனிப்பு - உறைப்பு தின்பண்டங்கள் கொண்டு வந்தார். வேத பாடசாலை மாணவர்களுக்காக,

"கோபாலா! அந்த டின்னோட எல்லாத்தையும் அந்தப் பெண்கிட்ட கொடுத்துடு.." - டின் இடம் மாறியது.

அசோக் நகரிலிருந்து ராமு என்ற பக்தர் வந்தார். "அந்தப் புள்ளைத்தாச்சி நடந்தே வந்திருக்கா. திரும்பிப் போற போதாவது பஸ்ஸிலே போகட்டும். வழிச் செலவுக்கு ஏதாவது கொஞ்சம் கொடு."

ராமுவுக்குப் பரம சந்தோஷம்! பெரியவாளே ஆக்ஞை பண்ணுகிறார்கள்! அந்தப் பெண்ணின் தாயாரிடம் சென்று சில ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்தார்.

தாயும்,மகளும் ஆயிரம் நன்றி சொல்லிவிட்டுப் புறப்பட்டு சென்றார்கள்.

அசோக் நகர் ராமுவைப் பார்த்து, "எவ்வளவு ரூபாய் கொடுத்தே?" என்று பெரியவாள் கேட்டார்கள்.

பல பேர் எதிரில் தொகையைச் சொல்வதற்கு அவருக்கு தயக்கமாக இருந்தது.

"பெரியவாள் சொன்னார்கள் என்றால், லட்சக் கணக்கில் கொண்டு வந்து கொட்டுவதற்கு பல பெரிய மனிதர்கள் தயாராக இருக்கிறார்கள்.நான் எம்மாத்திரம்?"

பெரியவாள்,ராமுவிடமிருந்து பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்பது புரிந்தது. சொல்லாமல் தப்ப முடியாது.

"நாலாயிரத்துச் சொச்சம்தான் இருந்தது.அதைக் கொடுத்தேன்..."

"நான் அவ்வளவு பெரிய தொகையைக் கொடுக்க சொல்லலையே" - பெரியவா

"இப்போவெல்லாம் டெலிவரிக்காக கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரிக்குப் போனால்கூட மூணு நாலு ஆயிரம் ஆயிடறது.." - .ராமு என்கிற ராமன்.

சில நிமிஷங்களுக்குப்பின் பெரியவாள் சொன்னார்கள்;

" நீ வெறும் ராமன் இல்லே; தயாள ராமன்!"

"போதும்! நாலு தலைமுறைக்கு இந்த வார்த்தையே போதும்!" என்று நெஞ்சுருகச் சொன்னார், ராமு என்கிற ராமன்.
பெரியவாள் தயாளச் செயல்களைப் பாராட்டுவதில் ரொம்ப தாராளம்,!

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share

பெரியவா சரணம் !!!

"மடத்துக்கு வர்றவா குடுக்கற பழத்தையெல்லாம் புளியமரத்ல தொங்க விடுங்கோ!"

சிவாஸ்தானத்தில் பெரியவா தங்கியிருந்தபோது, காட்டுப்புத்தூரை சேர்ந்த ஒரு பெரிய பணக்காரர் தர்சனம் பண்ண வந்தார். அவர் கொண்டு வந்த காணிக்கை என்ன தெரியுமா? ரெண்டு ரஸ்தாளி வாழைப்பழத்தார்கள். ஒவ்வொன்றிலும் பத்து,பன்னெண்டு சீப்புகள் இருக்கும். ஒரு தாரையே ரெண்டு பேர் சுமக்க வேண்டியிருந்தது. அத்தனை பெரிய பழங்கள்! சீப்பு...... கனம் என்பதால் மட்டும் இல்லை, பெரியவாளுக்கு
சமர்ப்பிக்கும்போது பழங்கள் நசுங்காமல் இருக்கவே ரெண்டு பேர் தூக்கிக் கொண்டு வந்தனர்.
அன்போடு தன்னைக் காண வந்த பக்தருக்கு பிரசாதம் கொடுத்து அனுப்பிவிட்டு, சிஷ்யரைக் கூப்பிட்டார்.
"டேய்! அந்த ரெண்டு தார்களையும் ஜாக்ரதையா எடுத்து உள்ள வை! பழத்த பாத்தியோ! எவ்வளவு மொழு மொழுன்னு இருக்கு! ஒரு பழம் சாப்ட்டாலே போறும் போலருக்கு. சாப்பாடே தேவையில்லே! நாலு நாளைக்கு ஒங்களுக்கெல்லாம் கவலையே இல்லே!"ம்ஹும்! இது வெறும் சிஷ்யாளோட கல்பனை. ஏனென்றால் பெரியவா இந்த மாதிரி உத்தரவிடவில்லை..........மாறாக,
"டேய்! இந்தா.......இந்த ரெண்டு தாரையும் கொண்டு போய், வாசல்ல ஒரு பெரிய புளியமரம் இருக்கோல்லியோ?..அதோட கெளைல [கிளை] கைக்கு எட்டறாப்ல கட்டி தொங்க விடுங்கோடா!" என்று சொன்னார்.
அந்யாயம்! அக்ரமம்!...பெரியவா இப்பிடி எல்லாம் எங்களுக்கு அநீதி இழைக்கக் கூடாது! நாங்கள் இதை பலமாக கண்டிக்கிறோம்......என்றெல்லாம் வாயால் சொல்லவே முடியாது என்பது மட்டுமில்லை...........மனசால கூட நினைக்க முடியாது.
சிவாஸ்தானம்-தேனம்பாக்கம் பகுதியை சேர்ந்த மக்கள் வறுமைக் கோட்டுக்கும் கீழே வாடுபவர்கள். பொறுப்பில்லாத ஆண் 'குடி' மக்கள் நன்றாக குடித்து விட்டு, பசியோடு வீட்டுக்கு போய் அங்குள்ள பெண்கள், குழந்தைகளை அடித்து நொறுக்குவார்கள். இது அன்றாடம் வாடிக்கையாக நடப்பது! நம்முடைய கருணைக்கடலுக்கு இது தெரியாதா? ஏழை பங்காளன் இல்லையா?
வாழைத்தார் கட்டின அன்று இரவு அவ்வழியாக குடித்துவிட்டு வீட்டுக்கு போனவர்கள், வாழைதாரிலிருந்து பழத்தை பிய்த்து சாப்பிட்டுவிட்டு போனார்கள். பெரியவா 'ப்ளான்' படி, பசி வெகுவாக அடங்கியதால், வீட்டில் உள்ள பெண்களும், குழந்தைகளும் அடியிலிருந்து தப்பித்தனர். [பெரியவாளுக்கு தெரியாத சூக்ஷ்மமா?]
மறுநாள், நிரந்தர உத்தரவு வந்தது............."மடத்துக்கு; வர்றவா குடுக்கற பழத்தையெல்லாம் புளியமரத்ல தொங்க விடுங்கோ!" அதிலிருந்து புளிய மரத்தில் தினமும் வாழைப்பழம் !!
சுமார் பதினைந்து நாட்களுக்குப்பின், அந்த கிராமத்தை சேர்ந்த பெரியவர் ஒருவர் வந்தார்........."ஸாமி, இப்போ ரொம்ப ஆளுங்க திருந்திட்டாங்க. 'தண்ணி' போடறதையே நிறுத்திட்டாங்க ஸாமி! குடிசைல பொம்பளைங்க, கொளந்தைங்க எல்லாம் இப்போ
சந்தோஷமா இருக்காங்க ஸாமி!..." வணங்கினார். மாற்றத்துக்கு காரணம்............வாழைப்பழம்? இல்லை. ஞானப்பழமாக பூமியில் உதித்த பெரியவாளின் பெரும் கருணை மட்டுமே இது!

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share
courtesy Shri CRama avl

வித்யா கர்வம் ஒருவனுக்கு கூடாது: காஞ்சி பெரியவர்!

ஒரு சமயம் மஹா பெரியவர் மகாராஷ்டிர மாநிலம் சதாராவில் தங்கி இருந்தார். ஒரு அரசமரத்தின் கீழ் இளைப்பாறிய அவர் மரத்தின் வேரில் தலையை வைத்துப் படுத்துக் கொள்வார். முன்னால் திரை போட்டிருக்கும். பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கும் சமயத்தில் மட்டும் திரையை விலக்குவார்கள்.

அன்று சென்னையில் இருந்து வீணை வித்வான் ஒருவர் பெரியவரைத் தரிசிக்க நண்பருடன் வந்திருந்தார். பெரியவரைத் தரிசனம் செய்த அவர் அவரது அனுமதி பெற்று வீணையை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார். பக்தர்கள் எல்லாரும் அந்த இசை மழையில் நனைந்து கொண்டிருந்தனர். வாசித்து முடித்ததும் வீணையை உறையில் இட தயாரானார் வித்வான்.

பெரியவர் அவரிடம் அந்த வீணையை என்னிடம் கொடு. நான் அதை வாசிக்கலாம் இல்லையா? என்று கேட்டார். பெரியவர் வீணை வாசிக்கப் போகிறாரா என்று எல்லாருக்கும் திகைப்பு. வித்வான் உட்பட..! ஆனால் எதற்காக வாசிக்க இருக்கிறார் என்பது மட்டும் யாருக்கும் புரியவில்லை.

வீணையைக் கையில் வாங்கிய பெரியவர் சுருதி கூட்டி வித்வானிடம் காட்டினார். நான் சுருதி கூட்டியிருப்பது சரியா இருக்கான்னு பாரு என்றார்.
வித்வானும் சரியா இருக்கு என்று சொல்ல பெரியவர் வீணை வாசிக்க ஆரம்பித்து விட்டார். சில நிமிடங்கள் தான் ஆகியிருக்கும்! வித்வான் பெரியவரின் பாதங்களில் விழுந்தார்.

கன்னத்தில் போட்டுக் கொண்டு பெரியவா! என்னை மன்னிக்கணும்! என்னை மன்னிக்கணும்! தப்பு பண்ணிட்டேன்! தப்பு பண்ணிட்டேன் என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே கதறி அழ ஆரம்பித்து விட்டார். பெரியவர் வாசித்து முடித்தார். பின் வீணையை அவரிடம் திருப்பிக்கொடுத்து வித்யா கர்வம் ஒருவனுக்கு கூடாது. கவனமாக இரு என்று சொல்லி ஆசிர்வாதமும் செய்தார்.

வித்வானுடன் வந்த நண்பருக்கு என்ன நடக்கிறதென்றே புரியவில்லை. பின் நண்பர் வித்வானிடம் இங்கே என்ன நடந்தது? நீ தப்பு பண்ணிட்டதா கதறி அழுதே! பெரியவர் வித்யாகர்வம் கூடாது என்றார். அப்படி என்ன தான் இங்கு தவறு நடந்தது? என்றார்.
வித்வான் திகைப்பு கலையாமல் பதில் சொல்ல ஆரம்பித்தார்.
கைலாய மலையைத் தூக்க முயன்ற ராவணனின் கைகள் மலையின் அடியில் சிக்கிக் கொண்டன. அப்போது அவன் சாமகானம் இசைத்து சிவனை மகிழ்வித்து விடுதலை பெற்றான் இல்லையா! அது போல நானும் இங்கே சாமகானம் வாசிக்க துவங்கினேன். ஆனால் திடீரென எப்படி வாசிப்பது என்று மறந்து போய்விட்டது. இது யாருக்கு தெரியப்போகிறது என ஏதோ ஒன்றை வாசித்து நிறைவு செய்து விட்டேன். பெரியவர் இதைக் கண்டு பிடித்து விட்டார். என்னிடம் வீணையை வாங்கி அந்தப் பகுதியை சரியாக வாசித்து நிறைவு செய்து விட்டார்.

பெரியவர் ஸர்வக்ஞர் (எல்லாம் அறிந்தவர்). அவருக்கு எல்லாம் தெரியும் என்பது எனக்கு தெரியாமல் போச்சே! அபச்சாரம் பண்ணிட்டேனே! அதனால் தான் அவரிடம் மன்னிப்பு கேட்டேன் என்றார்.

நமக்கு தெரிந்ததைச் செய்ய வேண்டும். தெரியாத விஷயங்கள் தெளிவாகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற பாடத்தை இதன் மூலம் வாழும் தெய்வமான மஹா பெரியவர் நமக்கு தெரியப்படுத்தியுளார்.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share

ஏண்டா….அவன் என்ன சொன்னான்?
தேனம்பாக்க க்ஷேத்ரம். பெரியவா விஶ்ராந்தியாக கிணத்தடியில் அழகாக அவருக்கே உரிய பாணியில் உடலை குறுக்கிக் கொண்டு, கால்களை பின்னிக்கொண்டு அமர்ந்திருந்தார். அதிக கூட்டம் இல்லை. அனேகமாக எல்லாரும் ப்ரஸாதம் வாங்கிக் கொண்டு போய்விட்டார்கள்.

யாருமில்லாத போதுகூட, எப்போதுமே, யாருக்காவது அனுக்ரஹம் நடந்துகொண்டே இருக்குமே!

பெரியவா தன் திருவிழிகளை சுழல விட்டார்……..

“ஏண்டா…..அங்க யாரோ நிக்கறாப்ல இருக்கே! என்னன்னு கேளு….….”

ஆம்! அங்கு ஒரு யுவா [இளைஞன்], கண்களில் பக்தி பரவஸம் மின்ன, இரு கைகளையும் தலைக்குமேல் கூப்பிக் கொண்டு தன்னை மறந்த நிலையில் பெரியவாளை தர்ஶனம் பண்ணிக் கொண்டிருந்தான்.

பாரிஷதர் அவனிடம் சென்று

” என்னடா…..கொழந்தே! பெரியவா தர்ஶனத்துக்குத்தான வந்த? கிட்டக்க போய் நன்னா தர்ஶனம் பண்ணிட்டு, நமஸ்காரம் பண்ணிக்கோப்பா! …”

அந்த பையனின் விழிகள் பெரியவாளை விட்டு அங்கே, இங்கே நகரவில்லை! இவர் சொன்னது அவன் காதில் விழுந்ததா என்றும் தெரியவில்லை!

“ஆமா…….ஒனக்கு என்ன வேணும்? கிட்டக்க போப்பா..”

பொட்டில் அடித்தது போல் பதில் வந்தது

” நா………..பெரியவா மாதிரி ஆகணும்!!”

ஈஶ்வரா !………

பாரிஷதருக்கு உள்ளுக்குள் பயங்கர கடுப்பு !

“இங்க பாரு….இந்த மாதிரில்லாம் ‘தத்துபித்து‘ன்னு பெரியவாட்ட போய் கேக்கப்டாது! என்ன? புரிஞ்சுதா? ”

அந்தப் பையன் இவரைப் பார்த்து முழித்த முழிப்பில், அவன் கேட்காமலேயே, ஏகப்பட்ட அர்த்தங்கள் த்வனித்த கேள்விகள் பிறந்தன!

“பின்ன? பெரிய சக்ரவர்த்திகிட்ட போய், உப்பு, புளி வேணும்னா கேப்பா?…பகவான்கிட்ட பகவானையே கேக்காம, அழியற ஶரீர ஸௌக்யங்களை, ஸுக போகங்களையா கேப்பா?…..”

“ஸாதாரணமா எல்லாரும் கேக்கறா மாதிரி……வேலை, ப்ரமோஷன், கல்யாணங்கார்த்தி, வ்யாதி ஸொஸ்தம், படிப்பு, பதவி…ன்னு இப்டித்தான் கேக்கணும். என்ன? ஸரியா?…”

பையன் “ஒங்களுக்கு தெரிஞ்சது அவ்ளோதான்!..” என்பது போல் அவரைப் பார்த்தான்.

“வா…. வந்து நமஸ்காரம் பண்ணிக்கோ!….”

பெரியவா முன்னால் நின்ற இளைஞன், பெரியவாளுக்கு நான்கு முறை நமஸ்காரம் பண்ணினான்.

பேச்சே வரவில்லை!

கண்களோ… பெரியவாளின் அம்ருதவதனத்தை ஆனந்தமாக பருகிக் கொண்டிருந்தன!

இவன் வாயை திறந்து ஏதாவது ‘ஏடாகூடமாக‘ கேட்டுவிடப் போகிறானே என்று, பாரிஷதர் தானே முந்திக்கொண்டார்……

“இந்த பையனுக்கு.. பெரியவா அனுக்ரஹம் வேணுமாம்………”

உரத்த குரலில் அவனுக்கு பதிலாக பேசி விட்டார்.

பெரியவாளுக்கு ‘வயஸான‘தால் காது கேட்பதில்லை என்று எல்லோருமே சற்று உரக்க பேசுவார்கள் !

[“ஓஹோ!…எனக்கு காது கேக்காதுன்னு, கத்தியா பேசற? இரு… சொல்றேன்!…”]

பையனுக்கு ப்ரஸாதம் குடுத்தார். சென்றுவிட்டான்.

அப்பாடா! என்றிருந்தது…. அந்த பாரிஷதருக்கு….

இனிதான் சூடு!

அந்த பாரிஷதரை அழைத்தார்…..

” ஏண்டா……அவன்ட்ட ரொம்ப நேரமா பேசிண்டிருந்தியே?…… என்ன சொன்னான்?”

பாரிஷதரின் தொடை லேஸாக நடுங்குவது போல் இருந்தது.

என்னத்தை சொல்றது? உண்மையையா? பொய்யையா?…….

ஸத்யஸ்வரூபத்திடம் பொய்யா?

“இல்ல………வந்து…… அவனுக்கு…. பெரியவா மாதிரி ஆகணுமாம்! ……”

“நீ என்ன பதில் சொன்ன?...”

“…………….”

“இந்த மாதிரில்லாம் தத்துபித்துன்னு பெரியவாட்ட கேக்கப்டாது….ன்னு சொல்லிட்டியோ?”

ஸுமார் 25 அடி தள்ளி நின்று பேசியது…..!!!

“கடவுளே! தூண்டிலில் அகப்பட்டாச்சு. இவருக்கா காது கேட்காது? எல்லா தெசைலயும் கோடிகோடியா காதுகளும், கண்களும், கைகளும் வெச்சிண்டு, நம்ம முன்னால, ஒரு ‘ஸ்வாமிகள்’னு ஒரு வேஷம் போட்டுண்டு, காஷாயம் கட்டிண்டு உக்காந்துண்டு இருக்காரே!… இப்போ…. வகையா மாட்டிண்டேனே!”

“ஆ……..மா…..பெரியவா”

‘அப்பாடா! எப்படியோ உண்மையை பேசியாச்சு !’

மனஸ் லேஸாகியது. [அதுதான் ஸத்யத்தின் சிறப்பு]

ஆனால், அதோடு விட்டாரா?

இதோ ஒரு ‘குண்டு‘ வருகிறது……

“நீ…அப்டி சொல்லியிருக்கப்டாது.! அவன், ஏன் அப்டி கேட்டான்னு ஒனக்கு தெரியுமோ? ஒனக்கு என்ன தோணியிருக்கும்?…… அவன், என்னை மாதிரி பீடாதிபதியா ஆகணும்னு ஆசைப்படறதா நெனைச்சிண்டியோ?… குரு பீடத்ல ஒக்காந்துண்டுட்டா….. எல்லாரும்… ப்ரைம் மினிஸ்டர்லேர்ந்து… க்ரைம் மினிஸ்டர் வரை வந்து நமஸ்காரம் பண்ணுவா.! காணிக்கை குடுப்பா….! ஸாமான்ய விஷயத்த சொன்னாக் கூட, அத, வேத வாக்கா எடுத்துண்டு பேப்பர்ல போடுவா…! இப்டி நெனச்சு ஆசைப்பட்டுட்டான்னு தோணித்தோ?..……”

பாரிஷதர் மனஸை அப்படியே படம் பிடித்துக் காட்டும் போது, ‘அதெல்லாம் இல்லை’ என்று பொய் சொல்லவா முடியும்?

“………அதையே.. அந்த பையன் வேற விதமா ஏன் ஆசைப்பட்ருக்கக் கூடாது? இவர் பெரிய ஞானி.! பக்தர்! வேதஶாஸ்த்ர புராணங்கள்ள கரை கண்டவர்.! இவர் பேரை சொல்லிண்டு நெறைய நல்ல கார்யங்கள் நடக்கறது! கோவில் கும்பாபிஷேகங்கள் நடக்கறது! க்ராமியக் கலைகள் அபிவ்ருத்தியாறது..! இப்பிடில்லாம் இருந்தாலும், அவர் கொஞ்சமும் கர்வமில்லாம… தாமரை எலை தண்ணீர் மாதிரி இருக்கார்….! நானும் அந்த மாதிரி ஆகணும்! ஞானியா ஆகணும்!…ன்னு நெனைச்சிருக்கலாமில்லியோ?….”

நீண்ட பேச்சாக பெரியவா ரொம்ப நாளைக்கப்புறம் பேசியதால், பாரிஷதருக்கு கேட்க ஆனந்தமாகவும் இருந்தது. அதே ஸமயம் பட்டவர்தனமாக [தன்னைப்பற்றிய ஸத்ய விளக்கம்] எல்லாருக்கும் தெரிந்த பெரிய உண்மையை போட்டு உடைத்தார்!

பாரிஷதருக்கு வியர்த்துக் கொட்டியது.

“போ ! போயி…. அந்த பையன கூட்டிண்டு வா”

எங்க போய் தேடறது? எங்க போனானோ?

நாலாபுறமும் தேடிக் கொண்டு போனார்.

அதோ! அப்பாடா! ஶிவன் கோவிலை ப்ரதக்ஷிணம் பண்ணிக் கொண்டிருந்தான்!

“கொழந்தே! பெரியவா கூப்டறா…. வாப்பா..”

அவிழ்த்து விட்ட கன்னுக்குட்டி போல் தாயை தேடிக் கொண்டு ஓடினான்…… அந்தக் குழந்தை.

ஏறக்குறைய ஐந்து நிமிஷம் பெரியவாளை வைத்த கண் வாங்காமல் பார்த்தான் ! பெரியவாளும் நடுநடுவே அவனை கடாக்ஷித்தார் …….நயன தீக்ஷை நல்கினார்..….

“டொக்….”

பெரியவாளின் விரல் சொடுக்கில் குறிப்பறிந்த பாரிஷதர், ஒரு தட்டில் ஒரு பழத்தை வைத்து பெரியவாளிடம் கொடுத்தார்.

அதைத் தன் கையில் எடுத்துக் கொண்டார். தன் அன்பையெல்லாம் குழைத்து, ஒரு அம்மாவானவள், தன் குழந்தையின் கையில் ஸாதத்தை பிசைந்து போடுவது போல, சில நிமிஷங்கள் பெரியவாளின் திருக்கரத்தில் இருந்த [ஞான] பழம், பையனுக்கு பெரியவாளாலேயே அவனுடைய கையில் அனுக்ரஹிக்கப்பட்டது!

அரிய ஞானப்பழமாக அதை அன்போடு எடுத்துக்கொண்டு, நமஸ்கரித்துவிட்டு வேகமாக போய் விட்டான் அந்த யுவா!

இல்லையில்லை!…. ஞானி!

மஹான்கள் தங்கள் கைகளால் நமக்கென்று கொடுத்த எதையும் ஸாதாரணமாக உடனே பங்கு போட்டு யாருக்கும் கொடுக்காமல், வாங்கிக் கொண்டவர் மட்டுமே ஸ்வீகரித்துக் கொள்ளுவதுதான் உத்தமம்! இது ஸுயநலமில்லை. ஏதோ ஒரு காரணத்துக்காக, மஹான்களால் ஸங்கல்பிக்கப்பட்டு, தனியாக கொடுக்கப்பட்டது என்பதால், அதன் காரணத்தை அந்த மஹா புருஷர்களே அறிவார்கள்.

கர்மாவை கழிக்க பூமியில் பிறந்தாச்சு! கஷ்டமில்லாம ஓரளவு ஸௌகர்யமான வாழ்க்கை அமைஞ்சாச்சு! எல்லாத்துக்கும் மேல, கஷ்டமான ஜீவிதமோ, ஸுக ஜீவிதமோ, மஹா மஹா அவதாரமான பெரியவாளோட தர்ஶனமோ, ஸ்மரணமோ நிறையாவே கிடைச்சாச்சு! அவர் மேல அப்படியொரு அன்பும், பிடிப்பும் வந்தாச்சு! அவர் உபதேஸிப்பதை கடைப்பிடிக்கும் ஸௌகர்யமும் இருக்கு! பெரியவாதான் பகவான், காமாக்ஷி, ஶிவன், நாராயணன், பரப்ரஹ்மம் எல்லாம் தெரிஞ்சுண்டாச்சு!

அப்படியிருந்தும், இன்னும் எது நம்மை பிடிச்சு இழுக்கறது….?…. பூர்ணமா அவரே கதின்னு, அத்தனையையும் மனஸளவில் உதறிவிட்டு, அவரை ஶரணடைய?

மாயை!

இதுதான் நம் பதிலாக இருக்கும்.

ஆனால்…..பெரியவாளை விட மாயை powerful-லா என்ன?

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: Kanchi Maha Periyava

Post by vgovindan »

#பேசும்_தெய்வம்_பாகம் 2 J.K. SIVAN

'' #மண்டை_பிளந்து_ஆபரேஷன்''

''யாருக்கு எப்போது என்ன நடக்கும் என்பது மட்டும் தெரிந்து விட்டால் எப்படி இருக்கும்? ஒரு நிமிஷம் யோசித்தால் ''ஆஹா நமக்கு இன்னும் ரெண்டு மூன்று மாதங்களில் சம்பள உயர்வு, பதவி இன்னும் உயரப்போகிறது என்றால் இப்போதே அதிகாரம் பண்ண ஆரம்பித்து விடுவான். கையில் இருப்பதை தாம் தூம் என்று செலவழித்து விடுவான். அந்த மூன்று மாதங்களுக்கு முன்பே அவனது செயகையால், நடத்தையால் உத்யோக உயர்வும் அதை தொடர்ந்து வரும் பண வசதியும் பயனற்று போகும்.

''#இன்னும்_117_நாள்_தான்_எனக்கு_
#இந்த_உலக_வாழ்வு'' என்று அறிந்து கொண்டவனும் தெரிந்து கொண்ட அந்த நேரத்திலேயே துடிக்க ஆரம்பித்து விடுவான். ஆகாரம் வெறுத்து தூக்கம் இழந்து, எதிலும் சோகம், ஏமாற்றம் அவனை 116 நாள் முன்பாகவே சிறுக சிறுக கொன்றுவிடும்.

எதிர்காலம் மனிதனால் அறியக்கூடாத ஒன்று என பிரம்மதேவன் நன்றாக புரிந்து கொண்டு தான் அதை இருட்டடித்து வைத்திருக்கிறான். எந்த விஞ்ஞானத்தாலும் சாமர்த்தியத்தாலும் வரப்போவதை முன் கூட்டியே அறிய முடியவில்லை.''

மார்க்க பந்து பெரிய லெக்சரே அடித்து ஓய்ந்தார்.

''என்ன சொல்கிறீர்கள் தாத்தா ஸார் ?''

'' வாஸ்தவம் நீங்க சொல்றது. இது பத்தி சமீபத்தில் ஒரு மகா பெரியவா சம்பவம் படித்ததை சொல்லட்டுமா?
என்று ஆரம்பித்தேன். அதன் சுருக்கம் தான் இது.

''பெற்றோர்கள் நிறைய செலவழித்து ரெண்டு குடும்பங்கள் இணைந்தன. சந்தோஷமான இளம் தம்பதிகள். எல்லா சௌகர்யங்களும் வசதிகளும் வாழ்க்கையில் இருந்தது.

ஆனால் கல்யாணமாகி இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை. ஒரு பேரிடி விழுந்தது! ஆம். அந்த இளம் கணவனுக்கு தலைவலி ஒருநாள் தாங்க முடியாமல் ஆபிஸ்க்கு லீவு போட்டு வீட்டு வைத்தியமாக, ரெஸ்ட். பிரயோஜனம் இல்லை. அவனுடைய டாக்டரை போய் பார்த்தான். அவர் சோதித்து காரணம் சொல்லமுடியாமல் ஒரு பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பினார். பல டாக்டர்கள் தங்களது சாமர்த்தியத்தை காட்டினார்கள். எல்லாவித டெஸ்டும் பண்ணியாகிவிட்டது. மூளைக்குள் ஒரு கட்டி உருவாகியிருந்தது. பெரிதாகி வருகிறது.

"மண்டை ஓட்டை துளை போட்டு கழட்டி, ஆபரேஷன் பண்ணி கட்டியை எடுத்துடலாம். ரொம்ப ஈஸி!..." பெரிய டாக்டர் சுப்பாராயன் ஈஸியாக ''கால் கிலோ கத்திரிக்காய் வாங்குவதைப் போல் சொல்லிவிட்டதும் அந்த பையனின் மனைவிக்கு பாதி உயிர் போய் விட்டது.

''உயிருக்கு ஆபத்து இல்லையே?'' பையனின் அப்பா கேட்டார்.

''மதில் மேல் பூனை'' என்கிறார் சுப்பராயன்.

''பகவானை வேண்டிக்குங்கோ'' என்றாள் நர்ஸ் தங்கம். வயதானவள்.

''ராமரத்னம் பெரியவா பக்தர். காஞ்சிபுரம் ஓடினார். ஆபத்பாந்தவன், அனாதரக்ஷகன் இருக்கிறானே அவனே கதி. அவனை சரணடைவோம் என்று பெரியவாளை தரிசிக்க ஓடினார்.

"Honey Moon " குலு மணாலி போக பிளான் போட்ட இளம் தம்பதிகள் தேனிலவுக்கு பதிலாக தேனம்பாக்கம்.

வரிசையாக எல்லோரும் தரிசனம் செய்து பிரசாதம் பெற்றுக்கொண்டிருக்க வரிசை நகர்ந்தது. கண்களில் ஆறாக பக்தர் குடும்பத்தோடு மகா பெரியவாளுடைய திருவடிகளில் நமஸ்காரம் பண்ணினார் .

அந்த புது கல்யாணப் பெண் முழுதுமாக உடைந்து போய் அடக்கமுடியாமால் ஓவென்று கதறினாள். எல்லோரும் திடுக்கிட்டு நின்றுகொண்டிருக்க அவள் அழுது ஓயும் வரை பெரியவா மெளனமாக அவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டிருந்தார்.

"இவருக்கு தலைக்குள்ள tumour ன்னு சொல்லிட்டா பெரியவா..... ரொம்ப பயமா இருக்கு பெரியவா ...கல்யாணமாய் ரெண்டு மாசம் தான் ஆறது. காப்பாத்துங்கோ. பெரியவா என்ன சொன்னாலும் கேக்கறேன்....காப்பாத்துங்கோ பெரியவா! உங்களை விட்டா யார் இருக்கா எனக்கு?

குழந்தை அழுதால் தாய் பொறுப்பாளா சஹிப்பாளா?

"ஆபரேஷன்ல எனக்கு நம்பிக்கை இல்லே.பெரியவா, அதுவும், மண்டையை திறந்து உள்ளே ஆபரேஷன் சரி வராது. விபரீத விளைவு ன்னு சொல்றா. நேக்கு சரியா படலே..பெரியவா " ராமரத்னம் திக்கி திக்கி அழுதுகொண்டே சொல்ல மகா பெரியவா மௌனமாக அந்த பையனை பார்த்தார்.

அங்கிருந்த எல்லோருக்குமே அதிர்ச்சி. மகா பெரியவா அவனை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். மோனம் கலைந்து என்ன வார்த்தை வரப்போகிறதோ?'' காது, கண் எல்லாவற்றையும் கூராக்கிக் கொண்டனர். தெய்வம் அந்தப் பையனைப் பார்த்து மெல்லிய குரலில் பேசியது.

"நீ என்ன பண்றே....காவேரிக் கரையோரமா இருக்கற எதாவது ஒரு க்ஷேத்ரத்துக்கு போ! ஸ்வாமி தர்சனம் பண்ணு! தெனோமும் விடிகாலம்பற காவேரிக் கரையோட களிமண்ணை நிறைய எடுத்து தலைல முழுக்க அப்பிண்டு அரை மணி உக்காரு. அப்புறம், ஸ்நானம், ஸந்த்யாவந்தனம், ஸ்வாமி தர்சனம், எல்லாம் பண்ணு. நல்ல ஆசாரமான எடத்ல தங்கணும். ஸ்வயம்பாகம் பண்ணி சாப்டணும்...... இப்டீயா ஒரு மண்டலம், நாப்பது நாப்பத்தஞ்சு நா...இருந்தாலே எல்லாம் செரியாயிடும்...கவலைப்படாம போ "

அந்த இளம் தம்பதிகளுக்கு மட்டுமா சந்தோஷம்? சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணிவிட்டு அந்த குடும்பம் ப்ரஸாதம் பெற்றுக்கொண்டு அடுத்த நிமிஷமே நேராக, திருச்சி அருகே காவேரிக் கரையில் ஒரு க்ஷேத்ரத்தில் தங்கினார்கள்.

பழைய காவேரிக்கரையிலேயே இருந்த ஒரு சிவன் கோவில். அங்கே ஒரு இடம் பிடித்து தங்கினான் பையன் மனைவியோடு. பெரியவா சொன்னபடியே ப்ராத ( விடியல்) காலத்தில் #களிமண்_காப்பு, #ஸ்நானம், #ஸந்த்யா_வந்தனம், #ஸ்வாமி_தர்சனம், #ஸ்வயம்பாகம் (தானே மடியாக சமைத்து) எல்லாம் அழகாக சிரத்தையோடு. காலம் ஓடியது. நாற்பது நாள் ஆகிவிட்டது.

ரெண்டு பெரும் ஊருக்கு திரும்பினார்கள். தலைவலி காணோம். '' டாக்டரிடம் போய் பார்த்துடுவோம்'' . மனைவி சொன்னபடி இருவரும் சுப்பாராயனை சந்தித்தார்கள். வழக்கம் போல் டெஸ்ட் எல்லாம் எடுத்துவிட்டு ரிப்போர்ட் காகிதங்களை மேய்ந்தார். செக் பண்ணிவிட்டு,

"அட ஆச்சர்யமாக இருக்கே. ஒண்ணுமே காணுமே. #trace_இல்லையே! #கட்டி_கம்ப்ளீட்டா_கரைஞ்சு_போய்டுத்தே."

நீங்களே சொல்லுங்கள் அந்த ரெண்டு பெரும் உடனே என்ன செய்திருப்பார்கள்?

ஓடி வந்தார்கள் மகா பெரியவாளிடம். ஒண்ணரை மாசத்துக்கு முன் துக்கம் தாங்காமல் கண்ணீர் விட்டவள், இப்போது ஆனந்தம் தாங்காமல் கண்ணீர் விட்டாள். முகமெல்லாம் ஆனந்த சந்தோஷ பிரதிபலிப்பு. நன்றி உணர்ச்சியால் வார்த்தைகளே வரவில்லை.

"#பெரியவா.. #பெரியவா...." காலைத் தொடாத குறையாக கீழே விழுந்தவள் கணவனோடு எழுந்திருக்க மறுத்தார்கள். நிறைய பேர் காத்திருக்கிறார்களே . மடத்து உதவியாளர் மெதுவாக ஜாடை காட்டி அவர்களை எழுதிருக்க வைத்தார்.

''கை தொழுது அவரையே பார்த்துக்கொண்டிருந்த அந்த பெண்ணிடமும் பையனிடமும் பிரசாதம் அளித்து விட்டு பேசும் தெய்வம் என்ன சொல்லியது?

"நா....என்ன பெருஸ்...ஸா பண்ணிட்டேன்? "#வைத்யோ_நாராயணோ_ஹரி" தெரியுமோன்னோ? நேக்கு ஒண்ணும் தெரியாது. போங்கோ க்ஷேமமா இருங்கோ "

பையனுக்கு தினமும் சொல்லும் ருத்ரத்தின் ஒரு வார்த்தைக்கு அர்த்தம் அவரைப் பார்த்ததும் அப்போது தான் புரிந்தது ''#பேஷஜாம்_பிஷகு''

#வைத்தியத்துக்கே_வைத்தியம்_செய்பவர்ஆயிற்றே_அந்த_சிவஸ்வரூபம்.

pattamaa
Posts: 749
Joined: 22 Nov 2009, 10:24

Re: Kanchi Maha Periyava

Post by pattamaa »

shivaya namaha... periava sharanam.

பேஷஜாம்_பிஷகு - is from vishnu sahasranamam, not from sri rudram.. never the less...

shankarank
Posts: 4042
Joined: 15 Jun 2009, 07:16

Re: Kanchi Maha Periyava

Post by shankarank »

Sri Rudram also has the same references - pratamO daivyO bhishak , Siva viSvAha bhEshaji, Siva rudrasya bhEshaji

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share







ஆற்காடு நவாபுக்கு ஜோசியர் ஆனவர் - ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சி


படித்தேன் பகிர்கின்றேன் உங்களுடன் 

 

நான் சொல்லும் நிகழ்ச்சி நடந்து பல வருடங்கள் ஆகிறது. அப்போது என் அப்பா பி.எம். நடராஜ சர்மா, திருச்சி பிஷப் ஹீபர் உயர்நிலைப் பள்ளியில் சம்ஸ்கிருத ஆசிரியராகப் பணியாற்றினார்.

காஞ்சி மஹா ஸ்வாமிகள் ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளிடம் மரியாதையும் பக்தியும் கொண்டவர் அவர். திருச்சி மாவட்டத்தில் காவிரியின் வடகரையில் உள்ளது நத்தம் கிராமம். ஒரு முறை மஹா ஸ்வாமிகள் அங்கு முகாமிட்டிருந்தார். அவர் நடத்தும் ஸ்ரீதிரிபுர சுந்தரி ஸ்ரீசந்திர மௌலீஸ்வரர் பூஜையை தரிசிக்க விரும்பினார் என் அப்பா.

தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை இரவில் நத்தம் கிராமத்தை அடைந்தார். பூஜை முடிந்தது அப்பாவை அங்குள்ள எவருக்கும் தெரியாது. எனவே எவரும் உபசரிக்கவில்லை. மஹா ஸ்வாமிகள் தந்த விபூதிப் பிரசாதத்தை நெற்றியில் இட்டுக் கொண்டு பந்தலில் ஒரு மூலையில் படுத்து விட்டார் அப்பா.

அடுத்து வந்த சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களும் அப்படியே தான் கழிந்தன! பூஜைகளையும் ஆராதனையையும் கண்ணாரக் கண்டு தரிசித்தார். மூன்றாம் நாள் விநாயகர் சதுர்த்தி. சிறப்பு பூஜைகள் முடிந்ததும் ஸ்வாமிகளிடம் பிரசாதம் பெறச் சென்ற என் அப்பா நான் ஊருக்குப் போய் வருகிறேன்! என்றார். நிமிர்ந்து பார்த்த ஸ்வாமிகள் முதலில் பிள்ளையாருக்கு முன் உள்ள கொழுக்கட்டையை எடுத்துச் சென்று நிதானமா சாப்பிட்டப்புறம் வாங்கோ. ஊருக்குப் போறதைப் பத்தி பேசிக்கலாம்! என்றார்.

ஊருக்குப் போய் வருகிறேன் என்று ஒரு மரியாதை நிமித்தம் சொன்னதற்கு முதல்ல சாப்பிட்டு வா என்கிறாரே ஸ்வாமிகள்?! அப்பாவுக்கு பிரமிப்பு. ‘சரி’ என்று சாப்பிடப் போனார். சாப்பிட்டு முடித்ததும் அப்பாவை அழைத்து விசாரித்தார் ஸ்வாமிகள்.

என் அப்பா லால்குடி தாலூகாவில் உள்ள புதுக்குடி சீனிவாச ஜோதிடரின் பிள்ளை வழிப் பேரன் என்பதை அறிந்ததும் பெரியவா மிகவும் மகிழ்ச்சியடைந்தார். என் அப்பாவின் தாத்தாவைப் பற்றியும் அவரது காலத்தில் நடந்த பல நிகழ்ச்சிகளையும் நினைவு கூர்ந்து சொன்னார் ஸ்வாமிகள்.

அப்பாவுக்கோ ஆச்சரியம்!

ஸ்வாமிகள் தொடர்ந்தார் ‘உன்னோட தாத்தா மலையாள தேசம் போய் ஜோதிஷத்தை முறையா கத்துண்டு வந்தவர். தேவதைகளின் உபாசனையும் உண்டு. அவர் ஆற்காடு நவாபுக்கு ஜோசியர் ஆனது ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சி. அப்போது திருச்சிராப்பள்ளி ஆற்காடு நவாப் ஆட்சியில் இருந்தது.

நவாப் பிடம் பல ஜோசியர்கள் உண்டு. ஒரு நாள் நவாப் தன் கச்சேரியில் (அரசவையில்) இருந்த ஜோசியர்களுடன் தனது ஆட்சிப் பிரதேசத்தில் இருந்த அனைத்து ஜோசியர்களையும் அவைக்கு வரும் படி அறிவித்தார்.

புது ஜோசியர்கள் பலரும் கூடினர். அதுல உன்னோட புதுக்குடி தாத்தாவும் ஒருத்தர்.

கச்சேரிக்கு நவாப் வந்ததும் திவான் எழுந்து நின்று அங்கு கூடி இருந்த ஜோதிடர்களைப் பார்த்து உங்களுக்கெல்லாம் இன்று ஒரு போட்டி வைக்கப் போகிறார் நவாப். இன்று நம் நவாப் கோட்டையில் இருந்து எந்த வழியாக வெளியேறி வேட்டைக்குப் போகப் போகிறார் என்று நீங்கள் எல்லோரும் ஓலையில் எழுதிக் கூட்டுக்குள் போட்டுத்தரவேண்டும். எல்லாக் கூடுகளும் முத்திரையிடப்பட்டு எனது பாதுகாப்பில் இருக்கும். நவாப் திரும்பியதும் கூடுகளின் முத்திரைகள் உடைக்கப்பட்டு ஓலைகள் படிக்கப்படும். யார் எழுதியது சரியாக இருக்கிறதோ அவருக்கு நவாப் தக்க மரியாதை செய்வார்!’ என்று அறிவித்தார்.

உடனே எல்லா ஜோசியர்களும் கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு என்று அவரவர் கணக்குப்படி ஓலையில் எழுதிக் கூட்டுக்குள் போட்டுக் கொடுத்தார்கள். கடைசியில் அன்று நவாப் கோட்டையின் பிரதான வாசல்கள் வழியாகப் போகவே இல்லை.

மேற்கு வாசலின் வடக்குப் புறம் (தற்போது மெயின்கார்டு கேட் எனப்படும் வாயிலுக்கு வடக்கே பெட்ரோல் பங்க் இருக்கும் வழி) கோட்டை மதிலை இடித்து வெளியேறி மேற்குத் திசையில் உறையூர் நோக்கிக் கொஞ்ச தூரம் சென்றார். பிறகு வடக்குத் திசையில் திரும்பி காவிரிக் கரை வரை போனார். அதன் பிறகு தெற்கு நோக்கித் திரும்பி வடக்கு ஆண்டார் வீதியில் இடிக்கப்பட்ட வாசப்படி (புதுப்படி சந்து என்று தற்சமயம் பெயர்) வழியாக மலைக்கோட்டை வடக்கு வீதியில் நுழைந்தார். பிறகு கிழக்குத் திசையில் திரும்பி சறுக்குப் பாறைத் தெரு வழியாகக் கிழக்கு ஆண்டார் வீதிக்கு வந்தார். மலையை வலமாக வந்து தற்சமயம் உள்ள சின்னக் கடைத் தெரு வழியாக இப்போ டவுன்ஹால் என்று சொல்லப்படுகிற கச்சேரிக்கு வந்து விட்டார். வேட்டையாடவே இல்லை.

நவாப் கச்சேரிக்குத் திரும்பிய பின் ஜோசியர்கள் கொடுத்த கூடுகள் ஒவ்வொன்றும் முத்திரை உடைக்கப்பட்டு பிரிக்கப்பட்டன. ஓலைகள் எடுத்துப் படிக்கப்பட்டன.

உன்னோட தாத்தா எழுதிக் கொடுத்த ஓலை ஒன்று மட்டுமே துல்லியமாக நவாப்பின் நடவடிக்கையைக் குறிப்பிட்டிருந்தது.

நவாப் ஆச்சரியத்தில் மூழ்கிப் போனார். கச்சேரில இருந்தவர்களும் பிரமிச்சுப் போயிட்டா.

அப்புறம் நவாப் உன்னோட தாத்தாவுக்குப் புதுக்குடியில் 80 ஏக்கர் நிலம் பட்டயம் செய்து கொடுத்தார். மலைக்கோட்டை தெற்கு வீதில மேற்கே ஒரு கருப்புக் கோயில் இருக்கு. அதுக்குப் பக்கம் இரும்புக் கிராதி போட்ட ஒசரமான ஒரு பெரிய வீடு இருக்கு. அதன் எதிரே திண்ணை உள்ள ஒரு சின்ன வீடு உண்டு. இந்த ரெண்டு வீட்டையும் தாத்தாவுக்குக் கொடுத்தார்.

அந்த 80 ஏக்கர் நிலம் மலைக்கோட்டைப் பகுதியில் தந்த அந்த ரெண்டு வீடுகள் எல்லாத்தையும் சிறுகச் சிறுக தர்ம காரியங்களுக்கே செலவு பண்ணினார் என்று கூறி முடித்தார் மஹா ஸ்வாமிகள்.

இதன் பின் அப்பாவுக்கு ஆசியளித்து வழியனுப்பி வைத்தார் மஹா ஸ்வாமிகள். மஹா ஸ்வாமிகளின் தரிசனத்துக்குப் போய் அவரிடம் இருந்து பூரண அனுக்ரஹமும் பெற்று வந்த என் அப்பா இந்த சம்பவத்தை அடிக்கடி என்னிடம் சொல்லிப் பெருமைப்படுவார்.

 

பெரியவா கடாக்ஷம் பரிபூரணம்

 

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share

பெரியவாளுக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை... முக்குறுணிக் கொழுக்கட்டை செய்து பிள்ளையாருக்கு நைவேத்தியம் பண்ணனும்னு...''

தேனம்பாக்க நிகழ்வுகள்


நன்றி: ஸ்ரீமடம் பாலு சார்.

 

''பெரியவாளுக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை... முக்குறுணிக் கொழுக்கட்டை செய்து பிள்ளையாருக்கு நைவேத்தியம் பண்ணனும்னு...'' என்றவர், அது பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

 

''மதுரை, திருச்சி, ராமேஸ்வரம்னு சில தலங்களில் முக்குறுணிப் பிள்ளையார் உண்டு. முக்குறுணின்னா... ஆறு படி அளவு.

 

பெரியவா அரிசி அரைச்சுட்டு வரச் சொன்னார். பிரம்மசாரி ராமகிருஷ்ணன்கிட்ட ஐம்பது தேங்காயை உடைச்சு துருவிக் கொண்டுவரும்படி சொன்னார். பூரணம் பண்ணி ஒரே கொழுக் கட்டையா செய்யணும். பெரியவா ஆலோசனைப்படி எட்டு முழ வேட்டியில் கட்டி, வரதராஜ பெருமாள் கோயில்ல இருந்து பெரிய அண்டா கொண்டு வந்தோம். அன்னிக்கு காலைலேர்ந்து சாயங்கால வரைக்கும் கொழுக்கட்டை வெந்தது.

 

சரி... பிள்ளையாருக்கு நைவேத்தியம் பண்ணணுமே. கொழுக்கட்டையை பெரியவா முன்னாடி வைத்ததும்... 'தேனம்பாக்கத்துல ஒரு பிள்ளையார் கோயில் இருக்கு. அங்க வாசல்படியில் வெச்சுட்டு வந்துடுங்கோ’ன்னார் பெரியவா. பக்தர்களும் அப்படியே செஞ்சாங்க. அங்க என்னடான்னா... கோயில் வாசல்ல பெரிய மூட்டை கணக்கா இருந்த அண்டாவைப் பார்த்ததும், ஊர் ஜனங்க என்னவோ ஏதோன்னு பதறிட்டாங்க. அப்புறமா, அது பிள்ளையாருக்கான நைவேத்தியம்னு தெரிஞ்சதும், கட்டைப் பிரிச்சிருக்காங்க. உள்ளே பிரமாண்ட கொழுக்கட்டை!

 

எல்லாருமா பிரிச்சு சாப்பிட்டதுக்குப் பிறகு, 'சாமி, கொழுக்கட்டை நல்லா இருந்தது’ன்னு பெரியவாளை நமஸ்காரம் பண்ணினாங்க. பெரியவாளுக்கோ, பிள்ளையாருக்கு நைவேத்தியம் பண்ணணும்கற ஆசை நிறைவேறியதோட, ஜனங்களுக்கு அந்தக் கொழுக்கட்டையைத் தின்னக் கொடுத்த திருப்தி!'' என்ற பாலு, அடுத்து ஒரு கிரகணத்தன்று நடந்த சம்பவத்தை விவரித்தார்.

 

''அந்த முறை பெரியவாளோட அனுஷ நட்சத்திரத்துலேயே கிரகணம் பிடிச்சது. கிரகணம் விட்டு ஸ்நானம் எல்லாம் முடிஞ்சதும், தானம் செய்ய உட்கார்ந்தார் பெரியவா. நிறைவா பசு மாடு கொடுக்கணும். திருவட்டீசுவரன்பேட்டை வெங்கட்ராமன், பசு மாட்டுக்குப் பதிலா மட்டைத் தேங்காயை எடுத்து வைத்தார்.

 

அதாவது, பசு தானம் செய்ய முடியலைன்னா அதுக்கு ப்ரீத்தியாக மட்டைத் தேங்காய் கொடுப்பார்கள். ஆனா, மகா பெரியவா கோவிச்சுக்கிட்டார். 'என்னை ஏமாத்தப் பார்க்கறியா? மாட்டைக் கொண்டு வான்னா, நல்லதா ஒரு மாட்டைத்தான் கொண்டு வரணும்’னுட்டார். அப்புறம், எப்படியோ நல்லதொரு கறவை மாடாகக் கொண்டு வந்து நிறுத்தினாங்க. அதைத் தானம் கொடுத்த பிறகுதான் பெரியவாளுக்குத் திருப்தி! அதேபோன்று பூதானத்துக்கு ப்ரீத்தியா சந்தனக் கட்டை கொடுக்கலாம். ஆனால், அப்போதும் பெரியவா, கூடலூர் கல்யாண சுந்தரமய்யர் கொடுத்த ஒன்றரை ஏக்கர் நிலத்தை வேறு ஒருவருக்கு அப்படியே தானமாகக் கொடுத்துவிட்டார்!

 

விளாப்பாக்கம் என்ற ஊரில் குமரேசன்னு ஒரு பக்தர். அவர் குடும்பத்துல யாரோ பில்லி-சூன்யம் வெச்சுட்டாங்க. குளிச்சு உலர்த்தும் ஈரத்துணியும் தீப்பிடிக்குமாம். அவர் பெண்ணுக்குக் கண்ணைத் திறக்கவே முடியாது. ஜோசியம்லாம் பார்த்தும் பலனில்லை. அவர், தன் பெண்ணை பெரியவாகிட்ட அழைச்சுட்டு வந்தார். 'யாரோ என் பெண்ணோட கண்ணைக் கட்டிட்டா! பெரியவாதான் அனுக்கிரகம் பண்ணணும்’னு கதறினார். பெரியவா, அந்தப் பெண்ணோட கண்ணையே கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தார். அப்புறம், அவளை துர்கை சந்நிதிக்கு அழைச்சுட்டுப் போகச் சொன்னார். அம்பாளுக்கு முன்னாடி நிறுத்தி, கண்ணைத் திறக்கும்படி சொன்னார். என்ன ஆச்சரியம்..! அவளால் கண்ணைத் திறக்க முடிஞ்சுது. கண்ணைத் திறந்ததும், எதிரே துர்கை தரிசனம்... சிலிர்த்துப் போயிட்டா. அவளுக்குப் பார்வை சரியானதோடு, அன்னியிலேர்ந்து வீட்டில் துணிமணிகள் தீப்பற்றி எரிவதும் நின்னு போச்சு!''

 

- பாலு சொல்லி முடிக்க, அந்தக் கருணைக் கடாட்சங்களை எண்ணி, நம்மையும் அறியாமல் காஞ்சி தெய்வத்தை தொழுது பணிகிறது நம் உள்ளம்.

 

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share

கிருஷ்ண பக்தை  அம்மாளு அம்மாள்
                        

கன்னட தேசத்துப்பெண் ஒருவள் அங்கே வாழும் பெரும்பாலானவர்கள் போல மாத்வ வகுப்பை சேர்ந்தவள்.  கும்பகோணத்தில் இத்தகைய ஒரு
குடும்பத்தில் 1906ல்  அவள் பிறந்தாள் .

அந்த கால  வழக்கப்படி குழந்தையாக இருந்த போதே அவளுக்கு கல்யாணம் நடந்தது. கல்யாணம் என்றால் என்ன  என்றே தெரியாத நிலையில், புருஷன் என்கிற பையன் பொறுப்பான கணவனாக மாறுவதற்கு முன்பே  மரணம் அடைந்ததால்  அவள் குழந்தை விதவை ஆகிவிட்டாள் .   அப்பப்பா,  அந்தக்கால விதவைகளுக்கு நிகழ்ந்த கொடுமைகளை எழுத்தால் விவரிக்க முடியாது.  சமூகத்தில் ஒதுக்கப்பட்ட ஜென்மங்கள். அந்த பெண் உருவத்தில் சிதைக்கப்பட்டு, உள்ளத்தில் நொறுக்கப்பட்டு,  சமூகத்தில் அபசகுனமாக வெறுக்கப்பட்டு
உலகத்தால் சபிக்கப்பட்ட ஒரு ஜீவனாக பசியிலும் அவமானத்திலும் வளர்ந்து வாழ்ந்தாள்.  நரசிம்மனிடம், நாராயணனிடம், கிருஷ்ணனிடம்  அவள் கொண்ட பக்தி ஒன்றே அவளை உயிர்வாழ்வதில் கொஞ்சமாவது  அக்கறை கொள்ள செய்தது.

இந்த  சமூகம்  எனும் கொடிய  உலகத்திலிருந்து,  நரகத்திலிருந்து விடுதலைபெற தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தாள் .  பக்கத்தில் ஒரு ஆழமான குளம். கண்களை மூடி ஒருநாள் ''பகவானே, என்னை ஏற்றுக்கொள் '' என்று குதிக்கும்போது  ''நில் ''  என்று ஒரு குரல் தடுத்தது.  கண் விழித்தாள்.  உக்கிரமான நரசிம்மன் அவள் எதிரே சாந்தஸ்வரூபியாக நின்றான்.

''எதற்காக  இந்த தற்கொலை முயற்சி உனக்கு. உனக்கு கடைசி நிமிஷம் வரை  உண்ண உணவும்,  உடுக்க உடையும், இருக்க நிழலும் தான் கிடைக்கபோகிறதே'' என்ற நரசிம்மனை வாழ்த்தி வணங்கினாள் .

''பகவானே, எனக்கு  ஒரு வரம் தா''

''என்ன கேள் அம்மாளு ''.  அவள் எல்லோராலும் அம்மாளு  என்று தான் அழைக்கப்பட்டவள்.

''எனக்கு பசியே இருக்கக்கூடாது''.

''அம்மாளு , இனி உனக்கு பசி என்றால் என்ன என்றே தெரியாது. போதுமா'' என்று தெய்வம் வரமளித்தது.
அன்று முதல், ஒரு நாளைக்கு ஒருமுறை  ஒரு  டம்பளர் மோர், பால், ஏதாவது ஒரு  பழம் என்று கடைசி வரை வாழ்ந்த அம்மாளு அம்மாள் உணவை தொடவில்லை. ஏகாதசி அன்று அதுவும் கிடையாது. உற்சாகத்தோடு இருந்தாள்.  கிருஷ்ண  பஜனையில்  நாள் தோறும் அற்புதமாக  தனைமறந்த நிலையில்  கடைசி மூச்சு பிரியும் வரை ஈடுபட்டாள்.

இளம்  விதைவையாக வாழ்ந்த அம்மாளு அம்மாளுக்கு  ஒரு நாள் பாண்டுரங்கன் கனவில்  உத்தரவிட்டான்.

''நீ  பண்டரிபுரம் வாயேன்'' என்றான் பண்டரிநாதன்.

இந்த குரல் அவளை மறுநாள் பொழுது விடிந்ததும் பண்டரிபுரம் போக வைத்தது. எப்படி தனியாக போவது என்று அவளது அம்மாவை ''நீயும் என் கூட வா '' என்று கூப்பிட வைத்தது. அம்மா வரவில்லை. தனியாக கட்டிய துணியோடும் , தம்புராவோடும்  பண்டரிபுரம் சென்றவள் பல வருஷங்கள் அங்கேயே தங்கிவிட்டாள் .  கோவிலை அலம்பினாள் , பெருக்கினாள் , கோலமிட்டாள்,  மலர்கள் பறித்து மாலை தொடுத்தாள் , சூட்டினாள்,  பாடினாள் நிறைய  பக்ஷணங்கள், உணவு  வகைகள் சமைத்தாள். எல்லாம் அவளது அடுப்பில் குமுட்டியிலும் தான். பாண்டுரங்கனுக்கு திருப்தியோடு  அர்பணித்தாள் . எல்லோருக்கும் அவற்றை பிரசாதமாக விநியோகித்தாள். ஆனால் அவைகளில் ஒரு துளியும் அவள் உட்கொள்ளவில்லை.

அந்த ஊர் ராணி, அம்மாளுவின் பூஜைக்காக  வெள்ளி தங்க பாத்திரங்கள் நிறைய கொடுத்தாள். கண்ணில் கண்டவர்களுக்கு எல்லாம் அவற்றை அப்படியே  விநியோகம் செய்து விட்டாள் அம்மாளு அம்மாள். பணத்தை தொட்டதே இல்லை.  கீர்த்தனங்கள் சர மாரியாக அவள் வாயிலிருந்து பிறந்தன.  எந்த க்ஷேத்ரம் சென்றாலும் அந்த ஸ்தல மஹிமை அப்படியே அவள் பாடலில் த்வனிக்கும்,. அவள் அந்த க்ஷேத்ரங்களுக்கு அதற்கு முன் சென்றதில்லை, ஒன்றுமே தெரியாது,  என்றாலும் இந்த அதிசயம் பல க்ஷேத்ரங்களில் நடந்திருக்கிறது! இன்னொரு  அதிசயம் சொல்கிறேன்.

ஒரு பெரியவர்  மரணத்தருவாயில் இருக்கும்போது உறவினர்கள் அம்மாளுவை அவரிடம் அழைத்து போனார்கள். அவரைப் பார்த்ததும் அவர் உயிர் பிரிந்து போவது தெரிந்தது. உடனே அம்மாளு  தனைமறந்த நிலையில் கண்களை மூடி பாடினாள். அவரது உயிரை ராம நாமம்  தூக்கி செல்வது அவளுக்கு தெரிந்தது. அதை பாடினாள். அருகே இருந்த உறவினர்களுக்கு  அந்த மனிதர்  ராமநாமம் உபதேசம் பெற்று ஜபித்து வந்தவர் என்பதே தெரியாது. பிறகு தான் தெரிந்தது!

அம்மாளு அம்மாள்  நரசிம்மனை மறப்பாளா?  தன்  உயிரைக் காத்து புதிய பாதை அமைத்துக் கொடுத்த நரசிம்மனுக்கு ஜெயந்தியை விமரிசையாக கொண்டாடினாள்.  அன்று  108 வகை பிரசாதங்கள், பக்ஷணங்களை ஆசையோடு  தயாரித்தாள். வழக்கமான  உணவும் இதைத்தவிர சமைத்தாள்.  '' இந்தா  நரசிம்மா வா, வந்து இதை ஏற்றுக்கொள்''  என்று  அர்பணித்தாள். அன்று வெகு அருமையான கீர்த்தனங்களை பொழிவாள். தானாகவே  தைல தாரையாக  ஆயிரக்கணக்கான ஸ்லோகங்கள், கீர்த்தனைகள் அவள் வாயிலிருந்து புறப்பட்டிருக்கிறது.

ஒரு ஆச்சர்யமான சம்பவம் சொல்கிறேன் கேளுங்கள்.  மஹா பெரியவா கும்பகோணத்தில் தங்கி இருந்த போது  ஒருநாள் ஒரு மாத்வர்  ''என் பெண்ணுக்கு  கல்யாணம். பெரியவா  ஆசீர்வாதம் அனுக்கிரஹம் பெற வந்திருக்கிறேன்''  என்கிறார்.

''என்கிட்டே எதுக்கு வந்திருக்கே.  மரத்தடியில் ஒரு நித்யஉபவாசி இருக்காளே  அவா கிட்டே போய்  ஆசிர்வாதம் வாங்கிக்கோ.  உனக்கு சர்வ மங்களமும் சித்திக்கும்.  வேண்டிக்கொண்ட  எண்ணங்களும்  நிறைவேறும் ''.பெரியவா இவ்வாறு அம்மாளு அம்மாளின்  மஹத்வத்தை எல்லோருக்கும் அறிவித்ததற்கு பிறகு நிறைய பக்தர்கள் அம்மாளுவை சூழ்ந்து கொண்டார்கள்.  மஹா பெரியவா ஒரு தடவை    ''அம்மாளு அம்மாள் புரந்தர தாசர் அம்சம்''  என்று கூறியிருக்கிறார்.

பாகவத தர்மத்தின்  உதாரணமாக நித்ய பஜனை, ஆடல் பாடல் என்று அவள் வாழ்க்கை பூரணமாக கடந்தது. கிருஷ்ணனை நேரில் கண்டாள்  என்பார்கள்.

ஒரு சமயம் சென்னை ஜார்ஜ் டவுனில் நாராயண முதலி தெருவில் நாராயண செட்டி சத்திரத்தில் அம்மாளு அம்மாள் தங்கியிருந்தார். அப்போது  சென்னையில் பொருட்காட்சி நடந்து கொண்டிருந்தது. அதிலே பங்கேற்ற நாட்டியக் கலைஞர்கள் கோபிநாத் மற்றும் தங்கமணி, தம் குழுவினருடன்  இரவு நேரக் கலை நிகழ்ச்சியை முடித்துவிட்டு அம்மாளு அம்மாள் தங்கியிருந்த சத்திரத்தின் மேல் தளத்திற்கு வந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 12 மணியைத் தாண்டிய நிலையில் சற்றே கண்ணயரும் நிலையில், கீழே தாள சப்தமும், நர்த்தனம் ஆடும் சப்தமும் கேட்டதும் இந்நேரத் தில் யார் ஆடுவார்?  ப்ரமையோ என்றிருந்தனர். மீண்டும் மீண்டும் இன்னமும் சப்தம் அதிகரிக்க,  நாட்டியக் கலைஞர்கள் கீழே வந்து பார்த்தபோது அம்மாளு அம்மாள் தன்னை மறந்து ஆடிக் கொண்டிருந்தார்.

உடனே தாளத்தை வாங்கி நாட்டியத்தில் அனுபவம் மிக்க கலைஞர்கள் தாளம் போட்டனர். சுமார் இரண்டு மணி நேரம் அவர்களை மறந்து நாட்டியத்தில் லயித்தனர். கேதார ராகத்தில் ‘பாலக் கடல சய்யா’ எனும் கீர்த்தனம் பிறந்தது. எல்லாம் முடிந்ததும் நாட்டியக் கலைஞர்கள் அம்மாளு அம்மாவை வணங்கி, ‘‘சில ஜதிகள், நாட்டிய சாஸ்திரம் நன்கு கற்றவர்களாலேயே ஆட முடியாது. அதைப்போன்ற, எவராலும் சாதாரணமாக ஆட முடி யாத தெய்வீக நர்த்தனத்தை இன்று கண்டோம். இது யாரிடமும் பயின்று வருவதல்ல, யாராலும் பயிற்றுவிக்க முடியாததும்கூட’’ என்று கூறி பிரமித்து  நின்றனர். ‘‘இன்று இதைக் கண்டது நாங்கள் செய்த பேறு’’ என உணர்ச்சிவசப்பட்டனர். இவள்  புரந்தர தாஸரின் அவதாரம் என்று ஒருமனதாக புகழ்ந்தார்கள்.

2002ல்  மதுராபுரி ஆஸ்ரமத்தில்  94வயதில் நேரிலேயே கல்யாண ஸ்ரீனிவாச பெருமாள் தரிசனம் கிடைத்தது.  அந்த கணமே   ''நாக்கு கால மூர்தியு நீனே '‘nAkku kAla murtiyu neenE’  நீ தானே  நாலு கால மூர்த்தி என பாடினாள் . அந்த நாலு கால மூர்த்திகள் யார்?  விடியற்காலையில் ஸ்ரீமந்  நாராயணன், காலை முடியும் நேரம் ஸ்ரீ ராமன்,  அந்தி நேரத்தில்  ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மன்,  இரவில் ஸ்ரீ வேணுகோபாலன், கோபிநாதன்.

பங்குனி உத்தரம் சிறந்த நாள். கௌரி சிவனை அடைந்தாள்.  சீதை ராமனை அடைந்தாள். ஆண்டாள் பரமனை அடைந்தாள். கடைசி காலங்களை  கும்பகோணத்தில் கழித்தாள்.  வயதானாலும்  கிருஷ்ணனை தூங்கப்பண்ணி, எழுப்பி, குளிப்பாட்டி,  சிங்காரித்து, ஆடைகள் அணிவித்து, பாடி, உணவு சமைத்து நிவேதித்து, தாயாக  பாண்டுரங்கனுக்கு  சேவை செய்தவள்  அம்மாளு அம்மாள்.கிருஷ்ண பக்தை அம்மாளு  அம்மாள் 104 வயது வாழ்ந்து  2010 பங்குனி உத்திரம் அன்று  சித்தி அடைந்தாள். அதற்கு சில நாட்கள் முன்பே  அவளது நாவில் ஒரு பாடல்  வைகுண்டம் எப்படி இருக்கும் என விவரித்தது .

அவளது குரு ராமச்சந்திர தீர்த்தர்  சமாதி கும்பகோணம் காவிரிக்கரையில் அமரேந்திர புரத்தில் உள்ளது.

A few days before her departure from the world a kirtan describing the Vaikuntam fell out of her lips in divine trance!

“kalau khalu bhavishyanti nArayana parAyanAh
kvachit kvachin mahArAja dravideshu cha bhUrishaha
tAmraparNI nadI yatra krutamAlA payasvini
kAverI cha mahApuNyA pratichI cha mahAnadI”

கலியுகத்தில்,   த்ராவிட தேசம் எனும் தென்னிந்தியாவில்,  தாமிரபரணி, க்ருதமாலா, பயஸ்வினி, காவேரி, மகாநதி போன்ற  புண்ய நதிக்கரை பிரதேசங்களில் எண்ணற்ற  நாராயண பக்தர்கள் தோன்று வார்கள்  என்று மேலே கண்ட ஸ்லோகம் சொல்கிறது. ஆகவே தான் அற்புத  ஆழ்வார்கள் போல் அம்மாளு அம்மாளும் நம்மிடையே தோன்றி இருக்கிறாள்.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share

ஒரு முறை நேபாள மன்னரது வேண்டுகோளை ஏற்று நேபாளத்துக்கு யாத்திரையாகப் புறப்பட்டார் பெரியவா.
போகும் இடங்களில் எல்லாம் அவரை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்களை ஆசீர்வதித்தபடியே தனது யாத்திரையைத் தொடர்ந்து கொண்டிருந்தார் பெரியவா.
மகா ஸ்வாமிவேக வேகமான நடை அவருக்கே உரிய தனிச் சிறப்பு. அவருடன் சென்ற மடத்துப் பணியாளர் களால் ஸ்வாமிகளது வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. அவர்களின் பாதங்கள் சிவந்தும், காயம் பட்டும் ரத்தம் கசியும் நிலையில் இருந்தன.
கர்நாடக எல்லையில் இருந்த ஒரு கிராமத்துக்குள் பிரவேசித்தார் ஸ்வாமிகள். ஸ்ரீபரமாச்சார்யாரது விஜயம் அறிந்த கிராம மக்கள் ஓடோடி வந்து அவரை நமஸ்கரித்தனர். பிறகு, சகல மரியாதைகளுடன் அவரை வரவேற்று ஆரவாரமாக அழைத்துச் சென்றனர். சற்று நேரத்தில் பெரியவாளிடம் வந்த பணியாளர்கள் சாஷ்டாங்கமாக அவர் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்து விட்டு, ‘‘மன்னிக்கணும் பெரியவா! கால்களில் ரத்தம் கசியுமளவு வேதனை. ஆகவே, இரவில் இங்கேயே தங்கிட்டு, நாளைக்குக் காத்தால புறப்பட அனுக்கிரகிக்கணும்!’’ என்றனர் கண்ணீர் மல்க.
அவர்களைக் கருணையுடன் நோக்கிய பெரியவா, எதுவும் பேசவில்லை. சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்தார். 
எப்போதோ காஞ்சி மடத்துக்கு வந்து தன்னிடம் ஆசிபெற்றுச் சென்ற கர்நாடகத்தைச் சார்ந்த டாக்டர் ஒருவரைப் பற்றிய நினைவு வர… அந்த டாக்டரது ஊரைச் சொல்லி, ‘அது எங்கிருக்கிறது?’ என்று கிராமத்து வைதீகர்களிடம் விசாரித்தார் பெரியவா. மகா பெரியவா குறிப்பிட்ட ஊர், அதிர்ஷ்டவசமாக அவர் தங்கியிருந்த கிராமத்துக்கு அருகில்தான் இருந்தது.
பெரியவா உடனே மடத்தின் பணியாட்களை அழைத்த பெரியவா, ‘‘உங்களில் நடக்க முடிஞ்ச ரெண்டு பேர் மட்டும் அந்த ஊருக்குப் போங்கோ. அங்கே டாக்டர் நஞ்சப்பாவை பார்த்து, ‘பெரியவா உங்களைப் பார்க்கணும்னு சொன்னார்’ங்கற விஷயத்தைச் சொல்லி… அழைச் சுண்டு வாங்கோ!’’ என்றார். அதன்படி மடத்து சிஷ்யகோடிகளில் இருவர் டாக்டர் நஞ்சப்பாவின் ஊருக்கு விரைந்தனர்.
அதன் பின் பெரியவா அருகில் இருந்த அம்மன் கோயில் மண்டபத்தில் தங்கிக் கொள்ள, மற்றவர்களை அந்தக் கிராமத்தின் வைதீக பிராமணர்கள் சிலர் தங்கள் இல்லங்களுக்கு அழைத்துச் சென்றனர். டாக்டரது ஊருக்குச் சென்ற சிஷ்யர்கள், அவரைச் சந்தித்து மகா பெரியவா பக்கத்துக் கிராமத்தில் தங்கியுள்ளதைத் தெரிவித்ததுடன், சக சிஷ்யர் களின் உபாதை குறித்தும் பெரியவாளின் விருப்பம் குறித்தும் விளக்கினர்.
அந்த டாக்டருக்கு ஆச்சரியம்! ‘காஞ்சி மடம் சென்று பெரியவாளை நான் தரிசித்தது ஒரே ஒரு முறைதான். அதுவும் சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னதாக, எனினும் பெரியவா என்னை மறக்காமல் இருக்கிறாரே’ என்று அந்த மகானது நினைவாற்றலை எண்ணி வியந்தார். சற்றும் தாமதிக்காமல் மடத்து சீடர்களுடன் காரில் ஏறிப் புறப்பட்டார்.
கிராமத்தில், அம்மன் கோயில் முன்பாக காரை நிறுத்தி விட்டு மண்டபத்துக்குள் சென்ற டாக்டர், மகா ஸ்வாமிகள் பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார். அவரிடம் தொழில், குடும்ப நலன்களைப் பற்றி விசாரித்த பெரியவா, தம்முடன் வந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
டாக்டரும் மடத்துப் பணியாட்களின் பாதங்களைப் பரிசோதித்து, காயங்களுக்கு உரிய மருந்திட்டு, தேவைக்கேற்ப கட்டும் போட்டு விட்டார்.
அப்போது அவரிடம், ‘‘ஐயா, நீங்க ஒரு உபகாரம் பண்ணணும்’’ என்றனர் மடத்தின் பணியாட்கள்.
‘‘என்ன செய்யணும், சொல்லுங்க ளேன்.’’
‘‘ஒண்ணுமில்லே… கால்கள் குணமாக ரெண்டு நாளாகலாம். அதுவரை இங்கேயே தங்கிச் செல்லுமாறு நீங்கதான் பெரியவாகிட்டே சொல்லணும்.’’
அவர்களின் நிலைமை டாக்டருக்கு புரிந்தது. ‘சரி’ என்று சொல்லி, பெரியவாளிடம் சென்றவர் தரையில் அமர்ந்தார். பிறகு, ஏதோ சொல்ல முற்பட்டவரைக் கையமர்த்திய பெரியவா, ‘‘என்ன… ரெண்டு நாட்கள் இந்தக் கிராமத்துலேயே தங்கிட்டுப் போங்கோனு என்கிட்டே உங்களைச் சொல்லச் சொன்னாளா?’’ என்றார் பெரியவா.
டாக்டருக்கு வியப்பு. ‘பெரியவா தங்கியிருப்பது கோயில் மண்டபத்தில். அப்படியிருக்க அடுத்த வீதியில் தங்கி இருக்கும் பணியாளர்கள் சொன்னதை அட்சரம் பிசகாமல் நம்மிடம் சொல்கிறாரே!’ என்று அதிசயப்பட்டார் டாக்டர் நஞ்சப்பா.
‘‘கவலைப்படாதீங்கோ… ரெண்டு நாள் என்ன… அவாளோட கால்கள் குணமாகற வரைக்கும் இங்கே தங்கி, அப்புறம்தான் பொறப்படுவேன்’’ என்று அந்த நடமாடும் தெய்வம் புன்னகைக்க… கண்ணீர் மல்க கைகூப்பி நமஸ்கரித்தார் டாக்டர் நஞ்சப்பா.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share

இந்த வெல்வெட் பாதபீடத்தை பார்த்ததும் புரிஞ்சுபோச்சு!
----------------------------------------------------------------




COURTESY: SAGE OF KANCHI.

மஹா பெரியவா அப்போது மேனாவில் பிரயாணம் செய்வது வழக்கமாயிருந்தது.

பலகையில் சாய்ந்துகொண்டு, தாமரைத் திருவடிகளை நீட்டிக்கொண்டு உள்ளே உட்கார்ந்து கொண்டிருப்பார் . ஹரஹர சங்கர, ஜயஜய சங்கர என்று பக்தர்கள் முழங்க ஆடிக்கொண்டே மேனா செல்லும். உள்ளே புஷ்பம் உட்கார்ந்திருக்கும்.

எல்லோரும் காணக்கூடிய காட்சி இது. அதுவும் மேனாவுக்குள் இருந்தபடி தரிசனம் கொடுக்கும்போது, பாதங்கள் நீண்ட நிலையிலேயே இருக்கும்.

ஒரு பக்தர் சொல்கிறார்:

“பெரியவா பாதங்களை வைத்து கொள்வதற்கு மெத்து மெத்தென்று ஒரு இலவம்பஞ்சு மெத்தை திண்டு செய்து கொடுத்தால் என்ன?.

இப்படி தோன்றியவுடன், ஸ்பாஞ்ஜ் (காற்று_நிறைந்த, இலேசான மிருதுவான ரப்பராலான சொகுசு தயாரிப்பு) வாங்கி, அகலமாக , வட்டமாக வெட்டினேன்; மேலே, வெல்வெட் துணி வைத்து தைத்தேன்; நடுவில் வேறு ஒரு கலர் வெல்வெட்டில் , எட்டு இதழ் தாமரை; ஓரங்களில் லேஸ் வைத்து அழகுபடுத்தினேன்.

பெரியவாள் தரிசனத்துக்கு போன சமயத்தில், அவர்கள் மேனவில் உட்கார்ந்து இருந்தார்கள்.

நானும் என் அம்மாவும் ஸ்பாஞ்ஜ் தயாரிப்பை பெரியவாளிடம் சமர்பித்தோம் (மேனாவை ஒட்டினாற்போல், தரையில் வைத்தோம்) . பெரியவாள், “அஷ்டதளமா?” என்ற கேட்டுகொண்டே, மேனாவுக்குள் நீட்டிகொண்டிருந்த பாதங்களை எடுத்து, வெல்வெட் பாதபீடத்தில் வைத்தார்கள். எங்கள் நெஞ்சுக்குள் சிலிர்ப்பு ஏற்பட்டது.

“சரி, வெச்சிட்டு போ” என்று சொல்லாமல், தன் புனித திருவடிகளை, நாங்கள் பக்தியோடு சமர்ப்பித்த பொருளை உடனே ஏற்று கொள்ளும் விதமாக தன் பாதங்களை வைத்து கொண்டார்களே! இதை விட பெரிய பாக்கியம் வேறு என்ன இருக்க முடியும்?

பெரியவாள் பக்கத்தில் ஓர் அணுக்க தொண்டர் நின்றுகொண்டிருந்தார்.

“உனக்கு லலிதா சஹஸ்ரநாம தியான சுலோகம் தெரியுமா?”

“ஒரு நிமிடம் யோசனைக்கு பின், “அருணா கருணா தரிங்கிதாச்ஹீம்…” என்று தொடங்கினார் அவர்.

“இன்னொன்று …”

“ஸிந்தூராருண விக்ரஹாம்… ”

“அதுதான்! அங்கே ஒரு வித்வான் நிற்கிறார், பார். அவரிடம் போய், இந்த ஸ்லோகத்தில் வருகிற, ரத்னா கடஸ்த்த ரக்த சரணாம் – என்பதற்கு என்ன அர்த்தம்னு கேட்டுண்டு வா…”

அவர் உடனே போய் கேட்டுகொண்டு வந்தார். “அம்பாள் ரத்னமயமான கடத்தின் மீது தன் சிவந்த பாதங்களை வைத்து…” என்று அர்த்தம் சொன்னார்.

மேனாவின் அருகிலேயே ஒரு வித்வான் நின்றுகொண்டிருந்தார். அவர் மீது பெரியவா பார்வை விழுந்தது. அவர் அருகில் வந்தார்.

“சாஸ்திரிகளே! எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் இருந்துண்டே இருந்தது. என்னன்னா, அம்பாள் ஒரு கடத்தின் மேலே ஏன் பாதங்களை வெச்சிண்டிருக்கணும், கொஞ்சம் நெருடலா இல்லை?”

“ஆமாம்” என்று பவ்யமாகத் தலையாட்டினார் பண்டிதர். ”நீ இதுக்கு என்ன அர்த்தம் சொல்றே? ” டக்கென்று என்று பெரியவா கேட்டுவிட்டால் தர்ம சங்கடம் ஆயிற்றே என்ன பதில் சொல்வது?

“அது பொருத்தமாயில்லையோனோ?…”

“ஆமாம்..”

“இப்போ, இந்த பாத பீடத்தை பார்த்ததும் என் சந்தேகம் ஓடியே போயிடுத்து!”

பெரியவா விளக்கினார்கள்:

“அம்பாள் தன் செவந்த பாதங்களை இது மாதிரியான பாதபீடத்தில் வைத்துகொண்டிருகிறாள். – என்பது சரியாக இருக்கும். ஸ்லோகத்தில் வருகிற, “கடஸ்த்த” வை எடுத்திட்டு, “படஸ்த்த” வை போட்டால், சரியாக இருக்குமோன்னு தோன்றது. படம்னா துணி; மெத்தென்ற பாதபீடம். முதல்லே “படஸ்த்த” என்றிருந்த பதம், நாளடைவில் பேச்சு பழக்கத்தில், “கடஸ்த்த” என்று வந்திருக்கலாமோன்னு படறது. படஸ்த்த = துணியில் என்பதை “கம்பளியில்” (மிருதுவாக காலை குத்தாமல் இருக்கணுமே! ) என்று சமவாசகமாக வெச்சுக்கனும்.”.

நாங்கள் யாரும் (பண்டிதர் உள்பட) திகைப்பிலிருந்து மீளவில்லை!

“ரொம்ப நாளா யோசிச்சிண்டிருந்தேன். இப்போ இதை, இந்த வெல்வெட் பாதபீடத்தை பார்த்ததும் புரிஞ்சுபோச்சு”.

எந்த தகுதியும் இல்லாத, கடைசி வரிசையில் நிற்கிற என் போன்ற ஒரு பேதையின் எளிய சமர்ப்பணத்தால் மஹா பெரியவாளின் வெகுநாளைய ஒரு சந்தேகம் தீர்ந்ததாம்!. நடிப்பில் வல்லவரோ!! இருக்கலாம் அலகிலா விளையாட்டுடையார் அல்லவா !

Sachi_R
Posts: 2174
Joined: 31 Jan 2017, 20:20

Re: Kanchi Maha Periyava

Post by Sachi_R »

Video talk uploaded on behalf of Sri. Thanjavooran :
https://cldup.com/5xamHWO2Y6.mp4
Image

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

Shri sachi Avl,
Many thanks.
Thanjavooran
02 02 2018

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share

( "ஒரு பைசாவைக் கூட கையால் தொட்டதில்லை" உண்மைதான். ஆனால் கல்யாணத்துக்கு வேண்டிய பணம் கிடைத்துவிட்டது - தலைப்பாகை சாமியாருக்கு! )

(ஏழைக்காக லீலா நாடகம் நடத்திய பெரியவா)

சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

"பெண்ணுக்குக் கல்யாணம். மடத்திலேர்ந்து
ஏதாவது உதவி செய்யணும்...."

ஏழைத் தம்பதிகள், அம்மாள் கழுத்தில் மஞ்சள் சரடு, மெல்லியதாக ஒரு வடம் செயின்.

இவர்களுக்கு உதவி செய்யவேன்டியதுதான்.

"நான் ஒரு சந்நியாசி, ஒரு பைசாவைக்கூட கையால் தொட்டதில்லை.என்னிடம்
போய் பண உதவி கேட்கிறாயே!" என்று வெளிப்படையாகப் பேசிக்
கொண்டிருக்கும்போதே அந்தரங்கத்தில் திட்டம்.

அதேசமயம், காமாட்சி கோயில் தலைமை
ஸ்தானீகர் பிரசாதம் கொண்டு வந்தார். முதலில், பெரியவாளுக்குப் பரிவட்டம் கட்டினார். பின்னர், குங்குமப் பிரசாதம் சமர்ப்பித்தார்.

பெரியவாள் பரிவட்டத்தைக் கழற்றி, பெண்
கல்யாணத்துக்கு உதவி கேட்டு வந்தவரை
சுட்டிக்காட்டி "அவருக்குக் கட்டு" என்று
உத்தரவிட்டார்கள்.

யாசகம் கேட்டு வந்தவருக்கு அடித்தது யோகம்!

பெரியவாள் குங்குமப் பிரசாதத்தையும் அவரிடமே கொடுத்து,"எல்லோருக்கும் நீயே கொடு"என்றார்கள்.

திமுதிமுவென்று மார்வாடிக் கூட்டம் உள்ளே
நுழைந்தது. திருத்தலப் பயணம்.வாடகை வாகனத்தில் வந்திருந்தார்கள்.

பரிவட்டத்துடன், எதிரே குங்குமப் பிரசாதத்துடன், உட்கார்ந்திருந்தவர்தான், ஸ்ரீ காமகோடி பீடாதிபதி என்று நினைத்து, காலில் விழுந்து, இருநூறும், முன்னூறுமாகக் காணிக்கை செலுத்தினார்கள்.

யாசகர் (பெரியவா முன்னரே சொல்லியிருந்தபடி)
எல்லோருக்கும் குங்குமம் இட்டுவிட்டார்.

இந்த லீலா நாடகம் நடந்து முடிந்ததும்,பெரியவாள்
எழுந்து வந்து, மார்வாடிகளிடம் பேசி,ஆசீர்வதித்து பிரசாதமாகப் பழங்களைக் கொடுத்தார்கள்.

"ஒரு பைசாவைக் கூட கையால் தொட்டதில்லை" உண்மைதான். ஆனால் கல்யாணத்துக்கு வேண்டிய பணம் கிடைத்துவிட்டது - தலைப்பாகை சாமியாருக்கு!
பெரியவா சரணம் !!

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share
சித்தூர் G வெங்கடேசன் அவர்கள்
இன்று நீ ஏழு மணிக்குத் திரும்ப கச்சேரி பண்ணு. மஹாபெரியவா மீரஜ்ஜில் முகாமிட்டிருந்தபோது நடந்தது.

பெரியவா ஜயந்திக்கு எங்கள் குழுவுடன் சென்னையிலிருந்து கச்சேரி செய்யச் சென்றோம்.

மறு நாள் பௌர்ணமி பூஜையில் பெரியவா பரிவட்டம் தரித்துக்கொண்டு நிஷ்டையில் இருந்த சமயம்”வெங்கடேசனை தீக்ஷிதர் க்ருதிகளைத் தனியாக வாசிக்கச் சொல்லு” என்று உத்தரவாயிற்று. ஒரு மணி நேரம் ராகங்கள், கீர்த்தனைகள் வாசித்த பிறகு, நிஷ்டை கலைந்து,தலையிலுள்ள பரிவட்டத்தை எனக்கு போர்த்தக் கூறினார். அதை இன்னும் பத்திரமாகப் பூஜையில் வைத்திருக்கிறேன்.

மறு நாள் காலையில் எட்டு மணி முதல்பன்னிரண்டு மணி வரை கச்சேரி செய்து விட்டு , மாலை ஏழு மணிக்கு மஹாலக்ஷ்மி Express ல சென்னை திரும்ப உத்தரவு கேட்டோம். பெரியவா ஏழு பத்துக்கு மறுபடியும் வாசிக்கக் கூறினார்.ரிடர்ன் டிக்கெட் ரிசர்வ் செய்த டிக்கெட்ஐ எப்படி கேன்சல் செய்வது என சங்கடப் பட்டுக்கொண்டிருந்த போது ,பெரியவா தரிசனத்துக்காக சகாக்களுடநும் குடும்பத்தாருடனும் அவூர் HTC வந்தார். அவரிடம் ஸ்ரீமான் ஸ்ரீகண்டன், ராமமூர்த்தி இவர்கள் விஷயத்தை விவரிக்க, நான் வேண்டியதைச் செய்கிறேன்; நாளை காளை Express dutyயில் என்னுடன் மூவரையும் எல்லா வசதிகளையும் செய்து மயிலையில் சென்று விட்டு வருகிறேன் என்று சொன்னார்.

மாலை ஆறு மணி முதல் ஒன்பது மணி வரை கச்சேரி. கண்ணுக்கு எட்டிய தூரம் ஜனங்கள் ரசித்துக் கொண்டிருக்கும் சமயம், சாங்களி மஹாராஜா குடும்பத்துடன் பெரியவாளை தரிசிக்க புஷ்பம் பழத்தட்டுகளுடன் சிவப்பு, வெள்ளை, நீலம் காஷ்மீர்
சால்வைகளை சமர்ப்பித்தார். ஸ்ரீ பெரியவா வலது புறத்தில் நீலமும், இடது புறத்தில் வெள்ளையும், சிரஸில் சிகப்பு அணிந்து ஜகஜ்ஜோதியாகக் காட்சி அளித்தார்.

அரை மணி நேரம் கழித்து மஹாராஜாவையே புஷ்ப, பழத் தட்டில் சிவப்பு சால்வையை வைத்து என் தகப்பனாருக்கும், நீல சால்வையை எனக்கும், வெள்ளை சால்வையை மிருதங்கம் .ரமேஷுக்கும் போர்த்தச் சொன்னார். இதைப் பெரும் பாக்யமாகவும் ரக்ஷையாகவும் நாங்கள் கருதுகிறோம்.

மறு நாள் காலை ஏழு மணிக்கு எங்களை அழைத்துச் செல்ல, தலைமை டிக்கெட் பரிசோதகர் வர, பெரியவா எங்களுக்கு எல்லாம் விபூதி, குங்கும ப்ரஸாதம் கொடுத்து ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார்.

ப்ரயாணத்தில் பேப்பரைப் பார்த்தபோது, நாங்கள் ப்ரயாணம் செய்ய இருந்த மஹாலக்ஷ்மி எக்ஸ்ப்ரெஸ் பெல்காம் அருகில் ஆறு பெட்டி தடம் புரண்டு விழுந்ததைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தோம். நடமாடும் தெய்வம் மஹாபெரியவா அனுக்ரஹத்தால்தானே ரயில்
ப்ரயாணத்தை ரத்து செய்து அங்கு தங்கினோம். எப்படிப்பட்ட தீர்க்கதரிசி
மஹாபெரியவா!!

இதனை தரிசன அனுபவங்கள் நான்காம் தொகுதியில் புல்லங்குழல் வித்வான் G.வெங்கடேசன் பகிர்ந்து கொள்கிறார். அவர் தந்தை ப்ரம்மஸ்ரீ சித்தூர் கோபால க்ருஷ்ணைய்யர்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர…..
சுமார் ஐம்பந்தைந்து வருடங்களுக்கு முன் நடந்த ஓர் சுவையான சம்பவம்…

ஸ்ரீ சரணாள் சேலம் பகுதியில் யாத்திரையாகப் போய்க் கொண்டிருந்தபோது, அவருடன் சிலரும் நதிவழியாகவும், பரிவாரங்கள் சாலை வழியாகவும் போய்க் கொண்டிருந்தனர். அப்போது குதிரையின்
மேல் நகரா அடித்துச் செல்வது வழக்கம். இது ஒரு மசூதி வழியாகச் சென்றபோது மசூதி வழியாக
இதெல்லாம் போகக் கூடாது என்று குதிரையின் முன்கயிற்றைப் பிடித்துத் தடுத்தார்கள். இதனால்
சிறு சலசலப்பு ஏற்பட்டு ,சிலர் மத்யஸ்தம் செய்தார்கள்.

மறுதினம் மேற்படி மசூதியைச் சேர்ந்த ஒருவர் மடத்து அதிகாரிகளிடம் ஸ்ரீசரணாளை தனியாக சந்தித்துப்
பேச அனுமதி கேட்டார்கள். மடத்து அதிகாரி, முதல் நாள் சம்பவத்தை மனதில் கொண்டு, அதற்கு மறுப்பு சொல்லிவிட்டார். வேண்டுமானால் எல்லாரும் இருக்கும்போது சந்திக்கலாம் என்றும் சொல்லிவிட்டார். இந்த விஷயம் ஸ்ரீ சரணாள் காதிர்கு எட்டியது. ஆனால் அவர் தனியாகச் சந்திப்பதில் தனக்கு
ஆக்ஷபணை எதுவும் இல்லை என்றும் அவரை வரும்படியும் கூறிவிட்டார். இதில் மடத்தில் உள்ளவர்களுக்கு விருப்பம் இல்லாவிடினும், வேறு வழியில்லாமல் எதிரே இருந்த ஒரு வீட்டில் சந்திக்க ஏற்பாடாயிற்று. மறு தினம் பெரியவா அந்த வீட்டு வாசல் கதவை உள்தாழ்ப்பாள் போட்டுக்
கொண்டு தான் அவரிடம் பேசச் சென்றார்.

மடத்து அதிகாரிகள் கலக்கத்துடன் வெளியே காத்திருந்தனர். பெரியவாளிடம் சென்றவர் பெரிய காகித உறை ஒன்றை எடுத்துக் கொடுத்தாராம். அதில் என்ன என்று பெரியவா கேட்டதற்கு பெரியவாளைப் பற்றி தான் எழுதிய சம்ஸ்க்ருத ஸ்லோகங்கள் என்று சொல்லி அதை அவரே வாசித்துக் காண்பித்தாராம். நாக பந்தம், கருட பந்தம், சக்ர பந்தம் போன்ற சாகித்ய மரபுகளுடன் அழகாக வாசித்தாராம்.

” இதை யார் எழுதியது யார் சொல்லிக் கொடுத்தார்கள்’ என்று கேட்டதற்கு தன் பரம்பரையினர் சம்ஸ்க்ருதத்தில் விசேஷ பயிற்சி பெற்றவர்கள் என்றும், பரம்பரையாக வருவதாகவும் பதில் சொன்னார். அவர்கள் கசாப்புக் கடை நடத்தி வருவதாகவும் கூறினாராம். இதை ஸ்ரீ சரணாள் ஹாஸ்யத்துடநும், த்ரில்லிங்காகவும்,ஸஸ்பென்ஸாகவும் சொல்லி எல்லா ஜாதியிலும் மதத்திலும் நல்லொழுக்கம்,
பண்பு உள்ளவர்கள் இருக்கிறார்கள் என்பதனையும் குறிப்பிட்டார்.

இவர்தான் பின் நாளில் வேத பாஷ்ய கல்லூரி ஆரம்பிக்க மிக முயற்சி எடுத்துக் கொண்ட ஸப் ஜட்ஜ் திரு கமாலுதீன்!

இந்த சமயத்தில் நான் ஒன்று கூர நினைக்கிறேன். என் சித்தப்பா ஸ்ரீ லக்ஷ்மிகாந்த சர்மாவை அழைத்து
பெரியவா ராஜா வேத பாடசாலை கும்பகோணம் , ஸ்ரீ கோவிந்த தீக்ஷிதர் அவர்களால் சுமார் நானூற்றைம்பது வருடங்களுக்குமுன் ஸ்தாபிக்கப்பட்டது அதன் நிர்வாகத்தைச் சிறப்பாகச் செயல் படுத்த திரு கமாலுதீன் அவர்களை சந்திக்குமாறு சொல்ல சித்தப்பா குடும்ப ஆசாரம் கருதி அதனை தள்ளிப் போட்டு வந்தார். ஆனால் ஒரு நாள் பெரியவாள் கொடுத்த நெருக்கடியில் ஜட்ஜ் அவர்களை சந்தித்து ஆசார்யாள் ஆஜ்ஞைப்படி அவருடன் அராபிக் வகுப்புகள் எப்படி நடைபெறுகிறது என்று போய் பார்த்து அதன் பிறகு ராஜா வேத பாடசாலை நிர்வாகத்தை மேற்கொண்டதுமன்றி, வேத சம்ரக்ஷண பரிபாலன சபை ஒன்று நிறுவி அது இன்றளவில் நல்லவிதமாக நடை பெறுகிறது. ராஜா வேத பாடசாலையில் பயிலும் மாணாக்கர்களுக்கு அரசாங்க உதவித்தொகையும், ஆசிரியர்களுக்கு மத்திய அரசாங்க ஊதியமும் பெற்றுத்தந்தார்.

திரு கமாலுதீன் அவர் ஜீவன் இருக்கும் வரை எங்கள் அகத்தில் வந்து சாப்பிட்டுச் செல்லும் பழக்கம் இருந்தது. இன்றளவும் அவர்கள் சந்ததியினரும் என் சித்தியைப் பார்த்துச் செல்கின்றனர்.

பெரியவாளிடம் திரு கமாலுதீன் கொண்டிருந்த பக்தி அளவிட முடியாதது. அதுபோல் ஜஸ்டிஸ் கம்பராமாயண விளக்கவுரை எழுதிய இஸ்மாயிலும் பெரியவாளிடம் அளவு கடந்த பக்தியும் மரியாதையும் கொண்டிருந்தார். பெரியவாளும் இவர்களிடத்தில் மத இன பேதமின்றி அவர்கள் அறிவு, ஆற்றலுக்கு
மிக்க மதிப்பளித்து வந்தார் . பக்தி என்பது ஜாதி, மத இனம் கடந்தது என்பதற்கு இதுவும் ஓர் சான்று!

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கரா

Vidhu007
Posts: 18
Joined: 07 Apr 2018, 15:34

Re: Kanchi Maha Periyava

Post by Vidhu007 »

Hi,

Does any one have lyrics for the song Chandrasekara Kripanidhe? Who is the composer and I think raagam is Sanakarabaranam.

Thank you,
Vidhya
venkatakailasam wrote: 17 Mar 2014, 07:22 Listen to a concert a day..any time
Concert 136-songs on Mahaperiva
Listen at

http://myblogkumara.blogspot.in/2014/02 ... t-iii.html

Concert details:
001-Brahma nadam-Udayalur Shri Kalyanaraman-Mahapriva
002-Vizhi Kidaikkuma..Alangudi Radhakalyanam- Melarcode Ravi
003-Bhajre gurunadham-Shri TMK
004-Chandrashekhara Saraswathiye charanam - Hindolam-M Santhanam-Own composition
005-A song on Paramacharia-MSS
006-Karunai Pozium Kangal-Dr Ganesh
007-Karunai ennum varithiye-MSS-thooran
010-Kaladiyail-udayalur kalyanaraman
011-Thamarai malar ondru kandenThilong-DKP
012-Sri chandrasekara-Shri TMK
013-Chandrasekaram-Shri TMK
014-Sada sada-Shri TMK
015-Chandrasekara kripanidhe-Shri TMK
016-Vandeham guruvaram-TMK
017-Anandavahena-TMK
018-Kanchi Maanagar Pogavendum.. Sattananda Bahavathar-Alangudi Radhakalyanam
For information:
Some of the songs by Shri TM Krishna are included in the concert with permission from
Sri Kanchi MahaswamiPeetarohana Shatapthi Mahotsav Trust who have released the songs..

As suggested by Shri TM Krishna, the above permission was obtained..from them.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Kanchi Maha Periyava

Post by Pratyaksham Bala »

.

Post Reply