Tit bits in Tamil

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Tit bits in Tamil

Post by venkatakailasam »

My 8 year old grand daughter asked me a quiz ...which is the oldest animal...I was blinking...as to what can be answer..

She gave me a compliment ..that I am not fit to be a Grandfather..

and asked me whether She can tell the answer..Ok..I said..

She told me 'Zebra.'..She said yes... thatha..it is oldest as it is still in 'Black and White'

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Tit bits in Tamil

Post by venkatakailasam »

கவுண்டமணி : டேய் நான் என்னடா வாங்க சொல்லி அனுப்பினேன்?

செந்தில் : டியுப் லைட் வாங்கி வர சொன்னீங்க

கவுண்டமணி : எத்தனை?

செந்தில் : ரெண்டு

கவுண்டமணி : ஒன்னு இந்தா இருக்கு இன்னொன்னு எங்கேடா?
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

செந்தில் : இன்னொன்னு இந்த ஜோக்கை படிசிகிட்டு இருக்கு..... !!!!

sorry just fun....please no malice intended...

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Tit bits in Tamil

Post by venkatakailasam »

Image

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Tit bits in Tamil

Post by venkatakailasam »

Muralikrishna Venkatraman
ஒரு வானொலி பேட்டியில் நடிகர் நாகேஷ்:

வானொலி: நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?

நாகேஷ்: நான் கவலையே படமாட்டேன் சார். ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் பல ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள். கட்டடம் முடிந்து கிருகப் பிரவேசத்தன்று எந்தக் கட்டடம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததோ அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால் எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிருகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள்.
அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும். இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா? அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். ஆடுமாடுகள் மேயும். குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும். மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை. அடுத்த கட்டடம் கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்.!!!

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: Tit bits in Tamil

Post by sridhar_ranga »

This makes for interesting reading on Tamil Numerals. It seems there was no symbol for zero in Tamil, and there was no place value concept either.

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: Tit bits in Tamil

Post by Pratyaksham Bala »

Yes, it seems there was no place value concept in Tamil.

A few years back, I recorded the epigraphical inscriptions found in the local temples. And here is one of the inscriptions, dated 1839, found in a local temple:-

"கலியுக வருஷம் ௪௲௯௱௪௰ சாலியவாகன வருஷம் ௲௭௱௬௰௧ யேறோப்பியர்கள் வருஷம் ௲௮௱௩௰௯ இவற்றில் நிகழா நின்ற விகாரி வருஷம் ஆனி மாதம் புதுவை வேதபுரி நாதர் திரிபுர சுந்தரி யம்மன் ஆஉலயத்துக்கு ... ... ..."

Even in the inscriptions done 100 years back, the same method has been used to record numbers in Tamil.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Tit bits in Tamil

Post by cmlover »

Those are granthAkSharam !

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: Tit bits in Tamil

Post by sridhar_ranga »

CML, did you mean they are granthaksharams representing Tamil numbers ?

I read them as numbers:

kaliyuga varusham 4940 (four-thousand-nine-hundred-four-ten in symbols: ௪௲௯௱௪௰)
Salivahana 1791
european 1839

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Tit bits in Tamil

Post by cmlover »

That is clear from the lipi itself !
Grantham is augumented Tamil script to write sanskrit !

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Tit bits in Tamil

Post by venkatakailasam »

Image


மினரல் வாட்டர் தயார் !!

அந்த காலங்களில் நமது வீடுகளில் தண்ணிர் செம்பு குடங்களில் பிடித்து வைப்பார்கள் ஏன் தெரியுமா ?

கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பணத்தைத் தண்ணீராக செலவு செய்யும் காலமிது. ஆனால், ''வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர்
கிடைத்துவிடும். மாசம் நூத்துக் கணக்கான ரூபாய் மிச்சமாகும்!''.

''மைசூர்ல இருக்கற அஜய் நினைவு குடிநீர் நிறுவனத்தைச் சேர்ந்தவங்க, செம்புப் பாத்திரத்துல தண்ணியை வெச்சி ஒரு ஆராய்ச்சி நடத்தினாங்க. அதோட முடிவுல, 'செம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம் குடிநீரை வைத்திருந்து பரிசோதித்துப் பார்த்ததில், மனிதர் களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை'னு அந்த நிறுவனம் சொல்லியிருக்கு.

இந்தத் தகவல் தெரிஞ்சதிலிருந்து செம்புக் குடத்துல வெச்சிருந்துதான் தண்ணியைக் குடிக்கின்றார்கள். கிணத்துல கிடைக்கறத் தண்ணி, செம்புக் குடத்துக்குப் போனதும் மினரல் வாட்டர் மாதிரி அருமையாக மாறிவிடுகிறதாம்.

செம்பு குடம் இல்லனாலும் பரவாயில்லை. ஒரு கையளவு செப்பு தகட்டை குடத்துக்குள்ள போட்டு வெச்சா கூட உங்க வீட்டுத் தண்ணி தரமானதா மாறிடும். மூணு நாளைக்கு ஒரு தரம் செம்பு தகட்டை எடுத்துப் பார்த்தா பாசி புடிச்ச மாதிரி இருக்கும். அதெல்லாம் பாக்டீரியாக்கள்தான்.

தகட்டைச் சுத்தமா கழுவிட்டு திரும்பவும் குடத்துக்குள்ள போட்டு வைக்கலாம். அந்தக் காலத்துல பல வீடுகள்ல செம்புக்குடம்தான். இன்னிக்கும் சில கிராமங்கள்ல செம்பு குடத்துலதான் தண்ணி வெச்சி ருந்து குடிக்கறாங்க’’.

என்னதான் விஞ்ஞானம் வளர்ந்தாலும் நம் முன்னோர்கள், முன்னோர்கள் தான் !

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Tit bits in Tamil

Post by cmlover »


venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Tit bits in Tamil

Post by venkatakailasam »

It is a curse that we have little faith in our scientists ...

The Caveat
is only for NRIS at that country...

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Tit bits in Tamil

Post by venkatakailasam »

சிட்டியில டேட்டிங்னு சொல்ற விஷயத்த தான்

கிராமத்துல ஊர் மேய்றதுன்னு சொல்லுவா !!

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Tit bits in Tamil

Post by cmlover »

A respectable peer-reviewed publication in an International Journal is always acceptable
irrespective of the nationality of the author or place of origin !

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: Tit bits in Tamil

Post by Pratyaksham Bala »

irrespective of the nationality ...!
Yes. Vasudhaiva kuTumbakam वसुधैव कुटुम्बकम् -- the whole world is a family !!

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: Tit bits in Tamil

Post by sridhar_ranga »

Here is a picture of the improvised bubble-top water dispenser we have been using at home for the last 6+ years. We replaced the plastic container at the bottom with a custom-made copper one, fitted with a tap.

Image


Now, should I get me and my family members tested for excessive copper in our blood? What other tests would you recommend CML sir?

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: Tit bits in Tamil

Post by sridhar_ranga »

Also, the practical alternative materials for water containers being (a) plastic (b) stainless steel, is either of these better compared to copper?

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Tit bits in Tamil

Post by venkatakailasam »

Vikatan EMagazine

மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு!

https://ta-in.facebook.com/vikatanweb/p ... eam_ref=10

" Certain metals, such as silver, copper and copper alloys, are known to be far( more poisonous to bacteria than others, such as stainless steel and aluminium,) which is why they are used in mineral sanitizers for swimming pools and spas.

Many infections can be spread by doorknobs. Brass doorknobs disinfect themselves in about eight hours, while stainless steel and aluminium knobs never do. Unvarnished brass doorknobs therefore tend to be more sanitary than stainless or aluminium doorknobs. The effect is important in hospitals, and useful in any building

http://en.wikipedia.org/wiki/Oligodynamic_effect

" பகட்டு வாழ்க்கை வாழும் காலம் இது. வெளி நாட்டார் நமது பழய சாதாரண முறையை பார்த்து ஆச்சரியப்படுகின்றனர். ஆனால் நாம் நமக்காக வாழ இன்னும் தயாராகவில்லை... என்னதான் இது போன்ற சுலபமான எளிய முறைகளை சுட்டிக்காட்டினாலும் நமது மக்கள் மாற தயார் இல்லை.."

We in our home using the same technic... the vessel name is "Kasi Paanai"... "Kaasi Sombu"....for so many years now The same one Which my grand mother was using

The longivity is much above average...

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: Tit bits in Tamil

Post by vgovindan »

Sridhar ranga,
All that our forefathers found out through experience are not wrong;
All that modern scientists found out through research are also not wrong.
Please see the following web page on 'Lead and Copper Usage' in drinking water -
http://www.epa.gov/leadcopperrule/

Unless there is a motive for the US Environmental Agency to declare so (and unless proved otherwise subsequently), the findings can be taken as valid by any average person. I am personally witness to use lead utensils in my house. No one now use lead utensils as it has been proved beyond doubt that lead is carcinogenic.

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: Tit bits in Tamil

Post by Pratyaksham Bala »

... the vessel name is "Kasi Paanai"... "Kaasi Sombu"...
AFAIK, 'kAshu pAnai', made of brass, was in use in olden days to stash treasure. 'kAshi pAnai' is the colloquial term for this. One can find this in a museum; rare to find it elsewhere.

As for 'kAshi sombu', usually it is used to refer to the small copper pot of ganga jal.
.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Tit bits in Tamil

Post by cmlover »

sridhar_ranga:
I am no expert on the biochemical effects of minerals on human health. My friend who is an inteernational expert in that area is currently vacationing in India and I wll ask him on return.
Copper is an essential micronutrient. The deficiencies are uncommon. But then excess of copper intake does have deleterious health effects.
http://en.wikipedia.org/wiki/Copper_in_health
Research is continuing in that area. Copper is an active element which reacts with other elements violently. Hence it may not be advisable to utilise pure copper vessels or utensils for food preparations or storing. The standard rule is that the storage system should be inert in respect of the material stored. Copper even reacts if left in the atmosphere and certainly with the dissolved materials in drinking water. Especially water has to be chlorinated to kill pathogenic bacteria. The dissolved chlorine will react with copper to produce copper chloride salts. These can overload the system and can have deleterious health effects. I am not sure about the long-term effects. Elemental copper does have antimicrobial effect.
http://en.wikipedia.org/wiki/Antimicrob ... _of_copper
The effect on E coli the common pathogen is interesting. But I am not sure about the effect on virulent pathogens like cholera ot typhoid. Chlorination is a must which again will nullify the effects of elemental copper.
It is always safe to store drinking water in inert containers like plastics or stainless steel.

I will not accept popular articles in Vikatan or dinamalar as authoritative. Nor even a quotation from Rig Veda or Charaka samhita. Has IMC investigated the practices? Public health should be their primary concern. Water pollution is rampant in all parts of India...

Hence I said "caveat emptor"...

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Tit bits in Tamil

Post by venkatakailasam »

I have to activate..

அன்பே

என்ன ?

உனக்காக நான் சிகரெட் பிடிக்கிறதை விட்டுட்டேன்

ம்ம்ம்ம்

தண்ணி அடிக்கிறதை விட்டுட்டேன்

ம்ம்ம்ம்

வெட்டியா ஊர் சுத்துறதையும் விட்டுட்டேன்

சரி... .... பொய் சொல்றத எப்போ விடப்போறீங்க ??

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Tit bits in Tamil

Post by venkatakailasam »

முருகன் புகழைக் கூறும் திருப்புகழ் முதலான நவமணி நூல்களை இய்ற்றியருளியவர் அருட்கவி அருணகிரிநாதர். ஒருமுறை அவர், மஹாபாரதத்திற்குத் தமது அற்புத வாக்கால் உரை எழுதிய வில்லிபுத்தூராரைச் சந்திக்க நேர்ந்தது. பெரும் புலவரான வில்லிபுத்தூராரைக் கண்டு புலவர் சமூகமே நடுங்கிக்கொண்டிருந்த காலகட்டம் அது. காரணம் அவர், தன்னுடன் வாது செய்து தோற்ற புலவர்களின் காதுகளைக் குறடு கொண்டு தோண்டும் வழக்கத்தைக் கையாண்டு வந்தார். அவரது செருக்கை அடக்க திருவுளம் கொண்ட முருகன், ஒரு திருவிளையாடலை நிகழ்த்த முடிவு செய்தான்.அருணகிரியாரை, வில்லிபுத்தூராருடன் கவிதைப் போட்டியில் மோதவைப்பதென்றும், தோற்றவர் காதை, மற்றவர் அறுத்துவிடலாம் எனவும் முடிவாயிற்று.

அருணகிரிநாதர், போட்டிக்காகப் பாடவேண்டி இருந்ததால், கடினமான தமிழ் நடையைக் கொண்ட 'கந்தர் அந்தாதி' எனும் நூலை இயற்றத் துவங்கினார்.வில்லிபுத்தூராரும் உடனுக்குடன் உரை கூறலானார் .53 செய்யுட்கள் இவ்வாறு நிறைவுற்றபின் மேலும் எப்படிப் பாடினால் அவரை மடக்கலாம் என்று அருணகிரியார் முருகனை எண்ணித் துதித்து நின்ற போது, 'த'கர வர்க்க எழுத்துக்களை மட்டுமே வைத்து அடுத்த செய்யுளைப் பாடுமாறு முருகன் எடுத்துக் கொடுத்தான்.அந்தச் செய்யுள் பின்வருமாறு:

திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே

See the meaning here:

http://murugan.org/audio/kanthar.anthaathi.htm

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Tit bits in Tamil

Post by cmlover »

பா பா பா பாப்பா பாப்பா!
கா கா கா காக்க காக்க
தா தா தா தாதா தாத்தா
வா வா வா வாவ்வவா

உரை கூறுக அறிவீர் !
சுருக்கமாக முதலெழுத்துக்கள் உரை ஆகுமின்!
(பாகா தா வா)

thanjavooran
Posts: 2980
Joined: 03 Feb 2010, 04:44

Re: Tit bits in Tamil

Post by thanjavooran »

அன்பர்களே,
நகைச்சுவை கலந்த இனிக்கும் செந்தமிழ்.
அன்புட

முகச்சுவடியில் இருந்து பகிர்ந்து கொண்டது.

"காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்’’s
என்னது காக்கா கறி சமைச்சு கருவாடு தின்பவர்தான் சைவர்களா என பதற வேண்டாம்..இது அப்படியே புரிஞ்சிக்கிட்டா இதன் தமிழ் விளையாட்டும் அர்த்தமும்புரியாமல் போகும்...
காக்கை =கால் கை அளவு
கறி சமைத்து= காய்கறி சமைத்து
கரு வாடு =கரு எனும் உயிர் வாடும் என்று
உண்பர் சைவர்= உண்பவர்கள் சைவ சமயத்தை சார்ந்தவர்கள்
அதாவது சிவனை வழிபாடு செய்யும் சைவ சமயத்தை சேர்ந்தவர்கள் கால் வயிறு மட்டும் உண்பார்கள்..இதுதான் அவர்களது அடிப்படை நியதி...இதனல்தான் சிவனடியார்கள் எப்போதும் ஒல்லியான தேகத்துடன் இருப்பார்கள் இப்படி இருந்தால்தான் முக்திக்கு வழிகாட்டியான தவம்,யோகம் பயில முடியும்!!
- தமிழும் சித்தர்களும் Thamil.Siththars

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Tit bits in Tamil

Post by cmlover »

மீன் ஆமை பன்றியுடன் தினம் ஒம்புவர் வைணர்குழாம்.
(மத்ஸ்யாவதாரம், கூர்மாவதாரம், வராகாவதாரம்)

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Tit bits in Tamil

Post by venkatakailasam »

நீண்ட நாள் கழிச்சு... ஒரு நண்பன் மொபைல்ல கால் பண்ணான்...

"டேய் மச்சி ... எப்படிடா இருக்க??"

"நல்லா இருக்கேன்டா ... நீ எப்படி இருக்க?"

"ரொம்ப நல்லா இருக்கேன்டா ... மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்குடா .."

"அப்படியா?"

"ஆமாடா ... நான் சொல்லியிருந்தேன்ல ஒரு பொண்ணை ரூட் விடுறேன்னு ... அது செட்டாயிரும் போலிருக்குடா ... நல்ல வசதியான இடம் ... ஒரே பொண்ணு .... சும்மா உட்கார்ந்தே ஏழு தலைமுறைக்கு சாப்பிடலாம்டா"

"ம்ம்ம்......."

"இப்போ எனக்கு நீ ஒரு உதவி பண்ணனும்டா"

"சொல்லுடா பண்றேன்"

"நாளைக்கு அவளுக்கு பிறந்த நாள் ... என்ன கொடுக்கலாம் ... நீ கொஞ்சம் சொல்லேன்"

ஹும்ம்.. என்னோட போன் நம்பரை கொடுடா"

"டமார்"னு ஒரு சத்தம் ... போனை உடைச்சிட்டானோ!

எங்க இருக்கானோ? என்ன பண்றானோ??

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Tit bits in Tamil

Post by venkatakailasam »

கணவன், மனைவி நகைசுவை சிரிக்க மட்டும்:-

மனைவி: எங்கிட்ட உங்களுக்கு புடிச்சது என்ன?
அழகான் முகமா!!!
அன்பான மனமா!!!
பணிவான குணமா!!
கணவன்: உன்னோட இந்த காமெடி தான் "
மனைவி: ???

கணவன்: என்னடி இது பெட்ஷீட் கனத்துல புடவை எடுத்து இருக்கே
மனைவி: கட்டிக்க போறது நான்தானே
கணவன்: துவைக்கிறவனுக்கு தானே கஷ்டம் தெரியும்
மனைவி:???

மனைவி: என்னங்க, தீபாவளி அதுவுமா நான் செய்து வச்சிருந்த பலகாரத்தை
எல்லாம் திருடன் எவனோ புகுந்து சாப்பிட்டுக் கிட்டிருக்கான்?"
கணவன்: "பேசாம தூங்கு, காலையில அவன் செத்து கிடப்பான், விடிந்ததும்
பார்த்துக்கலாம்.."
மனைவி:????

கணவன்: பக்கத்து வீட்டு மாமியோட நீ காரணமில்லாம சண்டை போடறதா எல்லாரும்
புகார் சொல்றாங்க?
மனைவி: நான் என்ன பண்றது, அவங்க அசப்புல உங்க அம்மா மாதிரியே இருக்காங்களே.
கணவன்:????

ஒருவன்: "என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது; அவ பேச ஆரம்பிச்சா
பைத்தியமே பிடிச்சிடும்..."
மேனேஜர் :"யோவ்... பாங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே...?"
ஒருவன் : "நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க!"

ஜோதிடர்: கணவன், மனைவி நீங்க ரெண்டு பேரும் கடைசி வரை சேர்ந்து நல்லா இருப்பீங்க ..
கணவன்: இதுக்கு பரிகாரமே இல்லியா, ஜோதிடரே?
ஜோதிடர்: ????

thanjavooran
Posts: 2980
Joined: 03 Feb 2010, 04:44

Re: Tit bits in Tamil

Post by thanjavooran »

Need to correct ourselves

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்....

1.ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த
பண்ணு...

தப்புங்க தப்பு,,,

ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு...

இதாங்க சரி...

2.படிச்சவன் பாட்டை கெடுத்தான்,

எழுதுனவன் ஏட்டை கெடுத்தான்....

இதுவும் தப்பு

சரியானது என்னன்னா ...........

படிச்சவன் பாட்டை கொடுத்தான் ,

எழுதுனவன் ஏட்டை கொடுத்தான் ...
.
3.ஆயிரம் பேரை கொன்றவன்

அரை வைத்தியன்...

இது பேரை அல்ல வேரை (மூலிகை வேரை )

ஆயிரம் வேரை கொன்றவன்

அரை வைத்தியன்.......

4.நல்ல மாட்டுக்கு ஒரு சூடு ....

சூடு அல்ல சுவடு...

சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும்

தடம் சுவடு.. அழுத்தமான சுவட்டை பதிக்கும்

மாடே அதிக பலம் வாய்ந்தது...

ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம்

புலனாகும்....

5.அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த

ராத்திரியில் கொடை புடிப்பான்....

அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த

ராத்திரியிலும் கொடை கொடுப்பான்....

(வள்ளல் ஆனவரை கஞ்சனாக

மாற்றி விட்டோம் ...)



காலப்போக்கில்....நம் முன்னோர்கள் நம்

நல்வாழ்வுக்காக சொல்லி வைத்ததை நாம் பிறரை

குறை கூற உபயோகிக்கிறோம்..

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Tit bits in Tamil

Post by venkatakailasam »

Image

சோத்துக்கில்லாம அலையும் போது....பணத்தைத்தான் திங்கனும்...திங்க முடியுமா????...முடியாது என்பது அவனுக்கும் தொியும்..இவன் சோறு தின்னுடுவான்..இவன் சந்ததிகள் எல்லாம் எதை திங்கப் போறாங்களோ....கனவு இல்லங்கள் சுனாமியால் அழியும் காலம் வரும்...இது காலத்தின் கட்டாயாம்..

thanjavooran
Posts: 2980
Joined: 03 Feb 2010, 04:44

Re: Tit bits in Tamil

Post by thanjavooran »

A share from my friend

தமிழ், சம்ஸ்கிருத மொழிகளின்அழகே அழகு!

மலையாளத்தில் ஒரு பழமொழி உண்டு: ‘நெய்யப்பம் தின்றால் ரெண்டுண்டு காரியம்’; அதாவது நெய்யப்பம் சாப்பிட்டால் சுவையான அப்பத்தை சாப்பிட்ட பலன் ஒன்று. இரண்டாவது பலன் என்ன? மீசையுள்ள ஆண்பிள்ளைகள் அந்த நெய்யை மீசையில் உரசும்போது மீசை அழகாக கண்ணங்கரேல் என்று வளரும்! அதே போல தமிழனாகப் பிறந்தவனுக்கும் இரண்டு பலன்கள் கிடைக்கின்றன. சம்ஸ்கிருத மொழியின் அழகை ரசிக்கும் போது அதை தமிழுடன் ஒப்பிட்டுப் பார்த்து இரு மடங்கு இன்பம் எய்தலாம்.
வடமொழியும் தென் மொழியும் நம் இரு கண்கள். இந்த இரண்டையும் அறிந்த ஒருவனால் மட்டுமே பாரதீய கலாசாரத்தை நூறு விழுக்காடு அறிய முடியும். தமிழில் இருண்ட மேகம் மழை பொழிவதைப் போல கவி மழை பொழிந்தவர் காளமேகப் புலவர். அவர் வாயைத் திறந்தாலே, சிலேடை மழை பொழிவார். எல்லாம் இரட்டுற மொழிவார். சில நேரங்களில் புகழ்வது போல இருக்கும் ஆனால் அது இகழ்ச்சியாக இருக்கும். சில நேரங்களில் இகழ்வது போல இருக்கும் ஆனால் அது புகழ்ச்சியாக இருக்கும்.

இதோ ஒன்று:-
சிவ பெருமானும் பூசுணிக்காயும் ஒன்றே !!
அடி நந்தி சேர்தலால் ஆகம் வெளுத்துக்
கொடியும் ஒரு பக்கத்தில் கொண்டு — வடிவுடைய
மாசுணத்தைப் பூண்டு வளைத்தழும்பு பெற்றதனால்
பூசுணிக்காய் ஈசனைப் போன்று.
பொருள்:- பூசணிக்காய்க்கு அடியில் காம்பு உடையது. மேல் பாகம் வெள்ளை நிற சாம்பல் பூசப்பட்டது போல இருக்கும். கொடியில் படர்வது. வளைந்த தழும்புகளுடன் அதன் உடல் இருக்கும்.(மாசுணம்=சாம்பல்).
சிவன் தன் கால்களை நந்தியின் மீது (காளைவாகனம்) வைத்திருப்பார். திரு நீறு பூசி உடல் வெளுப்பாகக் காணப்படுவார். பூங்கொடி போன்ற உமை அம்மையை ஒருபுறம் வைத்திருப்பவர். வளைந்த பாம்பை (மாசுணம்=பாம்பு) அணிந்தவர். காஞ்சி காமாட்சியின் வளைத் தழும்பை உடலில் தாங்கியவர். ஆகையால் பூசணிக்காயும் சிவனும் ஒன்றே!!
rada krisna
இதோ ஒரு சம்ஸ்கிருத சிலேடைக் கதை:

ராதா ராணி வீட்டுக்கு கிருஷ்ணன் வந்தார். இருவரும் ஒருவர் மீது ஒருவர் கொண்ட அன்புக்கு எல்லையே இல்லை என்பதை உலகமே அறியும். இருந்தபோதிலும் உடனே கதவைத் திறந்துவிட்டால் காதலின் சுவையே போய்விடும் அல்லவா! ஆகையால் ராதா ஒரு நாடகம் ஆடினாள்:–
ராதா: யாரது? கதவைத் தட்டுவது?
கண்ணன்: நான் தான் ஹரி (வந்திருக்கிறேன்).
ராதா: இங்கு நீ சாப்பிடக் கூடிய மிருகங்கள் எதுவும் இல்லை. இங்கு ஏன் வந்தாய்? (வடமொழியில் ஹரி என்றால் சிங்கம் என்ற பொருளும் உண்டு)
க: — அட என்னைத் தெரியவில்லையா? நான் மாதவன்.
ரா:– வசந்த காலம் வர இது உரிய தருணம் இல்லையே? (மாதவ என்றால் வசந்த காலம் என்ற பொருளும் வடமொழியில் உண்டு)
க:- ராதா! நான் ஜனார்தனன். உனக்கு என்னை நன்றாகத் தெரியுமே!
ரா:– உன்னைப் போன்ற ஆசாமிகளுக்கு எல்லாம் காடுதான் லாயக்கு. போய் யாரை வேண்டுமானாலும் தொல்லைப் படுத்து.
(ஜனார்தனன் என்றால் அஞ்ஞானத்தையும் அநீதி செய்வோரையும் அழிப்பவன் என்று ஒரு பொருளும் அநாவசியமாகத் தொல்லை கொடுப்பவன் என்று ஒரு பொருளும் உண்டு. விக்ன விநாயகனைக் கூட கஷ்டங்களைப் போக்குபவன், தீயோருக்கும் தன்னை வணங்காதோருக்கும் கஷ்டம் கொடுப்பவன் என்று நாம் சொல்லுவோம். முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம் அச்சது பொடி செய்த அதி தீரன் என்று அருணகிரி பாடியதையும் அறிவீர்கள்))
க: இளம் கன்னியே! தயவு செய்து கதவைத் திற. நான் மதுசூதனன் வந்திருக்கிறேன்.
ரா:- ஓஹோ! நீதான் த்விரேபனா? ( மதுசூதனன் என்ற பெயர் மது என்ற அரக்கனைக் கொன்றதால் கண்ணனுக்கு வந்தது. இன்னும் ஒரு பொருள் மதுவை உண்ணும் தேனீ. கிருஷ்ணன் ராதாவிடம் மட்டுமின்றி மற்ற கோபியருடனும் போவது ராதாவுக்குப் பிடிக்காது. ஆகையால் தருணம் பார்த்து இப்படி வடமொழியில் தாக்கினார். ‘த்விரேப’ என்ற வடமொழிச் சொல்லுக்கு தேனீ என்றும் ஜாதியைவிட்டு விலக்கப்பட்டவன் என்றும் பொருள். அதாவது உன்னை வீட்டை விட்டு விலக்கிவிட்டோம். வீட்டின் கதவு திறக்காது, போ, போ!!
(அம்மா, அப்பாவுக்குப் பிள்ளைகள் மீது கோபம் வந்தால் சீ, வெளியே போ! என்று சொல்லிவிட்டு, பின்னர் கொல்லைப்புறம் வழியாக வந்தாலும் ‘உள்ளே வந்து சாப்பிடு, சனியனே!’ என்று அன்பு காட்டுவது போல ராதாவும் கொஞ்சம் ‘பிகு’ செய்துகொண்டாள்).
தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் உள்ள பழைய நூல்கள் அனைத்தையும் ஒருவர் படித்து முடிக்க நூறு பிறவிகள் எடுத்தாலும் போதாது. சரஸ்வதி தேவி சொன்னாள், “கற்றது கை மண் அளவு; கல்லாதது உலக அளவு” என்று. நாம் எல்லோரும் சொல்லலாம், ”கற்றது கடுகு அளவு; கல்லாதது இமய மலை அளவு” என்று!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Tit bits in Tamil

Post by venkatakailasam »

nice..Sir..

Sundara Rajan
Posts: 1083
Joined: 08 Apr 2007, 08:19

Re: Tit bits in Tamil

Post by Sundara Rajan »

In post 144 Sri. VGovindan mentions discontinuation of usage of LEAD utensils in households due to its toxicity. Lead is referred to as "cAr eeyam" colloquially in Tamil. In reality the so called Lead vessels in use are made of TIN,(referred to as "veLLi eeyam") that is not affected by weak acids (as citric, tartaric, malic acids found in fruits and vegetables). That is why brass and copper vessels used in cooking are coated inside with a thin layer of Tin ( called veLLi eeyam in Tamil). Some brahmin households still prefer to make Rasam in "EEya sombu" rather than in stainless steel vessels and vouch that it tastes better that way.
Incidentally, Lead ( Plumbum in Latin, hence Pb symbol) was/is used in copper pipe Joints/connections and hence those who worked on such jointed tubes were/are called Plumbers !

thanjavooran
Posts: 2980
Joined: 03 Feb 2010, 04:44

Re: Tit bits in Tamil

Post by thanjavooran »

A share from my friend
An article in Dinamani
மனிதன் செய்த குற்றமடி!

By பிரபா ஸ்ரீதேவன்

First Published : 30 July 2014 01:33 AM IST

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த கோபிநாத் முண்டே இறந்தபோது அவரது இறுதிச் சடங்குகளை அவருடைய மகள் செய்தார். ஒருவருக்கு மகள் கொள்ளி வைத்தாள் என்பது கண்களை விரிய வைக்கும் செய்திதான். பெண்களுக்கு அந்த உரிமை உள்ளது என்று எந்த சாத்திரமாவது கூறுகிறதா?

இந்து பாரம்பரிய வழிமுறைகள் பெண்களுக்கு உரிய மதிப்பு கொடுப்பதில்லை என்று ஒரு சாரார் மனுதர்ம சாத்திரங்களை சுட்டிக் காட்டுகிறார்கள். அதற்கு மறுப்புக் கூறும் வகையில், "நம் நாட்டில்தான் யத்ர நார்யாஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதா: (எங்கு பெண்கள் பூசிக்கப்படுகிறார்களோ அங்கு தெய்வங்கள் மகிழ்கிறார்கள்) என்று சொன்னோம்' என்று விடை தருகிறார்கள் இன்னொரு சாரார்.

இருவரும் வடமொழி ஆதாரங்களையே தங்கள் கட்சிக்கு சான்றாக காட்டுகிறார்கள். இப்பொழுது பிரச்னை பெண்கள் மனிதர்களாக மதிக்கப்பட்டார்களா என்பதே. அது குறித்து சம்ஸ்க்ருத சான்றுகள் இருக்கின்றனவா என்று பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். என் தங்கை சீதா பொருத்தமான சுலோகங்களை தேர்ந்தெடுத்துக் கொடுத்து எனக்கு உதவினார்.

அபுத்ரஸ்ய ம்ருதஸ்ய குமாரி ரிக்தம் க்ருஹ்ணீயாத்.

(பொருள்:- இறந்தவருக்கு ஆண்பிள்ளை இல்லை என்றால் அவர் பெண் அந்த உரிமையை எடுத்துக்கொள்ளட்டும்.)

ஆக பெண் கொள்ளி வைப்பது இன்று நடந்த புரட்சி இல்லை அது அன்றே எழுதி வைக்கப்பட்ட ஒன்று. ஏன் இருபாலருக்கும் சம உரிமை என்று கூறவில்லை என்பது நியாயமான கேள்வி. அப்படித் தான் இருந்திருக்க வேண்டும்.

ஆனால், கண்டிப்பாக தூரத்து ஆண் உறவினரைத் தேடி அலையவேண்டும் என்றில்லை என்று தெரிகிறது, ஏன் பெண்ணுக்கு உரிமை உண்டு என்று சொல்லும் சாத்திரங்களையும் மேற்கோள்களையும் நாம் புறக்கணித்தோம்?

பெண் பிறந்தவுடன் இரு விதமான கவலைகள். ஒன்று அவளுடைய திருமணச் செலவு, இன்னொன்று அவள் இன்னொருவர் வீட்டிற்கு சென்று அனுபவிக்கப் போகும் கஷ்டங்கள். "பிருகதாரண்யக உபநிஷத்' ஒரு தந்தையின் வேண்டுதலைப் பற்றிகூறுகிறது.

அத ச இச்சேத் துகிதா மே பண்டிதா ஜாயேத.

(பொருள்:- எனக்கு படித்த அறிவார்ந்த ஒரு புதல்வி பிறக்க வேண்டும் இறைவா.) பையனுக்கு மட்டுமே படிப்பும் முதலிடமும் தருவது சரியல்ல என்றும் பெண்ணை வீட்டில் வைத்து வேலை செய்ய சொல்வதை பாராட்டுக்குரிய விஷயமாக நினைக்கவில்லை என்றும் தெரிகிறது.

கன்யாப்யேயம் பாலனீயா சிக்ஷணீயாதியத்னத:

(பொருள்:- பெண்ணை நன்றாகப் பேணிக் கல்வி புகட்ட முயற்சி செய்யவேண்டும்) முதலிடம் அவள் கல்விதான். பிறகு திருமணம் செய்யலாம். ருக் வேதத்தில் பெற்றோர் வீட்டில் இருக்கும் வயதான் பெண்கள் அமாஜூ: என்று குறிப்பிடப்படுகிறார்கள். அதனால் பாழுங் கிணற்றில் தள்ளித்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் இருந்ததாகத் தோன்றவில்லை.

ஒரு திருமணத்திற்கு பத்து பேர் இருந்தால் போதுமாம்.

வரஸ்ய பிதரெள வத்வா: பிதரெள சஹபாடினெள

வதூவரஞாதியுக்மம் ஆசர்யாச்ச புரோகித:

மணமகனின் பெற்றோர், மணமகளின் பெற்றோர் இருவரின் சொந்தக்காரர்கள் இருவர், ஆசிரியர், திருமணம் செய்து வைப்பவர் 2+2+4+1+1=10. இந்த பத்து பேருக்குக் குறைவாக இருக்ககூடாது என்கிறது இந்த சாத்திரம். இவர்களுடன் மணமக்களைச் சேர்த்தால் பன்னிரெண்டு.

இவர்களை மட்டும் வைத்து ஒரு திருமணம் நடத்தினோமென்றால் வீட்டிலேயே முடித்துவிடலாம். மண்டபம், சமையல் செய்பவர், விருந்து, லைட் மியூசிக் கச்சேரி என்று அலையவேண்டாம். பெண்ணைப் பெற்றவர்களுடைய பெரிய கவலை இந்த செலவுதானே? நமக்கும் மொய் யாரும் எழுதவேண்டாம், நாமும் யாருக்கும் தரவேண்டாம். இதற்கு பயந்து யாரும் பெண் சிசு வதை செய்யவேண்டாம், கருவிலேயே திருகவேண்டாம்.

இந்த ஆடம்பரத் திருமணங்கள் பெண்குலத்திற்கு எதிரி என்றே தோன்றுகிறது. ஒருமுறை மதுரையில் பெண்கள் கல்லூரி மாணவியர் முன்பு பேசும் வாய்ப்பு கிடைத்தது. ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் என் எதிரே அமர்ந்திருந்தார்கள். "எங்கள் திருமணம் எளிமையான முறையில் நடைபெறும் என்று நீங்கள் உறுதி மொழி அளிக்கவேண்டும்' என்று நான் சொன்னேன். "செய்வோம்' என்று ஒரே குரலில் என்னைக் குளிர்வித்தார்கள். பிறகு அவர்கள் என்ன செய்தார்கள் என்று தெரியாது. என் விலாசத்தை நான் கொடுக்க

வில்லையே!

தைத்ரீய ஸம்ஹிதையில், "ப்த்னீ ஹி ஸர்வஸ்ய மித்ரம்'. இதற்கு பொருள் எளிதில் விளங்கும், ஆனாலும் சொல்கிறேன்: மனைவிதான் எல்லோரைக்காட்டிலும் உயர்ந்த நட்பு. இதை ஒவ்வொரு ஆணும் கடைபிடித்தால், வரதட்சணை கொடுமை சட்டம், குடும்ப வன்முறை சட்டம் போன்ற சட்டங்களுக்கு அவசியம் இருக்காது.

இது திருமணத்தைப்பற்றி சாதியைப்பற்றி என்ன கூறுகிறது என்றால்,

தன்மனுஷ்யே மனுஷ்யத்வம் கவி கோத்வம் ச வானரே

வானரத்வம் பிகே தத்வத் பிகத்வம் ஜாதிருச்யதே.

இதன் பொருள் என்னவென்றால் - மனிதனின் மனிதத் தன்மையும், ஆவினங்களின் ஆவினத் தன்மையும், குரங்குகளின் குரங்குத் தன்மையும், குயில்களின் குயில் தன்மையுமே சாதி என்பார்கள் என்பதுதான். இவ்வாறென்றால் ஒன்றே குலம் என்றே ஆகிறது. பிறகு கிளைகிளையாக சாதி எங்கிருந்து வந்தது?

இன்று கட்டப் பஞ்சாயத்து, கௌரவக்கொலை என்று பல வேடங்கள் தரித்து பெண்களை அடக்குவது நிறைவேற்றப்படுகிறது. கோத்திரம், சாதி இதெல்லாம் இந்த கொடுமைக்கு ஒத்துழைக்கும்.

ஸ்த்ரீபும்ஸயொர்மிதோ ராகாத் க்ராம்யதர்மே யதி ப்ரஜா:

ஜாயதே ஜாதிரனயோரேகான்யா மோஹகல்பிதா - என்று ஒரு சுலோகம்.

இதன் பொருள், ஒரு பெண்ணும் ஒரு ஆணும் ஒன்று பட்டு மக்களைப் பெற்றால், அங்கு சாதி என்பது ஒன்றுதான். கலங்கிய சித்தம்தான் வேற்றுமை பேசும். தொன்மையின் காவலர்கள் நாங்கள் என்று கூறுபவர்கள் இது போல் சமத்துவம் பேசும் சான்றுகளையும், பெண்மையை மதிக்கும் அறிவுரைகளையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

"உன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்றமில்லை காலம் செய்த கோலமடி மனிதன் செய்த குற்றமடி' என்று பாடலாமா? ஆதிக்கத்தை கையில் வைத்துக் கொள்ள சாதகமாக இருக்கும் சான்றுகளை மேற்கோள் காட்டிவிட்டு, சமத்துவம் பேசும் வரிகள் மறைக்கப்

பட்டனவா?

இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் பிரிவு 15-இன்படி ஒரு இந்துப் பெண் உயில் எழுதாமல் இறந்துவிட்டால் பின்வரும் வரிசையில் வாரிசுகள் அவள் சொத்தை அடைவார்கள். மக்கள், முன்பே இறந்த மகன் மகளின் மக்கள், கணவன், இவர்கள் யாரும் இல்லையென்றால் கணவனின் வாரிசுகள், அதன் பின் பெற்றோர்களின் வாரிசுகள். இதில் ஒரு விதிவிலக்கு.

அந்தப் பெண்ணுக்கு மக்கள் இல்லையென்றால் பெற்றோரிடம் இருந்து அவள் வாரிசுரிமையில் அடைந்த சொத்து பெற்றோரின் வாரிசுகளுக்கு செல்லும். ஒரு வழக்கு நடந்தது. நாராயணி தேவி என்ற ஒரு பெண். அவள் திருமணமாகி சில மாதங்களிலேயே கணவனை இழக்கிறாள். தாய் வீட்டிற்கு அனுப்பப்படுகிறாள். அங்கே அவள் படித்து, பணி புரிந்து, பொருளீட்டி பின் இறக்கிறாள்.

அவள் வங்கி சேமிப்புத் தொகையைக் கேட்டு அவள் தாய் நீதிமன்றத்தில் மனு கொடுக்கிறார். அவளுடைய கணவனின் சகோதரி மகனும் விண்ணப்பம் செய்கிறார். வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்றது. தோற்றது தாய். காரணம், பெற்றோரிடமிருந்து வாரிசாகப் பெற்ற சொத்து மட்டும்தான் பெற்றோர் வகைக்கு செல்லும். அவளுடைய மற்ற சொத்தெல்லாம் கணவன் வாரிசுக்குத்தான் செல்லும் என்று சட்டம் சொல்கிறது.

வடமொழி நாரத ஸ்ம்ருதியில் ஒரு வரி. அப்ரஜாயா ஹரேத்பர்த்தா மாதா ப்ராதா பிதாபிவா. மக்கள் பெறாமல் இறந்த பெண்ணின் வாரிசுகள் இந்த வரிசையில். கணவன், தாயார், சகோதரன், தந்தை.

இந்த வரியை பின்பற்றி இந்து வாரிசுரிமை சட்டத்தை 1956-இல் இயற்றி இருந்தால் நாராயணி தேவியின் சொத்து அவர் தாயாருக்குத் தான் என்று தீர்ப்பாகியிருக்கும், துரத்திவிட்ட புக்ககத்தினருக்கு ஜாக்பாட் அடித்திருக்காது. 1956-இல் சட்டம் வந்த போது இது போல செய்திருக்கலாமே. ஏன் செய்யவில்லை? மறுபடியும் டி.எம்.எஸ்.சின் உன்னைச் சொல்லி-தான்.

இப்பொழுது விதவைகளைப் பற்றி பார்போம். சுவாஸினி என்ற சொல்லுக்கு ருக்வேத காலம் தொட்டு நல்ல உடை அணிந்தவள் என்றுதான் பொருள். கணவன் உயிருடன் இருக்க வேண்டும் என்று அப்பொழுது குறிப்பிடப்படவில்லை.

ஆனால், பிற்காலத்தில் கணவன் உயிருடன் இருக்கும் பெண்தான் சுவாஸினி என்று எவ்வாறு வந்ததோ தெரியவில்லை. கணவனை இழந்த பெண்ணிற்கு பல கட்டுப்பாடுகள் விதித்து அவளை நல்ல உடை உடுக்க அருகதை இல்லாமல் செய்து, அவள் சுவாஸினி இல்லை, அறுத்தவள், வீணாகப் போனவள் என்பது ஸ்தாபிக்கப்பட்டது.

இன்று அந்தப் பெண்கள் நல்ல உடை அணிந்து கொண்டாலும் அவர்களை சுவாஸினியாக சேர்த்துக் கொள்வதில்லை. ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தில் "சுவாஸின்யர்சனப்ரீதா' என்று வரும்.

அப்படியென்றால், நல்ல உடை அணிந்து போற்றுபவர்களை அவளுக்கு பிடிக்கும் என்றுதான் பொருள். நிச்சயமாக தெய்வம் "கணவன் உயிரோடு இருப்பவர்களைத்தான் நான் அணைப்பேன்' என்று சொல்லாது.

பத்யெள ப்ரவ்ரஜிதே நஷ்டே க்ரீவே பதிதே ம்ருதே

பன்சஸ்யாபத்ஸூ நாரீணாம் பதிரன்யோ விதீயதே.

கணவன் தொலைந்து போனால், இறந்து போனால், துறவறம் பூண்டால், ஆண்மை இழந்தவனாக இருந்தால், அவனுக்கு தீரா நோய் இருந்தால், அவன் சித்த சுவாதீனம் இழந்தால், பெண்பித்தனாக இருந்தால் }ஒரு பெண் மறுமணம் செய்யலாம் என்பது தான் மேற்கண்ட சுலோகத்தின் பொருள்.

தமிழும் வடமொழியும் ஒரே குரலில் ஒற்றுமையாக பேசுவது தெளிவு. இடையே விரோதம் இருப்பதாகத் தெரியவில்லை. பின் ஏன் கைபெண்ணுக்கு ஒரு கோலம் கொடுக்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணனின் "பாதையில் பதிந்த அடிக'ளில் (மணலூர் மணியம்மாளின் வாழ்க்கை) இந்த வரிகளைக் காணலாம். ஆனால், மொட்டையாகிப் போனவள் சொட்டூண்டு டிகாக்ஷன்கூட விடாமல் பாலைக் குடிக்கலாகாது. இந்தச் சாஸ்திரங்களை எந்த ரிஷி முனிவர்கள் எழுதி வைத்தார்கள்? இன்று இல்லை இந்த நிலை. உண்மை.

ஆனால் பெண் என்பவளின் மதிப்பும் உரிமையும் ஆண் சார்ந்தது என்ற நிலைதான் நிலவி வந்துள்ளது. இந்தக் கசண்டின் அடிக்கசப்பு தான் அந்த நாராயணி அம்மாள் வழக்கும்.

இந்தக் கண்ணோட்டத்தின் எதிரொலி தான் குடும்ப கெளரவம் என்ற பெயரிலும், சாதிக் கட்டுப்பாடு என்ற பெயரிலும் நடக்கும் கொடூரங்களும் பாரம்பரியம் என்றும் சொல்லி பெண்களை அடிமைபடித்துவதும். நாம் தேர்ந்தெடுப்பதுதானே மேற்கோள்கள்?

maduraimini
Posts: 477
Joined: 22 Sep 2009, 02:55

Re: Tit bits in Tamil

Post by maduraimini »

Venkatakailasam,

Thanks for posting the occupations and related names. It made me laugh . It was very good. We all need some laughs in between the everyday chores. Thanks again for some happy time.

arasi
Posts: 16787
Joined: 22 Jun 2006, 09:30

Re: Tit bits in Tamil

Post by arasi »

VK,
Thank you for bringing Prabha Sridevan's article from Dinamani. How thought-provoking it is! It touches the heart of all women folk, no doubt. As you did, hope many men paid attention to it too.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Tit bits in Tamil

Post by venkatakailasam »

That was by Thanjavooran...


Enjoy this one...from Thukluk..

Image

arasi
Posts: 16787
Joined: 22 Jun 2006, 09:30

Re: Tit bits in Tamil

Post by arasi »

VK,
Love the cartoonist's work too, there!

Thanjavooran,
Thanks for bringing the article to us. I assumed it was VK's post...

thanjavooran
Posts: 2980
Joined: 03 Feb 2010, 04:44

Re: Tit bits in Tamil

Post by thanjavooran »

Shri VK
Excellent cartoon. Nowadays thondar adipodigal are very intelligent. Thanx for sharing.
Thanjavooran
07 08 2014

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Tit bits in Tamil

Post by venkatakailasam »

நேத்தி நைட் 12 மணிக்கு வந்த அக்கப்போர் .....

ஹலோ சொல்றா மாப்ள எப்படி இருக்க ?

நல்லா இருக்கண்டா .....

அப்புறம் என்னடா இந்த நேரத்துல ?

அது ஒன்னும் இல்லைமாமா இங்க இன்னைக்கு ஒரு பார்ட்டி அதான் மப்பும், மந்தாரமுமா இருக்கேன்

ரைட்டு என்ஜாய் பன்னு, அப்புறம் சொல்லு என்ன விஷயம்.?

இரு ஒரு தம்ம பத்த வச்சுக்கிர்றேன்.....................இம் ... நம்ம கவர்மென்ட்டுக்கு அறிவே இல்லை மாமா

அதான் தெரியுமே , என்ன விஷயம் சொல்லு ?

இன்னைக்கு மதுரைக்கு போயிட்டு வந்தேன் , வழியில ஒரு இடத்துல ஆபத்தான வளைவுன்னு போர்டு போட்டு இருந்தானுக

சரி அதுக்கு என்ன ?

என்னத்துக்கு ரோட்ட அவ்ளோ கஷ்ட்டப்பட்டு வளைச்சு போடணும்? , அப்புறம் எதுக்கு போர்டு வைக்கணும்?

(அடப்பாவிகளா .....நைட்டு 12 மனுக்கு போன் பண்ணி கேக்க வேண்டிய டவுட்டாட இது ....இன்னைக்கு இவன் போதைக்கு நாமதான் ஊறுகா போல )

டேய் மாப்பள உனக்கு ரொம்ப ஓவராயிடுச்சு போயி தூங்கு

அது இல்ல மாமா , இன்னொரு இடத்துல விபத்துப் பகுதின்னு போர்டு போட்டு இருந்தானுக

சரி ......

அது தான் விபத்துப் பகுதின்னு தெரியுதே அப்புறம் அங்க போயி ஏன் ரோடு போடணும்?

டேய் மாப்ள .... , ஏற்கனவே என் பொண்டாட்டிகிட்ட படுகேவலமா திட்டு வாங்கிட்டு கோவத்ல இருக்கேன் என்னை தேவை இல்லாம வெறுபேத்தாத, மரியாதையா ஃபோன வச்சிட்டு படு

ஹி.ஹி.ஹி...........தங்கச்சிகிட்ட திட்டு வாங்கினியா ....சரி ,,சரி படு ....குட் நைட்,

கொஞ்ச நேரம் கழிச்சு மறுபடியும் போன் அடிச்சது ........... அதே நாய் தான் ......டென்சனா போன ஆன் பண்ணி

என்னடா மாப்ள ?

சாரி மாமா கோவிச்சுக்காத ....தம்மடிக்கனும் தீப்பட்டியகாணோம் நீ எங்கையாவது என் தீப்பெட்டிய பாத்தியா ?

டேய் ............நீ திருநெல்வேலியில‌ இருக்க, நான் இங்க சென்னையில இருக்கண்டா "

இல்லை மாமா கடைசியா நாம ரெண்டுபேருதான் பேசிக்கிட்டு இருந்தோம் ... அதான் நீ எங்கயாவது பாத்தியான்னு கேட்டான்

டேய்ய்ய்ய்

Share from a friend.

thanjavooran
Posts: 2980
Joined: 03 Feb 2010, 04:44

Re: Tit bits in Tamil

Post by thanjavooran »

A divorce case!!!!!!!!!!!!.................. Ha ha ha
A share from my friend

இங்கே யார் ஏடாகூடம் . வழக்கறிஞரா அல்லது வாதி பிரதிவாதியா?
உங்களுக்கு விளங்கினால் சொல்லுங்கள்.
ஒட்டுமொத்தமாக நாமா அல்லது நீதியரசரா?

கோர்ட்டில் அந்த விவாகரத்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் பட்டது. பிரதிவாதியான மனைவி தன் கணவர் தன் மேல்அபாண்டமாகப் பழி போட்டு இந்த விவாகரத்தைக் கேட்டிருப்பதாகவாதாடியதைத் தொடர்ந்து விசாரணை ஆரம்பமாயிற்று.

அரசாங்க வக்கீல் குறுக்கு விசாரணையை ஆரம்பித்தார்.

“அடிப்படையில் உங்களுக்குள் என்ன பிரச்சினை?”

“அடுப்படியில பிரச்சினை எதுவும் இல்லைங்க”

“ப்ச்.. உங்களுக்கிடையில் என்ன தகராறு?”

“எங்க கடையில தகராறு எதுவுமில்லையே, நல்லாத்தானே ஓடுது?”

“அடாடா… உங்க தாம்பத்ய உறவில் என்ன சங்கடம் என்று அறிய கோர்ட்விரும்புகிறது”

“தாம்பரத்தில எங்களுக்கு உறவுக்காரங்க யாருமில்லைங்க.இருந்தாத்தானே சங்கடம்”

“கருத்து வேறுபாடு ஏதாவது உண்டா?”

“அவரு கருப்புதாங்க. நானும் கறுப்புதான… அதனால வேறுபாடு ஏதும்இல்லைங்க”

“வீட்டுக்காரரோட என்ன சண்டை?”

“வீட்டுக்காரரோட எதுக்குங்க சண்டை, மாசம் ஒண்ணாம் தேதிவாடகையை வாங்கிட்டு அவரு பாட்டுக்கப் போயிடறாரு”



இதற்கு மேல் அவரால் தாங்க முடியவில்லை.

“எதுக்காக விவாகரத்து கேட்கிறார்” என்று அலறி விட்டு இருமினார்.

“ஓ..அதுவா… என்னோட பேசறப்ப எல்லாம் ரத்தக் கொதிப்பு வந்துடுதாம்.நீங்க நல்லாத்தான பேசிகிட்டு இருக்கீங்க… உங்களுக்கென்ன ரத்தக்கொதிப்பா வந்திரிச்சு? இது அபாண்டம்தானே?”

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Tit bits in Tamil

Post by venkatakailasam »

Image


பசியில் இருந்த ஒரு பெண் சிங்கம் நீண்ட போராட்டத்தின் பின் ஒரு மானை வேட்டையாடி இறையை துண்டிக்க ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் மான் கருவுற்றிருப்பதை கண்டு கொண்டது.
இதனால் கடும் அதிர்ச்சிக்குள்ளாகிய சிங்கம் உடனே தாயின் வயிற்றிலிருந்து வெளியேறிய குட்டியை காப்பற்றுவதற்காக பகீரத பிரயத்தனம் மேற்கொண்டது.
இறுதியில் நீண்ட நேர முயற்ச்சி பலனளிக்காது குட்டி இறக்க நேரிட்டது. இதைத் தாங்க முடியாத சிங்கமும் கீழே சாய்ந்து கொண்டது. சிறிது நேரத்தின் பின் இந்த நிகழ்வை முழுவதுமாக படம் பிடித்துக்கொண்டிருந்தவர் அருகில் சென்று பார்த்த போது சிங்கம் இறந்து கிடந்தது.

arasi
Posts: 16787
Joined: 22 Jun 2006, 09:30

Re: Tit bits in Tamil

Post by arasi »

This is amazing!

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: Tit bits in Tamil

Post by vgovindan »

மலரும் நினைவுகள் - எந்த்தநேர்ச்சினா?

பெங்களூருவில் வீணை சிட்டிபாபுவின் கச்சேரி. அவருடைய நண்பர்களும், இரசிகர்களுமாகிய ஒரு தம்பதி கச்சேரிக்கு வந்திருந்தனர். கணவர் முதல் வரிசையில் அமர்ந்து கச்சேரி கேட்டுக் கொண்டிருந்தார். கச்சேரி முடியும் வரை இருந்து கேட்க வேண்டும் என்பது அவருக்கு சிட்டிபாபு இட்டிருந்த அன்புக் கட்டளை.
அருகில் அமர்ந்திருந்த மனைவி பாதிக் கச்சேரியிலேயே வீட்டிற்குப் போக வேண்டும் என்று தனது கணவனை நச்சரிக்கத் தொடங்கிவிட்டார். ஒரு பாட்டு முடிந்ததும் அவர் எழுந்துபோய் கதவருகில் நின்றபடி தனது கணவனையும் வரும்படி சைகை செய்து கொண்டிருந்தார். தொந்தரவு பொறுக்க முடியாமல் கணவரும் அடுத்த பாட்டு முடிந்ததும் எழுந்து போகத் தலைப்பட்டார்.

இதையெல்லாம் ஆரம்பத்திலிருந்தே கவனித்து வந்த சிட்டிபாபு, அடுத்தாற்போல வாசிப்பதற்குத் தேர்ந்தெடுத்த சாகித்யம், "உதய இரவிச்சந்திரிகா" இராகத்தில் அமைந்த "எந்த்தநேர்ச்சினா, எந்த்தஜுச்சினா" என்கிற சாகித்யம். அதாவது, "என்னதான் பெரிய சாதனையாளனாக இருந்தாலும், எல்லோருமே ஏதாவது ஒரு விதத்தில் மனைவிக்கு அடிமைதான்" என்று பொருள்பட அமைந்த சாகித்யம் இது.

நடந்ததையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த முன்வரிசை இரசிகர்களும், பக்கவாத்தியக்காரர்களும் மட்டுமல்ல, அந்தத் தம்பதியரே சிரித்து விட்டனர். கணவனும் மனைவியும் மீண்டும் தத்தம் இடங்களில் வந்து அமர்ந்துவிட அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது!

கலாரசிகன்

நன்றி: தினமணி

I came across some interesting anecdote while searching for something else. These posts are of much older than the date of posting which is around 2008 and 2009.
Please refer to https://groups.google.com/forum/#!topic ... 0-false%5D
Please invoke "Sri Sritharan"

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: Tit bits in Tamil

Post by Pratyaksham Bala »

Ref: Post #167.

The lioness did not die ! It just went to sleep !!

The original story was posted on 12th September 2008 by Gerry van der Walt, a South African wildlife and nature photographer. And from then on several twisted versions started appearing with political and emotional overtones.

When Gerry van der Walt started receiving email after email asking whether it is true that the lioness died of sorrow, he wrote again in 2009 that "the lioness is still alive and well (all be it a little older) living in the Madikwe Game Reserve".

Read the Original Post and the Follow Post at: http://www.wild-eye.co.za/photochat/the-real-story/

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: Tit bits in Tamil

Post by sridhar_ranga »

Excerpt from today's news item - it seems the Chief Minister of SriLanka's Northen Province, C.V. Vigneswaran, was very interested in learning Carnatic Music in his childhood.
என் வாழ்க்கையில் நடந்த சங்கீதம் பற்றிய ஒரு நிகழ்வை இங்கு கூறி வைக்கலாம் என்று நினைக்கின்றேன். சுமார் 65 வருடங்களுக்கு முன்னர் இது நடந்தது.

அந்தக் காலத்தில் பொதுவாக வானொலி தான் எம்மைத் தென்னிந்திய கர்நாடக இசைக் கலைஞர்களுடன் சேர்த்து வைத்தது. மதுரை மணி ஐயர், முசிரி சுப்பிரமணிய ஐயர், வி.வி. சடகோபன் , உறையூர் இராஜ கோபாலசர்மா, அரியக்குடி இராமானுஜம் ஐயங்கார், செம்பை வைத்தியநாத பாகவதர், மாரியப்ப சுவாமிகள், மகாராஜபுரம் விஸ்வநாதய்யர் என்று பல இசை மேதைகளின் பெயர்கள் இப்பொழுதும் மனதில் பதிந்து இருக்கின்றன.

அவர்களின் பாடல்களைத் தான் காலையில் எழுந்தவுடன் ஆல் இந்தியா ரேடியோ, திருச்சி வானொலி நிலையத்தில் இருந்து கேட்போம். அவற்றைக் கேட்டுக் கேட்டு அடிப்படைச் சங்கீத அறிவு எதுவும் இல்லாமலே பல பாடல்களை அவர்களைப் போல் பாடும் ஆற்றலை அப்போது பெற்றிருந்தேன்.

அப்போது எனக்கு வயது 10 அல்லது 11 இருக்கும். ஒரு நாள் நான் என் தாயாரிடம் கர்நாடக இசை படிக்க வேண்டும் என்று கேட்டேன். அம்மாவுக்கு மயக்கம் வந்து விடும் போல் இருந்தது. “முதலில் பாடங்களைப் படி; அதற்குப் பிறகு கர்நாடக இசை பற்றிப் பார்க்கலாம் என்றார். நான் வற்புறுத்திக் கொண்டே வந்தேன்.

ஒரு நாள் என்னை எங்கள் கொழும்பு வீட்டு வாசலுக்கு அழைத்தார். “அந்தா போகின்றார் அவரைப் பார்த்தாயா?” தெருவில் சென்ற ஒருவரைச் சுட்டிக் காட்டிக் கேட்டார் என் தாயார். நான் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஒரு முதியவர். சுதேச உடையில் காட்சி தந்தார். வெற்றிலையைச் சப்பி சப்பிக் கொண்டே சென்று கொண்டிருந்தார். ஒரு கையில் குடை, மறு கையில் சுருதிப் பெட்டி, மிக உக்கிரமாக வெய்யில் தகித்துக் கொண்டிருக்க தமது பருத்த உடலைத் தூக்க முடியாது ஆடி ஆடி நடந்து போய்க் கொண்டிருந்தார்.

“இந்தக் கர்நாடக இசை அது இது என்று உன் மனதைக் குழப்பிக் கொண்டாயானால் அந்த ஐயங்காரைப் போல நீயுந் தெருத் தெருவாய் அலைய வேண்டி வரும். இசைப் பாடகர்கள் எவ்வளவு வறிய வாழ்க்கை வாழ்கின்றார்கள் என்று உனக்குத் தெரியுமா? உன் தந்தை தாய் இரு பக்கத்துக் குடும்பங்களில் எல்லோருமே வழக்கறிஞர்கள்.

முதலில் அதற்கேற்றவாறு படி. அதன்பின் சங்கீதம் பற்றிப் பார்க்கலாம்” என்றார். தெருத் தெருவாய் அலைய வேண்டி வருமோ என்ற பயத்தில் கர்நாடக சங்கீதம் பற்றி என் தாயாருடன் அதன்பின் பேசவில்லை.
For the full article, please click here

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Tit bits in Tamil

Post by venkatakailasam »

Depicting the olden days plight of Sangeetha Vidwans...

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Tit bits in Tamil

Post by venkatakailasam »

ஓர் இளைஞன் B.E பட்டதாரி. எங்கெங்கோ வேலை தேடினான்.

அவன் ஏறி இறங்காத நிறுவனங்களே இல்லை.
எங்கும் வேலை கிடைக்க வில்லை. ஒரு நாள்
அந்த ஊருக்கு ஒரு சர்கஸ்கம்பெனி வந்தது.
அதிலாவது ஏதேனும் வேலை கிடைக்குமா என்று அந்த
சர்க்கஸ் கம்பெனி முதலாளியைப் பார்த்துக் கேட்டான்.
அவனும் வேலை காலி இல்லை என்றான்.
பிறகு இவன் எப்படியாவது ஒரு வேலை கொடுங்கள்
என்று கெஞ்சினான். அந்த முதலாளி சொன்னான்.
தம்பி கம்பெனியில் இருந்த குரங்கு ஒன்று நேற்று இறந்துவிட்டது.

அந்த வேலையை நீ செய்வதாக இருந்தால்
உன்னை சேர்த்துக் கொள்கிறேன் என்றார்.
சரி என்று அவனும் ஒப்புக்கொடு வேலைக்குச்
சேர்ந்தான். குரங்கு செய்யும் வித்தைகளை எல்லாம்
கற்றுக்கொண்டு குரங்கு வேசம் போட்டு இவனும் செய்தான். ஒரு நாள் சர்கஸ் நடந்து கொண்டிருந்தது.
பெருந்திரளாக கூட்டம் கூடியிருந்தது. அரங்கில் உயரத்தில் தொங்கிய ஊஞ்சலில்
இருந்து குரங்கு வித்தைகளை செய்யும்போது கைநழுவி கீழே விழுந்து விட்டான்.

அடி அவ்வளவாகப்படவில்லை. ஆனால்
இவன் கீழே விழுவதற்கும் அங்கே கூண்டிலிருந்த
சிங்கத்தைத் திறந்து விடுவதற்கும் சரியாக
திறந்து விடுவதற்கும் சரியாக இருந்தது.
நடுங்கிப் போனான். வயிற்றுப் பசியை போக்கவே வேலை தேடி இங்கு வந்தோம். இன்று சிங்கத்தின் வயிற்றுக்கு இரையாகப் போகிறோம் என்று அஞ்சி நடுங்கினான்.
பேச நாகூட வரவில்லை. இவன் அஞ்சி நடுங்குவதை சிங்கம் பார்த்து. அவனை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தது.

சரி நம் கதை முடிந்தது என்று நினைத்தான். குரங்கு வேடத்தில் இருந்த B.E பட்டதாரி. சிங்கம் மெல்ல வாயைத்
திறந்து பேசியது. “ஏ! B.E! பயப்படாதே நான் M.E, ”

என்றது. நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம்
எப்படி இருக்கிறது என்பதை இக்கதை விளக்குகிறது..

thanjavooran
Posts: 2980
Joined: 03 Feb 2010, 04:44

Re: Tit bits in Tamil

Post by thanjavooran »

அய்யா தெரியாதையா நீயும் என்னை போலத்தான் என்று. நல்ல காலம்
தப்பித்தேன்
தஞ்சாவூரான்
04 09 2014

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Tit bits in Tamil

Post by venkatakailasam »

நூறு கோழி குஞ்சு குடுப்பா

போன வாரம் தான நூறு கோழி குஞ்சு வாங்கிண்டு போய் கோழி பண்ண வைக்க போறேன்னு சொன்னீங்க என்ன ஆச்சு?

ஒன்னும் வளரலப்பா !

இந்த தடவையாவது எல்லா கோழி குஞ்சும் நல்லா வளர்ந்து நீங்க பெரிய ஆளா வாங்க சார்

கண்டிப்பா வருவோம்ல போன தடவ என்ன தப்பு செஞ்சேன்னு கண்டுபிடிச்சிட்டோம்ல

போன தடவ என்ன சார் தப்பு பண்ணுனீங்க‌?

ரொம்ப ஆழமா நட்டுட்டேன்பா !!

Post Reply