பத்துப்பாட்டு

Post Reply
kvchellappa
Posts: 3596
Joined: 04 Aug 2011, 13:54

பத்துப்பாட்டு

Post by kvchellappa »

FROM FB
தமிழுக்கு அமுதென்று பேர்.
"Smile Prabu Trichy
8 hrs

பத்துப்பாட்டில் உள்ள நூல்கள் என்னென்ன? அவை எத்தனை அடிகளை கொண்டவை? பாடியது யார்? பாட்டுடைத் தலைவன் யார்? என்று பார்த்திருந்தோம் அல்லவா? இப்போது பத்துப்பாட்டின் ஒவ்வொரு பாடல் குறித்தும் மேலும் சின்னசின்ன தகவல்களைப் பார்ப்போம்.

1. திருமுருகாற்றுப்படை
இது மிகப் பழமையான நூல். ஆசிரியப்பாவால் ஆனது. 12 சைவ திருமுறைகளில் 11ம் திருமுறை தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இந்நூல் பத்துப்பாட்டிற்கே ‘கடவுள் வாழ்த்து” போன்றது. இதை பாடியவர், “ குமரவேளை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்” ஆவார். இதன் வேறு பெயர்கள் “புலவராற்றுப்படை” மற்றும் “முருகு” என்பதாகும்.

2. பொருநராற்றுப்படை
பொருநர் என்ற சொல்லுக்கு ‘வீரர்’ என்று பொருள்படும். மற்றொருவர் போல் வேடம் கொள்பவர் என்ற என்றும் சொல்வர். பொருநர் மூவகைப் படுவர். 1) ஏர்க்களம் பாடுவோர் 2) போர்க்களம் பாடுவோர் 3) பரணி பாடுவோர். இங்கு போர்க்களம் பாடுவோர் பாடல் வந்துள்ளாது.

3. சிறுபாணாற்றுப்படை
பாணர்கள் மூவகைப்படுவர். 1) இசைப்பாணர் 2) யாழ்ப்பாணர் 3) மண்டைப்பாணர். சிறிய யாழை கொண்டு பாணனை ஆற்றுப்படுத்தியதால் இப்பெயர் பெற்றது. ஒய்மான் நாட்டும் தலை நகர் ‘கிடங்கில்’ என்ற செய்தி இந்த நூலின் மூலம் தெரிய வருகிறது. இந்நூல் யாழ்ப்பாணர் பற்றியது. கடையெழ்ய் வள்ளல்கள் பற்றி கூறும் நூல். மேலும் பத்துப்பாட்டில் மூவேந்தர் பற்றி ஒருசேரக் கூறும் நூல் இதுவே.

4. பெரும்பாணாற்றுப்படை
இதில் வரும் பாணன் கையில் இருப்பது, பெரிய யாழ். இதில் மன்னரை விட மக்களைப் பற்றிய செய்திகளே அதிகம் உள்ளன. இதன் வேறு பெயர்கள் பாணாறு மற்றும் சமுதாயப்பாட்டு என்பதாகும். இந்த நூலில் இடம் பெற்றிருக்கும் ‘திருவெஃகா” என்னுமிடம் தற்போதைய காஞ்சிபுரம் என அறியபட்டுள்ளது.

5. மலைபடுகடாம்
இண்ணொரு பெயர் ‘கூத்தராற்றுப்படை’. மலைக்கு யானையை உவமித்து, அதன்கண் பிறந்த பல்வேற்ய் ஓசையைக் ‘கடாம்’ (மதநீர்) எனச் சிறப்பித்தமையால் இப்பெயர் பெற்றது. இன்றைய பயண நூல்களுக்கு முன்னோடியானது இந்நூல். நவிர மலையின் நன்மை தீமைகளை குறிப்பிடுகின்றது. நவிர மலை என்பது நன்னனின் மலை ஆகும். மலையில் எழும் பல்வேறு ஓசைகளை பற்றி இந்நூல் தெரிவிக்கிறது.

6. மதுரைக்காஞ்சி
இந்த நூலின் சிறப்புப் பெயர் ‘பெருகு வள மதுரைக்காஞ்சி’ மற்றும் ‘கூடற்றமிழ்’ என்பதாகும். நிலையாமையை பற்றி வற்புறுத்தும் காஞ்சித்திணையை பெற்றது மதுரைக்காஞ்சி. பெரிய அடிகளையுடைய பாடல்களை கொண்டுள்ளது. பத்துப்பாட்ட்ல் வீடுபெற்றற்கு முதன்மை கொடுக்கும் நூல் இது. நாலாங்காடி, அல்லங்காடி இடம்பெற்ற நூல் பத்துப்பாட்டு. மாநகரப்பாட்டு என்றும் அழைக்கபெறுகிறது.

7. முல்லைப்பாட்டு
பத்துப்பாட்டினுள் மிகச் சிறியது. முல்லைத் திணைக்குரிய ஒழுக்கம் ‘இருத்தல்’, அதைப்பற்றி சொல்கிறது. பாசறை அமைப்பு பற்றியும், சகுணம் பார்த்தல் பற்றியும் இந்த நூல் கூறுகிறது. இதில் வரும் ‘மாயோன்’ என்ற சொல் திருமாலைக் குறிக்கிறது. இதன் வேறு பெயர் “ நெஞ்சாற்றுப்படை”.

8. பட்டினப்பாலை
பட்டினம் என்பது சோழர்களின் துறைமுக நகரம் ‘காவேரி பூம்பட்டினம்’ ஆகும். அக நூலாக இருந்தும், புறசெய்திகளை அதிகமாக கூறும் நூல் இது. இதன் வேறு பெயர் “வஞ்சிநெடும்பாட்டு” (பெரும்பாலும் வஞ்சியாகவும் இறுதியில் ஆசிரியப்பாவாலும் அமைந்துள்ளதால், இந்தப் பெயர்)

9. நெடுநல்வாடை
நெடுநல்வாடை னல்ல வாடையை பாடும் பாட்டு. அக்கால அரன்மனை அமைப்பு பற்றி இந்த நூலில் குறிப்புகள் உள்ளன. . பாண்டியன் போருக்கு செல்கிறான், போரில் வெற்றி பெறுகிறான். எனவே அவனுக்கு அது நல்ல வாடை. ஆனால் மன்னனை பிரிந்து அரன்மனையில் இருக்கும் அரசமாதேவி மன்னன் எப்படி இருக்கிறாரோ? என பரிதவிக்கிறார். எனவே அரசமாதேவிக்கு நெடிய வாடை. அக நூலா? புற நூலா? என்ற சர்சைக்குரிய நூல் நெடுநல்வாடை. அந்த சர்ச்சைக்குரிய ஒரே ஒரு வரி “வேம்பு தலையாத்த நோன்காழ் எஃகம்” . அக நூலான இதில் பாண்டியர்களின் அடையாளமான வேம்பூ பற்றி சொல்லியிருப்பதே சர்ச்சைக்கு காரணம்.

10. குறிஞ்சிப்பாட்டு
இதன் சிறப்புப் பெயர்கள், ‘பெருங்குறிச்சி’, ‘காப்பியப்பாட்டு’ ‘உளவியல்பாட்டு” என்பனவாகும். இந்த நூல் கபிலரால் எழுதப்பெற்றது. இந்நூலில்“தமிழ்” என்பதற்கு “அகப்பொருள்” என்று பொருள் கூறப்பட்டுள்ளது. இதில் 99 வகையான மலர்களின் காட்சி இடம்பெற்றுள்ளது சிறப்புக்குரியது.

பண்பாடுவோன் - பாணன்
பாணன் மனவி - பாடினி, விறிலி
பாணனுடன் சேர்ந்து பாடுபவள் - பாடினி
பாடலுக்கு ஆடுபவள் - விறலி
ஆடும் கண்கள் - கூத்தர்கள்
வேடம் தாங்கி நடிப்போன் - பொருநன்
அகநூலில் பாட்டுடைத் தலைவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்

கடையெழு வள்ளல்கள்
1. பேகன் - மயிலுக்குப் போர்வை அளித்தவன்
2. பாரி - முல்லைக்குத் தேர் தந்தவன்
3. காரி - ஈர நன்மொழி கூறியவன் (councilman)
4. ஆய் - நீலநாகம் நல்கிய கலிங்கத்தை ஆலமர் செல்வனுக்கு (குற்றாலநாதருக்கு) அணிவித்தவன்
5. அதிகன் (அதியமான்) - நெல்லிக்கனியை ஔவைக்கு அளித்தவன்
6. நள்ளி - துளிமழை பொழியும் நளிமலை (நீலகிரி) நாடன். நட்டோர் உவப்ப நடைப்பரிகாரம் நல்கியவன். (நண்பர்கள் வாழ்க்கை நடத்துவதற்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் நல்கியவன்
7. ஓரி - தன் குறும்பொறை நாடு முழுவதையும் கோடியர்க்கு(யாழ் மீட்டும் பாணர்க்கு) அளித்தவன். தன் ஓரி என்னும் குதிரைமீதேறி, காரி என்னும் குதிரைமேல் வந்து தாக்கிய காரியோடு போரிட்டவன."

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: பத்துப்பாட்டு

Post by vgovindan »

பாணன் என்ற தமிழ்ச்சொல்லும் வாண என்ற வடமொழிச்சொல்லும் ஒன்றையொன்று சார்ந்தவை. வாணி என்பது சரஸ்வதியைக் குறிக்கும். இதெல்லாம் நமது பண்டைய இந்தியப் பரம்பரையின் பிராந்தியத் திரிபுகள். இவற்றிற்கு வேறு விதமான விளக்கங்களையளித்து, மக்களை வேறு படுத்தியுள்ளனர்.

Post Reply