Old and new names of places

Post Reply
kvchellappa
Posts: 3597
Joined: 04 Aug 2011, 13:54

Old and new names of places

Post by kvchellappa »

(From FB)

மருவிய ஊர்ப்பெயர்கள்:
தன்செய்யூர் - தஞ்சாவூர்
பொழில் ஆட்சி - பொள்ளாட்சி
வெண்கல்லூர் - பெங்களூர்
செங்கழுநீர்பட்டு - செங்கல்பட்டு
ஒத்தைக்கல் மாந்தை- உதகமண்டலம்
உகுநீர்க்கல் - ஒகேனக்கல்
குன்றூர் - குன்னூர்
மகிஷசுரபுரி - மைசூர்
ஆர் காடு - ஆர்க்காடு (ஆர் என்பது ஆத்தி மரம்)
ஏரிக்காடு - ஏற்காடு
மதிரை - மதுரை (மதி என்றால் நிலவு, பாண்டிய நாட்டு மக்கள் நிலவினை வழிபட்டு வந்தவர்கள். அதனால், தங்கள் தலைநகரத்தை மதுரை என்று பெயரிட்டனர்)
சவுந்தரபாண்டியனார் அங்காடி - பாண்டி பசார்

சமஸ்கிருதத்தில் மாற்றப்பட்ட சில தமிழர் ஊர்ப்பெயர்கள்:
விருதாச்சலம் - முதுகுன்றம்
வேதாரண்யம் - திருமறைக்காடு
திண்டிவனம் - புளியங்காடு
மாயவரம் - மயிலாடுதுறை

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: Old and new names of places

Post by arasi »

Good collection.

Though, benda kALUru for Bengaluru (cooked lentils in kannaDa), which the exiled ruler, on his return to regain his land--when he and his troop were marching hungry--were fed by a kind woman in the woods...is one version.

hoge nakal (looks like smoke, pugai nagal, the vapors rising from the falling waters) is another version...

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Old and new names of places

Post by Pratyaksham Bala »

kvchellappa wrote:ஆர்க்காடு (ஆர் என்பது ஆத்தி மரம்)
ஆர் வேறு; ஆத்தி வேறு !

ஆத்தி என்பது "மந்தாரை" மரத்தைக் குறிக்கும். இது ஒரு பெருமரம். இதன் பூக்கள் ஊதா நிறத்தில் இருக்கும். Binomial name: Bauhinia variegata (Ebony Tree), Sanskrit - कनक or कांचन.

ஆர் என்பது "கொக்கு மந்தாரை" என்று அழைக்கப் படும் ஒரு சிறிய வகை மரத்தைக் குறிக்கும். வட மாநிலங்களில் இது சோனா என்று அறியப்படுகிறது. இதன் இலைகள் மந்தாரை இலைகளை போலவே இருக்கும் - ஆனால் சற்றே சிறியதாக இருக்கும். இதன் பூக்கள் மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் காணப்படும். Binomial name: Bauhinia acuminata (White Orchid Tree), Sanskrit - शिवमल्ली.

kvchellappa
Posts: 3597
Joined: 04 Aug 2011, 13:54

Re: Old and new names of places

Post by kvchellappa »

ஆர்
ār n. [K. āre.] 1. Common mountain ebony. See ஆத்தி ஆரும்வெதிரும் (தொல்.எழுத்.363). 2. Holy mountain ebony. See திருவாத்தி
Source: agarathi.com/word/

I posted as I found in FB. Googling led to the above as one of many meanings.
I belong to that district. I was told by someone that as it abounds in forest amidst river, it was called ArkAdu. (Arkadu, Walajapet and Ranipet are contiguous on Palar).

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Old and new names of places

Post by Pratyaksham Bala »

எழுதியது குற்றம் காண அல்ல; தெளிவு படுத்தவே !

மேலே குறித்துள்ள நூல் மட்டுமல்லாது இன்னும் பல இடங்களிலும் ஆர் ஆத்தி இரண்டும் ஒன்றே என்று குறிக்கப்பட்டுள்ளது என்பதாலேயே இரண்டும் வெவ்வேறு என்று தெளிவுபடுத்த வேண்டியதாயிற்று !

இதைப்போல மற்றொரு குழப்பம் வாகை என்பது பற்றியது. இது தூங்குமூஞ்சி மரத்தைக் குறிக்கும் என்று பல இடங்களில் குறிக்கப்பட்டுள்ளது. மரமும் இலையும் ஒன்றுபோல் காணப்படுவதே இந்த மயக்கத்திற்குக் காரணம். இவற்றின் பூக்களைக் கொண்டே இரண்டும் வெவ்வேறு மரவகை என்று அறியமுடியும் ! தூங்குகுஞ்சி பூக்கள் ஊதா நிறம் கலந்து இருக்கும். வாகைப் பூவோ முழுதும் வெண்மையாக இருக்கும்.

இன்னுமொரு குழப்பம் நெட்டிலிங்க மரம். பல இடங்களில் இதை அசோக மரம் என்று குறிக்கின்றனர். அது வேறு வகை மரம்; அசோக மரம் பற்றி பரவலாகத் தெரியாததே இதற்குக் காரணம்.

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: Old and new names of places

Post by arasi »

ஆம்! உலகத் தாவரங்கள் பலதும் குறித்து வரும் குழப்பம் தான் இது!
உதாரணமாக, Snow in the Mountain என்பதை எடுத்துக் கொள்வோம்....
1: Aegopodium
2: euphorbia marginata
3: Cerastrium.

And one retired professional gardner exclaims: these blasted

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: Old and new names of places

Post by arasi »

ஆம்! உலகத் தாவரங்கள் பலதும் குறித்து வரும் குழப்பம் தான் இது!
உதாரணமாக, Snow in the Mountain என்பதை எடுத்துக் கொள்வோம்....
1: Aegopodium
2: Euphorbia marginata
3: Cerastrium.

And one retired professional gardener exclaims: these blasted common names :)

Popular names on the one hand describe them to us and capture our imagination, but they can also mislead us!

Post Reply