SECOND ANNIVERSARY ON 13/11/2015 The Tamil Nadu Music and Fine Arts University

To teach and learn Indian classical music
Post Reply
kvchellappa
Posts: 3598
Joined: 04 Aug 2011, 13:54

SECOND ANNIVERSARY ON 13/11/2015 The Tamil Nadu Music and Fine Arts University

Post by kvchellappa »

SECOND ANNIVERSARY ON 13/11/2015
The Tamil Nadu Music and Fine Arts University has entered its third year enjoying stupendous all round success and growth with the Grace and blessings of Maha Periyava and Goddess Kamakshi- Vice-Chancellor, Veena E.Gayathri.
Mannargudi Sitaraman Srinivasan's photo.
Mannargudi Sitaraman Srinivasan's photo.
Mannargudi Sitaraman Srinivasan's photo.
Mannargudi Sitaraman Srinivasan's photo.
Mannargudi Sitaraman Srinivasan added 4 new photos.
June 23 ·

மகா பெரியவரை சந்தித்த வீணை காயத்ரி…


என்னுடைய 11-வது வயதில், காஞ்சி பெரியவர் முன்னிலையில் வீணை வாசிக்க அழைப்பு வந்தது. காஞ்சிப் பெரியவர், ‘சந்திரமௌலீஸ்வரர்’ பூஜை பண்ணும் போது நான் வாசிக்க வேண்டும். யாருக்குமே கிடைக்காத அரிய பாக்கியம் அது. கச்சேரிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு எனக்கு டைஃபாய்டு காய்ச்சல் வந்து படுத்த படுக்கையானேன். என்னால் நிமிர்ந்துகூட உட்கார முடியவில்லை. இருந்தும், மடத்தில் உள்ளவர்கள், ‘ஒரு பாட்டையாவது வாசிக்கச் சொல்லுங்கள்!’ என்றனர். என் பெற்றோருக்கும் எனக்கும் மறுப்பு சொல்ல மனம் இல்லை. அன்று, என்னையும் அறியாமல், அரை மணி நேரம் தொடர்ந்து வாசித்தேன். கிளம்பும் நேரத்தில், மகா பெரியவர் ஓரிக்கைக்கும் வந்து வாசிக்கக் கூப்பிட்டு அனுப்பினார். அன்று சுவாமிகள் மௌன விரதம். இரண்டு கால்களையும் மடித்துவைத்தபடி என் வாசிப்பை அவர் கண் மூடி ரசித்துக் கேட்டது இன்றும் எனக்குப் பசுமையாக நினைவில் இருக்கிறது. திடீரென என்னைப் பார்த்து வாசிப்பை நிறுத்தச் சொல்லி கையால் சைகை செய்தார்.
15 நிமிடங்கள் கழித்து ஏலக்காய், லவங்கம் பதித்த சந்தனத்தால் ஆன ஓம்காரக் கிரீடத்தைக் கொடுத்து, அதை என் தலையில் அணியச்செய்து வாசிக்கச் சொன்னார். நானும் வாசித்தேன். ‘இது போல பல கிரீடங்கள் உனக்கு வரும்’ என்று எழுதிக் காட்டினார். அன்று பெரியவாளின் அருள்வாக்குதான் இன்று என் புகழ், பதவிக்கும் மகுடம் சூட்டி இருக்கிறது. அந்த நொடியிலேயே, என் உடல்நிலை தேறி, உற்சாகமாக இருப்பதைப் போன்று உணர்ந்தேன். 35 வருடங்களாக சுவாமிகள் தந்த கிரீடத்தைப் பத்திரமாகப் பராமரித்து வருகிறேன். கிரீடத்தைப் பார்க்கும்போதெல்லாம் பழைய நினைவுகள் என்னைப் பரவசப்படுத்தும

Post Reply