Kannan Kadhai Amudham (in tamil script)

Post Reply
sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

Started to write something about aNNan after having written on thangai. marugan has to wait for some more time or He has to make me more productive.

Loosely based on http://vedabase.net/sb/10/en

So far could write only 4 verses.

காப்பு (கட்டளைக் கலித்துறை)

பார்த்தன் தனக்குத் தவமுனி வர்போற் றுபாற்கடலான்
தூர்த்தர் தனையழித் தாழியான் தானிறங் கிச்சமர்க்கு
ஆர்த்தே புறப்படு இக்கண மேயென செப்பியானை
வார்த்தை பலகோர்த் துயான்பா டவேழமே செய்துணையே

தேமா புளிமா கருவிளம் தேமா கருவிளங்காய்
தேமா கருவிளம் கூவிளம் கூவிளம் கூவிளங்காய்
தேமா கருவிளம் கூவிளம் கூவிளம் கூவிளங்காய்
தேமா புளிமா புளிமா கருவிளம் கூவிளங்காய்

குறை பொறுத்தருள வேண்டல் (பலவிகற்ப பஃறொடை வெண்பா)

முகில்நிறத் தானிப் புவியில் இறங்கி
அகில்குழம் பும்சந் தனமும் தான்தரித்துக்
கோதை யரும்ஞா னியரும் நெஞ்சுவக்க
போதை அளித்த தொருகதை யைத்திரு
மாலோன் யதுகுலத்தில் வந்தகா தையினை
மேலோர் பலரிருக்க யானும் சொலப்போந்தேன்
நற்ற மிழறிவு மிக்காரும் தக்காரும்
குற்றம் பொறுருத்தருள் வீர்

கருவிளம் தேமா புளிமா புளிமா
கருவிளம் தேமா புளிமா கூவிளங்காய்
தேமா புளிமா புளிமா கூவிளங்காய்
தேமா புளிமா கருவிளம் கூவிளம்
தேமா கருவிளங்காய் கூவிளம் கூவிளம்
தேமா கருவிளங்காய் தேமா புளிமாங்காய்
தேமா கருவிளம் தேமாங்காய் தேமாங்காய்
தேமா கருவிளம் நாள்

காண்டம் ஒன்று (கட்டளைக் கலித்துறை)

பாண்டு குலமுதித் தான்பரீட் சித்தவன் கேட்டகேள்வி
தாண்டவ ருத்திரன் போற்சடை யன்வியா சன்மகற்குத்
தேனென தித்திக் கநன்றி நவின்று கலிதனிலே
வானெட் டியதுயர் தீர்ப்பான் திருடன் கதையுரைத்தே (௧)

தேமா கருவிளம் கூவிளம் கூவிளம் கூவிளங்காய்
கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளங்காய்
கூவிளம் தேமா புளிமா புளிமா கருவிளங்காய்
தேமா கருவிளம் தேமா புளிமா கருவிளங்காய் (௧)

கூறுவீர் என்றுரைத் தார்கூ றினார்தன் செவிமடுத்தார்
பேறுமிக் குற்றார் வசுதே வனவன் மகற்கதையே
மேற்கீழ் நடுஉல கெல்லாம் முராரிதன் கால்நகத்தில்
தோற்றிய கங்கை யவள்தான் புனிதப் படுத்துமாறே (௨)

கூவிளம் கூவிளம் தேமா புளிமா கருவிளங்காய்
கூவிளம் தேமா புளிமா புளிமா கருவிளங்காய்
தேமா கருவிளம் தேமா கருவிளம் கூவிளங்காய்
கூவிளம் தேமா புளிமா புளிமா கருவிளங்காய் (௨)


It is going to be quite a loooooooooooooooooooong bumpy ride, so if you have time and patience, please join .

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

two more verses

கொண்டாள் பசுஉரு வேபூ மகள்விழி நீர்பெருக
வெண்டா மரைமெல் லியலாள் பதியைச் சரணடைந்து
உண்டா னபோர்ப்படை மன்னரு ருக்கொள் அரக்கரால்தன்
திண்டாட் டமதிக மாய்ப்போ னதாய்த்தான் புலம்பினாளே (௩)

தேமா கருவிளம் தேமா கருவிளம் கூவிளங்காய்
தேமா புளிமா புளிமா புளிமா புளிமா கருவிளங்காய்
தேமா கருவிளம் கூவிளம் தேமா கருவிளங்காய்
தேமா கருவிளம் தேமா புளிமா கருவிளங்காய் (௩)

பிரமனும் தேவரும் அச்சிவ னும்பூ மகளுமிக
விரைவாய்த் தவளநி றப்பாற் கடலடைந் தேயரவின்
அணையா னைமூ வுலகளந் தானைக் கரியவனை
வினையறுப் பானை மறைகொண் டுபாடித் துதித்தனரே (௪)

கருவிளம் கூவிளம் கூவிளம் தேமா கருவிளங்காய்
புளிமா கருவிளம் தேமா கருவிளம் கூவிளங்காய்
புளிமா தேமா கருவிளம் தேமா கருவிளங்காய்
கருவிளம் தேமா புளிமா புளிமா கருவிளங்காய் (௪)
Last edited by sankark on 07 Feb 2012, 09:34, edited 1 time in total.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by cmlover »

Bravo!
சற்றே பொறுத்த ரசிகர் குறை தீர
உற்றே மாலவன் புகழ் சங்கரனார்
நற்றேனொழுக தமிழ்க் கவிதை மழை
ஊற்றேயென புறப் பட்டதே!

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by arasi »

puRappaTTadu perugaTTum--
perungavidai idu, perum paNiyumE!
poRumaiyuDan kAttiruppOm,
perumaiyuDan kETpOm, perumidam koLvOm!
Last edited by arasi on 07 Feb 2012, 00:24, edited 1 time in total.

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sridhar_ranga »

பாகவதச் சாற்றைப் பிழிந்தே நமக்களிப்பார்
பாகெனத் தித்திக்கும் பைந்தமிழில் சங்கரவர்
தாகமது தீரத் தினமும் பருகிடுவோம்
மேக நிறத்தவன் மாண்பு

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by msm »

sankark wrote:Started to write something about aNNan after having written on thangai. marugan has to wait for some more time or He has to make me more productive.

Loosely based on http://vedabase.net/sb/10/en

So far could write only 4 verses.
கண்ணன் கதையின் கருத்தாழம் கேட்டவர்க்(கு)
திண்ணம் திகட்டாதத் தேன்.

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

two more verses..

மோனத் திருந்த பிரமனுக் குத்திரு மாலவன்சொல்
வானத் திருந்து செவிசே ரகண்திறந் தேகூறினார்
தானே அறிந்திருந் தான்நம் கவலைத் திருவணியன்
தானே வருவான் ஒருமீ னுருவே எடுத்தவனே (௫)

தேமா புளிமா கருவிளம் கூவிளம் கூவிளங்காய்
தேமா புளிமா புளிமா கருவிளம் கூவிளங்காய்
தேமா கருவிளம் தேமா புளிமா கருவிளங்காய்
தேமா புளிமா புளிமா புளிமா கருவிளங்காய் (௫)

தானே வருகிறான் தன்னுடை மாயைத் தொடர்ந்துவர
மானேந் தியமழு வோனும் பிறதே வருமவனுக்
காளா கிடதான் பணித்தான் நிலமக ளைப்படுத்தும்
தாளா ததுன்பம் தனைய டியோடு அழித்திடவே (௬)

தேமா கருவிளம் கூவிளம் தேமா கருவிளங்காய்
தேமா கருவிளம் தேமா புளிமா கருவிளங்காய்
தேமா புளிமா புளிமா கருவிளம் கூவிளங்காய்
தேமா புளிமா புளிமா புளிமா கருவிளங்காய் (௬)

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

படுத்திருக் கும்பாம் புவரும் அவனுட னேதுணைக்கே
அடுத்தவ ரைக்காத் திடும்ப லதேவ னெனப்பகன்றுத்
தன்னுல கில்தான் புகுந்தார் திருமால் வயிறுதித்தான்
கன்னல் மொழிகேட் டுவானவ ரும்தான் மகிழ்ந்தனரே (௭)

கருவிளம் தேமா புளிமா கருவிளம் கூவிளங்காய்
கருவிளம் தேமா புளிமா புளிமா கருவிளங்காய்
கூவிளம் தேமா புளிமா புளிமா கருவிளங்காய்
தேமா புளிமா கருவிளம் தேமா கருவிளங்காய் (௭)

யதுகுலத் துக்கோ மகன்வசு தேவன் குலமகளை
மதுசொரிப் பூவணிந் தாள்தே வகியைத் தான்மணந்து
பல்யா னைப்பரி மற்றும் பரிசுகள் பின்தொடர
இல்நோக் கிஇச்செல் லலானான் நனிபெருந் தேர்தனிலே (௮)

கருவிளம் தேமா கருவிளம் தேமா கருவிளங்காய்
கருவிளம் கூவிளம் தேமா புளிமா கூவிளங்காய்
தேமா கூவிளம் தேமா கருவிளம் கூவிளங்காய்
தேமா புளிமா புளிமா கருவிளம் கூவிளங்காய் (௮)

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sridhar_ranga »

இல்நோக் கிஇச்செல் லலானான்
Is that a case of 'uyir alabeDai' ?

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

yes, thats right. It is seyyuLisai aLabedai as well. If that aLabedai isn't there thalai is defective.

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

தேவகன் தன்னு யிரைத்தாங் கியதே ரதைச்செலுத்த
சேவக னாயவள் அண்ணனே தான்வர மாநிலத்து
மாந்தர் அனைவரும் வாழ்த்தி ஒலியெழுப் பார்மனத்தே
வேந்தர் மகளைப் பிரிய மனமின் றிநின்றனரே (௯)

கூவிளம் தேமா புளிமா புளிமா கருவிளங்காய்
கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளங்காய்
தேமா கருவிளம் தேமா கருவிளம் கூவிளங்காய்
தேமா புளிமா புளிமா புளிமா கருவிளங்காய் (௯)

அவ்வம யம்தனக் கோருட லில்லாக் குரல்பிறந்து
அவ்வம யம்உட லில்லாக் குரலொன் றுமூடனேகேள்
இவ்வம யம்பய மின்றிநீ யிருக்கவோர் நாளிவட்கு
எட்டா வதாய்ப்பிறக் கும்மக வாலே உயிர்துறப்பாய்
கிட்டா துனக்கிவ் வரசெனத் தானாங் குசெப்பியதே (௰)

கூவிளம் கூவிளம் கூவிளம் தேமா கருவிளங்காய்
கூவிளம் கூவிளம் தேமா புளிமா கருவிளங்காய்
கூவிளம் கூவிளம் கூவிளம் கருவிளம் கூவிளங்காய்
தேமா கருவிளம் கூவிளம் தேமா கருவிளங்காய்
தேமா புளிமா கருவிளம் தேமா கருவிளங்காய் (௰)

12/2 - தளை தட்டிய அடியைச் சரியாக்கினது

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

நற்குணம் நல்லவை ஏதுமில் லாக்கம் சனதுகேட்டு
நற்குணம் நல்லவை தங்கிய தங்கை குலக்கொடியைத்
திக்கெட் டதிரவார்த் துக்கருங் கூந்தலைப் பற்றியேதன்
கைக்கெட் டியவளைக் கொல்லவோர் கூர்பெரும் வாளெடுத்தே (௧௧)

கூவிளம் கூவிளம் கூவிளம் தேமா கருவிளங்காய்
கூவிளம் கூவிளம் கூவிளம் தேமா கருவிளங்காய்
தேமா கருவிளம் கூவிளம் கூவிளம் கூவிளங்காய்
தேமா கருவிளம் கூவிளம் கூவிளம் கூவிளங்காய் (௧௧)

அதிர்ந்தன மாக்களே பொங்கின மாகடல் கண்கலங்கி
விதிர்த்தனர் மாந்தரே சோர்ந்தனர் தேவரே காருருவன்
வருவது பொய்க்குமோ தன்குறை தீருமோ என்றதிர்ந்தாள்
திருமகள் கேள்வனே ஓர்முறை தாங்கினப் பூமகளே (௧௨)

கருவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளங்காய்
கருவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளங்காய்
கருவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளங்காய்
கருவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளங்காய் (௧௨)

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sridhar_ranga »

Good going...waiting to read more about the arrival & லீலைகள் of மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம் கடந்தான்

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

occupied otherwise, so just one more today..

மைத்துனன் மீக்கடும் சீற்றமே கண்ட மருகனும்தன்
கைத்தலம் கூப்பியே கூறினான் கூற்று வனிடமென்றன்
மனைவியைச் சேர்த்தியோ மாந்தரும் மெச்சுமோ பெண்ணிவளிம்
மனைதனில் வாழ்ந்தவள் சோதரன் உன்னுடன் தான்பிறந்தே (௧௩)

கூவிளம் கூவிளம் கூவிளம் தேமா கருவிளங்காய்
கூவிளம் கூவிளம் கூவிளம் தேமா கருவிளங்காய்
கருவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளங்காய்
கருவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளங்காய் (௧௩)

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

and two more

ஈங்கிப் பிறப்பற வேறோர் பிறப்பே விதிவகையே
தாங்கிப் பலப்பல பாவம் களைந்து பிறப்பறவே
ஏங்கித் தினந்தொறும் சோர்ந்துத் தவிக்கும் மனிதருக்கு
ஓங்கும் துயரற நற்சிந் தனையே நலமதன்றே (௧௪)

தேமா கருவிளம் தேமா புளிமா கருவிளங்காய்
தேமா கருவிளம் தேமா புளிமா கருவிளங்காய்
தேமா கருவிளம் தேமா புளிமா கருவிளங்காய்
தேமா கருவிளம் தேமா புளிமா கருவிளங்காய் (௧௪)

என்று பலப்பல வாய்வசு தேவன் மொழிந்துமவன்
கொன்று விடுவதே தீர்வென நின்றான் வழியறியாக்
கொழுநனோ தேவகி இன்னுயிர் காக்க மனமுடைந்து
விழுந்தனன் தன்மக வைத்தரு வேனெனச் சொன்னவாறே (௧௫)

தேமா கருவிளம் கூவிளம் தேமா கருவிளங்காய்
தேமா கருவிளம் கூவிளம் தேமா கருவிளங்காய்
கருவிளம் கூவிளம் கூவிளம் தேமா கருவிளங்காய்
கருவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளங்காய் (௧௫)

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by msm »

sankark wrote:and two more

ஈங்கிப் பிறப்பற வேறோர் பிறப்பே விதிவகையே
தாங்கிப் பலப்பல பாவம் களைந்து பிறப்பறவே
ஏங்கித் தினந்தொறும் சோர்ந்துத் தவிக்கும் மனிதருக்கு
ஓங்கும் துயரற நற்சிந் தனையே நலமதன்றே (௧௪)

என்று பலப்பல வாய்வசு தேவன் மொழிந்துமவன்
கொன்று விடுவதே தீர்வென நின்றான் வழியறியாக்
கொழுநனோ தேவகி இன்னுயிர் காக்க மனமுடைந்து
விழுந்தனன் தன்மக வைத்தரு வேனெனச் சொன்னவாறே (௧௫)
Sankar avargaLE: Your verses are coming up very well. Keep it going. Awaiting the arrival of 8th Child! :-)
Using same edhugai in all 4 lines will make it compliant to kattaLai kalitthuRai rules.

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by msm »

I am posting a couple popular kattaLai verses in the other thread - so as not to disturb the flow of Sri. Sankar with this Kannan Kadhai.

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

இல்லாள் அகத்திருந் தால்மற் றதெல்லாம் தொடரவரும்
இல்லாள் அழிந்தொழிந் தால்வாழ் வதுவோ எனவயர்ந்தப்
புல்லன் நயவஞ் சகனைப் புகழ்ந்தான் மனத்துயரை
இல்லை எனவொதுக் கித்தன் முகத்தில் சிரிப்புடனே (௧௬)

தேமா கருவிளம் தேமா புளிமா கருவிளங்காய்
தேமா கருவிளம் தேமா புளிமா கருவிளங்காய்
தேமா புளிமா புளிமா புளிமா கருவிளங்காய்
தேமா கருவிளம் தேமா புளிமா கருவிளங்காய் (௧௬)

மருகன் மொழிகேட் டவன்மைத் துனன்தான் மனமிளகி
உருவா னசினம் தவிர்ந்தான் வருமந் தநாலிரண்டாம்
கருவில் உதிக்கின் றபிள்ளை தருஞ்சா வதைத்தவிர்க்கத்
தருவேன் பிறந்த வுடன்தான் மரணம் எனநினைத்தே (௧௭)

புளிமா புளிமா புளிமா புளிமா கருவிளங்காய்
புளிமா புளிமா புளிமா புளிமா கருவிளங்காய்
புளிமா புளிமா புளிமா புளிமா கருவிளங்காய்
புளிமா புளிமா புளிமா புளிமா கருவிளங்காய் (௧௭)

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

Been totally swamped with work and sundry stuff over the last week. So, Kannan is in the wait queue for now :(

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

ஈன்றாள் குலக்கொடி தன்முதல் பிள்ளை யதுமகனும்
மூன்றுல கும்தா னரற்றக் கொடுத்தான் மனத்துயரம்
தோன்றா மறைத்தே கொடியவ னோஇம் மகவெனக்கு
வேண்டாம் எடுத்துப் பிழைத்திடு வாயெனத் தான்விடுத்தே (௧௮)

தேமா கருவிளம் கூவிளம் தேமா கருவிளங்காய்
கூவிளம் தேமா புளிமா புளிமா கருவிளங்காய்
தேமா புளிமா கருவிளம் தேமா கருவிளங்காய்
தேமா புளிமா கருவிளம் கூவிளம் கூவிளங்காய் (௧௮)

நிலைக்குமோ புல்லன் கொடுத்தசொல் தானே ஒருகலகக்
கலைக்கே பிறந்தான் பிரமன் மகன்றன் உரையினாலே
தலைமகன் பின்பிறந் தாரை வருயிர் பறித்தவனே
மலையொத் ததன்சிறு மைநனி நன்கு பெருக்கினானே (௧௯)

கருவிளம் தேமா கருவிளம் தேமா கருவிளங்காய்
புளிமா புளிமா புளிமா புளிமா கருவிளங்காய்
கருவிளம் கூவிளம் தேமா புளிமா கருவிளங்காய்
புளிமா கருவிளம் கூவிளம் தேமா கருவிளங்காய் (௧௯)

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by cmlover »

கம்ஸா!
ஏன் இந்த கொலவெறி கொலவெறிடா...

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

with this we come to the closure of chapter 1 of canto 10 of Srimad Bhagavatham.

தங்கை அவள்மனத் தங்கம் இருவர் கொடுஞ்சிறையில்
தங்கத் திருமால் ஒருநாள் வதஞ்செய் தகாலநேமி
சங்கும் ஒருசக் கரமும் தரித்தான் தனையழிப்பேன்
இங்கே எனவுரைத் துச்சிறை வைத்தான் தனப்பனையே (௨௦)

தேமா கருவிளம் தேமா புளிமா கருவிளங்காய்
தேமா புளிமா புளிமா புளிமா கருவிளங்காய்
தேமா புளிமா புளிமா புளிமா கருவிளங்காய்
தேமா கருவிளம் கூவிளம் தேமா கருவிளங்காய் (௨௦)

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

காண்டம் இரண்டு (நேரிசை வெண்பா)

கட்டுக் கடங்காத கஞ்சனவன் தொல்லைகள்
விட்டொழித்து யாதவர் கும்பலாய்க் – கட்டிக்
குடிபெயர்ந்தார் தன்னூர் தனைவிடுத்து நாகம்
இடிகேட்டு ஓடினார்ப் போல் (௨௧)

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

totally occupied otherwise, so going slow on this. Just one more.

குறையில்லாத் தேவகியின் மூவிரண்டு வாரிசுகள்
நிறைந்ததோர் வாழ்வின்றிப் போகப் – மறைபோற்றும்
காருருவன் ஓரங்கம் ஏழாவ தாய்க்கருவில்
ஓருருவாய்த் தான்புகுந்த தே (௨௨)

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

மோகப் பிறப்பறுக்கும் முக்கண்ணன் உள்ளுறையும்
மேக நிறத்தான் யதுகுலத்தை – நோகச்செய்
துன்பக் கலிதீர்க்க தன்யோக மாயைக்கு
இன்பப் பணியும்தந் தான் (௨௩)

செல்வாய் உடனேநீ பேரழகுப் பெண்மயில்
மெல்லியலாள் தேவகி தாங்கியதோர் – சூல்தனை
வசுதேவன் ஓர்மனை உரோகினிக்கு மாற்றிச்
சிசுவையே காத்திருப் பாய் (௨௪)

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

யானும் வருமென் அறுகலைகள் நன்கிலங்கத்
தேனும் நறும்பாலும் பொங்குமக் – கோனுயர்
நந்தகோ பனாளும் திருநாட்டில் நீயசோதை
உந்தியிலு தித்திடு வாய் (௨௫)

நாரணி ஈசானி துர்க்கை கிருட்டிணை
சாரதா மாயா எனமாந்தர் – பாரதில்
போற்றிப் புகழ்ந்திடு வாரவர் நன்மைநீ
ஏற்றிப் பெருக்கிடு வாய் (௨௬)

அண்டத்தி னுள்ளுறை ஆண்டவன் சொல்கேட்டு
விண்டால டங்காத பேரொளியாள் – கொண்டாள்
களியே வலம்செய்து சென்றாள் விரைந்து
வளியின் மிகக்க டுகி (௨௭)

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

தேவகி தாங்கிய சூலாங்கே மாறிட
மேவிய துயரினா லேமக்கள் – கேவினர்
சோம்பினர் ஐயோ மகவிழந் தாலென்று
தேம்பினர் கண்ணீ ரொடே (௨௮)

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

மகவிழந்த மாதின் மணவாளன் தன்னுள்
ககனத்து மேவெழிலி வண்ணன் – புகவாங்கே
ஆதவன் போலொளிர்ந் தான்புல னெட்டாத
மாதவத் தானாயா னான் (௨௯)

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

ஈரிரண்டு வேதப் பொருளான் கருவாக
ஈரிரண்டும் மேலாறு திங்களுமச் – சீரிலங்கு
நேரிழையாள் உள்ளிருக்க வெஞ்சிறைக் கோட்டத்துக்
காரிருளும் தானகன்ற தே (௩௦)

ஞானியர்க்கும் யோகியர்க்கும் எட்டாத மாயனைத்தன்
யோனியிலே தாங்குமொரு பேறுடைத்த – மேனியொரு
நீறுபூத்த தீயெனவே தானிருக்க தன்புளகம்
வேறுயார்க்கும் சொல்லாநின் றாள் (௩௧)

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

மிக்கொளியும் மீவனப்பும் கொண்டதன் தங்கையுள்
சக்கரமும் சங்குமேந்து மாலவனே – புக்கினான்
என்றுணர்ந்த கஞ்சன் திருமாலால் தானிறப்போம்
என்றயர்ந்து சோர்ந்த னனே (௩௨)

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by cmlover »

The number 30 should be labelled (௩0) as much as
20 as (௨0 ) etc.,
These last few ones simply sparkle..
Going good! Keep up...

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

cmlover - the 30th stanza already shows up as (௩௦) when I view.

வாமனனாய் வந்தன்று மாபலியின் கொட்டம்தீர்
மாமலராள் மார்பனைத் தாங்குமத் - தாமரை
நீள்விழியாள் ஆவிதனைப் போக்கத்தன் பெற்றிமிகு
தோள்வலியும் தூசா குமே (௩௩)

வாமபாகம் வவ்வியவள் மூத்தவனை அன்றொருநாள்
கோமகன்கள் வாழ்வழித்த கைபரசு - ராமனைத்
தாங்கும் உடன்பிறந்தாள் வாழ்வொழிக்கத் தன்வாணாள்
தீங்குற்றுத் தேய்வா குமே (௩௪)

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by cmlover »

Very beautiful and erudite! The reference to lOkamAyA is too subtle and may need some explanations.
The second one definitely...
Who is the மூத்தவன ?

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

who else but our hero - uma's (வாமபாகம் வவ்வியவள்) elder brother (மூத்தவன்)..

அந்ததாம செல்லுமே என்னான்மா ஓருதரம்
வந்தவளை யான்கொல்ல மாமன்யான் – மந்தாதரம்
தாங்கியவன் வந்தவுடன் தீர்ப்பேன் எனவெண்ணி
நீங்கினான் மாஉபேருழப்ப மே (௩௫)

10/4: changed மந்தாரம் to மந்தரம்
Last edited by sankark on 10 Apr 2012, 08:09, edited 2 times in total.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by cmlover »

Shouldn't it be 'மந்தரம்' ?

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

அரசவையில் தன்னறையில் எங்கேயும் எப்போதும்
குரக்கரசன் உயிர்பறித்தான்வாழ்வொழித்தான் தன்னை – மறப்பின்றி
நெஞ்சுருகும் பத்தரைத் தானொத்தான் கல்லொத்த
நெஞ்சுடைத்த கஞ்சனு மே (௩௬)

12/4 - தளை தட்டியதை சரி செய்தது
Last edited by sankark on 12 Apr 2012, 08:56, edited 1 time in total.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by cmlover »

குரக்கரசன் = வாலி
அரக்கரசன் = இராவணன்
the latter may fit betterr! But the choice is yours.
The comparison with பத்தர் is very nice (suggestive of his salvation later!)

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

cml - thought about that. arakkarasan will fit not only rama but also narasimha. so i chose kurakkarasan to point specifically to rama avatharam.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by cmlover »

sankar
There is a subtle difference..
HiraNya was an Asura whereas RavaNa was a Rakshasa (அரக்கன்).
Both are not the same!

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

புரமெரித்தான் நான்முகனும் நாரதனும் வந்தார்
உரகமதன் மேலுறங்கும் யார்க்கும் – வரதனென்று
பேரெடுத்த மாலவனைப் போற்றிடவே ஊழியிலே
பாரெடுத்துக் காத்த வனை (௩௭)

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

cmlover - now you have made me curious to go readup on the subtleties. isn't ravana a brahmana (by birth) though - didn't rama perform some pariharam for brahmahatthi dosha?

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by cmlover »

Ravana was the son of Vishravas ( a brahmin - grandson of Brahma) through kaikesi (the daughter of thATakai, a rAkshasi). So he was a brahmin/rakshasa..
HiraNyakashipu was born Asura through the curse to Kashyapa and Diti(the mother of all Asuras); so he is brahmin/Asura....

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

quite a lot of itihasa information. so rama killed grandma & grandson with one arrow each :)

முச்செயலும் நின்செயலே மூவுலகும் நீயலையோ
நிச்சயமே நித்தியமே சத்தியமே – இச்சகத்தின்
காரணனே உள்ளுறையே மாறிலியே தேசுமிகு
பூரணனே காஎமை யே (௩௮)

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by cmlover »

...and don't forget the uncles (Maricha & Subahu) as well as brother (Kumbhakarna) and half brothers (Khara, Dushna) as well as son (Indrajit (by Lakshmana)) - basically the whole clan!

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

Sorry folks. You may have to wait a little longer for the next installments.

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

I am still struggling to get to the core idea of the following verses from http://vedabase.net/sb/10/2/en. Help much appreciated.

SB 10.2.27: The body [the total body and the individual body are of the same composition] may figuratively be called "the original tree." From this tree, which fully depends on the ground of material nature, come two kinds of fruit — the enjoyment of happiness and the suffering of distress. The cause of the tree, forming its three roots, is association with the three modes of material nature — goodness, passion and ignorance. The fruits of bodily happiness have four tastes — religiosity, economic development, sense gratification and liberation — which are experienced through five senses for acquiring knowledge in the midst of six circumstances: lamentation, illusion, old age, death, hunger and thirst. The seven layers of bark covering the tree are skin, blood, muscle, fat, bone, marrow and semen, and the eight branches of the tree are the five gross and three subtle elements — earth, water, fire, air, ether, mind, intelligence and false ego. The tree of the body has nine hollows — the eyes, the ears, the nostrils, the mouth, the rectum and the genitals — and ten leaves, the ten airs passing through the body. In this tree of the body there are two birds: one is the individual soul, and the other is the Supersoul.

SB 10.2.28: The efficient cause of this material world, manifested with its many varieties as the original tree, is You, O Lord. You are also the maintainer of this material world, and after annihilation You are the one in whom everything is conserved. Those who are covered by Your external energy cannot see You behind this manifestation, but theirs is not the vision of learned devotees.

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

மகிழ்வென்றும் துன்பென்றும் ஈர்வகை யானபழம்
முகிழ்க்கின்ற மாமரத்தின் வேராய்த் – திகழ்மூன்றும்
நன்னெறியே ஆசையே முத்திக்கி டையூறே
திண்ணமிது நின்மாயை யே (௩௯)

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by cmlover »

I agree this number game is a tough philosophical Nut to crack!
Good start!

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by cmlover »

It may be more accurate if you replace
மாமரத்தின் with சரீரத்தின் to refer to the host "total body"....
and சரீரம் is also கட்டை, symbolically the tree...

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

CML - சரீரத்தின் will not fit the thalai rules (காய் முன் நேர்)

இகவின்பம் நாற்சுவை தானுடைத் தாங்கே
தகவான ஐம்புலன் தன்னால் - ககனத்து
மாந்தர் இருமூன்று நேரத்தே துய்ப்பரிது
தேர்ந்தார் மனத்துறை வோய் (௪௦)

Post Reply