Deepavali Purchase Choice

Post Reply
venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Deepavali Purchase Choice

Post by venkatakailasam »

போத்தீஸ், குமரன், சரவணா, நல்லி கடைக்கு போலாம் வாங்கோ !!
ஆர்.எம் கேவி இல்லையா??

என்னங்க கடைக்காரரே கிளி சீட்டு எடுத்து போடறா மாதிரி ஒவ்வொரு அலமாரிலேர்ந்தும் ஒன்னேஒன்னு எடுத்து போடறீங்க...அப்டியே சீட்டுக்கட்டுல டிக்ளேர் பண்ணி போடற சீட்டுக்கள் மாத்ரி அள்ளி விரிச்சு போடுங்க

காட்டன் -.சவுத் காட்டன்,நார்த் காட்டன் வெஸ்ட் காட்டன் இந்தியாவின் மொத்த பஞ்சுக்கும் இந்தக் கடைல பஞ்சமே இல்ல ...

ஆனாக் கஞ்சி போடனும்..இல்லாட்டி கட்டின்னா மோர்க்குழம்பாட்டம் ஆயிடும்..வேணாம் நெஷ்டு

பட்டு- பல விதப் பட்டு துட்டுக்கேத்தமாதிரி

ஆனாக் கல்யாண சீசனுக்கு மட்டும் தான் பீரோவில் இருந்து வெளியே வரும்..வேணாம் நெஷ்டு

ஷிஃப்ஃபான் : நல்லா ஃபால் ஆகும்...

அட ஃபால் ஆகாம இருக்கத் தான் புடவை .....வேணாம் நெஷ்டு

ப்ரின்டட் பட்டு :

நல்லாத் தான் இருக்கு..ஆனா கெழ்வீஸ் சாய்ஸ்..இன்னும் 80 வருஷம் இருக்கு எனக்கு ..வேணாம் நெஷ்டு

பனாரஸ் பட்டு

அய்யோ கட்டினா ஒன்ற டன் வெயிட்..யார்கிட்ட...இதைத் தாங்க மல்யுத்த மல்லேஸ்வரியாலத் தான் முடியும் ..வேணாம் நெஷ்டு

டிஷ்யூ சாரி

கைதொடைக்குற டிஷ்யூ கூட இவ்ளோ டெலிகேட் இல்லை..நடக்கும் போதே டர் டர் தான்... வேணாம் நெஷ்டு

ரா சில்க்

அடிக்குற வெய்யிலுக்கு ராவா வேர்க்கும் கலர் கலர் சாயங்களோடு வேர்க்கும் ..வேணாம் நெஷ்டு

கோட்டா

அதுக்கு என் பீரோல இல்லைக் கோட்டா..ஏற்கனவே அதான் அதிக ஆக்கிரம்பிப்பு..வேணாம். நெஷ்டு

கலம்காரி

கரகாட்டக் காரி மாதிரி இருக்கு ப்ரின்ட்ஸ்..வேணாம் நெஷ்டு

பாந்தினி

எனக்கு பாந்தமா இல்ல நீ..வேணாம் நெஷ்டு

மைசூர் சில்க்

புடவல ஒண்ணுமே இல்ல பர்சையும் ஒண்ணுமே இல்லாம ஆக்கிடும் அளவுக்கு விலை..வேணாம் நெஷ்டு

சில்க் காட்டன்

இந்த அரை குறை யே எப்பவும் வேணாம்....போட்டா ஜீன்ஸ் இல்லாட்டி புடவை அது என்ன சுடிதார்?..அது மாதிரி தான் இந்த சில்க் காட்டன் வேணாம் நெஷ்டு

இப்ப என்னதான் வேணும்..கடைல இருக்குற 2067634 புடவைகளையும் எடுத்து காட்டிட்டேன்

அதோ ..அதோ..அந்த மூலைல செவப்பா ..
எங்கே எந்த மூலைல இருக்குற செவப்பு புடவை?

அது இல்ல..அந்த செவப்பா குண்டா ஒரு அம்மா நிக்கறாங்களே அவங்க கட்டிட்டு இருக்குறா மாதிரி தான் எனக்கு வேணும்....

arasi
Posts: 16794
Joined: 22 Jun 2006, 09:30

Re: Deepavali Purchase Choice

Post by arasi »

Venkatk,

arumai!
appaiDiyE paDam piDithIr, engO irukkum enakkum!

paNDigaikkup puDavai eDukkum pazhakkamillAda enakku idai innum adigamAgavE suvaikka muDindadu :)

thanjavooran
Posts: 2992
Joined: 03 Feb 2010, 04:44

Re: Deepavali Purchase Choice

Post by thanjavooran »

அருமையான உரையாடல். ரசித்தேன் மங்களம் மாமியை கேட்கலாம் என்றால் ஏன் கொஞ்ச நாளாக காணவில்லை.
தஞ்சாவூரான்
30 10 2013

Post Reply