Guru-குரு

Post Reply
venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Guru-குரு

Post by venkatakailasam »

வித்தையை யார் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ள முடியும். அதை குரு மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் போது மரத்திற்குப் பின்னால் மறைந்திருந்து கூடக் கற்றுக் கொள்ளலாம். ஆனால், மனப்பக்குவம் இல்லாதவன் கையில் ஒரு வித்தை வசப்படுமானால், அது மற்றவர்களுக்கு மட்டுமல்ல, சமயத்தில் அவனுக்கே தீமையை விளைவிக்கும்.

ஒரு நாள் கர்ணன் துரோணாச்சாரியரிடம் ஆவேசப்பட்டான். நீங்கள் ஏகலைவனுக்கு செய்தது மிகப் பெரிய கொடுமை, இதை விடக் கொடுமையான செயலை உலகில் யாரும் செய்தது கிடையாது. இனிச் செய்யவும் மாட்டார்கள் என்று துள்ளினான். துரோணர் சிரித்தார். கர்ணா நீ கருணையே வடிவானவன், தயை குணம் மிக்கவன் எனவே நீ எளிதில் உணர்ச்சிகளுக்கு வசப்பட்டு விடுவாய். உணர்ச்சி வசப்படுபவன் சிறந்த வீரனாக இருக்க முடியாது. இதை நீ முதலில் புரிந்து கொள். உனது இந்த இயல்புகளை மற்றவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். ஏகலைவனை விடச் சிறந்த குரு பக்தி உடையவன் உலகில் கிடையாது. அதை நானும் அறிவேன். அதை முன்னிட்டே அவனைக் காக்கும் பொருட்டே அந்தச் செயலை நான் செய்தேன்.

என்னைப் பார்ப்பதற்காக அவன் பாண்டவர்கள் பாடம் கற்கும் இடத்திற்கு வந்த பொழுது, பாண்டவர்களுடைய நாய் அவனைப் பார்த்துக் குரைத்து விட்டது. எனவே அதன் வாயைச் சுற்றிலும் தைக்கும்படியான ஒரு அஸ்திரத்தை அதன் மீது அவன் ஏவி விட்டான்.

அதைக் கண்ட அர்ஜுனன் இது என்ன அஸ்திரம் குருவே, எனக்கு இந்த வித்தையை நீங்கள் கற்றுத் தரவில்லையே என்று கேட்டான்.

நான் சொன்னேன் எனக்கு இது தெரியாது. இது யாருக்கும் நான் கற்றுத் தந்த வித்தையல்ல என்று.

பிறகு அனைவரும் நாயை முன்னே அனுப்பி பின் தொடர்ந்து அது யார் என்று தேடிப் போனோம். அங்கேதான் ஏகலைவன் என் சிலையை வைத்து பூஜை செய்து வித்தைகளைக் கற்றுக் கொண்டிருந்தான்.

அவன் ஏற்கனவே என்னிடம் வித்தை கற்றுத் தரும்படி கேட்டு வந்திருந்தான். நான் தம்பி ஒரு வேடனுக்குத் தேவையான அனைத்து வில் வித்தைகளும் உனக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. அது போதும். நான் அரச குமாரர்களுக்கு மட்டுமே கற்றுத் தருவேன் என்று சொல்லி அனுப்பி வைத்தேன்.

அதற்குப் பிறகே அவன் என் சிலையை வைத்து மானசீகமாக குருவாகக் கொண்டு பூஜைகள் செய்து எல்லா வித்தைகளையும் அடைந்திருக்கிறான். அவன் குரு பக்திக்கு நிகர் எவருமேயில்லை.

ஆனால், தெய்வங்களிடம் தவமிருந்து வரமாகப் பெற்ற அஸ்திர வித்தையை கேவலம் ஒரு நாயிடத்தினில் ஏவி விடுகிறான் என்றால், அந்த வித்தைக்குத்தான் என்ன மதிப்பிருக்க முடியும் ? அது ஒரு கல்லை வீசினால் ஓடி விடும். ஒரு கம்பை கையிலெடுத்தால் காணாமல் போகும். அதனிடத்தில் போய் அவன் உயர்ந்த அஸ்திர வித்தையைக் காட்டிய காரணத்தினால் இத்தகைய உயர்ந்த அஸ்திரங்களை கையாளுவதற்கு அவன் தகுதியற்றவன் என்பதை உணர்ந்து வேறு வழியில்லாமல் அவன் கட்டை விரலைக் குரு காணிக்கையாகக் கேட்டேன்.

எனவே வித்தைகள் யார் கைகளில் இருக்க வேண்டுமோ அவர்களிடம்தான் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அந்த வித்தைகளுக்கு மதிப்பு.

இதற்கான மூலக் காரணம் என்னவென்றால், குரு வித்தைகளைக் கற்றுத் தருவதற்கு முன் தரும் மனப் பயிற்சிகளை அவன் அறிந்திருக்கவில்லை. அவன் தனது சிறந்த குரு பக்தியால் நேரடியாக வித்தைகள் கைவரப் பெற்று விட்டான். அவற்றைக் கையாளக் கூடிய உயர்ந்த நோக்கமும், பண்பும் அவனிடத்தில் இல்லை. ஒரு வேடனுக்குரிய கொடிய இயல்பே அவனிடத்தில் நிறைந்திருந்தது. எனவே பக்குவமில்லாத அவனிடத்தில் வித்தைகள் இருப்பது மற்றவர்களுக்கு மட்டுமல்ல, அவனுக்கே ஆபத்தாக முடிந்து விடும். என்று சொல்லி கர்ணனை அனுப்பி வைத்தார்.

இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால், என்னிடம் சிலர் கேட்கிறார்கள், நேரடியாக யோகம், ஞானம் என்று போய் விட வேண்டியதுதானே ? எதற்கு சரியை, கிரியை போன்றவைகளெல்லாம் என்று.

வில் வித்தையைப் போல இதற்கு குலம் கோத்திரம், வர்ணமெல்லாம் கிடையாது. எல்லோரும் பரம்பொருளை அடையத் தகுதியானவரே. ஆனால், அதற்கான மனப்பக்குவத்தையும், நல்லொழுக்கத்தையும் உடையவராக இருக்க வேண்டியது அவசியம். அல்லாத பட்சத்தில் என்னதான் குரு தொட்டவுடன் சக்தி மேலேறினாலும், அவர் அந்தப் பக்கம் போனவுடன் சர்ரென்று கீழே இறங்கி விடும். எனக்கு ஏறி விட்டது, எனக்கு ஏறி விட்டது என்று சொல்லிக் கொள்ளலாம் அவ்வளவுதான். அதன் மூலம் தன்னை கொஞ்சம் பிரபலப்படுத்திக் கொள்ளலாம். இன்னும் கொஞ்சம் பொருளீட்டலாம். ஆன்மிக மேம்பாடு என்பது இதுவல்ல.

எனவே சாதகன் சரியை என்கிற சதாச்சாரத்தை, நல்லொழுக்கத்தை கடைபிடிப்பவனாக இருக்க வேண்டிது மிக அவசியமாகும். அது போலக் கிரியை என்பது கடமைகள். மேலான கடமைகள். நாம் உலகாயத்தில் சில விஷயங்களை நம் தலையாய கடமைகள் என்று சொல்லிக் கொண்டு அலைகிறோம். அதுவல்ல இது. வகுக்கப்படுள்ள, அங்கீகரிக்கப்பட்டுள்ள உயர்வான கடமைகள். ஆலய வழிபாடுகள் செய்வது, ஆலயங்களில் தொண்டு செய்வது, பக்தர்களுக்கு, துறவிகளுக்கு, யோகிகளுக்குத் தொண்டு செய்வது, பெற்றவர்களுக்குப் பணிவிடை செய்வது சமுதாய மேம்பாட்டிற்கான தொண்டு போன்ற இவையெல்லாம் கிரியைகள் எனப்படும்.

நல்லொழுக்கம், நல்ல செயல்கள் உடையவராகும் போது சாதகருக்கு நல்ல எண்ணங்கள் மேம்படும். தீவினைகள் அகலும். சாத்வீகம் மேலோங்கும். தாமஸ,. இரஜோ குணங்கள் அடியோடு நீங்கி விடும். இதுவே உள்முகமானப் பயணத்திற்கு ஏற்ற தருணம். இத்தகைய சாதகனையே யோகம் சாதாரண நிலையிலிருந்து மகோன்னதமான நிலைக்கு எடுத்துச் செல்லும், பரம்பொருளோடு இணைந்திடச் செய்யும். இணைவதற்கு முன் சுவானுபூதியில் உணர்தலே அல்லது அறிதலே ஞானம் எனப்படுகிறது.

ஞானத்தில் நிலைத்தவருக்கு முக்தி. அதற்குப் பிறகு எதுவுமில்லை. எனவே நல்வாழ்க்கை என்பது சரியையில் துவங்கி ஞானத்தில் பூர்த்தியாவதாகும். யோகத்தில் துவங்கினால் அது யோகத்தைக் கூடத் தாண்டாது என்பதே உண்மை. மனமது செம்மையானால்.......

................ இங்கு செம்மை என்பது தூய்மையைக் குறிப்பதே. மனம் பரிபக்குவமடைந்து, தூய்மையடைந்தவர்கே தவம் நிலைக்கும். அமுதம் தித்திக்கும். ஞானம் சித்திக்கும். புராணங்கள் நமக்கு பலப்பல யோக இரகசியங்களை உணர்த்தவே இயற்றப்பட்டன...

--மௌனத்தின் அலைகள்.இராம் மனோகர்.

Shared from Janani Ramanar

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Guru-குரு

Post by venkatakailasam »

ஆசார்ய தேவோ பவ

தாய் தந்தைக்கு அடுத்தபடியாக வருபவர் குரு. குருவும் தெய்வமும் ஒரே நேரத்தில் வந்தால் யாருக்கு முதல் வணக்கம் என்றால் குருவுக்குத் தான் முதல் வணக்கம். ஏனென்றால் தெய்வத்தைக் காட்டித்தருவதே குருதானே? கண்ணன் சாந்தீபினி முனிவரிடம் கல்வி கற்கச் செல்கிறான். குருகுல வாசம் முடிந்ததும் குருதக்ஷிணை கொடுக்க வேண்டும் என்பது வாழையடி வாழையாக வரும் வழக்கம். தக்ஷிணையாக என்ன கொடுக்க வேண்டும் என்று கண்ணன் கேட்கிறான். குருபத்தினி,”12 ஆண்டுகளுக்குமுன் கடலில் மாண்ட என் மகன் வேண்டும் என்கிறாள்.கண்ணன் கடலுக்குள் சென்று பாஞ்ச ஜனன் என்ற அசுரனிடமிருந்த சிறுவனை மீட்டு வந்து குருதக்ஷிணையாகத் தருகிறான்.

மாதவத்தோன் புத்திரன் போய்
மறிகடல் வாய் மாண்டானை
ஓதுவித்த தக்கணையா
உருவுருவே கொடுத்தான்

என்று பெரியாழ்வார் புகழ்கிறார்.
இராமன் தன் குல குருவான வசிஷ்டரையும் விசுவாமித்திரரையும் எப்படிப் பணிவோடு வணங்கி அவர்களிடம் கல்வி கற்றான் என்பதை இராமாயணம் காட்டுகிறது

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Guru-குரு

Post by venkatakailasam »

Image

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Guru-குரு

Post by venkatakailasam »

மகான்களின் அருளும் தன்மை

ஓர்முறை சமர்த்த ராமதாசரும் அவரது சீடரும் கிராமம் ஒன்றின் வழியாக சென்றுகொண்டு இருந்தனர் . களைப்பும் , பசியும் ஏற்படவே சிறிது ஓய்வு எடுத்துசெல்ல நினைத்து வழியின் மீது இருந்த கல்லில் ராமதாசர் அமர்ந்தார் .உடனே ... சீடர் குருவின் பசியறிந்து அருகில் இருந்த கரும்பு காட்டிலிருந்து சில கரும்புகளை ஒடித்து வர சென்றுவிட்டார் . திரும்ப வரும்போது அந்த காட்டின் விவசாயி ,,,,,,,,, பார்த்துவிட திருடுகிறார்கள் என தவறாக நினைத்து அடித்துவிட , ராமதாசரின் முதுகிலும் காயம் ஏற்பட ..........அவரும் பொறுமையோடு ஏற்றுக்கொண்டார். சீடர் துடி துடித்து விட்டார்,

சீடரிடம்...சமாதானமாக அனுமதி பெறாமல்......... நீ கரும்புகளை கொண்டு வந்தது தவறு, எனவே தண்டனையை அமைதியாக ஏற்றுகொள்வோம் என்று ஆறுதல் சொன்னார். பின்பு இருவரும் சிவாஜியின் அரண்மனைக்கு சென்றனர்,ராமதாசரின் மிக சிறந்த சீடரே சிவாஜியும் ஆவார் . மறுநாள் குருவுக்கு குளிப்பாட்டும்போது , முதுகில் உள்ள தழும்பினை வினவ ,,,,,,,ஒன்றுமில்லை என்று கூறினார் ராமதாசர்.

சந்தேகம் கொண்டு அரசன் சீடரிடம் கடினமாக வினவ ........சீடரும் நடந்ததை கூறினார், அதை கேட்டவுடன் மிகுந்த கோபம் கொண்ட சிவாஜி............அந்த விவசாயியை தண்டிக்க ஆட்கள் அனுப்பி அழைத்துவர செய்தார் .

குருவுடன் அரசபைக்கு சென்றார். சிவாஜி. ராமதாசரை கண்டவுடன் விவசாயிக்கு தனக்கு தண்டனை உறுதி என முடிவு செய்தான்.

சமர்த்த ராமதாசர் சிவாஜியை பார்த்து ......" அவர் மீது தவறு ஏதும் இல்லை......உண்மையில் தவறு என்மீதே ,,,, அவரது தோட்டத்தில் அவரது அனுமதியின்றி கரும்புகளை பறித்ததோடு அல்லாமல் அவருக்கு மீண்டும், மீண்டும் விசாரணை எனவும், இவ்வளவு தூரம் அலையவும் காரணமாக இருந்துள்ளேன். சிவாஜி.....நீ எனது அருமை சீடனல்லவா... ! அந்த விவசாயிக்கு 5 கிராமங்களை பரிசாக அளிக்க விரும்புகிறேன்.........எனது விருப்பத்தை நிறைவேற்று........ என கட்டளையிட்டார்,...

அன்பர்களே,,,,.. குரு என்பவர்.......தனக்கு தீங்கு ஏற்படினும் பொறுத்துக்கொண்டு,,,,,,,,,நன்மையே செய்து.........அவர்களின் அறியாமையை பொருட்படுத்தாது , நன்மையே செய்பவர்............ஆனால் இன்று,,,,,,,,,,,,,,?

எங்கேனும் நல்லோர்கள்,,,,,,,,,,மகான்கள்.......காஞ்சி பெரியவா...... ..பப்பா ராமதாஸ் .............ரமண.மகரிஷி.................இருக்கலாம்,,,,,,,,,,,தேடுவோம்............வணங்கி நன்மை பெறுவோம்.


-Mannargudi Sitaraman Srinivasan

VK RAMAN
Posts: 5009
Joined: 03 Feb 2010, 00:29

Re: Guru-குரு

Post by VK RAMAN »

Venkatakailasam: Thanks for the Guru Pugazh. Who is "sAnu Puttiran"?

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: Guru-குரு

Post by Pratyaksham Bala »

.
சாணு புத்திரன் / உடையாளூர் சாணு புத்திரன்.
suresh krishnamurthi a.k.a. udaiyalur suresh krishnamurthi

https://saanuputhiranblog.wordpress.com ... uputhiran/
http://www.tamilhindu.net/u2343
.

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: Guru-குரு

Post by Pratyaksham Bala »

.
The story of Samarth Ramadas and the sugarcane grower.
EXAGGERATION:-

10 acres ! http://books.google.co.in/books?id=-o8b ... NE&f=false
5 VILLAGES ! http://www.anandashram.org/html/ebooks/ ... Ramdas.pdf

25 VILLAGES ! http://www.telugubhakti.com/telugupages ... tent13.htm
.

Post Reply