If you are a venpA buff (in tamil script)

Post Reply
cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff (in tamil script)

Post by cmlover »

பலே பலே!

arasi
Posts: 16789
Joined: 22 Jun 2006, 09:30

Re: If you are a venpA buff (in tamil script)

Post by arasi »

Heavy is the head that wears the crown--
talai ganam vandadO?

malar mAlaiyum ganattiDumO--
pulavar tarum pugazhth thoDarAl?

vairam enRIr--appaDiyOr diDamAna
manam vENDum,vairam pArATTA
idayap padam vENDum--
iRaivan padam vENDum--adil
iNaidal enRum vENDum-pinnum
inbamigu naNBar anbu enRum vENDum ;)

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff (in tamil script)

Post by cmlover »

inbamigu naNBar anbu enRum vENDum
...you have that in plenty.
"VENDUTHAL VENDAAMAI ILANADI CHERNTHAARKKU
YAANDUM IDUMPAI ILA !"

rshankar
Posts: 13754
Joined: 02 Feb 2010, 22:26

Re: If you are a venpA buff (in tamil script)

Post by rshankar »

This thread has turned into a 'full-bench' concert, with each player urging the other to reach greater heights! Fantastic!!

kaumaaram
Posts: 380
Joined: 14 Oct 2005, 17:38

Re: If you are a venpA buff (in tamil script)

Post by kaumaaram »

Thanks to all for complying with this small man's request.
May my Lord Shanmukha shower His blessings to continue your journey of compositions in different forms.

Kaumaaram

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff (in tamil script)

Post by sridhar_ranga »

Praise Shanmukha, who taught how to sift the unripe (worldly) from ripe (spiritual), who helped destroy the ego/ vanity of avvaiyAr, a learned person (சிட்டர்) (& can help destroy the vanity of pretenders to knowledge/ scholarship as a guru does to a disciple/student - சிட்டர்)

சுட்டபழம் ஒன்று சுடாப்பழம் வேறொன்று
பட்டறிவாய் என்று பொருள்தந்து - சிட்டருக்கே
இப்பிறப்பில் வீண்கர்வம் இல்லாமல் செய்தவோர்
சுப்ரமண்ய மூர்த்தியைச் சொல்லு

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff (in tamil script)

Post by sridhar_ranga »

Another SlEDai inspired by kavi kALamEgham as discussed in this thread:
http://www.rasikas.org/forums/viewtopic. ... 74#p217668

நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நீள்சட்டை யுள்ளிருக்கும்
வெஞ்சினத்துப் பற்பட்டால் மீளாது - நெஞ்சகம்
வேம்பாய்க் கசந்திட வாட்டிடும் வெஞ்சினப்
பாம்போ விமர்சகன் பேனா?

The pAmbu/ snake part is easy to understand.

The poison tipped pen in the long coat pocket of the art critic is the other object described.
தோலுரிக்கும் = strips the artiste naked with its sharp criticism
வெஞ்சினத்துப் பல் = the poison (angry) tip/nib of the critic's pen
Last edited by sridhar_ranga on 01 Mar 2012, 14:20, edited 3 times in total.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff (in tamil script)

Post by cmlover »

Wah re wah!

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff (in tamil script)

Post by cmlover »

On Lord Siva
நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நங்கை முடிமேலிருக்கும்
வெஞ்சினத்துப் புறப்பட்டால் மீளாது - வஞ்சியவள்
கெஞ்சியதால் மீண்டான் காமனுமே நாமவனை
அஞ்சினால் தொழுதால் நலம்.

நஞ்சிருக்கும் = விடமுண்ட கண்டன்
தோலுரி = புலித்தோல்
நங்கை = கங்கை
வஞ்சி = ரதி
அஞ்சினால் தொழுதால் = பயத்துடன் வழிபட்டால்/ பஞ்சாட்சரத்தால் துதித்தால்

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: If you are a venpA buff (in tamil script)

Post by Ponbhairavi »

Sridhar_rang's sledai:
வஞ்சக பாம்போ ? may be கொஞ்சிடா பாம்பே
கொஞ்சிடா = not indulging in flattery

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff (in tamil script)

Post by sridhar_ranga »

I guess the critic of the critic comes across as far harsher than the critic himself :)

I am replacing the word வஞ்சக with a less virulent வெஞ்சின - hope that sounds OK.

My attempts at poetry are just for fun, and are meant to be harmless :) - often times I try fitting a few right sounding words (for edugai and monai) and the meaning of the verse ends up very different from what I originally intended!

ganeshkant
Posts: 963
Joined: 05 Feb 2010, 11:59

Re: If you are a venpA buff (in tamil script)

Post by ganeshkant »

kalviaRivillAdhavan nAvilE
kALi vandhu thAnezhudhi
kALidAsan AnadhupOl - en
thalayilum varaivAyO - meeLAthuyartheera.
Last edited by ganeshkant on 01 Mar 2012, 17:47, edited 1 time in total.

anandasangeetham
Posts: 177
Joined: 06 Feb 2008, 16:24

Re: If you are a venpA buff (in tamil script)

Post by anandasangeetham »

I once heard from a poet.....avan kalviarivilladhavan..to which another replied yes avan kalvi arivil adhavan....

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff (in tamil script)

Post by cmlover »

similarly அதுவேசரி also அது வேசரி (கழுதை)
Recently from a Vijay movie
அப்பாவையும் அக்காளையும் கல்யாணம் செய்துகொண்டார்கள் !
It is actually
(அப் பாவையும் அக் காளையும் கல்யாணம் செய்துகொண்டார்கள்)
Can you post other such 'oxymoron' expressions in Tamil that have
different interpretations?
Any with triple or quadruple interpretations?

ganeshkant
Posts: 963
Joined: 05 Feb 2010, 11:59

Re: If you are a venpA buff (in tamil script)

Post by ganeshkant »

cml,

I remember this slEDai by none other than ki.vA.jA.When his first salary was ten rupees a month he accepted that by by saying 'maasam paththu - maa sampathu'.Probably 10 Rs.had such a value in the late 20's.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff (in tamil script)

Post by cmlover »

Athu patthu maa (great ten in those days) or
athu patthumaa? (will it be enough?) ...

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff (in tamil script)

Post by cmlover »

Here is one from Tamil Ilakkiyam
(versification mine!)
தங்கச்சி வந்தியாவென விளம்பினார் கம்பர் வேந்தனோ
கண்கள் சிவந்து கடிந்தனன் - கருணையுடன் அன்னையோ
தங்கச் சிவந்தி மாதின் தலையில் பணித்தாள் கூத்தனோ
மங்கிச் சிரம் குவிந்தான் கவிமன்னர்முன்

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff (in tamil script)

Post by msm »

பாரதிக்கு 12 வயது. காந்திமதிநாதப் பிள்ளைக்கு 17 வயது இருக்கலாம். (Another version says Ganthimathi Nathan was Bharathi's teacher)

பாரதியையே ‘பாரதி சின்னப் பயல்’ என்று ஈற்றடி வருமாறு (லொள்ளு?) பாடச்சொன்னார் காந்திமதி நாதன்.

அதற்கு பாரதி இயற்றிய நேரிசை வெண்பா:

ஆண்டில் இளையவனென் றந்தோ அகந்தையினால்
ஈண்டிங் கிகழ்ந்தென்னை ஏளனஞ்செய் - மாண்பற்ற
காரிருள்போல் உள்ளத்தான் காந்திமதி நாதனைப்
பாரதி சின்னப் பயல்.


பதம் பிரித்து:
(ஆண்டில் இளையவன் என்று அந்தோ, அகந்தையினால்
ஈண்டு இங்கு இகழ்ந்து என்னை ஏளனம் செய் - மாண்பு அற்ற
காரிருள் போல் உள்ளத்தான் காந்திமதி நாதனைப்
பார் அதி சின்னப் பயல்.
)
வயசுல சின்னவன் என்று என்னப் பாத்து குறைவா எடை போட்டு, மண்டை கர்வம் ஜாஸ்தியா போயி என்ன ஏளனம் செய்யுதே இதோ இந்த--மாண்பில்லாதவனும், இருண்ட நெஞ்சம் கொண்டவனுமான--காந்திமதிநாதனைப் பார். அதி சின்னப் பயல்.

காந்திமதி நாதனுக்கு எப்படி இருந்திருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

பிறர் முகம் வாடுவதைக் காணச் சகிக்காத உள்ளத்தைப் பாருங்கள். உடனே இன்னொரு பாட்டை எழுதினான் நம்ம சின்னப் பயல்.

ஆண்டில் இளையவன்என் றைய அருமையினால்
ஈண்டென்றன் றன்னைநீ ஏந்தினையால் - மாண்புற்ற
காரதுபோல் உள்ளத்தான் காந்திமதி நாதற்குப்
பாரதி சின்னப் பயல்.


பதம் பிரித்து:
(ஆண்டில் இளையவன் என்று ஐய, அருமையினால்
ஈண்டு எந்தன் தன்னை நீ ஏந்தினையால் - மாண்பு உற்ற
கார் அது போல் உள்ளத்தான் காந்திமதி நாதற்குப்
பாரதி சின்னப் பயல்
)

வயதில் சிறியவன் என்று மிகுந்த வாத்சல்யத்துடன் நீ என்னை ஏந்திக் கொண்டாய். பெருமை மிகுந்தவனும், மழைபொழியும் மேகத்தைப் போல் உள்ளம் கொண்டவனுமான காந்திமதி நாதனுக்குப் பாரதி சின்னப் பயல்.

இந்தச் சம்பவத்தைப் பின்னால் 'அகந்தைக்குப் பரிசு' என்றொரு கட்டுரை எழுதி குறித்து வைத்தார். யார் தெரியுமோ? காந்திமதிநாதப் பிள்ளையேதான்

** most of this extracted text is from Sri. Hari Krishnan's writings

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff (in tamil script)

Post by sridhar_ranga »

சின்னசாமி பெற்றெடுத்த சுட்டிக் குழந்தையே
அன்னைத் தமிழின் பயன்

பயன் = நல்வினைப்பயன்

பயன் = பையன் / பயல்

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff (in tamil script)

Post by sridhar_ranga »

cmlover wrote:Here is one from Tamil Ilakkiyam
(versification mine!)
தங்கச்சி வந்தியாவென விளம்பினார் கம்பர் வேந்தனோ
கண்கள் சிவந்து கடிந்தனன் - கருணையுடன் அன்னையோ
தங்கச் சிவந்தி மாதின் தலையில் பணித்தாள் கூத்தனோ
மங்கிச் சிரம் குவிந்தான் கவிமன்னர்முன்
Dear CML can you please provide the explanation? Does this have anything to do with the ambikapathi / amaravati story? Thanks.

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: If you are a venpA buff (in tamil script)

Post by Ponbhairavi »

refrence posts 179,211,215 above.
Arunagirinathar's ezhukkutrirukkai poem and its placement in the retham shape can be seen at the following links:
https://docs.google.com/open?id=0B85HwZ ... LU10WXo3dw
https://docs.google.com/open?id=0B85HwZ ... ZF9TUWg4dw

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff (in tamil script)

Post by cmlover »

Msm
One more interpretation is
.................காந்திமதி நாதனைப்
பாரதி சின்னப் பயல்.
( ....(அத்தகைய) காந்திமதி நாதனை
பாரதி (நான்) சின்னப் பயல் (என அழைக்கிறேன்))

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff (in tamil script)

Post by cmlover »

Thx Ponbhairavi for that chitrakavi of AN.
Here is a one letter verse which most of you may know
தாதிதூதோதீது
தத்தைதுதோதாது
தித்தித்ததூதிதை
துதித்துத்துதித்தோதுதி

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff (in tamil script)

Post by cmlover »

Sridhar
The story goes as follows...
Kambar was very friendly with the daughter அமராவதி of kulottthunga chOzhan. So when once she returned to the court after some absence he affectionately remarked தங்கச்சி வந்தியா!
OttakkUtthar who was waiting for the opportunity to put down Kambar drew the attention of the King to this gross violation of protocol. The king got angry and wanted to chide Kambar. But Kambar prayed to Goddess Sarasvati to save him whence as she came closer the சிவந்தி she was wearing started a golden glitter and Kambar remarked that he had remarked whether it was தங்கச் சிவந்தி.
கூத்தரின் முகத்தில் ஈயாடவில்லை which is dramatized in my verse...

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: If you are a venpA buff (in tamil script)

Post by Pratyaksham Bala »

From: http://tamilnation.co/literature/krishn ... uranam.htm

"Thamizh Literature Through the Ages
தமிழ் இலக்கியம் - தொன்று தொட்டு இன்று வரை
By Dr. C.R. Krishnamurti,
Professor Emeritus, University of British Columbia, Vancouver, B.C. Canada

...
...
9.3.1. KALamEkam (காளமேகம்)
...
...
"Another intriguing style is the use of a single consonant and its series without any other letter in the poem. In the poem below the maiden sends a message through a parrot to her lover. The only consonant used is the (t) series.

தாதிதூ தோதீது தத்தைதூ தோத்து
தூதிதூ தொத்திதத் தூததே - தாதொத்த
துத்ததத் தாதே தூதித்துத்தேத் தொத்தீது
தித்தித்த தோதித் திதி

(தாதி தூதோ தீது) = my messenger is of no use;(தத்தை தூது ஓதாது) = the parrot won't go as my messenger; (தூதிதூது ஒத்த இதம் தூது அதே) = as a friend you will be my best messenger; (தாதொத்த துத்தி) = my own skin irritation ; (தத்தாதே) = without increasing; (துதித்து)= in praise; (தேத்து ஒத்து ஈது) = according to my present circumstances; (தித்தித்தது ஓதித்திதி) = take my sweet words to my lover and save me."

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff (in tamil script)

Post by cmlover »

Thx PB
IIRC there is one by Arunagirinathar as well and one in ka too!

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: If you are a venpA buff (in tamil script)

Post by Pratyaksham Bala »

.
கவி காளமேகம்

"காக்கைக்காகா கூகை கூகைக்காகா காக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைகா கா!"

http://knol.google.com/k/kesavan-muthuv ... blvej0k/4#
.

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff (in tamil script)

Post by sridhar_ranga »

Here is something I have tried using only tha and ka vargam:

தகதகக்கத் தீதாகத் துக்கது தக்கா
தகத்துக் கதகதக்கத் தாதகுதி தேது
கொதிக்கத் திகுதிகுக்கத் தீதது தீதீக்
குதிக்கத் தகாத தது

Here is how you read it:

திபெத்து
---------------

தகதகக்கத் தீ = the raging fire (of riot, arson)
தாகத் துக்கது தக்காது = it does not suit your thirst (for freedom)

(the below is an appeal to be made by them in a peaceful manner)
அகத்துக் கதகதக்க = To warm our hearts
தாதகுதி தேது = give us (தா) status (தகுதி i.e. autonomy/freedom) & greatness / lustre (தேது same as தேசு)

Therefore,
கொதிக்கத் திகுதிகுக்கத் தீதது தீ = the burning (திகுதிகுக்க) hot (கொதிக்க) fire (தீ) is bad (தீதது)

தீக்குதிக்கத் தகாதது அது = it's not worth jumping into fire (committing immolation) (however high the cause, self immolation is not the way)

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff (in tamil script)

Post by sridhar_ranga »

Another one in ka/tha series:

"Rid yourself of worldly sorrow through prayer"

துதித்துத் துதித்தகத்துத் தித்தித்தித் தேகத்
துதித்ததுக் கத்தைத்தூக் கு

To be split as: துதித்துத் துதித்து, அகத்துத் தித்தித்து, இத் தேகத்து உதித்த துக்கத்தைத் தூக்கு

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff (in tamil script)

Post by cmlover »

Bravo Sridhar
Meaningful திக்குவாய் ஔடதம்!
That தகதகக்கும் குறள் is sheer beauty!
Thx folks...

arasi
Posts: 16789
Joined: 22 Jun 2006, 09:30

Re: If you are a venpA buff (in tamil script)

Post by arasi »

Sridhar,
You are unbelievably productive, coming out with poem after poem which capture our imagination!

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff (in tamil script)

Post by msm »

Brilliant kuRaL Sridhar ! :)

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff (in tamil script)

Post by cmlover »

Here is a three letter attempt...
சகமிச்சை மிகச் சகசமே சகமிச்சை சாக
சுகம் மிக்கமாகுமே சூக்குமமே
alternatively
சுகம் மிச்சமாகுமே சூக்குமமே
Love of the material world is quite natural (in-born)
When this love (attachment) to materialism dies then
excessive Bliss is born. That is the (divine) Secret...
(Bliss alone will exist)

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff (in tamil script)

Post by sridhar_ranga »

Good one CML.

If we dont restrict ourselves to any set of letters it can be alternatively expressed as a perfect kuRaL

இகத்தின்ப ஈர்ப்பு இயல்பே இதுபோய்
சுகஞ்சேரல் சூக்கு மமே

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff (in tamil script)

Post by cmlover »

Yes! Perfect KuRaL!

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff (in tamil script)

Post by sridhar_ranga »

Bumping this thread up so that mods can move it to the language sub folder....this thread will hold a lot of interest to those looking for literary content in Tamil.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff (in tamil script)

Post by cmlover »

done!

Govindaswamy
Posts: 120
Joined: 21 Feb 2010, 06:55

Re: If you are a venpA buff (in tamil script)

Post by Govindaswamy »

As I was not sure uner which sub group my article falls I have posted it here.
Govindaswamy

S.Govindaswamy.B.E (Hons),
73, 3rd Cross Road,
Guruswami Nagar,
COIMBATORE – 641046
Tel 0422-2426372 / 9600531976
Email : govindaswamy.s77@gmail.com
மருத்துமலை (ஸஞ்ஜீவிபர்வதம்) எங்கேஇருந்தது?
(ஸு. கோவிந்தஸ்வாமி)

இராமாயணத்தில் கூறப்பட்டுள்ள இடங்கள் எவை என்று எல்லா அறிஞர்களிடையும் ஒருமித்த கருத்து இல்லை. கீழே குறிப்பிடப் பட்டுள்ள ஒன்றாம் நூலில் மருத்துமலைப் படலத்தில் மூன்று பாடல்கள்களைப் (8889 - 8891) படித்த பொழுது எனக்கு ஒரு புதிய கருத்து தோன்றியது. ஆதி காவியமாகிய வால்மீகி ராமாயணத்தில் (2ம் நூல்) இப் பகுதிக்குக் கூறப்பட்டுள்ள உரையையும் ஒப்பு நோக்கிப்பார்த்ததில் பெரும் வேறுபாடுகள் காணப் பட்டன. வால்மீகியிலிருந்து கம்பர் பல இடங்களில் வேறுபடுகிறார் என்பது தெரிந்த விஷயம். மேலே குறிப்பிடப்பட்ட பாடல்களுக்குக் கூறப்பட்ட பொருள் எனக்கு மன நிறைவைத் தராததால் இப்பகுதிக்கு மற்ற உரையாசிரியர்கள் கூறியுள்ள பொருள்களைக் காண்பதற்காக மற்ற நான்கு நூல்களில் இப்பகுதிக்குக் கூறப் பட்டுள்ள பொருள்களையும் ஒப்பு நோக்கினேன்.
1 கம்பராமாயணம் (வர்த்தமானன் பதிப்பகம் - உரை.ஆசிரியர். அ.அறிவொளி)
2 வால்மீகி இராமாயணம் (வர்த்தமானன் பதிப்பகம் -உ.ஆ- வ.ஜோதி)
3 கம்பராமாயணம் - திருமகள் நிலையம் வெளியீடு (உ. ஆசிரியர்கள் எம்.நாராயணவேலுப்பிள்ளை, வ.த.இராமசுப்பிரமணியம்,
துரை இராசாராம்)
4 கம்பராமாயணம் - கம்பன் கழகம் வெளியீடு
5 ஒட்டக்கூத்தர் அருளிய உத்தரகாண்டம் மூலமும் உரையும் (வர்த்தமானன் பதிப்பகம் - உ ஆ. ஜெ. ஸ்ரீசந்திரன்}
6 கம்பராமாயணம் - அண்ணாமலை பல்கலைக்கழக வெளியீடு

அவைகளைப் படித்த பின்பும் பாடல் 8891க்கு முழு விளக்கம் அளிக்கப் படவில்லை என்று எனக்குத் தோன்றியது. அதன் அடிப்படையில் இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

இந்திரசித்தனோடு செய்த போரில் பிரம்மாஸ்திரத்தால் தாக்குண்டு இலக்குவன் மாண்டான் (வான்மீகத்தில் அவன் மயக்கமடைந்ததாகக் கூறப்பட்டுள்ளது). அதனைக்கண்ட இராமன் மயக்கமடைந்தான். அவர்களை உயிர்ப்பிப்பதற்காக ஸஞ்ஜீவி மூலிகையைக்கொண்டு வருமாறு அநுமனைச் ஜாம்பவான் (சாம்பன்) பணித்தான்.
மருத்து மலைக்குச் செல்லும் வழி வான்மீகத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. “கடலைத் தாண்டி வெகு தூரம் சென்றால் இமயமலையை அடையலாம்; அதற்கடுத்து ரிஷபம் என்ற பெயருடைய ஹேமகூடம் (பொற்கூடம்) உள்ளது; அதனையடுத்துக் கைலாசம் என்ற சிகரம் உள்ளது. இவை இரண்டிற்கும் இடையில் பலவிதமான மூலிகைகளைக் கொண்ட ஸஞ்ஜீவி பர்வதம் (மருத்து மலை) உள்ளது”.
ஒருவருக்குப் புதிய இடத்துக்குச் செல்லும் வழியினைக் கூறும் பொழுது சரியான திசையினையும் தூரங்களையும் கூற வேண்டும். வான்மீகத்தில் இவை விரிவாகக் கூறப் படவில்லை. அநுமனுக்கு முன்பே வழி தெரியும் என்று நாம் கொள்ள வேண்டுமா?
கம்பராமாயணத்தில் கூறப்பட்டுள்ள வழி பின் காணுமாறு. ‘இந்தக் கடலைக் கடந்து 9000 யோசனைகள் சென்றால் இமயமென்னும் குலவரை உள்ளது; அதன் பெருமை (அகலம்) 2000 யோசனைகள்’; கடலின் அகலம் 100 யோசனைகள் என்று சம்பாதிப் படலத்தில் கூறப்பட்டுள்ளது. இமயமலையைக் கடப்பதற்கான தூரம் 11100 யோசனைகள் என்றாகிறது.
‘அது பின் தவிறப் போனால் முன்புள யோசனையெல்லாம் முற்றினை பொற்கூடம் (ஹேமகூடம்) சென்றுறுதி’ என்றுளது. முன்புள யோசனை எல்லாம் என்பதற்கு (Ref.No 6 ல்) நின் முன்புள்ள என்று பொருள் கூறப் பட்டுள்ளது. இது ஏற்புடையதாக இல்லை. அவனுக்கு முன்புள்ள யோசனைகள் எத்தனை என்று அநுமனுக்கு எப்படித் தெரியும். முன்புள யோசனை எல்லாம் முற்றினை என்பதற்கு இதற்கு முன்பு கூறப்பட்ட மொத்த யோசனைகள் என்று பொருள் கொள்ள வேன்டியுள்ளது. அதாவது 100+9000+2000 = 11100 என்று பொருள் கொண்டால் பொற்கூடத்தின் தூரம், 11000 +11100 = 22200 யோசனைகள் ஆகும். அதன் அகலம் கூறப்படவில்லை.

ஹேமகூடத்திலிருந்து 9000 யோசனை தொலைவில் நிடதம் என்னும் செம்மலை உள்ளது. நிடதத்தின் தொலைவு 31200 யோசனைகள்.
‘இம்மலைக்கும் ஒன்பதினாயிரம் உளதாம் யோசனையின் நிடதம் என்னும் செம்மலைக்கும் உளவாய அத்தனை யோசனை கடந்தால் சென்று காண்டி எம்மலைக்கும் பெரிதாய வட மலையை’ என்ற பாடலின்படி; உளவாய அத்தனை என்பதற்கு 9000 யோசனை என்று பொருள் கூறப்பட்டுள்ளது. இதன்படி மேரு மலையின் தொலைவு 40200 யோசனைகள். தற்காலத்தே நமக்குத் தெரிந்த வரை இமயமலையின் வடக்கே ஆர்க்டிக் பெருங்கடல் (Arctic Ocean) வரை எந்த ஒரு மலையும் இல்லை. எம்மலைக்கும் பெரிதாய மலை இல்லவே இல்லை. இமயமலை தான் (Mount Everest) தான் எல்லா மலைகளுக்கும் பெரிய மலை. மேரு என்பது இமயமலை என்ற கருத்தும் நிலவுகிறது. அவ்வாறாயின் கம்பர் ஏன் இவற்றை வெவ்வேறாகக் கூறினார்?
‘அம்மலையின் அகலம் எண்ணின் முப்பத்தீராயிரம் யோசனையின் முற்றும்’ என்பதால் மேருவைக் கடக்க மொத்தத் தொலைவு 40200 + 32000 = 72200 யோசனைகளாகின்றது.
‘மேருவைக் கடந்து அப்பால் ஒன்பதினாயிரம் உள யோசனை விட்டால் நேர் அணுகும் நீலகிரி; தான் இரண்டாயிரம் யோசனையின் நிற்கும்’ என்றபடி அதுவரை மொத்தத் தொலைவு 83200 யோசனைகள்.
‘அந்நீலகிரிக்கு அப்பால் நாலாயிரம் யோசனைத் தொலைவில் கரிய மருத்துமலையைக் காண்பாய்’ என்பதால் மொத்த தொலைவு 87200 யோசனைகள்.
ஒரு யோசனை என்பதற்கு 100 கல், 9 கல், 40 மைல், 9 மைல், 4.5 மைல் அல்லது 2.25 மைல் என்று வெவ்வேறு அளவுகள் கூறப்பட்டுள்ளன. இவற்றுள் மிகக்குறைந்த 2.25 மைல் என்ற அளவை எடுத்துக்கொண்டாலும் மொத்த தூரம் 87200 x 2.25 =196200 மைல். இது பூமியின் சுற்றளவாகிய சுமார் 25000 மைலைப் போல் ஏறத்தாழ 8 மடங்கு !
தென்கடலிலிருந்து இமயமலையின் தூரம் 9000 யோசனை என்று கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் தெற்கிலிருந்து இமயமலையின் தூரம் சுமார் 2000 மைல்கள். இதன்படி ஒரு யோசனை 0.22 மைல்.ஆகின்றது; மருத்துமலையின் தூரம் 87200 x 0.22 = 19184 மைல்கள் ஆகின்றது. இதுவும் பூமியின் சுற்றளவில் முக்கால் பங்கை விட அதிகம். பூமியின் சுற்றளவின் பாதியை விட அதிக தூரம் செல்ல வேண்டியிருந்தால் அநுமன் தெற்கு நோக்கியல்லவா புறப்பட்டிருக்க வேண்டும்? ஆதலால் இந்த அளவுகளை நாம் சரியாகக் கொள்ள முடியாது. கூறப்பட்டுள்ள அளவுகள் எல்லாமே முழு ஆயிரங்களிலேயே உள்ளன. ஆயிரத்தின் பகுதிகளே (fractions) இல்லை ! கம்பர் காலத்திலே நாட்டு வரைபடங்கள் (Maps) இருந்ததாகத் தெரியவில்லை.
இமயமலைக்கு அப்பால் நிடதம், மேரு, நீலகிரி மற்றும் மருத்துமலை உள்ளன என்று கம்பராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது. . மற்றும் அநுமன் செல்லும் பொழுது உத்தர குரு என்னும் நாட்டினை அடைந்தான் என்று ஒரு புதிய செய்தி கூறப் பட்டுள்ளது. சாம்பன் இந்நாட்டைப்பற்றிக் கூறியதாக முன்பு சொல்லப்படவில்லை. கம்பர் கூறியவை புனைந்துரைக்கப்பட்டவை என்றே எண்ணத்தோன்றுகிறது. வ.எ 6 லிலும் இதே கருத்து கூறப்பட்டுள்ளது.
அநுமன் சாம்பன் பேச்சைக்கேட்டு, பேருருவம் கொண்டு விண்ணிலே பாய்ந்தான். எந்த திசையிலே என்று கூறப்படவில்லை. ஆனால் அவன் வேகத்தால் (அவனுக்குப்பின் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வினால் - vacuum) மலைகள் வடக்கு நோக்கிச் சரிந்தன (பாடல் யு.கா 437) என்று கூறப்பட்டுள்ளது. ஆதலால் அவன் வடக்கு நோக்கிச் சென்றான் என்று கொள்ள வேண்டியுள்ளது.
அவன் புறப்பட்ட இடமாகிய இலங்கை எது? வால்மீகி ராமாயணத்தின்படி மேரு மலையின் முறிந்த சிகரம் ஒன்று தெற்குச் சமுத்திரத்தின் கரையில் உள்ளது அது மூன்று உச்சிகளை உடையது. திரிகூட மலை என்று பெயர் கொண்ட அதன் மேல் தேவ தச்சன் ஓர் அழகிய நகரை உண்டாக்கினான். கடலையே அகழியாக மாற்றிக்கொண்டான். (வ, எண் 2 பக் 1617 -1618). ஆதலால் இலங்கை என்பது ஒரு நகரத்தையும் தீவையும் குறிக்கும். இது தற்காலத்திய ஸ்ரீலங்கா என்று கொள்ள வேண்டியுள்ளது. (திரிகூட மலை திரிகோண மலையா?). இதன் Latitude (அக்ஷாம்ஸம்) 8º N, Longitude (தீர்க்காம்ஸம்).80º E.
இதற்கு மாறாக, Mr.M.D Mallikarjuna Rao, அநுமன் விசாகபட்டிணம் அருகிலுள்ள மஹேந்திர கிரியிலிருந்து இந்தோனேஷியாவின் பகுதியாகிய ஸுந்தா தீவுகளை நோக்கி மைநாகம் (அந்தமான் - நிக்கோபார்) வழியாகத் தாவி ஆஸ்திரேலியாவிலுள்ள இலங்கையை அடைந்தான் என்று கூறியுள்ளார் (Ref : Date of Ramayana -Saptha Rishi Era and Ancient Historical Dates)..
அநுமன் சூரியனும் சந்திரனும் செல்லும் பாதையைக் (Ecliptic Plane) கடந்து சென்றான் என்று கூறப்பட்டுள்ளது. சூரிய மண்டலத்தைக் கடந்து செல்ல வேண்டுமாயின் கோடிக்கணக்கான மைல்கள் கடக்க வேண்டும். சாம்பன் சஞ்ஜீவி பர்வதம் ஸூர்ய மன்டலத்திற்கு அப்பால் உள்ளது என்று கூறவில்லை. ஒட்டக்கூத்தரின் உத்தரகாண்டம் பாடல் 627ல் "மேருவுக்கு வடபால் மருத்து மலை கொண்டு ஒரு நாழிகைக்குள் வருவார் ஒருவர் உளரோ சகத்தில் இனியே" என்று கூறியுள்ளதையும் நோக்கவும். மருத்து மலை உலகத்திற்கு உள்ளே தான் இருந்தது என்று கொள்ள வேண்டும். கம்பர் கூற்றை உயர்வு நவிற்சியாகக் கொள்ளவேண்டும்.
அநுமன் செல்லும் வழியில்
1 கயிலையில் உமையொரு பாகனைக் கண்டு வணங்கினான்.
2 ஹேமகூடத்தில் செல்வக் கடவுளரைக் கண்டு வணங்கினான்.
3 மேருவின் மீது சென்றான்
4 வடமலைக்கு உம்பர் சென்றான். இதுவும் மேரு மலையும் ஒன்றே
5 நாவலம் பெருந்தீவு (பூமி?) என்று பெயர் வருவதற்குக் காரணமாகிய கடவுள் மாமரத்தைக்கண்டான். (இங்கு ஒன்றைக்கூற விரும்புகிறேன். எந்த சடங்கும் தொடங்கும் பொழுது இடத்தையும் காலத்தையும் குறிப்பிடும் படி ஜம்புத்வீபே பாரதவர்ஷே பரதக்கண்டே மேரோஹோ தக்ஷிணே பார்ஸ்வே என்ற சங்கல்பம் கூறப்படுகிறது. இந்த ஜம்புத்வீபம் எது? பூமியா? ஜம்பு என்றால் நாவல் பழம். மேரு எது? மற்ற இடங்கள் எவை?)
6 அந்த மேருவின் உச்சியில் பிரமனுடய நகரைப் பார்த்து அவனை வணங்கினான்.
7 திருவொடும் இருந்த மூலத்தேவையும் (திருமாலை) வணக்கம் செய்தான்
8 சேயிழை பாகத்து எண்தோள் ஒருவனை வணக்கம் செய்தான்
9 கயிலையில் பார்த்தது உருத்திரனை என்றும் இப்போது பார்த்தது சதாசிவனை என்றும் பொருள் கூறப்பட்டுள்ளது.
10 இந்திரனைக்கண்டான்
11 மேருவின் சிகர வைப்பில் திசைக் காவலர் எண்மர் நின்ற தன்மையும்
கண்டான்.
மேருவின் மேல் இந்த கடவுளர்கள் உள்ளனர் என்று சாம்பன் கூறவில்லையே. வால்மீகியும் கூறவில்லை.
பின் நிகழ்ந்தது என்ன? முன்பு குறிப்பிட்ட மூன்று பாடல்களை விரிவாக நோக்குவோம். இதனைப் படிப்பவர்களுக்கு உடனே உதவும் வகையில் பாடல்களும் அவற்றிற்குக் கூறப்பட்டுள்ள பொருளும் கொடுக்கப்பட்டுள்ளன.
பா:1 அத்தடம் கிரியை நீங்கி அத்தலை அடைந்த வள்ளல்
உத்தர குருவை உற்றான்; ஒளியவன் கதிர்கள் ஊன்றி
செற்றிய இருள் இன்று ஆக்கி விளங்கிய செயலை நோக்கி
வித்தகன், விடிந்தது என்னா முடிந்தது என் வேகம் என்றான்
பொ: அந்த அகன்ற மலையைக் கடந்து மறு பக்கம் சென்றடைந்த அநுமன் (வள்ளல்) உத்தர குருவை அடைந்தான். சூரியன் தன் கதிர்களைச் செலுத்தி, செறிந்த இருளை நீக்கி விளங்கிய செய்கையைக் கண்டு ‘விடிந்தது, நான் வந்த வேகம் பயனற்றுப் போயிற்று’ என்றான்.
பா:2 ஆதியான் உணரா முன்னம் அரு மருந்து உதவி அல்லின்
பாதியால் அனைய துன்பம் அகற்றுவான் பாவித்தேற்குச்
சோதியான் உதயம் செய்தான் உற்றதோ துணிதல் ஆற்றேன்
ஏதுயான் செய்வது என்னா இடர் உற்றான் இணை இலாதான்
பொ: மூலவனான இராமன் உணர்வதற்கு முன் அரிய மருந்தினைக் கொடுத்து நள்ளிரவிற்கு முன் அவன் அடைந்த துன்பத்தை அகற்ற எண்ணினேன். சூரியன் உதித்தான். நடந்ததைத் தடுக்க முடியாது. நான் என்ன செய்வேன் என்று இணை இல்லாத அநுமன் வருத்தப் பட்டான்.
பா:3 கால் திசை சுருங்கச் செல்லும் கடுமையான், கதிரின் செல்வன்
மேல் திசை எழுவான் அல்லன்; விடிந்ததும் அன்று; மேரு
மாற்றினன்; வட பால் தோன்றும் என்பது மறைகள் வல்லோர்
சாற்றினர் என்னத்துன்பம் தவிர்த்தனன் தவத்தின் மிக்கோன்.
பாடல் மூன்றினுக்கு நான்கு உரை ஆசிரியர்கள் கூறியுள்ள பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இப்பாட்டிற்கு நான் அவர்கள் கூறாத ஒரு விளக்கத்தை பின்னால் கொடுத்துள்ளேன்
பொ:1 தவங்களில் சிறந்தவனும் காற்றும் திசைகளும் பின் தங்குமாறு கடுமையான வேகத்தில் செல்லும் அநுமன் சூரியன் மேற்குத் திசையில் எழ மாட்டானே! இன்னும் விடியவில்லை, மேரு தன் வடபுறத்தே மாற்றித் தோன்றச் செய்வான் என்று சாத்திரம் படித்த அறிஞர்கள் கூறியுள்ளனர் என்று எண்ணி மனக்கவலையை மறந்தான்.
பொ: 2 மேரு மலைக்குத் தெற்கில் கீழ்த்திசையில் உதயமாகும் சூரியன் அவ்வியல்பை மாற்றி அதன் வட திசையில் மேல் திசையில் உதயமாவான் என்பது புராணக் கொள்கை.
பொ:3 தவத்தில் மிக்கவனும் திசை நோக்கிச் செல்லும் காற்றும் சுருங்குமாறு மிக வேகமாகச் செல்லக் கூடியவனுமான அநுமன் பின்னர் ஒருவாறு ஆய்ந்து சூரியன் மேற்குத் திசையில் உதிப்பவன் அல்ல; இப்போது உதிப்பதுவும் அன்று; மேரு மலையின் வட புறத்தில் இருப்பவர்களுக்கு இவ்வாறு திசை மயக்கம் என்பதை மறைகள் வல்லவர்கள் உணர்ந்துள்ளதை எண்ணி மனம் தெளிந்தான்.
பொ:4 காற்றின் வேகம் குறையுமாறும் திசையின் தொலைவு சுருங்குமாறும் செல்லுகின்ற விரைவினை உடையவனும் தவத்தின் மிக்கவனும் ஆகிய அநுமன், கதிரினைச் செல்வமாக உடைய சூரியன் மேற்குத் திசையிலே எழுகின்ற இயல்புடையவன் அல்லன்; போழ்து விடிந்ததோ அன்று; மேருவின் வடபாகத்தே தன் கதியை மாற்றிக் கொண்டவனாய் மேற்கே தோன்றுவான் என்பது வேதம் வல்ல சான்றவர்கள் சொன்னார்கள் என்று நினந்து துன்பம் தணிந்தான்.
இப்பாடல்களுக்கு என்னுடைய விளக்கம் கீழ்வருமாறு.
மேலே கூறப்பட்டுள்ள நான்கு உரைகளும் ஒத்திருக்கின்றன. ஆனால் வெறும் வார்த்தைக்ளுக்கான பொருள்கள் (literal meanings) மாத்திரம் கொடுத்து விட்டு, கம்பர் கூறிய புதிரை ஆராய்ந்து விளக்கம் அளிக்கப்படவில்லை. பின் வரும் கேள்விகளுக்கு (அநுமன் தானே விடையையுணர்ந்து கொண்டானாயினும்) உரையாசிரியர்கள் விளக்கம் கொடுக்கவில்லை.
1 இரவுப்பொழுது இலங்கையை விட்டுப் புறப்பட்ட அநுமன் எப்பொழுது/எங்கே சூரியன் உதிப்பதைப் பார்த்தான்?
2 மேரு எங்கே இருந்தது/இருக்கின்றது?
3 மேரு எங்கே இருந்திருந்தால் அதன் வடபுறம் திசைகள் மாறித் தோன்றும்?
4 எந்த சாத்திரங்களில் இது கூறப்பட்டுள்ளது?
மேலே கூறியவற்றுள் முதல் மூன்றிற்கு எனக்குத்தோன்றிய விடைகளைக் கீழே கூறியுள்ளேன். நான்காவதற்கான விடையைக் காணுமாறு சாத்திரம் வல்லோரை வேண்டுகிறேன்.
மேற்கூறப்பட்ட கேள்விகளுக்கு விடை காண கீழ்க்கண்டவற்றைக் கருத்தில் கொண்டேன். போர் நிகழ்ந்தது எந்தப் பருவத்திலே? முனைவர் தெ.ஞானசுந்தரம் அவர்கள் இராமன் இராவணனைக் கொன்று சீதையைச் சிறை மீட்டது பங்குனி மாதம் (உத்திரம்) பௌர்ணமியன்று எனக் கூறுகிறார். ஒட்டக்கூத்தர் அருளிய உத்தர காண்டம் பாடல் 705 ல் கூறப்பட்டுள்ளது இதிலிருந்து சிறிது மாறுபடுகிறது..
அங்கவை நிகழுங் காலையில் ஆழி அண்ணலும் அவனியிற் பிறந்த
மங்கையும் மாறிக் கண் வலைப்பட்டு மனங்களின் மாறினர் புகுந்து
கங்குலும் பகலும் பிரிவிலராகிக் காதல் வெள்ளத்திடையழுந்திப்
பங்கமில் போகம் நுகரும் நாள் வந்து புகுந்தது பங்குனித் திங்கள்
இதற்குப் பின் வரும் பாடல்களில் இளவேனில் காலம் (Spring) விவரித்துக் கூறப்பட்டுள்ளது. இராமன் போர் முடிந்த பின் புட்பக விமானத்தில் விரைந்து அயோத்திக்குச் சென்று முடி சூடிக் கொண்டதன் பின் பங்குனி மாதம் தொடங்கியது. இளவேனில் காலம் தொடங்கியது. இதன்படி போர் முடிந்து சில நாட்கள் கடந்து விட்டபின் பங்குனி தொடங்கியது. அவ்வாறாயின் போர் நிகழ்ந்தது மாசி மாதத்திலா? இந்த சிறு வேறுபாட்டினை ஆராயவேண்டியுள்ளது. இளவேனில் காலம் உத்தராயணத்தைத்தொடர்ந்து வருவது; (After Winter Solstice). அப்பொழுது சூரியனின் கிராந்தி (Declination) 23.5 Degrees South. இள வேனிற்காலத் தொடக்கத்தில் ஹோலி பண்டிகை (பங்குனி பௌர்ணமி யன்று) கொண்டாடப்படுகிறது. இராமாயண காலத்தில் சித்திரையில் உத்தராயணம் தொடங்கியது. பருவங்கள் சூரியன் உள்ள பாகையின் அடிப்படையில் மாறும். ஆனால் பண்டிகைகள் சந்திரனின் கதியின் அடிப்படையில் (Lunar Calendar) கொண்டாடப்பட்டன. இந்த வழக்கம் தொடர்கிறது. . இள வேனிற்காலத் தொடக்கத்தில் ஹோலி பண்டிகை (பங்குனி பௌர்ணமி யன்று) கொண்டாடப்படுகிறது
மகாபாரதத்தில் உத்தராயணம் தொடங்கியவுடன் பீஷ்மர் மாகசுக்ல அஷ்டமியன்று (மாசி மாதம் வளர்பிறை எட்டாம் நாள்) அமரரானார். இதனை பீஷ்மாஷ்டமி என்று இப்பொழுதும் கொண்டாடுகிறோம். அதாவது மகாபாரதக் காலத்தே உத்தராயணம் மாசி மாதம ஒன்றாம் நாள் வந்தது.
தற்காலத்தே உத்தராயணம் மார்கழி மாதம் 7/8 தேதிகளில் (December 21/22) வருகிறது. ஆனால் நாம் தை ஒன்றைத்தான் உத்தராயண ஆரம்பம் என்று (தவறாகக்) கொண்டாடுகிறோம். ஏனென்றால் ஸௌரமான (ஸூர்ய சித்தாந்த) பஞ்சாங்கம் கணிக்கப்பட்ட சுமார் 1750 ஆண்டுகளுக்கு முன்பு தை (மகர) மாதம் முதல் நாள் (January 14/15) உத்தராயணம் தொடங்கியது. தற்காலத்தே இது 24 நாட்கள் முன்பு வருகிறது. இராமாயண காலத்தோடு ஒப்பிட்டால் தற்காலத்தே உத்தராயணம் சுமார் மூன்று மாதங்கள் முன்பாக வருகின்றது; அதாவது பங்குனியிலிருந்து மார்கழிக்கு மாறியுள்ளது.
இதற்குக் காரணம் சாயனம் (Precession of Equinoxes). பூமியின் அச்சு (Axis) அதன் சுற்றுப்பாதையின் (Ecliptic) குத்துக்கோட்டிலிருந்து (vertical) 23.5 Degrees (பாகைகள்) சாய்ந்துள்ளது. இதனால் தான் பருவ வேறுபாடுகள் நிகழ்கின்றன. இந்த அச்சு, பூமி சூரியனைச் சுற்றும் அதே திசையில், ஒரு வருடத்தில் சுமார் 50.35 விகலை (Seconds) சுற்றுகிறது. இதனால் சுமார் 73 வருடங்களில் பருவங்கள் ஒரு நாள் முன்பாகத் தொடங்கும். புராணங்களில் கூறப்பட்ட நாள் கணக்குகள் சாந்திரமான பஞ்சாங்கத்தின் (Lunar Calendar) அடிப்படையில் உள்ளன. இதற்கும் சௌரமான பஞ்சாங்கத்திற்கும் (Solar Calendar/ தமிழ்/மலையாள பஞ்சாங்கம்) உள்ள வேறுபாடுகளைக் கருத்தில் கொண்டு இராமாயணம் சுமார் 8000 வருடங்களுக்கு முன் நிகழ்ந்ததாகக் கணக்கிடப்படுகிறது.
இது நிற்க, இந்தக் கட்டுரைக்குத் தேவையான செய்தி, சூரியன் மகர ரேகையின் (Tropic of Capricorn) மீதோ அல்லது அதற்கு வெகு அருகிலோ இருந்தான் என்பது தான். அப்பொழுது உலகத்தில் எந்தப் பகுதியிலும் 66.5 பாகை வடக்குக்கு வடக்கே (66.5 Degrees North, viz, Arctic Circle) பகலானாலும் இரவானாலும் சூரியன் தென்பட மாட்டான். இதே போல் 23.5 பாகை தெற்குக்குத் தெற்கே ஜூன் மாதம் 21 ல் சூரியனைப் பார்க்க முடியாது.
அநுமன் புறப்பட்டது எப்போது? கம்பராமாயணத்தின்படி இராமன் தெளிவதற்குள், உற்றுழி உதவும் துணைவர் யாரேனும் உய்ந்திருக்கின்றார்களா, பார்ப்போம் என்று கருதிக் கையில் கொள்ளி ஒன்று ஏந்திக்கொண்டு வீடணன் இரத்த வெள்ளத்தில் விரைந்து தேடுகின்றான். வால்மீகி ராமாயணம் (வ.எண் 2) பக்கம் 1408 ல் அநுமன் புறப்பட்ட பொழுது ‘அந்த இரவு நேரத்தில் திடீரென்று ஆடவே நகர மக்கள் பீதி கொண்டு அரைத்தூக்கத்தில் எழுந்து வெளியே ஓடி வந்தனர்’ என்று கூறப்பட்டுள்ளது. அநுமன் கிளம்பிய பொழுது இலங்கையில் சூரியன் மறைந்து விட்டான் என்பது தெளிவு. அநுமன் இமயமலை வரை மட்டுமே வடக்கு நோக்கிச் சென்றிருந்தால் மறு நாள் காலையில் தான் சூரியன் உதிப்பதைப் பார்த்திருக்க முடியும். அவன் வடதுருவம் (North Pole) வரை சென்றிருந்தால் கூட சூரியன் உதிப்பதைப் பார்த்திருக்க முடியாது. ஏனென்றால் அவன் ஒரே தீர்க்க ரேகையில் வடக்கு நோக்கிச் சென்றான். ஒரே தீர்க்கரேகையில் மணி ஒன்றாகத்தான் இருக்கும் (Same Time Zone). அவன் வடதுருவம் வரை சென்றிருந்தால் கூட மணி ஒன்றாகத்தான் இருந்திருக்கும். அவ்வாறாயின் அவன் சென்றது எங்கே? இமயமலைக்கும் வெகு தொலைவில் வடக்கே உள்ள அத்தடங்கிரிக்கு (மேரு?) அத்தலை உள்ள உத்தரகுரு என்னும் நாட்டை அடைந்தான். அப்பொழுது தான் சூரியனைக் கண்டான். அவன் வடதுருவத்தைக் கடந்தான் என்று பொருள் கொண்டால் கம்பர் கூறவந்தது விளங்குகிறது.
அநுமன் காற்றும் திசையும் சுருங்கச்சென்றான். சூறாவளிக் காற்றாக இருந்தாலும் அதன் வேகம் மணிக்கு 300 மைலுக்கு மேல் இல்லை. காற்றின் திசையில் அவன் சென்றிருந்தால் காற்றின் வேகம் (Relative velocity) சுருங்கும். அமெரிக்காவிலிருந்து விமானத்தில் இந்தியாவுக்கு வந்தால் நாள் சுருங்குகிறது. ஆனால் திசை எவ்வாறு சுருங்கியது?. உலகிலே எங்கிருந்தும் வட துருவத்திற்குச் செல்ல வேண்டுமாயின் வடக்கு நோக்கித்தான் செல்லவேண்டும். அதனை அடையும் வரை செல்லும் திசை வடக்கு தான். அதை நோக்கி வைக்கும் ஒவ்வொறு அடியிலும் வட திசையில் மீதமிருக்கும் அளவு சுருங்கும். ஏனென்றால் அதற்கு மேல் வடதிசை இல்லை. அதனைக்கடந்து ஒரு அடி முன்னே வைத்தாலும் செல்லும் திசை தெற்காக மாறும். உலகிலே வேறு எங்குமே, நாம் செல்லும் இடத்தை அடைந்த பின்பும் வடதிசை மிச்சம் உண்டு. வட துருவத்தை அடைந்த பின் வடதிசை முற்றிலும் சுருங்கும். மீதமிருப்பது தென்திசை மட்டுமே. வடதுருவத்தில் தெற்கு தவிர மற்ற மூன்று திசைகளும் முற்றிலும் (சுருங்கி) மறைந்து விடும். கம்பர் இதைத்தான் கூறியுள்ளார் என்பது என் கருத்து.
அநுமன் கிளம்பியது 80 பாகை கிழக்கு தீர்க்காம்ஸம். வடதுருவத்தைக் கடந்தவுடன் அவன் சென்றது 100 பாகை மேற்கு தீர்க்காம்ஸம். (இது அமெரிக்கக் கண்டத்தின் நடுவில் உள்ளது). முன்னே கூறியபடி 66.5 பாகை வடக்கைக் கடந்து வடதுருவத்தைக் கடந்து, தெற்கு நோக்கித் திரும்பி, மீண்டும் 66.5 பாகையைத் தாண்டிய பின் தான் அவன் சூரியனை பார்த்திருக்க முடியும். அவன் அப்பொழுது இருந்த இடம் கானடா நாட்டின் வட பகுதி. சூரியன் இலங்கையில் (8º N, 80ºE) மறைந்தபொழுது, அதே அக்ஷாம்சத்தில் (8º N Latitude),ஆனால் 100 º W ல், உதித்திருக்கும்.அநுமன் இருந்தது இதற்கும் வெகு தூரம் வடக்கிலே. இங்கு சூரியன் உத்த்த நேரம் அநுமன் கிளம்பும் போது சூரியன் மறைவுக்குப்பின் கழிந்த நேரம்,அவன் சூரியனைப் பார்த்தது இதற்குப்பின் எத்தனை நேரத்திக்குப்பின், அவன் பறந்து சென்ற உயரம், இவற்றைப் பொருத்து இருக்கும். இதைக்கருத்தில் கொண்டு பார்த்தால் அநுமனுக்கு எற்பட்டதாகக் கம்பர் கூறும் குழப்பம் விளங்குகிறது. உத்தரகுரு வட அமெரிக்கா என்றாகிறது. ஏனென்றால் உத்தரகுருவை அடைந்த பின் தான் அநுமன் சூரியனைக் கண்டான்.
அநுமன் சூரியனைத் தன் இடதுகைப்புறம் பார்த்தான். அவன் வட துருவத்தைத் தாண்டியதைக் கவனிக்கவில்லை. தான் வடக்கு நோக்கியே சென்று கொண்டிருப்பதாக எண்ணிக்கொன்டிருந்தான். எல்லாக் கலைகளையும் கற்றிருந்தும் மனக்கலக்கம் அடைந்தான். அவன் கிளம்பிய போது அவனது இடது கைப்புறம் மேற்கு. சூரியன் அவனது இடது கைப்புறம் உதிப்பதைப் பார்த்து அவன் தடுமாறினான். ஏன் சூரியன் மேல் திசையில் எழுந்தான் என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டு அதற்குறிய விடையையும் அவனே பெற்றான். அதாவது தான் வட துருவத்தைக் (மேருவை) கடந்து விட்டான் என்றும் தெற்கு நோக்கிச் சென்று கொண்டிருக்கிறான் என்றும் உணர்ந்தான். மேலும், ‘கதிரின் செல்வன் மேல் திசை எழுவான் அல்லன்’ என்றும், கிழக்கிலே தான் எழுந்துள்ளானென்றும், இந்த இடத்திலே இது தான் கிழக்கு என்றும், இங்கே விடிந்து விட்டது என்றும், ஆனால் நான் புறப்பட்ட இலங்கையிலே விடிந்ததும் அன்று என்றும் உணர்ந்து துன்பம் தணிந்தனன். வட துருவத்தையோ (தென் துருவத்தையோ) கடந்தால் வடக்கு தெற்காகும்; கிழக்கு மேற்காகும். மேருவின் வடபால் திசைகள் மாறித்தோன்றும் என்று கம்பர், அநுமன் வாய் வழியாகக் கூறுவது, அநுமன் தான் இன்னும் வடக்கு நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகக் கொண்ட மயக்கத்தைக் குறிப்பிடவேண்டி. மேரு மாற்றினன், வடபால் தோன்றும் என்று மறைகள் வல்லோர் சாற்றினர் என்பதற்கு மேரு திசைகளை இவ்வாறு மாற்றினான் என்று பொருள். வட/தென் திசைகளைக் கடந்தால் திசைகள் மாறும்.
மேரு என்பது வடதுருவம் என்று ஜோதிட நூல்களிலும் கூறப் பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதவே உலகின் நடுப்பகுதி என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் வட துருவம் உலகத்தின் அச்சு முனை. வட துருவத்திலிருந்து பார்த்தால் எல்லாமே தெற்கு தான். முன்பு குறிப்பிட்ட “எந்த சடங்கும் தொடங்கும் பொழுது இடத்தையும் காலத்தையும் குறிப்பிடும் படி ஜம்புத்வீபே பாரதவர்ஷே பரதக்கண்டே மேரோஹோ தக்ஷிணே பார்ஸ்வே என்ற சங்கல்பம் கூறப்படுகிறது”.
இந்த மந்திரத்திற்கு, எனக்கு இவ்வாறு பொருள் தோன்றுகிறது.
ஜம்புத்வீபே- உலகில் (நாவலந்தீவில்) (ஜம்பு என்றால் நாவற்பழம்)
மேரோஹோ தக்ஷிணே பார்ஸ்வே -வட துருவத்திற்குத் தெற்கே- வட துருவத்திலிருந்து பார்ததால் எல்லாமே தெற்கு தான்).
பாரதவர்ஷே -ஆசியாகண்டத்தில்)
பரதக்கண்டே -(இந்தியாவில்). என்று பொருள் கொண்டேன்.
வடதுருவம் (மேரு) உலக அச்சின் ஒரு நுனி். இதை உலகத்தின் மையம் என்று கூறுவது ஏற்புடையதே. மேற்கூறிய மேரோஹோ தக்ஷிணே பார்ஸ்வே பாரதவர்ஷே என்பது பூமியின் கிழக்குப்பாதி (Eastern Hemisphere) என்று நான் பொருள் கொண்டேன். அறிஞர்கள் இதை ஆராய வேண்டுகிறேன்.
அநுமன் வடதுருவத்தைக் கடந்து எவ்வளவு தூரம் சென்றான்? சாம்பன் மேருவினுக்கு அப்பால் உத்தர குருவினைப் பற்றிக் கூறவில்லை. மேருவிற்கு அப்பால் கூறப்பட்ட மொத்த தூரம் 9000+ 2000+ 4000 = 15000 யோசனைகள், அதாவது 15000 x 0.22 = 3300 மைல்கள். இந்த அளவுகள் கம்பருக்குத் தெரிந்திருந்தனவா என்பது கேள்விக்குரியது. இந்தக்கணக்கினை நாம் முன்னே கூறிய காரணங்களால் முழுவதும் சரியென்று எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஏனென்றால் வால்மீகி கூறாத இடங்களைக் கம்பர் கற்பனையாகக் கூறினார் என்றே கொள்ளவேண்டியுள்ளது. இவற்றைச் சரியென்று கொண்டால் மருத்துமலை வட அமெரிக்காவிலுள்ள மிஸ்ஸௌரி நதி அருகில் உள்ளதாகக் கொள்ளவேண்டும்.
கம்பர் கூறிய இடங்கள் புனைந்துரைக்கப் பட்டவை என்றாலும் வால்மீகி கூறாத அநுமனின் இந்தக்குழப்பத்தை ஏன் கூறியுள்ளார். என்னுடைய விளக்கம் என்னவென்றால் தனக்குத் தெரிந்த பூகோள மற்றும் வானவியல் (Geography & Astronomy) அறிவைப் படிப்பவர்களுக்கு விளக்கத்தான். உலகம் உருண்டை என்பது நெடுங்காலமாக உலகில் எல்லா நாட்டினருக்கும் தெரிந்திருக்கவில்லை. உலகம் தட்டையானது என்றே எண்ணியிருந்தனர். சூரியன் உதிப்பது கிழக்குக் கடலிலே அல்லது உதயகிரியிலே/ அருணகிரியிலே என்றும் மறைவது மேற்குக்கடலிலிலே அல்லது அஸ்தமன/அத்த கிரியிலே என்றும் எண்ணியிருந்தனர். மேற்கண்ட பாடல்களின் படி கம்பருக்கு உலகம் உருண்டையானது என்றும் வட துருவம் என்று உண்டு என்றும் அதற்கு அப்பால் நாடுகள் உள்ளன என்றும் தெரிந்திருந்ததாகக் கொள்ளவேண்டியுள்ளது. அங்குள்ள நாடுகளைப் பற்றிக் கற்பனையாகக் கூறினாரா அன்றி அறிந்திருந்தாரா?
அநுமனுக்கு எற்பட்ட குழப்பத்தையும் அதற்கு அவன் கண்ட விடையையும் ஏன் கம்பர் விரிவாகக்கூறவில்லை. அநுமன் மிக்க மன அழுத்தத்தோடு சென்று கொண்டிருந்த பொழுது அவனுக்கு இந்த பின்னடைவு ஏற்பட்டது. அவன் அல்லின் பாதியில் மருந்து கொணரச் சென்று கொண்டிருந்தான். அந்த நேரத்திலே விரிவாக 5/6 பாடல்களில் கூறி நேரத்தை வீணடிக்க கம்பர் விரும்பவில்லை போலும்!! ஏனென்றால் படிப்பவர்களும் அநுமன் தான் மேற்கொண்ட காரியத்தில் வெற்றி பெற்றானா இல்லையா என்று அறியத்தான் ஆர்வமுடையோராய் இருப்பர். தவிர சாத்திரம் வல்லோர் முன்பே இதைக் கூறியுள்ளமையால் ஆர்வம் உள்ளவர்கள் அந்த சாத்திரங்களைப் படித்துத்தெரிந்து கொள்ளட்டும் என்று குறிப்பால் (cryptic) உணர்த்தி விட்டுவிட்டாரா?

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff (in tamil script)

Post by cmlover »

நனறி. மிக விரிவான ஆராய்ச்சி கட்டுரை. இதை பூகோள அறிவாளிகள் ஆராய்ந்து பதில் கூறவேண்டும்.

கன்னியாகுமரி அருகே மூன்று மைல் தொலைவில் மருத்துவாமலை (மருந்து வாழ் மலை என்பதன் மருபு) கர்ண பரம்பரையாக அனுமன் சஞ்சீவி பர்வதம் எடுத்து செல்லும் போது விழுந்த ஒரு துகளாகக் கருதுகிறார்கள். கொடிய நோய்களைத் தீர்க்கும் மூலிகைகள் பல அங்குண்டு எனக் கேள்வி. புதைபொருள் ஆராய்ச்சியாளர் க்வனத்திற்கு! உங்களது கேள்விக்கும் விடை கிடைக்கலாம்

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff (in tamil script)

Post by sridhar_ranga »

நீலம்

நீலமென வந்தாய் நிலமெங்கும் நீசெய்த
கோலமது காணாயோ? கேளாயெம் ஓலம்.
இயலாதே எம்மால் இனியுன்னைத் தாங்க;
புயலேநீ தென்றலாய் மாறு!

(inspired by the phrase 'puyalE tenRalAy mARu' which I came across elsewhere)

rshankar
Posts: 13754
Joined: 02 Feb 2010, 22:26

Re: If you are a venpA buff (in tamil script)

Post by rshankar »

sridhar_rang wrote: 'puyalE tenRalAy mARu'
Should have been our prayer as we withstood the onslaught of Sandy

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff (in tamil script)

Post by sridhar_ranga »

Yes, should be your prayer for sure as well Ravi....heard a Nor'easter is out to test you New Yorkers' resilience once again.

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff (in tamil script)

Post by sridhar_ranga »

நமக்குத் தொழில் அரசியல்
---------------------------------------

சோம்பித் திரிகின்றேன் சும்மா இருக்கின்றேன்
ஓம்பி வளர்த்த உடல்கொண்டேன் - வீம்புடன்
தம்பியர்பு டைசூழத் திரிவேன்; இனிநிற்பேன்
எம்.பி எலெக்.ஷனில் இங்கு

Post Reply