Short Stories (in Tamil script)

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Short Stories (in Tamil script)

Post by venkatakailasam »

இழுத்து முடிந்த கொண்டையில் மலர் சூடி
தலையில் ஏற்றிய தயிர் சட்டியை ஒரு கையில் தாங்கி
மற்றொரு கையை வீசி இடுப்பை சற்றே வளைத்து
வாயினால் 'அம்மா தயிர்' என கூவி அழைத்து வரும் தயிர்காரி...
'அம்மா தயிர்' என கூவுவதில் பொதிந்து கிடக்கும்
அழகான ராகம்! குழைவு! பிடித்த ராகங்களை
சூட்டி மகிழ்ந்தது மனம்....
'ஏண்டா...சாப்பிடாமல் சாதத்தை
அலப்பி கொண்டு இருக்கே'...இது அம்மா..
'என்னம்மா...அரிசியை எண்ணரானா..இல்லை
கடுகையா..'. இது ..என் அக்கா...
இரண்டுமே இல்லை...
இந்த அடிக்கு நிரவல் கூட்டு பார்க்கலாம்...
'அம்மா தயிர்'...
'ஏண்டா..எத கேட்டாலும் சுரம் பாடு நிரவல் பாடுன்னு சொல்றே'..அக்கா
குடி இருக்கும் மாமா பேசும் சப்தம் கேட்டது...
'அடி பட்டு..கொஞ்சம் வாயேன்"..அம்மாவை பார்த்தேன்..
அம்மா சிரித்தாள்....
சரி...அக்கா..அத விடு...
'அடி பட்டு..கொஞ்சம் வாயேன்'.....இதுக்கு முடியுமா?
அக்கா நன்றாக பாடுவாள்....நீளமாக ஆரபி ராக ஸ்வரம் பாடி
'அடி பட்டு..கொஞ்சம் வாயேன்'....விஸ்தாரமாக நிரவல் பாடினாள்..
'அடிபட்டு’ வும் 'கொஞ்ச வாயேன்' என்றதும் சிரிப்பை வரவழித்தது...
ஏனக்கா அடிபட்டவா கொஞ்ச வருவாளா?
ஆக, நிரவல் போட சங்கீத மும்மூர்த்திகளின் பாட்டெல்லாம்
தேவைஇல்லை....
அக்காவுக்கு நான் சமீபத்தில் படித்த
ஒரு கட்டுரையை படித்து காண்பித்தேன்....
http://www.radioweb.in/unusual-pallavi-themes
டைகர் வரதாச்சாரிக்கு பிடித்த இரண்டு
பல்லவிகள்...
'உப்புமா கிண்டடி பெண்ணே, நன்றாக'
'கத்தரிகாய் வாங்க வாயேண்டி, தோழி'
பல்லவி பாட வார்தைகள் முக்கியம் இல்லை..
சொந்த கற்பனை தான் முக்கியம்….

arasi
Posts: 16789
Joined: 22 Jun 2006, 09:30

Re: Short Stories (in Tamil script)

Post by arasi »

VKailasam,
A nice snippet from you.

Tamizh pallavi lines are appealing. Your aDi pATTu in Arabhi is no exception. The
tayir and katharik kAi seller's musical vending words make good pallavi lines too.

Does anyone remember a ditty which goes like this? : uppumAvaik kiNDip pAraDi!
A funny one. Maduraimini might know more lines.


Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Short Stories (in Tamil script)

Post by Ponbhairavi »

தயிர்காரி என்றதும் கவி காளமேகத்தின் கிண்டல் பாட்டு நினைவுக்கு வருகிறது:

கார் என்று பேர் படைத்தாய் ககனத்து உறும் போது
நீர் என்று பேர் படைத்தாய் நீள் நிலத்து உற்ற பின்
வார் ஒன்று வன்மொழி யார் ஆச்சியர்கை பட்டபின்
மோர் என்று பேர் படைத்தாய் முப்பேரும் பெற்றாயே
Last edited by Ponbhairavi on 09 May 2013, 11:23, edited 1 time in total.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Short Stories (in Tamil script)

Post by cmlover »

பலே!
"முப்பேரும் பெற்றாயே"

arasi
Posts: 16789
Joined: 22 Jun 2006, 09:30

Re: Short Stories (in Tamil script)

Post by arasi »

Ponbharavi,
Liked that!

CML,
muppErum peTRa nilam, nam nilam.
mElum Or pEr kUTTa...

nIr (annai kAvEri)
mOr (give us more)!
vAr (pour) wAr (saNDai)
kAr (dark rain clouds)--without which all the above are of no avail!

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Short Stories (in Tamil script)

Post by cmlover »

He indicates sarcastically that the plain water is getting three names viz., kAr, nIr, mOr..
vAr is the ' thAmbu kayaRu' used by the Acciyar to churn..which is a cheat since they ultimately give
only water in the name of mOr...

arasi
Posts: 16789
Joined: 22 Jun 2006, 09:30

Re: Short Stories (in Tamil script)

Post by arasi »

That's what I guessed. A lucky guess.

The rest was what came about when I played around with the words.

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Short Stories (in Tamil script)

Post by Ponbhairavi »

This also shows that even in the days of Kalamegam(about 500 years back ?)the butter milk which is an indispensable daily food item for the poor was being diluted and sold!!
contrast this with the following;
About 10 months back I had been to Brindhavan ( Agra) and I saw at about 11 oclock noon a tanker lorry fully laden with milk slowly moving in the streets stopping every now and then.people living nearby mostly small boys and girls brought their own containers ( small vessels with a maximum capacity of 1 to 2 litres ) and filled them with the milk themselves ( totally free) operating the tanker taps themselves. there was no tap operator and more surprizing no stampede not even crowding nor even a small queue.!!--contrast this again with drinking WATER lorries in chennai which SELL water amidst terrible stampede where it is commonsight to see ladies thrown away in the streets with their குடம் snatched.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Short Stories (in Tamil script)

Post by venkatakailasam »

Image


Image

நான்,அம்மா, அக்கா மூன்று பேரும்
நேற்று மாலை பேசிகொண்டு இருந்தோம்..
ஒன்றுமில்லை வெறும் வம்பளப்பு...
எல்லார் வீட்டு விஷயங்களையும் அலசியாச்சு...
அம்மா ஊஞ்சலில் லேசா ஆடிண்டு இருந்தா..
அக்கா மங்கையர் மலரில் ஒரு கண்ணும்
பேச்சில் ஒரு காதுமாக அவதானியாக இருந்தாள்...
என் மனம் ஊஞ்சலாடி கொண்டிருந்தது..
ஏம்மா தியாகராஜர் பாடல்களில் உனக்கு
ரொம்ப பிடிச்ச பாட்டு எது?
என்னடா ..இப்படி கேட்டால் என்ன பதில் சொல்ல ?
சஹஸ்ர நாமத்தில் வர ஆயிரம் நாமத்தில்
எந்த நாமம் பிடிக்கும் என்றால் எதை சொல்வது?
என்னடா...என்னை கேட்க மாட்டாயா?
நீ தான் சொல்லேன்?
எனக்கு பிடித்தது கல்யாணியில் 'நிதி சால சுகமா'
ஏன்?
செல்வத்தினால் எல்லா சுகத்தையும் தர முடியாது
என்பதை அழகாக சொல்றார்.. இல்லையா?
அக்கா...ஆனா அது எவ்வளவு கஷ்டத்தை தந்தது?
ஆமாண்டா...அவருக்கு கஷ்டம்..ஆனால் நமக்கு சுகம்...
என்னக்கா சொல்லவரே?...
ஆமாம்...அதனால் அவர் பூஜித்த
விக்ரகங்களை அவருடைய அண்ணா ஜப்யேஸா
ஆற்றில் தூக்கி எறிந்தார். மனமுடைந்த
தியாகராஜா ஷேத்ராடனம் போனார்...
நமக்கு கிடைத்தது ...
கோவூர் பஞ்சரத்னம்
திருவொற்றியூர் பஞ்சரத்னம்
லால்குடி பஞ்சரத்னம்
ஸ்ரீரங்கம் பஞ்சரத்னம்
இன்னமும் பல ஷேத்ர கிருதிகள்..
எல்லாம் நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள்..
இல்லையாடா?
ஆமாண்டி...நீ சொல்லரது சரி தான்..
ராமருடைய அருள் தான் அதுவும் ...அம்மா…

லாஜிகலா அக்கா சொல்வது சரி என்றே தோன்றியது..
தலையை அசைத்தேன்...

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Short Stories (in Tamil script)

Post by venkatakailasam »

For a change, a moral story in English..



The Frog in the Shallow Well
a Chinese Fable

Once a frog that lived in a well bragged to a turtle that lived in the Sea.

"I am so happy!" cried the frog, "When I go out, I jump about on the railing around the edge of the well.
When I come home, I rest in the holes inside the wall of the well.
If I jump into the water, it comes all the way up to my armpits and I can float on my belly.
If I walk in the mud, it covers up my flippered feet.
I look around at the wriggly worms, crabs, and tadpoles, and none of them can compare with me.
I am lord of this well and I stand tall here. My happiness is great.
My dear sir, why don't you come more often and look around my place?"

Before the turtle from the Sea could get its left foot in the well, its right knee got stuck. It hesitated and retreated. The turtle told the frog about the Sea.

"Even a distance of a thousand miles cannot give you an idea of the sea's width; even a height of a thousand meters cannot give you an idea of its depth.
In the time of the great floods, the waters in the sea did not increase. During the terrible droughts, the waters in the sea did not decrease.
The sea does not change along with the passage of time and its level does not rise or fall according to the amount of rain that falls. The greatest happiness is to live in the Sea."

After listening to these words, the frog of the shallow well was shocked into realization of his own insignificance and became very ill at ease.

Moral....

When you interact, you evolve and expand your horizon....

A quote from TOI

When you interact, you evolve and expand your horizon, writes Devdutt Pattanaik

Kupa manduka is a Sanskrit phrase for the frog in the well that imagines the well, its home, to be the whole world and, therefore, becomes pompous.

It is a term of derision for the intellectually complacent, for someone who thinks he knows everything there is (nothing) to know (more).

In a way, we are all frogs in a well.

Our well has time, space and words as its walls.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Short Stories (in Tamil script)

Post by venkatakailasam »

எல்லாம் சரியாக நடக்கும்..
..................................................
ஒருவன் மிகுந்த வருத்தத்துடன் இருந்தான்
அடுத்தவன் அதன் காரணம் கேட்டான்
முதல்வன் எப்படியெல்லாம் சீராட்டி வளர்த்தசெடி
செத்துவிட்டது எனச் சொல்லி அழுதான்..!
குளிர்காலத்தில் செடிக்கு வெந்நீர் ஊற்றினானாம்..!
குளிர்காலத்தில் இவனுக்கு வெந்நீர் தேவைப்பட்டது
செடிக்கும் அக்கறையுடன் வெந்நீர் ஊற்றியிருக்கிறான்..!
இப்படித்தான் பெரும்பாலான மனித மனங்கள்...

'Olive Tree' என்ற அருமையான ஆங்கிலக் கவிதை -
இரண்டு துறவிகள் இரண்டு மலை குகைகளில்
இறைவனை எண்ணி வாழ்ந்தனர்.
இரவு நேரங்களில் இறைவனை எண்ண, எழுத
வெளிச்சம் தேவைப்பட்டது.
வெளிச்சத்திற்காக விளக்கும்,
விளக்கிற்காக எண்ணையும்,
எண்ணைக்காக ஆலிவ் விதைகளும்,
விதைகளுக்காக ஆலிவ் செடிகளும்
தேவைப்பட, இறைவனை வேண்ட
அவரும் வந்தார் செடிகளைத் தந்தார்.
அவைகளைக் காக்க என்னென்ன கேட்கிறார்களோ
அவையனைத்தும் கிடைக்க வரமும் தந்தார்..!
கடவும் மறைந்தார்..
துறவிகளுக்கு மகிழ்ச்சி..

ஒரு துறவி தன் செடி வாடியிருக்கக் கண்டார்.
மழை வேண்டுமென்றார்.. வந்தது.
மழை அதிகமென்றார்.. குறைந்தது.
வெயில் வேண்டுமென்றார்.. வந்தது.
வெயில் அதிகமென்றார்.. குறைந்தது.
அவர் சொன்னதெல்லாம் நடந்தது.
ஆயினும் செடி மடிந்தது.

அடுத்து ஒரு அதிசயம்.
அடுத்த துறவியின் செடி செழித்திருந்தது.
தான் கேட்காத ஏதோவொன்றை
அவர் கேட்டிருக்கக்கூடும் என எண்ணி
அவரைக் கேட்டார்.
அவரோ -
'செடியை நீயே பார்த்துக்கொள்!'
என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டாராம்.
செடி செழித்தது!

சற்று நினைத்துப் பாருங்கள்...
உங்களுக்கு எண்ண தேவை என்று உங்களுக்குப் புரிகிறதா?
எல்லா வசதிகளும், செல்வங்களும்
நிறைந்த பல சீமான்கள்
தற்கொலை செய்து கொண்டார்களே?
செல்வத்திற்கு மேலாக ஏதோவொன்று
தேவைப்படுவது புரிகிறதா?
நீ கேட்டா உன் இதயம் துடிக்கிறது?
நீ கேட்டா உன் சுவாசம் நடக்கிறது?
இயற்கையை கெடுக்காமல் இரு

--- perumal rasu ayya


A share from a friend Bala Chander

Relevant poem is at

http://www.spiritualeducation.org/libra ... olive_tree

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Short Stories (in Tamil script)

Post by venkatakailasam »

One more story...

அந்த ஊர் ஒரு விவகாரம் பிடிச்ச ஊரு. அந்த ஊர் பள்ளிக்கூடத்துக்கு ஒரு கல்வி ஆய்வாளர் வந்தார். ஆறாம் வகுப்புல நுழைஞ்சோன எல்லாப் பசங்களும் நின்னாங்க. எல்லாத்தையும் உக்காரச் சொல்லிட்டு ஒரு பையன எழுப்பினார். நான் இப்பொ கம்ப ராமாயணத்துல இருந்து கேள்வி கேக்கறேன் சொல்லுன்னு சொல்லிட்டு...........
"ஜனகரின் வில்லை உடைத்தது யார்?"
பையன் அழ ஆரம்பிச்சுட்டான்.
"சார் சத்தியமா நான் உடைக்கல......."
ஆய்வாளருக்கு கோபம் வந்துரிச்சு. ஒரு பையன அனுப்பி தமிழ் வாத்தியார கூட்டி வரச் சொன்னாரு. தமிழ் வாத்தியார் வந்தோன............
"என்னய்யா உன் கிளாஸ் பையன் இப்படி பதில் சொல்றான். ஜனகரின் வில்லை உடைத்தது யார்னு கேட்டா நான் இல்லனு சொல்றான்."
"எந்த பையன் சார்?"
"இதொ இவந்தான்"

"சார் இவன் நல்ல பையன் சார். கண்டிப்பா இவன் உடைச்சுருக்க மாட்டான்."
ஆய்வாளர் டென்ஷன் ஆயிட்டாரு. கூப்பிடுயா ஹெச்.எம் மை ன்னு சொல்ல அடுத்த நிமிஷம் ஹெச்.எம் ஆஜர். அவர்கிட்ட நடந்ததைச் சொன்னோன ஹெச்.எம் மெதுவா கேட்டார்.
"சார் எந்த பையன்?"
"இதொ இவந்தான்"
"சார் நம்ம பள்ளிக்கூடத்துலயே இவந்தான் ரொம்ப நல்ல பையன் சார். கண்டிப்பா இவன் உடைச்சுருக்க வாய்ப்பே இல்ல. நீங்க ஒரே ஒரு நாள் டைம் கொடுங்க சார். இங்க இருக்கர பசங்கள்ள எவன் உடைச்சான்னு கண்டுபிடிச்சு உங்க கிட்ட ஒப்படைக்கிறேன்."
அவ்வளோதான் கல்வி ஆய்வாளர் மண்டைய பிச்சுக்கிட்டு ஓடிட்டாரு.
Brahminsnet

arasi
Posts: 16789
Joined: 22 Jun 2006, 09:30

Re: Short Stories (in Tamil script)

Post by arasi »

VKailasam,
Thanks, doubly..!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Short Stories (in Tamil script)

Post by venkatakailasam »

யோகியின் பயணம்..

அந்த யோகி விமானத்தின் உள்ளே சென்று தனது பயணச்சீட்டில் அச்சிட்டிருந்த ‘11B’ என்ற இருக்கையை தேடிக்கொண்டிருந்தார்.

மூன்று இருக்கைகள் கொண்ட ABC வரிசையில் இவருடையது நடுஇருக்கையாக அமைந்திருந்தது.




யோகியின் வலதுபக்கம் நெற்றிநிறைய திருமண் பூசியபடி ஒரு ஆத்திகர் இவரை கண்டதும் மகிழ்ச்சியுடன் எழுந்து வணக்கம் சொன்னார்.

இடதுபக்கம் எந்த சலனமும் இல்லாமல் ஒருவர் அமந்திருந்தார். இடதுசாரியில் இருப்பவர்களுக்கு அனேகமாக இறை நம்பிக்கை இருப்பதில்லை என்பது உலகறிந்த உண்மை.

அவரிடமும் வணக்கம் சொல்லி யோகி அமர்ந்தார். அனைவரையும் வானில் சுமந்து பறந்தது ராக்‌ஷத பறவை.

சில நிமிடம் கரைந்திருக்கும், வலதுபக்கம் இருப்பவர் யோகியை பார்த்து...

“ஸ்வாமிஜி, இறைவனை பற்றி நான் நினைத்து ஆச்சரியப்படாத நாளே இல்லை..இறைவன் மிகப்பெரியவன் இல்லையா” என தன் ஏழு

மணிநேர பயணத்திற்கு தேவையான பேச்சை துவங்கினார்.

சில நிமிடம் மெளனமாக கரைந்தது...

யோகி வலது பக்கம் இருந்த ஆத்திகரை நோக்கி கேட்டார், “ ஒரு புல்வெளியில் மாடு, குதிரை மற்றும் ஆடு ஆகியவை மேய்ந்து கொண்டிருக்கிறது. அவை எல்லாம் ஒரே வகையான புல்லை சாப்பிட்டாலும் ஏன் அவைகள் சாணமிடும் பொழுது ஒரே போல இல்லாமல் மாடு சாணியாகவும், குதிரை உருண்டையாகவும் ஆடு புழுக்கையாகவும் கழிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?”

“தெரியவில்லையே ஸ்வாமிஜி. இதுக்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம்?” என்றார் ஆத்திகர்.

“விஞ்ஞானத்தின் அடிப்படையே தெரியவில்லை உங்களுக்கு மெய்ஞானத்தின் தலைவனாக கடவுளை பற்றி கருத்து சொல்லுகிறீர்கள். கடவுளின் படைப்பையே உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையே. எதை வைத்து கடவுள் பெரியவன் என சர்ட்டிபிக்கேட் கொடுக்க வந்தீர்கள்?”

எதிர்பாராத கேள்வியால் நிலைகுலைந்த வலதுசாரிக்காரர் விமானத்தில் கொடுக்கப்படும் புத்தகத்தை பிரித்து அதில் முகம் புதைத்தார்.

இந்த சம்பாஷணையை கேட்டபடி இருந்த இடதுசாரிக்காரர் “ம்க்கூம்...” என தொண்டையை கணைத்து யோகியின் முகம் பார்த்தார்.

பிறகு “ஐயா, எனக்கு நீங்கள் கேட்ட கேள்விக்கு விடை தெரியும். மாடு, குதிரை மற்றும் ஆடு ஆகியவை ஒரே புல்லை சாப்பிட்டாலும் அவை ஒவ்வொன்றின் குடல் அமைப்பும் ஒன்றல்ல. அதனால் அவற்றின் மலக்குடலின் அமைப்புக்கு ஏற்ப அவை மலம் கழிக்கிறது. கடவுள் இருக்கிறாரா என்பது தெரியவில்லை. ஆனால் விஞ்ஞானம் இருக்கிறது என்பது எனக்கு தெரியும்” என கூறி முகத்தை பெருமிதத்துடன் வைத்துக்கொண்டார்.

அவரை புன்புறுவலுடன் பார்த்த யோகி, “ வாழ்க்கையில் மலத்தை ஆராய்ச்சி செய்வதிலேயே திருப்தி அடைவதை விட்டுவிட்டு உயர்ந்த விஷயத்தை உணர முயலுங்கள். விஞ்ஞானம் எல்லைக்கு உட்பட்டது. மெய்ஞானம் எல்லையற்றது. மலத்தை விடுத்து உங்கள் பார்வையை மேம்படுத்தினால் இறைவனும் இருக்கிறார் என தெரியவரும்” என்றார்.

வலது சாரிகளும் இடது சாரிகளும் மெளமாக நடுநிலையாக அமர்ந்திருந்த யோகியின் பயணம் தொடர்ந்தது.

A share from Sivaraman Ramachandran

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Short Stories (in Tamil script)

Post by cmlover »

(தொடர்ச்சி)
சிறிது நேரம் சென்றது.
திடீரென விமானம் நிலை குலய ஆரம்பித்தது.
மேலிருந்து oxygen mask விழத்துடங்கியது..
ஆத்திகருக்கும் யோகிக்கும் Mask விழவில்லை.
இடதுசாரிக்காரர் Mask விழத்தொடங்கியது.
திடீரென யோகியார் தத்வமஸி (நீர் தான் கடவுள்) என்று கூறி
அந்த Maskஐ பிடுங்கி தன் முகத்தில் பதித்துக்கொண்டார்..
(Somebody continue the story :)

arasi
Posts: 16789
Joined: 22 Jun 2006, 09:30

Re: Short Stories (in Tamil script)

Post by arasi »

Snatching the mask from him, Athigar said: umakku mElE reservation confirmed, avanukkO nambikkaiyillai, nAn pizhaithuk koLgiREn!

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Short Stories (in Tamil script)

Post by cmlover »

Good!
Continue..

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Short Stories (in Tamil script)

Post by Ponbhairavi »

"
In the dispute,the connection tubes got badly mangled.An air hostess who rushed there said :" wait wait..Do not tear it up; I will demonstrate how you should do it " She took it from them and in an utmost leisurely manner put it on herself and was decided not to part with it'. The three were looking at her like cats in the monkey arbitration fable.
In utter disgust, the swamiji said : " I am able to see the vision of the future right in front of my eyes, we three are going to die. This girl will survive and meet her Prince Charmant in another flight and marry him to be the happy Queen of a huge empire...

.....Until in the next avatar Vishnu the Lord SupreMo discards her for this treacherous act.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Short Stories (in Tamil script)

Post by cmlover »

சிறிது நேரத்தில் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது.
Air Hostessம் வேறு சிலரும் மட்டுமே உயிர் பிழைத்தனர்.
மூவரும் சித்திரகுப்தன் முன் ஆஜராக்கப் பட்டனர்.
முதலாவதாக ஆத்திகர் ஆஜராக்கப் பட்டார்.
"நான் எப்பொழுதுமே இறைவன் சிந்தனையில் இருப்பவன்
அதனால் உடனடியாக என்னை வைகுண்டம் அனுப்ப வேண்டும்"
என்று கோரினார் ஆத்திகர்.
புன்சிரிப்புடன் சித்திரகுப்தன் கூறினான்
"நீர் சொல்வது உண்மை. ஆனால் வாழ்வில் ஒரு முறையாவது
துயரப்படும் மக்களைப்பற்றி சிந்தித்ததிலை, அளவிடாத செல்வம் இருந்தும்.
மக்கள் சேவையே மகேசன் சேவை என அறிந்திலீர். ஆதலால் நீர்
இனியொரு பிறவி எடுத்து மக்கள் தொண்டு செய்து பின் வைகுண்டம்
அடைவீராக"
அடுத்ததாக யோகி ஆஜராக்கப் பட்டார்.
"நான் யோகப்பயிற்சியால் குண்டலியை எழுப்பி சமாதி நிலை
அடைந்தவன். எனக்கு இனி பிறவி கிடையாது. உடனடியாக என்னை
சொர்கத்துக்கு அனுப்புங்கள் என்றார்" யோகியார்.
புன்சிரிப்புடன் சித்திரகுப்தன் கூறினான்.
"நீர் போட்டது வெளி வேஷம். உமக்கு உடலின் மீதுள்ள ஆசை
நீங்கவில்லை. அதனால்தான் பக்கத்திலுள்ளவரின் Maskஐ பறித்து
உயிர் வாழ நினைத்தீர். அவர் இறப்புக்கும் காரணமானீர். ஆதலால்
இந்த உடல் பற்று நீங்குமட்டும் நரகத்தில் உழல்வீராக".
முடிவாக இடதுசாரியார் ஆஜராக்கப் பட்டார்.
அவர் கூறினார்:
"எனக்கு கடவுள் நம்பிக்கை கிடயாது.
வாழ் நாள் முழுவதும் மக்கள் நல் வாழ்வுக்காக போராடினேன்.
சிறிது வெற்றியும் பெற்றேன். "
புன்சிரிப்புடன் சித்திரகுப்தன் கூறினான்
"நீர் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டவர். உமக்கு
சொர்க வாசல் திறந்திருக்கிறது. உடனடியாகச் செல்லவும்..."
(முற்றும்)
They also serve who only "serve" and wait!

arasi
Posts: 16789
Joined: 22 Jun 2006, 09:30

Re: Short Stories (in Tamil script)

Post by arasi »

:)

By reading the concluding post of yours, I was happy to see that up there, there are also no differences about where you are going to end up. vaikuNTam and KailASam are not specifically designated to one form of worshippers or other!

Yes, mAnava sEvA mAdhava sEvA...

Here on earth though, those airborne men and women employees are now called stewards and stewardesses.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Short Stories (in Tamil script)

Post by cmlover »

Yes
mAnava sEvA mAdhava sEvA .... for those who want to go to vaikuNTA
mAnava sEvA mahEshvara sEvA ... for those who want to go to Kailasam
:)

arasi
Posts: 16789
Joined: 22 Jun 2006, 09:30

Re: Short Stories (in Tamil script)

Post by arasi »

One mAnava sEvA of a particular Kailasam is manam niRaikkum (soul satisfying) pADalgaL (music) sEvA :)

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Short Stories (in Tamil script)

Post by Ponbhairavi »

Arasi
Noted for future guidance. Thanks. I have assumed that the story relates to a past when they were called Air hostess
- Vive la difference!

arasi
Posts: 16789
Joined: 22 Jun 2006, 09:30

Re: Short Stories (in Tamil script)

Post by arasi »

Ponbhairavi,

Of course!
What they are called matters not, so long as they do their job!
This was an easy one for me to remember. The way we 'youngsters' struggle to keep up with constantly changing appellations and descriptions of things in every part of the world :(

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Short Stories (in Tamil script)

Post by cmlover »

arasi wrote:One mAnava sEvA of a particular Kailasam is manam niRaikkum (soul satisfying) pADalgaL (music) sEvA :)
One such sEvA is expertly done by our Vkailasam and the other done splendidly by you!
What is your choice Kailasam or VaikuNTaM :)

arasi
Posts: 16789
Joined: 22 Jun 2006, 09:30

Re: Short Stories (in Tamil script)

Post by arasi »

My choice? So long as the trip's destination is not to that 'too darn hot' place #:-s

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Short Stories (in Tamil script)

Post by cmlover »

Come and join us @Canada. You'll never know what "hot" is :)

arasi
Posts: 16789
Joined: 22 Jun 2006, 09:30

Re: Short Stories (in Tamil script)

Post by arasi »

You mean, 'paradise' on earth?
I hear that in the 'other place' I was referring to, there is no air conditioning :)

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Short Stories (in Tamil script)

Post by cmlover »

Don't know about that. But I heard they use Nuclear oven instead of the conventional wood-burning ones.
Consequently the Kinkaras were getting lot of cancer problems and asking for remedy and compensations.
Kubera is on the verge of declaring bankruptcy. (too bad he invested in Indian Rupees :)
Mahalakshmi is planning to redeem him by pawning her Gold Jewelry!
(an idea she got from Chidambaram :)
Benefit concerts by Saraswathy accompanied by Narada are also being planned.
I guess she may sing some of your compositions for a Novelty!

arasi
Posts: 16789
Joined: 22 Jun 2006, 09:30

Re: Short Stories (in Tamil script)

Post by arasi »

:))

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Short Stories (in Tamil script)

Post by venkatakailasam »

முட்டாளும் புத்திசாலியும்

மழை! ஓயாத மழை! ஏரி நிறைந்து வழியும் அளவுக்கு மழை. அந்த ஏரி நீர் குளிர்ச்சி அடைந்து விட்டது. அந்தக் குளிரைத் தாங்க முடியாத ஒரு தவளை, மழை ஓய்ந்ததும் சற்று தூரத்திலுள்ள ஒரு கிணற்றுக்கு வந்தது. கிணற்று நீர் வெது வெதுப்பாக இருக்குமே என்பதால் கிணற்றிற்குள் குதித்தது.

அந்தக் கிணற்றில் பல காலமாக வாழ்ந்து வந்த ஒரு தவளை இந்தப் புதிய தவளையை வரவேற்றது. 'நான் வெகுநாட்களாகப் பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன். உன்னைக் கண்டதும் எனக்கு மகிழ்ச்சி' எனக் கூறிப் பொந்தில் வைத்திருந்த உணவு வகைகளைப் புதிய தவளைக்குத் தந்தது.

இரண்டு தவளைகளும் பேசிக் கொண்டிருந்தன. கிணற்றிலிருந்த மற்ற தவளைகளுக்குப் புதிய தவளை வந்தது பிடிக்கவில்லை. 'இங்கே கிடைக்கும் உணவு நமக்கே போதவில்லை. இதில் புதிய விருந்தாளி வேறு' எனக் கவலைப்பட்டன. புதிய விருந்தாளியை எப்படியும் துரத்திவிட முடிவு செய்தன.

இரண்டு தவளைகளும் பேசிக்கொண்டிருப்பதை அருகே சென்று வேடிக்கை பார்த்தன. அப்போது அக்கிணற்றுத் தவளை ஏரித் தவளையிடம், 'நண்பனே! நீ இத்தனை நாளும் எங்கே தங்கியிருந்தாய்?' எனக் கேட்டது.

'நான் ஏரியில் தங்கி இருந்தேன்' என்றது ஏரித் தவளை.

'ஏரியா? அப்படியென்றால் என்ன?' எனக் கேட்டது கிணற்றுத் தவளை.

'இந்தக் கிணற்றைப் போன்ற பெரிய நீர் நிலை. அதில் மீன், ஆமை, முதலை ஆகியவை உண்டு' என்றது ஏரித் தவளை.

'இந்தக் கிணற்றைப் போன்றதில் அவ்வளவு உயிரினங்களா?' என்று கேட்டது கிணற்றுத் தவளை.

'இந்தக் கிணற்றைவிட மிகப்பெரியது ஏரி' என்றது ஏரித் தவளை.

கிணற்றுத் தவளை நம்பவில்லை. 'நண்பா நீ பொய் சொல்லுகிறாய். இந்த கிணற்றைவிட பெரிய நீர் நிலை உலகத்தில் இருக்க முடியாது' என்றது.

ஏரித் தவளை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், கிணற்றுத் தவளை நம்பவில்லை. கூட இருந்த மற்ற தவளைகளும் நம்பவில்லை.

எல்லாத் தவளைகளும் ஏரித் தவளையைப் பார்த்து 'நீ பொய்யன், புரட்டன், உன்னை நம்பி இங்கே வைத்திருந்தால் ஆபத்து' என்று கூறி ஏரித் தவளையைத் தாக்க முயன்றன.

அப்போது, கிணற்றிலிருந்து நீர் எடுக்க ஒரு பெண் தோண்டியை இறக்கிய போது, அதனுள் தாவிச் சென்று குதித்த ஏரித் தவளை, தோண்டித் தண்ணீ­ருடன் மேலே சென்றது. தாவிக் குதித்து ஏரி நோக்கிச் சென்றது.

முட்டாள்களிடம் வாதாடுவதை விட அவர்களிடமிருந்து ஒதுங்கிச் செல்வதே சிறந்தது.

read at net a few days back...http://www.koodal.com/jokes/stories.asp ... mil-online

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Short Stories (in Tamil script)

Post by venkatakailasam »

An Arab Sheik was admitted to hospital for heart surgery, but prior to the
surgery, the doctors needed to store his type of blood in case the need
arose.

As the gentleman had a rare type of blood, it couldn't be found locally,
so, the call went out.

Finally a Scotsman was located who had a similar blood type. The Scot
willingly donated his blood for the Arab.

After the surgery, the Arab sent the Scotsman in appreciation for giving
his blood, a new BMW, diamonds and $50,000 dollars.

A couple of days later, once again, the Arab had to go through a
corrective surgery.

The hospital telephoned the Scotsman who was more than happy to donate his
blood again.

After the second surgery, the Arab sent the Scotsman a thank-you card and
a box of Laura Secord chocolates.

The Scotsman was shocked that the Arab did not reciprocate his kind
gesture as he had anticipated.

He phoned the Arab and asked him: "I thought you would be generous again,
that you would give me another BMW, diamonds and money ... but you only
gave me a thank-you card and a box of chocolates."

To this the Arab replied: "Aye laddie, ya see I now have Scottish blood in ma
veins"

A share from a friend..
Last edited by venkatakailasam on 25 Sep 2013, 19:55, edited 1 time in total.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Short Stories (in Tamil script)

Post by venkatakailasam »

In the above post...One thing I am not able to appreciate...Even When he was willing to donate blood, the Scotsman was running the same Scots blood..

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Short Stories (in Tamil script)

Post by cmlover »

To start with the Scotsman knew that the Arab had Arab blood and will be generous. Hence he donated!
If it was reversed and the Arab had given blood to the ailing Scotsman he would have become a Jihadist :)

arasi
Posts: 16789
Joined: 22 Jun 2006, 09:30

Re: Short Stories (in Tamil script)

Post by arasi »

The irony of reality!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Short Stories (in Tamil script)

Post by venkatakailasam »

Image

அம்மா!

அவள் ஒரு கிராமத்து அம்மா...... நான் பேருந்துக்காக நின்று கொண்டு இருந்தேன்......

என்னிடம் வந்தாள்....." ஆத்தா இத எப்படி பேசுவது? சொல்லித் தறியா? கையில் புதிய போன்..."

நான் சொன்னேன்:" அம்மா பச்சை பட்டன் அமுக்கினால் பேசணும்.....சிகப்பு புட்டன் அமுக்கினால் கட் பண்றது அம்மா என்று சொன்னேன்....

அதற்கு அந்த அம்மா:_" இது என்னோட பையன் வாங்கி கொடுத்தது....." எவ்வளவு பெருமிதம்.......

அந்த அம்மா முகத்தில்......

என்னோட பையன் வெளிநாட்டுல இருக்கான்......மாசம் ஒரு தடவை பேசுவான்.........

இந்த தடவை இரண்டு மாசம் ஆச்சு? பேசவே இல்லை.....

அவருடைய பையன் பேரை சொல்லி அவன் எப்பையாவது போன் பண்ணி இருக்கான்னு பாரும்மா...?" என்றாள்...

நான் பார்த்தேன்.......அந்த பையன் call பண்ணவே இல்லை...... நான் சொன்னேன் ஒரு தடவை call பண்ணி இருக்காங்க....... நீங்க தான் பாக்கலை பச்சை என்று நெனைச்சு சிகப்ப அமுக்கிடிங்க போல் " அப்டி என்று பொய் சொன்னேன்...

அம்மாக்கு அவ்வளவு சந்தோசம்..........

சாப்டீங்களா அம்மா.......என்று கேட்டேன்....

எங்க என்னோட ராசா சாப்டானோ இல்லையோ? எனக்கு அவனை நெனைச்சா சாப்பாடே இறங்கல....

நான் சொன்னேன்........ நீங்க நல்லா சாப்டா தானே உங்க பையன் வரும்போது என்னோட ராசா என்று கட்டி பிடிக்க தெம்பு இருக்கும் என்றேன்......

அந்த தாய் அழுது விட்டாள்..... அப்டியா ஆத்தா சொல்ற இனிமேலே சாப்டறேன்.......

எனக்கு அழுகை வந்து விட்டது....

வெளி நாட்டில் இருக்கும் வெளி ஊரில் இருக்கும் சகோதர்களே உங்கள் தாயிடம் பேசுங்கள்....

அம்மா என்ற சொல்லுக்காக ஏங்குபவள்.........

அவளுக்கு என்றும் நீங்கள் குழந்தை தான்........
படித்ததில் ரசித்தது...

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Short Stories (in Tamil script)

Post by cmlover »

அந்தத் தாயின் மகன் கென்யாவில் மதவெறியர் தாக்குதலில் இறந்துவிட்டான்
என்று எப்படித்தான் சொல்லுவதோ... :(

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Short Stories (in Tamil script)

Post by venkatakailasam »

"கன்னா பின்னா"
( வார்த்தை விளையாட்டு)

'கன்னா பின்னா'என்பதையே ஒரு புலவர் நூதன அர்த்தம் கொடுத்து அழகு பண்ணியிருக்கிறார்.

அவர் ராஜஸபையில் இருந்தவராம். கவிவாணர்களுக்கு ராஜா யதேஷ்டமாகக் பொன்னும் பொருளும் கொடுப்பானாம். அதைப் பார்த்து ஒரு பாமரனுக்கு நாமும் ஒரு கவி பண்ணி ராஜாவுக்கு அர்ப்பணம் செய்து ஸம்பாவனை வாங்க மாட்டோமா என்று இருந்ததாம். நான் சொன்ன அந்தப் புலவரிடம் போய், "எனக்காக நீங்கள் ஒரு கவிதை எழுதிக் கொடுங்கள், அதை ராஜாவுக்கு என்னுடையதாக நான் அர்ப்பணம் செய்து பிழைத்துப் போகிறேன்"என்று கேட்டுக்கொண்டானாம்.

போனால் போகிறது என்று பல கவிகள் இம்மாதிரிப் பாமர ஜனங்களுக்காகவும் எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். காளிதாஸன்கூட இப்படி உபகரித்ததாகக் கதைகள் உண்டு.

இந்தக் கவியும் அப்படி நல்ல மனஸுள்ளவர். ஆனாலும் இவர் அந்த ஆளுக்குக் கவிதை எழுதித் தராமல், என்ன செய்தாரென்றால், "c உன் வாயில் என்ன வந்தாலும் அதை ராஜாவுக்கு முன்னாடி சொல்லு. கன்னா பின்னா என்று உளறிக் கொட்டினாலும் பரவாயில்லை, நான் அதற்கு மிகவும் உயர்ந்த அர்த்தம் இருப்பதாக வியாக்யானம் செய்து, உனக்கு ராஜா நல்ல ஸம்பாவனை கொடுக்கும்படிப் பண்ணுகிறேன்"என்றாராம்.

ராஜஸபைக்கு அந்த ஆள் வந்தான். "கன்னா பின்னா"என்ற இரண்டு வார்த்தைகளையே கிளிப்பிள்ளை போலச் சொன்னான்.

ஸதஸிலே இப்படி ஒருத்தன் பேத்துகிறானே என்று ராஜாவுக்கு மஹாகோபம் வந்துவிட்டது.

அவனைப் புலவர் சட்டென்று ஸமாதானம் பண்ணினார். "இவர் மஹா பெரிய வித்வான். உங்களை எத்தனை உயர்த்தி ஸ்தோத்ரம் செய்திருக்கிறார் தெரியுமா?'கன்னா'என்றால் 'கர்ணா'என்று உங்களைக் கூப்பிடுவதாக அர்த்தம். ('கர்ணன்'என்பது 'கன்னன்'என்றும் ஆகும். கர்நாடகம் என்பதைக் கன்னடம் என்கிறோமல்லவா?அந்த மாதிரி) தான தர்மம் செய்வதில் நீங்கள் கர்ணனுக்கு ஸமமான வள்ளல் என்பதாலேயே 'கன்னா'என்று கூப்பிடுகிறார். 'பின்னா'என்றால் 'பின்னால் வந்தவரே'என்று அர்த்தம். கர்ணனுக்குப் பின்னால் பிறந்தது யார்?தர்மங்களுக்கெல்லாம் உறைவிடமாக, ஸத்வ ஸம்பன்னராக இருந்த தர்மபுத்ரர் அல்லவா?அந்த தர்மபுத்ரனுக்கு நீங்கள் நிகரானவர் என்று சொல்கிறார்"என்று வியாக்யானம் பண்ணினாராம்.

ராஜா ஸந்தோஷப்பட்டு அந்த ஆளுக்கு அக்ஷரலக்ஷம் கொடுத்தானாம்.

பெரியவா சொன்ன "கன்னா பின்னா" கதை

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Short Stories (in Tamil script)

Post by venkatakailasam »

ஒரு ஹெச்.ஆர். எக்ஸிக்யூடிவ் பொண்ணு இறந்து எமலோகம் போனாங்களாம்.அங்க எமதர்மன்"வாழ்த்துக்கள் நீங்க சொர்க்கம் போக தகுதியானவங்க ஆனா அதுக்கு முன்னாடி ஒரு நாள் சொர்க்கத்திலயும் ஒரு நாள் நரகத்திலயும் தங்கணும் அப்புறம் சொர்க்கமா நரகமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கலாம்"னார்.

அவங்க"இல்ல நான் இப்பவே சொர்க்கமே போறேன் எதுக்கு நேரத்த வேஸ்ட் பண்ணனும்?"னாங்க.
அவர் "இது இங்க ரூல்ஸ் நீங்க ஃபாலோ பண்ணித்தான் தீரனும்"ங்க...

அவங்களும் முதல்ல நரகம் போயி ஒரு நாள் தங்க முடிவு பண்ணி போனாங்க.
அது நரகம் மாறியே இல்ல அழகான பூங்கா அங்க இவளோட ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேர் இருக்க நாள் முழுக்க பூமிக்கதை எல்லாம் பேசினாங்க.அப்புறம் சாத்தான் வந்தாரு அவளோட ஃப்ரென்ட்ஸ் அறிமுகப்படுத்தி வைக்க அவரும் நல்லாவே பேசினாரு ஆளு பாக்கவும் ரொம்ப க்யூட். அவளுக்கு நரகத்த விட்டு வரவே மனசில்ல.

ஒரு நாள் முடிஞ்சு போக நரகமே இப்படி நல்லா இருக்கே சொர்க்கம் எப்படி இருக்கும்னு போயி பாத்தா யாரும் யாரோடும் பேசவே இல்ல பூ பறிக்கறதும் சாமி கும்பிடறதுமாவே இருந்திருக்காங்க இவளுக்கு பயங்கர போர்.

கடைசியா எமன் "நீங்க எங்க போக முடிவு பண்ணிருக்கிறீங்க "ன்னு கேக்க அவ " நான் நரகத்துக்கே போறேன் சொர்க்கத்த விட அது தான் நல்லா இருக்கு"ன்னா.
எமன் " நல்லா யோசிச்சுக்கங்க போனா திரும்பி வரமுடியாது"ங்க அவ பிடிவாதமா இருக்க நரகத்துல விட்டு கதவ சாத்திட்டாங்களாம்.
இப்போ பாத்தா முன்ன இருந்த அழகான பூங்கா மாறி பாலைவனமாகி அவளோட ஃப்ரென்ட்ஸ் எல்லாம் கஷ்டப்பட்டு வேலை செஞ்சிட்டு இருந்தாங்களாம்.சாத்தான் கூட மேக்-அப் இல்லாத நடிகை கணக்கா கர்ண கொடூரமா இளிச்சானாம்.

அவ ஒண்ணும் புரியாம "என்ன இது நேத்த விட எல்லாமே மாறி இருக்கு"ன்னு கேக்க அதுக்கு சாத்தான் சொன்னானாம் ,.
.
.
.
.
.

.
.
.நேத்து உங்களுக்கு நடந்தது இன்டர்வியூ இன்னைக்கு நீங்க ஒரு

எம்ப்ளாயீ "

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Short Stories (in Tamil script)

Post by Ponbhairavi »

நேத்திக்கு உங்களுக்கு காட்டினது மாடல் house ( real estate agent)
இன்னிக்கு actual- post registration.
alternative;

நேத்திக்கு நீங்க பார்த்தது பெண் பார்க்க போன போது இருந்த மாமனார் விடு
இன்னிக்கு இது நீங்க vacation க்கு வந்திருக்கிற மாமனார் வீடு
alternative
நேத்திக்கு நீக வந்தது உங்க தொகுதி M P or MLA office. one day before the election
இன்னிக்கி நீங்க வந்திருக்கிறது அதே office -after the election-(irrespective of the result)

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Short Stories (in Tamil script)

Post by venkatakailasam »

சார் நான் இன்னைக்கு செக் கொடுத்தா எப்ப சார் கலெக்ஷன் ஆகி வரும்?

மூனு நாள் ஆகும்

அந்த பேங்க்கும் பக்கத்திலேயே தானே சார் இருக்கு, இருந்தும் மூணு நாளாகுமா?

எல்லாத்துக்கும் ஒருவழிமுறை இருக்குது சார், இப்ப நீங்க சுடுகாட்டுக்கு பக்கத்தில் செத்துப்போனா அப்படியேவா காரியத்த முடிப்பாங்க? வீட்டுக்கு எடுத்துட்டு போய் ஆகவேண்டியத பார்க்கறதில்ல, அதுமாதிரித்தான்

//பரமா, ஒரு செக்குக்கு சாவு பயத்தை காட்டிடாங்க பரமா...

arasi
Posts: 16789
Joined: 22 Jun 2006, 09:30

Re: Short Stories (in Tamil script)

Post by arasi »

Some behind a desk, a counter, amaze (stun, paralyze) me sometimes with their uncanny ability to come up with such wisdom, wit (in their view, of course) :(

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Short Stories (in Tamil script)

Post by venkatakailasam »

true madam arasi...your comment reminds me of PM at

http://www.rasikas.org/forums/viewtopic.php?f=28&t=22085

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Short Stories (in Tamil script)

Post by cmlover »

Give "something", it will be done in three minutes :D

arasi
Posts: 16789
Joined: 22 Jun 2006, 09:30

Re: Short Stories (in Tamil script)

Post by arasi »

CML,
I'm afraid you are not with it, being an infrequent visitor.
They are so much with it (vitamin pa) that:

Your something means nothing now
Their pockets bulging with gold,
Thanks to shady business men

Oh, how they indulge in their sport at work
With victims they can choose at whim...

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Short Stories (in Tamil script)

Post by cmlover »

So are you claiming that there is no more "corruption" and only bureaucracy?

arasi
Posts: 16789
Joined: 22 Jun 2006, 09:30

Re: Short Stories (in Tamil script)

Post by arasi »

I leave all the 'claiming' to them!
Yes, though they may not claim the politician in power to be their leader, they will nonetheless take their lead in making hay while the sun shines.

The strange thing is, they have no clue whatsoever as to what we are talking about 8-|

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Short Stories (in Tamil script)

Post by cmlover »

What a moral degradation!
Aren't we glad we have escaped such adminitrations?
The British rule was far better...

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Short Stories (in Tamil script)

Post by venkatakailasam »

cml...

"The British rule was far better..."
read this article..

http://lite.epaper.timesofindia.com/get ... blabel=TOI

But do not be disheartened...Better are ahead...

Post Reply