Aanmeekam...

Post Reply
vgovindan
Posts: 1866
Joined: 07 Nov 2010, 20:01

Re: Aanmeekam...

Post by vgovindan »

சாவை வென்றான் என்று சொன்னால், அது, அவன் தன் ஆன்மாதான் 'தான்' என்று உணர்ந்து அதனுடன் ஒன்றிவிட்டான் என்று பொருளாகும். அப்படிப்பட்ட அந்த ஆன்மாவைச் சுமக்கும் (சுமந்த) உடல் இம்மண்ணோடு மண்ணாகத்தான் கலந்து போகும். பௌதீக ரீதியில் அப்படி ஆகித்தான் தீரும். இதற்கு யாரும், எப்படிப்பட்ட மகானும் விதிவிலக்கல்ல.
இன்றும், ஜலந்தரில் (Jullundur - Punjab) ஒரு ஞானி உடல் துறந்தபின்பும் அவர் சமாதியில் உள்ளார் என்று பொய்ப்பிரசாரம் செய்துவருகின்றனர், ஒரு சாரார்.
வள்ளலார் இறைவனுடன் ஒன்றினார் என்பது அவருடைய பாடல்களிலிருந்து விளங்கும். ஆனால் அவரது உடல் மறைந்துவிட்டதென்றோ, sublimation ஆகிவிட்டதென்றோ யாராவது கூறினால் அதை நம்ப இயலாது. உலகில் இதுவரை இந்த மாதிரி ஏதும் நடந்தது கிடையாது. இயேசு உயிர்த்தெழுந்தார் என்பது அவருடை தூல சரீரத்தைப் பற்றியதல்ல.
எனவே இந்தக் கட்டுக்கதைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதுதான் சரியாகும்.
நம்பிக்கை இருக்கவேண்டும்தான் - ஆனால் அது மூடநம்பிக்கையாகிவிடக்கூடாது.
நான் உரைப்பது யாரையாவது புண்படுத்தினால் அவர் என்னை மன்னிப்பாராக. ஆனால் அதுதான் உண்மை.

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: Aanmeekam...

Post by Pratyaksham Bala »

#50-ல் அளிக்கப்பட்டுள்ள இரண்டும் திருமூலர் அருளிய திருமந்திரப் பாடல்கள்.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Aanmeekam...

Post by cmlover »

There is the story that VaLLalaar was poisoned!

PB
Do we have any details?

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: Aanmeekam...

Post by Pratyaksham Bala »

No!

vgovindan
Posts: 1866
Joined: 07 Nov 2010, 20:01

Re: Aanmeekam...

Post by vgovindan »

தோட்டத்தில் மாம்பழந் தோண்டிவிழுந்தக்கால்
நாட்டின் புறத்தில் நரியழைத் தென்செயும்
மூட்டிக் கொடுத்த முதல்வனை முன்னிட்டுக்
காட்டிக் கொடுத்தவர் கைவிட்டவாறே (திருமந்திரம் 2933)

Body no more counts when Jiva-Siva union is effected

When in the Garden,
The Fruit of Mango, ripened, dropped,
What matters if Jackals outside howl?
When the Primal One was by Kundalini Fire reached,
The fleshy body that led to it,
Forever left.

The howling of the jackals (senses) outside matters little when the ripened mango fruit (Siva) drops within the garden (sahasrara). The body counts for little when the Primal One (Siva) is reached by kundalini fire.

நீரூம் நிலனும் விசும் பங்கி மாருதந்
தூரும் உடம்புறு சோதியு மாயுளன்
பேரும் பராபரன் பிஞ்ஞகன் எம்மிறை
ஊருஞ் சகலன் உலப்பிலி தானே (3045)

Water, earth, sky, fire and wind,
The spark of light within the body - All these He is;
He is Paraparam, He is Siva, Our Lord,
He is the walking Jiva here below,
Deathless He is.

(Translation by Dr. B Natarajan - Publisher Ramakrishna Mutt, Mylapore)

Remarks - Deathlessness is not for the body.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Aanmeekam...

Post by cmlover »

Is there any scientific proof that there is a soul existing independent of the body?

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Aanmeekam...

Post by cmlover »

Interesting you cited Resurrection of Jesus.
There are several cases of victims surviving Crucifion. Simply Jesus was a lucky one.
No need to build a miracle or mystique over that!
Faith trumps Facts!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

தத்தாத்ரேயர்.

சப்தரிஷிகளில் ஒருவரான அத்ரி முனிவரின் தர்மபத்தினி அனுசூயா தேவி. இந்த அம்மையாரின் கற்புத் திறனை நாரதர் மூலம் அறிந்த சரஸ்வதி, லட்சுமி, பார்வதி முதலான மூன்று தேவியரும் அனுசூயாமீது பொறாமை கொண்டனர். அவள் கற்பை சோதிக்க தங்கள் கணவர்களை அனுப்பினர்.

அதன்படி பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் சந்நியாசிகள்போல முனிவரின் ஆசிரமம் வந்தனர். அவர்களை முறைப்படி வரவேற்ற அனுசுயா தேவி உணவு பரிமாற ஆயத்தமாகும்போது, ""ஆடை எதுவுமின்றி வந்து உணவிட்டால்தான் உண்போம்'' என்று மூன்று பேரும் நிபந்தனை விதித்தனர்.

தன் கணவனை எண்ணி வணங்கிய அனுசூயா, வந்திருப்பவர்கள் யாரென்று புரிந்துகொண்டாள். கற்பின் திறத்தால் மும்மூர்த்திகளையும் சிறு குழந்தைகளாக்கி உணவு பரிமாறினாள்.

அக்குழந்தைகளைத் தன்னிடமே வைத்துக்கொண்டாள்.

கணவர்களைக் காணாமல் தவித்த மூன்று தேவியரும் உண்மையறிந்து அனுசூயாவிடம் வந்து மன்னிப்பு கேட்டனர். அவளும் மும்மூர்த்திகளையும் பழைய நிலைக்குக் கொண்டு வந்தாள்.

""உனக்கு என்ன வரம் வேண்டும்?'' என்று அவர்கள் கேட்க, ""உங்கள் மூவரின் அம்சத்தோடும் ஒரு மகன் வேண்டும்'' என்றாள்.

அதன்படி மூன்று முகங்களுடன் அவதரித்தவரே தத்தாத்ரேயர். ஆறு கரங்கள் கொண்டவர். மேலிரு கரங்களில் சூலமும் சங்கும்; நடுவிரண்டு கரங்களில் சக்கரமும் கதாயுதமும்; கீழிரண்டு கரங்களில் ருத்ராட்ச மாலையும் கமண்டலமும் கொண்டு திகழ்கிறார். (சில படங்களில் இவ்வமைப்பு மாறுபட்டும் காணப்படும்.) அவருக்குப் பின்புறமாக காமதேனு காட்சிஅளிக்கும். நான்கு வேதங்களும் நாய் வடிவில் அவருடனிருக்கும்.

தத்தாத்ரேயரை வழிபட்டால் தீராத வயிற்றுவலி, இதய நோய், புத்தி சுவாதீனமின்மை, சத்ரு உபாதை, கடன் தொல்லைகள் நீங்கும். பெண்களுக்கு மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பர். இவரை வணங்குவதால் மும்மூர்த்திகளையும் பூஜித்த பலன் கிடைக்கும்.

vgovindan
Posts: 1866
Joined: 07 Nov 2010, 20:01

Re: Aanmeekam...

Post by vgovindan »

cmlover wrote:Is there any scientific proof that there is a soul existing independent of the body?
Scientists say that before 'Big Bang' the universe was contained in an indescribably condensed state (a point) from whose precincts even gravity cannot escape. But they also agree that this condensed state contains all the information that was in the collapsed universe. Probably, this is what called mahA praLaya. There are two more praLayas - nitya praLaya and dEha praLaya. Our daily sleep is nitya praLaya where we enter into a seed state. dEha praLaya is when body is dissolved and there is only information content - this is what probably called 'sUkshma SarIra'. The so called 'soul' probably refers to this 'sUkshma SarIra' which kaThOpanishad describes as 'angushTha mAtra'.

Science has not developed any tools - or is it that Science is assiduously avoiding the issue - to put the observer under the (intellectual) lense. But this is not same as observing a comatised patient. But a self observation. This is what upanishads asks us to do - self enquiry. Who is there to observe the observer? If observer is observed as an object, it will result in regressus ad infinitum.

We are all floating in a universe of consciousness - it is a myth to say that our body 'encloses' consciousness. It is the consciousness which encloses everything - right from the wavicles to quantum fields to non-living and living and the universe itself with all its myraid details. Kabir sings -

"Jal me kumbh, kumbh me jal hai, baahar bheetar paanee.
PhooTaa kumbh jal jalahi samaanaa, yah tat kathau gyanee."

This whole universe is like an ocean, we all are like pots in this infinite sea. As water is within the pot and water itself is around the pot, only a thin veil of the form of pot keeps the water within it apart from the water of sea. So we live in the infinite consciousness of existence which we call by different name. It is within us, around us and we are in it, only a thin veil of ego keeps us separated from that infinite ocean of consciousness. When the pot is broken, the water within it merges in the infinite water of the sea. Likewise our consciousness merges in the infinite when we are able to drop the ego.
http://anahad-naad.blogspot.in/2008/06/ ... -laal.html

(The only difference is that till the pot-water realises that its nature is one with the water outside, its individuality is 'preserved'.)

Sorry, this is my crude answer to your query.
Last edited by vgovindan on 13 Feb 2014, 21:57, edited 2 times in total.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Aanmeekam...

Post by cmlover »

Thanks for the analysis. But most of what you say is speculation albeit logical. So far science has failed to objectively quantify consciousness except as part of the activity of the brain. Accordingly when the body decays the consciousness vanishes. Unlike the Higgs field there is no evidence (so far) for the existence of an infinite continuum. We have anecdotal evidence from our ancient sages but no proof!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

The Kathopanishad
The Secret of Life after Death
The Kathopanishad is where Yama Raja tells child Nachiketa about knowledge of the secret of life after death.
Even though the Kathopanishad is in Sanskrit, translations are available for those who are interested.
"This luminous atma which possesses a variety of knowledge is not born and nor does it die. There is no creator of this atma. It is unborn. Everlasting. Immortal. Ancient. Also, although it lives in a perishable body, when the body perishes, it never perishes’ (Katha Upanishad 2/18).
“If a slayer believes that ‘I have slain this atma’ or if the atma believes that ‘I have been slained by someone’, then both have a wrong understanding. Since, this atma does not slay anyone and is not slained by somone” (Katha Upanishad 2/19). "

, you read this also from Gita.
Qualitatively, the small atomic fragmental part of the Supreme Spirit is one with the Supreme. He undergoes no changes like the body. Sometimes the soul is called the steady, or kūṭa-stha. The body is subject to six kinds of transformations. It takes its birth from the womb of the mother's body, remains for some time, grows, produces some effects, gradually dwindles, and at last vanishes into oblivion. The soul, however, does not go through such changes. The soul is not born, but, because he takes on a material body, the body takes its birth. The soul does not take birth there, and the soul does not die. Anything which has birth also has death. And because the soul has no birth, he therefore has no past, present or future. He is eternal, ever-existing, and primeval — that is, there is no trace in history of his coming into being. Under the impression of the body, we seek the history of birth, etc., of the soul. The soul does not at any time become old, as the body does. The so-called old man, therefore, feels himself to be in the same spirit as in his childhood or youth. The changes of the body do not affect the soul. The soul does not deteriorate like a tree, nor anything material. The soul has no by-product either. The by-products of the body, namely children, are also different individual souls; and, owing to the body, they appear as children of a particular man. The body develops because of the soul's presence, but the soul has neither offshoots nor change. Therefore, the soul is free from the six changes of the body.

One has to understand the immortality of the atma.’It is compared to a chariot.’
This body is the chariot and this atma is its owner, the charioteer. The buddhi is its driver. The mind is its reins. The indriyas are the horses pulling the chariot. The objects of taste, touch, etc. are its path. Thus, the atma uses the indriyas and anthkaran as a means to enjoy worldly pleasures. Understand in this way’ (Katha Upanishad 3/3-4).
So, the owner is separate from the chariot, driver, horses, reins, path and everything else. He is called the master of the chariot. Similarly, this atma is totally different from body, indriyas, antahkaran and other things, and is the master, or head, of them all.
The existence of the atma, its immortality, its unchanging nature, its separateness from the body, and its other qualities are unique features of Sanatan Dharma philosophy. And this knowledge is available to us through the Katha Upanishad.( http://www.vedarahasya.net/katha.htm) and ( http://www.swaminarayan.org/essays/2009/2206.htm )
Bhagwan Swaminarayan summarizes the above thus:
Once a person has clearly understood the distinction between the body and the atma, it cannot be forgotten.... Also, childhood, youth, old age, stoutness, thinness, birth and death are all aspects of the body; so, they should never be thought of as belonging to the atma.
When you listen to good music, the ears gets the pleasure..
When you see pleasant scenery, the eyes get it,
When you smell, the nose gets it,
When you eat good food, the mouth gets,
The generative organ gets the pleasure in the same way
It is the mind that controls and differentiates all these activities.
The soul is not affected by any of these activities

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Aanmeekam...

Post by cmlover »

Vkailasam:
That is a good summary of the Hinduism approach to the problem of "body vs soul".
However it is esoteric not admissible as "scientific proof".
The potential scientific approach is the investigation of "Reincarnation".
Prof "Ian Stevenson" of University of Virginia was an avid researcher who has documented thousands of cases mainly from India.
See http://en.wikipedia.org/wiki/Ian_Stevenson
His conclusions were undermined by confirmation bias, where cases not supportive of his hypothesis were not presented !
This is indeed a potential area for research in India where the belief system is conducive whereas the concept is 'deadly'
for the Semitic religious belief. Certainly our so-called "secular" Govt will not take any initiative. BJP if they come to power
may show an interest. The Research Design must be above board and convincing...
As VGV notes it may have implications to current thinking in Quantum Physics....

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

cml…
I think that you also started thinking like westerners…
That everything needs a scientific proof..
“ The scientist, we are told, unlike the historian, sociologist, or (shudder) the theologian, believes nothing except what is proven to be true by the scientific method”

can you prove ‘ reality’?

Read an interesting article here.. http://www.internetmonk.com/archive/fiv ... ce-to-work
And also here http://www.str.org/articles/what-scienc ... v4sps7YxFF

Science, by its very nature, is never capable of proving the non-existence of anything….

How do you prove that such and such thing never existed..
can anybody say that Pluto never existed before somebody had found it..It was there already: but had come to our knowledge only after it was found
By Clyde William Tombaugh around 1930..

So do not expect proof of everything…

Why should we wait for some westerner give a scientific proof?

So far as we are concerned our Vedas and puranas are the best proof of what is contained therein..

We should start believing them….Do believe Our Gita etc., and let the westerners take their own time to find out the truth of them..

vgovindan
Posts: 1866
Joined: 07 Nov 2010, 20:01

Re: Aanmeekam...

Post by vgovindan »

Venkatakailasam,
I can understand skepticism of cml. Godhead is not a matter of faith alone. There is only one Godhead for the whole Universe. Some might not even agree on calling it 'God' - like Buddha who said that Universe is based on 'Dhamma' (dharma) alone. The purpose of invoking a 'God' is detested by others - particularly scientific community. This is understandable because, the major development of Science took place in the West where the Religion was seen as something to be kept out because of its attitude towards enquiry. Many great scientists lived in fear of being condemned by religious authorities. That legacy still survives.

But Indian context is totally different. Indian philosophy is enquiry based acceptance (or rejection) - for example the 'neti neti neti' is the enquiry method. Swami Vivekananda told that Indian philosophy has dethroned all Gods. It is true. Indian philosophy has found the rock-bottom from where it cannot be shaken. The rock bottom is the principle of 'advaita'. And advaita cannot be practised without going through the process of skepticism towards the existing belief systems. If we are to believe what is told to us, then we are not assimilating it. What is needed is assimilation - therefore there must be questioning. The gItA teaching is 'paripraSnEna - sEvayA'. It is not blind faith, but assimilation of what is taught based on enquiry and understanding. In Valmiki Ramayana, there is a mention of Jabali Rishi who was member of entourage of Bharata which went to forest to bring back Rama from self-exile. This Jabali Rishi was a nAstika (atheist). He was one of the advisors in the assembly of King Dasaratha. This clearly shows that we cannot run away from opposing view points. They also have valid points which need to taken note of before arriving at the truth.

In any case, we cannot juxtapose one view point against another. We, as a humanity - nay all living and non-living form one single indivisible entity whose origin is same. Therefore, the 'Truth' is indeed one and not many - Ekam sat.

In my humble opinion, progress in the matter of self-enquiry is not without moments of doubt. Unless all our doubts are cleared, there is no way we can say that we have come to a definitive conclusion. In any case, human intellect is so devious that it can contrive all sorts of arguments both in favour and against the same subject at once.

I was reading one of the couplets of tirukkuRaL - anbilAr ellAm tamakkuriar; anbuDaiyAr enbum uriyar piRarkku'. What it ultimately boils down to is Love - the force sustaining this Universe. You may call it by any name or no name - sirf ehsAs hai yEh rUhsE mehsUs karO; pyAr kO pyAr hI rehnedO; kOi nAm na dO' - Love is just a feeling; experience it by soul; let it be just Love; don't give it any name - Gulzar in Hindi movie Khamoshi. Let the Religion of Love succeed - this is 'satyamEva jayatE'
Last edited by vgovindan on 15 Feb 2014, 07:39, edited 1 time in total.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Aanmeekam...

Post by cmlover »

Thanks Vkailasam?VGV for the views expressed.
I am not a fellow-traveller. But then I rationalize everything based on my knowledge and experience. I have often got into trouble in my younger days for always questioning my teachers! some used to punish me for asking questions!
Ekam sat: All roadss lead to Rome.
The scientific enquiry is no different from our ancient upanishadic approach. The goal is the same.
We in India accept 'shabdam' (Apta vacanam) as evidence whereas the Western science does not.
We implicitly acccept our Guru's words.
But each has to tread the path himself and find out for himself. The Guru only shows the path!
If the Guru eats sumptuously my belly will not be filled :)
VaLLuvar has said:
"EpporuL yaar yaar vaai ketpinum apporuL meipporuL kaaNbadhaRivu"
The moment you stop questioning, the flow of Knowledge stops and it stagnates!

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Aanmeekam...

Post by Ponbhairavi »

It is also very difficult Kaanbha dhari dhu (காண்பதரி து)

vgovindan
Posts: 1866
Joined: 07 Nov 2010, 20:01

Re: Aanmeekam...

Post by vgovindan »

ponbhairavi,
'maipporul kANbadaridu' by itself may give the meaning you intend. But if you combine it with the earlier portion, the meaning will get distorted.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

Image

திருவைந்தெழுத்து
--------------------------

சைவ சமயத்தின் மூல மந்திரம் "நமசிவாய" எனும் திருவைந்தெழுத்து ஆகும். இது பஞ்சாட்சரம் எனவும் பஞ்சாட்சர மந்திரம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த பஞ்சாட்சரமானது ஸ்தூல பஞ்சாட்சரம் எனவும், சூட்சும பஞ்சாட்சரம் எனவும் இருவகைபடுகிறது.[1] நமசிவாய என்பது ஸ்தூல பஞ்சாட்சரம் எனவும், சிவாயநம என்பது சூட்சும பஞ்சாட்சரம் எனவும் அறியப்படுகிறது.

சிவாயநம எனவும் இதனைக் கொள்வர். சிவாயநம என்பது சிவபெருமானைப் போற்றிப் பாடும் மந்திரச் சொல்லாக உள்ளது. இதற்குப் பல பொருள் உண்டு என்று இந்து சமயத்தில் சைவ சமயத்தைக் கடைப்பிடிப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

யசுர் வேதத்திலே நான்காவது காண்டத்திலே சிவ பிரானைப் போற்றும் உருத்திர மந்திரம் உள்ளது. அதில் சூத்திரம் 8-1 நமசிவாய எனும் ஐந்தெழுத்து பற்றிக் கூறுகிறது. வேத மந்திரத்தை முறைப்படி தீட்சை பெற்றுத்தான் ஓத வேண்டும் என்பது விதி. ஆனால் சதா காலமும் அனைவரும் ஓதக்கூடிய மந்திரமாகத் 'திருவைந்தெழுத்து' கூறப்படுகிறது.

விளக்கம்

திருமூலர் முதலான தமிழ்ப் புலவர்கள் உட்பட இம் மந்திரத்துக்கு அவரவர் கண்ட விளக்கங்களைக் கூறியுள்ளனர். அவை எந்த மொழியியலையும் பின்பற்றவில்லை. உண்மையில் அவை மந்திரமொழி.

மந்திரம் பொதுமொழி. அதனைப் பிரித்துப் பார்க்கக் கூடாது என்பது ஒரு சாரார் கருத்து
நமசிவாய மந்திரம் தமிழ் என்போர் தமிழியல் வழியில் சில விளக்கங்களைத் தருகின்றனர்.
நமசிவாய மந்திரம் வடமொழி என்போர் சில விளக்கங்களைத் தருகின்றனர்.

மந்திரமா, தமிழா, வடமொழியா என்பது அவரவர் மனப்பாங்கைப் பொருத்தது. இது சரி, இது தவறு, என யாராலும் நிறுவ இயலாது.
தமிழியல் விளக்கம்

நமசிவாய
சிவாயநம

நம - 'நாம்' என்னும் பால்பகா அஃறிணைப் பெயரின் ஆறாம் வேற்றுமை நிலை 'நம'. இது 'அது' என்னும் உருபினை ஏற்கும்போது 'நமது' என வரும். உருபு மறைந்திருக்கும் வேற்றுமைத்தொகையில் 'நம' என நிற்கும். இது 'என் கை' 'என கைகள்' என்று அமைவதைப் போன்றது.
சிவ் - சிவன் 'சிவ்' என்னும் சத்தியை அவளிடம் பெற்றுக்கொண்டு அவளோடு ஒன்றாய் இருப்பவன்.
ஆய - ஆயம். ஆய என முடிந்த பின்னர் மீண்டும் நம வந்து சேரும்போது மகர-ஒற்று இடையில் தானே வந்துவிடும். சிவாய[ம்]நம எனவே ஆய என்பது ஆயம் ஆகிவிடும். ஆயம் என்பது ஆயத்தாராகிய திருக்கூட்டம்

இவற்றால் நாம் அறிவது நம்முடையவை சிவத்திருக்கூட்டம் என்பதே 'நமசிவாய' என்பதன் பொருள்.

நமச்சிவாய
நம் அச்சு இவ் ஆய[ம்]

நமக்கு அச்சாக இருப்பதெல்லாம் நம்முடன் இருக்கும் திருக்கூடமே. பிறர் இல்லாமல் நம்மால் தனித்து வாழமுடியாது அல்லவா?


Based on http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4% ... 4%E0%AF%81

vgovindan
Posts: 1866
Joined: 07 Nov 2010, 20:01

பசு - பதி - பாசம்

Post by vgovindan »

தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)

தேவதாமூர்த்திகள் அவதார புருஷர்கள்

பசுபதி

பரமேசுவரனுக்குப் பசுபதி என்று பெயர். இங்கு பசு என்று சொல்வது அவருடைய வாகனமாகிய ரிஷபத்தையோ காவலாளான நந்தியையோ அல்ல. நாம்தான் பசுக்கள். அவர்களுக்கு யஜமானனாக இருக்கும் ஈசுவரனே பசுபதி.

தழையைக் கண்ட இடமெல்லாம் ஓடுகிற பசுவைப் போல், இந்திரிய சௌக்கியத்தைத் தேடி ஓடிக்கொண்டேயிருக்கிறோம் நாம். பசுவின் சொந்தக்காரன் அதைக் கட்டிப் போடுவதைப்போல் பசுபதியான ஈசுவரன் நம்மைக் கட்டிப் போட்டிருக்கிறான்.

எங்கே கட்டியிருக்கிறான். கண்ணுக்குக் கட்டு எதுவும் தெரியவில்லையே என்று தோன்றும். ஆனாலும் நம்மை அறியாமலேயே இந்தக் கட்டைப் பற்றி நாம் அவ்வப்போது பேசுகிறோம். ஒரு காரியத்துக்காக நாம் எத்தனையோ முயற்சி செய்கிறோம். அப்படியும் அது பலிதமாகவில்லை. இச்சமயத்தில், முடிந்ததெல்லாம் செய்தேன். ஆனால், கர்ம பந்தம் யாரை விட்டது?காரியம் ஜயிக்கவில்லை என்று சமாதானம் சொல்லிக் கொள்கிறோம். பந்தம் என்பதுதான் கட்டு. நம்முடைய பூர்வ கர்மாவினால் நம்மைக் கட்டியிருகிகிறார் பசுபதி.

கயிற்றால் கட்டப்பட்ட பசுவுக்கு, அந்தக் கட்டின்மீது கோபம்தான் வரும். ஆனால் கட்டை அவிழ்த்துவிட்டால் என்ன ஆகிறது?அது அசலான் தோட்டத்தில் மேய்கிறது. அவன் அதை வெளு வெளு என்று வெளுத்துக் கட்டுகிறான். பட்டியில் கொண்டுபோய் அடைக்கிறான். அப்போதுதான் தன்னைக் கட்டிப்போட்டிருந்தது எவ்வளவு நல்லது என்று தெரிகிறது.

இப்படியேதான் கர்மக் கட்டைப்பற்றி நமக்குக் கோபம் வருகிறது. ஈசுவரன் இப்படி ஒரு கட்டைப் போட்டுவிட்டால் நமக்குத் தோல்வி, துக்கம் இதெல்லாம் ஏற்படாது. தோல்வியும் துக்கமும் வருவதால்தான் நாம் இப்போது நமக்கு இவ்வளவுதான் புசிப்பு என்கிற புத்தியைப் பெற்று, இருக்கிற மட்டும் திருப்தியுடன் நிம்மதியுடன் வாழக் கொஞ்சமாவது முயல்கிறோம். இவை இல்லாவிட்டால் நம்முடைய ஆசைக்கும், நாம் போடுகிற பிளானுக்கும் முடிவே இராது. இத்தனை பலமான கட்டு இருக்கும்போதே, நம்மில் ஒவ்வொரு தனி மநுஷ்யனின் ஆசைக்கு இந்த சிருஷ்டி முழுவதையும் ஆஹுதி பண்ணினாலும் போதாமலிருக்கிறது. பூலோகம் போதாதென்று, இப்போதே சந்திர மண்டலம், மார்ஸ் என்று போகிறோம். கட்டு இல்லாவிட்டால் கேட்கவே வேண்டாம். இப்போதே இத்தனை போட்டி, பொறாமை, சண்டை என்றால் அப்போது எப்படி இருக்கும் என்று கற்பனைகூடச் செய்ய முடியாது. நம் ஆசை அவ்வளவையும் காரியத்தில் கொண்டு வருவதற்கு முயற்சி செய்யாதபடி கர்மம் நம்மைக் கட்டிப் போட்டிருக்கிறதோ, நாம் பிழைத்தோமோ.

பசுவைக் கட்டிப் போடாவிட்டால் அது பயிரையும் பாழாக்குகிறது. தானும் அடிபடுகிறது. அதுபோல் கர்மாவால் ஈஸ்வரன் நம்மைக் கட்டிப் போடாவிட்டால் நம்மையும் கெடுத்துக் கொண்டு லோகத்தையும் கெடுத்து விடுவோம் - இப்போதே கெடுக்கிறோம். துர்பலத்திலேயே இவ்வளவு கெடுத்தால், சுயேச்சை பலம் பூரணமாக இருக்கும்போது எவ்வளவு கெடுப்போம். கயிறு போட்டுக் கட்டுவதால்தான், ஏதோ ஒரு சமயத்திலாவது பசுவுக்குக் கட்டுத் தறியிடம் வந்து படுக்க முடிகிறது. கர்மம் கட்டுவதால்தான், நாமும் எப்போதாவது அதற்கு முளையான ஈசுவரனிடம் சித்தத்தைப் படுக்க வைக்கிறோம். இல்லாவிட்டால், பகவானை அடியோடு மறந்து, இப்படியே சம்ஸாரத்தில் உழன்றுகொண்டு தானிருப்போம்.

நம்முடைய க்ஷேமத்துக்காக, நாமே நமக்கு அதிக உபத்திரவத்தை உண்டாக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக, பகவான் நம்மைக் கட்டிப் போட்டிருக்கிறார். எப்போது அவிழ்த்து விடுவீர் என்று அவரைக் கேட்டால், ஒருவருக்கும் ஒரு தீங்கும் செய்யாமல், அதனால் உனக்கும் பாபம் உண்டாக்கிக் கொள்ளாமல் இருக்கிற பக்குவம் வந்தால், அவிழ்த்து விடுவேன் என்கிறார்.

குழந்தை விஷமம் செய்தால், கட்டிப் போடுகிறோம். நம்மிடம் ஆசை என்ற விஷமம் இருப்பதால், நம்மைப் பசுபதி கட்டிப் போட்டிருக்கிறார். குழந்தைக்கு விஷம புத்தி போய் விட்டால் அப்புறம் கட்ட மாட்டோம். நமக்கு ஆசை போய்விட்டால் ஈசுவரனும் நம்மை அவிழ்த்து விடுவார். ஆசையினால் பலருக்கு பலவித கஷ்டங்களை உண்டாக்கி, நாமும் கஷ்டப்படுகிறோம். ஆசை போய்விட்டால், யாருக்கும் நம்மால் கஷ்டம் இல்லை. அப்போது கட்டும் இல்லை. அவிழ்த்து விடுவார்.

கட்டு போய்விட்டது என்பதால் அசலான் தோட்டத்தில் மேயமாட்டோம். ஏனென்றால், அசலான் தோட்டத்தில் மேயாத புத்தி நமக்கு வந்த பிறகுதான் பசுபதி கட்டையே எடுக்கிறார். கட்டு போனபின் நாம் கட்டுப்பட்ட நிலையிலிருந்து உயர்ந்து கட்டியவனின் நிலைக்கே போய்விடுவோம். கட்டு இருக்கிற வரையில் நாம் வேறு, ஸ்வாமி வேறு என்று பூஜிக்கிறோம். கட்டு போய் விட்டால் நாமே அவன் என்று தெரிந்து கொள்வோம். அப்புறம் பூஜைகூட வேண்டாம். ஒரு நிலை வரையில் ஜீவன் பசு என்று சுருதியும் சொல்கிறது. அது எந்த நிலை?

'தேவதாம் அன்யாம் உபாஸதே'

என்று சொல்லியிருக்கிறது. இதற்குப் பொதுவாக, இஷ்ட தேவதையை விட்டுவிட்டு அதற்கு அந்நியமான தேவதையை உபாஸிக்கிறவன் பசு என்று பொருள் சொல்வார்கள். அது தவறு. தான் பூஜிக்கிற தேவதை தனக்கு அந்நியமானது என்று நினைத்து எவன் பூஜை செய்கிறானோ அவன் பசு என்பதே சரியான அர்த்தம். இப்படி பகவான் வேறு, பக்தன் வேறு என்ற பேத புத்தி இருக்கிற வரையில் கர்மா உண்டு. கர்மா உள்ள வரையில் கட்டும் உண்டு.

அதற்காக, இப்போதே நமக்கு பேத புத்தி போய்விட்டதாக நாம் பிரமை கொள்ளக் கூடாது. பாசாங்கு பண்ணக்கூடாது. உண்மையாகவே பேத புத்தியைப் போக்கிக் கொள்ள வேண்டும். அப்படிப் போகாத வரையில் சாஸ்திரோக்தமான கர்மங்களைச் செய்யத்தான் வேண்டும்.

ஸ்வாமிகள் என்ன இப்படிச் சொல்கிறார்? இத்தனா நாழி கர்மா இருந்தால் கட்டும் உண்டு என்று சொன்னார். இப்போது இவரே அநுபவத்தில் அபேத ஞானம் வருகிறவரை சாஸ்திரம் விதிக்கிற தர்ம காரியங்களின் கட்டு உதவி செய்கிறது என்கிறார். அதெப்படி ஒரு கட்டு இன்னொரு கட்டை அவிழ்க்க உதவும் என்று கேட்கலாம். ஒரு திருஷ்டாந்தம் சொல்கிறேன். ஒருத்தன் விறகுகளைக் கட்டிக் கொண்டு வருகிறான். மணி முடிச்சாகக் கட்டிவிட்டான். கயிற்றை அவிழ்க்க முடியவில்லை. இப்போது என்ன செய்வார்கள் தெரியுமா. அந்தப் பழைய கட்டுக்குப் பக்கத்திலேயே அதைவிட இறுக்கமாக மற்றொரு கயிற்றைச் சுற்றி நெருக்குவார்கள். இந்த இரண்டாவது கயிற்றை முடிச்சுப் போடமாட்டார்கள். அப்படியே கெட்டியாக விறகுகளைச் சுற்றி இறுக்கிப் பிடித்துக் கொள்வார்கள். இந்த இறுக்கலில் பழைய மணி முடிச்சுக் கட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகத் தொள தொள என்று நெகிழ்ந்து கொடுக்கும். அதை அப்படியே அலாக்காக விறகுச் சுமையிலிருந்து கழற்றி விடுவார்கள். பிறகு புதிதாக இறுக்கிப் பிடித்துக் கொண்ட கயிற்றையும் விட்டுவிடுவார்கள். ஆக, புதிய கட்டு பழைய கட்டை அவிழ்க்க உதவி விட்டது. அப்புறம் இதையும் சுலபமாக எடுத்துப் போட்டு விட முடிந்தது.

சாஸ்திரம் சொல்கிற தர்ம காரியங்களின் கட்டு, இரண்டாவது கயிறு போன்றது. அது முடிச்சுப் போட்டுக் கட்டுவது அல்ல. கட்டுகிற மாதிரி இருக்கும். சாஸ்திர விதிகள் ரொம்பவும் கறாராக, கண்டிப்பாக கட்டுப்படுத்துகிற மாதிரிதான் இருக்கும். ஆனால் இந்திரியங்கள் போடுகிற மணி முடிச்சான ஆசைக்கட்டிலிருந்து விடுபட்டு, கடைசியில் பூரண நிம்மதி, சௌக்கியம், விடுதலை பெற வேண்டுமானால், இந்தக் கட்டு இருந்தேயாக வேண்டும். ஆசைக் கட்டுப் போட்டபின் சாஸ்திரக் கட்டும் போய்விடும். ஆனால் முதலில் அது போவதற்காக இந்த இரண்டாவது கட்டை நாமாகப் போட்டுக் கொள்ள வேண்டும். தார்மிகமாக, மநுஷ்ய காரியம், தேவ காரியம், பூஜை, யக்ஞம், பரோபகாரம், ஜீவாத்ம கைங்கரியம் எல்லாம் பண்ண வேண்டும். ஆசை போனபின் இந்தத் தெய்வ காரியங்கள், வைதிக காரியங்கள், சமூகக் காரியங்கள் எல்லாம் கூட நின்று விடலாம்.

இந்த நிலையை ஒருவன் அடைகிறபோது இப்படிப்பட்ட சாதகனிடம் தேவதைகளுக்குக் கோபம் வருமாம். (தேவதைகள் வேறு, தெய்வம் என்று பொதுவில் சொல்லப்படும் ஸ்வாமி வேறு) மனிதன் வைதிக காரியம் செய்தால்தான் தேவதைகளுக்கு ஆஹுதி கிடைக்கும். இல்லாவிட்டால் அவர்கள் பட்டினிதான். எனவே இவன் கர்மாவை விட்டு, யக்ஞம், தர்ப்பணம், பூஜை இவற்றை நிறுத்தி விட்டால் தேவர்களுக்குச் சாப்பாடு கிடைக்காது. எனவேதான் கோபம் வரும். மாடு கறவை நின்றுவிட்டால்அப்புறம் அது பிரயோஜனம் இல்லை என்று தீனி போடுவதை நிறுத்தி விடுகிறோம் அல்லவா. மனிதனின் ஆசை எல்லாம் நின்று விட்டால், எந்த தேவதையின் அநுக்கிரகமும் இவனுக்கு வேண்டாம் என்றாகி, அவற்றுக்கு இவன் ஆஹுதி தருவதும் நின்றுவிடும். மனிதனின் கர்மம் நின்றுவிட்டால் அப்புறம் தேவதைகளுக்கு அவனால் பிரயோஜனம் இல்லை. இது காரணமாகத்தான், புராணங்களில் பல ரிஷிகள் பிரம்ம ஞானத்தை அடையத் தபஸ் செய்த போது தேவதைகள் பிரதிபந்தகம் (இடையூறு) விளைவித்ததாகப் பார்க்கிறோம்.

இதனால்தான் ஸம்ஸ்கிருதத்தில் அசட்டுக்கும் அஞ்ஞானிக்கும், தேவனாம் ப்ரியன் என்றே ஒரு பெயர் ஏற்பட்டிருக்கிறது. தேவனாம் ப்ரியன் என்றால் தேவதைகளுக்கு இஷ்டமானவன் என்று அர்த்தம். அது ஏதோ புகழ்ச்சொல் போலத் தோன்றும். தேவனாம் ப்ரிய அசோக என்று அசோகச் சக்கரவர்த்திக்கூடக் கல்வெட்டுகளில், ஸ்தூபிகளில் எல்லாம் தம்மை வர்ணித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், உண்மையில் எவன் தேவதைகளுக்கு திருப்தி செய்கிற நிலைக்கு மேற்பட்ட ஞானத்தை ஒரு நாளும் தேடிப் போகாமல், கர்மத்திலேயே உழலுகிற அசடோ, அவனே தேவனாம் ப்ரியன்.பழைய காலத்தில் ஞானம் வந்தவர்களும்கூட சாஸ்திரக் கர்மாவை விடத் தயங்கினார்கள். மற்றவர்களுக்கு வழி காட்டுவதற்காக, இவற்றை தங்களுக்கு அவசியமில்லாமலும்கூடத் தொடர்ந்து செய்து வந்தார்கள். நாமோ, சிறிது கூடத் தயக்கமில்லாமல், ஹாய்யாக சகல சாஸ்திர தர்மங்களையும் விட்டுவிட்டோம். ஆனால் ஞானியாகத்தான் ஆகவில்லை.

ஞானியில்லை என்றால், தேவனாம் ப்ரியர்களாகவாவது இருந்தால், அவர்களுடைய பிரீதியால், நாம் செத்துப்போன பின் தேவலோகத்துக்குப் போகலாம். தேவலோகம் என்பது ஒரு கேளிக்கை லோகம். அது மோக்ஷமல்ல. மோக்ஷம் என்பது இந்திரியங்களுக்கு எட்டாத ஆத்மானந்தத்தை சாசுவதமாகத் தருவது. தேவலோகம் என்பது நம் வைதிக கர்மாவினால் கிடைத்த புண்ணியம். புண்ணியம் தீர்ந்தபின் பூலோகத்துக்குத் திரும்பத்தான் வேண்டும். மோக்ஷ சுகத்துக்கும், தேவ லோகம் என்கிற ஸ்வர்க்கத்தின் இன்பத்துக்கும், அஜகஜாந்தரம். இருந்தாலும் துக்கமும் கஷ்டமும் நிறைந்த மநுஷ்ய லோகத்திலிருந்து நாம் தேவ லோகத்திற்காவது போனால் விசேஷம்தான். நாம் இதற்காகவேனும் வழி பண்ணிக் கொண்டிருக்கிறோமா? அதுவும் இல்லை. தேவதைகளுக்குத் திருப்தி தருகிற வைதிக கர்மங்களை விட்டுவிட்டபின் அவர்களுக்கு எப்படிப் பிரியமானவர்கள் ஆவோம். நாம் நரகவாஸீனாம் ப்ரியர்களாகவே இருக்கிறோம் - நரகத்திலிருப்பவர்கள், நமக்குத் துணையாக இவர்களும் வரப் போகிறார்கள் என்று நம்மைப் பற்றிப் பிரியமாக எண்ணுகிற ஸ்திதியில்தான் இருக்கிறோம்.

துஷ்டர்களாக இருப்பதைவிட, அசடுகளாக ஆவது சிலாக்கியம். முதலில் நாம் அசடுகளான தேவனாம்பிரியர்களாக ஆக வேண்டும். அப்புறம் பசுபதி கொஞ்சம் கொஞ்சமாக் கட்டை அவிழ்த்து விடுவார். (தேவ லோகத்தை விரும்பாமல், பற்றின்றி கர்மா செய்தால், இக்கர்மாவே சித்த சுத்தி தந்து தேவர்களின் பிரியத்துக்கும் ஞானத்திற்கும் வழிகோலும்) அப்புறம் தேவதைகளின் பிரியத்தையும், அப்பிரியத்தையும் பொருட்படுத்தாத ஞானி ஆகலாம். அப்போது பசு (ஜீவன்) - பாசம் (கயிறு) - பதி (ஈஸ்வரன்) என்கிற மூன்றில் பசுவும் பாசமும் போய், பதி மட்டுமே இருக்கும். பசுவான நாமே பதியாகி இருப்போம்.

சைவ சித்தாந்தத்தில் பசு - பதி - பாசம் என்று எதைச் சொல்கிறார்களோ, அதுதான் ஆதிசங்கரரின் அத்வைத வேதாந்தத்தில் ஜீவன் - பிரம்மம் - மாயை என்று சொல்லப்படுகிறது. சங்கரரும் பசு - பாசம் என்ற பதங்களையே ஸெளந்தரிய லஹரி சுலோகம் ஒன்றில் பிரயோகித்திருக்கிறார்.

சிரம் ஜீவந்நேவ பசு பாச வ்யதிகர:
பராநந்தாபிக்யம் ரஸயதி ரஸம் த்வத் பஜனவான்

(அம்பிகே உன்னை எவன் பூஜிக்கிறானோ அவன் பசு, பாசம் என்றவற்றின் சேர்க்கையால் உண்டாகிற விபரீதத்தைப் போக்கிக் கொண்டு ஸதா காலமும் பரமானந்தம் என்ற ரஸத்தையே ருசிக்கிறான்.)

(Edited version as there are many errors in the website)

http://www.kamakoti.org/tamil/part1kura ... ad36cb16d1

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Aanmeekam...

Post by cmlover »

Thanks VGV!
Very deep/subtle philosophy, which only Acharya can expound effectively!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »


cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Aanmeekam...

Post by cmlover »

Tall claims :)

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

yes..cml..What our minds cannot comprehend always appears to be tall...

Mundakopanishad-6000BC On particles that travel faster than light...

https://www.facebook.com/media/set/?set ... 540&type=3

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: Aanmeekam...

Post by Pratyaksham Bala »

Check page 104 of:-
http://www.estudantedavedanta.net/MUNDAKOPANISHAD.pdf
let your imagination run wild,
and LOL !

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: Aanmeekam...

Post by Pratyaksham Bala »

யசுர் வேதத்திலே நான்காவது காண்டத்திலே சிவ பிரானைப் போற்றும் உருத்திர மந்திரம் உள்ளது. அதில் சூத்திரம் 8-1 நமசிவாய எனும் ஐந்தெழுத்து பற்றிக் கூறுகிறது.
I am not able to locate this. Can someone provide this Sanskrit sloka?

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

பலன்கள்:
அன்னதானம் - சர்வதேவ திருப்திகரம் கிடைக்கும்.
அபிஷேகம் - பாவங்கள் அகலும்.
பீடபூஜை - சாம்பராஜ்யம் அளிக்கும்.
கந்தம் - சகல சவுபாக்கியங்களும் தரும்.
புஷ்பம் - சவுக்கியம் கிடைக்கப்பெறும்.
தூபம் - நல்ல வாசனையைத் தரும்.
தீபம் - தேக சாந்தியை கொடுக்கும்.
நைவேத்தியம் - மகா போகத்தை அருளும்.
தாம்பூலம் - லட்சுமி கடாட்சம் கிடைக்கச் செய்யும்.
நமஸ்காரம் - நான்கு புருஷோத்தங்களையும் தரும்.
ஜபம் - அஷ்ட ஐஸ்வர்யமளிக்கும்.
ஹோமம் - சர்வ காமஸ் மிருதியைத் தரும்

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

Image

இப்படி படைத்து விட்டானே என்ற எந்த கோபமுமின்றி


அழகாய் தான் வரைந்திருக்கிறான் கடவுளின்

படத்தை தார்ரோட்டில் ........

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

தோடகாஷ்டகம்

தமிழில் படிக்க விரும்புபவர்களுக்கு ஏதுவாக .....

விதிதாகில சாஸ்த்ர ஸுதா ஜலதே,
மஹிதோபநிஷத்கதிதார்தநிதே |
ஹ்ருதயே கலயே விமலம் சரணம், பவ
சங்கர தேசிக மே சரணம் || 1.

கருணா வருணாலய பாலய மாம்,
பவஸாகர து:க விதூநஹ்ருதம் |
ரசயாகில தர்சந்தத்வ விதம்,
பவ சங்கர தேசிக மே சரணம் || 2.

பவதா ஜநதா ஸுஹிதா பவிதா,
நிஜபோத விசாரணசாருமதே |
கலயேஸ்வர ஜீவ விவேக விதம்,
பவ சங்கர தேசிக மே சரணம் || 3.

பவ ஏவ பவாநிதி மே நிதராம்,
ஸமஜாயத சேதஸி கௌதுகிதா |
மம வாரய மோஹ மஹாஜலதிம்
பவ சங்கர தேசிக மே சரணம் || 4.

ஸுக்ருதேதிக்ருதே பஹுதா ,
பவதோ பவிதா ஸமதர்சநலாலஸதா |
அதிதீநமிமம் பரிபாலய மாம் ,
பவ சங்கர தேசிக மே சரணம் || 5.

ஜகதீமவிதும் கலிதாக்ருதயோ
விசரந்தி மஹாமஹஸச்சலத: |
அஹிமாம்சுரிவாத்ர விபாஸி குரோ
பவ சங்கர தேசிக மே சரணம் || 6.

குருபுங்கவ புங்கவகேதந நே
ஸமதாமயதாம் நஹி கோபி-ஸுதீ: |
சரணாகதவஸ்தல தத்வநிதே
பவ சங்கர தேசிக மே சரணம் || 7.

விதிதா ந மயா விசதைககலா
ந ச கிஞ்சந காஞ்சநமஸ்தி குரோ |
த்ருதமேவ விதேஹி க்ருபாம் ஸஹஜாம்
பவ சங்கர தேசிக மே சரணம் || 8.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

Image

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: Aanmeekam...

Post by Pratyaksham Bala »

பலன்கள்:
தூபம் - நல்ல வாசனையைத் தரும்.
ஆஹா! இதுவரை யாரும் அறியாத செய்தி!

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: Aanmeekam...

Post by Pratyaksham Bala »

Image
இப்படி படைத்து விட்டானே என்ற எந்த கோபமுமின்றி அழகாய் தான் வரைந்திருக்கிறான் கடவுளின் படத்தை தார்ரோட்டில் ........
வரைந்தது:- புதுச்சேரி ரங்கோலி ஓவியர் எஸ். மாலதி அவர்கள்.

வரைந்துள்ளது:- தார் ரோட்டில் அல்ல. திருநெல்வேலி சாரதா கல்லூரி வளாகத்தில் உள்ள கோயிலில்.
http://9-west.blogspot.in/2008/10/blog-post_15.html

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Aanmeekam...

Post by cmlover »

Pratyaksham Bala wrote:யசுர் வேதத்திலே நான்காவது காண்டத்திலே சிவ பிரானைப் போற்றும் உருத்திர மந்திரம் உள்ளது. அதில் சூத்திரம் 8-1 நமசிவாய எனும் ஐந்தெழுத்து பற்றிக் கூறுகிறது.
I am not able to locate this. Can someone provide this Sanskrit sloka?
If you have Sri Rudram text look at namakm 8.1 anuvaakam starting " nama: shankAya..."
The last line is:
"nama: shivAya ca shivatarAya ca |

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

எல்லாவற்றும் நடுவாய் இருப்பது THOUGHT, அதாவது எண்ணங்கள்.

எண்ணங்கள் அற்று இருந்தால், அங்கே அனாவசிய பேச்சுகளும் குறையும்...

பேசா அநுபூதி பிறந்ததுவே...

சும்மா இரு, சொல் அற என்றலுமே,
அம் மாபொருள் ஒன்றும் அறிந்திலனே

- அப்பன் அருணகிரி...

சுகக்கடல் பொங்க சொல் உணர்வு அடங்க
சும்மா பொருந்திடு அங்கு அருணாச்சலா...

சொல்லாது சொல்லி நீ சொல் அற நில் என்று
சும்மா இருந்தாய் அருணாச்சலா...

- ஸ்ரீ ரமண மகரிஷி...

முடிந்தால் Dr எம் எஸ் உதயமூர்த்தி அவர்களின் எண்ணங்கள் புத்தகம் வாசியுங்கள்

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

A share from Raman Kinetic Honda...

Image

பிறரை கெடுத்து வாழ்ந்தவன்
"வாழ்ந்ததில்லை"

பிறருக்கு கொடுத்து வாழ்ந்தவன்
"வீழ்ந்ததில்லை"


venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

Image

V. Bhagavan, you always say that the Self is ever present: if I am present then why do I not feel it?
Bh. Do you not now feel that you exist? Your doubt is whether you will ever continue to exist. Why should you have any doubt? A little thinking will convince you that the destructible part of your being, the body, is a mere machine, a tool in the service of the indestructible, the mind, which is the all-in-all, the knower and the master – you yourself. Your doubts and difficulties arise from your thoughts, which perceive the body and mistake it for yourself. Stop
the thoughts, which are your enemy (the ego), and the mind will remain as your pure being, the immortal ‘I’. That is the best way of eliminating the ego.

Shared from Ramana Maharishi..

https://www.facebook.com/sriramanar

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

எனக்குக் கண்ணாய் அமர்ந்துள்ள ஒண்பொருளே, உலகுக்கும் நீ கண்ணாய் அமர்ந்திருப்பதைக் காட்டியருள்வாயாக.

காண உதவுவது கண். அது அறிவை விளக்குகிறது. உள்ளத்தின் பரிபாகம் கண்ணில் ஒளிர்கிறது. இயற்கை யாண்டும் கண்ணுடைத்துள்ளது. கண்ணுடைய பொருளாதலால் அது காலத்தையும், இடத்தையும், செயலையும் உள்ளபடி விளக்குகிறது. இயற்கையின்கண் இலங்கும் அறிவே அதற்குக் கண்ணாகிறது.

கண்ணாய் உலகுக்கு நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
-அப்பர்

குறிப்பு : ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர் அருளிய தினசரி தியானம் என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது. பிரதிகளுக்கு தொடர்பு கொள்க :

ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம்,
திருப்பராய்த்துறை - 639115.
திருச்சி மாவட்டம்.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Aanmeekam...

Post by cmlover »

கண்ணுதலானை (கண்ணை நெற்றியில் உடையவனை) காண புறக்கண் தேவையில்லை
அகக்கண்ணே போதும்!

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: Aanmeekam...

Post by Pratyaksham Bala »

'தினசரி தியானம்' நூலிலிருந்து தினமும் ஒரு சிறு பகுதி இங்கே அளிக்கப்படுகிறது:-
http://www.chennailibrary.com/meditatio ... ation.html

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

Image

குருவாயூரப்பனும் குந்துமணியும்

பகவான் வஸ்துக்களின் உயர்வு தாழ்வைப் பார்ப்பதில்லை. உள்ளத்தில் தூய்மையான அன்புடன் தரப்படும் பக்தியின் மேன்மையைத்தான் பார்க்கிறான்.

குண்டுமணி சிவப்பு, கறுப்பு நிறங்களில் சிறிய உருண்டை வடிவில் இருக்கும். கேரளாவில் அநேகமாக அனைவரது இல்லங்களிலும் இந்த மரம் இருக்கும். மஞ்சாடி என்ற மரத்தில் இருந்து வரும் விதை என்பதால் இதை கேரளாவில் "மஞ்சாடிக்குரு" என்று சொல்வார்கள். நாங்கள் கோவையில் இருந்தபொழுது, சின்ன வயதில், பக்கத்தில் இருக்கும் பூங்காவிற்கு தினம் சென்று அங்கு இருக்கும் குண்டுமணிகளைப் பொறுக்கி வீட்டிற்கு எடுத்து வருவோம். பிறகு அதை நன்கு கழுவி "பல்லாங்குழி" விளையாட உபயோகப்படுத்துவோம். சென்ற வருடம் கூட கேரளாவில் ஒரு நண்பர் வீட்டிற்குச் சென்றிருந்தபொழுது நிறைய குண்டுமணிகளைப் பொறுக்கி வந்தோம். "

குருவாயூர் கோயிலில் ஒரு பெரிய உருளியில் குண்டுமணியை நிரப்பி வைத்திருப்பார்கள். இரண்டு கைகளாலும் அதை அளைந்து கொண்டு நோய்கள் குணமாகவும், குழந்தை வரம் வேண்டியும் மனதார பிரார்த்தனை செய்யவேண்டும். பிறகு மீண்டும் அதிலேயே போட்டு விட வேண்டும்.

நாங்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையன்றும் வேண்டிக்கொண்டு வீட்டிலேயே ஒரு சின்னப் பெட்டியில், 7 மிளகு, கொஞ்சம் கடுகு, 7 குந்துமணி, ஒண்ணேகால் ரூபாய் எடுத்து வைத்து, குருவாயூர் செல்லும்போது அதை அங்கு சமர்ப்பிப்பது வழக்கம்.

அது சரி. குருவாயூர் கோயிலில் இதற்கு அப்படி என்ன விசேஷம்? இதன் பின்னால் ஒரு சுவையான கதை உண்டு.

முன்னொரு காலத்தில் ஒரு வயதான பெண்மணி இருந்தாள். அவளுக்கு ஸ்ரீகுருவாயூரப்பன் மிகவும் இஷ்டமான தெய்வம். அவளுடைய ஊர் குருவாயூருக்கு மிகத் தொலைவில் இருந்தது. அவளை அழைத்துச் செல்வார் யாருமில்லை. பணவசதி கிடையாது. ஆனால் குழந்தைக் கண்ணனைக் காண வேண்டும் என்றும், அவனுக்கு ஏதாவது கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவளுக்குக் கொள்ளை ஆசை.

அவள் வீட்டில் மஞ்சாடி மரம் (குந்துமணி மரம்) இருந்தது. அதிலிருந்து நிறைய குண்டுமணிகள் கீழே விழும். அவற்றைச் சேகரித்து, நன்கு அலம்பி, துடைத்து ஒரு பை நிறைய சேர்த்து வைத்திருந்தாள்.

ஒரு நாள் கண்ணனைக் காண வேண்டும் என்ற ஆவல் மிகுதியால் பயணம் புறப்பட்டாள். வசதி படைத்தவள் அல்லவே ! அதனால் நடந்தே செல்லத்தீர்மானித்தாள். தொலை தூரம். வயது வேறு ஆகிவிட்டது. நடுநடுவே இளைப்பாறிக் கொள்வாள். ஸ்ரமமாக இருப்பினும் "கண்ணனைக்காணவும் அவனுக்கு குண்டுமணிகளைக் கொடுக்கவும் வேண்டுமே" என்று தொடர்ந்து பயணம் செய்தாள்.

ஒரு மண்டலம் பயணம் செய்து குருவாயூரை அடைந்தாள். கோவிலையும்அடைந்தாள். அவள் சென்ற நாள் அந்த மாதத்தின் முதல் நாள். அவள் கோவிலைஅடைந்த சமயம், கோவிலில் மிகவும் பரபரப்பாக இருந்தது. ஏதோ விசேஷம் என்று அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் அன்றும் அந்த ஊர் அரசன், அவன் பக்தியை வெளிப்படுத்த, கோயிலுக்கு ஒரு யானையை சமர்ப்பிப்பது வழக்கம். அதனால்தான் அந்த பரபரப்பு. சேவகர்கள், அரசன் வருவதால் வழியை விலக்கிக் கொண்டிருந்தனர்.

இந்த வயதான பெண்மணி, தன்னுடைய பையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள். சேவகர்களின் அஜாக்கிரதையால் அவள் கீழே தள்ளப்பட்டாள். பை கீழே விழுந்து அதிலிருந்த குண்டுமணிகள் சிதறி விழுந்தன. கிழவியின் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப் பெருகியது. ஒரு சொட்டுக் கண்ணீர் தரையில் விழுந்தது.

அதே சமயம், கோயிலுக்கு சமர்ப்பிக்கக் கொண்டு வந்த யானை மதம் பிடித்து ஓட ஆரம்பித்தது. அனைவரும் " என்ன ஆயிற்று?" என்று பதறினர். கோவில்பொருட்களை யானை நாசம் செய்ய ஆரம்பித்தது. யானையை அடக்க முடியவில்லை. கலங்கிய மன்னனும் மற்றவர்களும் குருவாயூரப்பனிடமே ப்ரஸ்னம் கேட்டனர்.

அப்பொழுது கர்ப்பக்ருஹத்திலிருந்து " நீங்கள் என் பக்தையை அவமானப்படுத்திவிட்டீர்கள். என் பக்தை அன்பாகக் கொண்டு வந்த குண்டுமணிகள் எனக்குவேண்டும்" என்று அசரீரி கேட்டது. கீழே சிதறிக் கிடந்த குண்டுமணிகளை, அனைவரும் பொறுக்கி எடுத்தனர். அதை அந்த வயோதிகப் பெண்மணியிடம் கொடுத்து அவளிடம் மன்னிப்பும் கேட்டனர். அவளை ஸகல மரியாதைகளுடன் சன்னிதிக்கு அழைத்துச் சென்றனர். அவள் ஆசையுடன் அதை அப்பனிடம் சமர்ப்பித்ததும், யானையின் மதம் அடங்கியது. அவள் பக்தியின் நினைவாக இன்றும் குருவாயூர் கோயிலில் உருளியில் குண்டுமணிகள் வைக்கப்பட்டுள்ளது .

பகவான் வஸ்துக்களின் உயர்வு தாழ்வைப் பார்ப்பதில்லை. உள்ளத்தில் தூய்மையான அன்புடன் தரப்படும் பக்தியின் மேன்மையைத்தான் பார்க்கிறான்.
Image and story courtesy: Mannargudi Sitaraman Srinivasan with Ajith Edamana

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Aanmeekam...

Post by cmlover »

மனத்தினால் செய்யும் தொண்டு பணத்தினால் செய்யும் தொண்டை விட சாலச்சிறந்தது.
பணத்தினால் டாம்பீகத்திற்கு செய்யும் தொண்டை இறைவன் ஒருபொழுதும் ஏற்பதில்லை!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

மௌனமே வடிவான ஆதிப் பரம்பொருளின் மௌனம் கலைந்த போது விளைந்த சலனத்தில் முதன் முதலில் எழுந்து விரிந்த ஒலி அலையே பிரணவம், என்பது வேதம் உணர்ந்த ஞானிகள் வாக்கு. மௌனத்தின் அலைகளாகிய பிரணவம் விரிந்து எல்லாமாய் உருவானதாலோ என்னவோ, பிரணவம் குறித்த ஞானிகளின் தத்துவக் கருத்துகளும் விரிந்து கொண்டே இருக்கிறது. அவ்வாறாகிய ஒரு கருத்தை கண்ணுற்ற போது அதை உங்களோடு பகிர்ந்து கொள்ள மனம் விரும்ப, விருப்பம் கருத்தாய் விரிகிறது. மனம் புலன்களைக் கடந்து விரிவடையும் போதுதான் பரத்தில் ஒடுங்குகிறது. மௌனத்தில் அடங்குகிறது. ஞானத்தில் திளைக்கிறது. ஒடுங்கியது விரிகிறது, விரிந்தது ஒடுங்குகிறது. இது ஒரு சுழற்சி. எனவே சுழல்வது என்பது அணுவுக்கும், அணுவிலிருந்து விளைகின்ற அனைத்திற்கும் இயல்பாயிருக்கிறது. இந்தப் பிரபஞ்சத்தில் எல்லாம் சுழன்று கொண்டே இருக்கிறது. ஆகவே நம் உடலில் உள்ள நாடிகள் சக்கரங்கள் எல்லாம் சுழல்கின்றன.

நாடிகள் மொத்தம் 72,000 எனச் சொல்லப்படுகிறது. அவற்றில் முக்கிய மையங்களாக விளங்கும் 1008 எடுத்துக் கொண்டார்கள். அந்த 1008 ல் முக்கியமானது சகஸ்ராதார நாடியாகும். இந்த சகஸ்ராதாரம் என்று குறிப்பிடப்படுவது சகஸராரச் சக்கரமே ஆகும்.

ஆதாரங்கள் அல்லது சக்கரங்கள் எண்ணிக்கை குறித்து பலதரப்பட்ட கருத்துக்களை நம் முன்னோர்கள் சொல்லியிருந்தாலும் ஏழு முக்கிய ஆதாரங்களே பெரும்பாலான யோக நூல்களில் முக்கியத்துவம் பெருகின்றன. எல்லா நாடிகளும் சக்கரங்களே என்றாலும், அவற்றின் இயக்க ஆற்றல், உருவம் இவற்றை முன்னிலைப் படுத்தி ஏழு சக்கரங்களும் தலைசிறந்த ஆதாரங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. இப்போது இந்த 1008ல் தலைசிறந்து விளங்கும் சகஸராதார நாடியானது உச்சந்தலையில் ஒரு தாமரை மொட்டு தலைகீழாக தொங்குவது போல இருக்கும். அது ஞானம் அடையாதவரை தலைகீழாகவேதான் இருக்கும். ஞானிகளுக்கு அது நிமிர்ந்து விரிந்து இருக்கும். மற்ற நாடிகளும் சற்று சுருண்டு காணப்படும். அவற்றை நிமிர்த்தி விரியச் செய்தால் கடைசி நாடியும் விரியும்.

ஒவ்வொரு நாடிகளுக்குள்ளும் பிரணவம் ஒவ்வொரு அக்ஷ்ரமாக விரிந்து உள்ளது. அந்த அக்ஷ்ரங்களை ஞானத்தால் உணர்ந்த நம் முன்னோர்கள், அவற்றை அடிப்படையாகக் கொண்டு பெயர்களை உருவாக்கினார்கள். 1008 நாடிகளின் அக்ஷ்ரங்களில் உருவானதே சகஸ்ரநாமம் எனப்படுகிறது. அந்த நாமங்களை உச்சரிப்பதன் மூலம் அந்தந்த நாடிகளில் அதிர்வை உருவாக்கி அவற்றின் அவற்றின் இதழ்களை விரியச் செய்வார்கள். அடுத்த படியாக அதிமுக்கியமான 108 நாடிகளின் அக்ஷ்ரங்களில் உருவானதே அஷ்டோத்ர நாமங்கள். 108ல் முக்கியமான 18 கேந்திரங்களை கண்டு அவற்றில் விபூதி தரிக்கச் சொல்கிறார்கள். இன்னும் நுணுக்கமாக ஆராய்ந்து 12 நாடிகளைக் கண்டு அவற்றில் நாமம் இடச் சொல்கிறார்கள். அந்த 12யும் சுருக்கி 8 ஆக்க விளைந்ததே அஷ்டாச்சரம். இறுதியாக ஆறு ஆதாரங்களையும் அடிப்படையாகக் கொண்டு அந்த அக்ஷ்ரங்களில் இருந்து வந்ததே ஷடாச்சரம். அடுத்தது பஞ்சாட்சரம். இவ்வாறாக மூலாதாரத்தில் உள்ள நாடியை சகஸராரத்துக்கு செலுத்தினால் உண்டாகும் வடிவத்தை நிமிர்த்துப் போட்டால் ஓம் என்ற தோற்றம் காணப்படும். இதுவே ஓங்காரத் தத்துவம். எனவே பிரணவ மந்திரத்தை இடைவிடாது எல்லா நேரத்திலும் மனதுக்குள் சத்தமாக உச்சரித்துப் பழகி வரும் போது இயல்பாகவே ஞானவாசல் திறக்கும்.


எட்டிரண்டு என்று சித்தர்கள் குறிப்பிடுவது அ,உ என்ற எழுத்துக்களையே. ஆங்கிலம் வருவதற்கு முன் நம் தமிழ் எழுத்துக்களே நடைமுறையில் இருந்தன.

1க்கு க, 2க்கு உ, 3க்கு ங, 4க்கு ச, 5க்கு ரு, 6க்கு கா,7க்கு எ, 8க்கு அ, 9க்கு சு, 10க்கு ய என்பதாகும் அவை. இதில் எட்டுக்கு அ வும், இரண்டுக்கு உ வும் இருப்பதையும், அவை மந்திர அட்சரங்களான அ, உ என்ற உயிர் எழுத்துகளை குறிக்கவே எட்டிரண்டு என்றுசித்தர்கள் பாடல்களில் மறைபொருளாகச் சொல்கின்றனர். இதனை அகாரம், உகாரம் எனப் பெயரிட்டு, இந்த அ, உ என்ற எழுத்துகளே பல த்துவங்களுக்கும் அடிப்படையாக உள்ளதால் அதனை மறைவாக எட்டிரண்டு என்றனர். இந்தகார உகார நாதத்தில் இருந்துதான் அனைத்தும் தோன்றி மறைகின்றது. ஓம் என்ற ஓங்காரத்தில் உள்ள அ,உ இல்லாத மொழிகளே இவ்வுலகில் இல்லை. பிறந்த குழந்தையின் முதல் மொழியே ஊ, ஆ (குவா) என்ற அழுகுரல்தான். உன்னிப்பாகக் கவனித்துக் கேட்டால் பறவைகள், விலங்கினங்கள், உலக உயிரினங்கள் அனைத்தின் சப்தத்திலும் இந்த அகார உகார ஓசை அடங்கியிருப்பதை அறிய முடியும். கடலோசை, மழையோசை, இடியோசை, புயலோசை, தீயோசை மற்றும் இயற்கையின் எல்லா ஓசைகளும் இந்த சப்தத்தால் சக்தி பெற்று இயங்கி வருவதை உணரமுடியும்.

வேதம், இசை, மந்திரம், தந்திரம், யந்திரம் என அனைத்திலும் இந்த எட்டிரண்டு ரகசியமாய்ப் பொருந்தியுள்ளது. இந்த அகார உகாரமே நாத விந்தாகவும், சூரிய சந்திரனாகவும், சிவசக்தி யாகவும் இருப்பதை சித்தர்கள் உணர்ந்தனர். எனவே இவ்வட்சரத்தைப் பற்றியும் இயக்கும் முறைமையை அறிந்து கொள்ளவும் வலியுறுத்தி எட்டிரண்டு என்று மறைவாகவே சொல்கிறார்கள்.

அ, உ, ம் என்ற அட்சரங்களே ஓம் எனும் பிரணவ மந்திரத்தில் உள்ளது.அனைத்து மந்திரங்களுக்கும் மூலமானதும் இந்த ஓங்காரம் எனும் பிரணவமே. நாதமாகிய ஒலியும் விந்தாகிய ஒளியும் இணைவதையே 'நாத விந்து கலாதி நமோ நம' என்பார் அருணகிரி நாதர். பஞச இந்திரியங்களால் அறியப்படுவது அகாரம், மனதினால் அறியப்படுவது உகாரம், ஞானத்தினால் மட்டுமே அறியப்படுவது மகாரம். இனறைய விஞ்ஞானம் கண்ணுக்குத் தெரியாத அணுவில் கூட நியூட்ரான், புரோட்டான், எலக்ட்ரான் எனும் மூவகைச் சக்திகள் உள்ளதாக கண்டறிந்துள்ளது குறிப்பிடத் தக்கது. இதையே குணங்களாக சத்துவம், தமோ, ராஜோ எனபர். அதாவது இதுதான் விஞ்ஞானத்தால் முறையே நேர்நிலை இயக்கம்,எதிர்நிலை இயக்கம்,நடுநிலை இயக்கம் என்று கூறப்படுகிறது. ஆராய்ந்து தோண்டிக் கொண்டே சென்றோம் என்றால் விஞ்ஞானத்தின் வேர்கள் மெய்ஞானத்தில் பரவி படர்ந்திருப்பதைக் காண முடியும்.

Shared from....மௌனத்தின் அலைகள்.இராம் மனோகர்

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

குருவாயூர் கேசவன் யானை

குருவாயூர்" ஏகாதசி? மோட்ச ஏகாதசி என்றும், முக்கோடி ஏகாதசி என்றும் சொல்லப்படுவது

பொதுவா, "வைகுண்ட" ஏகாதசி-ன்னு தானே எல்லா இடத்துலயும் சொல்லுவாங்க?
கேரளத்தில் மட்டும், அத்தனை ஆலயங்களிலும், ஏன் "குருவாயூர் ஏகாதசி"-ன்னு சொல்லணும்? இத்தனைக்கும், குருவாயூர் பாடல் பெற்ற தலம் கூடக் கிடையாதே!

= எல்லாத்துக்கும் ஒரு யானை தான் காரணம்!
= வாரணம் தான் காரணம்!

அந்த யானையின் மனசு தான், மொத்த வைகுந்த ஏகாதசிக்கே, "குருவாயூர்" ஏகாதசி என்று பெயர் பெற்றுத் தந்தது!

1914! வல்லிய ராஜா என்னும் நிலம்பூர் நாட்டு ராஜா! உள்நாட்டுக் கலகத்தில் அவஸ்தைப்பட்ட தன் குடும்பத்துக்காக வேண்டிக் கொண்டார்!
தன்னிடம் இருந்த பல யானைகளில் ஒன்றை, குருவாயூர் ஸ்ரீகோயிலுக்கு, தானம் அளித்தார்!
அந்த பத்து வயதுக் குட்டி யானை = கேசவன்! பின்னாளில் புகழ் பெற்ற "கஜராஜன் கேசவன்" ஆனது!

யானை என்னமோ குட்டி தான்! இருந்தாலும் சுட்டி!
பிரகலாதனும் குட்டி தானே! அவனைப் போலவே தான் இதுவும்!

அமைதியான-x-துறுதுறுப்பான சுபாவம்,
சாப்பிடும் போதும், விளையாடும் போதும், ஸ்ரீகோயிலைப் பார்த்தவாறே தான் எதுவும் பண்ணும்! அங்கிருந்து தன் கண்ணை மட்டும் எடுக்கவே எடுக்காது! இத்தனையும் பத்தே வயசில்!
அவ்வப்போது ஊர்வலத்தில் கண்ணனை அதன் மேலும் ஏற்றுவார்கள்!

கண்ணனையே சுமக்கும் களிப்பிலே, மிதப்பிலே...
இந்த யானை, ஆலயத்துக்கு உள்ளேயே சாணம் போடும்! நீரும் பாய்ச்சும்!
நாலம்பலம் என்று சொல்லப்படும் பிரகார வலம்! அதில் வலம் வரும் போதெல்லாம் இப்படித் தவறாது பண்ணும்!

வளர வளர, சக யானைகளெல்லாம், விளையாடுவதும், முரண்டு பிடிப்பதும், கோயிலில் சாப்பாட்டுக்குப் பஞ்சமே இல்லாமல்,குலைகுலையாய் நேந்திரம் பழம் உண்டு, ஜாலியாகக் கழிப்பதுமாய் இருக்க...

இது மட்டும், ஏகாதசி நாளில் சாப்பிடாமல் இருக்க, எப்படியோ கற்றுக் கொண்டது!
மேலும் விதம் விதமாக வேடிக்கை காட்டவும் வேறு கற்றுக் கொண்டது!
பூவைத் தூவி, தலையைக் குலுக்கி, கழுத்து மணியை ஆட்டி...என்று பல இன்பச் சேட்டைகள்!

போதாக் குறைக்கு, வீதியுலாவின் போது, வித்தியாசமாக நடந்து காட்டும்!
முன்னும் பின்னும், வலமும் இடமும்,
நேர் வாட்டிலும், குறுக்கு வாட்டிலும்,
அசைந்து அசைந்து செல்வது ஏதோ டான்ஸ் ஆடுவது போல இருக்கும்!

குருவாயூரப்பன், திடீரென்று இதனால் அரங்கனைப் போல், நடையழகு உடையவன் ஆகி விட்டான்!
மக்களிடம், குறிப்பாகச் சின்னஞ் சிறார்களிடம் கேசவனுக்கு ஏக செல்வாக்கு கூடி விட்டது! ஆனால்...ஆனால்...

பக்கத்து ஊர்களில் நடக்கும் உற்சவங்களுக்கு இது செல்லாது! முரண்டு பிடிக்கும்!
அங்குசத்தால் அடி வாங்கும்!
ஆனால் அலறாது! பிளிறாது! கண்ணீர் உகுக்கும்! நீர் பெருக்கும்! ஆனால் அப்பவும் குருவாயூரை விட்டு மட்டும் செல்லவே செல்லாது!
குருவாயூரப்பனை, சும்மா ஒப்புக்குச் சுமக்காமல், மனசிலே சுமந்து விட்டது போலும்!

மனசிலே சுமக்கத் தொடங்கி விட்டால் வரும் பாரத்தை யார் அறிவார், சொல்லுங்கள்?

குருவாயூரப்பன் ஊருலாச் சிலையை (உற்சவர்), மலையாளத்தில், திரு-வெளி என்பார்கள்! "வெளி"யில் கொண்டு வரும் சிலை என்பதால் திரு-"வெளி"! ஆனால் ஸ்ரீவேளி, சீவேளி என்று பின்னாளில் திரிந்து விட்டது!

திருச்செந்தூர் முருகப் பெருமானுக்கும் இந்த ஸ்ரீவேளி உண்டு! பொன்-வெள்ளி என்று இரண்டு ஸ்ரீவேளிகள்!
மூலத்தானத்து முதல்வனின் காலடியில் இரு பக்கமும், இவற்றை இன்றும் காணலாம்!
செந்தூரில், மலையாள முறையில் (குமார தாந்த்ரீகம்) பூசை செய்வதால், இப்படி மலையாள வழக்கம் ஏற்பட்டு விட்டது! இப்போ நாம் குருவாயூருக்கு வருவோம்!

ஸ்ரீவேளி = தட்டையான பலகையில், மாயோனின் உருவம் பொறித்து, அதன் கீழே சின்னூண்டு இருக்கும்!
நம்மூரு சிலை போலவெல்லாம் இருக்காது! கேரளா ஸ்டைலில் இருக்கும்! அதுக்கு "திடம்பு"-ன்னு பேரு!

நம்ம கேசவன், அந்தத் “திடம்பை“ யார் வைத்திருக்கிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே தன் முன்னங்காலை மடக்கும்!
மற்ற யாராய் இருந்தாலும், பின்னங்கால் வழியாக ஏறித் தான், யானை மேல் உட்கார வேண்டும்!

எவ்வளவு தான் தேங்காய், பழம், கரும்பு இனாமாகக் கொடுத்தாலும், அவற்றை எல்லாம் ஒதுக்கி விடும்!
தன் முன்னங் கால்களை மட்டும், வேறு யாருக்கும் மடக்கவே மடக்காது!

உன் அந்தமில் சீர்க்கு அல்லால்,
வேறு எங்கும்,
அகம் குழைய மாட்டேனே-ன்னு ஆழ்வார் பாசுரத்தை நாமே படிச்சதில்லை! படிச்சாலும், நிஜ வாழ்வில் பிடிச்சதில்லை! ஆனா இந்த யானை, இதை எங்கே போயி படிச்சிது/பிடிச்சிது-ன்னு தான் தெரியவில்லை!

செந்தழலே வந்து அழலைச் செய்திடினும், செங்கமலம்
அந்தரம் சேர் வெங் கதிரோற்கு அல்லால் அலர் ஆவால்!!
வெந்துயர் வீட்டா விடினும் வித்துவக்கோட்டு அம்மானே-உன்
அந்தம் இல் சீர்க்கு அல்லால் அகம் குழைய மாட்டேனே!

கேசவனை, "திமிர் பிடித்த யானை" என்று பட்டம் கட்டி விட்டார்கள்!
அது "நார்மலான" யானை இல்லை! "ஈகோ பிடிச்ச" யானை என்று பேர் வாங்கிக் கொண்டது!

* முதலில் கரும்பைக் கொடுத்து ஆசை காட்டியவர்கள், பிற்பாடு சாப்பாடு கூடச் சரியாகப் போடாமல் தண்டிக்கப் பார்த்தார்கள்! = பசி!
அப்பவும் கேசவன் - "வேறெங்கும்" அகம் குழைய மாட்டேனே!

* மற்ற யானைகளிடம் இருந்து ஒதுக்கி வைக்கப் பார்த்தார்கள்! = தனிமை!
அப்பவும் கேசவன் - "வேறெங்கும்" அகம் குழைய மாட்டேனே!

* சரி யானையின் "ஈகோ"-வை அதன் வழியிலேயே அடக்குவோம் என்று நினைத்தார்கள்!
குருவாயூர் அப்பனைத் தானே மனசால் சுமக்கிறாய்? அவனையே உனக்கு இல்லாமல் செய்து விட்டால்??? ஐயோ!

அன்றில் இருந்து, கேசவன் மேல் மட்டும் குருவாயூரப்பன் "திடம்பை" ஏற்றுவதில்லை!
கேசவனின் முறையே வந்தாலும் கூட, "திடம்பை" அவன் மேல் ஏற்றுவதில்லை! அவனோடு பேசுவதையெல்லாம் குறைத்துக் கொண்டார்கள்!

அவன் மிக அழகாக ஒதுக்கப்பட்டான்! ஒதுக்கப்பட்டான்!
உதாசீனம்!
அப்போவாச்சும் அந்தக் கேசவன் "திருந்தினானா"?

ஆனால் அப்பவும் கேசவன் - "வேறெங்கும்" அகம் குழைய மாட்டேனே!

பிற யானைகளின் மேல் குருவாயூரப்பன் உலா வருவதைப் பார்க்கும் கேசவனுக்கு, தன்னை ஒதுக்குகிறார்கள் என்று நன்றாகத் தெரிந்து விட்டது!
நேற்று வரை கண்ணனைச் சுமந்து வந்த கேசவன்,
இன்று கட்டையை மட்டுமே சுமப்பவன் ஆக்கப்பட்டான்! ஆனால்......ஆனால்...

யானை தனக்கென்று எந்த உரிமையும் கோரவில்லை!
தன்னை மட்டும் தான் குருவாயூர் அப்பனின் உலாவுக்குப் பயன்படுத்த வேணும் என்று அடமும் பிடிக்கவில்லை! மதமும் பிடிக்கவில்லை!

அதன் மனதில் ஒன்றே ஒன்று தான்:
குருவாயூர் அப்பனுக்கு வளைந்த கால்கள், வேறு எங்கும் வளையாமல் இருக்க வேண்டும்!
மற்றபடி, கண்ணன் யார் மீது வலம் வந்தால் என்ன? கண்ணன் ஆசைப்பட்டு வலம் வந்தால் போதாதா?

மயிற் பீலி அசைய அசைய, அவன் வலம் வரும் அழகே அழகு!
மானச சஞ்சரரே! மானச சஞ்சரரே!
அதை நானே கெடுப்பேனா? நானே கெடுப்பேனா?

கேசவன் பொறாமை பிடித்து, வீதியுலாவில் மற்ற யானைகளோடு, முரண்டும் பிடிக்கவில்லை! சண்டைக்கும் செல்லவில்லை!
மற்ற பளு தூக்கும் வேலைகளுக்குத் தயங்காது வந்து நிற்கும்! வேலை செய்யும்!
ஆனால் அதன் கண்களில்? கண்களில்?......அது மட்டும் நிற்கவே இல்லை!

பாகன்களுக்குப் பயம் வந்து விட்டது! யானையின் கண்ணில் தொடர்ந்து நீர் கோர்த்த வண்ணம்!
ஒரு நாளில்லை ஒரு நாள், மதம் பிடித்து விடும் என்று நினைத்து விட்டார்கள்!

ஆனால் மதமாவது? ஒன்றாவது?
குருவாயூரப்பனிடம், தனக்கு"ம்" உரிமை இருக்கு என்று நிலை நாட்டிக் கொள்ள, பாவம்...மட நெஞ்சம், அதற்குத் தெரியவே இல்லை!
அவனே ”கதி” என்ற நிலையில்...”சரணா கதி” என்ற நிலையில்...

தன்னைத் தான் காத்துக் கொள்ளத் தெரியாத நிலை...
அவனைக் குருவாயூரப்பனும் கைவிட்டு விட்டானோ?

1970 மார்கழி மாசம் - குருவாயூர் ஸ்ரீகோயிலில் ஏகாதசி விளக்கு விழா!
விளக்கு மாடம் முழுக்க சுடர்விடும் விளக்குகள்!
அம்மே நாராயணா, தேவீ நாராயணா என்ற கோஷங்கள்!

நம்ம கேசவன் மேல் மாயக் கண்ணன் உலா வர வேண்டிய முறை!
ஆனால் ஸ்ரீவேளி உற்சவத்தை இன்னொரு யானையைக் கொண்டு முடித்து விட்டார்கள்! கோயில் நடை சார்த்தப்பட்டது!
கோயிலுக்கு வெளியே கொட்டடியில் படுத்துக் கொண்டான் கேசவன்! வாரணத்துக்கு ஆயிரம் கனவுகள்! - வாரணமாயிரம் கனவுகள்!

"அதிகாலை நேரத்தில் சூரியன் தன்னிடம் இதமாகத் தானே இருந்தது?
ஆனால் பிற்பாடு சுயரூபம் காட்டி விட்டதே! இப்போ இப்படிச் சுடுகிறதே!
சரி, இனி நம்ம வழி நமக்கு! அவனுக்கு மலர வேணாம் என்று ஒரு தாமரைப்பூ நினைத்திடுமா?

அது போல், என் துயரை நீ வீட்டா விட்டாலும் பரவாயில்லையடா!
உனக்கு அல்லால்,
"வேறெங்கும்" அகம் குழைய மாட்டேனே!
"வேறெங்கும்" அகம் குழைய மாட்டேனே!"

ஈரமே வாழ்வாகிப் போன கேசவனின் தூங்கிய கண்களில் மெல்லிய ஈரம்...நீரில் இருந்து நெருப்பு வருமா என்ன?
பஞ்ச பூதத் தத்துவம் என்ன சொல்லிற்று? = அக்னியில் இருந்து நீர் உண்டானது! அக்னையே இதம் நமம!
அன்றைய ஏகாதசி இரவில் பற்றிக் கொண்டது! - தீ! தீ! தீ!
அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர்! - தீ! தீ! தீ!

மேற்குச் சுற்றம்பலத்தில் பிடித்துக் கொண்ட தீ, கூத்தம்பலத்துக்குப் பரவி, கிடு கிடுவென்று வளர்ந்து, நாலம்பல விளக்கு மாடங்களைப் பற்றிக் கொண்டது!
ஏதோ புகைச்சல் வாசனை பார்த்து, யாரோ கூவ, ஒரு சிலர் மட்டும் விழித்துக் கொண்டு பதறினார்கள்!

யானைகளை அவ்வளவு சீக்கிரம், அதுவும் தூக்கத்தில் இருந்து எழுப்ப முடியுமா என்ன?
அம்பலத்தைத் தன் பார்வையில் இருந்து அகற்றாத கேசவன் மட்டும், நெருப்பைக் கண்டு, அலறி அடித்துக் கொண்டு, எழுந்து ஓடினான்!

"ஐயோ! என் செல்வப் பிள்ளைக்கு என்ன ஆயிற்றோ? என் சின்னிக் கண்ணனுக்கு என்ன ஆயிற்றோ? "
அதிகம் பிளிறாத கேசவன், அன்று நள்ளிரவில் படு பயங்கரமாகப் பிளிறினான்! - "என்டே குருவாயூரப்பா"!

கேசவன் பிளிறலில் மொத்த குருவாயூரும் விழித்துக் கொண்டது! அவனோ நாலம்பல நடையைச் சுற்றிச் சுற்றி வருகிறான்!
புதிய மண்டபம் கட்டுவதற்காக வைக்கப் பட்டிருந்த மணல் மூட்டைகளை, ஒரே மொத்தமாய் தூக்கிக் கொண்டு வந்து, அவன் தொம் தொம் என்று போட...

ஊரே திரண்டது! மணல் கொண்டு வீசியது! தீயணைப்புத் துறை சற்று நேரம் கழித்து வந்து நீரைப் பாய்ச்ச, மொத்த அம்பலமும் மொத்தமாய்க் குளிர்ந்தது!

அனைவரும் உள்ளே சென்று பார்க்க...
இன்னும் மூனே மூனு அடி தான்! கருவறைச் சுவர்!
அது வரை அத்தனையும் மொத்தமாய் கருகி இருக்க...
ஸ்ரீகோயில் வாசல் மாலைகள் மட்டும் கருகாமல் இருக்க...
ஸ்ரீகோயில் தப்பியது! சின்னிக் கிருஷ்ணன் தப்பித்தான்!

துவாரகையில் கண்ணனே வழிபட்டு, பின்னர் உத்தவர் வழிபட்டு,
குருவும் வாயுவும் அந்த விக்ரகத்தைக் கொண்டு வந்து,
அம்மையப்பனான பார்வதி பரமேஸ்வரன் அருளால் பிரதிட்டை செய்யப்பட்ட அந்த.....
குருவாயூரப்பன் தப்பித்தான்! குருவாயூரப்பன் தப்பித்தான்!

மக்கள், கேசவன் மனசைப் புரிந்து கொண்டார்கள்!
கேசவன் "ஈகோ" பிடித்த ஜீவன் அல்ல! "கண்ணனை"ப் பிடித்த ஜீவன் - என்பதை லேட்டாகப் புரிந்து கொண்டார்கள்.......
என்ன பிரயோஜனம்?......அவனோ மனத்தளவில் மிகவும் தளர்ந்து போய் விட்டான்! - கேசவனைப் பாடவும், நீ கேட்டே, கிடத்தீயோ?

மேல்சாந்திகளும், தந்த்ரிகளும், கடுமையான சாஸ்திர சட்டங்களால் ஆளும் குருவாயூரில்,
மனிதர்களுக்கே பல சமயம் நீதி கிடைப்பதில்லை! ஒரு யானைக்கா நீதி கிடைக்கப் போகிறது?

நெஞ்சுக்கு நீதி - அதை யார் தருவார்கள், போயும் போயும் ஒரு யானைக்கு? = நிமலன் நிர்மலன் "நீதி" வானவன்! அவன் அல்லவா தர முடியும் "நெஞ்சுக்கு நீதி"!

குருவாயூரப்பன் ஸ்ரீவேளியான "திடம்பு", மீண்டும் கேசவன் மேல் ஏறியது!
கேசவன் வெகு நாள் கழித்து, முன்னங் கால்களை மடித்தான்!

ஸ்ரீவேளி பிடித்தவர், அவன் கால் மேல் ஏறி, அவன் மேல் ஏறினார்!
பின்னங் கால்கள் வழியாகப் பலரும் ஏறினார்கள்!
குடை பிடிப்பவரும், சாமரம் ஆட்டுவரும், மயில்தோகை விசிறி வீசுவரும் ஏறினார்கள்!

நெடுநாள் கழித்து நடையழகு!
மீண்டும் கேசவன்-கண்ணன் உலா!

வண்ண மாடங்கள் சூழ் "குரு வாயூர்"
"கண்ணன்-கேசவன்" நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிர் எதிர் தூவிட
கண்ணன் முற்றம் கலந்து அளர் ஆயிற்றே!

Dec-1976......இன்றைய நாள்...அன்று! மோட்ச ஏகாதசி என்னும் வைகுந்த ஏகாதசி!
குருவாயூரப்பன் "திடம்பை", கேசவன் மேல் ஏற்றுகிறார்கள்!
ஏற்றிய சில வினாடிகளிலேயே,
கீழே, சரி சரி சரி எனச்.....சரிந்து விழுகிறான் கேசவன்! ஐயோ!!!

அவசரம் அவசரமாக, "திடம்பை", இன்னொரு யானைக்கு மாற்றுகிறார்கள்!
தொடங்கிய புறப்பாட்டை முடிக்கணுமே! சாஸ்திர விதி ஆயிற்றே!

மூச்சு இழுக்க இழுக்க........
ஹோய் கேசவா.....உனக்கா இந்த மரண அவஸ்தை?

இன்னொரு யானையின் மேல், குருவாயூரப்பன் உலா வரும் அழகை,
இன்பமாகப் பார்த்து முடித்தான் கேசவன்!
வீதியுலா முடிந்தது! ஸ்ரீவேளி முடிந்தது! மாறிலா அன்பும் முடிந்தது!
வைத்த கண் வாங்கவில்லை! உயிரை மட்டும் வாங்கிக் கொண்டான்!

எம்பெருமான் ஸ்ரீவேளி முன்பாக,
அந்த மயிலிறகின் முன்பாக,
அந்த மதி வதனம் முன்பாக,
சிரித்த சிறு செவ்விதழ்கள் முன்பாக,
கலைத்த அந்த தலைமுடியின் முன்பாக,
துதிக்கையை நீட்டி விரித்தபடி,
துதிக்-"கையை" நீட்டி விரித்தபடி,

"சரணம்" என்று வாயால் சொல்லக் கூடத் தெரியாது...
அனன்ய சரணஹ, த்வாம் சரணம், சரணம் அஹம் பிரபத்யே!
ஸ்ரீமன் நாராயண சரணெள, சரணம் ப்ரபத்யே!
ஸ்ரீமதே நாராயணாய நமஹ!

புகல் ஒன்று இல்லா அடியேன்....
மோட்ச ஏகாதசியான வைகுந்த ஏகாதசியும் அதுவுமாய்.....
அகலகில்லேன், உன்னை அகலகில்லேன் என்று உன்
அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே!

தன் மேல் ஏற்றாவிட்டாலும் பரவாயில்லை, கண்ணன் வீதியுலா கண்டால் போதும் என்று இருந்த ஜீவன் அல்லவா? அதன் இயற்கையான கம்பீரம் குறைந்து, இப்படி மனத்தளவில் தளர்ந்து, அதன் கதி இப்படி முடிந்து விட்டதே!

தன் கால்களைத் தானே, வேறு யாருக்கும் மடக்காது இருந்தான்?
வேறு யாரும் கண்ணனிடம் செல்வதைத் தடுத்தானா என்ன?
மடக்காது இருத்தலுக்கும், தடுக்காது இருத்தலுக்கும் கூடவா, மாந்தர்க்கு வித்தியாசம் தெரியவில்லை?

அவன் மனத்திலா பொறாமை? ஆணவம்?
அவன் மனத்திலா "தனக்கு மட்டுமே" என்கிற ஒரு எண்ணம்?
தனக்கு ஒத்து வரவில்லை என்பதால், அவனைத் தள்ளி வைக்கும் அளவுக்கா, ஒரு பாழும் வெறி?

அவனையா ஒதுக்கி வைக்க முடிந்தது? உதாசீனப் படுத்த முடிந்தது?
அவனுக்கா பசியைக் கொடுத்து, தனிமையைக் கொடுக்க முடிந்தது?

யார் பெற்ற பிள்ளையோ?
மாயங்கள் செய்யும் மாயோனிடம் மனதைக் கொடுத்து,
இப்படி மண்ணில் இன்று விழுந்து விட்டதே!

அவாவறச் சூழ் ”அரியை அயனை அரனை” அலற்றி
அவா அற்று, வீடு பெற்ற, குருகூர்ச் சடகோபன் சொன்ன
அவாவில் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவாவில் அந்தாதி இப் பத்து அறிந்தார்......
பிறந்தார் உயர்ந்தே-உயர்வற உயர் நலம், துயர் அறு சுடர் அடி, தொழுது எழென் மனனே!

வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!

வாழைப்பந்தல் கிராமத்தில், சின்னஞ் சிறு வயதில்...அன்று கண்ட காட்சி...

அத்திகிரி அருளாளப் பெருமாள் வந்தார்!
ஆனை பரிமேல் அழகர் வந்தார் வந்தார்!
கச்சி தன்னில் கண் கொடுக்கும் பெருமாள் வந்தார்!
கருத வரம் தரும், வரதப் பெருமாள் வந்தார்!
முக்தி மழை பொழியும் முகில் வண்ணன் வந்தார்!
”மூமூமூலம்” என ஓஓஓலம் இட, வல்லார் வந்தார்!

வாழைப்பந்தல் கிராமத்தின் கஜேந்திர வரதராஜப் பெருமாளே! ஆனைக்கு அருளிய அருளாளப் பெருமாளே!

ஹே பெருமானே,
இந்த யானைக்கு முக்தி கொடு! உன்னைக் கொடு!
யம்மாடி கோதை,
இந்த யானைக்கு இனி உன் வீடே வீடு! இதைச் சேர்த்துக் கொள்!

இந்தக் கால் மடங்கா யானைக்கு...
வேறெங்கும் அகங் குழையா யானைக்கு...
பிறர் வீட்டில் ஏறத் தானே மதிப்பில்லை?
உன் "வீட்டில்" ஏற, மிக்கதோர் மதிப்புண்டே!

கேரள அரசு, கேசவனைக் "கஜராஜன்" என்று பிற்பாடு கொண்டாடி...
குருவாயூர் வீதியிலே, பன்னிரெண்டு அடிச் சிலையாக எழுப்பியது!

"வேறெங்கும் அகங் குழைய மாட்டேனே!" என்று...
இன்றும் எம்பெருமானைப் பார்த்த வண்ணம் நிற்கிறான்...
ஐந்தறிவு மட்டுமே கொண்ட அவனுடைய அவன்!

ஐந்து-அறிவால் அறிந்து, உன் இரு-தாள் இறைஞ்சும்
அடியார் இடைஞ்சல் களைவோனே!
அழகான செம்பொன் மயில் மீது அமர்ந்து
அலைவாய் உகந்த பெருமாளே!

உன் பேரையே என்றென்றும் சொல்லிய,
என் அலை-வாய்க்கு உகந்த பெருமாளே!

Shared from Mannargudi Sitaraman Srinivasan

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: Aanmeekam...

Post by Pratyaksham Bala »

குருவாயூர்" ஏகாதசி? மோட்ச ஏகாதசி என்றும், முக்கோடி ஏகாதசி என்றும் சொல்லப்படுவது பொதுவா, "வைகுண்ட" ஏகாதசி-ன்னு தானே எல்லா இடத்துலயும் சொல்லுவாங்க? கேரளத்தில் மட்டும், அத்தனை ஆலயங்களிலும், ஏன் "குருவாயூர் ஏகாதசி"-ன்னு சொல்லணும்?

Dec-1976......இன்றைய நாள்...! மோட்ச ஏகாதசி என்னும் வைகுந்த ஏகாதசி!
The shukla paksha EkAdashi of vrishcikamAsa (கார்த்திகை) is called Guruvayur EkAdashi. The last one was celebrated on 12 December 2013. In Kerala, the shukla paksha EkAdashi of vrishcikamAsa is special because it occurs in the Mandala season.

The shukla paksha EkAdashi of dhanurmAsa (மார்கழி) is called VaikunTHa EkAdashi. The last one was celebrated on 11 January 2014.

Guruvayur Ekadashi day of 'Nala' year was celebrated on 2 December 1976. Incidentally, the Temple elephant Kesavan died on that day.

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: Aanmeekam...

Post by Pratyaksham Bala »

Check this very interesting site which gives detailed information not only on Guruvayur elephant Kesavan, but also on many other famous Temple elephants:-
http://www.starelephants.com/elephants/ ... savan.html

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

ஏழுமலையானே வியப்புக்குரியவன் தான். எப்படி? ‘பகவான் பரம தயாளன்; எளியவன் என்றால், தரையில் அல்லவா இருக்க வேண்டும்! இவ்வளவு கஷ்டப்பட்டு மலையேறி வரச் சொல்லலாமா’ என்றார் ஓர் அன்பர்.

அதற்கு, ஸ்வாமி தேசிகன் சொல்வார்: பகவான் பரம தயாளன் என்பதற்கு, அவன் மலைமீது நிற்பது தான் சாட்சி. நாற்று நட்டு, களை பறித்து, நீர் பாய்ச்சி பராமரிக்கும் விவசாயி, பரண் கட்டி அதன் மேலிருந்து காவல் இருப்பது ஏன்? அப்போதுதான், நெடுந்தூரம் அவன் பார்வைக்கு உட்படும். பயிர்களை பாதுகாக்க முடியும். அப்படி, அனைவரையும் பாதுகாக்கத்தான், பகவான் மலைமீது ஓய்வே இல்லாமல் நின்று கொண்டிருக்கிறான்.”

எவ்வளவு பெரிய கருணை இது! அந்தக் கருணை வெள்ளம் அனைவரையும் எப்போதும் காக்கட்டும். என்றும் நம் மனம் அவனைச் சரணடையட்டும்.

Mannargudi Sitaraman Srinivasan

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

இப்போது நடந்து கொண்டிருப்பது கலியுகம். இந்தக் கலியுகத்தில் நம் காலத்தை ‘விஞ்ஞான காலம்’ என்று தாராளமாகச் சொல்லலாம். இந்த விஞ்ஞானம் ஒரு வகையில் நம் அவ்வளவு பேரையும் சப்தத்தால் ஒன்றாகச் சேர்த்து கட்டிப் போட்டுவிட்டது. இது கிட்டத்தட்ட அரை தேவநிலை!

அதாவது, விண்ணில் உள்ள தேவர்களின் நிலையைத்தான் நான் இப்படிச் சொல்கிறேன். அவர்களைப் பற்றி புராணங்கள் வாயிலாகத் தெரிந்து கொண்டதில் அவர்களின் பலவித சக்திகள் நமக்கு ஆச்சரியம் தருவதாக இருப்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால், அவர்களின் ஒரு சக்தி நமக்கு வசப்பட்டு விட்டது. அதுதான், நினைப்பதை நினைத்தபோது பேச முடிவது! நாம் பேச நினைப்பவர் இந்த உலகில் எந்த மூலையில் இருந்தாலும், செல்போன் மூலமாக இன்று நொடிப்பொழுதில் தொடர்புகொண்டு பேச முடிகிறது நம்மால்… பேசுவதோடு அவர்களைப் பார்க்கவும், அதே செல்போன் திரையில் கேமரா வந்துவிட்டது. இதனால் நமது திட சொரூபம்தான் அருகருகே இல்லை. மற்றபடி ஒளிச் சரீரமும் ஒலிச் சாரீரமும் பிரிந்தெல்லாம் இல்லை.

சமீபத்தில், அமெரிக்காவில் இருக்கும் என் நண்பரின் மகன் அங்கிருந்து கொண்டே இங்கே கிரிமிடோரியத்தில் தன்னைப் பெற்ற தாய்க்கு கொள்ளி போட்ட சம்பவத்தை நான் காண நேர்ந்தது. 12,000 மைல் தொலைவுக்கு அப்பால் இருந்து கொண்டு அவன் தாயின் சடலத்தைப் பார்த்து அழ, அவன் அழுவதை இங்கிருப்போர் பார்த்து அழ, வெப் கேமராவை அந்தத் தாயின் காலடிக்குக் கொண்டு சென்று வைத்த நிலையில் அவன் அதை அங்கிருந்து கொண்டே பிடித்துக்கொண்டு அழுததைப் பார்த்த போது, அங்கே அசலுக்கும் நிழலுக்கும் எனக்கு வேற்றுமையே தெரியவில்லை.

தாய்க்குச் செய்ய வேண்டிய அந்திமக் கிரியைக்கான மந்திரங்களைக் கூட பிராம்மணர் சொல்லச் சொல்ல அவன் திருப்பிச் சொல்லி, அவன் சார்பில் இங்கே பார்க்க, தாயின் மார்பு மீது கற்பூரம் கொளுத்தப் பட்டு அந்தச் சிதையும் மின் தகனத்துக்கு, ஷெல்ட்டருக்குள் நுழைந்தது. பின் ஒரு மணி நேரத்தில், ஒரு மண் கலயத்தில் சுடச்சுட தகனச் சாம்பலை உரியவர்கள் பெற்றுக்கொண்டு அடுத்த ஒரு மணி நேரத்தில் கடலில் அந்தச் சாம்பலைக் கரைத்துவிட்டுத் திரும்பினோம்.

கிட்டத்தட்ட எல்லாமே ஒரு இருபது மணி நேர கால அவகாசத்துக்குள் நடந்து முடிந்துவிட்டது.

இதே அந்த நாளாக இருந்தால், பிணத்தைப் போட்டுக் கொண்டு காத்திருக்க வேண்டும். மயானத்துக்கு ஊர் பார்க்க நடந்தேதான் சென்றாக வேண்டும். அங்கே ஒரு நாள் முழுக்க போட்டு எரிப்பான். மயானமும் அச்ச மூட்டுவதாக இருக்கும்.

இன்று மயானம் ஒரு வென்னீர் அடுப்பு அளவு சுருங்கி, ஒன்றுமேயில்லாது போய்விட்டது. பத்து நாள் காரியமெல்லாம் கூட மூன்று நாளைக்குச் சுருக்கப்பட்டுவிட்டது.

ஒரு பிராம்மணர் ஒரு டூவீலரை வைத்துக்கொண்டு ஒரு நாளைக்கு மூன்று நான்கு அபர காரியமெல்லாம் செய்துவைக்குமளவு போய்விட்டார். அவரை விட்டால் அபர காரியம் செய்து வைக்க ஆளும் இல்லை. அபர காரியம் என்றில்லை. திருமணங்களே கூட இன்று பேக்கேஜ் விஷயங்களாகி விட்டன. அந்த நாளில் ஒரு கல்யாண விஷயம், ஆறு மாத காலத்துக்கு சம்மந்தப்பட்ட குடும்பத்தை ஒரு ஆட்டு ஆட்டி வைத்துவிடும். அதிலும் கல்யாண முகூர்த்த நாளன்றும், அதன் முதல் நாள், மறுநாள் எனும் மூன்று நாளில் குடும்பத்தவர்க்கு இருக்கும் டென்ஷனைச் சொல்லி மாள முடியாது. வைதீக காரியம் ஒருபுறம், லௌகீகங்கள் மறுபுறம், விருந்து, சீட்டாட்டம் என்கிற ஜிகினாக்கள் ஒருபுறம் என்று கல்யாண வீட்டுக் களையை வார்த்தைகளால் விவரித்துவிட முடியுமா என்ன?

இன்று அது ஒரு பேக்கேஜ் விஷயம். ஒரே ஒரு செக்கில் தீர்கின்ற விஷயம். கல்யாண வீட்டில் வாசலில் கோலம் போடுவதில் இருந்து இறுதியாக கட்டுச் சாதக்கூடை கட்டித்தந்து பெண் மாப்பிள்ளை ஊருக்குப் புறப்படுவது வரையிலான சகலத்தையும் செய்து தர, இன்று பல விற்பன்னர்கள் வந்து விட்டனர்.

‘சந்திரசேகரம்’ என்று பெரியவர் குறித்த சிந்தனைப் போக்குக்கு நடுவே, எதற்கு இன்றைய இந்த வாழ்வின் பார்வைகள் என்று சிலருக்கு கேட்கத் தோன்றலாம். காரணம், நிறையவே இருக்கிறது.

கணத்துக்கு கணம் மாறும் இந்த வாழ்வின் மாற்றங்களில், எல்லா அனுஷ்டானங்களும் வைதீக சம்பிரதாயங்களும் மாறலாம். ஆனால், பக்தி பாவனையில் மட்டும் மாற்றம் வந்துவிடவே கூடாது. அந்த பக்தி குறித்து பெரியவர், இன்றல்ல;

1960-களிலேயே மிகுந்த தூரப் பார்வையோடு அனேக விஷயங்களைப் பேசியிருக்கிறார்.

இன்று என்னதான் விஞ்ஞானம் கையை வீசிக் கொண்டும் காலை ஆட்டிக்கொண்டும் கூத்தடித்தாலும், பக்திக்கு ஒன்றும் பெரிய கேடு வந்து விடவில்லை என்றே கருதத் தோன்றுகிறது. இருபது முப்பது வருடங்களுக்கு முன்னால் நான் அழகர் கோயிலுக்குப் போனால், உள்ளே போய்விட்டு வர சற்று அச்சமாக இருக்கும். பெரிதாய் மனித நடமாட்டமே இருக்காது. உள்ளே சன்னிதியில் பட்டர் ஒரு ஓரமாய் உட்கார்ந்து கொண்டிருப்பார். இல்லாவிட்டால் சன்னிதி திறந்திருக்க, மடப்பள்ளியில் பிரசாதம் தயார் செய்து கொண்டிருப்பார். அங்கே போய் அவரைத் தேடிப்பிடித்து அழைத்துவர வேண்டும். இதுதான் திருமோகூர் கோயிலிலும்! மீனாட்சி அம்மனைத் தரிசிக்க எனக்கு அன்று தேவைப்பட்டதெல்லாம் அதிகபட்சம் 30 நிமிடங்கள் தான். இன்று இந்த முப்பது நிமிட நேரம், பார்க்கிங் செய்ய மட்டுமே தேவைப்படுகிறது. உள்ளே போய் தரிசனம் முடித்துவர குறைந்தது இரண்டு மணி நேரமாகிறது.

இங்கேயே இப்படி என்றால், திருப்பதியில் கேட்கவே தேவையில்லை. ஐநூறு ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுத்து தரிசனம் செய்யவே ஆறு ஏழு மணி நேரமாகிறது என்றால், ஜனங்களிடம் பக்தி கரைபுரண்டு ஓடுகிறது என்பதுதானே நிஜம்?

ஆனால், உண்மையான பக்தி எது என்பதை அறிந்த சான்றோர்களோ இந்த பக்திப்பெருக்கை ஊதப்பட்ட ஒரு பலூன் போலத்தான் நினைக்கின்றனர். பெரும்பாலும் இந்த பக்தியை – வர்த்தக பக்தியாக, பரிமாற்ற பக்தியாக, கடவுளை ஒரு அரசனைப் போல பாவித்து அவனை புலவர்கள் தாஜா செய்து பொன்னும் மணியும் பரிசாகப் பெறுவது போன்ற பக்தியாகவே நினைக்கின்றனர்.

இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு இந்து தன் மதத்தை விளக்கிக் கொள்ளவும், இதிகாச புராணங்களைத் தெரிந்து கொள்ளவும் இன்று கஷ்டப்பட தேவையே இல்லை. பார்த்தும் தெரிந்து கொள்ளலாம், படித்தும் தெரிந்து கொள்ளலாம். கூட்டிக்கழித்துப் பார்த்தால், பக்திக்கு இதுதான் பொற்காலமோ என்று கருதத் தோன்றுகிறது. ஆனால், தோராயமாக முப்பது வயதுக்குக் கீழே உள்ளவர்களிடம் பக்தி விஷயத்தில் ஆழ்ந்த ஈடுபாடோ இறை நம்பிக்கை ஒரு உன்னதம் என்கிற உணர்வோ இல்லை என்பதே நிதர்சனமாக உள்ளது.

இன்று எந்த இளைஞனும் நெற்றிக்குத் திலகம் இட விரும்புவதில்லை. மீறி இட நேர்ந்தாலும் ஒட்டியும் ஒட்டாமலும் தூசி விழுந்த மாதிரி விபூதி தரிக்கின்றனர். பெண்களோ ஒரு முற்றுப்புள்ளி அளவு பொட்டு வைத்துக்கொள்வதையே பெரிதாக நினைக்கின்றனர். சற்று கூடிப் போனாலும் ‘நான் என்ன பத்ரகாளியா?’ என்று கேட்கின்றனர். பாரம்பரிய உடையான பாவாடை, தாவணி வழக்கொழிந்தே போய்விட்டது. வீட்டு வாசலில் கோலம் போடுவது, செம்மண் இடுவது என்பதெல்லாம் இன்று ஒன் டைம் மேட்டர். ஒரு ஸ்டிக்கர் கோலத்தை ஒட்டி, செம்மண் இழைக்குப் பதிலாக சிவப்பு பெயின்டை வரைந்துவிட்டால் தீர்ந்தது கோலப் பிரச்னை. மாவிலைக்குப் பதிலாக பிளாஸ்டிக் இலைகளில் ஆன தோரணம் என்று சகல வைதீக விஷயங்களுக்கும் ஒரு ஆல்டர்நேட்டைக் கண்டுபிடித்து விட்டோம்.

இப்படி காலத்துக்குரிய மாற்றங்களோடு பக்தி உணர்ச்சியும் தன் பயணத்தைத் தொடர்ந்தபடிதான் உள்ளது. ஆனால், மானுட பக்தி எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? பெரியவரின் குரல் வழியாகவே கேட்போம்…
பகவானை எதற்காக பிரார்த்தனை பண்ண வேண்டும் என்பதில் அபிப்ராய பேதங்கள் உண்டு. இந்த லோக வாழ்வில் – நமக்கு எண்ணி முடியாத கஷ்டங்கள், சிரமங்கள், க்லேசங்கள், துக்கங்கள் ஏற்படுகின்றன. சரீர கஷ்டம், மன சஞ்சலம், பணமுடை, பயம், அவமானம் இப்படி கணக்கேயில்லாமல் அவதிப்படுகிறோம். இவை தீருவதற்கு வேறு வழிகளைத் தேடுகிறோம்.

உடம்பு சரியில்லை என்றால் டாக்டரிடம் போகிறோம். பணக் கஷ்டம் என்றால் கடன் கொடுக்கக் கூடியவர்களிடம் போகிறோம். பலவிதமான பிரச்னைகளைத் தீர்க்க ராஜாங்க அதிகாரியிடம் போகிறோம். இப்படிப் பலவிதமாக நாம் நடந்து கொண்டாலும் இந்த கஷ்டங்கள் அவ்வளவும் தீர பகவானிடம் பிரார்த்தனை பண்ணிக் கொள்கிறோம். டாக்டர் மருந்துதான் கொடுப்பார். அது நமக்குப் பலிதமாக வேண்டுமே! ஒருவர் சகாயம் செய்வார் என்று பார்க்கப் போகிறோம். வழியில் ஒரு விபத்து நமக்கே ஏற்பட்டு விட்டால் என்ன பண்ணுவது? இதற்காக பிரார்த்தனை பண்ணுகிறோம்.

இப்படி பிரார்த்தனை பண்ணுவது தப்பு என்பது சிலபேருடைய அபிப்ராயம். நம் கர்மாவுக்காகத்தான் கஷ்டம் வருகிறது. பகவானேதான் இந்தக் கஷ்டங்களைக் கொடுத்து தண்டித்து கர்மாவைத் தீர்க்கிறான். அதனால் இந்த மாதிரி லௌகீக விஷயங்களுக்கு பிரார்த்தனை பண்ணவே கூடாது. பகவானுக்கே நமக்கு எதை, எப்போது, எப்படித் தரவேண்டும் என்று தெரியும்.

அதனால் அவனிடம் எதுவும் பிரார்த்திக்கவே கூடாது. அவனை ஸ்மரித்தால் அது ஆனந்தமாக இருக்கிறதல்லவா? இந்த ஆனந்தம் ஒன்றுக்காகவே ஸ்மரிக்க வேண்டும். பக்தி பண்ணுவதற்குப் பலன், பக்தியில் கிடைக்கிற மன நிறைவேதான்! இந்தப் பெரிய நிறைவை விட்டு விட்டு, பக்தியை சின்னச் சின்ன தற்காலிக நிறைவுகளுக்கு ஒரு உபாயமாக வைத்துக் கொள்வது ரொம்பவும் தப்பு.

- இப்படிச் சிலர் அபிப்ராயப்படுகிறார்கள். இம்மட்டில் பகவானே சொல்கிற வாக்குதான் நமக்கு பெரிய பிரமாணம். இவ்விஷயமாக ஸ்வாமி என்ன சொல்கிறார்?

கீதையில் கிருஷ்ண பரமாத்மா இப்படிச் சொல்கிறார். ‘என்னை நாலு தினுசான ஜனங்கள் பஜிக்கிறார்கள். யார் அந்த நாலு வகைக்காரர்கள்? ஒருவன் ஆர்த்தன், இரண்டாமவன் ஜிஜ்ஞாசு, மூன்றாமவன் அர்த்தார்த்தி, நான்காமவன் ‘ஞானி’ என்கிறார்.


Mannargudi Sitaraman Srinivasan

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Aanmeekam...

Post by cmlover »

நாலு இல்லை, ஐந்து
ஐந்தாமவன் ஆஷாடாபூதி!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

மற்றுநான் பெற்ற தார்பெற வல்லார் வள்ளலே கள்ளமே பேசிக்
குற்றமே செயினுங் குணமெனக் கொள்ளுங் கொள்கையான் மிகைபல செய்தேன்
செற்றுமீ தோடுந் திரிபுரம் எரித்த திருமுல்லை வாயிலாய் அடியேன்
பற்றிலேன் உற்ற படுதுயர் களையாய் பாசுப தாபரஞ் சுடரே

மாற்றாது வழங்கும் வள்ளலே , வானத்தில் ஓடுகின்ற முப்புரங்களைப் பகைத்து எரித்தவனே , திருமுல்லை வாயிலில் எழுந்தருளியிருப்பவனே , உயிர்களைக் காப்பவனே , மேலான ஒளியாய் உள்ளவனே , யான் பொய்யையே பேசி , குற்றங் களையே செய்தாலும் அவைகளை நீ குணங்களாகவே கொள்ளும் அளவிற்கு உனது பேரருளைப் பெற்றேனாகலின் , யான் பெற்ற பேறு , மற்று யார் பெற வல்லார் ! அத்திருவருட் சார்பை நினைந்தே யான் குற்றங்கள் பலவற்றைச் செய்தேன் ; அது , தவறுடைத்தே . ஆயினும் , அது நோக்கி என்னை நீ கைவிடுவையாயின் , அடியேன் வேறொரு துணை இல்லேன் ; ஆதலின் , அடியேனை அடைந்த துன்பத்தை நீ நீக்கியருளாய் .

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

செய்யநின் கமல பாதஞ்
சேருமா தேவர் தேவே
மையணி கண்டத் தானே
மான்மறி மழுவொன் றேந்துஞ்
சைவனே சால ஞானங்
கற்றறி விலாத நாயேன்
ஐயனே ஆல வாயில்
அப்பனே அருள்செ யாயே!

வெண்டலை கையி லேந்தி
மிகவுமூர் பலிகொண் டென்றும்
உண்டது மில்லை சொல்லில்
உண்டது நஞ்சு தன்னைப்
பண்டுனை நினைய மாட்டாப்
பளகனேன் உளம தார
அண்டனே ஆல வாயில்
அப்பனே அருள்செ யாயே!

தண்டேர்மழுப் படையான்மழ விடையான்எழு கடல்நஞ்
சுண்டேபுரம் எரியச்சிலை வளைத்தான்இமை யவர்க்காத்
திண்டேர்மிசை நின்றானவன் உறையுந்திருச் சுழியல்
தொண்டேசெய வல்லாரவர் நல்லார்துயர் இலரே!

பைம்பொனே பவளக் குன்றே
பரமனே பால்வெண் ணீற்றாய்
செம்பொனே மலர்செய் பாதா
சீர்தரு மணியே மிக்க
அம்பொனே கொழித்து வீழும்
அணியணா மலையு ளானே
என்பொனே உன்னை யல்லால்
யாதும்நான் நினைவி லேனே!

மானின்நேர்விழி மாதராய்வழு
திக்குமாபெருந் தேவிகேள்
பானல்வாயொரு பாலனீங்கிவன்
என்றுநீபரி வெய்திடேல்
ஆனைமாமலை ஆதியாய
இடங்களிற்பல அல்லல்சேர்
ஈனர்கட்கெளி யேனலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே

திருச்சிற்றம்பலம்

Post Reply