ராகம்: மோஹனம் தாளம்: ஆதி **பல்லவி** திருக்கல்யானம் செய்து கொண்டாரே வந்து தரிசித்தெல்லோரும் காட்சி கண்டாரே **ஆனுபல்லவி** மருப்பொலிந்டிடும் செம்பொன் மலர் தாரணி கடம்பன் (மத்யமகாலம்) மங்கை சுணங்க்கவிழ் நங்கை மணங் கமழ் மஞ்சரி அம்புனை குஞ்சரி அம்மனை **சரணம்** பக்தியுடன் பொற்பீதத்துற்றிருந்தயன்றர பவித்திரமது புனைந்து அனுக்ஞை வைதைங்கரன்றனை துதித்து விரத சமா- வர்த்தனங்களும் புரிந்து பின் உத்தம யாத்திரை சென்றிட இந்திரன் விரும்பி உபசரித்திட கன்னியுடன் பந்தலில் திரும்பி சித்திரப் பொன்னூசலாதி தோல் மாலை மாற்றி சிற்பரையுடன் சிவனைப் பதம் பணிந்தேத்தி (மத்யமகாலம்) திங்கள் முகந்திகழும் குண குஞ்சரி -செங்கை பிணைந்திட எங்கள் குஹன் கடி மங்கள வேதி அதைந்தனரந்தணர் - மந்திர ஓசை முழங்க விருந்தலை வாரி நித்தில மாமனி அக்ஷதை - வாழையுத பலாசு விரித்ததி வேற்பெர சமமாக நிறைத்ததில் - ஏமமுற்றிடு பாலிகை வைத்ததில் இனித்திடும் குயிலார் நவ தானிய - மெதுத்துடன் பயசாகிய பானிய நனைத்து மங்கையினால் விதை தூவவும் - மனத்தினில் அன்பு குலாவிவுலாவிய நயமிலகிய அரிசன மணி கங்கண - மியலுலவிய கரமதனிலிலங்கவே நகை சுற்றிய முக நளின ப்ரபை கொடு - மகுடத்தினில் ஒளி மருவ க்ருபையொடு Back to [[kavikunjara-bharathi]]