ராகம்: மோஹனம் தாளம்: ஆதி
பல்லவி
திருக்கல்யானம் செய்து கொண்டாரே வந்து தரிசித்தெல்லோரும் காட்சி கண்டாரே
ஆனுபல்லவி
மருப்பொலிந்டிடும் செம்பொன் மலர் தாரணி கடம்பன்
(மத்யமகாலம்)
மங்கை சுணங்க்கவிழ் நங்கை மணங் கமழ்
மஞ்சரி அம்புனை குஞ்சரி அம்மனை
சரணம்
பக்தியுடன் பொற்பீதத்துற்றிருந்தயன்றர
பவித்திரமது புனைந்து அனுக்ஞை
வைதைங்கரன்றனை துதித்து விரத சமா-
வர்த்தனங்களும் புரிந்து பின்
உத்தம யாத்திரை சென்றிட இந்திரன் விரும்பி
உபசரித்திட கன்னியுடன் பந்தலில் திரும்பி
சித்திரப் பொன்னூசலாதி தோல் மாலை மாற்றி
சிற்பரையுடன் சிவனைப் பதம் பணிந்தேத்தி
(மத்யமகாலம்)
திங்கள் முகந்திகழும் குண குஞ்சரி -செங்கை பிணைந்திட எங்கள் குஹன் கடி
மங்கள வேதி அதைந்தனரந்தணர் - மந்திர ஓசை முழங்க விருந்தலை
வாரி நித்தில மாமனி அக்ஷதை - வாழையுத பலாசு விரித்ததி
வேற்பெர சமமாக நிறைத்ததில் - ஏமமுற்றிடு பாலிகை வைத்ததில்
இனித்திடும் குயிலார் நவ தானிய - மெதுத்துடன் பயசாகிய பானிய
நனைத்து மங்கையினால் விதை தூவவும் - மனத்தினில் அன்பு குலாவிவுலாவிய
நயமிலகிய அரிசன மணி கங்கண - மியலுலவிய கரமதனிலிலங்கவே
நகை சுற்றிய முக நளின ப்ரபை கொடு - மகுடத்தினில் ஒளி மருவ க்ருபையொடு
Back to kavikunjara-bharathi
You are here: Welcome » tirukkalyanam-ceytu-kondare-mohanam-adi