Chithra Pournami

History, religion and culture
Post Reply
satyabalu
Posts: 915
Joined: 28 Mar 2010, 11:07

Chithra Pournami

Post by satyabalu »

Courtesy T Ananthanarayanan
சித்ரா பெளர்ணமி

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

அம்பிகையைக் கொண்டாடும்
சித்ரா பௌர்ணமி நன்னாள்!

மாதந்தோறும் வருகிற பௌர்ணமி விசேஷம்தான். ஆனால் சித்திரையில் வருகிற பௌர்ணமி, மிகவும் உன்னதமானது.

சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி கூடிய அந்த தினத்தில் சந்திரனிலிருந்து அதிக அளவில் அமுதக் கிரணங்கள் பெருகுகின்றன.

அந்த ஒளி நம் மேனியில் பட்டால் உஷ்ணம் தணியும்.

ஆயுள் அதிகரிக்கும். தேஜஸ் கூடும். தோல் நோய்கள் வராது.

அதற்காகவே அந்த நாளில் நிலாச் சாப்பாடு, நிலாவில் விளையாட்டு என்றெல்லாம் ஏற்படுத்தியிருந்தனர் முன்னோர்கள்!

பௌர்ணமி என்பது அம்பிகை வழிபாட்டுக்கு உரிய அற்புதமான நாள்.

அன்று அம்பிகையை வழிபட்டால் குடும்பத்தில் ஒளி உண்டாகும்.

துன்பங்களாகிய இருள் நீங்கி நன்மை கிடைக்கும்.

பௌர்ணமி அன்று விரதம் இருந்து வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் பெற்று, ஐஸ்வரியங்களும் அடையலாம் என்பது நம்பிக்கை.


சித்திரை மாத பௌர்ணமி நாளில் விரதம் இருந்து தேவியை வழிபடுவது மாங்கல்ய பலம் சேர்க்கும். தடைப்பட்ட திருமணம் நடந்தேறும்.

அன்று அம்பாளுக்கு பூப்போட்ட வஸ்திரம் சாற்றி, பத்மராகம் என்ற நவரத்தினக்கல் பதித்த ஆபரணம் அணிவித்து, அம்பிகையின் பாடல்களைப் பாடி, தோத்திரங்களைச் சொல்லி, மஞ்சள் கலந்த சாதம், பானகம், ஏலம், கிராம்பு, பச்சைக் கற்பூரம் சேர்ந்த தாம்பூலம் படைத்து, தூப, தீப ஆராதனைகள் செய்து, நமஸ்கரித்து, பூஜையை நிறைவு செய்ய வேண்டும். என்கிறார்கள் ஆச்சார்யர்கள்!

விரதத்தை முழுமையாகக் கடைப்பிடிப்பவர்கள் இரவு பௌர்ணமி நிலவை தரிசித்து வணங்கிய பிறகே சாப்பிடுவார்கள்.


பௌர்ணமி பூஜையை பொதுவாக அனைவரும் செய்யலாம்.

திருமணமான பெண்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும், திருமணம் ஆக வேண்டியவர்கள் திருமண பாக்கியம் பெறவும் குழந்தை பேறு பெறவும் இந்த விரதத்ததைக் கடைபிடித்து அம்பிகையின் அருளைப் பெறலாம்!


அன்று மகாமேரு, ஸ்ரீ சக்ரம் உள்ள எல்லா திருக்கோயில்களிலும் நவாவர்ண பூஜை விமரிசையாக நடைபெறும்.

அம்பிகைக்குப் பால் குடங்கள் எடுத்து அபிஷேகம் செய்வதும் வழக்கம்.


சித்ரா பௌர்ணமியன்று ஈசனுக்கு சாதத்தில் நெய் கலந்து படைத்தால் நம் இல்லத்தில் லட்சுமி கடாட்சம் பெருகும். என்பது ஐதீகம்!

அன்றைய நாளில், கடலில் நீராடினால் கர்ம வினைகள் நீங்கும் என்கிறார்கள் முன்னோர்கள்!


சித்ரா பௌர்ணமி நன்னாள். சென்னை திருவொற்றியூர் ஸ்ரீவடிவுடையம்மன், சமயபுரம் மாரியம்மன், இருக்கன்குடி மாரியம்மன், புன்னைநல்லூர் மாரியம்மன், திருக்கடையூர் அபிராமி அம்பாள், திருமீயச்சூர் லலிதாம்பிகை முதலான ஆலயங்களில் சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறும்.


சென்னை மயிலாப்பூர் ஸ்ரீமுண்டகக்கண்ணியம்மன் ஆலயங்களில் நாளை 1008 பால் குட ஊர்வலமும் அபிஷேகமும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறும்.


காஞ்சி காமாட்சி அம்மன், மாங்காடு, திருவேற்காடு, திருச்சி வெக்காளியம்மன், கும்பகோணம் அய்யாவாடி பிரத்யங்கிரா தேவி, பட்டீஸ்வரம் ஸ்ரீதுர்கை, கதிராமங்கலம் வனதுர்கை, ஈரோடு சின்னமாரியம்மன், பெரியமாரியம்மன், கோவை கோனியம்மன் மற்றும் அம்மன் ஆலயங்கள் அனைத்திலும் விசேஷ பூஜைகள் நடைபெறும்.


இந்த நாளில், அம்மனுக்கு புடவை சார்த்தி, அரளிப்பூமாலை அணிவித்து, ஏதேனும் நைவேத்தியங்கள் செய்து தரிசிப்பது கணவன் மனைவி ஒற்றுமையை மேலோங்கச் செய்யும்.

தாலி பாக்கியம் நிலைக்கும்.

தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும். வீட்டில் சகல ஐஸ்வரியங்களும் குடிகொள்ளும்!

சித்ரா பெளர்ணமி விரதம் இருக்கும் முறை

Pl click this link

http://www.deepamnews.com/சித்ரா-பவுர்ணமி-விரதமிரு/

Post Reply