KavithaigaL by Rasikas

Post Reply
Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

39
மொழியாக்கம்
பஜ கோவிந்தம் - 14

சடையோ, மொட்டையோ, சீர்செய்தமுடியோ,
        சாயத்துணி கொண்டு பலவித வேடமோ,
காண வேண்டியதைக் காணாத மூடர்கள்
        வயிறு நிரப்பிட வேடமிடும் வீணர்கள் !

ப்ரத்யக்ஷம் பாலா,
18.06.2007.



जटिलो मुण्डी लुञ्छितकेशः
काषायाम्बरबहुकृतवेषः ।
पश्यन्नपि च न पश्यति मूढः
उदरनिमित्तं बहुकृतवेषः ॥

ஜடிலோ முண்டீ லுஞ்சித கேஶ:
காஷாயாம்பர பஹுக்ருத வேஷ:
பஶ்யந்ந்யாபி ச ந பஶ்யதி மூட:
உதரநிமித்தம் பஹுக்ருத வேஷ:

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

50
மொழியாக்கம்
பஜ கோவிந்தம் - 15

வாடியது உடல்; வெளுத்தது தலை !
        ஆடின பற்கள்; உதிர்ந்தன எல்லாம் !
கூடியது முதுமை; கிடைத்தது கைத்தடி !
        ஓடியதா ஆசை ? இன்னும் விட வில்லையே !

ப்ரத்யக்ஷம் பாலா,
19.05.2006.



अङ्गं गलितं पलितं मुण्डं
दशनविहीनं जातं तुण्डम् ।
वृद्धो याति गृहीत्वा दण्डं
तदपि न मुञ्चत्याशापिण्डम् ॥

அங்கம் கலிதம் பலிதம் முண்டம்
தஶநவிஹீனம் ஜாதம் துண்டம்
வ்ருத்தோ யாதி க்ருஹீத்வா தண்டம்
ததபி ந முஞ்சத்யாஶா பிண்டம்

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

42
மொழியாக்கம்
பஜ கோவிந்தம் - 16

எதிரே அக்னி தகிக்க, பின்னே ஆதவன் பொசுக்க,
        இரவிலோ முகம் புதைத்தும் குளிர் வந்து வாட்ட,
உணவுக்கு அலைந்தும், மரத்தடி கிடந்தும்,
        ஆசையின் பிடிப்பு அகலுவது இல்லையே !

ப்ரத்யக்ஷம் பாலா,
19.06.2007.



अग्रे वह्निः पृष्ठे भानुः
रात्रौ चुबुकसमर्पितजानुः ।
करतलभिक्षस्तरुतलवास:
तदपि न मुञ्चत्याशापाशः ॥

அக்ரே வஹ்னி: ப்ருஷ்டே பானு:
ராத்ரௌ சுபுக சமர்ப்பித ஜானு:
கரதல பிக்ஷ: தருதலவாஸ:
ததபி ந முஞ்சத்யாஶாபாஶ:

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

44
மொழியாக்கம்
பஜ கோவிந்தம் - 19

யோகத்தை நாடினும், இன்பத்தைத் தேடினும்,
        கூடிக் குலாவினும், தனிமையை விரும்பினும்,
அகத்தில் பரமனை ஆழ்ந்து நினைத்திரு;
        மகிழ்ச்சி ! மகிழ்ச்சி ! மகிழ்ச்சியில் திளைக்கலாம் !

ப்ரத்யக்ஷம் பாலா,
07.11.2006.



योगरतो वा भोगरतो वा
सङ्गरतो वा सङ्गविहीनः ।
यस्य ब्रह्मणि रमते चित्तं
नन्दति नन्दति नन्दत्येव ॥

யோகரதோ வா போகரதோ வா
சங்கரதோ வா சங்க விஹீன:
யஸ்ய ப்ரஹ்மணி ரமதே சித்தம்
நந்ததி நந்ததி நந்தத்யேவ

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

54
மொழியாக்கம்
பஜ கோவிந்தம் - 20

கீதையின் வரிகளில் ஒன்றேனும் படி !
        கங்கையின் நீரில் துளியேனும் குடி !
‘கண்ணா !' என்றொரு முறையேனும் துதி !
        யமனை நினைத்துனக்கு பயமேது இனி ?

ப்ரத்யக்ஷம் பாலா,
24.09.2008.



भगवद्गीता किञ्चिदधीता
गङ्गाजललवकणिका पीता ।
सकृदपि येन मुरारिसमर्चा
क्रियते तस्य यमेन न चर्चा ॥

பகவத் கீதா கிஞ்சிததீதா
கங்கா ஜலலவ கணிகா பீதா
ஸக்ருதபி ஏன முராரீ சமர்ச்சா
கியதே தஸ்ய யமேன ந சர்ச்சா

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

544
மொழியாக்கம்
பஜ கோவிந்தம் – 21

மறுபடி பிறப்பு, மறுபடி இறப்பு ;
        மறுபடி தாயின் வயிற்றில் உதயம்.
விடிவும் இல்லை, முடிவும் இல்லையே !
        கோகுலக் கண்ணா ! காத்திடு என்னை !

ப்ரத்யக்ஷம் பாலா,
29.04.2007.



पुनरपि जननं पुनरपि मरणं,
पुनरपि जननी जठरे शयनम्।
इह संसारे बहुदुस्तारे,
कृपयाऽपारे पाहि मुरारे॥

புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனீ ஜடரே ஶயனம் ;
இஹ ஸம்ஸாரே பஹு துஸ்த்தாரே
க்ருபயா பாரே பாஹி முராரே.

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

545
மொழியாக்கம்
பஜ கோவிந்தம் – 24

உன்னிடம், என்னிடம், எங்கெங்கும் இறைவன் ! -- பின்
        வெறுப்புடன் வீணே ஏன் இந்த கோபம் ?
அனைத்திலும் நீயே இருப்பதை உணர் !
        அனைத்து இடத்திலும் பிரிவினை தவிர் !

ப்ரத்யக்ஷம் பாலா,
30.04.2007.



त्वयि मयि चान्यत्रैको विष्णु-
र्व्यर्थं कुप्यसि मय्यसहिष्णुः ।
भव समचित्तः सर्वत्र त्वं
वाञ्छस्यचिराद्यदि विष्णुत्वम् ॥

த்வயி மயி சான்யத்ரைகோ விஷ்ணு
வ்யர்த்தம் குப்யஸி மய்யஸஹிஷ்ணு:
பவ ஸமசித்த: ஸர்வத்ர த்வம்
வாஞ்சஸ்யசிராத்யதி விஷ்ணுத்வம்

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: KavithaigaL by Rasikas

Post by vgovindan »

pb,
Many of the verses of 'bjhaja gOvindm' seem to be later addition. Though I have read them, they are not in standard literature.

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

vgovindan wrote: 26 Aug 2018, 15:51 pb,
Many of the verses of 'bjhaja gOvindm' seem to be later addition. Though I have read them, they are not in standard literature.
Yes. I am providing only selected verses from the standard literature. If you find anything strange, kindly ignore.

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

40
மொழியாக்கம்
பஜ கோவிந்தம் - 25

பகையோ நட்போ, மகவோ உறவோ,
        பகையும் வேண்டா; பரிவும் வேண்டா.
அனைவ ரிடத்தும் உனையே கண்டிரு;
        பிரிவு உணர்வை வேருடன் களைந்திடு.

ப்ரத்யக்ஷம் பாலா,
29.04.2007.



शत्रौ मित्रे पुत्रे बन्धौ
मा कुरु यत्नं विग्रहसन्धौ ।
सर्वस्मिन्नपि पश्यात्मानं
सर्वत्रोत्सृज भेदाज्ञानम् ॥

ஶத்ரௌ மித்ரே புத்ரே பந்தௌ
மா குறு யத்னம் விக்ரஹஸந்தௌ
ஸர்வஸ்மின்னபி பஶ்யாத்மானம்
ஸர்வத்ரோத்ஸ்ருஜ பேதாஞானம்

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

546
மொழியாக்கம்
பஜ கோவிந்தம் - 26

ஆசை, கோபம், செல்வம், மயக்கம்
        அனைத்தையும் விடுத்து யாரென உணர் !
தன்னை அறிந்திடா மூடர் அனைவரும்
        இருளில் மூழ்கி வருந்துவர் நிச்சயம்.

ப்ரத்யக்ஷம் பாலா,
30.04.2007.



कामं क्रोधं लोभं मोहं
त्यक्त्वाऽत्मानं भावय कोऽहम् ।
आत्मज्ञान विहीना मूढाः
ते पच्यन्ते नरकनिगूढाः ॥

காமம் க்ரோதம் லோபம் மோஹம்
த்யக்த்வாத்மானம் பாவய கோஹம்
ஆத்மஞான விஹீனா மூடா:
தே பச்யந்தே நரகனிகூடா:

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

46
மொழியாக்கம்
பஜ கோவிந்தம் - 27

கீதையும் சஹஸ்ர நாமமும் பாடு!
        விஷ்ணுவின் உருவைச் சிந்தையில் சூடு!
சித்தம் தெளிந்திட நல்லோரை நாடு!
        நித்தம் வறியோர்க்கு உதவிட ஓடு!

ப்ரத்யக்ஷம் பாலா,
30.04 .2007.



गेयं गीतानामसहस्रं
ध्येयं श्रीपतिरूपमजस्रम् ।
नेयं सज्जनसङ्गे चित्तं
देयं दीनजनाय च वित्तम् ॥

கேயம் கீதாநாமஸஹஸ்ரம்
த்யேயம் ஸ்ரீபதிரூபமஜஸ்ரம்
நேயம் ஸஜ்ஜனஸங்கே சித்தம்
தேயம் தீனஜனாய ச வித்தம்

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

48
மொழியாக்கம்
பஜ கோவிந்தம் - 30

மூச்சை அடக்கு; புலனையும் அடக்கு.
        நிலையானது எதுவென நித்தமும் சிந்தி.
ஜபத்துடன் கூடிய சமாதி நிலையில்
        மனதைக் கட்டு; உயர்நிலை கிட்டும் !

ப்ரத்யக்ஷம் பாலா,
12.05.2007.



प्राणायामं प्रत्याहारं
नित्यानित्य विवेकविचारम् ।
जाप्यसमेतसमाधिविधानं
कुर्ववधानं महदवधानम् ॥

ப்ராணாயாமம் ப்ரத்யாஹாரம்
நித்யாநித்ய விவேக விசாரம் ।
ஜாப்யஸமேத ஸமாதிவிதானம்
குர்வவதானம் மஹதவதானம் ॥



பஜ கோவிந்தம்
முற்றும்

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

547
துதி

ஐயோ என்று அழுதால் அவலம் தீர்ந்திடுமோ ?
ஐயனைப் பாடி நில் ! அகிலம் தேனாகும் !

ப்ரத்யக்ஷம் பாலா,
31.08.2018.

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: KavithaigaL by Rasikas

Post by vgovindan »

pb,
I hope you are combining your translation of Bhaja Govindam as a blog.
I can help you to transliterate to other languages - Telugu, Kannnada and Malayalam

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

@vgovindan
Thank you very much for your kind offer! Surely I will seek your support in due course.

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

(898)
ஓர் உருவில் சரி பாதி
தோடுடை இரு செவி யாளுக்கீந்த
முக்கண்ணன் மைந்தன் மூலவன்
நான் முகனை ஒறுத்தவனுக்கு மூத்தவன்
ஐங்கரத்தானை ப் பணி

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

547
(பழைது - விட்டுப் போனது.
எப்போதோ மறந்தது. எனினும் பதிந்து வைப்போமே.)



தெளிவு வரும் !

மதி குறை வென்பார்;
மதில் மேல் குரங்கென்பார்.
இது குறை யென்பார்;
இதில் மேல் அதுவென்பார்.
எதிர் மறை கொள்வார்;
எதி லும் குறைகாண்பார். -- ஒரு நாள்
மதி தெளி வாவார்;
முதிர் வில் நிறைகாண்பார்.

வாழ்க !

ப்ரத்யக்ஷம் பாலா,
28.02.2015.

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: KavithaigaL by Rasikas

Post by vgovindan »

காதல் பாதை

'நான்' இருந்தபோது அரி இல்லை;
அரி உள்ளான் இப்போது; 'நான்' இல்லை;
காதல் பாதை குறுகலானது;
இருவருக்கு இடமில்லை.

(கபீர் பாடலின் மொழிபெயர்ப்பு.)

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: KavithaigaL by Rasikas

Post by vgovindan »

படி தாண்டாப் பத்தினி

உண்டியில்லை, உடுப்பதற்கு
உடையென்ற சாக்கொன்றுண்டு, மானத்திற்கு;
உறைவிடமொன்றிருந்ததில்லை, என்றுமே;
ஊன்பசிக்குத் துணை வேண்டுமே! உண்டு;

கால்கடுக்கத் திரிந்து இரந்துண்டதுண்டு;
கடவுளைக் குற்றம் கூறித் தூற்றியதில்லை;
கள்ளம் புரிந்து கொள்ளையடித்ததில்லை;
கனவுகளோடு நல்லுறக்கம் நாளுமுண்டு;

படிதாண்டாப் பத்தினியவள் - தாண்டுதற்குப்
படியென்றொன்று இருந்தால்தானே!

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: KavithaigaL by Rasikas

Post by vgovindan »

திருச்சிற்றம்பலம்

தான் அசையாது, தன்னின்று
தானே அசைவினைத் தோற்றுவித்து,
அசைவினில் இசைவினைக் கலந்து,
அத்தனை அண்டங்களையும்
அனவரதமும் கயிறொன்றில்லாது
ஆடும் பம்பரம்போல் ஆடவைத்து - என்
சித்தம்தனிலும் விளையாடி நிற்கும்
சிற்றம்பலத்துறை தற்பரமே!
உன்னை உணர்ந்துன்னுள்
உறைந்திடும் பேறுமுண்டோ, தமியேனுக்கும்?

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: KavithaigaL by Rasikas

Post by vgovindan »

காளையின் துயரம்

குழந்தை பெண்ணெனில் வேண்டாமென
குப்பைத் தொட்டியில் போடும் மனித இனமே!
பெண்ணுக்கு ஆண் விகிதம் உலகினில்
பெருமளவுக்கு ஈடாகத்தானே உள்ளது?

எம்மை நோக்கிடுவீர், உண்மையறிவீர்;
எருதாகப் பிறந்தால், ஏன் பிறந்தாய், மகனே
எனப் பெற்றவள் பாடுகின்றாள் - ஏனெனில்
எருதே வேண்டாம், பசுதான் வேண்டுமென
எம்மைக் கசாப்புக் கடைக்கு விற்றனரே;
எங்கு நோக்கினும் இதுவே உண்மையாம்

யாரந்தக் கடவுள்? யாருக்குக் கடவுள்?
யாரறிவார் எமது துயரினை? கதியேதும்
காணாது கலங்கி நிற்கின்றோமே;
கண்டுகொள்ள யார்தான் வருவாரோ?

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

ஓர் இடத்தில் ஆண் வேண்டாம்
ஓர் இடத்தில் பெண் வேண்டாம்
இனப் பெருக்கத்திற்கு இனம் இரண்டு
வேண்டுமென இறைவன் நினைத்தானோ?
அவனை விஞ்சிய பகுத்தறிவாளன்
ஓரினச் சேர்க்கையில் தவறில்லை
நுண்ணுயிர்கள் சில பால்இரண்டின்றி
பெருகுகின்றனவே என நினைத்தான்.
மனிதன் தன்னை நுண்ணுயிர் ஆக்கிக்கொண்டு விட்டான்
இவனுக்கு அறிவெதற்கு கொடுத்தேன்
இன உறுப்புக்கள் மட்டுமே போதுமே
என வருந்துகிறான் உலகியற்றியான்

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

340.
குமட்டல்.

மல்லிகை மலர் வாசம் மணக்கும் -பவழ
மல்லி போதையாய் மனம் கிறங்கும்
கண் கவர் கதம்பம்,கட்டு மருக்கொழுந்து இம்
மண்ணின் வளத்தால் ஈசன் புகழ் இசைக்கும்

இன்று பூக்கடைக்கு கீழே மூடிக்கிடந்த. சாக்கடையை
நன்று கிளறிட முடை நாற்றம் தாங்கவில்லை .
மூக்கை மூட வைத்த இம் மூடச் செயலால்
தக்க பயனடைந்தார் யாருமில்லை ,மனக்கசப்பு அனைவருக்கும்.

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: KavithaigaL by Rasikas

Post by sridhar_ranga »

Ponbhairavi wrote: 11 Oct 2018, 22:46 340.
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு


சென்று வாருங்கள் பொன் பைரவி ஐயா! தங்களை ஒருமுறையேனும் சந்திக்க வேண்டும் என ஆவல் கொண்டிருந்தேன் - இனி நடப்பதற்கில்லை. ஆண்டுகள் சில கடந்தாலும், இக்குழுமத்தில், குறிப்பாக இவ்விழையில் எளியேனுக்கு தாங்கள் அவ்வப்போது அளித்த ஊக்குவிப்பிற்கும் பாராட்டுகளுக்கும் நன்றிகள் பல. கண்களில் நீர்த்துளிகளுடன், ஸ்ரீதர்

arasi
Posts: 16787
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

சிரிதர்,
நல்லதோர் மனிதரை, எழுத்தாளரை இழந்து விட்டோம்.
அவர் உமக்களித்த ஊக்கம் உம்மை மேலும் எழுதிட வைக்குமென நம்புகிறேன்...

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: KavithaigaL by Rasikas

Post by vgovindan »

"மல்லிகை மலர் வாசம் மணக்கும் -பவழ
மல்லி போதையாய் மனம் கிறங்கும்
கண் கவர் கதம்பம்,கட்டு மருக்கொழுந்து இம்
மண்ணின் வளத்தால் ஈசன் புகழ் இசைக்கும்"

உங்கள் புகழ் மணக்கும்
சென்று வாருங்கள்

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: KavithaigaL by Rasikas

Post by vgovindan »

சிந்திக்கவும்

மின்சாரத்தின் பகட்டு ஒளியினிலே
மண்விளக்குகள் தோற்றனவே!
தீபங்களின் வரிசையெனும் தீபாவளி
பட்டாசுகளின் வெடி ஒலியிலே தோற்றதுவே!

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: KavithaigaL by Rasikas

Post by vgovindan »

Image
குடியானவன்

காணி நிலம் பயிரிடவேண்டிக்
கேணி தோண்டி நீர்நிலை செய்து,
ஏணிவைத்து நன்னீரிறைத்துப்
பேணிப் பயிர் அறுவடை செய்து,
சாண் வயிறு நிறைத்திட்டு
மாண்பு மிக வாழ்ந்ததெங்கே? இன்று

மாரி பொய்த்து, நீர்வற்றி,
ஏரிகளெல்லாம் மனைகளாகி,
ஊரிழந்து, உறவிழந்து,
சீரழிந்து, செல்வமிழந்து,
காரி உமிழ் வாழ்க்கை, நகர்ச்
சேரிதன்னில் வாழ்கின்றோமே!

nadhasudha
Posts: 381
Joined: 22 May 2006, 06:40

Re: KavithaigaL by Rasikas

Post by nadhasudha »

Sharing a composition that I recently wrote about my dad(ponbhairavi)on his childhood pranks. While I have previously written கவிதை this is the first time it has come out as a song. These are all true incidents which he has related to me and are part of family stories.

விக்ஷமக்காரக்கண்ணன் பொல்லாத விக்ஷமக்காரக்கண்ணன்
நாளுக்கொரு நாடகமாடி நாள்தோறும் ஆட்டம் ஆடி
நாழிக்கொரு நக்கல் செய்யும் ராஜகோபாலன் அவன்

நண்பர்களோடாடி மகிழ்வான் -தின்னையிலே
கோரமான கதைகள் சொல்லுவான்
வேண்டாம் ராஜு போதும் என்றால் - அவர்கள்
வேண்டாம் ராஜு போதும் என்றால்
நாளை கேட்டே தீரவேண்டும் என்றே கூறி ஓடிடுவான்

தம்பியுடன் சேட்டை செய்யுவான்
நடுவில் கொஞ்சம் தம்பியைத்தான் வேலை ஏவுவான்
போடா அம்பி என்று சொன்னால் - தம்பி அவனை போடா அம்பி என்று சொன்னால்
உன்னை நாளை சேர்க்க மாட்டேன் என்றே கூறி விரைந்திடுவான்

கோவில் மதில் ஏறி குதிப்பான் - அங்கே
காயம் பட்டால் மூடிமறைப்பான்
அம்மாவுக்கு தெரிந்து விட்டால் - அவன் அம்மாவுக்கு தெரிந்து விட்டால்
அப்பாவிடம் சொல்லாதென்று கூறிவிட்டு பறன்திடுவான்

தங்கையைத்தான் வம்புக்கு இழுப்பான் - வேண்டுமென்றே பாடங்களை தப்பாய் கற்பிப்பான்
அப்பா ஒரு கேள்வி கேட்டால் - அவளை அப்பா ஒரு கேள்வி கேட்டால்
வசமாக மாட்டி விட்ட திருப்தியுடன் ஓட்டம் பிடிப்பான்

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

பறவை, விலங்கினத்தின் சாபம்

Post by vgovindan »

யாருக்கு வேண்டும் உங்கள் கருணை?
ஊருக்கு உபதேசம் செய்யும் மனிதா!

பிறப்பறியோம், இறப்பறியோம்;
பிறிதோர் உலகமறியோம்;
நேற்றறியோம், நாளையறியோம்;
இன்று, இப்போதுண்டென்றே அறிவோம்;

பாசமென்றும், நேசமென்றும் நீங்கள் கூறும்
பசப்பு மொழியொன்றுமறிந்திலோம்;
மொழியறியோம், கல்வியறியோம்;
பழியறியோம், பாவ, புண்ணியமறியோம்;

இறைவனென்றொருவன் இருப்பதறியோம்;
குறையறியோம், குற்றமறியோம்;
உற்றவரென்றும், மற்றவரென்றுமறியோம்;
பற்றறியோம், காதலென்றுமறிந்திலோம்;

உன்னால் எம்மினங்கள் அனைத்துக்கும்
என்னாளும் உண்டாகுது பெருந்துயர், நீயறிவாயோ?
செல்லமாக எம்மை வளர்க்கின்றோமென்று,
பொல்லாக் கொத்தடிமையாக்கினாயே!

நாள் முழுதும் உனக்குப் பெண்துணை, ஆயின்
ஆயுளுக்கும் எங்களைப் புணராது செய்தாயே!
கருப்பை அரிந்து மலடாக்கி, சடமாக்கினாயே!
உருப்படுவாயோ, உன்மத்தம் கொண்ட மனிதா!

உன்னினம் அழிந்தே தீரும், சாபமிட்டோம், பிடி!

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

548
டொய்ங் ...
(ஒரு பாடகர் கூற்று)

ஐயோ பாவம்னு அத் தம்புராவைச் சேர்த்தால்
குய்யோ முறையோன்னு குறைகூறிப் புலம்பறாரே !
பொய்யோ நிஜமோ ? பாவப்பட்ட ஜென்மமோ ? - இனி
மெய்யாலும் தவிர்ப்பேன் மேலே செல்லும்வரை.

ப்ரத்யக்ஷம் பாலா
09.10.2019

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

549
ஆன்மார்த்தம்

விடை தேடி அனைத்தும் வீணே கரைந்ததே !
சடைமுடிச் சாமியே ! சகலமும் போனதே !
இடையிலே சிறுதுணி ஈரத்தில் இறுக்குதே !
கடைநிலை இதுவே ... காலனே ஓடி வா !

ப்ரத்யக்ஷம் பாலா,
25.10.2019

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

550
அருளாளன்

தில்லைச் சிதம்பர நாதா, திக்கெலாம் போற்றிடும் தேவா !
முல்லை மலரணி மேதா, மூவுலகு ஏத்திடும் வீரா !
வில்லை அணி மலர்த் தோளா, வீரக் கனலேந்தும் ஈசா !
எல்லை இலா அருளாளா, எமதுள்ளம் சிலிர்க்குது ! ஆஹா !

ப்ரத்யக்ஷம் பாலா,
26.10.2019

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

551
காஞ்சி

பஞ்ச கச்சம் பறந்தது அமளியில்
அஞ்சி ஓடினர் அனைத்து மக்களும்
---
கொஞ்சம் பொறுத்தால் கோடுகள் மறையும்
நெஞ்சம் தெளிந்து நேசம் விளையும் !

ப்ரத்யக்ஷம் பாலா,
27.10.2019



கோடு = bias, prejudice, dislike, aversion

arasi
Posts: 16787
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

தில்லை நோக்கினால்
தொல்லையுமுண்டோ?
முல்லை முகிழும் எங்குமே
சில்லெனவே படும் கனலுமே

எல்லையெல்லாம் அவன்-ஆயினும்
தில்லையென்றால் எல்லையேது!

rshankar
Posts: 13754
Joined: 02 Feb 2010, 22:26

Re: KavithaigaL by Rasikas

Post by rshankar »

arasi wrote: 28 Oct 2019, 01:50 எல்லையெல்லாம் அவன்-ஆயினும்
தில்லையென்றால் எல்லையேது!
தில்லைக்கும், தில்லைனாநகனுக்கும்
எல்லை அந்த காளி, எல்லைக் காளி அல்லவே?

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

552
மடமான் ஏக்கம்

வானை உரசுது வானுயர்த் தென்னை
ஆனை உரசுது ஆலடிக் கல்லை
பூனை உரசுது பூமரக் கிளையை
மானை உரசும் மாமயன் எங்கே ? எங்கே ? எங்கே ? ... ...

ப்ரத்யக்ஷம் பாலா,
27.10.2019

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

553
சாமி சிரிக்கிறார் !

ஏதோ பல பெயரிட்டு ஏகமாய்க் கதைத்து
தீதோ நன்றோ அனைத்தும் திரித்துப் புகுத்தி
வாதோ வழக்கோ எல்லாம் புனைந்து கூட்டி
யாதோ எவரோ இட்டமாய் எழும்பி ஆட

சாமி சிரிக்கின்றார் !
எத்தனை கதைகள் எத்தனை பெயர்கள் எவ்வளவு கூத்து என்று !

ஓம் தத் ஸத் !

ப்ரத்யக்ஷம் பாலா,
27.10.2019

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

554
ஓவியர் தெளிவு
(அல்லது) கற்பனைக்குக் கடிவாளம்

அடியை வரைந்தால் அடிப்பேன் என்பர்
முடியைத் தீட்டினால் முடிப்பேன் என்பர்
தடியால் தாக்குவர் தனலாய் ஏசுவர்
கடித்துக் குதறுவார் கனலாய்க் கக்குவர்

ஏன் நமக்கு வம்பு ? எதுக்கு வீண் வாதம் ?
இச்சாமி போதும் ! இதையே படைப்போம் !

ஓம் தத் ஸத் !

ப்ரத்யக்ஷம் பாலா,
27.10.2019

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

555
தேசாந்திரி

பழமாய்ப் பொறுக்கி எடுத்தார்
அழகாய் நறுக்கிக் கொடுத்தார்
அழகாய்ச் சிரித்தான் அம்பி
நிழலாய்த் தொடர்ந்து சென்றான் - இனி
தழலாய்த் தகித்த போதும்
விழலாய் விழுந்து உழைப்பான்

மற்றொரு சிஷ்யன் கிடைத்தான் !
வெற்றியாய் உரக்கச் சிரித்தார் !

ப்ரத்யக்ஷம் பாலா,
02.11.2019

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

556
சொர்க்கத்துக்கு வழி தேடி

புடவை ஒன்றைப்
போட்டார் அக்னியில்.
உடமை எல்லாம்
ஊருக்கு அளித்தார்.
சடமாய் மாறினார்
சாலையில் திரிகிறார்.
மடமை முழுதாய்
மதியை மறைத்தது.

செத்ததும் செல்வாரோ சொர்க்கம் ?

ப்ரத்யக்ஷம் பாலா,
02.11.2019

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

557
மறுபடி காஞ்சியில் - இன்று !

சித்திரையில் ஒரு முறை.
இத்தினத்தில் ஒரு முறை.
கத்தியதோடு நின்றதா ?
கத்திச் சண்டை இல்லையே ?

எத்தனை சொல்லி என்ன ?
புத்தியில் பதிய வில்லை.
வித்தகன் யாரெனச் சொல்ல ?
மித்திரன் யாரெனக் கூற ?

ரத்தின நகைகள் வேண்டா !
தித்திப்பு வகைகள் வேண்டா !
பத்தியுடன் வேண்டு கின்றோம் .
அத்தி வரதா வா ! கா !

ப்ரத்யக்ஷம் பாலா,
06.11.2019

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

558
ஜாக்கிரதை !

சித்திரப் பெண்ணே கேளு.
அத்திமரக் காட்டுக்குள்ளே
புத்தி கெட்டுத் திரியாதே
பத்திரமாய் வீடு எத்து.

ப்ரத்யக்ஷம் பாலா,
12.11.2019

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

559
வியாபாரியின் அலம்பல்

மல்லி மருக்கொழுந்தே !
அல்லி மலர்ப் பெட்டகமே !
சல்லிக் காசு தேரவில்லை
மெல்ல வந்து வீரம் சொல்லு.

ப்ரத்யக்ஷம் பாலா,
16.11.2019.

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

560
பக்திக் கிரக்கம்

சின்னக் கண்ணனுக்குச் சிங்காரமாய் மையிட்டு
இன்னும் அழகூட்ட இன்னம் ஒரு பொட்டு வைத்து
கன்னம் கண்படாதிருக்க கரியதோர் குறியும் இட்டேன் !
கண் மூடித் திறப்பதற்குள் கள்வனைக் காணவில்லை !

ப்ரத்யக்ஷம் பாலா,
18.11.2019.

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

561
பர ப்ரம்மம்

அடுத்த வீட்டில் என் அருமை நண்பர்
கொடுத்த குரலுக்கு குதித்தோடி வருவார் - அவரை

"அப்பா" என்றழைப்பாள் ஆசைப் பெண்
"குப்பா" என்றழைப்பர் கூடும் நண்பர்
"ஐயா" என்றழைப்பார் அருமை அன்பர்
"பையா" என்றழைப்பார் அன்புத் தாத்தா - அவருக்கு

இப்பெயரே சிறந்தது என விடைக்கலாமோ ?
எப்பெயரும் அவருக்கு ஏற்றதே அன்றோ ?

ப்ரத்யக்ஷம் பாலா,
22.11.2019

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

562
ஏக்கம்

"என்னத்தைச் சொல்லி அழ ?"
"எண்ணத்தைச் சொல்லித் தொலை !"

"கன்னத்தைக் கிள்ளிச் சென்ற
கண்ணனைக் காணவில்லை.
இனி எப்போ வருவானோ ?
இனிமைச் சொல் மொழிவானோ ?"

"இடம் தேடி வரும்வரையில்
நடந்ததை நீ அசை போடு !"


ப்ரத்யக்ஷம் பாலா,
19.11.2019

arasi
Posts: 16787
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

The last two lines say a lot about Kannan's path.
His 'eNNathaich chollitholai' made me chuckle!

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

564
உபதேசம்

எல்லே ! கேளடா !
புல்லே ஆசனம் !
கல்லே ஆலயம் !
சொல்லே பூசனை !

ப்ரத்யக்ஷம் பாலா,
01.12.2013

Post Reply