KavithaigaL by Rasikas

Post Reply
Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

arasi wrote:..."சிலையென நின்றேன், சிலிர்த்தேன்" என்றிருக்கலாமோ?
ஆஹா, அருமை !
மிக்க நன்றி.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

505

வெல்லும் வழி

மெல்ல வளர்த்திடு உன் திறமை !
சொல்லித் திரியாதே திறனை.
மல்லுக்கு நிற்காதே வீணே !
சொல்லிக் கொல்லாதே பகையை !


ப்ரத்யக்ஷம் பாலா,
25.09.2006.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

506

அப்பனே !

பொன்னம்பல வானரே ! புன்னாக நாதரே !
குன்னக்குடி அப்பனே ! கோனேரி ராசனே !
தென்னங்கரைத் தெய்வமே ! தேவாதி தேவனே ! -- நீர்
என்னப்பன் அல்லவா ? அரும் எந்தாயும் அல்லவா ?

ப்ரத்யக்ஷம் பாலா,
28.09.2016.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

507

திருமதி நடிகை

"சினம் உண்டு மனதுக்குள்; சிரிப்பினில் மறைத்துள்ளேன்.
தினம் உண்டு உறங்கையிலே தீயினை ஊதிவைப்பேன்."

ப்ரத்யக்ஷம் பாலா,
18.10.2007.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

453R

சேவிப்போம் வாருங்கள் !

பல்லாண்டு பாடுவோம் ! பரமனைப் போற்றுவோம் !
நல்லோர்கள் கூடியே நாதனை நாடுவோம் !
வல்லானின் பாசுரம் வானதிர ஓதுவோம் !
தில்லைநகர் தேவனின் திருவருள் சூடுவோம் !

ப்ரத்யக்ஷம் பாலா,
30.05.2015.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

460R

பிறவி

தொல்லைப் பணிகள் துணிந்து சுமந்து
நில்லாது உழைத்து நிதியம் குவித்து
இல்லாதவரின் இடர்கள் துடைத்து
பல்லாண்டு போச்சு; பலவாறு இனித்தே.

ப்ரத்யக்ஷம் பாலா,
08.06.2015.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

20R

தவம்

கண்ணாநின் அருளை விழைந்து
உண்ணாது தவத்தில் இருந்தேன்;
பண்ணாலே புகழ்ந்தும் கிடந்தேன்.
மண்ணெல்லாம் பொன்னானது ! என்னே !

ப்ரத்யக்ஷம் பாலா,
09.07.2006.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

22R

சுடர் மனம்

சமயத்தில் துடிப்போம்; சற்றுநாம் கலங்கிடுவோம்.
சமயத்தைத் துறந்தால் சங்கடம் தொலைந்திடுமோ ?
இடம்மாறித் தொழுதால் இன்னலும் பறந்திடுமோ ?

சுடர்மனம் கொண்டுவிட்டால் சூழ்நிலை சிறக்குமன்றோ ?

ப்ரத்யக்ஷம் பாலா,
31.03.2003.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

316R

போற்றி !

கயிலைமலை மீதமர்ந்த காரணனே போற்றி !
இயலிசைக்கு உயிரளிக்கும் ஈஸ்வரியே போற்றி !
பயில்பவர் துணையிருக்கும் பாலகனே போற்றி !
மயிலொடும் அரவமுடை மாயவனே போற்றி !

ப்ரத்யக்ஷம் பாலா,
21.12.2013.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

305R

மணிவண்ணா !

கொட்டும் மழைக்கென குன்றெடுத்த லாலா !
சிட்டுக் கோபியர் சிந்தைகவர் லீலா !
சுட்டு விரலிடை சுழல் அணிந்த சூரா !
எட்டுத் திக்கிலும் இணையில்லா வீரா !

ப்ரத்யக்ஷம் பாலா,
08.12.2013.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

303R

பெரும் கதை

மறையைக் கற்காது மனப்போக்கில் விரிப்பதுபோல்
மறையா மக்களெலாம் மறு உலகைத் திரிப்பதுபோல்
இறையைக் காணாதோர் இட்டம்போல் கதைத்திருப்பர் !

ப்ரத்யக்ஷம் பாலா,
07.12.2013.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: KavithaigaL by Rasikas

Post by thanjavooran »

திரு ப்ரத்யக்ஷம் பாலா அவர்களே.
என்ன அற்புதமான படைப்புகள். அருமையான சொல்லாட்சி.
ஆர்வக்கோளாறினால் ' மனப்போக்கில் கரிப்பது போல் ' எனக் கொண்டேன் பின் தெளிவுற்றேன்.
வாழ்க வளமுடன்.
தஞ்சாவூரான்
11 10 2016

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

பாலா,
"மறையா மக்களெல்லாம் மறு உலகைத் திரிப்பது போல்..."

சிந்திக்க வேண்டியதோர் வரி...

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

திரு தஞ்சாவூரான் அவர்களே,
மிக்க நன்றி !

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

arasi wrote:பாலா,
"மறையா மக்களெல்லாம் மறு உலகைத் திரிப்பது போல்..."

சிந்திக்க வேண்டியதோர் வரி...
நன்றி !

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

508

அருள் வேண்டி !

திருமேனி மண் இடுவர்;
திருநீறு வரி இடுவர்;
பொருளள்ளித் தீ இடுவர்;
திருவருளைத் தேடிடுவோர்.

ப்ரத்யக்ஷம் பாலா,
06.04.2003.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

324R

நமச்சிவாய !

தழைத்த சடையில் தண்மதி பூண்டு
விழித்த மானை விரலிடை தூக்கி
பழுத்த தீயைப் பாங்குடன் ஏந்தும்
செழித்த தேவைச் சிந்தையில் சூடு !

ப்ரத்யக்ஷம் பாலா,
05.01.2014.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

18

திருவருள்

கண்ணன் திருமாலன்
கந்தன் கதிர்வேலன்
எண்ண வருவானே
என்னை அருள்வானே !

ப்ரத்யக்ஷம் பாலா,
11.04.2003.



tiruvaruL

kaNNan tirumAlan
kandan kadirvElan
eNNa varuvAnE
ennai aruLvAnE !

Pratyaksham Bala,
11.04.2003.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

509

கல்யாண வைபோகம் !

கோதி, முடி கூட்டி, கோதை வேடமிட்டு,
வேதியனை நினைந்து, வெட்கத்தில் கரைந்து,
சாதி சனம் வாழ்த்திச் சாமர(ம்) செண்டு வீச,
சோதிமுன் மணந்தாள் சௌபாக்ய ஸ்ரீ கண்ணி !

ப்ரத்யக்ஷம் பாலா,
23.11.2008.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: KavithaigaL by Rasikas

Post by thanjavooran »

பன்மலர் இலக்கிய திங்கள் இதழ் வெளியீடான வெண்பூக்கள் என்ற நூலில் வெளியான என்னுடைய படைப்பு. இந்நாளில் இது மிகப் பொருந்தும் எனக் கொண்டு இதனை அளிக்கிறேன்.

அப்பாவி மக்கள் அழியும் அவலத்தைத்
தப்பாமல் நாளிதழ் சாற்றிடும்; - எப்போதும்
ஈவிரக்கமின்றியே ஈனச் செயலாற்றும்
தீவிர வாதத்தை தீர்

தஞ்சாவூரான்
18 10 2016

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

510

கருப்பு

கைநிறைய காசிருந்தும் கவைக்கினி உதவாது;
ஐந்நூறும் ஆயிரமும் வையகத்தில் செல்லாது.
கையிலே வைத்திருந்தால் கணக்கு சொல்லவேணும்.
ஐயனின் கோயிலடி உண்டியே காப்பு !

ப்ரத்யக்ஷம் பாலா,
11.11.2016.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: KavithaigaL by Rasikas

Post by thanjavooran »

என்ன அருமையான கருத்துள்ள நகைச்சுவையுடன் கூடிய வெண்பா. ஆண்டவனையே வங்கியின் Q வில் நிற்க வைத்துப் பார்க்க உங்களுக்கு அவ்வளவு அவா போலும்.
வாழ்க வளமுடன்
தஞ்சாவூரான்
12 11 2016

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

Thanks thanjavooran !
Thanks arasi !

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

511

வாய்ப்பு !

ஏட்டியெம்மில் காசில்லை;
ஏதும் வாங்க முடியவில்லை.
பெட்ரோல் போட வழியில்லை;
எட்டி நடக்க முடியவில்லை.

அரண்டு போக முடியுமா ?
சுருண்டு கிடக்க முடியுமா ?
இரண்டு கவிதை எழுதினேன் !
மருண்டால் வேலை ஆகுமா ?

ப்ரத்யக்ஷம் பாலா,
12.11.2016.

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

இருட்டுப் பணத்தோர்க்கு இருண்டு போனதே--
சுருட்டிக் கொணர்ந்ததெல்லாம் சுமையாயிற்றே--
விரட்டி வாங்கியதெல்லாம் வெறுமையாயிற்றே--
விரலசைப்பில் கொண்டதெல்லாம் வீணாயிற்றே!

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

512

இயற்கை

தட்டும் மேக மேளம்,
வெட்டும் கோல மின்னல்,
கொட்டும் வான வெள்ளம் --
கட்டும் தாப உள்ளம் !

ப்ரத்யக்ஷம் பாலா,
14.11.2016.



iyaRkai

taTTum mEga mELam,
veTTum kOla minnal,
koTTum vAna veLLam --
kaTTum tApa uLLam !

Pratyaksham Bala,
14.11.2016

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

513

நேரம்

கட்டிக் கரும்பாய் இனிக்கும் நேரம்
கிட்டே வருவது எப்போது ?
எட்டிப் பார்க்கும் இலையுதிர் காலம்
கிட்டே வருமே அப்போது !

வெட்டிப் பேச்சும் வெறுமை நெஞ்சும்
எட்டிப் போவது எப்போது ?
கட்டித் தங்கம் கதிரொளி வேலன்
கட்டியணைப்பான் அப்போது !

ப்ரத்யக்ஷம் பாலா,
14.11.2016.



nEram

kaTTik karumbAi inikkum nEram
kiTTE varuvadu eppOdu ?
eTTip pArkkum ilaiyudir kAlam
kiTTE varumE appOdu !

veTTip pEccum veRumai nenjum
eTTip pOvadu eppOdu ?
kaTTit tangam kadiroLi vElan
kaTTi aNaippAn appOdu !

Pratyaksham Bala,
14.11.2016

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

rshankar:
Thanks !

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

514

மாற்றம்

இலையெனும் ஏடி யெமெலாம்.
மலையென வேலை காக்க,
அலைந்திடும் மக்கள் கூட்டம்.
தலைவிதி நேரில் சிலரே.

ப்ரத்யக்ஷம் பாலா,
15.11.2016.



mATRam

ilaiyenum ET yemelAm.
malaiyena vElai kAkka,
alaindiDum makkaL kUTTam.
talaividi nEril shilarE.

Pratyaksham Bala,
15.11.2016

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

515

கருப்பு !

அருள்தரும் கண்ணன் கருப்பு.
மருள்விழி வண்ணம் கருப்பு.
ஆலமுதம் தரும் மேகம் கருப்பு.
பாலமுதம் தரும் எருமை கருப்பு.
இனிதேபாடும் குயிலும் கருப்பு.
புனிதக் கோயில் திருஉரு கருப்பு.

பணம் மட்டும் கருப்பு எனில் கசப்பு !

ப்ரத்யக்ஷம் பாலா,
16.11.2016.



karuppu !

aruL tarum kaNNan karuppu.
maruL vizhi vaNNam karuppu.
Alamudam tarum mEgam karuppu.
pAlamudam tarum erumai karuppu.
inidE pAdum kuyilum karuppu.
punidak kOyil tiru-uru karuppu.

paNam maTTum karuppu enil kashappu !

Pratyaksham Bala,
16.11.2016.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: KavithaigaL by Rasikas

Post by thanjavooran »

காட்டிக்கொடுக்கும் ஆடும் கருப்பு
அருமையான கவிதை
வாழ்க வளமுடன்
தஞ்சாவூரான்
16 11 2016

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

thanjavooran wrote:... அருமையான கவிதை ...
மிக்க நன்றி !

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

516

முதிர்ச்சி

தனம் தேடி மோதியது போதும்.
சினம் கூடி சாடியது போதும்.
தினம் ஆடி வாடியது போதும் -- இது
வனம் நாடி ஓடுகிற நேரம் !

ப்ரத்யக்ஷம் பாலா,
18.11.2016.



mudircci

dhanam tEDi mOdiyadu pOdum.
cinam kUDi shADiyadu pOdum.
dinam ADi vADiyadu pOdum -- idu
vanam nADi ODukiRa nEram !

Pratyaksham Bala,
18.11.2016

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: KavithaigaL by Rasikas

Post by vgovindan »

அவன் குரல் (19-11-16)

பணம் எனக்கு வேண்டுமென உன்னிடம் நான் கேட்டேனா?
பழமோ, மலரோ, நீரோ, முடிந்தது படைத்தால் போதுமென்றேனே;
என் வாசலில் நித்தமும் வந்தென்னை ஏற்றச்சொன்னேனா?
மன வாசல் திறந்து காதல் மொழியொன்று பகர்ந்தால் போதுமென்றேனே;

உண்பதற்கு உணவு வேண்டுமென்று உன்னிடம் கேட்டேனா?
உணவில்லா ஏழைக்கு ஓர்போழ்து உணவிட்டால் போதுமே;
நாலு மாடக் கோவில் கட்டியென்னை வணங்கச் சொன்னேனா?
தோல்மூடிய உன் உடலே நான் வாழும் கோவிலென்றறியாயோ?

உனக்குற்ற செல்வம் போதாதென ஊரார் பணத்தைச் சுருட்டினாய்;
தனக்குமட்டுமே அனைத்துமென்று தரணியைச் சூறையாடினாய்;
உடலே சதமென உலகமெல்லாம் திரிந்து பொருளீட்டினாய்;
கடல்போல் செல்வம் ஏழு தலைமுறைக்குச் சேர்த்துக் கூட்டினாய்;

மடிந்தவன் உடலைத் தூக்கிச்சென்று இடுகாட்டில் இடும்போதும்,
மடியப்போவது நானல்லவென்று, கொடும் பாவங்கள் செய்திட்டாய்;
உயிர் பிரிந்தேகும் வேளை ஒப்பாரி வைத்து ஊரைக் கூப்பிட்டாலும்,
உற்றமனைவி, மக்களும் சுற்றமும் கூட வருமோயென்றுணர்ந்தாயில்லை;

தாவரமும், மாக்களும், பறவையினங்களும் என்னைக் கும்பிட்டதில்லை;
தமக்கென விதித்திட்ட வரை மீறியவை அட்டூழியம் செய்ததில்லை;
அவை கும்பிடவில்லையென அவற்றினைப் போற்றி நான் பேண மறந்தேனா?
ஆறாம் அறிவுபடைத்தவுனக்கு இந்த அறிவு தோன்றாமற்போனதென்னே!

தருமம் குலையும்போது தவறாது தோன்றி நல்லோரை நான் காத்ததறியாயோ?
தருமத்தினை தலைகீழாய் மாற்றி நீயின்று ஆடும் ஆட்டமென்ன, மகனே?
தவறு தவறு பெருந்தவறு செய்கின்றாயென நீயுணரும் வேளை இதுவே, மகனே;
தவறினால் ஏற்படும் விளைவினைச் சற்றுணர்ந்து செயல்படுவாய், எச்சரித்தேன்.

சாட்சியேதுமில்லை யென்றெண்ணி தலைகீழாய் நீ நின்றாலும் - உன் மனச்
சாட்சியாக நானுள்ளேனென மறந்திடாதே, மறையும், மாமுனிவரும் பகர்வது கேள்;
நானில்லையென்று நீ நாடோறும் உரைத்து, உன்னையே ஏமாற்றிக்கொண்டாலும்,
நான் உள்ளேன் உனது 'நான்' எனும் கூற்றிலே, உண்மை உணர்ந்து விழித்தெழுவாயே.

PUNARVASU
Posts: 2498
Joined: 06 Feb 2010, 05:42

Re: KavithaigaL by Rasikas

Post by PUNARVASU »

தங்க ரதம் வந்தது வீதியிலே ஒரு
சங்கீத ரதம் பிறந்தது இந்த மண்ணிலே
மெல்ல மெல்ல அசைந்த ரதம்
சங்கீத வானிலே உயர்ந்தது பறந்தது
மேலே மேலே பறந்த ரதம் இன்று
சிகரம் தொட்டது, எவரும் எட்டமுடியாததொரு சிகரம்
இனி மண்ணவர்ககு இல்லை அந்த சங்கீதம்
விண்ணவர்க்கு மட்டுமே அந்த முரளீ கானம்!

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

517

அன்னையே !

ஆயி கருமாரி ! ஆனந்த ஓங்காரி !
மாயி மகமாயி ! மாங்காடு மாகாளி !
கோயில் கடுவெளியே குடிகொண்ட நாயகியே !
சேயென் குரல்கேட்டு செயமெனக்கு அருள் தாயே !

ப்ரத்யக்ஷம் பாலா,
24.11.2016.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

518

தத்துவம்

முத்துமணி ஆரமும், மின்னும் கிரீடமும்,
கொத்துப் பூநிறை கோலப்பெரு மாலையும்,
புத்தகம் ஓர்கையில், புனிதநீர் மறுகையில் !
தத்துவம் சொல்லிடும் தேவியின் திருஉரு !

ப்ரத்யக்ஷம் பாலா,
25.11.2016.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

Post #2013
518

tattuvam

muttu maNi Aramum, minnum kirITamum,
kottup pUniRai kOlap peru mAlaiyum,
puttakam Or kaiyil, punita nIr maRu kaiyil !
tattuvam sholliDum dEviyin tiru uru !

Pratyaksham Bala,
25.11.2016

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: KavithaigaL by Rasikas

Post by thanjavooran »

Excellent ! I visualize Ambal before me !
Thanjavooran
26 11 2016

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

thanjavooran:
THANKS !!

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

519

திருப்பம்

கழுதை கத்திக் களைத்தது.
புழுதி எழும்பிப் படிந்தது.
அழுகை சத்தம் அணைந்தது.
எழுக ! களத்தில் இணையலாம் !

ப்ரத்யக்ஷம் பாலா,
10.12.2016.



519
tiruppam

kazhudai kattik kaLaittadu.
puzhudi ezhumbip paDindadu.
azhukai shattam aNaindadu.
ezhuka ! kaLattil iNaiyalAm !

Pratyaksham Bala,
10.12.2016.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

519
திருப்பம்

கழுதை கத்திக் களைத்தது.
புழுதி எழும்பிப் படிந்தது.
அழுகை சத்தம் அணைந்தது.
எழுக ! களத்தில் இணையலாம் !

ப்ரத்யக்ஷம் பாலா,
10.12.2016.
பொழிப்புரை !

அமெரிக்க தேர்தலில் திருப்பம்

கழுதைச் சின்னத்தில் போட்டியிட்ட கட்சி ஓய்ந்தது.
ஒருவருக்கொருவர் புழுதி வாரித் தூற்றியது முடிவுக்கு வந்தது.
தோற்றவரின் ஓலமும் ஒருவாறு அடங்கியது.
எழுக ! கடந்ததை மறந்து அனைவரும் பொருளாதார போட்டிக் களத்தில் இணைந்து செயலாற்றுவோம் !

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: KavithaigaL by Rasikas

Post by thanjavooran »

Well said Prathyaksham bala,
Inner feelings are coming out,
Thanjavooran
12 12 2016

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

ஆனை அம்பாரியில் அமர்ந்தது யாரோ?
கழுதை வாலில் பட்டாசு கட்டியது யாரோ? :(

PB's poem's on American elections triggered this.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

thanjavooran wrote:Well said Prathyaksham bala,
Inner feelings are coming out,
Thanjavooran
12 12 2016
Thanks a lot !

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

arasi wrote:ஆனை அம்பாரியில் அமர்ந்தது யாரோ?
கழுதை வாலில் பட்டாசு கட்டியது யாரோ? :(

PB's poem's on American elections triggered this.
520

ஆரோ ? அவர் யாரோ ?

கழுதை வாலில் வெடியை
.......... கட்டிக் களித்தது யாரோ ?
பழுத்த அரசியல் கூத்தை
.......... படித்துக் குடித்த ஒருவர் !
ஆனை மேலே அமரும்
.......... அதிர்ஷ்ட்ட நபரும் யாரோ ?
பூனையா? புலியா? என
.......... புதிராய் இருந்த ஒருவர் !

ப்ரத்யக்ஷம் பாலா,
12.12.2016.

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: KavithaigaL by Rasikas

Post by vgovindan »

Image
பாசாங்கு (3-1-17)

என் தாய் இறந்தவிட்டாளென
என்பேரில் நீ கருணை காட்டவேண்டாம்;
எங்களை இப்படியே இருக்கவிடுவீர்,
உங்களை வேண்டிக் கேட்கின்றேன்.

உங்கள் கருணையிலே வளர்ந்து,
உங்களுக்கு அடிமைகளாகி,
உயிர்வாழ்வதினும் மேலாம்,
உயிர்நீத்திடல் உரிமையோடு.

இயற்கையன்னை என்றுமுண்டு எங்களுக்கு;
இயற்கையினை சிதைத்திட்ட மனிதா, கேள்!
கள்ளமில்லை, கபடமில்லை, பேராசையில்லை,
காழ்ப்பும் அறிந்திலோம், வஞ்சம்நிறை மனிதா!

பஞ்சமென்று பசிக்குணவு உன்னிடம் கேட்டதில்லை;
தஞ்சமென்று உன்னிடம் எந்நாளும் வந்ததில்லை;
கொஞ்சமேனும் கருணை உனது நெஞ்சினிலே,
மிஞ்சியிருக்குமேயாகில், எம்மைத் தீண்டாதே.

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

இசையே அவன்...
......................................

கடவுள் கல்லாகக் காணப் பெற்றாலும், அவன் சர்வ வ்யாபி--
அவனிடம் மனிதன் கற்பதோ? "குத்துக் கல்லாயிராதே!
படர்ந்திடு, பறந்திடு, பற்று விடு, என் படைப்பைப்
பார்த்துக் கற்றிடு, பரவசம் கொண்டதனை இசைத்திடு
சுவைத்திடு, இன்பமாம் நானே அதுவானேனென்று!
உள்ளத்திருந்தெழும் பாடலிலே நானுள்ளேன், ஐயமேது?

நீ என்னைப் பேரிட்டு அழையாவிடினும், குழலும்
வீணை, குரலும‌ழைக்கும் என்னையே--
நீயும் உருகிடக் கூவுவாய் குணம் பெறவே!"

On seeing in a thread that Bhakthi is departing from CM...

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

ஜல்லிக்கட்டுக் காளை

Post by vgovindan »

எங்கள் தெருவில் மேயும் காளை மாடொன்றினைக் கேட்டேன்;
உங்களுக்குத் தெரியுமா, நல்ல காலம் பிறந்துவிட்டது உங்களுக்கென்றேன்;
திருதிருவென்று விழித்தது, பாவம் - நான் சொன்னது புரியவில்லை;
திருநாள் உங்களுக்கு வருகின்றது - அடுத்த பொங்கலுக்கு;
ஜல்லிக்கட்டு விளையாட நீங்களெல்லாம் வரவேண்டுமென்றேன்.

நாங்கள் இருப்பதோ ஆயிரக்கணக்கில், ஆனால் போட்டிக்குத் தேவையோ,
எங்களில் ஆயிரத்தில் ஒன்று - அது கூட மிகையாகுமென்றது.
ஆண்டுக்கு ஓர்நாள் எங்களுக்கு அலங்காரம் செய்குவீர்;
ஆடம்பரமாக மாலையணிவித்து ஊர்வலம் அழைத்துச் செல்வீர்;

மற்ற நாளெல்லாம் தண்ணீர் காட்டுவதற்குக் கூட வக்கில்லை;
நாற்றச் சாக்கடையின் தண்ணீர் குடித்துப் பிழைக்கின்றோம்;
பேருக்குக்கூட தீனியென்று போடுவதில்லை, அன்றாடம்;
தெருவில் கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளைத் தின்கின்றோம்;

குப்பை சீரணிக்கமாட்டாது தொப்பை பெருத்து நடைப்பிணமானோம்;
எப்போது எங்களை கசாப்புக்காரனிடம் கொண்டு செல்வீரோ, தெரியாது;
எங்கள் பெண்ணினத்தினை ஊசி போட்டுப் பால் கறப்பீர்;
நாங்கள் பெற்ற செல்வத்தினை கண்ணிலும் காட்டமாட்டீர்;

வைக்கோல் அடைத்த போலிக் கன்றைக் காட்டி ஏமாற்றுவீர்;
மிக்குக் கொடுமைகள் செய்து எங்களை அடிமையாக்கிவிட்டீர்;
படைத்தவன் படைத்தான் உங்களையும் எங்களையும் சமமாக;
படைத்தவனுக்குத் துரோகம் செய்துவிட்டு பேச்சென்ன உமக்கு?

போலி உம்மைப்போன்று இறைவன் படைப்பிலேயே இல்லை;
நீலிக்கண்ணீர் வடிக்காதீர், எம்மை எம் விதிக்கே விட்டுவிடுங்கள்;
தேடி வருகுது உங்களை நீர் செய்யும் கொடுமைகளின் விளைவு;
வாடி வதங்கும் எம் கூக்குரல் எமதரசன் நந்தியின் காதில் விழும், காத்திருப்பீர்.

இந்த வசனக் கவிதைக்கு மன்னிப்புக் கோருகின்றேன்.

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

நம் மீனவர்கள் பாடு மிகவும் பரிதாபம் !தென் கடற்கரையில் மீன் பிடிக்கச்சென்றால் அண்டை நாட்டு காரன் தொல்லை. வட பகுதி கடற்கரையில்
எண்ணெய் படலம் !மீனவர்கள் துன்ப வாழ்க்கையை பற்றி ஒரு கவிதை:

நடுக்கடலில், நள்ளிரவில் ...
மகிழ்ச்சி பொங்க நெடும் பயணம் மேவிச்சென்ற
எத்தனை மீனவர்கள் எத்தனை மாலுமிகள் ,அந்தோ,
துயர் மிகு அத்தொடுவானில் தொலைந்தே
போய்விட்டனரே ! சோக மிகு விதியின் கொடுமையிது!
நிலவில்லா மையிருட்டில் ஆழங்காணா அலை வெளியில்
கண்ணிலாக் கருங் கடலில் எண்ணிலா மாந்தர்கள்
நிரந்தரமாய் நீருக்குள் அழுந்திப் புதைந்து போயினரே!.

சிதைந்து போன தலைகளே
உங்களுக்கு உற்ற கதி யார் அறிவார் ?
பாதாள இருள் வெளியில் உருண்டு புரண்டு உலகறியாப்
பாறைகளை உயிரற்ற உங்கள் நெற்றியியால் முட்டி த்
தள்ளிக்கொண்டிருக்கிறீர்களே ! நாளொன்று தவறாமல்
கடலோரம் வந்து வராத உங்கள் வருகையை
எதிர்பார்த்து எதிர்பார்த்து தம் ஒரே கனவும் நிறைவேறா
ஏமாற்றத்தில் உயிர் நீத்த வயோதிக
பெற்றோர்கள் தாம் எத்தனை பேர். !

கண் விழித்திருக்கும் இரவுகளில் சில சமயம்
உங்களைப் பற்றிய பேச்சு வரும் .
கரை மணலில் அரை குறையாய் ப் புதைந்து கிடக்கும்
பழைய துரு ப்பிடித்த நங்கூரம் ஒன்றினைச்
சுற்றி அமர்ந்து கூடி களித்திருக்கும் சில நாளில்
பழைய பாடல்கள் ,கேலி பேச்சுக்கள் ,வீர சாகசங்கள் ,
உங்கள் காதலிக்கு கிட்டாத முத்தங்கள்
ஆகிய இவற்றுடன் இணைத்துப் பிணைத்து
நிழல் படிந்த உங்கள் பெயரும் பேசப்படும் சில காலம் வரை .
நீங்களோ ஆழ்கடல் அடியில் பச்சைப் பாசி படுக்கையில்
படுத்து உறங்கிக் கொண்டிருப்பீர்கள் !

யாரோ கேட்பார்: எங்கே அவர்கள்? ஏதேனும் தீவு ஒன்றின்
மன்னர் ஆகி விட்டனரோ ? நம்மைக் கைவிட்டு
இதனினும் செழுமை மிகு இடம்
வேறெங்கும் போய்ச் சேர்ந்து விட்டனரோ ?
காலப்போக்கில் உங்கள் நினைவும் கூட மறைந்துவிடும் .
உப்பு தண்ணீரில் உடல் கரைந்து பொயிற்று
உள்ளத்து நினைவிலிருந்து பெயர் கரைந்து போயிற்று
தொடரும் ...

பிரபல பிரெஞ்சுக் கவிதைகள் ; VICTOR HUGO

Post Reply