KavithaigaL by Rasikas

Post Reply
vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

உரிமை

Post by vgovindan »

குடிமகனைக் கோமகனாக்குவதே குடியரசு - குடி மகனல்ல;
படியேறி வந்து வோட்டு கேட்டவன், கொடிகட்டிப் பறக்க,
விடியாத இரவாகி, நடு ரோட்டில், குடியானவன் தவிக்க,
கொடியேற்று விழா நடந்தென்ன? நடக்காமலிருந்தென்ன?

சிறிதேனும் மனச்சாட்சி உமக்கு மிஞ்சியிருக்குதெனில்,
நெறி கெட்டு, நேர்மை கெட்டு, தறிகெட்டக் காளை போல் - பண
வெறியாட்டம் ஆடும் அவலத்தைச் சற்றுக் கண்ணாரக் காணீர்;
பறிபோனதே சுய மரியாதை - வெற்று கோஷமாகிப் போனதே;

கடமையென்றால் வீசையென்ன விலை எனக்கேட்கலாச்சே;
கண்ணியம் பணப் புயற்காற்றில் பஞ்சாகப் பறக்கலாச்சே;
கட்டுப்பாடு வெறும் மக்கட் தொகைப் பெருகலில் என்றாச்சே;
பட்டுப்போனதே, வீரர்கள் போராடிப் பெற்றுத் தந்த சுதந்திரம்.

இரந்துண்ணலை இகழ்ந்திட்ட இந்த பாரதப் பூமிதன்னிலே
இரந்துண்போர் தெருவோரம் நடைபாதைகளில் உறங்கலாச்சே
இரவெல்லாம் குடிபோதையில் கும்மாளம் அடித்தவன்
இரக்கமற்ற மிருகம்போல் காரோட்டி அவரைக் கொல்லலாச்சே

ஏழை தன் ஏழ்மைதன்னை தன் தலைவிதியென நொந்து
கோழைபோல் வாழும்வரைதான் இந்தக் கும்மாளமெல்லாம்
விழத்தெழுந்து தன் உரிமைதன்னை மார்தட்டிக் கேட்பானாகில்
கொழுப்பேறிக் கொடுமை புரிவோர் கூண்டோடு கைலாசம்தான்.

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

செந்தூர்

Post by vgovindan »

கந்தமாதனம் எனும் திருச்செந்தூர் கடற்கரைதனிலே,
விந்தைகள் பல புரிந்து, வேண்டுவோர் துயரம் தீர்க்க,
அந்தமாக இரு மடந்தையரோடே குடிகொண்ட திரு
கந்தமாக்கடவுளே! நின்னை சொந்தமாகவோர் சொல் கேட்பேன்

இந்த மாது இன்னும் எத்தனை காலம் சிந்தை கலங்கிடவோ?
வந்திவளையும் உந்தனுக்கு உரிமை கொண்டாடுவதெப்போ?
முந்தை வினை முடித்திடுவதும், முருகா! உன் கடனென்றேன்;
தந்தையுனைத் தடுத்தானோ? தாயும்தான் வழிமறித்தாளோ?

அந்தகன் வந்தென்னை வைதரணியில் தள்ள விடுவாயோ?
முந்தை நீ காத்த வான் அமராவதி வாழ்வும் வேண்டேன்,
எந்தையே! சிந்தை தீர்த்தென்னை ஆட்கொள்ள வாராயோ?
ஏந்திக் கரமிரண்டினையும் உன் சன்னிதியில் வேண்டினேனே.

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

நல்ல ராகத்தில் அமைத்துவிட்டால் நாட்டியத்திற்கு புதிதாக ஒரு அருமையான பதம் முருகனை தலைவனாக வைத்து. பாராட்டுக்கள்.

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: KavithaigaL by Rasikas

Post by vgovindan »

பொன்பைரவி அவர்களே,
நன்றி.

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

கிட்டிப்புள்ளு

Post by vgovindan »

கிட்டிப்புள்ளு விளையாட்டுக்கு கிரிக்கட்டென்று பெயராம்;
சாலையோரமும் தோப்பிலுமல்ல ஸ்டேடியத்தில் நடக்குதாம்;
ஒரு மணி இரண்டு மணியல்ல ஐந்து நாட்கள் நடக்குதாம்;
புதிதாக ஐபிஎல்லென்று பகலிரவு ஆட்டமும் நடக்குதாம்;

அரை நிருவாணமாகப் பெண்கள் அணிவகுத்து ஆடுவராம்;
அவருக்கு சியர் லீடரென்று பெயரிட்டு வேடிக்கை பார்ப்பராம்;
ஆட்டத்தில் பங்கு பெறுவோரை ஏலத்தில் தேர்ந்தெடுப்பராம்;
முன்னாள் அடிமைகளை ஏலத்தில் எடுத்தது கேட்டுள்ளேன்;

இன்னாளும் ஐஸிஸ் பெண்களை ஏலம் போடுகின்றாராம்;
கிட்டிப்புள்ளுக்காரர் ஏலம் மிக்கு கௌரவமாக நடக்குதாம்;
கோடி கோடியாக பணம் கொடுத்து ஏலம் எடுக்குறாராம்;
இந்த அடிமைகளுக்கு பாரத ரத்னா விருதும் கொடுக்குறாராம்;

கோடி கோடியாகப் பணமீட்டும் அடிமைகள் வாழ் நாட்டினிலே,
இக்கேவலத்தைக் கண்டுகொண்டிங்கு இருக்கத்தான் வேண்டுமா?
எடுத்துக்கொண்டு போடா என்னை, எமனே! புழுக்கம் தாளேன்.

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

பாரதத் தாயே! உனக்கோர் கேள்வி

Post by vgovindan »

தான் பிறந்த மண்ணும் தன்னைப் பெற்ற தாயும்,
வானுலக வாழ்வினும் சாலச்சிறந்ததென்றாரே - ஆயின்
பிறந்த மண்ணை அழித்துவிட்டுத்தான் ஓய்வேன் என
பிறந்த மண்ணிலேயே கோஷமெழுப்புகின்றாரே இன்று;

கேட்பாரில்லையோ? தன்மானம்தான் செத்துவிட்டதோ?
நாட்டுப்பற்றுக்காக தன்னுயிரைப் பணயம் வைத்து,
வீட்டைத் துறந்து, மனைவி மக்களைத் துறந்து,
தோட்டாவை எதிர்கொண்டு, வெஞ்சிறையும் சென்று, அவர்

வாங்கித்தந்த சுதந்திரம், வெறும் கற்பனையோ? பொய்யோ?
தூங்கிக்கிடக்கும் மக்களைத் தட்டியெழுப்ப, இன்னுமோர்
பாரதி தோன்றுவதெப்போவெனக் கேட்கின்றேன்,
பாரதத்தாயே! யாமெல்லாம் உன் மக்களன்றோ? நவில்வாய்.

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

கரையான் தொல்லை !


மண்ணையே தின்று இம் மண்ணுக்குள்ளே யே ஒளிந்து
கண்ணுக்கு தெரியாமல் எண்ணற்று இனம்பெருக்கி
கண் கவர் சிற்பம் நிறை வீட்டு நுழைவாயில்
வண்ண காஷ்மீர கம்பளங்கள் வழிபாட்டு
நுண் கலையமரப்பொருள் நூல்கள் சுவடிகளை
மண்ணோடு மண்ணாக்கி மடிய ச்செய்திடும்
கண்ணிலா கரையான்களை திண்ணமாய் ஒழித்திட
மண்ணுண்ட வாயனும் மண் சுமந்த தலையனும்
விண் விட்டு இம் மண் காக்க விரைந் தெப்போ வருவாரோ ?
Last edited by Ponbhairavi on 16 Feb 2016, 12:28, edited 1 time in total.

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

பச்சை துரோகம்.

கொத்தும் பறவையின் பார்வை படாமல்
பச்சைப் புழுவுக்கு புகலிடம் தந்த இலை
தன் கீழ் தவழ விட்டு தாலாட்டி காத்தது- அவ்விலையுடன்
செடியையே அரித்து தின்று கொழுத்த தப்புழு!!

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

கரையான் தொல்லை !
ஆஹா ! மிக்க அருமை !
பச்சை துரோகம்
சிறந்த கவிதை; ஏற்ற தலைப்பு !

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

P .Bala,
மிக்க நன்றி மீண்டும் நன்றி -மற்றவர்களுக்கும் தான்.
ராஜகோபலன்

arasi
Posts: 16787
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

இயற்கையின் நியதி
.........................

பிழைத்த புழு கொழுத்திருந்தது
செடியை சாய்த்த பின்னும்--

கொத்த வந்த பறவை காத்திருந்தது
மெத்தனம் கொண்ட புழுவைத் தாக்கி
தனதாக்கி உணவாய்க் கொண்டிட--
கன கர்வம் பிடித்த புழு நெளிந்தது
வளைந்த கிளை இலை தின்று தீர்த்தது
களைத்தே சற்று கண்ணயர்ந்தது--பறவை
சலிக்காததைத் துவையலாக்கித் தின்றது...

Loved your poem, Ponbhairavi. So this response...:)

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: KavithaigaL by Rasikas

Post by vgovindan »

இன்னுமொரு வால்மீகி உருவாகிக்கொண்டிருக்கின்றாரோ?

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

என் கேள்விக்கென்ன பதில்?

Post by vgovindan »

பத்தாண்டுதானேயாச்சு உம்மோடு குப்பைகொட்டி;
புத்தம்புதிதாக இப்போ இன்னொண்ணு வேணுமோ?
அப்படியேயிருக்கேன் நான், என்ன குறைச்சலெனக்கு?

மங்கலாக உள்ளது கொஞ்சம் - அதனால்தான் புதுசு;

மங்கலாக நீங்களானால், உங்களை நான் மாற்றலாமோ?

இப்படி ஏடாகூடமாகப் பேசாதே, உன்னையும் வச்சுக்கறேன்;

அப்படியொரு எண்ணமோ உங்களுக்கு? நான் போகிறேன்

(என்ன பதில் சொல்வது என் மூக்குக் கண்ணாடிக்கு?)

arasi
Posts: 16787
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

"அடி, மூக்குக்காரி நீ, உனக்கு வாயெதற்கு?" என்றுதான் :)

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

aஅரசி நன்றி
உங்கள் வழியில் தொடர்கிறேன்.

இலையை தின்று களித்திருந்த கணப்பொழுதில்
என்பில் அதனை வெயில் சுட்டு வாட்டியது
போர்வையை தின்றுவிட்டு இனி புலம்பி யாது பலன்.?
வானத்தில் வட்டமிட்ட பறவையிதை பார்த்து
பாய்ந்து வந்திங்கு புழுவதனை விழுங்கியது
-அதன் வயிற்றில் இருந்த வாரிசுகளையும் சேர்த்து !!

என்பில் அதனை வெயில் போல காயுமே
அன்பில் அதனை அறம் ------குறள்

arasi
Posts: 16787
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

வால்மீகி

புற்றின் பெயருடையோன் புத்தகம் எழுதினான்
பெற்றவன் புலம்ப, நாடு துறந்த வில்வீரன் கதை

இற்றைக்கும் எப்பிறவிக்கும் இதம் தரும் நாமமுடை
கொற்றவன் குணங்க‌ளுக்கு ம‌ற்றவையெவை இணை?

rshankar
Posts: 13754
Joined: 02 Feb 2010, 22:26

Re: KavithaigaL by Rasikas

Post by rshankar »

Arasi - a question...why is it that you consider a pair of glasses to be female? :)
(I hope I've understood you correctly!)

arasi
Posts: 16787
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

Ravi,
engaL kAla (our times) pair--see how the conversation reveals who is male of the species and who the female.The 'nI, nIngaL' addressing 'spec'ifies the gender, and no 'spec'ulation there ;)

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: KavithaigaL by Rasikas

Post by vgovindan »

Ravi,
On a serious note, the Western approach to women has been 'use and throw'; but Eastern, particularly Indian traditions, it has been more equitable commitment on either side. Yes, there has always been inequality - that inequality is built into the nature. See the herd of bull and cows, and other animals also. We humans are in no way different from our ancestors - animals. In fact our brains and intellect have worked in a way to be more out of tune with nature and more wicked. The stark difference and efforts to reconcile are clearly brought out in our epics - particularly Ramayana - the difference between Dasaratha and Rama. But humans, as we are, we choose what is pleasant to us and not what is good - SrEyas and prEyas - as kaThopanishad would call it.

Your question is loaded - though in a lighter vein. But it is for real.

Surely, the solution does not lie in the Western model of women. In fact, it is more denigrating women and womanhood. There is a limit to which humans can be out of sync with nature.

rshankar
Posts: 13754
Joined: 02 Feb 2010, 22:26

Re: KavithaigaL by Rasikas

Post by rshankar »

Sri Govindan,
I think your view of both Eastern and Western treatment of women is probably not entirely correct.

You will have to agree with me that while India has a great history of putting some women on a pedestal, for the most part, in real life, it's been 'use and abuse', even for the average middle class woman - both professionally and at home.

By the same token, while your view of how the west treats its women is true in some contexts, an average middle class woman is treated with a lot more respect than you've been led to believe.

And yes, my question was merely in jest.

thanjavooran
Posts: 2980
Joined: 03 Feb 2010, 04:44

Re: KavithaigaL by Rasikas

Post by thanjavooran »

பெற்றவன் புலம்ப, நாடு துறந்த வில்வீரன் கதை
அரசி அவர்களே,
என்ன ஒரு சொல்லாட்சி. ஒரு தாழ்மையான வேண்டுகோள். சில வரிகளில் ஏன் ராமகாதையை எழுத்து வடிவில் தாங்கள் புனையக்கூடது என்பதே.
வாழ்க வளமுடன்,
தஞ்சாவூரான்
18 02 2016

thanjavooran
Posts: 2980
Joined: 03 Feb 2010, 04:44

Re: KavithaigaL by Rasikas

Post by thanjavooran »

பொன்பைரவி அவர்களே,
கரையான் தொல்லை ஒரு அருமையான படைப்பு. மிகவும் ரசித்தேன்.
வாழ்த்துக்கள்.
தஞ்சாவூரான்
18 02 2016

arasi
Posts: 16787
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

தஞ்சாவூராரே,
நன்றி!

புனையத் தக்க புலவி நானில்லை--
மனையாளும் நான் மனம் போனபடி
கதைப்பதெல்லாம், மிதக்குமே, இராம‌
காதை கற்றறிந்தோர் ஆழ் கருத்திலே!

கனைத்து வளைய வரும் கர்த்தபம் நான்--
தினையளவே என் அறிவு! அது திண்ணமே!

அரச சபையில் யாழெடுத்துப் பாடவுமாகுமோ
அரசிக்கு? ஒரு நரம்பு மீட்டிப் பாடும் யாசகியவள்!

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: KavithaigaL by Rasikas

Post by vgovindan »

arasi wrote:ஒரு நரம்பு மீட்டிப் பாடும் யாசகியவள்!
உண்மைதான், ஒரு நரம்பு மீட்டும் யாசகி - மீரா போன்று - எத்தகைய யாசகம்!!

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

thanks Thanjavooran,

PUNARVASU
Posts: 2498
Joined: 06 Feb 2010, 05:42

Re: KavithaigaL by Rasikas

Post by PUNARVASU »

திரு சஞ்சய் சுப்ரமண்யன், திரு வரதராஜன், திரு வெங்கடேஷ், திரு சுதீர்

இந்த வெள்ளுடை நால்வர் அணி அள்ளித்தந்த,

வர்ணத்தில் ஓடோடிவந்த தோடி

தியாகராஜஸ்வாமிக்கு 'அஞ்சாதே இவ்வுலகைக் கண்டு'

என்று பரிவுடன் கூறிய கமாஸ்

நரசிம்ஹனைத் துதித்த கமலாமனோஹரி

கமலையில் பிறக்க முக்தி, அந்த கமலாம்பாள் என்னைக்

காக்கட்டும என்று பாடிய பரம ஆனந்த பைரவி

ராஸவிலோல என்று சிகரம் தொட்ட காம்போஜி

மணியான தனி, தேரில் ஏறிய கல்யாணி

ராகம் தானம் பல்லவியாகப் பிறந்து திருப்புகழாய் வளர்ந்த சக்ரவாகம்

இடையே வந்து உலாவிய வராளி, நாடகுறிஞ்சி, சுத்த தன்யாசி

கோவிந்தனைக் கண்ட சந்திரகொ௱ன்ஸ்

காஞ்சியில் இருக்க முக்தி என கச்சி ஏகம்பனையும்

காசியில் இறக்க முக்தி என விச்வேஶ்வரனயும் பாடிய பூர்வி கல்யாணி, சிந்து பைரவி

நாராயணனைத் துதித்த கோமளாங்கி

மங்களமான சொ௱ராஷ்ட்ரமும் மத்யமாவதியுமாக

நிறைந்ததே இன்றைய தினம்

PUNARVASU
Posts: 2498
Joined: 06 Feb 2010, 05:42

Re: KavithaigaL by Rasikas

Post by PUNARVASU »

திக்கு பத்தெங்கும் செல்லுமாம் அவன் தேர்

அதனாலே தஶரதன் என்று பேர்

புத் எனும் நரகம் , அங்குதான் கடைசியாக

சென்று சேர்வானோ என்ற நிலை

இறுதியாக 'புத்ர காமேஷ்டி' யாகப்பயனாக

பிறந்தனர் பிள்ளை நால்வர்

தலை மகன் இராமன் இடை கடை என

இலக்குவன் பரதன் சத்தருக்னன்

முடிசூட வேண்டிய வேளையில்

மரவுரி தரித்து வனம் ஏகினான் ராமன்

மனைவி சீதையும் இளவல் இலக்கவனும் உடன் வர

பொன் மானை ராமன் பின் தொடர,

இராவணன் சீதையைக் கவர்ந்தனன்

தேடினான் ராமன் ஓடினான் காடெங்கும்

கழுகுக்கிழம் உயிர் பிடித்துக் காத்திருந்தது,

ராமனிடம் சேதி சொல்ல,

வானரமாம் சுக்ரீவன் வழியில் கண்டு, தோழமை கொண்டு

அவன் சோதரன் வாலியை வதம் செய்து, அனுமன் துணை கொண்டு

அன்னையை இலங்கையில் கண்டு, இராவணனை வதம் செய்து

அன்னையை மீட்டு அரியணையில் அமர்ந்தானேஅண்ணல் இராமன்.

PUNARVASU
Posts: 2498
Joined: 06 Feb 2010, 05:42

Re: KavithaigaL by Rasikas

Post by PUNARVASU »

I am no poet, just got the inspiration from the shlokam 'पूर्वं राम तपोवनादि गमनम्'.
Thanjavooran , my humble attempt .
arasi, if you call yourself 'not a poet' I don't know what I should call myself as 'not'!
With Ramanavami around the corner, and with my father's 'Rama' echoing in my heart all the time, this is what I could write!

thanjavooran
Posts: 2980
Joined: 03 Feb 2010, 04:44

Re: KavithaigaL by Rasikas

Post by thanjavooran »

புனர்வசு அவர்களே,
கன்னி முயற்சியோ எனப்படுகிறது. அருமையான படைப்பு. தெளிவாக இருபது வரிகளில் இராமாயணம். அருமை போங்கள். தங்களின் இசை நிகழ்ச்சியின் மதிப்பாய்வுரை பாராட்டுக்கு உரியது.
வாழ்க வளமுடன்.
தஞ்சாவூரான்
22 02 2016

PUNARVASU
Posts: 2498
Joined: 06 Feb 2010, 05:42

Re: KavithaigaL by Rasikas

Post by PUNARVASU »

நன்றி, தஞ்சாவூரான் அவர்களே.

arasi
Posts: 16787
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

அவன் பிறந்த நாளில் பிறந்தீர், அருமை அப்பாவின் குமரியாய்!
நவ நவமாய் இராமன் புகழ் பாடியன்பு பகிர்ந்த தந்தைக்கே--

புனர்வசு என்ற பெயரும் கொண்டீர், அனைத்து நண்பர்களுமே
அனவரதமும் கேட்டும் கற்றும் மகிழும் ரஸிகாஸ் தளத்திலே--

அடிக்கடி நினைப்பதுண்டு, எதிர் பார்ப்பதுமுண்டு, உம் எழுத்தையே
அடி பணியத்தக்க உம் தந்தையின் குமரி என்பதை மறவாமலே...:)



தஞ்சாவூராரே!

நீர் எண்ணிய படியே இராமன் வந்தான்!

Veeyens would have added: may RamA be with you :)

PUNARVASU
Posts: 2498
Joined: 06 Feb 2010, 05:42

Re: KavithaigaL by Rasikas

Post by PUNARVASU »

அரசி, நன்றி.
I always write something when I am so overwhelmed with my dad's memory. It is as if he is writing through me.

arasi
Posts: 16787
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

Said he, "I see RamA everywhere, all around me
In the mighty Niagara, California's tall redwoods,
In humanity, in children, but mostly in music--

He lives in our memory evergreen, Veeyens--
The oldest young at heart at Rasikas.org...

PUNARVASU
Posts: 2498
Joined: 06 Feb 2010, 05:42

Re: KavithaigaL by Rasikas

Post by PUNARVASU »

Thanks, arasi.

thanjavooran
Posts: 2980
Joined: 03 Feb 2010, 04:44

Re: KavithaigaL by Rasikas

Post by thanjavooran »

Arasi ,
Our memories are always green. 10 yrs back without knowing Shriaman Veeyens as our co forumite exchanged pleasantries [ since product of the same company ] at a concert in SIFA Bay area. Of course he retired few years before me.
Thanjavooran
23 02 2016

PUNARVASU
Posts: 2498
Joined: 06 Feb 2010, 05:42

Re: KavithaigaL by Rasikas

Post by PUNARVASU »

Yes, Shri Thanjavooran. You were also from ICF. I remember the message you sent after my father passed away.
Thanks for your kind words.

arasi
Posts: 16787
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

Punarvasu,
With all our fond memories about him, why don't you post a picture of his? Since this is KavithaigaL sub forum, you may also add a verse or two about him?

PUNARVASU
Posts: 2498
Joined: 06 Feb 2010, 05:42

Re: KavithaigaL by Rasikas

Post by PUNARVASU »

arasi, I do not know how to upload a picture here! : :cry:
I will try to find out how to do it!

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

மாக்கள் குரல்

Post by vgovindan »

இயற்கையை ஆளத்தெரிந்த மனிதன்,
இயற்கையின் நியதி அறிந்திலனே;
தனக்கென நீதிகள் செய்திட்டானே;
தனக்கொரு நீதி எமக்கொரு நீதியோ?

நாளும் உணவு தேடி உண்டோமே;
நாளைக்கென்று சேர்த்திலோமே;
வாழ்வதற்கு வீடு கட்டினோமில்லை;
வானமே கூரையாக வாழந்தோமே;

அண்டி எவரையும் வாழ விழைந்திலோமே;
அடிமையிலும் அடிமையாக்கி வைத்தானே;
எமக்கும் உணர்வுகளுண்டென்றறிந்திலனே;
எமது வாழ்வு அவன் பொருட்டே ஆனதந்தோ!

எம்மையும் ஈன்ற இறைவன் நீயேயன்றோ?
எமது நிலை கண்டு நீயிரங்கமாட்டாயோ?
பாரினில் எமக்கு விடிவு காலமில்லையோ?
பாராமுகம் உனக்கு மேலோ? பேசுமய்யா.

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

496

உறுதி

சென்றதை மறந்துவிடு.
இன்றொரு சபதமிடு;
குன்றனைத் தடைகளையும்
வென்றுவி டுவேனென்று !

ப்ரத்யக்ஷம் பாலா,
12.07.2016

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

497

இறைவா !

சல்லிக் காசு இல்லை.
தொல்லை தாள வில்லை.
அல்லல் எல்லாம் தீர
தில்லை நாதா, வா ! கா !

ப்ரத்யக்ஷம் பாலா,
09.09.2016

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

498

கடிகாரம்

டிக் டிக் டிக் டிக் ...
மாயாது இருக்கும் மக்களுக்கெனவே
ஓயாது ஒலிக்கும் காலனின் காலடி !

ப்ரத்யக்ஷம் பாலா,
28.08.2012

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

499

ஆர்ப்பரிக்கும் ஆக்கள்

குழலோசை கேட்டு வந்த கோவின் பால் கொணர்ந்து
தழலிட்டுப் பிறையிட்டுத் தளிர்க் கையால் மாதர்
முழங்கிக் கடைந்து எடுத்த மூவா வெண்ணெய்த் தம்
அழகனுக்கே எனத் தெரிந்தே ஆர்ப்பரிக்கும் ஆக்கள்.

ப்ரத்யக்ஷம் பாலா,
19.03.2003

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

500

துதி

அஞ்சாத நெஞ்சம் வேண்டும்;
............... அறிவுடை எண்ணம் வேண்டும்;
நெஞ்சாரக் கனவு கண்டு
............... நினைத்ததை நடத்த வேண்டும்.

ப்ரத்யக்ஷம் பாலா,
02.04.2003

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

501

காவிரி மோதல்

ஓர்நதி நீருக்கே ஓயாச் சண்டை;
பார்நதி இணைத்தாலோ? படுகளமாகும் !

ப்ரத்யக்ஷம் பாலா,
06.07.2012

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

502

பூக்காரி சொன்னது !

"தொடுத்து முடித்த
அடுத்த நொடியில்
கிடைத்த விலைக்குக்
கொடுத்து விடுவேன் !"

ப்ரத்யக்ஷம் பாலா,
25.05.2006.

arasi
Posts: 16787
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

அதை விடுத்து,இவளும், வாடிக்கைக்காரியும்
துடுக்காய்ப் பேசி இடக்கு செய்தால், பின்னே
வாடிப் போகும் பூவும், மிடுக்காய் வலம் வரும்
இடுக்கண் தீர்க்கும் வினாயகனும் ஓடிடுவான் :)

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

503

ஸ்ரீலஸ்ரீ

முடிகூட்டி வரியிட்டு
தடிகொண்ட வேடமிட்டு
அடியேன் கடவுளென்றால்
அடிபணிய அலைமோதும் !

ப்ரத்யக்ஷம் பாலா.

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

504

அழகு

அலையிடை ஆதவன் எழவும்
இலையிடைச் சிந்திய ஒளியில்
கலையெழில் கோலம் கண்டேன்
சிலையெனச் சிலிர்த்து நின்றேன் !

ப்ரத்யக்ஷம் பாலா,
23.04.2012.

arasi
Posts: 16787
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

நல்லதோர் கவிதை...

கடைசி வரி மட்டும்: "சிலையென நின்றேன், சிலிர்த்தேன்" என்றிருக்கலாமோ?

Post Reply