KavithaigaL by Rasikas

Post Reply
arasi
Posts: 16080
Joined: 22 Jun 2006, 09:30
x 473
x 263

#2151 Re: KavithaigaL by Rasikas

Post by arasi » 14 Oct 2018, 20:07

சிரிதர்,
நல்லதோர் மனிதரை, எழுத்தாளரை இழந்து விட்டோம்.
அவர் உமக்களித்த ஊக்கம் உம்மை மேலும் எழுதிட வைக்குமென நம்புகிறேன்...
0 x

vgovindan
Posts: 1603
Joined: 07 Nov 2010, 20:01
x 56
x 112

#2152 Re: KavithaigaL by Rasikas

Post by vgovindan » 14 Oct 2018, 20:28

"மல்லிகை மலர் வாசம் மணக்கும் -பவழ
மல்லி போதையாய் மனம் கிறங்கும்
கண் கவர் கதம்பம்,கட்டு மருக்கொழுந்து இம்
மண்ணின் வளத்தால் ஈசன் புகழ் இசைக்கும்"

உங்கள் புகழ் மணக்கும்
சென்று வாருங்கள்
3 x

vgovindan
Posts: 1603
Joined: 07 Nov 2010, 20:01
x 56
x 112

#2153 Re: KavithaigaL by Rasikas

Post by vgovindan » 04 Nov 2018, 06:00

சிந்திக்கவும்

மின்சாரத்தின் பகட்டு ஒளியினிலே
மண்விளக்குகள் தோற்றனவே!
தீபங்களின் வரிசையெனும் தீபாவளி
பட்டாசுகளின் வெடி ஒலியிலே தோற்றதுவே!
0 x

vgovindan
Posts: 1603
Joined: 07 Nov 2010, 20:01
x 56
x 112

#2154 Re: KavithaigaL by Rasikas

Post by vgovindan » 08 Nov 2018, 08:47

Image
குடியானவன்

காணி நிலம் பயிரிடவேண்டிக்
கேணி தோண்டி நீர்நிலை செய்து,
ஏணிவைத்து நன்னீரிறைத்துப்
பேணிப் பயிர் அறுவடை செய்து,
சாண் வயிறு நிறைத்திட்டு
மாண்பு மிக வாழ்ந்ததெங்கே? இன்று

மாரி பொய்த்து, நீர்வற்றி,
ஏரிகளெல்லாம் மனைகளாகி,
ஊரிழந்து, உறவிழந்து,
சீரழிந்து, செல்வமிழந்து,
காரி உமிழ் வாழ்க்கை, நகர்ச்
சேரிதன்னில் வாழ்கின்றோமே!
1 x

nadhasudha
Posts: 317
Joined: 22 May 2006, 06:40
x 28
x 29

#2155 Re: KavithaigaL by Rasikas

Post by nadhasudha » 11 Dec 2018, 15:17

Sharing a composition that I recently wrote about my dad(ponbhairavi)on his childhood pranks. While I have previously written கவிதை this is the first time it has come out as a song. These are all true incidents which he has related to me and are part of family stories.

விக்ஷமக்காரக்கண்ணன் பொல்லாத விக்ஷமக்காரக்கண்ணன்
நாளுக்கொரு நாடகமாடி நாள்தோறும் ஆட்டம் ஆடி
நாழிக்கொரு நக்கல் செய்யும் ராஜகோபாலன் அவன்

நண்பர்களோடாடி மகிழ்வான் -தின்னையிலே
கோரமான கதைகள் சொல்லுவான்
வேண்டாம் ராஜு போதும் என்றால் - அவர்கள்
வேண்டாம் ராஜு போதும் என்றால்
நாளை கேட்டே தீரவேண்டும் என்றே கூறி ஓடிடுவான்

தம்பியுடன் சேட்டை செய்யுவான்
நடுவில் கொஞ்சம் தம்பியைத்தான் வேலை ஏவுவான்
போடா அம்பி என்று சொன்னால் - தம்பி அவனை போடா அம்பி என்று சொன்னால்
உன்னை நாளை சேர்க்க மாட்டேன் என்றே கூறி விரைந்திடுவான்

கோவில் மதில் ஏறி குதிப்பான் - அங்கே
காயம் பட்டால் மூடிமறைப்பான்
அம்மாவுக்கு தெரிந்து விட்டால் - அவன் அம்மாவுக்கு தெரிந்து விட்டால்
அப்பாவிடம் சொல்லாதென்று கூறிவிட்டு பறன்திடுவான்

தங்கையைத்தான் வம்புக்கு இழுப்பான் - வேண்டுமென்றே பாடங்களை தப்பாய் கற்பிப்பான்
அப்பா ஒரு கேள்வி கேட்டால் - அவளை அப்பா ஒரு கேள்வி கேட்டால்
வசமாக மாட்டி விட்ட திருப்தியுடன் ஓட்டம் பிடிப்பான்
2 x

vgovindan
Posts: 1603
Joined: 07 Nov 2010, 20:01
x 56
x 112

#2156 பறவை, விலங்கினத்தின் சாபம்

Post by vgovindan » 07 May 2019, 10:07

யாருக்கு வேண்டும் உங்கள் கருணை?
ஊருக்கு உபதேசம் செய்யும் மனிதா!

பிறப்பறியோம், இறப்பறியோம்;
பிறிதோர் உலகமறியோம்;
நேற்றறியோம், நாளையறியோம்;
இன்று, இப்போதுண்டென்றே அறிவோம்;

பாசமென்றும், நேசமென்றும் நீங்கள் கூறும்
பசப்பு மொழியொன்றுமறிந்திலோம்;
மொழியறியோம், கல்வியறியோம்;
பழியறியோம், பாவ, புண்ணியமறியோம்;

இறைவனென்றொருவன் இருப்பதறியோம்;
குறையறியோம், குற்றமறியோம்;
உற்றவரென்றும், மற்றவரென்றுமறியோம்;
பற்றறியோம், காதலென்றுமறிந்திலோம்;

உன்னால் எம்மினங்கள் அனைத்துக்கும்
என்னாளும் உண்டாகுது பெருந்துயர், நீயறிவாயோ?
செல்லமாக எம்மை வளர்க்கின்றோமென்று,
பொல்லாக் கொத்தடிமையாக்கினாயே!

நாள் முழுதும் உனக்குப் பெண்துணை, ஆயின்
ஆயுளுக்கும் எங்களைப் புணராது செய்தாயே!
கருப்பை அரிந்து மலடாக்கி, சடமாக்கினாயே!
உருப்படுவாயோ, உன்மத்தம் கொண்ட மனிதா!

உன்னினம் அழிந்தே தீரும், சாபமிட்டோம், பிடி!
0 x

Post Reply