If you are a venpA buff (in tamil script)

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by msm »

sankark wrote:ஒருநாளும் உன்னை மறவா தநிலை
தருவாய் ஒருசூ ரனைஇரண் டாக்கின
முக்கண் முதல்வன் இளமக னே எனக்கு
இக்கண மேஅருள் வாய்நான் முகனை
சிறைசெய் தஐம்பூத நாதா குறைதீர்க்கும்
நான்மறை மெய்ப்பொருளே யாவர்க்கும் உன்கதை
நான்சொல்வேன் முக்கனி போலினிக்கும் உன்பெயரே
ஈரிடத்தும் நன்மை பயக்குமெ னச்சொல்லும்
சீரிலங்கும் ஓர்பாட்டே கேள்
Sankar-ayyA: Your imagination and word collection/repository are both very good here, as well as in the other (kaNNan amudham poem )thread.
I think usage of mOnai thodai will enhance the beauty.

Avoidance of too many word splits and also minimizing doubtful formation/breaking of nirai asai (some ex. : மறவா தநிலை, சிறைசெய் தஐம்பூத, பயக்குமெ னச்சொல்லும்) just to fit the thaLai rule may both help improve the Osai nayam, eliminate mistakes.

Wonderful attempt sir. Keep it flowing... :-) :)

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by msm »

sridhar_rang wrote: The metre of this is given as "chandak kali viruttam" - msm, any idea what the rules are for this?

திருமழிசைப்பிரான் அருளிச்செய்த திருச்சந்த விருத்தம்


சந்தக் கலி விருத்தம்
No idea sir. I am hearing about this (Chandha'k kali viruttam) for the first time. I guess same rules that apply for kali viruttam may also apply to these.

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by msm »

sridhar_rang wrote:Here is an ARupaDaic chanda viruttam inspired by the above: [update]edited to have uniform seer structure on all lines[/update]

அந்திவண்ண னைச்சினந்து அன்றுபழ னிசென்றவா
தென்திசையைக் காக்கவந்த தென்பரங்குன் றிறையவா
இந்திரர்க்கும் எட்டிடாது ஏரகத்தில் இருந்தவா
தந்திரத்தால் வள்ளியைச்சேர் தண்தணிகை அடைந்தவா

மந்திபாயும் பழமுதிரும் மாமலையின் மயிலவா
செந்திலாய சீரலைவாய்ச் சேர்ந்தவெந்தை சரவணா
நந்திதொழும் நாதனுக்கே நான்மறைகள் நவின்றவா
புந்தியிற்பு குந்தெனக்குன் பொற்பதங்கள் பணித்திடாய்
ரொம்ப நல்லா இருக்கு - very nice.

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by msm »

எழுகூற்றிருக்கை

1-2-3-4-5-6-5-4-3-2-1

முதலொன் றிரண்டாகி மூவவத்தை யில்வீழ்ந்(து)
அதுநாற் றிசைதோறும் ஐம்புலனோ டோட
எதுமார்க்கம் என்றுயிரும் ஏங்கித் தவிக்கும்
அதுநீ அறிந்திடென்(று) ஆறுமுக ஆசான்
சதிஐந் திரைகளைத் தன்னருளால் சாய்த்து
அதிநுட்ப நான்காம் அவத்தையி லாக்கி
விதிவினையும் முப்புடியும் வெட்டியே வீழ்த்த
எதிலுமினி இல்லை இரட்டையர் இன்னல்
கதிசுகந் தானுந்தன் காட்சியைக் காணல்
மதிகோ வணனொருவ னே.

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by sridhar_ranga »

Explanation please, msm! It does look to be something profound.

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by sridhar_ranga »

No idea sir. I am hearing about this (Chandha'k kali viruttam) for the first time. I guess same rules that apply for kali viruttam may also apply to these
Just my guess - the word "chanda" implies that there should be a fixed number of letters (ezhuttu) in each aDi / line. If you count the number of letters excluding 'oRRu' / 'mei' ezhuttu, the total per line should be constant, as in the case of 'chandas' in Sanskrit poems.

The beauty, I believe, is that as long as the same set of asais are maintained on all lines, one need not even bother to count the letters - the letter count WILL be the same! For example, if you maintain "கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கருவிளம்", the letter count will always come to 16.

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by msm »

sridhar_rang wrote:Explanation please, msm! It does look to be something profound.
In the beginning, there is one paramathma (unconditional, supreme being).
On movement, it appears to become two: paramathma (all-pervading, omnipotent spirit) & jivathma (conditioned individual being).
As jivathma, it falls into (the samsara which is nothing but) the three states of waking, dream & deep sleep. Runs all four directions with its five senses.
Sooner or later, the jivathma wonders in exasperation: what is the way out and longs to release itself.

Then the teacher with six faces declares: ["adhu nI ! aRindhidu"] - "Know : You art That (Tatvamasi)".
His Grace removes the five sheaths (ainkOsam namely anna-maya-kOsam, prAna-maya-kOsam, manO-maya-koSam, vijgyAna-maya-kOsam & Ananda-maya-kOsam); Grace further elevates jivathma into the fourth state called (turiyA) where all identifications cease.
All the samsaric destiny (vidhi) & karma (vinai) in addition to the 'triad' like seer, seen & seeing are cut asunder.
There is no more misery due to pairs of opposites that pertain to this material world (duality) (good/bad, knowledge/ignorance etc. etc.). Thus ensues a state of Bliss of Lord Kandan's darisanam.

(Therefore), madhi (buddhisAlithanam) is (to be always with) the One with kOvanam (loin cloth)
(can be taken as PazhaniAndavan and also as an indirect reference to Bhagavan Ramanar)

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by cmlover »

Marvellous! The essencee of vedanta in succint beautiful Tamil lyrics.
Congratulations...
(couldn't resist a peek :D

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by sridhar_ranga »

Thanks msm. Simply brilliant.

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by msm »

....உந்தன் காட்சியைக் காணல்
கோ வணன் ஒருவனே, மதி.

can also be taken to mean:

The One who is in bliss & who witnesses Lord Kandha's kAtchi is indeed the One with the loin cloth [which implies: truely there is nothing but the paramathma apparently going through all the misery as a jivathma and apparently dissolving its separated (and illusory) identity]

Hard to understand for us, the earthlings, with our minds which in itself is the issue, being firmly immersed in our separated identity. ;-)

looks like too many of my verses are coming on the same topic - need to switch gear and deal with other subjects as well.... :-)
Last edited by msm on 14 Feb 2012, 04:59, edited 1 time in total.

vasanthakokilam
Posts: 10956
Joined: 03 Feb 2010, 00:01

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by vasanthakokilam »

msm, that poem is excellent. Such 1-2-3-4-5-6-5-4-3-2-1 usage, is that your own, or there is a எழுகூற்றிருக்கை tradition in poetry like that?


msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by msm »

vasanthakokilam wrote:msm, that poem is excellent. Such 1-2-3-4-5-6-5-4-3-2-1 usage, is that your own, or there is a எழுகூற்றிருக்கை tradition in poetry like that?
I didn't know about this formation in Thamizh prosody. Please read post #179 [ http://www.rasikas.org/forums/viewtopic. ... 19#p216119 ] - by sridhar_rang who introduced it in this thread.

Please note, this verse is only one in the full 7-level formation of ezhukUttRirukkai.
Last edited by msm on 14 Feb 2012, 05:13, edited 1 time in total.

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by msm »

looks like the webpage linked above is not loading, you may see the same poem by Thiru NakkIradEva NayanAr in 11th Thirumarai here:
http://www.tamilkalanjiyam.com/literatu ... ukkai.html

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by Pratyaksham Bala »

The reference was not for the song. It was given for the description எழுகூற்றிருக்கை that appears there.

From http://www.thevaaram.org/thirumurai_1/s ... Order=DESC

எழுகூற்றிருக்கை - ஏழு கூறுகளது இருக்கையாகிய பாட்டு. இருக்கை - இருப்பிடம். ஏழு கூறுகள், ஒன்று முதல் ஏழு முடிய உள்ள எண்கள் ஒரு முறை கூடியும், குறைந்தும் வர, எண்ணலங்காரம் அமையப் பாடுவதால் அமையும். அம்முறையாவது: 1) 1,2,1. (2) 1,2,3,2,1 (3) 1,2,3,4,3,2,1, (4) 1,2,3,4,5,4,3,2,1, (5) 1,2,3,4, 5,6,5,4,3,2,1, (6) 1,2,3,4,5,6,7,6,5,4,3,2,1. ஏழு கூறு வருதல் வேண்டும் என்பதற்காக ஆளுவதாகச் சொல்லப்பட்ட அந்த முறையை மீட்டும் ஒருமுறை சொல்லிப் பாட்டை முடிப்பார்கள். இப்பாட்டு அகவற்பாவாகவே வரும், இது, `மிறைக் கவி` எனப்படும் சித்திர கவிகளில் ஒன்றாகும். அதற்கு ஏற்ப இதனைத் தேர்போல வரையப்பட்ட ஓவியத்திற்குள் எண்ணுப் பெயர்கள் முறையாக அமைய அடைத்துக் காட்டுவர். அதனால் இது `மிறைக் கவி` எனப்படும் சித்திர கவிகளில் ஒன்றாகும். அதற்கு ஏற்ப இதனைத் தேர்போல வரையப்பட்ட ஓவியத்திற்குள் எண்ணுப் பெயர்கள் முறையாக அமைய அடைத்துக் காட்டுவர். அதனால், இது `இரத பந்தம்` என்றும் சொல்லப்படும். சித்திர கவியை `அருளாளரல்லது பிறர் பாடலாகாது` எனத் தொல்காப்பிச் செய்யுளியல் உரையில் ஆத்திரையன் பேராசிரியனார் கூறுவர். திருஞானசம்பந்தர் அருளிச் செய்த சித்திரக் கவிப்பாடல்களுள் திரு எழுகூற்றிருக்கையும் ஒன்று.1 என்பது அறியத்தக்கது. இதனுள் சில சொற்கள் பொருளால் எண்ணுப் பெயராய் இல்லாவிடினும் சொல்லால் எண்ணுப் பெயராய் எண்ணலங் காரத்தை நிரப்பும், எண்ணலங்காரமும் முரண் தொடையுள் அடங்கும்.

vasanthakokilam
Posts: 10956
Joined: 03 Feb 2010, 00:01

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by vasanthakokilam »

Thanks PB and MSM for the info. Good work Sridhar.

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by msm »

here is a venba again using 1-2-3-4-5-6-5-4-3-2-1 numbering of எழுகூற்றிருக்கை’s ஆறாவது இருக்கை, this time a social theme:

தாய்(தெய்)வம்

ஒருத்தியாய்க் கல்லுடைத்து ஒண்டிப் பிழைத்து
இருளில் இரண்டோ(டு) இணைந்துயிராம் மூன்றைப்
பெறப்பாடு பட்டும் பெறுங்காசு நான்கும்
எறும்பெனச் சேர்த்தவனை இட்டனள் பள்ளி
வறுமையோ வாட்டும் வருடங்கள் ஐயா(று)
அருமை மகனுயர ஐம்புலனை ஆண்டாள்
குரங்கினைக் கொத்தி கிளிமணங் கொள்ள
உறவு.இனி நான்குபேர் உண்மைமுக் கண்ணன்
இருபாதி ஆனது இல்லாளுக் கே;தாய்
தெருவில் எறிந்திடுமோர் தெய்வம்.

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by sridhar_ranga »

A different sequence, 6-5-4-3-2-1-2-3-4-5-6

ஆறடி ஆன மகன்தன்னை
--- *ஐவேஜுக் காய்மிக அன்புடனே
தாரைதான் வார்த்தாளே தாயவளும்;
--- தன்நாலு காசின் திமிராலே
மூணாம் மனுஷியாய் மாற்றாளாய்,
--- மாமி, இரண்டுக்கு மேலினி
வேணாம் குடும்பத்தில் யாரும்
--- விடைபெறு நீயிப்போ தேயென
பண்பே இல்லாமல் **பத்திவிட்டாள்
--- பாபமொன்றே தன்னுருவாம் மாற்றுப்பெண்
அன்பே மகவாய் உருவெடுத்து
--- ஆளாகி ஆசை மருமகளோ
டீரான நாமுமினி மூன்றானோம்
--- இன்னமும் நான்காவோம் ஐந்தாவோம்
ஆறாய்ப் பெருகும் மகிழ்ச்சியென
--- ஆசைகொண் டாடியதும் வீணாச்சே

* ஐவேஜு = சொத்து, வசதி, அந்தஸ்து
** பத்தி விடுதல் = விரட்டி அடித்தல் (மதுரைத் தமிழ்)

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by msm »

good attempt in aRusIr Asiriya'p (agavaR) pA Sridhar.

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by msm »

Couple of kattaLai kalitthuRai (கட்டளை கலித்துறை) verses which is the metre of Sri. Sankar's work in Kannan Kadhai thread:

விண்டுரை செய்குவன் கேளாய் புதுவை விநாயகனே!
தொண்டுன தன்னை பராசக்திக் கென்றும் தொடர்ந்திடுவேன்;
பண்டைச் சிறுமைகள் போக்கி, என்னாவிற் பழுத்தசுவைத்
தெண்தமிழ்ப் பாடல் ஒருகோடி மேவிடச் செய்குவையே.

by MahAkavi BhArathiyAr in vinAyagar nAnmaNimAlai

விழிக்குத் துணைதிரு மெய்ம்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா
மொழிக்குத் துணைமுரு காவெனும் நாமங்கள் முன்புசெய்த
பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே

by Saint Sri. aruNagirinAthar in kandhar alankAram

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by sridhar_ranga »

Random thoughts kalittuRai:

தசைக்குத் துணையொரு ஜிம்மினில் தண்டால் எடுத்தல்பற்
பசைக்குத் துணையொரு டூத்பிரஷ் புதுசா யிருத்தல்பாப்
பிசைக்குத் துணையினி மாடொனா பாடாதிருத் தல்நாலு
திசைக்குந் துணையொரு ஜீபியெஸ் காரில் பொருத்திடலே


மாடொனா = மடானா (Madonna), with some poetic license to fit the grammar

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by msm »

sridhar_rang wrote:Random thoughts kalittuRai:

தசைக்குத் துணையொரு ஜிம்மினில் தண்டால் எடுத்தல்பற்
பசைக்குத் துணையொரு டூத்பிரஷ் புதுசா யிருத்தல்பாப்
பிசைக்குத் துணையினி மாடொனா பாடாதிருத் தல்நாலு
திசைக்குந் துணையொரு ஜீபியெஸ் காரில் பொருத்திடலே


மாடொனா = மடானா (Madonna), with some poetic license to fit the grammar
haha ! pretty good. nice combination/free flow of words.
We can say this is a cross between marabu'p pa & pudhu'p pa, for it sticks to most of the rules of kattaLai kalitthurai but uses colloquial/popular words to convey the poets thought like a modern day verse would...
good going Sridhar!

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by msm »

கட்டளைக் கலித்துறை

வேகாத வெய்யிலினில் வேர்த்தொழுகெவ் வயதினரும் விரும்பிடுவர்
நோகாமல் நொடிப்பொழுதில் நுரைவழியக் குழலுறிந்துக் குடித்திடுவர்
சாகாமற் சாகடிக்கும் சைத்தான்.இக் குளிர்பானஞ் சத்துளதோ?
நாகாக்கா வெளிநாட்டார் நமக்களித்தார் நாட்டுக்கு நமனிதுவே !


sorry the above rendition does NOT follow கட்டளைக் கலித்துறை rules; here is the corrected version on the same topic:

வேகா வெயிலில் வியர்த்திடுஞ் சூட்டில் விரும்பிடுவோம்
வாகாய் நொடியில் வழியும் நுரையோ டுறிந்திடுவோம்
சாகாமற் சாகவே சாத்தானாய்க் கோக்பெப்ஸி வந்துளவோ?
நாகாக்கா வெள்ளையனின் நஞ்சாம் நாட்டின் நமனிவையே !

2+3+4+2+5=16
2+3+3+3+5=16
3+3+3+3+4=16
3+4+2+2+5=16
Last edited by msm on 20 Feb 2012, 10:19, edited 2 times in total.

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by sridhar_ranga »

கோக்கென்பார் பெப்ஸியென்பார் கூலாய்க் குடியென்பார்
நாக்கில்நீர் ஊறச்செய் காணொளியில் - பார்க்குமோர்
நெஞ்சம் நிறையவே நஞ்சைக் கலந்திடுவார்
வஞ்சத்தில் வீழேல் வலிந்து

Alternatively,

கோக்கென்பார் பெப்ஸியென்பார் கூலாய்க் குடியென்பார்
நாக்கில்நீர் ஊறச்செய் காணொளியில் - தீர்க்குமோ
தாகம் இவையெல்லாம்? தீங்கே தருமன்றோ!
சாகத் துணிந்தால் பருகு

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by sridhar_ranga »

We have all been reading in this thread how the Traditional South Indian wedding feast is losing its character by the mixing of culinary delights from different cuisines - North Indian, even Chinese! Individually these South Indian and North Indian delicacies may taste awesome, but do they necessarily go together?

http://www.rasikas.org/forums/viewtopic.php?f=13&t=18668

More importantly the thread discusses how mixing music of different genres in one performance can become unpalatable, at least to some people. We also come across references to Vanchi, Gossaye or vaNDikkAran, people who enjoy a platter of mixed food items all heaped together and gulped down as a single course.

Elsewhere in this forum, we have come across accounts of how the chaste music of Madurai Mani Iyer had the power to move connoisseurs as well as hoi polloi, how it appealed to even Rickshaw pullers of his days. I may not be wrong in saying that Mani Iyer did not mix genres and stuck to the carnatic paddhati, whether he rendered an elaborate alapana, sang a viruttam, delineated a pallavi or sung the English Note with abandon.

That Mani Iyer could serve such beautiful music (வடிவிசை) in abundant quantity (மண்டத்தந்தார்) that even a vaNDikkAran (Rickshaw Puller) could enjoy, without having to put together a mix-and-match 'vaNDikkAran platter', is the subject of this veNbA:

தண்டமிழ் நாட்டின் தயிர்ச்சோறும் தீஞ்சுவை
கொண்ட வடவர் குருமாவும் கிண்டாமல்
வண்டிக்கா ரர்க்கும் விருந்தாம் வடிவிசையை
மண்டத்தந் தாரே மணி

or a simpler version:

தண்டமிழ் நாட்டின் தயிர்ச்சோறும் தீஞ்சுவை
கொண்ட வடவர் குருமாவும் ஒன்றாகக்
கிண்டாமல் தூயஇசை தந்தார் மதுரமணி
வண்டிக்கா ரர்க்கும் விருந்து

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by msm »

sridhar_rang wrote: தண்டமிழ் நாட்டின் தயிர்ச்சோறும் தீஞ்சுவை
கொண்ட வடவர் குருமாவும் கிண்டாமல்
வண்டிக்கா ரர்க்கும் விருந்தாம் வடிவிசையை
மண்டத்தந் தாரே மணி

or a simpler version:

தண்டமிழ் நாட்டின் தயிர்ச்சோறும் தீஞ்சுவை
கொண்ட வடவர் குருமாவும் ஒன்றாகக்
கிண்டாமல் தூயஇசை தந்தார் மதுரமணி
வண்டிக்கா ரர்க்கும் விருந்து
Good ones Sridhar.

Here is another one on the same topic:

மரபிசையை மாற்றி மலினப் படுத்தி
பிறயிசையும் சற்றே பிசைந்து ~ பரிமாற
உள்ளம் நிறையுணவு ஓரத்தில்; ஊறுகாய்
உள்ளத்(து) இலையின் நடுவில்.

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by msm »

msm wrote:கட்டளைக் கலித்துறை

வேகாத வெய்யிலினில் வேர்த்தொழுகெவ் வயதினரும் விரும்பிடுவர்
நோகாமல் நொடிப்பொழுதில் நுரைவழியக் குழலுறிந்துக் குடித்திடுவர்
சாகாமற் சாகடிக்கும் சைத்தான்.இக் குளிர்பானஞ் சத்துளதோ?
நாகாக்கா வெளிநாட்டார் நமக்களித்தார் நாட்டுக்கு நமனிதுவே !
Sorry to say that this does NOT follow the kattaLai kalitthuRai rules. Needs re-writing. Will get to this later.

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff (in tamil script)

Post by msm »

கட்டளை கலித்துறை rules:

* 5 words in a line (நெடிலடி).
* 4 lines total.
* veNdaLai (வெண்டளை) (ie. veNba rules like மாமுன் நிரை, விளம் முன் நேர், காய் முன் நேர்) rules apply except between last word of a line and the first word of the next line)
most சீர்s (words) are ஈரசைச் சீர்'s (some can be காய் சீர்’s) except the last word in every line which must be a விளங்காய் சீர். (that is either கூவிளங்காய் or கருவிளங்காய்); விளங்காய் சீர் not allowed in other words.
* edhugai (எதுகை) between lines
* monai (மோனை) in each line (1st and 3rd word)
* last syllable should be an ஏ-காரம்.
* Total letters in each line will be 16 or 17

This time a கட்டளை கலித்துறை verse on the same topic being discussed in the other thread:

'மதுரை மணியிசை மாரியால் இன்பம்' உரைத்திடும்நம்
மதுரை மகன்திரு மார்பன் மனத்தினில் ஓர்பதற்றம்
மதுரை மணிஅய்யர் மோர்க்குழம்பி னுள்ளே மாமிசம்போல்
மதுர மரபிசை மாற்றுவ தாலே மணங்கெடுமே!

No. of letters:
3+4+3+2+5=17
3+4+2+4+4=17
3+4+4+2+4=17
3+4+3+2+5=17

*மதுரை மகன்திரு மார்பன் - மதுரையின் மைந்தன் ஸ்ரீதரன் (sridhar rang)

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff (in tamil script)

Post by sridhar_ranga »

Nice kaTTaLaik kalittuRai msm.

But there is one "poruT kuTRam" here ;) - it is not Madurai's sridhar_rang who is eloquently vocal against the mixing of cuisines/ musical genres, but the ferocious tiger-cub (Harimau) from Madras!!!

So, with your permission I would re-write the above as:

'மதுரை மணியிசை மாரியால் இன்பம்' உரைத்திடும்நம்
மதராஸ் மறப்புலி மைந்தன் மனத்தினில் ஓர்பதற்றம்
மதுரை மணிஅய்யர் மோர்க்குழம்பி னுள்ளே மாமிசம்போல்
மதுர மரபிசை மாற்றுவ தாலே மணங்கெடுமே!

Harimau in Malay means Tiger/Panther, especially a cub. Please see this:
http://www.udi.com.my/kuat_hist/index.htm

When it comes to defending the "purity of the carnatic idiom", our Harimau with his biting sarcasm can really come across as a ferocious tiger (மறப்புலி) or its cub (மைந்தன்). And my assumption is that he is a dyed in the wool Madrasi with his penchant for unadulterated tayir saadam and maDiyAna sangItam ;) - hence a "மதராஸ் மறப்புலி மைந்தன்"

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff (in tamil script)

Post by msm »

sure, Sridhar; did Harimau also praised MMI like you did in your verse (which inspired my verse); otherwise the connection from 1st line to 2nd line may become weak... :-)

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by msm »

msm wrote:கட்டளைக் கலித்துறை

வேகாத வெய்யிலினில் வேர்த்தொழுகெவ் வயதினரும் விரும்பிடுவர்
நோகாமல் நொடிப்பொழுதில் நுரைவழியக் குழலுறிந்துக் குடித்திடுவர்
சாகாமற் சாகடிக்கும் சைத்தான்.இக் குளிர்பானஞ் சத்துளதோ?
நாகாக்கா வெளிநாட்டார் நமக்களித்தார் நாட்டுக்கு நமனிதுவே !


Sorry to say that this does NOT follow the kattaLai kalitthuRai rules. Needs re-writing. Will get to this later.
soft-deleted verse in # 223 & re-rendered with proper kattaLai kalitthuRai metre rules.

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff (in tamil script)

Post by sridhar_ranga »

msm wrote:sure, Sridhar; did Harimau also praised MMI like you did in your verse (which inspired my verse); otherwise the connection from 1st line to 2nd line may become weak... :-)
Touche - absolutely valid point!

So here is the Harimau special kaTTaLai kalittuRai then:

இதர இசைவந்(து) இணைவதால் இன்னல் அடைந்திடும்நம்
மதராஸ் மறப்புலி மைந்தன் மனத்தினில் ஓர்பதற்றம்
மலையூர் மணிஅய்யர் மோர்க்குழம்பி னுள்ளே மாமிசம்போல்
தலையா யநம்மிசை தீட்டத னாலே தரங்கெடுமே!


மலையூர் மணிஅய்யர் = 'Mount' Mani Iyer aka 'Mountbatten' Mani Iyer, a top caterer highly in demand during the Madras Music season, rumoured to be one of Harimau's favourites ;)

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff (in tamil script)

Post by msm »

good one Sridhar.

Switching gear here: shouldn't we also go back to what is really music what is art?... etc.- :)
see the topic being discussed in another thread in this forum: about art music, less-art(or is it artless?) music etc. ;-)

Also, worth watching/listening to this very short snippet:
http://www.youtube.com/watch?v=bSqucQ-ec6o

you will see what inspired this veNba below:

நாக்கும் மனமுமே நாதத்தின் மூலமோ
ஆக்கிடும் ஆத்மாவின் ஆற்றலோ ~ தாக்கம்
இதயத்தோ டாழ்ந்து இயல்புணர்வைத் தொட்டால்
இதமன்றோ இன்ப இசை.

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff (in tamil script)

Post by msm »

here is another version for your verse:

இதர இசைவந்(து) இணைவதால் இன்னல் அடைந்திடும்நம்
மதராஸ் மறப்புலி மைந்தன் மனத்தினில் ஓர்பதற்றம்
மதுரை முனியாண்டி மாமிசத் தின்மேலே மோர்க்குழம்பா
மதுர மரபினில் மாற்றமா மலிந்து தாழ்ந்திடுமே!

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff (in tamil script)

Post by sridhar_ranga »

msm wrote: நாக்கும் மனமுமே நாதத்தின் மூலமோ
ஆக்கிடும் ஆத்மாவின் ஆற்றலோ ~ தாக்கம்
இதயத்தோ டாழ்ந்து இயல்புணர்வைத் தொட்டால்
இதமன்றோ இன்ப இசை.
If such bhAva-laden, lustrous music, emerging from nAbhi-hRd-kanTham is focused on devotion to God, it truly melts one's heart.

நாபி இதயம் நலமான கண்டத்தில்
சோபிக் குமிசை சனனம். கருணை
பயக்கும் பரமனை பக்தியால் பாட
மயங்கும் அதில்நம் மனம்

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff (in tamil script)

Post by sridhar_ranga »

A rough translation of Sobhillu saptaswara kriti in veNbA:

சோபிக்கும் ஏழ்சுரமாம் சுந்தரரைச் சேர்மனமே
நாபிக்குள் நெஞ்சமதில் கண்டம்நா நாசிதிகழ்
நால்வேதம் காயத்ரி நற்றவத்தோர் ஊடாகும்
மூலாதா ரம்மேழ் சுரம்


Here is a translation of the tyagayyar kriti by VGV sir: http://thyagaraja-vaibhavam.blogspot.co ... svara.html

The verse has a better flow if we interchange the 1st and 2nd line (corresponding to pallavi and anupallavi of the kriti) as

நாபிக்குள் நெஞ்சமதில் கண்டம்நா நாசிதிகழ்
சோபிக்கும் ஏழ்சுரமாம் சுந்தரரைச் சேர்மனமே
நால்வேதம் காயத்ரி நற்றவத்தோர் ஊடாகும்
மூலாதா ரம்மேழ் சுரம்

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff (in tamil script)

Post by msm »

Good ones Sridhar.

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff (in tamil script)

Post by msm »

Here is another version of gist of Sobhillu Saptaswara:

உந்தி யுள்ளிலும் உளத்திலும் உணர்வொடு
ஒளிர்விடும் உயர்கீதம்
தொண்டை நாசியும் தூயநல் நாவிலும்
சுடர்தருஞ் சுரமேழால்
மந்தி ரம்மறை மாண்புற அமரரும்
மாந்திட மனமேநீ
என்றும் ஏற்புடன் ஏத்திடு த்யாகனின்
இருதய இசைத்தாயை.

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff (in tamil script)

Post by msm »

For those who are grammatically inclined, the above verse is in அறுசீர் ஆசிரிய மண்டிலம் or அறுசீர் ஆசிரிய விருத்தம்; Simply referred to as: அறுசீர் விருத்தம் or அறுசீர் மண்டிலம்.

The rules are:
4 sentences (அடி’s) of 6 words (சீர்’s) each.
Edhugai rules between sentences and mOnai rules between (at least some) siir's within a sentence apply.
This particular version of viruttam given above has, by normal convention, sentences that are wrapped after four siir's to write a sentence in two lines.
The siir's have following pattern:
First siir (in every line) will be a குறில் ஈற்று மா [that is, it can be either தேமா or புளிமா but the last syllable (’மா’) should be a kuRil (or short sounding syllable) ex. உந்தி, தொண்டை, மந்தி, என்றும்]
Second siir should be கூவிளம் [ex.: உள்ளிலும், நாசியும், ரம்மறை, ஏற்புடன்].
Third, fourth & fifth can be either one of the விளச்சீர்'s [ie., either கூவிளம் or கருவிளம் eg: மாண்புற, த்யாகனின், அமரரும், இருதய etc.]
Last (sixth) siir should be மாங்காய்ச் சீர் [ie., either தேமாங்காய் or புளிமாங்காய்]

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff (in tamil script)

Post by sridhar_ranga »

msm wrote:Here is another version of gist of Sobhillu Saptaswara:

உந்தி யுள்ளிலும் உளத்திலும் உணர்வொடு
ஒளிர்விடும் உயர்கீதம்
தொண்டை நாசியும் தூயநல் நாவிலும்
சுடர்தருஞ் சுரமேழால்
மந்தி ரம்மறை மாண்புற அமரரும்
மாந்திட மனமேநீ
என்றும் ஏற்புடன் ஏத்திடு த்யாகனின்
இருதய இசைத்தாயை.
Excellent msm! The choice of native Tamil words (உந்தி, தொண்டை instead of nAbhi, kaNTham) enhances the beauty of the verse. You have brought in sadguru's mudra as well.

Let's hope for the early return of our fellow poets & cheer leaders CML, Pon Bhairavi et al.

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff (in tamil script)

Post by msm »

msm wrote:கட்டளை கலித்துறை rules:

* 5 words in a line (நெடிலடி).
* 4 lines total.
* veNdaLai (வெண்டளை) (ie. veNba rules like மாமுன் நிரை, விளம் முன் நேர், காய் முன் நேர்) rules apply except between last word of a line and the first word of the next line)
most சீர்s (words) are ஈரசைச் சீர்'s (some can be காய் சீர்’s) except the last word in every line which must be a விளங்காய் சீர். (that is either கூவிளங்காய் or கருவிளங்காய்); விளங்காய் சீர் not allowed in other words.
* edhugai (எதுகை) between lines
* monai (மோனை) in each line (1st and 3rd word)
* last syllable should be an ஏ-காரம்.
* Total letters in each line will be 16 or 17
one more kattaLai'k kalitthuRAi on another social theme:

தாய்தந்தை சண்டை தருந்துயர் தாக்கத் தவித்திடுவார்
பாய்மரங் கெட்ட படகெனப் பாவம் பலசிறுவர்
”பேயென்” றவனும் ”பிசாசென்” றவளும் நிதங்குலைப்பர்
நாயினுங் கீழிவர் நஞ்சிணை நெஞ்சில் குமைபவரே!


3+2+4+2+5=16
3+2+4+2+5=16
2+3+3+3+5=16
3+3+3+2+5=16

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff (in tamil script)

Post by sridhar_ranga »

This veNbA uses சிலேடை அணி (SlEsha / double entendre) to praise the virtues of two of our members, Ponbhairavi and rshankar (Ravi Shankar or Ravi):

தகையாய் மொழிபெயர்ப்பார் துள்ளும் கலைஞர்க்கு
நகையால் விரு(ந்)தளிப்பார் நாமும் திகைக்கப்
பணிவாய்ப் பகிர்ந்தளிப்பார் பாடல வைகொண்ட
பொன்பை ரவிப்பு லவர்

tagaiyAy mozhipeyarppAr tuLLum kalaijnarkku
nagaiyAl viru(n)daLippAr nAmum tigaikkap
paNivAy pagirndaLippAr pADal.a vai.koNDa
ponbai ravi.ppu lavar

Meaning 1: (Ponbhairavi)

The poet Ponbhairavi (ponbairavippulavar) translates (mozhipeyarppAr) in an excellent way (tagaiyAy), but to artistes (kalaijnarkku) who act up / misbehave (tuLLum), he confers funny/humourous titles (nagaiyAl virudaLippAr).

To our amazement (nAmum tigaikka - said from the view point of aspiring artistes who wish to make a break), he provides (pagirndaLippAr) employment (paNi) and an opening (vAY) as an owner (koNDa) of a music sabha (pADal avai).

Meaning 2: (rshankar)

Ravi, the scholar (ravippulavar), translates (mozhipeyarppAr) in an excellent way (tagaiyAy), and for dance artistes (tuLLUm kalaijnarkku) he provides a feast (virundaLippAr - by way of his word by word translation of kritis used in dance) with cheerfulness (nagaiyAl).

To our amazement (nAmum tigaikka - said from the view point of all beneficiaries of his translations), he shares (pagirndaLippAr) with humility (paNivAy) a bag of gold (ponpai) containing (koNDa) (translated) songs (pADal avai).

arasi
Posts: 16789
Joined: 22 Jun 2006, 09:30

Re: If you are a venpA buff (in tamil script)

Post by arasi »

Sridhar,
AhA!

SrI (peN)-ai dharitta viTTuNuvum magizha
nam Sridharanum ponnAip paN Seidu
paNbuDai naNbarkku aNivippAn!
vAzhga avan pugazh! vaLarga avan kavi!
Last edited by arasi on 27 Feb 2012, 09:02, edited 3 times in total.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff (in tamil script)

Post by cmlover »

Amazing Sridhar!
I declare myself well and climb on my 'kavithai puravi' (poetic horse)!

Here is a slight modification which compliments our Arasi as well!

தகையாய் மொழிபெயர்ப்பார் துள்ளும் கலைஞர்க்கு
நகையாய் விரு(ந்)தளிப்பார் நாமும் திகைக்கப்
பணிவாய்ப் பதிலளிப்பார் பாடல வைகொண்ட
பொன்பை ரவியன்ன அரசிருக்கையார்.

Commentary (as it relates to Arasi):

தகையாய் மொழிபெயர்ப்பார் = Note her recent translation here of Bharathi
துள்ளும் கலைஞர்க்கு
நகையாய் விரு(ந்)தளிப்பார் = To the upcoming artistes she provides scintilating kritis (நகை) figurarively and literally she entertains many artistes at her residence at Bangalore...
நாமும் திகைக்கப்
பணிவாய்ப் பதிலளிப்பார் = This forum and her top-ranking contextual post-count is an ample proof..
பாடல வைகொண்ட
பொன்பை = The CD release functions that she has organized lavishing her personal funds...
ரவியன்ன = like the blazing Sun
அரசிருக்கையார் = The one who stays (rules) this forum as 'Arasi'.

For the others
அன்ன அரசிருக்கையார் = who sit on the Royal throne adorned like a Swan.

vasanthakokilam
Posts: 10956
Joined: 03 Feb 2010, 00:01

Re: If you are a venpA buff (in tamil script)

Post by vasanthakokilam »

Sridhar: Both content and method are excellent. Well done in honoring the services of Ravi and Ponbhairavi in one shot.

arasi
Posts: 16789
Joined: 22 Jun 2006, 09:30

Re: If you are a venpA buff (in tamil script)

Post by arasi »

piRavi tarum nOi kaDal nIndi vandAr
nammiDai anbil niRaindiruppAr--
nammai enRum pugazhndiruppAr

pADal pittOr puRam--pakkam ninRu
bAlaraiyum nammaiyumE UkkiDuvAr
karam koDuttiDuvAr, uyarththiDuvAr

aRinda nAL mudalAi anbE aLiththiDuvAr
aRivu miga paDaiththa ivvanbar--AnAlum
aRiyAdu tannai maRandE vIN vambil
agappaTTu viZhiththiDuvAr, vizhippuDaiya
aRignyarAm nam karnADaga iSai virumbi ;)

The twinkle in your eye is seen miles away!
So, guard your health and your words too,
When they take a flight of fancy--belying
Your heart which can cherish us all and more ;)
A votre sante'

rshankar
Posts: 13754
Joined: 02 Feb 2010, 22:26

Re: If you are a venpA buff (in tamil script)

Post by rshankar »

Sridhar, I am amazed...fantastic, and thanks! I enjoyed the flavor (Suvai) of your writing, where each word is a precious ornament (nagai)....

PUNARVASU
Posts: 2498
Joined: 06 Feb 2010, 05:42

Re: If you are a venpA buff (in tamil script)

Post by PUNARVASU »

Sridhar, what a kavithai! Brought CML rushing back amidst us. Yes our Rasikas Forum is such a close knit 'family' group and the the enthusiasm is infectious. Long Live Rasikas Forum.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff (in tamil script)

Post by cmlover »

This is a generic tribute to all those poets contributing here and in particular to dear sridhar_rang

தகையாய் கவி படைப்பார் துள்ளும் ரஸிகருக்கு
நகையாம் விரு(ந்)தளிப்பார் நாமும் திகைக்கப்
பணிவாய்ப் பகிர்ந்தளிப்பார் பாடல வைகொண்ட
ஸ்ரீ தரங்க கவிப்புலவர்காள்!
தகையாய் = fitting
துள்ளும் = eager
நகையாம் = ornamental
ஸ்ரீ தரங்க கவிப்புலவர்கள் = those blessed poets who use this auspicious Forum as the plank (தரங்கம்/அரங்கம்)
(in particular I want to thank Sridhar for jolting me out of my painful reverie!)

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff (in tamil script)

Post by sridhar_ranga »

A few veNbAs on the queen of our forum, Arasi:

Arasi - kaNNan's favorite composer (each line starts with words of an Arasi kriti):

இன்று வருவானோ இன்ப இசைகேட்க
எங்குபார்த் தாலும் எழுந்தருள் கண்ணனும்
ஆடிப்பா டித்தினமே அன்பரசி நல்லிசை
நாடிவந்தேன் நானென வே?

Arasi the peacemaker to all Rasikas:

இரசிகர்கள் கூடும் இணையக் குழுவில்
உரசல்கள் நேரும் உணர்ச்சிப் பொழுதில்
அரசியை அன்றி அமைதியைக் காக்க
விரசாய் வருவார் எவர்?

Arasi the cultural ambassador/ patron:

வீரவ நல்லூரின் வைரமிவர் வாஞ்சையாய்
வேறொரு நாட்டில் வாழ்ந்தாலும் சோராது
பாரதப் பண்பாட்டின் பாட்டின் பரதத்தின்
வேருக்கு நீர்வார்ப் பவர்

Last line can alternatively be: பேரதைப் பேணு பவர்

Post Reply