If you are a venpA buff (in tamil script)

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by msm »

sridhar_rang wrote: தண்டமிழ் நாட்டின் தயிர்ச்சோறும் தீஞ்சுவை
கொண்ட வடவர் குருமாவும் கிண்டாமல்
வண்டிக்கா ரர்க்கும் விருந்தாம் வடிவிசையை
மண்டத்தந் தாரே மணி

or a simpler version:

தண்டமிழ் நாட்டின் தயிர்ச்சோறும் தீஞ்சுவை
கொண்ட வடவர் குருமாவும் ஒன்றாகக்
கிண்டாமல் தூயஇசை தந்தார் மதுரமணி
வண்டிக்கா ரர்க்கும் விருந்து
Good ones Sridhar.

Here is another one on the same topic:

மரபிசையை மாற்றி மலினப் படுத்தி
பிறயிசையும் சற்றே பிசைந்து ~ பரிமாற
உள்ளம் நிறையுணவு ஓரத்தில்; ஊறுகாய்
உள்ளத்(து) இலையின் நடுவில்.

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by msm »

msm wrote:கட்டளைக் கலித்துறை

வேகாத வெய்யிலினில் வேர்த்தொழுகெவ் வயதினரும் விரும்பிடுவர்
நோகாமல் நொடிப்பொழுதில் நுரைவழியக் குழலுறிந்துக் குடித்திடுவர்
சாகாமற் சாகடிக்கும் சைத்தான்.இக் குளிர்பானஞ் சத்துளதோ?
நாகாக்கா வெளிநாட்டார் நமக்களித்தார் நாட்டுக்கு நமனிதுவே !
Sorry to say that this does NOT follow the kattaLai kalitthuRai rules. Needs re-writing. Will get to this later.

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff (in tamil script)

Post by msm »

கட்டளை கலித்துறை rules:

* 5 words in a line (நெடிலடி).
* 4 lines total.
* veNdaLai (வெண்டளை) (ie. veNba rules like மாமுன் நிரை, விளம் முன் நேர், காய் முன் நேர்) rules apply except between last word of a line and the first word of the next line)
most சீர்s (words) are ஈரசைச் சீர்'s (some can be காய் சீர்’s) except the last word in every line which must be a விளங்காய் சீர். (that is either கூவிளங்காய் or கருவிளங்காய்); விளங்காய் சீர் not allowed in other words.
* edhugai (எதுகை) between lines
* monai (மோனை) in each line (1st and 3rd word)
* last syllable should be an ஏ-காரம்.
* Total letters in each line will be 16 or 17

This time a கட்டளை கலித்துறை verse on the same topic being discussed in the other thread:

'மதுரை மணியிசை மாரியால் இன்பம்' உரைத்திடும்நம்
மதுரை மகன்திரு மார்பன் மனத்தினில் ஓர்பதற்றம்
மதுரை மணிஅய்யர் மோர்க்குழம்பி னுள்ளே மாமிசம்போல்
மதுர மரபிசை மாற்றுவ தாலே மணங்கெடுமே!

No. of letters:
3+4+3+2+5=17
3+4+2+4+4=17
3+4+4+2+4=17
3+4+3+2+5=17

*மதுரை மகன்திரு மார்பன் - மதுரையின் மைந்தன் ஸ்ரீதரன் (sridhar rang)

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff (in tamil script)

Post by sridhar_ranga »

Nice kaTTaLaik kalittuRai msm.

But there is one "poruT kuTRam" here ;) - it is not Madurai's sridhar_rang who is eloquently vocal against the mixing of cuisines/ musical genres, but the ferocious tiger-cub (Harimau) from Madras!!!

So, with your permission I would re-write the above as:

'மதுரை மணியிசை மாரியால் இன்பம்' உரைத்திடும்நம்
மதராஸ் மறப்புலி மைந்தன் மனத்தினில் ஓர்பதற்றம்
மதுரை மணிஅய்யர் மோர்க்குழம்பி னுள்ளே மாமிசம்போல்
மதுர மரபிசை மாற்றுவ தாலே மணங்கெடுமே!

Harimau in Malay means Tiger/Panther, especially a cub. Please see this:
http://www.udi.com.my/kuat_hist/index.htm

When it comes to defending the "purity of the carnatic idiom", our Harimau with his biting sarcasm can really come across as a ferocious tiger (மறப்புலி) or its cub (மைந்தன்). And my assumption is that he is a dyed in the wool Madrasi with his penchant for unadulterated tayir saadam and maDiyAna sangItam ;) - hence a "மதராஸ் மறப்புலி மைந்தன்"

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff (in tamil script)

Post by msm »

sure, Sridhar; did Harimau also praised MMI like you did in your verse (which inspired my verse); otherwise the connection from 1st line to 2nd line may become weak... :-)

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by msm »

msm wrote:கட்டளைக் கலித்துறை

வேகாத வெய்யிலினில் வேர்த்தொழுகெவ் வயதினரும் விரும்பிடுவர்
நோகாமல் நொடிப்பொழுதில் நுரைவழியக் குழலுறிந்துக் குடித்திடுவர்
சாகாமற் சாகடிக்கும் சைத்தான்.இக் குளிர்பானஞ் சத்துளதோ?
நாகாக்கா வெளிநாட்டார் நமக்களித்தார் நாட்டுக்கு நமனிதுவே !


Sorry to say that this does NOT follow the kattaLai kalitthuRai rules. Needs re-writing. Will get to this later.
soft-deleted verse in # 223 & re-rendered with proper kattaLai kalitthuRai metre rules.

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff (in tamil script)

Post by sridhar_ranga »

msm wrote:sure, Sridhar; did Harimau also praised MMI like you did in your verse (which inspired my verse); otherwise the connection from 1st line to 2nd line may become weak... :-)
Touche - absolutely valid point!

So here is the Harimau special kaTTaLai kalittuRai then:

இதர இசைவந்(து) இணைவதால் இன்னல் அடைந்திடும்நம்
மதராஸ் மறப்புலி மைந்தன் மனத்தினில் ஓர்பதற்றம்
மலையூர் மணிஅய்யர் மோர்க்குழம்பி னுள்ளே மாமிசம்போல்
தலையா யநம்மிசை தீட்டத னாலே தரங்கெடுமே!


மலையூர் மணிஅய்யர் = 'Mount' Mani Iyer aka 'Mountbatten' Mani Iyer, a top caterer highly in demand during the Madras Music season, rumoured to be one of Harimau's favourites ;)

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff (in tamil script)

Post by msm »

good one Sridhar.

Switching gear here: shouldn't we also go back to what is really music what is art?... etc.- :)
see the topic being discussed in another thread in this forum: about art music, less-art(or is it artless?) music etc. ;-)

Also, worth watching/listening to this very short snippet:
http://www.youtube.com/watch?v=bSqucQ-ec6o

you will see what inspired this veNba below:

நாக்கும் மனமுமே நாதத்தின் மூலமோ
ஆக்கிடும் ஆத்மாவின் ஆற்றலோ ~ தாக்கம்
இதயத்தோ டாழ்ந்து இயல்புணர்வைத் தொட்டால்
இதமன்றோ இன்ப இசை.

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff (in tamil script)

Post by msm »

here is another version for your verse:

இதர இசைவந்(து) இணைவதால் இன்னல் அடைந்திடும்நம்
மதராஸ் மறப்புலி மைந்தன் மனத்தினில் ஓர்பதற்றம்
மதுரை முனியாண்டி மாமிசத் தின்மேலே மோர்க்குழம்பா
மதுர மரபினில் மாற்றமா மலிந்து தாழ்ந்திடுமே!

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff (in tamil script)

Post by sridhar_ranga »

msm wrote: நாக்கும் மனமுமே நாதத்தின் மூலமோ
ஆக்கிடும் ஆத்மாவின் ஆற்றலோ ~ தாக்கம்
இதயத்தோ டாழ்ந்து இயல்புணர்வைத் தொட்டால்
இதமன்றோ இன்ப இசை.
If such bhAva-laden, lustrous music, emerging from nAbhi-hRd-kanTham is focused on devotion to God, it truly melts one's heart.

நாபி இதயம் நலமான கண்டத்தில்
சோபிக் குமிசை சனனம். கருணை
பயக்கும் பரமனை பக்தியால் பாட
மயங்கும் அதில்நம் மனம்

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff (in tamil script)

Post by sridhar_ranga »

A rough translation of Sobhillu saptaswara kriti in veNbA:

சோபிக்கும் ஏழ்சுரமாம் சுந்தரரைச் சேர்மனமே
நாபிக்குள் நெஞ்சமதில் கண்டம்நா நாசிதிகழ்
நால்வேதம் காயத்ரி நற்றவத்தோர் ஊடாகும்
மூலாதா ரம்மேழ் சுரம்


Here is a translation of the tyagayyar kriti by VGV sir: http://thyagaraja-vaibhavam.blogspot.co ... svara.html

The verse has a better flow if we interchange the 1st and 2nd line (corresponding to pallavi and anupallavi of the kriti) as

நாபிக்குள் நெஞ்சமதில் கண்டம்நா நாசிதிகழ்
சோபிக்கும் ஏழ்சுரமாம் சுந்தரரைச் சேர்மனமே
நால்வேதம் காயத்ரி நற்றவத்தோர் ஊடாகும்
மூலாதா ரம்மேழ் சுரம்

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff (in tamil script)

Post by msm »

Good ones Sridhar.

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff (in tamil script)

Post by msm »

Here is another version of gist of Sobhillu Saptaswara:

உந்தி யுள்ளிலும் உளத்திலும் உணர்வொடு
ஒளிர்விடும் உயர்கீதம்
தொண்டை நாசியும் தூயநல் நாவிலும்
சுடர்தருஞ் சுரமேழால்
மந்தி ரம்மறை மாண்புற அமரரும்
மாந்திட மனமேநீ
என்றும் ஏற்புடன் ஏத்திடு த்யாகனின்
இருதய இசைத்தாயை.

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff (in tamil script)

Post by msm »

For those who are grammatically inclined, the above verse is in அறுசீர் ஆசிரிய மண்டிலம் or அறுசீர் ஆசிரிய விருத்தம்; Simply referred to as: அறுசீர் விருத்தம் or அறுசீர் மண்டிலம்.

The rules are:
4 sentences (அடி’s) of 6 words (சீர்’s) each.
Edhugai rules between sentences and mOnai rules between (at least some) siir's within a sentence apply.
This particular version of viruttam given above has, by normal convention, sentences that are wrapped after four siir's to write a sentence in two lines.
The siir's have following pattern:
First siir (in every line) will be a குறில் ஈற்று மா [that is, it can be either தேமா or புளிமா but the last syllable (’மா’) should be a kuRil (or short sounding syllable) ex. உந்தி, தொண்டை, மந்தி, என்றும்]
Second siir should be கூவிளம் [ex.: உள்ளிலும், நாசியும், ரம்மறை, ஏற்புடன்].
Third, fourth & fifth can be either one of the விளச்சீர்'s [ie., either கூவிளம் or கருவிளம் eg: மாண்புற, த்யாகனின், அமரரும், இருதய etc.]
Last (sixth) siir should be மாங்காய்ச் சீர் [ie., either தேமாங்காய் or புளிமாங்காய்]

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff (in tamil script)

Post by sridhar_ranga »

msm wrote:Here is another version of gist of Sobhillu Saptaswara:

உந்தி யுள்ளிலும் உளத்திலும் உணர்வொடு
ஒளிர்விடும் உயர்கீதம்
தொண்டை நாசியும் தூயநல் நாவிலும்
சுடர்தருஞ் சுரமேழால்
மந்தி ரம்மறை மாண்புற அமரரும்
மாந்திட மனமேநீ
என்றும் ஏற்புடன் ஏத்திடு த்யாகனின்
இருதய இசைத்தாயை.
Excellent msm! The choice of native Tamil words (உந்தி, தொண்டை instead of nAbhi, kaNTham) enhances the beauty of the verse. You have brought in sadguru's mudra as well.

Let's hope for the early return of our fellow poets & cheer leaders CML, Pon Bhairavi et al.

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff (in tamil script)

Post by msm »

msm wrote:கட்டளை கலித்துறை rules:

* 5 words in a line (நெடிலடி).
* 4 lines total.
* veNdaLai (வெண்டளை) (ie. veNba rules like மாமுன் நிரை, விளம் முன் நேர், காய் முன் நேர்) rules apply except between last word of a line and the first word of the next line)
most சீர்s (words) are ஈரசைச் சீர்'s (some can be காய் சீர்’s) except the last word in every line which must be a விளங்காய் சீர். (that is either கூவிளங்காய் or கருவிளங்காய்); விளங்காய் சீர் not allowed in other words.
* edhugai (எதுகை) between lines
* monai (மோனை) in each line (1st and 3rd word)
* last syllable should be an ஏ-காரம்.
* Total letters in each line will be 16 or 17
one more kattaLai'k kalitthuRAi on another social theme:

தாய்தந்தை சண்டை தருந்துயர் தாக்கத் தவித்திடுவார்
பாய்மரங் கெட்ட படகெனப் பாவம் பலசிறுவர்
”பேயென்” றவனும் ”பிசாசென்” றவளும் நிதங்குலைப்பர்
நாயினுங் கீழிவர் நஞ்சிணை நெஞ்சில் குமைபவரே!


3+2+4+2+5=16
3+2+4+2+5=16
2+3+3+3+5=16
3+3+3+2+5=16

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff (in tamil script)

Post by sridhar_ranga »

This veNbA uses சிலேடை அணி (SlEsha / double entendre) to praise the virtues of two of our members, Ponbhairavi and rshankar (Ravi Shankar or Ravi):

தகையாய் மொழிபெயர்ப்பார் துள்ளும் கலைஞர்க்கு
நகையால் விரு(ந்)தளிப்பார் நாமும் திகைக்கப்
பணிவாய்ப் பகிர்ந்தளிப்பார் பாடல வைகொண்ட
பொன்பை ரவிப்பு லவர்

tagaiyAy mozhipeyarppAr tuLLum kalaijnarkku
nagaiyAl viru(n)daLippAr nAmum tigaikkap
paNivAy pagirndaLippAr pADal.a vai.koNDa
ponbai ravi.ppu lavar

Meaning 1: (Ponbhairavi)

The poet Ponbhairavi (ponbairavippulavar) translates (mozhipeyarppAr) in an excellent way (tagaiyAy), but to artistes (kalaijnarkku) who act up / misbehave (tuLLum), he confers funny/humourous titles (nagaiyAl virudaLippAr).

To our amazement (nAmum tigaikka - said from the view point of aspiring artistes who wish to make a break), he provides (pagirndaLippAr) employment (paNi) and an opening (vAY) as an owner (koNDa) of a music sabha (pADal avai).

Meaning 2: (rshankar)

Ravi, the scholar (ravippulavar), translates (mozhipeyarppAr) in an excellent way (tagaiyAy), and for dance artistes (tuLLUm kalaijnarkku) he provides a feast (virundaLippAr - by way of his word by word translation of kritis used in dance) with cheerfulness (nagaiyAl).

To our amazement (nAmum tigaikka - said from the view point of all beneficiaries of his translations), he shares (pagirndaLippAr) with humility (paNivAy) a bag of gold (ponpai) containing (koNDa) (translated) songs (pADal avai).

arasi
Posts: 16789
Joined: 22 Jun 2006, 09:30

Re: If you are a venpA buff (in tamil script)

Post by arasi »

Sridhar,
AhA!

SrI (peN)-ai dharitta viTTuNuvum magizha
nam Sridharanum ponnAip paN Seidu
paNbuDai naNbarkku aNivippAn!
vAzhga avan pugazh! vaLarga avan kavi!
Last edited by arasi on 27 Feb 2012, 09:02, edited 3 times in total.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff (in tamil script)

Post by cmlover »

Amazing Sridhar!
I declare myself well and climb on my 'kavithai puravi' (poetic horse)!

Here is a slight modification which compliments our Arasi as well!

தகையாய் மொழிபெயர்ப்பார் துள்ளும் கலைஞர்க்கு
நகையாய் விரு(ந்)தளிப்பார் நாமும் திகைக்கப்
பணிவாய்ப் பதிலளிப்பார் பாடல வைகொண்ட
பொன்பை ரவியன்ன அரசிருக்கையார்.

Commentary (as it relates to Arasi):

தகையாய் மொழிபெயர்ப்பார் = Note her recent translation here of Bharathi
துள்ளும் கலைஞர்க்கு
நகையாய் விரு(ந்)தளிப்பார் = To the upcoming artistes she provides scintilating kritis (நகை) figurarively and literally she entertains many artistes at her residence at Bangalore...
நாமும் திகைக்கப்
பணிவாய்ப் பதிலளிப்பார் = This forum and her top-ranking contextual post-count is an ample proof..
பாடல வைகொண்ட
பொன்பை = The CD release functions that she has organized lavishing her personal funds...
ரவியன்ன = like the blazing Sun
அரசிருக்கையார் = The one who stays (rules) this forum as 'Arasi'.

For the others
அன்ன அரசிருக்கையார் = who sit on the Royal throne adorned like a Swan.

vasanthakokilam
Posts: 10956
Joined: 03 Feb 2010, 00:01

Re: If you are a venpA buff (in tamil script)

Post by vasanthakokilam »

Sridhar: Both content and method are excellent. Well done in honoring the services of Ravi and Ponbhairavi in one shot.

arasi
Posts: 16789
Joined: 22 Jun 2006, 09:30

Re: If you are a venpA buff (in tamil script)

Post by arasi »

piRavi tarum nOi kaDal nIndi vandAr
nammiDai anbil niRaindiruppAr--
nammai enRum pugazhndiruppAr

pADal pittOr puRam--pakkam ninRu
bAlaraiyum nammaiyumE UkkiDuvAr
karam koDuttiDuvAr, uyarththiDuvAr

aRinda nAL mudalAi anbE aLiththiDuvAr
aRivu miga paDaiththa ivvanbar--AnAlum
aRiyAdu tannai maRandE vIN vambil
agappaTTu viZhiththiDuvAr, vizhippuDaiya
aRignyarAm nam karnADaga iSai virumbi ;)

The twinkle in your eye is seen miles away!
So, guard your health and your words too,
When they take a flight of fancy--belying
Your heart which can cherish us all and more ;)
A votre sante'

rshankar
Posts: 13754
Joined: 02 Feb 2010, 22:26

Re: If you are a venpA buff (in tamil script)

Post by rshankar »

Sridhar, I am amazed...fantastic, and thanks! I enjoyed the flavor (Suvai) of your writing, where each word is a precious ornament (nagai)....

PUNARVASU
Posts: 2498
Joined: 06 Feb 2010, 05:42

Re: If you are a venpA buff (in tamil script)

Post by PUNARVASU »

Sridhar, what a kavithai! Brought CML rushing back amidst us. Yes our Rasikas Forum is such a close knit 'family' group and the the enthusiasm is infectious. Long Live Rasikas Forum.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff (in tamil script)

Post by cmlover »

This is a generic tribute to all those poets contributing here and in particular to dear sridhar_rang

தகையாய் கவி படைப்பார் துள்ளும் ரஸிகருக்கு
நகையாம் விரு(ந்)தளிப்பார் நாமும் திகைக்கப்
பணிவாய்ப் பகிர்ந்தளிப்பார் பாடல வைகொண்ட
ஸ்ரீ தரங்க கவிப்புலவர்காள்!
தகையாய் = fitting
துள்ளும் = eager
நகையாம் = ornamental
ஸ்ரீ தரங்க கவிப்புலவர்கள் = those blessed poets who use this auspicious Forum as the plank (தரங்கம்/அரங்கம்)
(in particular I want to thank Sridhar for jolting me out of my painful reverie!)

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff (in tamil script)

Post by sridhar_ranga »

A few veNbAs on the queen of our forum, Arasi:

Arasi - kaNNan's favorite composer (each line starts with words of an Arasi kriti):

இன்று வருவானோ இன்ப இசைகேட்க
எங்குபார்த் தாலும் எழுந்தருள் கண்ணனும்
ஆடிப்பா டித்தினமே அன்பரசி நல்லிசை
நாடிவந்தேன் நானென வே?

Arasi the peacemaker to all Rasikas:

இரசிகர்கள் கூடும் இணையக் குழுவில்
உரசல்கள் நேரும் உணர்ச்சிப் பொழுதில்
அரசியை அன்றி அமைதியைக் காக்க
விரசாய் வருவார் எவர்?

Arasi the cultural ambassador/ patron:

வீரவ நல்லூரின் வைரமிவர் வாஞ்சையாய்
வேறொரு நாட்டில் வாழ்ந்தாலும் சோராது
பாரதப் பண்பாட்டின் பாட்டின் பரதத்தின்
வேருக்கு நீர்வார்ப் பவர்

Last line can alternatively be: பேரதைப் பேணு பவர்

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff (in tamil script)

Post by cmlover »

பலே பலே!

arasi
Posts: 16789
Joined: 22 Jun 2006, 09:30

Re: If you are a venpA buff (in tamil script)

Post by arasi »

Heavy is the head that wears the crown--
talai ganam vandadO?

malar mAlaiyum ganattiDumO--
pulavar tarum pugazhth thoDarAl?

vairam enRIr--appaDiyOr diDamAna
manam vENDum,vairam pArATTA
idayap padam vENDum--
iRaivan padam vENDum--adil
iNaidal enRum vENDum-pinnum
inbamigu naNBar anbu enRum vENDum ;)

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff (in tamil script)

Post by cmlover »

inbamigu naNBar anbu enRum vENDum
...you have that in plenty.
"VENDUTHAL VENDAAMAI ILANADI CHERNTHAARKKU
YAANDUM IDUMPAI ILA !"

rshankar
Posts: 13754
Joined: 02 Feb 2010, 22:26

Re: If you are a venpA buff (in tamil script)

Post by rshankar »

This thread has turned into a 'full-bench' concert, with each player urging the other to reach greater heights! Fantastic!!

kaumaaram
Posts: 380
Joined: 14 Oct 2005, 17:38

Re: If you are a venpA buff (in tamil script)

Post by kaumaaram »

Thanks to all for complying with this small man's request.
May my Lord Shanmukha shower His blessings to continue your journey of compositions in different forms.

Kaumaaram

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff (in tamil script)

Post by sridhar_ranga »

Praise Shanmukha, who taught how to sift the unripe (worldly) from ripe (spiritual), who helped destroy the ego/ vanity of avvaiyAr, a learned person (சிட்டர்) (& can help destroy the vanity of pretenders to knowledge/ scholarship as a guru does to a disciple/student - சிட்டர்)

சுட்டபழம் ஒன்று சுடாப்பழம் வேறொன்று
பட்டறிவாய் என்று பொருள்தந்து - சிட்டருக்கே
இப்பிறப்பில் வீண்கர்வம் இல்லாமல் செய்தவோர்
சுப்ரமண்ய மூர்த்தியைச் சொல்லு

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff (in tamil script)

Post by sridhar_ranga »

Another SlEDai inspired by kavi kALamEgham as discussed in this thread:
http://www.rasikas.org/forums/viewtopic. ... 74#p217668

நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நீள்சட்டை யுள்ளிருக்கும்
வெஞ்சினத்துப் பற்பட்டால் மீளாது - நெஞ்சகம்
வேம்பாய்க் கசந்திட வாட்டிடும் வெஞ்சினப்
பாம்போ விமர்சகன் பேனா?

The pAmbu/ snake part is easy to understand.

The poison tipped pen in the long coat pocket of the art critic is the other object described.
தோலுரிக்கும் = strips the artiste naked with its sharp criticism
வெஞ்சினத்துப் பல் = the poison (angry) tip/nib of the critic's pen
Last edited by sridhar_ranga on 01 Mar 2012, 14:20, edited 3 times in total.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff (in tamil script)

Post by cmlover »

Wah re wah!

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff (in tamil script)

Post by cmlover »

On Lord Siva
நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நங்கை முடிமேலிருக்கும்
வெஞ்சினத்துப் புறப்பட்டால் மீளாது - வஞ்சியவள்
கெஞ்சியதால் மீண்டான் காமனுமே நாமவனை
அஞ்சினால் தொழுதால் நலம்.

நஞ்சிருக்கும் = விடமுண்ட கண்டன்
தோலுரி = புலித்தோல்
நங்கை = கங்கை
வஞ்சி = ரதி
அஞ்சினால் தொழுதால் = பயத்துடன் வழிபட்டால்/ பஞ்சாட்சரத்தால் துதித்தால்

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: If you are a venpA buff (in tamil script)

Post by Ponbhairavi »

Sridhar_rang's sledai:
வஞ்சக பாம்போ ? may be கொஞ்சிடா பாம்பே
கொஞ்சிடா = not indulging in flattery

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff (in tamil script)

Post by sridhar_ranga »

I guess the critic of the critic comes across as far harsher than the critic himself :)

I am replacing the word வஞ்சக with a less virulent வெஞ்சின - hope that sounds OK.

My attempts at poetry are just for fun, and are meant to be harmless :) - often times I try fitting a few right sounding words (for edugai and monai) and the meaning of the verse ends up very different from what I originally intended!

ganeshkant
Posts: 963
Joined: 05 Feb 2010, 11:59

Re: If you are a venpA buff (in tamil script)

Post by ganeshkant »

kalviaRivillAdhavan nAvilE
kALi vandhu thAnezhudhi
kALidAsan AnadhupOl - en
thalayilum varaivAyO - meeLAthuyartheera.
Last edited by ganeshkant on 01 Mar 2012, 17:47, edited 1 time in total.

anandasangeetham
Posts: 177
Joined: 06 Feb 2008, 16:24

Re: If you are a venpA buff (in tamil script)

Post by anandasangeetham »

I once heard from a poet.....avan kalviarivilladhavan..to which another replied yes avan kalvi arivil adhavan....

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff (in tamil script)

Post by cmlover »

similarly அதுவேசரி also அது வேசரி (கழுதை)
Recently from a Vijay movie
அப்பாவையும் அக்காளையும் கல்யாணம் செய்துகொண்டார்கள் !
It is actually
(அப் பாவையும் அக் காளையும் கல்யாணம் செய்துகொண்டார்கள்)
Can you post other such 'oxymoron' expressions in Tamil that have
different interpretations?
Any with triple or quadruple interpretations?

ganeshkant
Posts: 963
Joined: 05 Feb 2010, 11:59

Re: If you are a venpA buff (in tamil script)

Post by ganeshkant »

cml,

I remember this slEDai by none other than ki.vA.jA.When his first salary was ten rupees a month he accepted that by by saying 'maasam paththu - maa sampathu'.Probably 10 Rs.had such a value in the late 20's.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff (in tamil script)

Post by cmlover »

Athu patthu maa (great ten in those days) or
athu patthumaa? (will it be enough?) ...

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff (in tamil script)

Post by cmlover »

Here is one from Tamil Ilakkiyam
(versification mine!)
தங்கச்சி வந்தியாவென விளம்பினார் கம்பர் வேந்தனோ
கண்கள் சிவந்து கடிந்தனன் - கருணையுடன் அன்னையோ
தங்கச் சிவந்தி மாதின் தலையில் பணித்தாள் கூத்தனோ
மங்கிச் சிரம் குவிந்தான் கவிமன்னர்முன்

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff (in tamil script)

Post by msm »

பாரதிக்கு 12 வயது. காந்திமதிநாதப் பிள்ளைக்கு 17 வயது இருக்கலாம். (Another version says Ganthimathi Nathan was Bharathi's teacher)

பாரதியையே ‘பாரதி சின்னப் பயல்’ என்று ஈற்றடி வருமாறு (லொள்ளு?) பாடச்சொன்னார் காந்திமதி நாதன்.

அதற்கு பாரதி இயற்றிய நேரிசை வெண்பா:

ஆண்டில் இளையவனென் றந்தோ அகந்தையினால்
ஈண்டிங் கிகழ்ந்தென்னை ஏளனஞ்செய் - மாண்பற்ற
காரிருள்போல் உள்ளத்தான் காந்திமதி நாதனைப்
பாரதி சின்னப் பயல்.


பதம் பிரித்து:
(ஆண்டில் இளையவன் என்று அந்தோ, அகந்தையினால்
ஈண்டு இங்கு இகழ்ந்து என்னை ஏளனம் செய் - மாண்பு அற்ற
காரிருள் போல் உள்ளத்தான் காந்திமதி நாதனைப்
பார் அதி சின்னப் பயல்.
)
வயசுல சின்னவன் என்று என்னப் பாத்து குறைவா எடை போட்டு, மண்டை கர்வம் ஜாஸ்தியா போயி என்ன ஏளனம் செய்யுதே இதோ இந்த--மாண்பில்லாதவனும், இருண்ட நெஞ்சம் கொண்டவனுமான--காந்திமதிநாதனைப் பார். அதி சின்னப் பயல்.

காந்திமதி நாதனுக்கு எப்படி இருந்திருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

பிறர் முகம் வாடுவதைக் காணச் சகிக்காத உள்ளத்தைப் பாருங்கள். உடனே இன்னொரு பாட்டை எழுதினான் நம்ம சின்னப் பயல்.

ஆண்டில் இளையவன்என் றைய அருமையினால்
ஈண்டென்றன் றன்னைநீ ஏந்தினையால் - மாண்புற்ற
காரதுபோல் உள்ளத்தான் காந்திமதி நாதற்குப்
பாரதி சின்னப் பயல்.


பதம் பிரித்து:
(ஆண்டில் இளையவன் என்று ஐய, அருமையினால்
ஈண்டு எந்தன் தன்னை நீ ஏந்தினையால் - மாண்பு உற்ற
கார் அது போல் உள்ளத்தான் காந்திமதி நாதற்குப்
பாரதி சின்னப் பயல்
)

வயதில் சிறியவன் என்று மிகுந்த வாத்சல்யத்துடன் நீ என்னை ஏந்திக் கொண்டாய். பெருமை மிகுந்தவனும், மழைபொழியும் மேகத்தைப் போல் உள்ளம் கொண்டவனுமான காந்திமதி நாதனுக்குப் பாரதி சின்னப் பயல்.

இந்தச் சம்பவத்தைப் பின்னால் 'அகந்தைக்குப் பரிசு' என்றொரு கட்டுரை எழுதி குறித்து வைத்தார். யார் தெரியுமோ? காந்திமதிநாதப் பிள்ளையேதான்

** most of this extracted text is from Sri. Hari Krishnan's writings

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff (in tamil script)

Post by sridhar_ranga »

சின்னசாமி பெற்றெடுத்த சுட்டிக் குழந்தையே
அன்னைத் தமிழின் பயன்

பயன் = நல்வினைப்பயன்

பயன் = பையன் / பயல்

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff (in tamil script)

Post by sridhar_ranga »

cmlover wrote:Here is one from Tamil Ilakkiyam
(versification mine!)
தங்கச்சி வந்தியாவென விளம்பினார் கம்பர் வேந்தனோ
கண்கள் சிவந்து கடிந்தனன் - கருணையுடன் அன்னையோ
தங்கச் சிவந்தி மாதின் தலையில் பணித்தாள் கூத்தனோ
மங்கிச் சிரம் குவிந்தான் கவிமன்னர்முன்
Dear CML can you please provide the explanation? Does this have anything to do with the ambikapathi / amaravati story? Thanks.

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: If you are a venpA buff (in tamil script)

Post by Ponbhairavi »

refrence posts 179,211,215 above.
Arunagirinathar's ezhukkutrirukkai poem and its placement in the retham shape can be seen at the following links:
https://docs.google.com/open?id=0B85HwZ ... LU10WXo3dw
https://docs.google.com/open?id=0B85HwZ ... ZF9TUWg4dw

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff (in tamil script)

Post by cmlover »

Msm
One more interpretation is
.................காந்திமதி நாதனைப்
பாரதி சின்னப் பயல்.
( ....(அத்தகைய) காந்திமதி நாதனை
பாரதி (நான்) சின்னப் பயல் (என அழைக்கிறேன்))

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff (in tamil script)

Post by cmlover »

Thx Ponbhairavi for that chitrakavi of AN.
Here is a one letter verse which most of you may know
தாதிதூதோதீது
தத்தைதுதோதாது
தித்தித்ததூதிதை
துதித்துத்துதித்தோதுதி

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff (in tamil script)

Post by cmlover »

Sridhar
The story goes as follows...
Kambar was very friendly with the daughter அமராவதி of kulottthunga chOzhan. So when once she returned to the court after some absence he affectionately remarked தங்கச்சி வந்தியா!
OttakkUtthar who was waiting for the opportunity to put down Kambar drew the attention of the King to this gross violation of protocol. The king got angry and wanted to chide Kambar. But Kambar prayed to Goddess Sarasvati to save him whence as she came closer the சிவந்தி she was wearing started a golden glitter and Kambar remarked that he had remarked whether it was தங்கச் சிவந்தி.
கூத்தரின் முகத்தில் ஈயாடவில்லை which is dramatized in my verse...

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: If you are a venpA buff (in tamil script)

Post by Pratyaksham Bala »

From: http://tamilnation.co/literature/krishn ... uranam.htm

"Thamizh Literature Through the Ages
தமிழ் இலக்கியம் - தொன்று தொட்டு இன்று வரை
By Dr. C.R. Krishnamurti,
Professor Emeritus, University of British Columbia, Vancouver, B.C. Canada

...
...
9.3.1. KALamEkam (காளமேகம்)
...
...
"Another intriguing style is the use of a single consonant and its series without any other letter in the poem. In the poem below the maiden sends a message through a parrot to her lover. The only consonant used is the (t) series.

தாதிதூ தோதீது தத்தைதூ தோத்து
தூதிதூ தொத்திதத் தூததே - தாதொத்த
துத்ததத் தாதே தூதித்துத்தேத் தொத்தீது
தித்தித்த தோதித் திதி

(தாதி தூதோ தீது) = my messenger is of no use;(தத்தை தூது ஓதாது) = the parrot won't go as my messenger; (தூதிதூது ஒத்த இதம் தூது அதே) = as a friend you will be my best messenger; (தாதொத்த துத்தி) = my own skin irritation ; (தத்தாதே) = without increasing; (துதித்து)= in praise; (தேத்து ஒத்து ஈது) = according to my present circumstances; (தித்தித்தது ஓதித்திதி) = take my sweet words to my lover and save me."

Post Reply