Short Stories (in Tamil script)

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Short Stories (in Tamil script)

Post by venkatakailasam »

மீனோடு ஆமை கேழல் அரி குறள்ஆய் முன்னும் இராமன்ஆய்
தான்ஆய் பின்னும் இராமன்ஆய் தாமோதரன்ஆய் கற்கியும்
ஆனான்.

Image

- Pasuram

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Short Stories (in Tamil script)

Post by venkatakailasam »

பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்!

புதிதாக ஒரு ஃப்ளாட் வாங்கியிருந்தேன். அதில் கெய்சர், வாஷிங்மெஷின், வாஷ்பேஸின் ஆகியவற்றை பொருத்தவேண்டியிருந்தது.

எனக்கு ப்ளம்பர் நண்பர் ஒருவர் உண்டு. அவரை வீட்டுக்கு வரவழைத்தேன்.

அவர் நல்ல திறமைசாலிதான்.

ஆனால் அன்று ஏனோ கெய்சரை பொருத்தி டெஸ்ட் செய்த போது சூடு ஏறவில்லை.

பிறகு தவறை கண்டுபிடித்து மீண்டும் பரிசோதிக்க முயற்சித்தபோது மின்சாரம் போய்விட்டது.

பொருத்துவதற்காக ட்ரில்லிங் செய்தபோது, டிரில் பிட் உடைந்து விட்டது.

வாஷிங்மெஷினில் நிப்பிள் மேட்ச் ஆகவில்லை.

ஆக அவற்றை பொருத்த ஏதுவாக என்னையும் கடைக்கு அழைத்தார். கூடச் சென்று வாங்கி கொடுத்தேன். அவரது வீடு கடை அருகில் தான் இருந்தது. வீட்டிற்கு ஒரு நிமிடம் வாருங்கள் என அழைத்தார். நான் மறுத்தும் மிகவும் வற்புறுத்தி அழைத்து சென்றார்.

வீட்டுவாசலில் ஒரு செடி வளர்ந்திருந்தது. அதனை ஒரு நிமிடம் தொட்டவர், பிறகுஉள்ளே அழைத்து சென்றார்.

அவரை பார்த்ததும் குழந்தைகள் ஓடி வந்தன. ஒவ்வொன்றாக தூக்கி கொஞ்சி, இறக்கி விட்டார்.முகமலர்ச்சியுடன் வரவேற்ற அவரது மனைவி உள்ளே சென்று சில நிமிடங்களில் சூடான காப்பி கொண்டு வந்தார்.

இதனிடையே ப்ளம்பர் நண்பர், மனைவி, குழந்தைகள் பற்றி சுவையாக கூறி கொண்டிருந்தார்.

காப்பியை குடித்து விட்டு அவர்களிடமிருந்து விடைபெற்றேன். என் மனத்தில் ஒர சந்தேகம். ஏன் பிளம்பர் வாசலில் இருந்த செடியை நின்று தொட்டு சென்றார்?

அடுத்தநாள் அவர் வந்ததும் என் சந்தேகத்தை கேட்டேன். நேற்று நான் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. இதனால் டென்ஷனானேன்.

ஆனால் அதே பதற்றத்துடன் வீட்டுக்குள் சென்றாள் என் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.

அதனால் என் கவலை. டென்ஷன் எல்லாவற்றையும் அந்த செடியில் இறக்கிவிட்டு நாளை மீண்டும் எடுத்து கொள்கிறேன் எனக்கூறி இலேசான மனத்துடன் உள்ளே சென்றேன் என்றார். நான் வியந்து நின்றேன்.

இது உணர்த்துவது என்ன?

பிரச்னைகள், எப்போதுமே நம்மை விட்டு விலகுவதில்லை. ஆக நாம்தான் சில நேரம் அதனை விலக்கி வைக்க வேண்டும்.

ஆபீஸில் பிரச்னையா?

பொது வேலைக்குசென்ற இடத்தில் பிரச்னையா?

அதனை மறந்தும் வீட்டுக்குள் கொண்டு செல்லாதீர்கள்.

அந்த பிரச்னைகளை, வாசலிலேயே மாட்டி வைத்து, மனைவி, குழந்தைகளை சந்திக்கபோகிறோம் என்ற மகிழ்ச்சியில் தினமும் மாலையில் புது மனிதராக நுழையுங்கள்.

இரவு நல்லபடி கழியும். அடுத்த நாள் புதுத்தெம்புடன் பிரச்னைகளை சமாளிக்க ஆரம்பித்து விடுவோம்.

நன்றி-மங்கையர்மலர்

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Short Stories (in Tamil script)

Post by venkatakailasam »

தெய்வப்பணி பற்றிய கற்பனை கூட இடையூறுகளை நீக்கும்
----------------------------------------------------------------------------------------------

அந்த விவசாயியின் ஜாதகத்தை சோதித்து பார்த்த ஜோதிடருக்கு , உள்ளூர தயக்கம் !
காரணம் , அன்றிரவு எட்டு மணிக்கு அந்த விவசாயிக்கு மரணம் நேரக்கூடிய கண்டம் இருந்தது ; அதை ..அவனிடம் நேரிடையாக சொல்ல விரும்பாமல் ,
'' ஐயா ...எனக்கு நிறைய வேலைகள் உள்ளன ...உங்கள் ஜாதகம் என்னிடமே இருக்கட்டும் !..நாளை காலையில் என்னை வந்து பாருங்கள் !''
என்றார் ;
ஜோதிடரின் வீட்டிலிருந்து புறப்பட்ட விவசாயி , தன் கிராமத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தபோது , மாலை சாய்ந்து இருள் சூழ ஆரம்பித்தது ! அப்போது , லேசாக மழைத்தூறல் ஆரம்பிக்க ......சற்றைக்கெல்லாம்
பெருமழை கொட்ட துவங்கியது! மழையில் நனைந்தவாறே ,சுற்றுமுற்றும் பார்வையை சுழலவிட்டவனின் கண்களில்
..அந்த .பாழடைந்த சிவன் கோயில் தென்பட......ஓடோடிச்சென்ற அவன் , கோயிலின் முன்னே இருந்த மண்டபத்தில் ஒதுங்கினான்:
..மண்டபத்தில் நின்றவாறே , கோயிலின் பாழடைந்த நிலை கண்டு உள்ளூர வருந்தினான் ! தன்னிடம் போதுமான பணம் இருந்தால் அக்கோயிலை புதுப்பிக்கும் வேலையை செய்வேன் என்று மானசீகமாக நினைத்துக்கொண்டதோடு நில்லாது .....அக்கோயிலை புதுப்பிப்பதாக மானசீகமாக கற்பனையும் செய்து கொண்டு ....கோபுரம் ...ராஜகோபுரம் ...உட்பிராகாரங்கள் மற்றும் ..மண்டபங்கள் முதலானவற்றை மனதிற்குள் கற்பனையாகவே அமைத்து ....வேதியர்கள் புடைசூழ கும்பாபிஷேகமும் விமரிசையாக நடத்தி .....இப்படி தன்னை மறந்து சிந்தனைகளில் ஈடுபட்டிருந்தவனின் பார்வை தற்செயலாக மண்டபத்தின் எதிரே நோக்க .......
அங்கே ஒரு பெரிய கருநாகம் படமெடுத்த நிலையில் ..அவனை கொத்த தயாராக இருந்தது !! சூழ்நிலையின் விபரீதத்தை உணர்ந்த அவன் , மறுகணம் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வரவும் ,மண்டபம் ' கிடுகிடு ' வென்று இடிந்து விழவும் சரியாக இருந்தது ! இப்போது மழையும் நின்று விட்டிருக்க ....விவசாயியும் வீடு போய் சேர்ந்தான் :
பொழுது விடிந்ததும் முதல் வேலையாய் ஜோதிடர் வீட்டுக்கு சென்ற அவனை கண்டு ஜோதிடருக்கு வெகு ஆச்சரியமும் , திகைப்பும் !
' எப்படி இது சாத்தியம் ? நாம் ஜோதிடக்கணக்கில் தவறிவிட்டோமோ '
பலவாறான எண்ண அலைகளுடன் மீண்டும் அவனது ஜாதகத்தை அவர் ஆராய ..
.அவரது கணக்கு சரியாகவே இருந்தது! பின் , ஒரு உந்துதலின் பேரில்அவர் ஜோதிட நூல்களை துல்லியமாக ஆராய்ந்த அக்கணம் ....
' இப்படிப்பட்ட கண்டத்திலிருந்து ஒருவன் தப்ப வேண்டுமானால் , அவனுக்கு ஒரு சிவன் கோயிலை கட்டி முடித்து , கும்பாபிஷேகமும் செய்த புண்ணியம் இருக்கவேண்டும் '
என்று ஜோதிட நூலில் குறிப்பிட்டிருந்தது !
' ஒரு ஏழைக்கு , சிவன் கோயிலை கட்டி , கும்பாபிஷேகமும் செய்வது என்பது எப்படி சாத்தியம் '
என்று எண்ணியவாறே ஜோதிடம் அறிவித்த அனைத்து விவரங்களையும் அவனிடம் அந்த ஜோதிடர் இப்போது எடுத்துரைக்க .....அவனோ , வெகு இயல்பாக முந்திய நாள் இரவு தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை அவரிடம் எடுத்துரைத்தான் !!..
தெய்வப்பணி பற்றிய கற்பனை கூட இடையூறுகளை நீக்கும் !
நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் !
Mannargudi Sitaraman Srinivasan

"எனை நாடி வந்த கோள் என் செய்யும்!குமரேசர் இருதாளும் ,சிலம்பும், சதங்கையும்,தண்டையும்,சண்முகமும், தோளும், ,கடம்பும், எனக்கு முன்னே வ்ந்து தோன்றிடின்."

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Short Stories (in Tamil script)

Post by cmlover »

மனத்தினால் செய்யும் தொண்டு பணத்தினால் செய்யும் தொண்டை விட சாலச்சிறந்தது.
பணத்தினால் டாம்பீகத்திற்கு செய்யும் தொண்டை இறைவன் ஒருபொழுதும் ஏற்பதில்லை!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Short Stories (in Tamil script)

Post by venkatakailasam »

வயதான மனிதர் ஒருவர் சிறு நகரத்தில் தனியாக வசித்து வந்தார். வருடா வருடம் தனது நிலத்தில் உருளைக்கிழங்கு பயிர் செய்து வந்தார். அதுவே அவர் வாழ்வின் மூலாதாரம். ஆனால் எப்போதும் அவரது ஒரே மகன்தான் நிலத்தை உழுது கொண்டிருப்பான்.

ஆனால் இந்த முறை அவனால் உ ழுது தர இயலாது. ஏனென்றால் அவன் சிறையிலிருந்தான். முதியவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

... சிறையிலிருக்கும் மகனுக்குக் கடிதம் எழுதினார். ‘மகனே! இந்த முறை நீ இல்லாததால் நிலத்தை உழ முடியவில்லை. அதனால் உருளை பயிரிட முடியவில்லை. நான் எப்படி உயிரோடிருப்பேன் என்றும் எனக்குத் தெரியவில்லை’ என்று எழுதினார்.

இரண்டு நாட்களிலேயே மகனிடமிருந்து பதில் வந்தது. அதில், ‘அப்பா தயவு செய்து நிலத்தை உழாதீர்கள். அங்குதான் துப்பாக்கிகளை மறைத்து வைத்திருக்கிறேன்’ என்றிருந்தது.

அதன் பொருள் விளங்குமுன்னே, ஒரு பெரிய காவல்படையும் உளவுத்துறையும் அவர் வீட்டில் வந்திறங்கின. அவரது நிலத்தைத் தோண்டி முழுதும் அலசிப் பார்த்து விட்டனர். எதுவும் கிடைக்காமல் சென்று விட்டனர்.

எதுவும் புரியாத முதியவர் நடந்ததை விளக்கி மகனுக்குக் கடிதம் எழுதினார். மகன் தனது பதிலில், ‘இப்போது உருளைக்கிழங்கு பயிரிடுங்கள். நிலம்தான் உழுதாகி விட்டதே. இதுதான் இங்கிருந்து என்னால் செய்ய முடிந்தது’ என்று எழுதியிருந்தான்...

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Short Stories (in Tamil script)

Post by venkatakailasam »

ஒரு பெண் ஒருத்தி கோக் பாட்டிலின் மூடியை திறந்தது
ஓர் மரத்திற்க்கு அடியில் நின்று குடித்துக் கொண்டிருந்
தாள்.

அப்போது மரத்தின் மேல் ஒரு அப்பா எறும்பும் ஒரு
மகன் எறும்பும் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்
தார்கள் .

மகன் எறும்பு கொஞ்சம்
எட்டிப்பார்த்ததில் சரியாக அந்த கோக் பாட்டினுள்
விழுந்து விட்டான்.

உடனே அந்த பெண் அதை
கவனிக்காமல் அந்த மகன் எரும்பையும் சேர்த்து
குடித்து விட்டாள்.

உடனே அப்பா எறும்பு மரத்தை விட்டு
கீழ் இறங்கி அப்பெண் மணியிடம் ஒரு கேள்வி
கேட்டதாம்.

உடனேஅப்பெண்மணி மயங்கி தரையில்

வீழ்ந்து விட்டாளாம்.

அப்படியென்ன அப்பா எறும்ப கேட்டிருக்கும்??









அது வேற ஒன்றுமில்லை?என்மகன் உன் வயிற்றில் உள்ளான் என்று அப்பா எறும்பு சொன்னதாம் .

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Short Stories (in Tamil script)

Post by venkatakailasam »

வினை விதைத்தால்..!

நேத்து ஹோமுக்குப் போய் அப்பா அம்மாவைப் பார்த்துட்டு வந்தேன்... என்றபடியே என் எதிரில் அமர்ந்த நண்பருக்கு 53 வயது, 7மாதம், 17 நாட்கள். எப்படி இருக்காங்க? என்று கேட்டேன். ம்... சவுக்கியமாதான் இருக்காங்க. ஆனா, தங்கியிருக்கிற இடம்தான் கீக்கிடமா இருக்கு! சின்ன ஹால்; அதைவிட சின்னதா ஒரு பெட்ரூம்; மூட்டைப்பூச்சி வாசம் செய்யும் பழைய கட்டில்; அழுக்குத் தலையணை, போர்வை; சின்னதா ஒரு டாய்லெட்; அங்கே நின்னு குளிக்கறதே கஷ்டம்.

உங்க அப்பாவுக்கு எல்லாமே படுசுத்தமா இருக்கணுமே..?

அதுக்கென்ன செய்றது? லட்சம் லட்சமா டெபாசிட் கட்டியாச்சு. கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிட்டுதான் போகணும். சரி... சாப்பாடு எப்படி? அரை கிலோ மீட்டர் தொலைவுல கேன்டீன் இருக்கு. காபி, சாப்பாடு, டிபன்னு ஒவ்வொண்ணுத்துக்கும் தினமும் நடந்து போகணும். செம்மண் தரை. மழை பெஞ்சா சேறு, சகதி வேற! போகட்டும்...

சாப்பாடு டேஸ்ட் எப்படி இருக்காம்? சுமார்தான். நானே சாப்பிட்டுப் பார்த்தேன். அரிசி சரியா வேகல. சாம்பார்ல உப்பு கம்மி. தயிர் கிடையாது. மோரும் சுமார்தான்.

உங்க அம்மா கைப்பக்குவம் அலாதியா இருக்கும். நிறைய தடவை நானே சாப்பிட்டிருக்கேன். ஹோம் சாப்பாட்டை, பாவம் அவங்க ரெண்டு பேரும் எப்படித்தான் சாப்பிடறாங்களோ?

வேற வழி... மாசமானா பத்தாயிரம் ரூபாய் கட்டிட்டு வர்றோமே! போடறதை விழுங்கத்தான் வேணும். ஆணா, ரெண்டு பேரையும் பார்த்தா சந்தோஷமா இருக்கிற மாதிரிதான் தெரியுது!

வெளில அப்படித்தான் தெரியும். அதிருக்கட்டும்... உன் பொண்ணு, பிள்ளையெல்லாம் எப்படி இருக்காங்க?

ஜாம் ஜாம்னு இருக்காங்க. பெரியவன் நியூஜெர்ஸில இருக்கான். அவனுக்கு ஒரு குழந்தை.

பொண்ணு, ஆஸ்திரேலியாவுல இருக்கா. அவளுக்கும் ஒரு குழந்தை. மாப்பிளைக்கு பெரிய வேலை, தேவைக்கு அதிகமாகவே சம்பளம்...

ஸோ, இங்கே நீயும் உன் மனைவியும் மட்டும்தான்...?

ஆமா. பெரிய வீடு; ஏ.சி., டி.வி-ன்னு எல்லா வசதியும் இருக்கு. சமையலுக்கு வீட்டோடு ஆள் போட்டாச்சு.

என்ன ஒண்ணு, பேரக் குழந்தைகளோடு விளையாட எங்களுக்குக் கொடுத்து வைக்கலை. ஸ்கைப்ல பார்த்து சந்தோஷப்பட்டுக்கறோம்!

பின்னே? விதை ஒண்ணு போட்டா சுரை ஒண்ணா முளைக்கும்? என்று நான் முணுமுணுத்தது நண்பரின் காதுகளில் விழுந்துவிட்டது போலும்...! பேய் அறைந்தது போலாயிற்று அவரின் முகம். அந்த அறைக்குப் பலன் இல்லாமலா போய்விடும்?!

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Short Stories (in Tamil script)

Post by cmlover »

ஆமாம் உங்க மாமனாருக்கும் மாமியாருக்கும் தான் வயஸாயுடுத்தே
இப்போ எங்கே இருக்கா?
ஆத்து மாடி காலியாத்தானே இருக்கு. அங்கே தான் முடங்கி கிடக்கறா.
இவள் தான் தினமும் போய் சாப்பாடெல்லாம் கொடுத்து கவனிச்சுக்கறா
நம்பளை விட்டா வேறே யாரிருக்கா அவாளுக்கு....

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Short Stories (in Tamil script)

Post by Ponbhairavi »

.

தற்காத்து தற்கொண்டார் உறவெலாம் வெட்டி தன்
பெற்றோர் காத்து சோர்விலாள் தற்காலப் பெண்

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Short Stories (in Tamil script)

Post by cmlover »

பலே
கொழுநன் தொழாள் தன் சுற்றம் தொழுதெழுவள்
பொய்யென பொய்க்கும் மழை.
(பாரதி காணாத புதுமைப் பெண்)

arasi
Posts: 16787
Joined: 22 Jun 2006, 09:30

Re: Short Stories (in Tamil script)

Post by arasi »

bhalE
bhalE

ponbhairavi and CML!

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Short Stories (in Tamil script)

Post by cmlover »

Arasi!
Unfortunately I see so many of them these days :(

arasi
Posts: 16787
Joined: 22 Jun 2006, 09:30

Re: Short Stories (in Tamil script)

Post by arasi »

I feel your pain, but both couplets (kuRaLs?) were poignant kurals (voices) and were appreciated. So was VKailasam's forerunner.

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Short Stories (in Tamil script)

Post by Ponbhairavi »

Arasi-Cml thanks.

அவர் வீட்டு தோட்டத்தில் ஓர் ரோஜா செடி கம்பீரமாக வளர்ந்திருந்தது..தினம் ஒரு மலர் அழகாக பூத்து சிரிக்கும்.அதைக் காணும்போது அவர் மனதில் ஆனந்தம். அதன் அருகே ஒரு மலர்க் கொடியையும் வைத்துப் பார்க்க ஆசைப்பட்டார் முல்லை மலர் வெண்மைக்கும் ரோஜாவின் சிவப்பு வண்ணத்துக்கும் எத்தனை பொருத்தமாக இருக்கும்.
கொண்டுவந்து தோட்டத்தில் நடப்பட்ட முல்லை கொடி செழித்து வளர்ந்தது.
மண்ணின் வளம் !கொடி ரோஜா செடியை நோக்கி படர்ந்தது..தன் தளிர் கையை நீட்டி தாவி அணைத்தது .முல்லையும் ரோஜாவும் இணைந்தன பூத்து சிரிக்கும் .வெள்ளை முல்லையின் நறு மணமும் ரோஜாவின் எழிலும் வீட்டுக்காரருக்கு பெருமை
சில மாதங்களில் முல்லைக் கொடியின் வளர்ச்சி தோட்டம் முழுவதையும்
ஆக்கிரமித்தது.ரோஜா செடியை அப்படியே அமுக்கி இருக்கும் இடம் தெரியாமல் செய்துவிட்டது . ரோஜாவுக்கு முள் உண்டு ஆயினும் கொடி அதையும் சேர்த்து வளைத்து போட்டது.- கொடியின் இயல்பு.
ஒரு நாள் அடர்ந்த கொடிகளுக்கு ஊடே ரோஜா ஒரு பூ பூத்திருந்தது. கண்டார். ஆசையுடன் கொடிகுள்ளே கையை விட்டு இளம் ரோஜாவை பறிக்க முயன்றார் .விரலில் ஏதோ சுருக்கென்று தைத்தது.முள் அல்லது ஏதோ பூச்சி கடியாக இருக்க வேண்டும்.! விரல் சிவந்து வீங்கி விட்டது..நெஞ்சு வலித்தது. டாக்டரிடம் சென்றார் .அவர் ஏதோ மருந்தை தடவிவிட்டு நாளை வாருங்கள் . காயம் பழுத்து விடும் கீறி ஆற்றிவிடலாம் .
காயம் பழுப்பது என்றால் என்ன டாக்டர் ?
அந்நிய பொருள் ஒன்று உங்கள் உடலில் இக்காயத்தின் வழியே புகுந்து விட்டது உடனே உங்கள் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் அப்பொருள் நோக்கி விரைந்து வரும்..வெள்ளை அணு தன உடலையே இரு கைகளாக்கி நீட்டி அப்பொருளை சூந்ழ்துகொள்ளும் (pseudopodium)—கட்டியணைக்க நீளும் காதலியின் கரங்களைப்போல –வெள்ளை அணு தன பிடியை இறுக்கி அந்த பொருளை தன்னுள்ளே விழுங்கிவிடும் (phagocytosis)அப்போது காயம் தானே சரியாகிவிடும் . இல்லாவிட்டால் தான் கீறி வெளியேற்ற வேண்டும்.. நாளைக்குப் பார்க்கலாம்.எல்லாம் உங்கள் தாக்கு பிடிக்கும் சக்தியை பொருத்தது .
நண்பருக்கு நல்ல தாக்கு பிடிக்கும் சக்தி. கீறி வெளியேற்ற தேவையில்லை அப்படியே absorb ஆகிவிட்டது .

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Short Stories (in Tamil script)

Post by cmlover »

ஆங்கிலம் அடிமை கொண்ட தமிழ் மொழி போல...

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kanchi Maha Periyava

Post by cmlover »

இருபொருள் கவி

கடவுள் உண்டென்பர் இலையென்பர் காஞ்சி
மடமுறை ஐயனை காண்பார் காண்பிலார்- திடமாக
பெரியார்(1) சொற்கேட்டஞ்ஞானியர்(2) பலருண்டு திண்ணமாய்
தெரிவார் தெரியாரவர் விதியின் வழி.

1a. ஆன்மீக அறிவுடைப் பெரியோர்கள்
1b. E V Ramaswami Naikar
2a. சொல் + கேட்ட + ஞானியர்
2b. சொல் + கேட்ட + அஞ்ஞானியர்

arasi
Posts: 16787
Joined: 22 Jun 2006, 09:30

Re: Kanchi Maha Periyava

Post by arasi »

vengAyam!veRum kAramadu (Rubbish! (in the sense periAr used it), it's just spicy)
veRum kAyamO! vendiDum adu
(This mortal coil? It will burn)
vengAyavanO (vengAchan, venkaTAchalan)
(The Lord?--referred to here in pet names)
kAyam avan malaiyum mahA aruLum
(Eternal are His abode and immense grace)
Last edited by arasi on 08 Apr 2014, 07:57, edited 1 time in total.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kanchi Maha Periyava

Post by cmlover »

திராவிடமுண்ட வீணர்க்கு வெங்காயம் ஏதுக்கடி, குதம்பாய்
அது கண்ணீர் (துளியில் ) கரையுமடி.

arasi
Posts: 16787
Joined: 22 Jun 2006, 09:30

Re: Kanchi Maha Periyava

Post by arasi »

veRum Or vengAyam than vElaiyai Seyyum
veLi irundu kaNNir peruga vaikkum--vEngaDavanO?
engum irundu, uLLum irundu urugik kaNNIr peruga vaippAn...

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kanchi Maha Periyava

Post by cmlover »

வெங்காயச்சாருண்டு மலைமேலிருப்போர்க்கு
ஓங்காரம் ஏதுக்கடி குதம்பாய்
ஓங்காரம் ஏதுக்கடி :)

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Short Stories (in Tamil script)

Post by Ponbhairavi »

continued fromஇரு பொருள் கவி #191


பெரியார் சொற்கேட்ட ஞ்ஞானி யர் பலருண்டு
சொற்கேட்ட ஞ்ஞானியர் பலர் உண்டு கொழுத்து
அஞ்ஞானியர் பலர் உண்டு கொழுத்து ஊரை கொள்ளையடித்து
பலர் உண்டு கொழுத்து ஊரை கொள்ளையடித்த எத்தர்கள்
ஊரை கொள்ளையடித்த எத்தர்கள் குடும்பத்துள்
எத்தர்கள் குடும்பத்துள் சக்களத்தி சொத்துச்சண்டை
சக்களத்தி சொத்துச்சண்டைசந்தி சிரித்திடும் காண்
பொதுச்சொத்து என்றும் பாரதி கண்ட அக்கினிக் குஞ்சன்றோ

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Short Stories (in Tamil script)

Post by venkatakailasam »

கிருஷ்ணர் படம்
அன்றிரவு ஸ்லீப்பர் கோச்சில் டிக்கெட் பரிசோதனை செய்யும் போது கீழே தரையில் ஒரு பர்ஸ் கிடப்பதை கண்டார். “யாருடையது இது?” என குரல் எழுப்பி அதன் உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்தபோது நாற்பது ரூபாயும் புல்லாங்குழல் ஊதும் கண்ணனின் படம் ஒன்றும் மட்டுமேஇருந்தன. பயணிகளில் ஒரு வயதான மனிதர் “அய்யா, அது என்னுடையது” என்றபோது,
“உங்களுடையது தான் என்பதற்கு ஏதேனும் அடையாளம் சொல்ல முடியுமா?”
“கிட்டத்தட்ட நாற்பது ரூபாயும் ஒரு கிருஷ்ணன் படமும் உள்ளே இருக்கும் பாருங்கள்”
“ஏனையா பர்சில் உங்கள் போட்டோ அல்லது அட்ரஸ் விவரம் எதாவது வைத்துக்கொண்டால் இது போன்ற சந்தர்பத்தில் உபயோகமாக இருக்காதா. ஏன் கிருஷ்ணர் படத்தை வைத்தீர்கள்?”
“அது பெரிய கதை உங்களுக்கு தேவையானால் சொல்கிறேன்!”
“சரி, சொல்லுமேன்!”
“இந்த பழைய பர்ஸ் என்னுடைய அப்பா உபயோகித்தது. அதில் என் அப்பா அம்மா படம் தான் முதலில் வைத்தேன். இளம் மிடுக்கில் கோட் சூட் போட்ட என் படம், அப்பா அம்மா படம் இருந்த இடத்தை பிடித்தது. பிறகு காதல் வயப்பட்டவுடன் காதலி படம் பர்சை நிரப்பியது. அவள் மனைவியானபிறகு எங்கள் இருவர் படம் பர்சை ஆக்ரமித்தது".
"ரெண்டு பிள்ளைகள் பிறந்தவுடன் அவர்கள் படம் எங்கள் கல்யாண படத்தை வெளியேற்றியது. என் பசங்க ரெண்டுபேரும் இப்போ கல்யாணமாகி எங்கோ வெளிநாட்டில் இருக்கிறானுங்க. அவங்களுக்கு என்னோடு பேசவே கூட நேரமில்லை. என் அப்பா அம்மா, என் மனைவி எல்லோரும் போய்விட்டார்கள்."
"அப்போது தான் என் அப்பா இந்த பர்சில் முதல் முதலில் வைத்திருந்த கிருஷ்ணர் படம் மீண்டும் அதன் இடத்தை பிடித்துகொண்டது.
இந்த கிருஷ்ணன்படம் நான் அடிக்கடி பர்ஸ் திறக்கும் போதெல்லாம் கண்ணில் படும். இந்த கிருஷ்ணன் தான் ஒவ்வொரு முறையும் நான் பார்க்கும் போதெல்லாம் எனக்கு புத்துணர்ச்சியும் தைரியத்தையும் தருகிறான். இந்த ஒரு போட்டோவை விட்டு வேறு எது எதுவோ இத்தனை வருஷங்கள் அர்த்தமில்லாமல் ஏன் வைத்துகொண்டிருந்தேன் என்று இப்போது தெரிகிறது. புத்தியும் வந்தது

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Short Stories (in Tamil script)

Post by Ponbhairavi »

                        ராஜீனாமா

காட்டிலே  காலரா  நோய் !மிருகங்கள்  நூற்று  கணக்கில்  பலி '! போகிற போக்கில்  காட்டாட்சி  புரிந்து வந்த  மிருக   இனமே  இருந்த இடம் தெரியாமல் போய்விடுமோ  என்ற நிலை .தலைவர்  சிங்கம்  பொது  குழு  கூட்டி இந்த நிலைக்கான  காரணங்களை  ஆராய  விழைந்தார் . விவாதத்தில்   ஏதோ தெய்வ குற்றம்  என்று தீர்மானிக்கபட்டது . தலைவர் எழுந்து  கூறினார்  இத்தகைய  நிலைக்கு  நான் முழு பொறுப்பு ஏற்கிறேன்  இதோ ஏன் ராஜீனாமா. மேலும்  நீங்கள். விரும்பினால்  என்னையே  நான் பலியாக  கொடுக்கவும் தயார் ,     அவையில் மௌனம் . ஒநாய் எழுந்து  மொழிந்தது  நீங்கள்  எவ்வளவு பெரிய  தியாகி .தெய்வ குற்றமாகவே    இருந்தாலும்  அதற்கு  நாம் எல்லோருமே  தான் பொறுப்பு .ஏதோ பாபம் செய்திருக்கிறோம்  அதனால்  தான் இந்த நிலை .நாம் ஒவ்வொருவரும் நம் மன சாட்சி படி  நாம்  செய்த  பாவங்களை  ஒப்பு   கொள்ளவேண்டும் .யார் மிக பெரிய பாவியோ  அவர் பலியாக வேண்டும்  என்று தீர்மானிக்க பட்டது       மிருகம். எல்லாம்  ஒன்றன் பின்  ஒன்றாக  எழுந்து  தாம் செய்த உயிர் கொலைகளை  பட்டியல் இட்டன . இறுதியில்   வந்தது ஒரு பொதி சுமக்கும்  கழுதை  .   நான் கொலை  ஏதும்  செய்த தில்லை .என்றோ ஒரு நாள் பசியின் கொடுமைதாங்காமல்  தெரு ஓரம் இருந்த புறம்போக்கு  நிலத்தில் இருந்து  ஒரு வாய் புல்லை  தின்றுவிட்டேன். உடனே சீறிஎழுந்தது  ஓநாய் . அட  மா பாவிக் கழுதையே ! பொது சொத்தில் பசி ஆறு வதா .? மன்னிக்க முடியாத குற்றம் நரி  வழி மொழிந்தது  நீ  செய்த பாவத்தின் பலனை தான்   நாங்கள்  இப்போது அனுபவித்து கொண்டு இருக்கிறோம் பலி இடுங்கள் இக் கழுதையை  என ஒரு மனதாக முடிவு  செய்தது பொது குழு   கழுதை  பலி ஆனது .மற்ற மிருகம் செய்த படு கொலைகளும்  தலைவர்  ஆடு மேய்பவர்களையும்  சிறு  குழந்தை   களையும்  அடித்து  கொன்றது எல்லாம் போய். அவை புனிதர்கள் ஆகி  விட்டன லபோண்டைனே  என்பவர் 1675 இல்  எழுதியதை  தழுவியது . Pl see French ilakkiyam.wordpress.com for verbatim translation

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Short Stories (in Tamil script)

Post by venkatakailasam »

ஒரு சிறைத்துறை அதிகாரியின் பேட்டியின்போது. சிறையில் உங்களுக்கு மறக்கமுடியாத அனுபவம் என்ற கேள்விக்கு அவர் கூறியது

அன்று அதிகாலையிலேயே அந்த சிறைச்சாலை அமளிதுமளிபட்டது காரணம் அந்த சிறையிலிருந்து ஒரு பெண் தப்பிவிட்டாள் ஆறடி உயர தடுப்புசுவற்றை தாண்டி எந்த ஆண்கைதியும்கூட இதுவரை அங்கு தப்பியதில்லை ..

கைதி தப்பி விட்டதால் காவல் பணியில் இருந்த பலருக்கும் தண்டனை கிடைக்க கூடும் என்பதால் சிறை நிர்வாகம் அப்பெண்ணை கண்டுபிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தியது

உயர் அதிகாரிக்கு தகவல் தரப்பட்டு இவரும் என்கொயரிக்கு வந்துவிட்டார்

விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே 11 மணியளவில் அந்த பெண்ணே சிறைச்சாலைக்கு திரும்ப வந்துவிட்டாள் ஆனால் கூடவே ஒரு சிறுமியுடன்

சிறை நிர்வாகம் நிம்மதியடைந்தது

விசாரணையில் தெரிந்தது இதுதான்

இவள் வசிப்பதே ப்ளாட்பார்மில் காவல் துறையினர் இவளை ஒரு திருட்டுகேசில் சம்மந்தபடுத்தி சிறையில் கொண்டுவந்து தள்ளிவிட்டனர்

இந்த பெண்ணை கைது செய்யும்போதே அந்த பெண் அந்த காவலர்களிடம் கெஞ்சியிருக்கிறார் ..

அய்யா நான் சத்தியமாக திருடவில்லை ஆனாலும் என்னை ஜெயிலில் போடுவதைபற்றி நான் கவலைப்படவில்லை என் மகள் ஒருத்தி இருக்கிறாள் அவளுக்கு என்னைவிட்டால் யாருமில்லை
நான் இல்லாமல் தவித்துபோய்விடுவாள் அவள் இங்குதான் எங்காவது சுற்றிகொன்டிருப்பாள் நீங்கள் இங்கேயே இருங்கள் நான் அவளை தேடி அழைத்துவந்துவிடுகிறேன் என மீண்டும் மீண்டும் கெஞ்சியிருக்கிறாள்

அப்படி சொல்லி எங்களிடமிருந்து தப்பிக்க பார்கிறியா ஏறுவண்டியில என மிரட்டி அன்றே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துவிட்டனர்

சிறைச்சாலையிலும் அந்த பெண் சிறை அதிகரிகளிடமும் அதேபுலம்பலை புலம்பியிருக்கிறார்.
என்னை ஒரு மணிநேரம் வெளியில் விடுங்கள் கண்டிப்பாக நான் திரும்ப வந்துவிடுவேன் என்று

ஆனால் காதுகொடுத்து கேட்கத்தான் ஆட்கள் இல்லை

சிறையில் அடைக்கப்பட்ட அந்த பெண்தான் இரவில் அந்த சாகசத்தை செய்திருக்கிறார் சொன்னதுபோலவே குழந்தையுடன் திரும்ப வந்து தனது நேர்மையையும் நிருபித்திருக்கிறார்

தாய்மையின் அன்புக்கு 6 அடி உயர சுவர் மட்டுமல்ல எவ்வளவு பெரிய கோட்டையின் சுவர்களையும் தடைகளையும் தகர்க்கும் வல்லமை உண்டு

அன்னையின் அன்பிற்கு இணையான ஒன்று ஏதுமில்லை

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Short Stories (in Tamil script)

Post by venkatakailasam »

Another one about mother....

அவள் ஒரு கிராமத்து அம்மா....

நான்பேருந்துக்காக நின்று கொண்டு இருந்தேன்.....
.என்னிடம் வந்தாள்.....

"தம்பி இத எப்படி பேசுவது? சொல்லித் தறியா?..."

கையில் புதிய போன்...

நான் சொன்னேன்:" அம்மா
பச்சை பட்டன் அமுக்கினால் பேசணும்....
.சிகப்பு பட்டன் அமுக்கினால்
கட் பண்றது அம்மா"... என்று சொன்னேன்....

அதற்கு அந்த அம்மா:- " இது என்னோட பையன் வாங்கி
கொடுத்தது....."

எவ்வளவு பெருமிதம்....... அந்த அம்மா முகத்தில்.....
.

"என்னோட பையன் வெளிநாட்டுல இருக்கான்.....
.மாசம் ஒரு தடவை பேசுவான்.........
இந்த தடவை இரண்டு மாசம் ஆச்சு?
பேசவே இல்லை".....
அவருடைய பையன் பேரை சொல்லி... "
அவன் எப்பையாவது போன் பண்ணி
இருக்கான்னுபாருபா...?" என்றாள்...
நான் பார்த்தேன்.......
அந்த பையன் call
பண்ணவே இல்லை.....
.நான் சொன்னேன்...
"ஒரு தடவை call பண்ணி இருக்காங்க.......
நீங்க தான் பாக்கலை பச்சை என்று நெனைச்சு
சிகப்ப அமுக்கிடிங்க போல் "
அப்டி என்று பொய் சொன்னேன்...

அம்மாக்கு அவ்வளவு சந்தோசம்..........
"சாப்டீங்களா அம்மா".......என்று கேட்டேன்....".

..எங்க என்னோட ராசா
சாப்டானோ இல்லையோ?
எனக்கு அவனை நெனைச்சா சாப்பாடே இறங்கல.... "

நான் சொன்னேன்........
"நீங்க நல்லா சாப்டா தானே உங்க பையன் வரும்போது
என்னோட ராசா என்று கட்டி
பிடிக்க தெம்பு இருக்கும்"... என்றேன்......

அந்த தாய் அழுது விட்டாள்....
. "அப்டியா தம்பி சொல்ற ...
இனிமேலே சாப்டறேன்".......
எனக்கு அழுகை வந்து விட்டது....

வெளி நாட்டில் இருக்கும்...
வெளி ஊரில் இருக்கும்
சகோதரி, சகோதர்களே உங்கள் தாயிடம் பேசுங்கள்....
அம்மா
என்ற சொல்லுக்காக ஏங்குபவள்.........
அவளுக்கு என்றும் நீங்கள் குழந்தை தான்...

( இதை படித்தவுடன் பகிருங்கள் மற்றும் இந்த முகபக்கதில் இருக்கும் சகோதரசகோதரிகள்... இதுவரையில் பெற்றோரிடம் பேசாமல் இருந்திருந்தாலும்...பரவாஇல்லை...இனிமேலாவது பேசுங்கள்... அவர்கள் உங்களை கடிந்துகொண்டாலும் சரி...உங்களால் மகிழ்ந்தாலும் சரி உங்கள் வாழ்வு செழிக்கும்...அவர்களுக்கு வேண்டியது...உங்கள் குரல் கேட்டு...நீங்கள் நலமாக இருப்பதை உணர்வது மட்டும்...

Shared...

thanjavooran
Posts: 2980
Joined: 03 Feb 2010, 04:44

Re: Short Stories (in Tamil script)

Post by thanjavooran »

தாயின் அன்புக்கு இணையே கிடையாது. இந்த குறுங்கதை ஒரு நிதர்சமான நடப்பு மெய்யை படம் பிடித்து காட்டுகின்றது.
வாழ்த்துக்களுடன்
தஞ்சாவூரான்
18 06 2014

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Short Stories (in Tamil script)

Post by venkatakailasam »

ஔவையார்


ஔவையார் ஒருமுறை ஓர் ஊருக்குப் போய்க்கொண்டிருந்தார். அப்போது ஓர் ஊரைவிட்டுச்சற்று தூரம் போனபின்பு இருட்ட ஆரம்பித்தது. வழியில் ஒரு பாழடைந்த மண்டபம் இருந்தது. சுற்றிலும் முள் புதர்கள் மண்டிப்போய் பார்க்கவே பயமும் அருவெறுப்பாகவும் இருந்தது.இருந்தாலும் அங்கேயே ராத்தங்கிச்செல்லலாம் என்று முடிவுகட்டி, ஔவாயார் அங்கு தன் மூட்டையை இறக்கிவைது, இடத்தைச் சுத்தம் செய்து அமர்ந்தார். அப்போது அந்தப்பக்கம் வந்த கிரமத்தினர் சிலர், ஔவையாரைப்பார்த்து, "இங்கே ஒரு பயங்கரப்பேய் இருக்கிறது. அது ஆளை அடிக்கும். ஆகவே இங்கு தங்காதீர்கள். எங்களுடன் கிராமத்துக்கு வாருங்கள் என்றார்கள். ஆனால் ஔவையார் அதற்கு இணங்கவில்லை. "என்னை நானே பார்த்துக்கொல்ள்வேன். அத்துடன் எனக்கு இன்னும் ஓரடிகூட அசையமுடியாது", என்று சொல்லிவிட்டார். கிராமத்தினர் மிக வேகமாக அகன்றனர்.இரவு வந்தவுடன் முதற் சாமத்தில் பயங்கரமாகக் காற்று வீசியது. நரிகள் ஊளையிட்டன. ஆந்தைகள் அலறின. கழுதைப்புலிகள் சிரித்தன. சர்சரவென்று சப்தத்துடன் ஓர் உருவம் தரையிலிருந்து முளைத்ததுபோல் நெடிது உயர்ந்து நின்றது. புகைம்மூட்டத்தில் அது இருந்தது. பார்க்கவே குலை நடுங்கும்வண்னம் இருந்தது.ஔவையாரைப் பார்த்து பயமுறுத்தி, "எற்றோமற்றெற்றோமற்றெற்று" என்று கூறியது.அதற்கு ஔவையார், ஒரு பாடலைச் சொன்னார்.



வெண்பா விருகாலிற் கல்லானை வெள்ளோலைகண்பார்க்கக் கையால் எழுதானைப் - பெண்பாவிபெற்றாளே பெற்றாள் பிறர் நகைக்கப் பெற்றாளேஎற்றோமற்றெற்றோமற்றெற்று



வெண்பாவை இரண்டுமுறைப் படித்தபோதே புரிந்துகொள்ள முடியாதவனை, வெற்று ஓலையில் கண்ணால் பார்த்துக் கையால் திருத்தமாக எழுதமாட்டாதவனை ஒரு பெண்பாவி பெற்றாளே!பெற்றதும் பெற்றாள், பிறர் சிரிக்கப் பெற்றாள்; அப்படிப்பட்டவளை எற்று, மறுபடியும் எற்று; மீண்டும் எற்று! என்னை ஏன் எற்றுகிறாய்?



பேய் பெரிதாக அலறிக்கொண்டு ஓடிப்போனது.இரண்டாம் ஜாமத்தில் மீண்டும் பெரிய காற்று, இடி, மின்னலுடன் வந்தது.மீண்டும், "எற்றோமற்றெற்றோமற்றெற்று" என்று அரற்றியது.ஔவையார் இன்னொரு பாடலைச் சொன்னார்.



கருங்குளவிசூரைத்தூறீச்சங்கனிபோல்வருந்தினர்க்கொன்றீயாதான் வாழ்க்கை - அரும்பகலேஇச்சித்திருந்தபொருள் தாயத்தார்கொள்வாரேஎற்றோமற்றெற்றோமற்றெற்று



ஈச்சமரம் ஒன்று. அதில் கருங்குளவி என்னும் கடுவிஷம் கொண்ட குளவி கூடுகட்டி ஏராளமாக இருக்கிறது. சூரை என்னும் முள் அந்த மரத்தின் தூறில் இருக்கிறது. அந்த ஈச்ச மரத்தின் கனியை யாரும் அண்டி, பறித்து உண்ணமுடியாது. துன்பப்பட்டவர்களுக்கு ஒன்றுமே தானம் செய்யாதவன் வாழ்க்கை எப்படியிருக்கும்? பகலில் அவன் மிகவும் இச்சையுடன் வைத்திருந்த பொருள் அன்று இரவிலேயே பங்காளிகள் கைக்கொள்ளும்வண்ணம் அவன் போவான். அந்த மாதிரி ஈயாலோபியை எற்று, மறுபடியும் எற்று; மீண்டும் எற்று! என்னை ஏன் எற்றுகிறாய்?



இதைக் கேட்டு பேய் ஓலமிட்டவாறு ஓடிப்போய்விட்டது.மூன்றாம் சாமத்தில் மீண்டும் வந்தது. அப்போதும் அது "எற்றோமற்றெற்றோமற்றெற்று!"என்று அலறியது.மூன்றாவது பாடலையும் ஔவையார் சொன்னார்.



வானமுளதான் மழையுளதான் மண்ணுலகிற்றானமுளதாற்றயையுளதால் - ஆனபொழுதெய்த்தோமிளைத்தோமென்றேமாந்திருப்போரைஎற்றோமற்றெற்றோமற்றெற்று



வானமும் இருக்கின்றதால், மழையும் இருப்பதால், மண்ணுலகில் தானமும் இருப்பதால் தயையும் இருப்பதால் நமக்கு என்ன கவலை? சம்பாதித்தோம், இழந்தோம் என்றவண்ணம் கருக்கடையோ சமர்த்தோ இல்லாமல் ஏமாந்து இருப்போரை எற்று, மறுபடியும் எற்று; மீண்டும் எற்று! என்னை ஏன் எற்றுகிறாய்?



பேய் மீண்டும் ஓடிப்போய்விட்டது.நான்காவது ஜாமத்தில் மீண்டும் பேய் வந்தது. அப்போது அது மிகவும் நெருங்கி வந்து,"எற்றோமற்றெற்றோமற்றெற்று" என்றது.அதற்கு ஔவையார் நான்காவதாக ஒரு பாடலைப் பாடினார்.



எண்ணாயிரத்தாண்டு நீரிற் கிடந்தாலும்உண்ணீரம்பற்றாக்கிடையேபோற் - பெண்ணாவாய்பொற்றொடி மாதர் புணர்முலைமேற்சாராரைஎற்றோமற்றெற்றோமற்றெற்று



எட்டாயிரம் வருடங்கள் தண்ணீரில் ஊறினாலும் உள்ளுக்குள் ஈரத்தைப் பற்றி இழுத்துக்கொள்ளாத கிடையைப்போல சிலர் இருப்பர். அவர்கள் இந்த உலகிலேயே வாழ்ந்தாலும் இதன் போகங்களில் ஒன்றான பெண் போகத்தில் ஈடுபடாமலிருப்போரை, ஏ பெண்ணாக இருப்பவளே! நீ போய் அவர்களை எற்று, மறுபடியும் எற்று; மீண்டும் எற்று! என்னை ஏன் எற்றுகிறாய்?



இந்த வெண்பாவில் அடங்கிய கருத்துக்கள் அனைத்துமே யதார்த்தமானவை. நியாயமானவை. "அப்படியேல்லாம் ஆட்கள் இருக்கும்போது என்னை ஏன் எற்றவருகிறாய்?எற்றுவதென்றால் அவர்களைப்போய் எற்று!"



இந்தப் பாடலைச்சொல்லியவாறு, தன் திருநீற்று மடலிலிருந்து ஒரு பிடி திருநீற்றை எடுத்து அந்தப் பேயின் மீது வீசினார்."முன்னால் வந்து நில் அப்படியே! பேசு! யார் நீ? ஏன் இப்படிச் செய்கிறாய்? என்னவேண்டும் உனக்கு?", என்று பேயைக்கேட்டார்.பேயின் உருவம் மங்கியது. மீண்டும் வேறொரு உருவம் அங்கு தெரிந்தது.மிக அழகிய இளம் பெண்.

பேயின் உருவம் மங்கியது. மீண்டும் வேறொரு உருவம் அங்கு தெரிந்தது.மிக அழகிய இளம் பெண்.அது தன் கதையைச் சொன்னது.....தன் பூர்வீக வாழ்வில் அது ஓர் அரசகுமாரியாக இருந்தது.பெயர் ஏலவார்குழலி.மிக அழகான பெண். பலகலைகளையும் அறிந்தவள்.ஊருக்கு வெளியில் தனியாக இருந்த கன்னிமாடத்தின் பூந்தோட்டத்தில் ஒருநாள் தன் தோழிகளுடன் பூப்பந்து விளையாடிக்கொண்டிருந்தாள்.அப்போது அழகிய இளைஞன் ஒருவன் கன்னிமாடத்திற்குள் எப்படியோ வந்துவிட்டான். அப்படியே நந்தவனத்தின் பக்கத்தில் வரும்போது, அரசகுமாரி தட்டிய பூப்பந்து அவன் மேல் விழுந்தது. அதை அப்படியே பிடித்துக்கொண்டான். அதைக் கொண்டுவந்து அரசகுமாரியிடம் கொடுத்தான். கண்டவுடன் காதல் தோன்றியது. அதன் பின்னர் வந்த வழியே போய்விட்டான்.அரசகுமாரி அவனை யாரென்று கண்டறிய தன்னுடைய அந்தரங்க உளவாளிகளை அனுப்புஇனாள்.அவன் இன்னொரு நாட்டு இளவரசன். நாடுகளைச்சுற்றிப் பார்க்க அவன் புறப்பட்டவன். வழியில் இந்த நாட்டுக்கும் வந்திருக்கிறான். ஒரு சத்திரத்தில் அவன் தங்கியிருக்கிறான்.உடனே அவனை எப்படியாவது சந்திக்கவேண்டும் என்ற வேட்கையால் உந்தப்பட்டு, அரசகுமாரி ஒரு காதல் மடலை எழுதினாள். அதில் கன்னிமாடத்தின் அருகே இருக்கும் நந்தவனத்தில் மணிமண்டபத்துக்கு அன்று இரவு இரண்டாம் ஜாமத்தில் வரச்சொல்லி, அதற்குப்பாதையையும் தெரிவித்தாள்.இதை மிக ரகசியமாக அவனுக்கு அனுப்பிவைத்தாள்.சத்திரத்தில் அரசகுமாரனிடம் அந்த மடல் சேர்ப்பிக்கப்பட்டது.கடிதத்தைப் பார்த்து இளவரசன் திகைத்தான்.ஏனெனில் இளவரசனுக்கு எழுதப் படிக்கத்தெரியாது.அருகில் ஒரு சன்னியாசி அமர்ந்திருந்தான். அவன் ஒரு தொழுநோயாளி.அவனிடம் ஓலைக்கொடுத்துப் படிக்கச்சொன்னான்.ஓலையைப் படித்து அறிந்த சன்னியாசி, ஒரு சதித்திட்டம் போட்டான்.இளவரசனைப் பார்த்து, "நீர் இந்த நாட்டு இளவரசியின் கன்னிமாடத்துக்குள் அத்துமீறி நுழைந்துவிட்டதால் உம் தலையை வாங்குமாறு உத்தரவாகியிருக்கிறது. காவலாளிகள் வந்துகொண்டிருக்கிறார்கள்", என்றான்.இளவரசன் சன்னியாசியிடம் என்ன செய்வதென்று யோசனை கேட்டான்.உடனடியாக ஓடிப்போகச் சொன்னான்.இளவரசனும் உடனடியாக ஊரைவிட்டு நாட்டைவிட்டுப் போனான்.இரவு இரண்டாம் ஜாமத்தில் சன்னியாசி தன்னைச் சால்வையால் போர்த்துக்கொண்டு மண்டபத்துக்குச்சென்றான். அங்கு வந்த இளவரசி அவன்தான் இளவரசன் என்றெண்ணி அவனைத் தழுவிக்கொண்டாள். சிறிது நேரம் கழித்தே சன்னியாசியை அறிந்துகொண்டாள். அவனும் அரசகுமாரியைப் பலாத்காரம் செய்தான். அதனால் அரசகுமாரி கத்தியால் குத்திக்கொண்டு இறந்துபோனாள்.இறந்தவள் ஒரு பயங்கர பேயாக மாறினாள்.அவளுடைய பைசாச வெறியால் அந்த வட்டாரத்தையே நாசப்படுத்திப் பாழடையவைத்தாள். அங்கு வருபவர்களையும் கொன்றுபோட்டாள்.காதலில் தோல்வியடைந்து உயிருக்குப் பயந்து ஓடிய இளவரசனும் மனம் நொந்துபோய் இறந்துபோனான்.அவனும் இன்னொரு இடத்தில் பேயாக அலைந்துகொண்டிருந்தான்.இதையெல்லாம் சொல்லிமுடித்த அந்த அரசகுமாரிப் பேய் ஔவையாரின் கால்களில் விழுந்தது.ஔவையார் அந்தப் பேயின்மேல் இரக்கம் கொண்டார்."நீ உடனடியாக மறுபடியும் பிறப்பாய். நீ ஒரு பெரிய வித்வம்சினியாக இருப்பாய். அறுபத்துநான்கு கலைகள், சாத்திரங்கள், மொழிகள் அறிந்த புலவராக இருப்பாய். உன்னைத்திருமணம் புரிய வருபவர்களுக்கெல்லாம் கடுமையான சோதனைகள் வைப்பாய். அவர்கள் தோற்று உன் அடிமைகளாவார்கள். உன் காதலனாகிய இளவரசன் இன்னொரு ஊரில் பிறப்பான். அவன் ஒரு பெரும்புலவனாகவும் வீரனாகும் திகழ்வான். அவன் உன்னை வென்று உன்னைத் திருமணம் செய்துகொள்வான். நீங்கள் இருவரும் பல காலம் வளமுடன் வாழ்வீர்கள்".அவ்வாறே நடந்தது.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Short Stories (in Tamil script)

Post by cmlover »

This episode is nicely dramatized in
Gemini's Auvvaiyaar movie...
http://www.youtube.com/watch?v=OjiyzRQX ... ure=relmfu

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: Short Stories (in Tamil script)

Post by vgovindan »

'நெஞ்சு பொறுக்குதில்லையே' என்று பாரதி மூட நம்பிக்கைகளைக் கண்டித்து சுதந்திரத்திற்கு முன் பாடினான். இன்று நாடு சுதந்திரம் பெற்று எழுபது ஆண்டுகள் ஆகியபின்னும், கம்ப்யூட்டரும், இண்டர்நெட்டும் உலகையே மாற்றியமைத்தபின்னும், இன்னமும் பேய்க்கதைகளைக் கேட்டுக்கொண்டிருக்கின்றோம்.

அவ்வையார் பாடிய இந்த நான்கு பாடல்களும் பேயை நோக்கித்தான் பாடினார் என்பதற்கு இம்மியளவேனும் ஆதாரம் அந்தப் பாடலின் வரிகளில் உள்ளனவா என்பது சிந்திக்கத் தக்கது.

எற்றோமற்றெற்றோமற்றெற்று!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Short Stories (in Tamil script)

Post by venkatakailasam »

Shri Govindan...

Even though I like your attitude in many matters, I feel some thing is discordant in your thinking...

That when with the improvement in technology, we have to discord what we have inherited from our forefathers..

These Avvaiyar stories I read in my 6/7th form...you also must have read it..

Avvaiyar II lived during the period of Kambar and Ottakoothar during the reign of the Chola dynasty in the 13th century. She is often imagined as an old and intelligent lady by Tamil people. She wrote many of the poems that remain very popular even now and are inculcated in school textbooks in Tamil Nadu. These books include a list of dos and don'ts, useful for daily life, arranged in simple and short sentences. ( there seems to have been more than one Avvaiyar)..

we have to take them for their literary value..Wonderful compositions..each time you read ,you get a different meaning..

That is my view..

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Short Stories (in Tamil script)

Post by venkatakailasam »

ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் இறந்து விட்டான். அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார்.
கடவுள்: "வா மகனே........நாம் கிளம்புவதற்கான நேரம் நெருங்கி விட்டது......."
ஆச்சரியத்துடன் மனிதன் "இப்பவேவா? இவ்வளவு சீக்கிரமாகவா? என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது?"
"மன்னித்துவிடு மகனே........உன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது........."
"அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?"
"உன்னுடைய உடைமைகள்........."
"என்னுடைய உடைமைகளா!!!.......அதாவது என்னுடைய பொருட்கள், உடைகள், பணம்,.............?"
"இவை அனைத்தும் உன்னுடையது அல்ல........ அவை பூமியில் நீ வாழ்வதற்கானது........."
"என்னுடைய நினைவுகளா?............."
"அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது.........அவை காலத்தின் கோலம்........"
"என்னுடைய திறமைகளா?..........."
"அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது.........அவை சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது......."
"அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா?......"
"மன்னிக்கவும்...........குடும்பமும் நண்பர்களும் நீ வாழ்வதற்கான வழி.........."
"அப்படி என்றால் என் மனைவி மற்றும் மக்கள்?"
"உன் மனைவியும் மக்களும் உனக்கு சொந்தமானது கிடையாது......... அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்............"
"என் உடல்?..........."
"அதுவும் உன்னுடையது கிடையாது..........உடலும் குப்பையும் ஒன்று........."
"என் ஆன்மா?"
"இல்லை........அது என்னுடையது.........."
மிகுந்த பயத்துடன் மனிதன் கடவுளிடமிருந்து அந்தப் பெட்டியை வாங்கி திறந்தவன் அதிர்ச்சிக்குள்ளாகிறான்........ காலி பெட்டியைக் கண்டு..........
கண்ணில் நீர் வழிய கடவுளிடம் "என்னுடையது என்று எதுவும் இல்லையா?" எனக் கேட்க,
கடவுள் சொல்கிறார், "அதுதான் உண்மை. நீ வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது. வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான். ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வதுடன் நல்ல செயல்களை மட்டும் செய். எல்லாமே உன்னுடையது என்று நீ நினைக்காதே........"
-- ஒவ்வொரு நொடியும் வாழ்
-- உன்னுடைய வாழ்க்கையை வாழ்..அகம்பாவம், அசூயை, பொறாமை,
இவைகள் இல்லாத வாழ்க்கையை வாழ்..
-- மகிழ்ச்சியாக வாழ மறக்காதே.......அது மட்டுமே நிரந்தரம்.......
-- உன் இறுதிக் காலத்தில் நீ எதையும் உன்னுடன் கொண்டு போக முடியாது....

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: Short Stories (in Tamil script)

Post by vgovindan »

Vk,
Adi Sankara once said (reported to have said) 'purANas are like a jungle containing a treasure trove. You have to search and find the treasure'.
I revere Bhagavatam for its wonderful stories which exude bhakti of highest form. But it also contains such absurd stories as 'Siva chasing Mohini, his vIrya dripping to the ground; this vIrya became silver on the Earth'. I used to read Bhagavatam to my children before they went to sleep. When I came across this story, it was so disgusting and I omitted it.

I am telling this as an example of what one should absorb and what one should leave out.

Similarly, I was trying to search for the basis of this story in regard to Avvaiyar and could fine none. Avvaiyar is worshipper of Ganapati and her poems inculcate finest moral lessons. Therefore, there should be some basis for this story; otherwise, I take it that some spin doctor was working overtime.

Our (religious) literature is indeed a treasure trove. So also Sanskrit is called 'dEva bhAsha'. But there are many crooks who use these in order inject their base and absurd opinions and, over a period of time they tend to become part of the literature, thus putting a rational thinking person in a quandary over what to accept and what not.

Faith cannot be based on a dogma. It has to satisfy a rational mind. I would rather question such dogmas so that truth could be established rather than accepting these meekly.

PS (Edited) - The concerned stanzas by Avvaiyar makes wonderful sense even without the story of the devil. That is why I feel that the story is an interpolation.
Last edited by vgovindan on 25 Jul 2014, 23:39, edited 1 time in total.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Short Stories (in Tamil script)

Post by venkatakailasam »

A boat is docked in a tiny Mexican fishing village.

A tourist complimented the local fishermen on the quality of their fish and asked how long it took to catch them.

"Not very long." they answered in unison.

"Why didn't you stay out longer and catch more?"

The fishermen explained that their small catches were sufficient to meet their needs and those of their families.

"But what do you do with the rest of your time?"

"We sleep late, fish a little, play with our children, and take siestas with our wives. In the evenings, we go into the village to see our friends, have a few drinks, play the guitar, and sing a few songs.

We have a full life."
The tourist interrupted,

"I am an MBA from Harvard and I can help you!
You should start by fishing longer every day.
You can then sell the extra fish you catch.
With the extra revenue, you can buy a bigger boat."

"And after that?"

"With the extra money the larger boat will bring, you can buy a second one and a third one and so on until you have an entire fleet of trawlers.
Instead of selling your fish to a middle man, you can then negotiate directly with the processing plants and maybe even open your own plant.

You can then leave this little village and move to Mexico City , Los Angeles , or even New York City !

From there you can direct your huge new enterprise."

"How long would that take?"

"Twenty, perhaps twenty-five years." replied the tourist.

"And after that?"

"Afterwards? Well my friend, that's when it gets really interesting," answered the tourist, laughing. "When your business gets really big, you can start buying and selling stocks and make millions!"

"Millions? Really? And after that?" asked the fishermen.

"After that you'll be able to retire, live in a tiny village near the coast, sleep late, play with your children, catch a few fish, take a siesta with your wife and spend your evenings drinking and enjoying your friends."

"With all due respect sir, but that's exactly what we are doing now. So what's the point wasting twenty-five years?" asked the Mexicans.

And the moral of this story is:

Know where you're going in life, you may already be there! Many times in life, money is not everything.

“Live your life before life becomes lifeless”.

http://www.trackthetime.com/fun/story-o ... -fisherman

Post Reply