Kanchi Maha Periyava

Post Reply
thanjavooran
Posts: 2536
Joined: 03 Feb 2010, 04:44
x 177
x 63

#551 Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran » 03 Mar 2015, 07:56

A share from my friend
அப்பாவைப் பார்க்கணும்

ஈசுவரனைப் பலவாறாக உறவு கொண்டாடி, பக்தி செய்து மேன்மை அடைவது அடியார்கள் கைக்கொள்ளும் நெறி. இறைவனை, நண்பனாக,அன்னையாக,
யஜமானனாக, தந்தையாகப் பாவித்துப் போற்றுவார்கள். ஹாஸ்பெட் டாக்டர் ஆனந்தவல்லி அம்மாள், மகாப்பெரியவாளைத் தன்னைப் பெற்ற தந்தையாகவே-
இல்லை; அதற்கும் மேலே, மேலே ஓர் உயர்நிலையில் ‘அப்பா’வாகவே அடையாளம் கண்டு கொண்டுப் பழகினார்.
பெரியவாள் ஹம்பியில் தங்கியிருந்த காலம், நாள்தோறும் டாக்டர் அம்மாள் வந்துவிடுவார்-தரிசனத்துக்கு ஐந்து நிமிஷமாவது பெரியவாளுடன் பேசாமல் போக
மாட்டார். நம்மைப் போல், பெரியவா எதிரில், கூனிக் குறுகிக்கொண்டு, வாயைப் பொத்திக்கொண்டு பேசுகிற பக்திப் பாசாங்கு இல்லாமல் பேசுவாள்.பேச்சு மெய்ப்பாடுகள், குரல், எல்லாம் இயல்பாக இருக்கும். பெரியவாளுடன் பல
ஆண்டுகள் பழகி, ‘அவரை விட்டால் வேறு கதி இல்லை’ என்ற முடிவுக்கு வந்துவிட்டதைப் போலிருக்கும்.
ஐந்து நிமிஷத்துக்குள், ஐம்பது ‘அப்பா’ வந்துவிடும். அப்பா என்ற சொல்லே டாக்டர் ஆனந்தவல்லிக்காகவே படைக்கப்பட்டதாகத் தோன்றும். நொடிக்கு நொடி, ‘அப்பா’ என்பாரே தவிர, ஒவ்வொரு சொல்லிலும் ஒரு தாயாரின் கரிசனம் தெரியும். “நீங்க தினமும் ஃப்ரூட் ஜூஸ்,ரெண்டு தடவையாவது சாப்பிடணும்,அப்பா..’ ஏகாதசி
அன்னிக்கு நாலு தடவையாவது பால் சாப்பிடணும் அப்பா, அது ஒண்ணும் தப்பில்லே, உபவாசம் கெட்டுப் போயிடாது அப்பா.” – இப்படி எத்தனையோ உபதேசங்கள், பெரியவாளுக்கு ஆனால், இப்படிய்யெல்லாம் சொல்லும்போது, ஒரு தினையளவு கர்வம் தலைகாட்ட வேண்டுமே? இந்தச் சலுகை எனக்கு மட்டும் தான் என்ற
தன்முனைப்பு? ஊஹூம்.
டாக்டரின்’அப்பா’வில் தனியானதொரு மணம் வீசும். பின்னணியில் கந்தர்வக் குழுவினர் ஆனந்த பைரவி பாடுவதைப் போலிருக்கும். கின்னரப் பெண்டிரின் கால்
சதங்கையின் லயம் தவறாத ஒலி நெஞ்சை நிறைக்கும். பெரியவாளுக்குக் கைங்கரியம் செய்யும் தொண்டர்களுக்கு, அந்த அம்மையாரிடம் ஓர் இளக்காரம்.
டாக்டர் வந்து, ஆயிரம் அப்பாக்களால் பெரியவாளுக்கு சஹஸ்ர நாமம் செய்து விட்டுப் போனபின்னர், தொண்டர்கள் தங்கள் ஏளனங்களை வாய்விட்டுப் பேசி, திருப்தி அடைவார்கள். ‘என்னப்பா,சந்த்ரமௌளி,குளிச்சுட்டயாப்பா? கண்ணா, துணி துவச்சுட்டயாப்பா..’ குமரேசன் அப்பா, இன்னும் சாப்பிடலயாப்பா..”
(தொண்டர்களின் ஏளனப்பேச்சு)
ஆனால் டாக்டரின் ‘அப்பா’ வைரக்கல்; பட்டை தீட்டப்பட்ட கோஹினூர். ஒருநாள் இரவு நள்ளிரவு தாண்டிவிட்ட நேரம். கட்டிடத்தின் வெளிப்புறக் கதவு தட்டப்படும் ஓசை. தொண்டர்களுக்கு அலுப்பு,ஆயாசம்,களைப்பு, அடியார்கள் சிலரும் அங்கே தங்கியிருந்தார்கள். வேறு வழியில்லாமல் ஒரு தொண்டர் தட்டுத் தடுமாறி நடந்து வாசற் கதவைத் திறந்தார்.
திகைத்தார், வேரோடிப் போனார், யா…யார்?
டாக்டர் ஆனந்தவல்லி அம்மையார்…!
“அப்பாவைப் பார்க்கணும்…”
கெஞ்சல் இல்லை; அதட்டல் இல்லை;
ஆவேசம் இல்லை. இயல்பான குரல்.
தொண்டருக்கு வந்ததே, கோபம். “உங்களுக்கு என்ன பைத்தியமா,டாக்டர்?..
இந்த ரத்திரி வேளையிலே பெரியவாளை எப்படிப் பார்க்கிறது?..”
“அப்பாவைப் பார்க்கணும்”
“என்னடா அங்கே தகராறு?” என்று உட்புறத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.
“அப்பாவைப் பார்க்கணுமாம்..”
“யாரு? டாக்டரா?”
இந்தத் தொண்டர் எழுந்து சென்று வழி மறிப்பதற்குள் அம்மையார், இருவரையும் மீறிக்கொண்டு உள்ளே வந்து விட்டார்.
“அப்பாவைப் பார்க்கணும்” என்றார்,சாந்தமாக.
“நீங்க..மண்ணாங்கட்டி மரியாதை என்ன? நீ நிஜமான டாக்டரா? போலி டாக்டரா?..
ராத்திரியில் பெண்கள் மடத்துக்கு வரக்கூடாது.
“அப்பாவைப் பார்க்கணும்” என்றார்,உறுதியாக.
“இவ சொன்னா போகமாட்டா…அடிச்சுத்தான் அனுப்பணும். ஐந்தாறு ஆவேசக் குரல்களை மீறி, உள்ளே ஒரு கதவு திறக்கப்படும் மெல்லிய ஒலி.
திரும்பிப் பார்த்தார்கள், பெரியவாள்! தான் படுத்திருந்த அறைக்கு வெளியே வந்து
நின்று கொண்டிருந்தார்கள்.
தடாலென்று விழுந்து வந்தனம் செய்தார்,
அம்மையார். “அப்பா..அப்பா…அப்பா.”
அமுதத்தில் தோய்ந்தெடுத்த அப்பாக்கள்!
தரிசனம் ஆகிவிட்டது போகவேண்டியது தானே? போகவேண்டியது தான். ஆனால் சைகைகாட்டிப் பெரியவாள் அழைக்கிறார்களே?
அடடா…
அரைமணி நேரம் வெகுசங்கடமான நேரம். முன்னரோ,பின்னரோ நிகழ்ந்ததேயில்லை.
“பக்கத்து கிராமத்திலே ஒரு கேஸ், அப்பா, ரொம்ப க்ரிடிகல். தேவையான மெடிஸின்ஸ் கைவசம் இல்லே..சின்ன வயசுப் பொண்ணு.. ரொம்பப் போராடினேன். என்னாலே முடியல்ல.. அப்பா,அப்பான்னு நூற்றெட்டு தடவை சொன்னேன்…
உயிர் வந்துடுத்து..! பகல்லே அப்பாவைப் பார்க்கமுடியல்லே. கிராமத்திலேர்ந்து
வந்தவுடனே இங்கே வந்துட்டேன்..”
ஐந்து நிமிஷம் ஓர் அரவம் இல்லை.
பெரியவா மெல்லிய குரலில் கேட்டார்கள். “ராத்திரி வேளையிலே ஸ்திரிகள் மடத்துக்கு வரக்கூடாது..நான் தற்செயலா முழிச்சிண்டு வெளியே வந்தேன். இப்போ என்னைப் பார்க்க முடியல்லேன்னா என்ன பண்ணியிருப்பே?”
அம்மையார் விக்கித்துப் போய்விட்ட மாதிரி தெரிந்தது.
“என்னப்பா, இது? இவர்கள் மாதிரி, நீங்களும் கேட்கிறேள்? அப்பாவைப் பார்க்கணும் என்கிற எண்ணம் இருந்ததே தவிர அது முடியாமற்போகலாம் என்று எனக்குத்
தோன்றவேயில்லையப்பா !அது எப்படி முடியாமற்போகும்? என் அப்பாவைப் பார்க்கணும்..அவ்வளவு தான். ராத்திரியோ,பகலோ எனக்கு என்ன அப்பா?”
பெரியவாளின் சிரம், நாற்புறமும் சுற்றிவிட்டு, ஓர் இடத்தில் நிலைகொண்டது. அங்கேயிருந்த ஒரு முழம் மல்லிகைச் சரத்தையும்,மாம்பழத்தையும் தட்டில் வைத்து,
பெரியவாள் ஆசியுடன் அம்மையாரிடம் கொடுத்தார்,தொண்டர்.
வந்தனம் செய்துவிட்டு,”அஞ்சு மணிக்கு விசுவரூப தரிசனத்துக்கு வந்துடறேன்”ப்பா என்று சொல்லிவிட்டு ஓர் அரசகுமாரியின் வீறாப்புடன் வாசல் நோக்கி
நடந்து சென்றார்,டாக்டர்.
நடந்ததெல்லாம் கனவா,நனவா என்றே புரியவில்லை. தொண்டர்களுக்கு.
விடியற்காலம், விசுவரூப தரிசனத்துக்கு ஆஜரானார் டாக்டர்.
ஆனால், தொண்டர்கள் கண்களுக்கு ஒரு தேவதையாகக் காட்சி தந்தார்
0 x

thanjavooran
Posts: 2536
Joined: 03 Feb 2010, 04:44
x 177
x 63

#552 Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran » 07 Mar 2015, 20:30

நரசிம்மரும்ரிய காஞ்சி மகா பெவாளும்

நரசிம்மரும்ரிய காஞ்சி மகா பெவாளும் – வைகாசி அனுஷம் – மஹா பெரியவா ஜெயந்தி
நரசிம்மர் ஓவியத்தை வரைந்தவர் ஹிந்து கேஷவ் தான்…
மஹா பெரியவரிடம் அளவு கடந்த பக்தி கொண்ட ஒரு தம்பதி. மகானை அனுதினமும் பூஜை செய்யாமல் எந்த காரியத்தையும் அவர்கள் தொடங்குவதே இல்லை. இல்லத்தரசி கர்ப்பிணி ஆனார். தங்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தை நல்ல விதமாகப் பிறக்க வேண்டும் என்று அவர்கள் அனுதினமும் மகானை வேண்டாத நாள் இல்லை. இத்தனைக்கும் அவர்களது குலதெய்வம் நரசிம்மர்!
ஒரு நாள் இரவில், அந்த கர்ப்பிணிப் பெண் தூங்கிக்கொண்டு இருந்தபோது, நரசிம்மர் அவர் கனவில் தோன்றி, ‘பிறக்கப் போகும் குழந்தைக்கு தன் பெயரை வைக்கவேண்டும்’ என்று உத்தரவிடுகிறார். ஆனால் குழந்தையைச் சுமந்த தாயோ, “எங்களுக்கு எல்லாமே காஞ்சி மகான்தான். அவரைக் கேட்டுத் தான் எதையும் செய்ய வேண்டும்” என்று வாதம் புரிகிறாள்.
நரசிம்மர் பிடிவாதமாக இருக்கிறார்.
காலையில் கண் விழித்தவுடன் தான் கண்ட கனவை கணவரிடம் சொன்னார் அந்தப் பெண்.
“நரசிம்மன் என்றே வைத்து நாம் அழைக்கலாம். எதற்கும் காஞ்சி மகானை அணுகி இது விஷயமாகக் கேட்டு விடலாம்” என்று முடிவு செய்தார்கள். குலதெய்வத்தின் பொல்லாப்பு வரக் கூடாதல்லவா?
அவர்களுக்கு அழகான ஓர் ஆண் மகவு பிறந்தது. உரிய தினத்தில் எல்லா சடங்குகளும் முடிந்த பிறகு ஒரு நாள் குழந்தையுடன் அவர்கள் மகானின் தரிசனத்துக்காகப் போனார்கள். மகானிடம் தான் கண்ட கனவைச் சொல்லி, என்ன செய்யலாம் என்று யோசனை கேட்க மனைவி முடிவு செய்ய, அதுதான் சரி என்று கணவனும் ஆமோதித்தார்.
தங்கள் முறை வந்தபோது, குழந்தையை மகானின் முன்னால் கீழே போட்டார்கள். குழந்தையைப் பார்த்தவுடன், மகானின் முகத்தில் லேசான குறுநகை பிரகாசம். அவர், ‘பொதுவா குழந்தை பிறந்த பிறகு உரிய சடங்குகளுக்குப் பிறகு தான் அதற்குப் பெயர் சூட்டுவார்கள். அனால் இவன் வயிற்றில் இருக்கும்போதே பெயரை வைத்துக் கொண்டு பிறந்திருக்கிறான்… இல்லையா நரசிம்மா?” என்று குழந்தையைப் பார்த்துச் சொன்னார். பெற்றோர்கள் அதிர்ச்சிக்குள்ளாகக் கேட்பானேன்? அவர்களின் எண்ணம் போலவே மகானும் அந்த தெய்வத்தின் பெயரை வைத்தே அழைத்து விட்டார். தங்கள் கனவு, எண்ணம் எதையுமே சொல்லாமல் மகான் அதே பெயரைச் சொல்கிறாரே, அது எப்படி ? தன் பக்தர்களுக்கு இப்படித்தான் மஹா பெரியவா அருள் பாலிக்கிறார்.
0 x

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16
x 1

#553 Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam » 08 Mar 2015, 17:49

சாண்டோ சின்னப்ப தேவரும், கண்ணதாசனும்...
ஒரு படப்பிடிப்பு சம்பந்தமாக காரில் போய்க் கொண்டிருந்தபோது மிக மோசமான விபத்து ஏற்பட்டது.
அதில் சின்னப்பா தேவருக்கு அவ்வளவாகக் காயம் இல்லை.

ஆனால் கண்ணதாசனுக்கு படுகாயம்
ஏற்பட்டு நினைவிழந்த நிலையில்
மருத்துவமனையில் இருந்தார்.
காஞ்சிப் பெரியவரிடம் மிகுந்த பக்தியும்
மரியாதையும் கொண்ட தேவர் அவர்கள், சிவஸ்தானம்
எனப்படும் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில்
பெரியவரைப்
பார்த்து வணங்கி ‘விபத்து நேர்ந்து விட்டது’
என்று சொன்ன மாத்திரத்தில் ‘கண்ணதாசன்
எப்படியிருக்கிறான்’
என்றும் பெரியவர் கேட்க,
அதிர்ந்து போனார் தேவர்.
கண்கள் கலங்க வியப்பும்
வருத்தமுமாய் “அவர் படுகாயத்துடன்
நினைவில்லாமல் மருத்துவமனையில் இருக்கிறார்”
என நா தழுதழுக்கக் கூறினார்.

தேவரின் கவலையை உணர்ந்த
பெரியவர், ‘சரி, கவலைப்படாதே...
இந்த விபூதியைக் கொண்டுபோய்,
அவன் நெற்றியில் இட்டு, வாயிலும்
சிறிதளவு போடு, மீதி இருப்பதை அவன்
தலையணைக்குக் கீழ் வைத்துவிடு’
என்று தன் திருக்கரங்களால்
விபூதி எடுத்து மடித்துத் தர,
தேவர் விதிர் விதிர்த்து, பெரியவரை மறுத்துப் பேசவும் துணிவின்றி தயங்க, மீண்டும பெரியவரின் கட்டளைக்கிணங்கி தயக்கத்தோடு கைநீட்டி விபூதியைப் பெறுகிறார்.

தேவரின் தயக்கத்திற்குக் காரணம், கண்ணதாசன்
நாத்திகத்தில் தீவிர ஈடுபாடு கொண்டு, திராவிட
கட்சிகளின் சார்பில் பிராமணர்களையும் சனாதன
தர்மத்தையும் நாக்கில் நரம்பில்லாது போல்
மேடைகளில் பேசி வந்த காலகட்டம் அது.
விபத்து நடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான்
காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு எதிரிலேயே நடந்த
கூட்டத்தின் மேடையில் படுபயங்கரமாகப்
பேசி மடாதிபதிகளை இழிவுபடுத்திப்
பேசியிருந்தார்.
எனவே அவரிடம் போய் இந்த
விபூதியை எப்படிக் கொடுப்பது என்பதுதான்
தேவரின் பெரியத் தயக்கமாயிருந்தது.
ஆனால் முக்காலமுணர்ந்த ஞானியாகிய பெரியவர், தேவரின் மனத்தயக்கத்தை உணர்ந்து ‘தயங்காமல் கொண்டுபோய் பூசு. சூரியனை சில சமயம் மேகம்
மறைப்பது போல் நாத்திகமேகம்
இதுவரை அவனை மறைத்திருந்தது.
இனி அவன் சூரியனாகத் திகழ்வான்.
அவன் எப்பேர்ப்பட்ட
பரம்பரையைச் சேர்ந்தவன் தெரியுமா?

கோவில் திருப்பணி செய்வதற்கே பிறந்தவர்கள் போல்
திகழ்ந்தவர்கள் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள்.

வரதராஜப் பெருமாள் கோவில் கோபுரத்
திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் கொள்ளுத்
தாத்தா. ஏகாம்பரநாதர் கோவில் திருப்பணியைச்
செய்தவர் கண்ணதாசனின் தாத்தா. காமாக்ஷி கோவில்
திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின்
தகப்பனார். இப்ப புரியறதா?’ என திருவாய்
மலர்ந்தருளினார்.

தேவர் மனந்தெளிந்தவராய்
பெரியவரை வணங்கி விடைபெற்று, நேராக மருத்துவமனைக்குச் சென்றார்.
நினைவிழந்து படுத்திருந்த கண்ணதாசனின் நெற்றியில் விபூதியைப்
பூசிவிட்டு சிறிது விபூதியை வாயிலும்
இட்டு, மீதியை தலையணையின் கீழ்
வைத்துவிட்டு வீடு திரும்பினார்.
அவர் சிந்தனையெல்லாம் கண்ணதாசன்
நினைவு திரும்பி நடந்ததை அறிந்து என்ன
சொல்வாரோ என்றே நினைத்தது.

மறுநாள் தேவர் மருத்துவமனை சென்று கண்ணதாசனின் படுக்கையை சற்றே படபடக்கும் நெஞ்சோடு நெருங்கியபோது கண்ணதாசனுக்கு நினைவு திரும்பி கண் விழித்திருந்தார்.

தேவரைப் பார்த்தவுடன், ‘வாங்க,
எத்தனை நாளா இப்படி படுக்கையில் இருக்கேன்.
கொஞ்சம் கண்ணாடியை எடுத்துக் கொடுங்களேன்.
என் முகத்தைப் பார்க்கணும்’ என்றார்.

நேற்று இட்ட விபூதி இன்னமும் நெற்றியில் திகழ, தேவர்
தயங்கியபடியே தந்த கண்ணாடியில் தன் முகம் கண்ட கண்ணதாசன்
‘இதென்ன விபூதி?’
என்று தேவரை ஏறிட்டுப் பார்க்க,
வேறு வழியின்றி வந்தது வரட்டுமென தேவர், தான் பெரியவரைப் பார்த்ததையும்,
பெரியவர் ஆசீர்வாதம் செய்து விபூதி கொடுத்ததையும் சொல்ல,
கண்ணதாசனின் விழிகளில் அருவியெனக்
கொட்டியது கண்ணீர்.

திகைத்து நின்ற தேவரின்
செவிகளில் தேனாகப் பாயந்தது கண்ணதாசனின்
வார்த்தைகள், ‘எனக்கா?
என்னிடமா இவ்வளவு கருணை? போனவாரம்தான்
அவரை, ஐயோ’ என வாய்விட்டுப்
புலம்பி அழுததோடு, தேவரிடம்
ஒரு வேண்டுகோளையும் சமர்ப்பித்தார்.
‘எனக்கு உடல்நலமாகி மருத்துவமனையிலிருந்து
வெளியேறும் சமயம் நான் வீட்டிற்குச்
செல்லமாட்டேன். இந்தப் பாவியிடம் கருணைவைத்த
அந்த மகானிடம் முதலில்
என்னை தயவுசெய்து அழைத்துச் செல்லுங்கள்’ என
மனமுருகி வேண்டினார்.
கண்ணதாசன் வேண்டியபடியே அந்த நல்ல
சந்திப்பும், பாவமன்னிப்பும் நடந்தது.
மாறியது மனம், நன்றியில் ஊறியது தினம்,
வீறிட்டு வெளிவந்தது ஒரு கவிதை.
அக்கவிதையை எடுத்துக் கொண்டு,
பெரியவரை நேரில் கண்டு வணங்கி, கவிதையைச்
சமர்ப்பித்தார், கண்ணதாசன். அக்கவிதை இதோ :
பார்த்த மாத்திரத்தில் பாவத்தை அலம்புகின்ற
தீர்த்தப் பெருக்கு, திருவாசகத்தின் உட்கருத்து
கூர்த்த மதியால் மெய்ஞானக் கருத்துணர்த்தும்
முழுமூர்த்தம்
கலிமொய்க்கும் இவ்வுலகைக் காக்கவந்த கண்கண்ட
தெய்வம்
எம்மதத்தோரும் சம்மதத்துடன் தம்மதத் தலைவனென
தொழுதேத்தும் தெய்வக் கமலக் கழல் தொழுவோம் வாரீர்!

கவிதை வரிகளைக் கண்ட பெரியவர்,
கண்ணதாசனைக் கனிவோடு நோக்கி, ‘அனந்த
கோடி அற்புத லீலா சாகித்ய மாயமானுஷாய
நமோ நமஹ, அர்த்தநாரி திருவண்ணாமலை சேஷாத்ரி
மகானுக்கல்லவா இது பொருந்தும்’ என்று அருளாசிக்
கூறி, ‘அங்கிங்கெனாதபடி எங்கும்
நிறைந்திருக்கும் நிர்மலப் பொருள் ஞானசூரியனாம்,
மதத்தின் பெருமையை எழுது’ என்று திருவாய்
மலர்ந்தருள,
அக்கணமே கண்ணதாசனின் மனதில்
“அர்த்தமுள்ள இந்துமதம்” அழகாய் அரும்பி பலநாள்
உழைப்பில் இதழ் விரித்து மணம் வீசியது.

இந்து மதமே அர்த்தம் உள்ளதுதானே ...
0 x

thanjavooran
Posts: 2536
Joined: 03 Feb 2010, 04:44
x 177
x 63

#554 Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran » 10 Mar 2015, 08:57

A share

ஹாஸ்பிடல் எங்கேன்னு கேளு

“திருப்புகழ் மணி” என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்ட க்ருஷ்ணஸ்வாமி ஐயர், பெரியவாளின் அத்யந்த பக்தர். மைலாப்பூரில் இருந்தார். பெரியவாளிடம் அபரிமிதமான பக்தி உள்ள குடும்பம். திருப்புகழ் பாடல்களை ப்ரபலமாக்கியவர்களில் க்ருஷ்ணஸ்வாமி ஐயரை குறிப்பிட்டு சொல்லலாம். அவருடைய மனைவிக்கு காசநோய் (TB) கடுமையாகிவிட்டது. ஆந்த்ராவில் மதனபள்ளி ஹாஸ்பிடலில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
பெரியவா கால்நடையாக காஸி யாத்ரை புறப்பட்டு, மதனபள்ளியில் தங்கி இருந்தார். அதைக் கேள்விப்பட்டவுடன், “இவ்வளவு ஸமீபமா பெரியவா வந்திருக்கறச்சே கூட, என்னோட பாபம், பெரியவாளை தர்ஶனம் பண்ண முடியலியே! ” மனஸும், ஶரீரமும் உருகிப் போய் கண்ணீர் வடிக்க மட்டுந்தான் முடிந்தது. ஆனால் உடல்நிலை இடம் கொடுக்கவில்லை.
” என்னோட கடைசி மூச்சு, இந்த படுக்கைலதான்” என்று அரற்றினாள்.
” காலன் வரதுக்குள்ள, என் ஶங்கரனை [கால காலனை] பாத்துட்டேன்னா….போறும். எவ்வளவோ ஆறுதலா இருக்கும்….பாழும் உடம்பு, படுக்கையில் புரளக்கூட முடியாம இருக்கு. நான் குடுத்து வெச்சது அவ்வளவுதான்”
அந்தர்யாமி அறியாததா?
மதனப்பள்ளிக்கு பெரியவாளை தர்ஶனம் பண்ண வந்த பக்தர்,
“பெரியவாகிட்ட ஒரு விண்ணப்பம்….திருப்புகழ் மணி ஐயரோட ஸம்ஸாரம் இங்க ஒரு ஆஸ்பத்ரில ரொம்ப ஸீரியஸ்ஸா இருக்கா…..TB….ரொம்ப அட்வான்ஸ் ஸ்டேஜ்….”
அவர் சொல்லி முடிக்கவில்லை, பாரிஷதரைக் கூப்பிட்டு, ” மணியோட பத்னி எந்த ஆஸ்பத்ரில இருக்கான்னு விஜாரி.. நான் பல்லாக்குலேயே உள்ள போயி அவளைப் பாக்கலாமா…ன்னு கேளு…”
பொதுவாக மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளை பார்க்கும் ஸம்ப்ரதாயம் ஸ்ரீ மடத்தில் இல்லை. ஆனால் இது special கேஸ்! திருப்புகழை தமிழ்நாட்டில் பரப்பிய முருக பக்தரின் ஸம்ஸாரம்….ஶுத்தாத்மா!!!
ஹாஸ்பிடல் அதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி பெற்று அந்த அம்மா படுத்திருந்த கட்டில் வரை, பல்லக்கிலேயே சென்று தர்ஶனம் கொடுத்தார் பெரியவா!!
இது முன் பின் நடந்திராத அபூர்வ நிகழ்ச்சி!!
யாருக்குமே கிடைக்காத மஹாப் பெரிய பாக்யம்! பெரியவா தர்ஶனம் கிடைத்ததில் அம்மாவுக்கு மட்டற்ற மகிழ்ச்சி,
“நான் கனவுல கூட இதை நெனச்சு பாக்கல….பெரியவாளே வந்தாளே! இந்த ஜன்மத்தை கரையேத்தி விட்டுட்டாளே! இனிமே நேக்கு எந்த பயமோ, கவலையோ இல்ல….ஶங்கரா….ஶங்கரா” என்று ஈனஸ்வரத்தில் சொல்லி சொல்லி கண்ணீர் வடித்தாள். தர்ஶனத்துக்கு முன் வரை மனம் சோர்ந்திருந்தவள், பின்னர் எப்போதும் மனதெம்போடு இருந்தாள்..
சில நாட்களிலேயே ஶிவ கணங்கள் வந்து அவளை ஶிவபதத்தில் சேர்க்க அழைத்துச் சென்றனர்.
0 x

thanjavooran
Posts: 2536
Joined: 03 Feb 2010, 04:44
x 177
x 63

#555 Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran » 15 Mar 2015, 04:05

A share
ர்காயுஷ்மான் பவ.

பல வருஷங்களுக்கு முன் செய்தி....
பெரியவாள் தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்த சமயத்தில்
நாலைந்து வித்வான்கள் தரிசனத்துக்கு வந்திருந்தார்கள்.
பேச்சு வாக்கில் ''நான் நாராயண ,நாராயண் ஏன்று
ஆசீர்வதிக்கிறேன், சம்சாரிகளான நீங்கள் என்ன சொல்லி
வாழ்த்துகிறீர்கள்'' என்று கேட்டார்கள்.
அதற்கு ''தீர்காயுஷ்மான் ஸௌம்ய'' என்று வாழ்த்துகிறோம்
என்று அந்த பண்டிதர்கள் சொன்னார்கள்.
''அதற்கு என்ன அர்த்தம்''?
''நீண்ட நாட்கள் சௌக்யமாய் இரு ''என்று அர்த்தம்.
அங்கிருந்த வித்வாங்களை த் தனித் தனியே கேட்டார்.
எல்லாரும் அதே பதிலையே சொன்னார்கள்.
கொஞ்ச நேரம் மௌனமாய் இருந்த பெரியவா''நீங்கள்
அனைவரும் சொன்ன அர்த்தம் தவறு ''என்றார்.
பண்டிதர்களுக்கு தூக்கிவாரிப் போட்டது. அத்தனை
பேரும் சிரோமணி பட்டம் வாங்கியவர்கள்.
தீர்காயுஷ்மான் பவ ஸௌம்ய என்பதற்கு ஓரளவு
ஸம்ஸ்க்ருதம் பயின்றவர்களே பதில் பொருள் சொல்லமுடியும்.
அவ்வளவு எளிமையான சொல்லுக்கு விளக்கம் தப்பு
என்கிறாரே பெரியவா?
''நானே சொல்லி விடட்டுமா?''
பண்டிதர்கள் பொருள் விளக்கத்துக்குக் காதைத்
தீட்டிக் கொண்டார்கள்.
''இருபத்தேழு யோகங்களின் ஒன்றின் பெயர்
ஆயுஷ்மான்.பதினொரு கரணங்களில் , பவ
என்று ஒரு கரணம், வார நாட்களில் ஸௌம்ய
என்று வாஸரம் வருகிறது, புதன் கிழமை.
புதன் கிழமையில் ஆயுஷ்மான் யோகமும் பவ கரணமும்
சேர்ந்து வந்தால் அந்த நாள் ரொம்ப ச்லாக்யமான னாள்
என்று சொல்வார்கள்.வேகமா விருத்தி ஏற்படும்னு சொல்வா.
அதனாலே இந்த மூணும் கூடி வந்தால் என்ன பலன் கிடைக்குமோ
அதெல்லாம் உனக்குக் கிடைக்க வேண்டுமென ஆசிர்வதிக்கிறேன்''
என்று அர்த்தம் என்றார்.
அங்கிருந்த சிரோமணிகள் வித்யா வாசஸ்பதிகள்
கிளிப்பிள்ளை மாதிரி சொன்ன வாக்யத்துக்கு எத்தனை
அர்த்த புஷ்டியாந விளக்கம் கொடுத்தார் இந்த ஞானப்பிள்ளை!
ஹர ஹர சங்கரா...
0 x

thanjavooran
Posts: 2536
Joined: 03 Feb 2010, 04:44
x 177
x 63

#556 Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran » 17 Mar 2015, 11:58

A share from my friend

: சங்கரன் எனும் teacher

ஜய ஜய சங்கர ஜய ஜய சங்கர ஜய ஜய சங்கர ஜய ஜய சங்கர
ஹர ஹர சங்கர ஹர ஹர சங்கர ஹர ஹர சங்கர ஹர ஹர சங்கர

​கும்பகோணத்தில் வசித்து வந்த திரு சதாசிவம் ஒவ்வொருஅனுஷ தினத்தன்றும் காஞ்சியில் பெரியவாள் இருக்கிறாரா என்று உறுதி செய்து கொண்டு
தன் பயணத்தை துவங்கி விடுவார்.வேறு எங்கேனும் வெளியூர்களில் முகாமிட்டிருந்தால் அப்போது பயணிக்கமாட்டார்.

அப்படி ஒரு அனுஷதினத்துக்கு முதல் நாள் மாலை..... பழங்கள்.கல்கண்டு வாங்கப் போனவருக்கு ஒரு சின்ன அதிர்ச்சி.ஒரு கடையும் காணவில்லை
இவரின் முகத்தைப் பார்த்த கீரை வியாபாரி "என்ன சாமீ பையும் கையுமா கடைக்குப் பொறப்படறயா..மெட்ராஸ்ல ஏதோ அரசியல் பிரச்னையாம்.
ஒரு கட்சிக்காரங்க கூட்டமாக திரண்டு வந்து எல்லாக் கடைகளையும் மூடச் சொல்லி உத்தரவு போட்டுட்டு போறாங்க.

"அட ஈஸ்வரா வெளியூருக்கு பஸ்ஸெல்லாம் போறதோ!" என்று ஒரு கேள்வி போட்டார். கடைகளயே பூட்ட வெச்சவங்க பஸ்ஸுகளை போக
விடுவாங்களா..

பிறகு மனைவியிடம் "என்ன ஜானகி இப்படி ஆயிடுத்து? நாளைய அனுஷத்திற்கு காஞ்சிபுரம் போக முடியமானு தெரியலயே..ஏன் இந்த சோதனை?
என்று கலங்கியவர் மகா ஸ்வாமிகளை மனதுக்குள் நினைத்துப் பிரார்த்தித்துக் கொண்டார். ப்ராப்தம் இருந்தா அங்கே இருப்போம் என்று சொல்லிவிட்டு
வாசலில் இரு பக்கத்தையும் பார்வையால் துழாவிக் கொண்டிருந்தார்.

வாசலில் நின்று கொண்டிருந்த சதாசிவத்தின் அருகே வெள்ளை நிற அம்பாஸடர் கார் ஒன்று வேகமாக வந்து நின்றது.பஞ்சகச்சம் அணிந்து தும்பைப்பூ
மாதிரியான வெள்ளை நிறத்தில் சட்டையுடன் விபூதி தரித்த ஒருவர் காரிலிருந்து கீழே இறங்கினார்.இறங்கியதைப் பார்த்ததும் சதாசிவ தம்பதிகளுக்கு
ஒன்றும் புரியவில்லை.

"சார் நமஸ்காரம்...எம்பேரு சங்கரன்.உள்ளே இருக்கிறது என் மனைவி.தஞ்சாவூர்லேருந்து வந்திண்டிருக்கோம். மனைவிக்கு திடீர்னு தலைவலி.
அவளுக்கு நல்ல டிகிரி காபி சாப்பிட்டா சரியாயிடும்.இன்னிக்குன்னு பார்த்தா ஓட்டல் எதுவும் இல்லை.உங்களுக்கு சிரமம் இல்லேன்னா
இரண்டு பேருக்கும் ஸ்டாராங்கா காபி போட்டு கொடுக்க முடியுமா?

"தாராளமா..உள்ளே வாங்கோ.காபி என்ன..டிபன் வேணும்னா கூட பண்ணித் தர்றேன்" என்று கனிவாகச் சொன்னார். மணக்கும் காபியைக் குடித்து விட்டு
வாயார வாழ்த்தினார்கள். அப்போது சதாசிவம்,"இப்போது எதுவரைக்கும் பயணப் பட்டுண்டுண்டிருக்கேள்?" ஒருவேளை சென்னை என்று சொன்னால்
தொற்றிக்கொண்டு போகலாமே என்ற ஒரு நப்பாசை.

"நான் காஞ்சிபுரத்துல பெரியவாளைத் தரிசிக்கப் போயிண்டிருக்கேன்.ஆறு மாசம் ஆஸ்திரேலியாவில் இருந்துவிட்டு போனவாரம்தான் தஞ்சாவூர் வந்தேன்.
நாளைக்கு அனுஷமா இருக்கு.நீங்களும் வரேளா? என்று அழைப்பு விடுத்தபோது சதாசிவம் தம்பதிகளுக்கு அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

நள்ளிரவு வேளையில் கார் வந்து நிற்பதைப் பார்த்து ஒடோடி வந்தார் மடத்து வாட்ச்மேன். சங்கரன் உடனே அவர்களைப் பார்த்து "உங்களை மடத்து வாசலில்
இறக்கி விடுவதற்காகத்தான் இங்கே வந்தேன்.நண்பர் பக்கத்துல இருக்கார்.அவா கிரஹத்துல தங்கிட்டு நாளைக்குக் காத்தால உங்களை வந்து பார்க்கிறேன்.
என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சங்கரன்.

காலை மடத்துக்கு அருகே உள்ள கடைகளில் வாங்கிய பழங்கள்,கல்கண்டு,புஷ்பங்கள் போன்றவற்றை ஒரு மூங்கில் தட்டில் எடுத்துக்கொண்டு பஞ்சகச்சம்
மற்றும் மடிசார் உடையுடன் பெரியவா தரிசனத்துக்காக காத்துக் கொண்டிருந்தனர் சதாசிவம் தம்பதிகள். சங்கரனை இடை இடையே தேடினார் நன்றி சொல்ல
வேண்டும் என்ற அவாவில்.

ஸ்ரீமடத்தின் உதவியாளர் ஒருவர்,சதாசிவத்தின் தோளைத் தொட்டு,"மாமா...கூப்பிட்டுண்டே இருக்கேன்..அப்படி யாரைத் தேடறேள்?
பெரியவா உங்களைக் கூப்பிடறா....வாங்கோ,.எம்பின்னால்" என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று நடந்தார்.பின் தொடர்ந்தனர் தம்பதிகள்.
"வாப்பா சதாசிவம்..கும்பகோணத்துல உனக்கு பழம்ஏதும் கிடைக்கலையோ? அதான் மடத்து வாசல்லயே வாங்கிண்டு வந்திருக்கே போலிருக்கு" என்று
கேட்டபோது ஆடித்தான் போனார் சதாசிவம்."ஆமாம் பெரியவா..அங்கே ஏதோ பிரச்னை.கடைகளும் இல்லை..பஸ்ஸும் இல்லை..."
"அதான் சொகுசா ஒரு கார்ல நன்னா தூங்கிண்டே மடத்துக்கு வந்து சேர்ந்துட்டியே...அப்புறம் என்ன...இந்தா" என்று பிரசாதத்தை நீட்டவும் என்ன பதில்
சொல்வதென்று தெரியாமல் பிரசாதத்தை வாங்கிக்கொண்டு கண்களில் ஒற்றிக் கொண்டார்.

பிறகு "சங்கரன்னு ஒருத்தர்.. அவர்தான் தன்னோட கார்ல என்னைக் கூட்டிண்டு வந்து நேத்து ராத்திரி இறக்கி விட்டுட்டுப் போனார்.
அவருக்குத்தான் நன்றி சொல்லணும்"என்றார் குழைவாக. "மடத்துக்கு வரணும்னு நினைச்சே...வந்துட்டே......இனிமே சங்கரனாவது,கிங்கரனாவது"
என்று பெரும் குரல் எடுத்து,சிரிக்க ஆரம்பித்தது அந்த பரபிரம்மம்.

சதாசிவத்துக்கு ஏதோ புரிவது போல் இருந்தது.ஆனால் புரியாதது மாதிரியும் இருந்தது.
"பஸ் எல்லாம் ஓட ஆரம்பிச்சுடத்து...மடத்துல போஜனம் பண்ணிட்டு,ஜாக்கிரதையா ஊர் போயிட்டு வா"என்று ஆசிர்வதித்தார் பெரியவா.

நடந்து முடிந்த காட்சிகளின் பிரமிப்பில் இருந்து மீள முடியாமல் வெளியே வந்த சதாசிவம்,நேற்று நள்ளிரவு தான் மடத்து வாசலில் இறங்கியபோது
பணியில் இருந்த வாட்ச்மேனைக் கண்டு அருகில் அழைத்து ""ஏம்ப்பா..நேத்து ராத்திரி பன்னிரண்டு மணிக்கு ஒரு வெள்ளை அம்பாஸடர் கார்ல நான் மடத்து
வாசல்ல இறங்கினபோது ஒரு பெரியவர் வண்டி ஓட்டிண்டு வந்தாரே ...அவர் திரும்ப இன்னிக்கு வந்தாரா?" என்று கேட்டார்.

"என்ன சாமீ.....நேத்து ராத்திரியா? எனக்கு டூட்டியே இல்லியே சாமீ...காலையில்தானே நான் வந்திருக்கேன்"

சதாசிவம் மீண்டும் அதிர்ந்தார்,"இல்லேப்பா....நேத்து ராத்திரி உன்னைப் பார்த்தேனே....இதே இடத்து வாசல்ல..." என்றார்.
புருவம் உயர்த்தி, "என்ன சாமீ நீங்க...சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்றீங்க.. நேத்திக்கு ராத்திரி செக்யூரிட்டி டூட்டிக்கு ஆளே இங்கு இல்ல சாமீ"
என்று சொல்லிவிட்டுப் போனார்.

சதாசிவத்தின் கண்களில் ஜலம் தளும்பியது. "அப்படி என்றால் ...நேற்று இரவு என்னையும் என் மனைவியையும் கும்பகோணத்தில் இருந்து
இங்கே கூட்டிக்கொண்டு வந்த சங்கரன் யார்?" என்று மனம் நெகிழ்ந்து அரற்றினார்.சர்வமும் உணர்ந்த சங்கரனாக அவருக்கு மகா பெரியவா
ஒரு விநாடி காட்சி தந்து மறைந்தார்,

"பெரியவா,,," என்று பெரும் குரலெடுத்து அழைத்து அந்த மடத்தின் வாசலில் ....மண் தரையில்.....பெரியவா இருக்கும் திசையை நோக்கி
சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார் சதாசிவம். கூடவே அவரது மனைவியும்..
0 x

thanjavooran
Posts: 2536
Joined: 03 Feb 2010, 04:44
x 177
x 63

#557 Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran » 05 Apr 2015, 05:55

A share
எல்லார் மனஸையும் நெகிழவைக்கும் மஹா பெரியவா பேரருள் மஹாபெரியவா சாதாரணமாக ரொம்ப கூட்டம் இல்லாவிட்டால் கூட ... , இரவு பத்து மணியானாலும் பக்தர்களின் குறைகளை கேட்டு உபாயமோ ஆறுதலோ சொல்லுவது வழக்கம்.

ஒருநாள் எல்லாரும் போனதும், பெரியவா ஸயனிக்க உள்ளே போனார். எனவே சிப்பந்திகள் தாழ்ந்த குரலில் ஏதோ பேசிக் கொண்டிருந்தபோது “நான் பெரியவாளை தர்சனம் பண்ணனும்” குரல் கேட்டு யாரென்று பார்த்தால், ஒரு 12 வயஸ் பையன் மிகவும் பரிதாபமான கோலத்தில் நின்று கொண்டிருந்தான்.

“இப்போல்லாம் பெரியவாளை பாக்க முடியாது……..சாப்டுட்டு ஒரு பக்கமா இங்கியே படுத்துக்கோ….காலேல தர்சனம் பண்ணு” பாரிஷதர் சொன்னார். இப்படி ஒரு பரிதாபமான கோலத்தில் ஒரு பையன் வந்திருக்கிறான் என்று பெரியவாளை எழுப்ப முடியாது. சிறுவன் விடுவதாயில்லை.

“எனக்கு இப்போ பசிக்கலை…பெரியவாளை மட்டும் எப்பிடியாவது தர்சனம் பண்ணனும் அண்ணா…” என்று சொல்லிவிட்டு, மிகவும் களைத்துப்போய் இருந்ததால், ஒரு பக்கமாக படுத்துக் கொண்டுவிட்டான். மறுநாள் காலை மஹா பெரியவா சிறுவனை தன்னிடம் அழைத்தார்.

“ஏம்பா….எங்கேர்ந்து வரே? ஓம்பேரென்ன? ஒங்கப்பா அம்மா யாரு? எங்கேயிருக்கா?……..” ஸ்ரீ மாதாவின் குரலை அந்த கன்று இனம் கண்டுகொண்டது. கண்களில் நீர் பெருக அந்த குழந்தைப் பையன் சொன்னான்.

“பெரியவா…..நான் மெட்ராஸ்ல ஒரு ஸ்கூல்ல படிச்சிண்டிருக்கேன்..எங்கப்பா, அம்மா, தங்கை மூணுபேரும் வெளியூர்ல இருந்தா. அப்பா திடீர்னு செத்துப் போய்ட்டார். அம்மாவும் தங்கையும் ரொம்ப கஷ்டப்பட்டா…பாவம்! அப்புறம் பம்பாய்ல ஒரு பெரிய பணக்கார மாமாவாத்ல சமையல் வேலை பண்ணிண்டு இருந்தா…..[சிறுவன் மேலே பேச முடியாமல் விம்மினான்]

.திடீர்னு எங்கம்மாவும் செத்துப் போய்ட்டா பெரியவா..” இதற்கு மேல் குழந்தையால் தொடர முடியாமால், விக்கி விக்கி அழ ஆரம்பித்தான். அப்பா அம்மா ரெண்டு பேரையுமே என்னால கடைசி வரைக்கும் பாக்க முடியலை பெரியவா. அவாளுக்கு கார்யம் பண்ணக்கூட என்னால முடியாது. நேக்கு இன்னும் பூணூல் போடலை..ங்கறதால பண்ண முடியாதுன்னு சொல்லிட்டா…எனக்கு ரொம்ப அழுகையா வருது

பெரியவா…..இப்போ அந்த பம்பாய்ல இருக்கற மாமா வேற, “ஒன்னோட தங்கையை வந்து அழைச்சிண்டு போ!” ன்னு எப்போப்பாத்தாலும் ஆள் விட்டுண்டே இருக்கார்……பெரியவா. நானே கவர்ன்மென்ட் ஸ்கூல் ஹாஸ்டல்ல இருக்கேன். என் அப்பா அம்மாக்கு கர்மாக்களைப் பண்ணனும், என் தங்கையை நன்னா வெச்சுக்கணும்..ன்னு நேக்கும் ரொம்ப ஆசையாத்தான் இருக்கும் பெரியவா. ஆனா, நானே சோத்துக்கு

வழி இல்லாம இருக்கேனே! அதான்…..ஒங்களை தர்சனம் பண்ணினா எனக்கு வழி சொல்லுவேள்னு மடத்துக்கு வந்தேன்…..” அழுகையோடு தட்டுத் தடுமாறி ன்னான்.

அவனையே சிலவினாடிகள் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அவன் சொல்லித்தானா அவருக்கு தெரியவேண்டும்? அவனைக் காப்பாற்றத்தானே இங்கே

வரவழைத்திருக்கிறார்!

“சரி. கொழந்தே! நீ கொஞ்ச நாள் இங்கியே இரு. என்ன?”

“சரி” என்று சந்தோஷமாக தலையாட்டியது அந்த குழந்தை. நாலைந்து நாட்களுக்குப் பிறகு, நெய்வேலியிலிருந்து சில உயர் அதிகாரிகள் மஹா பெரியவா தர்சனத்துக்கு வந்தார்கள். அவர்கள் கிளம்பும்போது, எதேச்சையாக அந்த பையன் அந்தப் பக்கம் வர, மஹா பெரியவா அவனிடம் ” சட்னு போய், அந்த நெய்வேலிலேர்ந்து வந்தவா

போய்ட்டாளான்னு பாரு! போகலைனா, நான் கூப்டேன்னு சொல்லு”……….அவருடைய திருவிளையாடலை யாரறிவார்?

அவர்கள் கிளம்பவில்லை. ஒவ்வொருவராக மஹா பெரியவா முன்னால் வர வர, “நீ இல்லை, நீ இல்லை” என்று திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தார். கடைசியாக வந்தவரைப் பார்த்ததும் மஹா பெரியவா முகத்தில் ஒரு புன்சிரிப்பு. “ம்ம்ம்ம்..இவரைத்தான் கூப்ட்டேன்.

இந்தாடா! கொழந்தே! ஒன்னோட கதையை இவர்கிட்ட சொல்லு” என்று சொன்னார். பையன் சொல்ல சொல்ல அதிகாரியின் முகத்தில் ஒரே ப்ரகாசம்!

“பெரியவா……..என்னோட அக்கா பம்பாய்ல இருக்கா.அவாத்துலதான் இந்த பையனோட அம்மா சமையல் வேலை பாத்துண்டு இருந்தா. அந்த அம்மா செத்துப் போனதும், என் மூலமாத்தான் இந்த பையனுக்கு தகவல் போச்சு! இவன் தங்கையை அழைச்சிண்டு போகணும்..ன்னு என் மூலமாத்தான் அவா சொல்லிண்டு இருந்தா…….” என்று மனஸார ஒப்புக்கொண்டார்.

“ரொம்ப நல்லதாப் போச்சு! இங்க பாரு. இந்த கொழந்தை பெத்தவாளை பறி குடுத்துட்டு தவிக்கறான்…..இவனோட, இவன் தங்கையையும் ஒன்னோட அழைச்சிண்டு போய், அவாளை படிக்கவெச்சு, ஆளாக்கறது ஒன்னோட பொறுப்பு! மொதல்ல இவனுக்கு உபநயனம் பண்ணி வை.

அவனைப் பெத்தவாளுக்கு கர்மாக்களை அவன் கையால பண்ண வை.

ஆகக்கூடி, இவா ரெண்டு பேரோட எதிர்காலத்துக்கு நீதான் எல்லாம் பண்ணனும். என்ன செய்வியா?”

அதிகாரிக்கோ சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை! பிரமிப்போ அதை விட பன்மடங்கு ! என்ன ஒரு லீலை! எப்படி கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்! எல்லாரையும் விட்டுவிட்டு தன்னிடம் அவர் கட்டளை இட்டது, தனக்கு கிடைத்த பெரும் பாக்யம் என்று பூரித்துப் போனார்.

அக்ஷணமே மஹா பெரியவா பாதத்தில் விழுந்து அந்த பையனையும், அவன் தங்கையையும் தன் சொந்தக் குழந்தைகள் போல் பாதுகாப்பதாக உறுதி மொழி குடுத்தார். மஹா பெரியவாளை நம்பினார் கெடுவதில்லை என்று அந்த குட்டிப் பையனுக்குக் கூட.
0 x

thanjavooran
Posts: 2536
Joined: 03 Feb 2010, 04:44
x 177
x 63

#558 Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran » 08 Apr 2015, 21:39

A share

Varagooran Narayanan
"சத்தம் அதிகம் வரும் பாகம் அடி,
குறைவாக உள்ளது நுனி."

(பெரியவாளின் சிற்பக்கலை நுட்பம்)

தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

பத்ராசலத்தில் ஸ்ரீராமர் கோயில் திருப்பணி
நடந்து முடிந்தது. கோயில் திருப்பணியில்
கை தேர்ந்த கணபதி ஸ்தபதி அந்த பொறுப்பை
ஏற்றிருந்தார்.

பத்ராசலத்துக்கு யாத்திரையாக வந்திருந்த
மகாபெரியவர்களிடம் "தாங்கள் அவசியம் வந்து
பார்வையிட வேண்டும்.தங்கள் கடாக்ஷம் வேண்டும்"
என அழைத்தார் ஸ்தபதி.பெரியவர்கள் கோதாவரியில்
ஸ்நானத்துக்குச் செல்லும் வழியில் அங்கே
நுழைந்தார்கள்.

கல்தூண் ஒன்றில் சிற்பம் செதுக்கும் வேலை
நடந்து வந்தது.

"இந்தத் தூணுக்கு அடிப்பாகம் எது,நுனிப்பாகம் எது"
என்று கேட்டார்கள் பெரியவர்கள். ஸ்தபதிக்கு ஒரே
திகைப்பு! 'இதைப் பார்த்தாலே தெரிகிறதே! இப்படி
ஏதோ குழந்தைத்தனமாகக் கேள்வி கேட்கிறார்களே!'
என்று எண்ணியபடி அந்தப் பாகங்களைச் சுட்டிக்
காண்பித்தார்.

"இந்த அடிப்பாகத்தை நுனியாகவும்,நுனியை
அடிப்பாகமாகவும் மாற்றலாமா?"என்று கேட்டார்கள்.

ஸ்தபதிக்கு ஒரே குழப்பமாக இருந்தது.

"செதுக்குவதற்கு முன்னால் ஒவ்வொரு தூணுக்கும்
இதுதான் அடிப்பாகம்,இதுதான் நுனி என்று எப்படித்
தீர்மானம் செய்வாய்" என்று கேட்டார்கள் சுவாமிகள்.

ஸ்தபதி பதில் சொல்லத் தெரியாமல் நின்றார்.

"சுத்தி எடுத்துவா, இதைக் கீழேயிருந்து மேல் வரை
கத்தியால் தட்டு.ஏதாவது தெரிகிறதா பார்"என்றார்கள்.

தட்டியபிறகு ஸ்தபதிக்கு ஏதோ ஒரு சந்தேகம்.
ஆனால் சொல்லத் தெரியவில்லை.

"மீண்டும் ஒருமுறை தட்டு.அதிலிருந்து வரும்
சத்தத்தைக் கவனி" என்றார்கள்.

"கீழே சத்தம் 'கணீர்' என்று வருகிறது. மேலே செல்லச்
செல்ல சத்தம் குறைகிறது" என்றார்,ஸ்தபதி.

"மரத்திலே வைரம் பாய்ந்த கட்டை என்பார்கள்.
அது சிகப்பாகக் கெட்டியாக இருக்கும். சுலபமாகப்
பிளக்க முடியாது.அதிலிருந்துதான் மரப்பாச்சி-
மரப்பொம்மை செய்வார்கள்.நீ அதைப்பற்றி
கேட்டிருப்பாய். அதுபோலதான் கல்லிலும்
வைரம் பாய்ந்த பாகம் கெட்டியாய் இருக்கும்.
அதிலிருந்து வெண்கலம் போல 'கணீர்' என்று
சத்தம் வரும். அதுவும் கெட்டியாக (அடர்த்தி
நிறைந்ததாக) இருக்கும். அந்தப் பகுதியைத்தான்
அடிப்பாகமாகக் கொள்வார்கள்.

"சத்தம் அதிகம் வரும் பாகம் அடி; குறைவாக
உள்ளது நுனி. நீ சரியாகத்தான் வைத்திருக்கிறாய்.
உனக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. சொல்லத்தான்
தெரியவில்லை" என்றார்கள் பெரியவர்கள்.

ஸ்தபதி உடனே சாஷ்டாங்கமாகப் பெரியவர்களின்
காலில் விழுந்து நமஸ்கரித்து, "தங்கள் அருளால்தான்
எல்லாம் நன்றாக அமைய வேண்டும்" என்று
பிரர்த்தித்தார். அப்படியே அமைய ஆசீர்வதித்தார்கள்
பெரியவர்கள்.

எல்லாக் கலைஞர்களுமே இப்படித்தான் முதலில்
சாமான்யமாக மதித்து,கடைசியில்,'இவர்களிடம்
நாம் கற்கவேண்டியது நிறைய இருக்கு' என்ற
முடிவுக்கு வருவார்கள்.

தெய்வத்துக்கு தெரியாத கலை ஏதும் உண்டா?
0 x

thanjavooran
Posts: 2536
Joined: 03 Feb 2010, 04:44
x 177
x 63

#559 Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran » 11 Apr 2015, 17:26

A share
Maha Periyava

"குரங்குகள் போன்ற மிருகங்களுக்கு கூட ஒரு discipline இருக்கு! லீடர் குரங்கு சொல்கிறபடி நடக்கின்றன"
பெரியவாள் பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
எதிரே, ஒரு பெரிய மரம். தடினமான குரங்கு ஒன்று வந்து மரத்தில் ஏறியது. பின், இருபது - முப்பது குரங்குகள் அந்த லீடர் குரங்கை தொடர்ந்து மரத்தில் ஏறின.
பெரியவாள், ஒரு கூடை மாம்பழத்தை மரத்தடியில் போட சொன்னார்கள்.
லீடர் குரங்கு என்ன உத்தரவு எப்படி போட்டதோ தெரியவில்லை! ஆனால், மற்ற குரங்குகள் ஒவ்வொன்றாக வந்து பழத்தை எடுத்துகொண்டு மேலே சென்றன. லீடர் குரங்கு மட்டும் ஒரு பழத்தை கூட தொடவில்லை!
பெரியவாள் சொன்னார்கள்:
"குரங்குகள் போன்ற மிருகங்களுக்கு கூட ஒரு discipline இருக்கு! லீடர் குரங்கு சொல்கிறபடி நடக்கின்றன.
"காட்டில், யானைகளுக்கு ஒரு தலைமை யானை இருக்கும். அந்த லீடர் யானையை follow பண்ணித்தான் மற்ற யானைகள் செல்லும்.
"ஒரு கட்டெறும்பு செத்துபோனால், மற்ற கட்டெறும்புகள் அதை இழுத்துச் செல்லும்.
"ஒரு காக்கை இறந்து போனால், மற்ற காக்கைகள் மரத்தில் உட்கார்ந்துகொண்டு துக்கமாய் கதறும்.
"ஆனால், ஆறறிவு படைத்த மனிதர்கள் தான் குரு சொல்கிறபடி நடப்பதில்லை. என்னை பார்த்து, நீங்களெல்லாம் ஆசார்யாள். பெரியவாள் என்றெல்லாம் சொல்கிறீர்கள். ஆனால், நான் சொல்வதை உங்களால் செய்ய முடிகிறதில்லை!"கவனமாக கேட்டுகொண்டிருந்த பக்தர்கள், ஒரே குரலாக, "பெரியவா என்ன உத்தரவு போட்டாலும் செய்கிறோம்" என்று பக்தியோடு பதிலளித்தார்கள்.
"சரி, காலையில் இரண்டு நிமிஷம், சாயங்காலம் இரண்டு நிமிஷம், எனக்காக ஒதுக்குங்கள். இருபத்திநான்கு மணி நேரத்தில், நாலு நிமிஷம் தான் கேட்கிறேன்.
"காலையில், இரண்டு நிமிஷம் "ராம, ராம" என்று சொலுங்கோ; சாயங்காலம் இரண்டு நிமிஷம் "சிவ, சிவ" ன்னு சொலுங்கோ..."
"அப்படியே செய்கிறோம்" என்று சுமார் நூறு பேர்கள் தெரிவித்து கொண்டார்கள்.
அமளி அடங்கியதும், பெரியவாள் அருகிலிருந்த தொண்டர்களிடம், "பத்து பன்னிரண்டு பேர்களாவது , சொன்ன சொல்லை காப்பாத்துவா" என்றார்கள்.
அந்த, யாரோ பத்து பன்னிரண்டு புண்ணியாத்மாக்களை உருவாக்குவதற்காகத்தான்., ஆழமான கருத்துடன், அரைமணி lecture!
குரங்கு, காட்டு யானை, கட்டெறும்பு, காக்கை - நமக்கு நல்ல வழிகாட்டிகள்; "ஆச்சார்யர்கள்".
அவர்களை (அவைகளை) யாவது follow பண்ணலாம் தானே?
0 x

thanjavooran
Posts: 2536
Joined: 03 Feb 2010, 04:44
x 177
x 63

#560 Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran » 17 Apr 2015, 05:21

A share
Periyava

Once, an iyengar from Indian Express editorial board came for Periyava Darshan… Though he was retired, he was one of the members in the network board. Sri Gurumurthy brought the iyengar along with him from Delhi. He, Goenka ‘s grandson and others had come for Periyava darshan… At that time, begins Sri Kannan mama…

Periyava asked the Iyengar, Do you know it was your father who taught “Aacharam” for Sri Matam? Iyengar didn’t know how to respond. What could Periyava possibly know about his family? What possibly his appa could have said to the revered ones in Sri Matam? Several questions bounced in his mind within seconds…

Do you know it was your father who taught “Aacharam” for Sri Matam?, once again the same Voice of God!

Ahaa, Ahaa, how come, no words could come out of his mouth even after trying to respond !

Later, Sri Kannan Mama explained, it was the first time that the Iyengar had come to have Periyava darshan… So nobody understood why Periyava was asking a question like this…

Periyava’s next question doubled Iyengar’ surprise!!!

Periyava said, You are son of Kalyanam Iyengar, right?

Yes, replied Iyenger with renewed surprise… How come Periyava knew his father? Infact no one there would have known his father… Iyengar was more surprised!

But Periyava explained, Your face has so much resemblance of your father. This explanation only multiplied Iyengar’s surprise further.

Do you know it was your father who taught “Aacharam” for Sri Matam? Again Periyava was back to the first question. However, Iyengar still couldn’t answer this question. Periyava himself started to explain (Well, who else could?)

Once I was staying in Thiruvaiyaru… Your father told me, “In our Vaishnava Sampradhaya, we are the ones who wash all the vessels that we use for Bhagavat Aaradhana… Here in Sri Matam, outsiders are washing the vessels… As far as we could, it is always better for the brahmins in Sri Matam to take up that work and wash the vessels”…

Since then, I asked the brahmans here to take up that chore and wash the vessels , said Periyava…

Periyava HIMSELF is a pinnacle of ‘Aacharam’… If Periyava says someone taught HIM Aacharam, we need to find out the new meaning of the word ‘humbleness’?

Look at how humbly Periyava quoted about Iyengar’s father, says Sri Kannan Mama. (Do you know it was your father who taught “Aacharam” for Sri Matam?)

Likewise, there are so many incidents… Though we have been with HIM all the time, though we could decipher HIS sign language, though we could understand what HE says from His very sight, interestingly, there are times, we wouldn’t be able to understand a thing…

Sri Kannan Mama says, even if we have 1000 mouths, we can still keep talking endlessly about Periyava… There is a poem, “Vallaan Unnai Paada Paada Vaai Inikudhe”… Likewise, it is ecstatic for the mouth to keep talking about Periyava…

Today’s Nectar :

periyava sepia

When we talk about Periyava, our words get purified…
When we think of Periyava , our mind gets purified…
When we serve Periyava, our body gets purified…

Parameswaran HE is, what else can we say? We can keep talking of HIM, keep thinking of HIM , concludes Sri Kannan Mama.

Once, Periyava was about to enter Kasi, at the fag end of the yatra. Kasi was vibrating with the ‘Visit of JagadGuru’ that was about to happen. At that time, a team of people chosen to meet (intercept?) Periyava before the entry into Kasi posed a serious question: “How come you’re called ‘JagadGuru’?”
Though there are number of explanations possible, Periyava chose to answer, “This ‘Jagath’ is Guru for me, so the term ‘JagadGuru’…”. There was no dispute on seeing the ‘humbleness’!!!

Whether it’s a group in Kasi or a lonely Iyengar in a private meeting… Sri Ra Ganapathy Mama used to say, “Both in terms of ‘Balam’ & ‘Panivu’ of Periyava, we could only quote Lord Hanuman!”

Prayers to Periyava to bless us ‘Balam’ and more importantly ‘Panivu’.

Article Courtesy: Sri Rathinamv
0 x

Pratyaksham Bala
Posts: 3399
Joined: 21 May 2010, 16:57
x 135
x 97

#561 Re: Kanchi Maha Periyava

Post by Pratyaksham Bala » 18 Apr 2015, 15:38

"….காலேல தர்சனம் பண்ணு” பாரிஷதர் சொன்னார்.
பாரிஷதர் = पारिषद / pAriSada = Councillor / ஸபாதிகாரி
0 x

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16
x 1

#562 Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam » 28 Apr 2015, 21:35

Image
0 x

thanjavooran
Posts: 2536
Joined: 03 Feb 2010, 04:44
x 177
x 63

#563 Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran » 06 May 2015, 08:11

A share

Kanchi Paramacharya on South Indian Food – Extracted From Ra.Ganapathi’s Book

To the awe and amazement of his devotees, Paramacharya often discussed about down-to-earth laukika matters with keen interest, deep understanding and knowledge. In this lecture, he explains the origin and meaning of the names of common Indian dishes and their connection to spirituality.

In these explanations, I have mostly used the translated words of what Paramacharya actually spoke, extracted from the Tamil publication titled Sollin Selvar (The Expert of Words), Sri Kanchi Munivar by Sri Ra. Ganapathy.

A South Indian Meal

A typical South Indian meal is served in three main courses: sambar sAdam, rasam sAdam and more (buttermilk) sAdam.

Sambar is also known as kuzhambu in Tamil, a term that literally translates to ‘get confused’. Paramacharya explains how these three courses are related to the three gunas of spirituality: the confusion of sambar is tamo guna, the clarified and rarified flow of rasam is rajo guna and the all-white buttermilk is satva guna. Our meal reminds us of our spiritual path from confused inaction to a clear flow of action and finally to the realized bliss of unity.

sAdam
Cooked rice, the main dish of a South Indian meal is called sAdam. That which has sat is sAdam, in the same way we call those who are full of sat, sadhus. We can give another explanation for the term: that which is born out of prasannam is prasAdam. What we offer to Swami (God) as nivedanam is given back to us as parasAdam. Since we should not add the root ‘pra’ to the rice we cook for ourselves, we call it sAdam.

Rasam
Rasam means juice, which is also the name of filtered ruchi. We say ‘it was full of rasa’ when a speech or song was tasteful. Vaishnavas, because of their Tamil abhimAnam, refer to rasam as saatthamudhu. It does not mean the amudhu (amrita) mixed with sAdam. It was actually saatramudhu (saaru or rasam + amudhu), which became saatthamudhu.

Vaishnavas also have a term thirukkann amudhu that refers to our pAyasam. What is that thirukkann? If rudrAksham means Rudra’s eye, does ‘thirukkann’ mean Lakshmi’s eye? Or does the term refer to some vastu (article) added to pAyasam? No such things. Thiru kannal amudhu has become thirukkann amudhu. Kannal means sugercane, the base crop of suger and jaggery used in pAyasam.

I was talking about rasam. If something is an extraction of juice, then would it not be clear, diluted and free of sediments? Such is the nature of our rasam, which is clear and dilute. The other one, served earlier to rasam in a meal, is the kuzhambu. Kuzhambu contains dissolved tamarind and cut vegetable pieces, so it looks unclear, its ingredients not easily seen.

Buttermilk
A western meal normally ends with a dessert. In a South Indian meal, desserts such as pAyasam are served after the rasam sAdam. Any sweets that were served at the beginning are also taken at this time. After that we take buttermilk rice as our final course. Paramacharya explains that since sweets are harmful to teeth, our sour and salty buttermilk actually strengthens our teeth, and this has been observed and praised by an American dietician. We gargle warm salt water when we get toothache. The buttermilk is the reason for our having strong teeth until the end of our life, unlike the westerners who resort to dentures quite early in their life.

Vegetable curry
Even though cut vegetable pieces are used in sambar, kootoo and pacchadi, in curry they are fried to such an extent that they become dark in color (the term curry also means blackness or darkness in Tamil). May be this is the origin of the name curry.

Uppuma (kitchadi)
If the term uppuma is derived from the fact that we add uppu or salt, then we also add salt to iddly, dosa and pongal! Actually, it is not uppuma but ubbuma! The rava used for this dish expands in size to the full vessel where heated up with water and salt. The action of rava getting expanded is the reason for the term ubbuma.

Iddly
The term iduthal (in Tamil) refers to keeping something set and untouched. We call the cremation ground idukaadu (in Tamil). There we keep the mrita sarira (mortal body) set on the burning pyre and then come away. The term iduthal also refers to refining gold with fire. The (Tamil) term idu marunthu has a similar connotation: a drug given once without any repetition of dosage. In the same way, we keep the iddly wet flour on the oven and do nothing to it until it is cooked by steam.


Idiyaappam
(This is rice noodles cooked in steam). Brahmins call it seva while others call it idiyaappam. But unlike an appam which is a cake, this dish is in strands. The term appam is derived from the Sanskrit ApUpam meaning cake. The flour of that cake is called ApUpayam. This word is the origin of the Tamil word appam.

Appalaam
The grammatical Tamil term is appalam. This dish is also made by kneading (urad dhal) flour, making globules out of it and then flattening them. So it is also a kind of appam. Because of its taste a ‘la’ is added as a particle of endearment!

Laddu
ladanam (in Sanskrit) means to play, to throw. ladakam is the sports goods used to play with. Since the ball games are the most popular, ladakam came to mean a ball. The dish laddu is like a ball, and this term is a shortened form of laddukam, which derived from ladakam.

Laddu is also known as kunjaa laadu. This should actually be gunjaa laadu, because the Sanskrit term gunjA refers to the gunjA-berry, used as a measure of weight, specially for gold. Since a laddu is a packed ball of gunjA like berries cooked out of flour and sugar, it got this name.

The singer of mUka panca sati on Ambal Kamakshi describes her as Matangi and in that description praises her as ‘gunjA bhUsha’, that is, wearing chains and bangles made of gunjA-berries of gold.

Pori vilangaa laddu
Made of jaggery, rice flour and dried ginger without any ghee added to it, this laddu is as hard as a wood apple, though very tasty, and hence got its name from that fruit and the original pori (puffed rice) flour used to make it.

Indian Dishes of Turkish Origin
Our halwa is a dish that came from the Turkish invasion. bahU kalam (long ago) before that we had a dish called paishtikam, made of flour, ghee and sugar. But then the Arabian term halwa has stuck in usage for such preparation.

Sojji
sUji is another name from the Turkish. It has become sojji now. It is mostly referred to these days as kesari. In Sanskrit, kesaram means mane, so kesari is a lion with kesaram. It was a practice to add the title ‘kesari’ to people who are on the top in any field. Thus we have Veera Kesari, Hari Kesari as titles of kings in Tamilnadu. The German Keisar, Roman Caesar and the Russian Czar — all these titles came from only from this term kesari.

What is the color the lion? A sort of brownish red, right? A shade that is not orange nor red. That is the kesar varnam. The powder of that stone is called kesari powder, which became the name of the dish to which it is added for color.

Vada
A Tamil pundit told me that the name vada(i) could have originated from the Sanskrit mAshApUpam, which is an appam made of mAsham or the urad dhal. He also said that in ancient Tamilnadu, vada and appam were prepared like chapati, baking the flour cake using dry heat.

Dadhya Araadhana
Someone asked me about the meaning of this term. He was under the impression that dadhi was curd, so dadhiyaaradhana(i) was the curd rice offered to Perumal. Actually, the correct term is tadeeya AradhanA, meaning the samaaradhana(i) (grand dinner) hosted to the bhagavatas of Perumal. It got shortened in the habitual Vaishnava way.

Vaishnavas offer the nivedanam of pongal with other things to Perumal in their dhanur mAsa ushad kala puja (early morning puja of the Dhanur month). They call it tiruppakshi. The original term was actually tiruppalli ezhuchi, the term used to wake of Perumal. It became ‘tiruppazhuchi’, then ‘tiruppazhachi’ and finally ‘tiruppakshi’ today, using the Sanskrit kshakara akshram, in the habitual Vaishnava way. It is only vegetarian offering, nothing to do with pakshi (bird)!

The term dhanur mAsam automatically brings up thoughts of Andaal and her paavai (friends). In the 27th song (of Tiruppaavai), she describes her wake up puja and nivedanam with milk and sweet pongal to Bhagavan, which culminates in her having a joint dinner with her friends. Vaishnavas celebrate that day as the festival koodaara valli, following the same sampradhAyam (tradition). The name of this festival is from the phrase koodaarai vellum seer Govinda, (Govinda who conquers those who don’t reach Him) which begins the 27th song. It was this ‘koodaarai vellum’ that took on the vichitra vEsham (strange form) of ‘koodaara valli’.

pAyasam
payas (in Sanskrit) means milk. So pAyasam literally means ‘a delicacy made of milk’. This term does not refer to the rice and jaggery used to make pAyasam. They go with the term without saying. Actually pAyasam is to be made by boiling rice in milk (not water) and adding jaggery. These days we have dhal pAyasam, ravA pAyasam, sEmia pAyasam and so on, using other things in the place of rice.

Vaishanavas have a beautiful Tamil term akkaara adisil for pAyasam. The ‘akkaar’ in this term is a corruption of the Sanskrit sharkara. The English term ‘sugar’ is from the Arabian ‘sukkar’, which in turn is from this Sanskrit term. The same term also took the forms ‘saccharine’ and ‘jaggery’. And the name of the dish jangiri is from the term jaggery.

kanji
Before we become satiated with madhuram (sweetness), let us turn our attention to a food that is sour. As an alternative to sweetness, our Acharyal (Adi Sankara) has spoken about sourness in his Soundarya Lahiri.

Poets describe a bird called cakora pakshi that feeds on moon-beams. Sankara says in Soundarya Lahiri that the cakora pakshi were originally feeding on the kArunya lAvaNyAmruta (the nectar of compassion and beauty) flowing from Ambal’s mukha chanran (moon like face). They got satiated with that nectar and were looking for somthing sour, and spotted the full moon, which being only a reflection, issued only sour beams!

Acharyal has used the term kAnjika diya, which gives an evidence of his origin in the Malayala Desam. He said that since the cakora pakshis were convinced that the nectar from the moon was only sour kanji, they chose to feed on it as an alternative.

The term kAnjika means relating to kanji, but the word kanji is not found in Sanskrit. It is a word current only in the Dakshinam (south). There too, kanji is special in Malayala Desam where even the rich lords used to drink kanji in the morning. This was the variety came to be known as the ‘Mayalayam Kanji’.

Kanji is good for deham as well as chittam. And less expensive. You just add a handful of cooked rice rava (broken rice), add buttermilk, salt and dry ginger, which would be enough for four people.

The buttermilk added must be a bit more sour. The salt too must be a bit more in quantity. With the slight burning taste of dry ginger, the combination would be tasty and healthy.

tAmbUlam
It is customary to have tAmbUlam at the end of a South Indian dinner. In the North, tAambUlam is popularly known as paan, which is usually a wrap of betel nut and other allied items in a calcium-laced pair of betel leaves. In the South, tAmbUlam is usually an elaborate and leisurely after-dinner activity. People sit around a plate of tAmbUlam items, drop a few cut or sliced betel nut pieces in their month, take the betel leaves one by one leisurely, draw a daub of pasty calcium on their back and then stuff them in their month, chatting happily all the while.

The betel leaf is known by the name vetrilai in Tamil, literally an empty leaf. Paramacharya once asked the people sitting around him the reason for calling it an empty leaf. When none could give the answer, he said that the usually edible plants don’t just stop with leaf; they proceed to blossom, and bear fruits or vegetables. Even in the case of spinach or lettuce, we have to cook them before we can take them. Only in the case of the betel leaf, we take it raw, and this plant just stops with its leaves, hence the name vetrilai or empty leaf.
0 x

vgovindan
Posts: 1603
Joined: 07 Nov 2010, 20:01
x 56
x 112

#564 Re: Kanchi Maha Periyava

Post by vgovindan » 14 May 2015, 00:39

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தன பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தன பார்முதல் பூதமே

திருமூலர் 8-21
http://www.thevaaram.org/thirumurai_1/s ... rtLimit=21

दन्तिनि दारुविकारे दारु तिरोभवति सोऽपि तत्रैव |
जगति तथा परमात्मा परमात्मन्यपि जगत्तिरोधते || 28 ||

svAtmanirUpaNam (Page 94) Adi Sankara

https://books.google.co.in/books?id=F6i ... ru&f=false

This comparison was brought out by Maha Periava in his discourse on Adi Sankara (Dec 23, 1957) published in Acharya's Call (Part 1) (Page 115-119)
0 x

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16
x 1

#565 Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam » 16 May 2015, 06:04

PLEASE DONT MISS

தர்மத்துக்காக வாழ்ந்தவா ரெண்டு பேர். ஒருத்தரைப் பார்த்தோம். இன்னொருத்தரைப் பார்க்க முடியலே! நாம பார்க்காதது ஸ்ரீராமரை; பார்த்தது, மகா பெரியவாளை! சந்நியாச தர்மம், யதி தர்மப்படி வாழ்ந்து ஸித்தி அடைஞ்சவர் மகா பெரியவர். அரச தர்மத்துக்குன்னு வாழ்ந்தவர் ஸ்ரீராமர்”னு சொல்லிட்டு, ”ஆத்ம பூஜை பண்ணினவா ரெண்டு பேர். ஒருத்தரைப் பார்த்திருக்கோம். இன்னொருத்தரைப் பார்த்ததில்லே. யார் சொல்லுங்கோ?” என்று கேட்டார் கி.வா.ஜ. தொடர்ந்து, அவரே பதிலும் சொன்னார்…

”ஒருத்தர் ஆஞ்சநேயர். ஆத்ம லிங்கம் பண்ணி, தானே பூஜை பண்ணினார். இது ராமேஸ்வரத்தில் இருக்கு. ஆத்ம பூஜை பண்ணின மகா பெரியவாளை இப்போ பார்க்கறோம். ஆத்மாவை உயர்த்திண்டவா எத்தனை பேர்? இவர் ஒருத்தர்தான்! அவர் தனக்குத்தானே பூஜை பண்ணிண்டார். அதை நாம எல்லோரும் பார்த்து ஆனந்தப்பட்டோம்!”

எத்தனை சத்தியமான வார்த்தை!

பெரியவாளுடன் இருந்து, அவருக்குக் கைங்கர்யம் செய்யும் பாக்கியம் பெற்ற பட்டாபி சார், உண்மைச் சம்பவம் ஒன்றை நினைவுகூர்ந்தார்…

அதுவொரு மார்கழி மாசம். கும்பகோணத்தில் என் தகப்பனாருக்குச் சிராத்தம் பண்ணிட்டு, பக்கத்துல 12 கி.மீட்டர் தொலைவுல இருக்கிற கோவிந்தபுரத்துக்குப் போனேன். அங்கே, காமகோடி பீடத்தின் ஆச்சார்யரான ஸ்ரீபோதேந்திராளின் அதிஷ்டானம் இருக்கு.

‘ராம ராம’ன்னு சொல்லியபடியே, அந்த அதிஷ்டானத்தை 108 தடவை பிரதட்சிணம் பண்ணினேன். அங்கே, ராம நாமத்தை ஜெபித்தால், ஸித்தி கிடைக்கும்னு சொல்லுவா.

அதிஷ்டானத்திலேருந்து எதிரொலி மாதிரி, ‘ராம்… ராம்’னு குரல் கேட்கும். ரொம்ப விசேஷம். அதுக்காகவே நான் அங்கே அடிக்கடி போவேன்.

இப்படித்தான் 94-ஆம் வருஷம், ஜனவரி 2-ஆம் தேதி… அங்கே தியானத்திலே உட்கார்ந்திருந்தேன். அப்ப, அதிஷ்டானத்திலேருந்து திடீர்னு ஒரு குரல் கேட்டாப்ல இருந்தது எனக்கு. ‘ஏய், இனிமே என்னை நீ இதேமாதிரிதான்டா பாக்கணும்’னு சொல்லித்து அந்தக் குரல். அது, பெரியவா ளோட குரல் மாதிரியே இருந்துது.

அப்படியே அதிர்ந்து போயிட்டேன் நான். சாதாரணமா அதிஷ்டானத்துல, ‘ராம்… ராம்’னுதானே குரல் கேக்கும்! இதென்ன விசித்திரமா இருக்குன்னு தோணித்து எனக்கு. ‘இதேமாதிரிதான்டா பாக்கணும் என்னை’னு பெரியவா சொல்றாளே… அப்படின்னா, ஸித்தியான மாதிரிதான் பார்க்கணுமா, பெரியவாளை?!’

யோசிக்கும்போதே தலை சுத்தித்து எனக்கு. மனசு ஒடிஞ்சு, நொந்து போயிட்டேன்
சாப்பிடத் தோணலை. கண்ணை மூடிண்டு சித்த நேரம் தூங்கினா தேவலைன்னு பட்டுது. படுத்தா தூக்கம் வரலை. மனசுல இதே கேள்வி குடைஞ்சு, ஹிம்ஸை பண்ணிண்டிருந்தா எங்கேர்ந்து தூக்கம் வரும்? பேசாம பஸ் பிடிச்சுக் கும்பகோணம் வந்துட்டேன். உடனே காஞ்சிபுரம் போய்ப் பெரியவாளைத் தரிசிக்கணும்னு தோணித்து.

”என்ன அவசரம்… ரெண்டு நாள் இருந்துட்டுத்தான் போயேன்! ஏன் பித்துப் பிடிச்சாப்பல இருக்கே? வீட்ல ரெண்டு நாள் அமைதியா படுத்து ரெஸ்ட் எடுத்தா, எல்லாம் சரியாப் போயிடும்!”னு அம்மா சொன்னாள். சரின்னு, நானும் ரெண்டு நாள் கழிச்சுதான் காஞ்சிபுரம் போனேன். பெரியவரைப் பார்த்து, வழக்கம்போல் சேவைகள் பண்ணிண்டிருந்தேன்.

அதன்பிறகு, சில நாள் கழிச்சு… அதாவது 94-ஆம் வருஷம், 8-ஆம் தேதி மகா பெரியவா ஸித்தியாயிட்டா!

அன்னிக்கு, அதிஷ்டானத்துல பெரியவா சொன்னது நிஜமாயிட்டுது. பெரியவா ளைத் தவிர, வேற யாராலேயாவது இத்தனை தீர்க்கமா சொல்லமுடியுமா? தெரியலை.

அப்புறம்… எனக்கு மூணு, நாலு மாசத்துக்கு சுய நினைவே இல்லை. அப்படியே பெரியவாளோட நினைப் புலயே ஆழ்ந்துபோயிட்டேன். ‘பெரியவா முகத்தை இனி பார்க்க முடியாதே’ன்னு மனசு தவியாய்த் தவிச்சுது. சமாதானம் ஆகவே இல்லை. எப்படி ஆகும்?!


யோக நிலையில இருந்த பெரியவாளைப் பார்த்தேன். எந்தவித சரீர அவஸ்தையும் அவருக்கு இருக்கவே இல்லே! படுக்கைப் புண்ணுனு சொல்வாளே, அது மாதிரி எல்லாம் அவருக்குக் கிடையவே கிடையாது. ரோஸ் கலர்ல, தாமரை புஷ்பம் மாதிரிதான் அவரோட உடம்பு இருந்துது.

விஸர்ஜன துர்வாசனை எதுவுமே அவரிடம் இல்லை. காம- க்ரோதாதிகளுக்கு உட்பட்டவாளுக்குதான் அந்த மாதிரி துர்வாசனை எல்லாம் வரும்.

பெரியவாளுக்கு உடம்பு வேர்க்கவே வேர்க்காது, தெரியுமோ? மே மாசத்துல, ‘மேனா’ல படுத்துண்டு, படுதாவைப் போட்டுண்டிருப்பார்! அப்பவும்கூட அவருக்கு வேர்க்காது. நானே பிரத்யட்சமா பார்த்திருக்கேன்.

ஸித்தியாகிறதுக்கு முன்னால, பெரியவா என்னைக் கூப்பிட்டார். ”நான் படுத்துக்கப் போறேன். நீ என்ன பண்ணப் போறே?”ன்னு கேட்டார்.

”நான் என்ன பண்ணணும்னு எனக்குத் தெரியலையே! பெரியவாதான் சொல்லணும்”னு அழுதுட்டேன்.

பெரியவா என்னைக் கருணையோடு பார்த்தார். ”கவலைப்படாதே! என் ஸ்மரணை உன்னைக் காப்பாத்தும்! சஹஸ்ர காயத்ரி சொல்லு. கங்கையிலே ஸ்நானம் பண்ணிட்டு, கங்கைக் கரையிலே உட்கார்ந்து சொல்லு. அது போறும்!”னார்.

அந்தப் பிரபுவோட ஸ்மரணையிலே என்னோட காலத்தைக் கழிச்சிண்டிருக்கேன். அதுவும் அவரோட அனுக்கிரஹம்தான்.

ஆனா, அன்னிக்குக் கோவிந்தபுரம் அதிஷ்டானத்துல அவர் குரல் கேட்டுதே… அதை மட்டும் என்னால மறக்கவே முடியலே. நான் மனசு சஞ்சலப்பட்டு எதுவும் செஞ்சுடப்படாதுன்னு என்னைத் தயார் பண்ணத்தான் அன்னிக்கு அவர் சொல்லியிருப்பார்ங்கறதுல எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லே!” – சொல்லி நிறுத்திய பட்டாபி சார், பெரியவாளின் நினைவுகளில் குலுங்கிக் குலுங்கி அழத் துவங்கினார்

Jaya Jaya Shankara, Hara Hara Shankara!

Shared from Manargudi Sitaraman Srinivasan
0 x

thanjavooran
Posts: 2536
Joined: 03 Feb 2010, 04:44
x 177
x 63

#566 Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran » 16 May 2015, 06:12

Shri VK Avl Thanx for sharing

A share
Very interesting. Can any one tell why Periyava used Man urundai while taking bath after kshavaram

காஞ்சி மகாப்பெரியவர் குறித்த மிக அபூர்வமான ஒரு தகவல்.
(வபனம் மற்றும் ஸ்நானம்)
மகா பெரியவர் வபனம் செய்வது(முடி மழித்தல் முறை) குறித்து தெரிந்து கொள்ளுங்கள். அவர் இரண்டு பவுர்ணமிக்கு ஒரு முறை, ஆறு அல்லது குளக்கரைக்குச் சென்று வபனம் செய்து கொள்வார்.
அவர் வபனம் செய்யச் செல்லும் போது, முதலில் சுவாமியை வணங்குவார். நீர்நிலையில் கரையில் அமர்வார். ஒரு வாழை இலையில் கத்தி, ஒரு கிண்ணத்தில் பால், ஒரு கிண்ணத்தில் தண்ணீர் வைக்கப்படும். ஒரு கடிகாரத்தையும் வைத்து விடுவார்கள்.
பெரியவர், முதலில் பாலை தன் தலையில் தடவிக் கொள்வார். கத்தியை தன் தலையில் வைத்து விட்டு, பிறகு இலையில் வைத்து விடுவார். முடி திருத்துபவர் பெரியவரை வணங்கி விட்டு தலைமுடியை மழிப்பார். பிறகு கை, கால்களிலுள்ள நகங்களை ஒழுங்குபடுத்துவார். இந்தப்பணி முடிந்த பிறகு, பெரியவர் நதி அல்லது குளத்திலுள்ள மண்ணை எடுத்து கை, கால்களில் தடவிக் கொள்வார். வாய் கொப்பளித்து விட்டு நீராடச் செல்வார்.
இதற்குள் சீடர்கள் ஐந்து பெரிய மண் உருண்டைகளை தயார் செய்து வைத்து விடுவார்கள். அவர் ஆற்றில் நீராடத் தயாரானதும், நான்கு சீடர்கள் அந்த உருண்டைகளை சின்ன சின்னதாய் பிரித்து உருட்டுவார்கள். நான்கு பேரும் 12 முறை அந்த உருண்டைகளை பெரியவர் கையில் கொடுப்பார்கள். அதை பெரியவர் காலில் தடவிக் கொண்டு 12 முறை மூழ்கி எழுவார்.
இதன்பின், திரும்பவும் 12 உருண்டைகளைக் கையில் கொடுப்பார்கள். அதை இடுப்பு வரை தடவிக் கொண்டு, மீண்டும் 12 முறை மூழ்கி எழுவார். அதையடுத்து இன்னும் 12 உருண்டைகள் தரப்படும். அதை மார்பு வரை தடவிக் கொண்டு 12 முறை குளியல்…பின் இன்னும் 12 உருண்டைகளைப் பெற்று முகம், தலையில் தடவி குளிப்பார்கள். கடைசியாக தரப்படும் 12 உருண்டைகளை உடல் முழுவதும் தடவிக் கொண்டு 12 முறை மூழ்கி எழுவார். பெரியவர் மூழ்கும் போது, ஒவ்வொரு முறையும் சீடர்களும் மூழ்கி எழுவர்.
அவர் குளிக்கும் போது, அவரது கையிலுள்ள தண்டம் ஒரு “ஸ்டாண்டில்’ வைக்கப்பட்டிருக்கும். அந்த தண்டத்தின் முன்னும் மண் உருண்டைகளை ஒரு மரத்தட்டில் வைத்துக் காட்டுவார்கள். கரைக்கு வரும் பெரியவர், அந்த தண்டத்தை எடுத்துக் கொண்டு மீண்டும் ஆற்றில் இறங்கி 12 முறை மூழ்கி எழுவார்.
பின், பெரியவர் தான் கட்டியிருக்கும் ஆடையை நீரிலேயே விசர்ஜனம் (களைதல்) செய்து விடுவார். இதை அதிர்ஷ்டமுள்ள ஒரு பக்தர் பிரசாதமாக எடுத்துக் கொள்வார். பின் பக்தர்கள் பெரியவருக்கு சால்வைகள் கொடுப்பார்கள். மங்கள ஆரத்தி எடுத்து, வாத்தியம் முழங்க மடத்திற்கு திரும்புவார்கள்
.
ஆரத்தி எடுப்பவர்களுக்கு வெள்ளிக்காசு பிரசாதம் தரப்படும்
இந்த அபூர்வத்தகவலை படித்த நாமும், பெரியவரின் அருட்பிரசாதம் பெற்றவர்களாகிறோம். நன்றி-19-11-2014 தினமலர்.
0 x

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16
x 1

#567 Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam » 16 May 2015, 21:48

காஞ்சி மகாபெரியவா ,ஒரு பக்தருக்கு நற்கதியடைய தினமும் பராயணம் பண்ணச் சொன்ன ஸ்லோகம் இது.
இந்த ஸ்லோகத்தை தினமும் எல்ல பாராயணமும் முடிந்ததும் சொல்லிப் பிரார்த்தித்தால் நற்கதி அடையலாம் என்ற நம்பிக்கையில் இந்த ஸ்லோகத்தை சொல்லலாம் .
அநாயாசேன மரணம்
விநா தைன்யேன ஜீவனம்
தேஹிமே க்ருபையா சம்போ
த்வயி பக்திம் அசஞ்சலாம்
அர்த்தம் :
உன்னையே எப்போதும் ஸ்மரணம் செய்துக் கொண்டிருக்கும் உன் பக்தனுக்குசர்வசாதாரணமான , வறுமை, கஷ்டம் இல்லாமல் மரணம் அமைய உன்னுடைய கிருபையைக் கொடுத்து அருளவும் சம்போ மகாதேவா !

Pranam - Poova Raghavan
0 x

Pratyaksham Bala
Posts: 3399
Joined: 21 May 2010, 16:57
x 135
x 97

#568 Re: Kanchi Maha Periyava

Post by Pratyaksham Bala » 16 May 2015, 22:39

The popular version:-

अनायासेन मरणं विना दैन्येन जीवनम् ।
देहान्ते तव सायुज्यं देहि मे पार्वतीपते ॥

anAyAsEna maraNaM vinA dainyEna jIvanaM
dEhAntE tava sAyujyaM dEhi mE pArvatIpatE

Death without strain, Life without affliction, and Your proximity upon leaving the body -- Grant me these, O Lord of pArvatI.
0 x

thanjavooran
Posts: 2536
Joined: 03 Feb 2010, 04:44
x 177
x 63

#569 Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran » 23 May 2015, 15:59

A share
யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா

(மாலை மாற்று-என்ற தலைப்பில் போன வருடம்
கல்கியில் வந்த அருள்வாக்கு)+ சிறு விளக்கம்.
(பாடலின் பொருள் சேர்க்கப்பட்டுள்ளது)


‘விகடகவி’, ‘குடகு’ முதலிய வார்த்தைகளைத் திருப்பிப் படித்தாலும், ‘விகடகவி’, ‘குடகு’ என்றே இருக்கும். ‘மலையாளம்’ என்பதை இங்கிலீஷில் Malayalam என்று எழுதினால் திருப்பிப் படித்தாலும் அதே ஸ்பெல்லிங் வரும்.

இப்படிப்பட்ட வார்த்தைகளை Palindrome என்கிறார்கள்.

காசியாத்திரை ஹிந்துவாகப் பிறந்தவர்களுக்கு முக்யமாக விதிக்கப் பட்டிருக்கிறது. அதோடு கயா ச்ராத்தம், த்ரிவேணி என்கிற ப்ரயாகையில் ஸ்நானம், பித்ரு கார்யம் எல்லாவற்றையும் சேர்த்துச் சொல்லியிருக்கிறது. இதையும் பாலின்ட்ரோமாகச் சொல்வதுண்டு.

காசிக்கு காசிகா என்றும் பெயர். இது பின்னிருந்து முன்னாகவும் ‘காசிகா’தான். ‘கயா ப்ரயாக’ என்பதும் இப்படியே.இப்படி ஒரு வார்த்தையைத் தலைகீழாகப் படிப்பதைப் பெரிய விளையாட்டாகப் பண்ணி காவ்ய ரஸத்தைப் பற்றியே ரஸமாக ஒரு ஸ்லோகம் இருப்பதாக ஒரு பண்டிதர் சொன்னார்.

‘ஸாக்ஷரா’ என்றால் வெறுமே படிப்பறிவு மட்டுமுள்ளவர்கள் என்று அர்த்தம். அதாவது வறட்டு வறட்டு என்று நிறையப் படித்திருப்பார்கள். இலக்கியச் சுவையில் ஊறியிருக்கமாட்டார்கள். ‘ஸரஸ’ என்றால் இலக்கியச் சுவையில், காவ்ய ரஸத்தில் ஊறியவன் என்று அர்த்தம். ரஸம் அறிகிற பக்வ மனஸ் இல்லாமலிருக்கிறவன் அந்தப் படிப்பு நெறியிலிருந்து மாறினால் குணம்கெட்ட ராக்ஷஸனாகி விடுவான்; ஆனால் ரஸிகனோ எப்படி வெளியிலே மாறினாலும் அவனுடைய உயர்ந்த ரஸிகத் தன்மை போகவே போகாது என்பது அந்த ஸ்லோகத்தின் தாத்பர்யம்.ஸாக்ஷரா, ஸரஸ என்ற வார்த்தைகளைத் திருப்பிப் போட்டே இந்த தாத்பர்யத்தை ஸ்லோகம் நிலைநாட்டி விடுகிறது. ‘ஸாக்ஷரா’வைத் திருப்பிப் படித்தால் ‘ராக்ஷஸா’! ‘ஸரஸ’வோ திருப்பிப் படித்தாலும் ‘ஸரஸ’வேதானே?

திருஞானஸம்பந்தர் ஸாக்ஷபத் பரதேவதையின் க்ஷீரத்தைப் பானம் பண்ணியதால் குழந்தையாக இருந்து கொண்டே எத்தனைவிதமான செய்யுள் வகை உண்டோ அத்தனையிலும் வர்ஷிக்கிறாற்போலக் கொட்டினவர். பாலின்ட்ரோமாகவே முழுச் செய்யுள் செய்வதற்கு ‘மாலை மாற்று’ என்று பேர். மிகவும் கஷ்டமான இந்த ‘மாலை மாற்று’ வகையில் பதினோரு இரட்டை வரிச் செய்யுள்களை ஞானஸம்பந்தர் அநுக்ரஹித்திருக்கிறார்.

படித்தால் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட மாதிரி இருக்கும். முதல் அடி இப்படி இருக்கிறது.

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா

கடைசியிலிருந்து திருப்பிப் படியுங்கள்; அதுவே வரும்.

.....................................................................

கூடுதல் தகவல்;

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா

காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா

யாம் ஆமா – யாம் ஆன்மா என்னும் பசு, சீவாத்மா

நீ ஆம் மாமா – நீ பெரிய ஆன்மா, பரமாத்மா

யாழ் ஈ காமா – யாழிசை நல்கிய என் ஆசைப் பொருளே

காணாகா – இப்படியெல்லாம் கண்டு என்னைக் காப்பாற்று

காணாகா – இப்படியெல்லாம் பிரித்துக் காணாமல் என்னைக் காப்பாற்று

காழீயா – சீர்காழியானே

மாமாயா நீ – அம்மை அம்மை ஆம் நீ

மாமாயா – (இப்படி) பெரிய மாயமானவனே
0 x

Pratyaksham Bala
Posts: 3399
Joined: 21 May 2010, 16:57
x 135
x 97

#570 Re: Kanchi Maha Periyava

Post by Pratyaksham Bala » 23 May 2015, 18:20

... மிகவும் கஷ்டமான இந்த ‘மாலை மாற்று’ வகையில் பதினோரு இரட்டை வரிச் செய்யுள்களை ஞானஸம்பந்தர் அநுக்ரஹித்திருக்கிறார். ...
3.117 சீர்காழி - திருமாலை மாற்று
பண் - கௌசிகம்
http://www.shaivam.org/tamil/thirumurai/thiru03_117.htm
0 x

Pratyaksham Bala
Posts: 3399
Joined: 21 May 2010, 16:57
x 135
x 97

#571 Re: Kanchi Maha Periyava

Post by Pratyaksham Bala » 23 May 2015, 23:22

மேற்படி பதினொன்று பாடல்களுக்கும் பதவுரை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:-
http://www.visvacomplex.com/MaalaiMaaRRu4.html

முதற்பாடல்:

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா


யாம் = சிற்றுயிர்கள் ஆகிய நாங்கள்
ஆமா = கடவுள் என்பது பொருந்துமா?
நீ = நீ ஒருவனுமே (கடவுள் என்றால்)
ஆம் ஆம் = பொருந்தும், பொருந்தும்
மா = பெரிய
யாழீ = யாழை ஏந்தியிருப்பவனே!
காமா = அனைவராலும் விரும்பப் படுபவனே!
காண்நாகா = காணத் தகுந்தவாறு பாம்புகளை அணிந்துள்ளவனே!
காணா = காண முடியாதவாறு
காமா = மன்மதனை(அனங்கனாக) செய்தவனே!
காழீயா = சீர்காழிக்குத் தலைவனே!
மாமாயா = பெரிய மாயைகளைச் செய்தலில் வல்லவனே!
மா = கரிய(கொடிய)
மாயா = மாயையினின்றும்
நீ = எம்மை நீக்கிக் காத்தருள்வாயாக!
0 x

thanjavooran
Posts: 2536
Joined: 03 Feb 2010, 04:44
x 177
x 63

#572 Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran » 24 May 2015, 05:41

திரு ப்ரத்யக்ஷம் பாலா அவர்களே
விளக்கத்திற்கு நன்றி
தஞ்சாவூரான்
24 05 2015
0 x

thanjavooran
Posts: 2536
Joined: 03 Feb 2010, 04:44
x 177
x 63

#573 Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran » 27 May 2015, 08:51

A share

Periavaa

It all happened within a year or two before Periyava left the mortal coils. Periyava became silent and immobile after informing the ardent ‘Sevakas’ (‘Thuriyaasramam’) in the last 3 years.

“எல்லாத்தையும் விட்டாச்சுன்னு… சொல்லிட்டே துரியாஸ்ரமத்துகுள்ள நுழைஞ்சிட்டா!”, states Sri Kannan Mama.

His words illustrates the status, “ஒன்னும் பேசறது இல்லை! ஒன்னும் கேக்கறது இல்லை! வாயில போட்டாக்க சாப்பிடறது, வேண்டாம்னா துப்பிடறது! இருந்த இடத்துலேயே ஒன்னுக்கு, வெளிக்கி போறதுன்னு… அப்படீன்னு வச்சின்ட்டா! ரொம்ப கஷ்ட்டப் படறாளே… ஏதாவது பண்ணனுமான்னு கேக்கறதுக்காக ‘பிரக்ஷனம்’ பாத்துது…”, Sri Kannan Mama begins the episode.

In Kerala (Sri Parusuraama Kshetram), Sri Parasuramar gave the knowledge of ‘Josiya’ to 8 Sishyaas. One such Sishya line is Sri PuduSeri (புதுஸேரி).

“அவன் படிச்சாக்க…தலை எழுத்தை படிக்கிற மாதிரி! இப்ப கால மாயிட்டான்…”, says Sri Kannan Mama.

Also says, “அவன் பெரியவாவை பாத்ததில்லை… மடம்னா என்னனே தெரியாது… அவன் சொல்லறான்…

‘நவகிரகங்கள் பேசாது!’
‘நவகிரகங்களுக்கு அதீதமானவா அவா!’
‘அவா சொல்லறதை நவக்ரஹங்கள் கேக்கும்!’

And also in ‘prashanam’ , it was pointed that none of the ‘Navagraham’ can command. It is Periyava who could command them and it is His wish to leave the mortal coil that could prevail and not the position of ‘graham’ that is common for others.

At this point, it is interesting to note that in Sri Sivan Sar’s ‘Naadi’ (Josiyam), the palm leave script read, “இவனின் முன்னோன் அகிலத்தின் குருவாவான்! நவகிரகங்கள் போற்றும் நாயகன்!”, referring to Periyava!

After sometime, Sri Narayanan, brother of Sri Mettur Periyava had approached Sri Narayana Podua, another wealthy and famous ‘Josiyar’ in Kerala.

“முதலில் சந்திரசேகரேந்திர சரஸ்வதீன்னு வச்சப்போ ஒன்னும் வரலை…சுவாமிநாதன்னு வச்ச உடனே இதுதான் சொன்னான்…

‘ஆதேகம் பவித்ரமானு…(அவர்) பூஜை செய்கின்ற மகாதேவனையே ஸ்ரிஷ்டிச்ச தேகமானு’… பெரியவா பூஜை செய்யற மகாதேவனையே அவாதான் ஸ்ரிஷ்டிச்சா…அப்படீங்க்றான்!”, recollects Sri Kannan Mama.

Periyava_shivalingam

Also he said, “…’அவா எப்போ சித்தி ஆவான்னு (நவகிரஹங்களை) கேட்டு சொல்ல முடியாது! ஆனா ஒரு மாசத்துக்குள்ள சித்தி ஆயிடனும்னு தீர்மானம் பண்ணி இருக்கான்னு தெரியறது’… அப்படீங்க்றான்!”

Meanwhile, Devotees had plenty of darshan and also got plenty of ‘anugraham’ from the ‘immobile’ Periyava.

Sri Ponds Mama said, when Periyava was in Thuriyaasramam, people used to say Periyava is immobile and is not speaking… But once you’re there in His ‘sannidhi’ for darshan, you would clearly understand that Periyava is doing ‘Anugraham’ and after some time Periyava is giving ‘Utharavu’. “You can leave with satisfaction!”, he assured.

Sri Misra, Chief Justice of India had his darshan too. Prayed to Periyava that if Periyava wished He could stay in the mortal coils and hence Periyava should wish. Periyava replied to Sri Misra that he should know about the physical frame, which has to be abandoned at some point of time or other. Sri Misra again prayed for keeping the ‘immobile frame’ some more time.

Sri (Ugranam) Thiyagu Thatha said that he prayed for Periyava’s longer stay for which Periyava replied that he was also born to a father and mother and he had to leave!

Not even one week, the ‘frame’ lasted. Periyava left the ‘physical frame’ but continued to be the Almighty that is all pervasive!

Today’s Nectar :

How to have clarity?

தெளிவு பெரியவாவின் திருமேனி காண்டல்!
தெளிவு பெரியவாவின் திருநாமஞ் செப்பல்!
தெளிவு பெரியவாவின் திருவார்த்தை கேட்டல்!
தெளிவு பெரியவாவுரு சிந்தித்தல் தானே!!!

“அதாவது…’பெரியவாவிற்கு நவகிரகங்கள் பேசாது! நவகிரகங்களுக்கு அதீதமானவா அவா! அவா சொல்லறதை நவக்ரஹங்கள் கேக்கும்!’, அப்படீன்னு சொன்னாக்க, பெரியவாவை பத்தி நாம என்னத்தை சொல்லறது?”, questions Sri Kannan Mama and also concludes, “அவா ஈஸ்வரன்! ஈஸ்வரன்னு தவிர நாம என்னத்தை சொல்லறது!”

That immobile, unspoken but ‘Anugraha-Pravaaga’ Periyava…

ஆடாது அசங்காது இருந்த ஸ்வரூபம்…
கூடாது பிரியாது அமைந்த ஸ்வரூபம்…
தேடாது தெரியாது தெளிந்த ஸ்வரூபம்…
மூடாது மறையாது நின்ற ஸ்வரூபம்…
மூடன் எனக்கெனவே வந்த ஸ்வரூபம்!
மூடன் எனக்கெனவே வந்த ஸ்வரூபம்!
மூடன் எனக்கெனவே வந்த ஸ்வரூபம்!

Hara Hara Shankara
Jaya Jaya Sankara
0 x

Pratyaksham Bala
Posts: 3399
Joined: 21 May 2010, 16:57
x 135
x 97

#574 Re: Kanchi Maha Periyava

Post by Pratyaksham Bala » 27 May 2015, 09:30

எல்லாத்தையும் விட்டாச்சுன்னு… சொல்லிட்டே துரியாஸ்ரமத்துகுள்ள நுழைஞ்சிட்டா!
turIya means 'the fourth'; it is the state of pure consciousness.
The first three states are: waking consciousness, dreaming and dreamless sleep.
0 x

Pratyaksham Bala
Posts: 3399
Joined: 21 May 2010, 16:57
x 135
x 97

#575 Re: Kanchi Maha Periyava

Post by Pratyaksham Bala » 27 May 2015, 09:36

தெளிவு பெரியவாவின் திருமேனி காண்டல்!
தெளிவு பெரியவாவின் திருநாமஞ் செப்பல்!
தெளிவு பெரியவாவின் திருவார்த்தை கேட்டல்!
தெளிவு பெரியவாவுரு சிந்தித்தல் தானே!!!
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் 183

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.
0 x

Post Reply