Aanmeekam...

Post Reply
venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16
x 2

#1 Aanmeekam...

Post by venkatakailasam » 16 Oct 2013, 08:17

கஜ + அஜ + கோ கர்ணம் .கிருபானந்த வாரியார்

கஜகர்ணம் : யானை தனது நான்கு கால்களையும் சரியாக ஊன்றி நிற்காது. அதுபோல சில மனிதர்கள் ஒரே விஷயத்தில் தங்கள் கருத்தைச் செலுத்தாமல் பல விஷயங்களில் ஈடுபட்டுக் குழம்புவார்கள். அவர்களை ' கஜகர்ணம் ' போடுபவர்கள் என்று அழைக்கிறோம் .
அஜகர்ணம் : ஆட்டின் வாலைப் பிடித்து இழுத்தால் அது தன் தலையைத் தொங்கப்போடும். அதுபோல மனிதர்களில் சிலர் தங்கள் குறையை யாராவது சுட்டிக்காட்டினால் அவர்களை வெறுப்பார்கள். திரும்பிப் பார்க்க மாட்டார்கள். அவர்களை ' அஜகர்ணம் ' போடுபவர்கள் என்று அழைக்கிறோம் .
கோகர்ணம் : பசு மாட்டின் உடலில் எந்த இடத்தில் விரலால் தொட்டாலும் அந்த இடம் உணர்ச்சி வசப்பட்டு சிலிர்க்கும். அதுபோல அறிவாளிகள் எந்தச் சிறு குறையைச் சுட்டிக் காட்டினாலும் புரிந்துகொண்டு மன்னிப்புக் கேட்டுத் திருந்துவார்கள் .இவர்களை 'கோகர்ணம் ' போடுபவர்கள் என்று அழைக்கிறோம் .
--- கிருபானந்த வாரியார்
from net...
0 x

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16
x 2

#2 Re: Aanmeekam...

Post by venkatakailasam » 16 Oct 2013, 08:20

லிங்கம்

ஏன் லிங்க வடிவம் ?.
வடிவற்ற நிலையிலிருந்து சக்தி ஒரு வடிவெடுக்கும்போது , அது முதலில் பெறுவது லிங்க வடிவம்தான் . அதீத சக்தியைப் பூட்டிவைக்க மிக உன்னதமான வடிவம் தியான லிங்கம் !
தியான லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது எப்படி ?
ஒரு வடிவத்தைப் பிரதிஷ்டை செய்யும்போது அதற்கு மந்திரப் பிரதிஷ்டை; பிராணப் பிரதிஷ்டை என இரு வழிகள் உள்ளன . ஒவ்வொரு சக்தி நிலைக்கென்று உள்ள மந்திரங்களை உச்சாடனம் செய்து , பிரதிஷ்டை செய்வது மந்திரப் பிரதிஷ்டை . உயிர் சக்தி கொண்டு நேரிடையாகச் சக்தி நிலையில் பிரதிஷ்டை செய்வது பிராணப் பிரதிஷ்டை . தியான லிங்கம் அதீத சக்தி கொண்டு பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டது . அதற்குக் கிட்டத்தட்ட மூன்றாண்டு கால தீவிர சாதனை தேவைப்பட்டது . நாம் ஒன்றை மட்டும் புரிந்துகொள்ள வேண்டும்...தியான லிங்கம் யோகக் கலையின் அதி தூய்மையானதொரு வெளிப்பாடு .
தியான லிங்கம்.... சில சிறப்புத் தகவல்கள் !
தியான லிங்கம் மதங்களுக்கு அப்பாற்பட்டது என்பதை விளக்குவதற்காக , நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள ஸ்தம்பத்தில் இந்து , இஸ்லாம் , கிறிஸ்துவம் , ஜைனம் , புத்தம் , தாயிஸம் போன்ற உலகின் முக்கியமான எல்லா மதங்களின் சின்னங்களும் பொறிக்கப்பட்டுள்ளன .
மூன்று உயரமான படிகளில் ஏறியதும் , ' பரிக்கிரமா ' என்னும் திறந்தவெளிப் பாதை . இருபுறமும் நீள் மண்டபங்கள் .உடனடியாக கவனத்தைக் கவர்வது , யோகக் கலையின் முக்கிய சூத்திரதாரியாகக் கருதப்படும் பதஞ்சலியின் அற்புத வடிவம் . அவருக்கு நேரெதிரில் வனஸ்ரீ என்னும் பெண் தெய்வத்தின் வடிவம் . ஒரு பொன் இலை வடிவத்தில் , வனஸ்ரீ அன்பையும் , செல்வத்தையும் குறிக்கிறாள் . தவிர கண்ணப்பர் , மெய்ப்பொருள் நாயனார் , ஷிவயோகி , சதாசிவ பிரம்மானந்தா , அக்கா மகாதேவி , பூசலார் போன்ற தெய்வப் பிறவிகளின் சிற்ப வடிவங்கள் . எங்கும் சக்தி நிலையை விளக்கும் சர்ப்ப வடிவங்கள் .
இவற்றைக் கடந்ததும் , பிரமிக்க வைக்கும் வட்ட வடிவக் கருவறை . மையத்தில் கம்பீர அழகுடன் பரவசப்படுத்தும் தியான லிங்கம் . 33 அடி உயர வட்ட வடிவமான அபாரமான கருவறையில் கான்க்ரீட் , இரும்பு போன்ற பொருட்கள் முற்றிலும் தவிர்க்கப்பட்டு இருக்கின்றன . செங்கல்லும் , மண்ணும் , பாறையும் ,இயற்கையான பிணைப்புப் பொருட்களும் ம்ட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன .
இந்தக் கருவறைக் கூடத்தின் சுற்று வெளியில் , லிங்கத்தை நோக்கியபடி 28 தியானப் பிறைகள் அமைக்கப்பட்டுள்ளன .
தியான லிங்கம் அடர்த்தியான கருங்கல் கொண்டு அமைக்கப் பெற்றது . தியான லிங்கத்தின் உயரம் 13 அடி , 9 அங்குலம் .
ஆவுடையார் என்று சொல்லப்படும் அதன் பீடம் , சுருண்டு படுத்திருக்கும் ஒரு சர்ப்பத்தின் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது . லிங்கத்தைவிட 30 சதவீதம் அடர்த்தி குறைவான வெண்பாறையில் உருவாக்கப்பட்டுள்ளது அது .
ஆவுடையார் சர்ப்பத்தின் ஒவ்வொரு பகுதியும் , 3 அடி 3 அங்குலம் . மொத்த நீளம் 13 அடி , 9 அங்குலம் .
தியான லிங்கத்தில் ஏழு சக்கரங்களின் சக்தி நிலைகளில் ஏழு பித்தளை வ்ளையங்கள் . ஆவுடையார் சர்ப்பத்துக்கு ஏழு சுருள்கள் . தியான லிங்கத்தைச் சுற்றிலும் ஜல சீமை .
வட்டக் கருவறையில் மைய உச்சியில் , லிங்க வடிவில் தொங்கவிடப்பட்டு இருக்கும் பித்தளை அமைப்பு நேரடியாகச் சூரியக் கதிர்கள் நுழைவதைத் தடுத்து , கருவறைக்கூடத்தை எப்போதும் குளுமையாக வைத்திருக்க உதவுகிறது .
லிங்கத்தின் உச்சியில் துளித் துளியாக நீர் சொட்டிக்கொண்டு இருக்கும் . ஒலி , வெளிச்சம் , விளையாடும் எண்ணெய் விளக்குகள் , உள் வரை ஊடுருவும் அமைதி எல்லாமாகச் சேர்ந்து தியான லிங்கத்தின் அண்மையில் இருக்கையில் , விவரிக்க முடியாததொரு தெய்வீக உணர்வை உள் செலித்துகின்றன
--சத்குரு ஜக்கி வாசுதேவ். ஆனந்தவிகடன். ( 18-04-2007 )
0 x

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16
x 2

#3 Re: Aanmeekam...

Post by venkatakailasam » 16 Oct 2013, 08:27

தளவிருட்சம் என கோவிலுக்கு கோவில் ஒரு மரம் காணப்படுகின்றதே ஏன்?

விருட்சம் என்பது மரம். மரங்கள் அடர்ந்த பகுதியில் அந்த மரங்களிலும் கடவுள் தன்மை உண்டு என சொல்வதற்காகவும், அந்த மரத்தின் நலன்களை தலைமுறை தாண்டி கொண்டு செல்லவும் தளவிருட்சங்கள் அமைக்கப்பட்டன.....

மேலும் படிக்க : http://www.dinakaran.com/Aanmeegam_Deta ... 3169&cat=3
0 x

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16
x 2

#4 Re: Aanmeekam...

Post by venkatakailasam » 16 Oct 2013, 08:33

வயதான காலத்தில் தன்னை வைத்துக் காப்பாற்ற மகன் இல்லையே என்று ஏங்குபவன் "அதமன்".
தான் இறந்த பிறகு தனக்கு கருமம் செய்ய மகன் இல்லையே என்று ஏங்குபவன் "மத்திமன்"
தான் இறந்த பிறகு தான் செய்துவந்த தான தருமங்களைத் தொடர்ந்து செய்ய மகன் இல்லையே என்று ஏங்குபவன் தான் "உத்தமன்"

கருமம் செய்ய யாருமில்லை
என கதராதே மனமே...
ஊழ் வினையையும் செய்யும்
வினையையும் இப்பிறவியில்
கழித்த பின் கருமம் செய்ய
மற்றவர் எதற்கு?
ஐயன் திருவடிகளுண்டு
வேங்கடவன் நான்
பற்றி கொள்ள
அவன் அருளுண்டு
தெருளமுண்டு
மருள வேண்டாம் மனமே!!
venkat k
0 x

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16
x 2

#5 Re: Aanmeekam...

Post by venkatakailasam » 28 Oct 2013, 18:56

மதுரை மீனாட்சி குங்குமம் ...

Image

மதுரை மீனாட்சி குங்குமம் காந்தசக்தி மிக்கது என்கிறார் இங்கிலாந்து அறிஞர் சார்லஸ் டபிள்யூ லெட்பீட்டர். இவர் ஒருமுறை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருகை தந்தார். அங்கே அவருக்கு குங்கும பிரசாதம் கொடுத்தார்கள். அடுத்து, சுந்தரேஸ்வரர் சந்நிதிக்கு சென்ற போது விபூதி தரப்பட்டது. இதை ஏன் இந்திய மக்கள் நெற்றியில் இட்டுக் கொள்கிறார்கள் என்பதை அறிய அவருக்கு ஆவல். உடனே, அதை பரிசோதனை செய்தார். அவற்றிலிருந்து காந்தசக்தி வெளிப்பட்டதை உணர்ந்தார். இது என் வாழ்வில் நான் கண்ட அதிசயம் எனதான் எழுதிய தி இன்னர் லைப் என்ற புத்தகத்தில் எழுதினார். இதை விட அதிசயம் ஒன்று உண்டு என்றும் அவர் சொல்கிறார். சில ஆண்டுகள் கழித்தபிறகு, அந்த குங்குமம், விபூதியை பரிசோதனை செய்தார். அப்போதும், முன்பு கண்ட அதே அளவு காந்தசக்தி சற்றும் குறையாமல் வெளிப்படுவது கண்டு அசந்து போனார். இப்படி ஓர் அதிசயத்தை நான் எந்த நாட்டிலும் கண்டதில்லை என்று அவர் எழுதி வைத்திருக்கிறார். நாம், மீனாட்சி குங்குமத்தை கோயில் தூண்களில் கொட்டி வைத்து பாழாக்கிக் கொண்டிருக்கிறோம். இனிமேலாவது, அன்னையின் குங்குமத்தை அளவோடு வாங்கி, பூஜையறையில் பத்திரமாக வைப்போம். அன்னையின் அருட்கடாட்சம் என்று நிலைத்திருக்கச் செய்வோம்...

A share from Malathi Rajendran...

Meenakshime moothem dhehime(Ambal song2),Ragam-Gamagakriya...

Listen to Santhanam..

http://www.youtube.com/watch?v=iJSLLHLlHnc
0 x

Pratyaksham Bala
Posts: 3400
Joined: 21 May 2010, 16:57
x 136
x 97

#6 Re: Aanmeekam...

Post by Pratyaksham Bala » 28 Oct 2013, 22:28

Read about சார்லஸ் டபிள்யூ லெட்பீட்டர் (Charles W. Leadbeater) :-
http://en.wikipedia.org/wiki/Charles_Webster_Leadbeater
0 x

thanjavooran
Posts: 2542
Joined: 03 Feb 2010, 04:44
x 180
x 63

#7 Re: Aanmeekam...

Post by thanjavooran » 29 Oct 2013, 02:42

தர்ப்பணம் பற்றிய ஒரு சிந்தனை

தர்ப்பணம் என்ற வடமொழி சொல்லுக்கு சந்தோஷமடைதல் என்று பொருள். தர்ப்பயாமி என்று சொல்லும்பொழுது சந்தோஷமடையுங்கள் என்று பொருள் கொள்ளலாம்.

ஜப்பான் நாட்டை சேர்ந்த இமொட்டோ என்ற ஆராய்ச்சியாளர் நீர்ல் நேர்மறை சொற்களை பிரயோகித்தபொழுது நீரில் உள்ள மூலக்கூறுகள் ஒரு முறைமையுடனும் ஒழுங்குடனும் வரிசைப்படுத்தப்படுவதை கண்டார். அதேசமயம், எதிர்மறை சொற்களை அந்த நீரில் பயன்படுத்தியபொழுது அந்த மூலக்கூறுகள் தாறுமாறாக அமைந்ததைகண்டார்.

இந்த ஆராய்ச்சிதான் இந்த கட்டுரையின் அடித்தளம்.


தர்ப்பணம் செய்யும்பொழுது நீரை அதிகமாக விட்டு தர்ப்பணம் செய்யவேண்டும் என்று கூறுவார்கள். அவ்வாறு தர்ப்பயாமி என்று நமது முன்னோர்களை முன்னிட்டு கூறும்பொழுது அந்த சொற்கள் நீரின் மூலக்கூறுகளை சென்று அடைகின்றது. நீர் ஆவியாக மாறி அந்த மூலக்கூறுகள் வளிமண்டலத்தில் கலக்கின்றன. அதாவது, சந்தோஷமடையுங்கள் என்று நாம் கூறிய எண்ண அலைகள் ஆவியாக மாறிய நீரின் மூலக்கூறுகளுடன் வளி மண்டலத்தில் சஞ்சரிக்கின்றன.

அதீத உளவியல் (Para psychology) என்ற பிரிவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மரணத்தின் பின் மனிதனின் நிலை பற்றி ஆராய்ந்து வருகிறார்கள். அந்த ஆராய்ச்சியில் மரணத்திற்கு பின் ஆழ்மன எண்ண அலைகள் அதிர்வுகளாக நிலை பெறுகின்றன என்று நம்புகிறார்கள்.

மேலே கூறிய இந்த நிகழ்வை மகாபாரதத்தில் அம்பை பீஷ்மரை கொல்வேன் என்று சபதம் செய்து நெருப்பில் வீழ்ந்து மடிந்து மீண்டும் சிகண்டியாக பிறந்து பீஷ்மரை கொன்றாள் என்று கூறும் நிகழ்விலிருந்து புரிந்துகொள்ளலாம். அதாவது மனம் மற்றும் எண்ண அலைகள் மறைவதில்லை என்று புரிந்துகொள்ளலாம். ஆத்மா சாவதில்லை என்ற கருத்து இந்த இடத்தில் நினைவு கூறத்தக்கது.

நாம் கொள்ளுகின்ற எண்ண அலைகளை பொறுத்து மறுபிறவி வாய்க்கின்றது என்பது நமது கோட்பாடு.


ஜடாபரதர் என்ற முனிவர் சித்தி அடையும் தருவாயில் ஒரு மான் படும் வேதனையை நினைத்தார் என்பதினால் அவர் ஒரு மானாக பிறந்தார் என்று யோகவாசிஷ்டம் கூறுகின்றது. இதனால்தான் மனமிறக்க வாயேன் பராபரமே என்று பாடினார் தாயுமான சுவாமிகள்.

உடல் உகுத்தவர்கள் ஆழ்மன எண்ணங்கள் மறைவதில்லை என்றும் அவைகள் அதிர்வுகளாக சஞ்சரிக்கின்றன என்றும் அதீத உளவியல் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். சில மகான்களின் சமாதி அருகிலோ அல்லது அவர்களின் ஆசிரமத்திற்கோ நாம் செல்லும்பொழுது நமது மனதில் ஏற்படும் ஒரு அமைதி மற்றும் பரவச உணர்சிசி அவர்களின் ஆன்மீக எண்ணங்கள் தரும் அதிர்வுகள் காரணமாக இருக்குமென்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

தர்ப்பயாமி என்று கூறி நீரை விட்டு தர்ப்பணம் செய்யும்பொழுது சந்தோஷமடையுங்கள் என்று நாம் திரும்ப திரும்ப சொல்லும் எண்ண அலைகள் நீரின் மூலக்கூறுகளில் சென்றடைந்து நமது முன்னோர்களின் எண்ண அதிர்வுகளை சென்றடைகின்றது என்று நம்புவதற்கு இமொட்டோவின் ஆராய்ச்சி வழிவகுக்கின்றது.

சிரார்த்த காரியங்கள் செவ்வனே செய்தால் வம்ச விருத்தி அதாவது குலம் தழைக்கும் என்று தர்ம சாஸ்திரம் கூறுகின்றது.

சந்தோஷமடையுங்கள் என்று கூறி தர்ப்பணம் செய்வதால் நமது முன்னோர்கள் சந்தோஷமடைந்து நம்மை வாழ்த்துவதோடு மட்டுமல்லாமல் மீண்டும் நமது குடும்பத்தில் பிறக்கின்றார்கள் என்று நம்புவதற்கு இடமுண்டு.

நீரில் உள்ள மூலக்கூறுகள் நாம் சொல்லுகின்ற வார்த்தையினை உள்வாங்கிக்கொள்கின்றது என்பதினால்தான் நமது சடங்குகளில் நீர் ஒரு முக்கியமானதாக உள்ளது. குறிப்பாக கும்பாபிஷேகம், சஷ்டி அப்த பூர்த்தி போன்றவை உதாரணமாக கொள்ளலாம்.

இந்த ஆராய்ச்சயின் முடிவை அன்றே நமது முனிபுங்கவர்கள் தமது தவவலிமையினால் கண்டு தெளிந்து நமக்கு கூறியுள்ளார்கள் என்பதை கண்டு நாம் மெய்சிலிர்த்து போகின்றோம்.

-- உளவியல் நிபுணர்
0 x

Pratyaksham Bala
Posts: 3400
Joined: 21 May 2010, 16:57
x 136
x 97

#8 Re: Aanmeekam...

Post by Pratyaksham Bala » 29 Oct 2013, 10:37

திரு எமோதோ:-
http://en.wikipedia.org/wiki/Masaru_Emoto
0 x

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16
x 2

#9 Re: Aanmeekam...

Post by venkatakailasam » 29 Oct 2013, 19:44

18 HILLS ASSOCIATED WITH SABARIMALA
1.Ponambalam medu
2.Kundall mamala
3.Sundara mamala
4.Nagranezum mala
5.Ingiparakota
6.Karinira mamala
7.Mayiladum mamala
8.Chittambalamala
9.Sripadam mala
10.Pudhusheri mamala
11.Madangga mala
12.Kalkimaleshwara mamala
13.Nelakkal shivamala
14.Thalapara mala
15.Devar mala
16.Kalakatti mala
17.Neelimala
18.Sabariponnmala Sabarimala

Swamiye sharanam ayyappa
0 x

thanjavooran
Posts: 2542
Joined: 03 Feb 2010, 04:44
x 180
x 63

#10 Re: Aanmeekam... Dharbam

Post by thanjavooran » 04 Nov 2013, 20:25

AN ARTICLE BY TRS IYENGAR
This article is on one of the practices widely used by Indian Brahmins all over using a Holy Grass named Dharbham or Dharbai
In all functions, auspicious or inauspicious, a performing person needs to wear a ring made of this Dharbham. But many have lost the reason of why it is to be used in the first place.
What I learnt from my father is proved to be accurately correct by a Medicine Practitioner.
A Doctor named Sadhashiv Rao, once visited my home. When the topic turned to many subjects, I needed to tell him about the Holy Grass named Dharbham. When I told him about the usage and the values, he could not just believe my words.
So, he took out a bunch of the Dharbham from me, went straight to the clinic to take an x-ray of his palm, by covering his hand with the Dharbham. To his utter surprise, he found that the grass absorbed about 60% of the radiation!
When the so powerful X-ray radiation can be absorbed by the Holy Grass, why can it not absorb the ill radiations spread over the atmosphere?
While chanting and reciting some Vedic phrases and verses, one needs to wear a ring made of Dharbham on his right hand ring finger.
The count of leaves depends upon the ceremony that is held viz.: for some ceremonies related to death only Single leafed Dharbham is used; for Auspicious and daily routine a ring made of two leaves is used; for inauspicious but not death related functions, (i.e. Amavasya Tharppanam, Pithru Pooja etc) a three leaf Dharbham ring is used.
And for the Temple Prayer and Pooja, a Four-leaf Dharbham ring is used.
Also, when a fire ritual known as Agni Santana is performed, these Dharbham are spread all the four sides of the Agni Kundam. Also, during the Eclipse time, these Dharbham are used to cover all food items to protect them from the harmful ultra violet radiation.
Whenever any function is held, firstly they perform a site-cleansing act known as “Sudhhi Punyaahavachanam”. While reciting the selective verses, they hold the Dharbham bunch in their hand and placing the tip point of it over the vessel containing water.
Thus the recited vibration values are absorbed by water in the vessel through the Dharbham.
They found that the Holy Grass known as Dharbham has the highest value in conducting the phonetic vibrations through its tip.
Later, they sprinkle the Holy water at every nook and corner of the place, where the ceremony or function is held.
A Dharbham without the tip is considered of no value, as the conductor-type value is lost in it.
My father, Late Shri Ramabathrachariar of Mukkur, fondly called by everyone as Sriraman, has given me the immense values of Dharbham and its usage. With Sanskrit phonetic sound and vibration, using the Dharbham increases its value.
The usage varies according to the functions. It is really a marvel, that in those days of Vedic Era, the Sages & Saints of Hindu land used to control the Magnetic path disturbances, just by simply using this Dharbham!
Apart from the above, Dharbham cannot be planted and grown everywhere.
It only grows naturally at selective places and available almost in every state in India. Some learned scholars name it after Saint Vishwaamitra - hence Dharbham is known and called as Vishwaamitra.
If it is kept for a longer time, say for more than six months, then it loses it value and the power of absorbing the radiation or magnetic path control values.
Dharbham cannot just be plucked straight or cut on any day; There is a specific Slokha that is to be recited before cutting it; That too it can be cut only on the day next to Full Moon - known as Krishna Paksha Pradamai.
A Dharbham without its tip portion is not to be used for making a Ring like item known as "Pavithram".
0 x

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16
x 2

#11 Re: Aanmeekam...

Post by venkatakailasam » 05 Nov 2013, 18:53

ராம நாமம் நாட்டை காக்கும் சக்தி..

ராமபிரானின் வில்லைக் கண்டு நடுங்காதவர்களே உலகில் கிடையாது. ராமபாணம் தப்பாது என்பார்கள். ஆனால், ஒரே ஒருவன் மட்டும் அதைக் கண்டு பயப்படவில்லை. யார் அவன்?

இலங்கை செல்வதற்காக சேதுவில் பாலம் கட்ட ஏற்படாயிற்று. கடலோ பெரும் கொந்தளிப்புடன் இருந்தது. சமுத்திரராஜா! ஒரு நல்ல காரியத்துக்காக இலங்கை செல்கிறோம். அமைதியாக இரு! என்று ராமன் சொல்லிப்பார்த்தார். அவனோ, அடங்குவதாக இல்லை. கோபத்துடன் ராமபிரான், தன் பாணத்தை எடுத்து விட்டார். உடனே சமுத்திரராஜன் வெளியே வந்தான். சாதாரணமாக அல்ல! கைதட்டிக்கொண்டே, எக்காளமான சிரிப்புடன்! ராமனுக்கு ரொம்ப ஆச்சரியம்!

என் வில்லின் பலம் தெரியாமல், மமதையில் அட்டகாசமாகவா சிரிக்கிறாய்! இது கனல் கொழுந்து. உன்மேல் பட்டால் தீய்ந்து போவாய். சொட்டு தண்ணீர் இல்லாமல் செய்து விடுவேன், என எச்சரித்தார்.

அப்போதும் சமுத்திரராஜன் கலங்கவில்லை. ராமா! நீ யாரிடம் என்ன பேசுகிறாய். இந்த பூலோகத்தை ஆளும் பரதன், உனது பாதுகையைப் பெற்று வந்தான் அல்லவா! அதற்கு அவன் தினமும் அபிஷேகம் செய்கிறான். அந்த நீர் தமஸா நதியில் விழுந்து, அது சரயூ நதியில் கலந்து என்னுள் வந்து ஐக்கியமாகிறது. அந்த தீர்த்தத்தைக் குடித்து குடித்து என் உடல் வஜ்ரம் பாய்ந்து வலிமையாக இருக்கிறது. என்னை, உன்னால் கொன்று விட முடியுமா என்ன! என்றான்...

ராமபாணத்தை விட விசேஷமானது ராமபாதுகை.ராமபாதுகையை விட விசேஷமானது ராம நாமம்.. ராம நாமம் சொல்ல சொல்ல நமது நாட்டை எந்த சக்தியும் எதுவும் செய்து விட முடியாது...

ராம ராம ஜெய சீதா ராம..

A share from a friend..
0 x

thanjavooran
Posts: 2542
Joined: 03 Feb 2010, 04:44
x 180
x 63

#12 Re: Aanmeekam...

Post by thanjavooran » 09 Nov 2013, 01:02

முக சுவடியிலிருந்து பகிர்ந்து கொண்ட தகவல்

சிவ லிங்கம் பற்றி ரஷ்ய விஞ்ஞானியின் ஆராய்ச்சியில் கிடைத்த முடிவு.

{ஒரு ரெண்டு நிமிஷம் நேரத்தை ஒதுக்கி ரஷ்ய விஞ்ஞானி சொல்வதை படித்து பாருங்கள். ஒவ்வொரு இந்துவும் படித்து பகிர வேண்டிய அறிய விசயம்}

சிவலிங்கங்கள்ப் பற்றிய டாக்டர் “விளாதி மீரின்” என்பவரி...ன் ஆராய்ச்சி மிக வித்தியாசமானது. அது இந்த பூமியில் மொத்தம் எத்தனை லிங்கங்கள் உள்ளன என்று எண்ணிப் பார்க்கவோ, இல்லை அவற்றின் பூர்வ புராணக் கதைகளை அறியவோ முயலவில்லை. இவற்றுக்கப்பால் சிவலிங்கங்கள் பற்றி நாம் யோசிக்கவும் அதை நாம் நேசிக்கவும் நிறைய அடிப்படைகள் இருப்பதாக டாக்டர் விளாதிமீர் கருதினார். அதில் முதலாவது, ஸ்தூல வடிவங்களில் இறை உருவங்களை உருவாக்கி வழிபாடு செய்யும் இந்து மதத்தில் ஒரு குழவிக் கல்லைப் போன்ற லிங்கம் என்னும் உருவமற்ற ஒரு உருவம் எப்படி உட்புகுந்தது என்பதுதான்.

உண்மையில் லிங்க சொரூபமானது மூன்று மதத்திற்கும், புத்த ஜைனர்களுக்கும் கூட பொதுவானது என்பதையும் அவர் கண்டுபிடித்தார்.

ஒரு மலை உச்சி! அதில் பௌர்ணமி இரவில் கரிய நிழல் உருவாய் கண்ணுக்குத் தெரிந்த லிங்க உருவத்தை ஒரு கிருத்தவன் சிலுவைச் சின்னமாகப் பார்த்தான். ஒரு இஸ்லாமியன் தங்களின் மசூதிக் கூரை தெரிவதாக கருதினார். புத்த ஜைன சன்யாசிகள் தங்கள் குருமகாங்கள் அமர்ந்து தவம் செய்து கொண்டிருப்பதாகக் கருதினார்கள். ஒரு இந்துவோ அது சிவலிங்கம் என்று திடமாக கருதி இருந்த இட்த்தில் இருந்தே வில்வ இலைகளை வாரி வாரி அர்ச்சித்தான்.

உருவம் ஒன்று. ஆனால் அனைத்து மார்க்க தரிசிகளையும் அது திருப்திப்படுத்தியது என்றால் சிவம்தான் முதலும் முடிவுமான அனைவருக்கும் பொதுவான இறை ஸ்வரூபமா? டாக்டர் விளாதிமீர் இப்படிதான் கேட்கிறார்.

மேலும் அவர் புராணங்களிலும், இதிகாசங்களிலும் சிவம் பற்றி சொன்னதை அவர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

லிங்க உருவம் பற்றி யாரும் சரியாக உணரவில்லை என்பதுதான் அவரது கருத்து.

ஒரு ரஷ்ய நாட்டுப் பிரஜையாக இருந்தாலும் சிவலிங்க சொரூபம் அவருக்குள் ஆழமான பாதிப்புகளை உருவாக்கியதாக அவர் கூறுகிறார்.

லிங்கம், சதுரம், செவ்வகம், வட்டம், முக்கோணம் என்று கணித வடிவங்கள் அவ்வளவையும் தனக்குள் கொண்டிருப்பதாகவும், ஒவ்வொரு கோணத்தில் இருந்து பார்க்கும்போதும் ஒருள் பொருள் தருவதாகவும் இருக்கிறது என்பது அவர் கருத்து. குறிப்பாக அணு தத்துவம் சிவலிங்க சொரூபத்துக்குள் விலாவரியாக இருக்கிறது. லிங்கத்தைப் பயன்படுத்தத் தெரிந்தால், அது மழை தரும், நெருப்புத் தரும், காற்று தரும் கேட்ட எல்லாம் தரும், என்றும் நம்புகிறார்.

அப்படி என்றால் சிவமாகிய லிங்க ஸ்வரூபம் என்பது மானுடர்கள் பயன்படுத்தத் தெரியாமல் வைத்திருக்கும் மகத்தான ஒரு எந்திரமா?

டாக்டர் விளாதிமீரின் சிவஸ்வரூப ஆராய்ச்சியில் ஒரு ஆச்சரியமூட்டும் தகவல் ஒன்றும் அவருக்குக் கிட்டியதாம். இந்த மண்ணில் பூமிக்கு மேலாக கண்ணுக்குத் தெரியும் விதத்தில் உள்ள லிங்க ஸ்வரூபங்கள் இல்லாமல் பூமிக்குள் புதைந்து கிடக்கும் ஸ்வரூபங்களும் ஏராளமாம்! அதுவே அவ்வப்போது ஸ்வயம்பு மூர்த்தியாய் வெளிப்படுகிறதாம்.

ஸ்வயம்பு மூர்த்தங்களின் பின்புலத்தில் பஞ்சபூத சக்திகளின் இயக்கம் ஒரு சீராகவும், ஆச்சரியம் ஊட்டும் விதத்தில் ஒன்றோடொன்று பின்னிப்பினைந்த கூட்டுறவோடும் செயல்படுகிறதாம்.

சுருக்கமாகச் சொன்னால், அந்த மூர்த்தங்களைப் பஞ்ச பூதங்கள் ஆராதிக்கின்றன என்பதே உண்மை என்கிறார்.

இப்படிப்பட்ட ஆராதனைக்குறிய இடங்களில் கூர்ந்து கவனித்தபோது பஞ்ச பூதங்களும் சம அளவிலும் அத்துடன் சீரான இயக்கத்துடனும் அவை இருக்கின்றன. மனித சரீரத்திலும் பஞ்ச பூதங்கள் உள்ளன. இவை சுயம்புலிங்க ஸ்தலங்களில் இயற்கையோடு கூடிச் செயல்படுகின்றன என்கிறார்.

அதாவது சுயம்பு மூர்த்தி உள்ள ஸ்தலங்களில் வாழும் மனிதர்களே அந்த மண்ணுக்கான மழை. காற்று, அக்கினி மண்வளம் ஆகியவைகளைத் தீர்மானிக்கிறார்கள் என்று கூறும் விளாதிமீர், மதுரை போன்ற சுயம்புலிங்க ஸ்தலங்களில் கூடுதலான மழை அல்லது குறைவான மழைக்கு அங்கு வாழும் மக்களின் மனநிலையே காரணமாகிறது என்கிறார். சுயம்பு லிங்கங்கள் உள்ள மண்ணில் வாழும் மக்கள் மனது வைத்தால் அங்கே எதை வேண்டுமானாலும் உருவாக்கிட இயலும் என்றும் கூறுகிறார்!.

இந்த பூமியானது சூரியன் உதிர்ந்த ஒரு சிறிய அக்னித் துளி என்கிறது விஞ்ஞானம். மெல்லக் குளிர்ந்த இதில் அடுக்கடுக்காய் உயிரினங்கள் தோன்ற ஆரம்பித்தன. அந்த உயிரினங்கள் உயிர் வாழத் தேவையான அனைத்தும் கூட அப்போது தோன்றின. இதுதான் பல கோடி ஆண்டுகளைக் கண்டு விட்ட இந்த பூமியின் சுருக்கமான வரலாறு.

மாற்றம் என்பதே இந்தப் பூமியில் மாறாத ஒன்றாக என்றும் இருப்பது. அந்த மாற்றங்களால் வந்ததே இந்த மனித சமூகம். கூன் விழுந்த, கொத்துக் கொத்தான முடி கொண்ட ஏழு எட்டு அடிக்குக் குறையாத உயரம் கொண்ட குறைந்த பட்சம் 150.கிலோ எடையுடன் தொடங்கியதுதான் சராசரி மனிதனின் உடலமைப்பு.

இன்று அவன் சராசரியாக ஐந்தரை அடி உயரம், எண்பது கிலோ நிறை, நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை என்று மாறியிருக்கிறான். பல ஆயிரம் ஆண்டுகளாக இந்நிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. ஆனாலும் காலப்போக்கில் இவன் மேலும் குட்டியாகி சுண்டிச் சுருங்கி வினோதமான முக அமைப்பை எல்லாம் பெற்று. ஒரு பெருச்சாளி போல் நிலப்பரப்பைக் குடைந்து அதனுள் ஊர்ந்து சென்று பதுங்கி வாழும் காலம் வரலாம் என்பதெல்லாம் விஞ்ஞான அனு,மானங்கள். இந்த பூமியில் கிடைக்கும் பலவித ஆதாரங்களும், மனித மனத்தின் ஊகம் செய்து பார்க்கும் சக்தியுமே!

இதன் நடுவே மிக மாறுபட்ட கருத்துகளுடன், நமக்கிருக்கும் அறிவாற்றலால் நம்பமுடியவில்லை என்று ஒரு வார்த்தையில் கூறும் விதமாய் இருப்பதே மதப் புராணங்கள். இதில் புராணவழி அறியப்பட்ட சிவமானது தனித்து நிற்கிறது. புராணம், விஞ்ஞானம் இரண்டையும் கடந்து மூன்றாவதாய் ஒன்றும் உள்ளது. அதுதான் நான்! மானுடமே முடிந்தால் என்னைப் புரிந்துகொள் என்பதுபோல் இருக்கிறது அது என்கிறார் டாக்டர் விளாதிமீர்!”

இந்த பூவுலகில் சிவம் தொடர்பான அடையாளக் குறியீடுகள் பாரத மண்ணில் மட்டுமன்றி ஆப்பிரிக்கா, ஐரோப்பா முதலிய கண்டங்களில் கூட இருக்கிறது என்பது டாக்டர் விளாதிமீரின் கருத்து.

அமெரிக்காவில் “ கிராண்ட் கன்யான் “ என்னும் வித்தியாசமான மலைப் பகுதியில் பராசக்தியின் அம்சங்கள் என்று வர்ணிக்கப்படும் “ சிவம், விஷ்ணு, பிரம்மன் “ மூன்றின் அடையாள உருவங்கள் காணப்படுகின்றனவாம்.

ஆயினும் இந்திய மண்ணில் மட்டும் சிவம் தொடர்பான சிந்தனைகளும் சைவம் என்கிற ஒரு பிரிவும் உருவாக ஆழமான ஒரு காரணம் இருப்பதாக விளாதிமீர் கருதுகிறார்.

உலகின் உயர்ந்த சிகரமான இமயம் பூகோள ரீதியில் பூமியின் மையத்தில் {கிட்டதட்ட} காணப்படுகிறது. அதன்படி பார்த்தால் இந்த உலகே கூட சிவலிங்க சொரூபம் எனலாம். ஒரு வட்டத்தில் இருந்து கூம்பு முளைத்தது போல் உலகமே ஆவுடையராகத் திகழ இமயம் சிவஸ்தம்பமாக எழும்பி நிற்கிறது.

அங்கே பஞ்ச பூத ஆராதனையாக குளிர்ந்த காற்றும் உறைந்த பனியே நீராகவும், அதன் முற்றிய குணமே நெருப்பாகவும் இருக்கிறது. ஈர்ப்பு விசைக்கு உட்பட்ட வெளி வேறு எங்கும் காணப்படாத விதத்தில் தூயதாக எல்லாவித கதிர் வீச்சுக்களையும் காணப்படாததாகக் திகழ்கிறது.

இங்கே உயிராகிய ஜீவன் மிகச் சுலபமாக சிவத்தை அடைந்து விட {அ} உணர்ந்து விட ஏதுவாகிறது. அதனாலேயே இங்கே ஞானியர் கூட்டம் அதிகம் இருக்கிறது என்பதும் அவரது கருத்து!

இந்த ரஷ்ய விஞ்ஞானி சொன்ன விஷயங்கள் எதுவும் எந்த விஞ்ஞானியும் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 x

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16
x 2

#13 Re: Aanmeekam...

Post by venkatakailasam » 09 Nov 2013, 07:26

thanjavooran...nice...to learn..

காசியும் வியாசரும்!

காசிக்குச் சென்றால் கர்ம வினைகள் தொலையும் என்பது நம்பிக்கை. 'இது எவ்வளவு தூரம் உண்மை?’ என்று சோதிக்க நினைத்தார் வியாசர். அதற்காக சீடர்களுடன் காசிக்குப் புறப்பட்டார். ஆனால், அங்கு அவர்களுக்கு ஒரு வாரமாக உணவு கிடைக்கவில்லை. ஒருநாள் ஓர் இல்லத்தின் முன் நின்று குரல்கொடுத்தார் வியாசர். வெகுநேரமாகியும் கதவு திறக்கப் படவில்லை. பொறுமை இழந்த வியாசர், காசி மக்களைச் சபிக்க முற்பட்டார். அப்போது இல்லத்தின் கதவு திறந்தது. வீட்டுக்குள் இருந்து வெளிப்பட்ட பெண்மணி, ''நிறுத்துங்கள்'' என்றாள். சாபமிடுவதற்காகத் தூக்கிய வியாசரின் கைஅப்படியே நின்றுவிட்டது. பின்னர், அந்தப் பெண்மணி வியாசரைப் பார்த்துப் புன்னகைத்ததும்தான் அவரால் கையைக் கீழே இறக்க முடிந்தது.

வியாசர் பிரமிப்புடன் பார்த்துக்கொண்டிருக்க, அவர்களை உள்ளே அழைத்துச் சென்று அமரவைத்து எல்லோருக்கும் இலை போட்டாள் அந்தப் பெண்மணி. பின்னர், ''எல்லோரும் சாப்பிடுங்கள்'' என்றாள். வியாசர் திகைத்தார். ''இலையில் எதையும் பரிமாறவில்லையே!'' என்று கேட்டார். தொடர்ந்து ஏதோ சொல்ல அவர் வாயைத் திறப்பதற்குள், இலை முழுதும் விதவிதமான உணவு வகைகள் நிறைந்திருந்தன. வியப்பு மேலிட அனைவரும் சாப்பாட்டை முடித்துக்கொண்டு நிமிர்ந்தால், சாக்ஷ£த் அன்னபூரணியே காட்சியளித்து மறைந்தாள்.
இந்தத் திருவிளையாடல் எதற்காக எனும் கேள்வி வியாசரை துளைத்தெடுத்தது. இதற்கான பதிலை சிவனாரைத் தரிசித்து கேட்டார் வியாசர். ''உங்களில் எவருமே சிரத்தையாக காசிக்கு வரவில்லை. இந்த ஊரைச் சோதிக்க வந்தீர்கள். அதனால் ஏற்பட்டதுதான் இந்த ஒரு வாரப் பட்டினி'' என்றார் சிவபெருமான். உண்மைதான்! நோக்கங்கள் உயர்வாக இருந்தால்தான், அனுபவமும் முறையாக இருக்கும்.
0 x

thanjavooran
Posts: 2542
Joined: 03 Feb 2010, 04:44
x 180
x 63

#14 Re: Aanmeekam...

Post by thanjavooran » 10 Nov 2013, 21:07

A share from my friend's mail

T H E E R T H A M
We often visit temples and after worshipping the Lord and offering our prayers, we are given tiirtham or holy water and prasaad (food offered to the Lord). After having that holy water and prasaad with great reverence & devotion we feel great happiness. This "tiirtham" is the holy water used for the Abhisheka(bath) of the Idol of the temple. After doing the abhishekam that particular water becomes "tiirtham".

In Srimad Bhaagavatham, there is a story of Lord Mahavishnu, in his avatar of vamana. When he started measuring the BrahmaanDa (the universe), his toe reached the Brahmaloka (the abode of Brahma). On seeing this toe of the Lord of Lords, the creator of the universe, Brahma, took water and poured it on the Lord’s feet for washing it. This water that flows from the Brahmaloka became the holy river Ganges. The Bhagavatam also talks about Bhageeratha who did a rigorous penance for the sake of salvation and peace of his forefathers. Bhageeratha did a 1000 year penance and brought the river Ganges to earth. The holy water of the Ganges is also called "tiirtha"

When devotees are given the holy water, the following Sloka is often chanted:

akaala mrityu haranam, sarva vyaadhi nivaaranam, samastha paapa kshayakaram,
sarva dhuritopashamanam Vishhnu paadodakam paavanam shubham.

Prevention of untimely death, cure for all diseases, remedy for all miseries, are all possible by this water that has washed Lord Vishnu’s feet.

akaala mR^ityu means untimely death. When a person dies before the completion of an average life span, by causes such as road accidents, building collapse, fire etc., it will be called akaala mR^ityu. This Sloka says that the holy water has the power to destroy the akaala mR^ityu or untimely death and get rid of all miseries and diseases.

shariire jarjarii bhuute, vyaadhi graste kaLebhare
aushadaM jaahnavii toyaM vaidhyo naaraayaNo hariH


In this Sloka we say that this holy water is like medicine. When we become old and have diseases due to old age, this holy water has the power to reenergize us. Lord Narayana and Sree Hari are the doctors who protect us. This is the greatness of the "tiirtha."

The Bhagavatam, also tells the story of Devaahuti. Devaahuti is the wife of Kardamamuni who is the father of Lord Kapiladeva and a great sage. In this story, Devaahuti regains her beauty and youth by taking a bath in the Bindusaras, which is a part of the river Sarasvati. The Bhagavatam also explains how the Bindusaras originated. The word Bindu means a drop. The story goes that the lord was happy with his devotee in a particular moment and in that place, a drop of water fell from his eye due to this happiness and it became Bindusaras. Kardamamuni was performing a great penance near this river, and due to the association with this great sage, the river is said to have attained its power of purification. Even today, the river Sarasvati is greatly revered in India.

A pilgrimage or visit to holy places such as Kaashi, prayaag etc. in India is called "tiirtha yaatra". These places and rivers became holy only because great saints have stayed in such places in days of yore and conducted penance and puja to the Lord. When we visit such places, we feel the lord’s presence there and we get peace of mind and happiness.

Before we go on a pilgrimage to holy places, it is good to understand the importance and holiness of that place, river or temple so that we can offer prayers with a pure mind and be inspired to offer everything to the Lord with faith and devotion. The great saints and sages have done many years of penance and have attained knowledge from the Lord. From this knowledge all the sR^iti, smR^iti, shaastraas and puraaNas (all the scriptural texts), have been given by these sages for the benefit of mankind. So when we reach these holy places with the knowledge of the greatness of such places, it will invoke greater reverence and devotion in our minds.

Many great saints and sages are referred to by the name "tiirtha", such as Srimad madhavatiirtha. This is because of their great penance, sacrifice and unflinching devotional service to the Lord and to mankind. These saints are considered holy, because of the way they lead their lives and hence they are referred to as "tiirtha swamis". This can be explained by the following Sloka from Srimad Bhagavatam
bhavadvidhaa bhaagavathaasthiirthaa bhuutaaH svayaM vibho
tiirti kurvanti tiirtaani svaanthaH stengathaadbhrataH


yudhishtra says to sage vidura, "You are a great devotee of Lord KrishhNa and you yourself represent all holiness. In your heart, the Lord is ever present. When a person like you has a bath in rivers, ponds or lakes, they also become sacred or holy. Thus, by your presence and companionship, we also become pure. When Ordinary people who commit many sins take bath in rivers they become impure, but when great people such as you take bath in such rivers, again these waters becomes pure and holy.

Many people might not be able to visit holy places. The scriptures say that for all people their parents and teachers are the sacred and holy places or rivers. For a noble woman, her family is itself the holy place. The Bhagavatam and the Bhagavad Gita also talk about the mental pilgrimages, which help to purify our hearts and minds. When a pot is filled with liquor, cleaning it externally will not really cleanse it and it will continue to be impure as long as it is filled with something impure. Similarly, when a person visits the holy places with an impure mind, such a visit cannot cleanse him thoroughly. Only when our hearts are pure, we can get mental peace and happiness while visiting holy places.

In the 17th chapter of the Bhagavad Gita, the lord talks about "triimaana tapas" (threeway penance of body, words and mind). An intelligent and attentive person should control his desires and purify his mind by removing the impurities and only then he will get the benefit of the pilgrimages. It is said in the scriptures that wealth is lost in three ways. It is either used for worldly enjoyments or for charitable and noble actions or taken/stolen by others or used for wrong actions. Of these ways, when wealth is used for charitable and noble actions, it is the best way and is called "uttamaM". If it is used for worldly enjoyments, it is "madhyamaM" or the middle way. The last category where it is used for wrong actions is called "adhamaM" or the wrong way. Hence it is necessary to use wealth in the right way, in charities and noble actions, because this is the way to reach the lord.

Normally, we do actions with some selfish motive. Instead we should try and dedicate all actions to the Lord and understand that we are only instruments and He is the doer. Our long journey of life is a pilgrimage towards God. There is a confluence of the three rivers (triveni sangamam) of yaGYa (noble actions), daana (charity) and tapas (penance). When we offer all our actions to the Lord and pray only for his blessings, then we can feel the happiness of God realization. This is the most ripened fruit of the tiirtha yaatra (pilgrimage) of life.
0 x

thanjavooran
Posts: 2542
Joined: 03 Feb 2010, 04:44
x 180
x 63

#15 Re: Aanmeekam...

Post by thanjavooran » 18 Nov 2013, 21:30

ஏழரைச்சனி உங்களைப் பிடிக்கப் போகிறது என்றாலே அதைக் கேட்பவருக்கு சர்வ அங்கமும் ஆடிப் போய்விடும்.
சனி பகவான் சிவபெருமானை அணுகி “பரமேஸ்வரா.. தங்களை ஏழரை நிமிடம் பிடிக்க வந்திருக்கிறேன்” என்றதும் (நமக்கு ஒரு வருடம் என்பது தெய்வங்களுக்கு ஒரு நிமிடம்) அவர் “உன்னையும்,சர்வ உலகத்தையும் படைத்த என்னை நீ பிடிக்க முடியுமா? ” என்றதற்கு “எவரும் எனக்கு விதிவிலக்கல்ல” என்று சனிபகவான் கூற..
சனி கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு ஈசன் பூமிக்கு வந்து ஒரு சாக்கடையின் அடியில் ஏழரை நிமிடம் ஒளிந்து கொண்டு, பிறகு வெளிவந்து எகத்தாளமாய் “பார்த்தாயா...என்னை உன்னால் பிடிக்க முடியவில்லை” என்றதும், சனி பகவான் பணிவுடன் “என்னையும், சர்வ உலகங்களையும் படைத்த நீர் எதற்காக கேவலம் பூமியில் ஒரு சாக்கடையின் கீழ் ஒளிய வேண்டும்? அந்த ஏழரை நிமிடமே நான் உம்மைப் பிடித்தேன்” என்ற கூறியதாய் ஒரு கதை இருக்கிறது.
சரி... அனைவரும் இவ்வளவு பயப்படுமளவிற்கு ஏழரைச் சனிக்காலம் அவ்வளவு கொடியதா? சனி பகவான் கொடுமைப் படுத்துவதையே குணமாகக் கொண்டவரா? என்றால் பதில் வேறாக இருக்கும்.
தவறு செய்த ஒருவனை காவல்துறை கைது செய்து நீதிபதியின் முன் நிறுத்துகிறது. அவன் செய்த தவறினுக்கேற்ப நீதிபதி அவனுக்கு தண்டனை விதிக்கிறார். அதாவது அவன் திருந்துவதற்கு, செய்த தவறைப் பற்றி சிந்திப்பதற்கு தண்டனை என்ற வாய்ப்பினை அளிக்கிறார். அதற்காக நீங்கள் நீதிபதியின் பேரில் குறை சொல்வீர்களா?
அதேபோல் தான் நீங்கள் செய்யும் தவறுகளுக்கு ஏழரைச்சனி எனும் தலை சிறந்த நீதிபதியினை குறை கூறுவது என்பது!
ஏழரைச்சனி ஒருவருடைய வாழ்வில் முதல் முறை வரும் போது அவர் பள்ளி, கல்லூரிப் பருவத்தில் இருப்பார். (சிலருக்கு பிறக்கும் போதே ஏழரை இருக்கும். அவர்களுக்கு முப்பது வயதுகளில் இரண்டாம் சனியாக வரும். ஆனால், அதுவும் முதல் சனி கணக்குத்தான்.) அச்சமயத்தில் படிப்பில் கவனம் குறையும். படித்தது பரீட்சை ஹாலுக்குள் போனதும் மறந்து போகும்.சோம்பல் வரும்.எட்டு மணிக்குத்தான் எழுந்திருக்க முடியும். தேவையற்ற பழக்க வழக்கங்கள் வந்து சேரும்.
கூடா நட்பு கேடாய் முடியும். உயிர் நண்பனுக்கு உதவுகிறேன் என்று சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள். காதல் வந்து மற்ற எல்லாவற்றையும் மறக்கச்செய்து கடைசியில் தோல்வியில் முடியும். படிப்பை முடிக்க முடியாமல் அரியர்ஸ் வரும். பணம் இன்றி திண்டாடுவீர்கள்.

ஏழரைச்சனி காலத்தில் படிப்பில் கவனம் குறைவது என்பது பிற்பாடு நீங்கள் அதை உணர்ந்து, படிப்பு முடிந்ததும் சேரும் வேலையில் திறம்பட செயல்பட்டு பெயர்வாங்க வேண்டும் என்பதற்காகவே. காதல் தோல்வி என்பது எதிர் பாலினத்தைப் பற்றி நன்கு புரிந்து கொண்டு அந்த அனுபவத்தைக் கொண்டு திருமண வாழ்வை மிகச் சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே.கூடா நட்பும் அப்படித்தான். பணத் திண்டாட்டம் வருவது எதற்காக என்றால், பிற்பாடு நீங்கள் ஏராளமாய் சம்பாதிக்க போகும் பணத்தை உருப்படியாகப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே சனி பகவான்

ஏழரைச்சனி காலத்தில் உங்களை திண்டாடச் செய்கிறார்.
சுருக்கமாய்ச் சொல்லப் போனால் அந்த ஏழரை ஆண்டு காலம் கிடைக்கும் அனுபவங்களை கொண்டு அடுத்த முப்பது ஆண்டு காலம் உங்கள் வாழ்க்கையை திறம்பட நடத்திச் செல்வதற்காகவே சனி பகவான் உங்களுக்கு இந்த படிப்பினைகளைத் தருகிறார்.
ஏழரைச்சனிக்காலத்தில் முதலில் பனிரெண்டாமிடத்தில் விரயச் சனியாக வரும் சனி பகவான் தன ஸ்தானத்தையும், பாக்ய ஸ்தானத்தையும், ருண ஸ்தானத்தையும் பார்வையிட்டு பணத்தால் பிரச்சனைகளையும், அலைச்சல்களையும் உண்டு பண்ணுவார்.

அடுத்து ஜென்மத்தில் அமர்பவர் ஜாதகரின் மனதை ஆளுவார். மன உளைச்சல் தந்து தடுமாற வைப்பார். துவள வைப்பார். வாய் விட்டு கதற வைப்பார். (அதிலும் ஜென்ம நட்சத்திரத்தில் சனி செல்லும் போது மிகவும் கஷ்டப்படுத்துவார்.கடுமையான பலன்களைத் தருவார்.)

ஏழாமிடம் என்பது எதிர்பாலினத்தின் இடம் (கணவன் – மனைவி). வாழ்க்கைத் துணை பற்றிய இடம். ஜென்மத்தில் இருக்கும் போது ஏழாமிடத்தைப் பார்வையிட்டு காதலின் இன்னொரு பரிமாணத்தை உணர வைப்பார்.அதாவது காதலிப்பவரின் உண்மையான முகத்தைப் புரிய வைப்பார். பத்தாமிடத்தையும் பார்வையிட்டு தொழிலில் அல்லது வேலையில் புதுப்புது பிரச்சனைகளை உருவாக்குவார்.அல்லது வேலையை விட்டு நீக்குவார்.
இறுதியாக இரண்டாமிடத்தில் அமருபவர் எட்டாமிடத்தையும், நான்காமிடத்தையும் பார்வையிட்டு இதுவரை கொடுத்த அனுபவங்களின் கடுமையைக் சற்று குறைப்பார். எட்டாமிடத்தை தனது பார்வையால் கெடுத்து இதுவரை இருந்து வந்த தலைகுனிவை தடுத்து நிறுத்துவார். மீண்டும் மனிதனாக மாறத் துணைப் புரிவார். பறிபோன கௌரவத்தையும் அந்தஸ்தையும் ஏழரைச்சனி முடிவில் திரும்பக் கிடைக்கச் செய்வார்.
சனி பகவானை சனீஸ்வரன் என்று மற்ற எட்டு கிரகத்திற்கும் இல்லாத ‘ஈஸ்வர’ பட்டம் சிலர் அளிக்கிறார்கள். அது தவறு. ‘சனைச்சர’ என்றால் சம்ஸ்கிருதத்தில் ‘மெதுவாக நகர்பவர்’ என்று பொருள். அதுவே மருவி சனீஸ்வரர் ஆகியுள்ளது.

சனி பகவானுக்கு சூரிய சந்திரர்கள் என்றாலே ஆகாது. ஏழரைச் சனி நடப்பில் இருக்கும் போது சூரிய திசையோ, சந்திர திசையோ நடக்குமானால் சனியின் கடுமை இன்னும் அதிகமாக இருக்கும். கவனமுடன் இருக்க வேண்டும்.

ராகு தசை நடக்கும் போதும் ஏழரைச் சனி நடைபெற்றால் சற்று மோசமான பலன்களே நடைபெறுகின்றன.

வேதனைகளைத் தரும் சனி பகவானை எப்படி சாந்தப் படுத்தலாம்?

• திருநள்ளாறு, குச்சானுர், சென்னை பொழிச்சலூர் போன்ற சனி பகவானின் திருத்தலங்களுக்குச் சென்று சனிபகவானுக்குரிய பரிகாரங்களைச் செய்யலாம்.

• இரவில் படுக்கும் போது கைப்பிடி அளவு எள்ளை தலைக்கு கீழே வைத்து படுத்து உறங்கி காலை எழுந்து அந்த எள்ளை புதிதாக வடித்த சாதத்துடன் கலந்து காகத்திற்கு அன்னமிடலாம். (ஒன்பது சனிக்கிழமைகள் தொடர்ந்து செய்ய வேண்டும்.)

• சனி பகவானை திருப்தி படுத்த மாற்றுத் திறனாளிகள், (குறிப்பாக பார்வை இழந்தவர்கள், நடக்க இயலாதவர்கள்) வயதானவர், ஆதரவற்றவர்களுக்கு உதவலாம்.

• சனிக்கிழமைகளில் காலபைரவருக்கு வெள்ளைப் புதுத்துணியில் மிளகை முடிச்சிட்டு அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றலாம். (எள் தீபம் கூடாது.எள்ளை எரிப்பது தோஷம். எரிக்கக் கூடாது)

• சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு நெய் தீபம் ஏற்றி தொல்லைகளில் இருந்து விடுவிக்கும்படி மனமுருக வேண்டி வழிபடலாம்.

• பெருமாளுக்கு சனிக்கிழமைகளில் விரதம் இருக்கலாம்

ஏழரைச் சனி என்பது அனுபவங்களின் தொகுப்பே.அக்காலத்தில் நல்லவர் யார் கெட்டவர் யார் என்று நீங்கள் தெரிந்து கொள்ளும்படி உங்கள் கண்களை திறக்கிறார் சனி பகவான். அந்த அனுபவங்களை ஏற்றுக் கொண்டு, அதன் துணை கொண்டு அதன் பின்வரும் வாழ்க்கையை ஜெயிப்பதற்கே அதனை சனிபகவான் அருளுகிறார்.

அனுபவங்களைப் பற்றிய கவியரசு கண்ணதாசனின் கவிதை இந்த இடத்தில் பொருத்தமாக இருக்கும்.


பிறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்

பிறந்து பாரென இறைவன் பணித்தான்

இறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்

இறந்து பாரென இறைவன் பணித்தான்

மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்

மணந்து பாரென இறைவன் பணித்தான்

அனுபவித்தே தான் அறிவது வாழ்வெனில்

ஆண்டவனே நீ ஏன் எனக்கேட்டேன்

ஆண்டவன் சற்றே அருகினில் வந்து

அந்த அனுபவம் என்பதே நான்தான் என்றான்


- கண்ணதாசன்
[ஜூலை 13-19, 2011 திரிசக்தி ஜோதிடம் வார இதழில் வெளிவந்தது.]
0 x

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16
x 2

#16 Re: Aanmeekam...

Post by venkatakailasam » 12 Dec 2013, 20:25

தேவ லோகத்தை சேர்ந்த பஞ்ச தருக்கள் என்று அழைக்கப்படும் ஐந்து மரங்களுள் ஓன்று வில்வமரம். மற்றவை, பாதிரி, வன்னி, மா, மந்தாரை. லக்ஷ்மி தேவியின் திருக்கரங்களிலிருந்து வில்வ மரம் தோன்றியதாக வராக புராணம் கூறுகிறது.

உன் அனுக்ரஹத்தால் உண்டான வில்வமரத்தின் பழங்கள் எனது அஞ்ஞான இருளை அகற்றட்டும், என்று மகாலக்ஷ்மியை பிரார்த்திப்பதாக ஸ்ரீ சூக்தத்தில் கூறப்பட்டுள்ளது. வில்வ மரத்தை வழிபட்டால் லக்ஷ்மி தேவியின் பூரண அருள் கிட்டும். அதோடு சிவனுக்கும் மிகவும் விருப்பமானது வில்வம்.

வில்வ இலைகளை சிவன் என்றும், முட்களை சக்தி என்றும், கிளைகளை வேதங்கள் என்றும், வேர்கள் முக்கோடி தேவர்கள் என்றும் போற்றப்படுகின்றது.

சிவபூஜையின்போது வில்வம் கொண்டு அர்ச்சனை செய்வதால், சகல தோஷங்களும் விலகும். வில்வ இலை தீய சக்திகள் நம்மை நெருங்காதவாறு காக்கும்.

Shared from Sivaraman Ramachandran
0 x

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16
x 2

#17 Re: Aanmeekam...

Post by venkatakailasam » 14 Dec 2013, 20:30

பகவத் கீதை

பல வருடங்களுக்கு முன் ஸ்வாமி சின்மயானந்தா அவர்களின் பிரசங்கத்திலிருந்து ஒரு ஸ்வாரஸ்யமான பகுதியை என் ஞாபகத்திலிருந்து சுருக்கமாக பதிவு செய்கிறேன். :

யாரோ ஒருவர் திடீரென்று உங்களிடம் “ஸார், ட்ரெயினைப் பிடிக்கணும், ஐந்து நிமிடங்கள் தான் இருக்கு. அதுக்குள்ள பகவத் கீதையை சொல்ல முடியுமா ? “ என்கிறார்.

தயங்கவே வேண்டாம், “ஐந்து நிமிடம் இருக்கா ? இரண்டே நிமிடம் போதுமே “ என்று சொல்லுங்கள். “விடு - பிடி. அல்லது பிடி - விடு. அவ்வளவுதான் “ என்று சொல்லுங்கள். - என்று சொல்லி விட்டு சிரி்துக்கொணடே கூட்டத்தைப் பார்த்தார். கூட்டம் ஒன்றும் புரியாமல் அமைதியாக இருந்தது. பிறகு அவரே விளக்கினார் :

இந்த உலக பந்தங்களையெல்லாம் உதரித் தள்ளுங்கள். பரந்தாமன் பாதங்களைப் பற்றுங்கள்.

ஆனால் சாமான்ய மக்களுக்கு இந்த உலக பந்தங்களை எல்லாம் உதரித் தள்ளுவது சுலபத்தில் முடிகின்ற காரியமில்லை. பிறகு எவ்வாறு பரந்தாமன் பாதங்களைப் பற்றுவது ?

கவலை வேண்டாம். இன்னொரு வழி இருக்கின்றது. முதலில் பரந்தாமன் பாதங்களைப் பற்றுங்கள். அந்தப பிடி இறுக, இறுக, இந்த உலக பந்தங்களின் மேல் உங்களுக்குள்ள பிடிப்பு தானாக தளர்ந்துவிடும்.

ஒரு உபமானம் சொல்லுகிறேன். சில விறகு குச்சிகள் ஒரு கயிற்றால்
இறுக்கமாகக் கட்டபபட்டுள்ளன. அதனை அவிழ்க்க முடியவில்லை ( இது நம் உலக பந்தம் ) வேறு ஒரு கயிறு எடுத்து அதற்குப் பக்கத்திலேயே கட்டி, ஒரு குலுக்கு குலுக்கி இறுக்குங்கள். ( இந்த புதிய கட்டு பகவானின் பாதம பற்றிய பிடி.) புதிய கயிற்றின் இறுக்கத்தில், பழைய கயிறு இருக்கம் தளர்ந்து கழன்று விடும்.

உலக பந்தங்களை விட்டு, பரந்தாமன் பாதங்களைப் பற்றுவது ஞான மார்கம். ஞானிகளுக்கானது.

பரந்தாமன் பாதங்களைப் பற்றி, உலக பந்தங்களை விடுவது பக்தி மார்கம். சாமானிய மக்களுக்கானது.

எவ்வளவு எளிமையான விளக்கம் !!!

- Sethuram Krishnamurthy
0 x

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16
x 2

#18 Re: Aanmeekam...

Post by venkatakailasam » 04 Jan 2014, 20:45

சனிக்கிழமை விரதம் ... வைகுண்டம் நிச்சயம்.

நித்தமும் என் கருவறைக்கு வந்து தங்கத்தால் ஆன பூக்களால் என்னை அர்ச்சித்து வழிபடுகிறாய் அப்படி இருக்கும்போது அந்தத் தங்கப் பூக்கள் நேற்று எப்படி மண்ணால் ஆன பூக்களால் மாறிப் போயின என்பதுதானே உன் குழப்பத்துக்குக் காரணம்? உன் தூக்கத்தைத் தொலைத்து தவிப்பதற்கும் அதுதானே காரணம்? என்று கேட்டான் வேங்கடவன். ஆமாம் பகவானே... இந்த நாடும் மக்களும் நலமாக இருக்க வேண்டும் என்கிற பிரார்த்தனையுடன்தான் தினமும் உன் சன்னிதிக்கு வந்து தங்கத்தால் ஆன புஷ்பங்களை அர்ப்பணித்து வழிபடுகிறேன். என் வழிபாட்டில் திடீரென்று இந்தக் கோளாறு எப்படி ஏற்பட்டது? என் பக்தியில் ஏதேனும் தவறு நடந்து விட்டதா என்றெல்லாம் சிந்தித்துச் சிந்தித்து தவித்துக் கொண்டிருக்கிறேன் குரலில் சோகம் ததும்ப தொண்டைமான் சொன்னான். ஏழுமலையான் சிரித்தான். நீ அளிக்கும் தங்க புஷ்பங்களை ஏற்றுக்கொண்டால் மகிழ்கிறாய். அதை ஏற்க மறுத்தால் துக்கப்படுகிறாய். இது மனிதர்களின் இயல்பாக இருந்து வருகிறது. ஏற்க மறுத்ததன் காரணம் உனக்குத் தெரியாதல்லவா? மன்னனே... உன்னைப் போன்ற பல பக்தர்கள் என்னை நித்தமும் ஆத்மார்த்தமாக வழிபடுகிறார்கள். அப்படிப்பட்ட பக்தர்களுள் பீமய்யா என்கிற ஏழையும் ஒருவன். இதோ, இந்த ஆலயத்தில் இருந்து சற்றுத் öõதலைவில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் அவன் வசித்து வருகிறான். அவன் ஒரு குயவன். மண்பானைகளையும் பாண்டங்களையும் தயாரித்து தினமும் அதை விற்றுப் பிழைப்பு நடத்தி வருகிறான்.

ஏழையான அவன் தினமும் திருக்கோயிலுக்கு வந்து என்னைத் தரிசிக்க நேரம் கிடைக்கவில்லையே என்று வருந்தி, தான் வசிக்கும் குடிசையிலேயே என் உருவத்தை மண்ணில் வடித்து வைத்திருக்கிறான். திருமலை கருவறையில் உள்ள என்னை பூஜிப்பது போல் நினைத்துக்கொண்டு, தினமும் மண்ணால் ஆன பூக்களைக் கொண்டு அந்த விக்கிரகத்துக்கு வழிபாடு நடத்துகிறான். அது தவிர, எந்த நேரமும் அவனுக்கு என் சிந்தனைதான். மண்பாண்டம் செய்யும்போது, உணவு உண்ணும் போதும், உறக்கத்திலும் எனது திருநாமத்தையே உச்சரித்துக் கொண்டிருப்பான். அவனது பக்தி என்னை நெகிழச் செய்துவிட்டது. அதைப் போற்றும் விதமாகவும் இந்த உலகத்தோர் அறியும் விதமாகவும் அவன் எனக்கு அளித்த மண் பூக்களை நான் மனமாற ஏற்றுக் கொண்டேன். அதனால்தான் உன் தங்கப் பூக்களும் மண் பூக்களாகி விட்டன என்றார் பெருமாள். கனவு கலைந்தது. தொண்டைமானுக்குக் காரணம் புரிந்தது. தங்கப் பூக்களை அர்ச்சித்து வணங்கும் தனது பக்தியையே விஞ்சிய ஏழையின் பக்தி, அவனை வியக்கச் செய்து விட்டது. அந்த ஏழையின் பக்தித்திறனை பகவானை வணங்கும் காட்சி கண்டு பரவசம் கொள்ளவேண்டும் என்று விரும்பனாள். எனவே, அன்றைய தினம் காலை பீமய்யாவின் குடிசைக்குச் சென்றான். அது ஒரு சனிக்கிழமை. பெருமாளின் உத்தரவுப்படி ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதம் இருந்து வழிபடுபவன் பீமய்யா. எனவே, வழக்கம்போல் பெருமாளின் திருநாமங்கள் சொல்லி, மண்ணால் ஆன பூக்கள் கொண்டு பெருமாளை வழிபட்டான் பீமய்யா. இந்த பூஜையை மறைந்திருந்து பார்த்தான் மன்னன்.

பெருமாளே... பொன்னையும் பொருளையும் கொடுத்து என்னை ஆட்கொள்ள நினைத்தாய். எனக்கு பொன்னும் வேண்டாம், பொருளும் வேண்டாம். உன் திருவடிகளை நிரந்தரமாகப் பற்ற வேண்டும். இதுதான் என் பிரார்த்தனை. இதை நான் அடையும் விதமாக ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதம் இருந்து வருகிறேன். உன் திருவடி நிழலை அடையும் பாக்கியத்தை விரைவில் எனக்குத் தா என்று வேண்டிக் கொண்டிருந்தான். அருகிலேயே அவனது மனைவியும் மெய்யுருகி வழிபட்டுக் கொண்டிருந்தான். பீமய்யாவின் முன்னால் திருப்பதி வேங்கடாசலபதியின் மண்ணால் ஆன விக்கிரகம் தங்கம்போல் ஜ்வலித்து மன்னனின் கண்களைக் கவர்ந்தது. பகவானின் திருப்பாதங்களில் பீமய்யா அர்ச்சித்த மண்ணால் ஆன பூக்கள் இறைந்து கிடந்தன. இனியும் மறைந்திருந்து பார்ப்பதில் மன்னனுக்கு விருப்பம் இல்லை. எனவே, பீமய்யா தம்பதியரின் முன்னால் போய் திடுமென நின்றான். நாட்டை ஆளும் மன்னன், திடீரென தங்களுக்கு முன்னால் வந்து நிற்பதைப் பார்த்ததும் அவர்கள் மிரண்டனர். தாங்கள் ஏதோ தவறு செய்துவிட்டோம். அதைக் கண்டிக்கவே மன்னன் இங்கு நேரில் வந்திருக்கிறான் என்று கணவனும் மனைவியும் அஞ்சினர். மன்னன் எதுவும் சொல்வதற்கு முன்னதாக ஓடிவந்து அவன் காலடியில் விழுந்தனர். தொண்டைமான் பதறிப்போய் சற்றே விலகி நின்றான். பிறகு தழுதழுக்கிற குரலில் பீமய்யா... உன் பக்தித்திறனைக் கண்டு வியந்தேன். உன்னைக் காணவே நான் இங்கு வந்தேன். என்னை நெகிழச் செய்துவிட்டாய் என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே. அங்கே கோடி ரூபாய் பிரகாச ஒளியுடன் வேங்கடவன் தோன்றினார். அதே வேளையில் வானவர்கள் வீற்றிருக்க, ஒரு புஷ்பக விமானம் வந்து இறங்கியது.

கண்களைக் கவரும் அலங்காரத்துடன் காணப்பட்ட அந்த புஷ்பக விமானத்தில் இருந்து வானவர்கள் இருவர் இறங்கினர். பீமய்யாவையும் அவனது மனைவியையும் நோக்கிச் சென்றவர்கள். உங்கள் இருவரையும் வைகுண்டம் அழைத்துச் செல்ல வந்திருக்கிறோம். இது பெருமாள் உத்தரவு, வாருங்கள். என்று இரு கரங்களையும் விரித்து சகல மரியாதையுடன் அழைத்தனர். கண்களில் நீர் கசிய ஆனந்தத்துடன் பீமய்யாவும் அவன் மனைவியும் அந்த விமானத்தில் ஏறிக் கொண்டனர். தொண்டைமான் நெகிழந்து போனான். பகவானே... வைகுண்டத்துக்கு என்னையும் அழைத்துச்செல்ல மாட்டீர்களா? என்று வேங்கடவனைப் பார்த்து ஏக்கத்துடன் கேட்டான். அகம்பாவம் இல்லாத பக்தியோடு என்னை வழிபடு. உனக்கும் ஒருநாள் வைகுண்டம் வாய்க்கும். என்று சொல்லி அடுத்த நொடியில் பகவான் மறைந்து போனார். புஷ்பக விமானமும் கண்களை விட்டு மறைந்தது. தொண்டைமானும் வேங்கடவனை தூய அன்புடன் வழிபட்டு, ஒரு நாள் வைகுண்டம் போய்ச் சேர்ந்தான். ஏழை பீமய்யாவின் பக்தித்திறத்தை உலகுக்குத் தெரிவிப்பதற்காகவே அவனை ஆட்கொண்டு அருளினார் வேங்கடவன். பீமய்யாவுக்கு சனிக்கிழமை அன்று விரதம் இருக்குமாறு பெருமாள் அருளினார் என்பதாலும், புரட்டாசி சனிக்கிழமை தினத்தில் பெருமாள் இவனுக்கு வைகுண்டப் பதவி அளித்தார் என்பதாலும், சனிக்கிழமை தினத்தில் விரதம் இருந்து பெருமாளை வழிபடும் வழக்கம் உருவானது என்பர்.

அதேபோல் பீமய்யாவுக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் அவன் குயவன் என்பதால் மண்ணால் ஆன சட்டியிலேயே தனது நைவேத்தியத்தைப் பெருமாள் ஏற்கும் வழக்கமும் ஏற்பட்டது என்பர். நவகிரகங்களுள் எல்லோரையும் அச்சுறுத்தும் சனிபகவான் ஆயுள்காரகன் ஆவார். அதாவது, ஒருவரது பூரண ஆயுளுக்கு இவரே காரணம் ஆனால், அந்த சனி பகவானையே தன் கட்டுக்குள் கொண்டு வருபவர் பெருமாள். எனவேதான். சனிக்கிழமைகளில் பெருமாளை வணங்கினால், சனியின் தாக்கம் குறையும். ஒருவரைப் பிடித்த பிணி, பீடைகள் திருஷ்டி போன்றவை விலகும் என்று சொல்லப்படுகிறது. வேங்கடவனைத் தியானித்து, சனிக்கிழமை விரதம் இருந்து அவனை வழிபட்டால், நலம் பெருகும்.
0 x

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16
x 2

#19 Re: Aanmeekam...

Post by venkatakailasam » 13 Jan 2014, 19:11

courtesy: Mannargudi Sitaraman Srinivasan

வருட ஆரம்பம் தையா? இல்லை சித்திரையா?

தமிழ் மாதக் கணக்கீட்டு முறை மிகத் துல்லியமாக சூரியனின் சுழற்சியைக் கணக்கிடும் முறை. 12 ராசிகள் மேஷத்தில் இருந்து தொடங்குகிறது. எனவே மேஷமே இந்தக் கணக்கீட்டின் துவக்கம்.

மேஷம்தான் சூரியனின் ராசித் தொடக்கம் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால்?

நக்கீரரின் நெடுநல்வாடை

திண்ணிலை மருப்பின் ஆடுதலை யாக
விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து
முரண்மிகு சிறப்பிற் செல்வனொடு நிலைஇய
உரோகிணி நினைவனள் நோக்கி
திண்ணிய நிலையினையுடைய கொம்பினையுடைய

மேடராசிமுதலாக ஏனை இராசிகளிற் சென்று திரியும்,மிக்க செலவினையுடைய ஞாயிற்றோடே மாறுபாடு மிகுந்த தலைமையினையுடைய திங்களோடு திரியாமனின்ற,உரோகிணியைப் போல யாமும் பிரிவின்றி யிருத்தலைப் பெற்றிலேமேயென்று நினைத்து

அவற்றைப் பார்த்து

பிங்கள நிகண்டு ராசியின் பெயர்களை மேடமு மிடபமு மிதுனமுங் கடகமும் சிங்கமும் கன்னியுன் துலாமு தேளும் தனுவும் மகரமும் கும்பமும் மீனும் என்றே வரிசைப்படுத்துகிறது.

கல்வெட்டுகள் நான்கு சூரிய சம்பந்தமான விழாக்களைச் சொல்கின்றன.
அயன சங்கராந்தி இரண்டு,
சித்திரை – ஐப்பசி விஷு இரண்டு.
ஆக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை விழா.
ஆடியும் தையும் முறையே தக்ஷிணாயன – உத்தராயண சங்கராந்திகள்.
சூரியன் உச்சம் அடைவது மேஷத்தில், அதாவது சித்திரையில்.
சூரியன் நீச்சம் அடைவது துலாத்தில் – அதாவது ஐப்பசியில். ஆக இந்த நான்கு மாதத் தொடக்கத்திலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே இந்தச் சூரியனைக் கொண்டு கணக்கிடப்படும் மாதக் கணக்கானது தமிழ் நாட்டுக்கே உள்ள ஒரு தனிப்பட்ட கணக்கு என்பதும், சூரியனின் மேஷ ராசிப் பிரவேசமே இதன் தொடக்கம் என்பதும் தெளிவு.
0 x

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16
x 2

#20 Re: Aanmeekam...

Post by venkatakailasam » 16 Jan 2014, 17:51

செட்டிக்குளம்

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உறையூரை தலைநகராகக் கொண்டு பராந்தக சோழன் ஆட்சி செய்து வந்த காலம் அது. வணிகர் ஒருவர் உறையூரிலிருந்து பெரம்பலூர் நோக்கி பயணித்தார். பெரம்பலூருக்கு முன்னால், செட்டிக்குளம் என்ற கிராமம் வழியாக வந்துகொண்டிருந்தபோது இருட்டத் தொடங்கியது. காட்டுப் பகுதியாக இருந்ததால் பயணத்தை தொடர முடியாமல் காட்டுக்குள்ளேயே தங்க முடிவெடுத்தார். காட்டிலுள்ள மரம் ஒன்றில் ஏறி அதிலுள்ள கிளையில் சாய்ந்து ஓய்வெடுக்க துவங்கினார். சிறிது நேரத்தில் அவருக்கு ஒரு அற்புத காட்சி ஒன்று தென்பட்டது. திடீரென தோன்றிய தீப்பிழம்புக்கு நடுவே ஒரு லிங்கம் இருந்தது. அதற்கு தேவர்களும் யோகிகளும் முனிவர்களும் பூஜை செய்வதும் தெரிந்தது.

சில நிமிட நேரங்களே தோன்றிய இந்த அரிய காட்சியைக் கண்ட வணிகர், உடனே, தனது பயணத்தை பாதியிலேயே நிறுத்திக்கொண்டு, உறையூர் திரும்பினார். மன்னனை சந்தித்து தான் கண்ட காட்சியை விவரித்தார். குலசேகர பாண்டிய மன்னன் அதனைக் கேட்டு ஆச்சர்யமடைந்தான். உடனே சோழ மற்றும் பாண்டிய மன்னர்கள் இருவரும் செட்டிக்குளம் நோக்கி புறப்பட்டனர். தான் தங்கியிருந்த வனாந்தரப் பகுதியில் சென்று சிவலிங்கம் கண்ட இடத்தை காட்டினார். ஆனால், அங்கு லிங்கம் காணப்படவில்லை. மன்னர் படையினர் அந்த வனப்பகுதியில் லிங்கத்தை தேடினர். அப்போது கையில் கரும்பைப் பிடித்துக்கொண்டு ஒரு முதியவர் அந்தப் பகுதிக்கு வந்தார்.

அவரிடம் படைவீரர்கள் விஷயம் கூறியதும், ‘அதுவா! இங்கே வாருங்கள்,’ எனக்கூறி அவர்களை அழைத்துச் சென்று ஒரு சிவலிங்கத்தை காண்பித்தார். அனைவரும் மகிழ்ச்சி பொங்க அந்த லிங்கத்தை வழிபட முற்பட்டபோது, திடீரென மின்னல் போல ஒரு வெளிச்சம் தோன்றியது. உடனே அந்த முதியவர் கிழக்கு திசையில் ஜோதி வடிவாய் மறைந்தார். மன்னரும், மற்றவரும் திகைப்புடன் பார்த்தபோது எதிரேயிருந்த மலைமீது கையில் கரும்புடன் முருகப்பெருமான் தண்டாயுதபாணியாக காட்சியளித்தார். இதனைக் கண்ட அனைவரும் ஆனந்த வெள்ளத்தில் திளைத்தனர். இந்த சம்பவத்தை அடுத்து செட்டிக்குளத்தில் ஏகாம் பரேஸ்வரருக்கு ஒரு ஆலயமும், எதிரே மலைமீது முருகனுக்கு ஒரு ஆலயமும் அமைக்க முடிவெடுத்தனர். ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் அம்பாளுக்கு தனி சந்நதி அமைக்கப்பட்டது.

இக்கோயிலின் மற்றொரு சிறப்பு, குபேர வழிபாடாகும். ஏகாம்பரேஸ்வரர் மற்றும் அம்பாள் சந்நதிகளைச் சுற்றிலும் 12 ராசிக்காரர்களும் வழிபடும் வகையில் 12 தூண்களில் குபேரன் சிலை மீன் ஆசனத்தின் மீது அமர்ந்த நிலையில் செதுக்கப்பட்டுள்ளது. இவை அந்தந்த ராசிக்காரர்கள், அவரவர் பிறந்த நட்சத்திரத்தில் வழிபடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது எங்கும் காணக்கிடைக்காத அபூர்வமான அமைப்பு. அம்பாள் சந்நதிக்கு எதிரே குபேரனுக்கு தனிச் சந்நதியும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் குபேரன், தன் மனைவி சித்திரலேகாவுடன் காட்சியளிக்கிறான். குபேரனின் நவநிதிகளான சங்கநிதி, பதுமநிதி, காமதேனு, கற்பக விருட்சம், மச்சநிதி, நீலநிதி, நந்தநிதி, முகுந்த நிதி, கச்சப நிதி ஆகியோர் பரிவார தேவதைகளாக அமர்ந்திருக்கிறார்கள்.

குபேரன் பரமேஸ்வரனை நோக்கி பல நூறு ஆண்டுகள் கடும் தவமிருந்து அவரது ஆசியைப் பெற்றவர். வடக்கு திசைக்கும், தனம், தானியம் மற்றும் அனைத்து செல்வங்களுக்கும் அதிபதியாகவும், அழகாபுரியின் அரசனாகவும் விளங்குபவர். தீராக்கடன் தொல்லை, பொருளாதார நெருக்கடி, தொழிலில் அபிவிருத்தி முதலான பொருளாதார பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் பக்தர்களுக்கு இங்கு நடைபெறும் குபேர வழிபாடு துயர் துடைக்கும் அருமருந்தாக விளங்குகிறது. தொடர்ந்து பொருளாதார நெருக்கடியில் தவிப்பவர்கள், இங்கு நடைபெறும் பூரட்டாதி நட்சத்திர சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டால், கடன் தீர்ந்து, செல்வாக்கு உயர்ந்து, குபேர சம்பத்து பெறலாம் என்பது ஐதீகம்.

ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு எதிரே உள்ள மலைமீது முருகன் கரும்பை கையில் பிடித்தபடி அருள் பாலிக்கின்றார். இந்த இரு கோயில்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். மலைமீது உள்ள முருகன், தனது அம்மை அப்பனை வணங்கும் வகையில் சிறப்பான கலையம்சத்துடன் விளங்குகிறார். அதாவது ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உள்ள நந்திவாகனம், முருகன் தன் அம்மையப்பனைக் காண சற்று தலைசாய்த்து வழிவிட்டதாம்! அதன்படி, கோயில் வாயிலில் துவங்கி கருவறை வரை முன்புறமுள்ள அனைத்து நந்திகளும் தலைசாய்த்திருப்பதைக் காணலாம். வேளாண் தொழில் செழிக்கவும், குழந்தை பாக்யம் கிட்டவும், வளம் பெறவும் பங்குனி உத்திரப் பெருநாளில் முருகனுக்கு விரதமிருந்து பக்தர்கள் வணங்கி வருகின்றனர்.

இக்கோயிலின் மற்றொரு சிறப்பு, சூரிய பூஜை. ஆண்டுதோறும் மாசி 19, 20, 21 தேதிகளில் காலையில் ஏகாம்பரேஸ்வரர்-அம்பாள் மீதும், மாலையில் முருகன் மீதும் சூரிய ஒளி விழுகிறது. இதனையொட்டி இந்த 3 நாட்களும் சிறப்பு பூஜைகளும் நடைபெறுகின்றன. ஒரே நாளில் நடைபெறும் இந்த அற்புதங்கள், பக்தர்களை மெய் சிலிர்க்க வைக்கின்றன. திருச்சி-சென்னை சாலையில் 44 கி.மீ. தொலைவிலும், பெரம்பலூருக்கு 15 கி.மீ. முன்னதாகவும் கோயிலின் நுழைவாயில் வளைவு உள்ள ஆலத்தூர் கேட் அமைந்துள்ளது. உள்ளே 8. கி.மீ தொலைவில் அமைந்துள்ளது செட்டிக்குளம்...

Temple..

Image

shared from a friend...
0 x

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16
x 2

#21 Re: Aanmeekam...

Post by venkatakailasam » 20 Jan 2014, 07:04

ஒரேழுத்து மந்திரத்தை ஓம் என்று சொல்லுவோம்
இரெழுத்து மந்திரத்தை ராமா என்று சொல்லுவோம்
மூன்றெழுத்து மந்திரத்தை முருகா என்று சொல்லுவோம்
நான்கெழுத்து மந்திரத்தை நாராயணா என்று சொல்லுவோம்
ஐந்தெழுத்து மந்திரத்தை நமசிவாயா என்று சொல்லுவோம்
ஆறெழுத்து மந்திரத்தை சரவணபவா என்று சொல்லுவோம்
ஏழு எழுத்து மந்திரத்தை ஸ்ரீ ராம் ஜெயராம் என்று சொல்லுவோம்
எட்டெழுத்து மந்திரத்தை ஸ்ரீ குருவாயுரப்பா என்று சொல்லுவோம்

ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்
0 x

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16
x 2

#22 Re: Aanmeekam...

Post by venkatakailasam » 24 Jan 2014, 06:55

எதற்காக கடைசி நேரத்தில் தண்ணீர் கொடுக்கப்படுகிறது ...??

குருசேத்திரப் போர் நடந்து கொண்டிருந்த போது, பிஷ்மரின் தந்தை சந்தனு மகனுக்கு ஒரு வரமளித்தார். ‘எப்பொழுது பீஷ்மர் மரணமடைய விரும்புகிறாரோ அப்போது மரணமடைவார்’ என்பதே அது.

பத்தாம் நாள் போர் அனறு, பீஷ்மர் பாண்டவர் படைக்குப் பலத்த சேதத்தை ஏற்படுத்தினார். அப்போது அவருக்குத் தான் செய்யும் செயலில் சலிப்பு ஏற்பட்டது. உடன் தான் இறக்க நினைத்தார்.அவரின் நிலையை அறிந்த அர்ச்சுணன் தேரின் முன்னால் சிகண்டியை நிறுத்தி விட்டு பீஷ்மர் மேல் அம்பெய்தினான்.

சிகண்டி முன் போர் புரிய விரும்பாத பீஷ்மர் அமைதியாயிருந்தார். அர்ச்சுனனின் அம்புகள் அவரது உடலைத் துளைத்தன. உத்திராயண காலத்தில் இறக்க விரும்பிய பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருந்தார்.அவரைத் தரிசிக்கவும் ஆசி பெறவும் பல அரசர்களும் வீரர்களும் வந்தனர்.

உடலில் காயங்களுடன் படுத்த படுக்கையாக இருந்த பீஷ்மர் இதனால் மிகவும் களைப்படைந்தார். தாகம் ஏற்படவே அருந்தத் தண்ணீர் கேட்டார். துரியோதனனும் கர்ணனும் நறுமணம் மிக்க இனிய பானங்களைக் கொண்டு வந்தும் அதை அருந்தவில்லை.

அர்ச்சுணனை நோக்கி, ‘சாத்திரங்கள் கூறும் வழியில் எனக்கு தண்ணீர் தருவாயாக’ என்றார். அர்ச்சுணன் தன் காண்டீபத்தை நாணேற்றி பீஷ்மரின் தலைக்கருகே ஏவினான். உடனே பூமி பிளந்து பீஷ்மரின் தாயான கங்கை நீர் ஊற்றாகப் புறப்பட்டு நேராக பீஷ்மரின் வாயின் அருகில் பாய்ந்தது.

பீஷ்மரும் அதைப் பருகித் தாகம் தணிந்தார்.மங்காத புகழ் பெற்ற பீஷ்மருக்கு மரணப் படுக்கையில் ஏற்பட்ட தாகம், கங்கையான அவளது தாயால் தணிந்தது.

இதனால்தான் இன்றும் மரணப்படுக்கையில் இருப்பவருக்குக் கங்கை எனும் நீர் கொடுக்கும் பழக்கம் இருக்கிறது.....courtesy: ----Ramanathan Panchapakesan
0 x

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16
x 2

#23 Re: Aanmeekam...

Post by venkatakailasam » 28 Jan 2014, 04:56

Image
0 x

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16
x 2

#24 Re: Aanmeekam...

Post by venkatakailasam » 28 Jan 2014, 05:04

Image
0 x

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16
x 2

#25 Re: Aanmeekam...

Post by venkatakailasam » 28 Jan 2014, 18:36

What I liked from what I read.....

பிறவி என்பதே துன்ப மயமானது என்பதை யாவரும் ஏதாவது ஒரு கட்டத்தில் உணரத் தொடங்குகிறோம்.

தாயுமானவர் கூற்றின்படி சொல்ல வேண்டுமானால்

....மெய்ஞான சுகநிட்டை சேராமலே
சோற்றுத் துருத்தியை சதமெனவும் உண்டுண்டு
தூங்க வைத்தவர் ஆர்கொலோ
தந்தைதாய் முதலான அகிலப் பிரபஞ்சம்
தனைத் தந்தது எனது ஆசையோ
தன்னையே நோவனோ பிறரையே நோவனோ
தற்காலமதை நோவனோ
பந்தமானது தந்த வினையையே நோவனோ
பரமார்த்தம் ஏதுமறியேன்
...... (பரிபூர்ணானந்தம் -7)

(பரமார்த்தம் =பரம அர்த்தம், உட்பொருள்)

சோற்றுத் துருத்தி என்று இந்த உடலை வருணிக்கிறார் தாயுமான சுவாமிகள். இதை நிலையானதாகக் கருதி உண்பதும் தூங்குவதுமாக மெய்ஞானத்தைப் பற்றிய சிந்தையின்றி பொழுதை கழிக்கிறேனே; இந்த உடலை எடுப்பதற்கு காரணம் என்று நான் எதையெதையெல்லாம் நொந்து கொள்வது என்று பரிதவிக்கிறார்.

இதே பரிதவிப்பை கபீரின் வரிகளிலும் காணலாம்.

मैं अपराधी जन्म का, नख-सिख भरा विकार ।
तुम धाता दुःख भंजना,मेरी करो सम्हार ॥

மேன் அபராதி ஜன்ம் கா, நக்-ஸிக் பரா விகார் |
தும் தாதா து:க் பஞ்சனா, மேரீ கரோ ஸம்ஹார் ||

பாதாதி கேசம் என்னுள் பேதமை,தந்ததே பிறவி என்னும் மாமை
தாதா! நீயும் தீ்ர் என் துன்பம்,தொலைத்திடு இத்துயர் தரும் சென்மம்

(மாமை =துன்பம் ; தாதா= பெருங்கொடையாளன்,அளவின்றி தருபவன்)

'காலிலுள்ள நகக்கண் முதல் சிரம் வரையிலும் ஒவ்வொருவரு திசுவிலும் என்னுள் அறியாமை பொங்கி வழிகிறது. அப்படி இருக்கும் பொழுது பிறவியை ஒழிக்கின்ற ஞான்ம் எங்கிருந்து வர சாத்தியம்' என்ற தன் இயலாமையை குறிப்பால் உணர்த்தி அதற்கானத் தீர்வையும் இறைவனிடமே விட்டு விடுகிறார் கபீர்.'எல்லாவற்றையும் அருளக்கூடிய அருளாளா ! இந்தப் பிறவித்துன்பத்தையும் போக்கிடுவாய்' என்று சரணடைகிறார்.

அருணகிரிநாதரும் கந்தரனுபூதியில் இதைப் போன்றே

மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து
ஐயோ அடியேன் அலையத் தகுமோ ...25

('மெய்யே என'= உண்மையானது என்று; உகந்து =மிக்க விருப்புடன்)

மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான்
என்னே விதியின் பயன் இங்கு இதுவோ?.....27

(மின்னே நிகர் = மின்னலைப் போன்று தோன்றி மறைவது)

பாழ்வாழ்வெனும் இப்படுமாயையிலே
வீழ்வாயென என்னை விதித்தனையே
தாழ்வானவை செய்தன தாம் உளவோ .... 31

விதிகாணும் உடம்பை விடா வினையேன்
கதிகாண மலர்க் கழல் என்றருள்வாய் .....35

என்று பலவாறாக பிறவியெனும் பிணிக்கானக் காரணத்தை எண்ணியெண்ணி கந்தனிடம் முறையிடுகிறார்.

'விதி காணும் உடம்பை விடா வினையேன்' என்பதில் “மே அபராதி ஜன்ம் கா” என்று சொல்லும் கபீரின் கருத்தொற்றுமை நன்கு விளங்குகிறது.

வித்திலிருந்து மரமும் பின்னர் அதிலிருந்து பலநூறு வித்துகளும் மீண்டும் அவற்றிலிருந்து மரங்கள் உற்பத்தியாவதும் தொடர் நிகழ்ச்சி போல உடல் எடுத்ததன் காரணமாய் வினைபுரிதலும் பின்னர் அவ்வினைகளே அடுத்தடுத்து பிறவிகளுக்கு காரணமாய் அமைவதையும் 'வெவ்வினை' என்று உரைக்கிறார் அருணகிரியார்.

தலைப்பட்டார் தீரத்துறந்தார் ;மயங்கி
வலைப்பட்டார் மற்றையவர் .....348

பிறப்பென்னும் பேதமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பதறிவு ..........358

'மயங்கி வலைப்பட்டார்' என்பதிலும் 'பிறப்பென்னும் பேதமை'என்பதிலும் வள்ளுவர் அறியாமையில் சிக்கித்தவிப்பவர்கள் நிலையை சொல்வது போலவே கபீரும் 'நக்-ஸிக் பரா விகார்' என்று உணர்த்துகிறார். பரா விகார் என்பது 'மன விகாரங்கள் நிறைந்த' என்று பொருள்படும்.

'கதி காண மலர்கழல் என்று அருள்வாய்'என வேண்டும் அருணகிரி போல் 'மேரீ கரோ ஸம்ஹார்' என்று விடுதலைக்காக இறைஞ்சுவதிலும் கபீர், ஞானிகளின் கருத்து ஒருமைப்பாட்டை புலப்படுத்துகிறார்.

http://kabeeran.blogspot.in/2008/03/blog-post.html
0 x

Post Reply