Aanmeekam...

Post Reply
venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

காரிய ஜெயம் உண்டாகும் அனுமான் அஷ்டகம்

நாம் செய்யும் காரியங்கள் ஜெயமாக வேண்டுமானாலும் ஆஞ்சனேயரை வழிபட்டால் போதும். காரிய ஜெயம் உண்டாகும். அன்பர்களின் ÷க்ஷமத்தைக் கருதி இந்த ஸ்தோத்திரம் வெளியிடப்பட்டுள்ளது. அனைவரும் பயன்பெற வேண்டுகிறோம்.

வைஸாகமாஸ க்ருஷ்ணாயாம் தசமீ மந்தவாஸரே
பூர்வ பாத்ராஸு ஜாதாய மங்களம் ஸ்ரீஹநூமதே
குரு கௌரவ பூர்ணாய பலாபூப ப்ரியாய ச
தாநா மாணிக்ய ஹஸ்தாயமங்களம் ஸ்ரீ ஹநூமதே

ஸுவர்சலா களத்ராய சதுர்புஜ தராயச
உஷ்ட்ராரூடாய வீராய மங்களம் ஸ்ரீஹநூமதே
திவ்ய மங்கள தேஹாய பீதாம்பர தாரய ச
தப்தகாஞ்சநவர்ணாய மங்களம் ஸ்ரீஹநூமதே

பக்தரக்ஷண ஸீலாய ஜாநகீ சோக ஹாரிணே
ஜகத்பாவக நேத்ராய மங்களம் ஸ்ரீஹநூமதே
பம்பாதீர விஹாராய ஸெளமித்ரி ப்ராணதாயிநே
ஸ்ருஷ்டிகாரண பூதாய மங்களம் ஸ்ரீஹநூமதே

ரம்பாவவிஹாரய ஸுகத் மாதடவாஷிநே
ஸர்வலோகைக கண்ட்டாய மங்களம் ஸ்ரீஹநூமதே
பஞ்சாநதாய பீமாயகால நேமிஹராயச
கொளண்டிந்யகோத்ர ஜாதாய மங்களம் ஸ்ரீஹநூமதே

வேத வியாசர் அருளிச் செய்த மஹா மந்திரங்கள்

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

நந்தி காதுகளில் ரகசியம்

நந்திஸ்வரர் காதுகளில் நாம் சொல்லலாமா ? அப்படி சொல்லுவது என்றால் என்ன சொல்ல வேண்டும்........

நம் நாட்டில் சிலை வழிபாடு மிக மிக முக்கியம் வாய்ந்ததாக இருக்கிறது. என்பதனை நாம் அறிவோம். எந்தனை அற்புதங்களை கண்ட சித்தர்கள் இதில் எந்த வித குழப்பமும் இல்லாமல் நமக்கு கற்களை தேர்ந்து எடுத்து கொடுக்க காரணம் நாம் அறிந்து கொள்ளவேண்டும் . கற்கள் , பாறை என்று மட்டும் அவர்கள் நினைக்க வில்லை, இவைகள் ஒளியும் ஒலியும் சேர்ந்தது என்று அவர்கள் புரிந்து கொண்டனர். ஆம் கற்களை தேர்வு செய்வதில் மிக மிக வல்லமை படைத்தவர் கருவுரார் சித்தர்.. போகர் இவரிடம் தாம் சிலைகளை செய்ய சொல்வார். ஒரு கல்லை (பாறை )
பார்த்து அதில் 32 லக்ஷணம் அமைந்து இருந்தால் அவை வழிபாட்டிற்கு உகந்தது என்று முடிவு செய்வார் இவர் . பாறையின் உள்ளே தேரை இருந்தால் அவைகள் ஒச்சம் என்று விட்டுவிடுவார்.

மிக சிறந்த சிற்பி ஆசான்களை கொண்டது இலங்கை பட்டிணம். இங்கிருந்து நிறைய நபர்கள் அரவு நாடான நம் நாட்டிக்கு பாறைகளை தேடி வந்தார்கள் என்று வரலாறு சொல்கிறது . பல்லவர்கள் சிற்பங்கள் செய்வதில் சிறந்து விளங்கினார்கள் . பரஞ்சோதி அடிகள் காஞ்சிபுரம் வந்த பிறகு தான் வாதாபியில் இருந்து விநாயகர் சிலை காஞ்சிபுரம் வந்தது . பிறகு கணபதி உருவம் செய்வது பால பாடமாக மாணவர்களுக்கு கற்பிக்கப் பட்டது , இந்த சிலைகள் நாட்டில் எல்லா இடத்திற்கும் எடுத்து செல்லப்பட்டது. சித்தர்கள் மலைகளில், பூமியில் உள்ள வித்தியாசமான பாறைகளை தேர்வு செய்து அவைகளை லிங்கமாக ,நந்தியாக உண்டாக்கி வழிபாடு செய்தனர் என்பது நாம் அறிந்தது .

பாறைகள்வெயில்காலத்தில் குளிர்ச்சி தன்மைகளை உண்டாக்கும் , மழை காலத்தில் உஷ்ண தன்மைகளை உண்டாக்கும். இதை சமணர்கள் அறிவார்கள். ,ஆகவே தான் அவர்கள் குன்றுகளை தேர்வு செய்தனர் . மன்னன் சித்தர்கள் சொல்படி கோவிலை கட்டிய பின் அவைகளை பற்றியும் ,முறைகளை பற்றியும் தெரிந்து கொள்ள சாதுக்களை, சித்த நெறியில் உள்ளவர்களை அழைத்து வந்து கோவிலை ஆராய்ந்து தவறுகள் இருந்தால் சொல்லும் படி கேட்பார் . இப்படி ஒரு காஞ்சிபுர அரசன் சித்தர் நெறிகளை உடையவரை தம் கோவிலுக்கு அழைத்து வந்தான். 32 லக்ஷனமும் அருமையாக ஒன்று சேர்ந்த ஒரு நந்தி சிலைக்கு உயிர் கொடுத்தால் உயிர் உண்டாகும் என்று அவர் அறிந்து இருந்தார். கருவுரர் சித்தரை நினைத்து நந்தியின் காதுகளில் அவர் மந்திரம் சொல்ல நந்தி அசைந்து எழுந்தது , மன்னன் வியந்தான்,மக்கள் அதிசியப் பட்டனர். இதன் பிறகு உயிர் பெற்ற நந்தி கோவிலை விட்டு வெளியை சென்றது . வேடிக்கை பார்த்த மக்கள் பரவசம் அடைந்து பின்னே சென்றனர் . பசி எடுத்த நந்தி வயலில் பயிர்களை உண்ணத் தொடங்கியது. அது வரை விபரிதம் உணராத மக்கள் பயம் அடைந்தனர் . நந்தி பிறகு தோப்புகளில் நுழைந்து விட்டது .

நந்தியினால் பிரச்சனைகள் அதிகம் ஏற்பட மக்கள் அரசனிடம் முறையிட்டார்கள். பிரச்னை உணர்த்த அரசன் சித்தரிடம் கல் நந்தியை மீண்டும் கல்லாக்கி விட வேண்டும் என்றார் . சித்தர் கல் நந்தியை பிடித்து வர சொல்லி அதன் காதுகளில் மந்திரம் சொல்ல அது மீண்டும் கல்லானது . பிறகு அதன் கால்களின் குழம்பில் ஒரு நகத்தை பேர்த்து எடுத்தார் . 32 லக்ஷணத்தில் 1 குறைந்தபடியால் அது கல்லாகி போனது . நந்தி மீண்டும் உயிர் பெறாது என்று உறுதி கொடுத்து வனம் சென்றார்.
.
அவர் நந்தியின் காதுகளில் ஏதோ சொன்னார் , நாமமும் அப்படி சொல்ல வேண்டும் என்று மக்கள் நினைத்து இன்றும் நந்தியின்காதுகளில் அவர்கள் குறைகள் ,தேவைகளை சொல்கிறார்கள் . இது தவறு . நந்தியிடம் நாம் சொல்ல வேண்டியது (காதுகளை தொடாமல் )

சிவாய நம ஓம்
சிவாய வசி ஓம்
சிவ சிவ சிவ ஓம் ..........

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

Image

இரவு மூன்றாம் யாமம் முடிந்ததும் மூன்று மணிக்கு நாகஸ்வர இன்னிசை ஒலிக்க, சங்கு முழங்க குருவாயூரப்பனைத் திருப்பள்ளி எழச்செய்வர். அப்போது பகவான் காட்சி கொடுப்பதற்கு ‘நிர்மால்ய தரிசனம்’ என்று பெயர். நிர்மால்ய தரிசனத்தின்போது பகவானுக்கு முதல் நாள் அணிவித்திருந்த சந்தனக் காப்பு, ஆடை, ஆபரணங்கள், மாலைகள் இவை அனைத்தையும் ஒவ்வொன்றாகக் களைவர்.

விஸ்வரூப தரிசனம் முடிந்ததும் தைலாபிஷேகம் நடைபெறும். குருவாயூரப்பனுக்கு நல்லெண்ணெயில் அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த எண்ணெய் கோவிலுக்குச் சொந்தமான செக்கில் ஆட்டப்பட்டதாகும். தைலாபிஷேகத்துக்குப் பின் அந்த தெய்வத் திருமேனியை வாகைத் தூளால் தேய்ப்பர். இதற்கு ‘வாகை சார்த்து’ என்று பெயர். அடுத்து சங்காபிஷேகம் நடைபெறும். அப்போது புருஷ ஸூக்தம் சொல்வர்.

இதன் இறுதியில் தங்கக் கலசத்தில் உள்ள தூய நீரால் பூர்ணத் திருமஞ்சனம் செய்வர். கிட்டத்தட்ட இது கும்பாபிஷேகம் செய்து வைப்பது போல் ஆகும்.

இந்த அபிஷேகம் முடிந்த பின் நெல்பொரி, கதளிப்பழம், சர்க்கரை முதலியவற்றை நைவேத்தியமாகப் படைப்பர். அப்போது உன்னி கிருஷ்ணனாகத் தோற்றம் அளிப்பார் குருவாயூரப்பன்.

காலை பூஜை இதன் பின் ஆரம்பமாகும். இதற்கு உஷத் பூஜை என்று பெயர். இந்த பூஜையின்போது நெய் பாயசமும் அன்னமும் பிரதான நைவேத்தியம். இது முடிந்து நடை திறக்கும்போது பகவான் திருமுடியில் மயிற்பீலி, நெற்றியில் திலகம், இடையில் பொன் அரைஞாண், திருக்கரங்களில் ஓடக்குழல், மஞ்சள்பட்டு ஆகிய ஆபரண அலங்காரங்களுடன் தரிசனம் தருவார்.

இத்தனை பூஜைகளும் காலை ஆறு மணிக்குள்ளாக பூர்த்தி ஆகி விடும்.

பகவானுக்கு சாயங்காலம் (சந்தியாகாலம்) மட்டும்தான் தீபாராதனை செய்கிறார்கள். ஏழடுக்கு விளக்கு, ஐந்து திரி, நாகப்பட விளக்கு, ஒற்றைத் திரி விளக்கு என்று பல தீபங்கள் ஏற்றி ஆராதனை செய்து, கடைசியில் கற்பூர ஆரத்தி நடக்கும். மங்கள ஆரத்தியின்போது முப்பத்து முக்கோடி தேவர்களும் இங்கு வந்து குருவாயூரப்பனை வணங்குவதாக ஐதீகம். பந்தரடி (பந்தீரடி) என்று சொல்லப்படும் இந்த பூஜையை வேதம் ஓதும் நம்பூதிரிகள் செய்கின்றனர். இதற்கு அன்னமும், சர்க்கரை, பாயசமும் முக்கியமான நைவேத்தியம்.

ஸ்ரீகுருவாயூரப்பனுக்குப் பிடித்த நைவேத்தியம், பால் பாயசம், நெய் பாயசம், சர்க்கரை பாயசம், அப்பம், திரிமதுரம், மற்றும் பழ வகைகள்.

குருவாயூர் கோவிலில் பூஜை செய்யும் அர்ச்சகர்களை மேல்சாந்தி, கீழ்சாந்தி மற்றும் தந்திரிகள் என்று அழைப்பர்.

மேல்சாந்தி என்றால் தலைமை குருக்கள் என்று பொருள். முக்கியமான பூஜைகள், அலங்காரங்கள், அர்ச்சனை மற்றும் அபிஷேகங்களை செய்பவர் மேல்சாந்தி. இவரைத் தவிர மற்றவர்களுக்கு மூல விக்கிரகத்தைத் தொடும் உரிமை கிடையாது. கோயிலின் மேல்சாந்தி விடியற்காலை இரண்டரை மணிக்கே ஸ்ரீகோயிலின் கருவறைக்குள் நுழைந்து விடுவார். மேலும் உச்சி பூஜை முடியும் 12.30 மணி வரை பொட்டுத் தண்ணீர்கூட அருந்த மாட்டார். அப்படி ஒரு ஆசார முறை இங்கே கடைப் பிடிக்கப்படுகிறது.

ஒரு மேல்சாந்தி தொடர்ந்து ஆறு மாத காலமே பணி புரிய வேண்டும். இந்த ஆறு மாத காலமும் குருவாயூர் கோயிலை விட்டு அவர் வெளியே எங்கும் செல்லக்கூடாது. கோவிலின் உள்ளே தங்குவதற்குத் தனி இடம் வழங்கப்படும். இந்த ஆறு மாத காலமும் பிரம்மச்சர்ய விரதம் அவசியம்.

கீழ்சாந்தி எனப்படுபவர் உதவி அர்ச்சகர் என்று வைத்துக் கொள்ளலாம். விளக்கு ஏற்றுவது, அபிஷேகத்துக்குப் புனித நீர் எடுத்துத் தருவது, மலர் மாலைகளை எடுத்துத் தருவது, நைவேத்தியம் தயாரிப்பது இவை கீழ்சாந்தியின் வேலை. பரம்பரையாக வாரிசு உரிமை பெற்றவர்களே கீழ்சாந்தியாக நியமிக்கப்படுவார்கள்.

தந்திரி எனப்படுபவர்கள் வேத மந்திரம் கற்றவர்கள். பூஜைகளைத் தந்திர முறையில் செய்வதால் இவர்கள் தந்திரிகள் ஆனார்கள். பல முக்கியமான நிகழ்வுகளுக்கு ப்ரஸ்னம் பார்த்துத் தீர்மானிப்பது தந்திரிதான். சென்னமனா என்னும் பரம்பரை குடும்பத்தினரைச் சார்ந்தவர்களே தந்திரி ஆக முடியும்.

கார்த்திகை 1ஆம் தேதியில் இருந்து மார்கழி மாதம் 11ஆம் தேதி வரையிலான 41 நாட்கள் மண்டல காலம் எனப்படும். இந்த நாட்களில் திரளான பக்தர்கள் வந்து குருவாயூரப்பனை தரிசிப்பார்கள். மண்டல கால பூஜையின்போது 40 நாட்களுக்குப் பஞ்சகவ்ய அபிஷேகமும் 41ஆவது நாளன்று சந்தன அபிஷேகமும் செய்து வைக்கப்படும். குருவாயூரப்பன் விக்கிரகத்தின் மார்பில் தினமும் சந்தனம் சார்த்தப்படுவது வழக்கம் என்றாலும், ஆண்டுக்கு ஒரு முறை இந்த நாளில் செய்யப்படும் சந்தன அபிஷேகத்தைத் தரிசிக்க பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கூடுவார்கள்.

கோவில் தந்திரி சிறப்பு பூஜைகளைச் செய்த பிறகு இந்த சந்தன அபிஷேகம் மூலவர் குருவாயூரப்பனுக்குச் செய்யப்படும். இதற்கான சந்தனக் கலவை தயாரிப்பதற்கு மைசூரில் இருந்து சந்தனக் கட்டைகளும், காஷ்மீரில் இருந்து குங்குமப்பூவும் வரவழைக்கப்படும். தவிர பச்சைக் கற்பூரம், பன்னீர், கஸ்தூரி போன்ற வாசனைப் பொருள்களும் கலந்து சந்தனக் கலவையைத் தயாரிப்பார்கள். இதைத் தயாரிப்பதற்கு உண்டான செலவில் ஒரு பகுதியை கோழிக்கோடு சாமுதிரி மன்னர் குடும்பமும், எஞ்சிய தொகையை குருவாயூர் தேவஸ்வம் போர்டும் ஏற்றுக் கொள்ளும்.

சந்தன அபிஷேகத்தில் நீராடிய குருவாயூரப்பனை அன்றைய தினம் முழுதும் பக்தர்கள் தரிசிக்கலாம். சந்தன அபிஷேகம் நடந்த தினத்துக்கு அடுத்த நாள் இந்த சந்தனம் களையப்பட்டு பக்தர்களுக்குப் பிரசாதமாக விநியோகிக்கப்படுகிறது. குருவாயூரப்பனின் திருமேனியைத் தீண்டிய இந்த சந்தனத்தைப் பெறுவதற்குப் பக்தர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு வாங்குவார்கள்.

வாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த நாராயண பட்டத்ரி, குருவாயூரப்பன் சந்நிதிக்கு முன் நின்று தினம் பத்து ஸ்லோகங்கள் வீதம் நூறு நாட்கள் பாடினார். ஆயிரம் ஸ்லோகங்கள் பாடியதும் வாத நோய் நீங்கி விட்டது.

பட்டத்ரி ஸ்ரீநாராயணீயம் சொல்லச் சொல்ல... அந்த குருவாயூரப்பன் ‘ஆமாம் ஆமாம்’ என்று தலை அசைத்து அவற்றை ஏற்று ஆனந்தமாகக் கேட்டு ரசித்ததாகத் தன் உபன்யாசத்தில் சொல்வார் சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர். கர்நாடக இசை வித்துவான் செம்பை வைத்தியநாத பாகவதர், சேங்காலிபுரம் ஸ்ரீஅனந்தராம தீட்சிதர் ஆகியோர் குருவாயூரப்பனின் பரம பக்தர்கள்.

ஆலயத்தில் உள்ள நமஸ்கார மண்டபத்தில் அமர்ந்து நாராயணீயம் எழுதினார் நாராயண பட்டத்ரி. அவர் அமர்ந்து எழுதிய இடத்தைப் புனிதமாகக் கருதி, அங்கு எவரும் அமர்வதில்லை. நாராயணீயத்தை 'பாகவத ஸாரம்' என்று கூறுவர். இதில் நூறு தசகங்கள். மொத்தம் 1,034 செய்யுள்கள். குருவாயூர் கிருஷ்ணனை முன்னிலைப்படுத்தி பாகவதத்தின் சாரத்தை சம்ஸ்கிருதத்தில் பக்தி சொட்டச் சொட்ட நாராயண பட்டத்ரி எழுதி இருக்கிறார்.

நாராயண பட்டத்ரியுடன் குருவாயூரப்பன் நிகழ்த்திய உரையாடல் சுவையானது.

பட்டத்ரி: ‘நீங்கள் மிகவும் விரும்பும் நிவேதனப் பொருள் எது?’

குருவாயூரப்பன்: ‘நெய்ப் பாயசம்.’

ப: ‘ஒருவேளை நெய்ப்பாயசம் செய்ய எனக்கு வசதி இல்லை என்றால்..?’

கு: ‘அவலும் வெல்லமும் போதுமே...’

ப: ‘அவலும் வெல்லமும் நைவேத்தியம் செய்து வைக்க எனக்கு வசதி இல்லை என்றால் என்ன செய்வது?’

கு: ‘வெண்ணெய், வாழைப்பழம், பால், தயிர் இவற்றில் ஏதாவது ஒன்றை வைத்து வழிபடு.’

ப: 'மன்னிக்க வேண்டும் பகவானே... இப்போது நீ சொன்ன நான்கும் என்னிடம் இல்லை என்றால்?'

கு: 'துளசி இலைகள் அல்லது உத்தரணி தீர்த்தமே எமக்குத் திருப்தி தரும்.'

ப: 'அதுவும் என்னிடம் இல்லை என்றால்..?'

கு: 'எனக்கு நைவேத்தியம் செய்விக்க ஒன்றும் இல்லையே என்று வருத்தப்பட்டு கவலையுடன் நீ அழுவாய் அல்லவா... அப்போது உன் கண்களில் இருந்து கசியும் இரண்டு சொட்டுக் கண்ணீரே எனக்குப் போதும். வேறு ஒன்றும் வேண்டாம்.'

குருவாயூரப்பனிடம் இருந்து இப்படி ஒரு பதிலைக் கேட்டதும் பக்திப் பரவசம் மேலிட நாராயண பட்டத்ரி கதறி அழுதார்.

பட்டத்ரியின் நாராயணீயத்துக்கு மூலமாக அமைந்தது ஞானப்பானை என்னும் நூல். இதுவும் குருவாயூரப்பனின் பெருமையைச் சொல்லும் படைப்பு ஆகும். மலையாள மொழியில் இதை எழுதியவர் பூந்தானம் என்பவர். இப்படி எண்ணற்ற பக்தர்களை ஆட்கொண்டு, தன்வயம் ஆக்கி இருக்கிறார் குருவாயூரப்பன்.

எந்த நேரமும் ஏதாவது பிரார்த்தனைகள், வழிபாடுகள் என்று எப்போதும் ஆலயம் பிஸியாகவே இருக்கும்.

துலாபார நேர்ச்சைக்கடன் இங்கே பிரசித்தம். பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கேற்ப தங்கம், வெள்ளி, சர்க்கரை, கரும்பு, வெண்ணெய், பன்னீர், தேங்காய், வாழைப்பழம் போன்றவற்றை எடைக்கு எடை செலுத்துகிறார்கள்.

அதுபோல் குழந்தைகளுக்கு முதல் அன்னமிடுதலும் இங்கே சிறப்பு. குழந்தைகளுக்கு முதன் முதலாக இங்கே அன்னம் ஊட்டினால் வாழ்நாள் முழுதும் அந்தக் குழந்தைக்கு ருசியான உணவு கிடைக்கும் என்றும், உணவுக்குப் பஞ்சம் வராது என்பதும், நோய் நொடிகள் எதுவும் வராது என்பதும் நம்பிக்கை. எனவே, தினமும் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு இங்கே அன்னம் ஊட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணன் கோயிலில் இருந்து சுமார் மூன்று கி.மீ. தொலைவில் உள்ள புன்னத்தூர் கோட்டாவில் தேவஸம் போர்டுக்குச் சொந்தமான யானைகள் கொட்டாரம் அமைந்துள்ளது. குருவாயூர் கோயிலுக்கு வரும் பக்தர்கள், இந்த யானைகள் கொட்டாரத்துக்கும் வந்து பார்த்து மகிழ்கிறார்கள். சுமார் 100க்கும் மேற்பட்ட யானைகள் இருக்கின்றன. 200க்கும் மேற்பட்ட பாகன்கள் பணி புரிகிறார்கள். இதைத்தான் உலகிலேயே தனியார் கண்காணிப்பில் உள்ள மிகப் பெரிய யானைகள் பூங்கா என்கிறார்கள்.

பத்மநாபன் மற்றும் கேசவன் என்கின்ற இரண்டு யானைகளின் படங்களை ஆலயத்தில் மாட்டி வைத்திருக்கிறார்கள். தற்போது உயிருடன் இல்லாவிட்டாலும், இந்த யானைகளுக்குத் தனி மரியாதை பக்தர்களிடம் இருந்து வருகிறது.

.

அதிகாலை மூன்று மணி முதல் இரவு ஒன்பதேகால் மணி வரை ஆலயம் திறந்திருக்கும்.

குடும்பத்தோடு சென்று குருவாயூரை தரிசியுங்கள். குருவாயூரப்பனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கட்டும்.

Shared from Shri. Mannargudi Sitaraman Srinivasan

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

ப்ரேமையின் உச்சம் ராதையா, சூர்தாஸா

நந்தவனத்தில் ஒருநாள்
" ஏன் உங்கள் தலை எதையோ ரசித்தவாறு அசைந்து கொண்டிருக்கிறது ?"
".........."
" நான் கேட்பது உங்கள் காதில் விழவில்லையா ?"
"........."
" என்ன அப்படி ரொம்ப ரசித்துக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் ?" என்று கிருஷ்ணன் தலை அசைத்து ராதை கேட்டாள்.
" ஆஹா! என்னமா பாடறார் அவர் . என்னை எப்போதும் கட்டிப்போட்டே வைத்து விடுகிறார் . விடுபட முடியவில்லையே ?" என்றான் கண்ணன்.
" எப்பவும் சூர்தாஸ், சூர்தாஸ் என்று அவரைப் பற்றியே சொல்லிக்கொண்டிருக்கிறீர்களே அப்படி என்ன சூர்தாஸ் உங்களை மயக்கி வைத்திருக்கிறார் ? நானே சென்று பார்க்கிறேன்” என்று ராதை சொல்ல “ நீ அவர் கிட்டே போகாதே, போகாதே” என்று கிருஷ்ணன் தடுத்தான்
“ஏன் அவர் கிட்டே போகக் கூடாது, கண்டிப்பாகப் போகப்போகிறேன்” என்று சூர்தாஸ் பாடிக்கொண்டிருந்த கோவிலுக்குச் சென்றாள் . பிறவிக் குருடரான சூர்தாஸ் அருகில் அவள் போய் நின்றதும் அவளது கொலுசு சப்தம் தெய்வீக சப்தம் எழுப்பியதும், உணர்ந்த சூர்தாஸ் கையை நீட்டி அவள் கொலுசைப் பிடித்துகொண்டார் .
" விடுங்கள் என் காலை " என்ற போதும் கொலுசை விடவில்லை அவர் .
“ நான் ராதை, கிருஷ்ணனைச் சேர்ந்தவள்” என்றாள் .
“ எனக்கு நீ யார் என்று தெரியாது . பார்க்கவும் முடியாது . போய் கிருஷ்ணனை வரச்சொல்” என்று கொலுசை காலிலிருந்து உருவி எடுத்து வைத்துகொண்டார் .
ராதை கூப்பிட, கிருஷ்ணன் வந்தான் . சூர்தாஸ் பக்தியை மெச்சி பார்வை அளித்தான் . “ சூர்தாஸ், உங்களுக்கு வேண்டிய வரம் கேளுங்கள்” என்றான் .
" கிருஷ்ணா, உன்னைப் பார்த்ததே இல்லை . காது நிறைய உன்னைப் பற்றி கேட்டிருக்கிறேன். வாய் நிறைய உன்னைப் பாடிக்கொண்டே இருக்கிறேன். கண் கொடுத்த உன்னைக் கண் நிறையப் பார்த்து விட்டேன். எனக்கு வேண்டியது கிடைத்து விட்டது கண்ணின்றியே வாழப் பழகிவிட்டேன் . தயவு செய்து என்னை மீண்டும் குருடனாக்கிவிடு . உன்னைப் பார்த்த கண்ணால் வேறு எதையும் நான் பார்க்க விரும்பவில்லை "
" இந்தா தாயே ராதை உன் கொலுசு "
கண்ணனும் ராதையும் திரும்பும்போது, ராதை சூர்தாஸ் பற்றியே அவனிடம் பேசிக்கொண்டிருந்தாள் வாய் ஓயாமல் .
“ இதற்குத் தான் சொன்னேன், சூர்தாசைப் போய்ப் பார்க்காதே என்று, புரிகிறதா !” என்றான் கண்ணன்.
ப்ரேமையின் உச்சம் ராதையா, சூர்தாஸா ?

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: Aanmeekam...

Post by arasi »

கண்ணன் குழலூதுகின்றான், ராதையின் கழலொலிக்கே--
விண்ணவருக்கிணையாம் தாஸனும‌தைக் கேட்கின்றான்

கண்ணன் கண்ணுக்கு ராதையழகு, அவளுக்கோ கண்ணன்!
கண் காணாததில் கண்ணீருகுத்து மகிழ்கிறான் ஸூர்!

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share

பெற்றும் இழந்த பேறு
----------------------------------
யாதவப் பிரகாசர் என்றால் பலருக்குச் சட்டென்று தெரியாமல் இருக்கலாம். ஸ்ரீபெரும்புதூர் மாமுனி ராமானுஜருக்கு ஆரம்ப கட்டத்தில் குருவாக இருந்தவர். அவரைப் பற்றிய ஒரு சிறிய கதை.

காஞ்சி இளவரசியை பிரம்மராஷஸம் பீடித்து, யாராலும் அதை விரட்ட முடியவில்லை. யாதவப்பிரகாசர் தன் சீடனை அனுப்பி, 'நான் அனுப்பினேன் என்று சொல்லி அந்தப் பிரம்மராஷஸத்தை விரட்டி விட்டு வா!' என்றார். ஆனால், அவனோ, பேயால் விரட்டப்பட்டு தான் விழுந்தடித்துத் திரும்பி வந்தான்.

வெகுண்ட குருநாதர் தாமே சென்று தம் தண்டத்தை இளவரசியின் தலையில் வைத்து, 'என் பெயருக்கு அடங்காத நீ யார்? உடனடியாக ஓடிப்போ!' என்றார்.

பிரம்மராஷஸம் சிரித்தது. 'போன ஜென்மத்தில் நான் யாராக இருந்தேன், நீ யாராக இருந்தாய், ஏன் இப்படி நாம் பிறந்தோம் என்று அறியாத நீயா என்னை விரட்டப் பார்க்கிறாய்?' என்று மீண்டும் நகைத்தது.

தனது முன்ஜென்மம் அறிந்த பிரம்மராஷஸம் கண்டு வியந்த யாதவப் பிரகாசர் மேலும் விளக்குமாறு கேட்க அது கூறியது: 'முற்பிறவியில் நான்ஒரு அந்தணனாக இருந்தேன். ஆனால் ஒரு யாகம் செய்கையில் மந்திரம் மற்றும் சடங்குகள் குறைபாட்டினால் இப்பிறவி அடைந்தேன். நீயோ மதுராந்தகத்து ஏரியில் ஒரு உடும்பாக இருந்தாய். பெருமாளை தரிசித்துச் செல்வோர் பிரசாதத்தை உண்ட பின்னர் நீரில் கை கழுவும்போது அந்தப் பிரசாதத்தின் சில பருக்கைகளை உண்டதால், இப்பிறப்பில் ஞானமுள்ள ஒரு குருபீடத்தில் அமர்பவனாகப் பிறந்திருக்கிறாய்.'

யாதவப் பிரகாசருக்குச் சந்தேகம் தீரவில்லை. 'பெருமாள் பிரசாதத்தை உண்ட நான் பிறவிப்பிணியையே அறுத்திருக்க வேண்டுமல்லவா? மீண்டும் இப்பூவுலகில் ஏன் வந்து வீழ்ந்தேன்.'

பிரம்மராஷஸம் விடையறுத்தது: 'நீ உண்டது தேவப்ரசாதம். ஆனாலும், அதன் பெருமையை நீ அறிந்திருக்கவில்லை. நீ வெறுமே உன் பசியைத் தீர்த்துக் கொள்வதற்காக மட்டுமே அதை உண்டாய். அதனால், அந்த அளவே உனக்குப் பயன் கிட்டியது. நீ அதன் பொருளை அறிந்து புசித்திருந்தால் உனக்குப் பிறவிச் சங்கிலியே அறுபட்டிருக்கும்!'

என் கருத்தில், இந்தக் கதையின் அடிநாதம் பெருமாளோ பக்தியோ என்பதை விடவும் வேறொன்றே என்று நினைக்கிறேன்.
அது: 'நம்மை ஒரு நல்ல விஷயம் வந்தடையும்போது, நல்லவர் சேர்க்கை உருவாகும்போது நாம் அந்த பாக்கியத்தை முழுதுமாக உணர்ந்து கொண்டு அதைச் செவ்வனே போற்றிப் பாதுகாத்துப் பற்றியொழுக வேண்டும். அவ்வாறு அல்லாமல், காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியங்களால் பீடிக்கப்பட்டு அப்போதைய தேவைக்கு மட்டும் அதைப் பயன்படுத்திக் கொள்வோமானால், விரைவில் அது நம்மை விட்டு அகன்று விடும். நமது வினைப்பயனும் முடிவுறாது தொடர்ந்து செல்லும்.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

ராம நாம உபதேசம் சாதாரணமானதா???

“ராம” என்ற இரண்டெழுத்து சாதாரணமாய்த் தோன்றலாம். ஆனால் இந்த ராம நாமம் உபதேசம் பெறவேண்டிக் காத்திருந்தவர்களில் கபீர்தாஸரும் ஒருவர். பிறப்பால் முஸ்லீம் என்று சொல்லப் பட்டாலும், (சிலர் பழக்கவழக்கங்களும், சுற்றுச் சூழலுமே காரணம் என்றும் சொல்லுவார்கள்) எப்படியானாலும் கபீரின் மனம் பூராவும் ராம நாமத்திலேயே லயித்தது. அதில் தான் இம்மைக்கும், மறுமைக்கும் வேண்டிய ஆநந்தம் இருக்கிறது என்பதைப் பூரணமாய் உணர்ந்தார் கபீர். ஆனால் இந்த மந்திரத்தைத் தாமாகச் சொல்லுவதை விட குரு மூலம் உபதேசம் பெற்றுச் சொன்னால்?? ஆஹா! அத்தகைய குரு நமக்குக் கிடைப்பாரா?? ஏன் கிடைக்க மாட்டார்? இதோ ராமாநந்தர் இருக்கிறாரே? தினம் தினம் ராமாநந்தரின் வழிபாட்டு சமயத்தில் ராம, லக்ஷ்மணர்கள் நேரிலேயே தோன்றி வழிபாட்டை ஏற்பது வழக்கம். அத்தகையதொரு குரு மட்டும் கிடைத்துவிட்டால்??? தன் நெசவுத் தொழிலைக் கூட மறந்து ராம நாமத்தில் லயித்துப் போயிருந்த கபீருக்கு, ராமாநந்தர் உபதேசம் என்பது சும்மா வெளிப்பார்வைக்கு மட்டுமே. என்றாலும் அந்த ராமன் கபீரின் இந்தச் சின்னஞ்சிறு ஆசை மூலம் வேறே எதையோ யாருக்கோ உணர்த்த விரும்பினானோ?
கபீரும் ராமாநந்தர் உபதேசிப்பாரா மாட்டாரா என்ற சந்தேகத்துடனேயே வேறு நபர்களையும் நாடினார். யாருமே கபீருக்கு ராம நாமத்தை உபதேசிக்கவில்லை. ராமாநந்தரிடமே நேரிடையாகச் சென்று வேண்டுகோள் விடுத்தார் கபீர்தாஸர். ராமாநந்தர் மறுத்துவிட்டார். அந்நிய மதத்தைச் சேர்ந்தவனுக்கு ராமநாம உபதேசமா? இகழ்ச்சியுடனேயே ராமாநந்தர் கபீரை அங்கிருந்து போகச் சொன்னார். கிட்டத் தட்ட விரட்டப் பட்டார் கபீர். ராமாநந்தரின் அன்றைய வழிபாடு தொடர்ந்தது . வழிபாடு முடிவதற்குள்ளாக ராம, லக்ஷ்மணர்கள் வந்துவிடுவார்கள். ஆனால்,, ஆனால் இன்று வரவில்லையே?? ஏன்?? என்ன குறை?? பூஜைக்கான பொருட்களில் எதுவும் குறைவில்லை. ஆசார, அனுஷ்டானங்களிலும் குறைவில்லை. என்றாலும் நேரில் வந்து இத்தனை நாட்கள் பூஜையை ஏற்ற ராமன் இன்று வரவில்லையே? ஏன்? என்ன காரணம்? துன்பம் அடைந்தார் ராமானந்தர்.
மெல்ல எழுந்து வெளியே வந்தார். மடத்தின் வாயிலில் நின்று கொண்டு யோசித்தவண்ணம் அங்குமிங்கும் பார்த்தார். சுற்றுமுற்றும் தேடினார். அப்போது அசரீரி போன்ற ஒரு குரல்,” அண்ணா, அண்ணா, என்ன இது?” என்று கேட்டது. யார் பேசுவது?? குரல் மட்டுமே வருகிறதே? ராமாநந்தர் உற்றுக் கவனித்தார். “லக்ஷ்மணா, என்ன விஷயம்?” என்று மறு குரலும் கேட்டது. ஆஹா, ராம, லக்ஷ்மணர்கள் கடைசியில் நம் பூஜைக்கு வந்தே விட்டார்களா??? ராமாநந்தர் உற்சாகத்தில் ஆழப் போகும் சமயம். லக்ஷ்மணன் என்று அழைத்த குரல்” அண்ணா என்ன இது? இன்று ராமாநந்தரின் வழிபாடலில் கலந்து கொள்ளாமல் திரும்பலாம் என்று சொல்லிவிட்டாயே?” ராமாநந்தருக்குத் தூக்கிவாரிப் போட்டது. என்ன நம் வழிபாட்டில் ராமன் கலந்து கொள்ளப் போவதில்லையா? ராமன் குரல் கேட்டது அப்போது,” ஆம், தம்பி லக்ஷ்மணா, உத்தம பாகவதன் கபீர், என்னைத் தவிர வேறு யாரையுமே எப்போது நினையாதவன். அவன் என்னுடைய நாமாவைச் சொல்லுவதைக் கேட்கும்போதே எனக்குப் பரவசமாய் இருக்கும். அத்தகையவன் ராமாநந்தரிடம் உபதேசம் பெற வந்தான். அவனை விரட்டி விட்டார்களே! என் பக்தன் விரட்டப் பட்ட இடத்தில் எனக்கு என்ன வேலை? வா, நாம் போகலாம்.” எங்கும் அமைதி. ராமாநந்தர் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது. அவர் கண்களால் ராமனும், லக்ஷ்மணனும் அங்கிருந்து திரும்புவதையும் உணரமுடிந்தது.
ஆஹா, ராமனே வந்து கபீருக்கு மந்திர உபதேசம் செய்யாதது என் தவறு எனச் சுட்டிக் காட்டிவிட்டானே? அப்படி எனில் அந்தக் கபீர் எத்தனை பெரிய பாகவதோத்தமனாய் இருக்கவேண்டும்? அவனுடைய தேடுதல், ராமனைப் பற்றிய பக்தி எத்தனை விசாலமாய், ஆழமாய் இருந்திருக்கவேண்டும். நாம் தான் ராமனைப் பற்றிப் பாடுகிறோம், பேசுகிறோம், ராமன் நேரில் வருகின்றான் என நினைத்தது எவ்வளவு பெரிய தவறு? நம்மிலும் பெரிய பரமபாகவதன் கபீரை அவமதித்துவிட்டேனே? ராமாநந்தர் கபீர் எங்கு இருப்பார் என விசாரித்தார். கங்கை நதிக்கரையில் இருப்பார் எனத் தெரிய வந்தது. உடனேயே அங்கே விரைகிறார். தூரத்தில் இருந்தே ராமாநந்தர் வருவதைப் பார்த்துவிடுகிறார் கபீர். குருவானவர் வருகிறார். எதற்கு, என்ன என நமக்குத் தெரியாது. பெரும் பதட்டத்தோடு வேறு வருகிறார். அதை அதிகப்படுத்தும் வண்ணம் நாம் இன்னும் நேரில் அவருக்கு முன்னால் போய் தொந்திரவு செய்யக் கூடாது.
ஒரு க்ஷணம் தான். கபீர் தன் உடம்பைக் குறுக்கிக் கொண்டு கங்கைக் கரையின் படித்துறைப் படிகளில் ஒன்றில் படியோடு படியாகப் படுத்துக் கொண்டார். அந்த வழியாக ராமாநந்தர் வருவார் என்ற நிச்சயத்துடன் காத்திருந்தார். ராமாநந்தரும் வந்தார். சுற்றுமுற்றும் பார்த்துக் கபீரைத் தேடினார். எங்கும் கிடைக்கவில்லை. படிகளில் இறங்கிப் பார்ப்போம் என இறங்கினால், படியென நினைத்து அவர் மிதித்தது, யாரோ மனிதனை அன்றோ? ஆஹா, என்ன இது? “ராம், ராம்” என்று அலறிக் கொண்டே நகர்ந்தார். கீழே இருந்து பதில் வந்தது. “வந்தனம் குருதேவரே! என்னைக் காலாலும் தீண்டி, மந்திர உபதேசமும் செய்து வைத்தமைக்குப் பலகோடி வந்தனங்கள்” கபீரின் கண்களில் இருந்தும் கண்ணீர் பெருகியது.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Aanmeekam...

Post by Pratyaksham Bala »

Interesting story ! Nicely written by Ms G.S.

But,
Kabir : 1440-1518
Ramanand : 1738-1802
Last edited by Pratyaksham Bala on 01 Jul 2015, 08:10, edited 1 time in total.

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: Aanmeekam...

Post by vgovindan »

pb,
I have also heard about Ramananda being guru of Kabir Das. According to this website the period of this Ramananda is from 1400 to 1476.
https://en.wikipedia.org/wiki/Ramananda

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

சேவை

Post by vgovindan »

Krishnamoorthi Balasubaramanian‎ Sage of Kanchi (FB Post)

உண்மையான அன்போடு மனசார நம்மை வாழ்த்த வைக்கும் நிம்மதி
- (ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா)
-
ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவாளை தர்ஸனம் பண்ண ஒரு பக்தர் வந்தார். கூட்டம் அதிகம் இல்லை.
"அப்பா எப்டியிருக்கார்?"...
"அப்பாக்கு ரொம்ப ஒடம்பு முடியலே பெரியவா......ப்ரக்ஞை இல்லே; அதனால ஆஸ்பத்ரில சேத்திருக்கேன்..."
மேலே சொல்லு என்பது போல் பெரியவா உன்னிப்பாக கேட்டார்.
"...பணம் பணம்ன்னு ஆஸ்பத்ரில பிடுங்கி எடுக்கறா.....ட்ரிப்ஸ் ஏத்தறதுக்கு பணம்; ஆக்ஸிஜன் வெக்கறதுக்கு பணம்; அதுக்கு இதுக்குன்னு நின்னா, ஒக்காந்தா பணம் ஒண்ணுதான் கேட்டுண்டே இருக்கா பெரியவா! ஏகப்பட்ட செலவாயிடுத்து..."
"அப்பாவுக்கு என்ன வயஸ்?"
"ஸதாபிஷேகம் ஆய்டுத்து"
"அவரை டிஸ்சார்ஜ் பண்ணி அழைச்சிண்டு வந்துடு! ஆத்துல ஒரு கட்டில்ல அவருக்கு ஸ்ரமம் இல்லாதபடி ஸௌகர்யமா படுக்க வை; ஜாஸ்தி சூடு இல்லாம, வெதுவெதுன்னு கஞ்சி, பால் இதுமாதிரி நீர்க்க குடு; அவரோட காதுல விழறா மாதிரி தெனமும் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்லு; ஆத்துல எல்லாருமா பகவன் நாமாவை சொல்லுங்கோ; ஆத்மார்த்தமா ஸுஸ்ருஷை பண்ணு; இப்டி பண்ணினியானா .......ஒனக்கும் பணச்செலவு இல்லே! அவரும் கடைசி காலத்தை நிம்மதியா கழிப்பார்....."
மகன் மன த்ருப்தியோடு ப்ரஸாதம் பெற்றுக்கொண்டு சென்றார்.

அவர் போனதும் பக்கத்தில் இருந்தவர்களிடம் மஹா பெரியவா சொன்னார்.....
"இப்போல்லாம் யாருக்கும் தர்மமே தெரியறதில்லே! ஒடம்புக்கு கொஞ்சம் அசௌகர்யம் வந்துடுத்துன்னா......ஒடனே ஆஸ்பத்ரில சேத்துடறா! வ்யாதிக்கு மருந்து வேணுந்தான்...வாஸ்தவம். ஆனா.....'அருமருந்து' ஒண்ணு இருக்குங்கறதே யாருக்கும் தெரியறதில்லே!....."
பகவானின் நாமம் கைகுடுப்பது போல் எந்த டாக்டரோ, மருந்தோ உதவி பண்ணாது. பகவானின் நாமம் பிழைக்கவும் வைக்கும், அதே சமயம் ஆயுஸ் முடியப்போகும் தருணத்தில், பகவானின் திருவடிப் பேற்றையும் சுலபமாக அளித்து விடும். எனவே, உடல் நிலை சரியில்லாதவர்களை குறிப்பாக வயசான நம் பெற்றோர், தாத்தா,பாட்டி போன்றோரை, வயசான காலத்தில் கஞ்சி குடுத்தாலும், அதை அன்போடு குடுத்து, பகவானின் நாமத்தை சதா கேட்கவோ, சொல்லவோ வைத்து, அவர்களை நிம்மதியாக வைத்துக் கொள்வதே கடவுளுக்கு மிகவும் பிடித்த கைங்கர்யம்.
அவர்களுக்கு விலையுயர்ந்த பரிசுகள் வேண்டாம், விதவிதமான உணவு வகைகள் வேண்டாம். உண்மையான அன்போடு ஒரு பத்து நிமிஷமாவது அவர்களுக்காக ஒதுக்கி, "சாப்பிட்டீர்களா? ஏதாவது வேண்டுமா?" என்று கேட்பதே அவர்களை மனசார நம்மை வாழ்த்த வைக்கும். அவர்கள் வாழ்ந்த வீட்டை விட, அது குச்சு வீடாக இருந்தாலும் சரிதான், தன் மக்களை விட்டுவிட்டு, வேறு எந்த பெரிய ஆஸ்பத்ரியிலும் அவர்களால் நிம்மதியாக இருக்க முடியாது.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

திரு கோவிந்தன் அவர்களுக்கு தொகிப்பினை பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி.
என்ன ஒரு தீர்க்க தரிசனம் . உற்றார் உறவினரின் ஏச்சுக்கும் தேவை இல்லாத பேச்சுக்காகவும் அஞ்சி முதியோர்களை சிகிச்சைக்காக தனி மருத்துவ மனையில் சேர்த்து அவர்களும் மற்றவர்களும் படும் அவதி சொல்லில் அடங்காது. சில மனிதாபிமான உள்ள மருத்துவர்கள் முதியோர்களை வீட்டிற்கு அழைத்து சென்று அங்கேயே சில மருந்துகளை கொடுக்க செய்து கடைசி காலத்தை நல்ல படியாக வீட்டில் உள்ளவர்களே கவனித்து கொள்ளும்படி கூறுவதும் உண்டு. மகாபெரியவரின் இந்த அறிவுரை மனதிற்கு மிகவும் சாந்தத்தை ஏற்படுத்துகின்றது. குற்ற உணர்வு அறவே போய்விடுகின்றது.
தஞ்சாவூரான்
17 07 2015

kvchellappa
Posts: 3597
Joined: 04 Aug 2011, 13:54

Re: Aanmeekam...

Post by kvchellappa »

Indra Soundararajan talks about Kanchi Paramacharya:
https://www.youtube.com/watch?v=AuL59OVwSE4

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: Aanmeekam...

Post by vgovindan »

chellappa,
Thanks for timely posting.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share

Varagooran Narayanan

"மரத்தைத் தண்ணீரில் போடு!"

காஞ்சிப் பெரியவர்கள் ஒன்று கூறியிருக்கிறார்கள்:

வலையில் படித்த அருள்வாக்கு

“கிணற்று நீருக்குள் நீரை நிரப்பிக்கொண்ட குடத்தை இழுக்கும்போது கனம் தெரியவில்லை; ஆனால் தண்ணீர் மட்டத்துக்கு மேலே குடம் வந்தவுடன் கனக்க ஆரம்பித்து விடுகிறது.

எளிதில் புரட்ட முடியாத பெரிய மரங்களை வெள்ளத்தில் உருட்டித்தான் புரட்டி இழுப்பது வழக்கம்.

அதேமாதிரி நம் துன்பங்களையெல்லாம் `ஞானம்’ என்னும் தண்ணீரில் அமுக்கிவிட வேண்டும். அப்போதும் துக்கம் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும். ஆனால், தண்ணீருக்குள் இருக்கிற குடம் மாதிரித் துக்கம் பரமலேசாகி விடும்.”

லெளகீகத்தில் இருந்து சுத்தமாக விடுபட்டு விட்ட ஒரு சந்நியாசி, லெளகீக வாழ்வில் துக்கத்தைக் குறைப்பதற்குச் சொல்லும் அற்புத வழி அது.

இந்துமதம் லெளகீகத்தையே முதற்படியாகக் கொண்டது என்பதற்கு சாட்சி.

வாழ்வைப் பற்றிய சிக்கலில் மனதை ஈடுபடுத்திக் கொண்டு குழம்பித் தவிக்கும் கோடானுகோடி மக்களுக்கு இந்து மதம் ஒரு ஆறுதல் சொல்கிறது.

சித்தம் தெளிவற்றிருந்தால் பிரமை பிடித்து விடுகிறது. அது தெளியும்போது, ஞானஒளி பெற்று விடுகிறது.

இக வாழ்க்கையைச் சுகமாக்கித் தர, பிற மதங்கள் செய்யாத முயற்சியை இந்து மதம் செய்கிறது.

துக்கமே இல்லாத சந்நியாசிகள்கூடத் துக்கத்தைப் பற்றிச் சிந்திக்கிறார்கள்.

மரணமே இல்லாத பரமாத்மாகூட மரணத்தைப் பற்றிப் பேசுகிறது.

எங்கே எது இல்லை? காட்டில் மட்டுந்தானா முள் இருக்கிறது? அது ரோட்டிலும் இருக்கிறது! பார்த்து நடப்பவன் காட்டில்கூட நடந்துவிட முடியும்; பாராமல் நடப்பவன் ரோட்டில்கூட நடக்க முடியாது.

கவலை என்பது ஒரு வலை.

தனக்குத்தானே அதை வீசிக் கொள்கிறவர்கள் உண்டு.

பல நேரங்களில் ஆண்டவனும் அதை வீசுவதுண்டு.

வலைக்குத் தப்பிய மீன்கள், நீர் வற்றிவிட்டால், மரணத்துக்குத் தப்புவதில்லை.

காலம்தான் வித்தியாசம். சில முந்திக் கொள்கின்றன. சில பிந்திக் கொள்கின்றன.

ஒவ்வொருவன் கண்ணுக்கும், அடுத்தவன் சந்தோஷமாக இருப்பது போலவே தோன்றுகிறது.

அவன் பார்க்கும் கண்ணாடி நல்ல கண்ணாடியாக இருந்தால்தானே, அவன் முகத்தைக் காட்டும்.

வண்டியின் மீது மற்றவர்கள் பாரத்தை ஏற்றுக்கிறார்கள். வண்டி தானே ஏற்றிக்கொள்வதில்லை.

மனித மனமோ தானே சுமைகளை ஏற்றிக் கொள்கிறது.

ஏற்றிய சுமையை எளிமைப்படுத்த என்ன வழி?

`ஞானம் எனும் தண்ணீரை நிறையக் குடி’ என்கிறார்கள் காஞ்சிப் பெரியவர்கள்.

`ஞானம் ஞானம்’ என்கிறோமே அது என்ன?

சட்டையைப் போடும்போது, கிழிந்த சட்டை என்று தெரிந்தே போட்டுக் கொள்வது; பிறகு `ஐயோ, இது கிழிந்திருக்கிறதே’ என்று அங்கலாய்க்காமல் இருப்பது; அதன் பெயரே ஞானம்.

`இது இவ்வளவுதான்; இப்படித்தான்’ என்று தேறுவதும் தெளிவதும் ஞானம்.

`எது எப்படியிருந்தால் என்ன; இறைவன் விட்ட வழி, என்றிருப்பது ஞானம்.

குடிசைகளே நிரம்பிய காட்டில்கூட ஏதாவது ஒரு ஓட்டு வீடு இருக்கிறல்லவா?

துயரங்களே நிரம்பியே மனதிற்கும் ஏதாவது ஒரு நிம்மதி வந்தே தீரும்.

எந்தச் சந்நிதியில் நிற்கிறோம் என்பது முக்கியம்.

குளிக்கும் அறைக்குள் போய் நின்று கொண்டு கோகுலக் கண்ணன் படத்தைத் தேடக்கூடாது. பூஜை அறைக்குள் `ஷவர்பாத்’ இல்லையே என்று வருந்தக் கூடாது.

தேர்வும் தெளிவும் சரியாக இருந்தால், ஞானம் சரியாகிவிடும்.

ஞானத்தண்ணீர் பெருகி ஓடினால், துன்ப மரங்கள் எளிமையாகி விடும்.

மாட்டி இருப்பது விலங்குதான் என்று தெரிந்து கொண்டு, நடக்க ஏன் முயல வேண்டும்?

“ஐயோ! நடக்கமுடியவில்லையே” என்று ஏன் அழ வேண்டும்?

ஒவ்வொரு மரமும் இடைவெளி விட்டு நிற்கும் தென்னந்தோப்பைப்போல இரண்டு சுகங்களுக்கிடையில் ஒரு துயரம் இருக்கிறது.

இரண்டு துயரங்களுக்கிடையே ஒரு சுகம் இருக்கிறது. இதுதான் லெளகீக வாழ்க்கை.

கல் குத்தினால் வலிக்கிறது. கண்ணாடி குத்தினால் ரத்தம் வருகிறது. கவனித்து மருந்து போட்டால் ஆறிவிடுகிறது. கவனிக்காமல் விட்டால் `ஸெப்டிக்’ ஆகிறது. கவனித்தும் `ஸெப்டிக்’ ஆனால் ஏதோ பூர்வ ஜென்ம பாபம் இருக்கிறது.

துன்பத்தின் கதை இத்தோடு முடிந்துவிடுகிறது.

ஜன்னலின் அளவைப் பொறுத்து காற்று வருகிறது.

ஜன்னல்கள் இல்லாத வீடு சுகாதாரத்தைக் கெடுக்கிறது.

அதுபோல், சூழ்நிலைகளைப் பொறுத்துத் துன்பம் வருகிறது; அந்தச் சூழ்நிலைகளை நீக்கிக்கொள்ளும் பொறுப்பு மனிதனுக்குத் தான் இருக்கிறது.

நம்மையறியாமல் வருவது நாம் அறியாமலே தீர்க்கப்படுகிறது.

நாம் அறிந்து வருவதை நாமே தீர்த்துவிட முடியும்.

இந்த இரண்டுவகைத் துன்பங்களில், முதல்வகை ஈஸ்வர பக்தியால் விலகுகிறது.

இரண்டாவது வகை, கூரிய புத்தியால் விலகுகிறது.

பக்தியும் இல்லாமல் புத்தியும் இல்லாமல், `ஐயோ அம்மா’ என்று அலறுவதில் என்ன பொருள்?

பசுவை வாங்கி வந்தால் பால் கறக்கலாம்; காளையை வாங்கிவிட்டுக் கடவுள்மீது குறை சொல்வதில் என்ன அர்த்தம்?

காரணத்தோடு வரும் துன்பங்களை, விவேகத்தோடு சமாளிக்க வேண்டும்.

குடித்துவிட்டுக் காரோட்டி விபத்திற்குள்ளானால் அது காரணத்தோடு வரும் துன்பம்.

ரயில் விபத்தில் நீ சிக்கிக்கொண்டால், அது காரணமில்லாமல் வரும் துன்பம்.

முன்னதை நீ தடுக்கலாம்; பின்னதைக் கடவுள் தான் தடுக்க வேண்டும்.

இரண்டுக்கும் `ஞானம்’ என்றுதான் பெயர்.

சம்பாதிப்பது போதவில்லை என்றால் அது ஒருவகைத் துன்பம். நிறையச் சம்பாதித்தும் போதவில்லை என்றால் அது ஒருவகைத் துன்பம். சம்பாத்தியமே இல்லை என்றால் அது ஒருவகைத் துன்பம்.

எது உன் வாழ்க்கையில் நேர்ந்தாலும், அதன் மறுபகுதி துன்பம்.

தலையில் கை வைத்துக்கொண்டு தடுமாறுகிறவனுக்குத் துன்பம் தீராது.

ஞானம் என்ற தண்ணீரில் துன்பத்தை அமுக்கி இழுத்தால் பாரம் குறையும்.

நம்மைப் பிறக்க வைத்தபோது, தாய் பட்டது துன்பம்;
தாய் இறந்துபோனால் உறவினர் படப்போவது துன்பம்; இரண்டுக்கும் இடையிலே நாம் அனுபவிப்பது துன்பம்.

எல்லாவற்றுக்கும் பரிகாரம் மனதை ஞானத்தண்ணீரில் முக்கி எடுப்பதே.

வாழ்க்கையில் எந்தப் படிக்கட்டில் துன்பம் இல்லை?

பணம் இல்லை என்றால் துன்பம்.

அதிகம் சேர்ந்துவிட்டால் வருமான வரித்துன்பம்.

வடதுருவத்திற்குப் போனாலும் பனிக்கட்டிதான்; தென் துருவத்திற்குப் போனாலும் பனிக் கட்டிதான்.

`துன்பம் ஒரு சோதனை’ என்று முன்பே நான் எழுதி இருக்கிறேன்.

துக்கச் சுமையைக் குறைக்கக் காஞ்சிப் பெரியவர்கள் சொன்ன உதாரணம் என்னை மெய்சிலிர்க்க வைத்ததால், இதனை மீண்டும் எழுதுகிறேன்.

`ராமன் கிடைப்பானா?’ என்று கலங்கிய சீதை;

அவன் கிடைத்த பின்னாலும் காடு சென்று கலங்கிய சீதை;

காட்டிலும் ஒருவனால் தூக்கிச் செல்லப்பட்டுக் கலங்கிய சீதை;

அவனைக் காணாமல் தினந்தினமும் கலங்கிய சீதை;

வந்து தன்னை மீட்டதும் அவனால் சந்தேகிக்கப் பட்ட சீதை!

சீதையின் வாழ்க்கையிலே ஒரு சுவடுக்கு மறுசுவடு துன்பம் என்றால், என் நிலையும் உன் நிலையும் என்ன?

காட்டில் முளைத்த மரமும் கவலையுறும் காலம் இலையுதிர் காலம்.

ஆற்று மணலும், கவலைப்படும் காலம், கோடைக் காலம்.

பகுத்தறிவற்ற விலங்குகளும் கவலைப்படும் காலம், அவை பயப்படும் காலம்.

இவற்றுக்கெல்லாம் யார் ஆறுதல் கூறப்போனார்கள்?

மானிட ஜாதி ஆறுதல் தேடுகிறது.

திடீரென்று கேரளாவில் இருந்தொருவர் `ட்ரங்கால்’ போட்டுத் தம் துன்பங்களைச் சொல்லி என்னிடம் ஆறுதல் கேட்கிறார்.

அதையே அவர் பக்கத்து வீட்டுக்காரனிடம் சொன்னால், அவன் தன் துன்பங்களைச் சொல்வான்; அதுவே ஆறுதலாகி விடும்.

மறுபடியும் தொடக்கத்தைச் சொல்லி முடிக்கிறேன்.

மரங்களைத் தண்ணீரில் போட்டு இழுப்பது போல், துக்கங்களை ஞானத்திலும் நிதானத்திலும் இழுத்துப் பாருங்கள்.

அப்போதும் அது குறையவில்லையென்றால், துக்கப்படுவதையே வாழ்க்கையாக்கிக் கொள்ளுங்கள்; வேறென்ன செய்வது?

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share

உபகோஸல வித்யா

ஒரு ப்ரம்ம வித்யை அனுஷ்டிப்பது என்பதே சுலபமில்லை. உபகோஸல வித்யாவைப் பற்றி சாந்தோக்ய உபநிஷத் சொல்கிறது. உபகோஸலன் என்கிற வித்யாா்த்தி. காட்டில் சத்யகாமன் என்கிற ஆசாா்யா் இருந்தாா். இவன் அவரை அண்டி வேத, வேதாா்த்தங்களைச் சொல்லிக் கொடுக்கவேண்டும் என்று கேட்டான். அவனை அவா் அருகில் கூப்பிட்டு "நான் இத்தனை நாட்களாக யாத்திரை போக வேண்டும் என்று நினைத்தேன். போக முடியவில்லை. நல்ல சத்சிஷ்யன் கிடைத்திருக்கிறாய். நீ வந்து ஆசிரமத்தில் இருந்து என்னால் நித்யம் ஆராதிக்கப்படுகிற அக்னியை அணையாமல் பாா்த்துக் கொண்டு பூஜை பண்ணிக் கொண்டிரு. நான் ஒரு மாதத்தில் யாத்திரை முடிந்து திரும்பி வந்து அக்னிஹோத்ராதிகள் பண்ணிக் கொண்டு உனக்கு எல்லாம் சொல்லிக் கொடுக்கிறேன். இதை நீ ரக்ஷிப்பாயா? " என்று கேட்டாா்.

ஆசாா்ய ஆக்ஞை ஆனதும் உபகோஸலன் 'அப்படியே பண்ணுகிறேன். அக்னியை ரக்ஷிக்கிறேன்.நீங்கள் போய்விட்டு வாருங்கள்' என்று சொன்னான்.

ஆசாா்யரிடம் பணிவுடன் சொன்னவுடன் அவரும் ஏற்றுக் கொண்டாா். அக்னியை உபாஸிக்கும்படியான விஷயங்களைச் சொல்லிக் கொடுத்தாா். அக்னியை அவனிடம் ஒப்படைத்துவிட்ட புறப்பட்டுப் போனாா்.

ஒரு மாதம், இரண்டு மாதம், ஆறு மாதம், ஒரு வருடம் ஆயிற்று. ஆசாா்யா் திரும்பி வரவேயில்லை. இன்னொரு சிஷ்யன் என்ன பண்ணுவான்...?

ஒரு குடம் தீா்த்தத்தை அதில் சோ்த்து விட்டு நம்மால் ரக்ஷிக்க முடியாது என்று புறப்பட்டுப் போயிருப்பான். ஏனெனில், அவன் கல்வி கற்க வந்தான். வந்தவனுக்கு ஆசாா்யன் எதுவும் சொல்லிக் கொடுக்கவில்லை. வேறு எதையோ கொடுத்து இதைப் பண்ணிக் கொண்டிரு என்று சொல்லி சொன்ன காலமும் போய்விட்டது. போனவா் திரும்பி வரவேயில்லை. அவன் எத்தனை நாட்கள் பொறுமையாக இருப்பான்?

ஆனால், உபகோஸலன் ஆசாா்யா் வரவில்லை என்று கவலைப் படவேயில்லை .'அவா் என்றைக்கு வேண்டுமானாலும் வரட்டுமே.நமக்கு கல்வி வேண்டும்;பூரணமான கல்வி வேண்டும்'என்று சொல்லி அக்னியை இன்னும் விசேஷமாக உபசாரம் பண்ணுகிறான். இன்னும் பற்று ஜாஸ்தியாகிவிட்டது. இப்படி ஒரு வருஷம், இரண்டு வருஷம், பத்து வருஷம், பன்னிரண்டு வருஷங்கள் ஆகிவிட்டன.

பன்னிரண்டு வருடங்கள் ஆராதனை பண்ணியவுடன் அக்னி பகவானே ப்ரத்யக்ஷம் ஆகிவிட்டான். ப்ரம்ம வித்யைக்கு மூலமான வைச்வாநர வித்யையை ஹ்ருதயத்தில் ஸ்புாிக்கப் பண்ணிவிட்டான். உபகோஸலனுக்கே தொியாமல் அவனுக்கு அக்னி பகவானின் அனுக்ரஹம் ஏற்பட்டுவிட்து. அக்னி பகவான் அந்தா்தானமானான்.

மஹாதேஜஸுடன் இருக்கிறான் உபகோஸலன். ப்ரம்ம ஞானம் ஏற்பட்டு விட்டது. ஹோமம் பண்ணிக் கொண்டிருக்கிறான்.மறுநாள் ஆசாா்யா் வருகிறாா். உள்ளே நுழைந்தாா். அவனைப் பாா்க்கிறாா்.

"ஏய்! என்னை ஆசாா்யனாக வாித்தும் நான் வந்து உனக்கு உபதேசம் பண்ணுவதற்குள், வேறொரு ஆசாா்யனை வாித்து ப்ரம்ம உபதேசம் பெற்றாயா..?ஆசாா்ய துரோகம் பண்ணிய நீ இங்கு இருப்பதற்கு தகுதியற்றவன். வெளியில் நட" என்றாா்.

'ஸ்வாமி!நான் ஒன்றுமே பண்ணவில்லை' என்றான் உபகோஸலன்.

உன்னுடைய முகத்தில் ப்ரும்ம தேஜஸ் எப்படியடா வந்தது? வெளியில் போ! என்றாா்.

போகமாட்டேன் என்றான் உபகோஸலன்.

ஆசாா்யா் உபகோஸலனின் கழுத்தைப் பிடித்து தள்ள வந்தாா். அப்போது அக்னி பகவானே ப்ரத்யக்ஷம் ஆனான்."நீா் வாிக்காத இந்த சிஷ்யனை நான் வாித்து விட்டேன். நான் உபதேசம் பண்ணிவிட்டேன்" என்றான்.

ஆசாா்யா் நடுங்கி விட்டாா். "இத்தனை நாட்களாக நான் அக்னியை உபாசனை பண்ணிக் கொண்டு வருகிறேன். ஒரு நாளாவது அக்னி பகவானின் சாக்ஷாத்காரம் ஏற்பட்டதில்லை. இவனோ இந்த 12 வருடத்துக்குள் அக்னி பகவானையே வரவழைத்து விட்டானே! " என்று வியந்தாா்.

அவ்வளவு நிஷ்டை உபகோஸலனிடத்தில் இருந்திருக்கிறது. அங்கே இங்கே போகாமல், இடத்தைவிட்டு அசையாமல் ஒரேடியாக 12 வருடகாலம் உபாஸிப்பது என்பது பொிய வித்யை.அதை அவன் நடத்தினான்.

அதனால் அக்னி பகவான், ஆசாா்யா் எல்லோருமாகச் சோ்ந்து அந்த வித்யை அவன் போினாலேயே அழைக்கப்படட்டும் என்று சொல்லி உபகோஸலை வித்யா என்று அழைத்தாா்கள்.

ஒரு அரை க்ஷணம் நம்மால் உட்கார முடியவில்லை. இங்கே போகலாமா,அங்கே போகலாமா என்று ஓட்டத்தில் இருக்கிறோம். ஒரேயிடத்தில் உட்காா்ந்து, லௌகீகப் பற்றே இல்லாமல், ஏகதாரையாக அக்னியை உபாஸிப்பது சுலபமான காாியமா? இந்தக் காலத்தில் நம்மால் அவ்வாறு செய்ய முடியுமா.

இப்படி ஒவ்வொரு வித்யையும் ஆராய்ந்தால் ஒன்றுக்கும் அருகில் நாம் போக முடியாது. பக்தி யோகத்தில் இந்த 32 ப்ரம்ம வித்யைகள் சொல்லப் பட்டிருக்கிறது.இதற்கு அதிகாாிகள் நியமிக்கப்பட்டுள்ளது. எல்லோரும் பக்தி யோகம் பண்ண முடியாது.இப்படி பல கஷ்டங்கள்.

அகிஞ்சனா்களான, வேறு கதியற்ற நமக்கு உயா்ந்த கதி எது? இது எல்லாம் விட்டுவிடு என்கிறான் பரமாத்மா. 'ஸா்வ தா்மான் பாித்யஜ்ய' என்கிறான். வேறு என்ன பண்ணுவது. ..? அவன் திருவடியை கெட்டியாக பிடித்துக கொள்வது. அ
துதான் சரணாகதி.

நீதான் உபாயம்.நீயே உபேயம். பலனும் நீயே என்று கெட்டியாக பிடித்துக் கொள்வது சரணாகதி.

( Mukkur Sri Lakshmi Narasimma Chariar Swamy)

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

சரணாகதி என்றால் என்ன?

Post by vgovindan »

சரணாகதி என்று சொல்கிறார்களே, அதன் பொருள் என்ன? அப்படி சரணாகதி செய்தவன் வாழ்வு எப்படி இருக்கவேண்டும்? சரணாகதி செய்தபின் அவனுடைய கோரிக்கைகள் என்ன? - எனக்கு இது புரியாத புதிர்.

சபரி போன்ற குழந்தையுள்ளம் கொண்டவர்களே, குரு சொன்ன ஒரு வார்த்தையைப் பற்றிக் கொண்டு, யாரோ ராமன் - அவன் யார், எப்படியிருப்பான், எப்போது வருவான் என்று ஏதும் தெரியாமல், ஏதோ கண்ணெதிரே இருப்பது போன்று கருதி, தன் வாழ் நாளை அர்ப்பணிக்க முடியும். தான்,தனது,தன் மனைவி மக்கள் என்று இப்படியெல்லாம் தன்னை எப்போதும் முன்னால் வைத்துவி்ட்டு, வெறும் நாம ஸ்மரணம் போன்று சரணாகதி, சரணாகதி என்று கூறினால் அது எப்படி சரணாகதியாகும்? உண்மையில் விபீஷணன் செய்தது கூட சரணாகதியா என்று கேட்கத் தோன்றுகிறது. துரோபதை தன் மானம் போகத் தொடங்கிய பின்னரே, கையிரண்டையும் தூக்கி, உண்மையில் கண்ணனை சரணடைந்தாள்.

இறைவன் யார், அவனுக்கும் நமக்குள்ள தொடர்பு என்ன, அவனை நாம் ஏன் போற்ற வேண்டும் என்று முழு ஞானம் பெற்றவர்களால் மட்டுமே முழு சரணாகதி அடைய முடியும். சரணாகதி என்பது வெறும் வார்த்தைகளால் செய்யக் கூடியதல்ல. ஞானம் அடைந்துவிடலாம், ஆனால் சரணாகதி செய்வது கடினம்.

தேவி பாகவதத்தில் ஒரு பாத்திரம் - பிறவியில் ஊமை - அன்ன ஆகாரங்களில் ஈடுபாடின்றி வெறும் பயித்தியக்காரன் போன்று திரிந்து கொண்டிருந்தான். ஆனால் முற்பிறவியில் உபாசனை செய்து ஞானம் பெற்றவன். அவனை ஒரு கபாலிகன் பலியிடப் பார்த்தான் - தேவி வந்து காப்பாற்றினாள் - அவனுக்கு பலியைப் பற்றியும் கவலையில்லை, தேவி காப்பாற்றியதைப் பற்றியும் கவலையில்லை. பிற்காலத்தில் தேவி அவனுக்கு அருள் புரிந்தாள். இது தான் சரணாகதியின் உண்மைத் தோற்றம்.

ப்ரம்ம ஞானம் பெற்றவன்தான் சரணாகதி செய்யமுடியும். எப்படி வெறும் அறிவினால் (intellect) மட்டுமே ப்ரம்ம ஞானம் பெறமுடியாதோ, அதேபோன்று வெறும் அறிவினால் மட்டுமே சரணாகதி செய்யமுடியாது. இதைத் தெரிந்துகொள்ளாமல், எல்லோரும் ஏதோ மந்திரம் போன்று சரணாகதி, சரணாகதி என்று சொல்வது வேதனை தருகிறது.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share
– முருகனின் பூர்வ அவதாரம்
சனத் குமாரர்

Muruga

Story of Murugan’s Previous Birth as told by Kanchi Maha Periyava in Tamil. It is a bit long but a highly revealing story.

பிரம்மாவின் மனஸிலிருந்து உதித்தவர் ஸனத்குமாரர். அவர் பிரம்ம ஞானி. சுகாசாரியார் மாதிரி, உள்ளும் புறமும் எல்லாம் ஒன்று என்று ஸதாகாலமும் உணர்ந்திருந்தவர். இப்படிப்பட்டவருக்கு விசித்திரமாக ஒரு நாள் ஸ்வபப்னம் வந்தது. ஸ்வப்பனத்தில் தேவர்களும் அசுரர்களுக்கும் சண்டை நடந்தது. அதில் ஸனத்குமாரர் தேவ சேனாபதியாக யுத்தம் செய்து, அசுரர்களை எல்லாம் சம்ஹரிக்கிறார்.
விழித்தெழுந்ததும் அவருக்கே ஆச்சரியமாக இருந்தது. தகப்பனாரான பிரம்மாவிடம் போய் ஸ்வப்பனத்தைச் சொல்லி, அதற்கென்ன அர்த்தம் என்று கேட்டார்.
“குழந்தை! நீ பூர்வ ஜன்மத்தில் வேத அத்யயனம் செய்தாய். அதில் தேவாசுர யுத்தம் என்று வருவது உன் மனஸில் ஆழப் பதிந்துவிட்டது. வேத யக்ஞங்களால் ஆராதிக்கப்பட்டு அநுக்கிரகம் செய்கிறவர்கள் தேவர்கள். இவற்றை அழிக்க நினைக்கிறவர்கள் அசுரர்கள். உனக்கு வேதத்தில் இருந்து ஆழ்ந்த பிடிமானத்தால், “அசுரர்களையெல்லாம் நாமே சம்ஹாரம் செய்துவிட மாட்டோமா?’ என்று பூர்வஜன்மத்தில் ஆத்திரப்பட்டாய். அந்த நினைப்புத்தான் இந்த ஜன்மாவிலும் தொடர்ந்து வந்து ஸ்வப்னமாக வெளியாகி இருக்கிறது” என்றார் பிரம்மா.
ஸனத்குமாரரிடம் பிரம்மா, “உனக்கு எந்த எண்ணம் உண்டானாலும் அது வாஸ்தவத்திலேயே நடந்துவிடும். அதனால் நீ யதார்த்தமாகவே ஒருநாள் தேவ சேனாதிபதியாக அசுர சம்ஹாரம் செய்யத்தான் போகிறாய். இந்த ஜன்மாவில் நீ, ‘தேவராவது, அசுரராவது, எல்லாம் ஒரே பிரம்மம்’ என்று இருப்பதால், இன்னொரு ஜன்மா எடுத்து இதைச் செய்யப் போகிறாய்” என்றார்.
வாக்கு, மனம், சரீரம் மூன்றும் ஒருத்தருக்கு சத்தியத்திலேயே பிரதிஷ்டையாகிவிட்டால், அப்படிப்பட்டவர் உத்தேசிக்காமலே அவருக்கு ஒரு பெரிய சக்தி வந்துவிடும். அதாவது, அவர் எது சொன்னாலும் அதுவே சத்தியத்தைத்தான் சொல்ல வேண்டும் என்றில்லாமல், அவர் எது சொன்னாலும் அதுவே சத்தியமாகிவிடும். தவறுதலாகவோ, தெரியாததாலோ அவர் உண்மைக்கு விரோதமாக ஒன்றைச் சொன்னால்கூடத் வாஸ்தவத்தில் அப்படியே நடந்துவிடும். பரம சத்தியத்திலேயே ஸ்திரமாக நின்ற ஸனத்குமாரர் எதை நினைத்தாலும் – ஸ்வப்னத்தில் நினைத்தால்கூட – அதுவே சத்தியமாகிவிடும்.
இந்த சமாசாரம் தெரிந்து கொண்ட பின் ஸனத்குமாரர் ஆத்மாராமராக, பரப்பிரம்மத்தைத் தன்னில் தானாக அநுபவித்துக்கொண்டு, பழையபடியே உட்கார்ந்து விட்டார். லோகமெல்லாமே அவருக்கு ஸ்வப்னமாகி விட்டதால் தம் ஸ்வப்பனத்தைப் பற்றி நினைக்கவேயில்லை.
ஆனால் இவர் ஸ்வப்பனத்தில் நினைத்த நினைப்பு அசத்தியமாக போய்விடக்கூடாதே என்று பரமேசுவரனுகக்கு விசாரம் வந்துவிட்டது. அதனால், இவர் தரிசனத்துக்காகத் தபஸ் பண்ணாதபோதே, அவராகப் பார்வதீ ஸமேதராக இவருடைய ஆசிரமத்துக்கு வந்து விட்டார்.
ஸனத்குமாரருக்கோ மரம், மட்டையிலிருந்து சகலமும் ஒரே பிரம்மமாகத்தான் தெரிந்தது. பிரம்மத்தில் உசந்த பிரம்மம் தாழ்ந்த பிரம்மம் என்று உண்டா என்ன? எல்லாம் பிரம்மம் என்ற மாதிரியே பரமேசுவரனும் பிரம்மமாகத் தெரிந்தார். அவரை உபசரிக்க வேண்டும், பூஜை பண்ண வேண்டும் என்ற எண்ணமே ஸனத்குமாரருக்குக் கொஞ்சம் கூட உண்டாகவில்லை. அவர் தம்பாட்டுக்கு உட்கார்ந்தது உட்கார்ந்தபடி இருந்தார்.
பார்வதீ – பரமேசுவராள் ரொம் நேரம் நின்று பார்த்தார்கள். ஒரு பலனும் இல்லை. இப்படி மகா ஞானியாக ஒரு பிள்ளை இருப்பதைப் பார்த்து அவர்களுக்குப் பரமப் பிரீதிதான். இருந்தாலும் ஈசுவரன் பொய்க் கோபத்துடன் ‘ஞானி என்ற அகங்காரம்தானே உனக்கு? நாங்கள் லோகத்தின் மாதா பிதாக்கள் வந்திருக்கும்போது அவமதித்துவிட்டாயே. நான் சாபம் கொடுத்தால் என்ன செய்வாய்?’ என்று கேட்டார்
ஸனத்குமாரர் பயந்துவிடவில்லை. அலட்சியமாக, “நீர் சாக்ஷாத் மகா கோபிஷ்டரான ருத்திரராக இருந்து சாபம்தான் கொடும். அது ஆத்மாவைப் பாதிக்காது” என்று சொல்லிவிட்டு நிச்சிந்தையாக இருந்தார்.
‘அடடா, எப்பேர்ப்பட்ட உண்மையான ஆத்ம ஞானி!’ என்று ஈசுவரனுக்கு ரொம்ப சந்தோஷமாகிவிட்டது.
இன்னும் கொஞ்சம் பரீட்சை பார்த்து, பூராவும் ஞானி தானா என்று தெரிந்துகொள்வோம் என்று நினைத்து, “அப்பா; உன்னுடைய ஞானத்தை நான் ரொம்பவும் மெச்சுகிறேன். என்ன வேண்டுமானாலும் வரம் கேள். தருகிறேன்” என்றார்.
ஸனத்குமாரர் சிரித்தார். ‘உம் வரத்தை நீரே வைத்துக் கொள்ளும். எதை அடைந்தபின் இன்னொன்று வேண்டும் என்ற ஆசை லவலேசமும் இருப்பதில்லையோ, அப்படிப்பட்ட நிறைந்த நிறைவாக இருக்கிற எனக்கு வரத்தினால் ஆக வேண்டியது கடுகத்தனைக்கூட இல்லை’ என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார்.
அதற்கும் ஒரு படி மேலே போனார். “பரமேசுவரா! நீ பேசுவதிலிருந்து பார்த்தால் நீதான் வரம், சாபம் இதுகளிலெல்லாம் ஏதோ அர்த்தம் இருக்கிறதென்று நினைப்பதாகத் தெரிகிறது. அப்படியானால் சரி, உனக்கு ஏதாவது வரம் வேண்டுமானால் கேள். தருகிறேன்” என்றார்.
ஸனத்குமாரர் சொன்னதைக் கேட்டு ஈசுவரனுக்குப் பெருமையாக இருந்தது. நம் குழந்தை நம்மிடம் ‘தாட்பூட்’ செய்தால், நமக்கு சந்தோஷமாகத்தானே இருக்கும்? சர்வ லோக மகேசுவரனான அவர் ரொம்பவும் தழைத்து தம்மைச் சிறியவராக்கிக் கொண்டு ஸனத்குமாரரிடம் வரம் கேட்டார். இவருடைய ஸ்வப்பனத்தை நிஜமாக்க இதுவே வழி என்று நினைத்துக் கேட்டார்.
“அப்பா! இப்பேர்ப்பட்ட மகா ஞானியான நீ பிரம்மாவுக்குப் பிள்ளையாகப் பிறந்திருக்கிறாய். பிரம்மா செய்த பாக்கியம் எனக்கும் கிடைக்கும்படியாக வரம் கொடுப்பாய்! இன்னொரு ஜன்மாவில் நீ எனக்குப் புத்திரனாகப் பிறக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
“ஆஹா, உனக்குப் பிள்ளையாகப் பிறக்கிறேன்” என்று ஒப்புக் கொண்டார் ஸனத்குமாரர். ஞானம் வருகிறவரையில்தான் இனிப் பிறவி வேண்டாம் என்று அழுவோம்.
ஞானம் வந்துவிட்டால் எப்போதும் ஆனந்த ஸாகரம்தான். ஜன்மா கின்மா எல்லாம் அதில் ஒரு சின்னக் குமிழி மாதிரிதான். அது வேண்டும் வேண்டாம் என்பதெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியாது.
ஸனத்ககுமாரர் சொல்வதெல்லாம் சத்தியமாகிவிடும் அல்லவா? இப்போது ஈசுவரனை மட்டும் பார்த்ததுதான் ‘உனக்குப் பிள்ளையாகப் பிறப்பேன்’ என்றார். அம்பாளையும் சேர்த்து, ‘உங்களுக்குப் பிள்ளையாகப் பிறப்பேன்’ என்று சொல்லவில்லை.
இதையும் ஸனத்குமாரர் யோசித்துப் பார்த்தார். ஸனத்குமாரருக்கும் தாம் பார்வதியை நீக்கி பரமேசுவரனுக்கு மட்டும் பிள்ளையாகப் பிறப்பதாகச் சொன்னதிலும் ஒரு நியாயம் தெரிந்தது. அவருக்கு எவரிடமும் நிர்ப்பயம் தான். அதனால் அந்த நியாயத்தை வெளிப்படையாகவே சொன்னார்.
‘கேட்காதவருக்கு ஒன்றைத் தரக்கூடாது என்று சாஸ்திரம். அந்த நியாயப்படி நீதான் என்னிடம் வரம் கேட்டாயே தவிர, பார்வதி கேட்கவில்லை. ஆகவே, உனக்கு மட்டுமே பிள்ளையாகப் பிறப்பேன். நீ மட்டுமாக என்னை எப்படி உற்பவிக்கச் செய்வாயோ, அப்படிச் செய்துகொள்” என்று ஸ்வாமியிடம் சொன்னார்.
இதைக் கேட்டதும் அம்பாளுக்கு ரொம்ப ஏமாற்றமாக, பரம துக்கமாக ஆகிவிட்டது. லோகத்திலுள்ள சமஸ்த ஜீவராசிகளும் அவள் குழந்தைகள்தாம் என்றாலும், இது அந்த ஞானாம்பாளுக்கே தெரியும் என்றாலும், இப்படிப்பட்ட ஒரு பிரம்மஞானி மறுபடியும் பிறக்கிறபோது, அவன் நேராகத் தனக்குப் பிள்ளையாகப் பிறக்கவேண்டும் என்று அவளுக்கும் ஆசையிருந்தது.
இவர் சாஸ்திரத்திலிருந்து நியாயம் காட்டினமாதிரி, அவளும் காட்டித் தர்க்கம் பண்ணினாள். “சாஸ்திரங்களில் பதியையும் பத்தினியையும் ஒன்றாகத்தான் சொல்லியிருக்கிறது. பதி பிரார்த்திப்பதெல்லாம் பத்தினியையும் உத்தேசித்துத்தான். ஆனதால் நான் தனியாக வரம் கேட்க வேண்டும் என்றில்லை. அவர் கேட்டதாலேயே நீ எனக்கும் புத்திரனாக வரத்தான் வேண்டும்” என்று ரைட் கேட்டாள்.
ஸனத்குமாரர் யோசித்தார். “அம்மா, நீ சொல்வது நியாயம்தான். இருந்தாலும் நான் ஈசுவரனிடமிருந்து மட்டும் உற்பவிப்பது இன்னொரு தினுசில் எனக்குத் திருப்தி தருவதாகத் இருக்கிறது. எல்லாம் பிரம்மம் என்று எனக்குத் தெரிந்தாலும், அதற்கே நீங்கள் இரண்டு பேரும் எனக்கு இத்தனை ‘டைட்டில்’ கொடுத்தாலும், ஒரு விஷயத்தில் எனக்குப் பக்குவம் வரவில்லை. அதாவது, ஸ்திரீ புருஷ சம்பந்தத்தில் நாம் பிறப்பதாவது, கர்ப்பவாசம் செய்து கீழ்முகமாக ஜனிப்பதாவது என்று இன்னமும் எனக்கு அருவருப்பாகத்தான் இருக்கிறது. பிரம்ம ஞானிக்கு இப்படி இருக்கக் கூடாததுதான். ஆனால் ஏனோ இருக்கிறதே. அதனால் இதைச் சொல்கிறேன். ஆகையால் நீ பெரிய மனசு பண்ணி, உன் பதி மட்டுமே என்னைச் ஜனிக்கச் செய்வதற்கு அநுமதி தர வேண்டும்” என்றார்.
ஆனால் அம்பாளுக்கு மனசு வரவில்லை.
யோசித்துப் பார்த்துக் கடைசியில் ஒரு ‘ராஜி’ க்கு – ‘காம்ப்ரமைஸு’க்கு – வந்தார்கள்.
ஆதியில் பரமேசுவரன் பஸ்மாசுரனுக்கு வரம் தந்திருந்தார். இந்த வர பலத்தால், அவன் யார் தலையில் கைவைத்தாலும் அவர் பஸ்பமாகிவிடுவார்.
வரம் பலிக்கிறதா என்று பரமேசுவரனிடமே பரீட்சை பார்க்க வந்தான் அசுரன். உடனே அவர் அந்தர்த்தானமாகி விட்டார்.
அந்தச் சமயத்தில் அம்பாள் ஏதோ லீலா நிமித்தம் தன்னுடைய ஸர்வக்ஞத்வத்தை மறைத்துக்கொண்டு சாதாரண ஸ்திரீ மாதிரி இருந்தாள். எனவே, திடீரென்று பரமேசுவரனின் சரீரம் மறைந்ததைப் பார்த்ததும் அவளுக்குப் ‘பகீர்’ என்றது. பதிவிரதா ரத்தினமான அவளால் ஈசுவரனின் பிரிவைத் தாங்க முடியவில்லை. அப்போதே அப்படியே உருகிவிட்டாள். யதார்த்தத்திலேயே அவளுடைய சரீரம் உருகி ஒரு ஜலாசயமாக (நீர் நிலையாக) ஆகி விட்டது. அதுதான் சரவணப் பொய்கை.
பிறகு பஸ்மாசுரன் மறைந்து ஸ்வாமி சரீரத்துடன் வந்ததும், அம்பாளும் தன் திவ்விய தேகத்தை எடுத்துக் கொண்டாள். இருந்தாலும் அவளுடைய பதிவிரதா தர்மத்துக்கும் பிரேமைக்கும் அடையாளமாக சரவணப் பொய்கையையும் அழியாமலிருக்கும்படியாக அநுக்கிரகத்தாள். சரவணம் சாட்க்ஷாத் இவள் சரீரம்தான். அது இப்போது நினைவுக்கு வந்தது.
அதனால், ஸனத்குமாரர் அடுத்த ஜெனமாவில் பரமேசுவர தேஜஸாக ஜனித்து விடுவதென்றும், பிறகு அதை அம்பாள் சரவணம் என்ற தன் சரீரத்தில் தாங்கி ஸுப்ரம்மண்ய ஸ்வரூபமாக்கித் தருவதென்றும் முடிவு செய்து கொண்டார்கள்.
இதன்படியே பிற்பாடு ஈசுவரன் தன் நெற்றிக் கண்களிலிருந்து பொறிகளை வெளியிட்டார். ஸனத்குமாரர்தான் இப்படி ஆவிர்பவித்தவர். அந்தத் தேஜசின் உக்கிரத்தை எவராலும் தாங்க முடியவில்லை. முதலில் கங்கை தாங்கப் பார்த்தாள். முடியவில்லை.
அப்போது பிரம்மா அவளிடம், “இதைக் கொண்டுபோய் சரவணத்தில் சேர்த்துவிடு” என்றார்.
“ஆனானப்பட்ட என்னாலேயே தாங்க முடியாத உக்ர ஜ்வாலையை அந்தச் சின்னப் பொய்கை எப்படித் தாங்கும்?” என்று கங்கை அவரைக் கேட்டாள்.
அவர், “சரவணம் என்பது சாக்ஷாத் பராசக்தியின் சரீரமாகும். அது ஒன்றாலேயே ஈசுவர தேஜஸை தாங்க முடியும்” என்றார்.
இதன்படியே கங்கை செய்ய, சரவணபவனாக முருகன் அவதரித்தான். பிறகு ஸனத்குமாரர் கண்ட ஸ்வப்னப்படி தேவர்களுக்கெல்லாம் சேனாதிபதியாகி, அசுரர்களை ஸமூலம் இருந்த இடம் தெரியாமல் சம்ஹாரம் செய்து சர்வ லோகங்களையும் ரக்ஷித்தான் இந்த சரவணபவன். அவருக்கு எத்தனை பெயர்கள் இருந்தாலும் இதுவே ஷடக்ஷரி, ஆறெழுத்து என்று மகாமந்திரமாக இருக்கிறது. சரவணமாக இருக்கும் அம்பாளின் மகிமை!
ஸனத்குமாரர்தான் ஸ்கந்தர் என்று சந்தோக்ய உபநிஷத்திலும் ஸ்பஷ்டமாகச் சொல்லியிருக்கிறது. அதில் அவரே ஞான பண்டிதர் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. ஆனானப்பட்ட நாரத மகரிஷி ஸனத்குமாரரிடம்தான் ஞானோபதேசத்துக்காக வருகிறார். ‘சகல வேதங்களையும், இதிஹாச புராணங்கள், சகல சாஸ்திரங்கள், தேவ வித்யை, பிரம்மவித்யை, பூத வித்யை, நக்ஷத்திர வித்யை என்று ஒன்று பாக்கியில்லாமல் எல்லா விஷயங்களையும் கரைத்துக் குடித்து விட்டேன். ஆனால், இதனாலெல்லாம் வெளி சமாசாரங்கள், மந்திரங்களைத்தான் தெரிந்து கொண்டேனே யொழியத் தன்னைத்தெரிந்து கொள்ளவேயில்லை. ஆத்மாவை அறியாததால் துக்கத்தில்தான் இருக்கிறேன்.
நீங்கள்தான் என்னைத் தூக்கி அக்கரை சேர்க்க வேண்டும்’ என்றார் நாரதர்.
ஸனத்குமாரர், “ஆத்மா எங்கேயோ இருக்கிறது என்று தேடிப்போக வேண்டியதில்லை. கீழும் மேலும், முன்னும் பின்னும், வலது பக்கமும் இடது பக்கமும் எல்லாம் ஒரே ஆத்மாதான். அதைப் பற்றியே ஒருத்தன் தியானித்து தியானித்து, அதுவாகவே ஆகிவிட்டால், அப்புறம் அதிலேயே அவன் எப்போதும் விளையாடிக் கொண்டிருக்கிறான். உண்மையான ஸ்வராஜ்யம் தன்னைத்தானே ஆண்டு கொள்கிற இந்த நிலைதான். இவன்தான் ‘ஸ்வராட்’ – உண்மையான சக்கரவர்த்தி. இந்த உத்தம நிலையை அடைய முதலில் ஆகார சுத்தியில் ஆரம்பிக்க வேண்டும். பிறகு படிப்படியாக சித்தசுத்தி உண்டாகி, மனசு நன்றாக தியானத்தில் நிலைத்து நின்று, எல்லாக் கட்டுக்குள் தெரித்து விழுந்து, ஆத்ம ஸ்வரூபமாகவே இருப்பான்” என்று வழிகாட்டினார்.
‘இப்படியாக பகவான் ஸனத்குமாரர், இருள் கடந்த நிலையைக் காட்டினார். ‘அவருக்குத்தான் ஸ்கந்தன் என்று பேர்; அவருக்குத்தான் ஸ்கந்தன் என்ற பேர்’ என்று உபநிஷத்து இரண்டு தடவை முத்தாய்ப்பு வைக்கிறது.
இருள் கடந்த ஒளி, ஞானாக்னி முருகன்தான். அதைத்தான் சாந்தோக்யம் சொல்கிறது.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share

ரமணரின் கருணைக்கு எல்லை ஏது!

ஒருமுறை… குளித்துவிட்டு வந்ததும் அந்தக் கொடியில் உலர்த்தியிருந்த துண்டை எடுத்தார் ஸ்ரீரமணர். அந்த மூங்கில் கொடியின் ஓரத்தில் குருவிஒன்று கூடு கட்டியிருந்தது. தவிர, குருவியானது நாலைந்து முட்டைகளையும் இட்டிருந்தது போலும்! இவை எதையும் கவனிக்காத ரமண மகரிஷி, துண்டை எடுக்க… அப்போது அவருடைய கை குருவியின் கூட்டில் பட்டது. இதனால், கூட்டில் இருந்து முட்டை ஒன்று கீழே விழுந்ததில் லேசாக விரிசல் உண்டாயிற்று!

இதைக் கண்டதும் ரமணர் பதறிப் போனார். செய்வதறியாது தவித்தார். இந்தக் கூட்டைக் கவனிக்காமல் இருந்து விட்டோமே… என்று கலங்கினார்; கண்ணீர் விட்டார்! அருகில் இருந்தவர்களை அவசரமாக அழைத்த மகரிஷி, ”மூங்கில் கொடியில் குருவியானது, கூடு கட்டியிருப்பதை எவருமே பார்க்கவில்லையா? அப்படி பார்த்திருந்தால், முன்னமே என்னிடம் சொல்லியிருக்கலாமே? கொடியில் இருந்த துண்டை எடுக்கும்போது கூட்டுக்கு ஒன்றும் நேராமல் தவிர்த்திருக்கலாமே…” என்று புலம்பிக் கொண்டே இருந்தார்.

‘எவ்வளவு பெரிய பாவம் செய்து விட்டோம்…’ என்று வருந்தியபடி இருந்த ரமணர், விரிசலுடன் இருந்த முட்டையை எடுத்து, தனது உள்ளங்கையில் வைத்துக் கொண்டார். அந்த முட்டையையே கருணையுடன் பார்த்தார். ‘பாவம் இதன் தாய்! இதனால் அது எவ்வளவு துக்கப்பட்டிருக்கும்? அந்தத் தாய்க் குருவி ஆசையுடனும் அன்புடனும் அடைகாத்த முட்டையை உடைத்துவிட்டதால் என் மீது அது எவ்வளவு கோபமாக இருக்கும்? இந்த விரிசல் சேருமா? சேர்ந்தால் நன்றாக இருக்குமே…’ – மனதுள் நினைத்துக் கொண்டார்.

கருணை மனமும் தாய்மை குணமும் கொண்டு முட்டையிடம் வாஞ்சை காட்டிய ரமணருக்கு, அப்போது உதித்தது யோசனை ஒன்று… விறுவிறுவென துணி ஒன்றை தண்ணீரில் நனைத்துக் கொண்டு வந்தார்; அந்த விரிசல் விழுந்த முட்டையைச் சுற்றிலும் ஈரத்துணியைக் கட்டினார்; அப்படியே பூப்போல மெள்ள எடுத்து வந்து கூட்டுக்குள்ளேயே வைத்தார். அவ்வளவுதான்! அன்று முழுவதும் வேறு எதிலும் ஈடுபடவே இல்லை ரமணர்! குருவிக் கூட்டுக்கு அருகிலேயே அமர்ந்த ரமண மகரிஷி, மனதுள் தோன்றும் போதெல்லாம் எழுந்து, கூட்டுக்கு அருகே போவதும் அந்த துணி கட்டிய முட்டையை எடுத்து கருணை வழிய பார்ப்பதுமாகவே இருந்தார். உள்ளங்கையில் முட்டையை ஏந்தியிருக்கும் வேளையில், அவருடைய மனம், ‘இந்த விரிசல் ஒட்டிக்கொள்ள வேண்டும்; முட்டையானது உயிராக மலர வேண்டும்’ என்றே சிந்தித்தது.

ஞான குருவின் எண்ண அலைகள், அந்த முட்டை விரிசலிலேயே இரண்டறக் கலந்திருந்தது. ஏதோ மிகப் பெரியதொரு குற்றத்தைச் செய்துவிட்டது போல் கூனிக் குறுகியவர், அந்தத் தவறுக்கு பிராயச்சித்தம் தேடும் விதமாக குருவிக் கூட்டுக்கு அருகில் இருந்ததைக் கண்ட அன்பர்கள், ‘நம்முடைய மகான் செய்யும் இந்தக் காரியம் கிட்டத்தட்ட தவத்துக்கு இணையானதுதான்’ என உணர்ந்து சிலிர்த்தனர்.

அடுத்தடுத்த நாளும் இது தொடர்ந்தது. துணியை தண்ணீரில் நனைப்பதும், அந்த முட்டையில் கட்டி வைப்பதும், அருகில் இருந்தபடியே அடிக்கடி வாஞ்சையுடன் பார்த்து வருவதுமாக இருந்தார் ஸ்ரீரமணர்! ஏழாம் நாள்… துணியை நீரில் நனைத்து கட்டுவதற்காக, முட்டையை எடுத்தவர் அப்படியே வியந்து நின்றார். அவர் முகம் முழுவதும் நிம்மதி; ஆம்… அந்த விரிசலைக் காணோம்!

அன்பர்களை அழைத்த ரமணர் சந்தோஷத்துடன், ”இங்கே பார்த்தீர்களா? முட்டையில் விரிசல் இருந்த சுவடுகூட தெரியவில்லை. தாய்க் குருவிக்கு இது தெரிந்தால், எத்தனை சந்தோஷப்படும்? இனி ஒரு குறையுமில்லை. நல்லவேளை… மிகப் பெரிய பாவத்துக்கு ஆளாக இருந்த என்னை, இறைவன் காப்பாற்றி விட்டான்” என்று கூறி சின்னக் குழந்தை போல் பரவசமானார் ரமணர்.

சில நாட்கள் கழிந்த நிலையில், மூங்கில் கொடியின் ஓரத்தில் இருந்த குருவிக் கூட்டை எட்டிப் பார்த்த ரமண மகரிஷியின் மனமெல்லாம் நிறைந்தது. அந்த முட்டை குஞ்சாகப் பொரிந்து, உயிராகக் காட்சி தந்தது.
குருவிக் குஞ்சை அப்படியே எடுத்து உள்ளங்கையில் ஏந்திக் கொண்டார் ரமணர்; அதன் உடலை மெள்ள வருடிக் கொடுத்தார்.

ஆஸ்ரமத்து பணியாளர்கள் மற்றும் அன்பர் பெருமக்களை அழைத்தவர், ”பார்த்தீர்களா குழந்தையை! எவ்வளவு அழகாக இருக்கிறது!” என்று எல்லோரிடமும் குருவிக் குஞ்சைக் காட்டி குதூகலித்தார். தாய்க் குருவி, முட்டையை அடைகாத்ததோ இல்லையோ… அந்த தாய்க் குருவியின் ஸ்தானத்தில் இருந்தபடி முட்டையை அடைகாத்தார் ரமணர்.

‘நான்’ எனும் கர்வத்தையும் சிந்தனையையும் ஒழித்து, பார்க்கும் உயிரில் எல்லாம் இறைவனைக் கண்ட ரமணரின் கருணைக்கு எல்லை ஏது?!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

படித்ததில் பிடித்தது ......... !!

சாதத்துடன் பக்தி இணையும்போது அது பிரசாதமாகிவிடும்.
பட்டினியுடன் பக்தி சேரும்போது அது விரதமாகிவிடும்.
தண்ணீருடன் பக்தி சேரும்போது அது புனித நீராகிவிடும்.
பயணத்துடன் பக்தி சேரும்போது அது யாத்திரையாகிவிடும்.
இசையுடன் பக்தி சேரும்போது அது கீர்த்தனையாகிவிடும்.
பக்தியில் வீடு திளைக்கும்போது, அது கோயிலாகிவிடும்.
செயல்களுடன் பக்தி சேரும்போது, அது சேவையாகிவிடும்.
வேலையுடன் பக்தி சேரும்போது, அது கர்மவினையாகிவிடும்.
ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும்போது அவன் மனிதனாகிவிடுகிறான்
மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகிவிடுகிறான்.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share
ஆண்களுக்கு ஓர் இரவு சிவராத்திரி, பெண்களுக்கு ஒன்பது நாள் நவராத்திரி

நமது இந்து மதத்தில் எத்தனை எத்தனையோ பண்டிகைகள். ஒவ்வொன்றும் கொண்டாடப்படுவதும் ஒரு தனி விதம். இந்த பண்டிகைகளை எல்லாம் குட்டி பண்டிகைகள் என்று சொல்வோமானால் இதற்கெல்லாம் ஒரு தாய் தான் நவராத்திரி விழா.

இந்த பரந்த பாரத தேசத்தில் எல்லா பக்கங்களிலும் கொண்டாடப் படுவது நவராத்திரி.

“இது புரட்டாசியில் வரும். சரத் ருது என்று மாரிக்காலத்துக்கு முன்பு ரிஷிகள், முனிவர்கள் விரதமிருக்கும் சாதுர்மாஸ்ய சமயத்தில்
(AUTUMN ) வரும் பண்டிகையாதலால் சாரத நவராத்திரி என்றும் பெயர். சாரதா என்பது சரஸ்வதிக்கும் ஒரு பெயர். நவராத்ரியில் மும் மூன்று நாள் துர்க்கா, லக்ஷ்மி சரஸ்வதியை கொண்டாடுவது.

மூக பஞ்சசதி என்கிற ஸ்தோத்ரத்தில் சரஸ்வதியை ''விமலபதி'' என்று வர்ணிப்பது அவளது வெண்ணிற ஆடையை குறிக்கும். ஆகாயம் நிர்மலமாக இருக்கும்போது தோன்றும் சந்திரன் ''சரத் சந்திரன்'' என்று அழைக்கப் படுகிறான். சரத் கால நிலா. வெண்மை அமைதியை குறிக்கும். பரிசுத்தத்தை வெளிப்படுத்தும். அரசியல் வாதிகள் பலபேர் வெள்ளை ஆடை உடுத்துகிறார்கள். 'மனதும் இதயமும் சுத்தம்' என்பதற்காக கூட இருக்கலாம். .

‘ஒரு வேடிக்கை என்னவென்றால் இந்த நவராத்திரி சமயம் இந்தியா பூரா வானிலை ஒரே மாதிரி இருக்கும். தென் மேற்கு பருவக்காற்று முடிந்து கிழக்கே வட கிழக்கு பருவக்காற்று தலையெடுக்கும் சமயம். குளிர்ச்சி நிறைய காத்திருக்கும். நமது தேசத்தில் பல நகரங்களில் உஷ்ணமானி அதிக பக்ஷமாக 85°F க்கு ஒரு பத்து சதவிகிதம் மேலேயோ கீழேயோ தான் காட்டும். அனலும் இல்லை, எலும்பைத் துளைக்கும் குளிரும் இல்லை. மித உஷ்ணம். சட்டை இன்றி பூஜை செய்ய தோதான சமயம்..

மார்ச் ஏப்ரல் மாதத்தின் போது வசந்த ருதுவில் வசந்த நவராத்திரி கொண்டாடுவது கோவில்களில் மட்டும் தான். இந்த சாரத நவராத்திரி தான் எல்லா வீடுகளிலும் கோவில்களிலும் பொது இடங்களிலும். (இப்போதெல்லாம் பேங்க் களில் கூட கொலு), நவராத்ரி பற்றி நிறைய புராண கதைகளும் உண்டு. அம்பாளை அலைமகள், கலைமகள், மலைமகளாக வழிபடும் விழா.

நமது ஊரில் ஆயுத பூஜை விசேஷம். 10வது நாள் தசமி, விஜய தசமி. தொட்டதெல்லாம் பொன்னாகும், வெற்றி கிட்டும் நாள். இந்த பத்து நாள் தான் தசரா என்று பத்து இரவுகளாக எல்லா இடத்திலும் கோலாகலமாக கொண்டாடுகிறார்கள். மைசூரில் கேட்கவே வேண்டாம். கூட்டம் அம்மும். ஸ்பெஷல் ரயில் விடுவார்கள். மைசூர் மகாராஜா அரண்மனை இந்திர லோகம். சாமுண்டி என்கிற சக்தி துர்கா தேவதை மைசூர் மகாராஜா வம்ச குல தெய்வம் என்பதால் அதி விசேஷம். யானை, குதிரை ஊர்வலங்கள் சாமுண்டி மலைவரை நீளும். வாண வேடிக்கை, பளிச் பளிச் அலங்கார தீபங்கள். துர்கா தானே மகிஷாசூரனை ஒன்பது நாள் தவமிருந்து சம்ஹாரம் செய்தவள். அவளைச் சிறப்பாக
கொண்டாட வேண்டாமா? .

கிழக்கே வங்காளத்தில் காளி பூஜை, துர்கா பூஜை மும்முரமாக நடக்கும். பழைய காலங்களில் ரத்தம் நிறைய ஆறாக ஓடும். உக்ர தேவதைக்கு பலி நிறைய எருமைகள். அதற்கும் முந்தி எப்போதோ மனிஷனையே பலியாக கொடுத்திருக்கிறார்கள். கடைசி ஐந்து நாள் உற்சவங்கள் பிரமாதமாக நடக்கும். மேற்கே எப்படி 'கணபதி பப்பா மோரியா' மராத்தியர்களை சுண்டி இழுக்குமோ அதுபோல் கிழக்கே காளி மாதா வங்காளியர்கள் அனைவரையும் கட்டிப்போடுவாள்.

வடக்கே ராம் லீலா. பாகவதம் பிரகாரம் ராமர் சாரத நவராத்திரி பூஜைகள் செய்து பலம் பெற்று ராவணனை முடித்தார் என்று சொல்லும். வடக்கே ராம் லீலாவில் பெரிய ராவணன் கும்பகர்ணன் பொம்மைகள் விழா முடிவில் சிதைக்கப்படும். எரிக்கப்படும்.

குஜராத் பகுதியில் நவராத்திரி நாட்களில் நிறைய பேர் கர்பா, டாண்டியா நாட்டியங்கள் நடனங்கள் கலந்து ஆடுவார்கள். கோலாட்டம் கும்மி மாதிரி. சந்தோஷம் முகத்தில் கொப்புளிக்கும் அனைவருக்கும். இனிப்பு பக்ஷணங்களுக்கு பஞ்சமே இல்லை. வெளிநாடுகளில் வாழும் வடக்கத்தியர்கள் இந்த நாளை ஒன்று சேர்ந்து சந்தோஷமாக கொண்டாடுவது பற்றிய படங்கள் நிகழ்ச்சி தொகுப்புகள் பார்த்திருக்கிறேன். வயதே வித்தியாசம் கிடையாது இதில். பாட்டு புரியாது நமக்கு. காதுக்கு என்னமோ மாதிரி புரிபடாமல் இருக்கும். தலை, கை மட்டும் ஆடும். பின்பாட்டு ஒலி நாடாவில் எல்லோரும் கேட்கும்படியாக வைத்து ஆடுவார்கள்.ஆரம்பத்தில் மெதுவாக சாதுவாக தோன்றும் பாட்டு போகப் போக குதிரை வேகம், மான் வேகம், பெற்று அனைவரும் எம்பி எம்பி குதித்து காற்றில் பறப்பது போல் சுற்றி ஆடுவார்கள். பாட்டும் சூடு பிடிக்கும்.

நம் ஊர் பழக்கம் வேறே மாதிரியானது. கொலுப்படிகள் ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொன்று, என்று ஒற்றைப் படையாக வீட்டில் இடத்துக்கு தகுந்த அளவில் நிறைய பொம்மைகளோடு. படிகள் கண்டான் முண்டான் சாமான்கள், அலுமினிய, இரும்பு, மர, அட்டைப் பேட்டிகள், பெஞ்சு, மேஜை, ஸ்டூல் இதெல்லாம் போட்டு அடுக்கி, மேலே புடவை, வேஷ்டி, அல்லது பெட்ஷீட் மூடப்பட்டு படியாக காட்சி அளிக்கும். சில வீடுகளில் கொலுப்படி வாங்கி அதை அலங்கரித்து விளக்கெல்லாம் போட்டு தரையில் மண்ணில் பார்க், அமைத்திருப்பார்கள். என் நண்பர் வீட்டில் ஒரு ரயில் சுற்றி சுற்றி வரும்.

துர்க்கா ,லக்ஷ்மி, சரஸ்வதி பூஜை மூன்று மூன்று நாள், அடுத்து ஆயுத பூஜை. அன்று பழைய சைக்கிள் கூட குளித்து சந்தனம் குங்குமம் பூ வைத்துக் கொள்ளும்.

மரப்பாச்சி தம்பதிகள், ஒரு கலசம், ஊசி கூட வைத்து பூஜை நடக்கும். சகல பொம்மைகளும் இந்த படிகளில் காணலாம். செட்டாக நாதஸ்வர ஊர்வலம், கல்யாண ஜானவாச ஊர்வலம், தசாவதாரம், நாரதர், வண்ணான், நாய்க்குட்டி, மளிகை கடை செட்டியார் செட்டியாரம்மா, ராஜா ராணி, பொம்மைகள் கண்ணைப் பறிக்கும். கண்டபடி பொம்மைகளை வைக்கக் கூடாது. அதற்கு ஒரு நியமம் உண்டு. அதன் படி தான் படிப்படியாக வைப்பார்கள். சிறந்த கொலுவுக்கு இப்போதெல்லாம் பரிசுகள் கொடுக்கிறார்கள். பையனாக நான் தினமும் சாயந்திரம் சுண்டல் சேகரிக்க பல வீடுகள் சென்றிருக்கிறேன்.

சில வீடுகளில் தேவி பாகவதம் வாசிப்பார்கள். விஜய தசமிகளில் அழுதுகொண்டே பள்ளி போக தொடங்கும் குழந்தைகள் ஜாஸ்தி. ஆயுத பூஜா அன்று தொழிற்சாலைகளில் இனிப்பு காரம் விநியோகம் நடக்கும். அலுவகங்களில் எல்லோரும் பை நிறைய பொறி கடலை, நாட்டு சர்க்கரை, பழங்கள், இனிப்பு வகைகளோடு வீட்டுக்கு வந்திருக்கிறோம்.

விஜய தசமி அன்று தான் அர்ஜுனன் ப்ருஹன்னளையாக இருந்தவன் தனது காண்டீவத்தை விராட தேசத்தில் அஞ்ஞாத வாசம் முடிந்து வன்னி மரக்கிளையிலிருந்து மீண்டும் எடுக்கிறான். சமீபத்தில் தெலுங்கில் நர்த்தனசாலா என்ற படம் யூ ட்யூப் பில் பார்த்தேன். என்.டி . ராமராவ் ப்ரஹன்னளையாக பெண் வேஷம் தரித்து அவருக்கு பாலமுரளி கிருஷ்ணா பாடிய ' கலளித ராக சுதாராஸ ஒரு அற்புத பாடல் இன்னும் காதில் ஒலிக்கிறது. ஒரு அருமையான அழகு நடிகர் ராமராவ். அவரை நன்றாக பயன் படுத்தியிருக்கிறார்கள் அந்த காலத்தில்.
áந்த பாடலின் லிங்க் கொடுத்திருக்கிறேன். கேட்டுப் பாருங்கள் என்பதை விட ராமராவின் அழகு முகத்தை காண்பது சுவாரசியமாக இருக்கும். https://www.youtube.com/watch?v=ehSC4t9_pgc இந்த லிங்கை இணைய தளத்தில் பார்க்க முடிந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.

மஹா பெரியவா சொல்வார் ''என்னதான் துர்கா, லக்ஷ்மி சரஸ்வதியாகவோ, முப்பது முக்கோடி தெய்வங்களாக வழிபட்டாலோ, கடைசியில் அது அத்தனையும் அந்த சக்தி, பராசக்தி ஒன்றே தான். லலிதா ஸஹஸ்ர நாமத்தில் தேவியை ''சிருஷ்டி கரதீ ப்ரஹ்ம ரூபா '' என்று சொல்லியிருக்கிறது. படைக்கும் தொழில் இது. காக்கும் தெய்வமாக ''கோபித்ரி, கோவிந்த ரூபிணி'' என்றும் அழிக்கும் தெய்வமாக ''சம்ஹாரிணி, ருத்ர ரூபிணி'' என்று சொல்கிறது. லக்ஷ்மி அஷ்டோத்ரம், சரஸ்வதி அஷ்டோத்ரங்கள் அவளை '' பிரம்மா விஷ்ணு சிவாத்மிகாய'' என்று முத்தொழில் புரியும் முத்தேவிகளாக எல்லாம் அந்த பராசக்தி ஒன்றே '' என உரைக்கிறது.

“ நவராத்திரியின் போது கன்யா பூஜைகள் நடத்துவார்கள். லக்ஷ்மி பிருகு முனிவர் மகளாக பிறக்கிறாள். அதனாலேயே அவளுக்கு பார்கவி என்று பெயர். காத்தியாயனர் மகளாக பார்வதி அவதரித்து காத்யாயனி என்று பெயர். துர்கா சுக்தம் இதை சொல்கிறது.

கடவுளை குழந்தையாக, சிறுமியாக வழிபடுவது நமது மனத்தில் குழந்தைகளிடம் காணும் கள்ளம் கபடமற்ற எளிமை, காம, குரோத துக்க மார்ச்சர்யங்கள் இல்லாமையை, உண்டாக்கவே தான். உபநிஷங்கள் குழந்தையாக இரு என்று இதைத்தான் சொல்கின்றன’.

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: Aanmeekam...

Post by vgovindan »

அரசியல் ரீதியாக இந்தியா உருவாகி நூறாண்டுகள் கூட ஆகவில்லை. ஆனால் பண்பாட்டு ரீதியாக எப்படி இந்த நாடு ஒன்றானது - எத்தனை மொழிகள் - எத்தனை அரசுகள் - ஆனால் பண்பாடு ஒன்று - என எண்ணி எண்ணி வியக்கின்றேன்!

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A Share
குளிகை பிறந்த கதை::::
ராவணன் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தான். காரணம் அவன் தந்தையாகப் போகிறான். குல குருவான சுக்கிராச்சாரியாரிடம் சென்றான்.
"குருவே! எனக்கு பிறக்க போகும் குழந்தை, பல வித்தைகளில் ஜித்தனாகவும் (வெற்றி வீரன்) எவராலும் வெல்ல முடியாத வலிமை கொண்டவனாக திகழவும் எந்த நேரத்தில் குழந்தை பிறந்தால் நல்லதென கணித்து சொல்லுங்கள்,'' என்றான்.
“ராவணா! நல்ல கிரகங்கள் எல்லாம் ஒரே ராசி கட்டத்தில் வந்தால் நல்லது. ஆனால், அது எப்போது வருகிறது என யோசித்து யோசித்து தலையே வெடித்துவிடும் போல் இருக்கிறது. சுபகிரகங்களை ஒட்டுமொத்தமாக சிறையில் அடைத்தால் என்ன என்று கூட தோன்றுகிறது,'' என்றார் வேடிக்கையாக.
அப்படி சொன்னது அவருக்கே வினையாகி விட்டது.
“அவ்வளவு தானே! நவக்கிரகங்களையும் ஒன்றாக சிறையில் அடைத்து விடுகிறேன். அதேநேரம், கிரகங்களில் நீங்களும் ஒருவர் என்பதால் உங்களையும் சிறைப்பிடிக்கிறேன்,'' என்றான்.
சுக்கிரன் எனப்படும் சுக்கிராச்சாரியாரையும், மற்ற கிரகங்களையும் சிறையில் தள்ளினான். தங்கள் நிலைக்கு காரணம் சுக்கிராச்சாரியார் என்பதால் அவரை நவக்கிரகங்களும் திட்டித் தீர்த்தன.
"உங்களுக்கு திறமை இருக்கிற அளவுக்கு புத்தி வேண்டாமா? அவன்தான் ஆணவக்காரன் ஆயிற்றே! தன்னை விட உயர்ந்தவன்
இருக்கக் கூடாது என்று நினைப்பவன். அவனிடமா நம்பெருமைகளைச் சொல்வது? அறிவு களஞ்சிய மய்யா நீர்,'' என்றார் சனீஸ்வரர்.
"நான் என்னவோ சொகுசாக இருப்பதை போலவும், நீங்கள் மட்டும் துயரப்படுவதை போலவும் அல்லவா பேசுகிறீர்கள்.? வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைப்பவன் என்பதை சற்று மறந்து ஆலோசனை சொன்னேன். இப்போது
அனுபவிக்கிறேன்,'' என்றார் சுக்கிரன்.
இதனிடையே, மண்டோதரி பிரசவ வலியால் துடித்தாள். சுகப்பிரசவம் ஆவது சிக்கல் என்று வைத்தியர்கள் சொன்னதாக சிறைக்காவலர்கள் பேசியது கிரகங்கள் காதில் விழுந்தது.
"சுக்கிரச்சாரியாரே! எல்லா கிரகங்களும் ஒன்று சேர்ந்தால், அதை "யுத்த கிரகம்' என்பார்கள். அப்படி இருக்கும்போது எதற்காக இப்படி ஒரு யோசனை சொன்னீர்கள்? இப்போது பாருங்கள்! மண்டோதரி பிரசவிக்க முடியாமல் வலியால் வேதனைப்படுகிறாள். அவளுக்கோ அல்லது குழந்தைக்கோ ஏதாவது பாதிப்பானால் ராவணன் துளைத்து விடுவான் நம்
அனைவரையும்,'' என்றார் சனீஸ்வரர்.
"அசுரத் தலைவனிடம் இருந்து தப்பிக்க வழியிருக்கிறதா?'' என்றார் பிரகஸ்பதியான குரு.
"புதிதாக ஒரு உயிரை உண்டாக்கி, அதை ஒரு நேரத்திற்கு அதிபதியாக்கினால், ராவணனின் வாரிசு பிழைக்கும்,'' என்ற சனீஸ்வரர் தியானத்தில் அமர்ந்து, தன் உடலில் இருந்த சக்தியை திரட்டி, ஓர் அழகான குழந்தையை உருவாக்கினார்.
குழந்தைக்கு "குளிகன்' என்று பெயரிட்டார்.
இவன் பிறந்தவுடனேயே மண்டோதரிக்கு சுகப்பிரசவம் ஆகிவிட்டது.
"இந்த அதிசயம் எப்படி நிகழ்ந்தது?'' என சனீஸ்வரரிடம் மற்றவர்கள் கேட்டனர்.
"யுத்த கிரக வேளையில், குளிகனுக்குரிய குளிகை நேரமாக அது அமைந்தால் பிரச்னையில்லாமல் இருக்கும். வானில் இருக்கும் மேகத்தை காற்று கலைத்து விடுவது போல், குளிகன் பிறந்த நேரத்தில் மண்டோதரிக்கு சுகப்பிரசவம் ஆகிவிட்டது,'' என்றார் சனீஸ்வரர்.
குளிகை நேரத்தில் ஒரு செயலை தொடங்கினால் வளர்ந்து கொண்ட போகும். கடன் வாங்குவது, பழைய கட்டடங்களை இடிப்பது, இறந்தவர் உடலை எடுப்பது போன்ற காரியங்களை இந்நேரத்தில் செய்யக்கூடாது. கடனை திருப்பி கொடுப்பது, வீடு, நகை வாங்குவது பற்றி பேச்சு நடத்துவது ஆகிய சுபநிகழ்ச்சிகளை செய்தால் நன்மை ஏற்படும்.

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: Aanmeekam...

Post by arasi »

Thanjavooran,
Your 'a share' brings many moments of wonderful reads. Thanks to you for bringing them and to the source, of course!

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share
அருமையான ஒரு கிருஷ்ண தந்திர யுக்தி. பொறுமையிருந்தால் படியுங்கள்...
ஸ்ரீ கிருஷ்ணன்
மஹாபாரதக் கதையின் கதாநாயகன் யார் என்று கேட்டால், விதவிதமான பதில்கள் கிடைக்கும் பீஷ்மர், அர்சுனன், பீமன், கர்ணன் என்று ஆளுக்கு ஒரு பெயரைச் சொல்வார்கள்.
ஆனால் காவியத்தை நன்றாகப் படித்து, ரசித்து, அதைப் பற்றிச் சிந்தித்தவர்களுக்கு ஒரே ஒரு கதாநாயகன் தான் மனதில் தோன்றுவார். யார் அவர்.?
சாக்ஷாத் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாதான்.

மஹாபாரதக் கதையின் முடிவில் வருவது பாரதப் போர். 18 நாள் யுத்தம். வெற்றி பாண்டவர்களுக்கு என்பது தெரிந்த விஷயம்.
எப்பேர்ப்பட்ட மஹா ரதர்கள், கெளரவர்கள் பக்கத்தில் —
பீஷ்மர், துரோணர், கர்ணன், துரியோதனன், ஜயத்ரதன் என்று மிகப் பெரிய பட்டியல். இவர்களை எப்படிப் பாண்டவர்கள் வென்றார்கள்..? ஒவ்வொருவருடைய வீழ்ச்சிக்குப் பின்னாலும் ஸ்ரீ கிருஷ்ணனின் "வேலை" இருந்திருக்கிறது.
ஸ்ரீ கிருஷ்ணன் இல்லாவிட்டால் பாண்டவர்கள் வெற்றி பெற்றிருக்கவே முடியாது.

இதோ ஒரு கேள்வி:
கீழ்க்கண்ட வீரர்களில், யாருடைய வீழ்ச்சிக்காகக் ஸ்ரீ கிருஷ்ணன் தீட்டிய திட்டம், Master Plan என்ற பாராட்டைப் பெறும்.?

1) ஜயத்ரதன்,
2) பீஷ்மர,
3) துரோணர் கர்ணன்,
4) ஜயத்ரதன்,
5) துரியோதனன்
6) விதுரர்...

அநேகப் பேர் கர்ணனின் வீழ்ச்சிக்குக் ஸ்ரீ கிருஷ்ணன் தீட்டிய யுக்தி தான் சரி என்று நினைப்பார்கள். இன்னும் சில பேர் ஜயத்ரதனைக் கொல்ல சூரியனை மறைத்தது தான் உயர்ந்தது என்று நினைக்கலாம். இதே மாதிரிதான், பீஷ்மர், துரோணர் - இவர்களுக்கு எதிராக எடுத்த முயற்சிகள்.
ஆனால் சரியான விடை விதுரருக்காகத் தீட்டிய திட்டம்தான்.

இது என்ன புதுக் கதை? விதுரர் எங்கே சண்டை போட்டார்.? அவரை வீழ்த்தக் ஸ்ரீ கிருஷ்ணன் ஏன்
திட்டம் போட வேண்டும்.?
கேள்விக்கு விடை சொல்லும் முன் ஒரு சிறு பயணம் .

யார் இந்த விதுரர்.?
விதுரர், திருதராஷ்டிரருக்கும், பாண்டுவுக்கும் தம்பி (Step Brother) என்றும், பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும்
சித்தப்பா என்றும் அவருடைய தாயார் ஒரு பணிப்பெண் என்றும் அநேகமாக எல்லோருக்கும் தெரியும். மகாநீதிமான், தருமத்திலிருந்து சிறிதளவும் நழுவாதவர் அவர், என்பது மஹாபாரதத்தில் நடந்த அநேக சம்பவங்களிலிருந்து தெரியவருகிறது.
கெளரவர் பக்கத்திலிருந்து போராடும் பெரிய வீரர்களை வீழ்த்தக் ஸ்ரீ கிருஷ்ணன் போட்ட திட்டங்கள் அவ்வளவு கடினமானது இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு பலஹீனம் . பீஷ்மருக்குப் பெண்களுடன் போராட
முடியாத மனநிலை. துரோணருக்குப் புத்திர பாசம்.
கர்ணனுக்கு அவனுடைய தயாள குணம். மேலும் இவர்கள் எல்லாரும் யுத்தத்தில் மரணம் அடைய வேண்டும் என்று நியதி.
சாஸ்திரம் சொல்கிறது. எல்லா சமயங்களிலும் அப்பாமார்களும், சகோதரர்களும், கணவன்மார்களும்,
மச்சினர்களும், பெண்களை கெளரவித்து, அவர்களை உயர்ந்த நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
மேலே சொன்ன வீரர்கள் யாராவது இதன்படி நடந்துகொண்டார்களா.?
திரெளபதியை துச்சாதனன் துகில் உரியும்போது வாய் திறக்காமல் மெளனமாகத்தானே இருந்தார்கள்அதற்கான தண்டனை — யுத்தத்தில் மரணம்.
சரி, இப்போது கேள்வி. விதுரருக்காக ஏன் திட்டம் தீட்ட வேண்டும்.?
விதுரர் அப்பழுக்கில்லாதவர். மற்ற பெரியவர்கள் செய்த பிழையை அவர் செய்யவில்லை. துணிந்து, துரியோதனனையும் அவன் சகோதரர்களையும் கண்டித்து திரெளபதிக்காக வாதாடினார். அதனால் தருமம் தவறாத அவரை எப்படி யுத்தத்தில் சாகடிக்க முடியும்.
மேலும் பாண்டவர்கள் பக்கத்தில் . வ் புத்திரர் (எமனின் மகன்) எதிர்பக்கம், அவர் தந்தை - தர்மராஜர் (விதுரர்) சமநிலை சரியாக வராதே.?
எவ்வளவு அவமானப்பட்டாலும் யுத்தம் என்று வந்தால், மற்ற பெரியவர்கள் - பீஷ்மர், துரோணர் - போல் விதுரரும் செஞ்சோற்றுக் கடனுக்காக., துரியோதனனுக்காகத்தானே போராட வேண்டிய கட்டாயத்துக்குள்ளாவார். முன்னமேயே சொல்லியிருக்கிறோம். அவர் வில் எடுத்தால் அவரை ஜெயிக்கவே முடியாது. இப்பொழுது புரிகிறதா.?
விதுரர், கெளரவர்கள் பக்கம் நின்று போரிட்டால் பாண்டவர்கள் வெற்றி பெறுவது நிச்சயம் இல்லை.
மஹாபாரதப் போரின் முடிவே வேறே மாதிரி ஆகிஇருக்க வாய்ப்பு உண்டு. அதனால் எல்லோரையும்விட
மிக முக்கயமான நபர், விதுரர்தான். அவர் கெளரவர்களுக்காக நிச்சயம் போராடக் கூடாது.
எப்படி தடுப்பது.?
இதோ ஸ்ரீ கிருஷ்ணனின் யுக்தி ....
ஸ்ரீ கிருஷ்ணா், விதுரரை கெளரவர்களிடமிருந்து விலக்கிவைக்கப் போட்ட திட்டம், ரொம்ப ரொம்ப சிம்பிள். Human Psychologyஐ நன்கு பயன்படுத்தி
செயல்பட்டார். எல்லோருக்கும் தெரிந்த கதை ஸ்ரீ கிருஷ்ணன் தூது. பாரதப் போரைத் தடுக்க, ஸ்ரீ கிருஷ்ணன் பாண்டவர்களுக்காகத் தூது சென்றான். அவன் வருகிறான் என்று தெரிந்த திருதராஷ்டிர மகாராஜா தடபுடல் வரவேற்பு எற்பாடு செய்திருந்தார்.
சபைக்குச் செல்லும் நாளுக்கு முந்தின
இரவு, ஸ்ரீ கிருஷ்ணன் யார் வீட்டில் தங்குவார் என்ற கேள்வி பிறந்தது. நான், நீ என்று எல்லோரும் அவரை அழைத்தார்கள். ஸ்ரீ கிருஷ்ணரோ., “நான் தூதுவன். என் வேலை வெற்றி பெற்றால்தான் உங்கள் உபசரணைகளை ஏற்றுக்கொள்வேன். இப்போது இந்த இரவில் நான் விதுரர் வீட்டுக்குச் சென்று என் பொழுதைக் கழிக்கிறேன்” என்றார். விதுரருக்கு மகா சந்தோஷம். தனக்கு பிரியமான கிருஷ்ணன் தன் விருந்தினராக
வருவதைப் பெரும் பாக்கியமாகக் கருதினார். இரவு பொழுது நன்றாகவே இருந்தது — விதுரருக்கும் கிருஷ்ணருக்கும்.
மறுநாள், அரச சபையில் ஸ்ரீ கிருஷ்ணன் பாண்டவர்களுக்காக வாதாடினான். துரியோதனன் ஒரு ஊசி முனை
நிலத்தைக்கூடப் பாண்டவர்களுக்குக் கொடுக்க முடியாது என்று சொல்லி கிருஷ்ணனையும் அவமதித்துப் பேசினான்.
கிருஷ்ணனும் "யுத்தம் நிச்சயம்" என்று சொல்லிவிட்டு பாண்டவர் முகாமுக்குத் திரும்பினார். திரும்பும்முன்,
கிருஷ்ணருடைய சாரதி கேட்டான். சுவாமி, எந்த நோக்கத்தில் நீங்கள் விதுரர் மாளிகையில் தங்க நிச்சயத்தீர்கள்.?” என்றான்.
கிருஷ்ணா் சொன்னார், என் மனதில் ஒரு திட்டம் இருக்கிறது. அது நடக்குமா.? என்பது இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரியும்” என்று சிரித்தார்.
கிருஷ்ணன் சென்ற பின் துரியோதனன் சபையில் எல்லோரும் அவனிடம் கெஞ்சி, கிருஷ்ணா் பேச்சைக் கேட்டு யுத்தத்தை தவிர்க்க வேண்டும் என்று வாதாடினார்கள். அதில் விதுரர் குரல் ஓங்கி ஒலித்தது.
ஏற்கனவே துரியோதனனுக்கு விதுரர்மேல் ஒரு கடுப்பு.
அவர் பாண்டவர்கள் கட்சி என்று ஒரு நினைப்பு. போதாக்குறைக்கு விதுரர் பாண்டவ தூதரான கிருஷ்ணனை தன் வீட்டில் உபசாரம் செய்தது. விதுரர் பேச்சைக் கேட்டவுடன், துரியோதனனுக்குக் கோபம் பொத்துக் கொண்டுவந்தது. என்ன பேசுகிறோம் என்ற நினைப்பில்லாமல் நாக்கில் நரம்பின்றி விதுரரை அவமானப் படுத்திப் பேசினான். குறிப்பாக, அவரை ‘தாசி புத்திரன்’ என்று திட்டித்தீர்த்தான்.
(ஏற்க்னவே இருந்த மாண்டவ்யர் சாபம் முற்றிலும் பலித்து விட்டது)
விதுரருக்கு கோபம், வருத்தம். சபையோர்கள் நடுங்க சபதமிட்டார். எனக்கு இங்கே இனிமேல் வேலையில்லை. அழிவு காலம் நெருங்கி கொண்டிருக்கிறது. என்னை அவமானப் படுத்திய இந்த துரியோதனனுக்காக நான் என் வில்லை எடுத்துப் போராட மாட்டேன். அதே சமயம் நான் பாண்டவர்கள் பக்கமும் செல்ல மாட்டேன்” என்று சொல்லித் தன்னுடைய வில்லை இரண்டாக உடைத்துவிட்டுச் சபையிலிருந்து வெளியேறினார்.
யுத்தம் முடியும்வரை அவர் தீர்த்த யாத்திரையிலிருந்து திரும்பவில்லை என்பது வேறு கதை.
இப்பொழுது உங்களுக்கு
புரிந்து இருக்கும்
ஸ்ரீ கிருஷ்ணன், விதுரர் வீட்டில் தங்காமல் இருந்தால்,
விதுரர் வில்லை உடைத்து வெளியேறியிருப்பாரா.? துரியோதனனுக்காகப் போராட வேண்டிய ஒரு கட்டாயம் அவருக்கு வந்திருக்கும் அல்லவா.?
விதுரர் வைத்திருந்த வில் மஹாவிஷ்ணுவின் வில். கோதண்டம் எனப்படும் அந்த வில்லை எவராகவும் வெல்ல முடியாது. அர்ஜுனன் கையில் உள்ள வில் பிரம்மாவுடையது. காண்டீபம் என்பது அதன் பெயர். போர் என்று வந்து விதுரர் கோதண்டத்துடன் வந்து நின்று விட்டால் ஆனானப்பட்ட அர்ஜுனனால் கூட தன் வில்லான காண்டீபம் கொண்டு அவரை வெல்ல முடியாது.! இதனை அறிந்திருந்த ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, தான் விதுரர் மாளிகையில் தங்கி, துரியோதனனுக்கு சினமூட்டி அவனை அப்படிப் பேச வைத்து., விதுரர் வில்லை முறிக்க வைத்து விட்டார். இதுவும் பாண்டவர்களுடைய வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்து விட்டது..!!
இதுதான் ஸ்ரீ கிருஷ்ணனுடைய மஹா தந்திர யுக்தி.....

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share
விஷ்ணு சஹஸ்ரநாமம் பிறந்த நாள் இன்று!

பீஷ்ம ஏகாதசி - (20.1.16)

குருக்ஷேத்திரப் போரில் சிகண்டியால் வீழ்த்தப்படும் பீஷ்ம பிதாமகர், உத்தராயண புண்ணிய காலத்தில் உடலைத் துறக்க விருப்பம் கொண்டவராக, அர்ஜுனன் தன் கணைகளால் உருவாக்கிய அம்புப் படுக்கையில் படுத்துக்கொள்கிறார்.

போரின் இறுதியில் கௌரவர்கள் வீழ்த்தப்படுகின்றனர். வெற்றி பெற்ற பாண்டவர்கள், ஆசி பெறுவதற்காக பீஷ்ம பிதாமகரிடம் வருகின்றனர். பீஷ்மர் அவர்களை ஆசிர்வதிக்கிறார்.
யுதிஷ்டிரர் பீஷ்மரிடம், ‘’தங்கள் அன்பாலும் ஆசிகளாலும்தான் எங்களால் போரில் வெற்றி அடைய முடிந்தது. இனி ராஜ்ய பரிபாலனம் செய்யப்போகும் எங்களுக்கு தாங்கள்தான் தர்மநெறிகளை உபதேசிக்கவேண்டும்’’ என்று வேண்டிக் கொண்டார்.


யுதிஷ்டிரர் வேண்டிக் கொண்டபடியே பீஷ்மர் அவர்களுக்கு தர்ம நெறிகளை உபதேசிக்கத் தொடங்கியபோது, திரௌபதி சிரித்துவிட்டாள். அசந்தர்ப்பமான சூழலில் திரௌபதி அப்படி சிரித்ததைக் கேட்ட யுதிஷ்டிரர், ‘‘எதற்காக சிரித்தாய்?’’ என்று கோபத்துடன் கேட்டார். யுதிஷ்டிரரை சாந்தப்படுத்திய பீஷ்மர், அதே கேள்வியை திரௌபதியிடம் கேட்டார்.
‘‘அன்று துரியோதனன் சபையில் நான் அவமானத்துக்கு உள்ளானபோது, அந்த அநியாயத்தைத் தடுக்காமல் இருந்த தங்களிடம் தர்ம நியாயங்களை உபதேசிக்குமாறு கேட்டதும் என்னை அறியாமல் சிரித்துவிட்டேன். அன்பு கூர்ந்து மன்னியுங்கள்’’ என்றாள் திரௌபதி.

பீஷ்மர், ‘‘துருபதன் மகளே, நீ அப்படி நினைத்துச் சிரித்ததில் தவறு இல்லை. இங்கே உன்னிடம் ஓர் உண்மையைச் சொல்ல விரும்புகிறேன். அன்று துரியோதனன் சபையில் உனக்கு அநீதி இழைக்கப்பட்டபோது நான் ஒன்றும் செய்ய இயலாமல் இருந்ததற்குக் காரணம், அப்போது என்னுடைய உடலில் ஓடிய ரத்தம் துரியோதனன் தந்த உணவால் உண்டானது. அதனால்தான் என்னால் அநியாயத்தைத் தட்டிக் கேட்க முடிய வில்லை. ஆனால், இப்போது போர்க்களத்தில் என்னுடைய உடலில் துளைத்த அம்புகள் அத்தனை ரத்தத்தையும் வெளியேற்றிவிட்டன. எனவே, இப்போது நான் தர்மநியாயங்களை உபதேசிப்பதில் தவறு இல்லைதானே?’’ என்று கேட்க, அவசரப்பட்டு சிரித்ததற்காக பீஷ்மரிடம் மன்னிப்பு கேட்ட திரௌபதி, தானும் அவருடைய உபதேசங்களைக் கேட்கக் காத்திருப்பதாக கூறினாள்.

பீஷ்மர், பாண்டவர்களுக்கு தர்மநியாயங்களை எல்லாம் விரிவாக எடுத்துக் கூறினார். பின்னர் இறுதியாக, கலியின் துன்பங்களை எல்லாம் போக்கும் அதிஅற்புதமான ஸ்தோத்திரத்தை உபதேசிக்கிறார். அதுதான் விஷ்ணுசஹஸ்ரநாம ஸ்தோத்திரம். பகவானின் ஆயிரம் நாமங்களின் மகிமைகளை பாண்டவர்களுக்கு உபதேசித்த பீஷ்மர், "அந்த பகவான் வேறு யாரும் இல்லை. உங்களுக்கு சதாசர்வ காலமும் உற்ற துணையாக இருக்கும் கிருஷ்ணரே..!" என்றும் விளக்கினார்.

நண்பர்களே, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய... நமக்குத் தெரியாத மற்றுமொரு புண்ணிய கதையும் உண்டு. அது...
***
ஸ்படிக மாலை செய்த அற்புதம்!

'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; பின் தர்மம் வெல்லும்’ என்ற உயரிய உண்மையை உலகுக்கு எடுத்துக்காட்டுவதற்காக நிகழ்ந்த மாபெரும் யுத்தமே குருக்ஷேத்திரப் போர். தர்மத்தை நிலைநாட்ட பாண்டவர்கள் பக்கம் நின்று, தேரோட்டியாகப் பணி புரிந்து, தனது கடமையைச் செய்துகொண்டிருந்தான் அவதார புருஷனான ஸ்ரீகிருஷ்ணன்.

பீஷ்மர், துரோணர், கிருபர் முதலான பெரியோர்கள் செஞ்சோற்றுக் கடன் கழிப்பதற்காக, தீயோன் என்று தெரிந்தும் துரியோதனன் பக்கம் நின்று, பாண்டவர்களை எதிர்த்துப் போர் புரிந்தனர்.
கௌரவ சேனைக்குத் தலைமை தாங்கிய பீஷ்மர், 10-ம் நாள் போரில் அர்ஜுனனின் அஸ்திரங்களால் வீழ்த்தப்பட்டார். தான் விரும்பியபோது மரணம் அடையலாம் என்று வரம் பெற்றிருந்த அவர், அம்புகளையே படுக்கையாக்கிக்கொண்டு, உத்தராயனம் வரும்வரை அதன்மீது படுத்திருந்தார். தீயவர்களின் உப்பைத் தின்று வளர்ந்த தன் உடம்பிலிருந்து உதிரத் துளிகள் மொத்தமாக பூமியில் சிந்தி, உடல் முழுவதும் புனிதப்படுவதற்காக, அவர் இந்த அஸ்திரப் படுக்கை எனும் சாதனையை மேற்கொண்டார். கௌரவர்களும், பாண்டவர்களும், பகவான் ஸ்ரீகிருஷ்ணனும் பீஷ்மரின் அம்புப் படுக்கையைச் சுற்றி நின்றிருந்தனர்.

பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருந்தபடியே தர்ம சாஸ்திரங்களையும், ராஜ தந்திரங்களையும் தருமபுத்திரருக்கு உபதேசித்தார். தன்னைச் சுற்றி நின்றிருந்த கூட்டத்தில், பகவான் கிருஷ்ணனையும் அவர் கண்டார். ஸ்ரீமந் நாராயணனே பகவான் ஸ்ரீகிருஷ்ணனாக பூமியில் அவதரித்திருந்த உண்மையை பீஷ்மர் உணர்ந்திருந்தார்.

ஸ்ரீமந் நாராயணனின் விஸ்வரூப தோற்றமும், அதில் அடங்கிய பல்வேறு ரூபங்களும், அவற்றுக்குரிய நாமங்களும், பீஷ்மருடைய மனக்கண் முன் அப்போது தோன்றின. இதனால் பக்திப் பரவசம் அடைந்த பீஷ்மர், ஸ்ரீமந் நாராயணனின் பெருமையை அற்புதமான கவிதைகளால் பாட ஆரம்பித்தார். அதுவே 'ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமம்’ எனும் மகிமை மிக்க மந்திரத் தொகுப்பு!

ஸ்ரீமகாவிஷ்ணுவின் தோற்றத்தையும், பல்வேறு அம்சங்களையும் ரூப, நாம, குண மாதுர்யங்களையும், அருட்திறனையும் வர்ணித்து, விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் பீஷ்மர் போற்றிப் புகழ்ந்து பாடினார். சுற்றி நின்றிருந்த அனைவரும் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தைக் கேட்டுப் பரவச நிலையை அடைந்தனர். ஆனால், துரியோதனன் முதலான கௌரவர்கள், விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை பீஷ்மர் பாட ஆரம்பித்ததுமே, அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட்டனர். பாண்டவர்கள் மட்டுமே அவர் கூறிய மந்திர சப்தங்களைக் கேட்டு, மெய்ம்மறந்து நின்றனர்.

விஷ்ணு ஸஹஸ்ரநாமம் நிறைவுற்றதும், தனது விஸ்வரூப தரிசனத்தால் பீஷ்மருக்கு அருள்பாலித்தான் ஸ்ரீகிருஷ்ணன். அனைவரையுமே அந்த மந்திரங்கள் கவர்ந்தன என்றபோதிலும், பாண்டவர்களின் கடைசி சகோதரனான சகாதேவனை அவை தீவிரமான பக்திப் பரவசத்தில் ஆழ்த்தின. ஜோதிட சாஸ்திரத்தில் வல்லவனான அவன், எத்தனையோ சாஸ்திர நூல்களைக் கற்றுத் தேர்ந்தவன். இருந்தாலும், விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் வரிகள் அவன் மனதில் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டே இருந்தன.

ஆனாலும், பீஷ்மர் கூறிய அனைத்து வாசகங்களும் அவனது நினைவுக்கு வரவில்லை. இதையறிந்த ஸ்ரீகிருஷ்ணன், ''இத்தனை அருமையான மந்திர தத்துவங்களை பீஷ்மர் எடுத்துக் கூறியபோது, அவற்றை உனது ஏடுகளில் நீ குறித்துக் கொள்ளவில்லையா?'' என்று சகாதேவனிடம் கேட்டான்.

அவ்வாறு செய்யாமல் போனதற்குச் சகாதேவன் வருந்தினான். ஓர் உயர்ந்த பொக்கிஷத்தை- கடவுளைப் போற்றும் பாடல்களை எப்படி நினைவுகூர்வது என்று அவன் யோசித்துக் கொண்டிருந்தபோது, அதற்கான வழியை எடுத்துக் கூறினான் ஸ்ரீகிருஷ்ணன். ''சகாதேவா! பீஷ்மர் மோட்சம் அடைந்து, அவர் உடலுக்கு மரியாதை செய்து முடித்த பின்பு, அவர் கழுத்தில் அணிந்துள்ள ஸ்படிக மணிமாலையை எடுத்து நீ அணிந்துகொள். அந்த மணிகளின் சக்தியால் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் முழுவதுமாக உன் நினைவுக்கு வரும்!''

சகாதேவன் ஆச்சரியம் அடைந்தான். ''சாதாரண ஸ்படிக மணிகளுக்கு மந்திர ஸப்தங்களை ஈர்த்து, மீண்டும் அவற்றை வெளிப்படுத்தும் சக்தி உண்டா?'' என்று கேட்டான். அப்போது, பீஷ்மருக்கு அந்த ஸ்படிக மணிகள் எவ்வாறு கிடைத்தன என்ற வரலாற்றைக் கூறி, அதன் பெருமையை விளக்கினான் ஸ்ரீகிருஷ்ணன்.

பீஷ்மரின் இயற்பெயர் கங்காபுத்திரன். கங்காதேவிக்கும் சந்தனு மகாராஜனுக்கும் பிறந்தவர் அவர். சந்தனு ராஜன் ஒரு மீனவப் பெண்ணை மணக்க விரும்பினார். அந்தப் பெண்ணின் தந்தை கேட்டுக்கொண்டபடி, தான் திருமணமே செய்துகொள்வது இல்லை என்று சபதமேற்றார் கங்காபுத்திரன். வாழ்நாள் முழுவதும் பிரம்மசரிய விரதத்தை முழுமையாக அனுசரித்து வைராக்கியமாக வாழ்ந்ததால், சத்தியவிரதன் என்றும் பீஷ்மர் என்றும் பெயர் பெற்றார்.

இவ்வாறு தன் தந்தைக்காகச் சபதம் ஏற்றபோது, பீஷ்மரின் மனம் சற்றுக் கவலையுற்றது. வாழ்நாள் முழுவதும் சபதத்தை நிறைவேற்றுவதற்குத் தேவையான அபார மனோபலமும், வைராக்கியமும் வேண்டும் என்பதற்காக, தன் தாய் கங்காதேவியைப் பிரார்த்தித்தார். அவர் முன் தோன்றிய கங்காதேவி, கங்கை நீரை எடுத்தாள். அப்போது, வானில் பிரகாசித்துக்கொண்டிருந்த சூரிய பகவானின் ஒளிக்கதிர்கள், அவள் கையிலிருந்த நீர்த்துளிகளில் விழுந்து, வைரம் போல் ஜொலித்தன.



தன் கையிலுள்ள கங்கா தீர்த்தத்தை வாங்கிக்கொள்ளும்படி மகனிடம் கூறினாள் கங்காதேவி. பீஷ்மர் தன் இரு கைகளையும் குவித்து, தாயின் முன்பு நீட்டினார். கங்காதேவியின் கரங்களிலிருந்து கங்கை நீர்த் துளிகள் ஸ்படிக மணிகளாக பீஷ்மரின் கைகளில் விழுந்தன. ''மகனே! இவை ஸ்படிக மணிகள். நீருக்குள் நிறைந்துள்ள நெருப்புத் துளிகள் இவை. பிரார்த்தனை செய்வதற்கும், வைராக்கியத்துடன் வாழ்வதற்கும், மந்திர சாதகங்கள் புரிவதற்கும் இவை உனக்குப் பெரிதும் உதவும். இந்த மணிகளை மாலையாக எப்போதும் அணிந்திரு. அவை உனக்குச் சத்திய விரதத்திலிருந்து தவறாத மன வலிமையையும் வைராக்கியத்தையும் தரும்'' என்று கூறி மறைந்தாள் கங்காதேவி.

பகவான் ஸ்ரீகிருஷ்ணன் கூறிய இந்த வரலாற்றைக் கேட்டதும், பீஷ்மரின் கழுத்தில் இருந்த ஸ்படிக மணி மாலையின் மகிமை, சகாதேவனுக்குப் புரிந்தது. பீஷ்மரின் மறைவுக்குப் பின்னர், ஸ்ரீகிருஷ்ணன் கூறியது போன்று, பீஷ்மரின் ஸ்படிக மணிமாலையை அணிந்து, பக்தியோடு ஸ்ரீமந் நாராயணனைத் தியானித்து, பீஷ்மர் இயற்றிய விஷ்ணு ஸஹஸ்ரநாம மந்திரங்கள் அனைத்தையும் மீண்டும் உருவாக்கி, ஏடுகளாக்கி உலகுக்கு அளித்தான்.

அதனால்தான் இன்றும் தெய்வீக மனிதர்களும் சித்தர்களும், மகான்களும், மந்திர பாராயணம் செய்பவர்களும் ஸ்படிக மணிகளை மாலையாக அணிகிறார்கள். உயர்ந்த ஸ்படிக மணிகளை ஒன்றோடொன்று உரசினால், அவற்றிலிருந்து பிரகாசமான தீப்பொறி போன்ற ஒளி தோன்றும். ஸ்படிக மணிகளை உருட்டி மந்திர ஜபம் செய்த பின்பு இந்தப் பிரகாசம் அதிகமாகத் தெரியும்.

விஷ்ணு ஸஹஸ்ர நாமம்:
ஸசங்க சக்ரம் ஸகிரீட குண்டலம்
ஸபீத வஸ்த்ரம்,
ஸரஸீருஹேக்ஷணம்
ஸஹார வக்ஷஸ்தல சோபி கௌஸ்துபம்
நமாமி விஷ்ணும் சிரஸா சதுர்புஜம்
கருத்து: ''சங்கு சக்கரம் தாங்கி, கிரீடமும் குண்டலமும் அணிந்து, பொன்னாடை தரித்த தாமரைக் கண்ணனாய், கௌஸ்துப மாலை பிரகாசிக்க, நான்கு புஜங்களுடன் விளங்கும் மஹா விஷ்ணுவை, தூய்மையான பக்தியுடன், தலை வணங்கி நமஸ்கரிக்கின்றேன்'' என்பது இதன் பொருள்.

கட்டுரை: எஸ்.கண்ணன் கோபாலன், டி.எஸ்.நாராயண ஸ்வாமி

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share
கிருஷ்ணனின் பசி.
பிருந்தாவனத்திலிருந்து அன்று கிருஷ்ணன் பலராமன் மற்றும் ஆயர்பாடி கோபர்கள் பசுக்கள் கன்றுகளோடு
கிளம்பும்போது கிருஷ்ணன் ''யாரும் இன்று சாப்பாடு பொட்டலம் கொண்டு வரவேண்டாம். நாம் இன்று வெகு தூரம் செல்ல போவதில்லை. எனவே சீக்கிரமே திரும்பிவிடலாம்" என்றதால் யாரும் மதிய உணவு எதுவும் கொண்டு வரவில்லை.
ஆனால் வழக்கம் போல மதியம் அவர்களுக்கு பசி எடுத்தது "கிருஷ்ணா நீ தான் எங்கள் பசிக்கு ஏதாவது வழி
செய்ய வேண்டும் உன் பேச்சைக் கேட்டுத்தானே நாங்கள் ஒன்றும் கொண்டு வரவில்லை..ஏதாவது வழி செய்".என்றனர். கிருஷ்ணன் யோசித்தான். அடுத்த கிராமத்தில் பிராமணர்கள் வசித்தனர். அவர்கள் அன்று ஒரு யாகம் வளர்த்தி இந்திரனுக்கு ப்ரீதி பண்ணிக்கொண்டிருந்ததால் நிறைய உணவு இருக்குமே!!.
கண்ணன் பிருந்தாவன சிறுவர்களை அழைத்து நீங்கள் அடுத்த ஊரில் யாகம் வளர்த்து கொண்டிருப்பவர்களிடம் “கிருஷ்ணன், பலராமன் இருவரும் பசியாக உள்ளார்கள். நாங்கள் அவர்களோடு வந்திருக்கிறோம். எங்கள் எல்லோருக்கும் உணவு தர வேண்டும்” என்று கேளுங்கள் என்று சொல்லி அனுப்பினான். அவர்கள் அவ்வாறே அங்கு சென்று கேட்ட போது அந்த பிராமணர்கள் இன்னும் யாகம் முடியவில்லை முடிந்தபிறகு எல்லோரும் இங்கு உணவு அருந்தியபிறகு தான் தர முடியும் என்று சொல்லி அனுப்பி விட்டனர். “ஓம் கோவிந்தாய ஸ்வாஹா” “ஓம் சங்கர்ஷனாய ஸ்வாஹா” என்று மந்திரம் மட்டும் ஒலித்து யாகத்தீயில் நெய் கொட்டிக்கொண்டிருந்ததே தவிர, ''பசி என்று கிருஷ்ணன் கேட்டான்''
என்ற போதும் பொருள் விளங்க வில்லை அவர்களுக்கு!!
கிருஷ்ணனிடம் வந்து சிறுவர்கள் நடந்ததை சொன்னார்கள்.
“ ஏன் உணவு அங்கு இல்லையா?”
“”நிறைய இருக்கிறதே ஆனால் தேவர்களுக்கு அர்ப்பணம் பண்ணிவிட்டு பிறகு தான் தருவார்கள். நடுவிலே தரமாட்டார்களாம்”
“அப்படியா, சரி, நீங்கள் அந்த பிராமணர்கள் வீடுகள் அங்கேதானே உள்ளது அந்த பிராமணர்கள் வீட்டில் அவர்கள் மனைவிகள் இருப்பார்களே? அவர்களிடம் சென்று கிருஷ்ணனும் பலராமனும் ரொம்ப பசியாக இருக்கிறார்கள். உங்களை கேட்டு சாப்பிட உணவு வாங்கிவர சொன்னார்கள்” என்று சொல்லுங்கள். அவர்கள் தரலாம்”
சிறுவர்கள் மீண்டும் சென்றார்கள். வீடுகளில் பிராமணர்களின் மனைவிகளிடம் சொன்னவுடனே அந்த ஸ்திரீகள் உடனே ஒன்று கூடி யோசித்தார்கள். இந்த யாகத்திற்கு சமைத்த உணவு ரெடியாக உள்ளது. ஆனால் புதிதாக சமைத்து எடுத்து செல்வதற்குள் கிருஷ்ணன் பலராமன் சென்று விட்டால் என்னசெய்வது? இதையே எடுத்து செல்வோம் என்று நிறைய உணவை எடுத்துக் கொண்டு அவர்களே கிருஷ்ணன் இருக்கும் இடத்துக்கு கிளம்பினார்கள்.
சில பிராமணர்கள் இதைப் பார்த்து விட்டு அவர்களை தடுத்தார்கள். அந்த காலத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாது. கணவனின் கட்டளையை மீறவும் முடியாது. இந்த ஸ்திரீகளோ கவலையே இன்றி கிருஷ்ணன் பலராமன் இருக்கும் இடம் சென்று அவர்களே அனைவருக்கும் பரிமாறினார்கள்.
பிராமணர்கள் யாகம் நடத்திய இடத்தில் யாக குண்டத்தின் அக்னியில் ஒரு தேவதை தோன்றி அனைத்து தேவர்களும் இந்திரன் உட்பட திருப்தியாக உண்டு மகிழ்ந்ததாக கூறவே பிராமணர்கள் திடுக்கிட்டார்கள் '' இன்னும் மந்திரங்களே முடியவில்லையே, இது எப்படி '' என்று ஆச்சர்யப்பட்டார்கள்.
இதற்கிடையே கிருஷ்ணன் அந்த ஸ்திரீகளை நோக்கி “நேரமாகி விட்டதே நீங்கள் வீடு செல்லுங்கள்”
என்று கூறவே அவர்கள் இனி நாங்கள் வீடு திரும்ப முடியாதே உங்களுடனே தான் வரவேண்டும் . எங்கள் வீட்டில் கணவன்மார்கள் " எங்கள் வார்த்தை மீறி உணவோடு வீட்டை விட்டு செல்லும் நீங்கள் இனி வீடு திரும்ப முடியாது. ஞாபகமிருக்கட்டும்” என்று சொல்லிவிட்டார்களே'. நாங்கள் எங்கே செல்வோம்?''' என்று வருந்தினார்கள்
கிருஷ்ணன் சிரித்தான் “அதெல்லாம் ஒன்றும் நடக்காது. கவலையின்றி நீங்கள் உங்கள் வீடுகளுக்கே செல்லுங்கள் உங்களை அவர்கள் சந்தோஷமாக வரவேற்று ஏற்றுக்கொள்வார்கள்” என்றான்
யாகம் முடிந்தவுடனே இரு யோகிகள் அங்கு தோன்றி விஷ்ணுவுக்கு யாக பலன் எப்படி போய் சேர்கிறது அதனால் பிரபஞ்சம் எப்படி சம்ரக்ஷிக்கபடுகிறது என்று விளக்கிய போது தான் பிராமணர்களின் அகக்கண் திறந்தது. அவர்கள் மனைவியர் எப்படி கொடுத்து வைத்தவர்கள், இறைவனின் அம்சமாகிய கிருஷ்ணன் பலராமன் பசியாக இருக்கிறேன் என்று உணவு கேட்டு வாங்கி திருப்தியாக உண்டதன் விளைவே யாகத்தின் முழு பயன் என்று உணர்ந்தனர் தங்கள் அறியாமைக்கு வருந்தினர் வழிமேல் விழி வைத்து அந்த பெண்கள் வரும் வரை காத்திருந்தார்கள் அவர்கள் காலில் விழுந்து வணங்காத குறையாக தவறுக்கு வருந்தி அவர்களை போற்றி மரியாதையோடு அன்போடு அவர்களை வரவேற்றார்கள் என்று இந்த கதை முடிகிறது.

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

பகுத்தறிவு

Post by vgovindan »

என்னுடைய FB post -

"நான் ஒரு FB post படித்தேன். அதில் ஒருவர் வாலியை ராமன் வதைத்தது pre-planned murder - என்று எழுதியிருந்தார். அதேபோல் மகாபாரதப் போரில் நடந்தது எல்லாமே pre-planned murder என்று எழுதியிருந்தார்.

ராமாயணத்தை இயற்றிய வால்மீகிக்கும், தமிழில் இயற்றிய கம்பருக்கும், மகாபாரதத்தை இயற்றிய வியாசருக்கும், இந்த முரண்பாடுகள் தெரியவில்லை என்பது அவருடைய எண்ணமா? - அறியேன். இத்தகைய பெருந்தகைகளுக்குத் தெரியாத பகுத்தறிவு வாதங்கள் நமக்குத் தெரிந்தன என்று பெருமைப்படுமுன், சற்று யோசியுங்கள்.

இந்தக் காவியங்களை இயற்றியவர்கள், கதா நாயகனை அப்பழுக்கற்றவனாக ஆக்கவேண்டுமென நினைத்திருந்தால், அவர்கள் செய்திருக்க முடியும். ஆனால் ஏன் செய்யவில்லை? ஆங்கிலத்தில் ஒரு வழக்கு - tearing out of context என்று. எந்த ஒரு சம்பவத்தையும் அதனுடை பின்னணியினை முழுதும் உணராது அந்த சம்பவத்தை மட்டும் விமரிசிப்பது முறையல்ல.

வாலி பெற்ற வரம் - தன்னுடை எதிரி தன்னுடன் போர்புரிய வரும்போது, அவன் பாதி பலம் தன்னை அடையவேண்டுமென. அப்படியென்றால் வாலி தான் நினைத்தது தான் சட்டமென இருக்கலாம், அவனை யாரும் வெல்ல இயலாது என்பது தானே?

அதேபோல், இரணியன் தன்னை யாரும் ஆயுதங்களால் கொல்லலாகாது, பகல் இரவில் கொல்லலாகாது, வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் கொல்லலாகாது என்று வரம் பெற்றான். ஆக, அவன் தவறு செய்தாலும் யாரும் அவனை தண்டிக்க இயலாது, அப்படித்தானே?

பாண்டவர்கள் 14 வருடங்கள் வனவாசம் சென்றனர் - சூதில் தோற்றபின். திரும்பி வந்து பாதி ராஜ்ஜியம் கேட்டால் இல்லையென்றான் துரியோதனன், ஐந்து கிராமங்கள் கேட்டால் இல்லையென்றால் - ஒரு ஊசியளவு நிலம் கூட கிடைக்காது என்றான். எந்த மண்ணில் நாம் பிறந்தோமோ அந்த மண் நமக்கு சொந்தமில்லை? எப்படி யாரும் இதை மறுக்க இயலும்?

இம்மாதிரி அதருமங்களையே செய்து வாழ்ந்தவர்களை எப்படி வீழ்த்துவது? - பொய்ம்மையும் வாய்மையிடத்தப் புரை தீர்ந்த நன்மை பயக்குமெனின் - திருவள்ளுவர். இதுதான் ஒரே வழி.

இந்த முரண்பாடுகளினின்று விடுபட்டு எந்த நோக்கத்திற்காக இந்தக் காவியங்கள் இயற்றப்பெற்றனவோ, அதனை அறியவேண்டும். அந்த முயற்சி செய்யாது வெறும் பகுத்தறிவு வாதம் செய்வதனால் நம்மை நாமே குழப்பிக்கொள்கின்றோம்.

வாழ்க்கை என்பது முன்னேற்றம் - பொருளிலும், செல்வாக்கிலும் அல்ல. இவற்றிற்கு மீறிய ஒரு நோக்கம் உள்ளது - தன்னையறிதல் - அதற்கு முதலடியாவது எடுத்து வைப்போம். பாட்டி கதைகள் பேசுவதனால் பகுத்தறிவு வாதம், மெய்யுணர்வாகாது."

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: Aanmeekam...

Post by vgovindan »

Prayer of Rantideva -

na kAmayE(a)haM gatim-ISvarAt parAm-ashTarddhi-yuktAm-apunarbhavaM vA |
ArtiM prapadyE(a)khila-dEha-bhAjAmnataH-sthitO yEna bhavanty-aduHkhAH || 12||

I do not seek from the Lord the highest position attended with eight-fold yogic power (aNima etc) or even the final beatitude (cessation of rebirth).
Dwelling in their heart (as the sufferer) I would (rather) undergo the suffering of all embodied souls, so that (through such vicarious suffering of mine) they may be relieved of misery." (Srimad Bhagavatam - Book 9, Chapter 21, verse 12)

That was physical suffering caused by natural calamities. But now, humanity is not suffering from natural calamities - excepting in certain cases. Almost all suffering now, is caused by moral degradation - aggrandisement and greed.

And this aggrandisement and greed goes in the name of 'development' - a pure hedonism model of Western Society.

How can even a thousand Rantideva and a thousand Jesus would be able to vicariously suffer and relieve the misery of humans at large?

How can any prayer be powerful enough to destroy this aggrandisement and greed?

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

கொடுப்பதும் சனி - கெடுப்பதும் சனி - யாரை விட்டது சனி ?

நவக்கிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்றவர் சனி பகவான் என்று சொல்வார்கள். அதனால் அவரை 'சனீஸ்வரன்' என்று போற்றுவர். ஒவ்வொருவரது வாழ்க்கையிலும், அவரவர் ராசிக்கேற்ப ஏழரை ஆண்டுகள் சனியின் பிடிக்குள் அடங்கி, உயர்வு- தாழ்வுகளைச் சந்தித்து வாழவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இதைத்தான் 'ஏழரைச்சனி' என்கிறார்கள். 'கொடுப்பதும் சனி; கெடுப்பதும் சனி', 'யாரை விட்டது சனி' என்றெல்லாம் பழமொழிகள் பல உண்டு.
ஒருமுறை சனீஸ்வரன், தேவலோகத்தில் தேவேந்திரனுடன் உரையாடிக்கொண்டு இருந்தார். அப்போது தேவேந்திரன் சனீஸ்வரனைப் பார்த்து, ''உங்களால் பீடிக்கப்பட்டுத் துன்பம் அடையாதவர் எவரேனும் உண்டா?'' என்று கேட்டான். அதற்கு சனீஸ்வரன், 'இதுவரை இல்லை. ஆனால், இப்போது நினைவுக்கு வருகிறது. ஒரே ஒருவரை மட்டும் இதுவரை நான் பீடிக்கவேயில்லை. ஆனால், இப்போது அதற்கான தருணம் வந்துவிட்டது!' என்று கூறி, அவசரமாகப் புறப்பட்டார்.
'எங்கே செல்கிறீர்கள்?'' என்று இந்திரன் கேட்க, 'சிவனைத் தரிசிக்க!'' என்று கூறிச் சென்றார் சனீஸ்வரன்.
நேராக கயிலாயம் சென்றவர், சிவன்- பார்வதிதேவியை வணங்கி நின்றார்.
''சனீஸ்வரா! எம்மைக் காண வந்ததன் காரணம் என்னவோ?'' என்று கேட்டார்.சிவபெருமான்.
''பெருமானே! உங்கள் ஜாதகப்படி, இந்த விநாடி ஏழரைச்சனியின் காலம் ஆரம்பிக்கிறது. தங்களைப் பீடிக்கவே வந்தேன்'' என்றார் சனீஸ்வரன்.
''எனக்குமா ஏழரைச்சனி? என்ன சனீஸ்வரா... விளையாடுகிறாயா? கிரகங் களின் சுழற்சியை நிர்ணயித்த என்னையே பீடிக்கப் போகிறாயா?' என்று கேட்டார்.
''ஆம் ஸ்வாமி! நீங்கள் நிர்ணயித்த விதிகளின்படிதான் நான் வந்துள்ளேன். ஏழரை ஆண்டுகள் இல்லாவிட்டாலும், ஏழரை மாதங்கள் அல்லது ஏழரை நாட்களுக்காவது நான் தங்களைப் பீடித்து என் கடமையைச் செய்ய அனுமதி தாருங்கள்'' என்று கேட்டார் சனீஸ்வரன்.
''ஏழரை நாட்கள் என்ன, ஏழரை நாழிகை கூட உன்னால் என்னைப் பீடிக்க முடியாது' என்று கூறிய சிவபெருமான், பார்வதி தேவியின் கழுத்தில் இருந்த மாலையில் இருந்த ருத்ராக்ஷத்தில் மறைந்துகொண்டார். ருத்ராக்ஷத்தில் உள்ள தெய்வீக சக்தியைத் தாண்டி வேறு எந்த சக்தியும் அதனுள் நுழையவே முடியாது. அதுவும் பார்வதி தேவியின் கழுத்தில் இருக்கும் ருத்ராக்ஷத்துக்குள் சனி பகவான் எப்படி நுழைய முடியும்?
ஆனால், சற்றும் அசராமல் சிவ நாமத்தை ஜெபித்தபடி அங்கேயே அமர்ந்துவிட்டார் சனீஸ்வரன். ஏழரை நாழிகை கடந்தது. சிவபெரு மான் ருத்ராக்ஷத்திலிருந்து வெளியே வந்தார். சனீஸ்வரனை நோக்கி, ''பார்த்தாயா சனீஸ்வரா... உன்னால் என்னை ஏழரை நாழிகைகூட நெருங்க முடியவில்லையே?'' என்றார்.
''இல்லை பரமேஸ்வரா! உங்களை ஏழரை நாழிகை நேரம் நான் பீடித்திருந்தேன். அதனால்தான் உலக ஜீவராசிகளுக்கெல்லாம் படியளக்கும் நீங்களே, ஒரு ருத்ராக்ஷத்தில் மறைந்து, ஏழரை நாழிகை சிறைவாசம் ஏற்படுத்திக்கொண்டு, அதை அனுபவித்தீர்கள்'' என்றார்.
'சனீஸ்வரனின் விதி'யை நிர்ணயித்தவரும் அந்த விதிக்குக் கட்டுப்பட வேண்டியது அவசியம்தான் என்பதை எடுத்துக்காட்டிய சனீஸ்வரனை வாழ்த்தினார் சிவபெருமான். ஏழரை நாழிகை நேரம் தன் கழுத்தில் இருந்த ருத்ராக்ஷத்தில் தங்கி, தனக்கும் ருத்ராக்ஷத்துக்கும் சிவபெருமானின் அருள் கிடைக்கக் காரணமான சனீஸ்வரனை அன்னை பார்வதிதேவியும் வாழ்த்தினாள்.
சிவனைப் பீடித்த சனி அதோடு விட்டு விடவில்லை. திரேதா யுகத்தில், அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட பகவான் விஷ்ணு ஸ்ரீராமராக அவதரித்தபோது, அவருக்கு உதவி செய்வதற்காக அனுமனாக அவதாரம் செய்த சிவபெருமானை மீண்டும் ஒருமுறை பீடிக்க முயன்ற சம்பவம் ராமாயணத்தில் காணப்படுகிறது.
ராவணனை அழிக்க வானர சேனைகளுடன் இலங்கை செல்வதற்காக, கடலில் பாலம் அமைக்கும் பணியை மேற்கொண்டிருந்தார் ஸ்ரீராமன். இந்த சேதுபந்தனப் பணியில் சுக்ரீவன், அங்கதன், அனுமன் மற்றும் அவனது வானர சேனைகள் ஈடுபட்டிருந்தன. வானரம் ஒவ்வொன்றும் தனது சக்திக்கு ஏற்றவாறு மரங்களையும் பாறைகளையும் தூக்கி வந்து கடலில் வீசிக்கொண்டிருந்தன. ராம, லட்சுமணர்கள் இருவரும் கடலில் பாலம் உருவாவதை நோக்கிய வண்ணம் எல்லோருக்கும் ஆசி கூறிக் கொண்டிருந்தனர். அனுமனும் பாறைகளைப் பெயர்த்தெடுத்து, அவற்றின்மீது 'ஜெய் ஸ்ரீராம்' என்ற அக்ஷரங்களைச் செதுக்கி கடலில் எறிந்துகொண்டிருந்தார்.
அப்போது, அங்கே சனீஸ்வர பகவான் தோன்றி, ஸ்ரீராம லட்சுமணர்களை வணங்கி, ''பிரபு! அனுமனுக்கு ஏழரைச் சனி பீடிக்கும் காலம் தொடங்குகிறது. என்னைத் தவறாக எண்ணாதீர்கள். என் கடமையைச் செய்ய அனுமதி தாருங்கள்'' என்று வேண்டினார்.
'எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம். அதுபோல உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள். முடிந்தால், அனுமனைப் பீடித்துப் பாருங்கள்' என்றார் ஸ்ரீராமன்.
உடனே சனீஸ்வரன் அனுமன் முன் தோன்றி, ''ஆஞ்சநேயா! நான் சனீஸ்வரன். இப்போது உனக்கு ஏழரைச்சனி ஆரம்பமா கிறது. உன்னைப் பீடித்து ஆட்டிப்படைக்க, உன் உடலில் ஓர் இடம் கொடு'' என்றார்.
''சனீஸ்வரா! ராவணனின் சிறையில் இருக்கும் சீதாதேவியை மீட்க நாங்கள் இலங்கை செல்லவே இந்த சேதுபந்தனப் பணியை ஸ்ரீராம சேவையாக ஏற்றுத் தொண்டாற்றிக் கொண்டிருக்கிறோம். இந்தப் பணி முடிந்ததும், நானே தங்களிடம் வருகிறேன். அப்போது என் உடல் முழுவதுமே தாங்கள் வியாபித்து என்னை ஆட்கொள்ள லாம்'' என்றான் அனுமன்.
''ஆஞ்சநேயா! காலதேவன் நிர்ணயித்த கால அளவை நான் மீற முடியாது; நீயும் மீறக்கூடாது. உன்னை நான் பீடிக்கும் நேரம் நெருங்கிவிட்டது. உடனடியாகச் சொல்; உன் உடலின் எந்த பாகத்தில் நான் பீடிக்கலாம்?''என்று கேட்டார் சனீஸ்வரன்.
''என் கைகள் ராம வேலையில் ஈடுபட்டுள்ளது. அதனால், அங்கே இடம் தர முடியாது. என் கால்களில் இடம் தந்தால், அது பெரும் அபசாரமாகும். 'எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்! எனவே, நீங்கள் என் தலை மீது அமர்ந்து தங்கள் கடமையைச் செய்யுங்கள்'' என்று கூறினார் அனுமன்.
அனுமன் தலை வணங்கி நிற்க, அவன் தலை மீது ஏறி அமர்ந்தார் சனீஸ்வரன். அதுவரை சாதாரண பாறைகளைத் தூக்கிவந்த அனுமன், சனீஸ்வரன் தலை மீது அமர்ந்த பின்பு, மிகப் பெரிய மலைப் பாறைகளைப் பெயர்த்து எடுத்துத் தலைமீது வைத்துக்கொண்டு, கடலை நோக்கி நடந்து, பாறைகளை கடலில் வீசினார். பெரிய பெரிய பாறைகளின் பாரத்தை அனுமனுக்குப் பதிலாக, அவர் தலை மீது அமர்ந்திருந்த சனீஸ்வரனே சுமக்கவேண்டியதாயிற்று. அதனால், சனீஸ்வரனுக்கே கொஞ்சம் பயம் வந்துவிட்டது. 'தனக்கே ஏழரைச் சனி பிடித்துவிட்டதா?' என்றுகூடச் சிந்தித்தார். அனுமன் ஏற்றிய சுமை தாங்காமல், அவனது தலையிலிருந்து கீழே குதித்தார்.
''சனீஸ்வரா! ஏழரை ஆண்டுகள் என்னைப் பீடிக்கவேண்டிய தாங்கள், ஏன் இவ்வளவு சீக்கிரம் விட்டுவிட்டீர்கள்?'' என்று கேட்டார் அனுமன்.
அதற்கு சனீஸ்வரன், ''ஆஞ்சநேயா! உன்னை ஒரு சில விநாடிகள் பீடித்ததால், நானும் பாறைகளைச் சுமந்து சேது பந்தனப் பணியில் ஈடுபட்டுப் புண்ணியம் பெற்றேன். சாக்ஷத் பரமேஸ்வரனின் அம்சம் தாங்கள். முந்தைய யுகத்தில் தங்களை நான் பீடிக்க முயன்று, வெற்றியும் பெற்றேன். இப்போது தோல்வி அடைந்துவிட்டேன்' என்றார் சனீஸ்வரன்.
''இல்லை, இல்லை... இப்போதும் தாங்களே வென்றீர்கள்! ஏழரை ஆண்டுகளுக்குப் பதில் ஏழரை விநாடிகளாவது என்னைப் பீடித்துவிட்டீர்கள் அல்லவா?' என்றார் அனுமான். அதைக் கேட்டு மனம் மகிழ்ந்த சனீஸ்வரன், ''அனுமான்..! உனக்கு நான் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என விரும்புகிறேன். என்ன வேண்டும் கேள்'' என்றார். ''ராம நாமத்தை பக்தி சிரத்தையோடு பாராயணம் செய்பவர்களை உங்களது ஏழரைச் சனி காலத்தில் ஏற்படும் துன்பங்களில் இருந்து நீங்களே காத்தருள வேண்டும்' என வரம் கேட்டார் அனுமன். சனியும் வரம் தந்து அருளினார்.
பொதுவாக ஒருவரை ஏழரைச் சனி பீடிக்கும் காலத்தை மூன்று கூறாகப் பிரித்து மங்குசனி, தங்குசனி, பொங்குசனி என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அனுமன் பெற்ற வரத்தால் ஏழரைச் சனியின் மங்குசனி, தங்குசனி காலத்தில் ஏற்படும் இன்னல்களைத் தாங்கி பிரச்னைகளைச் சமாளித்து, முடிவில் வெற்றியும் செல்வமும், சௌபாக்கியமும் பெற, ''ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம'' என்ற தாரக மந்திரத்தை சிரத்தா பக்தியுடன் ஜெபிக்க வேண்டுமென்று சாஸ்திரங்கள் அறிந்த பெரியோர்கள் நமக்கு வழிகாட்டியுள்ளனர்.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

ஒரு பங்களிப்பு

அக்னி நட்சத்திரம்

சித்திரை மாதம் 21-ஆம் தேதி முதல் வைகாசி மாதம் 14-ஆம் தேதி வரை வெய்யிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். இதனை "அக்னி நட்சத்திரம்' என்று சொல்வர்.

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?

அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரமும் அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றிருக்கவில்லை. என்றாலும், சித்திரை மாதம், பரணி 3-ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் கூறும்.

இந்த வருடம் 4-5-2013 முதல் 28-5-2013 வரை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் குறிப்பிடுகிறது.

இந்த காலகட்டத்தில் அறுவடை செய்யப் பட்ட வயல்வெளிகளில் வெப்பத்தின் காரணமாக வெடிப்புகள் ஏற்படும். அதன்வழியாக பூமியின் வெப்பம் வெளியேறும். அந்தப் பிளவுகளில், காய்ந்த இலைகளும் சருகுகளும் நுழைந்துவிடும். அக்னி நட்சத்திரம் முடிந்து வைகாசி பிற்பகுதியில் வீசும் காற்றால் பூமி குளிரும்.

அதனையொட்டி மழை பெய்தால், நிலத்தின் வெடிப்புகள் மூடப்பட்டுவிடும். இதனை "கர்ப்ப ஓட்டம்' என்பார்கள். இந்த முறையில் இயற்கையாகவே வயலுக்கு நல்ல உரம் கிடைக்கிறது. அடுத்த வேளாண்மைக்கு வயல் வளம் பெற்றுவிடுகிறது.

பொதுவாக, சூரியன் ராசி மண்டலத்தில் சஞ்சரிக்கும் பாதையில், முதல் நான்கு மாதங்கள் பூமிக்கு அருகில் இருந்தவாறு பயணப்படும். இந்த வழியை முதல் பரியாயம் என்பார்கள். இதற்கு ஐராவத வீதி என்ற பெயரும் உண்டு.

அக்னி நட்சத்திரத்தின் சக்தியைக் கொண்டது கார்த்திகை நட்சத்திரம். கார்த்திகை நட்சத்திரத்தின் தேவதை அக்னி தேவன். நெருப்பைத் தாங்கும் சக்தி படைத்தது கார்த்திகை நட்சத்திரம் என்று வானியல் நூல்கள் கூறுகின்றன.

இந்த அக்னி நட்சத்திரம் குறித்து புராணம் கூறும் தகவலைப் பார்ப்போமா? யமுனை ஆற்றங்கரைக்கு அருகிலுள்ள காட்டின் பெயர் காண்டவ வனம். இந்தக் காட்டிற்குள் அரிய மூலிகைச் செடிகள் இருப்பதால் அதன் மணம் ஆற்றங்கரைக்கு வருபவர்களைக் கவரும். இந்திரனின் காவலில் உள்ள அந்த வனத்தில் அரிய மூலிகைகள் செழித்துவளர, அவ்வப்போது மழைபெய்யச் செய்தான் மழையின் அதிபதியான இந்திரன். (இந்திரனுக்கு காண்டவவனன்' என்ற பெயரும் உண்டு.)

இயற்கையின் எழிலுடன் மூலிகையின் மணமும் வீசிக்கொண்டிருந்த இதமான சூழ்நிலையில், யமுனை நதியில் கண்ணனும் அர்ச்சுனனும் அவர்களுடைய தோழர்களும் நீராடி மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் கரையேறும்போது ஓர் அந்தணர் வந்தார். அவர், கண்ணனையும் அர்ச்சுனனையும் பார்த்து, ""உங்களைப் பார்த்தால் கருணைமிக்கவர்களாகத் தெரிகிறீர்கள். எனக்கு அதிக பசி. என் பசிக்கு உங்களால்தான் உதவமுடியும். இந்த வனத்தில் என் பசிப்பிணியைத் தீர்க்கும் மருந்து உள்ளது. நான் இந்த வனத்திற்குள் பிரவேசிக்க நீங்கள் உதவி செய்ய வேண்டும்'' என்று வேண்டினார்.

அந்த அந்தணரின் பேச்சு வித்தியாசமாக இருக்கவே, கண்ணன் அந்த அந்தணரை உற்றுப் பார்த்தார்.

""அக்னிதேவனே! ஏன் இந்த வேடம்? நேரிடையாகவே எங்களிடம் உங்கள் பசிப்பிணிக்கு உணவு கேட்கலாமே'' என்று கண்ணன் சொன்னதும் தன் வேடத்தைக் கலைத்தார் அக்னிதேவன்.

""உலகில் வாழும் உயிர்களுக்கெல்லாம் படியளக்கும் பரமாத்மாவே! தங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. சுவேதசி என்ற மன்னனுக்காக துர்வாச முனிவர் நூறாண்டுகள் தொடர்ந்து யாகம் ஒன்றை நடத்தினார். யாகத்தின் விளைவால், அதிகப்படியான நெய்யை உட்கொள்ளும் நிலைக்கு நான் ஆளானேன். அதனால் மந்த நோய் என்னைத் தாக்கிவிட்டது. அந்த மந்த நோய் நீங்குவதற்குத் தகுந்த மூலிகைச் செடிகள் இந்த வனத்தில் நிறைந்துள்ளன. இங்குள்ள அரிய மூலிகைகளை நான் கபளீகரம் செய்தால் என் பிணி தீரும்'' என்றான்.

""அதற்கு எங்கள் தயவை ஏன் நாடுகிறீர்கள்?'' என்றான் அர்ச்சுனன்.

""நான் இந்த வனத்திற்குள் பிரவேசிக்க முயற்சிக்கும்பொழுதெல்லாம், இந்திரன் மழை பெய்ய மேகங்களுக்கு உத்திரவிட்டு, என் தீ நாக்குகளை அணைத்து என் முயற்சியைத் தடுத்துவிடுகிறான்'' என்றான்.

கண்ணன் அர்ச்சுனனைப் பார்த்து சிரித்தார். (காண்டவ வனத்தை அழித்தே அங்கே இந்திரப் பிரஸ்தம் கட்ட வேண்டுமென நினைத்துக் கொண்டிருந்தனர் பாண்டவர்கள். ஆனால் காண்டவ வனத்தை அழிப்பது எவ்வாறு என்று திகைத்த வேளையில் இது நடந்தது)

கண்ணன் சிரிப்பின் பொருளைப் புரிந்துகொண்ட அர்ச்சுனன், ""அக்னி தேவனே, நாங்கள் உனக்கு உதவுகிறோம். ஆனால் ஒரு நிபந்தனை. இந்த உதவிக்கு உபகாரமாக வில்லும் அம்பாறாத்தூணியும் அம்புகளும் வேண்டும். ஏனென்றால் நாங்கள் இங்கு நீராடத்தான் வந்தோம். எனவே இந்திரன் மழை பெய்வித்தால் தடுப்பதற்கு வில்லும் அம்புகளும் தேவை'' என்றான். உடனே, அர்ச்சுனனுக்காக சக்திமிக்க காண்டீப வில்,

அம்புகள், அம்பறாத்தூணி என எல்லாவற்றையும் தந்தான் அக்னி பகவான்.

அப்பொழுது கண்ணன், ""அக்னிதேவனே, உன் பிணியைத் தீர்த்துக்கொள்வதற்காக 21 நாட்கள் மட்டும் இந்தக் காட்டிற்குள் பிரவேசிக்கலாம். அந்தச் சமயத்தில் இந்திரன் மழைபொழியாமல் பார்த்துக்கொள்கிறோம்'' என்றார்.

அக்னிதேவன் வனத்திற்குள் பிரவேசித்து வனத்தை எரிக்கத் தொடங்கினான். இதைக் கண்ட இந்திரன் மழை பெய்விக்க காளமேகத்திற்கு உத்திரவிட்டான். மேகங்கள் கூட்டம் கூட்டமாக வானில் வருவதைக் கண்ட கண்ணன் அர்ச்சுனனைப் பார்க்க, அர்ச்சுனன் அந்த வனத்தில் மழை பொழியாமலிருக்க "சரக்கூடு' ஒன்றை தன்னிடம் உள்ள அம்புகளால் கட்டித் தடுத்தான்.

(இதை பலமுறை நானே கண்டதுண்டு அக்னி நக்ஷத்ர ஆரம்பத்தில் மழை வந்து தடுத்ததை)

அக்னியும் முதல் ஏழு நாட்கள் வேகமாக தன் பசிக்கு வனத்தில் உள்ள மூலிகைப் பகுதிக்குள் நுழைந்து கபளீகரம் செய்தான். அடுத்த ஏழு நாட்கள் சுற்றியிருக்கும் அரிய மரங்களை உணவாகக் கொண்டான். அடுத்த ஏழு நாட்கள் மிதமாக உண்டு, இறுதியில் கண்ணனிடமும் அர்ச்சுனனிடமும் விடைபெற்று வெளியேறினான்.

இவ்வாறு அக்னிதேவன் காண்டவ வனத்தை எரித்த நாட்களே அக்னி நட்சத்திர நாட்கள் என்று புராணம் கூறுகிறது.

இந்த அக்னி நட்சத்திர நாட்களில் என்ன செய்யலாம்? எதைச் செய்யக்கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது.

இந்த நாட்களில் செடி, கொடி மரங்களை வெட்டக்கூடாது; நார் உரிக்கக்கூடாது; விதை விதைக்கக்கூடாது; கிணறு, குளம், தோட்டங்கள் அமைக்கக்கூடாது; நிலம் மற்றும் வீடுகளில் பராமரிப்புகள் செய்யக்கூடாது; வாகனங்களில் நெடுந்தூரம் பயணம் செய்யக்கூடாது.

இந்த நாட்களில் ஆலயங்களுக்குச் சென்று இறைவனுக்கும் இறைவிக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்வது நல்ல பலனைத் தரும். தான- தர்மங்கள் செய்யலாம்; தண்ணீர்ப் பந்தல் அமைத்து நீர் மோர் வழங்கலாம்; நோயாளிகளுக்கு இளநீர் தரலாம்; உடல் ஊனமுற்றவர்களுக்கு காலணி, குடைகளை வழங்கலாம்; ஏழை, எளியவர்களுக்கு தயிர் சாதம் அளிக்கலாம்; அந்தணர்களுக்கு விசிறி தானம் அளிக்கலாம்.

அக்னி நட்சத்திரக் கால கட்டத்தில் மாரியம்மன் கோவிலுக்குச் சென்று வணங்கி, அபிஷேக ஆராதனைகள் முடிந்ததும் பானகம் வழங்குவதும் நல்ல பலன்களைத் தரும். பரணிக்குரிய துர்க்கையையும் ரோகிணிக்குரிய பிரம்மாவையும் சந்தனாபிஷேகம் செய்து வழிபட வாழ்வில் வசந்தம் வீசும்.

அக்னி நட்சத்திரக் காலகட்டத்தில் நம் உடல்நிலை பாதிக்காமலிருக்க, காலை வேளையில் பூஜையறையில் சூரியனுக்குரிய மாக்கோலத்தை பூஜைப் பலகையில் போட்டு, சூரிய காயத்திரி மந்திரத்தை 21 முறை ஜெபிக்கலாம்.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share
Salagramam
:
ஒரு மன்னனின் மகள் துளசி, மகாவிஷ்ணுவையே கணவனாக அடைய வேண்டும் என்று தவம் இருந்தாள்.

அவள் போன ஜன்மத்தில் கிருஷ்ணனுடன் கோபிகையாகக் கூடி இருந்தாள்.

மகாவிஷ்ணு மாறு வேடத்தில் சென்று துளசியை ஏமாற்றினார்.

"என்னை ஏமாற்றிய நீ யாராக இருந்தாலும் கல்லாகப் போவாயாக!" என்று சாபமிட்டாள். அந்த கல்தான் சாளக்கிராம கல்.

உடனே மஹாவிஷ்ணு அவருக்கு காட்சி கொடுத்தார். பதறிப்போனாள் துளசி.
புன்னகை புரிந்தார் மஹாவிஷ்ணு.

"அஞ்சாதே துளசி! எல்லாம் என் சித்தப்படியே நடக்கிறது.

க்ருஷ்ணஅவதாரத்தின் போது கோபிகையாக இருந்தவள் நீ.

என்னை மணம் புரிய வேன்டும் என்று தவம் புரிந்தவளும் நீயே.

பூலோகத்தில் வாழும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கவே இத்தகைய லீலைகளும் நடத்தபடுகின்றன.

என்னை கல்லாக மாறுமாறு நீ சபித்ததும் என் விருப்பபடிதான்.

என்னை தரிசனம் செய்தால் உனது இந்த பிறவிக்கு முக்தி கிடைக்கிறது.

இப்போது நீ கண்டகி நதியாகவும், துளசி செடியாகவும் மாறிவிடுவாய்.

என்னை கல்லாக மாறுமாறு சபித்து விட்டதால், நான் சாளக்கிராமக் கற்களாக மாறப் போகிறேன்.

நீ என்னை மணக்க விரும்பியவள் அல்லவா?

அதனால் நீ கண்டகி நதியாக ஓட, நான் உன்னில் கிடப்பேன், ஆம் சாளக்கிராமக் கற்களாக கிடப்பேன்.

அந்த கற்களில் சங்கு, சக்கர சின்னங்களும் உண்டாகும்.

சாளக்கிராமமாக நானே இருப்பதால், பக்தர்கள் அந்தக் கற்களை வணங்குவார்கள்.

நாடெங்கும் எடுத்து சென்று தங்கள் வீடுகளில் வைத்து பூஜை செய்வார்கள்.

சாளக்கிராம கற்கள் கிடக்கும் நதியான நீயும், புனித நதியாக கங்கையை விட சிறந்த நதியாக போன்றபடுவாய்.

உன்னில் நீராடும் பக்தர்களுக்கு அவர்கள் கேட்டதை எல்லாம் நான் தருவேன்.

இங்கே வர முடியாதவர்கள், துளசியை எனக்கு அர்ச்சித்தால் போதும். துளசி தீர்த்தை பருகினாலும் நான் மிகுந்த ஆனந்தம் அடைந்து அருள் பாலிப்பேன்" என்றார்.

"யார் தங்களுடைய வீட்டில் சாளக்கிராம மூர்த்தியை வைத்து கொள்கிறார்களோ, அந்த வீட்டில் வைக்கப்பட்டுஇருக்கும் சிறு இடத்தையே, கோயிலாகக் கொண்டு அங்கே எழுந்தருள்கிறேன்.

அந்த சாளகிராமத்தில் நான் எப்போதும் வசிக்கிறேன்.
அது இருக்கும் வீட்டில் தோஷமே கிடையாது.

சாளகிரமம் இருக்கும் வீடுகளில் உள்ளவர்களுக்கு சந்தோஷம்,சௌபாக்கியம் முக்தி ஆகிய எல்லாவற்றையும் நான் தருவேன்" என்றும் மஹாவிஷ்ணு கூறினார்

சாளகிராமங்கள் எப்படி உருவாகின்றன..?

மகாவிஷ்ணு தங்கமயமான ஒளியுடன் திகழும் "வஜ்ர கிரீடம்" என்னும் பூச்சியின் வடிவம் கொண்டு சாளகிராம கல்லை குடைந்து அதன் மையத்தை அடைந்து, அங்கு உமிழ் நீரால் சங்கு சக்கர வடிவங்களையும், தனது அவதார ரூபங்களையும் விளையாட்டாக வரைகிறார்.
இவைதான் சாளகிராம மூர்த்திகள்.

எதுவும் வரையப் படாமல் உருளை வடிவக் கற்களாகவும் இவை கிடைக்கும்.

அவற்றுக்கு "ஹிரண்ய கர்ப கற்கள்" என்று பெயர்.
இவையும் பூஜைக்கு உகந்தவை.

இந்த சாளகிராமங்கள், சங்கு, நத்தைகூடு, பளிங்கு போன்று பலவித வடிவங்களிலும் கிடைக்கிறன.

நாராயணா ஹரி நாராயணா...!!!

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share
''கயா கயா கயா. என்று சொல்வது ஆதி சங்கரர் தனது தாயின் கடைசி காலத்தில் தான் வாக்கு கொடுத்தபடி அவளருகே வந்து அவள் மரணத்திற்கு பிறகு அவளது அந்திம கிரியைகளை செய்து இயற்றிய மனம் நெகிழும் மாத்ரு பஞ்சகம் 5 ஸ்லோகங்கள்

விஷ்ணு பாதம்

பித்ரு ஸ்ரார்தம் கயாவில் செய்வது உசிதம் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. அக்ஷயவடத்தருகே பிண்ட பிரதானம் செய்வது ஒரு வழக்கம்.

''கயா கயா கயா. என்று சொல்வது நமது பித்ருக்களுக்கு ஸ்ரத்தையோடு அவர்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் நாம் செய்யும் கடமை சம்பந்தப்பட்டது. . ஒவ்வொரு ஹிந்துவும் வாழ்வில் ஒரு தடவையாவது செல்ல வேண்டிய இடம் கயா. குடும்பம் சகல சம்பத்துகளும் ச்ரேயஸும் பெறும்.

ஒரு 16 ஸ்லோகங்கள் கொண்டது மாத்ரு .ஷோடசி. தாய்க்கு மகன் அளிக்கும் 16 பிண்டங்கள் பற்றியது. அதன் அர்த்தம் புரிந்துகொண்டால் அவசியம் புரியும். தாயின் அருமை தெரியும்.

ஜீவதோர் வாக்ய கரணாத்
ப்ராத்யாப்தம் பூரி போஜணாத்
கயாயாம் பிண்ட தாணாத்
த்ரிபி: புத்ரஸ்ய புத்ராய

'' அடே பயலே, அம்மா அப்பா உயிரோடு இருக்கும்போதே அவர்கள் சொல்படி நட. அவர்களை சந்தோஷமாக வைத்துக்கொள். அவர்கள் ஆசீர்வாதம் தான் உன் படிப்பு மூலம் கிடைக்கும் சர்டிபிகேட்டை விட உன்னை நன்றாக வைக்கும். அவர்கள் காலம் முடிந்த பிறகு அந்தந்த திதியில் அவர்கள் பசியை போக்கு. அவர்களுக்கு தேவை அல்வா, ஜாங்கிரி,கீ ரோஸ்ட் அல்ல. வெறும் எள்ளும் தண்ணீரும் தான். முடிந்தால் ஒரு தடவை கயாவுக்கு குடும்பத்தோடு போ. அங்கு நீ அளிக்கும் பிண்ட ப்ரதானம் அவர்களுக்கு தேவை. ''புத்'' என்ற நரகத்திலிருந்து பெற்றோரை காப்பற்றுகிறவன் தான் 'புத்ரன்' என்று சாஸ்திரம் சொல்கிறது. நான் சொல்லவில்லை. .

“அக்ஷய வடம், அக்ஷய வடம்” என்று ஒரு வார்த்தை காதில் விழுகிறதே. அது என்ன? கயாவில் நாம் 64 ஸ்ரார்த்த பிண்டங்களை அங்கு தான் இடுகிறோம்.
ஸ்ராத்தம் பண்ணுபவர்கள் கயாவில் பித்ருக்களுக்கு, நமது முன்னோர்களுக்கு மட்டுமல்ல, தெரிந்தவர்கள் அறிந்தவர்களுக்கும் 'திருப்தியத', திருப்தியத' என்று மனமுவந்து அளித்து அவர்களை வேண்டுகிறோமே. அக்ஷய வடம் என்பது ஒரு மஹா பெரிய வ்ருக்ஷம். 'வடம்' (தமிழில் சின்ன 'ட") ஆல மரம். சென்னைக்கருகே ல் திரு ஆலம் காடு (திருவாலங்காடு - வடாரண்யம் என்று பெயர் கொண்டது.)

இந்த அக்ஷய வடத்தின் கீழே நிழலில் தான் பிண்ட பிரதானம் இடுவார்கள். இதில் முக்யமாக 64 பிண்டங்களில் பெற்ற தாய்க்கு மட்டுமே 16 பிண்டங்கள். ஆந்த 16 பிண்டங்களை அம்மாவுக்காக ஒவ்வொரு வாக்யமாக சொல்லி இடுகிறோம். அந்த பதினாறு தான் “மாத்ரு ஷோடஸி”.

1. கர்பஸ்ய உத்கமநே துகம் விஷமே பூமி வர்த்மநி |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''கொஞ்சமா நஞ்சமா நான் உன்னை படுத்தியது. ஒரு பத்து மாத காலம் எப்படியெல்லாம் உன்னை உதைத்திருக்கிறேன். என்னையும் சுமந்தபடி மேடும் பள்ளமுமாக நீ அலைந்தாயே. நான் கொடுத்த கஷ்டத்தை துளி கூட நீ பொருட்படுத்த வில்லை. என்னை திட்டவில்லையே. சந்தோஷமாக என்னை உள்ளே அடக்கிய உன் வயிறை எண்ணற்ற முறை ஆசையாக தடவி கொடுத்தாயே. இதோ நான் செய்த பாவங்களுக்காக உனக்கு இந்த முதல் பிண்டம். பரிகாரமாக ஏற்றுக்கொள்வாயா?

2. மாஸி மாஸி க்ருதம் கஷ்டம் வேதநா ப்ரஸவே ததா |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''ஏன் சோர்ந்து போயிருக்கிறாய். உன் பிள்ளை உள்ளே படுத்துகிறானா? பிரசவ காலம் கஷ்டமானது தான். மாசா மாசம் நான் வளர வளர உனக்கு துன்பத்தை தானே அதிகமாக கொடுத்துக் கொண்டே வந்தேன். இந்தா அதற்கு பரிகாரமாக நான் இடும் இந்த இரண்டாவது பிண்டம். ஏற்றுக்கொள் அம்மா.

3. பத்ப்யாம் ப்ரஜாயதே புத்ரோ ஜநந்யா: பரிவேதநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

அம்மா, நான் அளித்த வேதனையில் நீ பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துக்கொண்ட தாங்கமுடியாத துன்பம் நான் உன்னை வயிற்ருக்குள் இருந்தபோது உதைத்தது தானே. அதற்காக ப்ராயச்தித்தமாக இந்த 3வது ஸ்பெஷல் பிண்டம் உனக்கு. என் தாயே.

4. ஸம்பூர்ணே தசமே மாஸி சாத்யந்தம் மாத்ருபீடநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''அம்மா, இந்த 4 வது பிண்டம் உனது பூரண கர்ப காலத்தில் நீ என்னால் பட்ட வேதனைக்காக -- ஒரு பரிசு -- என்றே ஏற்றுக்கொள். என்னைப் பொருத்தவரை எனது பிராயச்சித்தம் என்று நான் இடுகிறேன்.

5. சைதில்யே ப்ரஸவே ப்ராப்தே மாத விந்ததி துஷ்க்ருதம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''ஏண்டி மூச்சு விடறது கஷ்டமாக இருக்கா. கொஞ்ச காலம் தான் பொறுத்துக்கோ'' .என்று உன் உறவுகள், நட்புகள் கேட்குமே. அவ்வாறே மனமுவந்து நான் விளைத்த துன்பத்தை, வேதனையை நீ தாங்கினாயே. அதற்கு பரிகாரம் தான் இப்போது என் கையில் நான் தாங்கும் இந்த ஐந்தாவது பிண்டம். ஏற்றுக்கொள் என் அருமைத் தாயே.''

6. ' பிபேச்ச கடுத்ரவ்யாணி க்வாதாநி விவிதா நி ச|
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''குழந்தை வயித்திலே இருக்கும்போது இதெல்லாம் எனக்கு வேண்டாம். அப்புறமா சாப்பிடறேன்'' என்று உனக்கு பிடித்ததை எல்லாம் கூட வேண்டாமே என்று உதறினாயே. எனக்காகவே பத்தியம் இருந்தாயல்லவா. நான் நோயற்று வளர, வாழ எத்தனை தியாகம் செய்தாய். நான் உனக்கு செய்த பாவத்திற்கு தான் இந்த ஆறாவது பிண்டம். அம்மா இதற்கு மேல் என்னால் என்ன செய்ய முடியும் சொல்?'

7. அக்நிநா சோஷயேத்தேஹம் தரிராத்ரோ போஷணேந |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''நான் குவா குவா என்று பேசி பிறந்து ச�� நாட்கள் தான் ஆகிறது. அப்போது நீ பசியை அடக்கி வெறும் வயிற்றோடு எத்தனை நாள் சரியான ஆகாரம் இன்றி தூக்கமின்றி வாடினாய். எனக்கு மட்டும் பால் நேரம் தவறாமல் கிடைத்ததே. அந்த துன்பத்தை நான் உனக்கு கொடுத்ததற்கு பரிகாரம் தான் இந்த 7வது பிண்டம்..

8. ராத்ரௌ மூத்ரபுரீஷாப்யாம் க்லிந்ந: ஸ்யாந்மாத்ரு கர்பட |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. கண்ணில் நீரும் சுரக்கிறது. எத்தனை இரவுகள் அசந்து தூங்கும் உன் புடவையை ஈரம் பண்ணியிருக்கிறேன். படவா என்று செல்லமாக தானே சிரித்துக்கொண்டே வேறு துணி எனக்கும் மாற்றினாய். இதற்கு நான் உனக்கு இடும் கைம்மாறு தான் இந்த 8 வது பிண்டம். இதையாவது ஈரமில்லாமல் தருகிறேனே.

9. ''தயா விஹ்வலே புத்ரே மாதா ஹ்யந்தம் ப்ரயச்ச தி |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''நான் சுகவாசி. எனக்கு எப்போது தாகம், பசி, தூக்கம், எதுவுமே தெரியாது.நீ தான் இருந்தாயே, பார்த்து பார்த்து அவ்வப்போது, எனக்காக நீ இதெல்லாம் செய்தாயே. இந்த பெரிய மனது பண்ணி என்னை வளர்த்த உனக்கு நான் எவ்வளவு துன்பம் தந்திருக்கிறேன். அதற்காக பிராயச் சித்தமாக இந்த 9வது பிண்டம்.
.
10. திவாராத்ரௌ ஸதா மாதா ததாதி நிர்பரம் ஸ்தநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''ஒரு சின்ன செல்ல தட்டு என் மொட்டை மண்டையில். ''கடிக்காதேடா..'' . நான் பால் மட்டுமா உறிஞ்சினேன். என் சிறு பல்லால் உன்னை கடித்தேனே. வலித்ததல்லவா உனக்கு. இந்தா அதற்காக ப்ளீஸ் இந்த பிண்டத்தை ஏற்றுக்கொள் அம்மா

11. மாகே மாஸி நிதாகே சசிரேத்யந்த து கிதா |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''வெளியே பனி, குழந்தைக்கு ஆகாது. இந்த விசிறியை எடு. குழந்தைக்கு உள்ளே வியர்க்கும். வாடைக்காத்து. ஜன்னலை மூடு. எனக்கு காத்து வேண்டாம். குழந்தையைப் போர்த்தவேண்டும். கம்பளி கொண்டுவா. குழந்தைக்கு குளிருமே.'' காலத்திற்கேற்றவாறு என்னை கருத்தில் கொண்டு காத்த என் தாயே, நான் பிரதியுபகாரமாக கொடுப்பதெல்லாம் இந்த சிறு பிண்டம், 11வதாக எடுத்துக்கொள்.'

12. புத்ரே வ்யாதி ஸமாயுக்தே மாதா ஹா க்ரந்த காரிணி
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

எத்தனை இரவுகள், எத்தனை மன வியாகூலம். குழந்தை நெற்றி எல்லாம் சுடறதே, சுவாசம் கஷ்டமாயிருக்கே. சளி உபாதையாக இருக்கிறதே என்று வருந்தி, நாமக் கட்டி, மஞ்சள், விபூதி, பத்து எல்லாம் தடவி மடியில் போட்டு ஆட்டி, தட்டி, என்னை வளர்த்தாயே, கண்விழித்து உன் உடல் நோய்வாய்ப்பட்டாயே . அதற்காகத்தான் இந்த 12வது பிண்டம் தருகிறேன்.

13. யமத்வாரே மஹாகோரே மாதா சோசதி ஸந்ததம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

நான் இந்த பூலோகத்தில் இப்போது கார், பங்களா வசதிகளோடு கை நிறைய காசோடு . ஆனால் இதெல்லாம் அனுபவிக்காமல் நீ யமலோகம் நடந்து சென்று கொண்டிருக்கிறாயே. என் கார் அங்கு வராதே. வழியெல்லாம் எத்தனை இடையூறு. அவை எதுவுமே உனக்கு துன்பம் தராமல் இருக்க நான் தர முடிந்தது இந்த 13வது பிண்டம் தான் அம்மா.

14. யாவத்புத்ரோ ந பவதி தாவந்மாதுச்ச சோசநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

நான் இப்போது, பெரிய டாக்டர், எஞ்சினீயர், வக்கீல், ஜட்ஜ், ஹெட்மாஸ்டர், கம்ப்யூடர் ஸ்பெஷலிஸ்ட் -- நீ இல்லாவிட்டால் நானே எது.? ஏது? ஆதார காரணமே, என் தாயே, இந்த 14வது பிண்டம் தான் அதற்கு பரியுபகாரமாக உனக்கு என்னால் தர முடிந்தது.

15. ஸ்வல்ப ஆஹாரஸ்ய கரணீ யாவத் புத்ரச்ச பாலக: |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

திருப்பி திருப்பி சொல்கிறேனே. நான் வளரத்தானே நீ உன்னை வருத்திக்கொண்டாய். நீ வேண்டியதை திரஸ்கரித்தாய். நான் புத்தகத்தில் தான் ''தன்னலமற்ற'' தியாகம் என்று படிக்கிறேன். நீ அதை பிரத்யக்ஷமாக புரிந்து அனுபவித்தவள். எனக்காக நீ கிடந்த பட்டினி, பத்தியம் எல்லாவற்றிற்கும் உனக்கு நான் தரும் பிரதிஉபகாரம் இந்த 15வது பிண்டம் ஒன்றே.

16. காத்ரபங்கா பவேந்மாதா ம்ருத்யு ஏவ ந ஸம்சய |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
நான் சுய கார்யப் புலி. சுயநல விஷமி. உன்னில் நான் உருவாகி, கருவாகி, சிறுவனாகி, பெரியவனாகி, இப்போது உன் மரண வேதனையை சற்றே உணர்ந்தவனாக கண்ணில் நீரோடு தரும் இந்த 16வது கடைசி கடைசி பிண்டத்தை ஏற்றுக்கொள் என் தாயே. தெய்வமே. என்னை மன்னித்து ஆசிர்வதி.

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Aanmeekam...

Post by Ponbhairavi »

நன்றி தஞ்சாவூரான்
படிக்கும்போதே கண்கள் பனிக்கின்றன!!
சந்யாசிகள் தாயாருக்கு மாத்திரம் நமஸ்காரம் பண்ணுவதன் அர்த்தம் புரிகிறது

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share

வில்வம், துளசி!
வில்வம் -ஏழு ஜென்ம பாவம் விலக ஒரு வில்வம் போதும்
அதன் பயன்களும் மருத்துவ குணங்களும் பற்றிப் பார்ப்போம்


ஏழு ஜென்ம பாவம் விலக ஒரு வில்வம் போதும் என்பதைப் பற்றித் தெரிந்துக்கொள்ளலாம்

சிவனாருக்கு ( சிவபெருமானுக்கு) அர்ச்சனைக்கு உகந்தது வில்வம் என்பதை அறிவோம்.

வில்வத்தில் பல வகைகள் உள்ளன அதில் மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம், என பல வகைகள் உள்ளன

குறிப்பாக, மூன்று இதழ் கொண்ட வில்வ இதழ்களையே பூஜைக்குப் பயன்படுத்து கிறோம்

ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ மரங்களும் உள்ளன

பூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியோதயத்துக்கு
( சூரியன் உதிப்பதற்கு முன்னதாக) முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்வது உத்தமம்

வில்வத்துக்கு நிர்மால்யம் கிடையாது என்பதால், சிறிது தண்ணீரை வில்வத்தில் தெளித்துவிட்டு, பூஜைக்குப் பயன்படுத்தலாம்

தினமும் சிவனாருக்கு வில்வம் சார்த்தி அர்சனை செய்து வழிபடுவது சிறப்பு

மகா சிவராத்திரி நாளில், வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வம் சார்த்தி சிவனாரைத் தரிசித்தால், ஏழேழு ஜென்மத்துப் பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்

வில்வ வழிபாடும் பயன்களும்

சிவபெருமானுக்கு பிரியமான பத்திரம் வில்வமாகும். ஒரு வில்வத்தினால் பூசை செய்தால் அது லட்சம் ஸ்வர்ண புஷ்பத்துக்குச் சமமாகும்

வில்வத்தில் லட்சுமி வசம் செய்கிறாள்.
வடமொழியில் வில்வம் ஸ்ரீபலம். சிரேஷ்ட வில்வம். கந்தபலம் எனப் பல பெயர்களால் சுட்டப்படுகிறது

மண்ணுலகில் உள்ள ஆன்மாக்களின் ( உயிர்களின்) பாவங்களைப் போக்குவன ஈசனின் இச்சா, கிரியா, ஞான சக்தி வடிவமாய் ஈசனின் அருளால் பூமியில் தோன்றியது வில்வம்

எனவே சிவபெருமானின் தலவிருட்சம் ஆகும் இவ்விருட்சத்தைப் பூசிப்பவர்கள் சகல சித்திகளும் ,நன்மைகளும் அடைவார்கள்

வில்வத்தின் பெருமையை சாஸ்திரங்கள் ,புராணங்கள் மிக தெள்ளத் தெளிவாக விளக்கமாகக் கூறுகின்றன

வில்வத்தின் மூன்று இலைகளும் சிவன் ஏந்தியுள்ள திரிசூலத்தின் வடிவத்தையும் இறைவனின் முக்குணங்களையும் குறிப்பனவாகவும் விளங்குகின்றன

ஊழிக்காலத்தில் அனைத்தும் அழியும் என உணர்ந்த வேதங்கள் தாங்கள் அழியாதிருக்க என்னவழி என ஈசனிடம் கேட்க ஈசனும் திருவைகாவூர் ( திருகருகாவூர்) திருத்தலத்தில் வில்வ மரத்தின் வடிவில் நின்று தவம் செய்யமாறு அருளினார்

அதன்படி வேதங்களும் வில்வமரங்களாகத் தவமியற்றியதால் திருவைகாவூர் என்ற ஊர் வில்வராண்யம் எனச் சிறப்புப் பெயர் பெற்றது

சிவன் திருவாதிரை நட்சத்திரம். அது எரி நட்சத்திரங்களாக விளங்குவதால் சிவனின் சூட்டினைத் ( வெப்பத்தை) தணிக்க எம் முன்னோர்கள் குளிர்மை பொருந்திய வில்வத்தை சாத்தி வழிபட்டுள்ளனர்

அத்துடக் சிவன் இமயமலையில் இருப்பவன். இமயத்தில் பனி அதிகம். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நன்மையாகத் தனக்குச் செய்யப்படும் பூசைகளுக்கும், அர்ச்சனைக்கும் வில்வத்தை ஏற்றுக் கொண்டான்

ஏனெனில் வில்வம் பனியாலும் சளியாலும் வரும் துன்பங்களைப் போக்க வல்ல சிறந்த மருத்துவ குணம் கொண்டதாகும்

வில்வமரத்தை வீட்டிலும், திருக்கோவில்களிலும் வளர்ப்பதால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்

ஒரு வில்வத்தை சிவனுக்கு அர்ப்பணிப்பதால் சகல பாவங்களும் ,துன்பங்களும் சூரியனைக் கண்ட பனி போல் நீங்கி அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

வில்வத்தின் இலை பல வகையான நோய்களுக்கு மருந்தாக விளங்குகின்றது

சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்வதற்கு தேவையான வில்வத்தை மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, ஆகிய தினங்களில் வில்வத்தைப் பறிக்கக் கூடாது மேலும் இந்நாட்களில் பூசைக்குத் தேவையானதை முதல் நாளே பறித்து வைக்க வேண்டும்

வில்வத்தைப் பறித்து ஆறுமாதம் வரை வைத்துப் பூசை செய்யலாம். உலர்ந்த வில்வம் ஏற்கனவே பூஜித்த வில்வம் முதலியவற்றாலும் பூசை செய்யலாம். அவ்வளவு புனிதமானது. சிவ அர்ச்சனையில் வில்வ அர்ச்சனை கோடி புண்ணியம் தரவல்லது.வீடுகளில் வில்வ மரம் வளர்ப்பது நல்லது.



நாம் வீட்டில் வில்வமரம் நாட்டி வளர்ப்பதினால் பல்வேறு நன்மைகள் அடைய முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை மேலும் அஸ்வமேதயாகம் செய்த பலன் ஏற்படும்.

மேலும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் ( திருவமுது) செய்த புண்ணியம் உண்டாகும்.

கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும்.

108 சிவாலயங்களை வலம் வந்து தரிசித்த பலாபலன் உண்டாகும்.

இம் மரத்தின் காற்றை நுகர்ந்தாலோ அல்லது அதன் நிழல் நமது சரீரத்தில் பட்டாலோ அதீத சக்தி கிடைக்கும்.

சிவனிற்கு பிரியமான வில்வார்ச்சினை மூலம் சிவனின் திருவருட் ( சிவபெருமானின் திருவருளை) கடாட்சத்தைப் பெறமுடியும்

வில்வமரத்தை முறைப்படி விரதமிருந்து பூஜிப்பவர்க்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

வீட்டில் வில்வமரம் வைத்து வளர்ப்பவர்களுக்கு ஒருபோதும் நரகமில்லை மேலும் எமபயம் ஒரு போதும் வாராது

ஒரு வில்வ இதழைக் கொண்டு இறைவனை அர்ச்சிப்பது இலட்சம் ஸ்வர்ணபுஸ்வங்களால் இறைவனை அர்ச்சிப்பதற்கு சமமானதாகும்

வில்வம் பழத்தின் சதையை நீக்கி அதனை உலர்த்திக் குடுவை யாக்கி அதில் விபூதியை வைத்துப் பயன்படுத்துவது மேலான செயலாகக் கொள்ளப்படுகிறது.

வில்வம் பறிக்கும்போது என்ன சொல்ல வேண்டும்?

சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலையைப் பறிக்கும்போது, பயபக்தியுடன், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் மனோபாவத்துடன் பறிக்க வேண்டும்

மேலும், அவ்வாறு பறிக்கும்போது வில்வ மரத்திடம் அனுமதி பெறுவதாக மனத்தில் ( மானசீகமாக நினைத்து) எண்ணிக்கொண்டு இந்த சுலோகத்தைச் சொல்ல வேண்டும்.

நமஸ்தே பில்வதரவே ஸ்ரீபலோதய ஹேதவே
ஸ்வர்காபவர்க ரூபாய நமோ மூர்தி த்ரயாத்மனே
ஸம்ஸ—ர விஷவைத்யஸ்ய ஸ–ம்பஸ்ய கருணாநிதே:
அர்சனார்த்தம் லுனாமி த்வாம் த்வத்பத்ரம் தத்க்ஷமஸ்வ மகே

பொருள் விளக்கம்

போகமோட்சம் உருவாகவும், மும்மூர்த்திகளின் உருவாகவும், லட்சுமி கடாட்சத்தை அளிப்பதற்குக் காரணமாகவும் உள்ள வில்வ மரத்தை வணங்குகிறேன்

ஓ வில்வ மரமே! பிறப்பு இறப்பாகிற விஷயத்துக்கு மருத்துவனும், கருணைக்கடலுமுமான சாம்பசிவனின் பூஜைக்காக தங்கள் வில்வ இலையைக் கிள்ளி எடுக்கிறேன். அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். -இவ்வாறு பிரார்த்தனை செய்து, பிறகு இலையைப் பறிக்க வேண்டும்.

வில்வ இதழின் மருத்துவக் குணங்கள்

இவற்றைவிட வில்வம் மருத்துவரீதியில் பயன்மிக்கதாகும். இதனை “சிவமூலிகைகளின் சிகரம்” எனவும் அழைப்பர்.


வில்வம் இலையை அரைத்து பொடி செய்து காலை வேளையில் பயன்படுத்திவர கண்பார்வை சிறப்பாக அமையும். மூக்கடைப்பு, சளி, இருமல், சைனஸ் போன்றவற்றால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். பல்வலி, பல்சொத்தை, பல்கூச்சம் போன்றவற்றால் அவதியுறுபவர்களுக்கு அருமருந்தாகும்.

நஞ்சை முறிக்கும் துளசி!

துளசியை ஒரு தெய்வீகச் சின்னமாக எண்ணி வழிபடுகிறோம். துளசியில் அடங்கியிருக்கும் மருத்துவக் குணங்களை கருத்தில் கொண்டுதான் தெய்வீகச் சின்னமாக நம் முன்னோர்கள் உருவகப்படுத்தி சொல்லியிருக்கிறார்கள்.

அரி, ராம துளசி, கிருஷ்ண துளசி என்றும் துளசி அழைக்கப்படுகிறது. துளசியில் நற்றுளசி, கருந்துளசி, செந்துளசி, நிலத்துளசி, கல்துளசி, நாய்த்துளசி, முள் துளசி எனப் பலவகை உண்டு. இதன் சுவை கார்ப்பு.

நற்துளசி: கபத்தைப் போக்கும். வயிற்றுவலி குணமாகும். தாகத்தைப் போக்கும். மந்தத்தை நீக்கும். சுவையின்மையைப் போக்கும்.

நாய்த்துளசி: கபத்தை நீக்கும். இருமல், சளி, ஜன்னி போன்றவற்றைப் போக்கவல்லது.

நிலத்துளசி: தாய்ப் பாலால் குழந்தைகளுக்கு வரும் மந்தத்தைப் போக்கும். கனச்சூடு நீக்கும். கபசுரம், பித்த சுரம், குளிர் சுரத்தைப் போக்கவல்லது.

கல்துளசி: இது கட்டி, வண்டுக்கடி, பூச்சிக்கடி போக்கும்.

முள்துளசி: வெட்டுப்புண், கபம் போன்றவற்றுக்கு சிறந்த மருந்தாகும்.

செந்துளசி: விஷத்தை முறிக்கும். கபத்தைப் போக்கும். சைனஸைப் போக்கவல்லது.

கருந்துளசி: இருமல், இழைப்பு குணமாகும். செருமல் நீங்கும். வயிற்றுப் புழு நீங்கும். மார்புச் சளி குணமாகும்.

துளசியின் மருத்துவப் பலன்கள்:

* அலர்ஜியினால் வரும் ஒவ்வாமையை நீக்குகிறது.

* நுரையீரலைப் பலப்படுத்துகிறது.

* இதன் இலை சுவாசப் பாதையில் உள்ள தொற்றுநோய்க் கிருமிகளை செயலிழக்கச் செய்கிறது.

* ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது.

* வயிற்று வலியைப் போக்குகிறது.

* உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

* ஆஸ்த்துமாவிற்கு தீர்வாக உள்ளது.

* சுரத்தைப் போக்கும் சஞ்சீவி.

* பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோயைப் போக்கும்.

* கொசுக்களை ஒழிக்க துளசி புகைச் சிறந்தது.

எப்படிப் பயன்படுத்துவது?

* துளசி இலையை நீர் சேர்த்துக் காய்ச்சி ஆவி பிடிக்கச் சுரம் நீங்கும்.

* மனச்சோர்வு நீங்க, தினமும் காலையில் 15 துளசி இலைகளை பருப்புடன் சேர்த்து மூன்று மாதம் அருந்த மனச்சோர்வு நீங்கி உடல், உள்ளம் பலம் அடையும்.

* துளசி, சுக்கு, பனை வெல்லம், பால் சேர்த்துத் தயாரிக்கப்படும் டீயை அருந்த சோர்வு நீங்கும். சுறுசுறுப்பாகும்.

* துளசி வேரைப் பொடித்து நெய்யோடு கலந்து அருந்த ஆண்மை அதிகரிக்கும்.

* தேள் கடிக்கு துளசிச் சாறுடன் வேப்ப இலைச்சாறு, மிளகு சேர்த்து அருந்தி, கடிவாயில் பூச நஞ்சு முறிவு ஏற்படும்.

* துளசிச் சாறு, இஞ்சிச் சாறு சம அளவு எடுத்து அதனுடன் மிளகுத்தூள் ஒரு சிட்டிகை சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் மூக்கடைப்பு, தும்மல், நெஞ்சு சளி பிரச்னைகள் அகலும்.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share
விபூதி*

எந்தெந்த விரல்களால் *விபூதியை* தொடலாம்? எந்தெந்த விரல்களால் விபூதியை தொடக்கூடாது?

கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடும்போது, அங்கே அர்ச்ச‍கர் நமக்கு விபூதியும் குங்கும்மும் அளிப்பார். அப்ப‍டி அளிக்க‍ப் படும் விபூதியை வாங்கி நெற்றியில் இடும்போது, நாம் அதை எப்ப‍டி, எந்தெந்த‌ விரல்களால் எடுத்து நெற்றியில் இடுகி றோம் என்பதை நம்மில் பலருக்கு தெரிவதில்லை.

விபூதியை எடுக்க‍ சில‌ விரல்களை பயன் படுத்தும் போதும் தீமையும், சில விரல்க ளை பயன்படுத்தும்போது அதீத நன்மைக ளும் ஏற்படும். ஆகவே விபூதியை எடுக்கும்போது, கீழே குறிப்பி ட்டுள்ள‍ வரிகளில் உள்ள‍ முறைகளை பயன்படுத்தி, மிகவும் கவனமாக எடுத்து அணியவேண்டும்.

*கட்டை விரல்*

கட்டை விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் தீராத வியாதி வரும்.

*ஆள் காட்டி விரல்*

ஆள் காட்டி விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் – பொருட் கள் நாசம்.

*நடுவிரல்*

நடுவிரலால் விபூதியை தொட்டு இட்டுக்கொண்டால் அணிந்தா ல் நிம்மதியின்மை.

*மோதிர விரல்*

மோதிர விரலால் விபூதியை தொட்டுக்கொண்டு அணிந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை.

*சுண்டு விரல்*

சுண்டு விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் கிரகதோஷம் எற்படும்.

*மோதிர விரல் – கட்டை விரல்*

மோதிர விரலாலும், கட்டை விரலாலும் சேர்த்து விபூதியை எடுத்து மோதிர விர லால் விபூதியை இட்டுக் கொணடால் உலகமே வசப்படம். எடுக்கும் முயற்சி வெற்றி பெரும்......*நகத்தை பற்களால் கடிக்க கூடாது.

*மழை பெய்யும் பொழுது ஓடக்கூடாது.

*தரையில் கை ஊன்றிச் சாப்பிடக்கூடாது.

*துணி இல்லாமல் குளிக்கக் கூடாது.

*நெருப்பை வாயினால் ஊதக்கூடாது.

*செவ்வாய், வெள்ளிக் கிழமைகள், சதுர்த்தி, சதுர்த்தசி, சஷ்டி, பௌர்ணமி, நவமி ஆகிய திதிகளில் முடிவெட்டுதல் கூடாது ஆனால் அந்தத் திதி அமையும் நாள் ஞாயிறு அல்லது வியாழனாயிருந்தால் மேற்படிதிதி தோஷம் இல்லை.

*அசுத்தமான பொருள்களை நெருப்பில் போடக்கூடாது. அத்துடன் துடிதுடிக்கப் புழுபூச்சிகளை நெருப்பில் போடுவது பிரம்மகத்திதோஷத்தை உண்டாக்கும்.

*ஆலயத்தில் இரவுநேரத்தில் குளிக்கக்கூடாது. கங்கையில் மட்டும் எந்த நேரமும் குளிக்கலாம். ஈரத்துணியைத் தண்ணீரில் பிழியக்கூடாது, உதறக்கூடாது
*தண்ணீரிலும்,எண்ணெய்யிலும் நம் நிழலை நாம் பார்க்கக்கூடாது.
*இருட்டிலோ, நிழல் விழும் இடங்களிலோ அமா்ந்து உண்ணக்கூடாது.வெளிச்சத்தில் அமா்ந்தே உண்ணவேண்டும்.

*உண்ணும்போது முதலில் இனிப்பையும், முடிவில் கசப்பையும் உண்ணவேண்டும்.

*ஈர ஆடையுடனும், தலைமுடியை அவிழ்த்துவிட்டும் உண்ணக்கூடாது.

*நெல்லிக்காய், இஞ்சி, தயிா், வறுத்தமா. இவற்றை இரவில் உண்ணக் கூடாது.

*உறவினர்களை ஊருக்கு அனுப்பிவிட்டு உடனே எண்ணெய் தேய்த்து நீராடக் கூடாது.

*கன்றுக்குட்டி,மாடு ஆகியவை கட்டியிருக்கும்கயிற்றை தாண்டக்கூடாது.

*பெண்கள் கண்ணீா்விடும் வீட்டில் செல்வம் தங்காது. அவா்கள் தலையை விாித்துப்போட்டிருப்பதும், இரு கைகளாலும் தலையை சொறிவதும் வறுமையை உண்டாக்கும்.



*தீட்டு உள்ளவா்கள் கட்டிலில் படுக்க கூடாது. தரையில் தான் படுக்க வேண்டும்.

*மாலைவெயில், ஓமப்புகை, தூயநீா்பருகுதல், இரவில் பாற்சோறு சாப்பிடுதல் என்பன ஆயுளைவிருத்தி செய்யும்.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share

சனி கிரஹ சாந்தி!
=================

யாரும் சனியோட கடுமையால் கடுமையாக
பாதிக்க படக் கூடாது என்பதற்காக மிக எளிய
பரிகாரம்...

சனிக்கிழமை அன்று பச்சரிசியை ஒரு
கையில் அள்ளி அரிசியாக அல்லது
அதை நன்கு பொடி செய்து
சூரியநமஸ்காரம் செய்து விட்டு, விநாயகப் பெருமானை மூன்று சுற்று சுற்றி விட்டு அந்த
அரிசியை விநாயகரை சுற்றிப் போட்டால்,அதை
எறும்பு தூக்கிச் செல்லும்.

அப்படித் தூக்கி சென்றாலே
நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மை விட்டுப் போய் விடும்.
வன்னி மரத்தடி விநாயகராக இருந்தால் ,
அது இன்னும் விசேஷம்.
சனிக்கிழமைகளில் இதை செய்யவும்.

அப்படி தூக்கிச் சென்ற பச்சரிசி மாவை
எறும்புகள் தமது மழை காலத்திற்காக
சேமித்து வைத்துக் கொள்ளும்.

எறும்பின் எச்சில் அரிசி மாவின் மீது பட்டதும் அதன் கெடும் தன்மை நீங்கி விடும்.இந்த
பச்சரிசிமாவை சாப்பிடுவதற்கு
இரண்டரை வருடங்கள்
எடுத்துக் கொள்ளும்.

இப்படி இரண்டே கால் வருடங்கள் வரை
எறும்புக் கூட்டில் இருப்பதை
முப்பத்து முக்கோடி தேவர்கள்
கவனித்துக் கொண்டிருப்பார்கள்.இரண்டரை
ஆண்டிற்கு ஒருமுறை கிரக நிலை
மாறும்.அப்படி மாறியதும்,அதன் வலு
இழந்து போய் விடும்.இதனால், நாம்
அடிக்கடி பச்சரிசி மாவினை
எறும்புக்கு உணவாக போட வேண்டும்.
ஓர் எறும்பு சாப்பிட்டால் 108
பிராமணர்கள் சாப்பிட்டதற்குச் சமம்.

எனவே இது எத்தனை புண்ணியம்
வாய்ந்த செயல் என்று தெரிந்து
கொள்ளுங்கள்.

இதனால்,சனிபகவானின் தொல்லைகள்
நம்மைத் தாக்காது.

ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி,அர்த்தாஷ்டகச்சனி,சனி மகா தசை நடப்பவர்களுக்கு , இந்த செயல் ஒரு மிக பெரிய வரப்ரசாதம்
ஆகும்.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share

பாண்டவர்கள் ஐவர் என்பது தெரியும் பாண்டவர்களின் அன்னையான குந்திதேவிக்கு சூரியன் அருளால்
பிறந்தவர் கர்ணன் ஆக மொத்தம் ஆறு பேர்

கர்ணன் செஞ்சோற்று கடன் தீரவேண்டி கௌரவர்களுடன் இருந்து போரில் உயிர் விட்டான் அதன் பின்பு தான்
பாண்டவர்களுக்கே கர்ணன் தங்களது மூத்த சகோதரன் என்று தெரிந்தது

அவருக்கு மட்டுமல்ல ஆசாரியர் துரோணருக்கு சீடனாக கிருபர் சிஷ்யனாக போரில் தங்களால்
கொல்லபட்ட துரியோதணன் உட்பட நூறு கௌரவர்களுக்கும் அந்த வம்சத்தின் மூத்த அண்ணனாக இருந்து
தர்மர் அந்திமகாரியங்களை செய்தார்.

ஆனால் கௌரவர்கள் நூறுபேரும் குருச்சேத்திர யுத்தத்தில் மடித்த சில ஆண்டுகளில் இறந்து போன
அவர்களின் தந்தையான திருதராஷ்டிரனுக்கு அந்திம க்ரியை செய்தது கௌரவர்களில் ஒருவன் என்பது
தெரியுமா?

கௌரவர்கள் நூறுபேர் இறந்த பின் கௌரவரா என கேட்காதீர்கள் கௌரவர்கள் நூற்றொருவர் பின் அவர் ஏன்
மற்ற கௌரவர்களுக்கு அந்திம காரியம் செய்யவில்லை என்றால் அதுவும் காரணமாகவே

திருதுராஷ்ட்ரனின் பட்ட மகிஷி காந்தாரியின் மகன்களுக்கு அவர்களது சந்திகளுடன் போரில்
மரணமேற்பட்டதால் பாண்டுவின் மகன்களில் மூத்தவரான தர்மர் அந்திம காரியம் செயதார். தன் தாயின்
கர்பத்தில் உதித்தவர் ஆகையாலே்கர்ணனுக்கும் செய்தார்

ஆனால் திருத்ராஷ்ரனுக்கு அந்திம காரியம் செய்தது யுயுத்சு என்னும் கௌரவன்

யார் இந்த யுயுத்சு? இவன் எப்படி கௌரவர்களில் ஒருவன் ஏன் இவன் த்ருத்ராஷ்டனுக்கு மட்டும்
அந்திம க்ரியை செய்தான் என்கிறோம் என பார்ப்போம்

அதற்க்கு ஒரு சம்பவத்தை விளக்குகிறேன் உங்களுக்காக

குருசேத்ர யுத்தத்திற்காக
தேர்ப் படை, யானைப் படை, குதிரைப் படை, காலாட் படை எனப் பாண்டவர்களின் நால்வகைப் படைகள்
ஒருபுறம் நிற்க்க

எதிர்புறம் கௌரவர்களின் நால்வகைப் படைகளும் அணிவகுத்து ஒன்றுக்கொன்று எதிரெதிராக
நின்றிருந்தன.

இருபுறமும் மாபெரும் வீரர்கள் கூட்டம், கையில் வாளோடும் வேலோடும் வில், அம்பு கதை முதலிய
ஆயுதங்களோடும் போரிடத் தயாராய்த் துடிதுடிப்புடன் காத்திருந்தனர்

அதிவிரைவில் யுத்தம் தொடங்கப் போகிறது.

இடைபட்ட நேரத்தில்

அர்ச்சுனன் தன் தேர்த்தட்டில் சாரதியாக வீற்றிருந்த ஸ்ரீகிருஷ்ணனைப் பணிவோடு வணங்கி நேராக
பார்த்து மெல்லிய குரலில் உரிமையுடன் கேட்டான்:

‘‘கண்ணா! இதோ யுத்தம் தொடங்கப் போகிறது. எனக்கு உன்னிடமிருந்து தெளிவான பதில் தேவை.

கண்ணன் கேட்டான் என்ன கேள்விக்கு பதில் வேண்டும்
மீண்டும் கீதையில் ஏதேனும் சந்தேகமா? என்றான்

அர்சுனன் :- அது இல்லை கண்ணா இந்த போரில் துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனம் தானே உன் கொள்கை?


அதாவது தீயவர்களை அழித்து அடியவர்களைக் காப்பாற்றுவது! சரிதானே அப்படியானால் கௌரவர்கள்
மொத்தபேரும் அழிவார்கள் அல்லவா?’’ என்றான்

கண்ணன்:- அர்ச்சுனா! நீ சொன்னதில் ஒரு பாதி சரி. ஒரு பாதி தவறு. தீயவர்களை அழிப்பேன்.
ஆனால், கௌரவர்கள் அத்தனை பேரும் அழிவார்கள் என்று சொல்ல முடியாது. கௌரவர்களில் நல்லவர்
யாரேனும் இருக்கலாம் அல்லவா?’’ என்றான்

அர்சுனன் துனுக்குற்று்

‘‘கௌரவர்களில் நல்லவரா? பீஷ்மர், துரோணர் கிருபர் சல்லியன் போன்ற நல்லவர்களெல்லாம் கூட,
கௌரவர்களோடு கூட்டு சேர்ந்ததால் அழியப் போகிறார்கள் என்கிறபோது கௌரவர்களில் யாரேனும் ஒரு
நல்லவன் இருந்தாலும் அவன் கௌரவர்களுடன் இருப்பதால் அழிய வேண்டியவன் தானே?
நூறு கௌரவர்களும் அழிக்கப்பட வேண்டியவர்கள்தானே கண்ணா?’’ என்றான்

கண்ணன் கலகலவென நகைத்தான். ‘‘நூறு கௌரவர்கள் அழிக்கப்படுவார்கள் என்பது சரியல்ல, அர்ச்சுனா!
கௌரவர்களில் நூறுபேர் அழிக்கப்படுவார்கள் என்பதே சரி,’’ என்று புதிராக பதில் சொன்னான்.

‘‘நீ சொல்வது புரியவில்லை கண்ணா!’’ என்றான் அர்சுனன்

கண்ணன் சொன்னார் பொறுத்திரு. புரியும்!’’

இவர்கள் இப்படிப் உரையாடிக் கொண்டிருந்த போது

தர்மபுத்ரன் யுத்த களத்தின் மையப் பகுதிக்கு வந்து நின்றார்.

ஏதோ முக்கியமாக ஒன்றை அறிவிக்கும் நோக்கில் வந்திருக்கிறார் என்பதை அவர் நின்ற தோரணையே
இருதரப்புக்கும் தெரிவித்தது.

இரு தரப்பு வீரர்களும் அமைதி காத்தனர்.

துரியோதனன் தர்மரையே் வெறித்துப் பார்த்தவாறு அவரது அறிவிப்பைக் கேட்கக் காத்திருந்தான்.

தர்மர் ஒரு அறிவிப்பை உரத்துச் சொல்லலானார்:
"வீரர்களே விரைவில் தர்மயுத்தம் தொடங்கவிருக்கிறது இப்போது நம் இரு தரப்பு வீரர்களுக்கும் ஒரு
சந்தர்ப்பம் அளிக்கப்படுகிறது.

எங்கள் அணியிலிருந்து யாரேனும் கௌரவர்களான துரியோதனன் அணிக்குச் செல்வதானால் செல்லலாம்.

துரியோதனன் அணியிலிருந்து யாரேனும் பாண்டவர்களான எங்கள் அணிக்கு வருவதானாலும் வரலாம்"

வீர்ர்களே எந்த அணியில் தர்ம நெறி மிகுந்து இருக்கிறது என்று கண்டுணர்ந்து அதன் பொருட்டுத்
தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள விரும்பினால் இது கடைசி சந்தர்ப்பம். என்றான்

மேலும்

அப்படி அணி மாறுகிறவர்கள் மேல் இரு தரப்பினரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கலாகாது.

அப்படி்அணி மாறியவர்கள் அவரவர்கள் சார்ந்த புதிய அணியின் தரப்பிலேயே்போரிடுவார்கள்.’’ என
கம்பீரமாக அறிவித்து விட்டு

தர்மர் சற்று நேரம் அமைதியாய் காத்திருந்தார்.

அர்ச்சுனன், பீமன், நகுலன், சகாதேவன் நால்வரும் தர்மனின் அறிவிப்பைக் கேட்டு வியந்தார்கள்.

தர்மபுத்திரரின் அறிவிப்பு அவரது உயர்ந்த பண்பாட்டைப் இரு அணியினருக்கும் புலப்படுத்தியது

இந்தக் கடைசி சந்தர்ப்பத்தில் யாரேனும் கட்சி மாறுவார்களா என்ன? ( இன்றய அரசியல் சூழலை
நிணையாதீர்கள்)

தர்மர் தமது மாபெரும் படையைப் பார்த்தார். யாரும் இருந்த இடத்தை விட்டு ஒரு துளி அசைவையும்
காட்டவில்லை.

துரியோதனன் தரப்புப் படைவீரர்களைக் கேள்விக் குறியுடன் பார்த்தார் தர்மர்

என்ன ஆச்சரியம்! ஒரே ஒரு தேர் மட்டும் அதில் அமர்ந்திருந்த வீரனைத் தாங்கி கௌரவர் பக்கமிருந்து
பாண்டவர் பக்கம் மெல்ல நகரத் தொடங்கியது!

‘‘யார் அது, நம் தரப்பிலிருந்து பாண்டவர் தரப்பிற்கு கட்சி மாறுவது?’’ துரியோதனன் உரத்த
குரலில் கூச்சலிட்டான்.

அந்தத் தேரில் அமர்ந்திருந்த வீரனை நோக்கி அம்பெய்யவும் முற்பட்டான்.

பாண்டவர் அணிக்குச் செல்லும் வீரனை தொலைவிலிருந்தே உற்றுப் பார்த்தார் பிதாமகர் பீஷ்மர்.

கவசங்களால் உடல் மறைக்கப்பட்டு ஒரே மாதிரி உடை அணிந்த நிலையில் எல்லா வீரர்களும் ஏறக்குறைய
ஒன்றுபோல்தான் அவர் கண்ணுக்குத் தெரிந்தார்கள்.

என்றாலும் அவன் யார் என்பதை பீஷ்மரின் கூரிய விழிகள் கண்டுகொண்டு விட்டன.

அந்த வீரனை நோக்கி துரியோதனன் வில்லை வளைத்தபோது

"துரியோதனா, சற்றுப் பொறு!’’ என்று குறுக்கிட்டார் பீஷ்மர்.

‘‘அவனைப் போகவிடு. தர்மபுத்ரன் கட்சி மாறுபவர்கள் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கலாகாது
என்றானே? அந்த வீரன் அவன் மனச்சாட்சிப்படி நடக்கிறான். நீ அவனை போகவிடு

நம் படை, அவன் ஒருவனை இழப்பதால் எந்த வகையிலும் வலிமை குறையப் போவதில்லை.

மேலும் நீ அவனை இப்போது கொல்வானேன்?

நம்மிலிருந்து வேறுபட்டுப் பாண்டவர் அணியில் சேர்ந்த வீரனை போர் தொடங்கியதும் நம் வீரர்களில்
ஒருவனாலேயே கொல்லப்படுவான்!

அதுவே அவனுக்கான நமது தண்டனை!’’ என்றார்,

பீஷ்மர் சொன்னதைக் கேட்டு துரியோதனன், அம்பைத் தன் அம்பறாத் தூணியில் செருகிக் கொண்டான்.

எதிரணியைச் சார்ந்த பீஷ்மரின் பேச்சைக் கேட்டு கண்ணன் முகத்தில் சிறு புன்முறுவல் படர்ந்தது.

கண்ணன் அர்ச்சுனனிடம் சொன்னான்: ‘‘பீஷ்மர் பெரும் வீரராக இருக்கலாம். ஆனால், முக்காலமும்
உணர்ந்தவரல்லர்அல்ல." என்றான்

"ஏன் அப்படிச் சொல்கிறாய் கண்ணா?’’ என்றான் அர்சுனன்

பின்னே?

இதோ நம் அணியில் சேர வருகிறானே அவன் ஒருவன்தான் போர் முடிந்த பின்னும் உயிர்
பிழைத்திருக்கப் போகும் ஒரே கௌரவ வீரன். அப்படியிருக்க அவன் கொல்லப்படுவான் என்கிறாரே பீஷ்மர்?
அவன் சாதாரணப் படைவீரன் அல்ல. கௌரவர்களில் ஒருவன்!’’ என்றான் கண்ணன்

கண்ணா என்ன சொல்லுகிறாய் அந்த வீரன் "கௌரவர்கள் நூறுபேரில் ஒருவனா?’’ என்றான்

கண்ணன் கூறினான் அர்ச்சுனா! கௌரவர்கள் மொத்தம் நூற்றியோரு பேர்.

நம் அணியில் சேர வருபவன் நூற்றியோரு பேரில் ஒருவன்.’’

கண்ணா எனக்கு ‘‘வியப்பாக இருக்கிறதே! இதுவரை கௌரவர் நூறுபேர் என்றுதான் நான்
அறிந்திருக்கிறேன்.’’ என்றான்

கண்ணனோ அர்சுனா

‘‘இந்த நூற்றியோராவது கௌரவனுக்கு கௌரவர்கள் உரிய கௌரவம் கொடுக்கவில்லை. அதற்கு ஒரு
காரணம் இருக்கிறது. அதைப் பிறகு சொல்கிறேன்.

நம் அணிக்கு வரும் இவனை நீயும் அறிவாய். நீங்கள் சிறுவர்களாக இருந்தபோது ஒருமுறை பீமனை
கொல்ல துரியோதனன் நீரில் நஞ்சு கலந்து கொடுக்க முற்பட்டானே, அப்போது அதை முன்கூட்டியே
பீமனுக்குத் தெரிவித்து பீமன் உயிரைக் காத்தவன் இவன்தான்.

இவன் தர்மநெறியிலிருந்து ஒரு சிறிதும் மாறாமல் இருப்பவன்.

அவனைப்போல் தர்மத்தை விடாமல் அனுசரிப்பவர்களுக்கு என்றும் என் துணை உண்டு.

இவனது உயிரை இறுதிவரை நான் காப்பேன்.

இவன் உயிரை நான் காப்பதற்கு வேறு ஒரு முக்கியமான காரணமும் இருக்கிறது. அதையும் இன்றைய
போர் முடிந்த பிறகு சாவகாசமாகச் சொல்கிறேன்.

யுத்தம் தொடங்கவிருக்கிறது அர்ச்சுனா! நான் தேரைச் செலுத்தப் போகிறேன். நீ காண்டீபத்தை
எடுத்துக்கொண்டு தயாராகு.’’

என்றபடியே

கண்ணன் தேர்க் குதிரைகளின் லகானைப் பற்றி அதைச் சொடுக்கத் தயாரானான்.

தங்கள் அணிக்கு வந்துசேர்ந்த கௌரவனைப் பற்றிய நினைப்பு அர்ச்சுனன் மனத்திலிருந்து முற்றிலும்
விலகியது.

அவன் போரிடத் தயாரானான்... சூரியன் அஸ்தமனம் ஆனதும் முதல்நாள் போர் அவ்வளவில் முடிவடைந்தது.


மறுநாள் காலை போரில் மீண்டும் சந்திப்போம் என்று முழக்கமிட்டு, கௌரவர்களும், பாண்டவர்களும்
அவரவர் பாசறைக்குத் திரும்பினார்கள்.

பாண்டவர் அணியில் புதிதாய்ச் சேர்ந்த கௌரவ வீரனைத் தன்னுடன் அணைத்து அழைத்துக் கொண்டு
பாண்டவர்கள் தங்கியிருந்த இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்தான் ஸ்ரீகிருஷ்ணன்.

பஞ்ச பாண்டவர்கள் மட்டுமல்ல, அங்கே அவர்களது்மனைவி பாஞ்சாலியும் தாயார் குந்திதேவியும் கூட
அமர்ந்திருந்தார்கள்.

யுத்தம் எத்தனை நாள் நீடிக்குமோ என்ற கவலை குந்தியின் மனத்தில் கவலைரேகை படர்ந்திருந்ததை அவள்
முகம் கண்ணனுக்கு தெரிவித்தது.

தலைவிரி கோலமாக அமர்ந்திருந்த பாஞ்சாலியின் கண்கள் தன்னை அவமானபடுத்திய துச்சாதனன் மேலும்
துரியோதனன் மேலும் கொண்ட தாளாத கோபத்தால் சிவப்பேறியிருந்தன.

‘‘கண்ணா! வா வா!’’ என்று கண்ணனைப் பரவசத்தோடு வரவேற்றாள் குந்திதேவி. பாஞ்சாலியும் கண்ணனை
இன்முகம் பொங்க அழைத்தாள்.

கண்ணனையே சரணடைந்து வாழ்ந்த பாண்டவர்கள் கண்ணனுக்கு ஆசனம் அளித்து அமர வைத்தார்கள்.

தன்னுடன் வந்த கௌரவ வீரனைப் பிரியமாகத் தன் பக்கத்தில் அமர்த்திக் கொண்டான் கண்ணன்

குந்தி, கண்ணன் அழைத்து வந்த இளைஞனை தீவிரமாக ஆராய்ந்தாள்.

வசீகரமான தோற்றம் நற்குணங்களையே கடைப்பிடிப்பதால் வந்த பொலிவு அவன் முகத்தை மேலும்
அழகாக்கியிருந்தது.

கண்ணனே அழைத்து வந்திருப்பதால் மிக முக்கியமானவனாகத்தான் இருக்க வேண்டும். யார் இவன் தாயார்
கண்களாலே கேள்வி கேட்டாள்.

"இவன் கௌரவர்களில் ஒருவன்!’’ இதைக் கண்ணன் சொல்லி முடிப்பதற்குள்

பாஞ்சாலியின் சிவந்த கண்கள் மேலும் கூடுதலாகச் சிவந்தன

கண்ணன் சொன்னதைக் கேட்டு அவள் அமைதியானாள்.

‘‘இவன் கௌரவர்களை விட்டு விலகி நம் அணிக்கு வந்துவிட்டான்.

உண்மைஈன தர்மம் எங்கிருக்கிறதோ அதை உணர்ந்து கட்சி மாற விரும்புகிறவர்கள் மாறலாம் என்ற
தர்மனின் அறிவிப்பைக் கேட்டு இன்று காலை நம் கட்சிக்கு மாறிவிட்டான் இவன்!’’ என்றான் கண்ணன்
அப்படியே புதியவனின் தலையை வாஞ்சையாகத் தடவிக் கொடுத்தான்.

புதியவன் குந்திதேவியின் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தான்.

குந்தி அவனைப் பிரியமாய்ப் பார்த்து மனமார ஆசீர்வதித்தாள்.

பாஞ்சாலியின் விழிகளில் மகிழ்ச்சி தோன்றியது.

‘‘உன் பெயர் என்ன மகனே?’’ குந்தி ஆதரவுடன் கேட்டாள்.

அவன் கம்பீரமாக பதிலளித்தான். ‘‘தர்மநெறி பிறழாமல் வாழும் ஐந்து புதல்வர்களைப் பெற்ற
பாக்கியசாலியான அன்னையே! என்னை யுயுத்சு என்று அழைப்பார்கள்!’’

யுயுத்சு! குந்தியின் மனம் அந்தப் பெயரைக் கேட்டதும் யோசனையில் ஆழ்ந்தது.

ஆம். காந்தாரி இவன் பெயரை ஒருமுறை குறிப்பிட்டு இவனைப் பற்றித் தன்னிடம்
அங்கலாய்த்திருக்கிறாள்.

பல காலம் முன்னால் நடந்த சம்பவம்
காந்தாரி அன்று இவனைக் குறித்து அங்கலாய்த்தது ஏன் என நினைவில்லை.

காந்தாரிக்கு இவனைப் பிடிக்கவில்லை என்ற உண்மை மட்டும் இன்றும் மனத்தில் தேங்கியிருக்கிறது.

அதுசரி. உண்மையில் யார் இவன்? அனைவர் கண்களும் அவனையே பாசத்தோடு பார்த்துக் கொண்டிருந்தபோது


அர்ச்சுனன் குரல். ‘‘கண்ணா! இவன் கௌரவர்களில் ஒருவன் என்றாய். மற்ற கௌரவர்களால் இவன் உரிய
மதிப்புடன் நடத்தப்படவில்லை என்றும் சொன்னாய். இப்போது சொல்.

இவன் சரிதம் என்ன?

காந்தாரி பெற்ற கௌரவர்களில் ஒருவன் தானா இவனும்?’’ என்றான்

கண்ணனோ இவன் கௌரவர்களில் ஒருவன், அதாவது, திருதராஷ்டிரரின் மகன்.

ஆனால், காந்தாரியின் பிள்ளை அல்ல!’’ என்றான்

குந்தி நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

அவளுக்குக் காந்தாரி இவனை ஏன் வெறுத்தாள் என்பது புரியத் தொடங்கியது.

கண்ணன் மேலும் விளக்கலானான்: ‘‘காந்தாரி கர்ப்பவதியாய் இருந்தபோது அவள் ஓய்வெடுக்க
வேண்டியிருந்தது. அதனால், கண்ணில்லாத திருதராஷ்டிரருக்குப் பணிவிடை செய்ய அமர்த்தப்பட்டாள்
சுகதா என்ற ஒரு பெண்.

அவளது பணிவிடையில் மகிழ்ந்த திருதராஷ்டிரரின் வற்புறுத்தலால் சற்று எல்லை மீறியதன்
விளைவுதான் யுயுத்சு.

யுயுத்சு தங்கள் தந்தைக்குப் பிறந்தவன் என்றாலும் பணிப்பெண்ணின் மகன் என்பதால் இவன் பிற
கௌரவர்களால் அலட்சியமாக நடத்தப்பட்டான்.

அதோடு விதுரனைப்போல் தர்ம நெறியிலேயே இவன் சிந்தனை சென்றதும்கூட, மற்ற கௌரவர்கள் இவனை
வெறுக்கக் காரணமாயிற்று.

தர்மநெறியைப் போற்றும் இவன் அதர்ம அணியில் தொடர்ந்து இருக்க விரும்பாததால் நம் அணிக்கு
வந்துவிட்டான்.’’ என்றார்

அதுசரி கண்ணா! எங்களைக் காப்பதுபோல இவன் உயிரையும் இறுதிவரை காப்பேன் என்றாயே? நீ அப்படிச்
சொன்னதன் பின்னணி என்ன?’’ அர்ச்சுனன் கேட்டான்.

‘‘அர்ச்சுனா! போரில் யுயுத்சுவைத் தவிர எஞ்சியுள்ள அத்தனை கௌரவ சகோதரர்களும்
அழிக்கப்படுவார்கள். போர் முடிந்து சிறிது காலத்திற்குப் பிறகு திருதராஷ்டிரனும்
காலமாவான்.

மாமன்னன் திருதராஷ்டிரன் காலமாகும்போது, அவனுக்குக் கொள்ளி வைக்க ஒரே ஒரு பிள்ளையாவது
மிஞ்ச வேண்டாமா? இதோ இந்த யுயுத்சு தான் திருதராஷ்டிரனுக்கு இறுதிக் கடன் செய்யப் போகிற
அந்த ஒரே பிள்ளை!’’

இந்தச் செய்திகளைக் கேட்டு குந்தி ஆச்சரியத்தில் ஆழ்ந்தாள். ‘‘கௌரவ சகோதரர்கள் நூறுபேர் அல்ல,
நூற்றியோரு பேர் என்று திடீரென்று வெளிப்பட்ட இந்த உண்மை எனக்கு வியப்பாக இருக்கிறது!’’
என்றாள் அவள்.

அவளை பாண்டவர்கள் அனைவரும் ஆமோதித்தனர்.

யுதிஷ்டிரர் யுயுத்சுவை இழுத்து அணைத்துக் கொள்ள, பிற பாண்டவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன்
அவனைத் தட்டிக்கொடுத்தார்கள்.

கண்ணனின் தயவால் தர்மம் வென்றது.

பின்னொருநாள் த்ருத்ராஷ்ட்ரன் மறைந்த பின் யுயுத்சு தன் தகப்பனாருக்கான அந்திம கடனை கண்ணன்
விருப்பப் படியே செய்தான்

நாமும் மாயனை மன்னு வடமதுரை மைந்தனை தூயோமாய் தொழுது நம் துயரம் தீர்போமாக!!

சர்வம்
கிருஷ்ணார்பனமஸ்து!!

ஜெய் ஶ்ரீராம்!!

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share
courtesy Shri Mohan Ramaiah Avl

Hanumath prabhaavam

சுந்தரகாண்டத்தோட முதல் ஸர்கத்துல ஹனுமான் ஆகாசத்துல பறக்க போறார். அப்போஒரு ஸ்லோகம் சொல்றார்.
यथा राघवनिर्मुक्तः शरः श्वसनविक्रमः। गच्छेत्तद्वद्गमिष्यामि लङ्कां रावणपालिताम्।।5.1.40।।
யதா ராகவ நிர்முக்தஹ ஷரஹ ச்வஷன விக்ரமஹ |
கச்சேத் தத்வத் கமிஷ்யாமி லங்காம் ராவணன் பாலிதாம் || அப்படினு சொல்றார்.
இந்த ஸ்லோகம் ரொமப ஒரு விசேஷமான ஸ்லோகம். கடற்கரையில வானரா எல்லாம் இருக்கா. அந்த ஸ்வயம்பிரபா என்கிற ஒரு தபஸ்வி, யோகினி அவாளை குஹைக்குள்ளேருந்து வெளியில கொண்டு வந்து விடறா. பார்த்தா வசந்தகாலமே வந்துடுத்து. ‘இனிமே திரும்பிப்போனா, சுக்ரீவன் தண்டிப்பான். ஒரு மாசத்துக்குள்ள திரும்ப வரணும்’னு சொல்லி இருக்கான், அப்படின்னு விசன பட்டுண்டு, அங்கதன் தான், அந்த தெற்கு திக்குல வந்த வானராலுக்கெல்லாம் லீடர். அவன் ‘நான் உயிரை விடப்போறேன். நான் ஒண்ணும் திரும்பி போக போறதில்லை’ அப்படின்னு சொல்லி, ப்ரயாயோபவேசம் பண்றா. படுத்துண்டு உயிரை விடலாம் அப்படின்னு முடிவே பண்ணிடறா.
அப்போ அங்க மலைமேலேருந்து சம்பாதிங்கற கழுகு இவாளை பாக்கறது. அது நெனச்சிக்கறது ‘ஆஹா பகவான் எப்படியெல்லாம் சாப்பாடுக்கு வழி பண்றார் பாரு! நம்மால பறக்க முடியாம இறக்கையில்லாம இருக்கோம். இங்க கொஞ்சம் பேரை கூட்டிண்டு வந்து, அவா ‘நாங்க உயிரைவிடபோறோம்’ ன்னு சொல்றா. ஒண்ணு மூணு மாசம் தாங்கும். ஒண்ணு ஆறு மாசம் தாங்கும். நமக்கு சாப்பாட்டுக்கு வழியாச்சு’ அப்படின்னு நினைக்கறது ஸம்பாதி கழுகு.
அப்போ இந்த கழுகு வந்து நிக்கறதை பார்த்த உடனே அங்கதனுக்கு இன்னுமே ரொம்ப ஆயாசமாறது. ‘என்னடா இது. நாம உயிரை விடப்போறோம்னு சொன்ன உடனே, அதுக்குள்ள சாப்பிடறத்துக்கு கழுகு வரது’ அப்படின்னு சொல்லி அவன் பொலம்பலோட சேர்ந்து பொலம்பறான். “அன்னிக்கு ராமனுக்காக ஜடாயுங்கிற கழுகு உயிரவிட்டுது! இன்னிக்கு நாம வானரா எல்லாம் உயிரை விடப் போறோம். அப்படி ராம கார்யத்துக்காக என்ன வேணும்னாலும் பண்ணலாம். உயிரையும் விடலாம். ராமர் அவ்வளோ பெரியவர்!” அப்படி எல்லாம் சொல்லிண்டு வரான். இதை கேட்ட உடனே அந்த சம்பாதி “ஆஹா, என்னது ராமருக்காக ஜடாயு உயிரை விட்டானா ! யாரு? எப்படி? ஜடாயு என் தம்பியாச்சே! விஸ்தாரமா சொல்லுங்கோ” என்று கேட்கிறது.
அங்கதன் பதில் சொல்றான். ஆனால் அவனுக்கு நம்பிக்கை இல்லை. இந்த கழுகு நம்மை சாப்படறதுக்காக ஏதோ பேச்சு கொடுத்து பாக்கறது ன்னு நினைக்கிறான். இருந்தாலும் சொல்லி வைப்போமே உயிர விடப்போறோம். கழுகு நம்மை சாப்ட்டா சாப்பிட்டு போட்டுமே” னு சொல்லி பாதி நம்பிக்கையோட இவனும் சொல்றான். அப்படி இவா ரெண்டுபேர் ஒண்ணும் close friends கிடையாது. அப்படி இருந்தாலுமே ராமகதையை சொன்னா ரெண்டு பேருக்கும் க்ஷேமம் ஏற்படும் அப்படினு ஸ்வாமிகள் சொல்வார். அந்த ராமகதைய சொல்றான்.
“தசரத மஹாராஜாவோட பிள்ளை ராமர் காட்டுக்கு வந்தார். அவருடைய மனைவி சீதாதேவியை ராவணன் ஜடாயுவை வதம் பண்ணிவிட்டு அபஹரித்து கொண்டு போய்ட்டான். நாங்கள்லாம் சீதையை தேடி வந்துருக்கோம்னு” சொன்னனோடனே “ஆஹா! அந்த ஜடாயு என் தம்பி” அப்படினு அது தன்னுடைய வ்ருத்தாந்தத்தை சொல்றது. அப்பறம் சம்பாதி “இங்கிருந்தே நான் உங்களுக்கு பாத்து சொல்றேன். எங்களுக்கு தீர்கமான பார்வையுண்டு” என்று சொல்லி “கடலுக்குள் நூறு யோஜனை தள்ளி இலங்கைனு ஒரு தீவு இருக்கு. அதுல சீதையிருக்கா” அப்படின்னு சொன்ன உடனே அதுக்கு இறக்கை மொளைக்கறது, அப்படி இவாளுக்கும் வழிகிடைக்கிறது சீதை எங்கேயிருக்காங்கற குறிப்பு கிடைக்கறது. அந்த சம்பாதிக்கும் இறக்கை மொளைக்கறது. அப்படி ராம கதைய நம்பிக்கையிருந்தோ, நம்பிக்கையில்லாதவாளுக்கோ, நல்லவாளுக்கோ, கெட்டவாளுக்கோ, ராமகதைய சொன்னா க்ஷேமம்தான் ஏற்படும் ஸ்வாமிகள் சொல்வார்.
அப்படி ராமாயணத்தை சொல்லி இவா ரெண்டு பேருக்கும் வழி கிடைக்கிறது. அந்த சம்பாதி இறக்கை முளைச்சு பறந்து போயிடறது. இப்போ வானரா எல்லாரும் உட்கார்ந்து “யாரால நூறு யோஜனை கடலைத் தாண்டமுடியும்?” அப்படினு கவலைப்படும்போது, ஒவ்வொருத்தரும் என்னால பத்து யோஜனை முடியும். இருவது யோஜனை முடியும்ங்கறா. ஜாம்பவான் “முன்ன என்னால நூறு யோஜனை தாண்ட முடியும். ஆனா இப்போ வயசாயிடுத்து தொண்ணூறு தான் முடியும்” அப்படின்னு சொன்னபோது, அங்கதன் “என்னால நூறு யோஜனை தாண்ட முடியும். ஆனா திரும்பியும் நூறு யோஜனை தாண்டி இங்க வருவேனா தெரியலை” என்கிறான். அப்போ ஜாம்பவான் சொல்றார் “நீ வாலிபுத்ரன் ஆயிரம் யோஜனைக்கூட தாண்டுவாய். இருந்தாலும் நீதான் இந்த சேனைக்கு தலைமையில் இருக்க. அதனால உன்ன அனுப்பபடாது. ஒரு leaderஐ முன்ன அனுப்பிச்சிட்டு followers எல்லாம் பின்னாடி உட்கார்றதுங்கிறது சரியில்லை” என்கிறார்.
திரும்பவும் “என்ன பண்றது இப்போ” அப்படின்னு அங்கதன் கவலைப்படறான்.
அப்போ ஜாம்பவான் “இந்த காரியத்தை யார் பண்ணுவா எனக்கு தெரியும். அதோ அங்கே அமைதியாக உட்கார்ந்து இருக்காரே அந்த ஹனுமாரை போய் நாமெல்லாம் உத்சாகப் படுத்துவோம். அவருடைய பலம் அவருக்கு தெரியாது. நாம் சொன்னால் அவருக்கு ஞாபகம் வரும்” னு சொல்லி, எல்லாருமா போய் ஹனுமாரை ஸ்தோத்ரம் பண்றா. இந்த இடத்துல ஹனுமாரை வானரா எல்லாருமா ஸ்தோத்ரம் பண்றா, அவர் வானளவுக்கு வளர்ந்தார். அப்படிங்கிறத சொல்லும்போது ஸ்வாமிகள் ஹநுமத் பஞ்சரத்னத்தை ஒருவாட்டி சொல்லுவார்.
ஹனுமத் பஞ்சரத்னம் (Audio link to Hanumath Pancharathnam)

சொல்லிட்டு, “யாராவது ஏதாவது ஹனுமாரை பிராத்தனை பண்ணினோம் என்றால் நிறைய நிறைய ஸ்தோத்ரம் பண்ண பண்ண அவர் நிறைய அனுக்ரகம் பண்ணுவார். அதிகஸ்ய அதிகம் பலம். அதனால நூத்தியெட்டு ஆவர்த்தி ஹநுமத்பஞ்சரத்னம் ஜபம் பண்ணுங்கோ. அப்போ ஹனுமார் பெரிசா வளர்ந்து நிறைய அனுக்கிரஹம் பண்ணுவார்” அப்டின்னு சொல்லுவார் அந்தமாதிரி ஹநுமத் பஞ்சரத்னம் சொல்லி ஹனுமார ஸ்தோத்ரம் பண்ண பண்ண அவர் வளருகிறார்.
அவர் பெருமையை ஜாம்பவான் சொல்றார் “நீ வாயுகுமாரன்! உன்னுடைய கைகள்ல கருடனுடைய பக்ஷங்கள்ல எவ்வளவு பலம் இருக்கோ, இறக்கைகள்ள எவ்வளவு பலம் இருக்கோ அவ்வளவு பலம் உன் கைகளில் இருக்கு. உன்னால வாயு மாதிரி ஆகாசத்தில் போக முடியும். நீ தான் இந்த கார்யத்தை எங்களுக்காக பண்ணனும். எங்க எல்லரோட உயிரும் இப்போ உன் கிட்ட தான் இருக்கு. ஹே ஹனுமான் நீ இதை பண்ணு. நாங்க எல்லாரும் ஒத்தக்கால்ல நிண்ணுண்டு உனக்காக பிரார்த்தனை பண்றோம்” அப்படினு ஜாம்பவான் உத்சாக படுத்தறார். ஹனுமாரும் “ஆமாம்! என்னால முடியும். இப்போ எனக்கு தெரியறது!” அப்படினு சொல்றார். “இந்த மஹேந்திர மலைல ஏறி நான் ஆகாசத்தில் பாய்கிறேன். இந்த பூமில நிண்ணுண்டு நான் வானத்துல பாய்ந்தால் பூகம்பமே வந்துவிடும். அதனால நான் மலைமேல ஏறிண்டு தாவுகிறேன்” அப்படினு அந்த மலைமேல ஏறிண்டு ஆகாசத்துல தாவ போகும்போது இந்த “யதா ராகவ நிர்முக்த:” ஸ்லோகத்தை சொல்றார்.
அந்த சுந்தரகாண்டத்தோட முதல் ஸ்லோகம் ततो रावणनीतायाः सीतायाः शत्रुकर्शनः। इयेष पदमन्वेष्टुं चारणाचरिते पथि।।
“ததோ ராவணநீதாயா: ஸீதாயா: ஷத்ருகர்ஷந: | இயேஷ பத்மந்வேஷ்டும் சாரணா சரிதே பதி || அப்படினு தயராகி விடுகிறார் ஹனுமார் அப்படினு அந்த first-ஸ்லோகத்தோட ஆரம்பிக்கறது.
இந்த நாப்பதாவது ஸ்லோகம் “யதா ராகவ நிர்முக்த: ஷர: எப்படி ராமர் கையினால் விடப்பட்ட பாணம் நிக்காமல் போகுமோ, பராக்ரமத்தோட, வாயு வேகத்தோடபோகுமோ, எப்படி இலக்கை அடையுமோ, அந்த மாதரி நான் இப்போ ஆகாஷத்துல போய் லங்கைல குதிப்பேன். அங்க சீதை எங்கயிருக்கான்னு கண்டுபிடிச்சிண்டு வருவேன். அங்க இல்லேன்னா மூவுலகத்திலயும் தேடி கண்டுபிடிச்சிண்டு வருவேன். ராவணனனை கட்டி இழுத்துண்டு வருவேன். அப்படினு ஒரு ப்ரதிஞை பன்னிட்டு ஆகாஷத்துல போறார்.
அப்படி அவர் சொன்ன அந்த ஸ்லோகம்

यथा राघवनिर्मुक्तः शरः श्वसनविक्रमः। गच्छेत्तद्वद्गमिष्यामि लङ्कां रावणपालिताम्।। அப்படினு சொல்றார்.

இதுல விசேஷம் என்னன்னா, ஹனுமார் தன்னால எதுவும் நடக்கறதுனே நினைக்கல. அதனால தான் அவர் அவளோ அபாரமான காரியங்களையெல்லாம் பண்ணிட்டு வந்தார். ஒரு அம்பு தானா போக முடியுமோ?ஒருத்தர் ஏவி விட்டதானே போகமுடியும்? அந்தமாதிரி ராமரோட அம்பு மாதிரி நான் போவேன் அப்படினா என்ன அர்த்தம் “நிமித்தமாத்ரம் பவ சவ்யசாசின்” னு அப்படினு கிருஷ்ணர் அர்ஜுனன் கிட்ட சொன்ன மாதிரி “நீ வெறும் என் கையில் ஒரு கருவி தான். நான் தான் எல்லாத்தையும் நடத்துறேன். நீ இவ்வளவு தூரம் கவலையே படவேண்டியதில்லை. உன் காரியத்தை, கடமையை நீ பண்ணு” அப்படின்னு சொல்லறார். அந்த மாதிரி ஹனுமார் ராமர்ட்ட அன்னிக்கு கிஷ்கிந்தா காண்டதோட ஆரம்பத்துல நமஸ்காரம் பண்ணி ராமரை பாத்தபோதே தன்னை ஒப்படைச்சுண்டார். ராமதூதனாயிருந்து அபாரமான கார்யங்கள்லாம் பண்றார். “ந ராவண சஹஸ்ரம் மே யூத்தே பிரதிபலம் பவேத்” அப்படிங்கறார். ஆயிரம் ராவணர்கள் வந்தாலும் யுத்தத்தில் என் முன்னாடி நிக்க முடியாது. நான் ராமதாசன்” அப்படினு கர்ஜிக்கறார். அப்பேற்பட்ட பலம் அவருக்கு எங்கேர்ந்து வந்ததுன்னா? “எனக்கொண்ணும் பலம் இல்லை. ராமரோட பலத்தினால இதல்லாம் நான் பண்ணுவேன்” அப்படிங்கற அந்த எண்ணத்துனால வந்தது. “ராமர் கையில ஒரு பாணம் மாதிரி நான்” அப்படின்னு நினைக்கிறார்.
அப்படி சொல்லிட்டு ஆகாசத்துல கிளம்புகிறார். சொன்ன வார்த்தை “நிக்கமால் போவேங்கிறது” சும்மா ஒரு ஸ்டாண்டுக்காக சொல்லலை. வழில ஒரு தங்க மலை கடலுக்கு உள்ளேர்ந்து வர்றது மைனகமலைனு. அந்த ஸமுத்ரராஜா மைனாக மலை கிட்ட சொல்றார். “இந்த ஹனுமார் ராம கார்யமா போறார். இவருக்கு நாம உதவி பண்ணனும். நீ வெளியில வா. உன்மேல உட்காந்துண்டு, ஆஹாரம் பண்ணிட்டு பழங்கள்லாம் கொடு. சாப்டுட்டு அவர் போட்டும்” அப்படின்னு அந்த சமுத்திரராஜா சொல்லறார்.
உடனே மைனகமலை மேல வந்து அது ஹநுமார்க்கிட்ட சொல்லறது “ஹே ஹநுமான்! எனக்கும் நீ ரொம்ப வேண்டியவன். ஏன்னா உங்கப்பா வாயுபகவான் இந்திரன் மலைகளோட இறக்கைகளை வெட்டும்போது, என்னைக் கொண்டுவந்து இந்தக்கடல்ல தள்ளி என் இறக்கைகளை காப்பாத்தினார். அதனால அப்பாவுக்கு பண்ற நன்றியை பிள்ளைக்கு பண்ணலாம். அதனால என்மேல உட்கார்ந்து விஷ்ராந்தி பண்ணிட்டுப்போ” உனக்கு சாப்பிடறதுக்கு பழங்களும் கிழங்குகளும் தரேன்” அப்படினு சொல்றது. ஸ்வாமிகள் சொல்லுவார் Water water everywhere not a drop to drink அப்படினு கடலைப்பத்தி சொல்லுவா அப்பேற்பட்ட கடலுக்கு நடுவுல போயிண்டிருக்கும் போது, ராம கார்யம் பண்றதுனால ஹனுமாருக்கு சாப்பாடு கிடைக்கிறது. அப்படினா சுந்தரகாண்டத்தை படிக்கிறவாளுக்கு சாப்பாடு கவலையே கிடையாது. எப்படியாவது சாப்பாடு கிடைக்கும். எங்கிருந்தாவது சாப்பாடு கிடைக்கும் அப்படினு சொல்லுவார்.
அப்படி அந்த offer பண்ணும்போது அங்க ஹனுமார் சொல்றார் “நான் வழியில் நிற்காமல் லங்கைல போய் குதிச்சு சீதைய தேடுவேன்” னு என் நண்பர்களுக்கு வாக்கு குடுத்துட்டு கிளம்பிருக்கேன். அதனால என்னால இப்போ நிக்கமுடியாது. என்னோட அப்பாவோட நண்பர்னு சொல்ரேள். அதனால உங்கள பாத்ததே என்னக்கு ரொம்ப சந்தோஷம்” னு அவரை கட்டிண்டு அவருக்கு வணக்கத்தை சொல்லிட்டு ஹனுமார் போயிண்டேயிருக்கார். அப்பறம் சுரசை எங்கிற நாகமாதாவை பாக்கறார். அப்பறம் ஸிம்ஹிகை எங்கிற நிழலைபிடிச்சு இழுக்கிறவளை வதம் பண்ணிட்டு, அப்பறம் போய் லங்கைல குதிக்கிறார்.
இந்த மைனாக மலை ராமகரியத்துக்கு எத்கிஞ்சித் பண்ண நினைச்சதுக்கே, அதுக்கு ஒரு பெரிய நன்மை ஏற்பட்டது. இந்திரன் அங்கே வரான். “ராமகார்யமா ஹனுமார் போயிண்டிருக்கார். அவருக்கு ஸஹாயம் பண்றேன்ன்னு வந்தியோ இல்லியோ, அதுனால என்கிட்டேர்ந்து இனிமே நீ பயப்பட வேண்டாம். நான் உன் இறக்கைய வெட்டமாட்டேன். ஆனா பூமில வந்து எங்கயாவது உட்காராதே ஜனங்களாம் கஷ்டப்படுவா. அதனால இந்தக் கடலுக்குள்ள எங்க வேணும்னாலும் போயிக்கோ. கடலுக்கடியில எப்பப்பாத்தாலும் பயந்து ஒளிஞ்சிண்டு இருக்கணும்னு இல்ல. நிம்மதியா கடல்ல சஞ்சாரம் பண்ணிண்டிரு” அப்படினு ஒரு வரம் கொடுக்கிறார். இதோட விஷேஷம் என்னன்னா ஸ்வாமிகள் சொல்வார் “நாம் சிற்றின்ப கடல்ல மூழ்கியிருந்தாலும் ராம கார்யமா எத்கிஞ்சித் உபகாரம் பண்ணாகூட பெரிய அபயம் கிடைக்கும்” அப்படினு சொல்லுவார்.

எப்படி ராம பாணம், வாயு வேகமா, எங்கும் நிற்காமல் போயி இலக்கை அடையுமோ, அப்படி நான் இங்கிருந்து கிளம்பி, ஆகாச மார்க்கமாய் போயி இலங்கையில் குதிப்பேன். அங்க சீதா தேவியை தேடிப் பார்த்து எங்க இருக்கான்னு தெரிஞ்சுண்டு வருவேன். அப்டீன்னு ஹனுமார். தன்னுடைய தோழர்களுக்கு வாக்கு கொடுத்துட்டு ஆகாசத்துல கிளம்பறார். ஸ்வாமிகள், ஏக ஸ்லோக சுந்தர காண்டம், ஒரு ஸ்லோகத்துல சுந்தர காண்டம் அப்படீன்னு, ராகவேந்திர ஸ்வாமிகள், திருவல்லி கேணியில கூட அவரோட பிருந்தாவனம் இருக்கே. அந்த, அந்த ராகவேந்திர ஸ்வாமிகள் பண்ணின ஒரு ஸ்லோகம் இருக்கு. ஏக ஸ்லோக சுந்தர காண்டம் அப்படீன்னு, அதோட தாத்பரியமும், இதே மாதிரி, ராமரோட அனுக்ருஹத்துனாலதான், ஹனுமார், இவ்வளவு பெரிய கார்யங்களை எல்லாம் பண்ணி முடிச்சார், அப்டீங்கிறதுதான் அந்த ஸ்லோகத்தோட தாத்பர்யம். அந்த ஸ்லோகத்தை நான் உங்களுக்கு சொல்றேன்.

यस्य श्री हनुमान् अनुग्रह बलात् तीर्णांबुधिर्लीलया लङ्कां प्राप्य निशाम्य रामदयितां भङ्क्त्वा वनं राक्षसान् |

अक्षादीन् विनिहत्य वीक्ष्य दशकम् दघ्द्वा पुरीं तां पुन: तीर्णाब्धि: कपिभिर्युतो यमनमत् तं रामचन्द्रं भजे ||

யஸ்ய ஸ்ரீ ஹனுமான் அனுக்ரஹ பலாத் தீர்ணாம்புதிர் லீலயா

லங்காம் ப்ராப்ய நிசாம்ய ராம தயிதாம் பங்க்த்வா வனம் ராக்ஷஸான் |

அக்ஷாதீன் விநிஹத்ய வீக்ஷ்ய தசகம் தக்த்வா புரீம் தாம் புந:

தீர்ணாப்தி: கபிபிர்யுதோ யம் அனமத் தம் ராமச்சந்த்ரம் பஜே ||

அப்படீன்னு ஒரு ஸ்லோகம். எவருடைய அனுக்ரஹ பலத்தினால், ஸ்ரீ ஹனுமார், கடலை விளையாட்டாக கடந்து, இலங்கையை அடைந்து, ராமருடைய பிரிய மனைவியான சீதா தேவியை பார்த்து, அறுதல் சொல்லி, ராவணனுடைய அசோக வனத்தை அழித்து, அக்ஷன் முதலான ராக்ஷதர்களை வதம் செய்து, தசக்ரீவனான ராவணனைப் பார்த்து, அவனுக்கு நல்ல புத்தி சொல்லி, அவன் கேட்காமல், ஹனுமாருடைய வாலில் தீ வெச்ச போது, அந்த தீயினாலையே, இலங்கையை எரித்து விட்டு, மீண்டும் கடலை கடந்து, வானரர்களோடு வந்து, எந்த ராமரை வணங்கினாரோ, எவருடைய அனுக்ரஹ பலத்தினால், இங்கே இருந்து கிளம்பி, இவ்வளவு கார்யங்களையும் பராக்ரமத்தோட பண்ணி முடித்து, மீண்டும் வந்து வானரர்களோடு கூட ராமரை வணங்கி, சீதா தேவியோட சூடாமணியை கொடுத்து, அவர் மனசை சந்தோஷப் படுத்தினாரோ, அந்த ராமரை பஜிக்கிறேன். தம் ராமச்சந்திரே பஜேஹம்னு முடியறது, ரொம்ப அழகான ஒரு ஸ்லோகம்.

यस्य श्री हनुमान् अनुग्रह बलात् तीर्णांबुधिर्लीलया लङ्कां प्राप्य निशाम्य रामदयितां भङ्क्त्वा वनं राक्षसान् |

अक्षादीन् विनिहत्य वीक्ष्य दशकम् दघ्द्वा पुरीं तां पुन: तीर्णाब्धि: कपिभिर्युतो यमनमत् तं रामचन्द्रं भजे ||

நேத்திக்கு தான் கேள்வி பட்டேன், இந்த ஸ்லோகத்தை ஸ்வாமிகள் ஒருத்தர்கிட்ட, இதை தினம் இருவத்தொரு ஆவர்த்தி சொல்லி, நாற்பதெட்டு நாட்களில் ஒரு ஆயிரத்தெட்டு ஆவர்த்தி பண்ணு, அப்படீன்னு சொல்லி இருக்கார். அந்த அளவுக்கு இந்த ஸ்லோகத்துக்கு ஸ்வாமிகள் முக்யத்வம் தந்துருக்கார்னு, இதை உங்க கிட்ட இன்னிக்கு பகிர்ந்துண்டேன்.


--

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

ஒரு பகிர்வு .

அனுமத் பிரபாவம்

Jai bolo Hanumanaki

அங்க மலை மேலேர்ந்து சுக்ரீவன் இவாளை பார்க்கறான். லக்ஷ்மணர் ராமரரை protect பண்ணி, அழைச்சிண்டு வந்துண்டுருக்கார். இவா ரெண்டு பேரையும் பாத்தாலே எட்டடிக்கு ஆஜானுபாஹுவாக கையில பெரிய வில்லும், முதுகுல அம்புறாத் தூணியில, ஸர்பங்களை போன்ற பாணங்களை வெச்சிண்டு, இவா வருவதை பார்த்தவுடன், சுக்ரீவன் நடுங்கி போயிடறான். மலையின் ஒரு சிகரத்துலேர்ந்து இன்னொரு சிகரத்துக்கு தாவி குதிச்சு ஓடறான். ஹனுமார் பின்னாடி ஓடறார் “என்ன? என்ன? பயப்படரே?” என்று கேட்கிறார். சுக்ரீவன் “அவாளை பாத்தாலே உனக்கு பயமாயில்லையா?” என்கிறான். “நீ யாரைப் பார்த்தாலும் பயப்படுவியா?”ன்னு கேட்கறார் ஹனுமார். “நீ ராஜா ஆகணும்னு ஆசைப் படற! வாலி வந்தா பயப்படணும், யாரைப் பார்த்தாலும் பயப்படறியே” அப்படின்னு கேட்கறார், அப்போ சுக்ரீவன் “இல்லை, இவா வாலி அனுப்பிச்ச ஆட்களா இருப்பாளோ, அப்படினு நெனைச்சு பயப்படறேன்” அப்படிங்கிறான். அப்பறம், சுக்ரீவன் சொல்றான், “உனக்கு அப்போ தைரியம் இருக்கு போலிருக்கு, நீ போய், இவா யாருன்னு பாத்து பேசி, நல்லவளாயிருந்தா, என்கிட்ட அழைச்சிண்டுவா” அப்படினு சொல்றான். “நீ பிக்ஷு ரூபத்துல போ” அப்படினு சொல்றான்.

ஹனுமார் சுக்ரீவனோட மந்த்ரி, சரின்னு அவன் சொன்னதை கேட்டுண்டு பிக்ஷு ரூபத்துல போய், ராம லக்ஷ்மணாள பாத்து, ரொம்ப விநயமா நமஸ்காரம் பண்ணி, “நீங்க ரெண்டு பேரும் யாரு? உங்கள பாத்தா, ராஜகுமாரர்கள் மாதிரி இருக்கேள், ஆனா, மரவுரி, மான்தோல், ஜடாமுடி போட்டுண்டு ரிஷிகளைப் போலவும் தெரிகிறீர்கள். நீங்க எங்க இங்க இந்த காட்டுக்கு வந்தேள்? உங்க ரெண்டு பேரையும் பார்த்தா சந்தரசூர்யர்களே, பூமிக்கு இறங்கி வந்தா மாதிரி அவ்வளவு தேஜஸா இருக்கேள், உங்களுடைய ஒளியினால் இந்த மலையே ஒளிவிடறது. உங்களுடைய அழகு இந்த பம்பா ஏரியில பிரதிபலிக்கறது”, அப்படினு ஹனுமார் ரொம்ப அழகான வார்த்தைகள் சொல்றார்.

இந்த ஹனுமார் பேசின அழகு வந்து, அவர் பேசின வார்த்தைகள்ல மட்டும் இல்லை. ராமர் அதைக் கேட்ட பின்ன அந்த பேச்சைஅப்படி கொண்டாறார். “என்னமா பேசறான்! என்ன அழகா பேசறான்”, அப்படின்னு கொண்டாடுவதை வெச்சிண்டு பார்த்தால், இந்த ஹனுமார் பேசின வார்த்தைகள்ல மட்டும் அழகில்லை. அவர் பேசின விதத்துல தான் அந்த அழகேயிருக்கு, அப்படிங்கிறது தெரியறது. எனக்கு வந்து இது மஹாபெரியவா பேச்சு போலேயும், ஸ்வாமிகள் ராமாயணம் சொல்றது போலயும், ஸ்லோகங்களை படிக்கறது மாதிரி இருந்திருக்கும் னு தோணறது. அந்த மாதிரி, இனிமைனா எனக்கு அது தான் ஞாபகம் வறது.

அந்த சொன்ன விஷயங்கள்ல ரொம்ப அழகா இருக்கறது ஒண்ணு வந்து, “நீங்க ரெண்டுபேரும் சிம்மத்தைபோல தேஜஸோட இருக்கிறீர்கள், நீங்க ரிஷபத்தைப் போல நடந்து வருகிறீர்கள்”, அப்படின்னுல்லாம் சொல்லி ஸ்தோத்ரம் பண்ணிட்டு, அப்பறம், ஹனுமார், “ஏதோ தேடிண்டே வரேளே, ஏதாவது தொலைச்சிட்டு தேடரேளா?” அப்படின்னு கேக்கறார். அப்படி keen observation. இதுக்கு நடுவுல ஒண்ணு சொல்றார்,

आयताश्च सुवृत्ताश्च बाहवः परिघोपमाः ।

सर्वभूषणभूषार्हाः किमर्थं न विभूषिताः ।।

“ஆயாதாஸ்ச ஸுவ்ருத்தாஸ்ச பாஹவஹ பரிகோபமாஹா” உங்களுடைய கைகள், நீளமா இருக்கு, ரொம்ப பருமனாக இருக்கு, ரொம்ப weightஆ இருக்கு , நல்ல பலசாலிகளோட, மல்லர்களோட கைகள் மாதிரி இருக்கு, இரும்பு போல இருக்கு உங்களுடைய கைகள், உங்களுடைய தோள்கள் “ஸர்வ பூஷண பூஷார்ஹாஹா கிமர்த்தம் ந விபூஷிதஹா” உங்களுடைய தோள்கள் தங்க ஆபரணங்களும் மாலைகளும் போட்டும் அலங்காரம் பண்ணணும், அவ்வளோ அழகாயிருக்கு உங்க தோள்கள், “உபௌ யோக்யவ் அஹம் மன்யே, ரக்ஷிதும் ப்ரித்திவீம் இமாம்” இந்த பூமியையே உங்களோட கைகளும், தோள்களும், காப்பாத்தும் என்று நான் நம்புகிறேன். இந்த தோள்கள் ஏன் அலங்காரம் இல்லாம இருக்கு? ஏன் நீங்க, ரிஷிகள போல, யோகிகளைப் போல வந்துண்டுஇருக்கேள்? அப்படினு கேட்கறார், அப்பறம், அவர் வேஷம் போட்டுண்டு வந்தாலும், ராமனை பார்த்த உடனே, ராமனுக்கு பக்தன் ஆயிடறார், ராமதாஸன் ஆயிடறார். அதே மாதிரி, இலங்கையில் சீதாதேவியை பார்த்த உடனெ அவளை பணிஞ்சு அவளுக்கு பக்தன் ஆயிடறார், அந்த மாதிரி இங்க ராமர் கிட்டே, “சுக்ரீவன் எங்கிற வானர ராஜா, இந்த ரிஷ்யமூக மலைல இருக்கான், நான் அவனுடைய மந்த்ரி, அவன் என்னை வேஷம் போட்டுண்டு போன்னு சொன்னதுனால, நான் இப்படி ஒரு வேஷத்துல வந்துருக்கேன், நான் ஒரு வானரம்” அப்படினு சொல்லிட்றார்

இந்த “ஸர்வ பூஷண பூஷார்ஹாஹா கிமர்த்தம் நீ விபூஷிதஹா”

இந்த உலகத்தையே கட்டி ஆளக் கூடிய அளவுக்கு, பலம் பொருந்திய உங்களுடைய, கைகளும், தோள்களும், ஏன் எந்த ராஜ அலங்காரங்களும் இல்லாமல், ஒரு மாலைகளோ, தங்க ஆபரணங்களோ, இல்லாமல் இருக்கு? ஏன் நீங்க ரிஷிகளைப் போல, இருக்கேள்? அப்படீன்னு ஹனுமார் கேட்கறார். இதை, அந்த காலத்துல ரொம்ப ரசிப்பாளாம். இந்த உபன்யாசம் பண்றவாளுக்கு, ஒரு மாலை போடுவா. ஸ்வாமிக்கு ராமர் படத்துக்கு ஒரு மாலை போடுவா. அப்புறம் கொண்டு வந்த மாலை எல்லாம் உபன்யாசகருக்குப் போடப் பார்த்தா, அவர் சொல்வாராம். அங்க ராமர், இருக்கார், அவருக்கு தான், “ஸர்வ பூஷண பூஷார்ஹாஹா” எல்லா, பூஷணங்களையும், ராமருக்குதான், நாம போட்டுப் பார்க்கணும், அவர்தான், அதுக்கு தகுதியானவர், அதனால், சுவாமிக்குப் போடுங்கோ, அப்படீன்னு, சொல்லி, எல்லா மாலைகளையும், சுவாமிக்கு, போடச் சொல்வாளாம், ஸ்வாமிகள், இதை ரொம்ப ரசிச்சிருக்கார். இதை என்கிட்ட சொல்வார்.

ஹனுமார் பேசி முடிச்ச உடனே, ராமர், லக்ஷ்மணன் கிட்ட சொல்றார், “ஹே, லக்ஷ்மணா, நாம எந்த சுக்ரீவனை, தேடி வந்தோமோ, அந்த சுக்ரீவன் கிட்ட இருந்து, இந்த ஹனுமார் வந்திருக்கார். நீ இவர் பேசினதை, கவனிச்சியா,

नानृग्वेदविनीतस्य नायजुर्वेद्धारिणः | नासामवेदविदुषश्शक्यमेवं विभाषितुम् ||

ரிக்வேதம், யஜூர்வேதம், சாம வேதம், எல்லாத்தையும், அத்யயனம், பண்ணி இருந்தாலொழிய, இந்த மாதிரி, ஒருத்தரால, பேச முடியாது. அப்படீன்னு, ராமர் சொல்றார். அது என்ன வேதத்துக்கும், பேச்சுக்கும், என்ன சம்பந்தம்னா, இவர் பேசின வார்த்தைகள், அந்த அவருடைய, vocabulary யை, பார்த்த உடனே, ராமர், வந்து, இவர், வேதம் படிச்சவன்னு, சொல்றார்.

नूनं व्याकरणं कृत्स्नमनेन बहुधा श्रुतम्। बहु व्याहरताऽनेन न किञ्चिदपशब्दितम्।।

நூனம் வியாகரணம் க்ருத்ஸ்நம் அனேன பஹுதா ஸ்ருதம் |

பஹு வ்யாஹரதா அனேன ந கிஞ்சித் அபசப்திதம் ||

இவன், பல தடவை, வ்யாகரணத்தை கேட்டு இருக்கான், அப்படீங்கறார். அந்த காலத்துல, படிப்புன்னாலே, கேள்வி தானே, நிறைய தடவை, வியாகரணம் கேட்டிருக்கான். அதனாலதான், இவ்வளவு, நேரம், பேசினால் கூட, ஒரு, அபசப்தம், கூட இல்ல, ஒரு, gramatical mistake, கூட இவர் பண்ணல, அப்படீன்னு,சொல்றார், ராமர். அது, ரொம்ப முக்கியம். கற்க கசடற அப்படீன்னு சொல்லி இருக்கே. ஹனுமார் பத்தி கேட்கணுமா. ஹனுமார், சாக்ஷாத், சூரிய பகவான் கிட்டே, சதுர்தச வேத வித்யைகளையும், படிச்சவர். அதனால், அவர், பேசும் போது, தப்பு வருமா? அவர், அவ்வளோ அழகா பேசறார்

न मुखे नेत्रयोर्वापि ललाटे च भ्रुवोस्तथा । अन्येष्वपि च गात्रेषु दोषस्संविदितः क्वचित्।।

ந முகே நேத்ரயோர்வாபி லலாடே ச ப்ருவோஸ்ததா |

அன்யேஷ்வபி ச காத்ரேஷு தோஷ: சம்விதித க்வசித் ||

இவனுடைய, முகத்துலேயோ, புருவங்கள்லேயோ, கண்கள்லையோ வேற எந்த அவயங்கள்லேயோ வேற எந்த விதமான கொனஷ்டையும், பண்ணாம, சேஷ்டையும் பண்ணாம, அவ்ளோ, இவன் முகத்தை பேசும் போது பார்த்துண்டே இருக்கலாம், அவ்வளோ அழகா பேசறான். அப்படீன்னு சொல்றார்.

अविस्तरमसन्दिग्धमविलम्बितमद्रुतम् । उरस्थं कण्ठगं वाक्यं वर्तते मध्यमे स्वरे ।।

அவிஸ்தரம் அசம்திக்தம் அவிலம்பிதம் அத்ருதம் |

உரஸ்தம் கண்டகம் வாக்யம் வர்த்ததே மத்யமே ஸ்வரே ||

ரொம்ப உரக்க கத்தி பேசல, ரொம்ப யாருக்குமே, கேட்காத, மாதிரி மெதுவா முணுமுணுத்துண்டு பேசல, விறுவிறுன்னு பேசல, நாபியில இருந்து, வார்த்தைகள் வர்றது, தொண்டையில பேசறான். மத்திம ஸ்வரத்துல பேசறான். இவன் வந்து, கல்யாணீம், வாசம், மங்களகரமான, வார்த்தைகளை, பேசுகிறார். இந்த ஹனுமார். “ஹிருதய ஹாரணீம்,”மனதை கொள்ளை கொள்ளும், வார்த்தைகளை, பேசறார்., இந்த ஹனுமார், அப்படீன்னு சொல்றார்.

संस्कारक्रमसम्पन्नामद्रुतामविलम्बिताम् । उच्चारयति कल्याणीं वाचं हृदयहारिणीम् ।।

சம்ஸ்கார க்ரம ஸம்பன்னாம் அத்ருதாம் அவிலம்பிதாம் |

உச்சாரயதி கல்யாணீம் வாசம் ஹ்ருதயஹாரிணீம் ||

எனக்கு, இவன் பேசறதை கேட்டுண்டே இருக்கணும்போல இருக்கு. இந்த மாதிரி, ஒருத்தர், பேசினா கொல்ல வந்த எதிரி கூட, கத்தியை கீழ போட்டுட்டு, நமஸ்காரம் பண்ணிடுவான். அப்பேற்பட்ட, இனிமையான, வாக்கு இவருக்கு. இந்த மாதிரி, ஒருத்தர், தூதனா, கிடைச்சா, அந்த ராஜாவுக்கு, எல்லா காரயங்களும் சித்தியாகும். இந்த மாதிரி, ஒரு தூதன் இல்லேன்னா, எப்படித்தான், கார்யங்களை, நடத்திக்க முடியும், அப்படீன்னு, ராமர் வந்து பார்த்த உடனே, appraisal பண்ணி வேலையும் கொடுத்துடறார். ராமா தூதன் அப்டீங்கிற job ஐயும், assign பண்ணிடறார்., அவருக்கு. அப்பேற்பட்ட, ஹனுமாருடைய வாக்கு. அதைக் கேட்ட உடனே, ராமர், “சொல்லின் செல்வன்” அப்படீன்னு, கம்ப ராமாயணத்துல, சொல்வா. அப்படி title கொடுக்கறார்.

“புத்திர்பலம் யசோதைர்யம் நிர்பயக்த்வம் அரோகதா

அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத்”


அப்படீன்னு, ஹனுமாரை, நினைச்சா, நமக்கும், நல்ல வாக்கை கொடுப்பார். அவர்கிட்டே, நமக்கும் இனிமையான, வாக்கு வரட்டும் னு, வேண்டிப்போம்.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share

ஆர்ஜவம் பலம்



--
சூராணாம் சுத்த பாவானாம் பவதாம் ஆர்ஜவம் பலம்


இன்னிக்கி வால்மீகி ராமாயணத்துல யுத்த காண்டத்துல, அம்பதாவது சர்க்கத்துல ஒரு ஸ்லோகம்,

प्रकृत्या राक्षसा: सर्वे सम्ग्रामे कूटयोधिनः |

शूराणाम् शुद्धभावानाम् भवताम् आर्जवम् बलम् ||

ப்ரக்ருத்யா ராக்ஷஸா சர்வே ஸங்க்ராமே கூடயோதின: |

சூரானாம் சுத்த பாவானாம் பவதாம் ஆர்ஜவம் பலம் ||

அப்படின்னு கருட பகவான் ராம லக்ஷ்மணா கிட்ட சொல்றார். அது என்ன கதைன்னா, யுத்தம் ஆரம்பிக்க போறது, அதுக்கு முன்னாடி, அங்கதனை போய் ராவணன் கிட்ட ஒரு last warning என்கிற மாதிரி ஒரு தடவை போய் எச்சரிக்கை பண்ணிட்டு வா, அப்படின்னு விபீஷணன் கிட்ட அனுமதி கேட்டுண்டு, அங்கதனை ராமர் ராவணன் கிட்ட தூது அனுப்புறார். நீ போய் ராவணன்கிட்ட “உனக்கு கடைசியா, உயிர் பிழைக்க ஒரு வாய்ப்பு கொடுக்கறேன், சீதையை கொண்டுவந்து ஒப்படைச்சு மன்னிப்பு கேட்டுக்கோ, இல்லேன்னா, உனக்கு என்ன தைரியம் இருக்கோ, என்ன படை பலமோ, கோட்டை கொத்தளம, எதை நம்பி நீ இருக்கியோ அதை கொண்டு யுத்தம் பண்ணு, நீ வந்து சரணாகதி பண்ணிணேனா, உன்னை உயிரோடு விடுவேன். ஆனால், உன்னை மாதிரி ஒரு தூர்தனுக்கு இந்த ராஜ்யத்தை தரமாட்டேன், விபீஷணனை தான் நான் இலங்கைக்கு ராஜாவாக்குவேன்” அப்படின்னு போய் சொல்லிட்டு வாங்கிறார்.

இந்த வார்த்தைகளை போய் அப்படியே அங்கதன் ராவணன்கிட்ட சொல்றான், ராவணன் பொறுப்பானா! நான் வாலியோட பிள்ளை அங்கதன் வந்துருக்கேன்ன்னு ஆரம்பிக்கிறான், வாலி கிட்ட ஏற்கனவே ராவணன் அடி வாங்கியிருக்கான், வாலியோட ஒரு பிள்ளை வந்து இவ்ளோ தைரியமா பேசறதைப் பாத்த உடனே அவனுக்கு கடும்கோபம் வர்றது, “பிடிங்கோ அவனை! கொல்லுங்கோ”ங்கறான், இந்த வாட்டி தடுக்கறதுக்கு விபீஷணர் இல்ல, ஒரு நாலு பேர் ராக்ஷஸா வாரா அவனை பிடிக்கறத்துக்கு, அந்த நாலு பேரை, ரெண்டு ரெண்டு பேரை ரெண்டு கஷ்கத்துல தூக்கிக்றான் அங்கதன், ஆகாசத்துல பறந்து, காலால ராவணணனோட கோட்டையோட கோபுரத்தை ஒரு உதை உதைக்கறான். அந்த கோபுரமே சரிஞ்சு விழுந்துற்றது, இந்த நாலு பேர ஆகாசத்துலேர்ந்து ககீழே போடறான், நாலு பேரும் வதம் ஆயிடறா. நேரா ராமர் கிட்ட வந்துடுறான், ராமர் கிட்ட வந்து, “இது அசத்து இவனுக்கு, பேசியெல்லாம் ஒண்ணும் புரியாது, யுத்தம் தான்” அப்படின்னு சொல்லிடறான்.

அடுத்த நாள் யுத்தம். இதுக்கு நடுவுல விபீஷணன், அவனுடைய நாலு மந்த்ரிகள், பறவைகளா போய் ஆகாசத்துல நின்னுண்டு, ராவணன் என்ன வ்யூஹம் பண்ணியிருக்கான், அப்படிங்கிறத பாத்துண்டு வந்து சொல்றா. எந்தெந்த கோட்டைல யார் யாரை நிறுத்தியிருக்கான், தெற்கு கோட்டைல இந்திரஜித் படையோட நிக்கறான், வடக்கு கோட்டைல மஹோதரன் நிக்கறான் அப்படின்னு தகவல்லாம் சொல்றா, அதை சொல்லிட்டு விபீஷணன் ராமர் கிட்ட சொல்றான் “ரோஷயே தவாம் நீ பீஷயே” நான் உங்களை பயமுறுத்தறேன் நினச்சிக்காதீங்கோ, உங்களுக்கு ரோஷம் வர்றத்துக்காக சொல்றேன், இந்த ராக்ஷஸர்கள்லாம் ஒவ்வொருத்தரும் “ஆததாயின:” பெண்களையும், குழந்தைகளையும் கூட கொல்றதுக்கு தயங்காத, கொடும் மனசு படைச்சவர்களுக்கு ” ஆததாயின:” பேரு, அப்பேற்பட்ட கொடுமையான ராக்ஷஸர்கள், இவளோட யுத்தம் பண்றதுக்கு எப்படி, strategy பண்ணனும்னு யோசிங்கோ”, அப்படின்னு சொன்ன உடனே, ராமர் “எங்க இந்திரஜித் வருகிறானோ அங்க ஹனுமார் படையோட போகட்டும், எங்க மஹோதரன் வருகிறானோ அங்க சுக்ரீவன் படையோடு போகட்டும் அப்படியெல்லாம் ஒரு strategy சொல்றார்.

முன்ன நாலா திக்குலயும் வானரர்களை அனுப்பிச்சு சீதாதேவியை தேடறதுக்கு ஆரம்பிக்கும்போது, சுக்ரீவன் சொல்றான் ராமர் கிட்ட “இது உங்க படைதான், நீங்க என்ன சொன்னாலும் கேட்பா” அப்படின்ன போது, ராமர் சொல்றார் “இல்ல நீதான் அவாளுக்கு ராஜா, உனக்கு என்னோட தேவை தெரியும், சீதாதேவி எங்கேயிருக்கான்னு கண்டுபிடிச்சு தரணும். நீயே அவாளுக்கு உத்தரவு பண்ணு. நேரம் வரும்போது நான் அவளுக்கு உத்தரவு கொடுக்றேன்னு” சொல்றார், இப்போ அந்த நேரம் வந்துருக்கு எப்படி அவா, படைய நடத்தணும். இவாளோட வ்யூஹம் என்னங்கிறதை ராமரே சொல்றார்.

அந்த மாதிரி அந்தந்த படைகள் போய் அங்கங்க நிக்கறது. “ராவணன் எந்த கோட்டை வழிய வெளியில வருகிறானோ அங்கே நானே யுத்தம் பண்றேன்” னு, ராமர் சொல்றார், “இந்த யுத்தத்தில், நான், லக்ஷ்மணன், விபீஷணன் அவனுடைய நாலு மந்த்ரிகள், இந்த ஏழுபேர்மட்டும் மனுஷாளா இருக்கோம், பாக்கி வானரா, கரடிகள் எல்லாம், அவா அவா, அவா அந்த உருவத்திலேயே யுத்தம் பண்ணட்டும்”, அவா எல்லாம் நெனச்ச உருவத்தை எடுக்கக் கூடியவர்கள். ஆனால் அந்த மாதிரி உருவத்தை மாத்த வேண்டாம், “வானரா ஏவ நஸ்ச்சின்னம்” வானரர்களா இருக்கறதே, நமக்கு அடையாளமா இருக்கட்டும், அப்படின்னு ராமர் சொல்றார்.

இதை ஸ்வாமிகள் வேடிக்கையா சொல்வார் ” வானரா ஏவ நஸ்ச்சின்னம் ” நான் எனக்கு வெச்சிண்டுருக்கேன், என்னால வந்து எல்லாருக்கும், அதாவது ஸ்வாமிகளோட தேவைகளே ரொம்ப கம்மி, ஆனா மனுஷா இந்த காலத்துல ரொம்ப பந்தா விட்றதுனால, அந்தமாதிரி பந்தாவெல்லாம் என்னால விடமுடியாது, நான் வந்து உட்காந்து படிப்பேன், கதை கேட்க வரவாளுக்கு ஏத்த மாதிரியெல்லாம் என்னால என்ன மாத்திக்கமுடியாது, இல்ல ஒரு ஆத்துல போய் படிக்கறோம், அல்லது ப்ரவசனம் பண்றோம்னா, அவளோட tasteக்கெல்லாம் என்னால என்னை மாத்திக்கமுடியாது, நான் இருக்கற மாதிரி நான் இருக்கேன், “வானரா ஏவ நஸ்ச்சின்னம் ” அவாளுக்கு பிடிச்சுதுன்னா அடுத்த வாட்டி கூப்பிடப் போறா, இல்லன்னா ஏழு நாள் ஸப்தாஹம்னா, மூணு நாள், நாலு நாள்ன்னு எண்ணிண்டு இருக்கப்போறா, அப்படிம்பார். அந்த மாதிரி நிலைமை அவருக்கு வரல, யாரு அவர் கிட்ட கதை கேட்டாலும் திரும்ப திரும்ப அவரை கூப்டுண்டு இருந்தா, ஆனா அவர் அப்படி வேடிக்கையா சொல்லுவார். உலகத்தோட போக்குக்கெல்லாம் நம்மள மாத்திக்க வேண்டியது இல்லை, அப்ப்டிங்கிறதுக்குக்காக இதைச் சொல்லுவார்.

அந்த மாதிரி வ்யூஹமெல்லாம் அமைச்சு, யுத்தம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி, இந்த ஒரு தடவை அங்கதனை தூது அனுப்பிச்சு, அதையும் தீர்மானம் பண்ணிண்டு, அப்பறம் அடுத்த நாள் காத்தால, எல்லா கோட்டைகளையும் தாக்கறா. அப்போ ஒவ்வொரு கோட்டைகளிலிருந்தும் ராக்ஷஸர்கள் வெளில வரா, துவந்தவ யுத்தம் அப்படின்னு சொல்லி, equal powersல இருக்கறவா எல்லாம் யுத்தம் பண்ணறா, அப்போ அங்கதன் இந்த இந்திரஜித்தை கடுமையா தாக்கி அவனை தடுமாற பண்ணிடறான், உடனே எல்லாரும் வியக்கறா. இந்திரஜித்து, இந்திரனையே, ஐராவதத்துலேர்ந்து கீழே தள்ளி, சிறை பிடிச்சிண்டு வந்தவன், அப்பேற்பட்ட இந்திரஜித்தையே நீ ஜெயிச்சிட்டயே அப்படின்னு அங்கதனை எல்லாரும் கொண்டாடறா.

அப்போ ராமர் சொல்றார் “இல்லை. இது கொண்டாட வேண்டிய நேரம் இல்லை, ஜாக்ரதையா இருக்க வேண்டிய நேரம், அந்த இந்திரஜித்துக்கு நிறைய மாயை தெரியும்” அப்படின்னு சொல்லிண்டு இருக்கறார். அந்த இந்திரஜித்துக்கு மறைஞ்சிருந்து அடிக்க தெரியும், அவன் ஏதோ ஒரு யாகம் பண்ணுவான், அந்த மாதிரி மறைஞ்சியிருந்து, எல்லார் மேலயும் அம்பு போடறான். எல்லாரும் தவிக்கறா, எல்லா பக்கமும் பாக்கறா,

ஏதோ சத்தம் தான் கேட்கறது, எங்க இருக்கான்னு தெரியல, அவன் ஆகாசத்துல, மேகங்களுக்கு நடுவுல மறைஞ்சிருந்து தேர்ல அங்க இங்க போயி, அம்புகளை மழையாட்டம் கொட்டறான். ராமலக்ஷ்மணா மேல, நாக பாஸத்தை போட்டுடறான். கடுமையான, விஷம் கொண்ட நாகங்கள், ராமரையும், லக்ஷ்மணனையும் சுத்திண்டுடறது. அவா ரெண்டு பேரும் கீழ விழுந்துடறா, பின்னாடி, லக்ஷ்மணன், இந்திரஜித் கூட யுத்தம் பண்ணும்போது, அவன் நாகபாஸத்தைப் போடறான், அவா நேர நேர யுத்தம் பண்ணும்போது, லக்ஷ்மணர், கருட அஸ்த்ரத்தை விட்டு அதை முறிச்சுடறார், இங்க, அவாளுக்கு கண்ணுக்குத் தெரியலை, அதனால அந்த நாகங்கள் எல்லாம் இவாளை கட்டிடறது. அதனால அவா கீழ விழுந்துடறா, மயக்கமா விழுந்துடறா, மூச்சுக்கூட இல்ல, அதனால எல்லாரும் பயப்படறா.

அந்த நேரத்துல, இந்திரஜித் போயி சொல்றான், ராம லக்ஷ்மணா கதை எல்லாம் முடிஞ்சிடுத்து, அப்பாவை நிம்மதியா இருக்க சொல்லுங்கோ, அப்படீன்னு, ராவணனுக்கு ஒரே குஷி. ஊரெல்லாம் பெரிய உத்சாகமா கொண்டாடறான்.

இதுக்கு நடுவுல, அவனோட குறுக்கு புத்தி, சீதா தேவியை புஷ்பக விமானத்துல அழைச்சுண்டு போயி, காண்பிங்கோ, இந்த ராமலக்ஷ்மணாளோட நிலைமையை, அதை பார்த்தாவது, புத்தி மாறி அவ என் கிட்ட வருவா அப்டீங்கறான். அந்த மாதிரி, திரிஜடை, சீதையை கூட்டிண்டு போயி காண்பிக்கும் போது, சீதை புலம்பி அழறா. பெரியவா எல்லாம் எவ்வளவு ஆஸிர்வாதம் பண்ணியிருக்காளே, நீ தீர்க்க ஸுமங்கலியா பிள்ளைகள் பெற்று, சக்ரவர்த்தினியா இருப்பேன்னு, சொன்னாளே, இப்படி ஆயிடுத்தே, அவா சொன்ன வார்த்தை எல்லாம் பொய்யாயிடுத்தே, அப்படீங்கறா. இந்த இடத்துல ஸ்வாமிகள் சொல்வார். “அந்த மாதிரி ரிஷிகள் சொன்ன வார்த்தை பொய்யாகலை. ஆகாது” அப்படீன்னு ஸ்வாமிகளுக்கு, தர்மம் தோத்துதுங்கிற பேச்சை கூட அவரால பொறுக்க முடியாது. அது மாதிரி, “ஞானின: அன்ருதவாதின:” “ஞானிகள் சொன்ன வார்த்தை பொய்யாயிடுத்துன்னு, சீதை புலம்பறா. ஆனா, நமக்குத் தெரியும், அது, பொய்யாகல”, அப்படீன்னு, ஸ்வாமிகள் சொல்வார். அப்ப த்ரிஜடை சமாதனப் படுத்தறா. “இல்லை, அவா இப்ப அவா மயக்கமாதான் இருக்கா.உயிர் போகல. அவா, உயிர் போயிடுத்துன்னா, உன்னை, இந்த புஷ்பக விமானம், ஏத்துக்காது. உனக்கு, தீட்டு, வந்துடும். அந்த மாதிரி, அர்த்ததுல சொல்றா. அப்புறம், சீதை அழுதுண்டே போறா.

ராமருக்கு, ஒரு நிமிஷம் தெளிவு ஏற்பட்டு கண்ணைத் திறந்து பார்க்கறார். இந்த லக்ஷ்மணன், இறந்து கிடக்கறான்னு, நினைச்சு, ரொம்ப புலம்பறார். “ஹே, லக்ஷ்மணா, நீ இல்லாம, எனக்கு என்ன இருக்கு? நீ ஒரு வார்த்தை கூட கடுமையான வார்த்தை பேசமாட்டியே”, அப்படீன்னு, சொல்றார். எல்லாரும், லக்ஷ்மனதான், கோபக்காரன். அப்படீன்னு, கதை சொல்றவா சொல்லுவா. ராமர், சொல்றார். “நீ ஒரு வார்த்தை கூட கடுமையான வார்த்தை பேச மாட்டியே”, அப்பட்டீன்னு, லக்ஷ்மணனுக்கு ராமர் கிட்ட யாராவது தப்பா நடந்துண்டா அவன் கோச்சுப்பான், மத்தபடி அவன் ரொம்பவே friendly. “ஸௌமித்ரி: மித்ர நந்தன” அப்படீன்னு அடிக்கடி வரும். அவனுடைய, friendsக்கெல்லாம் ரொம்ப பிடிச்சவன். அப்படி இனிமையா பேசினா தானே பிடிச்சவனா இருக்க முடியும். எப்பவுமே லக்ஷ்மணன் இனிமையா பேசுவான்னு தெரியறது. இப்படி அந்த லக்ஷ்மணன் இறந்து கிடப்பதை பார்த்து, ராமர், புலம்பி, சுக்ரீவன்கிட்ட, விபீஷ்ணன்கிட்ட எல்லாம், “யுத்தம் எல்லாம் முடிஞ்சு போயிடுத்தப்பா, நான் என்ன பண்றது, சுக்ரீவா நீ திரும்பி போய்க்கோ”, என்கிறார். ஹனுமாருடைய, பிரபாவத்தையும், ஜாம்பவானுடைய வீரத்தையும், எல்லாம் புகழ்ந்து, அவாளுக்கெல்லாம் நன்றி சொல்லி, விபீஷணன் கிட்ட “நான் உனக்கு promise பண்ணிணேன், என்னால, உன்னை இலங்கைக்கு, ராஜாவா ஆக்க முடியல”, அப்படீனெல்லாம் சொல்றார். அந்த மாதிரி நிலைமைகள் வரும்னு அப்டீங்கிறது, தெரியறது.

ஸ்வாமிகளே, அவருடைய, 1950க்கு சென்னை வந்தார். வந்ததுல இருந்து அவருக்கு கடன்தான். வட்டி, வட்டிக்கு வட்டி, 1986 வரைக்கும் பணத்துக்கு கஷ்டப் பட்டுருக்கார். அப்போ ரொம்ப தாங்க முடியாத கஷ்டம் இருந்த போது, அவரை சுத்தி இருந்த நாலு பேர்கிட்ட, “நீங்க எல்லாம் என்னோட சேர்ந்து கஷ்டப் படாதிங்கோ, நான் சொல்லி கொடுத்த பஜனத்தை அவாவா பண்ணிண்டு இருங்கோ. இங்கவரணும் என்கிறதில்லை”, அப்படீன்னு சொல்லியிருக்கார். அந்த அளவுக்கு, பகவான் அவரை சோதனை பண்ணி இருக்கார். அந்த மாதிரி இங்க ராமருக்கு கடுமையான சோதனை.

அப்படி எல்லாரும், தவிக்கும் போது கருட பகவான் வரார். கருட பகவான், வந்த உடனே, அந்த பாம்புகள் எல்லாம் ஓடிப் போயிடறது. கருட பகவான், இவா ரெண்டு பேரையும் தடவி கொடுத்த உடனே, இவா ரெண்டு பேரும் முன்ன விட, ரெண்டு மடங்கு வீரியமும், பலமும், தேஜஸும் இவாளுக்கு வந்துடறது, “நீங்க யாரு”ன்னு, ராமர் கேட்கறார். “நான் யாருங்கிறதை பத்தி நீங்க ஆவல் படவேண்டாம், நான் யாருங்கிறது, பின்னாடி தெரியும்”, அதாவது, இராவணன் வதம் ஆன பின்ன தெரியும், அதாவது தேவர்கள் எல்லாம், வந்த போது ராமர், “ஆத்மானாம் மானுஷம் மன்யே” அப்படீன்னு, ராமர் சொல்றார். “நான் மனுஷன், தசரத குமாரன், என்றுதான் நான் என்னை அறிந்து கொண்டிருக்கிறேன்” அப்படீன்னு ராமர் சொன்ன போது பிரம்மா, “நீங்க சாக்ஷாத் விஷ்ணு பகவான்” அப்படீன்னு சொல்றா, அப்போ கருடன் யாருன்னு தெரியும். அப்படீங்கிகிற meaning ல, “நான் யாருன்னு உங்களுக்குப் பின்னாடி தெரியும், நீங்க இந்த யுத்தத்தை பண்ணுங்கோ. நீங்கள், வெற்றி பெறுவீர்கள், அப்படீன்னு அந்த கருட பகவான் சொல்லிட்டு, அந்த இடத்துல இந்த ஒரு ஸ்லோகம் வர்றது.

ப்ரக்ருத்யா ராக்ஷஸா சர்வே ஸங்க்ராமே கூடயோதின: |

சூரானாம் சுத்த பாவானாம் பவதாம் ஆர்ஜவம் பலம் ||

இயல்பிலேயே, ராக்ஷதர்கள், சூழ்ச்சி எல்லாம் பண்ணுவா. நீங்கள், சுத்த மனசும், ஆர்ஜவம், அப்படீங்கிற வார்த்தைக்கு, ருஜூத் தன்மை, அதாவது, மனோ, வாக், காயத்துனால, நேர்மையா இருக்கறதுக்கு, ஆர்ஜவம்னு, பேரு. அந்த ஆர்ஜவம்தான் உங்க பலம், அப்படீன்னு சொல்றார்.

அந்த மாதிரி இந்த நேர்மையா இருக்கறதுக்கு, ஒரு power இருக்கு. மஹா பெரியவா, சொன்ன வார்த்தை எல்லாம் பலிச்சுதுன்னா, எப்பவும் ஸத்யமா இருக்கறது, அப்படீன்னு வெச்சுண்டா, அவா பேசறது எல்லாம் ஸத்யமாயிடறது. மஹான்களுக்கு, அவா சொல்ற வார்த்தைகள் பின்னாடி, ஸத்யம் வந்து ஒட்டிக்கறது. அவா சொல்றது ஸத்யமாயிடறது. அது எப்படீன்னா, அவா எப்பவுமே, ஸத்யம்தான் பேசணும், மனோ, வாக், காயத்துனால, ஆர்ஜவமா இருக்கணும், அப்படீன்னு, ரொம்ப ரொம்ப careful ஆ இருக்கா.

சிவன் சார், கூட நேர்மைதான் தெய்வீகம், அப்படீன்னு, அதை ரொம்ப முக்யமா சொல்றார். ஆசார அனுஷ்டானங்களோ, பிரம்மசர்யமோ, அதெல்லாம், தெய்வீகம் கிடையாது. நேர்மை,அடக்கமா, ஒரு தெய்வத்து கிட்ட பக்தி, இது போறும், அப்டீங்கிறதை அவர் வாழ்ந்தும் காண்பிச்சார், அவருடைய புஸ்தகத்துலயும் ரொம்ப அறுதியிட்டு எழுதியும் இருக்கார்.

இப்படி, இந்த ராம லக்ஷ்மணா, அந்த ஆர்ஜவத்தோட இருந்ததுனால, கருட பகவான் வந்து, அவாளை விடுவிக்கறார். கருட பகவான் சொல்றார், “இந்த நாக பாஸத்துல இருந்து, தேவர்களோ, ரிஷிகளோ கூட உங்களை விடுவிக்க முடியாது, நான் இதை கேள்வி பட்ட உடனே ஓடோடி வந்தேன்”, அப்படீங்கறார். ஆனா அதுக்குள்ளே இங்கே எல்லாரும் அழுதாச்சு. கஷ்ட காலத்துல இருக்கும் போது, நாம கடவுளுக்கு கண் இல்லயான்னு, நினைக்கறோம், அழுது புலம்பிடறோம், ஆனா பகவானோட அனுக்ரஹம் வெகு விரைவில் வரப்போறது. ஆனா நம்மால, அதுவரை, தாங்க முடியலை, ரொம்ப வருத்தப்படறோம், மஹான்கள் பொறுமையா இருக்கா. திதீக்ஷா அப்படீன்னு சொல்லி, இது ஏதோ ஒரு வினையினால வந்தது, சரியா போயிடும், அப்படீன்னு, அதை பத்தி, நினைக்காம அவா “நாம பண்ண வேண்டிய கடமை என்ன, அதுல நேர்மையா இருக்கோமா, அது பாபம் கலக்காமல், தர்மமா இருக்கா?”, அப்படீங்கிறதை மட்டும் அவா பாத்துண்டு போறா. அந்த மாதிரி இன்னிக்கு, அந்த நாகபாஸத்துல இருந்து, ராமலக்ஷ்மணா கருடனோட உதவியால விடுபட்டதை பார்த்தோம். ஆர்ஜவம்தான்,

याथार्त्यात् न हि भुवने किमपि असाध्यम् “யதார்த்தமா இருந்தா, மூவுலகத்துலயும், எதுவுமே அஸாத்யம் கிடையாது. எது வேணாலும் நடக்கும்” அப்படீன்னு ஸ்ரீமத் பாகவதத்துல ஒரு வரி, பாகவதம் எனக்கு தெரியாது, இந்த ஒரு வரி, ஸ்வாமிகள் எனக்கு எழுதிக் கொடுத்தார். அப்படி அந்த யதார்த்தமா இருக்கறதுங்கிறது ரொம்ப முக்யமான குணம் என்று இது இந்த காட்சியில இருந்து தெரியறது.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share

#கால_தர்மத்தின்_காலகணக்கு*

🌹 1 நாள் = 60 நாழிகை
(24 மணி)
🌹 1 மணி = 2.5 நாழிகை = 60 நிமிடங்கள்
🌹 1 நாழிகை = 24 நிமிடங்கள்

🌹 1 நாழிகை = 60 விநாழிகை
24 நிமிடங்கள்
🌹 1 நிமிடம் = 2.5 விநாழிகை = 60 விநாடிகள்
🌹 1 விநாழிகை = 24 விநாடிகள்

🌹 1 விநாழிகை = 60 லிப்தம்

🔔 *24 விநாடிகள்*
🌹 1 விநாடி = 2.5 லிப்தம் = 100 செண்டி விநாடிகள்
🌹 1 லிப்தம் = 40 செண்டி விநாடிகள்
🌹 1 லிப்தம் = 60 விலிப்தம்

🔔 *40 செண்டி விநாடிகள்*
🌹 1 செண்டி விநாடி = 1.5 விலிப்தம் = 10 மில்லி விநாடிகள்
🌹 1 விலிப்தம் = 6.6666 அல்லது 6.7 மில்லி விநாடிகள்

🔔 *1 விலிப்தம் = 60 பரா 6.7 மில்லி விநாடிகள்*
🌹 1 மில்லி விநாடி = 8.95 அல்லது 9 பரா = 1000 மைக்ரோ விநாடிகள்
🌹 1 பரா = 111 மைக்ரோ விநாடிகள்
🌹 1 பரா = 60 தத்பர
111 மைக்ரோ விநாடிகள்
🌹 1 மைக்ரோ விநாடி = .5 தத்பரா = 1000 நானோ விநாடிகள்
🌹 1 தத்பரா = 2000 நானோ விநாடிகள்

🌹 30 நாள் = 1 மாதம்
🌹 12 மாதங்கள் = 1வருடம்
🌹 60 வருடங்கள் = 1 சுழற்சி (பிரபவ முதல் அக்ஷய வரை)
🌹 3000 சுழற்சிகள் = 1 யுகம்
🌹 4 யுகங்கள் = 1 சதுர்யுகம்
🌹 71 சதுர்யுகங்கள் = 1 மன்வந்தரம்
🌹 14 மன்வந்த்ரங்கள் = 1 கல்பம்

🔔 *ஒரு கல்பம் என்பது நானூற்று முப்பத்து இரண்டு கோடி மனுட வருடங்கள் (கணக்கதிகாரம்)*. இதில் பாதி முடிந்து விட்டது.
இப்பொழுது நடந்துகொண்டிருப்பது, த்விதீய பரார்த்தம் - இரண்டாவது பரார்த்தம்.

🔔 *ஸ்வேதவராஹ கல்பம்* - இரண்டாவது பரார்த்தத்தின் பிரம்மாவின் முதல் நாள் ஸ்வேத வராஹ கல்பம் எனப்படும். வாயு புராணத்தின் கணக்குப்படி மொத்தம் 36 கல்பங்கள் உள்ளன. இந்த உலகத்தை விஷ்ணு வெள்ளைப் பன்றி உருவம் (ஸ்வேத வராஹம்) கொண்டு வெளிக்கொணர்ந்த காலவெள்ளத்தில் உட்பட்டது என்பதால் இது ஸ்வேத வராஹ கல்பம் எனப்பட்டது.

🔔 *வைவஸ்வத மன்வந்தரம்* - நடந்து கொண்டிருக்கும் ஸ்வேத வராஹ கல்பம் 14 மன்வந்திரங்களை உள்ளடக்கியது. ஒரு மன்வந்தரம் என்பது 71 சதுர் யுகங்கள் கொண்டது.

*14 மன்வந்திரங் களாவன*

1.ஸ்வாயம்புவ மன்வந்திரம், 2.ஸ்வரோசிஷ மன்வந்திரம், 3.உத்தம மன்வந்திரம், 4.தாமச மன்வந்திரம், 5.ரைவத மன்வந்திரம், 6.சாக்ஷ¤ஷ மன்வந்திரம், 7.வைவஸ்வத மன்வந்திரம், 8.சாவர்ணிக மன்வந்திரம், 9.தக்ஷ சாவர்ணிக மன்வந்திரம், 10.ப்ரமஹா சாவர்ணிக மன்வந்திரம், 11.தர்ம சாவர்ணிக மன்வந்திரம், 12.ருத்ர சாவர்ணிக மன்வந்திரம், 13.தேவ சாவர்ணிக மன்வந்திரம், 14.சந்திர சாவர்ணிக மன்வந்திரம்.
ஏழாவது மன்வந்திரமாகிய வைவஸ்வத மன்வந்திரத்தில் இருக்கின்றோம்.

🔔 *அஷ்டாவிம்சதி (28) தமே கலியுகே - 71 சதுர்யுகங்கள் கொண்டது ஒரு மன்வந்திரம் என்று கண்டோம்*. வைவஸ்வத மன்வந்திரத்தினுடைய 71 சதுர்யுகங்கள் கொண்ட பாதையில் 28வது சதுர்யுகத்திலிருக்கும் நான்கு யுகங்களான கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என்பதில் வரும் கடைசி யுகமான கலியுகம் நடந்து கொண்டிருக்கிறது.
இந்தக் கலியுகம் முடிந்து அடுத்த சதுர்யுகம் தொடங்கும். அது 29 வது சதுர்யுகத்தின் கிருத யுகத்தில் தொடங்கும்.

🔔 இதுவரை வந்தது கால அளவைகள் அடுத்தது நாம் இருக்கும் இடத்தின் அளவைகள். இவற்றைச் சற்றே சுருக்கமாகக் காண்போம்.

🔔 *ஜம்பூத்வீபே* - பரந்த பால்வெளியின் பல அண்டங்களில் ஒரு அண்டத்தின் சின்னஞ்சிறு பாகத்தின் ஒரு மூலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். த்வீபம் என்பது தீவு என்று அர்த்தம். பரந்த பால்வெளிக் கடலில் உள்ள ஒவ்வொரு அண்டமும் ஒரு தீவு போலத்தான். ஏழு தீவுகள் உள்ளன.

(1. ஜம்பூ த்வீபம் (நாம் வசிப்பது - நீரால் சூழப்பட்டுள்ளது), 2. பிலக்ஷ த்வீபம், 3. சான்மலி த்வீபம், 4. குச த்வீபம், 5. க்ரௌஞ்ச த்வீபம், 6. சாக த்வீபம், 7. புஷ்கர த்வீபம்)

🔔 *பாரத வர்ஷே* - த்வீபங்கள் எனும் தீவுகளுள் ஒன்றான ஜம்புத்வீபம் ஒன்பது வர்ஷங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் பாரத வர்ஷத்தில் தான் நாம் வசிக்கின்றோம்.

(1. பாரத வர்ஷம், 2.ஹேமகூட வர்ஷம், 3. நைஷத வர்ஷத்ம், 4.இளாவ்ருத வர்ஷம், 5. ரம்ய வர்ஷம், 6. ச்வேத வர்ஷம், 7. குரு வர்ஷம், 8. பத்ராச்வ வர்ஷம், 9.கந்தமாதன வர்ஷம்)

🔔 *பரத கண்டே* - பாரத வர்ஷம் ஒன்பது கண்டங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது.

1.பரதகண்டம், 2. கிம்புருகண்டம், 3. அரிவருடகண்டம், 4. இளாவிரதகண்டம், 5. இரமியகண்டம், 6. இரணியகண்டம், 7. குருகண்டம், 8. கேதுமாலகண்டம், 9.பத்திராசுவகண்டம இதில் நாம் பரத கண்டத்தில் வசிக்கின்றோம்.

🔔 *மேரோர் தக்ஷணே பார்ச்வே* - பரத கண்டத்திலிருக்கும் மேரு எனும் மலையின் தெற்கு புறத்திலிருக்கின்றோம்.

🔔 எண்ணற்ற பிரம்மாக்களின் சிருஷ்டி வரிசைகளில், ஒரு பிரம்மாவின் படைப்பில், அவரின் இரண்டாவது காலத்தின், முதல் தினத்தில் (கோடிக்கணக்கான வருடங்களுக்கு இடையில்) வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

🔔 மேலே சொல்லப் பட்டுள்ள கணித வகைகள் தமிழின் தொல்லிய நூலாகிய காரி என்பவர் எழுதிய கணக்கதிகாரத்தை மையமாகவும் கொண்டு சொல்லப்பட்டுள்ளது.
கணக்கதிகாரம் மிக அற்புதமான நூல். கால கணிதம் மட்டுமன்றி, எடையறிதல், நீளமறிதல் போன்ற நுண்ணிய கணிதங்களைக் கொண்டது.

🔔 அதில் கிடைக்கும் ஒரு செய்யுளில் ஒரு பலாப் பழத்தைப் பார்த்தே, அதைப் பிளக்காமலே அதில் உள்ள பலாச் சுளைகளை அறிய ஒரு கணித சமன்பாடு இருக்கின்றது.
ஒரு பலாப்பழத்திலுள்ள காம்பைச் சுற்றிய முதல் வரிசையில் உள்ள முட்களை எண்ண வேண்டும். அந்த எண்ணிக்கையை ஆறால் பெருக்க வேண்டும். அதில் கிடைக்கும் தொகையை ஐந்தால் வகுத்தால் பலாப்பழத்தில் உள்ள பலாச் சுளைகளின் எண்ணிக்கை கிடைக்கும். என்னே ஒரு கணிதம்!

🔔 ஒரு மரத்தை வெட்டினால் வெட்டுப்பட்ட பாகத்தில் உள்ள கோடுகளைக் கொண்டு மரத்தின் ஆயுளைக் கூறிவிட முடியும்.

🔔 இவ்விதம் காலமானம் பேசப்படுகிறது. இது தான் சனாதன சமய கால கணக்கீட்டில் மிகச்சிறிய பகுதி. இதுவே *வானசாஸ்திரத்தை (Astronomy)*!.

🔔 🌹🙏🙏🙏🌹🔔

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

வேதம் - Holy Book

Post by vgovindan »

படித்ததில் பிடித்தது

ஏதேனும் ஒரு தெய்வத்தின் பெயரைச் சொல்லி இதுவே மேலான தெய்வம் என்று சொல்லும் நூல் வேதம்; இது தவிர மற்றவை எல்லாம் தெய்வமல்ல என்று சொல்லும் நூல் பொய் வேதம்.

இந்த வழிபாட்டுமுறை சிறந்தது என்று ஏதேனும் ஒரு முறையைச் சுட்டிக் காட்டும் நூல் வேதம்; மற்ற முறைகள் எல்லாம் உங்களை நரகத்துக்குக் கொண்டு சேர்க்கும் என்று சொல்லும் நூல் பொய் வேதம்.

மனிதனின் இறுதி லட்சியம் தர்மத்தை அனுசரித்து, கடுமையாக உழைத்து, ரிஷி, மகோனர், சூரி நிலைகளைக் கடந்து ஒளி நிலையை அடைவது என்று கூறுவது வேதம்; உண்டு உடுத்து உறங்கி, பிறர் துன்பம் பற்றிக் கவலைப்படாமல் தந்நலமே பெரிதாகக் கருதி உயிர் வாழ்வதுதான் மனித வாழ்வு எனப் போதிக்கும் நூல் பொய் வேதம்.

காஞ்சி பரமாச்சாரியர் - தெய்வத்தின் குரல்

That book is vEda - holy book - which, invoking name of any God, declares it to be the highest God;
That book is false vEda - holy book - which declares all others are false Gods.

That book is vEda - holy book - which points to any specific method of worship and declares it as the best method;
That book is false vEda - holy book - which declares that all other methods will lead you to hell.

That book is vEda - holy book - which declares that the ultimate goal of human being is, to reach the realm of enlightenment by transcending the stages of Rishi, Mahona and Suri, by toiling hard adhering to dharma;
That book is false vEda - holy book - which teaches that, to lead a selfish life, by eating, dressing and sleeping, without bothering about the misery of others, is the human life.

Daivathin Kural - Kanchi Paramacharya
(English translation mine)

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

*சித்தர்கள் ஜீவ சமாதியான இடம்,* _அவர்கள் வாழ்ந்த நாட்கள்._
*1. அகஸ்தியர்* – 5 யுகம் 7 நாள் வாழ்ந்தார். பாபநாசத்தில் சமாதியானார்.
*2. பதஞ்சலி* – 4 யுகம் 48 நாள் வாழ்ந்தார். இராமேஸ்வரத்தில் சமாதியானார்.
*3. கமலமுனி* – 4000 வருடம் 48 நாள் வாழ்ந்தார். திருவாரூரில் சமாதியானார்.
*4. திருமூலர்* – 3000 வருடம் 13 நாள் வாழ்ந்தார். சிதம்பரத்தில் சமாதியானார்.
*5. குதம்பை சித்தர்* – 1800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். மாயவரத்தில் சமாதியானார்.
*6. கோரக்கர்* – 880 வருடம் 11 நாள் வாழ்ந்தார். பொய்கை நல்லூரில் சமாதியானார்.
*7. தன்வந்திரி* – 800 வருடம் 32 நாள் வாழ்ந்தார். வைத்திஸ்வரன் கோயிலில் சமாதியானார்.
*8. சுந்தராணந்தர்* – 800 வருடம் 28 நாள் வாழ்ந்தார். மதுரையில் சமாதியானார்.
*9. கொங்ணர்* – 800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். திருப்பதியில் சமாதியானார்.
*10. சட்டமுனி* – 800 வருடம் 14 நாள் வாழ்ந்தார். திருவரங்கத்தில் சமாதியானார்.
*11. வான்மீகர்* – 700 வருடம் 32 நாள் வாழ்ந்தார். எட்டுக்குடியில் சமாதியானார்.
*12. ராமதேவர்* – 700 வருடம் 06 நாள் வாழ்ந்தார். அழகர்மலையில் சமாதியானார்.
*13. நந்தீஸ்வரர்* – 700 வருடம் 03 நாள் வாழ்ந்தார். காசியில் சமாதியானார்.
*14. இடைக்காடர்* – 600 வருடம் 18 நாள் வாழ்ந்தார். திருவண்ணா மலையில் சமாதியானார்.
*15. மச்சமுனி* – 300 வருடம் 62 நாள் வாழ்ந்தார். திருப்பரங்குன்றத்தில் சமாதியானார்.
*16. கருவூரார்* – 300 வருடம் 42 நாள் வாழ்ந்தார். கரூரில் சமாதியானார்.
*17. போகர்* – 300 வருடம் 18 நாள் வாழ்ந்தார். பழனியில் சமாதியானார்.
*18. பாம்பாட்டி சித்தர்* – 123 வருடம் 14 நாள் வாழ்ந்தார். சங்கரன்கோயிலில் சமாதியானார்.
*(மரணமில்லா பெருவாழ்வு – சாகா கல்வி)* உலகில் உள்ள மனிதர்கள் வெல்ல முடியாத மரணத்தை வென்றவன் தமிழன்.
_வாழ்க தமிழ், வளர்க தமிழ்... வெல்க சித்தர்கள் நுண்ணறிவு!!!_
*குறிப்பு:* நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
_“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” வாழ்க வையகம், வாழ்க வளமுடன்._

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: Aanmeekam...

Post by vgovindan »

ஆன்மீகம் என்பது எத்தனை நாள் வாழ்ந்தோம் என்பதைப்பற்றியல்ல; எப்படி வாழ்ந்தோம், என்ன செய்தோம் என்பதைப்பற்றி. ஆதி சங்கரரும், விவேகானந்தரும் 32 ஆண்டுகளே வாழ்ந்து, சாதாரண மனிதன் நூறாண்டுகளிலும் சாதிக்கமுடியாதவற்றை சாதித்தனர். ஆன்மீகம் அழிவற்ற ஆன்மாவைப்பற்றியது; என்றோ ஓர்நாள் அழியும் உடலைப்பற்றியதல்ல.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

வாகர்தாவிவ ஸம்ப்ருக்தௌ வாகர்த – ப்ரதிபத்தயே |
ஜகத: பிதரௌ வந்தே பார்வதீ – பரமேஶ்வரௌ ||

‘சொல்லும் பொருளும் போல் இணைந்திருப்பவர்களும், உலகங்களுக்கெல்லாம் தாய் தந்தையருமான பார்வதி-பரமேஶ்வரர்களைச் சொல் பொருள் ஆகியவை பற்றிய அறிவு உண்டாகும் பொருட்டு வணங்குகிறேன்’ என்பது அர்த்தம்.
🙏🏼🎊🙏🏼🌸🌸
பார்வதீப-ரமேச்வரௌ’ என்கிறபோது பார்வதி, ரமா இருவரும் வந்துவிடுகிறார்கள். ஆக ஆரம்பத்தில் நல்ல வாக்கு, நல்ல அர்த்தம் இவற்றைப் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும்போதே பார்வதி ஸமேதரான ஈஶ்வரன், லக்ஷ்மி ஸமேதரான விஷ்ணு என்று இரண்டு ஜோடி திவ்ய தம்பதிகளையும் ஸ்மரித்து, நமஸ்கரிப்பதான பெரிய மங்களம் உண்டாகிறது. ஒரு எழுத்துக்கூட மாறாமல், பதச் சேர்க்கையில் மட்டும் ஒரு எழுத்தை இடம் தள்ளியதால் அர்த்தத்தில் இவ்வளவு பெரிய மாறுதல்;அல்லது கூடுதல்; அதாவது லாபம்!
🙏🏼🌸🙏🏼

rshankar
Posts: 13754
Joined: 02 Feb 2010, 22:26

Re: Aanmeekam...

Post by rshankar »

thanjavooran wrote: 03 Sep 2020, 17:02 வாகர்தாவிவ ஸம்ப்ருக்தௌ வாகர்த – ப்ரதிபத்தயே |
ஜகத: பிதரௌ வந்தே பார்வதீ – பரமேஶ்வரௌ ||

‘சொல்லும் பொருளும் போல் இணைந்திருப்பவர்களும், உலகங்களுக்கெல்லாம் தாய் தந்தையருமான பார்வதி-பரமேஶ்வரர்களைச் சொல் பொருள் ஆகியவை பற்றிய அறிவு உண்டாகும் பொருட்டு வணங்குகிறேன்’ என்பது அர்த்தம்.
🙏🏼🎊🙏🏼🌸🌸
பார்வதீப-ரமேச்வரௌ’ என்கிறபோது பார்வதி, ரமா இருவரும் வந்துவிடுகிறார்கள். ஆக ஆரம்பத்தில் நல்ல வாக்கு, நல்ல அர்த்தம் இவற்றைப் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும்போதே பார்வதி ஸமேதரான ஈஶ்வரன், லக்ஷ்மி ஸமேதரான விஷ்ணு என்று இரண்டு ஜோடி திவ்ய தம்பதிகளையும் ஸ்மரித்து, நமஸ்கரிப்பதான பெரிய மங்களம் உண்டாகிறது. ஒரு எழுத்துக்கூட மாறாமல், பதச் சேர்க்கையில் மட்டும் ஒரு எழுத்தை இடம் தள்ளியதால் அர்த்தத்தில் இவ்வளவு பெரிய மாறுதல்;அல்லது கூடுதல்; அதாவது லாபம்!
🙏🏼🌸🙏🏼
I am curious to find out how alternate padachEda of pArvati-paramESvarau will lead to lakshmi and vishNu; as far as I am aware, the alternate split gives pArvatipa (pArvati pati = Siva) and ramESvarau (ramESvara = consort of ramA = vishNu). So, "pAravtiparamESvarau" can refer to pArvati and Siva, or Siva and vishNu.

PS: This alternate padachEda was nice demonstrated in one of the song-dance sequences in the movie, sAgara sanamam.

Post Reply