Aanmeekam...

Post Reply
venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16
x 2

#276 Re: Aanmeekam...

Post by venkatakailasam » 15 Nov 2014, 05:24

" அதிதி என்பது முதலிலேயே information கொடுத்துவிட்டு வரும் நண்பர்களோ, சொந்தக்காரர்களோ இல்லை. எதிர்பாராமல் வரும் எவருமே அதிதிகள்தான்! "திதி" என்றால், நாள். குறிப்பிட்ட நாளில், நேரத்தில் சாப்பிட வருகிறேன் என்று சொல்லியோ, அல்லது "சாப்பிட வந்துவிடுங்கள்" என்று நாமே ஒரு நாள், நேரம் குறித்து அழைப்பவரோ அதிதி இல்லை. அ-திதி "நேரம் காலம் இல்லாமல் திடீரென்று வருபவர்கள்" தான் அதிதிகள்"


பெரியவா சொன்ன ஒரு உண்மை நிகழ்ச்சி...............

நம்ம ஆச்சார்யாள் மடம் கும்பகோணத்தில் இருந்தப்போ, நடந்த ஒரு சம்பவம். எல்லாரும் ஸ்ரத்தையா கேட்டுட்டாலே, இதோட மஹிமை நன்னா புரிஞ்சுடும்! கும்பகோணத்தில் கும்பகோணம் மாமாங்க குளத்தோட மேலண்டக் கரைல ஒரு பெரிய வீடு உண்டு. அதுல குமரேசன் செட்டியார்னு பலசரக்கு வியாபாரி ஒர்த்தர் குடியிருந்தார். எனக்கு நன்னா ஞாபகம் இருக்கு....... அவரோட தர்மபத்னி பேரு சிவகாமி ஆச்சி! அவா காரக்குடி பக்கத்ல பள்ளத்தூர சேந்தவா. அவாளுக்கு கொழந்தை குட்டி கெடையாது. அவா ஊர்லேர்ந்து நம்பகமா ஒரு செட்டியார் பையன அழைச்சுண்டு வந்து ஆத்தோட வெச்சுண்டு, மளிகைக் கடைய அவன் பொறுப்புல விட்டிருந்தா. செட்டியாருக்கு அப்போ, அம்பது, அம்பத்தஞ்சு வயஸ் இருக்கலாம்........அந்த ஆச்சிக்கு அம்பதுக்குள்ளதான் இருக்கும். சதா சர்வ காலமும் ரெண்டுபேரோட வாய்லேர்ந்தும் "சிவ சிவ சிவ சிவ" ங்கற நாமஸ்மரணம்தான் வந்துண்டு இருக்கும். வேற பேச்சே கெடையாது! செட்டியார் வீட்ல ஒரு ஒத்தை மாட்டுவண்டி இருந்துது. அதுல ஆச்சிய ஒக்கார வெச்சுண்டு செட்டியாரே ஒட்டிண்டு போவார்! நித்யம் காலங்கார்த்தால வண்டில காவிரிக்கு ஸ்நானம் பண்ண வருவா....ஸ்நானத்த முடிச்சுண்டு அப்டியே நம்ம மடத்துக்கும் வந்து நமஸ்காரம் பண்ணிப்டு ஆசீர்வாதம் வாங்கிண்டு போவா . அப்பிடி ஒரு அன்யோன்யமா இருந்தா. இதெல்லாம் தூக்கியடிக்கற மாதிரி, ஒரு விஷயம் என்னன்னா.............அந்த தம்பதிகள் பல வர்ஷங்களா அதிதி போஜனம் பண்ணிண்டிருந்தா! பிரதி தெனமும் மத்யான்னம் எத்தனை சிவனடியார்கள் வந்தாலும், அவாளுக்கு முகம் கோணாம, அவாளோட கால்களை வாசத்திண்ணையில் ஒக்காரவெச்சு அலம்பி, வஸ்த்ரத்தால தொடச்சு, சந்தனம் குங்குமம் இட்டு, கூடத்ல ஒக்காரவெச்சு, ஏதோ இருக்கறதப் போடாம, ஒவ்வொரு அடியாருக்கும் என்னென்ன பிடிக்கும்னு கேட்டு அதை வாங்கிண்டு வந்து சமைச்சுப் போடுவா. ஆத்ல சமையலுக்கு ஆளெல்லாம் இல்லே! அந்த அம்மாவே தன் கையால சமைச்சுப் போடுவா! அப்டி ஒரு ஒசந்த மனஸ்! எனக்கு எப்பிடி இதெல்லாம் தெரியுங்கறேளா? நம்ம மடத்துக்கு வந்துண்டு இருந்த சுந்தரமையர்தான் செட்டியாரோட கணக்கு வழக்கெல்லாம் பாத்துண்டு இருந்தார். அவர்தான் இதெல்லாம் சொன்னார்..... ஒருநாள் நல்ல மழை! ஒரு அதிதியை கூட காணோம். செட்டியார் ஒரு கொடையை எடுத்துண்டு, மஹாமஹக்கொளத்தண்டை வந்து பார்த்தார். கொஞ்சம் நன்னா வாசிச்ச சிவனடியார் ஒர்த்தர் இருந்தார். ஏன்னா.....வழியெல்லாம் தேவாரம் சொல்லிண்டே வந்தார். வீட்டுக்கு போனதும், "என்ன காய் பிடிக்கும்? போய் வாங்கிண்டு வந்து சமைச்சுப் போடறோம்"...ன்னு சொன்னார். வந்தவருக்கோ நல்ல பசி போல இருக்கு! "வெறும் மொளக்கீரை கூட்டும், கீரைத்தண்டு சாம்பாரும் பண்ணா போறும்"ன்னார். கைல ஒரு மூங்கில் தட்டோட கீரை பறிக்கப் போனார். செட்டியாரும் இன்னொரு பக்கம் கீரை பறிக்க ஆரம்பிச்சார்...........ஆச்சியோ இவா ரெண்டு பெறும் பறிக்கறதை கொல்லைப் பக்கமா நின்னுண்டு பாத்துண்டே இருந்தா..... தட்டுக்கள் வந்ததும், அந்த அம்மா என்ன பண்ணா தெரியுமா? ரெண்டு கீரையையும் தனித் தனியா அலம்பி தனித்தனியா வேக வெச்சு பக்வம் பண்ணா. இதை சிவனடியார் கவனிச்சுண்டே இருந்தார். எல்லாம் பண்ணினதும், சிவனடியார் பறிச்ச கீரையை மட்டும் ஸ்வாமிக்கு நைவேத்யம் பண்ணிட்டு, இவருக்கு பரிமாறினா. அடியாருக்கோ பெருமை பிடிபடலை

போஜனம் முடிஞ்சதும், தான் பறிச்ச கீரையை மட்டும் நைவேத்யம் பண்ணினதப் பத்தி கேட்டார். அந்த அம்மா சொன்னா " ஐயா. கொல்லைல கீரை பறிக்கரச்சே நான் பாத்துண்டே இருந்தேன்.....என் பர்த்தா "சிவ சிவ" ன்னு நாமம் சொல்லிட்டே பறிச்சார். அது அப்பவே சிவார்ப்பணம் ஆயிடுத்து. மறுபடி நிவேதிக்க அவஸ்யமே இல்லே. அதான் நீங்க கொண்டு வந்த கீரையை மட்டும் நைவேத்யம் பண்ணினேன்". அடியாருக்கு என்னமோ மாதிரி ஆயிடுத்து! ரெண்டு பேரையும் ஆசீர்வாதம் பண்ணின்ட்டு போய்ட்டார்.

இப்படி அதிதி போஜனத்த விடாம பண்ணிண்டு இருந்ததுக்கு "பல ப்ராப்தி" என்னன்னா.........ஒரு சிவராத்திரி அன்னிக்கு கும்பேஸ்வரர் கோவில்ல நாலு கால பூஜைக்கும் ஒக்காந்து தரிசனம் பண்ணா...வீட்டுக்கு வந்த ஆச்சி, தனக்கு "ஒச்சலாயிருக்கு"ன்னு சொல்லிட்டு பூஜை ரூம்ல ஒக்காந்தவ, அப்பிடியே சாஞ்சுட்டா.....! பதறிப் போய் "சிவகாமி" ன்னு கத்திண்டே உள்ளே போன செட்டியாரும் அந்தம்மா பக்கத்துலயே சாஞ்சுட்டார்...!அவ்வளவுதான்! அந்த மஹா சிவராத்திரி அன்னிக்கே ரெண்டு பேரும் ஜோடியா "சிவ சாயுஜ்யத்த" அடஞ்சுட்டா. அதிதி போஜனத்த விடாம பண்ணின அந்த தம்பதிகளுக்கு கெடச்ச "பதவி" யப் பாத்தேளா? இப்பவும் ஒவ்வொரு மஹா சிவராத்திரி அன்னிக்கும் அந்த தம்பதிய நெனச்சுப்பேன்....."

அதிதி என்பது முதலிலேயே information கொடுத்துவிட்டு வரும் நண்பர்களோ, சொந்தக்காரர்களோ இல்லை. எதிர்பாராமல் வரும் எவருமே அதிதிகள்தான்! "திதி" என்றால், நாள். குறிப்பிட்ட நாளில், நேரத்தில் சாப்பிட வருகிறேன் என்று சொல்லியோ, அல்லது "சாப்பிட வந்துவிடுங்கள்" என்று நாமே ஒரு நாள், நேரம் குறித்து அழைப்பவரோ அதிதி இல்லை. அ-திதி "நேரம் காலம் இல்லாமல் திடீரென்று வருபவர்கள்" தான் அதிதிகள்


shared
0 x

thanjavooran
Posts: 2541
Joined: 03 Feb 2010, 04:44
x 180
x 63

#277 Re: Aanmeekam...

Post by thanjavooran » 23 Nov 2014, 05:17

A share from my friend

அட்சதை

அட்சதை க்ஷதம் என்றால் குத்துவது என்று பொருள். (சதக் சதக் என்று குத்தினான் என்று தமிழ் பேப்பரில் எழுதுவதும் இதனால் தான்) அக்ஷதம் என்றால் குத்துப்படாதது என்று பொருள். உலக்கையால் குத்துப்படாத அரிசியை அட்சதை என்கிறார்கள்.

அட்சதை என்றால் குற்றப்படாததும், பழுதுபடாததுமான (நுனி முறியாத) அரிசி, மஞ்சள் பொடி, பசு நெய், மலர்கள் என்பவற்றைச் சேர்த்த கலவை என்பர். அட்சதை என்ற வடமொழிச் சொல்லை ‘அறுகரிசி’ எனவும் அழைக்கின்றனர்.
முழுமைத்துவத்தின் குறியீடாக அட்சதை அமைகின்றது. அரிசியில் உள்ள முனை சந்ததி விருத்தியைக் குறிக்கின்றது. முழுப் பச்சை அரிசி செழிப்பிற்கான குறியீடு ஆகும். மஞ்சள் மங்கலத்தின் வெளிப்பாடு. அறுகு வம்ச விருத்தியின் குறியீடு.

நன் மங்களங்களை நல்குவது மஞ்சள் . அது சென்றடைய ஒரு ஊடகம் தேவை. அதுவே அரிசி இந்த இரண்டையும் இணைக்கும் இணைப்பான் பசு நெய்; இது கோமாதாவின் திரவியம் .
பூமிக்கு மேல் விளையும் பொருள் அரிசி, பூமிக்கு கிழ் விளை பொருள் மஞ்சள், இந்த இரண்டையும் இணைக்க தூய பசு நெய் தேவை.
சற்றே யோசித்தால் இயற்கையில் , மணமக்களை வாழ்த்தும் பொழுது மணமக்கள் இரு மாண்பினர்; வெவ்வேறு குணநலன்கள் கொண்டவர்கள்;ஒருமித்து வாழத்தக்கவர்கள்; அரிசியும் மஞ்சளுமான மணமக்களை இணைக்கும் பசு நெய்யாகப் பாசமிகு உற்றார் உறவினர்கள் உள்ளனர் இதுவே தத்துவம்.
ஆகவே உற்றார் உறவினர்கள், பெரியோர், நண்பர்கள் என அனைவரும் மணமக்களை வாழ்த்தும் பொழுது, மணமேடைக்கு அருகே வந்து ஒருவர் பின் ஒருவராக மணமக்களை அட்சதை தூவி ஆசி வழங்குவதே சரியான முறையாகும்.
மேலும் தமது வாரிசுகள் புதிதாக தொழில் துவங்கும் பொழுதும் சந்திரன் சக்தி அதிகம் அமைந்த அரிசியும் குருபகவானின் சக்தி அதிகம் அமைந்த மஞ்சளும் , மஹா லக்ஷ்மி பரிபூரண சக்தி கொண்ட நெய்யினைக் கலந்து, உற்றார் உறவினர்கள், பெரியோர், நண்பர்கள் என அனைவரும் அவர்களை ஆசி வழங்கும் பொழுது அந்தப் புதியதாக துவங்கப்பட்ட தொழில் வாழையடி வாழையாக அவர்களுக்கு அதிர்ஷ்டத்துடன் கூடிய முன்னேற்றத்தை வாரி வழங்கும் என்பது சாஸ்திர உண்மை.
0 x

Govindaswamy
Posts: 106
Joined: 21 Feb 2010, 06:55
x 4

#278 Re: Aanmeekam...

Post by Govindaswamy » 23 Nov 2014, 05:49

thanjavooran wrote: அரிசியில் உள்ள முனை சந்ததி விருத்தியைக் குறிக்கின்றது.
அரிசியை விதைத்தால் முளைக்காதே.
கோவிந்தஸ்வாமி
0 x

Pratyaksham Bala
Posts: 3400
Joined: 21 May 2010, 16:57
x 136
x 97

#279 Re: Aanmeekam...

Post by Pratyaksham Bala » 23 Nov 2014, 07:50

அறுகரிசி aṟukarici
, n. அறுகு (அறுகம்புல்) + அரிசி. Mixture of Cynodon grass and rice, used in benediction or worship; அறுகம்புல்லோடு கூடிய மங்கலவரிசி.
0 x

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16
x 2

#280 Re: Aanmeekam...

Post by venkatakailasam » 02 Dec 2014, 20:12

Image

கடன் தொல்லை தீர அகத்தியர் பாடல்
செல்வம் பெருகவும், கடன் தொல்லை தீரவும் உதவும் வகையில் பாடல் ஒன்றை அகத்திய முனிவர் எழுதி இருக்கிறார். இந்த பாடலை தினமும் பக்தியுடன் பாடி வந்தால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். இதை தனது பாடலிலேயே அகத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

கி.பி. 1564 முதல் 1604-ம் ஆண்டு வரை தென்பாண்டி நாட்டை ஆண்ட அதிவீரராம பாண்டியர் என்பவரால் இந்த பாடல்கள் மொழிபெயர்க்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. சிறப்புமிக்க அந்தப்பாடல் வருமாறு:-

மூவுலகும் இடரியற்றும் அடலவுணர் உயிரொழிய முனிவு கூர்ந்த
பூவை உறழ் திருமேனி அருட்கடவுள் அகன்மார்பில் பொலிந்து தோன்றித்
தேவர்உல கினும் விளங்கும் புகழ்க்கொல்லா புரத்தினிது சேர்ந்து வைகும்
பாவை இருதாள் தொழுது பழமறைதேர் குறுமுனிவன் பழிச்சுகின்றான்.

கொழுதியிசை அளிமுரலும் தாமரையென் பொகுட்டிலுறை கொள்கைபோல
மழையுறழுந் திருமேனி மணிவண்ணன் இதயமலர் வைகு மானே!
முழுதுலகும் இனிதீன்ற அருட்கொம்பே! கரகமலம் முகிழ்ந்தெந் நாளுங்
கழிபெருங்காதலில் தொழுவோர் வினைதீர அருள் கொழிக்குங் கமலக்கண்ணாய்!

கமலைதிரு மறுமார்பன் மனைக்கிழத்தி செழுங்கமலக் கையாய் செய்ய
விமலைபசுங் கழைகுழைக்கும் வேனிலான் தனையீன்ற விந்தை தூய
அழுதகும்ப மலர்க் கரத்தாய் பாற்கடலுள் அவதரித்தோய் அன்பர் நெஞ்சத்
திமிரகன்றிட வொளிருஞ் செஞ்சுடரே என வணக்கம் செய்வான் மன்னோ

மடற்கமல நறும்பொகுட்டில் அரசிருக்கும் செந்துவர்வாய் மயிலே மற்றுன்
கடைக்கணருள் படைத்தன்றோ மணிவண்ணன் உலகமெலாங் காவல் பூண்டான்
யடைத்தனன் நான்முகக் கிழவன் பசுங்குழவி மதிபுனைந்த பரமன் தானும்
துடைத்தனன் நின் பெருங்கீர்த்தி எம்மனோரால எடுத்துச் சொல்லற் பாற்றோ

மல்லல் நெடும் புவியனைத்தும் பொதுநீக்கித் தனிபுரக்கு மன்னர் தாமும்
கல்வியினில் பேரறிவில் கட்டழகில் நிகரில்லாக் காட்சியோடும்
வெல் படையில் பகை துரந்து வெஞ்சமரில் வாகை புனை வீரர் தாமும்
அல்லிமலர்ப் பொகுட்டுறையும் அணியிழைநின் அருள் நோக்கம் அடைந்துளாரே!

செங்கமலப் பொலந்தாதில் திகழ்தொளிரும் எழில் மேனித் திருவே வேலை
அங்கண்உல கிருள் துலக்கும் அலர்கதிராய் வெண் மதியாய் அமரர்க்கூட்டும்
பொங்கழலாய் உலகளிக்கும் பூங்கொடியே நெடுங் கானில் யொருப்பில் மண்ணில்
எங்குளை நீ அவணன்றோ மல்லல்வளம் சிறந்தோங்கி இருப்பதம்மா!
0 x

Pratyaksham Bala
Posts: 3400
Joined: 21 May 2010, 16:57
x 136
x 97

#281 Re: Aanmeekam...

Post by Pratyaksham Bala » 02 Dec 2014, 22:11

அதிவீரராம பாண்டியன் இயற்றிய காசி கண்டம் என்னும் நூலின் ஐந்தாம் அத்தியாயத்தில் அகத்தியர் திருமகளை வணங்குவதாக இலக்குமி தோத்திரம் என்று அறியப்படும் ஆறு பாடல்கள் உள்ளன. (மேலே கொடுக்கப்பட்டுள்ளது.) இதன் கடைசியாக ஏழாவது பாடலாக அமைந்துள்ளது இதோ:-

என்றுதமிழ்க் குறுமுனிவன் பன்னியொடும் இருநிலத்தில் இறைஞ்ச லோடும்
நன்றுனது துதிமகிழ்ந்தோம் நான்மறையோய் இத்துதியை நவின்றோர் யாரும்
பொன்றலரும் பெரும்போகம் நுகர்ந்திடுவர் ஈங்கிதனைப் பொறித்த ஏடு
மன்றல்மனை அகத்திருப்பின் வறுமைதரு தவ்வையவண் மருவல் செய்யாள்.
0 x

thanjavooran
Posts: 2541
Joined: 03 Feb 2010, 04:44
x 180
x 63

#282 Re: Aanmeekam...

Post by thanjavooran » 03 Dec 2014, 04:43

திரு வேங்கடகைலாசம் , திரு பிரக்தயக்ஷம் பாலா,
தொகிப்பினை அளித்தமைக்கு மிக்க நன்றி.
வாழ்த்துக்களுடன்
தஞ்சாவூரான்
03 12 2014
0 x

thanjavooran
Posts: 2541
Joined: 03 Feb 2010, 04:44
x 180
x 63

#283 Re: Aanmeekam...

Post by thanjavooran » 07 Dec 2014, 04:28

சனி பகவானை நேருக்கு நேர் வணங்க கூடாது என்பது ஏன்?

கோயிலில் ஸ்தாபிக்கப்பட்ட எந்த ஒரு தெய்வத்தையும் வணங்கும்போது, நேருக்கு நேர் நின்று தரிசிக்கக் கூடாது. அந்த தெய்வத்தின் பார்வையை சக்தியை நம்மால் தாங்கிக்கொள்ள இயலாது. சன்னிதியின் இரு பக்க வாட்டிலும் நின்று தரிசிக்க வேண்டும். தெய்வ சக்தியை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் சக்தியை உடைய நந்தி, கருடாழ்வார், சிம்மம் போன்ற அந்த தெய்வ வாகனங்கள் மட்டும் நேருக்கு நேர் அமைக்கப்பட்டிருப்பதை கோயில்களில் காணலாம்.

நவக்கிரகங்களில் ஒவ்வொரு கிரகத்துக்கும் அதன் இருப்பிடம், சேர்க்கை, பார்வை ஆகியவற்றைப் பொறுத்து ஒவ்வொருவிதமான பலன்கள் உண்டு. இதற்கு ஸ்தான பலம், ஸம்யோக பலம், த்ருஷ்டி பலம் என்று சொல்வார்கள். இயற்கையிலேயே அசுபகிரஹமான சனி கிரஹத்தின் 3, 7, 10ஆம் பார்வை பொதுவாக அசுப பலனையே ஏற்படுத்தும். ஆகவே, சனியின் பார்வை பொதுவாக அசுபத்தையே ஏற்படுத்தும் என்பதால், கோயில்களிலும் சனீஸ்வரன் சன்னிதியில் (சனியின் பார்வை நம் மீது விழக்கூடாது என்பதால்) நேருக்கு நேர் நின்று அமர்ந்து சனியை தரிசிப்பதைத் தவிர்க்கிறார்கள். இது ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான்.

நவக்கிரகங்களை, தன் கட்டுப்பாட்டில் வேலைக்காரர்களாக வைத்து கொடுமைப்படுத்தி வந்த இலங்கை வேந்தன் இராவணன், சூரியன், சந்திரன், செவ்வாய் முதலான ஒன்பது கிரகங்களையும் தனது சிம்மாசனத்தின் கீழே அமைக்கப்பட்டிருக்கும் படிக் கட்டுகளில் படுக்க வைத்து, தான் அரியணையில் ஏறும்போதும் இறங்கும்போதும் அவர்களின் மார்பின் மீது தனது கால்களை வைத்து அவர்களை மிதித்துக் கொண்டே அரியணை ஏறும் வழக்கத்தைக் கொண்டிருந்தான். இதற்காக நவக்கிரகங்கள் ஒன்பதும் ஒவ்வொரு படிகளிலும் ஒவ்வொன்றாக வரிசையாக மேல்நோக்கி படுத்துக் கொண்டிருக்கும். ஆனால், நவக்கிரகங்களில் சனி கிரகம் மட்டும் (தனது பார்வை பட்டால் கெடுதல் விளையும் என்பதால்), மேல் நோக்கிப் படுக்காமல் கீழ் (தரையை) நோக்கி குப்புறப்படுத்திருந்தது.

இதை கவனித்த நாரதர், இராவணனின் கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காக, இராவணன் சபைக்கு வந்து, ராவணன் நவக்கிரஹங்களை காலால் மிதித்து அரியணை ஏறுவதை கவனித்தார். அப்போது ராவணனிடம் நாரதர், ராவணா! உனது கட்டளையை அனைவரும் மதித்து, மேல் நோக்கி படிகளில் படித்திருக்கிறார்கள். ஆனால், இந்த சனி கிரகம் மட்டும் உனது கட்டளையை அவமதிக்கும் வகையில் கீழ் (தரை) நோக்கி படுத்திருக்கிறது பார்த்தாயா! என்று கூற, ராவணனும் சனியை மேல் நோக்கி படுக்கச் சொன்னான்.

தனது பார்வையால் கெடுதல் விளையும் என்பதை சனி கிரகம் எடுத்துச் சொல்லியும் ராவணன் பிடிவாதமாக இருக்கனே, சனியும் படிக்கட்டில் மேல் நோக்கியவாறு திரும்பிப் படுத்தது. ராவணன் தனது காலால் சனியை மாõர்பில் மிதிக்கும்போது சனி கிரகத்தின் குரூரமான பார்வை, இராவணனின் மீது விழுந்தது. அது முதல் ராவணனுக்கு அனர்த்தம் ஆரம்பமாயிற்று. நாரதரும் வந்த வேலை முடிந்ததை எண்ணி மகிழ்ச்சியுடன் புறப்பட்டார். புராணத்தில் காணப்படும் இந்த நிகழ்வின் மூலம் சனியின் பார்வை நம் மீது விழாமல் இருப்பது சிறப்பானது என்பது தெரிகிறது.

Dinamalar
0 x

vgovindan
Posts: 1603
Joined: 07 Nov 2010, 20:01
x 56
x 112

#284 Re: Aanmeekam...

Post by vgovindan » 07 Dec 2014, 10:30

"நாள் என் செயும் எனை நாடிவந்த கோள் என் செயும்
குமரேசர் இரு தாளும் சதங்கையும் தண்டையும் என் கண்முன்னே தோன்றிடினே"

என்று பாடிய அருணகிரி நாதரும்,

கோளறு பதிகம் பாடிய சம்பந்தரும்

"நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே"

என்று சிவனையே நேருக்கு நேர் நோக்கிப் பேசிய நக்கீரரும்
( http://www.shaivam.org/tamil/sta_tiruvi ... l_08_u.htm )

न मृत्युर्न शंका न मे जातिभेदः पिता नैव मे नैव माता न जन्म |
न बन्धुर्न मित्रं गुरुर्नैव शिष्यश्चिदानन्दरूपः शिवोहं शिवोहम् ||

என்று பாடிய சங்கரரும்

तत्त्वमसि என்று பறைசாற்றிய வேதாந்தமும் நிறைந்த இந்நாட்டில்,
இந்த மூட நம்பிக்கைகள் என்று ஒழியுமோ? ஆயிரம் பாரதிகள் வந்தாலும் கூடுமோ?
0 x

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16
x 2

#285 Re: Aanmeekam...

Post by venkatakailasam » 07 Dec 2014, 12:16

Shri. Govindan..I like your views but, I find you also too much obsessed..over it..

Even tough I have much to contradict about the above views on Saturn,
I just read it as another point of view and leave it as such..

Neither Kalyana varma , nor Parsaran or not even Bangalore venkat raman or J Krishna murthy of present day

subscribed to such a negative view on saturn..
0 x

thanjavooran
Posts: 2541
Joined: 03 Feb 2010, 04:44
x 180
x 63

#286 Re: Aanmeekam...

Post by thanjavooran » 11 Dec 2014, 08:22

A share from my friend

Powerful Ghana Patham method of Chanting........

.Thousands of years ago, our ancestors had similarly devised many brilliant ways of preserving our Vedas and making sure that no error is possible in the oral transmission of Vedas. The "data" was stored then in the human brain (weighing merely 200 grams). The human mouths were used for transmission while ears for reception and sound was the medium. And this was done from generation to generation.

Some excerpts from the article of Dharmatma Dr. Yegnasubramanian (President of Sringeri Vidya Bharati Foundation, USA) article, Rescuing Our Vedic Priesthood,

"Vedic Chanting – a perfectly formulated oral tradition

The Vedas are called ‘Sruti”- which means, what is heard.

It is never read from a text, since the recitation of any Veda mantra should conform to the following six parameters, namely,

varNa (letters);
svara (intonation);
mAtrA (duration of articulation);
balam (force of articulation);
sAma (uniformity), and
santAna (continuity).

If any of these parameters is not maintained, it would change the meaning of the mantra itself, leading to even diametrically opposite effects!

In the absence of a written text, our rishis had devised many ways to prevent even a small error to creep in to the recitation of the veda-mantras. These fool-proof methods used to chant each veda-mantra in various patterns and combinations are known as : vaakya,pada, krama, jaTA, mAlA, SikhA, rekhA, dvaja, danDa, ratha, and Ghana.

Among these, vAkya, pada, krama, jaTa and Ghana methods of chanting are more popular and let us analyze them only here.

Vaakya or samhitA pATha is to recite a mantra in a sentence straight with appropriate intonations. In sentences, some of the words have to be conjoined in chanting.

In padapAtha, a sentence is broken down to ‘words’ or pada’s, which gives the student the knowledge of each word.

The Ghana method is more difficult than the above where the combinations of words will be
1-2-
2-1-
1-2-3-
3-2-1-
1-2-3;

2-3-
3-2-
2-3-4-
4-3-2-
2-3-4 and so on. A priest who can recite in the Ghana method is given the title ghanapAThi.

These methods of complicated recitations in a oral tradition were devised in order to preserve the purity of the word, the sound, intonation, pronunciation, accent and sound combinations of the Veda mantras. By repeating the words in manifold ways, the correct tally of words was also kept which has naturally ensured its purity.

Just to illustrate what it takes for a priest to earn the title of a ghanapAThi, let us briefly analyze what is involved in the training. For illustration, let us consider only one portion of the krishNa yajur veda, called the taittiriya samhitA. In this portion there over 2,000 pancASat’s (1 pancASat = 50 pada’s), amounting to 109,308 pada’s. We can roughly assume each pada to have 3 syllables, thus totaling ~330,000 syllables. In the Ghana method of chanting, each syllable gets repeated 13 times, thus amounting to 4,290,000 utterances. And each of these utterances have to conform to all the six parameters discussed earlier.

Only when a person becomes capable of reciting this in any order asked, gets the title of a ghanapAThi. This is for only one samhitA portion in krishna yajur veda alone. Then there is Sukla yajur veda, rig veda, sAma veda, and atharva veda. There were scholars proficient in more than one veda as evident from the names dvivedi, trivedi and caturvedi. In addition, there are other samhitA portions, brAhmaNa portions, AraNyaka poritons, and the Upanishads, in the vedic scriptures alone.

After proficiency in ghanapATha, some learn lakshaNa-ghanapATha, which deals with the characteristics of each letter, its origin, how it has to be emphasized in a mantra, its varNa, the presiding deity, etc etc. Then there are purANa’s, dharma-Sastras etc. All these were learnt without any book, tape or any such instruments in the oral tradition, and were stored just in ~200 grams of the human brain! And the most interesting thing is, it was not that one or two individuals who were proficient in this dharma, but an entire society was well versed in this! Such a scholarship takes well over 25 years of intense education in a gurukulam, in addition to observing all the religious disciplines!"

Just listening to this powerful Ghana patham alone can have an amazing effect on us.

Video: https://www.youtube.com/watch?v=YUdggOY ... A&index=30

Src: http://www.brahmanworld.org/conv_fls2k6 ... sthood.pdf
0 x

thanjavooran
Posts: 2541
Joined: 03 Feb 2010, 04:44
x 180
x 63

#287 Re: Aanmeekam...

Post by thanjavooran » 15 Dec 2014, 05:34

A share from my friend
கலியுகம் பற்றிய விஞ்ஞான விந்தை: உலகம் அழியுமா?

2030-ஆம் ஆண்டில் காந்த துருவங்கள் இடம் மாறும் என்று ஜே.எம்.ஹார்வுட் என்பவர் 1970 ஆம் ஆண்டிலேயே கூறிவிட்டார். இப்படி மாறுவதால் உலகில் பேரழிவுகள் ஏற்படும் என்று சிலர் கூறுகின்றனர். இதிலலென்ன உண்மை உளது என்று காண்போம்.

இந்துக்கள் உலகத்தின் வயதை நான்காகப் பிரித்துள்ளனர்: கிருத யுகம்(4), த்ரேதா யுக (3), த்வாபர யுகம் (2), கலியுகம் (1). ஏன் இப்படி தலைகீழ் வரிசையில் 4,3,2,1 என்று யுகத்திற்குப் பெயரிட்டார்கள்?
ஏன் என்றால் சத்திய யுகமான கிருத யுகத்தில் தர்மம் என்னும் பசு மாடு நான்கு கால்களில் நிற்குமாம். த்ரேதா யுகத்தில் அதற்கு மூன்று கால்கள்தான். அதவது தர்மம் 25 விழுக்காட்டை இழந்துவீட்டது. அப்போது ராம பிரான் தோன்றினார். த்வாபர யுகத்தில் தர்மம் என்னும் மாடு இரண்டு கால்களை – அதவது 50 விழுக்காட்டை இழந்து விட்டது. அப்போதுதான் கிருஷ்ணன் தோன்றினார். யுகத்தின் முடிவில் மஹாபாரத யுத்தம் நடந்தது. கலியுகத்தில் தர்மப் பசுவுக்கு இன்னும் ஒரு காலும் போய், ஒற்றைக் காலில் 25 சதவிகித புண்ய கர்மாவுடன் தள்ளாடிக் க்ண்டிருக்கும். கலியுக முடிவில் அந்தக் காலும் போய் உலகமே அழியும். பிறகு மீண்டும் கிருத யுகம் பிறக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
இப்படி மாறிமாறி வரும் யுகங்களுக்கு காலம் எவ்வளவு என்றும் இந்துக்கள் கணக்கிட்டனர். உலகில் மற்ற நாகரீகங்கள் எல்லாம் 20-ன் மடங்குகளிலும் (மாயா நாகரீகம்), 40-ன் மடங்குகளிலும் (செமிட்டிக் மதங்கள்) சிறிய எண்களுடன் நின்றுவிட்டன. இந்துக்களோவெனில் பல லட்சம் வருடங்களைச் சொன்னதோடு இதற்கு முடிவு என்பதே இல்லை. இந்த வட்டச் சுழல்—மீண்டும் மீண்டும் நடந்து கொண்டே இருக்கும் என்றும் மனித ஆண்டு, தேவ ஆண்டு, பிரம்மாவின் ஆண்டுகள் என்பன வெவ்வேறு என்றும் சொன்னார்கள். இது ஏதோ கற்பனையில் பிறந்த வருடங்கள் என்று 200 ஆண்டுகளுக்கு முன் வரை நினைத்தார்கள். இப்பொழுது பல்வேறு உலகங்கள் பல்வேறு வேகத்தில் சுற்றும்போது இவை எல்லாம் சாத்யம் என்று தெரிகிறது.

இதற்கு என்ன விஞ்ஞான விளக்கம் என்று எண்ணிப் பார்த்தால் விடை கிடைக்கவில்லை. இப்பொழுது விஞ்ஞானம் முன்னேற, முன்னேற புதுப்புது விளக்கங்கள் கிடைக்கின்றன. இந்துக்கள் சொன்ன காலக் கணக்கீடு:–
கிருத யுகம் – 1728 ,000, 000 ஆண்டுகள்
த்ரேதாயுகம் – 1296, 000, 000 ஆண்டுகள்
த்வாபரயுகம் – 864,000 ஆண்டுகள்
கலியுகம் – 432, 000 ஆண்டுகள்
இந்த நாலு யுகங்களையும் சேர்த்து சதுர்யுகம் என்பார்கள். 8,640,000,000 ஆண்டுகள் ஒரு கல்பம் எனப்படும். அதுதான் பிரம்மாவின் ஒரு நாள். அதுபோல அவர் நூறு ஆண்டுகள் வாழ்வார். அவருக்குப் பின்னால் வேறு ஒரு பிரம்மா வருவார். இந்தக் காலச் சுழற்சிக்கு முடிவே இல்லை.
கலியுகத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் ஓரளவு விஞ்ஞான விளக்கம் சொல்லலாம். நம்முடைய பூமி ஒரு காந்த உருண்டை. எப்பொழுதும் காந்த மண்டலத்தை உருவாக்கிய வண்ணம் இருக்கும். ஏன் இப்படி நடக்கிறது. நாம் வாழும் பூமியின் மேல் ஓடு வெறும் எட்டு மைல்கள்தான். அதன்மீதுதான் நாம் வசிக்கிறோம். அதற்குக் கீழே அதள பாதாளத்துக்குப் போனால் பூமியின் வயிற்றில் அது நெருப்பைக் கட்டிக்கொண்டு தன்னைத் தானே சுற்றுகிறது. அது மட்டுமா? தான் தட்டாமாலை சுற்றுவதோடு சூரியனையும் சுற்றி வருகிறது. பூமியானது சந்திரனையும் தன்னோடு இழுத்துக் கொண்டு சூரியனைச் சுற்றி வருகிறது. சூரியனோவெனில் நமது பூமி உள்பட எல்லா கிரஹங்களுடனும் பால்வெளி மண்டலத்தைச் சுற்றிவருகிறது. இப்படி பூமி சுற்றுவதால், கடலைக் கடைந்தது போல பூமியின் வயிற்றைக் கடையும் போது பூமியே காந்த சக்தி உருவாக்கும் ‘டைனமோ’ ஆகிவிடும்.
இந்த பூமியில் வட துருவம், தென் துருவம் என இரு துருவங்கள் உண்டு. அதே போல காந்தத்திலும் – அதாவது பூமி என்னும் கிரஹத்தைச் சுற்றி இருக்கும் – காந்த இரு துருவங்கள் உண்டு. வானத்தில் பூமியைச் சுற்றிவரும் பல விண்கலங்கள் மூலம் இவற்றை ஆராய்ந்து வருகின்றனர். அதன்படி பூமியின் காந்த துருவங்கள் வேகமாக நகர்ந்து வருவது தெரிகிறது. பூமியின் காந்த மண்டலம்தான் நம்மை சூரியனிடமிருந்து வரும் தீய கதிர்களிl இருந்து காத்துவருகிறது. இப்படி காந்த மண்டலம் இல்லாவிடில் நமது பூமியும் சந்திரன், செவ்வாய் போல வறண்ட இடங்களாகக் காட்சி தரும். உயிரினங்களே இரா.

மாக்னெட்டொகெட்டொன்
காந்த மண்டல வட துருவம் மெதுவாக நகர்ந்து தென் துருவத்துக்குப் போய்விடும். அதே போல தென் துருவம் மெதுவாக நகர்ந்து வட துருவத்துக்குப் போய்விடும். அதாவது இரண்டும் இடத்தை மாற்றிக் கொள்ளூம். இது ஓரிரவில் நடந்து விடாது ஆயிரம் ஆண்டுகூட ஆகலாம்.
இது நடைபெறும் காலம் பக்கத்தில் வந்துவிட்டது விண்கல ஆய்வில் தெரிய வந்ததால் விஞ்ஞானிகள் கவலை அடந்துள்ளனர். 2030-ல் இது நடைபெறும் என்று ஏற்கனவே பல விஞ்ஞானிகள் கூறியது உண்மையாகி வருகிறது. இப்படி துருவம் மாறுவது நாலு லட்சம் ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் நடைபெறும் என்றும் இதற்குக் காரணம் காந்தப் புலன் பலவீனம் அடைவதுதான் என்றும் அறிவியல் அறிஞர்கள் கூறுவர். கடந்த சில நூறு ஆண்டுகளில் பூமி அதன் காந்த சக்தியில் பத்து சதவிகிதத்தை இழந்துவிட்டது.
துருவங்கள் மாறும் நாலு லட்சம் அண்டுகள் என்பது கிட்டத்தட்ட கலியுகத்தின் காலத்தை (432,000) ஒட்டிவருகிறது. நாம் கலியுகம் முடிவில் பெரிய மாறுதல் வரும் என்று நம்புவது போல விஞ்ஞானிகளும் காந்தப் புலன்கள் மாறும் போது பெரிய மாறுதல்கள் ஏற்படக்கூடும் என்பர். தகவல் போக்குவரத்து சீர் குலையும், விண்வெளியில் பறக்கும் விண்கலங்களுக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என்பர். இதை மாக்னெட்டோகெடான் என்று அழைப்பர். கடந்த காலத்தில் இப்படி மாறிய போது உலகம் அழியவில்லை என்று கல் படிம அச்சுகள் காட்டுகின்றன.ஆனால் சிறிய மாற்றங்கள் ஏற்பட்டன என்பது அவர்கள் தரப்பு வாதம். மற்றவர்களோவெனில் டைனோசர் போன்ற ராட்சத மிருகங்கள் அழிந்தது இதனால்தான் என்பர்.

ஒரு சுனாமி வந்த பின்னர்தான் அதன் பேரழிவுச் சக்தியை நாம் உணர்ந்தோம். அது போல ஒரு காந்த துருவ மாற்றம் ஏற்பட்ட பின்னர்தான் நமக்கு அது பற்றி விளங்கும் என்றும் அவர்கள் கூறுவர்.
காந்த துருவ மாற்றம் மெதுவாகத்தான் நடைபெறும்; அது நடக்க 1000 ஆண்டு ஆகும் என்பது போல நாமும் யுகங்களுக்கு இடையே துருவ சந்தி என்று இடைக்கால, இன்டர்வல் – வைத்திருக்கிறோம். இதையெல்லாம் ஒப்பிட்டுப் பார்க்கையில்தான் கலியுகம் என்பது காந்தப் புலன் மாற்றம் அடையும் காலம் என்று எண்ணத் தோன்றுகிறது. பெரிய இடைவெளி, சின்ன இடைவெளி என்று இருக்கும் என்றும் அதற்குப் பின்னரே யுகங்கள் முழுதும் மாறுபட்டிருக்கும் என்றும் புராணங்கள் பகரும். இவைகளை எல்லாம் எண்ணிப் பார்க்கையில் விஞ்ஞானம் வளர, வளர நமக்குப் புராணங்கள் சொன்னது உண்மையே என்ற உணர்வு பலப்படுகிறது.

சந்திரனில், விண்கலம் இறங்கிவிட்டது, செவ்வாய்க்கு விண்கலம் போய்ச் சேர்ந்துவிட்டது, வாயேஜர் என்னும் விண்கலம் சூரிய மண்டலத்தையே தாண்டிப் போய்விட்டது என்றெல்லாம் பத்திரிக்கையில் வரும் செய்திகளைக் கேள்வியே கேட்காமல் நம்பும் நம்மவர், நமது முன்னோர்கள் —– நம்மிடம் தேர்தலில் வோட்டோ, கையில் பணமோ கேட்காமல்—— நமது நன்மைக்காக எழுதிவைத்ததை நாம் நம்ப வேண்டாமா? அதுதான் அறிவுடைமை அன்றோ!
0 x

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16
x 2

#288 Re: Aanmeekam...

Post by venkatakailasam » 31 Dec 2014, 18:53

எங்கே புத்தன்?.........புத்தரை விடவும் கருணையானவர் தாயாக மட்டும் தானே இருக்க முடியும்!

பகவான் புத்தரைத் தரிசித்து விட வேண்டும் என்ற வெறியுடன் வீட்டை விட்டுப் புறப்பட்டான் ஒரு இளைஞன். அவன் எங்குப் போனாலும் புத்தர் அங்கிருந்து கொஞ்சம் முன்பாகத்தான் புறப்பட்டுப் போனார் என்று ஒரே பதில் கிடைத்தது. அவன் முகம் துவண்டு போனது. வழியில் தாம் சந்தித்த மற்றொரு மூத்த புத்த சந்யாசியிடம் பகவான் புத்தரைத் தரிசிக்காமலேயே தம் வாழ்வு முடிந்து விடுமோ என்று கதறினான்.

முதிர்ந்த அந்த சந்யாசி அன்புடன் அவனது கரங்களைப் பற்றி ஆறுதல் கூறினார், "வருத்தப்படாதே மகனே.. உன் வீடு திரும்பு.. நீ புத்தரைத் தரிசிக்கும் பாக்யம் உள்ளவன் என்றால் எப்படியும் தரிசிப்பாய். புத்தர் கருணையானவர்" என்றார்.

அவனோ, "ஐயா.. நான் முன்பின்னாகப் புத்தரைப் பார்த்ததே இல்லை. வழியில் எங்காவது திடீர் என்று புத்தரைக் காண நேர்ந்தால் நான் எப்படி அடையாளம் கண்டுக்கொள்வேன். தவறவிட்டு விடக் கூடாதே" என்று அழுதான்.

"மகனே! வழி முழுவதும் சந்திப்பவர்களின் கால்களை உற்றுநோக்கியபடி போ... யார் தமது வலது கால் செருப்பை இடது காலிலும் இடதுகால் செருப்பை வலது காலிலும் அணிந்திருக்கிறாரோ அவரே புத்தர்.. அந்தத் திருவடிகளைச் சரணம் என்று இறுகப் பற்றிக்கொள்" என்று கூறினார்.

வழி முழுவதும் அவ்வாறு பார்த்தபடியே ஊர் திரும்பினான். ஒருவர் கூட அவ்வாறு காட்சியளிக்கவில்லை. தனக்கு நல்லருள் கிடைக்கவில்லையே என்று வருந்தியபடி தன் வீடு வந்து கதவைத் தட்டினான். அவனது அழைப்பொலியைக் கேட்டதும்,, அடிவயிற்றில் பிள்ளை உதைத்த போது உணர்ந்த ஆனந்த உணர்வுடன் தன்னை தனியே தவிக்க விட்டுச் சென்ற பிள்ளையை காண அவன் வயது முதிர்ந்த தாய் ஓடோடி வந்து கதவை திறந்தாள்.

இனி புத்தரை காண முடியாது என்று தன் சகல நம்பிக்கையையும் இழந்திருந்த மகன், கதவைத் திறந்த தன் தாயின் கால்களைப் பழக்கதோஷத்தால் கவனித்தான். என்ன ஆச்சரியம்? அவள் வலதுகால் செருப்பு இடது காலிலும், இடது கால் செருப்பு வலது காலிலும் இருந்தது. மகனை பார்த்த மகிழ்ச்சியில் செருப்பை மாற்றி அணிந்து வந்திருந்தார் அந்த தாய்.

மகனுக்கு மூத்த சந்யாசியின் சொல் நினைவில் மின்னியது. மெலிந்து மூத்து பாசத்தால் நடுங்கும் தாயின் மெல்லிய பாதங்களைக் கட்டிக்கொண்டு, 'பகவானே' என அழத் தொடங்கினான். புத்தரை விடவும் கருணையானவர் தாயாக மட்டும் தானே இருக்க முடியும்!
0 x

thanjavooran
Posts: 2541
Joined: 03 Feb 2010, 04:44
x 180
x 63

#289 Re: Aanmeekam...

Post by thanjavooran » 13 Jan 2015, 16:45

A share from my friend

Ari alaal Devi illai aiyan aiyaaranaarke- Appar........... The place

where St. Thayagaraja Lived & Composed his Kritis.
அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோயில், திருவையாறு, தஞ்சாவூர் மாவட்டம்
------------------------------------------------------------------------------------
'மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது
காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.'
- அப்பர்

தஞ்சை மாநகரிலிருந்து சுமார் பத்து கிமீ தொலைவில் உள்ள திருவையாற்றின் மையப்பகுதியில் அமைந்துள்ள இத்திருக்கோயில் பல சிறப்புகள் கொண்டது. காவிரியின் வடகரையில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் இது 51ஆவது தலமாகும்.

வட பாரதத்திலுள்ள காசிக்கு இணையாக தென்னாட்டில் காவிரிக்கரையில் ஆறு திருத்தலங்கள் கருதப்படும். அவையாவன:

1. திருவெண்காடு
2. சாயாவனம்
3. மயிலாடுதுறை
4. திருவிடைமருதூர்
5. திருவாஞ்சியம் ; மற்றும்
6. திருவையாறு - ஆகியவையாம்.

திருவையாற்று சப்தஸ்தானத் தலங்களில் இது முதன்மையான தலம். சிலாத முனிவரின் மகனாகப் பிறந்து, ஈசன் அருளால் சிரஞ்சீவித்துவம் பெற்று, கணங்களுக்குத் தலைவருமான நந்தி பகவான் தன் திருமணத்திற்குப் பிறகு திருவையாறு ஐயாறப்பர் கோயிலைச் சுற்றியுள்ள ஏழு தலங்களுக்கும் தன் இல்லாளுடன் சென்று ஈசனைத் தொழுதாராம். அச்சிறப்பின் சம்பிரதாயமாக, இன்றும் சித்திரைத் திருவிழாவின் கடைசி நாளன்று திருவையாறு ஐயாறப்பர் கோயிலின் உற்சவர் திருவையாறைச் சுற்றியுள்ள ஏழு தலங்களுக்கு பவன் வருவது வழக்கம் அவை திருவையாறு சப்த ஸ்தானத் தலங்கள் எனப்படும். அவையாவன:

1.திருவையாறு,
2.திருப்ப ழனம்
3. திருச் சோற்றுத்துறை.
4. திருவேதிக்குடி
5.திருப் பந்துருத்தி,
6. திருக்கண்டியூர்; மற்றும்
7. திருநெய்த்தானம் - ஆகியவையாகும்.

தலபுராணம்

சிலாத முனிவருக்கு மகனாகப் பிறக்கையில் நந்திபகவானுக்கு நான்கு கரங்கள் இருந்தன. முனிவர் தம் குழந்தையை இக்கோயிலின் ஈசன் முன் இட்டபோது குழந்தையின் இரு கரங்கள் மறைந்து அது மிக அழகுடைத்து விளங்கலாயிற்று. எம்பெருமான் அக்குழந்தைக்கு அம்மையின் பால், நந்தியின் வாயுறை நீர், அமிர்தம், சைவ தீர்த்தம், சூரிய புஷ்கரணி தீர்த்தம் என்ற ஐந்து விதமான புனித நீர்களால் அபிஷேகம் செய்யவே, இத்தலத்து இறைவன் ஐயாறப்பர் என்று பெயர் பெற்றார்.

நந்திதேவர் இங்கு ஏழுகோடி முறை ருத்ரஜபம் செய்து இறைவனால் தீர்த்தமாடப் பெற்றார். அது ஐந்து தீர்த்தங்களாகப் புகழ் பெற்றன. அந்த ஐந்து தீர்த்தங்களின் பெயராகவே இத்தலம் திருவையாறு என அழைக்கப்படுவதாகவும் சொல்வர்.

இத்தலத்து அர்ச்சகர் ஒரு முறை காசிக்குச் சென்று உரித்த காலத்தில் திரும்ப வரமுடியாமல் போக, அவர் உருவில் தான் வந்து தனக்குத் தானே அபிஷேகம் செய்து கொண்டான், தன்னடியார்கள் மீது மாறாத அன்பு கொண்ட ஐயாறப்பன்.

இத்தலத்தில் கைலாயக் காட்சியைக் கண்டார் அப்பர். மானசரோவரில் மூழ்கிய அவர் இத்தலத்துத் திருக்குளத்தில் எழுந்தார் என்பர்.

ஆண்களை விடவும் பெண்கள் செய்யும் தர்மகாரியங்களுக்குப் பலன் அதிகம் என்று உணர்த்தும் பொருட்டு உலகத்தில் அனைத்து ஜீவராசிகளுக்கும் படியளக்கும் தாயார் தர்ம்சம்வர்த்தினி என்ற பெயரில் இங்கு எழுந்தருளியுள்ளாள். அவளை எண்ணிச் செய்யும் காரியங்கள் எந்நேரமும் நன்மையே விளைக்குமென்பதை உணர்த்தும் முகமாக இங்கு அம்மனுக்கு அஷ்டமி இரவன்று திருமண வைபவம் செய்வது வழக்கம்.

இங்குள்ள அம்பிகை இடக்கரம் இடுப்பில் ஊன்றியும் மேற்கரங்களில் சங்கு சக்கரத்துடனும் காட்சி அளிப்பதால், ஸ்ரீமன் நாராயணனின் அம்சமாகக் கருதப்படுகிறாள். இதன் காரணமாக, திருவையாறு எல்லைக்குள்ளாகப் பெருமாளுக்குத் தனிக் கோயில்கள் கிடையாது என்பர்.

இங்குள்ள தட்சிணாமூர்த்தி முயலகனுக்குப் பதிலாக ஆமையை மிதித்த உருவுடன் காட்சி தருகிறார்.இவருக்கு ஸ்ரீஹரிகுருசிவயோக தட்சிணாமூர்த்தி என்றே பெயராகும். இவரை ஹரி வணங்கித் தொழுததாக ஐதீகம்.

இங்கு செஞ்சடையான் விரிந்த சடையுடன் இருப்பதாக நம்புவதால், அதை மிதிக்கக் கூடாதென சந்நதியைச் சுற்றுவது தடையாகும். இங்கு ஓரிடத்தில் நின்று ஐயாறப்பா என்று குரல் கொடுத்தால், ஏழுமுறை எதிரொலிக்கும் என்பர்.

நாயன்மார்களான சுந்தரரும் சேரமான் நாயனாரும் தரிசிக்க வரும்போது, காவிரியின் இரு மருங்கிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதாம். அப்போது, சுந்தரர் பதிகம் பாட வெள்ளம் ஒதுங்கி நின்று வழி விட்டதாகவும், அவ்விருவரும் இத்தலத்தை தரிசித்ததாகவும் கூறுவர்.

ஆலயத்தின் தென்புற வாயிலில், சுசரிதன் என்னும் சிறுவனை யமனிடமிருந்து காத்த ஆட்கொண்டார் சந்நதி உள்ளது. இங்கு முதலில் வணங்கி விட்டுப் பிறகு கோயிலில் நுழைய வேண்டும்.

மூலவர் ஐயாறப்பன். பஞ்சநதீஸ்வரர், ஐயாற்றீசர், செம்பொற்சோதீஸ்வரர், பிரணதார்த்திஹரன் என்ற பெயர்களாலும் வழங்குவர்.

தாயார் தர்மசம்வர்த்தினி. தமிழில் அறம் வளர்த்த நாயகி.

தலச்சிறப்பு

முக்தியளிக்கும் மூலத்தானங்களில் இதுவும் ஒன்றாகும். இத்தலமேகுவோர்க்கு ஈசன் திருவடி நிழல் கிட்டும் என்பது திண்ணம்.
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இத்தலத்து ஈசனைப் பிரார்த்திக்கின்றனர்.
யமபயம் போக்கும் தலமுமாகும் இது.

தலப்பண்

ஐயம் விடுத்தெம்மை ஆட்கொண்ட நேயனாய்
ஐயாற்றில் வாழ்கின்ற ஆதிமுதல் நாயகனை
கையிரண்டு கொண்டே வணங்காத வாழ்வென்றும்
உய்யா தறிவாய் உலகு
ஓம் நமச்சிவாய!
அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோயில், திருவையாறு, தஞ்சாவூர் மாவட்டம் ------------------------------------------------------------------------------------ 'மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப் போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன் யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன் கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.' - அப்பர் தஞ்சை மாநகரிலிருந்து சுமார் பத்து கிமீ தொலைவில் உள்ள திருவையாற்றின் மையப்பகுதியில் அமைந்துள்ள இத்திருக்கோயில் பல சிறப்புகள் கொண்டது. காவிரியின் வடகரையில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் இது 51ஆவது தலமாகும். வட பாரதத்திலுள்ள காசிக்கு இணையாக தென்னாட்டில் காவிரிக்கரையில் ஆறு திருத்தலங்கள் கருதப்படும். அவையாவன: 1. திருவெண்காடு 2. சாயாவனம் 3. மயிலாடுதுறை 4. திருவிடைமருதூர் 5. திருவாஞ்சியம் ; மற்றும் 6. திருவையாறு - ஆகியவையாம். திருவையாற்று சப்தஸ்தானத் தலங்களில் இது முதன்மையான தலம். சிலாத முனிவரின் மகனாகப் பிறந்து, ஈசன் அருளால் சிரஞ்சீவித்துவம் பெற்று, கணங்களுக்குத் தலைவருமான நந்தி பகவான் தன் திருமணத்திற்குப் பிறகு திருவையாறு ஐயாறப்பர் கோயிலைச் சுற்றியுள்ள ஏழு தலங்களுக்கும் தன் இல்லாளுடன் சென்று ஈசனைத் தொழுதாராம். அச்சிறப்பின் சம்பிரதாயமாக, இன்றும் சித்திரைத் திருவிழாவின் கடைசி நாளன்று திருவையாறு ஐயாறப்பர் கோயிலின் உற்சவர் திருவையாறைச் சுற்றியுள்ள ஏழு தலங்களுக்கு பவன் வருவது வழக்கம் அவை திருவையாறு சப்த ஸ்தானத் தலங்கள் எனப்படும். அவையாவன: 1.திருவையாறு, 2.திருப்ப ழனம் 3. திருச் சோற்றுத்துறை. 4. திருவேதிக்குடி 5.திருப் பந்துருத்தி, 6. திருக்கண்டியூர்; மற்றும் 7. திருநெய்த்தானம் - ஆகியவையாகும். தலபுராணம் சிலாத முனிவருக்கு மகனாகப் பிறக்கையில் நந்திபகவானுக்கு நான்கு கரங்கள் இருந்தன. முனிவர் தம் குழந்தையை இக்கோயிலின் ஈசன் முன் இட்டபோது குழந்தையின் இரு கரங்கள் மறைந்து அது மிக அழகுடைத்து விளங்கலாயிற்று. எம்பெருமான் அக்குழந்தைக்கு அம்மையின் பால், நந்தியின் வாயுறை நீர், அமிர்தம், சைவ தீர்த்தம், சூரிய புஷ்கரணி தீர்த்தம் என்ற ஐந்து விதமான புனித நீர்களால் அபிஷேகம் செய்யவே, இத்தலத்து இறைவன் ஐயாறப்பர் என்று பெயர் பெற்றார். நந்திதேவர் இங்கு ஏழுகோடி முறை ருத்ரஜபம் செய்து இறைவனால் தீர்த்தமாடப் பெற்றார். அது ஐந்து தீர்த்தங்களாகப் புகழ் பெற்றன. அந்த ஐந்து தீர்த்தங்களின் பெயராகவே இத்தலம் திருவையாறு என அழைக்கப்படுவதாகவும் சொல்வர். இத்தலத்து அர்ச்சகர் ஒரு முறை காசிக்குச் சென்று உரித்த காலத்தில் திரும்ப வரமுடியாமல் போக, அவர் உருவில் தான் வந்து தனக்குத் தானே அபிஷேகம் செய்து கொண்டான், தன்னடியார்கள் மீது மாறாத அன்பு கொண்ட ஐயாறப்பன். இத்தலத்தில் கைலாயக் காட்சியைக் கண்டார் அப்பர். மானசரோவரில் மூழ்கிய அவர் இத்தலத்துத் திருக்குளத்தில் எழுந்தார் என்பர். ஆண்களை விடவும் பெண்கள் செய்யும் தர்மகாரியங்களுக்குப் பலன் அதிகம் என்று உணர்த்தும் பொருட்டு உலகத்தில் அனைத்து ஜீவராசிகளுக்கும் படியளக்கும் தாயார் தர்ம்சம்வர்த்தினி என்ற பெயரில் இங்கு எழுந்தருளியுள்ளாள். அவளை எண்ணிச் செய்யும் காரியங்கள் எந்நேரமும் நன்மையே விளைக்குமென்பதை உணர்த்தும் முகமாக இங்கு அம்மனுக்கு அஷ்டமி இரவன்று திருமண வைபவம் செய்வது வழக்கம். இங்குள்ள அம்பிகை இடக்கரம் இடுப்பில் ஊன்றியும் மேற்கரங்களில் சங்கு சக்கரத்துடனும் காட்சி அளிப்பதால், ஸ்ரீமன் நாராயணனின் அம்சமாகக் கருதப்படுகிறாள். இதன் காரணமாக, திருவையாறு எல்லைக்குள்ளாகப் பெருமாளுக்குத் தனிக் கோயில்கள் கிடையாது என்பர். இங்குள்ள தட்சிணாமூர்த்தி முயலகனுக்குப் பதிலாக ஆமையை மிதித்த உருவுடன் காட்சி தருகிறார்.இவருக்கு ஸ்ரீஹரிகுருசிவயோக தட்சிணாமூர்த்தி என்றே பெயராகும். இவரை ஹரி வணங்கித் தொழுததாக ஐதீகம். இங்கு செஞ்சடையான் விரிந்த சடையுடன் இருப்பதாக நம்புவதால், அதை மிதிக்கக் கூடாதென சந்நதியைச் சுற்றுவது தடையாகும். இங்கு ஓரிடத்தில் நின்று ஐயாறப்பா என்று குரல் கொடுத்தால், ஏழுமுறை எதிரொலிக்கும் என்பர். நாயன்மார்களான சுந்தரரும் சேரமான் நாயனாரும் தரிசிக்க வரும்போது, காவிரியின் இரு மருங்கிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதாம். அப்போது, சுந்தரர் பதிகம் பாட வெள்ளம் ஒதுங்கி நின்று வழி விட்டதாகவும், அவ்விருவரும் இத்தலத்தை தரிசித்ததாகவும் கூறுவர். ஆலயத்தின் தென்புற வாயிலில், சுசரிதன் என்னும் சிறுவனை யமனிடமிருந்து காத்த ஆட்கொண்டார் சந்நதி உள்ளது. இங்கு முதலில் வணங்கி விட்டுப் பிறகு கோயிலில் நுழைய வேண்டும். மூலவர் ஐயாறப்பன். பஞ்சநதீஸ்வரர், ஐயாற்றீசர், செம்பொற்சோதீஸ்வரர், பிரணதார்த்திஹரன் என்ற பெயர்களாலும் வழங்குவர். தாயார் தர்மசம்வர்த்தினி. தமிழில் அறம் வளர்த்த நாயகி. தலச்சிறப்பு முக்தியளிக்கும் மூலத்தானங்களில் இதுவும் ஒன்றாகும். இத்தலமேகுவோர்க்கு ஈசன் திருவடி நிழல் கிட்டும் என்பது திண்ணம். திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இத்தலத்து ஈசனைப் பிரார்த்திக்கின்றனர். யமபயம் போக்கும் தலமுமாகும் இது. தலப்பண் ஐயம் விடுத்தெம்மை ஆட்கொண்ட நேயனாய் ஐயாற்றில் வாழ்கின்ற ஆதிமுதல் நாயகனை கையிரண்டு கொண்டே வணங்காத வாழ்வென்றும் உய்யா தறிவாய் உலகு ஓம் நமச்சிவாய!
0 x

thanjavooran
Posts: 2541
Joined: 03 Feb 2010, 04:44
x 180
x 63

#290 Re: Aanmeekam...

Post by thanjavooran » 06 Feb 2015, 04:51

A share from my friend

ஞானானந்தகிரி ஸ்வாமிகள்

(நண்பர் ஒருவர் அனுப்பிய மின்னஞ்சல்)

பல வருஷங்களுக்கு முன்பு ஒரு சனிக்கிழமை. திருவண்ணாமலையில் அருணா
சலேஸ்வரரை தரிசித்த பின், பூண்டி வந்தேன். அங்கு பூண்டி மகானின்
அனுக்கிரகம் பெற்றுக் கொண்டு, திருக் கோவிலூர் ஸ்ரீஞானானந்த தபோவனம்
வந்தேன். மாலை ஐந்து மணி இருக்கும்.

ஸத்குரு ஸ்ரீஞானானந்தகிரி ஸ்வாமிகள் பக்தர் களுக்கு அருளாசி வழங்கிக்
கொண்டிருந்தார். ஒவ் வொருவராக நமஸ்கரித்து எழுந்து, பிரசாதம் பெற்றுச்
சென்றனர். அடியேனும் நமஸ்கரித்து விட்டு ஓரமாக அமர்ந்தேன். குழந்தை
மாதிரி சிரித்துப் பேசும் குரு நாதனின் முகத்தைப் பார்ப்பதே ஆனந்தம்!

அப்போது, ஆஸ்ரமத்தில் பணியாற்றும் வயதான வேலைக்காரர் ஒருவர் அங்கு
வந்தார். அடியேனுக்கு அவரை நன்றாகத் தெரியும். அவரது இயற்பெயர்
நினைவில்லை. ஒல்லியானவர் என்பதால், அவரை ஸத்குருநாதனை உட்பட அனைவரும்
சோனி என்று அழைப்பர். அவர் கோபிக்க மாட்டார். உடம்பு முழுவதும் திருநீறு
பூசி, முழங்கால்களுக்குக் கீழ் வரை உடுத்திய நான்கு முழ வேட்டியுடன் ஸத்
குருநாதனை நமஸ்கரித்து நெடுஞ்சாண்கிடையாக விழுந்து எழுந்தார்.

அவரைப் பார்த்ததும் குருநாதனுக்கே சிரிப்பு வந்தது. ''என்ன சோனி... என்ன
விசேஷம்? ஸ்ரீராமனுக்கு முன்னால நிக்கற ஹனுமன் மாதிரி அப்படியே
நிக்கறமே... ஏதாவது சமாசாரம் உண்டோ?'' என்று கேட் டார் ஸத்குருநாதன்.
சோனி உடல் நெளிந்து, தலையைச் சொறிந்தார். குருநாதன் விடவில்லை.

சிரித்தவாறே, ''நாம ஒடம்ப நெளிச்சு தலய சொறியறது லேர்ந்தே, ஏதோ முக்கிய
மான விஷயத்துக்காக 'அடி' போட வந்துருக்கோம்னு புரியறது. சரி... அது
என்னனுதான் சொல்வோமே'' என எதுவுமே தெரியாத மாதிரி அனைத்தும் அறிந்த அந்த
சித்த புருஷர் கேட்டார்!

அதற்கு சோனி தயங்கியபடி, ''அத குருநாதன்கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட
சொல்லப் போறேன். எங்கள மாதிரியானவங்களுக்கு எல்லாமே நீங்கதானே சாமி''
என்று முடிப்பதற்குள், ''சரி... சரி... நாம வந்த விஷயத்தச் சொல்வோம்''
என்றார் ஸ்வாமிகள்.

சோனி மென்று விழுங்கியபடி, ''அது... அது... வேற ஒண்ணுமில்லீங்க குருநாதா!
எம் மவன் வயித்துப் பேத்திக்கு கண்ணாலத்துக்கு (திருமணம்) ஏற்பாடு
செஞ்சுருக்கேன். இன்னும் நாலு... அஞ்சு நாளுக் குள்ளாற முகூர்த்த ஓல
எழுதியாவணும். பிறகு அடுத்த மாசம் திருக்கோவிலூர்ல கண்ணாலம் நடத் தோணும்.
குருநாதன்தான் அருளு செஞ்சு கூட்டிவைக்கோணும்!'' என்று பவ்வியமாகப்
பேசிவிட்டு சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து எழுந்தார்.

உடனே ஸ்வாமிகள், ''ஓஹோ... ஒம் பேத்திக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணப்
போறயாக்கும். பேஷ்... பேஷ்! பண்ணுவோம். நாம ரொம்பவும் சந்தோஷப் படறோம்.
பாண்டுரங்கன் கிருபைல எல்லாம் நல்லபடியா நடக்கும். கவலையே வேண்டாம்'' என
பூரணமாக ஆசீர்வதித்தார்.

மேற்கொண்டு என்ன பேசுவதென்று தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தார் சோனி. அதை
உணர்ந்த குருநாதன், ''அதிருக்கட்டும்... நமக்கு எத்தனை பசங்கள்?'' என்று
வினவினார். உடனே சோனி, ''நமக்கு ஒரே ஒரு மவந்தான். அவனுக்கு மூணும்
பொட்டப் புள்ளைங்க. இப்ப கண்ணாலம் ஆவப்போறவ தான் மூத்தது. மீதி, ரெண்டும்
சின்னப் புள்ளைங்க. நீங்கதான் கிருபை பண்ணணும்...'' என்று குழைந்தார்.
ஸ்வாமிகள் முகத்தில் 'எல்லாம் புரிந்தது' போன்ற ஒரு புன்முறுவல்.

இருந்தும், புரியாத மாதிரி, ''நம்ம பேத்தி கல்யாணத்துக்கு
சாமிகிட்டேருந்து நாம என்ன எதிர்பாக்கறோம்?'' என்று கேட்டார்.
சோனிக்குக் கொஞ்சம் தைரியம் வந்தது. அவர், ''மூர்த்த ஓல எழுதறதுலேருந்து,
திருக்கோவிலூருல ஒரு சின்ன சத்திரத்த வாடகைக்கு புடிச்சு, சீரு
செனத்தியல் லாம் செஞ்சு, கண்ணாலத்த நடத்துறதுக்கு ஐயாயிரம் ரூவா
புடிக்குது குருநாதா. இந்த ஏழ மேல கருண வெச்சு அந்த ரூவாய நீங்கதான்
அனுக் கிரகம் பண்ணணும்!''_என்று பிரார்த்தித்தார்.

குருநாதன் அதைக் காதில் வாங்காதது போல், ''அது சரி... ஒம் பையன் என்ன பண்
றான்?'' என்று கேட்டார்.
சோனி, ''அவுனுக்கு, திருக்கோவிலூர்ல அரிசி மண்டியில எடுபிடி வேலை. அறுவது
ரூவா சம்பளம். சாப்டது போக, ஒண்ணும் மிச்சம் புடிக்க முடியலே.
எப்டியாச்சும் நீங்க தான் ஐயாயிரத்த அனுக்கிரகம் பண்ணணும்'' என்று
உருகினார்.
உடனே ஸ்வாமிகள் சற்றுக் கோபம் தொனிக்க, ''நா ஒரு சந்நியாஸி. எங்கிட்ட
வந்து பணங்காசெல்லாம் கேக்கறயே... இது என்ன ஞாயம்? நம்மால அதெல்லாம் பண்ண
முடியாது'' என்று கூறிவிட்டு எழுந்தவர், அருகில் இருந்த மடத்தைச் சேர்ந்த
ஒருவரை அழைத்து, ''உள்ளே போய் ஒரு உரிச்ச தேங்காயும், ஒரு ரூபா பணமும்
கொண்டு வா!'' என்று பணித்தார். கொண்டு வந்தார் அவர்.

இரண்டையும் பெற்றுக் கொண்ட ஸ்வாமிகள், சோனியை அருகே அழைத்தார். உரித்த
தேங்காயை யும், ஒரு ரூபாய் நாணயத்தையும் அவர் கையில்
அனுக்கிரகித்துவிட்டு, ''சோனி! இந்த ரெண்டையும் குருநாதனுடைய ஆசீர்வாதமா
வாங்கிக்கோ... ஒம் பேத்தி கல்யாணம் ஜாம்ஜாம்னு நடக்கும்!'' என்ற படி
எழுந்து போய் விட்டார்.

அவற்றை மாறி மாறிப் பார்த்தபடி விக்கித்து
நின்றார் சோனி. அவர் கண்கள் பனித்தன. அப்போது இரவு சரியாக 7.30 மணி.
தபோவனத்துக்குள் டூரிஸ்ட் பஸ் ஒன்று வந்து நின்றது. அது குஜராத் மாநில
ரிஜிஸ்டிரேஷனுடன் கூடிய பஸ். அதிலிருந்து ஆண்களும் பெண்களுமாக ஐம்பது
பேர் இறங்கினர். அவர்கள் மண்டபத்துக்குள் நுழைவதற்கும், ஸத்குருநாதன்
தனது ஆசனத்தில் வந்து அமர்வதற்கும் சரியாக இருந்தது.

அங்கேயே நின்றிருந்த
சோனியை புருவங்களை உயர்த்தி ஒரு தடவை பார்த்தார் ஸ்வாமிகள். பரம
பக்தியோடு தேங்காயுடன் நின்றிருந்த அவரைப் பார்த்ததும் ஸ்வாமிகளுக்கு
சிரிப்பு வந்து விட்டது. வந்தவர்கள் அனைவரும் ஸத்குருநாதனை
நமஸ்கரித்தனர். அவர்களை ஆசீர்வதித்த ஸ்வாமிகள், இந்தியில் கேட்டார்:
''நாமெல்லாம் குஜராத்திகளா?''
''ஆமாம் ஸ்வாமிஜி'' என்றனர் அனைவரும் கோரஸாக இந்தியில். சம்பாஷணை தொடர்ந்தது.
ஸத்குருநாதன், ''நீங்களெல்லாம் யாத்திரையாக எங்கே போகிறீர்கள்?'' என்று கேட்டார்.
அவர்களில் ஒருவர், ''ராமேஸ்வரம் ஸ்வாமிஜி! வழியிலுள்ள முக்கிய ஸ்தலங்களை
தரிசிக்க உத் தேசம்!'' என்றார்.

ஸ்வாமிகள், ''ரொம்ப சந்தோஷம்... யாத்திரை «க்ஷமமா பூர்த்தியடைய
ஆசீர்வதிக்கிறோம்!'' என்றார்.மீண்டும் ஸ்வாமிகளை நமஸ்கரித்துவிட்டு
அமர்ந்தனர். அப் போது மடத்தைச் சேர்ந்த ஒருவர், பெரிய ரஸ்தாளி வாழைப்பழத்
தார் ஒன்றையும், பெரிய வாளியில் பசும் பாலும் கொண்டு வந்தார்.
வழங்கும்படி ஜாடை காட்டினார் ஸ்வாமிகள். அவர்கள் சாப்பிட்டு முடித்தனர்.
அவர்களை பஜனைப் பாடல்கள் சில வற்றைப் பாடுமாறு சொல்லிக் கேட்டு
மகிழ்ந்தார். இப்போது மணி 8.30.

பிறகு சோனியை சைகை காட்டி அழைத்தார் ஸ்வாமிகள். குஜராத்தி பக்தர்களை
நோக்கி, ''இவர் கையில் ஒரு தேங்காய் வைத்திருக்கிறார். உங்களில் யாராவது
ஒருத்தர் அதை உடைக்கணும்... முடியுமா?'' என்று சிரித்தபடி கேட்டார்.
அனைவரும் எழுந்து நின்றனர்.
அவர்களில் ஒருவரிடம் தேங்காயைக் கொடுக்கச் சொன்னார் ஸ்வாமிகள். ''இதை
உடைக்க முடியலேன்னா நூறு ரூபாய கிருஷ்ணார்ப்பணமாக கொடுக் கணும்...
சம்மதமா?'' எனக் கேட்டார். குஜராத்திகள் சம்மதித்தனர்.
தேங்காயை வாங்கியவர், அருகில் இருந்த கருங்கல் பாறையில் அதை உடைக்க
முற்பட்டார்.

ம்... ஹ§ம்! அது உடையவே இல்லை! ஆச்சரியத்தோடு ஸ்வாமிகளைப்
பார்த்தார். சலனம் இன்றி அமர்ந்திருந்தார் குருநாதன். சோனிக்கு ஜாடை
காட்டி, அவரது மேல் வஸ்திரத்தைத் தரையில் விரிக்கச் சொன்னார். அவரும்
விரித்தார். பிறகு தேங்காய் உடைக்க முற்பட்டவரிடம், 'ஸ்ரீ
க்ருஷ்ணார்ப்பணம்' என்றபடி நூறு ரூபாயை சமர்ப்பிக்கச் சொன்னார்
ஸத்குருநாதன்.

தொடர்ந்து ஆண்& பெண் என ஒவ்வொருவராக தேங் காயை உடைக்க முயன்றனர்.
'ஸ்ரீக்ருஷ்ணார்ப்பண' சத்தமே கேட்டது! சோனியின் வஸ்திரம் ரூபாய்
நோட்டும், சில்லறையுமாக நிரம்பியது. அந்தத் தேங்காய் அப்படியே இருந்தது!
இப்போது இரவு மணி 10.
ஸ்வாமிகள் சிரித்தவாறு சோனியை அழைத்து, ''இத்தனை பேராலயும் உடைக்க
முடியலே! நாம உடைச்சுப் பாப்பமே... என்ன!'' என்றார்.
உடனே சோனி, ''இத்தனை பலசாலிங்களாலயே முடியலீங்களே குருநாதா! பலமே இல்லாம
சோனியா இருக்கற நான் மட்டும் எப்டி ஒடைக்கப் போறேன்!'' என நெளிந்தார்.
ஸ்வாமிகள், விடவில்லை. ''நாம அப்டி சொல்லப்டாது! முயற்சி பண்ணுவோமே!''
என்று உற்சாகப் படுத்தினார்.


சோனிக்கு தைரியம் வந்தது. அவர் தேங்காயைக் கையில் எடுத்து, ''குரு நாதன்
அருள் இருந்தா எல்லாமே நல்லபடியா நடக்கும்!'' என்று கூறி விட்டு,
'குருநாதனே துணை... குரு நாதனே துணை... குருநாதனே துணை!' என மூன்று தடவை
உச்சரித்து விட்டு மும்முறை ஸ்வாமிகளை நமஸ்கரித்து எழுந்தார்.
ஸ்வாமிகள் அர்த்தபுஷ்டியுடன் புன்னகைத்தார். தேங்காயுடன் பாறையை
நெருங்கிய சோனி, பலம் கொண்ட மட்டும் தேங்காயை பாறையில் அடித்தார். என்ன
ஆச்சரியம்! அந்தத் தேங்காய் சரி பாதியாக உடைந்தது!

அனைவரும் கரகோஷம் செய்தனர். ஸ்வாமிகள் எந்த விதச் சலனமுமின்றி
அமர்ந்திருந்தார். படபடப்போடு ஓடிப்போய் குருநாதனின் பாதங்களில் விழுந்து
வணங்கினார் சோனி.
அவரை ஏறிட்டுப் பார்த்த ஸ்வாமிகள், ''இவ்வளவு பேராலயும் ஒடைக்க முடியாத
தேங்காய, நாம சர்வ சாதாரணமா ஒடச்சுட்டோம். அதனால, வஸ்திரத்துல சேர்ந்
திருக்கற பணம் நம்மைத்தான் சேரணும். கொஞ்சம் பொறுப்போம்!'' என்று
கூறிவிட்டு மடத்தைச் சேர்ந்த ஒருவரை அழைத்து பணத்தை எண்ணச் சொன்னார்.
அவர் எண்ணி முடித்துக் கூறிய தொகை ரூபாய் 5,501.

ஸ்வாமிகள் சிரித்தவாறு சோனியிடம், ''பேத்தி கல்யாணத்துக்கு நாம
எதிர்பார்த்தது ஐயாயிரம் ரூபாய். ஆனா, பாண்டுரங்கன் இந்த பக்தாள் மூலமா
அனுக்கிரகம் பண்ணினது 5,501 ரூபாய். பேத்தி கல்யாணத்த சந்தோஷமா
நடத்துவோம். 'ஸ்ரீகிருஷ்ண அனுக்கிரகம்'னு சொல்லிண்டே வஸ்திரத்தோடு ரூபாய
எடுத்துப்போம்!'' என்றார்.

உடனே நெடுஞ்சாண்கிடையாக குருநாதனின் பாதங்களில் விழுந்த சோனி குலுங்கிக்
குலுங்கி அழுதார். இதைப் பார்த்த இந்த அடியவனின் கண்களும் குளமாயின!
''எல்லாருக்கும் ராத்திரி போஜனம் தயாரா இருக்கு. சாப்பிட்ட பின் இரவு
இங்கேயே தங்கிட்டு, காலையில் பிரசாதம் பெற்றுக் கொண்டு புறப்படலாம்!''
என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார் ஸ்வாமிகள்.
0 x

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16
x 2

#291 Re: Aanmeekam...

Post by venkatakailasam » 15 Feb 2015, 06:50

அசாதாரண நிகழ்வுகள் 11 !

நொச்சியம் மாமியுடன் பேசி விட்டு மணச்சநல்லூர் வழி திருவெள்ளறை,திருப்பைஞ்சிலி நோக்கி போய்க்கொண்டிருந்த போது கண்ணில் தென்பட்டது 'ஆதி நாயக பெருமாள் கோவில்' என்ற பதாகை. உடனே காரை நிறுத்தி விசாரித்தேன். பழமையான கோவில் 'இப்பிடியே போனா லெப்ட்ல ஒரு ரோடு வரும். அதுல கொஞ்ச தூரம் உள்ள போனா கோயில் வந்துடும். இந்த ஊர்ல கூட ஒரு கோயில் இருக்கு, பாத்துட்டு போங்க சார்'. அதிர்ஷ்டம். சிறு ஆலயம். செம்பியன் மாதேவி எடுப்பித்தது. பெருமாளின் நாமம் 'அழகிய மணவாளன்'. பதினாறு அடி உயரம். ஸ்ரீதேவி, பூதேவி உடன் உறை. தரையிலிருந்து பன்னிரெண்டு அடி. பிரமித்துப் பார்த்துவிட்டு, சுற்றி வந்தால் ராமாயண காட்சிகள் அடிப்பாகத்தில். பட்டர் தந்த புளியோதரை, தயிர் சாத பிரசாதத்தை உண்டு விட்டு வெளியே வந்தோம்.

அடுத்து ஆதி நாயக பெருமாள். உள்ளே நுழைந்ததும் அறிவிப்புப் பலகை 'உலுக் கானின் படையெடுப்பின் போது ரங்கனை காக்கும் பணியில் உயிர் நீத்த பன்னிரெண்டு ஆயிரம் தொண்டர்களுக்கு ஒரு சேர ஆடி அமாவாசை அன்று அருகிலிருக்கும் கால்வாயின் கரையில் திதி கொடுக்கப்படுகிறது'. இது ஆர்வத்தை தூண்ட, வலை தளத்தில் தேடிப்பிடித்து, ஸ்தல புராணங்கள், கோவிலொழுகு (கொஞ்சம்) போன்று பல ஆதாரங்களை படித்து எழுதப்பட்டது தான் 'அழகிய மனவாளம்' தொடர்.

1323 C.E.. துக்ளக் (உலுக்கான்) திருவரங்கத்தை தாக்கி நாசம் செய்கிறான். பிள்ளை லோகாச்சாரியர் ரங்கனின் உற்சவ விக்ரஹத்துடன் திருச்சி, அழகர் கோவில் வழி ஆனமலை அடையும் போது உயிர் துறக்கிறார் (ஜோதிஷ்குடி - காளையார் கோவிலில் தான் உயிர் நீத்தார் என்றும் கூறப்படுகிறது). பெருமாளின் அடியவர்கள் மதுரை - நாகர்கோவில் - திருஅனந்தன்புரம் - கள்ளிக்கோடு தடத்தில் சென்று மேல்கோட்டை சேருகின்றனர்.

இங்கு, சுவாமி வேதாந்த தேசிகன் தலைமையில் குலசேகரன் படியை ஒட்டி மூலவரை மறைத்து சுவர் எழுப்பப்படுகிறது. பின், சுதர்சன பட்டரின் (ஸ்ருத பிரகாசிகா) இரு புதல்வர்களோடு பிரேதங்களுக்கு இடையே மூச்சு விடாமல் படுத்துக் கொண்டு சுல்தான் படையினரிடம் இருந்து தப்பி சத்தியமங்கலம் வழியே திரு நாராயண புரம் (மேல்கோட்டை) அடைந்து சுந்தர ராஜ பெருமாளை தரிசிக்கிறார்.

அதற்குப்பின் திருப்பதி காடுகளில் மறைத்து வைக்கப்படும் உற்சவரைப் பற்றி 1371 C.E வரை எதுவும் அறியப்படவில்லை. 1336 C.Eல் விஜயநகர பேரரசை ஹரிஹரனும், புக்கனும் ஸ்தாபிக்கின்றனர். புக்கனின் மகன் கம்பன்னா பெரும் படை எடுத்து வந்து சுல்தான் ஆட்சியை ஒழித்துக் கட்டுகிறார். அவரின் தளபதி கோபன்னாவினால் செஞ்சியில் வைக்கப்பட்டிருக்கும் பெருமாள் திருமேனி அரங்கம் வந்தடைகிறது. அங்கு ஏற்கனவே வேறொரு உற்சவர் இருக்க யார் நாற்பத்தி எட்டு ஆண்டுகளுக்கு முன் திருவரங்கத்தை அலங்கரித்தவர் என்ற கேள்வி எழுகிறது. கண்களை கட்டிக் கொண்டு இருவரின் உடைகளையும் துவைத்து அலசும் வண்ணான் 'அட, இது நம் பெருமாளின் ஆடை' என்கிறான். அந்த விக்ரஹம் 'நம்பெருமாள்' என்கிற நாமத்துடன் உற்சவ மூர்த்தி யாகிறது.

இதன் முத்தாய்ப்பாக, கம்பன்னனின் மனைவி கங்கா தேவி எழுதிய 'மதுரா காவியம்' (அ) வீர கம்பண்ண சரித்திரம் 1912ல் திருஅனந்தன்புர நூலகத்தில் வேறு ஓலை சுவடிகளுக்கு இடையே தற்செயலாக கண்டுபிடிக்கப்படுகிறது. அதில், மதுரை மீனாக்ஷி அவனுக்கு கனவுக்காட்சியாக வீர வாளை கொடுத்து 'நானும் என் சகோதரனும் எப்படி துன்புறுகிறோம் பார். உடனே போர் செய். வெற்றி உனக்கே' என்று ஆசி அளித்த செய்தியும் காணப்படுகிறது.

சரி, தொடங்கிய இடத்திற்கு மீண்டும் வருவோம். பிள்ளை லோகாச்சார்யர் ஒரு பக்கம் போக, இன்னொரு பக்கம் ஒரு பெருங்கூட்டம் அழகிய மணவாளம் அடைகிறது. இவர்களில் பலர் 1371ல் நடக்கும் போரின் போது ஒற்றர்களாக சேவை செய்கின்றனர். இதில், சித்த மருத்துவர்களுக்கும், தேவரடியார்களுக்கும் பெரும் பங்கு உண்டு (வெள்ளை கோபுரம் - 1323 C.E. ஆசை காட்டி கோபுரத்தின் மீது அழைத்துச் சென்று சுல்தானின் தளபதியை கீழே தள்ளிக் கொன்று தானும் குதித்து உயிர் விட்ட வெள்ளையம்மாளின் நினைவாக வழங்கப்படுகிறது).

இவர்களைத் தவிர சுமார் பன்னிரெண்டாயிரம் பேர் அரங்கன் கோவில் பிரகாரங்களில் தங்கி விடுகின்றனர். போர் பயிற்சி ஏதும் இன்றி உலுக்கானின் படையோடு மோதி 'ரங்கா, ரங்கா' என்று அவன் பெயர் அழைத்தபடியே உயிர் விடுகின்றனர். இவர்களுக்குத்தான் ஆதி நாயக பெருமாள் கோவில் அருகில் இருக்கும் ஓடைக்கரையில் ஆடி அமாவாசை அன்று திதி கொடுக்கப்படுகிறது.


இந்த அற்புத சரித்திர நிகழ்வை பதினெட்டு எபிசோடுகளில் இங்கு எழுதியது மிக மிக அசாதாரண நிகழ்வே. அரங்கன் அருளே.Author: Krishnamurthy Krishnaiyer
0 x

thanjavooran
Posts: 2541
Joined: 03 Feb 2010, 04:44
x 180
x 63

#292 Re: Aanmeekam...

Post by thanjavooran » 20 Feb 2015, 15:06

A share from my friend

---தெரிந்த உண்மை தெரியாத விபரம்


கோவில் அதிசயங்கள்

அந்த காலத்தில் கோவில் கட்டும் போது ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒன்றை தனித்தன்மையுடன் அமைத்தனர்.
ஆனால் ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒரு தனிச்சிறப்பு உண்டு!
அவைகளில் சில:

1. உற்சவர் அல்லாமல் மூலவர் வீதியில் வலம் வருவது சிதம்பரம். - நடராஜ கோயில்

2. கும்பகோணம் அருகே “தாராசுரம்” என்ற ஊரில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவிலில்உள்ள சிற்பத்தில் வாலியும் சுக்ரீவனும் சண்டை இடும் காட்சி உள்ளது. இங்கிருந்து ராமர் சிற்பம் இருக்கும் தூண் தெரியாது. ஆனால் ராமன் அம்பு தொடுக்கும் சிற்பத்தில் இருந்து பார்த்தால் வாலி சுக்ரீவன் போர் புரியும் சிற்பம் தெரியும்.

3. தர்மபுரி மல்லிகார்ஜுன கோவிலில் உள்ள நவாங்க மண்டபத்தில் இரு தூண்களின் அடி பூமியில் படியாது.

4. கரூர் மாவட்ட குளித்தலை கடம்பவனநாதர் கோவிலில் இரட்டை நடராஜர் தரிசனம் செய்யலாம்.

5. கருடாழ்வார் நான்கு கரங்களுள் இரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியபடி காட்சி தரும் ஸ்தலம் கும்பகோணம் அருகே வெள்ளியங்குடி. 108 திவ்யதேசத்தில் இங்குமட்டும் இது போல் காட்சி தருகிறார்.

6. நாச்சியார் கோவில் கல்கருடன் சன்னதியில் 4 பேர் தூக்குவார்கள் பின்பு 8,16, கோவில் வாசலில் 64 பேர் தூக்கி வருவார்கள் கருடனும் முகத்தில் வேர்வை துளிர்க்கும்.

7. ஸ்ரீபெரும்புதூரில் உள் ராமானுஜர் உருவம் விக்ரஹமோ, வேறு உலோகப் பொருளால் ஆன வடிவமைப்போ இல்லை. குங்குமப்பூ, பச்சை கற்பூரம் கொண்ட மூலிகைப் பொருளால் ஆனது.

8. திருநெல்வேலி-கடையம் அருகே நித்ய கல்யாணி உடனுறை விஸ்வநாதர் கோயிலில் உள்ள வில்வமரத்தில் லிங்க வடிவில் காய் காய்க்கிறது.

9 கும்பகோணம் அருகே திருநல்லூரில் உள்ள சிவலிங்கத் திருமேனி ஒரு நாளைக்கு 5 முறை வெவ்வேறு வண்ணங்களில் நிறம் மாறுவதால் “பஞ்சவர்ணேஸ்வரர்” என்று பெயர்.

10. விருதுநகர், சொக்கநாதன்புத்தூரில் உள்ள தவநந்திகேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்திக்கு கொம்போ, காதுகளே இல்லை.

11. ஆந்திராவில் சாமல் கோட்டை அருகே உள்ள 3 பிரதான சாலைகளில் சந்திப்பில் உள்ள 72 அடி ஆஞ்சநேயர் சிலையின் கண்களும். சில நூறு மைகளுக்கு அப்பால் உள்ள பத்ராசல ஆலயத்தில் ஸ்ரீராமன் திருவடிகளும் ஒரே மட்டத்தில் உள்ளன.

12. வேலூர் அருகே உள்ள விருஞ்சிபுரம் என்ற தலத்தில் உள்ள கோயில் elதூணின் தென்புறம் அர்த்த சந்திரவடிவில் 1 முதல் 6 வரையும், 6முதல் 12 வரையும் எண்கள் செதுக்கியுள்ளன. மேற்புறம் உள்ள பள்ளத்தில் வழியே ஒரு குச்சியை நீட்டினால், குச்சியுன் நிழல் எந்த எண்ணில் விழுகிறதோ அதுதான் அப்போது மணி ஆகும்.

13. சென்னை-திருப்பதி சாலையில் ஊத்துக் கோட்டைதாண்டி நாகலாபுரம் என்ற ஊரில் உள்ள ஸ்ரீவேத நாராயண பெருமாள் தலையிலிருந்து இடுப்புவரை மனித உருவம், கிழே மீன்வடிவம் கொண்டுள்ளார்.

14. தருமபுரி – பாப்பாரப்பட்டி {16கி.மீ} இருக்கும் ஸ்ரீ அபிஷ்டவரதர் பெருமாள் கோவிலில் நவக்கிரகங்கள் பெண் வடிவில் உள்ளது.
0 x

thanjavooran
Posts: 2541
Joined: 03 Feb 2010, 04:44
x 180
x 63

#293 Re: Aanmeekam...

Post by thanjavooran » 09 Mar 2015, 21:31

A share from my friend
Kunjitha paadam

திருச் சிற்றம்பலம்...

ஸ்ரீவித்யா உபாஸகர்களின் முக்கண் க்ஷேத்ரங்களாக
விளங்குவது காஞ்சிபுரம், திருவாரூர், சிதம்பரம் இம்
மூன்று ஸ்தலங்களுமாகும்.சிதம்பரம் ஆகாயத்தலமாகும்.
இம்மூன்று ஸ்தலங்களிலும் உறையும் அம்பிகைகள் பெயர்களில்
காம என்ற சொல் சம்பதப்பட்டிருக்கும். காஞ்சியில் காமாக்ஷி
திருவாரூரில் காம கலா என்ற கமலாம்பிகை, சிதம்பரத்தில்
சிவகாம சுந்தரி.
காமனை எரித்த சிவபெருமானை, தன்னை மோகிக்க்கச்செய்து,
அவரை காமேஸ்வரனாக்கித், தந்னை சிவகாமசுந்தரியாக
ஆக்கிக் கொண்டவள் அம்பிகை.
ஒன்றாக இருப்பதும், பிரிவதும், பிரிந்த இரண்டும் ஒன்றாகச்
சேரத்துடிப்பதும் உலக இயற்கை. ஒன்றாக இருந்த ப்ரம்மம்
சிவனாகவும், சக்தியாகவும் பிரிந்து , இரண்டாக இருந்த சிவமும்
சக்தியும் ஒருங்கிணைந்து அர்த்த நாரீஸ்வரராகவும் ஆகியது.
காமக்கலையாகிற அம்பிகை காஞ்சியில் இறைவனைப்
பூஜித்து உலகிற்கு அவரைப் பூஜிக்கும் முறையை அறிவித்து,
பின் அவருடன் ஐக்யமானாள்.
இவளே கமலாம்பிகையாக திருவாரூரில் விளங்கி சிவனைக்
குறித்துத் தவம் இருந்து, யோகம் மூலம் அவரை அடையும்
முறையினை உலகிற்கு எடுத்துக் காட்டி இறைவனுடன் ஒன்று
சேர்ந்தாள்.
இவளே சிவகாமசுந்தரியாய் இறைவனை ஆடவைத்து, அதர்கு
ஏற்ப ஆடலும், பாடலும் ஒன்றாக லயமாகும் போக முறையில்
இறைவனுடன் ஒன்று பட்டாள்.
தாய்ப்பாலையே உணவாகக் கொண்டுள்ள குழந்தைகளுக்கு
நொய் வந்தால் அது நீங்க உண்ணும் மருந்தினை குழந்தையின்
குடல் தாங்காது எனக் கருதி,தாய் அம்மருந்தினை உண்டு அதன்
பயன் குழந்தைகள் பெற உதவுமாபோல் அன்னை சிவகாமி நம்
பிறவி நை நீங்க இறைவன் திருக்கூத்தினை இடைவிடாது கண்டு
அதன் பலனை நமக்களிக்கிறாள் என்பது அருளாளர்கள் கண்ட
உண்மையாகும்.

சிவகாமசுந்தரிக்கு தில்லப் பெருங்கோவிலின் வடக்குப்
பிரகாரத்தில் சிவகங்கை தீர்த்தத்திற்கு அருகே மேற்கரையில்
தனிக்கோவில் அமைந்துள்ளது.அம்பிகை நான்கு கரங்களுடன்
நிந்ற கோலத்தில், கிளி மலர் இவற்றைஏந்தி ஒரு கையைத் துடை
மேல் வைத்து மிக அழகான கோலத்தில் காட்சி அளிக்கிறாள்.

சிதம்பரம் சிவ சக்தி ஐக்ய க்ஷேத்ரம். நடராஜர் உடுக்கையை
அடிக்கும்போது முதலில் 9 தடவையும், பின் 5தடவையும் அடித்தார்.
அதாவது, நவாக்ஷரியு, பஞ்சாக்ஷரமும் இணைந்த நிலை.
இங்குள்ள சிதம்பர ரஹஸ்யத்தில் ஸ்ரீசக்ரமும், சிவசக்ரமும் இணைந்துள்ளது.
இங்குள்ள தீக்ஷிதர்கள் நவாக்ஷரியும் பஞ்சக்ஷரி உபதேசமும்
பெற்றிருக்க வேண்டும் என்ற கட்டாயம் உண்டு.

நடராஜாவின் அந்த தூக்கிய பாதமே அம்பிகையினுடையது.
அதற்கு குஞ்சிதாங்க்ரி என்ற பெயரிட்டுத் தனி வழிபாடு
அக்காலுக்கு மட்டும் உண்டு. அதுவே குஞ்சித நடராஜன்
எனக் கூறுகிறோம். இக்காலுக்கு அணியும் அலங்காரத்தினையே
நமது மஹாபெரியவா கடைசி காலத்தில் தன் சிரசில் அணிய விரும்பி
அங்கு போக விருப்பம் தெரிவித்தபோது, தில்லை தீக்ஷிதர்கள்
தாமாகவே அவரது விருப்பத்தினை இறை வழியாக உணர்ந்து
அவரிடம் கொணர்ந்து சேர்த்ததும் அதனை அவர் உவந்து தம் சிரஸில்
அணிந்ததும் நாம் யாவரும் அறிந்த ஒர் விஷயம். அதனையே
குஞ்சிதபாத சங்கரன் என்று நாம் அறிவோம். குஞ்சித பாத சங்கரன்
இருக்கும் இடத்தில் நோய்கள் அண்டாது.
.

ஸ்ரீஉமாபதி சிவாசாரியார் அவர்கள் குஞ்சிதபாதஸ்தவம் என
300ஸ்லோகங்கள் கொண்ட அருமையான நூலை இயற்றியிருக்கிறார்.
இவர் வழிபட்ட ஸ்ரீசக்ரம் அம்பிகையின் ஆலயத்தில் ஒரு புறத்தில்,
தனி அறையில் இன்றும் வழிபடப்பெறுகிறது.

இந்த சிவகாமி இறைவன் நடனத்திற்குத் தாளம் போடுவது போன்ற
அழகான விக்ரஹத்தை இன்றும் கும்பகோணம் நாகேஸ்வர ஸ்வாமி
ஆலயத்தில் காணலாம்.
திருச் சிற்றம்பலம்..
0 x

vgovindan
Posts: 1603
Joined: 07 Nov 2010, 20:01
x 56
x 112

#294 Re: Aanmeekam...

Post by vgovindan » 18 Mar 2015, 17:40

திருவண்ணாமலையில் அம்மைக்கு உண்ணாமுலையம்மன் என்று பெயர். இப்பெயரிட்டதற்குக் காரணம், சிவனுக்கும் உமைக்கும் திருமணமாகாத நிலை என்றோர் விளக்கம் கண்டேன். அது சரியாக எனக்குப்படவில்லை. வலைத்தளத்தில் தேடினேன் - கிடைக்கவில்லை.

யாரேனும் விளக்கமளிக்க இயலுமா? நன்றி.
0 x

Pratyaksham Bala
Posts: 3400
Joined: 21 May 2010, 16:57
x 136
x 97

#295 Re: Aanmeekam...

Post by Pratyaksham Bala » 18 Mar 2015, 19:11

The left part of Lord Ardhanariswara (i.e. Devi) is called Apitakuchamba (अपीतकुचाम्बा = உண்ணாமுலையம்மன்). The right portion (i.e. Shiva) is called Aruna.
In this avatar, as part of Ardhanariswara, Devi is called the "Mother with unsuckled breast".

Reference may be made to Arunachala Mahatmyam. This may be of help: http://arunachalamahatmyam.blogspot.in/ ... chala.html
0 x

vgovindan
Posts: 1603
Joined: 07 Nov 2010, 20:01
x 56
x 112

#296 Re: Aanmeekam...

Post by vgovindan » 18 Mar 2015, 19:42

pb,
Thanks. I referred to the link. A similar Tamil version also is found. But, somehow, the explanation is not very satisfactory.
0 x

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16
x 2

#297 Re: Aanmeekam...

Post by venkatakailasam » 28 Apr 2015, 10:06

அம்புப்படுக்கையில்இருந்தார்பீஷ்மர். அந்தக்காட்சியைப்பார்த்து, தர்மபுத்திரரைஅழைத்துச்சென்றார்பகவான் கிருஷ்ணர். “அணையும்நெருப்பைப்போலேஇருக்கிறார்பீஷ்மர். அவர்போனால், தர்மத்தைச்சொல்லயார்இருக்கிறார்கள்…? போ! அவர்சொல்வதைப்போய்க்கேள்” என்றுதர்மபுத்திரரைஅனுப்பினார்.

‘ஏன்பீஷ்மர்போய்விட்டால்பகவானேஇருக்கிறாரே– தர்மத்தைச்சொல்ல…?’ என்றுநமக்குக்கேட்கத்தோன்றும்.

பகவான்இருந்துபிரயோஜனமில்லை; அவரைவிளங்கச்செய்யக்கூடியமகான்கள்இருக்கணும்! இந்தஉண்மைக்குசாட்சியமாகத்தான்பகவானே பீஷ்மர்அம்புப்படுக்கையிலேஇருந்தபட
ிசொன்னஅந்தவிஷ்ணுசஹஸ்ரநாமத்தைக்கேட்டார். பலபேர்கேட்டார்கள். அவர்களுடன்அந்தவாசுதேவனேகேட்டான். அவன்சொன்னதுகீதை; கேட்பதுசஹஸ்ரநாமம். இப்படிஅவன்ஆனந்தமாய்க்கேட்டதேஅவன்பெருமை, உயர்வு.

Shared
0 x

vgovindan
Posts: 1603
Joined: 07 Nov 2010, 20:01
x 56
x 112

#298 Re: Aanmeekam...

Post by vgovindan » 28 Apr 2015, 23:23

stavyaH stava-priyaH stOtraM stutiH stOtA - vishNu Sahasra nAma 679-683
http://www.shivkumar.org/music/vishnu-s ... anings.htm
0 x

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16
x 2

#299 Re: Aanmeekam...

Post by venkatakailasam » 03 May 2015, 13:16

திருமூலர் திருமந்திரம்.......(2893)
=============================

கூறையுஞ் சோறும் குழாயகத் தெண்ணையும்
காறையும் நாணும் வளையலுங் கண்டவர்
பாறையி லுற்ற பறக்கின்ற சீலை போல்
ஆறைக் குழியில் அழுந்துகின்றாரே.----

பொருள்:
=======
கூறை எனபது,உடலைப் போர்த்திய தோல்;

சோறு என்பது சதை.(கத்தாழைக்குள் சோறு இருப்பது போல்);

குழாயகத்தெண்ணை என்பது எலும்பு நரம்புகள்,குருதி;

காறை,நாண் வளையல்-கழுத்து,இடை,கை போன்ற உடல் உறுப்புகள்.

மொத்தமாகக் குறிக்கப்படுவது "அழியும் இந்த உடல்".

இந்த உடலின் மேல் விசேஷ கவனம் செலுத்திப் போற்றிப்
பாதுகாத்து, உடலில் உள்ள "புலன்களின்" மயக்கத்தால்,
இந்த உடலுக்குள் உறைகின்ற மறை பொருளாக உள்ள
பரம்பொருளை, ஆத்ம விசாரத்தால் அறிந்து கொள்ளாது
மறப்பவர்கள், மீண்டும் பிறவிக் குழியில் வீழ்வர்;
0 x

thanjavooran
Posts: 2541
Joined: 03 Feb 2010, 04:44
x 180
x 63

#300 Re: Aanmeekam...

Post by thanjavooran » 08 May 2015, 08:20

Ashare
Ambal sannidhi
சிவன் கோயில்களில் மூன்று விதமாக அம்மன் சன்னிதியை அமைக்கலாம் என்று ஆகம் சாத்திரங்கள் கூறுகின்றன.

ஒன்று,

சிவன் சன்னிதி எந்த திசை ( கிழக்கு அல்லது மேற்கு ) நோக்கி அமைந்துள்ளதோ அந்தத் திசை நோக்கி அம்மனையும் பிரதிஷ்டை செய்வது.
அதாவது, சுவாமியும் அம்பாளும் ஒரே திசை நோக்கி காட்சி தருவர். இதை ஸமான வீஷணம் என்பர்.
கல்யாணக் கோலம் என்றும் வழக்கத்தில் இருக்கிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இந்த அமைப்பிலேயே உள்ளது.

இரண்டாவது,

சிவன் சன்னிதி கிழக்கு அல்லது மேற்கு முகமாக இருந்தாலும் அம்மன் சன்னிதி தெற்கு முகமாகவே அமைந்திருக்கும்.
இதை அனுக்கிரஹவீஷணம் என்பர்.
சுவாமியை தரிசிக்கும் முறையில் அம்மன் பிரதிஷ்டை அமைந்திருக்கும்.
சுவாமியின் அனுக்கிரகத்தைப் பெற்று நமக்கு அருள்வதாகப் பொருள். இந்தநிலை அனேகமாக எல்லா கோயில்களிலுமே உள்ளது.

முன்றாவது,

சுவாமி சன்னிதி மேற்கு நோக்கி இருந்தால் அம்மன் சன்னிதி கிழக்கு நோக்கி அமைந்திருக்கும்.
நேர் எதிராகப் பார்த்துக்கொள்ளும் நிலை.
அபிமுகவீஷணம் என்பர்.
எதிர்க்காட்சி என்றும் வழக்கத்தில் உள்ளது.
இந்த நிலை, மிக அபூர்வமானது.

திருக்கடவூர்,
காளஹஸ்தி போன்ற தலங்களில் தரிசித்து மகிழலாம். அருள்பாலிப்பதில் எந்த வேறுபாடும் கிடையாது.
மூன்றுமே ஒன்றுதான்.
0 x

Post Reply