My compositions on SAI

Post Reply
venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

My compositions on SAI

Post by venkatakailasam »

Image

1. பருத்திபுர வாசா! ஷிரடி நகர் ஈசா!
ஒன்றென்று அறிந்தேன்
என்றென்றும் தொழுவேன்….
கணநாயகன் துணையுடன்...
சிதறி ஓடும் எண்ண சுமை நீக்கி
உள்ளத்தை ஒருமுகமாக்கி
உன் நினைவை இருத்தி
வாசமிகு பாக்களை தொடுத்து...
நின் பாத கமலத்திலிருத்தி!......

2. இங்கும் அங்கும் எங்கும் நிறைந்த
ஞான ரூபனே!
துன்ப துயரகற்றும் அருளாளனே!

சாய்! நீ அறிவாய்!..
உன் அருளன்றி எனதென்று
ஏதுமில்லை என்னிடம்....
நீ ஈந்த வாக்கும் செயலுமன்றி.......

3. பரிமள வாசா
வேத பொருளே
ஓங்காரநாத ஸ்வரூபா
ஆநந்த சிவ ரூபா
ஷிரிடீஸ்வரா
பருத்தி நகர் வாசா
பண்டரிபுர நாதனும்
காஞ்ச நகர ஈசனும்
நீயே என்று உணர்ந்தேன்
சஞ்சலமகற்றிடும் தேவா
பஜனாம்ருத பிரியா..
பௌதீக,ஆன்மீகத் துன்பங்களை அகற்றுபவா
சர்வாந்தர்யாமியாகியவா
ஞான நாட்டத்தை திருப்தி செய்பவா
தீவினை நீக்கி அருளும் சாயி
நின் நாம ஸ்மரணை ஒன்றே முக்தி தந்தருளும் எனக்கு!
உள்ளும் புறமும் நின்றறுளும் சாய் நாதா
பயம் நீக்கி துணை நிற்கும் சாய் நாதா
தாயமானாய் தந்தையுமானாய்
வேங்கடவன் எனக்கு!....

4. குறை ஏது வேங்கடவன் எனக்கு?
துவாரகமயீயின் பார்வை உண்டு!
அப்பார்வையில் அருளுண்டு....
ஊடியின் துணையும் கூடவே உண்டு..
கீதைக்கு பொருளானவன்
பொருளுக்கு உருவானவன்
செய்கைக்கு காரணமானவன்
வழிக்கு துணையானவன்
மனதிர்க்கு இதமானவன்…
கமலனும் அவனே!
விடையேரும் விமலனும் அவனே!
பார்கடலில் துயிலும் அமலனும் அவனே!
வேப்ப மரத்தடியில் துயில்பவனும் அவனே!
ஏழைகளுக்கு எளியவன்!
அனுமனுக்கு உற்றவன்!
ஞானியும் அவனே யோகியும் அவனே !
பூர்ண சரணாகதியை யாசிப்பவன்
ஆண்டியையும் அரசனாக்குபவன்
அவன் பாத கமலங்களை வேண்டி
துதிப்பவர்களுக்கு!!

venkat k….

5. கண்டு கொண்டேன் வேங்கடவன் நான்
நின் திருவடியை
சிக்கென்று பற்றிகொண்டேன்
என்றென்றும் இனி நழுவ விட மாட்டேன்
இன்னல் அகற்றும் திருவடி
குறை தீர்க்கும் திருவடி
தூக்கிய திருவடி..
தன்னொப்பாரில்லா ஐயன் திருவடி..
பரம புருஷனின் மலர் திருவடி..
கமலாசனின் பாத திருவடி..
மாயை நீக்கும் ஐயனின் திருவடி...
ஆத்ம பாவத்தையளிக்கும் ஈசனின் திருவடி..
ஷிரிடி நகர வாசனின் திருவடி..
ஊடி ஈந்து தளர்ச்சியை நீக்கும் ஐயன் திருவடி..
குரு தேவனின் உய்விக்கும் தெய்வ திருவடி!!

venkat k….


6. ஷிரிடிக்கு ஓடுங்கள்
சாயியை பாருங்கள்
சாயிமயீ சாயிமயீ ஓசையை கேளுங்கள்
ஷீர்டியின் கல்லும் புல்லும் கூட
இசைக்குமே அவன் நாமத்தை
மஞ்சள் நிறமலர்கள் மாலை தாருங்கள்
சாயி ஸ்மரணை செய்யுங்கள்
அவன் லீலையை அறியுங்கள்
தூபமேற்றி தினம் பாடுங்கள்
வேப்ப மரம் ஐயன் விரும்புமிடம்
ஏழைகளின் துன்பங்கள் துடைப்பது
விரும்பும் குணம்
அவன் கர உதி அருமருந்து
நீருற்றி தீபங்கள் எரியச்செய்து
அஞ்ஞான இருள் களைந்தது
அவன் லீலை..
அணுவிலும் அணுவாய் நிற்பவன்
நோக்குமிடமெல்லாம் சாயி
பரமனும் அவனே சக்தியுமவனே
கண்ணனும் அவனே அனுமனும் அவனே
வேங்கடவன் என்னை உய்விக்கும்
சாயி நாமம் ஸ்மரணை செய்யுங்கள்
பிணிகள் தொலைந்திடும் தரித்திரம் மறைந்திடும்
துன்பங்கள் நீங்கிடும்
ஓம் சாயிராம்!

venkat k…


7. பாடும் நாவிற்கு இனியனானாய்
கேட்கும் செவிகளுக்கு அமுதமானானாய்
நோக்கும் கண்களுக்கு அழகனானாய்
தொழும் கைகளுக்கு அருள் தருபவனானாய்
எண்ணங்களுக்கு அரணானாய்
வேங்கடவன் என்
நினைவில் நின்றவனானாய்
இதயத்தில் நிறைந்தவனானாய்
பரமனே அவன் என அறியாத
மூடர்களையும் அறவணைத்து
காத்தருளும் இறைவனுமானானாய்

venkat k…

8 வேப்ப மரத்து கிளையிலே
குயில் ஒன்று கூவுதம்மா
சாயிமயீ சாயிமயீ என்னும்
ஓசையும் கூடவே கேட்குதம்மா
கேட்ட என்மேனி சிலிர்குதம்மா
என் நாவும் நாமத்தை கூடவே இசைக்குதம்மா
காருண்ய ரூபனின் முருவலும் தெரியுதம்மா
முருவலில் மனமும் மயங்கியதம்மா
அருளுரை கேட்டு வேங்கடவன் என்
சஞ்சலமும் தீர்ந்தம்மா…

venkat k…

9. கேட்பாரும் இல்லை தீர்பாருமில்லை
சொந்தமென்றும் பந்தமென்றும் யாருமில்லை
எடுப்பாரும் துடைப்பாரும் எவருமில்லை
வருவாருமில்லை அழைப்பாருமில்லை
தவிர்காதவர் எவருமில்லை
மனமுமில்லை குணமும் இல்லை
சொல்லிலும் செயலிலும் இனிமைஇல்லை
சாய்த்து கொள்ள தோளுமில்லை
ஷீரடி வாசா காஞ்சி நகர் ஈசா
வேங்கடவன் என் நிலை
நீ அறியாயோ...
அறிந்து அருள் புரியாயோ??
venkat k…

10. படுத்துறங்க உன் மடி வேண்டும்,
அம்மா! கசியும் கண்ணீரை துடைக்க உன்
கைகளும் வேண்டும்..
நொந்து வந்தேன்! அம்மா!
உறக்கமும் இல்லை
மன இறுக்கமும் தணியவில்லை!
ஐயனும் கேட்கவில்லை
அம்மையும் பார்க்கவில்லை
தனயனும் மறந்து விட்டான்!
புகலிடம் ஏது? வேங்கடவன் நான்சரணடைந்தேன் உன்னையேசாயிமா! சாயிமா!
படுத்துறங்க உன் மடி வேண்டும், சாயிமா!
venkat k

11. அடக்க முடியுமோ காணும் ஆவலை?
அளக்கமுடியுமா உன் கருணையை?
மறக்கமுடியுமா உன் லீலைகளை?
தவிர்க்க முடியுமா நீ விரும்புவதை?
நான் சரண சரண மென்று
பல்லவி பாடலுற்றேன்....
வேங்கடவன் என்னை காக்கும்
தருணம் இதுவே!
காரணம் யாதென்று நீயே அறிவாய்!
கருணா சாகரனே! சச்சிதானந்தா!
மதி வதனா! பாஸ்கரா!பாண்டு ரங்க விட்டலாபரம தயாளா!
சரணம்! சரணம்! சரணம்!


12 நீல கடல் அலைமேலே
துயில் பயிலும் அரவிந்தன்
சோலை சூழ் நதி கரையில்
அரவமீது துயில் கொண்டு
அருள் புரிய வந் தான்.. அவன்
முக்காலமும் உணர்ந்தவன்
வேதம் தெரிந்தவன்
வறியவர் துன்பம் துடைப்பவன்
எளிமை உருவானவன்
கருணை உடையவன்
தெளிவு பெற்றவன்
ஸத்யமான வழி காட்டுபவன்
குறும்பு மிக்கவன்..
தர்மத்தை காப்பவன்..
தரணி போற்றுபவன்மங்கும் சனியால் வருந்துமவேங்கடவன் என்னை
வேண்டுமுன் காத்தருள்வான்..
venkat k



13. கிழக்கிலும் மேற்கிலும்
தெற்கிலும் வடக்கிலும்
மேலும் கீழும்
பின்னும்முன்னும்
தூரமுமாய் சமீபமுமாய்
பார்க்கும் இடமெல்லாம்
நின் ஆனந்த ஸ்வரூபமே!
தத்துவ சொருபா!
ஞான தேசிகா!
உன்னையே துணையென்று
நம்பிய வேங்கடவன் என்னை காப்பது
உனக்கு அருமையோ? அன்றி சிறுமையோ?
நெடுநாளாய் உன்னை நேசித்து
யாசிக்கும் என்நிலை நீ அறியாததா?
எம பாசம் வருமுன்னேபாசக் கடலில் மூழ்காமல்
நின் கமல பாதம் தந்தருளுவாய்!!
venkat k


14. ஆருமோ ஆவல்
நின் பாத தரிசனம் நாடும்
என் குறை தீருமோ?
சலித்தது என் மனம்
நகைப்பது உன் குணமோ?
பக்தி புரிந்து ஆனந்தக் கடலாடி
பாவங்களை தொலைத்து
சித்தம் மகிழ்ந்து
வேங்கடவன் நான்
உன் திருவடி அடைந்திடும்
நாள் என்நாளோ?
venkat k


15. சஞ்சலம் தீர்தருள்வாய்
அடிமை என் சஞ்சலம் தீர்தருள்வாய்
அடைகலம் தந்தருள்வாய்
ஓங்கார பரம் பொருளே
மன நோய் தீர்த்தளுவாய்
செங்கமல மலர் பாதா!
புரமெரித்தோன் சேயே!
வேங்கடவன் என்னை ஆண்டருள்புரிவாய்!
சிவஞான மெய் பொருளே!
மணங்கமழ் மலர் பாதா!
அருள் வேண்டி அலறும்
ஏழை என்னை ஏற்றருள்
தயாபரனே ஞானச் செழுஞ்சுடரே!
வேத வேதாந்த ரஷகா!!
venkat k

16. நீயே ஆதாரமென்று வேங்கடவன் நான்
உன்னை பாடினேன்
ஆடினேன் தேடினேன்
சத் குருவே சாயி
கருணை நிலவே
திருவடி தேடி வந்தேன்
வாடிய என் உள்ளத்தை
தெளிய வைத்தாய்
மலர வைத்தாய்!
அறிந்து கொண்டேன்!
அகண்ட ஆனந்த ஸ்வரூபனே!
புவன சுந்தரா!
இளவேனில் நிலவிலே
வேப்பமரத்த டியிலே
கல்லின் மடியிலே
அஞ்ஞான பயத்தை நீக்க
ஞான வழியை காட்டியவா
“உன்னுள் என்னை பார்
என்னுள் நீ தெரிவாய்”
venkat k


17. புகலிடம் வேறில்லை குருநாதா
எங்கு நான் செல்வேன் சாய் நாதா!
என்னை நீயும் வெறுத்து தள்ளினால்!
நீயே கதி என்று உன்னை நாடினேன்!
கதறினேன் கண்ணீரில் பாட்டிசைத்தேன்!
கூவி அழைத்தேன் ஏனென்று கேட்க வில்லை!
பரம்பொருளே! பொருளும் புகழும் நாடவில்லை!
உன் அருள் ஒன்றே நாடி வந்தேன்!
venkat k


18 குறை தீர்ப்பான் சாயி நாதன்
நிறை உள்ளம் அளிப்பான்
மறை ஓதும் அடியவரின்
குறை தீர்ப்பான் புண்ய ஸ்வூரபன்!
சாகர சாயி வேங்கடவன்
என் மனநோய் தீர்ப்பான்
முகம் மலரும் மோகன சிரிப்பு
கண்டால் மனக்கவலை ஓடிடும்
சோகங்கள் தீர்ந்திடும் !!
நோய் தீர்க்கும் தன்வன்திரி !!
கை தூக்கி தொழுதால்
கை கொடுத்து உதவுவான்
வேண்டி நின்றால்
ஏற்றம் தருவான்!
வரியவர் குறை தீர்க்கும்
அவனே தினகரன், பாஸ்கரன்,
ஞான பிரகாசன்…
சாயி சங்கரன்!!!

19. யாரிடம் மனகுறையை புகல்வேன்
நீயன்றி புகலிடம் வேறேது?
சிதறி ஓடும் எண்ண சுமை நீக்கி
நினைவை யாவையும்
நின் பாத கமலத்திலிருத்தி!......
பயம் நீக்கி துணை நிற்க
வேண்டி நின்றேன் சாய் நாதா!
உன் பார்வையில் அருளுண்டு....
ஊடியின் துணையும் கூடவே உண்டு...
பயந்த வழிக்கு துணையானவன்
மனதிற்கு இதமானவன் நீ
பிணிகள் தொலைந்திட தரித்திரம் மறைந்திட
வேங்கடவன் என்னை உய்விக்கும்
சாயி நாமம் ஸ்மரணை எப்பொழுதும் செய்வேன்
துன்பங்கள் நீங்கிடும்
ஓம் சாயிராம்!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: My compositions on SAI

Post by venkatakailasam »

20. சாயி முருகா சாயி முருகா என்று கூறு
தொல்லைகள் தீர்ந்திடும் பாரு..
வேங்கடவன் நான் தொழும்
சாயி முருகா சாயி முருகா என்று கூறு
துயரங்கள் தீர்ந்திடும்
கவலைகள் மறைந்திடும்
செல்வம் குவிந்திடும்
கலைமகள் அருளும் சேர்ந்திடும்
பகையும் நீங்கிடும்
பிரிந்தவர் கூடுவர்
மறையோதும் பெரியோர் நட்பும் கிட்டும்
சாயி முருகா சாயி முருகா என்று கூறு....
venkat k

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: My compositions on SAI

Post by venkatakailasam »

21. கருமம் செய்ய யாருமில்லை
என கதராதே மனமே...
ஊழ் வினையையும் செய்யும்
வினையையும் இப்பிறவியில்
கழித்த பின் கருமம் செய்ய
மற்றவர் எதற்கு?
ஐயன் திருவடிகளுண்டு
வேங்கடவன் நான்
பற்றி கொள்ள
அவன் அருளுண்டு
தெருளமுண்டு
மருள வேண்டாம் மனமே!!
venkat k

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: My compositions on SAI

Post by venkatakailasam »

22. தாயாகி வந்தான்
தாயாகி காக்கின்ற தன்மையுடன்....
பாக்கள் புனையும் எண்ணமதை
ஈந்த என் தந்தையவன்
இசை பாடும் வல்லமை தந்திலன்...
பொன்னும் பொருளும் தனி வீடும் தந்திலன்
வல் வினைகள் நீக்கவே
வேங்கடவன் என்னுள்
மெய் பொருளை நாடும் மனம் தந்தான்....
நல்லாரையும் பொல்லாரையும்
மனமகிழ்ந்து ஏற்கும் பண்பினையும் தந்தான்..
சிறுமையை மன்னித்தருளி
ஏற்கும் பெருமையையும் என்னுள் தந்தருளினான்
விண்ணவரும் மண்ணவரும்
மகிழ்ந்து தொழும் எங்கள் ஈசனை
என் ஐயனை அன்பு வேட்கை கொண்ட அனைவரும்
ஏற்றி துதித்தால் தாங்கொண்ணா
பிணியும் தீரும் வறுமையும் நீங்கும்
சோகம் நீக்கி சுகமளிப்பான்…
venkat k

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: My compositions on SAI

Post by venkatakailasam »

Image

ஆதரவு அற்று வறுமையில் வாடி
எளிமையிலும் துன்பத்திலும்
ஒன்றாக ஒருவரேயாகி துன்புரும்
வரியவரை கண்டு மனம் நெகிழ்ந்து
துயறுறாமல் உண்டு உறங்கி களித்து
மகிழ்வுரும்
நற்குணமற்ற சிறியவருடன் கூட்டு
என்ன இனி மனமே!
இதயம் கசிந்துருகி
ஆதரவற்றருக்கும் ஆதரவளிக்கும்
அண்ணல் அவனை விழித்தால்
கொடுத்தருள்வான் குறைதீர்ப்பான்
வறியவரை ஆதரிப்பான்…
கலங்காதே நெஞ்சே!!
venkat k

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: My compositions on SAI

Post by venkatakailasam »

Image

இங்கே விரலை தந்தவன்
அங்கே நல் உருவம் தந்திலன்
விதைத்தவன் வேறாகினும்
கொடுத்தவன் நீ அன்றோ!
அபயம் என்றுனை அடைந்தேன்..
உன் புகழ் அறிந்து...
குறை அகற்றி நிம்மதி தரவேண்டும்..
ஆனந்தா! பரமானந்தா!
குறை தீர்க்கும் குணசீலா!
உன்னையன்றி வேறோர்
தெய்வம் உண்டோ !
கருணை ஒளி வீசும்
கருணாகரா!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: My compositions on SAI

Post by venkatakailasam »

சக்தி வடிவமே முருகனே!
வேத ரூபனே காஞ்சி நாதனே!
சாந்த சுவரூபமே சாயிநாதனே!
மன்னவனுக்கு மன்னவன்
அடியவனுக்கு அடியவன்
வரியவருக்கு எளியவன்
தொண்டனுக்கு தொண்டன்
ஆனந்த ஸ்வரூபன்
பாற்கடல் துயிலும் பரமன்
பிட்டுக்கு மண் சுமந்து கழி அடிபட்டு
நரியையும் பரியாக்கிய பெம்மான்!
நின் நாமம் போற்றி மதி மயங்கி
பாருய்ய ஆடுவார் பாடுவார்
பூமலர் தூவி நின் பாதம் பணிந்து!!
venkat k

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: My compositions on SAI

Post by venkatakailasam »

25. திருவடி தேடி வந்தேன்...
நீயே கதி என உன்னை நாடினேன்!
பயம் நீக்கி துணை நிற்க
வேண்டி நின்றேன்!
பராபரமே! சிவரூபமே!
பார்த்தாலும் நினைத்தாலுமே
துயரங்கள் தீர்திடும்
கவலைகள் நீக்கிடும்
என்னை உய்விக்கும்
ஆனந்த ஸ்வரூபனே!
புவன சுந்தரனனே!
தயாபரனே ஞானச் செழுஞ்சுடரே!
வேத வேதாந்த ரஷகா!!
சரணம்! சரணம்!!
venkat k

26. நின்முகத்தில் ஆறுமுகனை கண்டேன்
ஆறுமுகத்தில் ஒருமுகம் நின் முகமாக இருப்பது கண்டேன்
மங்கையர் இருவரும் மகிழ்ந்து இருக்க கண்டேன்
வேலும் மயிலும் கூடவே இருக்க கண்டேன்
கோழியும் கொடியும் பறக்க கண்டேன்!!

நின்முகத்தில் முருகனை கண்டேன்
அண்ணனும் அய்யனும் அம்மையும்
கூடவே இருக்க கண்டேன்!
பிறையும் கங்கையும்
சூலமும் உடுக்கையும்
இருக்க கண்டேன்!!

நின்முகத்தில் காஞ்சி நாதனை கண்டேன்!
கருணை பொழியும்
அருள் முகத்தினை கண்டேன்!
குறை தீர்க்கும் குணசீலனை கண்டேன்
சத் குண தயாளானை கண்டேன் !!

சாய் நாதா! நந்தா விளக்கே! காருண்ய குருவே!
உன் பாத கமலமன்றி துணை வேறேது
வேங்கடவன் எனக்கு!!
venkat k

27. வேங்கடவன் என் கருத்தினில்
நிலைத்து நிற்கும் ஷிரிடி வாசா!
கரை ஏறவேணும் என் ஐயனே!
கயிலை நாதனே! பரம்பொருளே!
அபய கரம் தந்து என்னை ஆதரி!
சேவடியே துணை என நம்பனேன்!
ராமதாசா! அஞ்சனை பாலா!
நீ அறியாததா என் மனம்!
நின் எழில் திருவை கண்டதும்
உன் அருளை எண்ணி மகிழ்ந்ததும் கனவா?
பாதகம் ஏதும் நானறியேன்…
நாக ஸயனா! ஸ்யாம ஸுந்தரா!
அஞ்சேல் என்றணைதருள்வாய்!
venkat k

28. இந்த தாமதம் நினக்கு தகுமோ?
நின் பாதாரவிந்தமே துணை
என நிதமொரு தனமேனும்
காண்பதெப்போ என்று ஏங்கும்
வேங்கடவன் எனக்கு கருணை புரிய
இந்த தாமதம் நினக்கு தகுமோ...
என் மனதை அலையவிடுதல் ஞாயமா?
பட்டடிவைத்த குருவே! பாமரரின் தோழா!
நொந்தவருக்கு சாந்தி தரும் நந்தா!
உள்ளம் ஒளிர்வுற வாழ்வு மணமுற
வேதமிசைத்திடும் குருநாதா!
நீயே அம்மையும் அப்பனும்
உடல் திடமும் உள்ளொளியும்
திரு நாமம் பகரும் குணமும்
கடலில் கலக்கும் நதி போல
நின் கமல தாழினை அடையும்
பாக்யம் தந்தருளுவாய்!!
venkat k

29. வழி காட்டுவான் என் ஐயன்
அற வழி நடக்கும் அடியவர்க்கு
விழித்திருந்தே வழி காட்டும் தெய்வமவன்
பாலும் பழமும் தெளிதேனும் ஏற்பதில்லை
அருசுவை உண்டியை நாடுவதில்லை
அன்புடன் துளசி மாலை அணிவித்தால்
வளமுடன் வாழும் வழி காட்டுவான்
பற்றட்டவர் பற்றும்
ஐயனின் திருவடிகள்
வழி வகுத்திடும் ஏற்றம் தந்திடும்
பக்தியுடன் முக்தியை நாடினால்
சித்தி தந்து மகிழ்வான்....
venkat k


30. இன்னமும் என்ன அறுதுயில்...தயாபரா!
கூவியழைக்கும் வேங்கடவன்
என் குரலுக்கு செவி சாய்க்க
தாமதம் ஏன் ஷிரிடீசா..
உறக்கமா அன்றி தயக்கமா?
இரங்காத மனமா
அன்றி நீ செய்யும் மாயமா
உன் கருணைக்கு ஏதும் இணை ஆகுமோ
சதா உன்னையே துதித்து
உன் நாமமே ஜபித்து
நினைத்துருகும் என்னை
கைவிடுதல் அழகா?
நீயன்றி வேறு துணையேது எனக்கு??
venkat k


31. கேட்க கேட்க உருகுமே வேங்கடவன் என் மனம்
சொல்ல சொல்ல இனிக்குமே என் நா
பார்க்க பார்க்க குளிருமே கண்கள்
நினைக்க நினைக்க சிலிர்க்குமே உள்ளம்
செல்ல செல்ல விழையுமே கால்கள்
தொழ தொழ நாடுமே கைகள்
காஞ்சி நகர வாசா! ஷிரிடீசா!
பாவங்களை நீக்கிடுவாய்!
அல்லல்கள் தீர்திடுவாய் !
venkat k.

32. பாத கமலங்களில் ஓய்வுர வேண்டிய
வேங்கடவன் எனக்கு
வரம் தர மறந்தது ஏனோ?
இது என்ன சோதனையோ.. ராஜீவ நயனா
உள்ளம் இரங்கவில்லையா.. சாரங்கா
அம்மையும் அப்பனும் தனயனும்
மாமனும் மாமியும் மற்றும் யாவரும்
ஒன்றேயாகி அத்துடன்
ஐந்தும் ஏழும் 'ஓம்' என்னும்
ஒன்றாகி இவையும் அவையும்
'சாய்' என்னும் இரண்டெழுத்து மந்தரமாகி
இருகையிலும் நடகையிலும்
உண்ணும் போதும் எண்ணும் போதும்
உறுங்கும் போதும் எப்பொழுதும்
அதையே மனதினால் ஜபித்து
வாயினால் துதித்து மகிழும்
என்னை காத்தருள ஏன் இந்த தயக்கம்...
போதும் இந்த சோதனை...
venkat k

33. திருவடி தேடி வந்தேன்..
நீயே கதி என்று உன்னை நாடினேன்!
வழி கிடைக்குமா....சாயி நாதா!
உன்னை அடையும் வழி தெரியுமா?
உன் விழியின் அருளுண்டு..
வழிக்கு துணையுமுண்டு..
என் சொல்லுக்கு பொருளுமுண்டு
எனது எல்லாம் நீயன்றி வேறில்லை
பயம் நீக்குவாய் துணை நிற்பாய்..

தாய் துரத்த வட்டமிட்டு ஓடிய
கள்ள கண்ணன் அவன்..மாதவன்
கட்ட முடியா அவனை
கட்டி விட்டவளை
கெஞ்சி, கொஞ்சி மயக்கினவன் அவன்..
கட்டவிழ்ந்த யாதவன்..
அடியவர்கள் இல்லம் தேடி
ஓடி வந்து காத்தருளுவான்.
சாயிமா! சாயிமா!
எனகூக்குரல் இட்டு அழைத்தால்...
venkat k
on Sai's Birth day on 21-11-2013

34. யாரிடம் மனகுறையை புகல்வேன்
நீயன்றி புகலிடம் வேறேது?
சிதறி ஓடும் எண்ண சுமை நீக்கி
நினைவை யாவையும்
நின் பாத கமலத்திலிருத்தி!......
பயம் நீக்கி துணை நிற்க
வேண்டி நின்றேன் சாய் நாதா!
உன் பார்வையில் அருளுண்டு....
ஊடியின் துணையும் கூடவே உண்டு...
பயந்த வழிக்கு துணையானவன்
மனதிற்கு இதமானவன் நீ
பிணிகள் தொலைந்திட தரித்திரம் மறைந்திட
வேங்கடவன் என்னை உய்விக்கும்
சாயி நாமம் ஸ்மரணை எப்பொழுதும் செய்வேன்
துன்பங்கள் நீங்கிடும்
ஓம் சாயிராம்!
venkat k

35. My veins throb
While my lips chatter thy name..
And also when my eyes see thine divine form..
And when I could smell thy fragrance…
And while hearing chants of Sai…Sai..
While hands pleasured in spraying yellow flowers on thy feet.
With throbbing veins, Legs moves towards you….

Sai…Sai.. Sai…Sai.. Sai…Sai.. Sai…Sai.. Sai…Sai.. Sai…Sai..

venkat k

36. படுத்துறங்க உன் மடி வேண்டும்,
அம்மா! கசியும் கண்ணீரை துடைக்க உன்
கைகளும் வேண்டும்..
நொந்து வந்தேன்! அம்மா!
உறக்கமும் இல்லை
மன இறுக்கமும் தணியவில்லை!
ஐயனும் கேட்கவில்லை
அம்மையும் பார்க்கவில்லை
தனயனும் மறந்து விட்டான்!
புகலிடம் ஏது? வேங்கடவன் நான்சரணடைந்தேன் உன்னையேசாயிமா! சாயிமா!
படுத்துறங்க உன் மடி வேண்டும், சாயிமா!
venkat k

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: My compositions on SAI

Post by venkatakailasam »

37. அடக்க முடியுமோ காணும் ஆவலை?
அளக்கமுடியுமா உன் கருணையை?
மறக்கமுடியுமா உன் லீலைகளை?
தவிர்க்க முடியுமா நீ விரும்புவதை?
நான் சரண சரண மென்று
பல்லவி பாடலுற்றேன்....
வேங்கடவன் என்னை காக்கும்
தருணம் இதுவே!
காரணம் யாதென்று நீயே அறிவாய்!
கருணா சாகரனே! சச்சிதானந்தா!
மதி வதனா! பாஸ்கரா!பாண்டு ரங்க விட்டலாபரம தயாளா!
சரணம்! சரணம்! சரணம்!
venkat k

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: My compositions on SAI

Post by venkatakailasam »

Image

Sri Shirdi Sai Seva Samithi R

MAHA SAMADHI

The 15th of October 1918 around 2:30 pm was the fateful day for the village of Shirdi. For in the heavy hours of the noon. The beloved master suddenly breathed his last. Quietly and unobtrusively. Baba gave up his body. And let his head fall gently on the shoulders of a near disciple.in his life time as human baba said many a times that he is bounded by human form but after Maha Samadhi baba regained his infinite form rech out to all bhakts in all directions.
The great Avatar of love and compassion gave up his body so that his spirit may be resurrected in the heart of thousands of his ever growing bhaktas.

||☆ || Om Sai Ram || ☆||

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: My compositions on SAI

Post by venkatakailasam »

Image

The nature of human beings is Love (prema). You cannot survive even for a moment, when deprived of Love. It is the very breath of your life. When the six vices, to which you were attached for so long, disappear, Love will be the only occupant of your heart; but Love has to find an object, a loved one. It cannot be alone. Direct your heart full of love towards the dark-blue Divine Child, the charming Lord, who is the Embodiment of Love, Purity, Service, Sacrifice and Selflessness. Then there will be no scope for any other attachment to grow. Let this love for the Lord, step-by-step become deeper, purer and more self-denying; until at last, there is no other need for thought and the individual is merged in the Universal. When Vaasudeva, the Lord, enters the heart of man, demons have no longer a place therein. Darkness and light do not co-exist; Light removes every inch of darkness.
- Bhagavatha Vahini, Ch 1, 'The Bhagavatha'.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: My compositions on SAI

Post by venkatakailasam »

Image

ஸாயி அந்தாதி

குருநாதன் புகழ் பாடும் அந்தாதி புனைந்தேன்
ஆனை முகத்தோன் தாள் வணங்கி!
இன்னல் களையும் ஸாயிநாதனை வேண்டி!
ஈகை குணம் என்னுள் கனிய! -1-

கனிந்து ஈரமுடன் நெஞ்சினில் உறையும்!
சிந்தையில் நிற்கும் குணநாதா! மங்கள விநாயகனே!
ஜோதிசுவரூபா! என் நினைவில் கனிந்த தயாபரா!
கரும வினை தீர்த்தருளும் குருநாதா! ஸாயிநாதா! -2-

ஸாயி..தத்வமறியாமல் இருந்தேன்
அங்கும் இங்கும் ஜகமெங்கும்
மனத்திற்கு உகந்த நிம்மதியை
தேடித்தேடி அலைந்தேன்.. -3-

அலைந்து அலைந்து களைத்தேன்!
ஊழ் வினையை நீக்குபவன் நீயே என அறியாது!
காற்றும் கனலும் புனலும் மண்ணும் விண்ணும் நீயே!
மறை ஓதும் மறையவனும் நீயே! -4-

மறையவனை உன்னுள் தேடினால்
தன்னுள் உன்னை காட்டி அருள்வான்!
சரணமடைந்தார் குற்றமெல்லாம்
பொருத்தருளுவான் மெய் ஞானமருள்வான்!!-5-

மெய் ஞானம் வேண்டி நின்றேன்! ஞான வினோதா!
பச்சை நிற மறுதோன்றி இலையினுள்
ஒளிந்திருக்கும் சிவப்பு நிறமும்
பூவுடன் கலந்த மணமும் நீ -6-

மணக்கும் உன் தாள் பணிய
நான் ஓடி ஓடி வந்தேன்! உன் நாமம் செப்பிடவே!
சதா சதாசிவமென்று நின் நாமம் உறைக்கும் நாவை
தந்தருள்வாய் ஜகத் குருவே ! -7-

ஜகத் குருவே என் மன களிற்றின் மதத்தை நீக்குவாய்!
இச்சை கொண்டேன் நானே பிச்சை கேட்க!
சித்தம் மகிழ்ந்திட கரும வினை தீர்த்தருள்
நல்குவாய் சீலம் நிறைந்த சிந்தனையை! -8-

சிந்தனையில் நின்றவனை
யாரோ என்றெண்ணாமலே
நாளும் துதித்து மகிழ்ந்தட வேண்டும்
பாசமகற்றும் பரமனவன்! -9-

பரமா புருஷா! கருணா சாகரா!
இசை தரும் சுவையை ஊட்டமாட்டாயா?
ஒளிரும் மணியாகி அருளுக்கு உருவாகி நின்ற
திருவடியை காட்ட மாட்டாயா? -10-

காட்டுவாய் இடர் களையும்
கைலாசநாதன் தன் பேரருளை!
அஞ்ஞானமகற்றி நீயே நானெண்ணும்
உணர்வை என்னுள் கூட்டிடுவாய் ! -11-

கூட்டிடுவான் புவி ரத்ன கருணாகரன்!
அருளை காட்டிடுவான்!
அரவிந்தம் அரும்பும் தாளை
தொழுதேத்துபவர்க்கு! -12-

தொழுது பவள பாதம் பிடித்தால்
மார்கம் காட்டிடுவான் கமல கண்ணன்!
சிக்கல்களை நீக்கும் பரம்பொருள்!
புகலிடம் அவனின்றி வேறில்லை! -13-

வேறில்லை அவனியில் உய்ய
அவன் அருளன்றி! வேறேது தெய்வம்!
அவன் துணையின்றி கதி வேறில்லை!
காக்கும் உபாசனா தெய்வம்! -14-

தெய்வமே! சதுர்மறைகளோதும் பரமகுருவே!சரணம்
நெஞ்சம் நினைத்துனை நாட
தஞ்சம் என வந்த வறியவருக்கு
அவர் மீண்டிட வழி காட்டும் ஸாயி! -15-

ஸாயி! வழி தெரியாத பாதையிலே
வழி காட்டியாய் நிற்பது
உன் அருள் முகம் ஒன்றே!
வேங்கடவன் என்னை அலற விடலாகுமா? -16-

அலற விடலாகுமா அடியேனை!
நான் செய்த பாபமா!
அன்றி, தெய்வங்கள் கொண்ட கோபமா!
என்னை காக்கும் தருணம் இதுவே! -17-

தருணம் இது அன்றி வேறில்லை
ஊழ் வினை தீர செய் வினை அகல!
வெந்த மன புண்ணை ஆற்ற
உன் அருள் மருந்து வேண்டும்! -18-

மருந்து வேண்டி நின்றேன்!
விழியில் வழியும் நீரை துடைக்க கைகள் வேண்டும்!
ஓலமிடும் மனதிற்கு ஆருதலளிக்க புன்னகை வேண்டும்!
பற்றிகொள்ள உன் கமல பாதங்கள் வேண்டும்! -19-

கமல பாதங்கள் வேண்டும்!
பற்றட்டவர் பற்றும் மணக்கும் மலர் பாதங்கள்!
விழியால் அபயமளிக்கும் ஐயனின் பாதங்கள்!
அறவழி கூறி அருள்நெறி காட்டிடும் ஸாயி! -20-

ஸாயி! மன ஊனத்துடன் வாழ்ந்து வந்தேன்
ஊனத்தை நீக்கி உன்னை அறிய வைத்தாய்
மன சுமையை நீக்கும் அருளாளன் நீ
யாவர்க்கும் எளியன், நிர்மலன்! -21-

நிர்மலமான முகமுடையான்!
ஆதரவு அற்றவரை ஆதரிக்கும் அன்னை!
ஊழ்வினை நீக்கியருளும் அம்மையும் அவரே!
அவரிருக்க பயமேன் ! -22-

பயமொன்றில்லை பவழ பாதம் தொழுபவற்கு!
பணி நாடி வருபவர்க்கும்
பிணி நீங்க வேண்டி வருபவர்க்கும்
இடர் களையும் காருண்ய ரூபன்! -23-

காருண்ய ரூபன்!கல்யாணரூபன்!
காஞ்சனன்! முக்காலமுணர்ந்த பரமன்!
நாடி சென்று காத்திடும் ஓங்காரரூபன்
சனாதன தருமம் காக்கும் ஸாயி வெங்கடேசன்! -24-

வெங்கடவா! கஸ்துரி கந்த மந்தஹாச வதனா!
முரளிதர கோபாலா! துளசீஹார ஷ்யாமளா!
பங்கஜ முக ரங்கபுர வாசா!
பாண்டுரங்க விட்டாலா! -25-

விட்டாலா! விஜய விட்டாலா!
சேஷ சயனா!ஷீரடி நகர நாயகா!
மௌலீசா!ஆதாரம் நீயே என்று நித்தம் உன் நாமம்
துதித்திடும் அடியேனை காத்திடுவாய்! -26-

காத்திடுவாய்! கனகசபேசா!
நடனமாடும் நடராஜா!
அறிவின் வடிவமே! ஆநந்த கூத்தனே!
இசை வடிவமே! ராகமும் பாவமுமானவனே! -27-

பாவமும், சுருதியுடன் கூடிய லயமும் இணைந்து
பக்தியுடன் இசைத்தால் எழும் நாதமே ஸாயி!
நாதத்திலிருந்து எழும் வேதமும்
வேதத்தில் துளிரும் ஞானமும் ஸாயி! -28-

ஸாயிநாத தியானம் மன ஆட்டத்தை நசுக்கும்!
மனமலம் நீக்கும் 'நான்'என்னும் அகந்தை அழியும்
பற்றை துறக்க, உத்தம குணம் நிறைய
ஸாயி நாமம் ஓயாமல் இசை! -29-

அகாரமும் உகாரமும் மகாரமும்
ஒன்றாகி இணைந்து ஓங்காரமாகி
அகங்காரம் அழித்து என்னுள்
இடம் கொண்டான் சத்குருநாதன்!! -30-
venkat k

Post Reply