Tit bits in Tamil

Post Reply
venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16
x 2

#1 Tit bits in Tamil

Post by venkatakailasam » 06 Dec 2013, 19:49

இலவசம் or ஓசி என்ற சொல் எப்படி வந்தது ??

பிரிட்டிஷ்க்காரர்கள் இந்தியாவை ஆண்டபோது அரசாங்க அலுவலக கடிதங்கள் மற்றும் அரசு சார்பில் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பள மற்றும் தகவல் கடிதங்களுக்கு போஸ்ட் ஆபீஸ் ஸ்டாம்பு ஓட்டுவதில்லை அதற்கு பதிலாக o.c
(offce cover) என்று முத்திரை வைத்து விடுவார்கள்.

ஸ்டாம்பு செலவில்லாமல் ஒசியாக கடிதங்கள் அலுவலக ஊழியர்களுக்கு வருவதை ஓசியில் வந்தவை என்று குறிப்பிட ஆரம்பித்து அதுவே பின்னாளில் இலவசத்தின் அடையாளமாக நிலைத்து விட்டது...
0 x

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16
x 2

#2 Re: Tit bits in Tamil

Post by venkatakailasam » 06 Dec 2013, 21:11

Image

நினைவிருக்கிறதா..? 1984-டிசம்பர் 3-ம் தேதி...!!! போபால் ரயில்வே ஸ்டேஷனில் 'துருவே' என்ற ஸ்டேஷன் மாஸ்டருக்கு இரவு நேரப் பணி. போபால் ஸ்டேஷன் வழியாக லக்னோ வில் இருந்து மும்பை செல்லும் ரயிலுக்கு சிக்னல் க்ளியரன்ஸ் கொடுத்துவிட்டு வெளியே வந்தார். அவரால் காற்றில் ஏதோ வித்தியாசத்தை உணர முடிந்தது. அவசர அவசரமாக சிக்னல் அறைக்கு ஓடினார். எப்படியாவது லக்னோ டு மும்பை ரயிலைத் தடுத்துவிடுவதுதான் அவரது நோக்கம். ஆனால், அந்த ரயில் ஏற்கெனவே கிளம்பிவிட்டது. துருவேயால் ஒன்றும் செய்ய முடியவில்லை. லக்னோ-மும்பை ரயில் வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகள் எல்லாம் விஷ வாயுவைத் தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தார்கள். ஓடியவர்கள் இன்னும் சீக்கிரம் இறந்தார்கள். கொஞ்ச நேரத்தில் போபால் ரயில் நிலையத்தில் 191 பிணங்கள்கிடந்தன. அந்தக் காட்சி துருவேயை நிலைகுலையவைத்தது. பதற்றத்தோடு சிக்னல் அறைக்கு ஓடினார். அங்கு அவருக்குக் கீழ் பணிபுரியும் சிக்னல் மேன் வாயில் ரத்தம் வழிய செத்துக்கிடந்தார். அவரை ஓரமாக நகர்த்திப்போட்டுவிட்டு, 'எந்த ரயிலும் போபால் வழியே வந்துவிட வேண்டாம்' என்று தகவல் அனுப்பத் தொடங்கினார். அதையும் மீறி வரும் ரயில்கள் ஜன்னலை மூடிக்கொண்டு போபால் ஸ்டேஷனில் நிற்காமல் வேகமாகப் போய்விடுமாறு அறிவுறுத்தினார். மூக்கிலும் வாயிலும் வழிந்த ரத்தத்தைத் துடைத்துக்கொண்டு, இரவு முழுவதும் விழித்திருந்து வேலை பார்த்தார். அந்த இரவு விடிந்தது. அடுத்த நாள் சிக்னல் அறையைத் திறந்தபோது, ஸ்டேஷன் மாஸ்டர் துருவே வாயில் ரத்தம் வழிந்த நிலை யில் சிக்னல் அனுப்பும் கருவியை ஒரு கையால் பிடித்தபடி செத்துக்கிடந்தார். துருவே மட்டும் இல்லை எனில், போபால் விஷ வாயுக் கசிவின் மரண எண்ணிக்கை இன்னும் சில ஆயிரங்கள் கூடியிருக்கும். ஆனால், போபால் நகரத்தில் விஷவாயு கசிந்த அந்த இரவில் மாநில முதல்வர் அர்ஜுன் சிங், நகரில் இருந்து 14 கி.மீ ஓடோடிச் சென்று தப்பித்தார். ’துருவே’ போன்றவர்களின் தியாகம் ஏனோ அங்கீகரிக்கப்படுவதுமில்லை,ஞாபகம் இருப்பதும் இல்லை. -ஆனந்த விகடன் இதழிலிருந்து....
0 x

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36
x 3

#3 Re: Tit bits in Tamil

Post by cmlover » 07 Dec 2013, 02:09

He should have been awarded "vIr chakra" or Bharat Ratna..
Any more details about him?
0 x

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16
x 2

#4 Re: Tit bits in Tamil

Post by venkatakailasam » 07 Dec 2013, 13:33

In a lighter mood...

FUN fun FUN

பெண் அப்பா நான் லவ் பண்ணறேன்..
அப்பா : பையன் எந்த ஊரு..
பெண்: UK ல இருக்கான்...
அப்பா : நீ இந்தியால இருக்க, அவன் அங்கே.. எப்படி?

பெண் : FACE BOOK மூலமா நண்பர்கள் ஆனோம் ...

WEBSITE மூலமா நானும் அவனும் டேட்டிங் கூட போய் இருக்கோம்

WHATSAPP ல ரொம்ப நாளா சாட் பண்ணறோம்...

நாங்க லவ் I ஷேர் பண்ணினது SKYPE ல,

அப்புறும் VIBER மூலமா கணவன் மனைவியா வாழறோம் ... அப்பா, எங்களுக்கு உங்க ஆசிர்வாதம் வேண்டும் ...

அப்பா :

நிஜமாவா!!!! அப்பறம் என்ன TWITTER மூலமா கல்யாணம் பண்ணிக்கோங்க...

ONLINEல ஜாலியா இருங்க...
E - BAY
2 ல குழந்தைகளை வாங்கிக்கோங்க...

G MAIL மூலமா அவனுக்கு அனுப்பு...

எப்போ வாழ்க்கை பிடிக்கலையோ, அப்போ குழந்தைகளை OLX மூலமா வித்துடு....
அவ்வுளவுதான்....

பெண் : ???
0 x

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16
x 2

#5 Re: Tit bits in Tamil

Post by venkatakailasam » 12 Dec 2013, 20:28

டீச்சர் : என்னது பாரதியார் கிரிக்கெட் விளையாட சொல்லி இருக்காரா ??

பையன் : ODI விளையாடு பாப்பான்னு சொல்லி இருக்காரே !!
0 x

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16
x 2

#6 Re: Tit bits in Tamil

Post by venkatakailasam » 14 Dec 2013, 15:43

Sorry வள்ளுவரே..

1.அம்மா சுட்ட தோசை ருசித்திடும்-
ருசிக்காதே மனைவி சுட்ட தோசை...

2. கள்ளஓட்டு லஞ்சம் வெட்டுக்குத்து இந்நான்கும்
செய்வது அரசியல்வாதிக்கியல்பு...

3. யாகாவாராயினும் Password காக்க காவாக்கால்
சோகாப்பர் hack செய்யப்பட்டு.

4. ரன் எடுத்து ஆடுவாரே ஆடுவார்...
மற்றெல்லாம் டக்கெடுத்து பின் செல்பவர்

இப்போதைக்கு போரும்...
0 x

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16
x 2

#7 Re: Tit bits in Tamil

Post by venkatakailasam » 15 Dec 2013, 14:45

Image
0 x

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16
x 2

#8 Re: Tit bits in Tamil

Post by venkatakailasam » 15 Dec 2013, 19:25

மத்திய அமைச்சர் ஆங்கிலத்தில் உரையாற்றுகிறார். அதை தூய தமிழை பாலூற்றி, மோரூற்றி, நெய்யூற்றி வளர்க்கும் தலைவர் ஒருவர் தமிழில் மொழிபெயர்க்கிறார்.

அமைச்சர் : Good evening ladies and gentlemen.
தலைவர் : நல்ல மாலை பெண்களே ! “அர்ஜுன்களே” !

அமைச்சர் : Hope you are well.
தலைவர் : நீங்களெல்லாம் “கிணற்றில்” இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

அமைச்சர் : Our India is a peaceful Country.
தலைவர் : நமது இந்தியா ஒரு “துண்டுகள் நிறைந்த” நாடு.

அமைச்சர் : There is no change, India will become a powerful nation in the next 10 years.
தலைவர் : அங்கே “சில்லறை” கிடையாது, இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியா “மின்சாரம் நிறைந்த” நாடாகிவிடும்.

அமைச்சர் : You have to work hard, eat healthy food, avoid Coffee & Tea. Take more Vegetables and fruits.
தலைவர் : நீங்கள் அனைவரும் நன்றாக உழைக்க வேண்டும். சத்துள்ள உணவை உட்கொண்டு, “கொட்டை வடிநீர்”, “இலை வடிநீர்” ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். “மோர்” காய்கறிகள், பழங்கள் சாப்பிட வேண்டும்.

அமைச்சர் : The Government is going to introduce a new scheme shortly for women.
தலைவர் : அரசாங்கம் ஒரு புதிய திட்டத்தை “குட்டை”யாக பெண்களுக்கென்று அறிவிக்க உள்ளது.

அமைச்சர் : Thank you and see you again.
தலைவர் : நன்றி மீண்டும் நீங்கள் கடல் !!

A share from Sivaraman Ramachandran
0 x

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36
x 3

#9 Re: Tit bits in Tamil

Post by cmlover » 16 Dec 2013, 01:40

அமைச்சர் : Thank you for your attendance
தலைவர் : நன்றி உங்களது பத்து மணிக்குள்ள நாட்டியத்துக்கு

அமைச்சர் : Good bye
தலைவர் : நல்ல விலைக்கு வாங்கினீர்கள்
0 x

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16
x 2

#10 Re: Tit bits in Tamil

Post by venkatakailasam » 19 Dec 2013, 20:13

வீட்டிற்கு சாயங்காலம் அவசரமாக வந்த ஷியாம் மனைவியிடம், "இன்னைக்கு நைட் நண்பன் கிரியை வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டிருக்கேன்" என்றான்.

அவள் அவசரமாக,"என்ன விளையாடுறீங்களா? வீடு குப்பையாட்டம் கெடக்கு, நான் இன்னும் ஷாப்பிங் ஏதும் செய்யல ஸ்பெஷலா ஒண்ணும் வாங்கல அதில்லாம நைட் ஸ்பெஷல் டிஷ் எதும் பண்ற ஐடியா எதுவும் எனக்கு இல்ல, இதெல்லாம் தெரியாம எதுக்கு கூப்டீங்க?

இதெல்லாம் தெரியும் அதனால தான் கூப்டேன் !

தெரிஞ்சும் எதுக்கு கூப்டீங்க ?

இல்ல... அவன் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டான் அதான் !!
0 x

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36
x 3

#11 Re: Tit bits in Tamil

Post by cmlover » 20 Dec 2013, 00:13

முட்டாள் :)
(I hope my boss doesn't see this :)
0 x

vgovindan
Posts: 1603
Joined: 07 Nov 2010, 20:01
x 56
x 112

#12 'அறு'சுவை

Post by vgovindan » 20 Dec 2013, 07:57

அறுவை சிகிச்சையெனக் கேள்விப்பட்டுள்ளேன் - ஆயின் இந்த
அறுவை ஜோக்குகள் எத்தகையை சிகிச்சையோ - எந்த
அறுவை சிகிச்சாலயத்தினின்று, எந்த அறுவை வைத்தியரால்
அறுவடை செய்யப்பட்டனவோ, வேங்கட கைலாசபதிக்கே வெளிச்சமோ
0 x

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16
x 2

#13 Re: Tit bits in Tamil

Post by venkatakailasam » 21 Dec 2013, 15:14

இன்னும் இரண்டு அறுவை ஜோக்குகள்...please bear with..

ஒரு கணவனும் மனைவியும் மாலை நேரத்தில் பால்கனியில் அமர்ந்திருக்க,கணவன் மது அருந்திக் கொண்டிருந்தான்.

அந்தக் கணவன் மது அருந்தியவாறே சொன்னான்”உன்னை நான் மிக விரும்புகிறேன்...நீ இல்லாமல் என்னால் வாழவே முடியாது.

அப்படி ஒரு வாழ்க்கையை என்னால் நினைத்துப்பார்க்கவே இயலவில்லை !

மனைவி கேட்டாள்.....என்ன மிக ரொமாண்டிக் மூட் போல ?

நீங்கள் பேசுகிறீர்களா உங்களுக்குள் போன மது பேசுகிறதா?

கணவன் சொன்னான்....நான்தான் பேசுகிறேன்.மதுவோடு பேசிக் கொண்டிருக்கிறேன் !!
2) இரண்டு வயதானவர்கள் பொழுது போகாமல் பேசிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் இருவரும் இளவயதில் கிரிக்கெட் விளையாடியவர்கள்.

அப்போது ஒருவர் கேட்டார், சொர்க்கத்தில் கிரிக்கெட் விளையாடுவார்களா?' அடுத்தவருக்கு பதில் தெரியவில்லை.

அப்போது யார் முதலில் இறந்தாலும்,இதுபற்றி அடுத்தவரின் கனவில் வந்து சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.

சில நாட்களில் ஒருவர் இறந்து விட்டார்.

அடுத்தவரின் கனவில் வந்து அவர் சொன்னார், ஒரு நல்ல செய்தி,இங்கு கிரிக்கெட் தினசரி விளையாடுகிறார்கள்.

ஒரு கெட்டசெய்தி, நாளைய கிரிக்கெட் விளையாட்டில்உன் பெயரும் சேர்க்கப் பட்டுள்ளது !!
0 x

vgovindan
Posts: 1603
Joined: 07 Nov 2010, 20:01
x 56
x 112

#14 Re: Tit bits in Tamil

Post by vgovindan » 21 Dec 2013, 17:50

நாளைய கிரிக்கெட் விளையாட்டில் சேர்க்கப்பட்டுள்ள பெயர் என்னுடையதானால் எப்படியிருக்கும் - 'முன்னாள் கோவிந்தன்' என்றா?

முன்னாள் கோவிந்தன் - இன்றுவரை இந்நாள் கோவிந்தன் - நாளை
முன்னாள் ஆகுமுன் இந்நாளே கனவில் வந்து இந்நாளைய கோவிந்தனை
முன்னாள் கோவிந்தன் ஆக்கியதற்கு இந்நாள் கோவிந்தன்
முன்னாள் நண்பர் மீது வழக்குப் போடுவாரோ அல்லது நாளை
முன்னாள் ஆனபின் முன்னாள் ஆகுமுன்னரே முன்னாளாக்கிய
முன்னாள் நண்பர் மீதும் நமன் மீதும் - அவசியம் சொர்க்கமாக இருக்காது -
முன்னாளாக்கிய குற்றம் சாட்டுவாரோ.

இது எப்படி - ரஜினி இஸ்டைல்
0 x

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36
x 3

#15 Re: Tit bits in Tamil

Post by cmlover » 22 Dec 2013, 01:39

எந்நாளும் கோவிந்தன்
என்னையாளும் கோவிந்தன்!
கோ+விந்தன் = வேதத்தை அறிந்தவன்
0 x

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16
x 2

#16 Re: Tit bits in Tamil

Post by venkatakailasam » 01 Jan 2014, 22:04

அது என்ன எகத்தாளம்?

'அவன் எவ்வளவு எகத்தாளமாய் பேசுகிறான் ?என்று பலர் சொல்லக் கேட்டிருப்பீர்கள்.

ஆதிதாளம்,அடதாளம்,திரிபுரதாளம்,ஜம்பதாளம்,ரூபகதாளம்,ஆகியவை பஞ்ச தாளங்கள் என்று அழைக்கப்படும்.ஒவ்வொரு ராகத்துக்கும் தகுந்த தாளம் வாசிக்க வேண்டும். இந்த ஐந்து தாளங்களையும் சேர்த்து வாசிப்பதற்கு ஏக தாளம் என்று பெயர்.

பாடுபவருக்கும்,வாசிப்பவருக்கும் ஒத்து வராமல் போகும்போது வாசிப்பவர் வேண்டுமென்றே ஏக தாளமாக வாசிப்பார்.

அதேபோல கேட்பவரிடம் பதில் சொல்பவன் ஏறுக்கு மாறாகப் பதில் சொல்வதை ஏக தாளம் என்று சொல்லப்பட்டது.

இது நாளடைவில் மருவி எகத்தாளம் என்று ஆகிவிட்டது.

What I read in FB..
0 x

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36
x 3

#17 Re: Tit bits in Tamil

Post by cmlover » 02 Jan 2014, 00:30

எகத்தாளமென்றால் கேலி என்ற பொருளும் உண்டு!
0 x

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16
x 2

#18 Re: Tit bits in Tamil

Post by venkatakailasam » 02 Jan 2014, 18:12

அறுவை ஜோக்கு....

A வோட பொண்டாட்டி B
B யோட அண்ணி C
C யோட பொண்ணு V
V யோட தாத்தா G
G யோட பொண்டாட்டி K
K யோட பொண்ணு T
இப்போ சொல்லுங்க A and T ku relationship enna??
0 x

vgovindan
Posts: 1603
Joined: 07 Nov 2010, 20:01
x 56
x 112

#19 Re: Tit bits in Tamil

Post by vgovindan » 02 Jan 2014, 20:33

vk,
Please send it K Balachander - he will make a wonderful film - confusing everyone - including himself
0 x

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36
x 3

#20 Re: Tit bits in Tamil

Post by cmlover » 03 Jan 2014, 00:23

Kக்கு ஒரே பொண்ணு தான்.
அவளை 'ஏடீ'ன்னு கூப்பிடலாம் :)
0 x

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16
x 2

#21 Re: Tit bits in Tamil

Post by venkatakailasam » 08 Jan 2014, 15:35

ஜப்பானிப் பிரதமர் மோரி அமெரிக்கப் பயணம் செல்ல வேண்டியிருந்தது. அங்கு போனால், அமெரிக்க அதிபர் கிளிண்டனிடம் ஆங்கிலத்தில் பேசுவதற்கு ஏதுவாக மோரிக்கு அடிப்படை ஆங்கிலம் கற்றுத் தரப்பட்டது.

பயிற்சியாளர் மோரியிடம் சொன்னார்,

கிளிண்டனின் கையைக் குலுக்கும்போது, ‘How are you?’ என்று கேட்க வேண்டும். அதற்கு கிளிண்டன் ‘I am fine and you?’ என்று கேட்பார். அதற்கு நீங்கள் ‘me too’ என்று பதில் சொல்ல வேண்டும். அதற்குப் பின் நடைபெறும் உரையாடல்களை மொழிபெயர்ப்பாளர்கள் கவனித்துக் கொள்வார்கள்” என்றார்.

மோரியும் சரி என்று கேட்டுக் கொண்டார்.

ஆனால் வாஷிங்டனில் கிளிண்டனைச் சந்திக்கும்போது, தவறுதலாக இப்படித் தொடங்கினார்.

Who are you?

அதிர்ந்து போனார் கிளிண்டன். ஆனாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல்,

Well, I’m Hillary’s husband, என்று பதில் சொன்னார்.

அதற்கு மோரி சொன்னார்,

me too
0 x

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36
x 3

#22 Re: Tit bits in Tamil

Post by cmlover » 09 Jan 2014, 00:48

அதிர்ந்து போனார் கிளிண்டன். ஆனாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல்,

Gosh, I’m surprised, என்று பதில் சொன்னார்.

அதற்கு மோரி சொன்னார்,

me too

மேலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் கிளிண்டன் சொன்னார்

‘I am fine and you?’ என்று

அதற்கு மோரி சொன்னார்,

me too

:D
0 x

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36
x 3

#23 Re: Tit bits in Tamil

Post by cmlover » 10 Jan 2014, 06:58

பிறகு மோரிக்கு நடந்ததை விளக்கினார்கள்.
அவரிடம் "I am not the husband of Hillary" என்று கிளிண்டனிடம் கூறச்சொன்னார்கள்.
அதைக் கேட்ட கிளிண்டன் சொன்னார்
I am glad you are not
மோரி சொன்னார்
me too

:D
0 x

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16
x 2

#24 Re: Tit bits in Tamil

Post by venkatakailasam » 18 Jan 2014, 20:09

Doctor -- வைத்தியநாதன்
Dentist -- பல்லவன்
Lawyer -- கேசவன்
Financier -- தனசேகரன்
Cardiologist -- இருதயராஜ்
Pediatrist -- குழந்தைசாமி
Psychiatrist -- மனோ
Sex Therapist -- காமதேவன்
Marriage Counselor -- கல்யாண சுந்தரம்
Ophthalmologist --கண்ணாயிரம்
ENT Specialist -- நீலகண்டன்
Diabetologist -- சக்கரபாணி
Nutritionist -- ஆரோக்கியசாமி
Hypnotist -- சொக்கலிங்கம்
Exorcist -- மாத்ருபூதம்
Magician -- மாயாண்டி
Builder -- செங்கல்வராயன்
Painter -- சித்திரகுப்தன்
Meteorologist -- கார்மேகம்
Agriculturist -- பச்சைப்பன்
Horticulturist -- புஷ்பவனம்
Landscaper -- பூமிநாதன்
Barber -- சவுரிராஜன்
Beggar -- பிச்சை
Alcoholic -- மதுசூதனன்
Exhibitionist -- அம்பலவானன்
Fiction writer -- நாவலன்
Makeup Man -- சிங்காரம்
Milk Man -- பால் ராஜ்
Dairy Farmer -- பசுபதி
Dog Groomer -- நாயகன்
Snake Charmer -- நாகராஜன்
Mountain Climber -- ஏழுமலை
Javelin Thrower -- வேலாயுதம்
Polevaulter -- தாண்டவராயன்
Weight Lifter -- பலராமன்
Sumo Wrestler -- குண்டு ராவ்
Karate Expert -- கைலாசம்
Kick Boxer -- எத்திராஜ். .....
Shared..
0 x

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36
x 3

#25 Re: Tit bits in Tamil

Post by cmlover » 19 Jan 2014, 00:08

பலே
Carnatic Music Store House - வேங்கட கைலாசம்
Information store house - ப்ரத்யக்ஷம் பாலா
Music Composer - அரசி
.....
0 x

Post Reply