Tit bits in Tamil

Post Reply
Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Tit bits in Tamil

Post by Pratyaksham Bala »

thanjavooran:
மிக்க அருமை. நன்றி !

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Tit bits in Tamil

Post by thanjavooran »

A share

தமிழ் மொழியில் மட்டுமே இது போன்ற வார்த்தை ஜாலங்கள் சாத்தியம்

அதிகாலை வேலை காவல் நிலைய தொலைபேசி மணி அழைக்க, காவலர் கந்தன் தொலைபேசியை எடுத்துக் பேசினார்.

காவலர் : ஹலோ V 7 காவல் நிலையம், சொல்லுங்க.

எதிர் முனை : சார் இங்க ஒருத்தரச் சுட்டுட்டார் சார்.

காவலர் : சுட்டது யாருன்னு தெரியுமா?

எதிர் முனை : தெரியும் சார்.

காவலர் : யார் சுட்டது?

எதிர் முனை : சுடலை சார்.

காவலர் : யோவ் சுட்டங்களா இல்லையா?

எதிர் முனை : சுட்டாங்க சார்.

காவலர் : யார் சுட்டது?

எதிர் முனை : சுடலை சார்.

காவலர் : உங்கள் பேர் என்ன?

எதிர் முனை : சாரதி சார்.

காவலர் : கோபத்துடன் எந்த எடத்துல இருக்கீங்க

கொலை நடந்த இடத்தைக் கேட்டு தெரிந்து கொண்டு அங்கே சென்றனர் காவல் துறையினர்.

அந்த இடத்தில இருவர் மூவர் நின்று கொண்டிருந்தனர். ஒருவரை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஸ்ட்ரெச்சரில் எடுத்துச் சென்று கொண்டிருந்தனர்.

காவலர் : இங்க கொலையா பார்த்த சாரதி யாரு?

அங்கே இருந்த இருவர் கையை தூக்கி நான் தான் என்று கூறினார்.

ஒருவரைப் பார்த்து காவலர் : சொல்லுங்க என்ன பார்த்தீங்க?

பார்த்த சாரதி : நான் ஒன்னும் பார்க்கல சார் நான் இப்பத்தான் வந்தேன்.

காவலர் : யோவ் பிறகு எதுக்கு யா கையைத்தூக்குன.

பார்த்த சாரதி : என் பேர் பார்த்த சாரதி அதான் கையத் தூக்கினேன்.

இன்னொருவரைப் பார்த்து காவலர் : அப்பா நீ யாருயா?

சாரதி (போனில் பேசியவர்): நான் தான் பார்த்த சாரதி.

கடுங்கோபத்தில் காவலர் : யோவ் உன் பேரு பார்த்த சாரதி யா?

சாரதி : இல்ல சார்.

காவலர் : நீ தான் யா சொன்ன பார்த்த சாரதினு.

சாரதி : ஆமா சார்.

காவலர் : அப்ப ஏன் இல்லனு சொன்ன?

சாரதி : என் பெரு பார்த்த சாரதி இல்லேனு சொன்னேன் சார் .

காவலர் : அப்ப உன் பேரு என்ன?

சாரதி : சாரதி சார்.

காவலர் : சுட்டதை பார்த்தது நீங்கள் தானா?

சாரதி : ஆமாம் சார்.

பார்த்த சாரதியப் பார்த்து

காவலர் : அப்ப நீங்க

பார்த்த சாரதி : கொலையைப் பார்க்காத பார்த்தசாரதி சார்.

சாரதியைப் பார்த்து

காவலர் : போன் செய்தது நீ தானா?

சாரதி : ஆமாம் சார்.

காவலர் : சுட்டது யார்?

சாரதி : "மூன்றாம் நபரைக் காட்டி" இவர் தான் சார்.

மூன்றாம் நபரைப் பார்த்து

காவலர் : நீ யாரு?

3ம் நபர் : நான் சுடலை சார்.

சாரதியைப் பார்த்து காவலர் : யோவ் அவரு சுடலைனு சொல்லுறாரு.

சாரதி : ஆமாம் சார் அவர் சுடலை.

காவலர் : அப்ப சுட்டது யாரு?

சுடலையைக் காண்பித்து சாரதி : இவர் தான் சார்.

காவலர் இப்பொழுது கீழ்ப்பாக்கத்தில் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டு இருக்கிறார்.

ரசிக்கத் தக்கது. ரசித்தேன்.

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Tit bits in Tamil

Post by Pasupathy »

:-)

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Tit bits in Tamil

Post by thanjavooran »

A share
Just for making our kids to know and write faultless Tamil

தமிழ் சொல்லி தர பிள்ளைகளுக்கு  சில விளக்கங்கள்...

"ண", "ன" மற்றும் "ந" எங்கெல்லாம் வரும்?
ஒரு எளிய விளக்கம்

மூன்று சுழி “ண”,
ரெண்டு சுழி “ன” மற்றும்
"ந" என்ன வித்தியாசம்?

தமிழ் எழுத்துகளில்
ரெண்டு சுழி "ன" என்பதும், மூன்று சுழி "ண" என்பதெல்லாம் வெறும் பேச்சு வழக்கு.

"ண" இதன் பெயர் டண்ணகரம்,
"ன" இதன் பெயர் றன்னகரம்,
"ந" இதன் பெயர் தந்நகரம் என்பதே சரி.

மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூன்று சுழி "ணகர" ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து 'ட' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "டண்ணகரம்" னு பேரு. (சொல்லிப் பாருங்களேன்!)

தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி "னகர" ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து 'ற' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "றன்னகரம்" னு பேரு. (சும்மா சொல்லிப்பாருங்க!)

இது ரெண்டும் என்றுமே மாறி வராது..
நினைவில் கொள்க..

மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல 'ட' இருக்கா,
அப்ப இங்க மூன்று சுழி 'ண்' தான் வரும்.
ஏன்னா அது "டண்ணகரம்".

கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல 'ற' இருக்கா
அப்ப இங்க ரெண்டு சுழி 'ன்' தான் வரும்.
ஏன்னா அது "றன்னகரம்"
என்று புரிந்து கொள்ளலாம்.

இதே மாதிரித்தான் 'ந' கரம் என்பதை, "தந்நகரம்" னு சொல்லணும்
ஏன்னா இந்த 'ந்' எழுத்தை அடுத்து
வரக்கூடிய உயிர்மெய் 'த' மட்டுமே. (பந்து, வெந்தயம், மந்தை).

இந்த "ண", "ன" மற்றும் "ந" விளக்கம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்..........

தமிழறிவோம்

Govindaswamy
Posts: 120
Joined: 21 Feb 2010, 06:55

Re: Tit bits in Tamil

Post by Govindaswamy »

மதிப்பிற்குரிய ஐயா
பாவலரேறு ச.பாலசுந்தரனாரின் தொல்காப்பிய சொல்லதிகாரம் 26, 27 ம் சூத்திரங்களின் உரையில் கீழ்க்காணும் எடுத்துக்காட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

வண்டு,வெண்சாந்து,வெண்ஞாண்,நண்பன்,உண்மை,மண்யாப்பு,கண்விழி.

புன்கம்,வின்ஞாண்,அன்பன்,நன்மை,மென்யாழ்,பொன்வளை,

இவற்றில் வெண்சாந்து என்றாற்போல இரு சொல்லாக உள்ளவை தொகைமொழிகளாம்.

பொருந்யாக்கை,வெரிந்யாது.

வணக்கம்
கோவிந்தஸ்வாமி

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Tit bits in Tamil

Post by thanjavooran »

Thiru govindasamy Avl,
மிக்க அருமை. நன்றி !

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: Tit bits in Tamil

Post by arasi »

டண்ணகரம் 'டாண்' என்றொலிக்கும், திண்டாட்டமேது?
றன்னகரம் கேள்வியின்றி விளக்கும், ந‌ன்றி!
தந்நகரம் தானே புரிய வைக்கும், வந்து சொன்னீரே :)

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Tit bits in Tamil

Post by thanjavooran »

Thirumathi Arasi
அருமை. நன்றி !

Thanjavooran
08 11 2017

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Tit bits in Tamil

Post by thanjavooran »

A share

தோசை தத்துவம்.

👌👌👌👏👍👏👌👌👌

*ஒரு தோசையில் இவ்வளவு தத்துவமா*

*தோசை*

நாம் அன்றாட உண்ணும் தோசையும் அதன் பின்னால் இருக்கும் ஆன்மிகமும்,ஜோதிடமும்...

தோசை செய்ய உபயோகிக்கும் பொருட்களுள் நவ கிரகங்கள் அடக்கம்.

*அக்னி = சூரியன்*
*அரிசி = சந்திரன்*
*உளுந்து = ராகு-கேது*
*வெந்தயம் = புதன்*
*தோசை கல் (இரும்பு) = சனி*
*தோசையின் நிறம் = செவ்வாய்*

அதை உண்பவர்கள் *குரு (ஆண்)*
*சுக்கிரன் (பெண்)*

இதன் உருவம் (Galaxy) பிரபஞ்சமே
தோசையை Clock vice சுட்டால் தான் வரும்,
பிரபஞ்சம் சுற்றுவதும்
அப்படித்தானே

இந்த தோசையை ஒரு ஜோதிட பரிகாரமாக இருந்திருக்க வேண்டும் ஏன் நிச்சயம் இருந்திருக்க வேண்டும்

ஆரம்ப காலத்தில் விஷேச நாட்களில் தோசையை தெய்வத்திற்கு படையலாக படைத்தது பின் உண்டுவந்தர்கள்
ஏன் இன்றும் பெருமாளுக்கு தோசையை படையலாக படைத்தது பிரசாதமாக கோவில்
வழங்குகிறார்.

அப்போது இருந்த நம் முன்னோர்களுக்கு தோசை பலகார வகையாகத்தான் இருந்தது.

பின் நாளில் மக்களுக்கு வசதி வந்த பிறகு அன்றாட உணவு வகையாக மாறிவிட்டது.

தோசை இந்தச் சொல் எப்படி வந்தது என்பதற்கு மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்,

( கல்லில் ) தோய்த்துச் செய்வது
என்னும் பொருளில்

*தோய் + செய் என்னும் சொற்கள் இணைந்து உருவான இச்சொல்,*

மக்கள் வழக்கில் தோசை என்று ஆனது என்ற குறிப்பு உண்டு. 🍪🍳

*படித்தேன் பகிர்ந்தேன்*

👌👌

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Tit bits in Tamil

Post by thanjavooran »

a share
கணவன் மனைவி இருவரும் ...

ஒரு ஹோட்டலில் ஐஸ்கிரீம் சாப்பிட உட்கார்ந்தார்கள்.

என்னங்க... உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும்போல இருக்கு கேட்கவா....

இதென்ன புதுசா .. என்கிட்ட கேட்டா என்கிட்ட பேசுவா.... கேளு என சிரிச்சான்

இல்ல, ஒரு மாசமா சீக்கிரம் வீட்டுக்கு வரீங்க...

அடிக்கடி வெளிய கூட்டிப்போறீங்க..

பொண்ணு கூட உட்கார்ந்து பாடம் சொல்லி குடுக்றீங்க.....

திடீரென நம்ம மேல நெருக்கமா மாறீட்டீங்க....

அதான்...
என்று இழுத்தாள்...

ஒண்ணுமில்லையே எப்பவும் போலத்தான் இருக்கேன்.

மறைக்காதீங்க ... உங்க முகரைய பார்த்தாலே தெரியுது... சொல்லுங்க

என்னத்த சொல்ல..

ஏதும் சின்னவீடு செட் பண்ணிட்டிங்களா ..

அத மறைக்கத்தான் இப்படி கொஞ்சுறிங்களா நம்மகூட?

போடி லூசு.. அவன் சிரித்தான்.

ஆனால் அதில் உயிரில்லை.

மெதுவாய் சொன்னான்..

நீயா கேட்பே சொல்லணும்னுதான் இருந்தேன் என கொஞ்சம் சீரியஸ் ஆனான்.

என்னங்க ஏதும் பிரச்சினையா படபடத்தாள்....

அவன் இல்லையென தலையாட்டியபடியே

அவனது அலுவலக பையை திறந்தான்.

ஒரு டைரியை திறந்து ஒரு பேப்பரை எடுத்து நீட்டினான்.

என்னங்க இது ..

படி என சொல்லிவிட்டு பின்னால் நகர்ந்து அமர்ந்தான்.

அவள் படிக்க தொடங்கினாள் ...

அவன் கண்கள் கண்ணீரை சிந்த ஆரம்பித்தது...

அன்புள்ள மகனுக்கு,

கண்டிப்பா என்றைக்காச்சும் இந்த கடிதம் உன் கையில கிடைக்கும்னு நான் நம்புறேன்.

உங்கப்பாவுக்கு மனைவியா உனக்கு அம்மாவ இந்த கடிதம் எழுதுறேன்.

ரொம்ப பெரிய கடிதம் பொறுமையா படி.

அவசரமா வேலை இருக்குனு பாதி படிச்சி மீதிய இன்னொரு நாள் காத்திருந்துப் படிக்காத.

உங்கப்பாவ நான் கல்யாணம் பண்ணும்போது நான் காலேஜ் லெக்சரர்.

அப்புறம் நீ வந்த பிறகு உங்கப்பாக்கு அதிர்ஷ்டம் அடிச்சுது.

இன்னும் கன்ஸ்ட்ரக்‌ஷன்ல வளர்ந்தாரு.

அப்புறம் உன் தங்கச்சி பிறந்தா ...

நான் வேலையை விட்டுட்டு வீட்டோட உங்கள கவனிச்சுட்டு இருந்தேன்.

உனக்கு தான் தெரியுமே அப்பா எப்படி பிசின்னு...

கல்யாணம் ஆன ஒரு வருஷம் தான் கனவு வாழ்க்கை.

அப்புறம் எல்லாமே காத்திருந்த வாழ்க்கைதான்.

உங்கப்பாவுக்கு காத்திட்டு இருந்தேன்.

அவர், அவர் உருவாக்க நினைச்ச ஆடம்பர வாழ்க்கைக்காக உழைச்சிட்டு இருந்தார்.

நீங்கள் ரெண்டு பேரும் தான் எனக்கு துணை.

நாம தான் விளையாடுவோம்.

அப்புறம் நீங்க ஸ்கூலுக்கு போய்ட்டீங்க.. நீங்க வரதுக்கு காத்திட்டுருப்பேன்.

ஸ்கூல்விட்டு வந்ததும் கதைகதையா சொல்லுவீங்க..

அதுல பாதி பொய் இருக்கும்..

அதெல்லாம் உங்க கற்பனைன்னு நினைச்சு ரசிச்சேன்.

அப்புறம் நீங்க வளர்ந்தீங்க..

அம்மாட்ட சொல்ல ஏதுமில்லாம போச்சு.

ஆனா உங்கள்ட்ட இருந்து ஆர்டர் மட்டும் வந்துச்சு.

இப்ப வெளியே போகனும்...

இப்படி வெளியே போகணும்னு..

ஆனா வர்ற டைம் கேட்க முடியுமா அம்மாவால்.......

காத்திட்டு இருப்பேன்.

நீங்க சாப்டு வரீங்களா.... சாப்டமா வரீங்களானு பார்க்க காத்திட்டு இருப்பேன்....

நீங்க எக்ஸ்டரா கோச்சிங், பிரண்ட்ஸ் அரட்டைனு..பிசி

இடையில உங்கப்பா உடம்பு முடியாம படுத்துட்டாரு.

அவருக்கு டயத்துக்கு மாத்திரை கொடுக்கனும், மருந்து கொடுக்கணும், பிசியோதெரபி பண்ணனும் காத்திட்டுருப்பேன்.

காத்திட்டு இருக்கிறதே என்னோட வாழ்க்கை ஆகிடுச்சு பாத்தியா?

அப்புறம் உன தங்கச்சி கல்யாணம்...

இப்ப அவ எப்படி இருக்கானு கூட
அவளா முடிவு செய்ற நேரத்திலதான் என் கூட பேச முடியும்....

ஏன்னா அங்க அவ காத்திட்டு இருக்கா .... ஒரு அம்மாவா...

உனக்கு சொல்லவே வேண்டாம்...

அப்பா தொழில எடுத்து செய்ய ஆரம்பிச்ச உடனே

நீ ரொம்ப பிசியாகிட்ட..

நீ கடைசி ஐஞ்சு வருஷத்தில் அம்மாட்ட பேசுனத கொஞ்சம் யோசியேன்...

சாப்டிங்களா, மாத்திர போட்டாச்சா.. ஊசிபோட்டாச்சா... இவ்ளோதான்.

உங்கப்பா வாழ்றா காலத்தில பிசியா இருந்தாரு..

நான் காத்திட்டு இருந்தேன்.

கடைசி காலத்தில் ஏதுவும் இல்லாம இருந்தாரு..

ஆனா மாத்திரைக்கு காத்திட்டு இருந்தாரு...

என்கிட்ட பேச அவருக்கு விசயமே இல்லை...

பேப்பர் படிச்சாரு. புக் படிச்சாரு. தூங்குனாரு.

ஏன்னா பேச வேண்டிய காலத்தில் பேசல...

பேச நேரமிருந்த காலத்தில் பேச விஷயமில்லை... அனுபவமும் இல்லை

இப்படித்தான் பெரும்பாலான அம்மாக்களோடு வாழ்க்கை முடிஞ்சு போகுது.

நாம என்னைக்காச்சும் வெளியே போகும் போது

அங்க நிறைய அம்மாக்கள பார்ப்பேன்..

அவங்க எல்லார் கண்ணிலும் எனக்கு தெரியுறது காத்திருந்த ஏக்கம் மட்டும் தான்.

உன்னை மாதிரி பசங்க கூட்டிட்டு வர அவங்க மனைவிகளை பார்ப்பேன்...

அதுல இன்னைகே வாழ்ந்துடனும்...

அடுத்த ஆறநாள் இவன் கூட பேசக்கூட முடியாதுன்ற ஒரு வேகம் இருக்கிறத பார்த்தேன்.

இன்னைக்கு ஒரு நாள் தானேன்னு புள்ளைக கேட்ட எல்லாம் செய்ற அப்பாக்கள பார்த்தேன்.

இது கொஞ்சம் கொஞ்சமா அவங்களுக்கு காரியம் சாதிக்கிற நாள் ஆகிடுதுனு புரிஞ்சுது...

உங்களுக்கு ஒரு நாள் தானேன்னு ஒரு நினைப்பு வந்துடுச்சு.

இதெல்லாம் ஏன் இப்ப சொல்றேனு யோசிக்றியா...

என் காலத்தில் இதெல்லாம் உங்கப்பாட்ட சொல்லி புரிய வைக்க முடியல..

ஆனா நீ அடுத்த ஜெனரேஷன்.. கொஞ்சம் யோசிப்பில்ல

அதான் உன்கிட்ட சொல்றேன்.

நான் உயிரோடு இருக்கும் போது சொல்ல முடியல...

சொன்னாலும் உன்னால கேட்க முடியாது..

அதனால தான் இப்ப சொல்றேன்.

உனக்கு வீட்ல ஒரு பொண்ணு இருக்கா, மனைவி இருக்கா...

காத்திட்டு இருக்காங்க...

உன் தங்கச்சிக்கு உங்கப்பா மேல இருந்த பாசம் உனக்கு தெரியாது..

ஆனால் அத அவ வெளிக்காட்டும் போது உங்கப்பா கட்டில்ல நகர முடியாம இருந்தாரு.

அவரு தான் அப்பானு அவ காலேஜ்க்கு ஸ்கூலுக்கு தெரியாத அளவுக்கு அவர் பிசி....

அப்பா கூட அங்க போகணும் இங்க போகணும்ங்கிற எந்த ஆசையும் நிறைவேறல..

அவ அப்பா கடைசி காலத்தில சும்மா இருந்தபோது அவர் பேசனது அவ கேட்க முடியல

ஏன்னா அவ வேறு வீட்டுக்கு போய்ட்டா ..

பாத்தியா வாழ்க்கைய ?

நீ உன் பொண்ணுக்கு அப்படி ஒரு வாழ்க்கைய கொடுத்துடாத

உன் மனைவிய அவளோட மகனுக்கு கடிதம் எழுத வச்சிடாத...

இன்னைக்கு மூணுவேளை சாப்பிட சம்பாதிச்சுட்ட.

நாளைக்கு மூணு வேளைக்கும் உனக்கு பிரச்சினை இல்லை.

இன்னும் சொல்லபோனா

நீ இப்ப உழைக்கிறது உன்னோட அடுத்த பத்துவருஷம் கழிச்சி செலவழிக்க போறதுக்குதான்..

அத கொஞ்சம் குறைச்சிக்கோ..

சீக்கிரம் வீட்டுக்கு வா.

பொண்டாட்டிகிட்ட புள்ளைககிட்ட பேசு...

அவங்களுக்கும் நீ நல்லா இருக்கும் போதே கொஞ்சம் நேரம் கொடு....

ஏன்னா அன்புக்காக காத்திட்டு இருக்கிறதும்...

ஒருத்தர காக்க வைக்கிறதும் ஒரு வாழ்க்கையா?

செய்வேனு நம்புறேன்.

ஏன்னா என்கிட்ட நல்லா பேசின பையன் தானே நீ...

உன் மனைவி மகள விட்டுடவா போற...

கடிதத்தை படித்து முடிந்தாள்.

அவள் முகம் ஒருவித பரபரப்பில் இருந்தது.

நிமிர்ந்து அவனை பார்த்தாள்....

இரண்டு மிகப்பெரிய பலூடா ஐஸ்கீரிம் வந்திருந்தது.

அவள் மெதுவாய் தன் அலைபேசியில் இருந்து அவள் அம்மாவிற்கு போன் செய்தாள்.....

.நான் தான்மா
.....
ஏன் சும்மா பேசக்கூடாதா?
...
என்ன செய்ற...
....
அப்பா என்ன செய்றாரு... என பேசத்தொடங்கினாள்.

ஐஸ்கீரிம் கொஞ்சம் கொஞ்சமாய் உருகத் தொடங்கியது.... .

அவன் சிரித்தபடி சாப்பிட தொடங்கினான்.

இனிமே அப்படித்தான்..

இனி அங்கே அன்புக்காக காத்திருக்க அவசியமில்லை.

படித்ததில் உறைத்தது.

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Tit bits in Tamil

Post by Ponbhairavi »

ஆட்சி மாற்றம் கோரும் தவளைகள்

அந்தக் குளத்துத் தவளைகளுக்கு ஜனநாயக ஆட்சி அலுத்து விட்டது.எல்லாமாகச் சேர்ந்து விண்முட்ட கோஷம் போட்டு பண்ணிய ஆர்ப்பாட்டத்தில் கடவுள் அவற்றின் கோரிக்கையை ஏற்று அவற்றை ஆள்வதற்கு ஒரு சாதுவான அமைதியான மன்னரை அனுப்பி வைத்தார்.ஆனாலும் மன்னர் குளத்திற்கு ஆட்சி ஏற்க வந்தபோது ஏற்பட்ட இடி போன்ற “தொப்பென்ற “பேரொலியில் குளத்துத் தவளைகள் நடுநடுங்கிப் போய்விட்டன.
தவளைகள் தானே! புத்தி மட்டு. பயந்தாங்கொள்ளி கள்.நீரின் ஆழத்திற்குப்போய் சேற்றின் பொந்துகளிலும் கோரைகள் வேர் இடுக்கிலும் ஒளிந்து கொண்டன.தம் புது மன்னரின் முகத்தைப் பார்க்கவும் பயம். வரும்போதே அவ்வளவுஆர்ப்பாட்டத்துடன் வந்தவர் பூதம்போல் இருப்பாரோ? நிஜத்தில் பார்க்கப்போனால் ஒரு பெரிய மரக்கட்டடை தான்அவற்றுக்குக் கி டைத்த மன்னர் !!கரடு முரடான தோற்றம் பார்க்க சற்று அச்சமாக இருந்தாலும் அமைதியானது.
மன்னர் மரக்கட்டை நீரில் மிதந்து செல்வதைக் கண்ட ஒருதவளை
மெல்ல தன் ஒளிவிடத்திலிருந்து வெளியே வந்து எட்டிப்பபார்த்தது.பயத்தில் நடுங்கியவாரே சற்றே அருகில் வந்தது வே று ஒரு தவளை.அதைத் தொடர்ந்து மற்றொரு தவளை ,அதைத் தொடர்ந்து இன்னொன்று.இப்படியாக ஒரு பெரிய கும்பலே சேர்ந்து விட்டது. சிறிது சிறிதாக. தவளைகளுக்கு பயம் விட்டுப்போய் அலக்க்ஷய சகஜபாவம் வந்துவிட்டது.ஒரு தவளை மன்னரின் தோளில் தாவி அமர்ந்து கொண்டது.மன்னருக்குத்
தொல்லை தான்.இருந்தாலும்சகித்துக் கொண்டே கிடந்தார்.
அதி விரைவில் மீண்டும் தவளைகளின் கூக்குரல்கடவுளை எட்டியது.”வெறும் ஜடமாக இல்லாமல் செயல் திறன் கொண்ட அரசர் எங்களுக்கு வேண்டும்.”
இப்போது கடவுள் ஒரு கொக்கை மன்னராக அனுப்பி வைத்தார் .புதிய மன்னர் தவளைகளை தன் அலகால்கொத்தி குதறி இஷ்டம்போல் “லபக் லபக் “ என்று வி ழுங்கலானார்.
தாங்கமுடியாமல் தவளைகள் மீண்டும் கடவுளிடம் முறையிட்டன.கடவுள் சொன்னார்:
“உங்கள் இஷ்டப்படி எல்லாம் நான் ஆட வேண்டுமா? முதலில் இருந்த ஆட்சி முறையையே நீங்கள் வைத்துக்கொண்டிருக்க வேண்டும்.அதுதான் இல்லை என்றால் உங்களுக்கு முதலாக வாய்த்த சாதுவான மன்னரைக் கொண்டாவது திருப்தி அடைந்திருக்க வேண்டும் இப்போது இருக்கும் கொக்கே தேவலை என்று அமைதி கொள்ளுங்கள் இல்லையேல்
இதைவிட மோசமான ஒருவர் வந்து சேர்ந்து விட்டால்…?
Jean de LaFontaine (1621-1695)
He is the author of about 250 fables and tales for children inspired by panchatantra,Esope(greek) and Phedre (latin)
Last edited by Ponbhairavi on 27 May 2018, 22:55, edited 1 time in total.

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Tit bits in Tamil

Post by Ponbhairavi »

duplication deleted

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Tit bits in Tamil

Post by thanjavooran »

படியுங்கள்... படித்துச் சிரியுங்கள்.....

கொலைப் பசியோடு ஒரு திருமண வரவேற்பு பந்தியில் அமர்ந்து இருந்தேன்..

முதலில் பேப்பர் ரோலை உருட்டினார்கள். பின்பு இலைகளை முன்னே வைத்துச் சென்றார்கள். கால் மணி நேரத்திற்கு பிறகு தண்ணீர் மட்டும் வைத்தார்கள்..

முதல் பந்தியே ஆரம்பிக்கவில்லை. அதற்குள் கூட்டம் ரெங்கநாதன் தெருவைப் போல நெறிய ஆரம்பித்தது. நான் ஒரு வரிசையில் அமர்ந்து இருந்தேன். காத்திருப்பவர்கள் எனக்குப் பின்னால் வந்து நிற்க ஆரம்பித்தார்கள்..

"வெறும் எலைய எம்மாம் நேரம்டா உத்துப் பாக்குறது.. சோத்தப் போடுங்கடா..." மப்பிலிருந்த பெருசு ஒன்று ஆரம்பித்து வைத்தது..

குலாப் ஜாமூன், வெங்காய பச்சடி, உருளை சிப்ஸ் வைத்த அடுத்த நொடியில் கபளீகரம் செய்தேன்..

என்னுடைய வரிசையில் கடைசி ஆள் வரை வைத்து விட்டு திரும்பிய வெங்காய பச்சடிக்காரன் என்னைப் பார்த்து "பச்சடியக் கூடவா..?" என்று மனதில் நினைத்தது அவன் முகத்தில் தெரிந்தது..

அடுத்தது சென்னாவும் தேங்காய் சட்னியும் வைத்தார்கள்...

"எப்பத் தான்டா சோறு போடுவீங்க..?" மறுபடியும் பெருசு உருமியது...

"சார்! தோசையும் சப்பாத்தியும் வந்துட்டே இருக்கு.. அது வரைக்கும் அப்பளம் சாப்ட்றீங்களா..?" அப்பளம் வைத்திருந்தவன் நக்கல் செய்கிறானா, இல்லை மனதில் இருந்து தான் கேட்கிறானா போன்ற ஆராய்ச்சிகளில் இறங்க என் பசி அனுமதிக்கவில்லை.

இதோ வருகிறது.. அதோ வருகிறது என்று அவர்கள் ஆட்டம் காட்டிக் கொண்டிருந்த சப்பாத்தியும் தோசையும் வந்தே விட்டது..

படுபாவிகள்.. எதிர் வரிசையில் வைக்க ஆரம்பித்தனர். எனது இடத்திற்குவரும் போது தோசை தீர்ந்து விட்டது. ஒரே ஒரு சப்பாத்தி தான் வைத்தான்..

"தம்பி! தோசை வரல.."

"நான் சப்பாத்தி வைக்கிற ஆளு சார்"

"தெரியுதுப்பா..! அவர் கிட்ட சொல்ல முடியாதா..?"

"உள்ள இருப்பான் சார்! போனதும் சொல்றேன்..." அவர் மீட்டிங்கில் இருக்கிறார்.. இப்ப பாக்க முடியாது என்பது போல் என் காதில் விழுந்தது..

அதற்குள் சாப்பாடு வைக்க ஆரம்பித்தார்கள். "பாஸ்..! ஒரு கரண்டி வைங்க. சாப்பிட்டுப் பிறகு வாங்கிக்கிறேன்.." எனக்கு இலையில் டிராபிக் ஜாம் ஆனால் பிடிக்காது என்பதால் அப்படி சொன்னேன்.

"தம்பி! அதெல்லாம் வேலைக்கு ஆகாது.. இப்பவே மொத்தமா வாங்கிக்கீங்க.. அப்புறம் இவங்களப் பிடிக்க முடியாது.." பக்கத்தில் இருந்த அனுபவஸ்தர் கூறினார்..

அவர் கூறியபடியே மொத்தமாக வாங்கி சாம்பார், வத்தக்குழம்பு, ரசம், மோருக்கு என நான்கு பாகங்களாக பிரித்து வைத்தேன்..

எனக்குப் பின்னால் வெயிட்டிங்கில் இருந்தவர் அருகில் இருந்தவரிடம் ஏதோ சொல்லி சிரித்தார்..

அநேகமாக டாப் ஆங்கிளில் நான்கு மலைச் சிகரங்கள் தெரிந்திருக்க வேண்டும் அவருக்கு.

சாம்பார் வாளிக்குப் பின்னாலேயே ரசம் வாளியும் வந்தது..

"இப்படி வந்தா ஒன்னுகூடி வந்துட்றீங்க. இல்லன்னா ஆளே காணாமப் போயிட்றீங்க.. சாம்பார் சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ள எப்படிப்பா ரசம் சாப்பிடறது...?"

"எல்லாம் சாப்பிடலாம்.. சாப்பிடலாம்.." எவனோ பின்னால் இருந்து குரல் கொடுத்தான். திரும்பிப் பார்த்தேன். யாரென்று கண்டுபிடிக்க முடியவில்லை..

"தம்பி! புரியாத ஆளாக இருக்கீங்களே.. ரசத்த இப்பவே வாங்கி வச்சிக்கிடுங்க...." அனுபவஸ்தர் வலியுறுத்தினார். ஒரு குழி வெட்டி ரசத்த அதில் ஊற்ற சொன்னேன்..

"வத்தக்குழம்பு இல்லையா...?"

"வரும் சார்...!" 'ஏன் பறக்குறீங்க' என்று கழுத்து வரை வந்து விட்ட வார்த்தையை நல்ல வேளை.. முழுங்கி விட்டான்..

"தம்பி! உங்க ரசம் நம்ம இலைக்கு வருது பாருங்க.." அருகில் இருந்தவர் சிரித்தபடி கூறினாலும் அது சிரிப்பதற்காகக் கூறியதல்ல..

இதற்கு உடனடியாக ஆக்ஷனில் இறங்க வேண்டும். மோர்க் குன்றிலிருந்து கொத்தாக சோற்றை அள்ளி ரசம் லீக்காகும் இடத்தைச் சுற்றி ஒரு டேம் கட்டினேன். அவருக்குப் பரம திருப்தி..

அடுத்து திடீரென்று காப்பி வைத்தார்கள்.

இன்னும் ரசத்த கூட தான்டலேயேடா! அதுக்குள்ள காப்பி வச்சா என்ன அர்த்தம்...?"

"சீக்கிரம் முடிச்சிட்டு எழுந்திரிக்கணும்னு அர்த்தம்...!" பின்னால் இருந்து மீண்டும் அதே குரல் கேட்டது..

காப்பிய ஆறிப்போய் குடிப்பதும் குப்பையில் வீசுவதும் ஒன்று..

காப்பிய இழக்க எனக்கு மனமில்லை. ரசம் சாப்பிட்டுக் கொண்டே, நடுநடுவே காப்பியையும் ஒரு சிப் இழுத்துக் கொண்டேன்‌..

புது காம்பினேஷன்.. நீங்களும் ட்ரை பன்னுங்க மக்கா..

"இவன் இப்போதைக்கு முடிக்க மாட்டான் மாப்ள... வா நம்ப அந்த லைனுக்குப் போவோம்.." அந்த இரண்டு பேரும் இறுதியாக என்னிடம் தோற்று வெளியேறினார்கள்

அடுத்து மோர் வந்தது. வாங்கிப் பிசைய ஆரம்பித்தேன்.

என் வரிசையில் இருந்தவர்கள் ஒவ்வொருவராக இலையை மூடி எழ ஆரம்பித்தனர். இறுதியாக எனக்கு மிகவும் பிடித்த வத்தக்குழம்பும் வந்தது..

இப்போது அநேகமாக அனைவரும் எழுந்து விட்டனர்...

ஆயாம்மா பேப்பர் ரோலை சுருட்டிக் கொண்டே வந்தார். பாதி குன்று தான் நான் முடித்திருந்தேன்.

என் அருகில் வந்ததும் "பரவாயில்லை.. முடிங்க சார்..." என்று கருணை கூர்ந்தார்..

பரீட்சை ஹாலில் கறாராக பேப்பரைப் பிடுங்கும் ஆசிரியப் பெருமக்களே! ஆயாம்மாவைப் பார்த்துப் படியுங்கள்..

வரிசையில் அமர்ந்து இருந்த புதுமுகங்கள் என்னைக் குரூரமாக பார்க்க ஆரம்பித்தனர்..

எனக்கு வெட்கமாய் போய்விட்டது. மீதம் இருக்கும் வத்தக்குழம்பைப் பிரிய மனமில்லாமல் வாழைப்பழத்தை மேல் ஜோப்பில் போட்டுக்கொண்டு இலையை மூடிட்டு ஒரு கையில் ஐஸ்கிரீம் மறு கையில் ஜாங்கிரியுடன் நான் எழமுற்பட்டபோது..

"சார்! இங்க யாருக்கோ தோசை வரலயாமே.. உங்களுக்கா..?" என்ற குரல் உசுப்பேத்தியது..

திரும்பி அமர்ந்தால் அடி விழும் என்று தெரிந்ததால் "நான் இல்லப்பா.." என்று கூறிவிட்டு கை கழுவச் சென்றேன்.. நிம்மதியாத் திங்க உடமாட்றானுங்க....

படித்ததில் சிரித்தது..

இன்று பெரும்பாலான திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் இது தான் நடைபெறுகிறது.. உணவு வீணடிக்கப் படுகிறது..

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Tit bits in Tamil

Post by thanjavooran »

A share with பொறுப்பு துறப்பு
Mamis are always interesting to watch.

*The Henpecked Mami*

This mami is addicted to the neatness
of Mama in the sense, she just can't do without him a minute around.
Every now and then that 'ஏன்....ணா'
will be heard just to ascertain mama's presence and especially to remind him that
he has to reply with 'என்னடி சொல்லு'.

She feels very happy to see him and
asks him 'செத்த இங்க வர்றேளா'.
The Mama will religiously present himself near her;
but mami will say 'என்னத்துக்கு கூப்டேன்னு மறந்துட்டேன்;
வயசாயிண்டு வர்றது'.
Mama will say 'சரி நான் போரேன்'.
Mami will swiftly retort 'வந்துட்டேளோன்னோ, இப்படி சித்த உக்காருங்கோ'.
என்ன அங்க அஞ்சு ஃபைல்ல கையெழுத்து போடறது தட்டு கெட்டு போறது'.
Mama obeys happily.

*The Monarch Mami*!

She feels, without her the entire house can't move an inch.
The entire house includes our dear Mama also.
She wakes up at 5 a.m. and can't bear
the sight of people sleeping;
of all the people, mama.
Prepares coffee and keeps it with a
'டக்' sound on the table saying 'இந்தாங்கோ காப்பி'.

After two seconds 'என்ன காப்பி நன்னாயிருக்கா..........'
It's a rhetoric question.
A 'no' as an answer is a sin and
mama will NEVER utter it.
He will simply say 'ம்ம்'.

Mami's reaction 'என்ன ம்ம்'.
'நன்னாதான் இருக்குன்னு வாயத் திறந்து சொல்றது'.

Entire day goes like this and
mama doing everything only after receiving the command, or else, fearing to be branded as 'அசட்டு ப்ராம்மணன்' ;
ஒரு எழவும் தெரியாது'.

But all said and done, this mami loves mama very much 'அய்யோ, நான் இல்லேன்னா அவர் திண்டாடிப் போவார் பாவம், மாமா குழந்தை மாதிரி'.

*The Ever Conscious Mami*

This dear mami is always conscious about how she looks.
Strives to keep her good figure prim and proper, neat and tidy; everything including Mama.
Dyes her hair and orders mama also to do so.
'Very disciplined and principled' she will call herself.
All the others are 'ஊழல்' as far as she is concerned.
Will try anything related to exercise & health, but miserably will not continue.

She will buy the அங்குசம் first like,
if it is yoga, then yoga pants, yoga mat etc. Mama will sincerely do a research on internet about the best deals on shoe and mat with Amazon or Flipkart and orders; but ends up with mami saying 'it's not very nice; it's ok only'.
She goes from walking to yoga to meditation etc but only for ten days...
...... stops with a complaint about the coach not being good.
Not her mistake.
She never commits any mistakes.

*Caring nd submissive Mami*

The typical 'இந்த மனுஷன கல்யாணம் பண்ணி என்ன சுகத்த கண்டேன்' Mami.

A very dedicated sincere mami, running
to the errands of mama, never leaving him for a second.
Mama always calls 'டீ, அதக் கொண்டா'. Mami ' இதோ வந்துட்டேன்.....ணா' type.

Over phone when mama brags, I bought this and that to others, Mami will say 'ஊக்கும், நான் பொண்ணா பொறந்து சீனிவாச அய்யங்காருக்கு வாக்கப் பட்ட மாதிரி இருக்கு. இதுக்கு பெருமை வேற'

But Mamis and Mamas are always really interesting .

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Tit bits in Tamil

Post by thanjavooran »

A share
மனதை பிசைந்த ஒரு சிறுகதை இது.

உறவுகளே தாயின் மீது பாசம் உள்ளவர்கள் இக்கதையை படித்தவுடன் உங்கள் கண்களில் விழியோரம் கண்ணீரை வரவழைக்கும்.

அந்தப் பெண்ணைச் சமையல்வேலைக்கு வைத்துக் கொள்ளும்படியாக டாக்டரின் மனைவி வித்யா தான் சிபாரிசு செய்திருந்தாள்.

வித்யாவிற்கு அவளை எப்படித் தெரியும் எனத் தெரியவில்லை. வாசல்கதவை ஒட்டி நின்றிருந்த அந்தப் பெண்ணிற்கு ஐம்பது வயதிருக்கக் கூடும். ஆனால் தோற்றம் நடுத்தர வயது பெண்ணைப் போலவே இருந்தது.

மெலிந்திருந்த போதும் களையான முகம். நீண்ட கூந்தல். கவலை படிந்த கண்கள். அந்தப் பெண்ணின் கையில் துணிப்பை ஒன்றிருந்தது.

உன் பேரு என்னம்மா எனக்கேட்டேன்

கோகிலம்` என்றாள்

கோகிலாவா` என மறுபடியும் கேட்டேன்.

இல்லைங்கய்யா கோகிலம்` என அழுத்தமாகச் சொன்னாள்.

இப்படி ஒரு பெயரை முதன்முறையாக இப்போது தான் கேட்கிறேன்.

எந்த ஊர்` எனக்கேட்டேன்.

தெக்கே சார். பிள்ளைகுட்டிகள் யாருமில்லை. புருஷன் காலமாயிட்டார். இரண்டு வருசமா தாம்பரத்துல ஒரு வீட்ல வேலைக்கு இருந்தேன். அவங்க இப்போது துபாய்க்கு வேலை மாறிப்போயிட்டாங்க`. என்றாள்

எவ்வளவு சம்பளம் எதிர்பார்க்குறே

நீங்க குடுக்குறதை குடுங்க. ஆனா தங்க இடமும் சாப்பாடும் தரணும்

இதுவரை எந்த வேலைக்காரியையும் என் வீட்டோடு தங்கியதில்லை. அப்படித் தங்கிக் கொள்ளும்படியான தனியாக அறை எதுவும் எனது வீட்டில் இல்லை.

வீடு சின்னது, இதுல நீ எங்கம்மா தங்குவே` எனக்கேட்டேன்

கிச்சன்லயே படுத்துகிடுவேன். இந்தப் பையை வைக்க இடம் இருந்தா போதும்`. என்றாள்

அவள் குரலில் இருந்த துயரம் அவளது இயலாமையைத் துல்லியமாக வெளிப்படுத்தியது

என் மனைவியும் அவளிடம் ஏதேதோ கேள்விகள் கேட்டாள்.

முடிவில் அவளைச் சமையல்வேலைக்கு வைத்துக் கொள்வது என முடிவானது.

சாப்பாட்டின் ருசி என்பது வீட்டுக்கு ஒரு மாதிரியானது. அதுவும் பலஆண்டுகளாக ருசித்துப் பழகிவிட்டால் வேற்று ஆளின் சமையலை சாப்பிட முடியாது. என் மனைவி மிகவும் நன்றாகச் சமைப்பாள். ஆகவே புதிய சமையற்காரியின் சாப்பாட்டினை எப்படிச் சாப்பிடுவது என யோசனையாக இருந்தது.

ஆனால் என் மனைவி கால்முறிவு ஏற்பட்டுப் படுக்கையில் கிடந்து இப்போது தான் தேறி வருகிறாள். ஆகவே புதிதாகச் சமையலுக்கு ஆள் வைத்துக் கொள்ள வேண்டிய தேவை உருவாகியது

கோகிலம் சமைக்கத் துவங்கிய முதல்நாள் அவள் போட்டுக் கொடுத்த காபி. செய்து வைத்த சட்னி, சாம்பார் எதுவும் எனக்குப் பிடிக்கவில்லை.

என் மனைவி அவளைக் கோபத்தில் திட்டவே செய்தாள்.

மறுநாள் கோகிலம் சமைத்த போது முட்டைக்கோஸ் வேகவைத்த வானால் கருகிப்போய்விட்டது.

அடுப்பை கவனிக்காமல் என்ன யோசனை `என என் மனைவி அவளிடம் சண்டையிட்டாள்

இல்லம்மா. என்னை அறியாமல் ஏதோ நினைப்பு வந்துருது. அந்த நினைப்பு வந்தவுடன் அழுகை அழுகையாக வருது என்றாள் கோகிலம்

நீ ஒப்பாரி வைக்கிறதுக்கு என் வீடு தானா கிடைச்சது. கவனமா வேலை பாக்குறதா இருந்த இரு. இல்லே. வேற வீடு பாத்துக்கோ` என என் மனைவி அவளை விரட்டினாள்

கோகிலம் சேலை முந்தானையால் அழுகையைத் துடைத்தபடியே சரிம்மா என்று கரிபிடித்த வாணலியை கிழே இறக்கிவைத்தாள்.

கோகிலம் எப்போது சாப்பிடுவாள். எப்போது குளிப்பாள் என யாருக்கும் தெரியாது. நாங்கள் எழுந்து கொள்வதற்கு முன்பாக அவள் குளித்துத் தயராகிக் காபி டிக்காஷனை போட்டு வைத்திருப்பாள்.

சமையற்கட்டின் ஒரத்தில் எதையும் விரித்துக் கொள்ளாமல் வெறும் தரையில் தான் படுத்துக் கொள்வாள். சமையல் வேலையில்லாத நேரங்களில் டிவி பார்ப்பதோ, அரட்டை அடிப்பதோ எதுவும் கிடையாது.

அவளாகவே கடைக்குச் சென்று காய்கறிகள் வாங்கி வருவாள். பைசா சுத்தமாகச் சில்லறை மீதம் தந்துவிடுவாள்.

சமையல் வேலைகள் தவிர்த்து வீட்டை சுத்தம் செய்வது. பூச்செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது. படுக்கை விரிப்புகளைச் சுத்தம் செய்வது. செருப்பைக் கழுவி துடைத்து வைப்பது எனச் சகல காரியங்களையும் கர்மசிரத்தையாகச் செய்து கொண்டிருந்தாள்.

பத்து நாளில் அவளது சாப்பாடு எங்களுக்குப் பிடித்துப் போகத் துவங்கியது.

வீட்டில் நானும் என் மனைவியும் மட்டுமே இருந்தோம்.

மூத்தமகன் மும்பையில் தன் மனைவி பிள்ளைகளுடன் இருந்தான். இளைய மகள் டெல்லியில் வசித்து வந்தாள். அவர்கள் விடுமுறைக்கு வருவதோடு சரி. நான் வங்கிப்பணியில் ஒய்வு பெற்றவன் என்பதால் அடிக்கடி நண்பர்கள் என்னைப் பார்க்க வீடு தேடி வருவதுண்டு.

அப்படி ஒருமுறை நாலைந்து நண்பர்கள் வந்திருந்த போது கோகிலம் கேரட் அல்வா செய்திருந்தாள்.

அப்படி ஒரு சுவையான அல்வாயை சாப்பிட்டதேயில்லை என நண்பர்கள் புகழாரம் செய்தார்கள். அல்வா எடுத்த ஸ்பூனை வழித்துத் தின்றான் ஒரு நண்பன். கோகிலம் அந்தப் பாராட்டுகளைக் கேட்டுக் கொண்டதோடு சரி. அதை நினைத்து பெருமைப்பட்டதாகவோ, சந்தோஷம் கொண்டதாகவே தெரியவில்லை.

விதவிதமான சிற்றுண்டிகள், காய்கறி வகைகள், துவையல்கள், இனிப்பு வகைகள் எனச் செய்து கொடுத்தபடியே இருந்தாள்.

மாத சம்பளத்தை அவளிடம் தந்த போது நீங்களே வைத்துக் கொள்ளுங்கள், தேவைப்படும்போது வாங்கிக் கொள்கிறேன் என்றாள்

உண்மையில் அவள் வந்த ஒரு மாத காலத்தில் நானும் என் மனைவியும் ஒரு கிலோ எடை அதிகமாகி இருந்தோம். கோகிலம் என் மனைவியின் தங்கையைப் போலவே ஆகியிருந்தாள்.

ஒரு நாளில் ஆயிரம் முறை கோகிலம், கோகிலம் என என் மனைவி அவளை அழைத்தபடியே இருந்தாள். அவளும் சுணக்கமின்றி ஓடோடி வந்து உதவிகள் செய்தாள்.

சில நேரம் நாங்கள் சினிமாவிற்குப் போகும்போது அவள் வீட்டில் தனியாக இருப்பாள்.

ஒருமுறை நாங்கள் திருப்பதி போய்வந்த போது இரண்டு நாட்கள் அவள் மட்டுமே வீட்டிலிருந்தாள்.

வீடே காலியாக இருந்தாலும் அவள் சமையற்கட்டில் தான் உறங்கினாள். ஒரு பைசாவை எடுத்து செலவழிக்கவில்லை. சுவையான எந்த உணவையும் சாப்பிடுவதில்லை.

ஒருமுறை கோகிலம் சாப்பிடும் போது மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தேன் வெறும்சோறு. அதில் கொஞ்சம் தண்ணீர். உப்பு கூட போட்டுக் கொள்ளவில்லை தொட்டுக் கொள்ள ஊறுகாய்.

ஏன் இந்த பெண் இப்படிப் பிடிவாதமாகயிருக்கிறாள் என ஆத்திரமாக வந்தது. என் மனைவியிடம் சொல்லி அவள் விரும்பியதை சாப்பிடும்படியாகச் சொன்னேன்.

அதைக்கேட்டு என் மனைவி சொன்னாள் நானும் சொல்லிப்பார்த்து விட்டேன். அவங்க கேட்கமாட்டாங்க

மும்பையில் இருந்து என் மகனும் மருமகளும் பேரப்பிள்ளைகளும் வந்திருந்த போது கோகிலத்தின் விருந்தை சாப்பிட்டு மயங்கிப் போனார்கள்.

தன்னோடு அவளை மும்பைக்கு அழைத்துப் போய்விடுகிறேன் என மகன் சொல்லிக் கொண்டேயிருந்தான். மருமகளும் கூடக் கூப்பிட்டாள்.

ஆனால் கோகிலம் மறுத்துவிட்டாள். கோகிலம் எதற்கும் ஆசைப்படவில்லை.

கோகிலத்திற்காக நாங்கள் வாங்கிக் கொடுத்த புடவைகள் எதையும் அவள் கட்டிக் கொள்ளவில்லை.

அப்படியே ஒரு பையில் போட்டு வைத்திருந்தாள்.

ஒரு நாள் கூட உடல்நலமில்லாமல் ஒய்வெடுக்கவோ, சலித்துக் கொள்ளவோயில்லை.

கோகிலத்தின் வேலை பிடித்துப்போகவே அவளுக்கு மாத சம்பளம் ஆறாயிரத்திலிருந்து எட்டாயிரம் தரலாம் என்ற யோசனையை என் மனைவி தான் சொன்னாள்.

அதைப்பற்றி அவளிடம் சொன்ன போது உங்க இஷ்டம் என்று மட்டும் தான் சொன்னாள்

என்ன பெண்ணிவள். எதற்காக இப்படிப் பகலிரவாக வேலை செய்கிறாள். சம்பளத்தைப் பற்றிப் பெரிதாக நினைப்பதேயில்லை. யாரைப்பற்றியும் ஒரு வார்த்தை தவறாகப் பேசியதில்லை. தன் கஷ்டங்களைச் சொல்லி புலம்பியதில்லை. இவளைப் போல வேலையாள் கிடைப்பது கஷ்டம் என நினைத்துக் கொண்டேன்.

ஒரு நாள் கோகிலம் என்னிடம் தயக்கத்துடன் கேட்டாள் நாளைக்குக் காலையில பூந்தமல்லி வரைக்குப் போயிட்டு வரணும். அரை நாள் லீவு வேணும் ஐயா.

என்ன வேலை` என்று கேட்டேன்.

பதில் சொல்லவில்லை. பேசாமல் நின்று கொண்டிருந்தாள்.

சரி போயிட்டு வா என்றேன்.

டிபன் செஞ்சிடும் போதே மதிய சமையலும் சேத்து வச்சிட்டு போயிடுறேன். வர்றதுக்கு மூணு மணி ஆகிடும்` என்றாள்.

அதையெல்லாம் நாங்க பாத்துகிடுறோம். நீ போயிட்டு வா

அம்மாவுக்குத் தைலம் தேய்ச்சி குளிக்க வைக்கணும். அதைச் சாயங்காலம் செய்துக்கலாம்

அதெல்லாம் பிரச்சனையே இல்லை கோகிலம்` என அனுப்பி வைத்தேன்

அவள் மறுநாள் காலை எட்டுமணிக்கு வெளியே கிளம்பி போனாள். என் வீட்டிற்கு வந்த ஆறுமாதங்களில் முதன்முறையாக அப்போது தான் வெளியே கிளம்பி போயிருக்கிறாள் தன் வேலையாக

யாரைப்பார்க்க போகிறாள். என்ன வேலையாக இருக்கும். என யோசித்துக் கொண்டேயிருந்தேன்.

என் மனைவி கோகிலம் சில சமயம் காசை முடிந்து வைத்து சாமி கும்பிடுவதைக் கண்டிருப்பதையும். ஒருவேளை கோவிலுக்குப் போய்வரக்கூடும் என்றும் சொன்னாள்

கோவிலுக்குப் போவதற்குச் சொல்லிக் கொண்டு போகலாம் தானே` என்று கேட்டேன்

அது அவங்க சுபாவம். எதையும் யார்கிட்டயும் சொல்லமாட்டாங்க எனச் சிரித்தாள்

அன்று மாலை கோகிலம் நாலு மணிக்கு திரும்பி வந்தாள். அவள் முகம் இறுகிப்போயிருந்தது. தன்னை நம்பியவர்களை அப்படியே போட்டுவிட்டு போய்விட்டோம் என்பது போல அவள் மன்னிப்பு கேட்டுக் கொண்டாள்.

வந்த வேகத்தில் அடுப்பை பற்றவைத்து சுவையான உளுந்துவடையும் காபியும் கொடுத்தாள். எங்கே போனாள் யாரை பார்த்து வந்தாள் என எதையும் சொல்லிக் கொள்ளவில்லை.

மறுநாள் என் மனைவி சொன்னாள் கோகிலம் ராத்திரி பூரா அழுதுகிட்டே இருந்தா.

கேட்டா அதெல்லாம் ஒன்றுமில்லேங்கிறா` யாராவது செத்துப் போயிருப்பாங்களா எனக்கேட்டேன்

தெரியலை. ஆனா அவங்களை பார்க்க பாவமா இருக்கு

கோகிலம் மறுநாள் முதல் இயல்பாகிப் போனாள். நாங்கள் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை. பத்துநாட்களுக்குப் பிறகு ஒரு மதியம் காலிங் பெல் அடிக்கும் சப்தம் கேட்டு நான் கதவை திறந்தேன்.

வாசலில் முப்பது வயதுள்ள ஒரு ஆள் நின்று கொண்டிருந்தான்

என்ன வேணும் எனக்கேட்டேன்

எங்க அம்மாவை பாக்கணும் என்றான்

உங்க அம்மாவா. யாரு எனக்கேட்டேன்

கோகிலம்` என்றான் அவன்

கோகிலத்திற்கு யாருமில்லை என்றாளே என்ற குழப்பத்துடன் சமையலறைக்குப் போய் அவளை அழைத்தேன்

வெளியே வந்தவளின் முகம் அவனைப் பார்த்தவுடன் மாறியது

இங்க எதுக்கு வந்தே எனக்கேட்டாள்

உன்னை யாரு இங்க வந்து வீட்டுவேலை செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தினா. உன் தலைவிதியா` எனக்கேட்டான் அந்தப் பையன்

நான் உழைச்சி சாப்பிடுறேன். உன்னை என்னடா பண்ணுது. அதான் எல்லாத்தையும் குடுத்துட்டேனே. இன்னும் என்ன வேணும்` என முறைத்தபடியே கேட்டாள்

அம்மா. நான் செஞ்சது தப்பு தான். அதுக்காக நீ யாரோ வீட்ல வந்து எதுக்கு வேலை செய்ற. சும்மா உட்கார்ந்து சாப்பிட்டா கூட முப்பது வருஷம் சாப்பிடலாம்.

சொத்த வித்த பங்குல உனக்குச் சேர வேண்டியது இரண்டு கோடி வந்துருக்கு. அது உனக்குத் தான் என்றான்

அது ஒண்ணும் என் பணமில்லை. காசு காசுனு நீ தானே அலையுறே. நீயே வச்சி அனுபவி` என்றாள் கோகிலம்

உனக்கு வேணாம்னா போ. ஆனா நாளைக்கு உனக்கு ஏதாவது ஒண்ணுன்னா கொள்ளி போட நான் தான் வந்தாகணும். அதை மறந்துராத என்றான் மகன்

ஏன் நான் செத்தா இவங்க எடுத்து போட மாட்டாங்களா எனக்கேட்டாள்

அதைக் கேட்டதும் எனக்குச் சிலீர் என்றது.

அந்தப் பையன் சொன்னான் உனக்குக் காசோட அருமை தெரியலை. இரண்டு கோடியை வேணாம்னு சொல்லுறே பெத்த தாயேனு தான் திரும்ப வந்து நீயே வச்சிக்கோனு குடுக்குறேன். வேற யாராவது இருந்தா முழுங்கி ஏப்பம் விட்ருப்பான்

நீயும் வேணாம் உன் கோடி ரூபாயும் வேணாம். கிளம்பு. இனிமே என்னைத் தேடிகிட்டு இங்க வந்தா செருப்பாலே அடிப்பேன் போடா எனச் சொல்லிவிட்டு சமையல் அறைக்குள் போய்விட்டாள்

அந்தப் பையன் என்னை முறைத்தபடியே வெளியே போனான்.

கோகிலம் பேசியதை எல்லாம் கேட்டதும் எனக்குத் திகைப்பாக இருந்தது. கோகிலம் வெறும் வேலைக்காரியில்லை இரண்டு கோடி பணமுள்ளவள்.

அதை விடவும் வசதியாக வாழ்ந்தவள். ஏதோ ஒரு பிடிவாதம் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி வந்து வேலைக்காரியாக இருக்கிறாள்.

கோகிலத்திடம் நாங்கள் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை.

ஆனால் அன்றிரவு அவளாகவே வந்து சொன்னாள்

எங்க வீட்டுக்காரு பெரிய டிராவல்ஸ் வச்சிருந்தாரு. பூந்தமல்லியில பெரிய வீடு. நாலு கார் இருந்துச்சி. நல்லா சம்பாதிச்சி மெயின்ரோட்ல ஒரு கல்யாண மண்டபம் கட்டி வாடகைக்கு விட்டிருந்தாரு. பம்மல்ல இரண்டு ஏக்கர் விவசாய நிலமும் இருந்துச்சி.எங்க வீட்லயும் ரெண்டு பேரு வேலைக்காரிகள் இருந்தாங்க. எங்க வீட்டுக்காரருக்கு தினமும் சாப்பாடு ருசியா இருக்கணும். விதவிதமா ஆக்கி போடுவேன்.

திடீர்னு ஒரு நாள் பெங்களுர் போயிட்டு வந்துகிட்டு இருந்த என் புருஷன் ரோடு ஆக்சிடெண்டில் செத்துப்போயிட்டாரு.

கண்ணைக் கட்டி காட்டுல விட்டது மாதிரி ஆகிருச்சி. என் மகனே என்னை ஏமாத்த ஆரம்பிச்சிட்டான். அவனுக்குச் சேர்க்கை சரியில்லை.

ஒரு வருசத்துக்குள்ளே ஊர்பட்ட கடன். அவனுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வச்சேன்.

வந்தவ இன்னும் மோசம். ரெண்டு பேரும் சேந்துகிட்டு என்னை வீட்டை விட்டு துரத்தி அடிச்சிட்டாங்க.

அப்புறம் வீட்டுவேலை செய்து பிழைச்சிகிட்டு இருக்கேன்.

எப்படி வாழ்ந்த நாம இப்படி ஆகிட்டோம்னு நினைச்சி தான் வெறும் சோத்தை சாப்பிடுறேன். அதுலயும் உப்புப் போடுறது கிடையாது.

பெத்து வளர்ந்த மகனே என்னை அடிச்சி விரட்டிட்டான்.

ஆனாலும் மனசு கேட்க மாட்டேங்குது. அவன் நல்லா இருக்கணும்னு காசு முடிச்சி போட்டு சாமி கும்பிட்டுகிடுவேன்.

எனக்குனு யாருமேயில்லை. அதான் இருக்கிற காலத்தை உங்கள மாதிரி யார் வீட்லயாவது ஒடிட்டு முடிச்சிரலாம்னு நினைச்சிட்டு இருந்தேன்.

முந்தநாள் பஜார்ல என் மகனை பார்த்தேன். கல்யாண மண்டபத்தை விக்கப் போறேன். உன் கையெழுத்து வேணும். பத்திர ஆபீஸ்க்கு வந்துருனு சொன்னான் அதைப் போட தான் நேத்து போனேன். எட்டு கோடி ரூபாய் வந்துச்சி.

அதுல என் பங்கு ரெண்டு கோடி வச்சிக்கோனு குடுத்தான். உன் பிச்ச காசு எனக்கு வேணாம் போனு உதறிட்டு வந்துட்டேன். நான் செஞ்சது சரி தானே ஐயா

எனக்கு அவள் பேசியதை கேட்க கேட்க மனதில் பாரமேறியது. தொண்டை வலித்தது.

இதை முன்னாடியே சொல்லியிருக்கலாம்லே

வசதியா இருந்த ஆளை யாரு வேலைக்கு வச்சிகிடுவா

அதுக்கா ஏன் வீட்டுவேலை செய்து கஷ்டப்படுறே. அந்தப் பணத்தை வாங்கிப் பேங்கிலப் போட்டுட்டு காலாட்டிகிட்டு வாழலாம்லே எனக்கேட்டாள் என் மனைவி

நம்மாலே அப்படி வாழ முடியாதும்மா. நமக்கெல்லாம் உழைச்சி சாப்பிடணும். அது அநாமத்தா வந்த பணம். அதை வச்சிருந்தா ஆயிரம் பிரச்சனை கூட வரும். அந்தக் கருமம் எனக்கு வேணாம்.

சோறு போடுறதுக்கு நீங்க இருக்கீங்க. படுக்க இடம் இருக்கு இது போதும்மா என்றாள் கோகிலம்

அவள் சொல்வது உண்மை. ஆனால் இவளை போன்ற துணிவும் மன உறுதியும் எங்களுக்கு இருக்குமா என யோசனையாக இருந்தது.

என் மனைவி அவளிடம் திரும்பத் திரும்பப் பணம் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள். கோகிலம் அது தன்னுடைய பணமில்லை. தன்னைப் பெற்ற மகனே ஏமாற்றியபிறகு யாரையும் நம்பத் தயராகயில்லை“ என உறுதியாகச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

சரி அவள் இஷ்டம். எப்போதும் போல அவள் இந்த வீட்ல் இருக்கலாம். இனி அவளுக்கு எந்த ஆலோசனையும் சொல்ல மாட்டோம் என நாங்கள் முடிவு செய்தோம்

மறுநாள் விடிகாலையில் நாங்கள் எழுந்து வந்த போது கோகிலம் சமையல் அறையில் இல்லை. சிறிய கடிதம் மட்டுமே இருந்தது

அன்பு மிக்க நடராஜன் அய்யா, அம்மாவிற்கு இத்தனை நாட்கள் எனக்குச் சாப்பாடு போட்டு தங்க இடம் கொடுத்ததிற்கு நன்றி.

நான் யார் என்று தெரிந்தபிறகு முன்பு போல என்னை வேலை சொல்ல உங்களுக்கு மனம் வராது. ஒவ்வொரு முறையும் என்னைப் பார்க்கும் போதும் இரண்டு கோடி ரூபாய் உங்கள் நினைவில் வந்து போகும். அது எனக்கும் சிரமம். உங்களுக்கும் சிரமம்.

ஆகவே வேறு ஊருக்கு வேலைக்குப் போகிறேன். இதுவரை நீங்கள் சேர்த்து வைத்துள்ள என் சம்பள பணத்தை அம்பத்தூரில் உள்ள அநாதை காப்பகத்திற்குக் கொடுத்துவிடவும்.

அம்மாவிற்குத் தைலம் தேய்த்துவிட முடியாமல் போய்விடுகிறதே என்று மட்டும் தான் எனக்குக் கவலை.

என் சாப்பாடு உங்கள் இருவருக்கும் பிடிந்திருந்தது என்பது மகிழ்ச்சி.

பலசரக்கு கடைக்காரன் 26 ரூபாய் பாக்கி தர வேண்டும். ஞாபகமாக கேட்டு வாங்கவும்

பால் பாக்கெட் ஒன்று கூடுதலாகப் போட வேண்டும் அதையும் கேட்டு வாங்கவும்

உங்கள் இருவரின் நினைவாக ஒரேயொரு டம்ளரை எடுத்துப் போகிறேன். அதில் தண்ணீர் குடிக்கும் போதெல்லாம் உங்களை நினைத்துக் கொள்வேன்

இப்படிக்கு
உங்கள் வேலைக்காரி கோகிலம்

என எழுதியிருந்தாள். அந்தக் கடிதத்தைப் படித்து முடிந்தவுடன் வேதனைபீறிட்டது

என் மனைவி படித்துவிட்டு வாய்விட்டு அழுதாள்

நமக்கு தான் புத்தியில்லை. ஆள பாத்து தப்பா எடைபோட்டுட்டோம். விதவிதமா நமக்குச் சமைச்சி போட்டு கவனிச்சிட்டா. அவளுக்கு நாம ஒண்ணுமே பண்ணலே. இந்தப் பாவத்துக்கு என்ன பரிகாரம் பண்ணப்போறோம் சொல்லுங்க“

எனக்கும் என்ன செய்வதெனத் தெரியவில்லை

சமையல்கட்டின் ஓரம் நாங்கள் கொடுத்த புதுப்புடவைகள் அத்தனையும் ஒரு பையில் அப்படியே இருந்தன. அதைக் கையில் எடுத்துப் பார்த்தபோது என் மனைவி வெடித்து அழத் துவங்கியிருந்தாள்

இப்படியும் மனிதர்கள் வையகத்தில் உள்ளனர் என நினைக்கும் போது நமது மனதும் சற்றே கணக்கிறது உறவுகளே
ஆயிரம் வலிகளை தாங்கிகொண்டு ஆசை ஆசையாய் பெற்றெடுத்த தாயை மட்டும் எந்த நிலை வந்தாலும் கைவிட்டுவிடாதீர்கள்..
அவர்கள் கண்ணீர் சிந்தினால் நாம் வாழ தகுதி இல்லாதவர்கள் என்று தான் அர்த்தம்...
எந்த நிலை வந்தாலும் வந்த நிலை மறவாதே... தாயே துணை!

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: Tit bits in Tamil

Post by vgovindan »

Thanjavooran,
இதனைக் கதையாகவோ, கற்பனையாகவோ சிலர் கருதலாம். ஆனால் இப்படிப்பட்ட மனிதர்கள் இருக்கின்றார்கள் - நான் அறிவேன். அதனால்தான் மனித இனம், தான் செய்யும் அட்டூழியங்களுக்காக, இன்னும் அழியாமல் உள்ளது.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Tit bits in Tamil

Post by thanjavooran »

ஒரு பகிர்வு
> .🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻அற்புதமான சம்பவம்........கண்ணீருடன் தாயுக்கு சமர்ப்பனம்....
> #இலையும்_சருகும்🔄
>
> பாட்டி விசாலத்தின் பெயரை முதியோர் இல்லத்தில் பதிவு செய்து விட்டு வந்த பின்னும் மூன்று நாட்களாக அந்தத் தகவலை தாயிடம் சொல்லத் தயங்கினான் சதீஷ்.
>
> ""ஏன் இப்படி பயந்து சாகறீங்க?'' என்று எரிந்து விழுந்தாள் அவன் மனைவி சத்யா.
>
> ""இல்லை... அம்மாவுக்கு இது பெரிய ஷாக்காய் இருக்கும்''
>
> ""இதப்பாருங்க... மாமியாரைப் பார்த்துக்கலாம். அது என் டியூட்டி. ஆனா, மாமியாரோட மாமியாரைப் பார்த்துக்கறதெல்லாம் டூ மச்...''
>
> அவன் ஒன்றும் சொல்லாமல் மவுனமாய் இருந்தான்.
>
> ""அடுத்த வாரம் அனுப்பணும்ன்னா இப்பவே சொன்னாத் தான் அவங்களுக்குப் பேக் பண்ண டைம் கிடைக்கும். சைக்காலஜிக்கலா தயாராகவும் முடியும். கிழவி இப்ப கோவிலுக்குப் போயிருக்கா. அதனால, இப்பவே போய் உங்க அம்மாவிடம் சொல்றீங்க, நீங்க''
>
> மனைவியிடம் வழக்கம் போல் தலையசைத்தான் சதீஷ். தயக்கத்துடன் ஹாலில் புத்தகம் படித்துக் கொண்டிருந்த அம்மா முன் சோபாவில் உட்கார்ந்தான்.
>
> புத்தகத்திலிருந்து பார்வையை எடுத்து மகனைப் பார்த்தாள் ஜானகி.
>
> ""அம்மா... நான் பாட்டி பேரை முதியோர் இல்லத்தில் பதிவு செஞ்சிருக்கேன், அட்வான்சும் கொடுத்துட்டேன்''
>
> ஜானகியின் கையில் இருந்த புத்தகம் நழுவிக் கீழே விழுந்தது. அவள் அதிர்ச்சியுடன், ""என்னடா சொல்றே?'' என்றாள்.
>
> தர்ம சங்கடத்துடன் தங்கள் அறைக் கதவு அருகே நின்ற சத்யாவைப் பார்த்தான் சதீஷ். அவள், "தைரியமாய் பேசுங்கள்' என்று சைகை காண்பித்தாள்.
>
> கீழே விழுந்த புத்தகத்தை மேஜை மீது வைத்து அதைப் பார்த்தபடியே சொன்னான் சதிஷ்...
> ""இவ்வளவு வருஷமாய் பாட்டியை நாம பார்த்துகிட்டாச்சும்மா, இனிமேயும் பார்த்துக்கறது கஷ்டம்மா''
>
> ""பாட்டி நல்லாத் தானே இருக்காங்க அவங்கள பார்த்துக்கிறதில் கஷ்டம் என்னடா இருக்கு?''
> அவன் பதில் சொல்லவில்லை.
>
> தன் கோபத்தை அப்படியே விழுங்கிக் கொண்டு சொன்னாள் ஜானகி...
>
> ""சதீஷ் என் சித்தி கொடுமைக்காரின்னு, உன்னை பிரசவிக்க அவங்க எங்க வீட்டுக்குக் கூட என்னை அனுப்பாம தானே பிரசவம் பார்த்தவங்கடா''
>
> ""அதுக்காக தான் அப்பா செத்தப்பறம் கூட அவங்களை வெளியே அனுப்பாம நீயே இத்தனை வருஷம் பார்த்துகிட்டியேம்மா...''
>
> ""உன்னோட பி.ஈ., படிப்புக்கு பீஸ் கட்ட தன்கிட்ட இருந்த கடைசி நகையைக் கூட வித்தவங்கடா அவங்க''
>
> ""அதுக்காக தான் மாசா, மாசம் முதியோர் இல்லத்தில் ஆயிரத்து 500 ரூபாய் கட்ட ஒத்துக்கிட்டேன்மா''
>
> ""நாம இருக்கறப்போ ஒரு அனாதை மாதிரி அவங்களை ஏண்டா அங்க சேர்க்கணும்?''
>
> ""பாட்டிக்கு நாம மட்டும் இல்லையேம்மா. அத்தை கூட இருக்கா இல்லையா? வேணும்ன்னா, பெத்த பொண்ணு கூட கொஞ்ச நாள் இருக்கட்டுமே...''
>
> ""அவ அவங்களுக்கு ஒரு வேளை சோறு ஒழுங்கா போட மாட்டாடா''
>
> ""அது தெரிஞ்சு தான் முதியோர் இல்லத்தில் சேர்க்க நாங்க முடிவு செஞ்சோம்''
>
> "பொறுமையாக இரு' என்று தனக்குள் பல முறை சொல்லிக் கொண்டு மகனைக் கேட்டாள் ஜானகி...
>
> ""பாட்டியால உங்களுக்கு என்னடா தொந்தரவு? ஏன் அனுப்ப முடிவு செஞ்சீங்க?''
>
> தங்கள் அறைக் கதவைப் பார்த்தான் சதீஷ். உள்ளே போயிருந்தாள் சத்யா.
> வேறு வழியில்லாமல் உண்மையை அவன் சொன்னான்...
> ""பாட்டி இங்க இருக்கறது சத்யாக்கு பிடிக்கலைம்மா''
>
> மகனை அருவெறுப்புடன் பார்த்தாள் ஜானகி. அவளுக்குள் ஏற்பட்ட பூகம்பம் அடங்க சிறிது நேரம் பிடித்தது.
> பின் உடைந்த குரலில் மகனிடம் சொன்னாள்...
>
> ""சதீஷ் நல்லா யோசிடா... இது சரியில்லைடா''
>
> ""நாங்க நல்லா யோசிச்சாச்சும்மா''
>
> மவுனமாக கண்களை மூடி சிறிது நேரம் அமர்ந்திருந்தாள் ஜானகி.
>
> ♥""உனக்கு அவங்க கிட்டே சொல்ல கஷ்டமாய் இருக்கும்ன்னு எனக்குத் தெரியும். பக்குவமாய் நானே அவங்க கிட்ட சொல்றேன்மா''
>
> ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்தாள் ஜானகி.
>
> சிறுவயதிலேயே தாயை இழந்து சித்தியிடம் பல கொடுமைகளை அனுபவித்த ஜானகி, தன் திருமணத்திற்குப் பிறகு மாமியார் விசாலத்திடம் ஒரு தாயையே பார்த்தாள். சூது, வாது தெரியாத, நேசிக்க மட்டுமே தெரிந்த விசாலமும் தன் மருமகளை மகளாகவே பாவித்தாள்.
>
> ஜானகியின் நாத்தனார் கிரிஜா, தன் தாயைப் போல யதார்த்தமானவளாக இருக்கவில்லை. அவள் ஜானகியைப் பற்றி இல்லாததும், பொல்லாததும் தன் தாயிடம் சொல்வதை பலமுறை கேட்டிருக்கிறாள் ஜானகி.
>
> அப்போதெல்லாம், "சும்மா வாயிற்கு வந்தபடி பேசாதேடி' என்று மகளை விசாலம் அடக்கினாளே தவிர, என்றுமே அது பற்றி அவள் மருமகளிடம் விசாரித்தது கூட கிடையாது. மகள், மருமகளின் பிரசவத்தை தான் ஒருத்தியே பார்த்துக் கொண்டாள்.
>
> ஒரு விபத்தில் கணவன் அற்ப ஆயுசில் இறந்து போகும் வரை ஜானகியின் வாழ்வு சந்தோஷமாகவே இருந்தது. அண்ணனின் சாவிற்கு வந்த கிரிஜா, தன் தாயைத் தன்னுடன் அனுப்பி விடுவரோ என்று பயந்து பிணத்தை எடுத்த மறுகணம் அங்கிருந்து மாயமாகி விட்டாள்.
>
> பெரிய சேமிப்போ, சொத்தோ இல்லாத அவர்கள் குடும்பத்திற்கு உதவ உறவினர்கள் யாரும் இருக்கவில்லை நிராதரவாக நின்ற ஜானகிக்கு, அவள் மன உறுதியும், அவளது ருசியான சமையலும் கை கொடுத்தன. அவள் ஒரு கல்லுரிக்கு அருகே மெஸ் ஒன்றை ஆரம்பித்தாள். மாமியாரும், மருமகளும் ஓடாய் உழைத்தனர்.
>
> சில வருடங்களுக்குப் பிறகு விசாலத்தின் முதுமை அவளை உழைக்க ஒத்துழைக்கவில்லை. மாமியாரை உட்கார வைத்து ஜானகி ஒருத்தியே மெஸ்ஸை நடத்தினாள்.
>
> "உனக்கு நானும் பாரமாய் இருக்கேன் ஜானகி' என்று புலம்பினாள் விசாலம்.
>
> "சும்மா பாரம், கீரம்ன்னு பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீங்க அத்தை. என்னை பிறந்த வீட்டுக்குக் கூட அனுப்பாம நீங்களே பிரசவம் பார்த்தீங்க. அப்போ நீங்க என்னைப் பாரம்ன்னு பார்த்தீங்களா'
>
> "ஒரு பிரசவத்தைப் பார்த்ததைப் பத்தி நீ இன்னும் பேசறே... என் பொண்ணுக்கு மூணு பிரசவம் பார்த்தேன். பெத்து வளர்த்த தாயை இப்ப அவ எட்டிக் கூட பார்க்க மாட்டேன்ங்கிறா'
>
> விசாலம் என்ன சொன்னாலும் ஜானகிக்கு மாமியார் ஒரு பாரமாய் தோன்றவில்லை. விசாலம் வெற்றிலை பாக்கு சாப்பிட்டுக் கொண்டும், பக்கத்து வீட்டு லட்சுமிப் பாட்டியிடம் பழங்கதைகள் பேசிக் கொண்டும் உட்கார்ந்திருக்க, சிரமம் சிறிதும் தோன்றாமல் கடுமையாய் உழைத்து குடும்பத்தை நடத்தினாள் ஜானகி.
>
> சதீஷ் கல்லுரிக்குப் போகும் வரை அந்த மெஸ் வருமானம் அவர்களுக்குப் போதுமானதாகவே இருந்தது. அவன் என்ஜினியரிங் சேர்ந்த பிறகு தான் பற்றாக்குறை ஏற்பட்டது. மாமியாரும், மருமகளும் தங்கள் நகைகளை எல்லாம் விற்று சதீஷைப் படிக்க வைத்தனர். அவன் பி.ஈ., முடித்து அவனுக்கு ஒரு நல்ல வேலை கிடைத்த போது, மெஸ்ஸை அவர்கள் மூடினர்.
>
> பல ஆசிரியர்களும், மாணவர்களும் உண்மையாகவே வருத்தப்பட்டனர். அவ்வளவு ருசியான சமையல் வேறு எங்கும் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்று பின்பு ஜானகியைச் சந்திக்கும் போதெல்லாம் கூறினர்.
>
> சதீஷிற்கு திருமணமாகும் வரை அவர்கள் குடும்பம் சுமுகமாகவே இருந்தது. அவன் மனைவி சத்யா ஒரு வங்கியில் வேலை பார்த்தாள். அவளுக்கு ஆரம்பத்தில் இருந்தே உரத்த குரலில், "டி' போட்டுப் பேசும் விசாலத்தைப் பிடிக்கவில்லை. வீட்டுக்கு வந்த அவளது சிநேகிதிகளின் எதிரிலும் அதே போலப் பேசியது அவளுக்கு பெருத்த அவமானமாக இருந்தது.
>
> ஒரு வேலையும் செய்யாமல், ஒரு பைசாவிற்கும் பிரயோஜனம் இல்லாமல் தண்டமாக இருக்கும் விசாலத்தை, "சுத்த நியூசன்ஸ்' என்று அவள் கணவனிடம் சொல்லாத நாளில்லை.
>
> ஒருமுறை ஏதோ ஒரு வேலையை விசாலத்திடம் சத்யா சொல்ல, அந்த வேலையைத் தானே செய்து விட்டு தன் மருமகளிடம் சொன்னாள் ஜானகி...
>
> "அவங்க காலத்தில் அவங்க வேணும்ங்கிற அளவு வேலை செஞ்சிருக்காங்க. இனிமே உனக்கு ஏதாவது செய்ய ணும்ன்னா நீ என்கிட்டே சொல்லு. நான் செய்யறேன். இந்த வயசான காலத்தில் அவங்க கிட்டே நாம வேலை வாங்கக் கூடாது' அதிலிருந்து ஜானகி இருக்கையில் விசாலத்திடம் பேசுவதை தவிர்த்தாள் சத்யா.
>
> அவர்கள் புதிய வீட்டுக்கும், பக்கத்து வீதியில் இருந்த லட்சுமிப் பாட்டி தினமும் விசாலத்திடம் பேச வருவதை நிறுத்தவில்லை. அந்தக் கிழவியைப் பார்த்தாலும் சத்யாவிற்குப் பிடிக்கவில்லை. தனக்குப் பிடிக்காததை எல்லாம் ஜானகி இல்லாத போது அவள் விசாலத்திடம் முகத்தில் அடித்தாற் போல சொல்லத் துவங்கினாள்.
>
> விசாலம் சப்தமாய் பேசுவது, வெற்றிலை பாக்கு போடுவது, லட்சுமி பாட்டி அவர்கள் வீட்டுக்கு வருவது எல்லாம் ஒரு காலத்தில் நின்று போயின. சத்யா இருக்கும்போது தானிருக்கும் அறையை விட்டு வெளியே வரக் கூடப் பயந்தாள் விசாலம். ஆனாலும், சத்யாவின் வெறுப்பு ஏனோ குறையவில்லை.
>
> விசாலம் வாய்விட்டு ஒன்றும் சொல்லா விட்டாலும், ஜானகிக்கு எல்லாம் தெரிந்து தானிருந்தன. ஏதோ ஒரு கைதியைப் போல அடங்கி, ஒடுங்கி, பயந்து வாழும் தன் அத்தையைப் பார்க்க அவளுக்கு வேதனையாக இருந்தது.
[தொடரும் ]

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Tit bits in Tamil

Post by thanjavooran »

தொடர்ச்சி ]

இன்று சதீஷ் திடீரென்று முதியோர் இல்ல குண்டை போடுகிறான். பிடிக்கவில்லை என்ற வெற்றுக் காரணம் சொல்லி நெருங்கிய சொந்த, பந்தங்களை இவர்களால் எப்படி உதறித் தள்ள முடிகிறது என்பது தான் அவளுக்கு விளங்கவில்லை.
>
> கோவிலிலிருந்து விசாலம் வந்ததும் பாட்டியை சோபாவில் உட்கார வைத்து, மெல்லிய குரலில் சிறிது நேரம் பேசினான் சதீஷ். அவள் அறைக்கு வந்த போது பத்து வயது கூடியது போலத் தளர்ந்திருந்தாள். அந்த முகத்தில் தெரிந்த அதிர்ச்சியைத் தாங்கும் சக்தி ஜானகிக்கு இருக்கவில்லை.
>
> நிறைய நேரம் பேசாமல் கட்டிலில் பிரமை பிடித்தது போல உட்கார்ந்திருந்தாள் விசாலம். பின்பு மருமகளிடம் சொன்னாள்...
>
> ""பரவாயில்லை அவன் என்னை நடுத்தெருவில் விட்டுடலியே... பணம் குடுத்து ஒரு இடத்தில் தங்கத் தானே வைக்கிறான்... என்ன பிரச்னைன்னா நான் இத்தனை நாள் உன் நிழல்லேயே இருந்துட்டேனா ஜானு, உன்னை விட்டு பிரியறதுன்னா மனசுக்கு ரொம்பவே கஷ்டமாய் இருக்குடி''
>
> கண்களில் பெருகிய நீரைக் காண்பிக்க விரும்பாமல் முகத்தை அந்தப் பக்கம் திருப்பிக் கொண்டாள் ஜானகி. அன்றிரவு அவளும், விசாலமும் உறங்கவில்லை. முதியோர் இல்ல வாழ்க்கையை எண்ணி விசாலம் பயந்து கொண்டிருந்தாள் என்றால், ஜானகியோ வேறு பல சிந்தனைகளில் இருந்தாள். மறுநாள் காலை சீக்கிரமாகவே சமையலை முடித்து வெளியே போன ஜானகி, மாலை மகனும், மருமகளும் வருவதற்கு சற்று முன் தான் வந்தாள்.
>
> ""ஏண்டி ஜானு இவ்வளவு நேரம்? எங்கே போயிட்டே? நான் என்னென்னவோ நினைச்சு பயந்தே போயிட்டேன்,'' என்ற விசாலத்தைப் பார்த்து அவள் புன்னகை செய்தாளே ஒழிய பதில் ஏதும் சொல்லவில்லை.
>
> அன்று இரவு கீழே உட்கார்ந்து தங்கள் இருவருடைய துணிமணிகளையும் சூட்கேஸ்களில் அடுக்கிய ஜானகியை கட்டிலில் உட்கார்ந்திருந்த விசாலம் திகைப்புடன் பார்த்தாள்...
>
> ""என் துணிமணியை எடுத்து வைக்கிறது சரிதான் உன்னோடதை ஏண்டி ஜானு எடுத்து வைக்கிற?''
>
> ""உங்களை விட்டுட்டு நான் எப்படி அத்தை தனியாய் இருப்பேன். சாப்பிட்டா, எனக்குத் தொண்டையில் சோறு இறங்குமா? அதனால, நாம ரெண்டு பேரும் சேர்ந்து தான் இங்கிருந்து போறோம்''
>
> ""என்னடி சொல்றே ஜானு? நீயும் என் கூட முதியோர் இல்லத்துக்கு வர்றியா?''
>
> ""இல்லை அத்தை நாம் முதியோர் இல்லத்துக்குப் போகப் போறதில்லை. நான் பழையபடி மெஸ் ஆரம்பிக்கப் போகிறேன். நாம ரெண்டு பேரும் நம்ம அந்தப் பழைய வீட்டுக்கே போகப் போகிறோம்''
>
> விசாலம் அதிர்ச்சியில் இருந்து மீள சிறிது நேரம் தேவைப்பட்டது. பின் அவள் கண்கள் கலங்க சொன்னாள்...
>
> ""ஜானு, என் ராசாத்தி, வேண்டாண்டி... எனக்காக நீ இந்தப் பைத்தியக்காரத்தனம் செஞ்சுடாதே. நான் உன்னை விட்டுப் போய் ரொம்ப நாள் இருக்க மாட்டேண்டி. சீக்கிரமே செத்துடுவேன்.
>
> ""என்னோட இந்தக் கொஞ்ச நாள் கஷ்டத்துக்காக நீ இந்த முடிவு எடுத்துடாதேடி... நீ, இது நாள் வரைக்கும் எனக்கு செஞ்சதுக்கே நான் ஏழு ஜென்மத்துக்கு உன் கால் செருப்பாய் இருந்தாக் கூட உன் கடன் தீர்க்க முடியாதுடிம்மா...''
>
> மாமியாரின் காலடியில் வந்து உட்கார்ந்த ஜானகி பாசத்துடன் அவளைப் பார்த்தாள்...
>
> ""உங்களுக்காக நான் இந்த முடிவெடுத்தேன்னு யார் சொன்னது? அத்தை... எனக்கு இப்ப உழைக்கத் தெம்பிருக்கு. அதனால தான் என்னைக் கூட வச்சிருக்காங்க. ஒரு நாள் நானும், உங்க மாதிரி ஓய்ஞ்சுடுவேன். அப்போ, எனக்கும் முதியோர் இல்லம் தான் போக வேண்டி வரும்.
>
> ""அது புரிஞ்சு இப்ப நான் முழிச்சுகிட்டேன். அதான், இந்த முடிவு. நல்ல வேளையா, அந்த மெஸ் வீடு இப்ப காலியாத்தான் இருக்கு. நான் மெஸ் ஆரம்பிக்கப் போறேன்னு அங்கே சொன்னதும், சந்தோஷமா அந்தக் காலேஜ் வாத்தியாருங்க, பசங்க எல்லாம் சேர்ந்து பேசி அட்வான்ஸ் கூட கலெக்ட் பண்ணி என்கிட்ட கொடுத்துட்டாங்க.
>
> ""அத்தை... நமக்குப் பெரிய செலவில்லை உடுக்க துணி, இருக்க கூரை, வயத்துக்கு சோறு இதைத் தவிர வேற என்ன வேணும் சொல்லுங்க. மீதமாகிற காசை நான் சேர்த்து வைக்கப் போறேன். என் கடைசி காலத்தில் நான் முதியோர் இல்லம் போக வேண்டி வந்தாக் கூட என் சொந்தக் காசில் போய் இருக்க ஆசைப்படறேன்...''
>
> ""உன்னையெல்லாம் சதீஷ் அப்படிக் கை விட்டுட மாட்டான் ஜானு. அவன் நல்லவன்டி''
>
> ""சுயமாய் முடிவெடுக்கவும், செயல்படவும் முடியாதவங்க, நல்லவங்களா இருந்தாலும் பிரயோஜனம் இல்லை அத்தை''
>
> தாங்க முடியாத துக்கத்துடன் மருமகளை வெறித்துப் பார்த்தாள் விசாலம்.
>
> ""அத்தை... எல்லாத்துக்கும் மேல நாம நம்ம வீட்டில் சுதந்திரமாய் இருக்கலாம் நீங்க சப்தமாய் பேசலாம். வெத்திலை, பாக்கு போடலாம் லட்சுமி பாட்டியோட மணிக்கணக்கில் பேசலாம்''
>
> மருமகள் சொல்லச் சொல்ல, அவளைக் கட்டிக் கொண்டு நிைய நேரம் அழுதாள் விசாலம். அதற்குப் பிறகு பேச அவளுக்கு வார்த்தைகள் இருக்கவில்லை.
>
> மறுநாள் கால்டாக்சிக்குப் ோன் செய்து விட்டு மகனிடம் தன் முடிவைச் சொன்னாள் ஜானகி.
>
> அவன் எரிமலையாக வெடித்தன்...
>
> ""அம்மா, உனக்கு ப் பைத்தியம் பிடிச்சுடுச்சா? உனக்கென்ன இப்ப வேலை பார்்கிற வயசா?''
>
> ""நான் இங்கே மட்டும் சும்மாவா உட்கார்ந்திருக்கேன்?''
>
> ""அம்மா நான் அந்த முதியோர் இல்லத்தில் பாட்டிக்காக அட்வான்ஸ் கூட கொடுத்துட்டேன்''
>
> தங்கள் சூட்கேஸ்களை எடுத்து டாக்சி டிரைவரிடம் கொடுத்து விட்டு மகனிடம் சொன்னாள் ஜானகி...
>
> ""அது வீணாப் போகாதுடா அப்படியே வச்சிருக்கச் சொல்லு. 30 வருஷம் கழிச்சு நீங்க போறப்ப உபயோகமாகும்''
>
> ""திடீர்ன்னு இப்படிக் கிளம்பினா எப்படி? நான் வேலைக்கு வேற ஆள் கூட ஏற்பாடு செய்யலை'' என்றாள் சத்யா.
>
> பதில் பேசவில்லை ஜானகி. அதிர்ச்சியிலிருந்து மீளாத மகனையும், திகைப்பில் ஆழ்ந்த மருமகளையும் பொருட்படுத்தாமல், தன் மாமியாரை கைத் தாங்கலாய் பிடித்துக் கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியேறினாள் ஜானகி.
>
> எத்தனை நேரம் இலையானது இலையாகவே இருக்கும்...
>
> சருகாகுமல்லவா? சுமந்த போது நம்மை பாரமாக நினைக்காத தெய்வ த்தை பாரமாக நினைப்பது எவ்வளவு கொடுமையானது.....தாயிடம் பேச்சுத்திறமையால் தர்க்கம் செய்யாதீர்கள்....ஏனென்றால்....அவள் தான் உனக்கு பேசவே கற்றுக்கொடுத்தவள்.....தாயைத் தவிர்க்க நினைக்கும் படிப்பாளிகள், தாயை இழந்தவர்களிடம் கேட்டுப்பாருங்கள்..... வாழும்தெய்வம் அது. நாம் நன்றாக இருக்கவேண்டும் என நினைக்கும் ஒரே உயிர் அது......கண்ணீரோடு.....நம்.....தாய்களுக்கு சமர்பனம்......🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Tit bits in Tamil

Post by Ponbhairavi »

இன்று நாட்டில் இருக்கும் முதியோர் இல்லங்களில் கிடக்கும் எல்லா ஆண்பெண்களின் நிலமைக்கு 99 % காரணம் .ஒரு பெண். எனும் பேய் .முன்னேற்ற வாதிகள் எதிர்தது சீறிப் பாயலாம். ஆனால் இது உண்மை அவரவர் மனசாட்சிக்கு தெரியும். திருமணத்திற்குப் பிறகு ஒரு பெண் வேலை பார்பதனால் குடும்ப அமைப்பு குலைந்து சமுதாய வாழ்க்கை சிதைந்து சிதறிப்போய் கிடக்கிறது.யதார்த்த நிலையை எதிர்கொண்டு அதை சரி செய்ய யாருக்கும் தைரியமில்லை.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Tit bits in Tamil

Post by thanjavooran »

A share

#அம்மா ! 

காஃபி குடித்த டம்ளரை என்னிடமிருந்து வாங்கிக்கொண்ட என் மனைவி நகராமல் அப்படியே நின்றாள்.
 என்ன ' என்பதுபோல் வைதேகியை ஏறெடுத்துப் பார்த்தேன்.
" உங்கப் பையனும் மருமகளும் நாளை
காலையில ஹனிமூன் முடிஞ்சூ சிம்லா
விலேர்ந்து திரும்பி வராங்க..." " சரி. அதுக்கென்ன இப்போ ?" " அவங்க தங்க ரூம் வேண்டாமா..அந்த
ரூம்லதான உங்க அம்மா தங்கியிருக்
காங்க ! இவ்வளவுநாள் இருந்தது போ
தும். அவங்கள ஹாலுக்கு ஷிப்ட் பண்
ணச் சொல்லுங்க ." 
வாஸ்தவம்தான்.  முப்பது வருஷத்துக்கு
முன்னால் என் தந்தை கட்டிய வீடு.பாத்
ரூம் அட்டாச்சுடன் இரண்டு படுக்கைய
றைகள். ஹால். அதிலும் அட்டாச்டு பாத்
வசதி உண்டு.
சமையலறை; டைனிங் ரூம் ; பூஜையறை
என்று விஸ்தாரமாய் கட்டப்பட்ட வீடு.
இப்போது என் அம்மா தங்கிக் கொண்டி
ருக்கும் அறைதான் என் தந்தை உபயோ
கித்தது.நான் இருக்கும் படுக்கையறையை ஆரம்பத்திலிருந்தே பயன்படுத்திவருகிறேன்.எனக்குத் திருமணமாகி ஐந்து வருடங்கள்வரை என் தந்தை உயிருடன் இருந்
தார்.இன்றுவரை தன்ரூம் என்ற
உரிமையுடன்
இருந்து வருகிறாள் அம்மா. இப்போது
தடாலென்று ஹாலுக்கு வரச் சொன்னால்... 
அதுவும் உறவினர் , நண்பர்கள் அடிக்கடி
வருவர். ஹாலில் உட்கார்ந்தபடிதான்
பேசுவர். அம்மாவுக்கு இடைஞ்சலா
இருக்காதா ?  தனக்கென்று இருக்கும்
பிரைவேஸி இல்லாமல் எப்படி மீதியிருக்கும் காலத்தை தள்ளுவாள் ! நினைக்கும்போது தொண்டையை அடைத்ததுஎனக்கு.
" என்ன பதில் இல்ல...உங்களுக்கு சொல்ல கஷ்டமாயிருந்தால் நான் உங்கம்மா
க்கிட்டப் பேசறேன்." 
' ஹாலுக்கு ஷிப்ட்டாகி வாம்மா ' என்று
நான் கேட்பதைவிட என் மனைவியே கேட்
பதுதான் சரி என மனதில் பட்டது.
" சரி வைதேகி ! நீயே கேட்டுடு " என்றேன்.
அடுத்த ஐந்து நிமிடங்களில் வைதேகி என் அம்மா படுத்திருக்கும் அறைக்குள்
நுழைந்தாள்.
" அத்தை !" குரல் கேட்டதும் அம்மா விசுக்
கென்று எழுந்து உட்கார்ந்தாள்.
நாளைக் காலை உங்க பேரனும் அவன்
பெண்டாட்டியும் டூர் முடிஞ்சு திரும்பி
வராங்க. அவங்க தங்க ரூம் வேண்டாமா..
நீங்க காலிபண்ணிக் கொடுத்தால்தானே
அவங்க இங்க தங்க முடியும் ! தயவு
செஞ்சு நிலைமையைப் புரிஞ்சுக்கிட்டு
ஹாலுக்கு வரப் பாருங்க " என்று கூறி
விட்டுத் திரும்பினாள்.
அவள் அடுக்களைக்குள் நுழைந்ததும் நான் அம்மா படுத்திருந்த அறைக்குள்நுழைந்தேன் .அம்மாவைப் பார்க்க பாவமாயிருந்தது!
பிரம்மை பிடித்தால் போல் அமர்ந்திருந்
தாள் ! இதுவரை ஸ்வாதீனத்தோடு 
உரிமை கொண்டாடிய பிரைவேட் ரூம்
தனக்கு கிடையாது இனி கிடையாது
என்பதை அவளால் தாள முடியவில்லை.
அம்மா அருகில் கட்டில் மீது உட்கார்ந்
தேன்.என் கைகளை ஆதூரத்துடன் பற்றிக்
கொண்டாள். அவள் கைகள் நடுங்கின.
 " உனக்கு இஷ்டமில்லேன்னா நீ ஹாலுக்கு வரவேணாம்மா ! இங்கேயே இருந்
துக்கோ. " மேலுக்குச் சொல்லி பெருமூச்
சொன்றை விட்டேன்.
" அது கூடாதுடா ராகவா ! சின்னஞ்சிறு
கள். அதுங்க ஹால்ல தங்கமுடியாது...
எனக்கென்ன..நான் ஒண்டிக்கட்டை !
ஹாலுக்குத்தானே போகப்போறேன்.
வீட்டைவிட்டு இல்லையே !" 
அம்மா இப்படிச் சொன்னதும் எனக்கு
அழுகை முட்டிக்கொண்டு வந்தது. கஷ்
டப்பட்டிஅடக்கிக்கொண்டேன்.சிறிதுநேரம் மெளனமாயிருந்த அம்மாதொடர்ந்தாள்.
" ராகவா ! நீகுழந்தையா இருந்தபோதுஇதே கட்டில்லதான் என்னோட படுத்தி
ருந்தே. உடம்புக்கு முடியாம நான் இருக்க
றபோது உங்கப்பா சாதம் பிசைந்து
கொண்டுவந்து இந்தக் கட்டில்ல உட்
கார்ந்துதான் உனக்கு சாதம் ஊட்டுவார்.
எத்தனைதடவைகள்....அதெல்லாம் மற
க்க முடியுமா....கைகளை என்னிடமிரு
ந்து விடுவித்து கட்டிலை ஆதங்கத்துடன்
தடவிப்பார்த்துக் கொண்டாள்.
சட்டென என்னை நோக்கித் திரும்பிய
அம்மா , " டேய் ராகவா ! இன்னிக்கு ராத்
திரி மட்டும் என்னை இங்க தங்கவிடுடா.
நாளை உதயத்தில் நான் ஹாலுக்கு வந்
துடறேன் " என் கையைப் பிடித்து கெஞ்சதுக்கம் பீறிட்டது எனக்கு." சரிம்மா ! நீ படுத்துத் தூங்கு !" இன்னும்கொஞ்சநேரம் அங்கு தங்கினால் நான்
ஓ வென்று
அழுதுவிடுவேன் என எண்ணி அம்மாவைப் படுக்கவைத்து
என் அறைக்குத் திரும்பினேன்.
என் சிந்தனை பூராகவும் அம்மாவைப்
பற்றியே இருந்தது. அம்மா கூச்ச சுபா
வமுடையவள். யாராவது அறைக்குள்
இருந்தாலே உடனே எழுந்து உட்கார்ந்து
விடுவாள். உடம்பு முடியாமல் போனாலும்
உட்கார்ந்தபடிதான் இருப்பாள். அதற்கா
கவே நாங்கள் யாராயிருந்தாலும் ஐந்துநிமிடமோ அல்லது பத்துநிமிடமோ இருந்
துவிட்டு வெளியேறி விடுவோம்.அடிக்கடி பாத்ரூம் போக எழுந்துகொள்
வாள். ஹாலில் அடிக்கடி யாராவது நட
மாடிக்கொண்டே இருப்பர். அதோடு ஹா
லில்தான் டிவி இருக்கு. டிவி புரோக்ராம்
களை என் மனைவியும் மகனும் தொட
ர்ந்துபார்த்துக்கொண்டே இருப்பர். இது
அம்மாவுக்குப் பெரிய தலைவலியாகஇருக்குமே ! நினைக்க நினைக்க நெஞ்சில் வேதனைபிடுங்கித் தின்றது.ஆனால் மறுநாள் காலை இதற்கொரு
விடிவு கிடைத்தது.
 ஆம். அம்மா நள்ளிரவே காலமானாள்.
ஹாலில்இருந்துகொண்டு தான் அவ
ஸ்தைப்பட்டு அதனால் பிறத்தியாருக்கும்
கஷ்டம் கொடுப்பதை விரும்பாமல் போய்
ச்சேர்ந்துவிட்டாள்.
அம்மாவின் காரியங்கள் நடந்து முடிந்தன.அன்று இரவு அம்மாவைப்பற்றி சிந்தனையோடு கட்டிலில்அமர்ந்திருந்தேன்.வைதேகி என்னருகில் வந்து நின்றாள்." என்ன அம்மாவைப்பத்தி சிந்தனையா?"
நான் பதிலேதும் சொல்லவில்லை. அவளே தொடர்ந்தாள்.
" பாவம் உங்கம்மா ! இன்னும் கொஞ்ச
நாள்இருந்திருக்கலாம்...ம்..என்ன செய்
றது ! " என்றவள் , " ஆனால் ஒரு விஷ
யத்தகவனிச்சீங்களா ?" 
' என்ன' என்பதுபோல் அவளைப் பார்த்
தேன்." கடைசிவரை ஹாலுக்கு வரல்ல. தன்
ரூமுன்னு உரிமை கொண்டாடி அங்கேயே
உசிர விட்டாங்க. அவங்க சாமர்த்தியம்
யாருக்கும் வராது ! " 
சுருக்கென்று சொல்லிவிட்டு அகன்றாள்
வைதேகி.

(படித்து மனம் கலங்கிய கதை)

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Tit bits in Tamil

Post by thanjavooran »

A share

மனதைத்_தொட்ட_பதிவு ...

பூட்டிய கிரில்லுக்கு அப்பால், ஒரு பெரியவர், கசங்கிய சாதாரண வேட்டி சட்டை, முகத்தில் கருப்பும், வெள்ளையுமாக மண்டிய ரோமக் காடு, நீண்ட பயணத்தால் களைத்த முகம் என, கையில் நகைக்கடை விளம்பரத்துடன் இருந்த ரெக்சின் பையுடன் நின்றிருந்தார்.

அவர் கையிலிருந்த சீட்டை பார்த்தார்.

""ஆனந்த், நம்பர். 8, யோகானந்தம் நகர்?''

""ஆமாம்... இது தான். நான் தான் ஆனந்த்... நீங்க... என்ன வேணும்?''

அவர் வறண்ட உதடுகளை, நாவால் ஈரப்படுத்திக் கொண்டார்.

""நான் <உங்கப்பாவோட நண்பன்; காரைக்காலேருந்து வர்றேன். உங்கப்பா லெட்டர் கொடுத்து அனுப்பியிருக்கார்.''

பெரியவர் ரெக்சின் பை ஜிப்பை திறந்து, ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினார்.
வாங்கிப் பார்த்த ஆனந்த், ""அப்பாவா?'' என்று வினவியபடி, கடிதத்தை படித்தான்.

அதில், "அன்புள்ள ஆனந்துக்கு, அப்பா எழுதுவது. ஆசிர்வாதம். கடிதம் கொண்டு வரும் ராமசாமி, என் நண்பன். ரொம்ப கஷ்ட ஜீவனம். இவரது ஒரே பிள்ளை, சமீபத்தில் விபத்தில் இறந்து விட்டான். விபத்துக்கான இழப்பீடு கிடைத்தால், ராமசாமியும், அவர் மனைவியும் வாழ, ஓரளவாவது உதவியாக இருக்கும்.

""விபத்து சம்பந்தமான போலீஸ் விசாரணை, விபத்து ஏற்படுத்திய டிராவல்ஸ் வேன் உரிமையாளர் தர ஒப்புக் கொண்ட இழப்பீடு போன்ற சகல விவரங்களையும் சேகரித்து, அவரிடம் கொடுத்தனுப்பி இருக்கிறேன். சென்னையில், தலைமை அலுவலகத்தில் தருவார்களாம்... சென்னை அவருக்கு புதிது. நீ கொஞ்சம் அவருக்கு உதவி செய்தால் நல்லது; செய்வாய் என்று நம்புகிறேன். மற்றபடி உடம்பை பார்த்துக் கொள். பொங்கலுக்கு கண்டிப்பாக ஊருக்கு வர வேண்டும். உன் அப்பா பரமேஸ்வரன்...' என்று எழுதப்பட்டிருந்தது.

அவன் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றார் ராமசாமி.
ஒரு வினாடி யோசித்தவன், சட்டென சாவி எடுத்து வந்து, கேட்டைத் திறந்தான்.

""வாங்க சார்... உட்காருங்க...'' என்றவன், டம்ளரில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான். தயங்கியபடி உள்ளே வந்த ராமசாமி, தண்ணீரை வாங்கிப் பருகினார்.

""சாப்பிட்டீங்களா?''

""இல்லே... வழியிலே இரண்டு வாழைப் பழம் சாப்பிட்டேன். பஸ் லேட்டு, காலையில காரைக்கால்லே கிளம்பினா, சாயங்காலம் மெட்ராஸ் போயிடலாம்ன்னு உங்கப்பா சொன்னார். பஸ் பிரேக் டவுன் ஆயிடுச்சு... அதான்... அகாலத்திலே வந்து...''

""அதனாலே என்ன... பரவாயில்லை.''

பிரிட்ஜை திறந்து பார்த்தான் ஆனந்த்.

தோசைமாவு இருந்தது. நான்கு தோசை சுட்டு, மிளகாய் பொடி, எண்ணெய், தண்ணீர் கொண்டு வந்து, டேபிள் மேல் வைத்தான்.

""சாப்பிடுங்க... இதோ வர்றேன்,'' என்றவன், வாசல் பக்கம் மொபைலுடன் போனான்.

திரும்பி வந்த போது, சாப்பிட்டு முடித்து, கை நிறைய பேப்பர்களுடன் காத்திருந்தார் ராமசாமி.

""சொல்லுங்க... என்ன நடந்தது?'' என்று, அவர் எதிரில் அமர்ந்து, பேப்பர்களை வாங்கிப் பார்த்தான்.

பையனின் போட்டோ இருந்தது. 22 வயதில், அழகாக, பதவிசாக இருந்தான் பையன். ஆனந்துக்கு கண்கள் கலங்கின.

முகத்தை துடைத்துக் கொண்டார் ராமசாமி.

""இவனுக்கு முன்னாலே பிறந்த நாலஞ்சு பேரும், சின்ன வயசிலேயே போய் சேர்ந்துட்டாங்க... இவன் தான் தங்கினான். மகேஷ்ன்னு பேர்; கஷ்டப்பட்டு படிக்க வெச்சேன்... பொறுப்பான பிள்ளை. ஸ்காலர்ஷிப்லயே பி.இ., முடிச்சான். வேலை கிடைச்சுட்டா, நம்ம கஷ்டம் தீர்ந்துடும்ன்னு வாய்க்குவாய் சொல்வான்; வேலையும் கிடைச்சுது. என்னையும், என் மனைவியையும், நிற்க வச்சு நமஸ்காரம் செய்துட்டு, மெட்ராஸ் கிளம்பினான். பஸ் ஸ்டாண்ட் போக, ரோடு கிராஸ் செய்யறப்போ, வேகமா வந்த டிராவல் வேன் மோதி, ஸ்பாட்லேயே...'' மேல் துண்டால் முகத்தை மூடி, குலுங்கினார் ராமசாமி; பேசாமல் அவரையே பார்த்தான் ஆனந்த்.
அவராகவே தொடர்ந்தார்.

""அந்த வேன் சொந்தக்காரர், நஷ்ட ஈடு தர ஒத்துக்கிட்டார். முதல்லே அதை வாங்கவே மனசு ஒத்துக்கல. பிள்ளையை பறி கொடுத்துட்டு, அந்த பணத்திலே சாப்பிடறதான்னு வெறுப்பா இருந்தது. உங்கப்பா தான் எனக்கு ஆறுதல் சொல்லி, வாங்கிக்க சொல்லி வற்புறுத்தினார். எனக்கு நிரந்தரமா ஒரு வேலையும் கிடையாது. என் மனைவி ஏற்கனவே நோயாளி, பிள்ளை போன துக்கத்திலே, படுத்த படுக்கையாயிட்டா... எங்களை பகவான் அழைச்சுக்கற வரை, சாப்பிட்டுத் தொலைக்கணுமே... அதனாலே, கடைசியா நஷ்ட ஈடு வாங்கிக்க சம்மதிச்சேன். உங்கப்பா தான் எல்லா ஏற்பாடுகளையும் செய்து, இங்கே அனுப்பி வெச்சார். என் பிள்ளை உங்களுக்கு உதவி செய்வான்னு
லெட்டர் கொடுத்தார்.''

""செய்யறேன்... கண்டிப்பா உதவி செய்றேன்,'' என்று எழுந்தவன், அவர் படுக்க, பாயும் தலையணையும் கொடுத்தான்.
மறுநாள் காலை, காபி போட்டு அவருக்கு கொடுத்து, தானும் குடித்து, குளித்து விட்டு வந்தான்.

அவரும் குளித்து விட்டு வர, இருவருமாக பைக்கில் கிளம்பினர்.

""இங்கே நுங்கம்பாக்கம்ன்னு இருக்காமே... அங்கே தான் ஹெட் ஆபீஸ் இருக்காம்.''

""நுங்கம்பாக்கம் பக்கம் தான். நான் கூட வந்து செஞ்சு தர்றேன்,

வழியில் ஓட்டலில் டிபனை முடித்து, டிராவல் ஆபீஸ் வந்தனர்.
பார்மாலிடீஸ் எல்லாம் முடித்து, "செக்' கைக்கு வர மதியானம் ஆகி விட்டது.

""ரொம்ப நன்றிப்பா... எனக்காக ரொம்ப சிரமப்பட்டுட்டே. நான் இப்படியே ஊருக்கு கிளம்பறேன். இப்ப பஸ் புடிச்சா, ராத்திரிக்குள்ளே காரைக்கால் போயிடலாம். என் மனைவி தனியா இருக்கா; துணைக்கு ஆள் இல்லை...''

""நானே பஸ் ஏத்தி விடறேன் வாங்க,'' என்றவன், ஓட்டலுக்கு அழைத்துப் போய், அவர் மறுத்தும் கேளாமல், சாப்பிட வைத்து, தானும் சாப்பிட்டான்.
கோயம்பேடு வரை, பைக்கில் அழைத்துச் சென்று, காரைக்கால் பஸ்சில் ஏற்றி விட்டான். டிக்கட் வாங்க என்று ஐநூறு ரூபாயை, பிடிவாதமாக அவர் சட்டைப் பையில் திணித்தான்.

""ஒரு நிமிஷம்...'' என்று போனவன், ஒரு பிளாஸ்டிக் பையுடன் வந்தான்.

""ஊர் போய் சேர எத்தனை நேரம் ஆகுமோ, வழியிலே சாப்பிட்டுக்குங்க...'' என்று, டிபன் பொட்டலம், தண்ணீர் பாட்டில் அடங்கிய பையை, அவரிடம் கொடுத்தான்.

அவர் நெகிழ்ந்தார்.

""என்னாலே உனக்கு ரொம்ப சிரமம்ப்பா. லீவு வேறே போட்டுட்டு, எனக்காக அலைஞ்சிருக்கே... ஊருக்கு போனதும் முதல் வேலையா உங்கப்பாவைப் பார்த்து நன்றி சொல்லணும்.''

ராமசாமி உணர்ச்சி வசப்பட்டு பேசிக் கொண்டே போக, அமைதியாக அவர் பக்கத்தில் அமர்ந்தான், ஆனந்த்.

""ஒரு விஷயம் சார்... நீங்க தேடி வந்த ஆனந்த் நான் இல்லே...''
ராமசாமி திடுக்கிட்டார்.

""என்னப்பா சொல்றே?''

""ஆமாம்... நீங்க அட்ரஸ் தப்பா வந்துட்டீங்க... நான் இருக்கிறது, யோகானந்தம் நகர் எக்ஸ்டன்ஷன். நீங்க, மெயின் யோகானந்தம் நகர் போயிருக்கணும். அது, கிட்டத்தட்ட, 2 கி.மீ., தொலைவில இருக்கு.''

ராமசாமிக்கு, "குப்'பென வியர்த்தது.

""அடடா... தப்பு செய்துட்டேனே... ரொம்ப ரொம்ப சாரிப்பா. நீ, நான் வந்தவுடனேயே சொல்லியிருக்கலாமே... அனாவசியமா எதுக்கு எனக்காக மெனக்கட்டு...''

.
அவரைத் தடுத்தான் ஆனந்த்.

""நீங்க வந்தது ராத்திரி பத்தரை மணிக்கு... மெட்ராஸ்ல இருக்கிறவங்களுக்கே, இங்க அட்ரஸ் தேடி கண்டு பிடிக்கறது கஷ்டம்; நீங்க மெட்ராசுக்கு புதுசு வேற. அதிலேயும், நீங்க வந்த காரியத்தை பத்தி தெரிஞ்சதுலே, எனக்கு மனசு சங்கடமா போயிட்டது...

""அதான் உங்களை சாப்பிட சொல்லிட்டு, லெட்டர்லே இருந்த நம்பருக்கு கால் போட்டு பேசினேன். நீங்க அட்ரஸ் மாறி வந்த விஷயம் கேட்டு, உங்க நண்பர், அதான் அந்த ஆனந்தோட அப்பா ,ரொம்பவே வருத்தப்பட்டார். அவர் கிட்டே, அவர் பிள்ளையோட நம்பர் கேட்டு வாங்கிப் பேசிட்டு... பொழுது விடிஞ்சதும், ஒரு ஆட்டோவிலே உங்களை அனுப்பி வைக்கலாம்ன்னு இருந்தேன்.

""ஆனா, மொபைல் போன்ல பேசினது ஆனந்தோட மனைவி. அவர் ஆபீஸ் விஷயமா டில்லி போயிருக்காராம். வர ஒரு வாரம் ஆகுமாம். அப்பதான் முடிவு செய்தேன். நேரடியா, நானே உங்களுக்கு உதவி செய்திடலாம்ன்னு... எந்த ஆனந்துன்னா என்ன சார்... நஷ்ட ஈடு உங்களுக்கு கிடைக்க, நான் உதவியா இருந்தேனேன்னு, நிம்மதி என் மனசிலே நிறைஞ்சு இருக்கு. அது போதும் சார்...''

டிரைவரும், கண்டக்டரும் பஸ்சில் ஏற, எழுந்தான் ஆனந்த்.
அவன் கைகளைப் பற்றி கண்ணில் ஒற்றிக் கொண்டார் ராமசாமி. அவன் உள்ளங்கை, ராமசாமியின் கண்ணீரால் நனைந்தது.

""நல்லா இருப்பா... நல்லா இரு... வேறென்ன சொல்றது?''
பதினைந்து வருடங்களுக்கு முன் செத்துப் போன தன் அப்பாவை நினைத்துக் கொண்டான்.

"அப்பா... நீங்க இப்ப உயிரோடு இருந்து, இது மாதிரி லெட்டர் கொடுத்தனுப்பி இருந்தாலும், கண்டிப்பா உதவி செஞ்சிருப்பேன். என் வளர்ச்சியை பார்க்காமலே போயிட்டீங்களே... யாரோ ஒருத்தருக்கு பிள்ளையா இருந்து, அவர் நண்பருக்கு உதவி செய்திருக்கேன் அப்பா... உங்களுக்கு திருப்தி தானே?'
கனத்த மனதுடன், பஸ்சை விட்டு இறங்கினான் ஆனந்த்.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Tit bits in Tamil

Post by thanjavooran »

A share

🌎 *அழகான மனைவிக்கு அன்பான கணவன் எழுதியது* ..

நான் காலையில் படுக்கையிலிருந்து எழும்புகிறேன்
நீ நெருப்புப் புகையோடு
போராடிக் கொண்டிருக்கிறாய். 

நான் பல் துலக்குகிறேன்
நீ பாத்திரங்களை
புதுப்பிக்கிறாய். 

நான் செய்தித்தாளில்
செய்திகளை சேகரிக்கிறேன். P
நீ வீட்டில் குப்பைகளை
பெருக்குகிறாய். 

நான் உடலை சுத்தம் செய்கிறேன். 
நீ ஆடைகளின் அழுக்குகளை
பிரித்துக் கொண்டிருக்கிறாய். 

நான் பசியாற வயிற்றை நிரப்புகிறேன். 
நீ பாத்திரங்களை
நீரால் நிரப்புகிறாய். 

நான் அலுவலகம் கிளம்புகிறேன். 
நீ பிள்ளைகளை
சீருடையில் அனுப்பி விட்டு
என்முறைக்காக காத்திருக்கிறாய். 

நான் இரவு வீடு திரும்புகிறேன். 
நீ இன்னும் திரும்பவில்லை
சமையலறையிலிருந்து. 

நான் தூங்கச்செல்கிறேன். 
நீ கதவின் தாழ்ப்பாள்களையும்
எரியும் மின்விளக்குகளையும்
பிள்ளைகளின் போர்வைகளையும்
சரிபார்த்து விட்டே
படுக்கையில் விழுகிறாய். 

ஒவ்வொரு ஞாயிறுகளும்
ஒவ்வொரு பண்டிகைகளும்
எங்களுக்கு ஓய்வு நாட்கள்
உனக்கு?

உறவு வீட்டு விழாக்களில்
எங்களிடத்தில் நீ!

கல்விக்கூடங்களின்
கேள்விகளுக்கான பதில் நீ!

சோக நிகழ்வுகளிலும்
கண்ணீர் சிந்திய படி நீ!

எங்களின் பிரதிநிதியாக 
 இறைவனிடம் கையேந்துவது நீ!

என் வாழ்க்கைத்தோழியே!
இப்போதெல்லாம்
" நான் வேலைச்செய்கிறேன்''
என்று சொல்லவே
தயக்கமாக இருக்கிறது
கழிந்தப் பொழுதின்
உன் ஒற்றைப் பதிலால்..

புள்ளிவிபரம் சேகரிக்க வந்த
அரசு ஊழியர் உன்னிடம் கேட்டார்
" வேலைப் பார்க்கிறீர்களாமா?"
உன் பதில்..
" *இல்லங்க... நான் வீட்டில சும்மாதான் இருக்கிறேன்* "..........
🌿🍁🌎

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Tit bits in Tamil

Post by thanjavooran »

A share
*தாயா...? தாரமா...?*
🤫...🤔...🤭
ஊரையே AC பண்ணியது போல் *'சில்'* லென்றிருந்தது.
Office - ல் எனக்கு வேலையே ஓடவில்லை.

இந்தக் குளிருக்கும் மழைக்கும் இதமாக *பக்கோடா செய்து சாப்பிட்டால் அதுவும் Degree Coffee யுடன்..., நினைக்கும் போதே மனம் பரவச நிலையில்.*

உடனடியாக Permission Apply பண்ணி மழையைப் பொருட்படுத்தாமல் வீட்டை நோக்கி விரைந்தேன்.
மனமெங்கும் அல்பத்தனமாய் "பக்கோடா With Filter Coffee" Stimulate பண்ணிக் கொண்டிருக்க...!
👇
எப்படி வீட்டுக்கு வந்தேன் என்பதே புரியாமல் மனைவியைக் கொஞ்சிக் கூப்பிட்டுக் கொண்டே என் அபிலாஷையை வெளியிட்டேன்...!
👇
வந்ததே கோபம் அவளுக்கு......
"என்ன நினைச்சுட்டுருக்கீங்க...?
கார்த்தாலேர்ந்து மனுஷி படற பாடு என்ன தெரியுமா...? சொகுசா வந்து பக்கோடாவாம் Coffee - யாம்...
அதல்லாம்
ஒரு மண்ணும் முடியாது... சொல்லிட்டேன்..."
👇
எதிர்பார்த்து ஏமாந்து போனதால் வெறுப்பானேன்....சட்டென்று அம்மா ஞாபகம் வந்தது.
ஏமாந்து போனபின் அம்மா ஞாபகம் வந்தது ஒரு குற்ற உணர்ச்சியை
ஏற்படுத்தியது...!
🤝
அம்மாவும், அப்பாவும் பக்கத்துத் தெருவில் தான் "தனிக்குடித்தனம்"
வசிக்கின்றனர்.
அவர்களால் எங்களுடனும், எங்களால் அவர்களுடனும் Adjust செய்து இருக்க முடியாமல் போனதால் அம்மாவும் அப்பாவும் சுய மரியாதையுடன் தனியே வசிக்கின்றனர்...!
😃
அம்மாவைப் பார்த்து விட்டு வரலாம் என்று சென்றால் அப்பாவின் கெஞ்சல் குரல் கேட்டது.
😂
*அப்பாவுக்கு "ரவா உப்புமா " ரொம்ப பிடிக்கும்.*
அதைத்தான்
அம்மாவிடம் செய்து தரச் சொல்லி நச்சரித்துக் கொண்டிருந்தார்.
😂
நச்சரிப்பு என்பது அம்மா வின் பாஷை. உண்மையில் அவர் கெஞ்சிக் கொண்டிருந்தார்.
👇
*எனக்கு என் மனைவியிடம் என்ன திட்டு விழுந்ததோ "Same Blood " அப்பாவின் காதுகளில்.., கூடுதலாக வயதையும் சுட்டிக் காட்டி வாயை அடக்கச் சொல்லி Semma Dose...!*
🤭
நான் உள்ளே நுழைந்ததும் இருவரின் முகங்களும் மலர்ச்சியில்...!
😂
என்னப்பா நீ மட்டும் வந்துருக்கே...! பேரனை பார்த்து நாளாச்சுடா...! ஏன் கூட்டிண்டு வரல்ல...?

"அம்மா, அவனுக்கு இந்த மழைலயும் Spl Class, இருக்கும்மா " என்று சமாளித்தேன்.
😉
அது பொய்யென்று அம்மாக்குத் தெரிந்தாலும் சொன்னது நானென்பதால் கண்டு கொள்ளவில்லை சரி, சரி உட்காரு. அப்பாட்ட பேசிட்டுரு...!
இப்ப கொஞ்ச நேரத்தில உனக்குப் பிடித்த பக்கோடா செஞ்சு தரேன்...!
😂
அப்பா முகத்தில் சின்னதாய் ஏமாற்றம் தெரிந்தாலும் எனக்காக காட்டிக் கொள்ளாமல் வெறுமையாய் சிரித்தார்...!
பாவமாயிருந்தது..‌.!

*அம்மா எனக்கு பக்கோடா வேண்டாம் உன் கைப்பக்குவத்தில் இன்னிக்கு ரவா உப்புமா சாப்டணும்போல இருக்கு...!*
அவ்ளோதானேஇதோ பத்தே நிமிஷம்"
*அப்பாவின் முகத்தில் என்னைப்பார்த்து சிரிப்பதில் ஒரு சின்ன நன்றி உணர்சசி எனக்குத் தென்பட்டது...!*
👇
என்னுடன் சேர்ந்து ரவா உப்புமாவை ஆசையாக
சாப்பிட்ட அப்பா, *நான் அடைந்த பக்கோடா பரவசத்தை" உப்புமா பரவசமாக அனுபவித்தார்.*
சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து வீட்டுக்குத் திரும்பினேன்...!
👇
*மனைவி என் மகனுக்கு மிகவும் பிடித்த உருளைக்கிழங்கு பஜ்ஜி யைப் ஆவலாய் செய்து கொண்டிருந்தாள்...!*
எனக்காக செய்ய முடியாத பக்கோடா மகனுக்கு பஜ்ஜி - யாக
செய்யப் பட்டுக்கொண்டிருந்தது.

*நீதி* நம் நாட்டுப் பெண்கள் மிகச் சிறந்த *"தாய்மார்கள் " தாரங்களல்ல...!*
🗣கேட்டத்ததிலிருந்து பிடித்தது *மனதை நெ௫டிய* ஒரு பதிவுகள் *&* பகிர்வுகள்...,

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Tit bits in Tamil

Post by thanjavooran »

A share

மாலைமாற்று (ஆங்கிலத்தில் Palindrome ) - செய்யுளை நேராகப் படித்தாலும் தலைகீழாகப் பின்னிலிருந்து படித்தாலும் ஒன்று போலவே தோன்றும்.

மாலைமாற்று - 1
------------------------
தேவர் சார்பதி யடைவினை கழலவே
வேலழ கனைவிடை யதிபர் சார்வதே.

பதம் பிரித்து:
தேவர் சார் பதி அடை; வினை கழலவே
வேல் அழகன் ஐ, விடை அதிபர் சார்வதே.

சார்தல் - சரண்புகுதல்;
பதி - தலைவன்; கடவுள்;
வேல் அழகன் - முருகன்;
ஐ - தந்தை;
விடை அதிபர் - நந்திவாகனர்;

தேவர்கள் சென்று சரண்புகும் கடவுளை அடை; வினைகள் நீங்கவே, முருகனின் தந்தையும், இடப வாகனனும் ஆன சிவபெருமானை

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: Tit bits in Tamil

Post by arasi »

தஞ்சாவூரான்,
கலிபோர்னியாவுக்கு வந்திருக்கிறீர்களென்று தெரிகிறது, கான்ஸெர்ட் ரெவ்யூஸ்-பார்த்து...:)

நாஸ்டால்ஜியா-வில் பசுபதி palindromes பதிவு செய்திருப்பதையும் பார்த்திருப்பீர்கள்...

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Tit bits in Tamil

Post by Pasupathy »

thanjavooran wrote: 16 Apr 2019, 04:27 A share

மாலைமாற்று (ஆங்கிலத்தில் Palindrome ) - செய்யுளை நேராகப் படித்தாலும் தலைகீழாகப் பின்னிலிருந்து படித்தாலும் ஒன்று போலவே தோன்றும்.

மாலைமாற்று - 1
------------------------
தேவர் சார்பதி யடைவினை கழலவே
வேலழ கனைவிடை யதிபர் சார்வதே.
அருமை!

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Tit bits in Tamil

Post by thanjavooran »

A share # படித்ததில் பிடித்தது

புருஷன் சம்பாத்தியம்

”விமலா… ஜில்லுன்னு ஒரு கிளாஸ் தண்ணி; அப்புறம், சூடா ஒரு கப் காபி கொடு.”

தண்ணீரையும், காபியையும் கொண்டு வந்து வைத்தாள் விமலா.

“விமலா… அப்பா ஏன் கொல்லைப் புறத்தில் உட்கார்ந்து இருக்கார்?”

”ம்… நீங்களே கேளுங்க அந்த கண்றாவியை.”

காபியை ஒரே மடக்கில் குடித்தவன், தந்தையின் அருகில் வந்தான். அவரது தோளை ஆதரவாக பற்றினான்.

“அப்பா… எழுந்திரிச்சு உள்ளே வாங்க.” தந்தையின் கையை மென்மையாக பிடித்து அழைத்து வந்து, சோபாவில் அமர்த்தினான்.

“ஏம்பா என்னமோ மாதிரி இருக்கீங்க?”

அவர் சொல்லத் தயங்கினார்.

“எதுவா இருந்தாலும் சொல்லுங்கப்பா.”

“அவர் சொல்ல மாட்டார்… நானே சொல்றேன்… கரன்ட் பில்லும், ஸ்கூல் பீசும் கட்டிட்டு வாங்கன்னு குடுத்த, பத்தாயிரம் ரூபாயை தொலைச்சுட்டு வந்து நிக்கறார்.

கேட்டா, “எங்கே வெச்சு தொலைச்சேன்னே தெரியலைமா…’ ன்னு சொல்றார்.”

அவர் முகத்தைப் பார்க்க பாவமா இருந்தாலும், 10 ஆயிரம் ரூபாய் போனதில், அவனுக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

விமலா மேலும், அவனை சூடேற்றினாள்…

“இந்த அளவுக்கு அஜாக்கிரதையும், பொறுப்பில்லாமையுமா ஒருத்தர் இருப்பாங்க. இவர், பேங்கில வேறெ கேஷியரா இருந்தாரு. எப்படித்தான் இத்தனை காலம் கேஷியர் வேலை பார்த்தார்னே தெரியலை.”

”விமலா… நீ கொஞ்சம் பேசாம இரு. நான் தான் விசாரிச்சிட்டு இருக்கிறேன்ல்ல.”

”எங்க வெச்சுப்பா தொலைஞ்சிச்சு?” தந்தையிடம் கேட்டான் கதிரேசன்.

”அதுதாம்பா எனக்கும் புரியலை. விமலா கிட்டே பணத்தை வாங்கிட்டு, ஈ.பி., ஆபீசுக்கு போயிட்டு இருக்கும் போது, நம்ம எதிர்த்த வீட்டு ரிட்டையர்டு போஸ்ட் மாஸ்டர் சேஷாத்ரியை வழியில பார்த்தேன்.

அவரும், ஈ.பி., ஆபீசுக்கு தான் போறேன்னு சொன்னதும், நானும், அவருமா பேசிட்டே நடந்து போனோம். அங்க ஒரே கூட்டமா இருந்தது.

கூட்டம் குறையட்டும்ன்னு, நானும், அவருமா ஒரு மர நிழல்ல உட்கார்ந்தோம். தாகமா இருக்குன்னு, ரெண்டு பேரும், ஆளுக்கு ஒரு இளநியை குடிச்சிட்டு, நானே காசைக் குடுக்கலாம்ன்னு திரும்பிப் பார்த்தா, “பேக்’கை காணோம். கடைசியில, இளநீருக்கு போஸ்ட் மாஸ்டர் தான் காசை கொடுத்தார்.”

”அந்த இளநீர்க்காரன் எடுத்திருப்பானோ!"

“இல்லப்பா… அவன் என் முன்னால தான் இருந்தான். பின்னால, இருந்த வேற யாரோ தான், எனக்குத் தெரியாம எடுத்திருக்காங்க.”

விமலா குறுக்கிட்டாள்…

”பணப் பைய யாராச்சும் பின்னால வைப்பாங்களா? சுத்த கோமாளித்தனமா இருக்கு. சொந்தமா சம்பாத்தியம் இருந்தாத்தானே, காசோட அருமை தெரியும். என்னோட புருஷன் சம்பாதித்ததை, வேறெ எவனோ திங்கணும்ன்னு விதி.”

”இந்த ஒரு தடவை தானம்மா இப்படி நடந்திச்சு. ரிட்டையர்டு ஆனதுக்கப்புறம், இத்தனை நாளா, நான் தானே கஷ்டப் பட்டுட்டு வர்றேன். அப்பெல்லாம், ரொம்ப ஜாக்கிரதையாத் தானே இருந்தேன்.”

”ஒரு தடவை தொலைத் தாலும், மொத்தமா, 10 ஆயிரம் ரூபா… சர்வ ஜாக்கிரதையாத் தான் இருக்கணும். அங்க, என்னோட வேலை பார்த்தவங்க நின்னுட்டு இருந்தாங்க. இங்க, என்னோட சிநேகிதனை பார்த்தேன்னு சொல்லி, நாள் முழுக்க வெட்டிப் பேச்சு பேசிட்டு நிற்கக் கூடாது,” என்று பொரிந்து தள்ளினாள் விமலா.

”விமலா… கொஞ்சம் மரியாதை குடுத்து பேசு. என்ன இருந்தாலும், அவர் என்னோட அப்பா.”

”ஆமா நீங்க தான் மெச்சிக்கணும். சும்மா தானே வீட்டில இருக்காரு. காலைலயும், சாயந்தரமும் குழந்தைகள ஸ்கூல்ல கொண்டு விடச் சொன்னா, “வயசான காலத்தில என்னால முடியலை…’ன்னு வயசை ஒரு சாக்கா வெச்சிட்டு, ஜகா வாங்கிக்கிறது; உருப்படியா பண்ணிட்டு இருந்தது, ரேஷன்ல பொருள் வாங்கறதும், கரன்ட் பில், ஸ்கூல் பீஸ் கட்டறதும் தான். இனி, இந்த ஒரு காரணத்தை வெச்சு, இந்த வேலையிலிருந்தும் ஜகா வாங்கிக்கலாம்ல்ல.”

கதிரேசன் குறுக்கிட்டான்.
“விடு விமலா… அவருக்கு முடியலைன்னா, நானோ, நீயோ போயி கட்டிட்டு வந்திடலாம். இதுக்குப் போயி…”

“ஆமா, நானோ, நீங்களோ போயி எல்லா வேலையும் செஞ்சிட்டு வந்திடலாம். இங்கே, இந்த பெரிய மனுஷன், நல்லா சாப்பிட்டுட்டு, அந்த கோவில், இந்த கோவில்ன்னு சுத்திட்டு வரட்டும். நேரத்திற்கு சமைச்சுப் போடத்தான் நான் இருக்கேன்ல.”

”ஏய் இப்ப என்ன பண்ணனும்ங்கற?” எரிச்சலுடனேயே கேட்டான் கதிரேசன்.

“எம்மேல ஏன் எரிஞ்சு விழறீங்க? கொஞ்ச நாள், உங்க தங்கச்சி வீட்டில கொண்டு போயி விடுங்க. அப்பத்தான்; நம்ம வீட்டோட அருமை தெரியும்.”

”என்ன மாப்பிள்ளே… ஏதோ, சூடான விவாதம் போல தெரியுது… சிவபூஜைல கரடி நுழைஞ்சிருச்சோ கேட்டபடியே வீட்டினுள் நுழைந்தார், விமலாவின் தந்தை சிவராமன்.

”அப்பா வாங்கப்பா… இந்த, வேகாத வெயில்ல ஏம்பா நடந்து வந்தீங்க? ஒரு ஆட்டோ புடிச்சா, பஸ் ஸ்டாண்டிலிருந்து, நம்ம வீட்டிற்கு மிஞ்சிப் போனா, நாற்பதோ, ஐம்பதோ கேட்பான்.”

”நடக்கிறது உடம்புக்கு நல்லதுதானேம்மா. சரி…சரி… இந்த பையில பழங்களும், சிப்சும் இருக்கு. குழந்தைகள் வந்தா குடு. மொதல்ல, இதை போயி உள்ளே வெச்சிட்டு வா.”

பையை கிச்சனில் வைத்து விட்டு, தந்தைக்கு லெமன் ஜூசை எடுத்து வந்தாள் விமலா.

”அப்பா இந்தாங்க, “ஜில்’லுன்னு குடிங்க.”
“அதை இப்படி வெச்சிட்டு இந்தப் பக்கம் வாம்மா!”

ஜூஸ் நிரம்பிய கிளாசை, மேஜையின் மேல் வைத்து விட்டு, தந்தையின் அருகில் வந்தாள் விமலா.
“என்னப்பா?”

இரண்டு உள்ளங்கையையும் ஒன்றோடு ஒன்று நன்றாக தேய்த்து சூடாக்கி, “பளார்’ என்று, தன் மகளின் கன்னத்தில் அறைந்தார் சிவராமன்.

சிவராமனின் ஐந்து விரல்களும், விமலாவின் கன்னத்தில், அச்சு பதித்தாற்போல் பதிந்தன.

விம்மி அழுது கொண்டே, ”என்னப்பா…” என்றாள் விமலா.

கதிரேசனும், ராமநாதனும் அதிர்ச்சியுடன் சிவராமனையே பார்த்தனர்.

”மாமா… வந்து…” என்று வார்த்தை கிடைக்காமல் திக்கினான் கதிரேசன்.

” நான் வந்து இருபது நிமிஷம் ஆச்சு மாப்பிள்ளே.. பொண்டாட்டி பேச்சுக்கு மதிப்பு குடுக்க வேண்டியது தான். தப்பில்ல..

ஆனா, எந்த காலத்திலேயும், எந்த நேரத்திலேயும், தன்னைப் பெத்தவங்களையும் விட்டுக் குடுக்கக் கூடாது. குடும்பத்தில் முதல் மரியாதை அவங்களுக்குத் தான். அதுவும் அவுங்க மனைவிய இழந்தவங்க.. அதுக்கப்புறம் தான் பொண்டாட்டி, குழந்தைகள்..

நீங்களோ, சம்பந்தியோ அவளை அடிச்சா, புருஷன் வீட்டில எல்லாருமா சேர்ந்து, என்னை கொடுமை பண்ணறாங்கன்னு இவ போலீஸ்ல கம்ப்ளைன்ட் குடுக்கலாம். ஆனா, நானே ரெண்டு சாத்து சாத்தினா, எவன் கேட்கப் போறான்?😳

நான் வர்றேன் மாப்பிள்ளே, வர்றேன் சம்பந்தி.

காத்தால நடக்கும் போது, அப்படியே நம்ம வீட்டுக்கும் அடிக்கடி வாங்க. கொஞ்ச நேரம் ஜாலியா பேசிட்டு இருக்கலாம்,” என்று கூறியபடியே, நடையைக் கட்டினார் சிவராமன்.

”அப்பா…” என அழுதபடியே கூப்பிட்டாள் விமலா.

”என்னம்மா?”

“இந்த ஜூசையாவது குடிச்சிட்டு போங்கப்பா”

மனைவிய இழந்து நிக்கும் மாமனார, எப்போ நீ நல்ல மனசோட அப்பான்னு நினைக்கிறீயோ..அப்போ என்னைக் கூப்பிடு, சாப்பாடே சாப்பிட்டுட்டு போறேன்.” சரியா...

கம்பீரமாக நடந்து செல்லும் தன் சம்பந்தியை, வாஞ்சையுடன் பார்த்தார் ராமநாதன்...

மருமகள்களே... மாமனாரும் அப்பாதானே...😞படித்ததில் பிடித்தது.

I could not control my tears rolling down from my eyes.

நீண்ட நேரம் என்னை பாதித்த பதிவு இது. Because in old age so many of us is suffering either from temporary loss of memory or Alzheimer's disease.

😞😞😞😞😞😞😞😞😞😞😞

Post Reply