Tit bits in Tamil

Post Reply
venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16
x 2

#176 Re: Tit bits in Tamil

Post by venkatakailasam » 20 Oct 2014, 14:12

அதிர்ச்சி தகவல்"! தங்கம் வாங்க போறீங்களா..?!

நண்பர் ஒருவரின் ஆதங்கம் எனக்கு மிகச் சரியாகவே பட்டது. அவர் சொன்னது இதுதான்.

வெளி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில்
நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம்
பற்றி விசாரித்ததோடு "சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையாளருக்குச் சொந்தமானது" என்று உரிமைக் குரல் எழுப்பினாராம்!

வாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம் இதனை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு பிரபலப் பேச்சாளர் தனக்கும் சேதாரம் பிடிக்க கூடாது என்று முழங்கி அவரும் காரியத்தைச் சாதித்துக் கொண்டாராம்!

நண்பரின் ஆதங்கம் இதுதான். ' சேதாரம் என்ற பெயரில்
நகைக் கடைகளில் பெருங் கொள்ளையடிப்பதை நம்மவர்
யாரும் ஏன் கண்டு கொள்வதே இல்லை? என்பதே அவரது நியாயமான கேள்வி" அவரது குமுறல் மிக நீதியானதே என்பதுதான் எனது வாதமும். 16 கிராமில் ஒருவர் நகை வாங்கினால் ஏறக்குறைய 3 கிராம் சேதாரம் என்று கணக்கிட்டு ஒன்பதாயிரம் ரூபாய் வரையில் பெருங் கொள்ளையடிக் கிறார்கள் நகைக் கடை முதலாளிகள். இன்றைய தங்க விற்பனை விலை 16 கிராமுக்கு ரூ48000 என்றால் கடைமுதலாளிக்கு சேதாரம் என்ற பெயரில் "ஒன்பதாயிரம் ரூபாய்" தெண்டம் அழ வேண்டும்.

ஏறக்குறைய 16 சதவீதம்? "எதற்காக இந்த தெண்டம்?
பதினாறு கிராமுக்கு மூணு கிராம் எப்படி சேதாரமாகும்?" எந்த அதிமேதாவியும் இது வரை கேள்வி கேட்டதில்லை.
அப்படி புத்தியோடு யாரும் தைரியமாக எதுவும் கேட்டு விடக்கூடாது என்று சொல்லித்தான் அவர்களாக சில நூறு ரூபாய்களை பிச்சை போடுவார்கள். போனவுடன் குடிக்க ஏதாவது கொடுத்து ஆட்களை 'கூல்' பண்ணுவார்கள். இப்பொழுதெல்லாம் சேதாரத்தைச் சட்டப்பூர்வமாகவே ஆக்கி விட்டார்கள். ......

அதாவது எந்தப் பொருளையும் கொடுக்காமலேயே பல்லாயிரக்கணக்கில் கொள்ளையடிப்பது. சில கடைகளில் மிகக் குறைந்த சேதாரம் என்ற விளம்பரம் வேறு. உற்றுப் பார்த்தால் ஆறு சதவீதம் முதல் என்று இருக்கும். என்னுடைய கேள்வி என்னவென்றால் ஏன் சேதாரமில்லாமல் யாரும் நகை விற்பனை செய்ய முடியாதா? பொருளுக்குள்ள உண்மை விலையை மட்டும்தானே வாங்க வேண்டும்?

செய்கூலி கேட்பது நியாயம்தான். 16 கிராமில் நகை செய்ய மூன்று கிராமா சேதம் ஆகும்? இந்த அக்கிரமத்தை ஏன் அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை?

பலசரக்குக் கடைக்கு விலைப் பட்டியல் வைக்க
வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கும் அரசாங்கம் ஏன்
நகைக் கடைகளுக்கு சேதார அளவுக்கு வரம்பு வைக்க
வில்லை? எத்தனை எத்தனை ஏழை மக்கள் குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து நகை வாங்க வருகிறார்கள்? அவர்களிடம் வழிப்பறி செய்வதை விட
மோசமான செயல் அல்லவா சேதாரம் என்ற பெயரில்
திருடுவது? பின்னர் ஏன் நாட்டில் ஏழை ஏழையாகவே இருக்க மாட்டான்? ஒரு நகைக் கடை வைத்தவன் ஊரெல்லாம் நகைக் கடை திறக்க மாட்டான்?

மில்லி கிராம் தங்கம் கூட சொந்தமில்லாத ஏழைகள் இந்த மண்ணில் கோடிக்கணக்கில். கோடிக்கணக்கான ஏழைகளைச் சுரண்டித்தான் ஒருவன் பணக்காரனாக கொழுக்க முடிகிறது. இது போன்ற பகற் கொள்ளைக்காரர்கள் திருந்த வேண்டும். அல்லது திருத்தப் பட வேண்டும். விரைவில் இம்மண்ணில் இது நிகழ்ந்தாக வேண்டும்...!
0 x

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16
x 2

#177 Re: Tit bits in Tamil

Post by venkatakailasam » 22 Oct 2014, 07:01

சில சர்தார்ஜி ஜோக்ஸ் இன்னிக்கு உங்களுக்காக..

(1)
ஒரு ரயில் பயணத்தில் ஒரு சர்தார்ஜியும் விஸ்வநாதன் ஆனந்தும் ஒன்றாக செல்ல நேரிடுகிறது. பயண்த்தில் சலிப்பு ஏற்படாமல் இருக்க சதுரங்கம் (செஸ்) ஆட வருமாறு ஆனந்த் அழைக்கிறார்.
சர்தார்ஜி : "வேண்டாம். நீங்கள் தேர்ந்த ஆட்டக்காரர். என்னை தோற்கடித்து விடுவீர்கள்."
ஆனந்த் : "சரி. நான் இடது கையால் ஆடுகிறேன் வாருங்கள்."
சர்தார்ஜி : "அப்படியானால் சரி."
என்ன நடந்தது என்று சொல்லவும்
வேண்டுமா?
சர்தார்ஜி சோகமாக நடந்து சென்று பக்கத்துப் பெட்டியில் இருக்கும் இன்னொரு சர்தார்ஜியிடம்
சொல்கிறார்..
சர்தார்ஜி 1 : "டேய், ஆனந்த் இடது கையில் விளையாண்டு கூட நான் தோற்றுவிட்டேன் !
சர்தார்ஜி 2: அவர் உன்னை நல்லா ஏமாத்திட்டாருடா. அவரு இடதுகை பழக்கமுள்ளவர்தான் !!

2.சர்தார்ஜி விற்காத கார்
டெல்லியில் இருந்த சர்தார்ஜி தனது பழைய காரை விற்க நினைத்தார். அந்தக் கார் ஏற்கனவே ஒரு லட்சம் மைலுக்கு மேல் ஓடிவிட்ட்து.அதிக தூரம் ஓடியிருந்தால் யாரும் நல்ல விலைக்கு கேட்கவில்லை.
சென்னை நண்பரிடம் யோசனை கேட்க ,அந்த நண்பர் ஒரு மெக்கானிக்கை அனுப்பி வைத்தார்.
சர்தார்ஜியின் கார் மீட்டரை அட்ஜஸ்ட் செய்து வெறும் முப்பது ஆயிரம் கிலோமீட்டர் மட்டும் ஓடியிருப்பது போல மெகானிக் மாற்றி விட்டார்.
சில நாட்கள் கழித்து சென்னை நண்பர் சர்தார்ஜியைத் தொடர்பு கொண்டு பேசியபோது ’’ஏன் இன்னும் அந்தக் காரை விற்கவில்லை?’’ என்றார்.
அதற்கு சர்தார்ஜி ,’’அது வெறும் முப்பது ஆயிரம் கிலோமீட்டர்தானே ஓடியிருக்கிறது.ஏன் விற்கணும்?’ என்று பதில் சொன்னார்!.


3. சர்தார்ஜி ஒரு கம்பூட்டர் கம்பேனியில ஜாய்ன் பண்ணார்...முதல் நாள் இரவு ஒரு மணி வரைக்கும் வேலை பார்த்தார்...
காலையில் எட்டு மணிக்கே அலுவலகம் திரும்பிவந்து வேலை பார்க்க ஆரம்பித்தார்...
இந்த விஷயம் கம்பெனி சி.இ.ஓ வரைக்கும் தெரிஞ்சது...சி.இ.ஓ கூப்பிட்டு கேட்டார்...
சி.இ.ஓ : என்னப்பா பண்ணிக்கிட்டிருந்த ஒரு மணி வரைக்கும் ?
சர்தார் : அது ஒன்னுமில்லைங்னா...கீபோர்டுல ஏ.பி.சி.டி எல்லாம் மாறி மாறி இருக்கு...அதை எல்லாம் சரிபண்ணி தொடர்ச்சியா வெச்சேன்.....!
0 x

thanjavooran
Posts: 2538
Joined: 03 Feb 2010, 04:44
x 177
x 63

#178 Re: Tit bits in Tamil

Post by thanjavooran » 26 Oct 2014, 08:03

A share from my friend

நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது.
உடனடியாக அமைச்சரை வரவழைத்தார்.
“நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு
வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?”

“ஆம் மன்னா!”

“அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத் தேடிக்
கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார்.

அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது
போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்??
என்ன செய்வது சொன்னது மன்னராயிற்றே, “சரி மன்னா” என்று ஒத்துக் கொண்டார்.

ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபேரை மட்டும் கூட்டிக்கொண்டு
வந்தார். அதைப் பார்த்ததும் மன்னர், “அமைச்சரே உமக்குக் கணிதம் மறந்து விட்டதோ
??”

“இல்லை மன்னா! முதலில் நடந்ததை விளக்க அனுமதிக்க வேண்டும்!” என்றார் அமைச்சர்.

“தொடரும்” என்றார் மன்னர்.

“மன்னா! நான் நாடு முழுவதும் சுற்றும்போது, இவன் மாட்டு வண்டியின்மேல்
அமர்ந்துகொண்டு தன் துணி மூட்டையைத் தலைமேல் வைத்து, பயணம் செய்து
கொண்டிருந்தான், ஏன் அவ்வாறு செய்கிறாய்? எனக் கேட்டதற்கு என்னைச் சுமந்து
செல்லும் மாடுகளுக்கு வலிக்கக்கூடாதல்லவா? அதற்குத்தான் என்றான் – இவன்தான் நம்
நாட்டின் ஐந்தாவது மிகப் பெரிய முட்டாள்.”’ என்றார் அமைச்சர்.

“சரி அடுத்து”

“இதோ இவன் தன் வீட்டுக் கூரைமேல் வளர்ந்த புல்லை மேய்க்க, எருமையைக் கூரைமேல்
இழுத்துக் கொண்டிருந்தான், இவன்தான் நம் நாட்டின் நான்காவது மிகப் பெரிய
முட்டாள்”

“களிப்படைதோம் அமைச்சரே! களிப்படைதோம்! சரி, எங்கே அடுத்த முட்டாள்?”

“அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கும்போது,
அதையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள்களைத் தேடி, கடந்த ஒரு மாதமாய்
அலைந்துகொண்டிருந்த நான்தான் மூன்றாவது முட்டாள்.”

மன்னருக்குச் சிரிப்பு தாங்கவில்லை, விழுந்து விழுந்து சிரித்தார். பின்னர் “
அடுத்தது” என்றார்.

””நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது அதைக் கவனிக்காமல்
முட்டாள்களைத் தேடிக் கொண்டிருக்கும் நீங்கள்தான் இரண்டாவது” என்றார் அமைச்சர்.

ஒரு நிமிடம் அரசவையே ஆடிவிட்டது. யாரும் எதுவும் பேசவில்லை.

“உமது கருத்திலும் நியாயம் உள்ளது. நான் செய்ததும் தவறுதான்” என ஒத்துக்
கொண்டார் மன்னர்.

“சரி எங்கே முதலாவது முட்டாள்?”

அமைச்சர் சொன்னார்.”மன்னா! அலுவலகத்திலும், வீட்டிலும் எவ்வளவோ வேலைகள்
இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு ஃபேஸ்புக்கே குடியேன் வாழ்ந்து இந்த
மொக்கையான கதைக்கு வந்து நாட்டின் மிகப் பெரிய முட்டாள் யாரென்று தேடிக்
படித்துகொண்டிருக்கிறாரே இவர்தான் அந்த முதல் முட்டாள்!”

கடைசியில் நம்மளையே முட்டாளாக்கிட்டாங்களே!
0 x

arasi
Posts: 16082
Joined: 22 Jun 2006, 09:30
x 475
x 264

#179 Re: Tit bits in Tamil

Post by arasi » 26 Oct 2014, 08:28

த‌ஞ்சாவூரான்,
'முகப் புத்தகம்' கணக்கு எனக்கு இல்லாவிடினும், அதிலிருப்பவர்கள் சொல்வதை நீங்கள் எடுத்துச் சொல்வதை நான் கேட்டுக் கொண்டிருக்கிறேனில்லையா? நானும் ஒரு முட்டாள்தான்.

அப்படியிருந்தாலும், அமைச்சருக்கும் அரசருக்கும் கூட இருக்கும் நகைச் சுவையை ரசித்தேன் :)
0 x

thanjavooran
Posts: 2538
Joined: 03 Feb 2010, 04:44
x 177
x 63

#180 Re: Tit bits in Tamil

Post by thanjavooran » 26 Oct 2014, 08:55

அரசி அவர்களே
எவ்வளவு தந்திரமாக நாசுக்காக தஞ்சாவூரானும் அந்த வரிசையில் சேர்ந்து விட்டதை வெளிப்படுதியதனை வெகுவாக ரசித்தேன். வாழ்த்துக்களுடன்
தஞ்சாவூரான்
26 10 2014
0 x

thanjavooran
Posts: 2538
Joined: 03 Feb 2010, 04:44
x 177
x 63

#181 Re: Tit bits in Tamil

Post by thanjavooran » 29 Nov 2014, 18:57

பனையை வெட்டினால் நதிகள் வறண்டு போகும் !

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர். அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர். அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும்,

ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது. இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர்.

இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும். அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப்பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும். இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது உற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல் நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெறுக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்...

இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டேவரும் என்பது மட்டும் உண்மை நதிகளை காப்பாற்ற பனைமரங்களை வெட்டுவதை தவிர்க்கவும்.
0 x

thanjavooran
Posts: 2538
Joined: 03 Feb 2010, 04:44
x 177
x 63

#182 Re: Tit bits in Tamil

Post by thanjavooran » 04 Dec 2014, 08:17

சினிமாகாரன் தொல்ல தாங்க முடியலப்பா..!!
TOILET போன.. "அப்பாஸ்" ஹார்பிக் வச்சுக்கிட்டு நிக்கிறார்..!!
டீ கடைக்கு போனா.. கார்த்தியும்,, சூர்யா'வும் நிக்கிறாங்க.. sunrise வேணுமா.. Brue வேணுமானு கேட்குறாங்க..!!
குளிக்கலாம்னு பாத்ரூம் போனா.. உள்ளே கரீனா கபூரும்,, தீபிகா படுகோனும் நிக்கிறாங்க.. LUX soap வேணுமா.. Dove soap வேணுமானு கேட்குறாங்க..!!
சாப்பிடலாம்னு உட்காந்திருந்தா.. சினேகா அக்கா ஆசீர்வாத் சப்பாத்திய எடுத்துக்கிட்டு வாராங்க..!!
ஆபீஸ்'க்கு போகலாம்னு.. பைக்க ஸ்டாட் பன்னுனா.. உடனே ஷாருக்கான் வந்து.. Honda பைக் வாங்குங்க.. மைலேஜ் கொடுக்கும்'னு சொல்றாரு..!!
பிஸ்கட் வாங்கலாம்னு கடைக்கு போனா.. அங்கே அமிதாப் பச்சன் நிக்கிறாரு.. Kukies பிஸ்கட் வாங்குங்கனு சொல்றாரு..!!
மனைக்கு Dress எடுக்கலாம்னு போனா.. அங்கே அனுஷ்கா,, திரிஷா,, ராதிகா தொல்லை தாங்க முடியல..!!
வேட்டி சட்டை வாங்கலாம்னா..
சரத்குமார்,, ஜெயராம்,, மம்முட்டி நம்ம முன்னாடி வந்து நிக்கிறாங்க..!!
கோல்டு வாங்கலாம்னு கடைக்கு போனா.. மொத்த சினிமாகாரங்களும் நம்ம பின்னாலயே வர்ராங்க..!!
இதை வாங்குங்க.. அதை வாங்குங்கனு சொல்றதுக்கு முன்னாடி.. இப்படி சம்பாதிங்க.. அப்படி சம்பாதிங்க'னு.. நல்ல ஐடியா குடுங்கையா.. மொதல்ல..!!
உங்க தொல்ல தாங்க முடியல சாமி ...
0 x

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05
x 65
x 89

#183 Re: Tit bits in Tamil

Post by Ponbhairavi » 04 Dec 2014, 19:01

எது உயர்ந்தது ?


புத்தக கண் காட்சிக்கு போயிருந்தேன் . என் நண்பர் அங்கு ஒரு ஸ்டால் போட்டிருந்தார் . புத்தக ரசிகர்கள் புத்தகங்களை புரட்டி பார்த்து
கொண்டிருந்தனர் இசை அன்பர்கள் ஒலி தகடுகளை பார்ப்பதை போல் .
ஏன் நண்பரை கேட்டேன் : எந்த விதமான புத்தகங்கள் நன்றாக விற்கின்றன என்று
கவிதைகள நன்றாக போய் கொண்டிருக்கின்றன என்றார்.
எந்த மாதிரியான கவிதைகள் ,சிலப்பதிகாரம் போன்ற கவிதைகளா ?
இல்லை சார் ,சிலப்பதிகாரத்தை விட பாரதியார் கவிதைகள் கண்ணதாசன் கவிதைகளுக்கு தான் மக்களிடம் நல்ல வரவேற்பு
அருகே இருந்த ஒருவர் சண்டைக்கு வந்துவிட்டார் .சிலப்பதிகாரத்தை விட பாரதியார் ,கண்ணதாசன் கவிதைகள் தான் உயர்ந்தவை என்று எப்படி நீங் கள் சொல்லலாம் ?
உயர்ந்தவை என்று நான் சொல்லவில்லையே மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது என்று தானே சொன்னேன்.
சிலப்பதிகாரம் உலகம் புகழ் காப்பியம் தெரியுமா?
யார் இல்லை என்று சொன்னார்கள்
இரண்டாயிரம் வருடங்களாக அழியாமல் இருப்பது தெரியுமா?
தெரியுமே
தமிழ் யாப்பிலக்கணத்தின் மேன்மையை உணர்த்தும் படைப்பு .அந்த யாப்பு நயம் பாரதியிடமும் கண்ணதாசனிடமும் உண்டா?
அது வேறு கவிதை இது வேறு கவிதை , இரண்டுமே கவிதைகள் தான்.
இளங்கோவடிகளை சொன்ன அதே வாயால் நீர் பாரதியையும் கண்ண தாசனையும் சொன்னதே தவறு.
மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது வியாபாரம் ஆகிறது என்று தானே சொன்னேன்.
சிலப்பதிகாரம் புத்தகத்திற்கு பக்கத்தில் இந்த புத்தகங்களை நீர் அடுக்கி வைத்திருப்பதே தமிழ் துரோகம்.இங்கு எல்லோரும் இதை பார்த்துவிட்டு எப்படித்தான் சும்மா போய்கொண்டிருக்கிறார் களோ தெரியவில்லை. அறிஞர்களா இவர்கள்.?சீத்தலை ச்சாத்தனார் இருந்தால் உம் தலையில் எழுத்தாணியால் குத்தியிருப்பார்.
ஏன் நண்பர் ஒன்றும் சொல்லவில்லை. எதற்கு வீண் வம்பு ? சிலருக்கு அதே தொழில். என்னிடம் சொன்னார் வாரும் ஒரு காபி சாப்பிட்டு விட்டு வருவோம் என்று சொல்லி என்னை அழைத்துக்கொண்டு உணவு விடுதிக்கு வந்தார்.
அங்கு செர்வரிடம் கேட்டேன்.
என்னப்பா - இன்றைய ஸ்பெஷல் ?
பேல் புரி , பானி புரி என்றான்
கோதுமை ரவா இட்லி இல்லையா என்றேன்
இருக்கு சார்,
அதை விட இ ன்றைக்கு பேல் புரி, பானி புரிக்கு தான் நல்ல டிமாண்ட் என்று சொன்னேன்
பேல் புரி ரவா இட்லியை விட அப்படி என்ன ஒசத்தி ? என்றேன் நான் செர்வரிடம்
ஒசத்தி ,மட்டம்,என்று நான் சொல்லவில்லை சார், இன்று நல்ல ஓட்டம் என்று தான் சொன்னேன்.
எல்லாமே கோதுமையில் பண்ணினது தானே ?
ஆமாம் அனால் இன்றைய இளைஞர்களுக்கு இதில் தான் நாட்டம்.
இட்லி ஆவியில் வெந்தது , உடம்புக்கு நல்லது தெரியுமா ?
சரி , ரவா இட்லி யும் தான் இருக்கே . கொண்டு வரேன் உங்களுக்கு பிடித்தால் அதை சாப்பிடுங்கள் . லோகோ பின்ன ருசி என்றான் சர்வர். அவன் உலகியல் தெரிந்தவன்
சற்றுமுன் வம்புக்கு வந்த சிலப்பதிகார நண்பர் இப்போது உணவு விடுதிக்குள் நுழைந்து கொண்டிருந்தார் .
நண்பர் செர்வரிடம் ,சரி சரி இரண்டு பேல் புரி கொண்டுவா என்று சொல்லி விட்டு என்னைப் பார்த்து உனக்கும் இப்போது அவர் வாடை தொற்றிக் கொண்டு விட்டது என்று நினைக்கிறேன் என்றார் .
பில் பணத்தை நண்பர் கொடுத்தபோது திரும்பி பார்த்தேன். சிலப்பதிகாரம் பானி பூரி சாப்பிட்டு கொண்டிருந்தது
0 x

Pratyaksham Bala
Posts: 3399
Joined: 21 May 2010, 16:57
x 135
x 97

#184 Re: Tit bits in Tamil

Post by Pratyaksham Bala » 04 Dec 2014, 22:08

பானி பூரி சாப்பிட்டு கொண்டிருந்த சிலப்பதிகாரத்தின் பெயர் என்னவோ ? !!
0 x

arasi
Posts: 16082
Joined: 22 Jun 2006, 09:30
x 475
x 264

#185 Re: Tit bits in Tamil

Post by arasi » 06 Dec 2014, 08:37

பாலா,
உள்ளூர்க்காரர்களின் க்யூரியாஸிடி :)

பாணி பழம் இலக்கியமே என்றாலும், தண்ணீரிலூறிய வடக்கத்திய பண்டமவர் வாய்க்கு ருசி--துரைசாணி தின்னும் பெரெட்டும் பட்டருமோ? மோரு குடிப்பதை விடவோ வந்து சேர்ந்த பண்டம்?
'காணி நிலம்' பாடியவன் சொன்ன 'வஞ்ச‌னை செய்யும் வாய்ச் சொல் வீரரில்' ஒருவர்தானோ இவர்?.. உமக்கும் தெரிந்தவரோ??!!
0 x

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05
x 65
x 89

#186 Re: Tit bits in Tamil

Post by Ponbhairavi » 06 Dec 2014, 16:02

யாரோ இவர் யாரோ என்ன பேரோ
என்றதும் எனக்கு அருணாச்சல கவிராயரின்
பைரவி கிர்த்தனை தான் நினைவுக்கு வருகிறது
ஏன் பெயருடன் அது ஒட்டிகொண்டிருப்பதலோ ?
இது வேறு ராகம் ,ரகம் .
ஒற்றை காலில் நின்றுகொண்டிருக்கும்
"ஒண்ணே மதியுள்ள கொக்கு
அது உலகத்தை ப் பார்க்க ஒரே கண்
அதுவும் காமாலை
மஞ்சள் தவிர வேறு நிறம் தெரியாது.
பாலா சிறந்த ஓவியர் என்பது பலருக்கு
தெரியாமல் இருக்கலாம்.
கீழே கிடந்த கை வளையல் துண்டை வைத்துகொண்டு
அழகியின் படத்தை வரைந்த தமிழ் கலைஞர் பரம்பரையில்
வந்தவர் . அவருக்கு இது போதும்

அரசியார் அறியாததா?
0 x

arasi
Posts: 16082
Joined: 22 Jun 2006, 09:30
x 475
x 264

#187 Re: Tit bits in Tamil

Post by arasi » 06 Dec 2014, 19:32

அடடா! பேல்பூரிக்காரர் உம்மிருவருக்கும் தெரிந்த எவரோ என எண்ணினேன். பெர்ஸொனாலிடி அடாஸாகத் தோன்றியது. அவ்வளவுதான். பி சியில் எனக்குத் தெரிந்தவர் இரு பி பிகள் தவிர வேறு யாருமில்லை.
0 x

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16
x 2

#188 Re: Tit bits in Tamil

Post by venkatakailasam » 06 Dec 2014, 21:10

Actually when I was reading " யாரோ இவர் யாரோ என்ன பேரோ
என்றதும் எனக்கு அருணாச்சல கவிராயரின்
பைரவி கிர்த்தனை தான் நினைவுக்கு வருகிறது "..

I was listening to M Santhanam's version of.....

p-Santhanam 004-Yaaro enru ennamale-Sankarabaranam..

http://mfi.re/listen/tgtdu3ayw74w2x2/p- ... aranam.mp3

Is it a coincidence??
0 x

maduraimini
Posts: 472
Joined: 22 Sep 2009, 02:55
x 1
x 3

#189 Re: Tit bits in Tamil

Post by maduraimini » 07 Dec 2014, 10:03

Sri Venkatakailasam- Thanks. That was a funny one. Can you call an Electrician 'Paranjothi'?
0 x

sridhar_ranga
Posts: 805
Joined: 03 Feb 2010, 11:36
x 11

#190 Re: Tit bits in Tamil

Post by sridhar_ranga » 07 Dec 2014, 13:32

arasi wrote:பி சியில் எனக்குத் தெரிந்தவர் இரு பி பிகள் தவிர வேறு யாருமில்லை.
அரசியாரே ஜி_எம் அல்லது க_மூ என்ற பெயரில் இப்போதெல்லாம் நிறைய போஸ்ட் செய்பவரும் புதுவையில் இருப்பதாய் எழுதியதாக ஞாபகம் - உங்களுக்குத் தெரிந்தவர் தான் என்று நினைக்கிறேன்.
0 x

arasi
Posts: 16082
Joined: 22 Jun 2006, 09:30
x 475
x 264

#191 Re: Tit bits in Tamil

Post by arasi » 07 Dec 2014, 18:15

Sridhar,
No. I don't think I can connect.
0 x

sridhar_ranga
Posts: 805
Joined: 03 Feb 2010, 11:36
x 11

#192 Re: Tit bits in Tamil

Post by sridhar_ranga » 07 Dec 2014, 23:48

Arasi, I was referring to Ganesh_Mourthy who IIRC lives in Puduvai.
0 x

arasi
Posts: 16082
Joined: 22 Jun 2006, 09:30
x 475
x 264

#193 Re: Tit bits in Tamil

Post by arasi » 08 Dec 2014, 10:00

Ah, so? Didn't know that!

There is a certain Puduvai stamp, don't you agree (though of different brands) about them? PuduvaikkaDal kATRu, that certain individuality about them--bhArathi's gift to the place ?? :)
0 x

Pratyaksham Bala
Posts: 3399
Joined: 21 May 2010, 16:57
x 135
x 97

#194 Re: Tit bits in Tamil

Post by Pratyaksham Bala » 08 Dec 2014, 18:23

OMG!
0 x

thanjavooran
Posts: 2538
Joined: 03 Feb 2010, 04:44
x 177
x 63

#195 Re: Tit bits in Tamil

Post by thanjavooran » 25 Jan 2015, 20:56

BUSINESS TACTICS

பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார். 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவி, பழங்களை விற்க முயன்றார். எவரும் பழம் வாங்க முன்வரவில்லை. சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான். 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவினான். அவனுக்கு நல்ல விற்பனை!
மற்றொரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும், 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று விற்க முயன்றார். பலன் இல்லாமல் போகவே, கீழே இறங்கி விட்டார். அடுத்து, 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்' என்று கூவியபடி அந்தப் பேருந்தில் ஏறிய இளைஞன், ஏகத்துக்கு விற்பனை செய்தான்!
மிகப் பெரிய கம்பெனியின் விற்பனை ஆலோசகரான ஒருவர் இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார். முதியவரை அருகில் அழைத்தவர், "அந்த இளைஞனின் சாமர்த்தியம் உங்களிடம் இல்லையே! அவனுக்குப் போட்டியாக நீங்களும் ஆறு பழம் பத்து ரூபாய் என்று விற்றால்தானே உங்களுக்கு விற்பனை ஆகும். அதிகக் கொள்முதல் மூலம் குறைந்த விலைக்கு பழங்களை வாங்கி, லாபத்தைக் குறைத்து அதிக விற்பனை செய்யப் பழகுங்கள் தாத்தா!" என்று தனது ஆலோசனைகளை அள்ளி விட்டார்.
முதியவர் சிரித்தபடி, "போய்யா... அவன் என் மகன். இந்தப் பழமும் அவனதுதான். 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு விற்றால்... சட்டுன்னு வாங்குவதற்கு, நம்ம சனத்துக்கு மனசு வராது. அதனால் நான், 'ஐந்து பழம் பத்து ரூபாய்'னு கூவிகிட்டுப் போவேன். அப்புறமா, 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு அவன் வந்து சொன்னதும்... 'அடடே லாபமா இருக்கே'னு சனங்க சட்டுன்னு வாங்கிடுவாங்க. அவன்தான்யா நிசமான வியாபாரி. சனங்களோட மனசை மாத்தறதுக்குத்தான் என்னை முன்னாடி அனுப்புறான்!'' என்றார் முதியவர்.
0 x

thanjavooran
Posts: 2538
Joined: 03 Feb 2010, 04:44
x 177
x 63

#196 Re: Tit bits in Tamil

Post by thanjavooran » 04 Feb 2015, 08:09

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு.


நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு.

அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனாங்க...? கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை . பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று. ஒரு வேளை தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால் அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல் கோடையில் கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும் உள்ளது . ஆனால் இவற்றிற்கெல்லாம் எளிய இலகுவான தீர்வுகள் இதோ.

மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில் நீரூற்று தோன்றும் என்கின்றனர் . சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல நீரூற்று என அறிவது எப்படி.? நவ தானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல் நாள் இரவு தூவி விடவேண்டும். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டு சென்று சேர்த்த அடையாளங்கள் , அதாவது தடயங்கள் இருக்குமாம் அந்த இடத்தில் கிணறு வெட்டினால் தூய சிறப்பான நன்னீர் கிடைக்கும் என்கிறார்கள்.

சரி தூய நீரும் கண்டு கொண்டாயிற்று. . . .!!
கோடைகாலத்திலும் வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிவது எப்படி ? கிணறு வெட்ட இருக்கும் நிலப்பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திட்க்குள் மேய விட வேண்டும். பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம்.

அப்படி அவை படுக்கும் இடங்களை நான்கு , ஐந்து நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம் அந்த இடத்தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்.
0 x

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16
x 2

#197 Re: Tit bits in Tamil

Post by venkatakailasam » 11 Feb 2015, 08:14

Image

ஒருமுறை காட்டுக்குள் போகும் போது அங்கிருந்த குரங்குகள் தின்பதற்கு பழங்கள் கொடுத்தோம்.

அழைத்துச் சென்ற வனத்துறை அதிகாரி, "குரங்களுக்கு மனிதர்கள் இப்படிப் பழங்கள் கொடுத்துப் பழக்குவது தவறானது"- என்றார்... ஆச்சர்யமாய் இருந்தது.. விலங்குகளுக்கு உணவிடுவது நல்லதுதானே என்று கேட்டேன்...

"சுற்றிப்பார்ப்பதற்காக வரும் மனிதர்கள் ஒரு பிரியத்தில்தான் குரங்குகளுக்கு உணவிடுகிறார்கள்.

ஆனால் தினமும் இப்படியே இந்தக் குரங்குகளுக்கு உணவு கிடைத்து விடுவதால் இந்தக் குரங்குகள் கஷ்டப்பட்டு உணவு தேடுவது, மரங்களின் மேல் ஏறி பழங்கள் பறிப்பது போன்ற பழக்கங்களை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கைவிட்டுக் கொண்டிருக்கின்றன...

இப்படியே போவதால் ஒரு நாள் முற்றிலும் அந்தப்பயிற்சி இல்லாமலேயே புதிய தலைமுறைக்குரங்குகள் மாறி விடுகின்றன...

வரிசையில் உட்காந்து பிச்சை எடுப்பது போல இந்தக் குரங்குகளும் டூரிஸ்ட்களிடம் பிச்சைஎடுக்கும் ஜீவங்களாக மாறிவிடுகின்றன...

எனவே இயற்கையுடன் இணைந்து வாழும் மிருகங்களை அதன் போக்கில் வளரவிடுவதே ஆரோக்கியமானது"- என்று பதில் சொன்னார்...

நிறைய யோசிக்க வைத்தது!!...
share from Dinakaran
0 x

thanjavooran
Posts: 2538
Joined: 03 Feb 2010, 04:44
x 177
x 63

#198 Re: Tit bits in Tamil

Post by thanjavooran » 11 Feb 2015, 08:45

ஆம் . கண்டிப்பாக யோசிக்க வேண்டிய ஒன்று. நாமே ஒரு வழியை / பழக்கத்தை உண்டு பண்ண காரணராகிறோம் .

A share from my friend

பழங்காலத்தில் ஜப்பான் நாட்டில் விசித்திரமான ஒரு பழக்கம் இருந்து வந்தது.
பெற்றோர்கள் வயதாகி முதுமையின் காரணமாக ஆற்றல் குறைந்து, மற்றவர்களுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டால், அவர்களைத் தூக்கிக் கொண்டு போய் உயரமான மலைகளின் மேல் வைத்துவிட்டு வந்துவிடுவார்கள்.

எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ள அம்முதியோர்கள் பசி, தாகத்தினால் தனிமையில் வாடி வதங்கி மடிவார்கள்.

இப்படியான சூழ்நிலையில் ஓர் இளைஞன் முதுமையடைந்த தன் தாயை சுமந்து கொண்டு மரங்கள் சூழ்ந்த ❄ காட்டுப்பகுதியில் மலை உச்சியை நோக்கி நடந்து கொண்டிருந்தான்.

தாய், மகன் இருவருமே எதுவும் பேசவில்லை!

ஆனால் சிறிது நேரத்தில் தன்தோளில் இருந்த தாயார். ஏதோ ஒருவித மணம் கொண்ட மரங்களின் சின்னசின்ன கிளைகளை ஒடித்துக் கீழே போட்டுக் கொண்டே வருவதை மகன் அறிந்தான்.

உடனே, ""அம்மா, ஏதோ ஒரு மாதிரியான மரத்தின் கிளைகளை ஒடித்துக் கீழே போட்டுக் கொண்டே வருகிறீர்களே! ஏன்?'' என்று கேட்டான்.

அதற்கு தாயார், ""மகனே, நீ என்னை மலை மீது விட்டுவிட்டு வீடு ↪ திரும்பும்போது வழி தெரியாமல் திண்டாடக் கூடாதல்லவா?

இங்கே போடப்பட்டுள்ள கிளைகளை கவனித்து நடந்தால் வழி தவறாமல் நீ பாதுகாப்பாக வீடு போய் சேரலாம்.

அதற்காகவே கிளைகளை அடையாளமாகப் போடுகிறேன்'' என்றாள்.

""வயதாகிவிட்ட தன்னை தவிக்கவிட்டுச் சென்றாலும் மகன் பத்திரமாக வீடு போய்ச் சேர வேண்டும் என்று நினைக்கும் பாசமிகுந்த இந்த தாயா பயனற்றவர் என்று உள் மனம் கேட்க, அவன் தன் தாயை ⤵ மீண்டும் தன் வீட்டுக்கே கொண்டு வந்து பாசத்துடன் பராமரிக்கலானான் .

அதன்பின்பு அந்தக் கொடூரமான பழக்கம் அந்த நாட்டை விட்டே ஒழிந்தது.

இந்த கதை சொல்ல வரும் கருத்து நம் வாழ்வுக்கு மிக முக்கியம்..

நீ நல்லவனா கெட்டவனா என்று தெரிவதற்கு முன்னாலேயே தன் வயிற்றில் இடம் கொடுதிதவள் உன் தாய்
எத்துனை ஜன்மம் சம்பாதித்தாலும் நீ இருந்த வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியாது என்றால் அது உன் தாயின் கருவரை என்பதை மறந்து விடாதே
எத்தனையோ கஷ்டங்கள்
நஷ்டங்கள்
துன்பங்கள்
துயரங்கள்
அசிங்கங்கள்
அவமானங்கள்
கடந்த பிறகும் ஒன்ருமே தெரியாதது போல் காட்டிக்கொன்டு குடும்பத்தின் மத்தியில் சிரித்துக் கொன்டிருக்கும் தந்தைக்கு நிகரான நம்பிக்கை ஊட்டும்
புத்தகம் இந்த உலகில் வேரேதுமில்லை
நம் பெற்றோர்கள் எப்போதும் நம் நலன் நினைப்பவர்கள்.

அவர்களை கண் போன்று பாதுகாப்போம்
0 x

vgovindan
Posts: 1603
Joined: 07 Nov 2010, 20:01
x 56
x 112

#199 Re: Tit bits in Tamil

Post by vgovindan » 11 Feb 2015, 17:31

venkatakailasam wrote: ஆனால் தினமும் இப்படியே இந்தக் குரங்குகளுக்கு உணவு கிடைத்து விடுவதால் இந்தக் குரங்குகள் கஷ்டப்பட்டு உணவு தேடுவது, மரங்களின் மேல் ஏறி பழங்கள் பறிப்பது போன்ற பழக்கங்களை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கைவிட்டுக் கொண்டிருக்கின்றன...

இப்படியே போவதால் ஒரு நாள் முற்றிலும் அந்தப்பயிற்சி இல்லாமலேயே புதிய தலைமுறைக்குரங்குகள் மாறி விடுகின்றன...

வரிசையில் உட்காந்து பிச்சை எடுப்பது போல இந்தக் குரங்குகளும் டூரிஸ்ட்களிடம் பிச்சைஎடுக்கும் ஜீவங்களாக மாறிவிடுகின்றன...

எனவே இயற்கையுடன் இணைந்து வாழும் மிருகங்களை அதன் போக்கில் வளரவிடுவதே ஆரோக்கியமானது"- என்று பதில் சொன்னார்...

நிறைய யோசிக்க வைத்தது!!...
இந்திய நாட்டில், முக்கியமாக தமிழ்நாட்டில், மக்கள் இம்மாதிரி - பிச்சையெடுப்பவர்கள் போன்று - மாறி வருகின்றார்களே - patronage அரசியல் செய்து, மக்களுக்கு இலவசமாக உணவுப்பொருட்களும், துணிமணிகளும், வேலையின்றி வருடத்தில் 120 நாள் சம்பளம் என்ற பெயரில் doles தந்து வருகின்றார்களே - நாம் யாரும் கண்டுகொள்ளவில்லையே! உழைப்புக்கு மதிப்பில்லாமல் போய்விட்டதே!
0 x

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16
x 2

#200 Re: Tit bits in Tamil

Post by venkatakailasam » 12 Feb 2015, 14:06

yes...That was very much in my mind...when I posted ...Shri Govindan
0 x

Post Reply