What I liked in Tamil Litrature

Post Reply
venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

What I liked in Tamil Litrature

Post by venkatakailasam »

படித்ததில் பிடித்தது....

"வனவாசம் முடிந்து வருவான் வருவான் தன்கணவன் என அவள் காத்திருக்கிறாள்.. 14ஆண்டுகளின் பரிதவிப்பான காத்திருப்பு அன்று முடிகிறது
கணவன் வருகிறான்.
ஆசை அணைஉடையும் நேரம் அள்ளி அணைப்பான் கொஞ்சிப்பேசுவான் என மகிழ்ந்து காத்திருந்தவள் தன்னைக்கண்டதும்
,” கண்ணே! அண்ணனுக்குப்பணிவிடை செய்து இந்தப்பதினாலுவருடமும் நான் தூங்கவே இல்லை. தேக்கிவைத்த தூக்கத்தை மொத்தமாய் தூங்கவேண்டும் ஊர்மிளா உன் மடியைக்கொடு தலைசாய்த்துப்படுக்கிறேன்” எனறு மனைவிமடியில் தலைவைத்துத்தூங்க ஆரம்பித்தானாம் கணவன் லட்சுமணன்!

தசரதன் மனவிமார்கள் கணவரை இழந்தவர்கள். மண்டோதரி கணவனோடு மாண்டவள்.
சீதை மீண்டும் கணவனை அடைந்தவள் . கணவன் இருந்தும் இல்லாமலிருந்த
ஊர்மிளா தான் ராமாயணத்தில் பெரிதும் இரக்கத்திற்குரியவள்.’

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: What I liked in Tamil Litrature

Post by venkatakailasam »

சில பாக்கியசாலிகள்,தியாகம் செய்யாமலேயே பெயர் வாங்கி விடுகிறார்கள். சில துர்பாக்கியசாலிகள்

கடுமையான தியாகத்துக்கும், விளம்பரமில்லாமல் மறைந்து விடுகிறார்கள். அவர்களை மன்னரும்

மறந்து விடுகிறார்கள்,கவிஞரும் மறக்கிறார், உறவினர்களும் மறக்கிறார்கள்.

ராமாயணம் முழுவதிலும் யார், யாருடைய பெருமைகளோ பேசப்படுகின்றன. கணவனோடு காட்டுக்குச்

சென்ற சீதாவைப்பற்றி கம்பன் உருகுகிரான், கம்பனைப்படித்த ரசிகன் உருகுகிரான், கம்பனது சிருஷ்ட்டியில்

ராமனும் உருகுகிரான்.

ஆனால் பதினான்கு ஆண்டுகள்கணவனைப்பிரிந்து, கைம்பெண் போலவே வாழ்ந்த இலக்குவன் மனைவி

ஊர்மிளாவுக்காக யார் கண்ணீர் வடித்தார்கள்.? கம்பனுக்கும் கூடக்கருணை இல்லாமல் போயிற்றே?

கணவனோடு காட்டுக்குச்செல்வதுமட்டுமே தியாகம் இல்லை. கணவனைப்பிரிந்து நோன்பு ஏற்பதே

அதைவிடப் பெரிய தியாகமாகும்.

கொஞ்சகாலமாவது ஆரணயத்தில் சீதா வாழ்ந்திருந்து,கணவனுடைய காதலைப்பெற்றிருக்கிராள்.

ஊர்மிளாவுக்கு அதுவுமில்லையே? சீதா அசோகவனத்தில் இருந்தது பெரிதாகப்பேசப்படுகிரதே?

ஊர்மிளா அயோத்தியில் கண்வனைபிரிந்திருந்து பட்ட அவதியை யார் எண்ணுகிரார்கள்?

ஊர்மிளா ஒரு தேவமகள். மாமியார் சுமத்திரையை விட பவித்ரமானவள்.சொல்லப்போனால்

சீதாவை விடவும் ஊர்மிளா உயர்ந்தவள். காட்டுக்குப்போகிரான், கணவன் என்றதும் நானும்

வருவேன் என்று அடம் பிடித்து சீதா சென்று விட்டாள். வாயைக்கூடத்திறக்காமல் ஒரு மூலையில்

நின்று விட்டாளே ஊர்மிளா. பிரிவினும் சுடுமோ, பெருங்காடு?என்று அவளோன்றும் ததுவம் பேச

வில்லையே?

சீதையின் உணர்வுகள் ஊர்மிளாவுக்கு இல்லை என்று அர்த்தமா? அவள் கணவனை நேசிக்கவில்லை

என்று அர்த்தமா? ஊர்மிளா ஒரு லட்சிய மனைவி. அவள்பாடியது ஒருதலை ராகம். கணவன் என்ன

சொல்கிரானோ அதுவே நியாயம், அங்கே கேள்விக்கே இடமில்லை. எண்ணிப்பார்த்தால் பெருமைக்

கணக்கில் ஊர்மிளாவுக்கே முதல் இடம். சீதாவுக்கு இரண்டாவது இடம்தான்........

-கண்ணதாசன் படைப்புகள்....

VK RAMAN
Posts: 5009
Joined: 03 Feb 2010, 00:29

Re: What I liked in Tamil Litrature

Post by VK RAMAN »

Very nicely expressed. By the by, what language Sita and Rama speak?

vasanthakokilam
Posts: 10956
Joined: 03 Feb 2010, 00:01

Re: What I liked in Tamil Litrature

Post by vasanthakokilam »

That is a good question :) I am not sure if any of us will agree on one answer but let us speculate a bit.

I guess the answer will depend on whether one goes by traditional accounts (does Valmiki have anything to say on this matter?) or by scientific(linguistic) accounts ( to the extent possible ) and what time period you want to assign to them ( 35 centuries back or 40+ centuries back ) . On linguistic grounds, obvious candidates if they lived in the vicinity of 35 centuries back are Vedic Sanskrit and a related Prakrit cousin. He would have spoken Prakrit to the people on the street(royalty need to know the common man's language of course ), in Sanskrit to Viswamithra (lest risk the great saint's anger) and in a mixture of these two to Sita and his brothers (he would never heard the end of it if he tried to speak formally to them)!!

Even more interesting speculation is, would they have picked up some Tamil as they camped out near Rameswaram!

The farther back we go, we get into the time when Sanskrit and Iranian languages did not split. Of course all of this will be palatable only if we want to look at things from a strictly known linguistic-science point of view which is also evolving as new knowledge is gained.

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: What I liked in Tamil Litrature

Post by arasi »

We do know through the poets and composers how they spoke the language of love even without words, with their eyes, gestures and internalized monologues (dialogues too? See the other thread here regarding 'yArO, ivar yArO?'!). Wonder which language that was in. samskrita prAkritam as you say? RAmA of course addressing sItA in bahu vachana :)

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: What I liked in Tamil Litrature

Post by venkatakailasam »

Kalyanapuram Aravamudhan says in a discourse on Sundarakandam that Anjineya spoke to Sita

in the Sanskrit language which was in vogue in the kingdom of Koshala so that others will not understand it..

Regarding language spoken by of Rama and Sita, I could not find any indication...

I came across an article Valmiki was a Tamil Sangam Poet

Rama, Sita and others spoke Tamil http://tashindu.blogspot.in/
and,
http://jayasreesaranathan.blogspot.in/2 ... poken.html

Govindaswamy
Posts: 120
Joined: 21 Feb 2010, 06:55

Re: What I liked in Tamil Litrature

Post by Govindaswamy »

திரு வேங்கடகைலாசம் அவர்களே
வல்லின 'ற' வர வேண்டிய இடங்களிலெல்லாம் இடையின 'ர' வருகிறதே. (எ.கா) உருகுகிரான்.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: What I liked in Tamil Litrature

Post by Pratyaksham Bala »

Govindaswamy wrote:...வல்லின 'ற' வர வேண்டிய இடங்களிலெல்லாம் இடையின 'ர' வருகிறதே. (எ.கா) உருகுகிரான்.
2010-ல் திருமதி "தமிழ்விரும்பி" உருவாக்கிய படைப்பு !!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: What I liked in Tamil Litrature

Post by venkatakailasam »

copied from கண்ணதாசன் படைப்புகள்....

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: What I liked in Tamil Litrature

Post by Pratyaksham Bala »

'ற' / 'ர' mess up:-

Yes, "தமிழ்விரும்பி" had labelled her post of November 27, 2010 as "கண்ணதாசன் படைப்புகள்"!

vallknowme
Posts: 98
Joined: 14 Aug 2013, 22:17

Re: What I liked in Tamil Litrature

Post by vallknowme »

"Eppadi Manam Thunindha dho Swami
Vanam Poi Varugiren endraal Idhai Erkumo boomi" - Ultimate rendition by Sanjay, the one and only, Subrahmanyan.

Its probably sung from Urmila's perspective.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: What I liked in Tamil Litrature

Post by Pratyaksham Bala »

It is Sita's lamentation.

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: What I liked in Tamil Litrature

Post by vgovindan »

"Eppadi Manam Thunindha dho Swami"

vAlmIki was more pro-feminist. In vAlmIki Ramayana, sItA bursts out and asks rAma 'are you a man?' And, rAma submits meekly. I remember the dialogue in Hindi film 'pati patni aur woh' - wherein Sanjiv Kumar threatens his newly wedded wife about making hot water in the morning. After repeated taunts, his wife asks 'if I don't prepare, then?' and the husband meekly submits by saying 'I will take bath in cold water'. That is the spirit. We have made our women-folk submissive and tear-jerking by these cultural onslaughts. Though it is outside the purview of this topic, yet it is not irrelevant.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: What I liked in Tamil Litrature

Post by Pratyaksham Bala »

Thus spake Sita:-

किम् त्वा अमन्यत वैदेहः पिता मे मिथिला अधिपः |
राम जामातरम् प्राप्य स्त्रियम् पुरुष विग्रहम् || २-३०-३

"What my father, the king of Mithila belonging to the country of Videha, think of himself having got as so-in-law you, a woman having the form of a man?"

अनृतम् बल लोको अयम् अज्ञानात् यद्द् हि वक्ष्यति |
तेजो न अस्ति परम् रामे तपति इव दिवा करे || २-३०-४

"It is a pity if these people of Ayodhya through ignorance tell the falsehood that excellent valour is lacking in Rama as in a blazing sun."

किम् हि कृत्वा विषण्णः त्वम् कुतः वा भयम् अस्ति ते |
यत् परित्यक्तु कामः त्वम् माम् अनन्य परायणाम् || २-३०-५

"For what reason are you cast down or whence fear in you, for which you are willing to desert me, for whom there is no other recourse."

vallknowme
Posts: 98
Joined: 14 Aug 2013, 22:17

Re: What I liked in Tamil Litrature

Post by vallknowme »

Dear Pratyaksham Bala,

"It is Sita's lamentation." --> We know it is Sita's lamentation. But neenga innum konjam deepa yosikanum. Take existing characters out of context and fit others in. literary appreciation swaarasiyamaa irukkum. try panni paarunga.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: What I liked in Tamil Litrature

Post by Pratyaksham Bala »

ellai ilA kaRpanaiyil alaindalaindu tirindu,
alukkAda rasanai idu endreNNi tiLaittirunda kAlam unDu.
idilum pala nilaikal uNDenRu purinda nilai tAnDi,
'ellAm aluttadaiyE' enRa nilai inRu !

vallknowme
Posts: 98
Joined: 14 Aug 2013, 22:17

Re: What I liked in Tamil Litrature

Post by vallknowme »

What I really liked in contemporary Tamil literature is a series (which is also published as a book) that used to come on An and a Vikatan by Raju Murugan - stream of consciousness Tamil writing. Outside of it I love the cheyyuls of Natrinai. And of course, the greatest Thiruvasagam.

Sundara Rajan
Posts: 1081
Joined: 08 Apr 2007, 08:19

Re: What I liked in Tamil Litrature

Post by Sundara Rajan »

There are several adaptations of Valmiki's RamayaNa in literature : Tulasidas RamacharitamAnas, Bhasa's PratimA nAtaka, Kamban's Tamil RamayaNa, to cite a few. Each one has used his own imagination for the variations. "Eppadi manam thuNindadO swami" and "yArO iavr YArO" are imaginations of AruNachala Kavi. When Rama first saw Sita, he was a teenager and Sita was nine years old as per Valmiki. The physical description of Sita by AruNachala Kavi in "yArO ivar yArO" belies her age ! Let us give some leeway to poetic license and not take their words too seriously, but enjoy the lyrical beauty of their creations.

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: What I liked in Tamil Litrature

Post by arasi »

:)

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: What I liked in Tamil Litrature

Post by vgovindan »

Sundara Rajan,
Did I say anything about the poet and poetic licence? Sorry if you have misunderstood me. I qualified what I wrote by -
"Though it is outside the purview of this topic, yet it is not irrelevant."

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: What I liked in Tamil Litrature

Post by arasi »

ஊர்மிளைக்குப் படி தாண்டா பத்தினி பதவி--
ஊர் பெண்களுக்கெல்லாம் எத்தனை பாடங்கள்!
ஒரு புற‌ம் கைகேயியின் இனம் புரியா வினைகள்--
தருமம் காத்த ராமனைத் தொடர்ந்தாள் சீதை--

ராம‌ன் இருக்கும் இடம் அயோத்தியெனவொ?

பெண்களுக்குப் பாடங்கள், 'அவன் சொல் கேள்' என்று
'கண் போன்ற‌ அவனைத் தனியே விடாதே', என்றும்...
எண்ணுவதும்,அதை நடத்துவதும் அவளுக்குண்டோ?
மண்மகள் செய்தாள், ஐயன் பின் சென்றாள், அவதியுற்றாள்

மற்றவளோ? மணந்த‌வன் சொல் கேட்டாள், மாற்றறியாள்
மாற்றறியாப் பொன் அந்தப் பெண், பேதையவள்
கற்றறிந்தவளாயினும் கணவன் சொல் கேட்பதே
கற்பென நினைத்தவள் அந்த‌-ஊர்மிளை--

ஊர்ப் பெண்களுக்கு எத்தனை பாடங்கள்!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: What I liked in Tamil Litrature

Post by venkatakailasam »

படித்ததில் பிடித்தது...

அக்ரஹாரத்துப் பூனை ......

ஜெயகாந்தன் சிறுகதைகள்...

" எங்கள் ஊர் ரொம்ப அழகான ஊர். எங்கள் அக்ரஹாரத் தெரு ரொம்ப அழகானது. எங்கள் அக்ரஹாரத்து மனிதர்களும் ரொம்ப அழகானவர்கள். அழகு என்றால் நீங்கள் என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரை ஒன்றின் நினைவே சுகமளிக்கிறது என்றால் அது ரொம்ப அழகாகத்தானிருக்க வேண்டும். முப்பத்தைந்து வருஷங்களுக்கு முன்னால் அங்கே, அந்தத் தெருவில் ஓர் பழங்காலத்து வீட்டின் கர்ப்பக் கிருகம் மாதிரி இருளடைந்த அறையில் பிறந்து, அந்தத் தெருப் புழுதியிலே விளையாடி, அந்த மனிதர்களின் அன்புக்கும் ஆத்திரத்துக்கும் ஆளாகி வளர்ந்து, இப்போது பிரிந்து, இருபத்தைந்து வருஷங்கள் ஆன பிறகும் அந்த நினைவுகள், அனுபவங்கள், நிகழ்ச்சிகள் யாவும் நினைப்பதற்கே சுகமாக இருக்கிறதென்றால், அவை யாவும் அழகான அனுபவங்களும், நினைவுகளும் தானே!

நான் பார்த்த ஊரும் - 'இவை என்றுமே புதிதாக இருந்திருக்க முடியாது' என்று உறுதியான எண்ணத்தை அளிக்கின்ற அளவுக்குப் பழசாகிப் போன அந்த அக்ரஹாரத்து வீடுகளூம், 'இவர்கள் என்றைக்கும் புதுமையுற மாட்டார்கள்' என்கிற மாதிரி தோற்றமளிக்கும் அங்கு வாழ்ந்த மனிதர்களும் இப்போதும் அப்படியேதான் இருக்கிறார்கள் என்று என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியாது. எனினும், அவர்கள் அப்படியே இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொள்வதிலே ஒரு அழகு இருக்கிறது; சுகம் இருக்கிறது.

நான் இப்போது ரொம்பவும் வளர்ந்து விட்டேன்; ரொம்பவும் விஷயங்கள் தெரிந்து கொண்டு விட்டேன். என்னிடமிருந்த குறும்புத்தனங்கள் எவ்வளவோ நீங்கி விட்டன. ஆனாலும் கற்பனையாக இத்தனை மைல்களூக்கப்பாலிருந்து அந்த ஊரின் தெருவுக்குள் பிரவேசிக்கும் போது - கற்பனையால் தூரத்தை மட்டும்தான் கடக்க முடியுமா? - காலத்தையும் கடந்து நான் ஒரு பத்து வயதுச் சிறுவனாகவே நுழைகிறேன்........

read at:

http://ta.wikisource.org/wiki/%E0%AE%85 ... 9%E0%AF%88


The theme is that even the butcher has some norms in killing animals...kills only to earn his lively hood and refuses to killing for the joy of it...where as the Brahmin boy ..a sadist by nature wants to kill a cat...an harmless house pet....

Sundara Rajan
Posts: 1081
Joined: 08 Apr 2007, 08:19

Re: What I liked in Tamil Litrature

Post by Sundara Rajan »

Mr.VGovindan:

There you go again in your post No.20 addressed to ME.

Opinons have been expressed in this thread by SEVERAL rasikas about AruNAchala Kavi's compositions
"eppadi manam","yArO ivar yArO" etc. I cited the several versions of RamayaNa and suggested to
ALL rasikas not to take the contents of the compositions seriously but to enjoy the beauty of the lyrics,
giving some poetic license to the composer.

Why would you assume that my post was directed AT you ?

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: What I liked in Tamil Litrature

Post by venkatakailasam »

பிரஜாபதியும் கிறித்தவர்களும் ...

From ஜெயமோகன்....

Read at:

http://www.jeyamohan.in/?p=35680

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: What I liked in Tamil Litrature

Post by venkatakailasam »

படித்ததில் பிடித்தது...


தாய்மை போற்றுதும்… தாயை வணங்குதும்…

By ஆடிட்டர் சு. குருமூர்த்தி...

வாழ்க்கையில் ஏற்பட்ட குடும்பச் சரிவாலோ, ஏழ்மையாலோ கலங்காத மனோபலம்; பின்பு, குடும்பத்துக்கு வந்த ஏற்றத்தாலும், செல்வத்தாலும் புகழாலும் சற்றும் மாசுபடாத உள்ளம்; எந்த விதமான மனசஞ்சலமும் இல்லாமல் ‘விதவா தர்மத்தை’ 58 ஆண்டுகள் சாஸ்திர முறைப்படி அனுசரித்த ஒரு துறவியின் புனிதம்; பொன்னாசையோ, மண்ணாசையோ மட்டுமல்லாமல் மனிதர்களுக்கே இருக்கக்கூடிய சின்னச் சின்ன ஆசைகள் கூட இல்லாத பற்றற்ற அணுகுமுறை; குழந்தைகள், குடும்பத்தினர், உற்றார், உறவினர் இவர்களுக்காகத் தன்னலமில்லாமல் உடலை செருப்பாக்கி உதவும் இயல்பு, கடவுளிடமும் பெரியோர்களிடமும், குறிப்பாக, காஞ்சி மகா ஸ்வாமியிடம் அளப்பரிய பக்தி; பெரிய அறிவுரைகள் கூறாமல் மற்றவர்களின் மனதை தன்னுடைய நடத்தையால் மாற்றும் தவ வலிமை – இந்த குணங்களெல்லாம் சேர்ந்து ஒரு மனித உருவம் எடுத்தால் எப்படி இருக்கும்?

Mother of S.G.கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி தன்னுடைய 97-வது வயதில் இறைவனடி சேர்ந்த எனது தாய்தான் அந்த ‘மனித தெய்வம்’. எனக்கு இந்த ஜென்மாவில் கிடைத்த பெருமைகளில் எல்லாம் மிகப்பெரிய பெருமை, அவளுக்கு மகனாகப் பிறந்ததுதான் என்று நான் கருதுவதில் என்ன தவறு இருக்க முடியும்! அவள் குடும்பத்தில் வாழ்ந்த சந்நியாசி. அவளுக்குத் தெரிந்த மந்திரம் எல்லாம் நெறி தவறா வாழ்க்கையும், அறம் தவறாக் குடும்பமும், ஒருவருக்கொருவர் ஆற்றும் எதிர்பார்ப்பில்லாத உழைப்பும்தான்....

Read more:

http://desiyachindhanai.wordpress.com/c ... %E0%AE%BF/

vallknowme
Posts: 98
Joined: 14 Aug 2013, 22:17

Re: What I liked in Tamil Litrature

Post by vallknowme »

Beautiful writing Venkatakailasam.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: What I liked in Tamil Litrature

Post by venkatakailasam »

A story which I liked..written by எஸ்.பரமஜோதி....

The Crux " தேவைகள் தீர்ந்து போனதா சரித்திரம் இல்ல; தேவைகளை நாம தான் தீர்த்துக்கணும். கோடி ரூபாய்க்கு அதிபதியா வாழ்றவன், பணக்காரன் இல்ல; தன்னோட ஆசைங்கிற யானைக்கு, அங்குசத்தை மாட்டிட்டு நிம்மதியா வாழ்றவன் தான் பணக்காரன்...."

read the story....

அதிகாலை பனிக்காற்று, திம்மென்று முகத்தில் வந்து மோதியது ஜெயராமிற்கு சுகமாய் இருந்தாலும், மனசு புழுங்கித் தவித்தது.
காலை 5:00 மணிக்கே பீச் ரோட்டில் ஜாகிங் போவதற்காக, காரை எடுத்து கிளம்பி விட்டார் ஜெயராம். அவரைப் போலவே சிலர், தங்கள் பீர் தொப்பையை குறைக்க, மாங்கு மாங்கு என்று ஓடியபடி இருந்தனர்.
அருகம்புல் ஜூஸ் குடித்து, ஆர்பரிக்கும் அலைகளை வேடிக்கை பார்க்கத் துவங்கினார் ஜெயராம். எத்தனை முறை பார்த்தாலும், அலுக்காத சமுத்திரம் இன்றும் அழகாய்த் தான் இருந்தது.
'நுாத்தம்பது கோடி... அவ்வளவையும் அடுக்கி வச்சா, எவ்வளவு நீளம் இருக்கும்ன்னு உங்களால கற்பனை செய்ய முடியுதா மிஸ்டர் ஜெய்... இந்த திட்டம் ஓ.கே., ஆனா, ஒரு ஆண்டுல கிடைக்க போற லாபம் இது...' என்று, சேர்மன் சூசை அற்புதராஜ் சொன்ன வார்த்தைகள், மனசுக்குள் ஓடியது.
வேகம்... வேகம்... ஓட்டம்... ஓட்டம்... என்று வாழ்க்கை தலைதெறிக்க ஓடியது 20 ஆண்டுகளுக்கு முன், திருவல்லிக்கேணியில், ஒண்டுக் குடித்தன வாழ்க்கை நடத்தியவர் தான் ஜெயராம்.
இருபது ஆண்டு என்பது, தனிப்பட்ட வாழ்க்கையில் வேண்டுமானால், மிகப் பெரிய அளவீடாக இருக்கலாம். ஆனால், சமூகப் பார்வையில், 20 ஆண்டு இடைவெளியில் இத்தகைய வளர்ச்சி என்பது அபரிமிதமாய் தோன்றியது.
ஆனால், இதெல்லாம் வெளி உலகத்திற்கு தான். உள்ளுக்குள் மனசும், உணர்வும் ஒருவித தவிப்பில் இருந்தது.
''சார்... எப்படி இருக்கீங்க... வூட்ல அம்மா, புள்ளைங்க எல்லாரும் சவுக்கியமா...''
கொஞ்சம் தடித்திருந்த கட்டைக்குரல் பரிச்சயமானதாய் தோன்ற, சட்டென்று திரும்பி பார்த்தார்; அம்புலி நின்றிருந்தான்.
லுங்கி, கறுப்பு சட்டை, நிறம் மாறியிருந்த அடர்ந்த சுருள்முடியுடன், வரிசைப் பல் தெரிய முகம் மலர சிரித்தான். ஜெயராமின் முகமும், நிஜமான மகிழ்ச்சியை பிரசவித்தது. அது, 20 ஆண்டு நட்பின் மிச்சம்.
மீரான் சாகிப் தெருவில், சிறிய வீட்டில் குடியிருந்த சமயம் அது. ஜெயராமின் இரு குழந்தைகளும், பிரைமரி வகுப்புகளில் படித்த போது, அவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்வான் அம்புலி.
'வளவள'வென எந்நேரமும் பேசியபடி இருப்பான் அம்புலி. படிப்பு இல்லை என்றாலும், எதற்கும் அலட்டிக் கொள்ளாத நல்ல மனிதன்.
சென்னையும், அதன் வேகமும் புரிபடாத ஜெயராமிற்கு, எல்லாரிடமும் சகஜமாக பேச கூச்சம். அவனை விட அவன் மனைவி, மற்றவர்களிடம் பழகவே பயந்தாள். அந்நாட்களில், அவளுக்கு உதவியாய் இருந்தாள், அம்புலியின் மனைவி. நான்கு ஆண்டுகளில் அவர்களுக்குள் நல்ல நட்பு நிலவியது. அதன்பின், சென்னையில் வேறு இடத்திற்கு குடி போனதால், அம்புலியும், அவன் மனைவியும் இவர்கள் வாழ்க்கையை விட்டு விலகினர்.
''எம்புட்டு நாளாச்சு சார் உங்களப் பாத்து... ஆளே மாறிட்டீங்களே... செவ செவன்னு இருப்பீங்க... இப்போ கலரே மங்கிப் போச்சே,'' என்றவன், சிறிது இடை.ெவளி விட்டு அமர்ந்தான். இளம் வெயில், அவன் முகத்தை பதம் பார்த்தது.
''அப்படியா சொல்ற... வயசாகுதுல அதனால கலர் போயிருக்கும்.'' சமாதானப்படுத்தும் விதமாக சொன்னார் ஜெயராம்.
'கடகட' வென சிரித்தான் அம்புலி.
''அதுவும் சரிதான்; வீடு எங்க சார் இருக்கு... நம்ப வண்டியில வாங்களேன்; ரொம்ப நாளாச்சு. நானும் உங்க வீட்டை பாத்த மாதிரி இருக்கும்,'' என்று, நட்பு இழையோட அவன் கூறிய போது, மறுக்கத் தோன்றவில்லை. காரை ஓரமாக நிறுத்தி பூட்டிய பின், அம்புலியுடன், ரிக் ஷாவில் ஏறி அமர்ந்தார் ஜெயராம்.
''சார் கேட்க மறந்துட்டேன்... புள்ளைங்க பெரிசா வளர்ந்து இருக்குமில்ல... என்ன படிக்குதுங்க,'' என்று கேட்டான்.
''காலேஜ் போகுதுங்க...''
''இதப்பாருடா... அம்புட்டு பெரிசாயிடுச் சுங்களா...'' அம்புலியின் முகத்தில் சந்தோஷம் வழிந்தது.
அம்புலி கொஞ்சம் விசித்திரமான மனிதன். 'நாள் முழுவதும் ரிக் ஷா மிதித்து, உடம்பு வலிக்கு ராத்திரியில குடிக்கிறேன்...' என்று சமாதானப்படுத்தும் தவறுகளைக் கூட செய்யாதவன். தன் தொழிலுக்கு சம்பந்தமில்லாத அத்தனை விஷயங்களையும், விலாவாரியாக விவாதிப்பவன்.
''அப்புறம் வாழ்க்கை எப்படி போகுது?'' என்று பொதுவாய் கேட்டாலும், உள்ளுக்குள் அவனைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் இல்லை ஜெயராமிற்கு.
''சூப்பரா போகுது சார்... எத்தனை வண்டி வந்தாலும், நம்ம வண்டியில போறவங்களும் வந்துட்டுத்தான் இருக்காங்க. என் வாழ்க்கையையும், எனக்கான மனுசங்களையும் ஆண்டவன் எங்கயும் ஒளிச்சு வைக்கல,'' என்றான்.
அவனுடைய திருப்தியான பதில், ஏனோ ஜெயராமிற்கு அடி மனதில் பொறாமையை ஏற்படுத்தியது.
''நீ தான் நல்லா இருக்கேன்னு சொல்றே. ஆனா, உன்னை பாத்தா அப்படி தெரியலயே... இந்த 20 ஆண்டுகள்ல உன்கிட்ட பெரிய மாற்றம் வரலயே... அட்லிஸ்ட் ஒரு ஆட்டோ வாங்கி ஓட்டியிருந்தாலாவது ஏதோ முன்னேறி இருக்கேன்னு ஆறுதல் பட்டுக்கலாம்,'' என்று அவனுடைய தன்னம்பிக்கையை அசைத்து பார்க்கும் வெடிகுண்டை, வீசினார் ஜெயராம்.
''நம்ப ஊர்ல தான் சார் எல்லாரும் இப்படி நினைக்கிறாங்க... நல்லா இருக்கேன்னு சொல்றதுக்கு கூட அவங்களுக்கு பெரிய அடையாளம் தேவைப்படுது. ஆனா, நான் மன நிறைவோட, ஆரோக்கியத்தோட, நல்ல புள்ளைங்களோட எந்தக் குறையும் இல்லாமத் தான் இருக்கேன்,'' என்றான் அம்புலி.
அவனுடைய அழுத்தமான பதில், ஜெயராமின் மனதிற்குள் ஈகோவை தூண்டி, 'எத்தனை அகங்காரமாய் பேசுகிறான்...' என்ற கோபத்தை ஏற்படுத்தியது. 'கோடி கோடியாய் சம்பாதிச்ச போதும், இன்னும் தேடி ஓடத் தோன்றும் தன்னுடைய எதிர்நீச்சல், மனம் மீது இத்தனை காலம் பொத்தி வைத்திருந்த கர்வத்தை, இந்த ரிக் ஷாக்காரன் தகர்த்து விடுவானோ...' என்ற கிலியும், மனதுக்குள் ஏற்பட்டது.
''அப்படியென்ன பெரிசா சம்பாதிச்சுட்ட... இத்தனை சந்தோஷமா வாழ...'' என்று நக்கலாய் கேட்டார் ஜெயராம்.
ஆள் அரவமற்ற சாலையில், வண்டியை எந்த தடங்கலும் இன்றி வேகமாக செலுத்தியபடி, ''சம்பாதிக்கல... ஆனா, இயற்கையாவே ஆண்டவன் தந்திருக்கான்,'' என்றான் மென்மையாக!
''என்னது அது?''
''போதும்ங்கிற மனசு.''
வேகத் தடையில் ஏறி, இறங்கிய வண்டி, சட்டென்று நொடியில் பிசகி, 'ஜெர்க்' அடித்தது. ஜெயராமின் மனசும் தான்! ஆனால், அவருள் இருந்த ஆணவம் என்ற அரக்கன், அம்புலியின் தன்னம்பிக்கை வேரை பிடுங்கி எறிந்திட துடித்தது.
''இதெல்லாம் சுத்த ஹம்பக்... வாய்ப்பு கிடைக்கலன்னு சொல்லு. ஆண்டவன் எல்லாரையும் ஒரே மாதிரி தான் படைக்கிறான். அப்படி இருக்கயில எனக்கிருக்கிற ஆசை, உனக்கில்லாம போகுமா என்ன... உனக்கு வாய்ப்பு கிடைக்கல. 20 ஆண்டுகளுக்கு முன் நீ பார்த்த ஜெயராமுடைய வாழ்க்கையையும், இன்னக்கி உள்ளதையும் உன்னால் கற்பனை செய்து கூட பாக்க முடியாது.
''ஆடம்பர பங்களா, வீட்டுக்கு முன் ரெண்டு கார், திராட்சை தோட்டம்... இப்பெல்லாம் கோடிக்கு குறைவா லாபம் தர்ற பிசினசை செய்றதேயில்லை.
''இதெல்லாம் நான் பெருமைக்கு சொல்லல. எப்பவும் நம் ஆசை கட்டுக்கடங்காம இருக்கணும்; அப்பத்தான் வெற்றியடைய முடியும். இப்பக்கூட ஒரு பெரிய டீலிங்கை யோசிச்சுட்டு தான் இருக்கேன். எனக்கு இந்த ஓட்டமும், வேகமும் ரொம்ப பிடிச்சிருக்கு. இப்படியே ஓடிட்டு இருக்கணும்ன்னு தான், ஆண்டவன் கிட்ட கேட்கிறேன்.''
அவர் பேச்சில் கம்பீரமும், பெருமையும் இருந்தது.
அம்புலி மெதுவாய் பின்புறம் திரும்பி பார்த்து சிரித்தான்.
''ரொம்ப சந்தோஷம் சார்... பெரிய பங்களான்னா ஒரு ஏழெட்டு அறை இருக்கும்ல,'' என்று கேட்டான்.
''ம்...'' என்றார் பெருமை மேவ!
''அத்தனை அறைகள் இருந்தாலும், நீங்க ஒரு அறையில தானே தூங்குவீங்க... நான் காலையில ஏழு இட்லி சாப்பிடுவேன்; ரொம்ப பசிச்சா, கூட ஒண்ணு சாப்பிடுவேன். நீங்க எப்படி?''
சம்பந்தமில்லாமல் கேட்கிற அவனை, லேசான எரிச்சலுடன், ''நாலு இட்லி சாப்பிடுவேன்...'' என்றார்.
''அதெப்படிங்க ஒரு நாளைக்கு, 500, 600 சம்பாதிக்கிற நானே எட்டு இட்லி சாப்பிடயில, கோடி ரூபாய் சம்பாதிக்கிற நீங்க, 200 இட்லியாவது சாப்பிடணுமில்ல,'' என்றான்.
அவன் வார்த்தையில் இருந்த நையாண்டி, சுர்ரென்று உரைக்க, கோபம் எட்டிப் பார்த்தது.
''என்ன அம்புலி... நக்கல் செய்றீயா?'' என்றார் கோபமாக.
''சத்தியமா இல்ல சார்... எனக்கு தெரிஞ்சத சொன்னேன். வாழ்க்கையில நிறைய சம்பாதிக்கக் கூடாது, கஷ்டப்பட்டுட்டே இருக்கணும்ன்னு சொல்ல வரல. ஆனா, பணம் சம்பாதிக்க மட்டுமே வாழ்நாட்களை கழிக்கிறதுல எனக்கு அவ்வளவா இஷ்டமில்ல,'' என்றான்.
அவன் வார்த்தையில் இருந்த மேதாவித்தனம், ஜெயராமிற்கு மெல்லிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அவருடைய கார்ப்பரேட் வாழ்க்கையில் கூட, இதுபோன்ற வார்த்தைகள் பரிச்சயமில்லை.
''இருபது ஆண்டுகளுக்கு முன் நீங்க பாத்ததை விடவும், நான் இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன். பிள்ளைகளை படிக்க வச்சிருக்கேன்; உறவுகளுக்கு முடிஞ்சத செஞ்சுருக்கேன்; சில விஷயங்கள் தானா அமைஞ்சது; சிலது அமையாம போனது. அதுக்காக நான் வருத்தப்படல!
''இந்த எண்ணம் தான் என் பலம். எல்லாம் தன்னால நடக்கும் சார்... எதுக்கு பின்னாடியாவது நாம ஓட ஆரம்பிச்சா, இந்த வாழ்க்கைய அனுபவிச்சு வாழ நேரமிருக்காது,'' என்றான் அம்புலி.
ஆச்சரியத்தில் உறைந்து போனார் ஜெயராமன். 'அழுக்கு லுங்கி, கிழிந்த சட்டை, எட்டுக்கு பத்தில் படுக்கையறை, நித்தமும் பொதிமாடு கணக்காய் பாரமிழுக்கும் பொழப்பு. இதில், எதை அனுபவிக்கிறான் இவன்...' என்ற ஏளனம் மிகுந்து, கொஞ்சம் சத்தமாகவே சிரித்தார்.
''என்ன சார் சிரிக்கிறீங்க... இந்த பஞ்ச பய என்னத்த அனுபவிச்சுட்டான்னு நினைச்சு சிரிக்கிறீங்களா... இந்த அம்புலி ஆசை இல்லாதவன், ஆசைக்காக அடுத்தவங்களை சாய்க்க நினைக்காதவன். உண்ண ஒரு பிடி சோறு, உடுக்க ஒரு முழம் உடைன்னு பெரியவங்க சொன்னதை புரிஞ்சவன். படிக்காட்டியும், எந்த அழிச்சாட்டியமும் இல்லாம வாழத் தெரியும். நினைச்சா தூங்கவும், முழிச்சுக்கவும், தன்னைத் தானே கட்டுப்பாட்டுல வச்சுக்கற பெரிய எத்தன்னு எனக்கு நானே பெருமை பட்டுக்குவேன்.
''இப்பக்கூட நீங்க ஒரு வார்த்தை சொன்னீங்களே... ஏதோ பல கோடி ரூபாய் பிசினசை முடிக்கணும்ன்னு, அமைதி இல்லாம தவிக்கிறேன்னு! இதோ, என் பாக்கெட்ல பத்து பைசா இல்ல; ஆனா, நான் எந்தக் கவலையும் படல. கூட்டை விட்டு புறப்படற பறவை, பசியோடு திரும்பற அத்தியாயத்தை ஆண்டவன் எழுதறதில்ல. என் வாழ்க்கையும் அந்த நம்பிக்கை தான் சார்,'' என்று, ஆத்மார்த்தமாய் சொன்னான் அம்புலி.
அதற்குள், வீடு வர, ரிக் ஷாவில் இருந்து இறங்கிய ஜெயராம், ''வீட்டுக்கு வாயேன் அம்புலி,'' என்று பாக்கெட்டில் இருந்த, 100 ரூபாயை எடுத்து நீட்டினார்.
''வேணாம் சார்... உங்க கூடப் பேசி ரொம்ப நாளாச்சேன்னு தான், உங்கள என் வண்டியில ஏறச் சொன்னேன். அதுக்கு போய் காசு வாங்குறதா... நான் இன்னொரு நாள் வீட்டுக்கு வரேன்,'' என்று உளப்பூர்வமாய் சொன்னான்.
அவனுடைய பேச்சும், செயலும், வார்த்தைகளும், அதில் தெறிந்த பதட்டமில்லாத அமைதியும், ஜெயராமிற்கு அவனிடத்தில் ஏற்பட்ட தகிப்பை, மேலும் அதிகரித்தது.
உள்ளே போக எத்தனித்த ஜெயராம், ஏதோ தோன்ற நின்று திரும்பி, ''அப்போ, நிஜமாவே உனக்கு என்னை பார்த்தா, எந்த ஆச்சரியமும் அதாவது பொறாமையும் தோணலயா...'' என்று, தன் மனதில் இருந்ததை கேட்டு விட்டார்.
வாய் விட்டு சிரித்த அம்புலி, ''எதுக்கு சார் உங்களப் பாத்து பொறாமைப் படணும்... உங்களப் பாத்தா பரிதாபம் தான் வருது. எப்பவும் சிரிச்ச முகமா இருந்த நீங்க, இப்போ இறுக்கமா இருக்கிறத பாக்க பாவமா இருக்கு. இந்த ரிக் ஷாக்காரன் இந்த வார்த்தையை சொல்லலாமான்னு தெரியல. ஆனாலும் சொல்றேன்... தேவைகள் தீர்ந்து போனதா சரித்திரம் இல்ல; தேவைகளை நாம தான் தீர்த்துக்கணும். கோடி ரூபாய்க்கு அதிபதியா வாழ்றவன், பணக்காரன் இல்ல; தன்னோட ஆசைங்கிற யானைக்கு, அங்குசத்தை மாட்டிட்டு நிம்மதியா வாழ்றவன் தான் பணக்காரன்,'' என்றபடி ரிக் ஷாவை மிதித்தான் அம்புலி.
அவன் போவதைப் பார்த்த ஜெயராமிற்கு, வாழ்க்கையை வாழக் கற்றுத் தந்த ஆசான் ஒருவன், ரிக் ஷாவில் போவது போல் தோன்றியது.

Post Reply