Thiruthalangal magimai திருத்தலங்கள் மகிமை

Post Reply
Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Thiruthalangal magimai திருத்தலங்கள் மகிமை

Post by Pratyaksham Bala »

.
Myth: The shadow of the main dome of Jagannath temple is not visible, whatever be the time of day.

MYTH BUSTED !

When there is light, there should be shadow. Shadows of small objects are easily seen, whereas shadows are huge structures are hardly noticed. This is the case with the Puri Temple; people just don’t see the shadow !

Please check this DroneVideo taken by Artem Aminov :-
http://travelbydrone.com/play/2880
The shadow of the main tower is clearly visible from 45 sec. onwards.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Thiruthalangal magimai திருத்தலங்கள் மகிமை

Post by Pratyaksham Bala »

.
Myth: Irrespective of where you stand in Puri, Sudarshana Chakra on top of the temple will always be facing you.

The Chakra is basically a disc. Whereas from front and back one can see the chakra in a circular or oval shape, from the sides one can see only the edge of the Chakra. In the DroneVideo link given below, please check from 5.28 to 7.25; and from 6.33 to 6.39, where only the edge of the chakra is visible.

DroneVideo taken by Artem Aminov :-
http://travelbydrone.com/play/2880
.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Thiruthalangal magimai திருத்தலங்கள் மகிமை

Post by Pratyaksham Bala »

.
Myth: No birds or aircrafts fly above the Jagannath temple in Puri.

The height of puri temple is 214 ft. Though many birds can fly up to this height, most of them prefer to fly low to avoid exposure to higher winds or to escape from predatory birds. A few birds do fly around the top, but these are not noticed. Check the following sites for birds flying around the top:

https://www.youtube.com/watch?v=n7mX43iPYRE
Check at 4.20 to 4.26; also at 3.58, 4.14, and 4.29.

https://www.youtube.com/watch?v=fefyYXxhkQ0
Check at 0.41-0.44, 1.41-42,

And there are several migratory birds flying far above 10000 ft. When a good number of such birds fly above Puri temple how can anyone notice them?

Similarly, Aircrafts flying at, say, 30000 ft. cannot be seen from ground level. A few planes may be flying above Puri temple daily !
.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Thiruthalangal magimai திருத்தலங்கள் மகிமை

Post by thanjavooran »

A share



         விண்ணில் தாரகனை எதிர்த்தவர்!

சென்னைக்கருகே  காஞ்சிபுர வட்டத்தில்,  மிக முக்கியமான ஒரு சுப்ரமணியசுவாமி கோவில்  திருப்போரூரில் இருக்கிறது.   சோழர்  பல்லவ ராஜாக்கள்  காலத்தை சேர்ந்த கோவில்.  2ம்  நரசிம்ம பல்லவன் (கி.பி.691) கால கல்வெட்டு மண்டபத்தூண்கள் இரண்டில் உள்ளது.  முதலாம் குலோத்துங்கன் சோழன் கல்வெட்டு  (கிபி 1076) இவ்வூரை  ''ஜெயங்கொண்ட சோழ மண்டல ஆமூர் கோட்டம் குமிழி நாட்டு திருப்போரியூர் சுப்பிரமணிய தேவர்''  ஆலயம் என்கிறது.

அருள்மிகு கந்தசுவாமி திருக்கோவிலில்  சந்நிதிகள் தந்தைக்கு உபதேசம் செய்த ப்ரணவமந்த்ரத்தை  ''ஓம்'' எனும் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது ஆச்சர்யம்.

தேவசேனாபதியாகி  சூரனை எதிர்த்து அவன் சக்திவாய்ந்த சகோதரன் தாரகாசுரனை வதம் செய்த கோலத்தில் கந்தசுவாமி இங்கே காட்சி அளிக்கிறார்.  ஆகவே தாரகாபுரி என்ற பெயர் நாளடைவில் திருப்போரூராகியது என்பார்கள். இன்னொரு பெயர் சமராபுரி.  கந்தசஷ்டி கவசத்தில்  ''சமராபுரிவாழ் சண்முகத்தரசே'' என  பாலதேவராய சுவாமி வர்ணிக்கிறார்.

இக்கோவில் ஒரு காலத்தில் மண்ணில் புதையுண்டு போனது. சுவாமி சிலையும் ஒரு பனை மரத்தடியில் இருந்தது. மதுரையில் வசித்த சிதம்பர சுவாமியின் கனவில் தோன்றிய முருகன், இதுபற்றி அவருக்கு தெரிவித்தார்.

சிதம்பர சுவாமி இங்கு வந்து, முருகன் சிலையைக் கண்டெடுத்து பிரதிஷ்டை செய்தார். காட்டை சீர்திருத்தி புதிய கோவில் எழுப்பினார். கந்தசுவாமியைப் போற்றி 726 பாடல்கள் பாடினார். இவருக்கு இங்கு சன்னதி உள்ளது.

இத்தலத்தில் முருகன் சிலை கண்டறியப்பட்டபோது, அது ஒரு பனை மரத்தில் செய்த பாத்திரத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்த பாத்திரத்தை தற்போதும் வைத்துள்ளனர். அள்ளஅள்ளக் குறையாத அட்சயபாத்திரம் போல இந்தப் பானை செல்வத்தை தருவதாக ஐதீகம்.

ஷண்முகனுடன்  அசுரர்கள் யுத்தம் செய்யும்போது மாயையில் மறைந்து  தாக்கினார்கள்.  ஞான திருஷ்டியாலும், பைரவரின் துணையோடும்  அவர்களை  முருகன் கண்டு சம்ஹாரம் செய்ததால் இந்த இடம் ''கண்ணகப்பட்டு (கண்ணில்  அகப்பட்டு)   என்று  திருப்போரூர் அருகில் உள்ளது.

சிதம்பர சுவாமிகள்   மதுரை மீனாட்சி சொக்கநாதரை அனவ்ரதம் த்யானிப்பவர்.   மீனாட்சி கலிவெண்பா பாடியவர்.  அவரது த்யானத்தில்  ஒரு அழகிய மயில்  தோகை விரித்தாடியது . கூடவே மீனாட்சி அம்மன் தோன்றி கட்டளை இட்டாள்:

‘சிதம்பரா! மதுரைக்கு வடக்கே, காஞ்சிக்கு கிழக்கே வங்க கடலோரம் யுத்தபுரி என்னும் தலம் உள்ளது. அங்கே குமரக்கடவுளின் திருவுருவம் பனைமரக் காட்டிற்குள் புதையுண்டு கிடக்கிறது. அதைக் கண்டெடுத்து, அழகிய திருக்கோவில் நிர்மாணித்து பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்து. அந்த ஆலயத்துக்கு வந்து வழிபடுப
வர்களுக்கு வாழ்வில் சகல நன்மைகளும் கிட்டும்’ என்று அருள, திருப்போரூர் வந்து  கந்தசுவாமி திருக்கோவிலை, மதுரை மீனாட்சி அம்மன் திருவருளால் மகான் சிதம்பர சுவாமிகள்  நிர்மாணித்தார்.   அவருடைய  திருமடம் அருகே  உள்ளது.

சுயம்பு முருகப்பெருமானை அங்குள்ள வேம்படி விநாயகர் கோவிலில் வைத்து பூஜைகள் செய்து வந்தார். ஒரு நாள் அந்த சுயம்பு வடிவ கந்தப்பெருமானின் உருவில் இருந்து முருகப்பெருமான் வெளிப்பட்டு,  சிதம்பர சுவாமிகளின் நெற்றியில் திருநீறு அணிவித்து ‘சிவாயநம’ ஓதி மறைந்தார். அப்போது சிதம்பர சுவாமிகளுக்கு ஒரு கோவிலின் தோற்றமும், அதன் ஒவ்வொரு அங்கங்களும் துல்லியமாக மனத்திரையில் பதிந்தது. இது இறைவனின் திருவருள் என்பதை உணர்ந்தவர், மனதில் தோன்றிய கோவில் தோற்றத்தையே ஆலயமாக எழுப்பும் விதத்தில் திருப்பணி ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினார்.

ஒருமுறை   திருடர்கள் திருப்பணிக்கான பொருள்களை திருட முயன்று உடனே கண்  பார்வை இழந்தனர்.  அவர்கள் பார்வை இழந்து கதறி சிதம்பர சுவாமிகளை வணங்கி மீண்டும் கண் பார்வை பெற்றனர்.  நன்றியோடு  தாங்கள் களவாடிய தங்கம், வெள்ளி, காசு,  பொருட்களை திருப்போரூர் ஆலய திருப்பணிக்கு கொடுத்து விட்டு சென்றனர்.

இந்தப்பகுதியை அப்போது  ஒரு நவாப் ஆண்டு வந்தான். அவன்  மனைவிக்கு  தீராத வயிற்று வலி.  நவாப்  சிதம்பர ஸ்வாமிகளை வேண்டி   அவர் முருகன் அருளினால்  அவன் மனைவிக்கு திருநீறு பூச,  அவளுக்கு உடனே வலி நீங்கி,  நவாப் திருப்போரூரில் சிதம்பர சுவாமிகள் கட்டிக்கொண்டிருக்கும்  முருகன் கோவிலுக்காக 650 ஏக்கர் நில தானம் வழங்கினான்.  அதுவே இன்றைய திருப்போரூர் கந்தசுவாமி திருக்கோவில்..ஆற்காடு நவாப் திருவுருவ படம் இங்கே   உள்ளது

ஆலயத்தின் தெற்கே ‘வள்ளையார் ஓடை’ என்னும் சரவணப் பொய்கை.  திருக்குளத்தில்  நீராழிமண்டபம். குளத்தில்  8 கிணறுகள். ஆகவே,  வற்றாத நிலை. தைப்பூசவிழாவில் பிரமாதமாக தெப்போற்சவம் நடக்கும்.

கிழக்குப் பார்த்த ராஜகோபுரம்  கருவறையில் முருகப்பெருமான் வள்ளி– தெய்வானையுடன் கிழக்கு நோக்கி  காட்சி தருகிறார்.  கீழே ஒரு சிறு பீடத்தில் கந்தசுவாமி   இங்கே   சுயம்புமூர்த்தி. பிரதான பூஜைகள் செய்ய  சுப்பிரமணியர் யந்திரம் பிரதிஷ்டை செய்துள்ளனர். அபிஷேகம் கிடையாது.  விசித்திரமாக  இங்கே  முருகன்   பிரம்மாவிற்குரிய அட்சர மாலை, கண்டிகை, சிவனைப்போல வலது கையால் ஆசிர்வதிக்கும் அபயஹஸ்த நிலை, பெருமாளைப்போல இடது கையை தொடையில் வைத்து ஊருஹஸ்த நிலை என மும்மூர்த்திகளின் அம்சமாக  விளங்குகிறார்.

கருவறையில் உள்ள மூலவருக்கு புனுகுச் சட்டம் சாத்தி, கவசம், திருவாபரணம் முதலியன அணிவிக்கிறார்கள். எதிரில் யானை வாகனமும், பலிபீடமும் உள்ளன. கணபதி, தண்டாயுதபாணி, பிரம்ம சாஸ்தா, துர்க்கை, அகத்தியர், நாகராஜா, வீரபாகு, வீரபத்திரர் சன்னிதிகளும் ஆலய உட்பிரகாரத்தில் உள்ளன. கருவறை பின்புறம் பஞ்சலோகத்தில் அமைந்த விநாயகர், சந்திரசேகரர், சோமாஸ்கந்தர், பிரம்மா, தேவேந்திரன், நந்தி, த்வனி சண்டேசர், மாத்ரு சண்டேசர், அஸ்திரதேவர், 'உபதேச மூர்த்தி'' சன்னிதிகள்.

சிவபெருமானது மடியில், தந்தையின் திருமுகத்தைப் பார்த்தபடி முருகன் அமைந்திருக்க, சிவபெருமானோ தன் குழந்தையிடம் பிரணவப் பொருளை உபதேசம் பெறும் அதி அற்புத திருஉருவம் தான் ''உபதேச மூர்த்தி''.
உபதேச மூர்த்தி விக்கிரஹத்திற்கு மரிக்கொழுந்து சாத்தி, நெய்தீபம் ஏற்றி வைத்து வழிபட்டால், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை.

ஆலயத்தில் சம்ஹார முத்துக்குமார சுவாமி வலது காலை மயில் மேல் ஊன்றி, வில்லேந்திய திருக்கோலத்தில் உள்ளார். தொடர்ந்து 6 செவ்வாய்க்கிழமைகளிலோ அல்லது 6 சஷ்டி நாட்களிலோ சிவப்பு அரளி மாலை சூட்டி, பீட்ரூட் சாதம் நிவேதனம் செய்து, 6 நெய் தீபம் ஏற்றி வழிபடுவோர்க்கு  எதிரிகள், பகைவர்கள் கிடையாது..

வெளி  பிராஹாரத்தில் விநாயகர்,சனீஸ்வரர் சந்நிதிகள்.  சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபமேற்றி தொடர்ந்து 8 சனிக்கிழமைகள் வழிபட்டு வந்தால், சகல சனி தோஷங்களும், மாந்தி தோஷமும் அகலும்.

ஸ்தல விருக்ஷம்  வன்னி மரம்.  அருகே வன்மீகநாதர், புண்ணியகாரணி அம்பாள், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, வன்னிமர விநாயகர், இடும்பன், சூரியன் சன்னிதிகளும் உள்ளன. இங்கே  பைரவருக்கு  நாய் வாகனம் இல்லாமல் தனிச்சன்னிதியில் மூலவர் கந்தசுவாமியை பார்த்த வண்ணம் காண்கிறார்..

திருக்கழுக்குன்றம், கல்பாக்கம், மாமல்லபுரம் எல்லாம் இங்கிருந்து சுமார் 14 கி. மீ.தான்.

'' திருப்போரூர் சந்நிதி முறை'' என்று  சிதம்பர சுவாமி 762 பாடல்களை முருகன் மீது பாடியுள்ளார்.வள்ளலார் பாம்பன் சுவாமிகள், சந்தானலிங்க சுவாமிகள், அருணகிரிநாதர்  பாடல்கள்  பெற்ற ஸ்தலம். .

விநாயகர் இங்கு கணநாதனாக முன்புற பகுதியிலேயே கிழக்கு நோக்கி  அமர்ந்திருப்பதால் அவரை வணங்கிய பின்  தம்பி கந்தசாமியை  ராஜகோபுரம் வழியாக கருவறைக்கு சென்று வணங்கவேண்டும் . அருகே  சிதம்பர சுவாமி சந்நிதி. பெரிய வட்ட வடிவிலான மண்டபம்.   கொடிமரம் மயில் வாகனம் பலிபீடம் உள்ளது.    24 கால் மண்டபம் வழியாக உள்ளே சென்றால் வலதுபுறத்தில் தெய்வயானை சந்நிதி . இடது புறத்தில் கருவறை மூலவரான முருகன் வள்ளி தெய்வயானை விக்கிரஹங்களுக்கு  வில்வமாலை இங்கேயே தொடுக்கிறார்கள். கடைகளில் விற்கும் மற்ற மாலைகள் சாற்று வதில்லை.

உள்   பிராகாரத்தில் வடகிழக்கில் சிதம்பர சுவாமிகள் அமைத்துள்ள ஸ்ரீசக்கர யந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது. இதில் விநாயகர், வள்ளி– தெய்வானையுடன் கூடிய முருகர், சிவன், உமையவள், சண்டேசர், அஷ்டதிக் பாலகர், பைரவர்களுக்கு உரிய மந்திர எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளது.. கூர்மம், அஷ்டநாகம், அஷ்டகஜங்கள், கணங்கள் ஆகியவை கொண்ட பீடத்தில் இச்சக்கரம் அமைந்துள்ளது. தினமும் இதற்கு பூஜைகள். விசேஷகாலங்களில் சிறப்பு  பூஜை.

கோயில் நேரம்:  காலை 7 மணிக்கு - நண்பகல் 12.30 மணி-   மாலை 4.30 மணி-இரவு 8.30 மணி வரை.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Thiruthalangal magimai திருத்தலங்கள் மகிமை

Post by thanjavooran »

A share

‘பஞ்ச குரோச தலங்கள்’
ஸ்ரீ பெட்டி காளியம்மன்
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
கும்பகோணம்_கருப்பூர்_பெட்டிகாளி
#குறை_தீர்க்கும்_கோயில்கள்

‘கஷ்டமெல்லாம் தீரும்
பெட்டிக்காளியின் அருளால்’

கும்பகோணம் - சென்னை மார்க்கத்தில், கும்பகோணத்திலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் இருக்கிறது கொரநாட்டு கருப்பூர்.

இங்கே அமைந்திருக்கும் அருள்மிகு அபிராமி அம்மன் சமேத சுந்தரேஸ்வரர் ஆலயத்தில்தான், ஒரு பெட்டிக்குள் அருள்பாலிக்கிறாள் பெட்டிக் காளி அம்மன். மறக்கருணையோடு தீவினைகளையும், தீய சக்திகளையெல்லாம் சுட்டெரிக்கும், இந்த அம்பிகை, அறக் கருணையோடு தன்னை நாடி வரும் பக்தர்களுக்கெல்லாம் வேண்டும் வரம் தந்து அருள்பாலிக்கிறாள்.

இந்த அம்பிகை இந்தத் தலத்தில் குடியேறிய கதை சிலிர்ப்பானது.

‘‘சுந்தரரால் பாடப் பெற்ற வைப்புத் தலம் இது; புராணப் பெயர் ‘திருப்பாடலவனம்’. முற்காலத்தில் பாதிரி மரங்கள் அடர்ந்திருந்ததால் இந்தப் பெயர் வந்தது. இப்போதும் கோயிலின் தல விருட்சம் பாதிரி மரம்தான். மிகப் பழைமையான கோயில். குபேரன், சூரியன், சுரதன் போன்றோர் வந்து வழிபட்ட தலம் இது.

ராஜகோபுர வாயிலில் இடம்பெற்றிருக்கும் சங்கநிதி, பதும நிதி சிலைகள், கோயிலுக்கே எதிரேயுள்ள பிரம்மதீர்த்தத்தில் குபேரன் தன் படைகளுடன் வந்து, தீர்த்தமாடியதைச் சித்திரிக்கும் சிற்பம் ஆகியன குபேரன் இங்கே வழிபட்டதற்கு ஆதாரமாகத் திகழ்கின்றன. இந்தக் கோயிலை, மூன்றாம் குலோத்துங்கச் சோழன் புனரமைத்துக் கட்டியதாகச் சொல்கிறார்கள். ஐந்துநிலை ராஜகோபுரம் மற்றும் இரண்டு திருச்சுற்றுகளுடன் திகழும் ஆலயத்தில் அனைத்து பரிவார தெய்வங்களையும் அதிகார நந்தியையும் தரிசிக்கலாம். மூலவர் ஸ்ரீசுந்தரேஸ்வரர், அம்பிகை ஸ்ரீஅபிராமி ஆகியோரது சந்நிதிகளுக்கு இடையே ஈசான பாகத்தில் அமைந்திருக்கிறது ஸ்ரீபெட்டிக் காளியம்மன் சந்நிதி. காளிதேவியின் சிரம் வடக்கு நோக்கி இருக்குமாறு பெட்டி வைக்கப்பட்டுள்ளது!’’ என்றார் சிவகுமார் குருக்கள்.

அடுத்து, ஸ்ரீபெட்டிக் காளி அம்மன், இங்கு குடியேறிய திருக்கதையைச் சிலிர்ப்போடு பகிர்ந்துகொண்டார் காளிதாஸ் குருக்கள்:

‘‘பெட்டிக்குள் இருப்பதால், பெட்டிக் காளியம்மன் என்று அழைக்கப் பட்டாலும், ஸ்ரீசுந்தரேஸ்வரர் கோயிலில் இருப்பதால், ‘சுந்தர மகா காளியம்மன்’ என்பதே இந்த அம்மனின் திருப்பெயர். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன், ஊரின் தென்புறம் உள்ள காவிரி ஆற்றில் மிதந்து வந்த மரப்பெட்டி, இங்கே கருப்பூரில் கரை ஒதுங்கியது. திறந்து பார்த்த மக்களுக்கு பேரதிர்ச்சியும் ஆச்சர்யமும் ஏற்பட்டன. பெட்டிக்குள்ளே எட்டுக் கரங்கள் கொண்ட அஷ்ட புஜ காளியின் திருவடிவம்... அதுவும் தலை முதல் இடுப்பு வரை உள்ள உருவம் படுத்த நிலையில் இருந்தது. எங்கிருந்து வந்தது, யார் அனுப்பியது என்றெல்லாம் எண்ணி மக்கள் குழம்பிய வேளையில், அங்கிருந்த சிறு பெண்ணின் மேல் சாமி வந்தது. காளிதேவியின் மகிமைகளைக் கூறியதுடன், அவளை எவ்வாறு பூஜிக்க வேண்டும் என்றும் அருள்வாக்கு சொன்னாள் அந்தச் சிறுமி.

மலையாளமும் தமிழும் கலந்து, அந்தச் சிறுமி கூறிய அருள்வாக்குப் படி, பெட்டியை ஓர் ஓலைக் குடிசைக்குள் வைத்து, தயிர்சாதம் பள்ளயம் (படையல்) போட்டு வணங்கி வந்தனர் மக்கள். இந்த நிலையில், திடீரென ஒருநாள் அந்தக் குடிசை தீப்பற்றி எரிந்தது. அம்மன் இருந்த பெட்டியைக் காப்பாற்றிய மக்கள், மேற்கொண்டு அந்தப் பெட்டியை எங்கே வைப்பது என்று குழம்பியபோது, ஆன்மிகப் பெரியோர்களின் ஆலோசனையின்படி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் இப்போதிருக்கும் இடத்தில் வைக்கப்பட்டது.

அன்றுமுதல், இந்தக் காளிதேவிக்கு பள்ளயம் போட்டு, பூஜைகள் செய்து வருகிறோம். சர்க்கரைப் பொங்கல், உப்பு இல்லாத தயிர் சாதம் ஆகியவற்றை மட்டுமே அம்மனுக்குப் படைப்போம். உப்பு சேர்த்த எந்தப் பொருளையும் நைவேத்தியம் செய்வது இல்லை. பெட்டியைத் திறப்பதற்கு முன்னர், உக்கிரக் காளியைக் குளிர்விக்கும் பொருட்டு, குளிர்ச்சி தரும் தயிர் பள்ளயம் போடப்படுகிறது. பசுந்தயிர் கலந்த சாதத்தில் வெங்காயம் நறுக்கிச் சேர்த்து பள்ளயம் போடப்படும்.

பெட்டியைத் திறந்தபிறகு, வண்ணமிகு மலர்கள், புனுகு, ஜவ்வாது, சந்தனம், பன்னீர், மஞ்சள், குங்குமம், விபூதி மற்றும் பழங்கள் வைத்து அர்ச்சனை செய்து ஆராதிப்பது வழக்கம். சந்நிதியில் பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் மட்டுமே வழங்கப்படும். வழக்கமாக அம்மன் சந்நிதிகளில் தரப்படுவது போன்று குங்குமம், புஷ்பம், எலுமிச்சம்பழம் ஆகியன இங்கே வழங்கப்படுவது இல்லை.’’

அதேபோல வேறுசில கட்டுப்பாடுகளும் உண்டு இந்தக் காளியைத் தரிசிப்பதற்கு. கர்ப்பிணிகள், எண்ணெய் ஸ்நானம் செய்தவர்கள், முகச்சவரம் செய்தவர்கள் ஆகியோர் காளியைத் தரிசிக்க அனுமதிக்கப்படுவதில்லை.

செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில், படையல் பூஜை செய்யப்பட்ட பிறகு பெட்டி திறக்கப் படுகிறது. மற்ற நாள்களில் நித்தியப்படி நடக்கும் நான்கு கால பூஜைகளின் போதும்கூட பெட்டி திறக்கப்படுவதில்லை.

ஆண்டுதோறும் சித்திரை, வைகாசி மாதங்களில் நடக்கும் திருவிழா நேரங்களில் மட்டும் காளியை வெளியே எடுக்கிறார்கள். அலங்கரித்த காளி அம்மனை பல்லக்கில் வைத்து, சுவாமி புறப்பாடு நடைபெறும். அப்போதும் காளியின் உத்தரவு கிடைத்தபிறகே பல்லக்கு ஊர்வலம் நடக்கும். மாவிலை மற்றும் வேப்பிலை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட வீதிகளின் வழியே அம்ம னின் பல்லக்கு முன்னும் பின்னுமாக ஆடியபடி உலா வருவது, காணக் கண்கொள்ளாத காட்சி! ‘பெட்டிக் காளியம்மன் பல்லக்குத் திருவிழாவில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி, சுற்றுப்பட்டு ஊர்க் காரர்களும் திரளாக வந்திருந்து காளியைக் கண்ணாரக் கண்டு நெஞ்சார வணங்கிச் செல்கின்றனர்.

திருமணத் தடை, குழந்தைப்பேறின்மை, தீராக் கடன், சொத்துப் பிரச்னை போன்ற கஷ்டங்களைத் தீர்க்கும் அருமருந்தாகத் திகழ் கிறாள் பெட்டிக்காளியம்மன். பிரச்னையால் தவிக்கும் பக்தர்கள் நம்பிக்கையோடு இங்கு வந்து பெட்டிக்காளியம்மனைத் தரிசித்துச் சென்றால், விரைவில் கஷ்டங்கள் அனைத்தும் நிவர்த்தியாகும். ராகு கால வேளையில் இந்த அம்மனைத் தரிசித்து வழிபட்டால் ராகு - கேது தோஷம் உட்பட சகல தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களது நம்பிக்கை.

வலப்புறத்து திருக்கரங்களில் சூலம், அரிவாள், உடுக்கை மற்றும் கிளி திகழ, இடப்புறத்தின் கரங்களில் பாசம், கேடயம், கபாலம் மற்றும் மணி ஏந்தியபடி, ஆக்ரோஷத்துடன் திகழ்கிறாள் இந்த அஷ்டபுஜ காளி அன்னை. என்றாலும், அபயம் என்று வந்தவர் களை ஆதரித்து அரவணைக்கும் அன்னையாகவும் திகழ்கிறாள். நாமும் ஒருமுறை இந்தத் தலத்துக்குச் சென்று சிவ-சக்தியின் அருளோடு காளியம்மையின் திருவருளையும் பெற்றுவருவோம்.

மாசிமகத்தன்று தரிசிக்க வேண்டிய ஐந்து தலங்களில் ஒன்று!

மகாமகக் குளம் அமைந்துள்ள கும்பகோணத்தைச் சுற்றியுள்ள திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், தாராசுரம், சுவாமிமலை, கொரநாட்டு கருப்பூர் ஆகிய ஐந்தும் ‘பஞ்ச குரோச தலங்கள்’ என்று அழைக்கப்படு கின்றன. ‘குரோசம்’ என்றால் மிக அருகில் அதாவது இரண்டரை நாழிகையில் கடந்து செல்லக் கூடிய தூரம் என்று பொருள். ஸ்ரீஆதிகும்பேசுவரர் அமுதக் குடத்தினைச் சிதைத்தபோது, அதிலிருந்த அமுதத் துளிகள் சிதறி விழுந்த இடங்கள்தான் இந்த பஞ்ச குரோசத் தலங்கள். மகாமகம் மற்றும் வருடம்தோறும் வரும் மாசிமகத்தன்று, இந்த ஐந்து தலங்களின் தீர்த்தங்களிலும் நீராடி விட்டு, பிறகு மகா மகக் குளத்தில் நீராடுதல் மிகச் சிறப்பானது. அந்த வகையில், கொர நாட்டு கருப்பூரும் சிறப்பானதொரு தலமாக விளங்குகிறது.

எப்படிச் செல்வது?:

கும்பகோணத்தி லிருந்து சென்னை செல்லும் சாலையில், கும்பகோணத்தி லிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது கொரநாட்டு கருப்பூர்.

நடை திறக்கும் நேரம்: காலை 6 முதல் மதியம் 12 மணி வரை; மாலை 4.30 முதல் இரவு 8 மணி வரை.

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Thiruthalangal magimai திருத்தலங்கள் மகிமை. திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர்

Post by thanjavooran »

திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர் ஆலயம்


*சுமங்கலி பாக்கியம்*....

திலிபச்சக்கரவர்த்தி ஆழ்ந்த வேதனையடைந்தார்.காட்டுக்கு வேட்டைக்கு வந்த அவர், பெண் மானுடன் சுற்றிக்கொண்டிருந்த ஒரு ஆண்மான் மீது அம்பெய்தார். ஆனால், அது ஒரு முனிவராக மாறியது. அந்த முனிவர் கடும் அவஸ்தைப்பட்டு இறந்தார். இதைக்கண்ட பெண் மான் ரிஷிபத்தினி (ரிஷியின் மனைவி) வடிவெடுத்தது. அந்தப்பெண், அவர் மீது விழுந்து அழுதாள். நிலைமை விபரீதமாகி விட்டதைக் கண்ட ராஜா, அவளருகே ஓடிவந்தார். ""அம்மா! மான் என்று நினைத்தே அம்பெய்தேன். இப்படி ஆகிவிட்டதே! அந்தணரைக் கொன்றதன் மூலம் கடுமையான பிரம்மஹத்திக்கு ஆளாகித் தவிக்கிறேனே! '' என்று கண்ணீர் வடித்தார்.

அதுகேட்ட ரிஷிபத்தினி, ""மன்னா! இது தாங்கள் அறியாமல் செய்த தவறு. இது மன்னிப்பிற்குரியதே. இருப்பினும், என் கணவரின்றி என்னால் வாழ இயலாது. என்னையும் கொன்று விடுங்கள்,'' என்று அழுதாள்.

மன்னரின் மனம் இன்னும் வேதனைப்பட்டது. ஒரு பெண்ணை...அதிலும் அந்தணப்பெண்ணைக் கொன்று மேலும் பாவத்தை வரவழைத்துக் கொள்வதா! ஐயையோ! என்ன செய்வேன்! என் குலகுருவே! வசிஷ்ட மகரிஷியே! தாங்கள் இப்போதே இங்கு எழுந்தருள வேண்டும். இந்த குழப்பமான சூழ்நிலைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்,'' என்று வேண்டினான். வசிஷ்டர் அங்கு தோன்றினார். அந்தப் பெண் அவரது பாதங்களில் விழுந்தாள்.

என்ன நடந்ததென்பதை அறியாத வசிஷ்டர்,""தீர்க்க சுமங்கலி பவ'' என அவளை வாழ்த்தினார்.

""மாமுனிவரே! இதோ! இங்கே இறந்து கிடப்பவர் என் கணவர். அவர் இறந்தபிறகு, அபாக்கியவாதியாக நிற்கிறேன்! தாங்களோ நான் சுமங்கலியாக வாழ்வேன் என்று சொல்கிறீர்ளே! இதெப்படி சாத்தியம்!'' என்று வருத்தமாகக் கேட்டாள். வசிஷ்டருக்கு இப்போது தான் நிலைமை புரிந்தது. "தன் மாணவனையும் காப்பாற்ற வேண்டும், இந்தப்பெண்ணுக்கும் தன் வாக்குப்படி சுமங்கலியாய் வாழும் பாக்கியம் தர வேண்டும். என்ன செய்யலாம்?' அவர் யோசித்தார். ""பெண்ணே! காவிரிக்கரையில் வில்வமரக்காட்டில் ஒரு சிவலிங்கம் இருக்கிறது. அருகில் அம்பாள் சிலையும் இருக்கும். அங்கே நீ செல். உன் கணவனின் உடலை ஒரு பல்லக்கில் ஏற்றிக்கொள். அதை இந்த மன்னனின் சேவகர்கள் சுமந்து வருவார்கள். அந்தக் கோயிலிலுள்ள ஜல்லிகை தீர்த்தத்தில் நீராடி, மூன்று கை தண்ணீர் எடுத்து உன் கணவனின் உடலில் தெளி. அவர் பிழைத்து எழுவார். அந்தக் கோயிலில் ஜல்லிகை என்ற அசுரகுலப் பெண்மணி, இதே போல உயிர்போன தன் கணவனை எழுப்பினாள். அசுரனுக்கே அருளிய அந்த இறைவன், உனக்கு

நிச்சயம் உதவுவான், கிளம்பு,'' என்றார். அந்தப் பெண் மகிழ்ந்தாள். ரிஷிபத்தினி அங்கிருந்த தீர்த்தத்தில் நீராடி, மூன்று கை தண்ணீர் எடுத்து தன் கணவரின் உடல் மீது தெளித்தாள். தூங்கி எழுந்தவர் போல் எழுந்தார் முனிவர். அப்போது அம்பாளும், சிவனும் அவர்கள் முன் தோன்றினர். அம்பாளிடம் ரிஷிபத்தினி, ""அன்னையே! என்னைப் போலும், ஜல்லிகை போலவும் தன் கணவரின் உடல்நலம் நாடி இங்கு வரும் பக்தைகளுக்கு தீர்க்க சுமங்கலியாய் இருக்கும் வரத்தை தந்தருள வேண்டும்,' ' என வேண்டினாள். அம்பாளும் அப்படியே செய்வதாக வாக்களித்தாள். ரிஷிபத்தினியும், முனிவரும் மீண்டும் திலீபனைச் சந்தித்தனர். தாங்கள் சிவபார்வதி தரிசனம் கண்ட இடத்தில் கோயில் கட்டும்படி கூறினர். மன்னனும் அவ்வாறே செய்தான். அதுவே திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர் கோயிலாகும்.

திருவாரூரில் இருந்து 30 கி.மீ., தொலைவில் இவ்வூர் உள்ளது. இந்தக் கதையைப் படித்தவர்களின் குடும்பத்தில் அகால மரணம் நிகழாது என்பது ஐதீகம். தம்பதி சமேதராய் இந்தக் கோயிலுக்கு ஒருமுறை சென்று வாருங்கள். தீர்க்கசுமங்கலியாய் இருக்கும் பாக்கியம் பெறுங்கள்

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Thiruthalangal magimai திருத்தலங்கள் மகிமை

Post by thanjavooran »

கந்தஸ்வாமி கோவில்
ஒரு பகிர்வு
17ம் நுாற்றாண்டின் தொடக்கத்தில் நடந்த வரலாறு இது. ஒரு கோயிலில் உற்ஸவர் சிலை செய்ய வேண்டும் என்று நிர்வாகத்தினர் விரும்பினர். சிற்ப வல்லுனர்கள் மூலம், பஞ்சலோகத் திருமேனி வார்க்கப்பட்டது. வார்ப்படச் சூடு அடங்கும் முன், சிலையை வெளியே எடுக்கப்பட்டது.
தகதகவெனப் பிரகாசித்தது சிலை, இருந்தாலும் அங்கும், இங்குமாக பிசிறுகள் நீட்டிக் கொண்டிருந்தன. அவற்றை நீக்கி துாய்மை செய்யலாம் என்ற எண்ணத்தில், தலைமை சிற்பி வந்த போது, உடம்பெங்கும் தீப்பற்றியது போல எரிச்சல் பரவியது.
வலியால் துடித்த அவர், மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். பார்த்தவர்கள் பதறினர். முகத்தில் தண்ணீர் தெளிக்க சிற்பி கண் விழித்தார்.
அவர் எழுந்தாரே தவிர, கண்களில் இருந்த பயம் அப்படியே தெரிந்தது. கைகளைக் கூப்பி, ''பெரியோர்களே! இந்த சிலை சாதாரணமானது அல்ல! தெய்வ சான்னித்தியம் நிறைந்த இதை தொட பயமாக இருக்கிறது. மன்னியுங்கள்! பிசிறுகளைப் போக்கி, துாய்மைப்படுத்தும் சக்தி எனக்கு இல்லை'' என்றார்.
''தலைமைச் சிற்பியே இப்படிச் சொல்கிறாரே'' என நிர்வாகிகள் திகைத்தனர். அதன் பின், பிசிறுகளுடன் உள்ள சிலையை வைத்து திருவிழா நடத்தக் கூடாது எனக் கருதி, அதை அறையில் பூட்டி வைத்தனர்.
இரண்டு ஆண்டுக்குப் பின், வேதத்தில் கரை கண்ட பண்டிதர் ஸ்ரீசாம்பையர் காசியில் இருந்து வந்தார். மூலவரைத் தரிசித்த பின், உற்ஸவரையும் தரிசிக்க விரும்பினார். அவரிடம் கோயில் பணியாளர்கள், உற்ஸவர் சிலை குறித்த ரகசியங்களை விவரித்தனர்.
ஆனால், சாம்பையரின் வற்புறுத்தலால் அறைக்கதவு திறக்கப்பட்டது. சிலையைக் கண்டு மெய்சிலிர்த்த பண்டிதர் நிர்வாகிகளிடம், ''நீங்கள் அனைவரும் புண்ணியசாலிகள். இங்குள்ள மூலவர் அருள் பொழிவதில் முதல்வராக விளங்குகிறார். அதே சான்னித்தியம், உற்ஸவர் சிலையிலும் இருக்கிறது. அருளை அள்ளித் தரும் இந்த சிலையை, தியானிக்கலாமே தவிர, உளியால் செதுக்கக் கூடாது. ஆத்ம சக்தியால் நான் துாய்மை செய்கிறேன்'' என்றார்.
சிலையை சுற்றிலும் திரையிட்டு, உள்புறம் அமர்ந்த பண்டிதர், மந்திரங்களை ஸ்வரத்துடன் சொல்லச் சொல்ல, சிலையில் இருந்த பிசிறுகள் உதிர்ந்தன. சிலை முன்பை விடப் பளபளப்புடன் காட்சியளித்தது.
இதுவரையில் சென்னை கந்தகோட்டம் உற்ஸவர் முருகனை தரிசித்த நாம், இனி மூலவரையும் தரிசிக்கலாம் வாருங்கள்!
16ம் நுாற்றாண்டுக்கு முந்திய வரலாறு இது. அந்நியர் படையெடுப்பால், திருப்போரூர் முருகன் கோயிலில் இருந்த மூலவர் சிலையை கல் திரையிட்டு மறைத்தனர். அச்சிலை நாளடைவில் மலையடிவாரத்தில் உள்ள வேப்ப மரத்தடி புற்றில் புதைந்நது.
நாளடைவில், அமளி அடங்கிய பிறகு, வேறொரு சிலையை பிரதிஷ்டை செய்தனர். அங்கு மாரிச்செட்டியார், கந்தப்ப ஆசாரி என்னும் முருகபக்தர் இருவர், ஒவ்வொரு கார்த்திகையன்றும், சென்னையில் இருந்து நடந்து சென்று திருப்போரூர் முருகனைத் தரிசிப்பது வழக்கம்.
1595 - மார்கழி 13 ம் நாள், வெள்ளிக்கிழமை, கார்த்திகையன்று வழக்கம் போல், முருகனை தரிசிக்க சென்றனர். சிலுசிலுப்பான காற்றில், ஒரு வேப்பமரத்தடியில் இருவரும் உறங்கினர். அங்கு தான் புற்றில் சிலை வடிவில் முருகன் மறைந்திருந்தார்.
இருவரும் உறங்கியபின், புற்றில் இருந்த சுவாமி, நாகப்பாம்பு வடிவில் தோன்றி மாரிச்செட்டியாரின் மார்பில் ஏறி, உடலெங்கும் விளையாடினார். அதன்பின், ''பக்தா! அருகில் இருக்கும் புற்றில் நான் சிலை வடிவாக இருக்கிறேன். என்னைச் சென்னைக்குக் கொண்டு செல்'' என்று கனவில் உத்தரவிட்டார். அதே சமயத்தில் அதே கனவு கந்தப்பருக்கும் தோன்றியது. இருவருமாக எழுந்து, புற்றை விலக்க, சிலை இருக்க கண்டனர். '' ஐயா! குமரய்யா! உன்னைச் சுமக்க எங்களால் முடியுமா? பத்து நாள் குழந்தை போல வந்தால் மட்டுமே, எங்களால் சுமந்து செல்ல முடியும்'' என்று வேண்டினர். அப்படியே சுவாமியும் மாறிக் கொள்ள, மாரிச்செட்டியார் முதுகில் மூலவரைக் கட்டிக் கொண்டார். இருவரும் சென்னை நோக்கி நடக்கத் தொடங்கினர். வரும் வழியில் பக்கிங்ஹாம் கால்வாய் குறுக்கிட்டது. இடி, மின்னலுடன் மழை பெய்ய வெள்ளம் பெருக்கெடுத்தது.
வேறு வழியின்றி, இருவரும் கால்வாய் வெள்ளத்தில் கால் வைத்ததும், பெரிய அலை தோன்றியது. இருவரும் அதில் அடித்துச் செல்லப்பட்டு கரை சேர்ந்தனர். மாரிச்செட்டியார் முதுகிலிருந்த மூலவரைக் கையால் தொட்டு உறுதிப்படுத்திக் கொண்டார்.
பயணம் தொடர, மயிலாப்பூர் வந்தனர். அங்கு கபாலீஸ்வரர் கோயில் குளக்கரையில் இருந்த தென்னந்தோப்பில் இளைப்பாறினர். மேலாடையால் மூலவரை மூடி வைத்து விட்டு, இருவரும் துாங்கினர். சற்று நேரத்தில் சடைமுடி, காதில் குண்டலம், நெற்றியில் விபூதி, கழுத்தில் ருத்ராட்சம் கொண்ட திருமேனியுடன் கையில் பொற்பிரம்பு ஏந்திய வேதியர் ஒருவர், அவர்களை எழுப்பி, ''என்ன இது? மெய் மறந்து இப்படி துாங்கலாமா? பொழுது புலரும் முன் கிளம்புங்கள்'' என்று எச்சரித்தார்.
திடுக்கிட்டு விழித்த இருவரும் கண்டது கனவு என உணர்ந்தனர். உடனே மயிலாப்பூர் குளத்தில் நீராடி, இருப்பிடம் வந்தனர். தாங்கள் சுமந்து வந்த முருகனை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமி, வள்ளலார் ராமலிங்கர், பாம்பன் சுவாமி போன்ற அருளாளர்களும் இந்த முருகனை வழிபட்டுள்ளனர். பிறந்து பத்துநாள் ஆன குழந்தை போல, அடியவருக்காக மாறிய இந்த அற்புதமுருகன் சென்னை கந்தகோட்டத்தில் அருள்புரிகிறார். வேத மந்திரத்தால் துாய்மை செய்யப்பட்ட உற்ஸவரையும் இங்கு தரிசித்து மகிழலாம்.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Thiruthalangal magimai திருத்தலங்கள் மகிமை

Post by thanjavooran »

A share
அதிசய அற்புத ஸ்தலங்கள்

#நெய் அபிஷேகம் செய்தால் வெண்ணையாக மாற்றி தரும் லிங்கம்!

பெங்களூரிலிருந்து அறுபது கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இடம் சிவகங்கா என்கிற கிராமம். அங்கு சிவபெருமான் மலையடிவாரத்தில் ஒரு குகையில் லிங்க ரூபத்தில் குடி கொண்டுள்ளார். ஐந்து அடி உயர, நல்ல பருமனான லிங்கம்.சுவாமியின் மிக அருகிலிருந்து தரிசனம் செய்யலாம். கவிகங்காதீஸ்வரர் என்று இறைவன் பெயர்.
ஆச்சரியம் என்னவென்றால், அந்த கோவிலில் நெய் அபிஷேகத்துக்கு விற்கிறார்கள். அதை வாங்கி, அபிஷேகத்தின் போது பூசாரியிடம் கொடுத்தால், அவர் மந்திரம் சொல்லி அந்த லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து பிரசாதமாக திருப்பி தருவார். அந்த நெய் வெண்ணையாக மாறி இருக்கும். இன்றைய அறிவு ஜீவிகளால் இதற்கு சரியான விளக்கம் தர முடியுமா?

ஒருமுறை போய் அனுபவித்து பாருங்கள்.


#பெருமாளே சிவனாக மாறும் விந்தை!
திருப்பதி என்று கேட்டவுடன் பெருமாளும், வைஷ்ணவத்தின் உச்ச ஸ்தலம் என்பதும் எல்லோர் எண்ணத்திலும் உதிக்கும். அங்கு பெருமாள் வாரத்தில் ஒரு நாள் முழுவதும் சிவனாக காட்சி அளிக்கிறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? அந்த நாள் வெள்ளிக்கிழமை. ஆம்! வியாழனன்று இரவு பெருமாளின் அலங்காரத்தை கலைத்து, அவருக்கு எளிய வஸ்திரத்தை சார்த்தி, மந்திர ரூபத்தில் அவரை "சங்கர நாராயணர்" ஆகா மாற்றுகிறார்கள். அவருக்கு வில்வ மாலை அணிவிக்கபடுகிறது. பின்னர் அவருக்கு ஒரு தட்டில் விபூதி மேல் கற்பூரம் வைத்து தீபாராதனை காட்டப்படுகிறது. பெருமாள் அந்த இடத்தை விட்டு இறங்கி அலமேலுமங்காபுரத்தில் தாயாரை பார்க்க செல்வதாக ஐதீகம். வெள்ளி கிழமை அன்று பெருமாளின் தரிசனத்துக்கு, அலமேலுமங்காபுரத்தில் கூட்டம் அலை மோதும். மறுபடியும் வெள்ளிக்கிழமை இரவு திருப்பதியில் சுவாமியை மந்திர ரூபத்தில் ஆவாகனம் செய்து, நாராயணனாக மாற்றுகிறார்கள். தாயாரை பார்த்து வந்து சந்தோஷத்தில் இருக்கும் பெருமாளிடம் ஆசிர்வாதம் வாங்க சனிக்கிழமை அத்தனை கூட்டம் சேர காரணம், அன்று என்ன வேண்டுதல் வைத்தாலும் உடனே பாஸ் மார்க் தான்.

வியாழன் அன்று போய் பாருங்களேன் .

#கொடி மர நமஸ்கார பூசை ஒரு திருப்புமுனை!
திருசெந்தூரில் தினமும் காலை நடை திறப்பதற்கு முன் முதலில் கொடிமரத்துக்கு தான் பூசை. பின்னர் தான் மூலவர் நடை திறந்து நிர்மால்யம், அபிஷேகம் எல்லாம்.தினமும் காலை ஐந்து மணிக்கு கொடிமர பூஜையின் பொது, இரண்டு பேர் மந்திரத்தை பகிர்ந்து சொல்ல அவர்களுடன் சேர்ந்து மற்றவர்கள் ஒவ்வொரு மந்திரத்தின் முடிவிலும் , நமஸ்காரம் செய்வார்கள். அனுமதி இலவசம். வாழ்க்கையில் நிச்சயமாக திருப்பம் உண்டாகும்.

போய் பாருங்களேன்!

#நெய் உறைந்து மறைந்த லிங்கம்!
எத்தனையோ தலை முறையாக, வருடங்களாக ஒரு சிவலிங்கத்துக்கு நெய் அபிஷேகம் செய்து வர, அந்த நெய்யே உறைந்து சிவலிங்கத்தை மூடிவிட்டது. உறைந்த நெய்யின் உயரமே ஒரு நான்கு அடி உயரம் இருக்கும். எத்தனையோ விளக்குகள் ஏற்றி வைத்த சூட்டிலும், வெயில் காலத்தின் சூட்டிலும் அந்த உறைந்த நெய்யானது உருகுவதில்லை. இன்றும் தொடர்ந்து நெய் அபிஷேகம் நடந்து கொண்டிருக்கிறது. வடக்கும்நாதர் சிவன் கோவில், திருச்சூர், கேரளா மாநிலம். உறைந்த நெய்யின் சிறு அம்சத்தை பிரசாதமாக வாங்கி உண்ண அது எந்தவித வியாதியையும் மாற்றுகிற அரு மருந்தாக திகழ்கிறது.

நம்பிக்கையுடன் போய் பாருங்களேன்!

#உலகிலேயே மிகப்பெரிய பாதரச லிங்கம் !
சித்தநாத் ஆஸ்ரமத்தில் உலகிலேயே மிகப்பெரிய பாதரச லிங்கம் நிறுவப்பட்டுள்ளது. பாதரசத்தை சுத்தப்படுத்தி கேட்டுவது என்பது மிகப் பெரிய விஷயம். உண்மையில் இது சித்தர்களுக்கு கை வந்த கலை. சித்த மார்கத்தில் செல்பவர்களுக்கு, இந்த லிங்க தரிசனம், அதன் அருகாமை மிக நல்ல பலன்களை தருகிறது. இந்த ஆஸ்ரமம் புனே, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளது.யோக நிலையில் உயர்பவர்களே, போய் உணர்ந்து பாருங்கள்.

#குளத்தில் மண் கலயத்தில் விபூதி தோன்றுகிறது!
ஈரோடு ஜில்லாவில், காங்கேயத்துக்கு அருகில், மடவிளாகம் சிவன்கோவில் குளத்தில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மண் பானை நிறைய விபூதி தோன்றுகிறது. இது இந்த காலத்திலும் நடக்கும் ஒரு அதிசயம். அந்த குளத்தை சிவபெருமான் தன் விரல் நகத்தால் மண்ணில் கிழித்து உருவாக்கினாராம். மிக உயரமான கல் விளக்கு இந்த கோவிலில் காணப்படுகிறது.சென்று அருள் பெருங்களேன்.

#40ஆண்டுகளுக்கு ஒருமுறை தரிசனம் தரும் அத்தி வரதர்!
காஞ்சிபுரம் பக்கத்தில் உள்ள அத்தியூர். அத்தி மரத்தில் செய்யப்பட்ட வரதர் கோவில் குளத்து நீரில் பாதுகாக்கப்பட்டு வருகிறார். கல்விக்ரகம் ஏற்பாடு செய்த பின்னர் அத்திவரதர் குளத்துள் இருக்கிறார். நாற்பதாண்டுகட்கு ஒருமுறை அத்தி வரதரை வெளிக்கொணர்ந்து அலங்காரங்கள் செய்து பக்தர்கள் தரிசனத்திற்கு ஒரு மண்டலம் வைத்து வழிபாடுகள் செய்து பின் குளத்தில் மத்தியில் உள்ள நீராழி மண்டபம் இருப்பதால் அங்கு தெப்போற்சவம் சிறப்புறச் செய்து தாயாரும் பெருமாளும் தெப்பத்தில் எழுந்தருளச் செய்வார்கள். கோவிலுக்கு வெளியே தாயார் வருவதில்லை.

#கக்கிய பால் அரு மருந்தாகிறது!
க்ரவுஞ்சகிரி, செந்தூருக்கு அருகே இருபது கிலோமீட்டர் தூரத்தில் சுப்பிரமணியர் கோவில் கொண்ட மலை வாச ஸ்தலம். பெங்களூரிலிருந்து பெல்லாரி செல்லும் பாதையில் ஹோஸ்பெட் என்கிற ரயில் தடத்தில் இறங்கி செல்ல வேண்டும். முருகர் வள்ளி தேவயானை இன்றி தனித்து நிற்கும் இடம். அம்பாளுக்கு தனி சந்நிதி. மிக தனிமையான இடம். கனத்த அமைதியும், குளிர்ச்சியும் சூழ்ந்த இயற்கை பச்சை சூழ்ந்த மலை.

அதிசயம் - முருகர் காலடியில் ராமரும் லக்ஷ்மணரும் அமர்ந்திருக்கிறார்கள். சீதையை மீட்டவுடன் அவர்கள் இருவரும் இங்கு வந்து முருகருக்கு பூசை செய்ததாக சொல்கிறார்கள். ஒருகாலம் வரை பெண்களுக்கு இங்கு அனுமதி கிடையாதாம். அதனால், ராமர் வந்த காலத்தில் சீதையை கோயிலுக்கு வெளியே இருக்க சொல்லிவிட்டு அனுமனை காவலுக்கு வைத்துவிட்டு உள்ளே வந்தார்களாம். இன்றும் முருகருக்கு நடக்கிற பூசைகள், ராமர் லக்ஷ்மணருக்கு தான் சென்று செருகிரதாம்.

முருகருக்கும் பார்வதி அம்மைக்கும் வாக்கு வாதம் வரவே, பார்வதி தேவி முருகனிடம், தான் கொடுத்த தாய் பால் தானே முருகனை வளர்த்தது என்று கேட்க, அதுவும் எனக்கு வேண்டாம் என்று அத்தனையையும் கக்கி விடுவதாக ஐதீகம். அது மலையில் உறையவே, வெள்ளை கல்லாக மாறுகிறது. இந்த வெள்ளை கல், பால் நிறத்தில், தொட்டால் நல்ல நறுமண விபூதி போல் உள்ளது. முருகர் சன்னதி முன் ஒரு தட்டில் வைத்திருக்கிறார்கள். கேட்டால், எடுத்துக்கொள்ள சொல்கிறார்கள். அரு மருந்தாக பயன் படுகிறது. மிக அபூர்வமாக இருக்கிறது.

ஒரு முறை சென்று தரிசனம் பெற்று, அதையும் பெற்றுக்கொள்ளுங்களேன்!

#நரசிம்மர் உலாவரும் தலம்!
"அஹோபிலம்", பகவன் நாராயணன் ஹிரண்ய கசிபுவை முக்தியடயச்செய்ய அவதாரம் எடுத்த தலம். தேவர்கள் பெருமாளை காணும்பொழுது "ஹிரண்ய கசிபுவின்" வதம் எப்படி நடந்தது என்று கேட்க்க, பெருமாளும் நாடகத்தை நடத்திக்காட்டி அருளும் தலம். இன்றும் நரசிம்மர் அரூபமாகவும், ரூபமாகவும் வலம் வரும் தலம். மிகவே அமானுஷ்யமான புண்ய ஸ்தலம். நரசிம்மருக்கு ஒன்பது கோயில்கள் உள்ளது. மலைமேல் தனியாக செல்லக்கூடாது. கொடிய மிருகங்கள் வாழும் இடம். உண்மையான பக்தி இன்றி ஒரு போதும் இந்த தலத்தில் கால் பதிக்காதீர்கள்! தொலைத்துவிடுவார்.

சென்று அவர் அருள் பெறுங்களேன்.

#வில்வ பூசை உணர்த்தும் தத்துவம்!
"விஸ்வநாதர் கோயில்"காசி!

இந்தக் கோயிலில் சாயங்கால பூசையின் போது நூற்றி எட்டு "வில்வ" இலைகளால். தீபாராதனைக்கு முன்பு அர்ச்சனை செய்கிறார்கள். இதில் விசேஷம் என்ன வென்றால், அந்த நூற்றி எட்டு "வில்வ" இலைகளிலும் சந்தனத்தால் "ராமா" என்று எழுதி பின்னர் அர்ச்சனை செய்கிறார்கள். அரியும் சிவனும் ஒன்று என்று சொல்லாமல் சொல்லி உணர்த்தும் செயல்.

போய் பார்த்து அவர் அருள் பெற்று வாருங்களேன்!

#பகவான் கிருஷ்ணரின் சமாதி!
பூரி ஜகன்னாதர் ஆலயம்! ரத உற்சவத்துக்கு பெயர் பெற்ற இடம். ஆனால் நிறைய பேருக்கு தெரியாத ஒரு விஷயம் அங்கு உண்டு. அந்த கோவிலின் கருவறை தான் "கிருஷ்ணரின்" சமாதி. ஆம்! அவதார முடிவில், உடலை விட்டு நாராயணர் சென்ற பின்னர், மீதி இருந்த யாதவ குலத்தினர், அவர் உடலுக்கு மரியாதை செய்து, கங்கையில் விட்டனர். கிருஷ்ணரோ இயற்கையான "வாசி யோகி". ஒரு வாசி யோகியின் உடலுக்கு அழிவு கிடையாது. அது எப்போதும் நல்ல அதம சக்தியை பரப்பிக்கொண்டிருக்கும். நடப்பவைகளை ஒருவர் கண்டு நின்றார். அனைவரும் சென்ற பின், கங்கை நதியிலிருந்து உடலை மீட்டு அவருக்கு ஒரு சமாதி கட்டி கோவிலாக்கினார். கருவறையை "சங்கு" ரூபத்தில் அமைத்தார். ஆம்! அவர் போகர் சித்தர்.

போய் தரிசனம் செய்யுங்கள்! அப்போது புரியும்!

#நான்கு கரங்களுடன் ராமர்!
பொன்பதர் கூடம் ராமர் கோயில். செங்கல்பட்டிலிருந்து கிழக்கே பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிராமம். உறையும் ராமபிரான் நான்கு கரங்களுடன் மற்ற கோவில்களிலிருந்து வித்யாசமாக உள்ளார். தந்தை தசரதன் ராமபிரானை பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்ய வேண்டுமென உத்தரவிட்டவுடன் அதை புன்னகையுடன் சிரம் மேற்கொண்டார். இதை கண்ட சீதைக்கு, இப்படிப்பட்ட கட்டளையை ராமனால் எப்படி புன் முறுவலுடன் ஏற்றுகொள்ள முடிகிறது என்று எண்ணினாள். நேரம் வந்தபோது ராமர் தான் என்பதை நான்கு கரங்களுடன் இரு கரத்தில் சங்கு சகரத்துடன் சீதைக்கு காட்சி அளித்து தானே நாராயணன் என்பதை உணர்த்தினார். அது போல் கண்டேன் சீதையை என்று அனுமன் கூறிய போது, அவருக்கும் நான்கு கரத்துடன் காட்ச்சியளித்தாராம்.

சென்று பார்த்து அருள் பெற்று வாருங்களேன்!

#சிக்கலாருக்கே வியர்க்கிறதாம்!
சிக்கல்! முருகர் தன் தாயிடம் வேல் வாங்கின இடம். இங்கு உற்சவரும் மூலவரும் ஒருவரே. மற்ற கோயில்களில் உற்சவர் சிலை கால்லால் உருவாக்கப்பட்டிருக்கும். உற்சவரை உலோகத்தில் செய்து வைத்திருப்பார்கள். இங்கு மூலவரே உலாவருகிறார். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், மகா கந்த சஷ்டி அன்று உலாவரும் முருகனுக்கு உடல் எல்லாம் வியர்க்கும். பூசாரி அவர் முகத்தை துடைத்து துடைத்தே தளர்ந்து விடுவார்.

சென்று பார்த்து அவர் அருள் பெறுங்களேன்!

#பாதாள அஞ்சனக்கல்லில் செய்யப்பட்ட கிருஷ்ணர்!
குருவாயூர் திருக்கோயிலில் தரிசனம் தரும் மூலவர் ஸ்ரீகுருவாயூரப்பனின் விக்கிரகம் தனிச் சிறப்பு கொண்டதாகும். மிகவும் புனிதமானது எனக் கருதப்படும் பாதாள அஞ்சனம் எனும் கல்லில் மூலவர் விக்கிரகம் வடிக்கப்பட்டுள்ளது.

இந்த விக்கிரகத்தை ஒரு காலத்தில் மகாவிஷ்ணு வைகுண்டத்தில் வைத்து வழிபட்டு வந்தார். அதன் பிறகு அந்த விக்கிரகத்தை பிரம்மதேவனிடம் அளித்தார். பிறகு பிரம்மனிடம் இருந்து கைமாறி காசியாபா பிரஜாபதி, வசுதேவர் ஆகியோரிடம் போனது. கடைசியில் வசுதேவரிடம் இருந்து ஸ்ரீகிருஷ்ணரிடமே இந்த விக்கிரகம் வந்து சேர்ந்தது. துவாரகையில் தன் மாளிகையில் இதை வைத்து வணங்கி வந்தார் ஸ்ரீகிருஷ்ணர்.

கிருஷ்ண அவதாரம் பூர்த்தியாக வேண்டிய வேளை வந்தது. அதற்கு முன்னதாகத் தன் பக்தரான உத்தவரிடம், ‘இன்னும் ஏழு நாட்களில் துவாரகையைக் கடல் கொள்ள இருக்கிறது. அந்த வெள்ளத்தில் இந்தக் கிருஷ்ண விக்கிரகம் மிதக்கும். அதை குரு பகவான் உதவியுடன் பக்தர்கள் வணங்கத்தக்க புனிதமான ஓர் இடத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டும்' என்றார் கிருஷ்ண பகவான்.

அடுத்த ஒரு சில தினங்களில், பகவானின் வாக்குப்படி பெரிய பிரளயம் ஒன்று துவாரகையைத் தாக்கியது. அந்த வெள்ளத்தில் மிதந்து வந்த விக்கிரகம் ஸ்ரீகிருஷ்ணரின் வாக்குப்படி குரு பகவானிடம் போய்ச் சேர்ந்தது. இதை பிரதிஷ்டை செய்வதற்காக குருவும் அவரது முதன்மை சிஷ்யனான வாயுவும் சேர்ந்து ஒரு நல்ல இடத்தைத் தேடி அலைந்தார்கள்.

இறுதியில் அவர்கள் கேரள தேசத்தை அடைந்தார்கள். அங்கே பரசுராமரை சந்தித்தனர். இந்த விக்கிரகம் பிரதிஷ்டை ஆக வேண்டிய இடம் இதுதான் என்று பரசுராமரே இருவரையும் கூட்டிக் கொண்டு போய் ஓரிடத்தைக் காண்பித்தார். பச்சைப்பசேல் என்று அழகாகக் காட்சி தரும் அந்த இடத்தின் அருகே சிவபெருமான் பன்னெடுங் காலமாக தவம் இருந்து வந்தார்.

அந்த இடத்தில் விக்கிரகம் பிரதிஷ்டை ஆனது. குரு மற்றும் வாயுவால் பிரதிஷ்டை ஆனதால் இந்த க்ஷேத்திரம் பின்னாளில் ‘குருவாயூர்' ஆயிற்று. தென் துவாரகை எனவும் போற்றப்படுகிறது.

சென்று பார்த்து அவர் அருள் பெற்று வாருங்களேன்!

#நவக்ரகங்களை உள்ளடக்கிய பிள்ளையார்!
கும்பகோணம் மடத்துத் தெருவில் உள்ள ஸ்ரீபகவத் விநாயகர் கோயிலில் நவக்கிரக விநாயகர் அருள்கிறார். இவர் சூரியனை நெற்றியிலும், சந்திரனை நாபிக் கமலத்திலும், செவ்வாயை வலது தொடையிலும், புதனை வலது கீழ்க் கையிலும், வியாழனை சிரசிலும், வெள்ளியை இடது கீழ்க் கையிலும், சனியை வலது மேல் கையிலும், ராகுவை இடது மேல் கையிலும், கேதுவை இடது தொடையிலும் கொண்டு காட்சி தருகிறார். இவரை வழிபட்டால் நவக்கிரகங்களைச் சுற்றி வந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

#பழனி நவபாஷாண சிலைக்கு ஒரு முன்னோட்டம்!
கொல்லிமலையில் அமைந்துள்ள பேளுக்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள கூவ மலையில் தண்டயுதபாணியாக முருகன் குடி கொண்டுள்ளார். இந்த கோவில் சிலையை போகர் சித்தர் பழனியில் நவபாஷாண முருகர் சிலையை உருவாக்கும் முன் ஒரு முன்னோட்டமாக தயாரித்து இங்கே பிரதிஷ்டை செய்தார் என்று செவி வழி செய்திகள் கூறுகிறது. கூவ மலையை கூர்ந்து கவனித்தால் ஒரு பாறையை கூட பார்க்க முடியாது. ஏதோ புற்களால் கம்பளம் நெய்து மலை மேல் விரித்தார் போல் ஒரு பசுமை சூழ்ந்து நிற்கும். இந்த மலையின் பின் புறம் கொல்லிமலை கைலாசத்தை நினைவு படுத்தி எல்லாமே இங்கு அடக்கம் என்று சொல்லாமல் சொல்லி உயர்ந்து நிற்கும். இங்கு முருகர் வேட்டுவ கோலத்தில் காட்சி தருகிறார். நிறையவே ரகசியங்களை உள்ளடக்கிய கோவில். அகத்தியர் சித்தர் முதல் அனைவரும் காலை வேலையில் உலக நன்மைக்காக தவமிருக்கும் கோவில் என கூறப்படுகிறது. அத்தனை அமைதி பொருந்திய கோவில்.

சென்று தரிசனம் செய்து அவன் அருள் பெற்று வாருங்களேன்!

#வராஹ முகத்துடன் ஆஞ்சநேயர்!
அனுமன் ஆலயங்களில் வானர முகத்துடன் ஆஞ்சநேயராக அருள் பாலிப்பதுதான் வழக்கம். ஆனால், சேலம் மாவட்டம் ஆத்தூரில், 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயத்தில் குபேர திசையான வடக்கு திசை நோக்கி வராக முகத்துடன் அவர் எழுந்தருளியிருக்கிறார். வைணவ ஆலயத்தில் பரிவார மூர்த்தியாக விளங்கும் அனுமன் இத்தலத்தில் பிரதான மூர்த்தியாகத் திகழ்வதும் கூடுதல் சிறப்பு.

#சிவனுக்கு துளசி பூசை!
சிவகங்கை, திருப்பாச்சேத்தியில் மருநோக்கும் பூங்குழலியம்மை சமேத திருநோக்கிய அழகியநாதர் ஆலயம் உள்ளது. தனது குறைகளை போக்க வேண்டி இறைவி இத்தலத்தில் துளசி தளங்களால் ஈசனை வழிபட்டாளாம். அதனால் திங்கட்கிழமைகளில் இத்தல ஈசனுக்கு துளசித்தள அர்ச்சனை நடைபெறுகிறது. மணப்பேறு கிட்டவும் பிரிந்த தம்பதியர் மீண்டும் சேரவும் இத்தலத்திற்கு வந்து தரிசித்து பயனடைகின்றனர். இங்கு பிரதோஷ காலங்களில் மட்டும் இரு மரகத லிங்கங்கள் வெளியே எடுக்கப்பட்டு பூஜிக்கப்படுகின்றன.

#ஆப்பனூர் போய் தரிசித்தால் வாத நோய் விலகும்!
மதுரை நகருக்குள் செல்லூரில் இருக்கிறது, திரு ஆப்பனூர் கோயில். இறைவன் பெயர், திருஆப்புடையார். இறைவி, குரவங்கமழ் குழலி. சம்பந்தர் பாடிய இத்தலத்திற்கு வந்தால், வாத நோய்கள் குணமாவதாகச் சொல்லப்படுகிறது.
பில்லி சூன்யம் விலக்கும் ஏடகநாதர்!

மதுரையிலிருந்து துவரிமான், தேனூர் வழியே சோழவந்தான் பேருந்து பாதையில் 18 கி.மீ. தொலைவில், திருவேடகம் இருக்கிறது. இறைவன் ஏடகநாதர், மந்திர மூர்த்தியாகக் காட்சியளிக்கிறார். அனைத்து பில்லி, சூன்யங்களும் இவ்வாலய மூர்த்தியைத் தரிசித்ததும் நீங்கி விடுகின்றன. இங்கே எழுந்த ருளி அருள்பாலிக்கும் அம்பாள் ஏலவார் குழலி, பெண்களின் குறைகளைக் கேட்டு அவற்றை நீக்கித் தருகிறாள். இங்குள்ள ஸ்தல விருட்சமான வி ல்வ மரம் சக்தி படைத்தது. இத்தலத்தில் பிரம்ம தீர்த்தக்குளம் உள்ளது. இக்குளத்து நீரையே இறைவனுக்கு அபிஷேகத்தின் போது பயன்படுத்துகிறார்கள்.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Thiruthalangal magimai திருத்தலங்கள் மகிமை

Post by thanjavooran »

A share
நாச்சியார் கோவில் கல் கருடன் அமைந்த விதம். 

>> தமிழகத்தின் சிற்பக்கலை அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் மயூரசன்மன் வடித்த காற்றை சுவாசிக்கும் கல் கருடன் <<

செங்கட்பெயர் கொண்ட செம்பியர்கோன்’ என்றும், ‘காவிரிக்கரையெங்கும் எழுபது மாடக் கோயில்களைக் கட்டியவன்’ என்றும் பெயர் பெற்ற கோச்செங்கட்சோழன்.

தேவசேனாபதியாரின் சிற்பக் கூடத்தில் பயின்ற மாணவன் மயூரசன்மன். முப்பத்தியிரண்டு சிற்ப நூல்களையும், பதினெட்டு உப நூல்களையும் கரதலப் பாடமாக அறிந்தவன். 

அது மட்டுமல்ல, இரு திங்களாக ‘யந்த்ர சர்வாஸ’ மந்திரத்தையும் உபதேசித்திருக்கிறேன். நீ எழுப்பும் அத்தனை ஆலயங்களுக்கும் தேவையான எந்த சிற்பத்தையும் வடித்துத் தரக்கூடியவன்" என்றவர், சற்றுத் தள்ளி நின்ற சீடனை நோக்கி, நீ சென்று மயூரசன்மனை அழைத்து வா" என்றார் தேவசேனாபதி.

சற்று நேரத்தில் உள்ளே நுழைந்து மன்னனையும் சிற்பியையும் வணங்கி நிமிர்ந்தவனின் பிராயம் இருபதுக்கு மேலிராது. கறுத்துச் சுருண்டு தோள்களை எட்டிய குழல்களும், அகன்ற நெற்றியில் சந்தனமும், விழிகளில் தீட்சண்யமுமாக நின்றவனைக் கண்டதும் மன்னன் முகத்தில் திருப்தி தெரிந்தது.

இவன் மயூரசன்மன், எனது பிரதான சீடன். உனது ஆலயப் பணிக்கு இவனை அழைத்துக் கொண்டு போகலாம் மன்னா" என்ற சிற்பி, முதலில் இவனை எங்கு அழைத்துச் செல்லப்போகிறா?" என்றும் வினவினார்.

மன்னனிடமிருந்து பதில் உடனே வந்தது, திருநறையூருக்கு" என்று.

‘செந்தளிர் கோதிக் குயில் கூவும்’ திருநறையூரின் ஆலயத்தை மன்னனுடன் அடைந்த மயூரசன்மனின் பார்வை திருக்குளத்தை ஒட்டி அடுக்கப்பட்டிருந்த பாறைகளின் மேல் விழுந்தது. பார்த்தவுடன் அவை கங்க நாட்டிலும் குவளாலபுரியிலும் விளையும் நீரோட்டமிக்க அடுக்குப்பாறைகள் என்பது புரிந்தது அவனுக்கு. 

மயூரசன்மனின் விழிகள் பாறைகளை வெறிப்பதையும், அவற்றில் விரிந்த கனவையும் கவனித்த மன்னன், அவனை நெருங்கினான்.
மயூரா... ஏன் அந்தப் பாறைகளை அப்படிப் பார்க்கிறா?" என்றான் மன்னன்.
மன்னவா, இந்த ஆலயத்தில் நான் செய்துக்க வேண்டிய சிற்பம் எது?" மயூரனின் பதில் கேள்வி யாகவே வந்தது. அவனது குரலும் கனவிலிருந்து ஒலிப்பது போலிருந்தது.

இங்கு எம்பெருமானுக்கு திருமணத்தை நடத்திவைத்த பெரிய திருவடியான கருடனைத்தான். மூலவரின் உயரமான ஆகிருதிக்கு ஏற்ற வடிவில் வடிக்க வேண்டும்" என்றான் மன்னன்.

மன்னவா, இந்த அடுக்குப் பாறைகள் பூமியின் நீரோட்டங்களுக்கு நடுவிலிருந்தவை. இவற்றுள் சில வற்றில் நீரோட்டம் கடந்து சென்ற மெல்லிய பாதைகள் இருக்கும். அவற்றைத் தேர்ந்தெடுத்து, சுத்தப்படுத்தினால் காற்று ஊடே செல்லும் பாதைகிட்டும். காற்று சென்று வரக்கூடிய வழி கிடைத்தால் இவை சுவாசிக்கும் பாறைகளாகும். 

மனிதருக்கு சப்த நாடிகள் உள்ளது போல் இவற்றுக்கும் நாடிகள் உண்டு. காற்றை சுவாசிக்கும் எந்த ஜீவனும் பூமியின் விசையை எதிர்த்து நடமாடக்கூடியது. நாம் செய்யக் கூடிய சிற்பத்தின் நாசியில் அந்தப்பாதை வருமாறு அமைத்தால், சந்திரனின் ஒளியை உள்வாங்கும் சந்திர காந்தக் கல்லைப்போல் இவை பூமியின் விசைக்கெதிராக சக்தி பெறும். பின்னர், ‘யந்திரசர்வாஸ’ மந்திரமும் வடிக்கும் சிற்பத்துக்குண்டான மந்திரத்தையும் பிரயோகிக்கும்போது அவை உயிர்பெற்று விடும்."

மன்னனுடன் ஆலயத்துள் நுழைந்த மயூரசன்மன் மூலவரின் இடப்புறம் உள்ள பகுதியைத் தேர்ந்தெடுத்தான். மன்னவா, அந்தப் பாறைகளைக் கொண்டு இங்கு மண்டபத்தை அமைக்கிறேன். இங்கிருந்து பிராகாரத்தில் இறங்கும் வழிநெடுக நான் கூறும்படி அந்தப் பாறைகளைக் கொண்டு பாதை அமைத்து விடுங்கள். மண்டபத்தின் பீடத்தில் பூமியின் விசை எதிர்ப்புறம் இருக்கும்படி அமைத்து விட்டால், கருட சிற்பத்தின் எடை மிகக் குறைவாகவே இருக்கும். அதே பாறைகளைக்கொண்டு வெளிப் பிராகாரம்வரை பாதையாக அமைத்து விடலாம்" என்றான் மயூரசன்மன்.

சரி மயூரா, அதனால் என்ன நிகழும்?" என்றான் மன்னன்.

மயூரசன்மனின் விழிகள் மின்னின. மன்னா, மூலவரின் உயரத்துக்கும் ஆகிருதிக்கும் ஏற்றபடி சுமக்கும் கருடனுக்கும் உருவம் அமைத்தால் ஆயிரம் மடங்கு எடையும் அதிகமாக இருக்கும். ஆனால், அந்த எடை இந்த மண்டபத்தில் பத்து மடங்கு குறை வாகவே இருக்கும். கருடன் புறப்பாடு காணும் போது கருடனைத் தூக்க நால்வரே போதும். மண்ட பத்தை விட்டுக் கீழிறங்கினால் தூக்குபவர் எண்ணிக்கை இரு மடங்காக வேண்டும். 

பாதை நெடுக நான் அமைக்கும் அடுக்குப்பாறைத் தளத்தில் ஈர்ப்பு விசை பாதிப்பாதியாகக் குறைந்துகொண்டே வரும். எனவே, மேற்கொண்டு செல்லச் செல்ல கருடன்தன் சுய எடையைப் பெற்றுவிடுவார். அப்போது தூக்கு பவர் எண்ணிக்கையும் இரண்டிரண்டு மடங்காக உயர்ந்துகொண்டே செல்லும். மீண்டும் மண்டபத் துக்குத் திரும்பி வரும்போது அதே எண்ணிக்கையில் எடை குறைந்துகொண்டே வரும்" என்றான் மயூரசன்மன்.

செங்கட்சோழனின் முகத்தில் மலர்ச்சி தெரிந்தது. அப்படியே செய்துவிடு மயூரா. உனக்கு உதவியாக கல் தச்சர்களையும், ஆட்களையும் இப்போதே ஏற்பாடு செய்கிறேன்" என்றான் மன்னன்.

தமிழகத்தின் சிற்பக்கலை அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் மயூரசன்மன் வடித்த அந்தக் கல் கருடன் இன்றளவும் அப்படியே #நாச்சியார்கோயில் என்று அழைக்கப்படும் #திருநறையூரில் நிற்கிறது. 

மார்கழியிலும் பங்குனியிலும் பிரம்மோத்ஸவம் நடைபெறுகிறது. கருட சேவையின்போது பிரம்மாண்டமான அந்தக் கல் கருடனை முதலில் நால்வரும், மண்ட பத்தை விட்டு இறங்கியதும் எண்மரும், பின் வெளிப் பிராகாரத்துக்கு வரும்வரை இரண்டிரண்டு மடங்காக அறுபத்திநான்கு பேர் வரை தூக்கி வர வேண்டியிருக்கிறது. அதுமட்டுமின்றி, ஆலயத்தை விட்டு வெளி வந்ததும், கல் கருடனின் மேனியில் மனிதர்களைப் போல் வியர்வை வழியத் தொடங்குகிறது!..

Post Reply