இனிய தமிழ் புத்தாண்டு

Post Reply
thanjavooran
Posts: 2540
Joined: 03 Feb 2010, 04:44
x 178
x 63

#1 இனிய தமிழ் புத்தாண்டு

Post by thanjavooran » 13 Apr 2016, 16:42

ரசிக குழும அங்கத்தினர் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
துன்முகி ஆண்டு நலமே செய்யட்டும்
தஞ்சாவூரான்
13 04 2016

தமிழ்ப்புத்தாண்டு முழுவதும்,

""சுக்கிரனின்""

ஆதிக்கத்தில் உள்ளது.

"சுக்கிரனுக்கு " அடுத்ததாக,

ஆதிக்கமும், அதிகாரமும் பெறுவது,

கல்விக்கு அதிபதியான ,

""புதன் பகவான்""

புதனின் அதிதேவதை,

""ஶ்ரீஹயக்ரீவர்""

ஞானம்,

கல்வி,

அறிவாற்றல்,

நினைவாற்றல்,

ஒழுக்கம்,

நேர்மை,

ஆகியவற்றை அளிப்பவர் இவர்தான்.

இந்த ""துர்முகி"" ஆண்டு முழுவதும் ,

"ஶ்ரீ ஹயக்ரீவரின் " சக்தியே மக்களுக்குத் துணையிருந்து வழிகாட்ட இருப்பதால்,

"ஶ்ரீஹயக்ரீவ பகவானின்" பெண்ணாகிய,

இப்புத்தாண்டிற்கு "துர்முகி" என்ற பெயர் ஏற்பட்டுள்ளது.

அதாவது, . . .

பரி (குதிரை) முகத்தைத் கொண்டுள்ள,

"ஶ்ரீஹயக்ரீவரின்"

அனுக்ரகத்தை அள்ளித்தரப் போகும் ,
"ஆண்டாகத் திகழப் போவதை,"

"துர்முகி"

என்ற பெயர் சூட்சம்மாக எடுத்துக்காட்டுகிறது.
0 x

kvchellappa
Posts: 3513
Joined: 04 Aug 2011, 13:54
x 804
x 221

#2 Re: இனிய தமிழ் புத்தாண்டு

Post by kvchellappa » 14 Apr 2016, 06:51

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் நல்லுலகத்தின் உலக நல சிந்தனைகள்:
௧. எல்லோரும் இன்புற்றிருப்பதுவேயன்றி
வேறொன்றறியேன் பராபரமே
௨. யாதும் ஊரே யாவரும் கேளிர்
௩. அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்
ஆருயிர்க்கெலாம் நான் அன்பு செயல் வேண்டும்
௪. நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை
0 x

maduraimini
Posts: 472
Joined: 22 Sep 2009, 02:55
x 1
x 3

#3 Re: இனிய தமிழ் புத்தாண்டு

Post by maduraimini » 17 Apr 2016, 05:04

Ellorukkum Tamizsh PutthAndu Vazshthukkal.
0 x

Post Reply