தமிழில் பாடக்கூடாதா?

Post Reply
kvchellappa
Posts: 3513
Joined: 04 Aug 2011, 13:54
x 804
x 221

#1 தமிழில் பாடக்கூடாதா?

Post by kvchellappa » 04 Apr 2018, 09:57

From FB:
Vedanth Ramanujam is with Gayathri Girish and 9 others.

என் ஆருயுர் நண்பன் பிரபாகர் அவர்களின் ஆதங்கம்

தனது கட்டுரைகளில் மஹாகவி பாரதியார் எத்தனையோ விஷயங்களைப்பற்றி அலசி இருக்கிறார். கர்நாடக இசையையும் அவர் விட்டு வைக்கவில்லை! அவர் வாழ்ந்த காலத்திலேயே அதாவது கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு முன்னமேயே தெலுங்கு மற்றும் சமஸ்க்ருத கீர்த்தனங்களை அர்த்தம் தெரியாமலும் பதச்சேதங்கள் செய்தும், சங்கீத வித்வான்கள் பாடும் அவலத்தை நினைவு கூர்ந்து அப்போதைய தமிழக ரசிக மகா ஜனங்களுக்கே இரும்புக்காதுகள் தான் இருந்திருக்க வேண்டும் என்று அவர் நையாண்டி செய்திருக்கிறார்.

இன்றைய நிலையைப்பற்றி சற்று பார்ப்போம். வழக்கம் போல் இந்த வருடமும், தமிழகத்திலேயே பிறந்து இங்கேயே வளர்ந்து தமிழையே தாய் மொழியாகக்கொண்ட ஏழிலிருந்து எழுபது வயது வரை உள்ள வித்வான்களும் விதுஷிகளும் தங்களின் முழு திறமைகளையும் காட்ட விழைந்து, தெலுங்கு மற்றும் சமஸ்க்ருத கீர்த்தனங்களால் கச்சேரிகளின் பெரும் பகுதிகளை நிரப்பி, வழக்கம் போல் தமிழ் மட்டுமே அறிந்த ஆனால் கர்நாடக இசையில் ஆர்வம் மிகுந்த அப்பாவி ரசிகர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்வார்கள். சங்கீத மும்மூர்த்திகளை மொத்தமாக குத்தகை எடுத்துக்கொண்டவர்களைப்போல் மற்ற வாக்கேயக்காரர்களின் (குறிப்பாக தமிழ்) கிருதிகளை துக்கடா அந்தஸ்துக்கு தள்ளி விட்டு , இறுதி அரை மணியிலோ கால் மணியிலோ அவசர கதியில் ஒரு திருப்பாவை பாசுரமோ (அது கூட மார்கழியாக இருந்தால்) அல்லது பாரதியின் பாடல் ஒன்றையோ பாடுவார்கள். சிலர் இந்த நாசூக்கு எல்லாம் கூட பாராமல், தமிழில் ஒரு அட்சரம் கூட பாடாமல் (அதை ஏன் கேட்கிறீர்கள்? நடுவில் அறிவிப்பு கூட That was a compostion by Dikshitar in Raga Dwijavanthi என்று செய்வார்கள்!), கச்சேரியை முடிப்பவர்களும் உண்டு. போனால் போகிறதென்று தங்களது கருணைப்பார்வைகளை அவ்வப்போது புரந்தர தாசர், முத்தையா பாகவதர், ஸ்வாதி திருநாள், அன்னமாச்சார்யா போன்றவர்கள் மீது வீசுவார்கள். ஆனால் இவர்களுக்கு ஊத்துக்காடு வேங்கட சுப்பையர், பாபநாசம் சிவன், முத்துத்தாண்டவர், மாரிமுத்தா பிள்ளை, அச்சுத தாசர், கவி குஞ்சர பாரதி, கோடீஸ்வர ஐயர், கோபால கிருஷ்ண பாரதி போன்றவர்களின் பாடல்கள், மேல் சொன்னது போல் துக்கடா ஸ்டேடஸ் தான். அதற்கு மேல் கிடையாது.

இயக்குனர் சிகரம் பாலசந்தர் அவர்கள் தனது சிந்து பைரவி படத்தில், சாமானியனுக்கு சங்கீதம் போய் சேர வேண்டுமென்றால், தமிழில் இருக்கும் நாட்டுப்புற பாடல்கள் தான் மாற்று என்பதாக (மரி மரி நின்னே - பாடறியேன் படிப்பறியேன்) காட்டியிருப்பார். இதற்கு காரணமே சங்கீத கலைஞர்கள் தமிழில் இருக்கும் சிறந்த கர்நாடக இசைப்பாடல்களை மதித்து அவைகளை கச்சேரி மேடைகளில் பிரபலப்படுத்தாமல் இருப்பது தான். இவர்களின் இந்த ஆணவப்போக்கு தான் பெரும்பாலான தமிழர்களை கர்நாடக இசை மேல்தட்டு மக்களுக்கு என்று நினைக்க வைத்து அதனிடம் அந்நியப்பட்டே இருக்க வைக்கிறது. ஆம், எம்.கே. தியாகராஜ பாகவதர் காலத்தில் மிகப்பிரபலமான அவரது "மன்மத லீலையை வென்றார் உண்டோ" பாடலையும் "ராஜன் மஹா ராஜன்" பாடலையும் சாருகேசி, உசேனி ராகங்களில் அமைந்தவை என்று தெரியாமலேயே மூட்டை தூக்கும் தொழிலாளிகள் இருந்த அதே தமிழகத்தில் தான்.

மும்மூர்த்திகளை நானும் மிக மதிக்கிறேன். அவர்களின் அபாரமான கிருதிகளை மிகவும் ரசிக்கவும் செய்கிறேன். ஆனாலும், ஐயா, மொழி புரியவில்லையே! இசைக்கு மொழி தேவையில்லை என்ற பம்மாத்து வேலையெல்லாம் வேண்டாம். அர்த்தம் புரிந்தால் அதன் சிறப்பே தனி தான்.சில வருடங்களுக்கு முன் வரை நித்யஸ்ரீ அவர்கள் பாடிக்கொண்டிருந்த "ராகத்தில் சிறந்த ராகமெது" என்ற பாடலுக்கு அப்படி ஒரு வரவேற்பு இருந்தது ரசிகர்களுக்கிடையில். ஏனென்றால், ஒவ்வொரு வார்த்தையும் புரிந்த காரணத்தால். சௌமியா அவர்களின் பாரதியாரின் ஊழிக்கூத்தும், அருணா சாயிராமின் மாட்டு மேய்க்கும் கண்ணாவும், சேஷகோபாலனின் சின்னஞ்சிறு கிளியேவும் காயத்ரி கீரிஷ் அவர்களின் நம்பி கெட்டவர் எவரய்யா வும் ரசிகர்களை கட்டிப்போட்டன. இல்லையென்று, யாராவது சொல்லட்டும் பார்க்கலாம்.
தமிழில் அர்த்தசெறிவும் பாவ பூர்வமும் உள்ள பாடல்களே இல்லையா? பாபநாசம் சிவன் என்ற ஒரே ஒரு சாஹித்ய கர்த்தாவை எடுத்துக்கொள்வோம். கல்யாணி ராகத்தின் அழகை வெளிக்கொணர்வதில் எந்த விதத்தில் "உன்னையல்லால்", "நிதி சால சுகமா" வுக்கு சளைத்தது? சஹானா வின் இனிமையை "சித்தம் இரங்காமல்" எந்த விதத்தில் "கமலாம்பிகாயாம்" கிருதியை விட குறைத்துக்காட்டுகிறது?

எந்த முக்கியமான ராகத்தை எடுத்துக்கொண்டாலும் - ஒரு கச்சேரியின் மையப்பாடலாகவோ, அல்லது முன் பாதியில் பாடக்கூடிய கீர்த்தனையாகவோ தகுதி வாய்ந்த பாடல் இருக்கிறதே? தோடியில் 'கார்த்திகேய', மோஹனத்தில் 'காபாலி', சங்கராபரணத்தில் 'மஹாலக்ஷ்மீ, பைரவியில் 'தாயே' - இப்படி அடுக்கிக்கொண்டே போகலாமே! சொல்லப்போனால், பாபநாசம் சிவன் என்ற தமிழ் வாக்கேயக்காரர் தான் - வர்ணத்தில் இருந்து, மங்களம் வரை எல்லா பிரிவுகளிலும் உருப்படிகள் பண்ணி விட்டுப்போயிருக்கிறார். பிறகு ஏன், 'கனியிருப்பக்காய் கவர்ந்தற்று' என்பதாக, தமிழ் இசைக்கலைஞர்கள் அப்படியாவது வார்த்தைச்சேதம் செய்து அதனால் அர்த்தத்தையும் மாற்றி மற்ற மொழி பாடல்களுக்கு பிரதானம் கொடுக்க வேண்டும்? நான் ஒன்று கேட்கிறேன். இவர்கள் யாருக்காவது அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகாவிற்கெல்லாம் போய் தமிழ் மொழியில் மட்டும் பாடி மீண்டு வர முடியுமா? இங்கு தான் ஒரு தமிழ் கீர்த்தனம் கூட பாடாமல், ஒரு முழு கச்சேரியை செய்ய அவர்களுக்கு துணிவு உண்டு. சபாக்கள் அவர்களை ஊக்குவிப்பார்கள். இரும்புக்காதுகள் கொண்ட ஜனங்கள் கேள்வி எதுவும் கேட்காமல், 'போட்டதைச் சாப்பிடும்' பிச்சைக்காரர்கள் மாதிரி பொறுமையின் பூஷணமாக இருப்பார்கள். (நான் அத்தனை கலைஞர்களையும் குற்றம் சாட்டவில்லை. சொல்லப்போனால், இந்த வருட சங்கீத கலாநிதியான திரு ரவிக்கிரண் அவர்கள் ஊத்துக்காடு பாடல்களைப்பிரபலப்படுத்திய முயற்சி பிரமிக்கத்தக்கது).

தமிழ் இசை பஞ்சம் பற்றி அவ்வப்போது என்னை மாதிரி சில பைத்தியக்காரர்கள் யாராவது பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட இட ஒதுக்கீடு கேட்டு கெஞ்ச வேண்டிய நிலைமையே வந்து விட்டது! திரு கல்கி அவர்கள் அவர் இருந்த காலத்தில் தன்னால் இயன்ற அளவுக்கு தமிழிசை இயக்கம் ஒன்றை முன்னின்று நடத்திப்போராடினார். நான் மிகவும் மதிக்கும் சிவன் அவர்களின் லதாங்கி ராகப்பாடலான, மறு பிறப்பு வேண்டாமையை வலியுறுத்தும் 'பிறவா வரம் தாரும்' என் மனதிற்குகந்த பாடலாக இருந்தாலும், இந்த தமிழிசை இயக்கத்தை மீண்டும் உயிர்ப்பிக்கவாவது, கல்கி அவர்கள் மறுபடி பிறந்து வர மாட்டாரா? என்று மனம் ஏங்குகிறது!
1 x

sureshvv
Posts: 5089
Joined: 05 Jul 2007, 18:17
x 118
x 361

#2 Re: தமிழில் பாடக்கூடாதா?

Post by sureshvv » 04 Apr 2018, 10:18

kvchellappa wrote:
04 Apr 2018, 09:57
From FB:
Vedanth Ramanujam is with Gayathri Girish and 9 others.

என் ஆருயுர் நண்பன் பிரபாகர் அவர்களின் ஆதங்கம்

<snip>

தமிழ் இசை பஞ்சம் பற்றி அவ்வப்போது என்னை மாதிரி சில பைத்தியக்காரர்கள் யாராவது பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
Agree 100%.
1 x

vgovindan
Posts: 1603
Joined: 07 Nov 2010, 20:01
x 56
x 112

#3 Re: தமிழில் பாடக்கூடாதா?

Post by vgovindan » 20 Apr 2018, 06:39

ஐயா,
வண்டு வரவேண்டுமென்றால், வண்ணம் வேண்டும், மணம் வேண்டும், மகரந்தம் வேண்டும். இதில் எஃதொன்று குறைந்தாலும் வண்டினை வரவழைக்கத்தான் வேண்டும் - அது முடியாது. ரசிகத்தன்மையும் அப்படிப்பட்டதே. உபநிடதங்களை ரசிக்க வடமொழி தெரிந்துகொள்ள வேண்டும், அல்லது விவேகாநந்தர் போன்று ஆங்கிலத்தில் விளக்கமளிப்போர் இருக்கவேண்டும். இசையறிவாகிலும் இறைவனறிவாகிலும் இருக்குமிடம் நாடி நாம்தான் செல்லவேண்டும். மொழிவெறி தலைவிரித்தாடும் நாட்டிலே இலக்கியமும், இசையும், மற்ற கலைகளும் தலைவைத்தும் படுக்காது. சூழ்நிலைகள் தாறுமாறாக இருக்கப் புலம்பல் ஒன்றுதான் மிச்சம். கொலவெறி கொலவெறிதான் வேண்டுமென்று தலைதெறிக்க ஓடும் மக்கள் மாற வேண்டுமானால் முன்பு கலைஞன் மாறவேண்டும். ஒரு தியாகராஜரோ, தீக்ஷிதரோ தமிழில் உதிப்பாரா - ஐயமே. பாவம் - பாவமல்ல - பாவம் என்ன விலையென்று கேட்கும் மகானுபாவர்களிடையே பாவம் ஒன்றுதான் மிஞ்சும்.
0 x

kvchellappa
Posts: 3513
Joined: 04 Aug 2011, 13:54
x 804
x 221

#4 Re: தமிழில் பாடக்கூடாதா?

Post by kvchellappa » 20 Apr 2018, 07:23

தமிழில் ஏராளமான உருப்படிகள் உள்ளன - மூவருக்கும் முன்னும் இருந்தன பின்னும் வளர்ந்தன. அதில் பஞ்சம் இல்லை. பாடப் பாட மெருகூடும். அது கண்கூடு. அது மூவருக்கு இசையுலகம் அளிக்கும் சிறந்த பாராட்டு. ஒருவருக்குப் பின்னால் அந்த கலை மேன்மையுற்றாலே அன்னாருக்கு அது சிறப்பு. ஏதோ ஒரு மொழிதான் இசைக்கு உகந்தது என்ற கருத்து பிழையில் பிறந்தது. பல மொழிகளிலும் பாடி கேட்டு இசையை வளர்ப்போம். அதில் உயர்வு தாழ்வுக்கு இடமில்லை.
தியாகய்யரைப் போல தீட்சிதர் போல தமிழில் வருவாரா? ஐயமா? வந்தனரே!
2 x

vgovindan
Posts: 1603
Joined: 07 Nov 2010, 20:01
x 56
x 112

#5 Re: தமிழில் பாடக்கூடாதா?

Post by vgovindan » 20 Apr 2018, 07:47

சிரிப்புத்தான் வருகுதைய்யா!
0 x

vgovindan
Posts: 1603
Joined: 07 Nov 2010, 20:01
x 56
x 112

#6 Re: தமிழில் பாடக்கூடாதா?

Post by vgovindan » 20 Apr 2018, 16:33

தியாகராஜரோ தீக்ஷிதரோ எந்த மொழியினராகத் தோன்றியிருந்தாலும் அந்த மொழியை சிறப்பித்திருப்பர். இசைக்கு இந்த மொழி உகந்தது; இது உகந்ததல்ல என்று இசையின் பெருமையினை அறியாதவர் கூறலாம். பெருமை மொழியினைப் பொறுத்தல்ல; உள்ளப்பாங்கினைப் பொறுத்தது. TS பாலகிருஷ்ண சாஸ்திரிகள் 'தியாகராஜ ராமாயணம்' என்ற உபன்னியாசத்தில் கூறுவார் - 'உள்ளம் உருக வேண்டுமே' என்று.
தியாகராஜரின் உள்ளப்பாங்கினுக்கு இசை ஒ ரு கருவி. அந்த உள்ளப்பாங்கற்றவர், இசையில் பேரறிஞரானால்தானென்ன?
0 x

rajeshnat
Posts: 8638
Joined: 03 Feb 2010, 08:04
x 79
x 222

#7 Re: தமிழில் பாடக்கூடாதா?

Post by rajeshnat » 20 Apr 2018, 17:04

There was once a stage in 40's to 70's where Tamil Krithis was very few in concert . But presently if you look in most concerts , Thyagaraja krithis takes significant share .I would humbly say for sure that tamil and Sanskrit are going to neck to neck in count . IN the sense Papanasam sivan and Gopala Krishna Bharathi(top #2 in tamil) are getting so very frequent as Muthuswami Dikshitar and Swati tirunal (top #2 in sanskrit) .

You may have had few experiences with possibly hearing say a Malladi Brothers whose repertoire was limited in thamizh OR very very likely the concert itself would have been a 2 hour crap with 15 mins speech . This problem is no more there and is not applicable at all.

Vgovindan sir,
When artist say sing devi neeye thunai , sivan krithi in keervani in thamizh ,I personally get more spiritual and emotional satisfaction than say the kaligiyunTe, thyagaraja krithi in telugu. I personally got more spiritual and emotional satisfaction in KoluvaiunnAdE and UpachAramoolanu in Telugu than Yaaro Ivar Yaro and Taaye ezhaippal in tamil .

We have come a long way in bringing in more tamil krithis which are almost in par with Sanskrit. The problem statement is only one , fix and give more time to performing artist for them to have more spread of languages.
Last edited by rajeshnat on 20 Apr 2018, 22:48, edited 1 time in total.
1 x

rajeshnat
Posts: 8638
Joined: 03 Feb 2010, 08:04
x 79
x 222

#8 Re: தமிழில் பாடக்கூடாதா?

Post by rajeshnat » 20 Apr 2018, 17:06

I struggle to write in thamizh but I just read all the above posts and just felt like replying in tamil. My above post will atleast help those who cannot read tamil.
0 x

vgovindan
Posts: 1603
Joined: 07 Nov 2010, 20:01
x 56
x 112

#9 Re: தமிழில் பாடக்கூடாதா?

Post by vgovindan » 20 Apr 2018, 20:39

Rajesh,
There is no dearth of Tamil kRtis. But they are just compositions - not outpourings as that of tyAgaraja - that is the difference. How I wish Bharati had been musically as endowed as tyAgarAja or dIkshitar; his poems are outpourings - only that we are not blessed to have them in musical form. Setting music to a poem is different. Tamil is no less my mother tongue than telugu. That is why I am able to see the difference in depth.
0 x

vgovindan
Posts: 1603
Joined: 07 Nov 2010, 20:01
x 56
x 112

#10 Re: தமிழில் பாடக்கூடாதா?

Post by vgovindan » 20 Apr 2018, 22:02

An outpouring of Purandara Dasa - aparAdhi nAnalla
https://youtu.be/ViTbHAzFNS4

I don't know whether this was the original tune - yet what a song!
0 x

arasi
Posts: 16083
Joined: 22 Jun 2006, 09:30
x 477
x 265

#11 Re: தமிழில் பாடக்கூடாதா?

Post by arasi » 21 Apr 2018, 02:15

Continuing on Govindan's point about uLLap pAngu, as I understand it...

உள்ளப் பாங்கோடு, கள்ளமில்லா மனமும் சேர்ந்து.
வெள்ளமாய், வகையேதும் மறவாது, சொல் பொருள்
தெள்ளத் தெளிந்து வரும் இசையின் மொழியே மொழி!
0 x

vgovindan
Posts: 1603
Joined: 07 Nov 2010, 20:01
x 56
x 112

#12 Re: தமிழில் பாடக்கூடாதா?

Post by vgovindan » 21 Apr 2018, 06:46

Arasi,
Thanks for that. I will just add, if you may permit me -
உள்ளுறும் உணர்ச்சிகள்,
எதுகை மோனை நோக்காது;
செம்மொழி கொச்சையென்றறியாது;
கொட்டித் தீர்க்கும் கோடை மழை போன்று.
0 x

vgovindan
Posts: 1603
Joined: 07 Nov 2010, 20:01
x 56
x 112

#13 Re: தமிழில் பாடக்கூடாதா?

Post by vgovindan » 21 Apr 2018, 07:00

It is not that if you know the language well, one understands and performs better. There are two words - padArtha and lakshyArtha. Only those musicians who understand lakshyArtha and could imitate(?) that bhAva - like Lokanath Sharma - excel. Others, even if they are Telugus, no better. There is one exception - like Madurai Somu who knows the heart of music, but his ucchAraNa is not so good. But who cares about ucchAraNa when you have bhAva?
0 x

rajeshnat
Posts: 8638
Joined: 03 Feb 2010, 08:04
x 79
x 222

#14 Re: தமிழில் பாடக்கூடாதா?

Post by rajeshnat » 21 Apr 2018, 08:10

vgovindan wrote:
20 Apr 2018, 22:02
An outpouring of Purandara Dasa - aparAdhi nAnalla
https://youtu.be/ViTbHAzFNS4

I don't know whether this was the original tune - yet what a song!
VGV,
Indeed what a song that too maestro santhanam takes it to himalayan heights. That is a revati song in language telugu.
How about the same santhanam singing a thamizh thillana in ragam revati. Thillana has the jathi for the first half just go into 02:58 onwards where it is lyrics from there .Take it from the line annai parAshakthi .... revathi rAga priyE . Would you classify this as just composition or will you elate and move that to outpouring?

Not to surely argue with you Sir (I have immense respect for you). Apart from many bharathiyar songs which are not having the strict krithi prasa can you tell me some numbers that in your opinion are just compositions and not outpourings (preferably one in telugu and one in tamil please). I am just trying to understand your angle better with contextual example.
0 x

harimau
Posts: 1819
Joined: 06 Feb 2007, 21:43
x 42
x 197

#15 Re: தமிழில் பாடக்கூடாதா?

Post by harimau » 21 Apr 2018, 08:51

How about English?

There is a javali Oh My Lovely Lalana that nobody sings!

Surely, our fellow forum member Nick would find it more appealing than Nee Mattale Mayanura!

Since Tanglish is the common language of the concert going public in Chennai, I think we need to translate several hundred varnams, krithis, padams, javalis, slokas and thillanas into English. There is more than one precedent for this. The late Smt Suguna Purushothaman has translated Parulanna Matta Namma Oddu, Vani Pondu, and a few such songs into Tamil and Shobhana Vignesh has sung her own translations of Bhagyada Lakshmi Baramma and other songs to enthusiastic reception by Malaysian/Singapore audiences.

I expect the tup-tup artist to take the lead in this matter. After all, if he can sing a RTP in Hindi in rabidly anti-Hindi Tamil Nadu, there's no reason why he cannot sing an entire concert in English, proving that we in Tamil Nadu intend to use English as the link language not only in official matters but also in arts.
0 x

vgovindan
Posts: 1603
Joined: 07 Nov 2010, 20:01
x 56
x 112

#16 Re: தமிழில் பாடக்கூடாதா?

Post by vgovindan » 21 Apr 2018, 09:40

Rajesh,
You have given me a task. Let me try my best. It may take some time.
0 x

kvchellappa
Posts: 3513
Joined: 04 Aug 2011, 13:54
x 804
x 221

#17 Re: தமிழில் பாடக்கூடாதா?

Post by kvchellappa » 21 Apr 2018, 10:16

It is indeed difficult for me to think that either Sivan or GKB did not have emotional intensity in their lyrics. Many Sivan krithis are said to be extempore outpourings.
0 x

rajeshnat
Posts: 8638
Joined: 03 Feb 2010, 08:04
x 79
x 222

#18 Re: தமிழில் பாடக்கூடாதா?

Post by rajeshnat » 21 Apr 2018, 10:24

vgovindan wrote:
21 Apr 2018, 09:40
Rajesh,
You have given me a task. Let me try my best. It may take some time.
Take your time Sir . No rush make a great post Sir .
0 x

vgovindan
Posts: 1603
Joined: 07 Nov 2010, 20:01
x 56
x 112

#19 Re: தமிழில் பாடக்கூடாதா?

Post by vgovindan » 21 Apr 2018, 10:55

kvchellappa wrote:
21 Apr 2018, 10:16
It is indeed difficult for me to think that either Sivan or GKB did not have emotional intensity in their lyrics. Many Sivan krithis are said to be extempore outpourings.
True, but the 'kill' is missing. In nAn oru viLaiyATTu bommaiyA, he begins rapturously but could not go all out - probably total surrender is not everybody's fortune. The ego stops one from self-obliteration - the touch-stone of outpouring.
So is GKB.
0 x

sureshvv
Posts: 5089
Joined: 05 Jul 2007, 18:17
x 118
x 361

#20 Re: தமிழில் பாடக்கூடாதா?

Post by sureshvv » 21 Apr 2018, 12:56

vgovindan wrote:
21 Apr 2018, 10:55
So is GKB.
Your other biases may be interfering. Heard this earlier this week

https://youtu.be/zeOT6JxHvm8?t=7931

Outpouring on the violin!
Last edited by sureshvv on 21 Apr 2018, 13:07, edited 1 time in total.
0 x

vgovindan
Posts: 1603
Joined: 07 Nov 2010, 20:01
x 56
x 112

#21 Re: தமிழில் பாடக்கூடாதா?

Post by vgovindan » 21 Apr 2018, 13:06

Suresh,
.....bias.....
I humbly accept your opinion.
0 x

sureshvv
Posts: 5089
Joined: 05 Jul 2007, 18:17
x 118
x 361

#22 Re: தமிழில் பாடக்கூடாதா?

Post by sureshvv » 21 Apr 2018, 14:03

Just to be clear, no offence intended. We all have our biases, the human condition. Interaction(Satsang) may help remove some of these
0 x

vgovindan
Posts: 1603
Joined: 07 Nov 2010, 20:01
x 56
x 112

#23 Re: தமிழில் பாடக்கூடாதா?

Post by vgovindan » 22 Apr 2018, 08:48

Rajesh,
While I gather information you asked, please be ruminating with this kRti - nA jIvAdhArA - bilahari by Maharajapuram Santhanam. An outpouring in ecstasy. How I wish the kRti is started with last sangati of pallavi, first to enhance the portrayal of the mood!

https://youtu.be/8wnB--vNwOM
0 x

vgovindan
Posts: 1603
Joined: 07 Nov 2010, 20:01
x 56
x 112

#24 Re: தமிழில் பாடக்கூடாதா?

Post by vgovindan » 22 Apr 2018, 09:17

Leaving aside comparisons with tyAgarAja kRtis, one of the reasons - probably most important reason IMHO - why CM musicians ignored GKB, could be that GKB created a fictional character Nandanar portraying a brahmin as the land-lord who prevented Nandanar from going to Temple. The following quote by me in this forum in 2007 on a thread about GKB may throw light -

"Nandanar

Puranas, likewise, have undergone changes. Take the history of the sixty-three saints in Peria Puranam by Sekkizhar, the prose version of the songs created by Nambiandar Nambi and rendered by Saint Sundaramurthy. There are several divergences between what Sekkizhar wrote as Thirunalaippovar and Gopalakrishna Bharati’s musical discourse called Nandanar. For popular appeal, Gopalakrishna Bharati added a few incidents to the original narrative. As a result, some truths about the history of Thirunalaippovar in Peria Puranam have disappeared. In the Peria Puranam there is no character called Vedhiar. Nor did Sekkizhar suggest that anyone had ever humiliated Nandanar by calling him pariah or puliah. Nandanar has indeed been portrayed with great respect as Thirunalaippovar. Because of Gopalakrishna Bharati’s fictional creation, however, questions about social inequality have arisen. 

Thirunalaippovar, who was attracted by the Saiva tradition of non-killing, mourned that he had been born into a tradition of tanners and, through devotion to God, transformed his life and rose to a position higher than that of Brahmins. But that narrative has been changed by Gopalakrishna Bharati to one of a Brahmin’s ill treatment of Nandanar. There is even an anecdote that as Gopalakrishna Bharati began his work, Thiruvavaduthurai Meenakshisundaram Pillai advised him not to alter the sacred Peria Puranam. As a result of Gopalakrishna Bharati’s work, the Peria Puranam narrative about Thirunalaippovar has all but vanished and been replaced by the fictional creation Nandanar."

viewtopic.php?f=10&t=1076&start=100
0 x

sureshvv
Posts: 5089
Joined: 05 Jul 2007, 18:17
x 118
x 361

#25 Re: தமிழில் பாடக்கூடாதா?

Post by sureshvv » 22 Apr 2018, 10:35

I do not think GKB or Thyagaraja, for that matter, should be seen as historians providing an accurate account of history as it actually happened. They should be seen more as social commentators describing the situation in their times as they experienced it.

Every good story needs a good villain and GKB was just describing one. This should not seen as smearing a whole group of people. Any attempts by people doing that should be contested.
0 x

Post Reply