தமிழில் பாடக்கூடாதா?

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: தமிழில் பாடக்கூடாதா?

Post by vgovindan »

Rajesh,
I have checked again. I have, in my post, said 'bAlE bAlEndu bhUshaNE' as composition and not outpouring.

Coming to kRtis which you mentioned in your post, I will again go by the example of MD kRti 'tyAgarAjE kRtyAkRtyam arpayAmi'. The musician who sings the words 'vidEha kaivalyam yAmi', does he mean or even knows what these words mean? Similarly, simple word play like 'SaraNam SaraNam' without even understanding what that word means - leave aside actual prapatti - would only be a 'composition' - a sort of intelligent filling up blanks of rAga contour.
However, as I have said, an artist (intermediary) can enhance and enliven the meaning, and the rasika, in the right receptive mood would fill in the blanks of emotional appeal and could go satisfied.

RSR
Posts: 3427
Joined: 11 Oct 2015, 23:31

Re: தமிழில் பாடக்கூடாதா?

Post by RSR »

https://www.google.com/intl/ta/inputtools/try/
---------------------------------------------------
மிகவும் கூர்மையான அறிவுத் திறனும், செயலூக்கமும், பண்பும் நிறைந்தவர்கள். இன்று அவர்களில் மிகப் பெரும்பான்மையினர் மேலை நாடுகளிலும், நமது நாட்டிலும் , தங்களது துறையில், உயர்ந்த பொறுப்பிலும்,பொருளாதார நிலைமையிலும் சிறந்து விளங்குகின்றனர். எனினும், கர்நாடக இசையில் , சிறிதளவு கூட ஆர்வம் இல்லாதது குறித்து
யோசித்திருக்கிறேன் .
சாஸ்திரீய கர்நாடக இசை , மேட்டுக்குடி , அதிலும் குறிப்பாக பார்ப்பனர்களின் குறியீடு என்பதுதான், அன்றிலிருந்து இன்றுவரை இளம் வயதினரின் கருத்தாக இருந்து வந்திருக்கிறது. அதற்கு பல காரணங்கள் உண்டு.
சினிமாவிவைத் தவிர கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன் , இளைஞர்களுக்கு இசை பற்றி அறிய வாய்ப்பு ஏதும் இல்லை. - குறிப்பாக கிராமத்து மக்களுக்கு. நகர்ப்புற இளைஞர்களுக்கும் ரேடியோ தான் ஒரே வழி. மிகவும் படித்த இளைஞர்கள் கூட ரேடியோவில் ஒலிபரப்பான கர்நாடக இசைக் கச்சேரிகளை கேட்பதில் நாட்டமில்லாமல்தான் இருந்திருக்கின்றனர். ரேடியோ கூட வசதி மிக்க குடும்பங்களில்தான் இருந்தது.

முறையாக கர்நாடக சங்கீதம் பயில இன்று கூட அனைத்து மாணவர்களுக்கும் வசதி இல்லை. மேலும், கர்நாடக இசைப் பாடல்கள் பெரும்பாலும் தெய்வங்கள் பற்றி இருந்தன . இறை நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இது பிடிக்கவில்லை. அல்லது, கர்நாடக இசையின் சற்றே மெல்லிசைப் பாட்டுக்கள் , யாராவது ஒரு ப்ரபுவைப் புகழ்ந்து , ஒரு யுவதி பாடுவது போல் அமைந்தன. நடனமாதுக்களின் பாட்டுக்களாக இருந்தன.

இரண்டாவதாக , தெலுங்கு தான் கர்நாடக இசையின் மொழியாக நேர்ந்துவிட்டது.
நாடகமும், சினிமாவும்தான், சிறிதேனும் , கர்நாடக இசை ராகங்களை , பொது ஜனங்களுக்கு கொண்டு செல்லும் சாதனங்களாக அமைந்தன,
-
ஹிந்தி சினிமாவுக்கு 1950 முதல் 1966 வரை, இசை அமைத்தவர்களும் பெரும்பாலும் முறையாக ஹிந்துஸ்தானி சாஸ்திரிய இசையில் பயிற்சி பெற்றவர்களாக இருந்தனர். அவர்களுக்கு கிடைத்த வரமாக, மங்கேஷ்கர் என்ற இளம் குயிலும் 1948ல் வந்து சேர்ந்தார். இதனால், பல அருமையான ஹிந்துஸ்தானி ராக மெட்டுக்கள், ஹிந்தி தெரியாதவர்களும் மெய்மறந்து கேட்கக் கிடைத்தன. அவை யாவும் ரேடியோ மூலம் நாடெங்கும் பரவின. ஆனால், ஹிந்தி வெறுப்பு தமிழ்நாட்டில் பரவி வென்றதால் , இளைய சமுதாயம் ஹிந்தி பாடல்களை வெறுத்து ஒதுக்கியது.
--
போதாக்குறைக்கு, இங்குள்ள சங்கீத வித்வான்களும், தமிழில் பாடுவதை எகத்தாளம் செய்தனர்.
மேட்டிமை சிந்தனை இன்றும் மறையவில்லை.
1945 ம் ஆண்டில், தமிழிசை இயக்கம் சீரிய பணியாற்றியது. கல்கி, தி.கே. சிதம்பரநாத முதலியார், சதாசிவம், ராஜாஜி போன்றோர் வழிகாட்ட, ஸ்ரீமதி எம்.எஸ்., ஸ்ரீமதி டி.கே.பட்டம்மாள் , ஸ்ரீமதி என்.சி.வசந்தகோகிலம் , தண்டபாணி தேசிகர், மதுரை மணி அய்யர், போன்றோர் தங்களது ஒப்புயர்வற்ற இனிய குரலில், அருமையான ராகங்களில் நிறைய இசைத் தட்டுக்கள் கொடுத்து , தமிழ் இசைக்கு தங்கள் பணியை செவ்வனே செய்தனர்.
இன்றும் கூட, இந்த இசைத் தட்டுக்கள் இணையில்லாத பொக்கிஷங்களாக விளங்குகின்றன
---
அனைத்தும் அருமையான தமிழில் அமைந்துள்ளன,
இவற்றை அன்றாடம் சிறிது நேரமாவது கேட்டு மனதில் பதியவைத்தால், குறைந்தது 80 ராகங்கள் நமக்கு நினைவில் நின்றுவிடும்.
அது போதும்.

Post Reply