Kannan Kadhai Amudham (in tamil script)

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

ஏழ்சுற்று தோலுடம்பு எண்கிளை மாமரத்தில்
ஊழ்வினை தீர்க்க உயிர்பெற்று - வாழ்கின்ற
மானிடர்க் கெல்லாம் ஐந்தோடு நான்குமாய்
ஊனிடை ஓட்டை ஐயே (௪௧)

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

இருநான்கும் ஓரிரண்டும் மூச்சே இலையாய்
ஒருநாளும் ஓயாது ஓடும் - கருவுயிர்த்த
கட்டையுள் சீவான்மா பேரான்மா என்றிரண்டு
திட்டமும் நின்திட் டமே (௪௨)

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

தாங்குவது நீயே அழிவிடத்துச் சேர்வது
தூங்குவது போலுள்ள உன்னையே – தீங்கில்லா
மாதவா இவ்வெளித் தோற்றம் உறுதியோ
மாதவத்து பத்தருக் கே (௪௨)

ஞானத்தில் திளைக்கின்றாய் வாழுயிர்க்குச் செய்குவாய்
மானதிக நன்மை திருமார்பா – தீனருக்கு
நன்மை செயவருவாய் நம்பினார்க்குத் தாளிணையே
இன்பம் அளிப்பது வே (௪௩)

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

கதிரொத்தாய் பத்தர் மனத்தவா தீர்தண்
மதியொத்தாய் நற்றருவே மீளா – விதிகடக்க
ஞானியர் கண்டளித்த நல்வழியைசன்மார்க்கம்மற்றோரும்
தோணியாய்க் கொள்வரே நன்கு (௪௫)
Last edited by sankark on 06 May 2012, 09:31, edited 1 time in total.

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by arasi »

sankark,http://www.rasikas.org/forums/posting.ph ... 2&p=221111

Finally, I read your thread in one go, and am awed by your ability in poetry. Though this poetic form is not an easy one for me, in my own unlettered way, I appreciate many lines in your work of devotion. Thanks!
Last edited by arasi on 06 May 2012, 00:38, edited 2 times in total.

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

சேவடிப் பெற்றியை எண்ணிடா மூடரின்
மேவிய வந்தனை செல்லுமோ – தேவரின்
காவலா செய்தவம் குற்றமே உற்றவர்
வீழ்வரே கீழ்நிலைக் கே (௪௬)

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

உன்னெறியில் ஆழ்வார்கள் சற்றே விலகிடினும்
விண்ணவர் கோனே பொறுத்திடுவாய் – நன்னான்கு
வேதநெறி ஓங்கிடவே பன்முறைகள் நீவருவாய்
போதமருள் வேதநெறி யே (௪௭)

உணர்ந்தறிய வொண்ணாத உன்னருமை யாரோ
உணர்ந்தறிந்து இன்புறுவார் ஐயே – பிணக்கின்றி
உன்னடியில் தன்மனத்தை எந்நேரம் தானிருத்தி
உன்னடிக்கே ஏங்குப வர் (௪௮)

உன்வருகை நல்வருகை பூதலத்தில் உண்டான
இன்பமறு இன்னல்கள் போக்கொழிய – நின்னலகில்
ஆட்டங்கள் ஆடையே பற்பலவாய் வந்துலக
வாட்டங்கள் தீர்த்த வனே (௪௯)


arasiyaare,
nandri.

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sridhar_ranga »

Sankar,

What exactly is the meaning of "நின்னலகில் ஆட்டங்கள் ஆடையே" ?

Thanks!

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

With this we wrap http://vedabase.net/sb/10/2/en

எத்தனை புண்ணியம் செய்தனை தேவகிஇவ்
வித்தகன் தன்னையுன் உந்தியில் - இத்தனை
நாளுமேத் தாங்கிட மண்துயர் தீர்ந்தினி
மூளுமே நன்மையே காண் (௫௦)

sridhar_rang -

நின் - your
அலகில் (அலகு + இல்லாத) - limitless (alavu illadha, kattukkadangaadha)
ஆட்டங்கள் - play (leelaigal)
ஆடையே (ஆடு + ஐயே) -continue to play oh sire

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

Just now noticed a "thaLai thattudhal" issue.. Fixing the same. Venpaa can't have a maa mun ner. It has to be maa mun nirai or vilam mun ner.

முகில்நிறத் தானிப் புவியில் இறங்கி
அகில்குழம் பும்சந் தனமும் தான்தரித்துக்தரித்தன்று
கோதை யரும்ஞா னியரும் நெஞ்சுமனமுவக்க
போதை அளித்த தொருகதை யைத்திரு
மாலோன் யதுகுலத்தில் வந்தகா தையினை
மேலோர் பலரிருக்க யானும் சொலப்போந்தேன்
நற்ற மிழறிவு மிக்காரும் தக்காரும்
குற்றம் பொறுருத்தருள் வீர்

கருவிளம் தேமா புளிமா புளிமா
கருவிளம் தேமா புளிமா கூவிளங்காய்புளிமாங்காய்
தேமா புளிமா புளிமா கூகருவிளங்காய்
தேமா புளிமா கருவிளம் கூவிளம்
தேமா கருவிளங்காய் கூவிளம் கூவிளம்
தேமா கருவிளங்காய் தேமா புளிமாங்காய்
தேமா கருவிளம் தேமாங்காய் தேமாங்காய்
தேமா கருவிளம் நாள்

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

காண்டம் மூன்று (அறுசீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்)

நேரமும் வந்தது அண்டமே மிக்கெழில் உற்றது கேளிரே (கேளீர்)
பேரெழில் தேவகி உந்தியில் வந்ததோர் கள்வனை எண்ணியே (எண்ணி)
உள்ளமும் பெற்றது அமைதியே எல்லையில் லாக்கரும் வானிலே (வானில்)
தெள்ளெனச் சுட்டது உரோகினிக் கூட்டமே காதலன் மதியுடன் (௫௧)

கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம்
கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம்
கூவிளம் கூவிளம் கருவிளம் தேமாங்காய் கூவிளம் கூவிளம்
கூவிளம் கூவிளம் கருவிளம் கூவிளம் கூவிளம் கருவிளம் (௫௧)

ஆர்த்தன பேரிகை அதிர்ந்தன சங்கம் இருளடைந் தமனத்
தூர்த்தரோ வேர்த்தனர் வாழ்வெனா குமோவெனத் தேம்பினர் திளைத்து
ஆடினர் பாடினர் அரம்பையர் கின்னரர் சாரணர் தேவரும்
ஓடினர் தீயவர் அந்தணர் தம்மறைத் தீயெழும் நேரிலே (௫௨)

கூவிளம் கூவிளம் கருவிளம் தேமா கருவிளம் புளிமா
கூவிளம் கூவிளம் கூவிளம் கருவிளம் கூவிளம் புளிமா
கூவிளம் கூவிளம் புளிமாங்காய் கூவிளம் கூவிளம் கூவிளம்
கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம் (௫௨)

As I understand, aciriyappa permits aciriyaththalai (maa mun ner or vila mun nirai) and other thalai's as well. Seems from seer perspective, the venpa seers are applicable (ma, vilam, kai).

Update: Believe those shown in blue are better and more aesthetic.
Last edited by sankark on 13 May 2012, 20:57, edited 1 time in total.

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

two more.

விண்ணவர் புனிதரும் பொழிந்தனர் நன்னறு மலர்மழை முகில்களும்
வண்ணமாய்ப் புரிந்தன முழக்கமே கடலலை யெனப்பெருங் கருணையான்
உயிருள தனைத்திலும் உள்ளுறை திருமா லவன்யது குலமகள்
வயிறிலே தங்கினான் ஒளிவீச வேதோன்றி னான்கீழ் நிலவென (௫௩)

நாற்படை கரத்தில் பொருந்தத் தாமரை விழிகள் மலரப்
பாற்கடல் படுக்கை கொண்டான் கௌத்துபம் கழுத்தில் ஆட
மஞ்சள் பட்டாடை தோய காருரு பரந்த சடையும்
எஞ்ஞான்றும் நெஞ்சில் நிற்க ஆங்கே தோன்றினான் தோன்றினானே (௫௪)

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

அற்புத மகவைக் கண்டு ஆயிரம் பசுவும் மற்றும்
கற்பக மரமெனாகி ஈந்தனன் வசுதேவன் மனத்துள் வியப்பினால்
விழிகள் விரியக் கைகளால் கசக்கிப் பார்த்தான் உண்மை
எழிலுடன் நகைகள் பூண்டே மாலவன் பிறந்தான் மாதோ (௫௫)

நாரணன் அவனே தன்னை உய்ப்பதோர் மகவாய் வந்தான்
பூரணன் என்றுணர்ந்து அச்சம் செற்றான் கைகளைக் குவித்து
வாரணம் பொருத மார்பன் தன்னையும் வெற்றி கொண்ட
வாரணம் துதித்த ஆதிமூல னைப்போற்ற லானான் தாதை (௫௬)

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

காணுமிப் பாரும் மற்றும் நீயன்றே செய்தாய் பாம்பைப்
பூணுமோர் தாழ்சடை முடியான் பிரமன் மனுக்கள் தன்னை
தேவனே படைத்தாய் காலம் கடந்தனை அழியா ஞானத்
தீபமே குணங்கள் மூன்றும் தீண்டுமோ திருமார்பா உன்னை (௫௭)

நீர்நிலம் நெருப்பு காற்று வானமென்று ஐந்தும் ஐயா
ஓர்மையில் நன்றாய் விளங்கும் ஒன்றின் வெளிப்பாடே என்று
ஆங்கது உனக்கும் ஒக்கும் உள்வெளி கடந்து நின்றாய்
தாங்கினாள் மனையாள் உன்னை என்பதோர் மயக்கம் அன்றோ (௫௮)

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

one more

புலன்மனம் இரண்டுக் கெட்டா வாக்கினால் உரைக்க வொண்ணா
நலம்தரும் திருவே ஈண்டு காண்பது சிறுதுளி எனவே
மலந்தொடா மதுகைட பர்கூற்றே ஞானியர் அறிவர் நன்றாய்
உலகுய்ய வந்தாய் கண்டேன் அறியாரை மன்னித்து மீட்பாய் (௫௯)

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

and one more

நல்லதோர் வெளுப்பே நீயும்ப டைக்குமாசை யில்சிவந்து மாலே
அல்லிருள் வண்ணம் கொள்வாய் ஆழிக்கூற் றத்தின்கா லந்தனிலே
சொல்லொணாத் துயரம் கண்ட எம்குலம் தெரிந்தெடுத்தாய் பாரைக்
கொல்லுமவ் வியாதி மன்னர் தம்மை தீர்க்கவே கணக்கு (௬௦)

Govindaswamy
Posts: 120
Joined: 21 Feb 2010, 06:55

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by Govindaswamy »

ஐயா
பாடல் ௫௩ ல்
‘திருமா லவன்யது குலமகள்
வயிறிலே தங்கினான்’ என்று உள்ளது.

தேவகி யதுகுலத்தவளா? யசோதை தானே யதுகுலத்தவள்.
கோவிந்தஸ்வாமி

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

Govindaswamy,
By birth ofcourse not. But she married a Yadu Prince (Vasudeva), so through marriage wouldn't she be a Yadu Kulamagal?

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

உனக்கு மூத்தாரு யிர்பறித்த கஞ்சனிப் பொழுது வருமெனத்
தனக்கு வமையில் லான்தந் தையுரைக்கத் தாயவள் பயமற
உயர்வற உயர்நலம் உடையவன் அவனைப் பத்தரின் மனம்படு
துயரறு சுடரடி இறையைப் பற்பல வாய்நனித் துதித்தனளே (௬௧)

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by cmlover »

Vasudeva was the son of Surasena a Monarch and hence was a Kshatriya - not a Yadava!
திருமா லவன் முது குலமகள்
வயிறிலே தங்கினான் may solve that problem!

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

cmlover,
Per http://en.wikipedia.org/wiki/Vasudeva, Vasudeva belongs to Yadu & Vrishni dynasties. Now whether Yadu's were kshatriyas or not is besides the point as far "yadhu kulamagal" is concerned.

Interesting claim per http://www.dharmakshetra.com/articles/H ... rapuri.htm - "After the death of Surasena another King of the Yadava dynasty, Ugrasena, became the ruler of the place, Vasudeva accepting cow-rearing as his profession".

All that apart, உயர் (high) or முது (long lineage/old) could be used instead of யது.

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

ஆதவன் தனையொத்தாய் ஐம்பூதக் காரணா எவரொப்பார் நின்னை
மாதவா மறைநான்கின் உட்பொருளே தோற்றமிலாய் மாற்றமிலாய் ஊழியிலே
உன்னுள்ளே தானொடுங்கும் காணுமிப் பொருளெல்லாம் தூயவனே மாயவனே
உன்னுள்ளே தானிருந்து வந்ததுவே உன்னையு ணர்ந்தாருண் மையுணர்ந்தார் (௬௨)

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

காலம் நீயன்றே நின்தாள் என்புகலே தாய்வழிப் பிறப்பிறப்பு
காலம் செய்கோலம் நோயென்று ஈரிரண்டும் தான்விடுமோ மானிடரை
கோலமா முகில்வண்ணா உன்னருளால் உன்னடியை யாமடைந்தோம் நற்றவ
சீலத்தோர் காண்டகு உருவத்தை நீமறைப்பாய் கஞ்சனு ணராமலே (௬௩)

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

நாற்கரத்தில் சங்கும் சக்கரமும் வன்கதையும் தாமரையும் தாங்குமித்
தோற்றம் ஒவ்வாது நானிலத்தில் நாரணனே உள்ளொடுக்கு வாயென்றே
குற்றமறு பேதையாள் தானியம்ப ஓருவமை இல்லாதான் தன்மொழியால்
நற்றவரும் ஓர்ந்தறியா தாயவளின் பெற்றமிகு நற்கதையைத் தானுரைத்தான் (௬௪)

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

சுயம்புவ மனுநாளில் சுதபா என்றிருந்தாய் தந்தாய் எந்தாய்
உயர்குண பிரிட்டினி எனவாங்கே நீயிருந்தாய் பிரமன் சொல்கேட்டு
நற்றவம் புரிந்தீர் பேய்க்காற்று வெங்கதிர் குளிரனல் மழைபொறுத்துக்
குற்றமில் மனத்துடையீர் ஆனீர் மாதோ நற்குலம் ஈன்றிடவே (௬௫)

முன்னான் காயிரம் வானாண்டு நீர்புரிந்தீர் மாதவம் என்னை
நன்றாய் மனத்துள் இருத்தி யான்மகிழ்ந்தேன் வேண்டினீர் உம்மகவாய்
யான்வரவே வந்தேன் பூதலத்தே பிரிட்டினி (மக)கருவென்று பேருடைத்தேன்
யான்பின்கு வாமனனாய்த் தான்வந்தேன் கச்சபர் அதிதி என்றிருந்தீர் (௬௬)

Sutapā - சுதபா
Kaśyapa - கச்சபர்
Pṛśnigarbha - பிரிட்டினி கரு
Pṛśni - பிரிட்டினி
Last edited by sankark on 03 Jun 2012, 14:04, edited 1 time in total.

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

நீருணர இவ்வுருவில் யான்வந்தேன் மெய்ப்பொருளே வந்ததென்றுச் சொல்லித்தன்
பேருருவஞ் சுருக்கியோர் சிசுவானான் மாயவன் அவன்மாயை கோகுலத்து
நந்தன் இல்லத்தே தான்பிறந்தாள் அந்நேரம் தாழ்திறந்த காவலரும்
சிந்தை தான்மயங்கிச் சோர்ந்தார் மற்றோர் தூக்கத்திற் காட்பட்டார் (௬௭)

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

வான்திறந்து கொட்டியது தூரத்தே இடிமுழக்கம் சேயவனைச் செய்யவனைத்
தான்சுமந்து செல்கின்றான் தந்தை வசுதேவன் ஆயிரந் தலையுடையான்
நானிலத்து நாயகனுக் கோர்குடையாய்த் தான்தொடர்ந்தான் சேவை நனிசெய்து
வானிழிந்த நீர்பெருகிப் பாய்ந்தோடக் காளிந்தி மாகடல் தனையொத்தாள் (௬௮)

அன்றொருநாள் கோசலத்து கோமகற்கு வழிகொடுத்த ஆழியினைப் போல்யமுனை
குன்றெடுத்துப் பின்னாளில் கோகுலத்தைக் காத்தவனைத் தாங்கும் யாதவன்
தடையின்றிச் செல்லத்தன் வெள்ளத்தின் நடுவில் வழியொன்று ஏற்படுத்தி
குடைபிடித்த நாகத்தைப் போலிறைக்குத் தன்பங்காய் நற்சேவை செய்தனளே (௬௯)

காரிருள் கவிந்திருக்க வீட்டிலுள்ளோர் தூங்கையி லேவசுதே வனருள்
வாரிதியை ஆங்கே யசோதை யின்புறம் கிடத்தியவள் பெண்மகவைத்
தானெடுத்து வெஞ்சிறை அடைந்தாங்கே தேவகியின் புறம்வைத்து முன்போல்
தானிருந்தான் மாதவனின் மாயை கண்மறைக்க யாருமிதைத் தானுணரார் (௭௦)

With that canto 3rd is wrapped up. Be back after a little break..

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by arasi »

Look forward to more!
Have been reading a little at a time.
Take that break. We all need one, it seems ;)
We will come back with renewed energy to our writing on the forum...

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

Felt that the 70th verse didn't have a good flow, so revisited it..

கும்மிருட்டு சூழ்ந்திருந்த ஊருறங்கும் நேரமதில் தேவகியின் ஆவியினை
நம்பொருட்டு பூமியிலே வந்தவனைத் தன்னுயிரை நந்தனவன் வீட்டினிலே
தான்விடுத்து மாதவங்கள் செய்யசோதை பெண்மகவைக் வெஞ்சிறைக்கு கொண்டுவந்தான்
வான்முகிலின் வண்ணமுடை யான்மாயம் ஏனையோர் கண்மறைத்த தேயம்மா (௭௦)

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by cmlover »

Your Canto numbers follow Bhagavatha puranam or what?

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

cml, each chapter of the SB Canto 10 is a kaandam here. So we have covered 10.1, 10.2 & 10.3 so far.

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

காண்டம் ௪ (அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

கார்வண்ணன் தந்தை மீண்டும் வெஞ்சிறை புக்கவை யேமழை
நீர்பொழி மேகமும் ஓய்ந்தன மூடின ஆம்பெருங் கதவுகாவல்
வீரரும் மயக்கமற்றார்ம்போய் வீலெனக் குழவி அழும்குரல் மடுத்துத்
தீரனாம் போயவேந்தன் கஞ்சன் தனக்குச் சொன்னரேவி ரைந்துசேதி (௭௧)
Last edited by sankark on 08 Jul 2012, 21:43, edited 1 time in total.

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by arasi »

Welcome back!
Dramatic opening verse...

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

காலனவன் வந்தான் தன்னுயிரைத் தானெடுக்க என்றயர்ந்த தலைகலைந்த
கோலமதாய் மாமன்சி றைபோந்தான் முக்குணமும் மூவிடமும் முக்கூறு
காலமதும் தான்கடந்த மாயவனைத் தான்பயந்த மாதவளோ கண்கலங்கி
ஞாலமதில் வேறெதுவும் வேண்டாது பெண்சிசுவின் வாழ்வதையே யாசித்தாள் (௭௨)

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

One more

என்முன்னே தான்பிறந்த தீரநின் பெற்றி இவளழிய ஓங்கிடுமோ
நன்மகவைப் பற்றியென தாயுளெல்லாம் இன்பமுற விட்டிடுவாய் பின்னொருநாள்
கண்மணியாய்த் தான்வருவாள் உன்னில்லம் ஈரிரண்டும்மூவிரண்டும் இன்னொன்றும் தானிழந்த
பெண்ணெனக்கு இப்பரிசை நீதருவாய் என்றழுது வேண்டினளே நெஞ்சுருக (௭௩)
Last edited by sankark on 11 Jul 2012, 14:09, edited 1 time in total.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by cmlover »

இன்பமுற விட்டிடுவாய் பின்னொருநாள்
கண்மணியாய்த் தான்வருவாள் உன்னில்லம்
Beautiful imagination of the cultural practice...

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

விழிநீர் பொங்கநின்ற தங்கைதன் கையணைந்த பெண்சிசுவைக் கஞ்சன்தீ
விழியால் சுட்டெரித்துத் தன்னாவி போக்கவந்த தென்புலத்து தெய்வமிதைப்
பழிதீர் நாளிந்த நாளென்று தானுவந்து தேவகியைத் கொடுஞ்சொல்லால்
இழித்தான் பறித்தானே கையிருந்து தாய்கலங்கக் கல்மனத்துப் பாவியையோ (௭௪)

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by arasi »

Lovely...

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

மாயவனின் மாயமொரு பெண்மகவாய் வந்ததென்று தானுணரா மூர்க்கனவன்
தாயவளின் தாளவொன்னாண்ணா ஆந்துயரம் ஓர்நிமிடம் சிந்தியாத தூர்த்தனவன்
நேயமிலா மாமனவன் தேவகியின் கண்மணியைக் கால்பிடித்து கற்சுவரில்
தேயவைத்து கூற்றுவன்பால் சேர்க்கவெண்ண காணவருங் காட்சியினைத் தான்கண்டான் (௭௫)
Last edited by sankark on 16 Jul 2012, 22:35, edited 1 time in total.

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by arasi »

The lines just flow...

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by cmlover »

It must be
"தாளவொண்ணா"
"சேர்க்கவென்ன"
ணகர னகரங்கள் தமிழின் சிறப்பெழுத்துக்கள்...

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

தாளவொண்ணா - will check

சேர்க்கவெண்ண - this is correct; it is சேர்க்க + எண்ண (thought) not சேர்க்க + என்ன (what).

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by arasi »

I noticed the thALavoNNA (as thALavonnA) and wondered if it was a transliteration error.

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

Been totally occupied with work and other stuff to do. So, it will be a week or so before I come back with more.

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

சந்தனம் குழைத்த கொங்கை மீதில் நன்மலர்மா லையாடப்
புந்தியில் கடையன் முன்னே அணிமணி பலவும் சூடி
வந்தனை புரியும் சித்தர் சாரணர் உரகர்சூ ழத்துர்க்கை
சிந்தனைக் மயங்கத் தானே பல்லாயு தம்தாங்கி நின்றாள் (௭௬)

மூடனே கொடியாய் என்னைக் கொல்லவும் ஆமோ உன்னால்
வாடின பயிருக் கெல்லாம் நீரினை ஒத்தான் இன்று
தேடினால் கிடைக்கா வண்ணம் மாயமே செய்து வேறோர்
பீடுடை குடிலில் தன்னை ஒளித்தனன் கேளாய் என்றாள் (௭௭)

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by cmlover »

புந்தியில் கடையன் ..
nice concept कम्sen(se) ...

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

மறைபொருள் அவனைக் கொல்ல நீநினைப் பதுநடக் குமோடா
குறையிலா உடன்பிறந் தவளை வாட்டினாய் பெருமை உண்டோ
இறையவன் மறைத்தான் தன்னை காலத்தில் வீழ்வாய் நீயும்
பறைகிறேன் உனக்கு நானும் மேலும் கொடுமைகள் செய்திடாதே (௭௮)

அங்ஙனம் உரைத்த துர்க்கை பாரினில் பலவி டத்தில்
தங்கினாள் மனிதர் எல்லாம் பூசனை புரிந்தார் நித்தம்
காசியில் அவள்பேர் அன்ன பூரணி என்றே ஆகும்
காசிலா அவளை மக்கள் காளிஇ எனவும் சொன்னார் (௭௯)

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

தாதுறு மலர்கள் சூடிக் கேள்வனின் மடியில் இன்பம்
தீதிலா வகையில் துய்த்துக் கோடிநாள் மகிழ வந்த
கோதிலா வசுதே வன்ம னையாள் அண்ணன் கேட்டப்
போதிலே தளைகள் நீக்கிப் பின்வரும் மொழிகள் சொன்னான் (௮௦)

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

நாயினும் கடையேன் யானே ஓர்நலம் புரியா நின்றேன்
மாயினும் விலகா தன்றோ பேரிழிச் செயலின் தாக்கம்
தீயினும் கொடியன் என்னை அண்ணனாய் அடைந்த பெண்ணே
தாயினும் மிகுந்து பரிவாய்க் கோபமே விடுதி என்றான் (௮௧)

sankark
Posts: 2321
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

தயவிலாக் குரூரன் யானுன் னையுமு றவைநட் பையென்
நயமிலா செயல்கள் மூலம் தள்ளினேன் புறத்தே இன்று
அந்தணன் ஒருவன் தன்னைக் கொன்றவன் நிலையில் வாழ்வில்
அந்தகன் பிடியில் எங்கே செல்வனோ அறியா நின்றேன் (௮௨)

Post Reply