Kanchi Maha Periyava

Post Reply
venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

மஹா பெரியவா பக்தர்களுக்கு ஆசியளிக்கும் போது, நகைச்சுவையாக பேசுவதும் உண்டு.

ஒரு சமயம், காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் நவராத்திரி விழா நடந்து கொண்டிருந்தது. அதில் தினமும் வித்வான்கள் பாடுவர். விழாவின் ஒருநாள் மாலையில், பெரியவரை தரிசிக்க பக்தர் ஒருவர் வந்தார். எழுத்தாளரான அவர், தன் புத்தகங்களை பெரியவரிடம் காட்டி விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார். பக்தர்கள் பலர் தரிசனத்திற்காக காத்திருந்தனர். அவர்களைக் கண்டதும் பெரியவர் எழுத்தாளரிடம், "இப்போது நீ காமாட்சியம்மனைத் தரிசித்து விட்டு வா. அங்கு தர்பார் நடக்கிறது. சீக்கிரம் முடிந்து விடும், வேகமாகச் செல்,'' என்றார்.

எழுத்தாளர் சென்றபோது, அம்மன் தர்பார் அலங்காரத்தில் இல்லாமல் வேறு அலங்காரத்தில் காட்சியளித்தாள்.

""பெரியவர் "தர்பார் அலங்காரம்' என்று சொன்னாரே!. இங்கு வேறு அலங்காரத்தில் அம்பாள் இருக்கிறாளே!'' என்று குழப்பமடைந்தார்.

அப்போது, இனிய கானம் காற்றில் மிதந்து வந்தது. தர்பார் ராகத்தில், ""லோசனா.. கமல லோசனா'' என்று பிரபல பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி பாடிக்கொண்டிருந்தார்.

""அடடா..நாமோ தர்பார் அலங்காரம் என்று நினைத்து வந்தோம். இங்கே தர்பார் ராக பாடல் அல்லவா பாடப்படுகிறது! பெரியவர் சொன்னதை இப்படி புரிந்து கொண்டோமே! அவருடைய நகைச்சுவை உணர்வு தான் என்னே!'' என்று சிரித்தபடியே, மற்றவர்களிடமும் இந்த நிகழ்வைப் பகிர்ந்து கொண்டார்.

மற்றவர்களும் இதுகேட்டு சிரிக்க, ""அது சரி...தர்பார் ராகத்தில் எம்.எஸ்., பாடுவார் என்பது முன்கூட்டியே எப்படி பெரியவருக்குத் தெரிந்தது! முக்காலமும் உணர்ந்த ஞானி என்று சொல்வது இதனால் தானோ என்று பரவசமும் அடைந்தனர்

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

கவிராயரின் ஸ்ரீரங்கநாதப் பாடல்..( From Ra Ganpathi.A Share from FB group Carnatic & Bajans )

அதுதான் நான் சொன்ன நிந்தா ஸ்துதிப் பாட்டு. என் நினைவிலே இப்ப கொஞ்ச நாளாகச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கும் பாட்டு. உங்களுக்கும் தெரிவிக்க ஆசைப்படும் பாட்டு.

முன்னெல்லாம் இங்கே வருகிற ரொம்பப் பேர் பாடிக் காட்டின பாட்டுதான் அது. ஆனால் அப்படி ‘ஃபேமஸா’க இருந்தது கொஞ்ச வருஷமாகக் காதில் படவேயில்லை.

எனக்குப் பாட வராது. இருந்த தொண்டையும் போய்விட்டது. பரவாயில்லை. இப்போது ஸாஹித்யந்தான் முக்யம்; ஸங்கீதம் இல்லை. அதனால் ‘டெக்ஸ்’டை மட்டும் சொல்கிறேன்.

(இப்படிச் சொன்னாலும் நல்ல இசைப் புலமையும் குரலும் கொண்ட ஸ்ரீசரணர் இப்பாடலையும் பின்னர் வர இருக்கும் இன்னொரு பாடலையும் வசனமாகச் சொல்லிப் போகும்போது ஆங்காங்கே மனத்துக்குள்ளேயோ, மெல்லிசாக வாய்விட்டுமே கூடவோ அழகாகப் பாடவுந்தான் செய்தார்.)

அரங்கம் என்று ஸபை கூட்டிவிட்டு அங்கே ஸ்வாமி படுத்துக் கொண்டிருப்பது விசித்ரமாயிருக்கிறது என்று முன்னே பார்த்தோமில்லியா? அதையேதான் கவிராயர் ‘டாபிக்’காக எடுத்துக் கொண்டு, ‘படுத்துக் கொண்டதற்குக் காரணம் இதுவா, இல்லாவிட்டால் இதுவா?’ என்று நிறையக் கேள்வி அடுக்கிக்கொண்டே போகிறார். அதிலே ஹாஸ்யம், பரிஹாஸம் எல்லாம் இருக்கும். ஆனாலும் வெடித்துக் கொண்டு வராமல், ‘ஹாஸ்ய வெடி’ என்கிற மாதிரி இல்லாமல், கொஞ்சம் ஸுக்ஷ்ம நயத்தோடே மறைமுகமாகவே இருக்கும்.

‘ஏன் பள்ளிகொண்டீர் ஐயா?’

என்று முதல் கேள்வி.

‘ஏன் பள்ளி கொண்டீர் ஐயா? ஸ்ரீரங்கநாதரே! நீர் –

ஏன் பள்ளி கொண்டீர் ஐயா?’

அதுதான் பல்லவி.

அப்புறம் அநுபல்லவி. அதிலே நிந்தா ஸ்துதி எதுவுமில்லாமல் ஸ்ரீரங்கத்தைப் பற்றி பேர் சொல்லாமல் அழகான கவிதை பாஷையில் காவேரி வர்ணனையுடன், காவேரியின் பெயரையும் சொல்லாமல், பாடியிருக்கிறார். காவேரி இரண்டாகப் பிரிந்து ஓடுகிற இடமாகத்தானே ஸ்ரீரங்கம் இருக்கிறது? அதைச் சொல்கிறார்:

ஆம்பல் பூத்தசைய பருவத மடுவிலே – அவதரித்த

இரண்(டு) ஆற்றுநடுவிலே (ஏன் பள்ளி கொண்டீரையா ?)

‘ஆம்பல் பூத்தசைய பருவத மடுவிலே’ என்றால், ‘ஆம்பல் என்கிற அல்லி ஜாதிப் புஷ்பம் பூத்து அசைந்து ஆடுகிற மலைச் சுனையில்’ என்று அர்த்தமில்லை. ‘பூத்தசைய’ என்பது ‘பூத்து அசைய’ என்று இரண்டு வார்த்தையாகப் பிரியாது. ‘பூத்த’ ஒரு வார்த்தை; ‘சைய’ ஒரு வார்த்தை என்றே பிரியும். ‘சையம்’ என்பது ‘ஸஹ்யம்’ என்ற ஸம்ஸ்க்ருத வார்த்தையின் திரிபு – ‘மத்யம்’ என்பது ‘மையம்’ என்று தமிழில் ஆனமாதிரி ‘ஸஹ்யம்’ என்பது ‘சைய’மாயிருக்கிறது. ஸஹ்ய பர்வதம், ஸஹ்யாத்ரி என்று மேற்குத் தொடர்ச்சி மலையில் இருக்கிறது. அதிலுள்ள ஒரு சுனைதான் தலைக்காவேரி என்று காவேரியின் உற்பத்தி ஸ்தானமாக இருப்பது. கொடகுதேசத்திலுள்ள அங்கே பிறந்து முன்னே மைஸுர் ராஜ்யமாயிருந்த கன்னட தேசம் வழியாகப் பாய்ந்து, சேலம் ஜில்லாவிலே தமிழ் தேசத்துக்குள் ப்ரவேசித்து, அப்புறம் திருச்சிராப்பள்ளிக்கு வருகிற காவேரி, அங்கே காவேரி என்றும் கொள்ளிடம் என்றும் இரண்டாகப் பிரிகிற இடத்திலேயே ஸ்ரீரங்கம் இருக்கிறது. அதை இரண்டு பக்கமும் அணைத்துக் கொண்டு காவேரி பாய்கிறாள்.

கல்யாணப் பெண் வரனுக்கு மாலை போடுகிறது வழக்கமென்றால் இங்கேயோ அப்படிக் காவேரி கல்யாணப் பெண்ணானபோது தானே மாலையாகி திருமாலை இரண்டு பக்கமுமாக அணைத்துக் கொண்டிருக்கிறாள்! அதனால் அந்த ஸ்ரீரங்கநாதனை லக்ஷ்மீநாராயணன், ஸீதாராமன் என்கிற மாதிரி அவள் பேர் சேர்த்து – அதுவும் முன்னாடியே சேர்த்து: ‘மிஸ்ஸிஸ்’ஸில் பத்னி பேருக்குப் பின்னாடி புருஷன் பேர் சேர்க்கிற மாதிரியில்லாமல் இங்கே மிஸ்டர் பேருக்கு முந்தி மிஸ்ஸிஸ் பேர் சேர்த்து – காவேரி ரங்கன் என்று சொல்வதாயிருக்கிறது.

உபய காவேரி என்று இரண்டாகப் பிரிந்து ஏற்பட்ட இட மத்தியிலே ஸ்வாமி பள்ளி கொண்டிருப்பதைத்தான் ‘இரண்டாற்றின் நடுவிலே’ என்று பாடியிருக்கிறார்.

காவேரி ஸஹ்யாத்ரியில் உற்பத்தியாவதை, அவள் புனிதமான திவ்ய தீர்த்தமானதால் உற்பத்தி என்று சொன்னால் போதாது என்று, அவதாரம் பண்ணினதாகவே ‘அவதரித்து’ என்று உசத்திச் சொல்லியிருக்கிறார்.

அவதாரம் என்ற வார்த்தையைப் போட்டாரோ இல்லையோ, அவருக்கு ரங்கநாதனின் அவதாரமான ராமசந்த்ரமூர்த்தியிடமே மனஸ் போய்விட்டது! ஸந்தர்பவசாத் அவர் ரங்கநாதனைப் பாடும்படி ஏற்பட்டாலும் அவருக்குப் பிடிமானம் என்னவோ ராமனிடம், ராம கதையிடம்தான்! அதனால், ‘பல்லவி – அநுபல்லவிகளில் க்ஷேத்ர மூர்த்தியைப் பிரஸ்தாவித்தாயிற்று; அது போதும்’ என்று சரணத்தில் இஷ்ட மூர்த்தியான ராமனுக்கே, பாலகாண்டம் தொடங்கி அவன் கதைக்கே, போய்ப் பாட ஆரம்பித்து விட்டார்!

வியங்கியமான (மறைமுகமான) நிந்தா ஸ்துதியும் இங்கேயிருந்துதான் ஆரம்பம். இஷ்டமானவர்களிடந்தானே ஸ்வாதீனம்?

கோசிகன் சொல் குறித்ததற்கோ?

கோசிகன் என்பது குசிக வம்சத்தில் பிறந்ததால் விச்வாமித்ரருக்கு ஏற்பட்ட பெயர். ராமர் அவதார காரியமாக முதல் முதலில் பண்ணினது விச்வாமித்ரர் சொல்படி தாடகை மேலே பாணம் போட்டதுதான். ‘அப்படிப் பண்ணும்படி பெரிய மஹர்ஷி சொல்லி விட்டார். ஆனாலும் ஸ்த்ரீ ஹத்தி கூடவே கூடாது என்று சாஸ்த்ரமாச்சே!’ என்று ராமர் தயங்கத்தான் தயங்கினார். தர்ம விக்ரஹம் என்றே பெயர் வாங்கப் போகிறவரில்லையா, அதனால்! அந்தக் கோசிகரோ, “லோகத்துக்குப் பெரிய உத்பாதத்தை உண்டாக்குபவர் விஷயத்தில் ஸ்த்ரீ-புருஷ பேதமெல்லாம் பார்க்க வேண்டியதில்லை. போடு இவள் மேல் பாணம்!” என்றார். விநய விக்ரஹமுமான ஸ்வாமி மறுக்க முடியாமல் அப்படிப் பண்ணி விட்டார்.

அப்போது பண்ணினாரே தவிர அப்புறம் மனசு ஸமாதானமாகவில்லை. ‘தர்மத்தில் ‘இப்படியா, அப்படியா?’ – சொல்லமுடியாத ஒரு இரண்டும் கெட்டான் விஷயத்தில், தர்மஸங்கடம் என்பதில், எதுவோ ஒன்றைப் பண்ணிவிட்டோம். அதுதான் ஸரி என்று அடித்துச் சொல்ல முடியாது போலிருக்கே!’ என்று ரொம்பவும் வியாகுலப்பட்டார்.

தீராத வியாகுலம் என்றால் அதைத் தீர்க்கமுடியாவிட்டாலும் ஏதாவது தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தூங்கிப் போய் மறக்கவாவது செய்வோம் என்று தோன்றும் – இல்லியா?

“அப்படி ஏதோ சாப்பிட்டுவிட்டுத்தான் பள்ளி கொண்டு விட்டாயோ?” என்று கேட்கிறார். அதுதான் ‘கோசிகன் சொல் குறித்ததற்கோ?’

அந்தச் சொல்லை இவர் ‘குறித்தது’, அதாவது consider பண்ணியது, பண்ணி வியாகுலப்பட்டது பின்னாடி. அப்போது உடனே பாணம்தான் போட்டார். அது குறி தப்பாமல் ராக்ஷஸியின் குலையிலே தைத்து அவள் ப்ராணனை விட்டு விழுந்தாள். “அந்த மாதிரி வேகமாக பாண ப்ரயோகம் பண்ணின ஆயாஸத்தில் அசந்து (அயர்ந்து) போய்த்தான் படுத்துக் கொண்டாயோ?” என்று அடுத்த கேள்வி:

அரக்கி குலையில் அம்பு தெறித்தற்கோ?

வில் நாணைத் தட்டிப் பார்த்து அதன் பிகு தெரிந்து கொண்டு பாணம் போடுவதுதான் ‘தெறிப்பது’.

ராமர் அநாயஸமாக, மலர்ந்த புஷ்பமாக இருந்து கொண்டேதான் மஹாஸ்திரங்களையும் போட்டது. பக்தியின் ஸ்வதந்திரத்திலும், கவிக்கு உள்ள ஸ்வதந்திரத்திலும் அவரை வேறே மாதிரியாகச் சொல்லிக் கவிராயர் சீண்டுகிறார்! அதையும் அவர் ரஸிக்கத்தான் ரஸிப்பார் என்று தெரிந்தவராகையால்!

பள்ளி கொண்டதற்கு இது காரணமில்லையென்றால்,

ஈசன் வில்லை முறித்ததற்கோ?

என்று இன்னொரு ‘பாஸிபிள்’ காரணத்தை அடுத்த கேள்வியாகக் கேட்கிறார். ஸீதையை விவாஹம் செய்து கொள்ளப் பிரியப்படுபவன் தம்மிடமிருந்த ருத்ர தநுஸை நாண் பூட்டிக் காட்ட வேண்டும் என்று ஜனகர் நிபந்தனை போட்டிருந்தார். ராமருக்கு ஒன்றும் கல்யாண ஆசையில்லை; என்றாலும் விச்வாமித்ரர் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அந்தப் பந்தயத்திற்குப் போனார். போனவர் ஒரு வேகம் பிறந்து, வெறுமனே நாண் பூட்டிக் காட்டாமல் அந்த தநுஸையே உடைத்து விட்டார்! ‘அத்தனை வேகம் காட்டினது தான் பிற்பாடு உன்னை tired ஆக்கித் தூக்கம் போட வைத்து விட்டதா?’ என்று கேட்கிறார்.

அதுவும் இல்லையென்றால்,

பரசுராமன் உரம் பறித்ததற்கோ?

அப்புறம் பரசுராமர் – க்ஷத்ரிய வம்சத்தைப் பூண்டோடு அறுப்பதற்குக் கங்கணம் கட்டிக் கொண்டவர் – வந்தார். ராமரிடம், “நீ உடைத்த ருத்ர தநுஸ் ஏற்கெனவே மூளியானதுதான். அந்த ஓட்டை வில்லை முறித்தது ஒன்றும் பெரிசில்லை. இதோ என்னிடம் மூளி, கீளி ஆகாத விஷ்ணு தநுஸ் இருக்கிறது. இதை நாண் பூட்ட முடியுமா, பார்! பூட்டாவிட்டால் உன்னை விடமாட்டேன்!” என்று ‘சாலஞ்ஜ்’ பண்ணினார். ராமருக்கு அதுவும் ஒரு பெரிய கார்யமாக இல்லை. பரசுராமர் கொடுத்த விஷ்ணு தநுஸையும் சிரமப்படாமலே நாண் பூட்டினார். அதோடு, பரசுராமரால் நடக்கிற க்ஷத்ரிய வம்ச நாசத்துக்கு முடிவு கட்ட வேண்டுமென்று நினைத்து அவருடைய சக்தி முழுதையும் கவர்வதையே குறியாகக் கொண்டு பாணப் பிரயோகமும் பண்ணி விட்டார்! அந்த முன்னவதாரக்காரர் தம்முடைய பின்னவதாரக்காரரிடம் தம்முடைய சக்தி முழுதையும் இழந்துவிட்டுத் தம்முடைய ஸம்ஹார கார்யத்தை ஸமாப்தி பண்ணினார்.

அவருடைய சக்தியை ராமர் கவர்ந்ததுதான் ‘பரசுராமர் உரம் பறித்தது’ என்று பாட்டில் வருவது.

‘சக்தி போனால் ஓய்ந்து போய்ப் படுக்கலாம். ராமருக்கோ சக்தி கூடியல்லவா இருக்கிறது? பின்னே ஏன் படுத்துக்கணும்?’ என்றால்:

அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டு விட்டால் அதை ஜீர்ணிப்பதிலேயே சோர்வு ஏற்பட்டுத் தூக்கம் தூக்கமாகத் தானே வருகிறது? ராமருக்கு ஏற்கனவே மஹாசக்தி. இப்போது இன்னொரு அவதாரத்தின் பெரிய சக்தியையும் சாப்பிட்டிருக்கிறார். ‘இப்படிச் சக்திச் சாப்பாட்டில் அமிதமாகப் போனதில்தான், சோர்வு உண்டாகித் தூங்கிவிடலாம் என்று பள்ளி கொண்டீரா?’ என்றே கவிராயர் கேட்கிறார்.

இன்னும் ஒரு காரணம் – கேள்வி:

மாசிலாத மிதிலேசன் பெண்ணுடன்

வழிநடந்த இளைப்போ?

’குற்றம் குறையே இல்லாத சுத்தையான ஸீதையுடன் காட்டுக்கு நடந்து போனாயே! அதிலே ஏற்பட்ட களைப்பினால் இளைப்பாறுவதற்கே பள்ளிகொண்டாயா?’

‘இளைப்பு’ என்றால் ஒல்லியாய்ப் போவது மட்டுமில்லை. சோர்ந்து, ஓய்ந்து போவதும் இளைப்புத் தான். அதைப் போக்கிக் கொள்வதையே ‘இளைப்பாறுவது’ என்கிறோம்.

இதற்கு மேலே, வனவாஸ காலத்திலே நடந்தவை ஸம்பந்தமாகக் கேட்கிறார்.

தூசிலாத குஹன் ஓடத்திலே கங்கைத்

துறை கடந்த இளைப்போ?

‘வேடனாயிருந்தாலும் உடம்பிலேதான் தூசி, மனஸு தூசி படாத பரம நிர்மலம் என்று இருந்த குஹனின் ஓடத்தில் கங்கையைத் தாண்டிப் போனாயே! அப்போது ஜிலுஜிலு என்றுதான் இருந்ததென்றாலும் ரொம்ப நாழிப் பிரயாணம், ஒரே மாதிரியான துடுப்போசையை மட்டும் கேட்பது ஆகியவற்றில் ஏற்பட்ட ’bore’-ல்தான், monotony-ல்தான் தூங்கினாயா?

மீசரம் ஆம் சித்ரகூட சிகரத்தின்

மிசை கிடந்த இளைப்போ?

’மீசரம்’ என்றால் உயர்ந்தது. ‘ரொம்ப உயரமான சித்ரகூட சிகரத்துக்கு ஏறிப் போய், அந்த சிரமத்தில் அங்கே அப்படியே கிடந்தாயே, அப்போது பிடித்த தூக்கம்தான் இன்னும் விடவில்லையா?’

காசினி மேல் மாரீசன் ஓடிய

கதி தொடர்ந்த இளைப்போ?

’காசினி’ என்றால் பூமிதான். இங்கே கரடும் முரடுமான காட்டு நிலம் என்று அர்த்தம் பண்ணிக்கணும். அப்படிப்பட்ட ‘காட்டு வழியிலே மாரீச மான், மானுக்கே உரிய வேகத்தோடு ஓடினபோது அதற்கு ஈடுகொடுத்துத் தொடர்ந்து போனாயே! அந்தச் சோர்வுதான் படுக்கையில் தள்ளிற்றா?’

அதற்கப்புறம் சின்னச் சின்னதாகக் கேள்விகளை அடுக்கிக் கொண்டு போகிறார்! பாட்டு வேக வேகமாக ஓடுகிறது!

‘மாரீச மானைத் தொடர்ந்து போனது, முதலில் ஓட்டமும் நடையுமாக, அப்புறம் அந்த ‘நடை’ கூடக் கூடாதென்று ஒரே ஓட்டமாக ஓடினாய்! அதிலே ஏற்பட்ட களைப்பில்தான் தூக்கமா?’ என்று இத்தனை ஸமாசாரத்தை,

ஓடிக் களைத்தோ?

என்று சின்ன வாசகமாக்கிக் கேட்கிறார்.

தேவியைத் தேடி இளைத்தோ?

’அப்படி இங்கே நீ மாரீசன் பின்னே ஓட, அங்கே உன் பர்ணசாலைக்கு ராவணன் வந்து ஸீதா தேவியைத் தூக்கிக் கொண்டு போய் விட்டானே! நீ அவளைத் தேடு தேடு என்று தேடி அலைந்தாயே! அந்த அசர்வா (அயர்வா)?’

மரங்கள் ஏழும் தொளைத்தோ?

’அதற்கப்புறம் ஸுக்ரீவனுடன் ஸக்யம் பண்ணிக் கொண்டு (நட்புப் பூண்டு) அவனுக்கு சத்ருவான அண்ணன் வாலியை வதம் செய்வதாக வாக்குக் கொடுத்தாய். அந்த மஹா பலிஷ்டனை ஜயிப்பதற்கான பலம் உனக்கு இருக்குமா என்று ஸுக்ரீவன் ஸந்தேஹப் பட்ட போது அதை (நி)ரூபித்துக் காட்டுவதற்காக, பர்மா teak (தேக்குமரம்) மாதிரி பெரிய சுற்றளவுடன் வரிசையாக நின்ற ஏழு மராமரங்களையும் துளைத்துக் கொண்டு போகும்படி பாணத்தைப் போட்டுக் காட்டினாய்! அத்தனை விசையோடு நாணை வலித்தது, உனக்கே ரொம்பவும் வலித்துத்தான் படுக்கை போட்டு விட்டாயா?’

கடலைக் கட்டி வளைத்தோ?

”லங்கைக்குப் போவதற்காக ஸமுத்ரத்துக்கே அணை கட்டுகிற பெரிய கார்யம் பண்ணினாயே! யஜமானனாக உட்கார்ந்து கொண்டு உத்தரவு போடாமல் உன்னுடைய உத்தம் குணத்தினால் நீயும் வானரப் படையோடு சேர்ந்து கல்லு, மண்ணு தூக்கி அந்தக் கார்யத்தில் ஈடுபட்டாயே! அதில் ஏற்பட்ட சோர்வுதான் காரணமா?”

அப்புறம் பெரிய வாசகமாகவே இரண்டு கேள்வி கேட்டு – ஏகப்பட்ட கேள்விதான் கேட்டாச்சே! – அதோடு முடித்து விடுகிறார்.

இலங்கை எனும் காவல் மாநகரை இடித்த வருத்தமோ?

ராவணாதியரைத் தொலைத்த வருத்தமோ?

லங்கைக்குப் போனபின் ஊருக்கு வெளியிலே வானர ஸேனை ராக்ஷஸ ஸேனையோடு போர்க்களத்தில் யுத்தம் செய்ததோடு நிற்காமல், ஊரெல்லைக்குள்ளே போய் அதன் கோட்டை கொத்தளம் முதலானவற்றை இடித்துத் தூள் பண்ணின. அப்போது பதிநாலு வருஷ வனவாஸத்திற்கு ஒப்பி வாக்குக் கொடுத்திருந்த ஸ்வாமி தர்ம விக்ரஹமானபடியால் தாம் நகரப் பிரவேசம் பண்ணப்படாது என்று ரணகளத்தில் பாசறையிலேயே இருந்தார். அப்போது மட்டுமில்லை. இதற்கு முந்தி அவரே வாலிவதம் பண்ணி, ஸுக்ரீவன் கிஷ்கிந்தா ராஜ்யத்திற்கு ராஜாவாகும்படிப் பண்ணியிருந்த போதிலும், தாம் அந்த ஊருக்குள் போய் அவனுக்குப் பட்டாபிஷேகம் பண்ணி வைக்காமல் காட்டிலேயே தான் இருந்தார்; லக்ஷ்மணரைத்தான் பட்டாபிஷேகம் பண்ண அனுப்பி வைத்தார். பிற்பாடு அவர் ராவண ஸம்ஹாரம் பண்ணியதாலேயே விபீஷணன் லங்கா ஸாம்ராஜ்யாதிபதியாகப் பட்டாபிஷேகம் பெற்றுக் கொண்ட போதும் அதையேதான் செய்தார். அப்படித் தம்மைத் தாமே, தர்மத்தை அலசிப் பார்த்து அவர் கட்டுப் படுத்திக் கொண்ட உசத்தியால்தான் இன்றைக்கும் அவரை லோகம் தர்மமூர்த்தி என்று கொண்டாடுகிறது….

லங்கையை வானரங்கள் இடித்தபோது அவருக்கு இரண்டு தினுஸில் வருத்தம். தாமும் அவர்களோடு உடலை வருத்தி ஸஹாயம் பண்ண முடியாமல் தர்மம் கட்டுப் படுத்துகிறதே என்பதில் அவருடைய மனசு வருத்தப் பட்டது ஒன்று. ரொம்ப அழகாகவும், பெரிசாகவும் மயன் நிர்மாணம் பண்ணிக் கொடுத்திருந்த லங்காநகரத்தையும், அந்த நகரவாஸிகள் பண்ணின தப்புக்களுக்காக யுத்தத்தின் அவசியத் தேவையை முன்னிட்டு, இடிக்கும்படி இருக்கிறதே என்ற வருத்தம் இன்னொன்று. “அதை மறக்க ‘ஸ்லீப்பிங் டோஸ்’ போட்டுக் கொண்டாயா?” என்று பழைய கேள்வியை மறுபடியும் அதே மாதிரி மறைமுகமாகப் போடுகிறார்.

அதோடு, ராமர் சரமாரியாக பாணம் போட்ட மாதிரியே தாமும் அவர் மேல் கேள்விக் கணை மாரி போட்டாயிற்று என்று கவிராயர் ‘ஃபீல்’ பண்ணினார். கடைசியாக ஒரே ஒரு கேள்வி ராம குண மேன்மையைத் தெரிவிப்பதாகக் கேட்டு முடித்து விட்டார்:

ராவணாதியரைத் தொலைத்த வருத்தமோ?

முதலில் ராவணாதிகள் பண்ணின அக்ரமத்திற்காக அழகான லங்கா பட்டணத்தை த்வம்ஸம் செய்வானேன் என்று ராமர் வருத்தப்பட்டார். அப்புறம் அவர்களையெல்லாம் ஹதாஹதம் செய்து, வீரராகவன் என்றே எல்லாரும் புகழும்படி நின்றபோதோ அவருக்கு உள்ளூர, “இந்த அக்ரமக்காரர்களைக் கூட ஏன் வதம் பண்ணியிருக்க வேண்டும்? அவர்களிலும், ராவணன் உள்பட, மஹா பலம், வீரம், யுத்த சதுரம், அஞ்சா நெஞ்சம், விட்டே கொடுக்காத உறுதி, நல்ல வேத பாண்டித்யம், ஸங்கீதத்திலே அபாரத் தேர்ச்சி – என்றிப்படி சிறப்புக்களைப் பெற்றிருந்தவர்கள் இருந்தார்களே! அவர்களுடைய மனசு திருந்தும்படிச் செய்ய முடியாமல் வதம் அல்லவா பண்ணும்படியாயிற்று?” என்று வருத்தம் ஏற்பட்டது.

பரம சத்ருவிடம் இப்படிப்பட்ட கருணையுள்ளம் படைத்த உச்சாணியில் ராமரைக் காட்டியதே அவருடைய பட்டாபிஷேகத்தைப் பாடின மாதிரி என்று அதோடு கவிராயர் முடித்து விட்டார்.


Listen now...

Kavi 041-En_palli_kondir-Mohanam_Adi_MLV-ArunachalaKavi A Kavi 041-En_palli_kondir-Mohanam_Adi_MLV-ArunachalaKavi.mp3

Part II..

A Kavi-042-En palli kondir-Mohanam-MLV-Adi ArunachalaKavi.mp3

grsastrigal
Posts: 863
Joined: 27 Dec 2006, 10:52

Re: Kanchi Maha Periyava

Post by grsastrigal »

This One of many amazing segments of this website. No words to express my sincere pranAms to the contributors of this segment.

Today being Sri.Ramanavami, another article by Sri.MahaPeriava

14 வருஷம் கேட்டுப் போகாத பட்சணம் – மகா பெரியவா சொன்ன கதை

அனைவருக்கும் தெரிந்த ராமாயணத்தை உதாரணக் கதையோடு சொல்லி, ஸ்ரீராமரை நம் நெஞ்சில் அமர்த்தி, ஒரு தர்மபட்டாபிஷேகமே நடத்துகிறார் ஸ்ரீமஹா ஸ்வாமிகள். எங்கே… மகா பெரியவா சொல்வதைக் கேட்போமா?

‘ராமன்‘ என்றாலே, ஆனந்தமாக இருப்பவன் என்று அர்த்தம்; மற்றவர்களுக்கு ஆனந்தத்தைத் தருகிறவன் என்று அர்த்தம். எத்தனை விதமான துக்கங்கள் வந்தாலும், அதனால் மனம் சலனம் அடையாமல், ஆனந்தமாக தர்மத்தையே அனுசரித்துக்கொண்டு ஒருத்தன் இருந்தான் என்றால், அது ஸ்ரீராமன்தான். வெளிப்பார்வைக்கு அவன் துக்கப்பட்டதாகத் தெரிந்தாலும், உள்ளுக்குள்ளே ஆனந்தமாகவே இருந்தான்.

சுக- துக்கங்களில் சலனமடையாமல், தான் ஆனந்தமாக இருந்துகொண்டு, மற்றவர்களுக்கும் ஆனந்தத்தை ஊட்டுவதுதான் யோகம். அப்படியிருப்பவனே யோகி. இவ்வாறு மனசு அலையாமல் கட்டிப்போடுவதற்குச் சாமானிய மனிதர்களுக்கான வழி, வேத சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிற தர்மங்களை ஒழுக்கத்தோடு, கட்டுப்பாட்டோடு பின்பற்றி வாழ்வதுதான்.

ஜனங்களுக்கெல்லாம் ஒரு பெரிய உதாரணமாக வேத தர்மங்களை அப்படியே அனுசரித்து வாழ்ந்து காட்டுவதற்காக ஸ்ரீமந்நாராயணனே ஸ்ரீராமனாக வந்தார். ராம வாக்கியத்தை எங்கே பார்த்தாலும், ‘இது என் அபிப்பிராயம்’ என்று சொல்லவே மாட்டார். ‘ரிஷிகள் இப்படிச் சொல்கிறார்கள்; சாஸ்திரம் இப்படிச் சொல்கிறது’ என்றே அடக்கமாகச் சொல்வார். சகல வேதங்களின் பயனாக அறியப்பட வேண்டிய பரமபுருஷன் எவனோ, அவனே அந்த வேத தர்மத்துக்கு முழுக்க முழுக்கக் கட்டுப்பட்டு, அப்படிக் கட்டுப்பட்டு இருப்பதிலேயே ஆனந்தம் இருக்கிறது என்று காட்டிக்கொண்டு, ஸ்ரீராமனாக வேஷம் போட்டுக்கொண்டு வாழ்ந்தான்.

‘ராவணன் சீதையைத் தூக்கிக்கொண்டு போனபோது, ஒரே மைல் தூரத்திலிருந்த ஸ்ரீராமனுக்கு சீதை போட்ட கூச்சல் காதில் விழவில்லையாம். அப்படிப்பட்டவனை இப்போது பக்தர்கள் கூப்பிட்டால் என்ன பிரயோஜனம்?’ என்று கேலி செய்து கேட்டவர் களும், எழுதியவர்களும் இருக்கிறார்கள். இவர்கள், ஸ்ரீராமன் இந்த லோகத்தில் வாழ்ந்தபோது மனுஷ்ய வேஷத்தில் இருந்தான்; மனுஷ்யர்களைப் போலவே வாழ்ந்தான் என்பதை மறந்து பேசுகிறார்கள்.

ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்…
ஒரு நாடகம் நடக்கிறது. அதில் லவ- குசர்களை வால்மீகி, ராமனிடம் அழைத்து வருகிறார். ராஜபார்ட் ராமஸ்வாமி அய்யங்கார் ஸ்ரீராமராக வேஷம் போட்டிருக்கிறார். அவருடைய சொந்தப் பிள்ளைகளே நாடகத்தில் லவ- குசர்களாக நடிக்கிறார்கள். நாடக ராமன் வால்மீகியைப் பார்த்து, ‘இந்தக் குழந்தைகள் யார்?’ என்று கேட்கிறார். ராமஸ்வாமி அய்யங்காருக்குத் தம்முடைய பிள்ளைகளையே தெரியவில்லை என்று நாடகம் பார்க்கிறவர்கள் கேலி செய்யலாமா? நாடக வால்மீகி, ‘இவர்கள் ராஜபார்ட் ராமஸ்வாமி அய்யங்காரின் பிள்ளைகள்; நீங்கள்தானே அந்த ராமஸ்வாமி அய்யங்கார்!’ என்று பதில் சொன்னால் எத்தனை ரஸாபாஸமாக இருக்கும்?
வாஸ்தவத்தில் இருப்பதை, வாஸ்தவத்தில் தெரிந்ததை, நாடகத்தில் இல்லாததாக, தெரியாததாகத்தான் நடிக்கவேண்டும். ஸ்ரீராமன் பூலோகத்தில் வாழ்ந்தபோது இப்படித்தான் மனுஷ்ய வேஷம் போட்டுக்கொண்டு, தம் வாஸ்தவமான சக்தியையும் ஞானத்தையும் மறைத்துக்கொண்டு வாழ்ந்தார்.

வேதப் பொருளான பரமாத்மா, தசரதனின் குழந்தையாக வேஷம் போட்டுக்கொண்டவுடன், வேதமும் வால்மீகியின் குழந்தையாக, ராமாயணமாக வந்துவிட்டது. அந்த ராமாயணம் முழுக்க எங்கே பார்த்தாலும் தர்மத்தைத்தான் சொல்லி இருக்கிறது. ஊருக்குப் போகிற குழந்தைக்குத் தாயார் பட்சணம் செய்து தருகிற வழக்கப்படி, கௌசல்யாதேவி காட்டுக்குப் போகிற ராமனுக்குப் பதினாலு வருஷங்களும் கெட்டுப்போகாத பட்சணமாக இந்தத் தர்மத்தைத்தான் கட்டிக்கொடுத்தாள். ‘ராகவா… நீ எந்த தர்மத்தை தைரியத்தோடு, நியமத்தோடு அனுசரிக்கிறாயோ, அந்தத் தர்மம் உன்னை ரக்ஷிக்கும்’ என ஆசீர்வாத பட்சணம் கொடுத்தாள். தனது என்ற விருப்பு- வெறுப்பு இல்லாமல் சாஸ்திரத்துக்குக் கட்டுப்படுவது முக்கியம். அதேபோல் தைரியம் முக்கியம். ஒருத்தர் பரிகாசம் பண்ணுகிறார் என்று தர்மத்தை விடக்கூடாது. ஸ்ரீராமனை சாக்ஷாத் லக்ஷ்மணனே பரிகசித்தான்.

‘அண்ணா! நீ தர்மம், தர்மம் என்று எதையோ கட்டிக்கொண்டு அழுவதால்தான் இத்தனை கஷ்டங்களும் வந்திருக்கின்றன. அதை விட்டுத் தள்ளு. தசரதன் மேல் யுத்தம் செய்து ராஜ்யத்தை உனக்கு நான் ஸ்வீகரித்துத் தர அனுமதி தா’ என்று அன்பு மிகுதியால் சொன்னான். ஆனால் ராமனோ, யார் எது சொன்னாலும் பொருட்படுத்தாமல் தர்மத்தையே காத்தான். கடைசியில் அது அவனைக் காத்தது. தர்மம் தலை காத்தது. ராவணனுக்குப் பத்து தலை இருந்தும், அதர்மத்தால் கடைசியில் அத்தனை தலைகளும் உருண்டு விழுந்தன. ஸ்ரீராமன் இன்றும், ‘ராமோ விக்ரஹவான் தர்ம:’ என்றபடி தர்மத்தில் தலைசிறந்து தர்ம ஸ்வரூபமாக அநுக்கிரகம் செய்து வருகிறான்.
சாக்ஷாத் ஸ்ரீராமனை லட்சியமாகக் கொண்டு ‘ராம ராம’ என்று மனஸாரச் சொல்லிக்கொண்டே இருக்கிறவர்களுக்குச் ஸித்த மலங்கள் எல்லாம் விலகும். தர்மத்தை விட்டு எந்நாளும் விலகாமல் அவர்கள் ஆனந்தமாக வாழ்வார்கள்.’
ஆஹா… எத்தனை அற்புதமாகச் சொல்லியிருக்கிறார் மகா பெரியவா?
–நன்றி சக்தி விகடன்

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

"வீட்டுவைத்தியமா?" அல்லது "சீட்டு வைத்தியமா?"

[நெட்டில் படித்தது]

ஸ்ரீமடத்தில் பக்தியுள்ள குடும்பம். அக்குடும்பத்தின் ஒரு வயோதிகருக்கு பாரிச வாயு வந்து, வலது பக்கம் முழுதும் செயலற்றுப் போனது. மருந்து சுமாரான பலன் குடுத்தது. பேச்சு வரவில்லை. ஞாபக சக்தியும் சரியாக இல்லை. அவருடைய மனைவி பெரியவாளிடம் வந்து கண்ணீர் விட்டு பிரார்த்தித்தாள்...."பெரியவாதான் அனுக்ரகம் பண்ணணும். அவருக்கு பூரணமா குணமாகணும்".

பெரியவா ஒரு நிமிஷம் மெளனமாக இருந்தார். அப்புறம் அந்த அம்மாவிடம் " சரி. அவருக்கு ஒடம்பு சரியாகணும்னா.......என்ன வேணா செய்வியா?"

"என்ன செலவானாலும் பரவாயில்லே பெரியவா"

"அதில்லே...........நான் சொல்லறதா வெளையாட்டா எடுத்துக்க மாட்டியே?"..........

"மாட்டேன்......என்ன சொன்னாலும் செய்யறேன்"

"சீட்டுக்கட்டு ரெண்டு வாங்கி, எப்பவும் அவர் கண்ணுல படறமாதிரி வெச்சிடு. .......கொஞ்சம் கொஞ்சமா நெனவு திரும்பிடும்"

பக்கத்திலிருந்த எல்லாருக்குமே ஆச்சரியம். ஒண்ணும் புரியவில்லை. விநோதமாக இருந்தது! அந்த அம்மாவுக்கோ......தன் கணவர் எப்போதும் சீட்டாட்டத்தில் மூழ்கி இருந்தவர் என்பது பெரியவாளுக்கு எப்படி தெரிந்தது? சீட்டுக்கட்டு கண்ணுல பட்டுண்டு இருந்தா ஒடம்பு சரியாயிடுமா? ஆச்சர்யமாக இருந்தது. பெரியவா சொன்னபடி செய்தாள்.

சில நாட்களில் சீட்டாட்டக்காரருக்கு நினைவு திரும்பியது! பேரன் பேத்திகளோடு சீட்டு விளையாட ஆரம்பித்து, ஒருநாள் "இஸ்பேட்டுக்கு பதிலா ஆட்டின் போடறியேடா!!!!" என்று பேரனை அதட்டினார்! ஆம். பேச்சும் வந்துவிட்டது!

இந்த சீட்டுப் பைத்தியத்துக்கு பெரியவா கொடுத்தது "வீட்டுவைத்தியமா?" அல்லது "சீட்டு வைத்தியமா?"

எப்படியிருந்தாலும் "துருப்பு" அவர் கையில்தான்


http://sskrishnan.blogspot.in/2012/01/1.html

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Image

காஞ்சிப் பெரியவருடன்…. — பம்பாய் சகோதரிகள் சி.சரோஜா – .லலிதா
===============================================

கேரளாவின் திருச்சூரில் பிறந்து, பம்பாயில் வளர்ந்து இசை பயிலச் சென்னைக்கு வந்து, கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக இசைப் பணி ஆற்றி வருபவர்கள் பாம்பே சிஸ்டர்ஸ் எனப்படும் சி.சரோஜாவும், சி.லலிதாவும். தமிழிசைச் சங்கம் வழங்கும் உயரிய விருதான ‘இசைப் பேரறிஞர்‘, தமிழக அரசின் ‘கலைமாமணி‘, ‘மதுரகான மனோரஞ்சனி‘, ‘கந்தர்வ கான ஜோதி‘, ‘சங்கீத கலா சாகரம்‘, நியூயார்க் தமிழ்ச் சங்கம் வழங்கிய ‘தமிழ்க் கலைவாணி‘ உட்பட எண்ணற்ற விருதுகளைப் பெற்றிருக்கும் இவர்களுக்கு, ஸமீபத்தில் மகுடமாக ‘சங்கீத கலாநிதி‘ விருதும் வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் சீசன் கச்சேரிகளில் பிஸியாக இருந்த போதிலும், தென்றலுக்காக ஒரு மாலை நேரத்தை ஒதுக்கி உரையாடினர். (சந்திப்பு: அரவிந்த் சுவாமிநாதன்) அதிலிருந்து….

கே: காஞ்சிப் பெரியவர் உட்பட, பல மகான்களைச் சந்தித்திருக்கிறீர்கள் அல்லவா ?
ப: ஆம். பல தடவை. நாங்கள் சின்னவர்களாக இருந்த போது, ஒரு முறை பெரியவர் மைலாப்பூர் சம்ஸ்க்ருதக் கல்லூரியில் தங்கியிருந்தார். அப்போது எம்.எஸ். அம்மா வந்து பாடினார். எல்லோரும் பாராட்டினார்கள். எப்போது பெரியவர் முன்னால் நாம் பாடுவோம் என்று அந்தச் சிறு வயதில் அடிக்கடி நினைத்து ஏங்கித் தவித்திருக்கிறோம். பின்னால் பெரியவர் ஜெயந்தியின் போதும், மற்ற பல நிகழ்ச்சிகளிலும் பாடியிருக்கிறோம். ஆனால் அதில் ஒரு ஒரு நிகழ்ச்சியை மட்டும் எங்களால் மறக்கவே முடியாது.

கே: என்ன அது ?
ப: ஒரு முறை தரிசனத்திற்காக நாங்கள் காஞ்சிபுரம் சென்றிருந்தோம். ஜெயேந்திரர் பூஜை செய்து கொண்டிருந்தார். பெரியவர் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். அப்போது நாங்கள் அவர் முன்னால் பாட வேண்டும் என்று ஆசைப்பட்டு, அதைச் சொன்னோம். ஆனால், அங்குள்ளவர்களில் ஒருவர் பூஜை நடந்து கொண்டிருப்பதால் பாடக் கூடாது என்று சொன்னார். உடனே அதைக் கேட்ட பெரியவர் தலையை அசைத்து, எங்களைப் பாடுமாறு பணித்தார். நாங்களும், சந்தோஷத்துடன் ஒரு பாடலைப் பாடினோம். நாங்கள் பாடி முடித்ததும், பெரியவர் அவர் கழுத்தில் போட்டிருந்த ஏலக்காய் மாலைகளைக் கழற்றி ஆளுக்கு ஒன்றாக எங்களுக்குத் தந்தார். அதை ஒரு மிகப் பெரிய பாக்கியமாக நாங்கள் கருதுகிறோம். இப்போதும் அதை பூஜை அறையில் வைத்திருக்கிறோம். அதுமட்டுமல்ல. பின்னால் காஞ்சி காம கோடி பீடத்தின் ஆஸ்தான விதூஷிகளாகவும் நாங்கள் நியமிக்கப்பட்டோம்.



–நன்றி தென்றல் மாத இதழ் (Feb, 2011)

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

கடல் கடந்து போவது…

Maha Periyavaa May 27, 2013 Balhanuman




பிராம்மணர்கள் கடல் கடந்து போவது ஆசாரகாவலரான ஆசார்யனுக்கு உகந்ததல்ல என்று அறிந்த ஒரு அந்தண அடியார், சீமை சென்று திரும்பிய பின், அங்கும் தமது ஆசாரங்களை வழுவாது பின்பற்றியதை பெரியவாளிடம் தெரிவித்தால் அதை அவர்
ஏற்று கொள்வார் என்று எண்ணினார்.

“இங்கிலாந்தில் கூட விடாமல் அமாவாசை தர்ப்பணம் பண்ணினேன்”

“அதாவது…..நீ போனது போறாதுன்னு, ஒன்னோட பித்ருக்களையும் சீமைக்கு வரவழைச்சுட்டியாக்கும்?” என்று சிரித்துகொண்டே ஒரு வெட்டு வெட்டினார் பெரியவா!

**

ஒருமுறை திருமதி M S ம் திரு சதாஸிவமும் கச்சேரிக்காக வெளிநாடு
சென்றுவிட்டு திரும்பியதும் பெரியவாளை தர்சனம் பண்ண வந்தார்கள். பூஜை
முடிந்து எல்லாருக்கும் தன் கையாலேயே தீர்த்தம் குடுத்துக்
கொண்டிருந்தார் பெரியவா. அந்த வரிசையில் சதாஸிவத்துக்கு பின்னால் திரு
ரா.கணபதி நின்று கொண்டிருந்தார்.

சாதாரணமாக கடல் கடந்து போய்விட்டு வந்த பிராம்மணனுக்கு பெரியவா தன்
கையால் சந்திரமௌலீஸ்வரர் அபிஷேக தீர்த்தம் தருவது சாஸ்த்ர விரோதமாகையால்
சதாசிவத்துக்கு பெரியவா கையால் தீர்த்தம் கிடைக்காது என்பது ரா.கணபதிக்கு
நிதர்சனமாக தெரிந்திருந்தது. ஆனால், சதாசிவத்துக்கு இந்த விஷயம்
தெரியாதாகையால் ரொம்ப சந்தோஷமாக இவரோடு பேசிக்கொண்டே கியூவில் முன்னேறிக்கொண்டிருந்தார்.

ரா.கணபதிக்கு ரொம்ப இக்கட்டான சூழ்நிலை. “பெரியவாளே கதி” என்று நகர்ந்து
கொண்டிருந்தார். இதோ! சதாஸிவம் பெரியவா முன்னால் தீர்த்தத்துக்காக கையை
நீட்டிவிட்டார்…….

பெரியவா உத்ரணியை பாத்திரத்துக்குள் போட்டுவிட்டு, பக்கத்திலிருந்த
தேங்காயை எடுத்து தரையில் தட்டி உடைத்தார்……

“இன்னிக்கி ஒனக்கு ஸ்பெஷல் தீர்த்தம்!” இளநீரை சதாசிவத்தின் கைகளில்
விட்டார்! சதாசிவத்தின் முகத்தில் ஏகப்பட்ட சந்தோஷம்! ரா.கணபதிக்கோ
நிம்மதி பெருமூச்சு!

“பாத்தியா? இன்னிக்கி பெரியவா எனக்கு மட்டும் ஸ்பெஷல்..லா தீர்த்தம்
குடுத்துட்டார்!…”

சாஸ்த்ரத்தையும் மீறாமல், பிறர் மனஸ் நோகாமல் தீர்வு காண தெய்வத்தால்
மட்டுமே முடியும்!

Read more: http://periva.proboards.com/thread/4427 ... z2V6tkoP3l

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Image


ஜகம் புகழும் ஐயனின் புன்னகை!
கருணை பொழியும் புன்னகை!
மனம் நிறைவுரும் புன்னகை!
பொருள் நிறைந்த புன்னகை!
பாமரரையும் ஈர்க்கும் புன்னகை!
வேதஸ்வரூப புன்னகை!
ஞான புன்னகை!
தெய்வத்தின் குரலுக்கு உகந்த புன்னகை!
நிற்குண ஈசனின் மோகன புன்னகை!
ஜகத் குருவின் நமுட்டு புன்னகை
வேங்கடவன் நான் போற்றும் புன்னகை!
venkat k

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Image

கண்ணும் தெரியல
காதும் கேட்கல
நாவும் பிழரி போச்சு
நடையும் தளர்ந்து போச்சு
மனத்தில் தெம்பும் விலகி போச்சு
கூறி கொள்ள மனமும் இல்ல
கேட்டு கொள்ள நேரமும் இல்ல
புரிந்து கொள்ள யாருமில்ல...
உறவும் நசிஞ்சு போச்சு
உணர்வும் மங்கி போச்சு
உன் துணையன்றி வேறேதும் இல்லை
வேங்கடவன் எனக்கு!

venkat k

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Image

கண் எடுத்து காண வேண்டாமா
கண்டெடுத்த மாணிக்கத்தை
காஞ்சி நகர் போக வேண்டாமா
ஐயனின் பாத கமல தரிசனம் காண
தெய்வத்தின் குரலை கேட்க வேண்டாமா
கருணாகரனின் லீலைகளை அறிய
விழித்திருக்க வேண்டாமா முக கமல தரிசனம் காண
பார்த்து களிக்க வேண்டாமா நினைவிலும்
கனவிலும் வேங்கடவனின் இதய கமல வாசனை!
venkat k

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Image

அதோ அதோ என்று ஒரு ஓசை
இதோ இதோ என்று ஒரு ஓசை
துயரம் நீக்கி அருள் பொழிய
ஓடி உலா வரும் ஐயனின் ஓசை
அடியவர்களை ஈரக்கும் ஓசை
சங்கரா சங்கரா என்றொறு ஓசை
ஹர ஹரா என கூவி அழைக்கும் ஓசை
ஜய ஜயா என்று எழும்பும் ஓசை
ஐயனை மகிழ்விக்கும் மங்கல ஓசை
வேங்கடவன் என்னை சிலிர்க்கவைக்கும் ஓசை

venkat k

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Image

கனவு ஒன்று கண்டேன்
காஞ்சி நகர் வர கண்டேன்
சந்திர முகியுடன் மௌலியும் கண்டேன்
காவி யுடுத்த ஐயனும் இருக்க கண்டேன்
அருள் பொழியும் முகத்தை கண்டேன்
அதில் மயக்கும் புன்னகையும் இருக்க கண்டேன்...
அடியவர் சூழ்ந்து வர கண்டேன்
கையசைத்து கூறி அருள் புரியும் அழகை கண்டேன்
கனவும் கலைந்தது வேங்கடவன்
என் மனமும் நிறைந்தது...
venkat k

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

A share from a FB friend well bred kannan

The man was a miser of all misers!

He was of course a wealthy man - but would not spend a penny. He had come for Periva's darshan. With his right hand over his mouth, he started to speak emotionally. I have blood pressure & diabetes for a long time. Now, I have been diagonised with cancer too. I am suffering a lot. Periva must please suggest a parikaram (remedy).

"Will you do as I say", asked Periva.

"Certainly", said the man.

"It might be difficult...".

"Never mind. I want to just get rid of these diseases. I will do whatever Periva instructs. All I want is to be cured of this BP, diabetes and cancer......", saying this, he wiped his eyes.

Generally, Periva had compassion towards everyone for no reason at all, and now, this man was in tears. Can Periva let him down?

Periva said, "In the well, there is water. But the well never drinks up the water claiming ownership over it".

Trees bear fruits, but it never says 'this fruit belongs to me. I will only eat it".

"The cow gives milk, but never drinks up its own milk. Several trees and plants yield vegetables, but they keep nothing for themselves".

"As you can see, plants and animals themselves are doing so much paropakaaram (service to others). They say Man has got six senses. So, how much more paropakaaram must he do?

"You have lot of money - but you are neither spending it for yourself, nor are you doing any dharma (good deeds) from it. The sins from your last birth have befallen on you in the form of diseases. If you have to get rid of the sins, you must do a lot of good deeds".

"Have you heard about the dharmam called 'Ishta Purtham?'. Money must be spent in good deeds like digging a well, temple renovation, helping the poor, helping relatives, etc. Also, buy medicines for poor orphans who are sick. When someone asks for something, he must not go empty handed. Is this all clear?"

"You are only a Trustee for the wealth you possess. Never think that you are its owner".

The man started weeping uncontrollably..."

He lived for many years thereafter doing a lot of dharma.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

1961ல் பெரியவா தேவகோட்டையில் முகாம். காஷ்ட மௌனம்! சின்ன அசைவு கூட இல்லாமல் பட்டகட்டை மாதிரி இருந்தார். இது ஒருவாரம், பத்து நாள் என்று நீடித்துக் கொண்டே போனது. பெரியவாளைப் பேச வைக்க, பாரிஷதர்களும், பக்தர்களும் பண்ணின பாச்சா எதுவுமே பலிக்கவில்லை. ஒருநாள் காலை, காரைக்குடியிலிருந்து நகரத்தார் சிலர் பெரியவாளை தர்சித்து, தங்கள் விஞ்ஞாபனங்களை ஸமர்ப்பித்தனர். பெரியவா கேட்டுக் கொள்கிறாரா என்பது கூட தெரியவில்லை. அப்படி சொல்லும்போது, ப்ரபல இசை மேதை அரியக்குடி ஸ்ரீ ராமானுஜ ஐயங்கார் காரைக்குடியில்தான் இருக்கிறார் என்று சொன்னார்களோ இல்லையோ, அத்தனை பேரும் ஆச்சர்யப்படும் வகையில், "அவரை இங்கே அழைச்சிண்டு வர முடியுமா?.." என்று ஜாடையில் கேட்டார் பெரியவா! அன்று மத்யானமே அரியக்குடி பெரியவா முன் ஆஜராகிவிட்டார்! பெரியவாளின் பரம பக்தர் அவர். தனக்காகவே ஜகதாச்சார்யார் தன்னுடைய காஷ்ட மௌனத்தைக் கூட விட்டுவிட்டு, கூப்பிட்டனுப்பி இருக்கிறார் என்று நெஞ்சம் தழுதழுக்க பெரியவாளை நமஸ்கரித்தார்.

தேவகோட்டையில் பெரியவா தங்கியிருந்த இடம் ஒரு யாத்ரிக விடுதியின் பின்பக்கம் உள்ள தோட்டத்தில்தான்! அங்கிருந்த ஒரு சின்ன ரூமுக்குள் உட்கார்ந்து கொண்டு இருந்தபடி எல்லாருக்கும் ஜன்னல் வழியாக தர்சனம் குடுத்துக் கொண்டிருந்தார்

செடியும் கொடியும் புல்லும் மண்டிய பகுதியில் நின்று கொண்டுதான் பெரியவாளை தர்சனம் பண்ணவேண்டும். மொஸைக் தரை சொகுஸுக்காரார்களுக்கு இங்கே கொஞ்ச நேரம் நிற்பது கூட கஷ்டந்தான்! அப்படியிருக்கும்போது அரியக்குடி அங்கே வந்து அந்தக் காட்டுத் தோட்டத்தில், அப்படியே ஜன்னலுக்கு கீழே தண்டனிட்டு எழுந்தார். அத்தனை நாள் காஷ்ட மௌனத்திலிருந்தவர் அரியக்குடியைப் பார்த்ததும், மடை திறந்த வெள்ளம் போல் பேச ஆரம்பித்தார்.

"நீ ராஷ்ட்ரபதி அவார்டெல்லாம் வாங்கினதாக் கேள்விப்பட்டேன். அப்போ ஒனக்கு ரெட் கார்பெட் போட்டு, அதான்....நடை பாவாடையா ரத்னக் கம்பளம் போட்டு பெரிய்...ய்ய சதஸ்ல கௌரவப்படுத்தியிருப்பா! நா....என்னடான்னா....இங்க ஒரே கல்லும் முள்ளுமா ஒரு கீக்கெடத்துல ஒன்னை ஒக்காத்தி வெச்சுட்டேன்! எதுக்கு ஒன்னை கூப்டேன்...ன்னா, 'ஸ்ரீ ஸுப்ரஹ்மண்யாய நமஸ்தே' இருக்கே.... அதை யாராவுது ஸுத்தமாப் பாடி கேக்கணும்.ன்னு ஒரு ஆசை! ஒம்பேரு காதுல பட்டவொடனே அந்த நெனைப்பு வந்துடுத்து. ஸுத்தமாப் பாடறதுன்னா, ஸங்கீதமும் ஸுத்தமாயிருக்கணும்; ஸாஹித்ய உச்சரிப்பும் ஸுத்தமாயிருக்கணும்; ரொம்பப் பேர் தெலுங்கு, ஸம்ஸ்க்ருத கீர்த்தனங்கள்...ள வார்த்தைகளை விரூபமாக்கிடறா!

பாடறப்போ, ஸங்கீதம் தாளம் இதுகளோட, கூட அர்த்தத்துக்கும் ஹானி இல்லாம எப்டி ஸந்தி பிரிக்கணுமோ, சேக்கணுமோ, அப்டிப் பாடணும்! நல்ல வாக்யேகாராள் க்ருதிகள்..ளாம் இதுமாதிரி ஸுத்தமாப் பதம் பிரிச்சுப் பாடறதுக்கு நிச்சியமா எடம் குடுக்கும். ஆனா, பாடறவாள்ள ரொம்பப் பேர் அர்த்தத்தை கவனிக்காம, ஸங்கீதத்தை மட்டும் கவனிக்கறதால, எழுத்துல இருக்கற பாட்டை காதுல கேக்கறப்போ, விபரீதமா அர்த்தம் குடுக்கும்படியாப் பண்ணிடறா!.....எப்டி...ன்னா? ஒரு உதாரணம் சொல்றேன்..

இந்த ஸுப்ரஹ்மண்யாய நமஸ்தே..ல ஒரு எடத்ல, "குருகுஹாயாஜ்ஞான த்வாந்த ஸவித்ரே"ன்னு வரது. அதை, "குருகுஹாய, அஜ்ஞான த்வாந்த ஸவித்ரே"ன்னு பிரிஞ்சாத்தான் செரியான அர்த்தம் குடுக்கும். குருகுஹனுக்கு, அஞ்ஞான இருட்டுக்கு ஸூர்யனா இருக்கறவனுக்கு நமஸ்காரம்..ன்னு அர்த்தம். செல பேர் என்ன பண்றான்னா... "குருகுஹாயா.."ன்னு நீட்டீண்டே....போயி, அதை ஒரு தனி வார்த்தை மாதிரி காட்டிட்டு, "ஞான த்வாந்த ஸவித்ரே"ன்னு [சிரித்துக் கொண்டே] ஞான இருட்டுக்கு ஸூர்யன்னு விபரீதமாப் பாடறா!.....

"சங்கராச்சார்யம்" க்ருதி இருக்கே, நீ பாடறியோ என்னவோ, [வீணை] தனம்மா குடும்பத்ல வந்து, செம்மங்குடி சீனு, எம்.எஸ்.கூட பாடறா.....அதுல, "பரமாத்வைத ஸ்தாபன லீலம்"ன்னு வரது. அப்டீன்னா...வெளையாட்டாவே பரம தத்வமான அத்வைதத்த ஸ்தாபிச்சவர்.ன்னு அர்த்தம். பாடறச்சே "பரம அத்வைத ஸ்தாபன லீலம்"ன்னு [பெரியவா தன்னுடைய மதுரமான குரலில் இதை பாடியே காட்டினார்] அந்த "அ" ல அழுத்தங் குடுத்துப் பதம் பிரிச்சுப் பாடினாத்தான் செரியா அர்த்தம் குடுக்கும். நா.....ஏதோ, காமாசோமான்னு பாடறச்சேயே இந்த மாதிரி சங்கீதத்துக்கு ஹானியில்லாம, தாளத்துக்கும் ஹானியில்லாம, அதோட கூட அர்த்தத்துக்கும் ஹானியில்லாம பாட முடியறதுன்னு தெரியறதோல்லியோ? நான் சொன்னவாள்ளாமும் இப்டித்தான் பாடறா. ஆனா, புரிஞ்சுக்காதவா, புரிஞ்சுண்டு பாடணும்ங்கற கவலை இல்லாதவாள்ளாம் "பரமா....."ன்னு அப்டியே.....நீட்டிண்டே போய் "த்வைத ஸ்தாபன லீலம்"ன்னு பாடி, அத்வைத ஆச்சார்யாளை "த்வைத" ஆச்சார்யாளா கன்வெர்ட் பண்ணிடறா....! [வெகு நேரம் சிரித்தார்]

ஸங்கீதத்ல, த்வைத-அத்வைதம்..ன்னு எந்த பேதமும் இல்லே. ஸங்கீதத்ல ஸங்கீதந்தான் முக்யம். ஸாஹித்யம் எதைப் பத்தினதோ, யாரைப் பத்தினதோ...அதைப் பாடறவா மனஸை அந்த ஸங்கீதமே ஐக்யப்படுத்திடறது. அதுனாலதான், நீ... வைஷ்ணவன், இருந்தாலும் ஒங்கிட்ட "ஸ்ரீ ஸுப்ரஹ்மண்யாய" ஒட்டிண்டிருக்கு; இல்லாட்டா, நீ அதுகிட்ட ஒட்டிண்டிருக்கே! ஏதோ ஒண்ணு. அந்த க்ருதி நீ பாடிக் கேட்ருக்கேன்! ஸங்கீத அம்ஸத்ல நீ ஸுத்தம்...ங்கறதுக்கு நான் சொல்ல வேணாம். ஸாஹித்யமும் நீ ஸுத்தமா பாடறே..ன்னு கவனிச்சேன். அதான் ஒனக்கு சொல்லி அனுப்பிச்சேன்!

என் தர்பார்ல கல்லும் முள்ளுந்தான்! பக்கவாத்யம் இல்லாம, தம்பூர் கூட இல்லாம வந்திருக்கே! எத்தனை ஸ்ரமமானாலும் ஸஹிச்சிண்டு, எனக்காக கொஞ்சம் அந்த க்ருதியைப் பாடு!.." கடல்மடையாகப் பெரியவா பேசி முடித்ததும், அரியக்குடி கடல்மடையாகக் கண்ணீரை பெருக்கி விட்டார். விம்மிக் கொண்டே நெடுஞ்சாண்கிடையாக பெரியவாளை மீண்டும் நமஸ்கரித்தார். அழுகையும், ஆனந்தமும் ஒரு சேர.... "பெரியவா பாடச் சொல்லி, "பெரியவாளுக்கு"ன்னு பாடறதை விட, தாஸனுக்கு எந்தப் பெரிய கௌரவமும் இல்லே. தாஸனையும் ஒரு பொருட்டா நெனைச்சு, வலிஞ்சு வந்து ஒரு ஸந்தர்ப்பம் குடுத்து, பெரியவா அனுக்ரஹிச்சிருக்கற கருணையை என்ன சொல்றதுன்னு தெரியலே! ஸ்ருதி, பக்கவாத்யம் எல்லாத்தையுமே பெரியவாளோட இந்த அனுக்ரஹமே இட்டு நிரப்பணும். "அவ்விடத்ல" எதிர்பாக்கற அளவுக்கு, செரியாப் பாடறதுக்கும், அந்த அனுக்ரஹந்தான் ஸஹாயம் பண்ணணும்" என்று அவர் பாடுவதைப் போலவே அழகாக சொல்லிவிட்டு மீண்டும் நமஸ்காரம் பண்ணிவிட்டு அந்தக் கட்டாந்தரையிலேயே உட்கார்ந்து கொண்டு, பாட ஆரம்பித்தார்.

சுற்றி இருந்தவர்கள் கண்கள் குளமாயின. மஹா மஹா பெரியவா ஒரு சின்னக் குழந்தை மாதிரி "எனக்காகப் பாடறியா?" என்று கேட்ட எளிமையை நினைத்து உருகுவதா? ஸ்ரீ அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் ஹ்ருதயம் விம்ம பெரியவாளுடைய அனுக்ரஹத்தை வேண்டியதை நினைத்து உருகுவதா? மஹா பக்தரான ஸூர்தாஸ் பாடுவதைக் கேட்க ஆசையோடு அவர் முன் உட்கார்ந்திருக்கும் க்ருஷ்ணனைப் போல், அரியக்குடியின் ஸங்கீதத்தை ரஸித்துக் கொண்டிருந்தார் பெரியவா.

Check out this video on YouTube:

http://youtu.be/Ry_MzAcPyh8

Shared from FB friend Shobha Shankar ..

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

ஒருநாள் விடியக்காலம் ஞான பானுவை தன்னுள் கொண்ட காஞ்சி மடம் மெல்ல விழித்துக்கொண்டிருந்தது. ரம்யமான அதி தெய்வீகமான சூழல். பெரியவாளுடைய விஸ்வரூப தர்சனம் முடிந்து அவரவர் அனுஷ்டானங்களில் மூழ்கி இருந்தனர். தன்னுடைய அணுக்கத் தொண்டர்களிடம் அந்த நேரம் பெரியவா விஸ்ராந்தியாக பேசிக்கொள்ளுவது உண்டு. அன்றும் அப்படியே பொழுது விடிந்தது……

“ஏண்டா……நம்மூர்ல எத்தனையோ ஆயிரக்கணக்கான கோவில் இருக்கு. ஆனா, அந்தக் கோவில்ல இருக்கற அர்ச்சகா எல்லாரும் மூணு வேளை நிம்மதியா சாப்டறாளோ? ….மதுரைவீரனுக்கு ஏதோ கெடச்சதை வெச்சு நைவேத்யம் பண்ற கிராமத்துப் பூஜாரில்லாம் சந்தோஷமா இருக்காளோ? பெருமாளுக்கு பொங்கலையும் புளியோதரையையும் நைவேத்யம் பண்ற பட்டாச்சார்யார் குடும்பமெல்லாம் வயத்துக்கு மூணுவேளை சாப்ட்டுண்டு இருக்காளோ?…..இதையெல்லாம் யாராவுது அப்பப்போ விஜாரிக்கறேளோ?..”

பெரியவா இதுபோல் ஏதாவது விஷயத்தை பீடிகையுடன் ஆரம்பித்தால், அதில் ஆயிரம் விஷயங்கள், அர்த்தங்கள் இருக்கும். எனவே எல்லாரும் “நிச்சயமாக தங்களுக்கு இதெல்லாம் தோன்றியதே இல்லை” என்ற உண்மையை ஒத்துக்கொள்வது போல், பேசாமல் முழித்தார்கள்.

“……ஏன் கேக்கறேன்னா….ஏதோ மூணு நாலு கோவில்ல இருக்கற அர்ச்சகா மட்டும் நன்னா இருந்தா போறாது. பகவானுக்கு சேவை பண்ற எல்லாரும் நன்னா இருக்கணும்னு யோசிங்கோ!..” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே ராமலிங்க பட் என்ற குஜராத்தி ப்ராம்மணர் வந்து நமஸ்கரித்தார். பெரியவாளிடம் மிக மிக ஆழ்ந்த பக்தி கொண்டவர், ஆசாரம் அனுஷ்டானம் கடைப்பிடிப்பவர்கள் லிஸ்டில் இவருடைய பெயர் இருக்கும். சென்னை IIT யில் ப்ரொபஸராக இருப்பவர். நமஸ்காரம் பண்ணியபின் மெதுவாக ஒரு ஓரமாக ஒதுங்கி நிற்கலாம் என்று திரும்பி நடந்தவரை, வலக்கையின் நடுவிரலையும்,கட்டைவிரலையும் சேர்த்து போடும் “டொக்” கென்ற பெரியவாளுக்கே உரித்தான சொடக்கு சத்தம் திரும்பிப் பார்க்கவைத்தது. ஆள் காட்டி விரலால் “இங்கே வா” என்று சைகை பண்ணினார். விடியக்காலை தர்சனத்திலேயே ஒருமாதிரி ஆனந்த மயக்கத்தில் இருந்த ராமலிங்க பட், பெரியவா தன்னை அழைத்ததும் திக்குமுக்காடிப் போனார். பவ்யமாக அருகில் வந்து நின்றார்.

“ஒன்னோட ஒருமாச சம்பளத்த எனக்கு குடுப்பியா?…..” குழந்தை மாதிரி கேட்டதும், நெக்குருகிப் போனார் பட். மோக்ஷத்தையே அனாயாஸமாக பிக்ஷையாகப் போடும் தெய்வம், ஒரு மாச சம்பளத்தை கேட்கிறதே! என்று அதிர்ந்து பேச நா எழாமல் நின்றார்.

“என்ன….. யோசிக்கறே போலருக்கு?……ஏதோ, இன்னிக்கு காலங்கார்த்தால ஒன்னை பாத்தேன்னோல்லியோ…..கேக்கணும்னு தோணித்து. கேட்டுட்டேன். குடுப்பியா?…..” மறுபடியும் குழந்தை ஸ்வாமி கேட்டது. வேரறுந்த மரம் மாதிரி பாதத்தில் விழுந்தார் பட்.
“பெரியவா ஆக்ஞை! எங்கிட்டேர்ந்து என்ன வேணுன்னாலும் எடுத்துக்கலாம். இந்த ஜன்மால எனக்கு இதைத் தவிர வேறென்ன ஸந்தோஷம் நிலைக்கப் போறது?…” உடனேயே நாலாயிரம் ரூபாயை பெரியவாளின் திருவடியில் சமர்ப்பித்தார். அவரிடமிருந்த வந்த பணத்தை கொண்டுதான் “கச்சிமூதூர் அர்ச்சகா டிரஸ்ட்” துவங்கப்பட்டு, வருமானம் குறைந்த அர்ச்சகர்கள்,பூஜாரிகளுக்கு இன்றுவரை உதவி செய்துகொண்டு வருகிறது.

டிரஸ்ட் துவங்கியதும் வேதமூர்த்தி என்பவர் ” ஹிந்து” பேப்பரில் விரிவான செய்தியாக எழுதியிருந்தார். பெரியவா அதைப் படித்துப்பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டார். அப்போது அங்கே வந்த ராகவன் என்ற ஆடிட்டரிடம் “இந்த ஹிந்து பேப்பர்ல வந்திருக்கே….இதை எனக்கு ஆயிரம் காப்பி ஜெராக்ஸ் மெட்ராஸ்ல எடுத்துத் தருவியா?…” குழந்தை ஸ்வாமி கேட்டார். ராகவனுக்கோ சந்தோஷம் தலைகால் புரியவில்லை.உடனே ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டு வந்து குடுத்தார்.
“ஜெராக்ஸ் எடுத்ததுக்கு பில் எடுத்துண்டு வந்தியோ?….”
“இல்லே பெரியவா…..ஆத்துல இருக்கும்”

“மெட்ராஸ்ல IIT ல ராமலிங்க பட்…ன்னு ஒர்த்தன் இருப்பான்…அவன்ட்ட அந்த பில்லைக் குடுத்துட்டு காசு வாங்கிக்கோ! ஜெராக்ஸ் போட்டுக் குடுத்ததே நீ பண்ணின பெரிய கைங்கர்யம்…” சிரித்துக்கொண்டே ஆசிர்வதித்தார்...Courtesy...Wellbred kannan

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Image

பாத கமலம் சரணம்
திருவடி சரணம்
தொண்டர்கள் தொழும் திருவடி
பூஜிக்கும் கமல திருவடி
பஜிக்கும் திருவடி
ஞானாநந்தனின் திருவடி
அறியாமையை அகற்றும் ஐயன் திருவடி
மன களிற்றின் மதத்தை நீக்கும் திருவடி
நற்குண ஈசனின் தாமரை திருவடி
அரவிந்தம் அரும்பும் திருவடி
வேதனை விலக்கும் திருவடி
தீவினை நீக்கும் திருவடி
ஈனர்களை இனியவர்களாக்கும் திருவடி
அருளைப் பெற ஆதர்ச திருவடி
ஒளிரும் மணியாகி அருளுக்கு உருவாகி நின்ற திருவடி
தாளைப் பணியும் வேங்கடவன் போற்றும் திருவடி
venkat k

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

"Did you use the positive or the negative approach?"
===============================

I once went to a place called Vaasangere in Karnataka to have His darshan. He was camping in the mines area which belonged to Sandur Maharaja. Swamigal was a sitting on a tarpaulin along with the other devotees. Annathurai Iyengar was also there with a few students from his Veda Patashala. It was around 10.30 in the night.

The Sandur Maharaja, Maharani and their son were also there. His son was a Reader in the Department of Mathematics at Yale University. He had a PhD degree in Maths. His parents were standing there respectfully before Him but he appeared to be quite casual. Swamigal conversed with the Maharaja and Maharani in Kannada for a while.

After a while He turned towards their son and asked,

"Where do you live? What are you doing?"

"I am a Reader in Maths Dept at Yale University", he replied.

"What have you studied, you have done your PhD in which branch of Maths", He asked.

Their son did not answer for a minute, hesitating to reply as he was unsure if Swamigal could make sense of what he had studied. His father goaded him to reply.

"Quantum Theory.", he said, matter-of-factly.

Swamigal drew a +ve sign on the mud and circled it; He also drew a -ve sign and circled it. Pointing to the two signs Swamigal asked him,

" Did you use the positive or the negative approach in your Quantum Theory PhD thesis study?"

Their son who was a bit indifferent until then, was startled to hear this from Him. He was trembling for words and suddenly became more respectful and replied,

"Positive Approach."

"Why did you not take the Negative Approach, will you do you it later", He asked.

"It is difficult to use the Negative Approach", he said.

Swamigal looked at Annathurai Iyengar and said, "He is saying it is difficult; can you ask the Veda students to recite this particular verse from Rig Veda?", and prompts them with first two words.

The students recited that particular verse for 5 minutes. After this He turned to their son and said, "you must have obtained your PhD in your 24th or 25th year correct?"

"In my 25th year", said he.

"Rig Veda, the verse which you heard now, talks both about the Positive and the Negative approaches", He said.

The son was astonished and requested the students to recite the verse again.

"Are you now thinking that you need not have spent lakhs and lakhs of rupees for your 25 years of education and if only you had studied the Vedas you would have learnt this Truth in just 7 years?!", replied Lord Parameshwara.

*****

I had translated this in March 2012 from Shri Thiruvannamalai Gowrishankar's tamil video interview here at http://www.youtube.com/watch?feature=pl ... Pf_Hcq2HkU

posted by Shri. Panchanathan Suresh in FB

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Share from Giri M Prasanna
நடமாடும் தெய்வமாகத் திகழ்ந்த மகா பெரியவாளின் தீட்சண்யத்தை- தீர்க்கதரிசனத்தை விளக்கும் அந்த நிகழ்வை நம்மோடு பகிர்ந்துகொண்டவர் வைத்தியநாதன். சங்கர பக்த ஜன சபாவின் செயலாளரான இவர், தமது இளவயது முதற்கொண்டே மகா பெரியவாளின் அணுக்கத்தில் இருந்த அடியவர்.

இவரின் சிலிர்ப்பான அனுபவத்தை ஒரு விறுவிறுப்பான கதையாகவே இங்கே காண்போம்…

அது, மாசி மாதத்தின் வைகறைப் பொழுது. மார்கழியில் துவங்கிய குளிர் இன்னும் விட்டபாடில்லை. முகம் தெரியாத இருட்டை, தீவட்டி வெளிச்சத்துடன் ஊடறுத்தபடி, வெண்ணியாற்றின் வடகரை வழியே பயணித்துக்கொண்டிருந்தது அந்தப் பல்லக்கு ஊர்வலம்.

முதலில் பல்லக்கு, அதைப் பின்தொடர்ந்து அடியார் கூட்டம், அவர்களுக்கும் பின்னால் யானை, குதிரை, ஒட்டகப் பரிவாரங்கள் என நகர்ந்த அந்த ஊர்வலம்… மாயனூர், ஹரிச்சந்திரபுரம், திட்டச்சேரி தாண்டி நத்தம் என்ற இடத்தை அடைந்தபோது, பல்லக்கின் உள்ளே இருந்து, தண்டத்தால் ஒலியெழுப்பும் சத்தம்! சட்டென்று நின்றது ஊர்வலம்.

அந்த இடத்தில் ஒரு பிள்ளையார் கோயில். அங்கிருந்து இடமும் வலமுமாக இரண்டு பாதைகள் பிரிந்தன.

மெயின் ரோட்டில் இருந்து இடதுபுறமாகத் திரும்பி பயணிப்பதுதான் திட்டம். ஆனால், பல்லக்கின் உள்ளே இருந்து மீண்டும் தண்டத்தால் தட்டும் சத்தம் கேட்டது. அந்த சமிக்ஞை மூலம், ஊர்வலம் வலப்புறமாகத் திரும்ப உத்தரவாகி விட்டதைப் புரிந்துகொண்டார் மாலி என்ற அன்பர். ஊர்வலம் வலதுபுறமாகத் திருப்பப்பட்டது.

”இது, மண்மங்கலம் போற பாதை ஆச்சே…” – அடியார்களில் ஒருவர் சந்தேகம் எழுப்பினார்.

”இப்படிப் போகணும்னு உத்தரவாயிடுச் சுன்னா அதன்படி போயிடணும். நிச்சயமா இதுக்கு ஏதாச்சும் காரண- காரியம் இருக்கும்” – அடியவர் மாலி சொல்ல, அதன் பிறகு எவரிடம் இருந்தும் வேறு கேள்வி எழவில்லை.

மண்மங்கலம் கிராமம் இன்னும் முழுமையாக விழித்துக்கொள்ளவில்லை. அந்த வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த அம்மாள், திண்ணை மாடத்தில் அகல் விளக்கேற்றி வைத்தார். அப்படியே இன்னொரு விளக்கை பெருமாள் கோயில் வாசற்படியில் ஏற்றிவைத்துவிட்டு வந்து, தனது வீட்டுவாசலில் நீர் தெளித்துப் பெருக்க ஆரம்பித்தார். அதே நேரம்… தூரத்தில் ஏதோ பெரிய ஊர்வலம் வருகிற மாதிரி சத்தம் கேட்டு, நிமிர்ந்து பார்த்தவர் ஆச்சரியத்தில் மூழ்கிப் போனார். குதிரையும் யானையுமாக பல்லக்கு ஊர்வலம் ஊருக்குள் வந்துகொண்டிருப்பதைக் கண்டு அவர் கண்கள் வியப்பால் விரிந்தன.

மிகச் சரியாக அவரது வீட்டுவாசலை பல்லக்கு நெருங்கியதும், மீண்டும் உள்ளே தண்டத்தின் சத்தம். பல்லக்கு அங்கேயே நிறுத்தப்பட்டது. எத்தனையோ காப்பியங்களிலும் கதைகளிலும் சொல்லி இருக்கிறார்களே, ஆதவனைக் கண்டு தாமரை மலர்ந்ததாக… அப்படியரு அற்புதத்தை அன்று நிஜமாகவே மண்மங்கலம் கிராமம் சந்தித்தது.

உடம்பாலும் வாக்காலும், மனத்தாலும் செயலாலும் தன்னை முழுவதுமாகப் பரம்பொருளுக்கு அர்ப்பணித்துக்கொண்ட அந்தத் தெய்வத் தாமரை, மெள்ள பல்லக்கின் திரையை விலக்கித் தன் திருமுகம் காட்ட… அதன்பின்னரே, இன்னும் தாமதிக்கக்கூடாது என்பதுபோல் சட்டென்று மேகத் திரையை விலக்கி, ஆதவனும் தன் ஒளிக்கிரணங்களை அந்தக் கிராமத்தின் மீது வீசி, தெய்வத் தாமரையின் திருவடிகளைத் தொட்டு வணங்கினான்.

ஆமாம்… அந்தக் கிராமம் செய்த புண்ணியம்… மகா பெரியவா என்ற தெய்வக் கமலம், தமது திருவடிகளை அந்த மண்ணில் பதித்துத் திருவருள் புரிந்தது.

வாசல் தெளித்துகொண்டிருந்த பெண்மணி, இப்படியரு தெய்வீக தரிசனத்தைச் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. கண நேரம் ஸ்தம்பித்து நின்றவள், பிறகு சுதாரித்து உள்ளே ஓடி, கணவரிடம் விஷயத்தைச் சொன்னாள். அவரும் எழுந்து ஓடிச் சென்று, நான்கு சொம்பு தண்ணீரைத் தலைக்கு ஊற்றி அவசர அவசரமாகக் குளித்து முடித்து, விபூதி பூசிக்கொண்டு வருவதற்குள், நிறைகுடமும் பூரண ஆரத்தியும் தயார் செய்துவிட்டிருந்தாள் அந்த மாதரசி.

மகாபெரியவாளுக்கு ஆரத்தி எடுத்து, பாத பூஜை செய்து, அவரை வணங்கி வரவேற்றனர் அந்தத் தம்பதி. சில நிமிடங்களில்… வீட்டின் திண்ணையை அலம்பிச் சுத்தம் பண்ணி, கோலம் இட்டு வைக்க, அங்கே பெரியவா அமர்ந்துகொண்டார்.

இதற்குள் குதிரை, யானை பரிவாரங் களின் சத்தம் கேட்டு ஒட்டுமொத்த ஊரும் விழித்துக்கொண்டு அந்த வீட்டின் முன் திரண்டுவிட்டது. பழத்தட்டுக்களுடனும் மலர் மாலைகளுடனும் சாரை சாரையாக வந்து, மகாபெரியவாளை வணங்கினார்கள். யானை, ஒட்டகங்கள் எல்லாம் ஆற்றங்கரைப் பக்கம் ஓட்டிச் செல்லப்பட, மகாபெரியவாளுடன் வந்த அன்பர்கள் ஊருக்குள் தங்க வசதி செய்து தரப்பட்டது.

‘பெரியவா எப்படி இந்தப் பக்கம் வர நேர்ந்தது?’ என்று எல்லோரும் விசாரிக்கத் தொடங்கினார்கள். தகவல் எதுவும் சொல்லாமல் ஸ்ரீமடத்தில் இருந்து இப்படி திடுதிப்பென்று வரமாட்டார்களே என்று அவர்களுக்கு ஓர் ஐயம்!

”நெடுங்கரைப் பக்கம் திரும்பறதாகத்தான் திட்டம். ஆனா, பெரியவா இந்தப் பக்கம் வரச்சொல்லி உத்தரவு பண்ணினார். வந்துட்டோம். ஏதோ முக்கியமான காரணம் இருக்கும்!” என்று அவர்களுக்குப் பதில் சொன்னார் வைத்தியநாதன்.

மகா பெரியவா இரண்டு நாட்களாக மௌனம் அனுஷ்டிக்கிறார்; அவர் எப்போ வேணும்னாலும் மௌனத்தைக் கலைக்கலாம். ஊர்க்காரர்களுக்கு ஆதங்கம் என்னவென்றால்… மகாபெரியவா வருவது முன்னரே தெரிந்திருந்தால், ஊர் எல்லைக்கே சென்று அவரை பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றிருக்கலாமே என்பதுதான். ஆனால், தெய்வ சித்தம் என்ன என்று அவருக்குத்தானே தெரியும்!

ஸ்நானம், பூஜை எல்லாம் முடிந்து எல்லோருக்கும் ஆகாரம் ஆயிற்று. மகாபெரியவா பசும்பாலும் உலர் திராட்சையும் மட்டும் எடுத்துக்கொண்டார். மற்றவர்களுக்கு ஒவ்வொருத்தர் வீட்டிலும் இலை போட்டுப் பாயசம், அப்பளம் என்று உணவு பரிமாறினார்கள். அதற்குள் செய்தியை அறிந்து அக்கம்பக்கத்து கிராமங்களில் இருந்தும் ஜனங்கள் வந்து சேர்ந்தார்கள். மாசிமாதம் அறுவடை முடிந்த நேரம் என்பதால் மிராசுதாரர்கள், குடியானவர்கள், தொழிலாளர்கள் என்று எல்லோரும் வந்துவிட்டார்கள். தாமரைப் பூ, இளநீர், வாழைத்தார் என்று ஜனங்கள் தாங்கள் கொண்டுவந்ததை பெரியவா முன் சமர்ப்பித்து வணங்கினார்கள். வயதான ஓர் அம்மாள் தினக்கூலி நெல்லை மடியில் கட்டி எடுத்து வந்திருந்தாள். அதை அப்படியே பெரியவா முன்னே கொட்டி, அவரை நமஸ்காரம் பண்ணினாள். அப்போது அவள் முகத்தைப் பார்க்கணுமே… அப்படியரு சந்தோஷம்! காணிக்கைகளால் அந்தத் திண்ணையே நிரம்பிவழிந்தது.

மகா பெரியவாளிடம் முறையிடு வதற்கு அந்த ஜனங்களுக்கெல்லாம் நிறைய விஷயங்கள் இருந்தன. கல்யாணம் ஆகலை, வீடு கட்ட முடியலை, பாகப்பிரிவினைல சிக்கல்… இப்படி ஒவ்வொருத்தரும் தங்களின் குறையை அவர் முன் சமர்ப்பித்தார்கள். ‘வடக்கே சமயச் சண்டைகள் ஓய்ந்தபாடில்லை. ரத்தம் ஆறா ஓடுறது. பெரியவாதான் அமைதி உண்டாக்கி வைக்கணும்.’ – இப்படியும் நிறையக் கோரிக்கைகள்.

மகா பெரியவா எதுவும் பேசவில்லை. எல்லாவற் றையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார். கை தூக்கி, வந்தவர்கள் அனைவரையும் ஆசீர்வதித்தார். சிலருக்கு எலுமிச்சை, துளசி எனப் பிரசாதமும் கிடைத்தது. நேரம் நகர்ந்துகொண்டு இருந்தது. மகா பெரியவாளின் மௌனம் கலையவில்லை. திடீரென மாலியை அருகில் அழைத்து, சைகையால் பேசினார். கைகளால் லிங்கம் போன்றும், கோயில் கோபுரம் போன்றும் அபிநயித்துக் காட்டி, ‘எங்கே இருக்கிறது?’ என்பதுபோல் சைகையால் கேட்டார்.

அதை மாலி புரிந்துகொண்டார். கூட்டத்தைப் பார்த்து, ”இந்த ஊரில் சிவன் கோயில் எங்கே இருக்கு?” என்று கேட்டார்.

அன்பர் மாலியின் இந்தக் கேள்விக்கு, கூட்டத்தில் எவரிடம் இருந்தும் பதில் இல்லை.‘இந்த ஊர்ல சிவாலயம் எங்கே இருக்கு?”

அவர்களில் பழுத்த பழமான ஒரு முதியவர் மட்டும், ‘இங்கே ஒரு பெருமாள் கோயில் இருக்கு. அதுபோக, மாரியம்மன் கோயிலும் அய்யனார் கோயிலும் உண்டு. ஊர் எல்லையில் ஒரு பிள்ளையார் கோயில் இருக்கு. அவ்வளவுதான். மத்தபடி இங்கே சிவன் கோயில் எதுவும் இருக்கிறதா தெரியலையே?” என்றார். 90 வயது மதிக்கத்தக்க அந்தப் பெரியவருக்கே சிவாலயம் குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை என்றால், மற்றவர்களுக்குத் தெரிந்திருக்க வழி இல்லையே!

மகா பெரியவா மறுபடியும் ஏதோ சைகையால் கேட்டார்… ‘மேல் கோடியில பெருமாள் கோயில் இருந்தா, கீழ்க் கோடியில சிவன் கோயில் இருந்திருக்கணுமே?”

நிச்சயம் இருந்திருக்கும். ஆனால், தற்போது அங்கே சிவாலயம் இல்லை. முன்னொரு காலத்தில் இருந்ததா என்றால், அதுகுறித்தும் அந்த ஊர்க்காரர்களுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. அனைவரும் மௌனமாக இருந்தார்கள்.

அந்த நேரத்தில் ஓர் இஸ்லாமிய தம்பதி அங்கே வந்தனர். தன்னை லத்தீஃப் பாய் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த இஸ்லாமிய அன்பர், தன் மனைவியின் பெயர் மெகருன்னிசா என்றும் தெரிவித்தார். தாம் கொண்டு வந்திருந்த இரண்டு சீப்பு பேயன் பழங்களையும், ரோஜாப்பூக்களையும் மகாபெரியவா முன் சமர்ப்பித்தார்.

அவர்களை தலை முதல் பாதம் வரை ஏற இறங்கப் பார்த்தது நடமாடும் தெய்வம். கருணை மிகுந்த அந்தப் பார்வையில் மெய்ம்மறந்து போனார்கள் அந்த இஸ்லாமிய தம்பதியர். ஒருவாறு சுதாரித்துக்கொண்டு, சிலிர்ப்பான அந்தத் தருணத்தில் இருந்து மீண்டு, லத்தீஃப் பாய் பேசத் தொடங்கினார். அற்புதமான ஒரு தகவலை விவரித்தது அவரது பேச்சு.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னால், அங்கே சிவன் கோயில் ஒன்று இருந்திருக்கிறது. காலமாற்றத்தில் கோயில் சிதிலமாகி, மண்ணுக்குள் புதையுண்டு போனது. கோயில் இருந்த இடமும் பலரால் ஆக்கிரமிக்கப்பட்டு, பலப் பல கைகள் மாறி, இப்போது லத்தீஃப் பாயின் வசம் இருக்கிறது.

‘எங்க வாப்பா பள்ளிவாசல் நிலங்களைக் கவனிச்சுக்கும்போது, கூடவே கோயில் நிலங்களையும் குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்தாக. ஒரு மரக்கால்கூட குறையாம அளந்து கொடுப்பாக. ‘சிவன் சொத்து குலம் நாசம்’னு அவுகளுக்கு இருந்த அதே நேர்மையையும், நல்ல எண்ணத்தையும், புத்தியையும் எனக்கும் கொடுத்திருக்கான் இறைவன். ஆனாலும் என்ன… எனக்குப் பொறந்த ஒரு பெண் பிள்ளையும் மன வளர்ச்சி இல்லாம இருந்து, பத்து வருஷத்துக்கு முன்னாடி இறந்தும் போச்சு.

சரி… நாம அறிந்தோ அறியாமலோ பாவம் செஞ்சிருக்கோம்போல; அதனால்தான் அல்லா நமக்கு இப்படியொரு தண்டனையைக் கொடுத்திருக்காருன்னு சமாதானம் பண்ணிக்கிட்டோம். காலமும் அப்படியும் இப்படியுமா ஓடிப் போயிடுச்சு. நேத்திக்கு கொல்லைப்பக்கம் மண்ல வேலை செஞ்சுட்டிருந்தேன். அப்ப… மண்வெட்டி ஏதோ கல்லுல பட்ட மாதிரி ‘ணங்’குனு ஓசை கேட்டுச்சு. கவனமா மண்ணை விலக்கிப் பார்த்தால்… பெரிய சிவலிங்கம்! ராத்திரி முழுக்க உறக்கம் வரல்லே சாமி! ‘அல்லா… இப்ப என்ன பண்றது!’ன்னு புரியாம, விசனத்தோட உட்கார்ந்திட்டிருந்தோம். விடிஞ்சதும் தான், சாமி இங்கே வந்திருக்கிறதா பக்கத்துல இருந்த ஜனங்க பேசிக்கிட்டாங்க. உடனே இங்கே ஓடி வந்துட்டோம். இதுக்குமேல நான் என்ன செய்யணும்னு சாமி தான் வழி காட்டணும்.

மனசார என் நிலத்தை எழுதித் தர்றேன். இதுக்காக எனக்கு பணம், காசு எதுவும் வேணாம். முன்னே இருந்த மாதிரியே அங்கே சிவன் கோயில் கட்டிக்கலாம். ஊர் ஜனங்களுக்கு அது பயன்பட்டுதுன்னா, அதனால ஊர் ஜனங்க சந்தோஷப்படுவாங்கன்னா, அதுவே அல்லாவையும் சந்தோஷப்படுத்தும்!” என்று நெகிழ்ச்சியோடு, கண்ணீர் மல்கப் பேசி முடித்தவர், அப்படியே இன்னொரு காரியத்தையும் செய்தார்.

”இந்தாங்க, கோயில் கட்ட எங்களோட காணிக்கையா நூத்தியொரு ரூபாய். முதல் வரவா இதை வாங்கிக்குங்க!’ என்று வெற்றிலை பாக்குத் தட்டில் வைத்துக் கொடுத்தார். அங்கிருந்த அனைவருக்கும் உடம்பு சிலிர்த்துப் போட்டது.

அதுவரை மௌனமாக எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த மகா பெரியவா, புன்னகையோடு சைகையால் அந்த இஸ்லாமிய அன்பரை ஏதோ கேட்டார். அது அவருக்குப் புரியாமல் போகவே, ஒரு சிலேட்டும் பலப்பமும் கொண்டு வந்து மகாபெரியவாளிடம் தந்தார்கள். அவர் சிலேட்டில் எழுதிக் காண்பித்தார்… ‘மார்க்கக் கடமையை முடித்துவிட்டீர்களா?’ என்று.

படித்துப் பார்த்த இஸ்லாமிய அன்பர், ”இன்னும் இல்லே சாமி! அதுக்கான பண வசதியை அல்லா இன்னும் எங்களுக்குக் கொடுக்கலை. எத்தனையோ வருஷம் முயற்சி பண்ணியும் மக்கா- மதீனா போகும் பாக்கியம் இன்னும் வாய்க்கலை” என்றார் கண்ணீர் மல்க.

உடனே பெரியவா, வைத்தியநாதன் நின்றிருந்த பக்கமாகத் திரும்பினார். ”இத்தனை உசத்தியான மனுஷர் நிலத்தைத் தரேன்கிறார். அவாளுக்கு நாம எந்த ஒத்தாசையும் செய்ய வேண்டாமா?” என சைகையால் கேட்டார். தொடர்ந்து, என்ன செய்ய வேண்டும் என்பதையும் சைகையாலேயே உத்தரவு பிறப்பித்தார். பெரியவாளின் விருப்பத்தை அப்படியே கூட்டத்தாரிடம் எடுத்துச் சொன்னார் வைத்தியநாதன்.

அவ்வளவுதான்… ஒட்டுமொத்த ஊரும் சேர்ந்து ஒரே குரலில் ஒப்புக்கொண்டது… ”அவங்க புனித யாத்திரை போய்வர ஆகற செலவு மொத்தமும் நம்மளோடது!”

அதைக் கேட்டு இஸ்லாமிய தம்பதிக்கு மனம்கொள்ளா மகிழ்ச்சி! அவர்களுக்கு மட்டுமில்லாமல், அங்கிருந்த எல்லோருக்குமாக, கை தூக்கி ஆசீர்வாதம் செய்தது மானுட தெய்வம்.

பிறகு, மெள்ள எழுந்த மகாபெரியவா, தூணில் சாத்தியிருந்த தண்டத்தை கையில் எடுத்துக்கொண்டார். அப்படியே நடந்து வந்து பல்லக்கில் ஏறி உட்கார்ந்துகொண்டார். மீண்டும் ஊர்க்காரர்களைப் பார்த்து ஒரு புன்னகை; கரம் உயர்த்தி ஆசீர்வாதம்!

பரிவாரங்கள் பின்தொடர, பல்லக்குப் புறப்பட்டது.

ஊர்வலத்துடன் வந்த அன்பர் மகாலிங்கம் சொன்னார்… ‘எனக்கு இப்பத்தான் தெரியுது… மகாபெரியவா ஏன் திடீர்னு இந்த ஊருக்கு வர முடிவு பண்ணினார்னு!”

காரணம் இன்றிக் காரியம் இல்லையே! மகாபெரியவாளின் ஒவ்வொரு அசைவுக்கும் ஒரு காரணம் உண்டு!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

ஸ்வாமிகள் அரியக்குடியவர்களிடம் கூறினார்: நல்ல குரு சிஷ்ய பரம்பரையில் வந்திருக்கிற ஒன்னோட சங்கீதத்தை நீ நல்லபடியா காப்பாத்திண்டு வரதுல ரொம்ப ஸந்தோஷம். இதே மாதிரி நீயும் நல்ல சிஷ்யாளைத் தயாரிச்சு இந்தப் பாரம்பர்யம் தொடர்ந்து போகும்படியாய்ப் பண்ணணும். வேதம் கத்துண்ட ப்ராமணன் இன்னம் ஒருத்தனுக்காவது அதைச் சொல்லிக் கொடுத்தே தீரணும்னு, ‘அத்யாபனம்’னே அவனுக்குக் கம்பல்ஸரியா ஒரு கடமை கொடுத்திருக்கு. அது எல்லாக் கலைக்கும், சாஸ்த்ரத்துக்கும் பொருந்தும். தான் கற்ற வித்தை தன்னோட போகாம இன்னம் பல பேர்கிட்டப் போகும்படியாய்ப் பண்ணணும்.

ஸங்கீத வித்வான்கள் முக்யமா ஒண்ணு பண்ணணும். தாங்க(ள்) பாடற ஸம்ஸ்க்ருதப் பாட்டு, தெலுங்குப் பாட்டுகளுக்கு அர்த்தம் தெரிஞ்சுண்டு, அர்த்த பாவத்தோட பாடணும். தமிழே போறும்னு சொன்னா ஸரியில்லே. ஸங்கீத நுட்பம், அர்த்த விசேஷம் ரெண்டிலேயும் உசத்தியா மஹா பெரியவா பலபேர் இந்தத் தமிழ் தேசத்துல தெலுங்கிலேயும் ஸம்ஸ்க்ருதத்திலேயும் நூத்துக்கணக்காகப் பாட்டுக்களைக் கொட்டிட்டுப் போயிருக்கா. அதெல்லாம் வேண்டாம்னு தள்றது நமக்குத்தான் நஷ்டம். தமிழிலேயும் நிறையப் பாடட்டும். மத்த பாஷையிலேயும் பாடட்டும். ‘அர்த்தம் தெரியலையே’ன்னா தெரிஞ்சுக்கணும். தெரிஞ்சுக்கறது கஷ்டமேயில்லை. நமக்கா இஷ்டம் இருந்தா ஆகாத போகாத ஸமாசாரங்களுக்கெல்லாம் எத்தனை ஒழைச்சுத் தெரிஞ்சுக்கறோம்? சுத்தமான ஸங்கீதம், ஒசந்த அர்த்த விசேஷம் – இதுகளுக்கே வித்வான்கள் ‘டெடிகேட்’ பண்ணிண்டா பாஷை குறுக்கே நிக்காது. இதுக்கெல்லாம், ஸங்கீத உலகத்துல இப்ப முதலா இருக்கிற நீ ஒன்னாலானதைப் பண்ணு. அநுக்ரஹ பலம் உனக்கு சக்தி கொடுக்கட்டும்.”

அரியக்குடி நாத்தழுதழுத்து, என் ஆயுஸில் இன்றைவிட நான் பெரிய பாக்கியம் அடைந்ததில்லை” என்று கூறி விடைபெற்றார்.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

–நன்றி கல்கி

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

உன் கண்ணில் நீர் வழிந்தால்........

மனஸை நெகிழவைக்கும் பெரியவா பேரருள்---- brimming with tears !!!

பெரியவா சாதாரணமாக ரொம்ப கூட்டம் இல்லாவிட்டால் கூட, இரவு பத்து மணியானாலும் பக்தர்களின் குறைகளை கேட்டு உபாயமோ ஆறுதலோ சொல்லுவது வழக்கம். ஒருநாள் எல்லாரும் போனதும், பெரியவா ஸயனிக்க உள்ளே போனார். எனவே சிப்பந்திகள் தாழ்ந்த குரலில் ஏதோ பேசிக் கொண்டிருந்தபோது…….

“நான் பெரியவாளை தர்சனம் பண்ணனும்” குரல் கேட்டு யாரென்று பார்த்தால், ஒரு 12 வயஸ் பையன் மிகவும் பரிதாபமான கோலத்தில் நின்று கொண்டிருந்தான்.

“இப்போல்லாம் பெரியவாளை பாக்க முடியாது……..சாப்டுட்டு ஒரு பக்கமா இங்கியே படுத்துக்கோ….காலேல தர்சனம் பண்ணு” பாரிஷதர் சொன்னார். இப்படி ஒரு பரிதாபமான கோலத்தில் ஒரு பையன் வந்திருக்கிறான் என்று பெரியவாளை எழுப்ப முடியாது. சிறுவன் விடுவதாயில்லை.

“எனக்கு இப்போ பசிக்கலை…பெரியவாளை மட்டும் எப்பிடியாவது தர்சனம் பண்ணனும் அண்ணா…” என்று சொல்லிவிட்டு, மிகவும் களைத்துப்போய் இருந்ததால், ஒரு பக்கமாக படுத்துக் கொண்டுவிட்டான். மறுநாள் காலை பெரியவா சிறுவனை தன்னிடம் அழைத்தார்.

“ஏம்பா….எங்கேர்ந்து வரே? ஓம்பேரென்ன? ஒங்கப்பா அம்மா யாரு? எங்கேயிருக்கா?……..” ஸ்ரீ மாதாவின் குரலை அந்த கன்று இனம் கண்டுகொண்டது. கண்களில் நீர் பெருக அந்த குழந்தைப் பையன் சொன்னான்……….

“பெரியவா…..நான் மெட்ராஸ்ல ஒரு ஸ்கூல்ல படிச்சிண்டிருக்கேன்..எங்கப்பா, அம்மா, தங்கை மூணுபேரும் வெளியூர்ல இருந்தா. அப்பா திடீர்னு செத்துப் போய்ட்டார். அம்மாவும் தங்கையும் ரொம்ப கஷ்டப்பட்டா…பாவம்! அப்புறம் பம்பாய்ல ஒரு பெரிய பணக்கார மாமாவாத்ல சமையல் வேலை பண்ணிண்டு இருந்தா…..[சிறுவன் மேலே பேச முடியாமல் விம்மினான்]
…….திடீர்னு எங்கம்மாவும் செத்துப் போய்ட்டா பெரியவா……..” இதற்கு மேல் குழந்தையால் தொடர முடியாமால், விக்கி விக்கி அழ ஆரம்பித்தான்.

“……அப்பா அம்மா ரெண்டுபேரையுமே என்னால கடைசி வரைக்கும் பாக்க முடியலை பெரியவா. அவாளுக்கு கார்யம் பண்ணக்கூட என்னால முடியாது. நேக்கு இன்னும் பூணூல் போடலை..ங்கறதால பண்ண முடியாதுன்னு சொல்லிட்டா…எனக்கு ரொம்ப அழுகையா வருது பெரியவா…..இப்போ அந்த பம்பாய்ல இருக்கற மாமா வேற, “ஒன்னோட தங்கையை வந்து அழைச்சிண்டு போ!” ன்னு எப்போப்பாத்தாலும் ஆள் விட்டுண்டே இருக்கார்……பெரியவா. நானே கவர்ன்மென்ட் ஸ்கூல் ஹாஸ்டல்ல இருக்கேன். என் அப்பா அம்மாக்கு கர்மாக்களைப் பண்ணனும், என் தங்கையை நன்னா வெச்சுக்கணும்..ன்னு நேக்கும் ரொம்ப ஆசையாத்தான் இருக்கும் பெரியவா. ஆனா, நானே சோத்துக்கு வழி இல்லாம இருக்கேனே! அதான்…..ஒங்களை தர்சனம் பண்ணினா எனக்கு வழி சொல்லுவேள்னு மடத்துக்கு வந்தேன்…..” அழுகையோடு தட்டுத் தடுமாறி சொன்னான். அவனையே சிலவினாடிகள் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அவன் சொல்லித்தானா அவருக்கு தெரியவேண்டும்? அவனைக் காப்பாற்றத்தானே இங்கே வரவழைத்திருக்கிறார்!

“சரி. கொழந்தே! நீ கொஞ்ச நாள் இங்கியே இரு. என்ன?”

“சரி” என்று சந்தோஷமாக தலையாட்டியது அந்த குழந்தை. நாலைந்து நாட்களுக்குப் பிறகு, நெய்வேலியிலிருந்து சில உயர் அதிகாரிகள் பெரியவா தர்சனத்துக்கு வந்தார்கள். அவர்கள் கிளம்பும்போது, எதேச்சையாக அந்த பையன் அந்தப் பக்கம் வர, பெரியவா அவனிடம் ” சட்னு போய், அந்த நெய்வேலிலேர்ந்து வந்தவா போய்ட்டாளான்னு பாரு! போகலைனா, நான் கூப்டேன்னு சொல்லு”……….அவருடைய திருவிளையாடலை யாரறிவார்?

அவர்கள் கிளம்பவில்லை. ஒவ்வொருவராக பெரியவா முன்னால் வர வர, “நீ இல்லை, நீ இல்லை” என்று திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தார். கடைசியாக வந்தவரைப் பார்த்ததும் பெரியவா முகத்தில் ஒரு புன்சிரிப்பு. “ம்ம்ம்ம்..இவரைத்தான் கூப்ட்டேன். இந்தாடா! கொழந்தே! ஒன்னோட கதையை இவர்கிட்ட சொல்லு” என்று சொன்னார். பையன் சொல்ல சொல்ல அதிகாரியின் முகத்தில் ஒரே ப்ரகாசம்!

“பெரியவா……..என்னோட அக்கா பம்பாய்ல இருக்கா.அவாத்துலதான் இந்த பையனோட அம்மா சமையல் வேலை பாத்துண்டு இருந்தா. அந்த அம்மா செத்துப் போனதும், என் மூலமாத்தான் இந்த பையனுக்கு தகவல் போச்சு! இவன் தங்கையை அழைச்சிண்டு போகணும்..ன்னு என் மூலமாத்தான் அவா சொல்லிண்டு இருந்தா…….” என்று மனஸார ஒப்புக்கொண்டார்.
i
“ரொம்ப நல்லதாப் போச்சு! இங்க பாரு. இந்த கொழந்தை பெத்தவாளை பறிகுடுத்துட்டு தவிக்கறான்…..இவனோட, இவன் தங்கையையும் ஒன்னோட அழைச்சிண்டு போய், அவாளை படிக்கவெச்சு, ஆளாக்கறது ஒன்னோட பொறுப்பு! மொதல்ல இவனுக்கு உபநயனம் பண்ணி வை. அவனைப் பெத்தவாளுக்கு கர்மாக்களை அவன் கையால பண்ண வை. ஆகக்கூடி, இவா ரெண்டு பேரோட எதிர்காலத்துக்கு நீதான் எல்லாம் பண்ணனும். என்ன செய்வியா?”

அதிகாரிக்கோ சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை! பிரமிப்போ அதை விட பன்மடங்கு ! என்ன ஒரு லீலை! எப்படி கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்! எல்லாரையும் விட்டுவிட்டு தன்னிடம் அவர் கட்டளை இட்டது, தனக்கு கிடைத்த பெரும் பாக்யம் என்று பூரித்துப் போனார்.

அக்ஷணமே பெரியவா பாதத்தில் விழுந்து அந்த பையனையும், அவன் தங்கையையும் தன் சொந்தக் குழந்தைகள் போல் பாதுகாப்பதாக உறுதி மொழி குடுத்தார். பெரியவாளை நம்பினார் கெடுவதில்லை என்று அந்த குட்டிப் பையனுக்குக் கூட தெரிந்திருக்கிறது.

Posted in FB by Sugavanam Krishnan

grsastrigal
Posts: 863
Joined: 27 Dec 2006, 10:52

Re: Kanchi Maha Periyava

Post by grsastrigal »

சாண்டோ சின்னப்ப தேவரும் கண்ணதாசனும் ஒரு படப்பிடிப்பு சம்பந்தமாக காரில் போய்க் கொண்டிருந்தபோது மிக மோசமான விபத்து ஏற்பட்டது. அதில் சின்னப்பா தேவருக்கு அவ்வளவாகக் காயம் இல்லை. ஆனால் கண்ணதாசனுக்கு படுகாயம் ஏற்பட்டு நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் இருந்தார்.

காஞ்சிப் பெரியவரிடம் மிகுந்த பக்தியும் மரியாதையும் கொண்ட தேவர் அவர்கள், சிவஸ்தானம் எனப்படும் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பெரியவரைப் பார்த்து வணங்கி ‘விபத்து நேர்ந்து விட்டது’ என்று சொன்ன மாத்திரத்தில் ‘கண்ணதாசன் எப்படியிருக்கிறான்’ என்றும் பெரியவர் கேட்க, அதிர்ந்து போனார் தேவர். கண்கள் கலங்க வியப்பும் வருத்தமுமாய் “அவர் படுகாயத்துடன் நினைவில்லாமல் மருத்துவமனையில் இருக்கிறார்” என நா தழுதழுக்கக் கூறினார்.

தேவரின் கவலையை உணர்ந்த பெரியவர், ‘சரி, கவலைப்படாதே. இந்த விபூதியைக் கொண்டுபோய், அவன் நெற்றியில் இட்டு, வாயிலும் சிறிதளவு போடு, மீதி இருப்பதை அவன் தலையணைக்குக் கீழ் வைத்துவிடு’ என்று தன் திருக்கரங்களால் விபூதி எடுத்து மடித்துத் தர, தேவர் விதிர் விதிர்த்து, பெரியவரை மறுத்துப் பேசவும் துணிவின்றி தயங்க, மீண்டும் பெரியவரின் கட்டளைக்கிணங்கி தயக்கத்தோடு கைநீட்டி விபூதியைப் பெறுகிறார்.

தேவரின் தயக்கத்திற்குக் காரணம், கண்ணதாசன் நாத்திகத்தில் தீவிர ஈடுபாடு கொண்டு, திராவிட கட்சிகளின் சார்பில் பிராமணர்களையும் சனாதன தர்மத்தையும் நாக்கில் நரம்பில்லாது போல் மேடைகளில் பேசி வந்த காலகட்டம் அது. விபத்து நடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு எதிரிலேயே நடந்த கூட்டத்தின் மேடையில் படுபயங்கரமாகப் பேசி மடாதிபதிகளை இழிவுபடுத்திப் பேசியிருந்தார். எனவே அவரிடம் போய் இந்த விபூதியை எப்படிக் கொடுப்பது என்பதுதான் தேவரின் பெரியத் தயக்கமாயிருந்தது.

ஆனால் முக்காலமுணர்ந்த ஞானியாகிய பெரியவர், தேவரின் மனத்தயக்கத்தை உணர்ந்து ‘தயங்காமல் கொண்டுபோய் பூசு. சூரியனை சில சமயம் மேகம் மறைப்பது போல் நாத்திகமேகம் இதுவரை அவனை மறைத்திருந்தது. இனி அவன் சூரியனாகத் திகழ்வான். அவன் எப்பேர்ப்பட்ட பரம்பரையைச் சேர்ந்தவன் தெரியுமா? கோவில் திருப்பணி செய்வதற்கே பிறந்தவர்கள் போல் திகழ்ந்தவர்கள் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள். வரதராஜப் பெருமாள் கோவில் கோபுரத் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் கொள்ளுத் தாத்தா. ஏகாம்பரநாதர் கோவில் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் தாத்தா. காமாக்ஷி கோவில் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் தகப்பனார். இப்ப புரியறதா?’ என திருவாய் மலர்ந்தருளினார்.

தேவர் மனந்தெளிந்தவராய் பெரியவரை வணங்கி விடைபெற்று, நேராக மருத்துவமனைக்குச் சென்றார். நினைவிழந்து படுத்திருந்த கண்ணதாசனின் நெற்றியில் விபூதியைப் பூசிவிட்டு சிறிது விபூதியை வாயிலும் இட்டு, மீதியை தலையணையின் கீழ் வைத்துவிட்டு வீடு திரும்பினார். அவர் சிந்தனையெல்லாம் கண்ணதாசன் நினைவு திரும்பி நடந்ததை அறிந்து என்ன சொல்வாரோ என்றே நினைத்தது.

மறுநாள் தேவர் மருத்துவமனை சென்று கண்ணதாசனின் படுக்கையை சற்றே படபடக்கும் நெஞ்சோடு நெருங்கியபோது கண்ணதாசனுக்கு நினைவு திரும்பி கண் விழித்திருந்தார். தேவரைப் பார்த்தவுடன், ‘வாங்க, எத்தனை நாளா இப்படி படுக்கையில் இருக்கேன். கொஞ்சம் கண்ணாடியை எடுத்துக் கொடுங்களேன். என் முகத்தைப் பார்க்கணும்’ என்றார்.

நேற்று இட்ட விபூதி இன்னமும் நெற்றியில் திகழ, தேவர் தயங்கியபடியே தந்த கண்ணாடியில் தன் முகம் கண்ட கண்ணதாசன் ‘இதென்ன விபூதி?’ என்று தேவரை ஏறிட்டுப் பார்க்க, வேறு வழியின்றி வந்தது வரட்டுமென தேவர், தான் பெரியவரைப் பார்த்ததையும், பெரியவர் ஆசீர்வாதம் செய்து விபூதி கொடுத்ததையும் சொல்ல, கண்ணதாசனின் விழிகளில் அருவியெனக் கொட்டியது கண்ணீர். திகைத்து நின்ற தேவரின் செவிகளில் தேனாகப் பாயந்தது கண்ணதாசனின் வார்த்தைகள், ‘எனக்கா? என்னிடமா இவ்வளவு கருணை? போனவாரம்தான் அவரை, ஐயோ’ என வாய்விட்டுப் புலம்பி அழுததோடு, தேவரிடம் ஒரு வேண்டுகோளையும் சமர்ப்பித்தார். ‘எனக்கு உடல்நலமாகி மருத்துவமனையிலிருந்து வெளியேறும் சமயம் நான் வீட்டிற்குச் செல்லமாட்டேன். இந்தப் பாவியிடம் கருணைவைத்த அந்த மகானிடம் முதலில் என்னை தயவுசெய்து அழைத்துச் செல்லுங்கள்’ என மனமுருகி வேண்டினார்.

கண்ணதாசன் வேண்டியபடியே அந்த நல்ல சந்திப்பும், பாவமன்னிப்பும் நடந்தது. மாறியது மனம், நன்றியில் ஊறியது தினம், வீறிட்டு வெளிவந்தது ஒரு கவிதை. அக்கவிதையை எடுத்துக் கொண்டு, பெரியவரை நேரில் கண்டு வணங்கி, கவிதையைச் சமர்ப்பித்தார், கண்ணதாசன். அக்கவிதை இதோ :

பார்த்த மாத்திரத்தில் பாவத்தை அலம்புகின்ற
தீர்த்தப் பெருக்கு, திருவாசகத்தின் உட்கருத்து
கூர்த்த மதியால் மெய்ஞானக் கருத்துணர்த்தும் முழுமூர்த்தம்
கலிமொய்க்கும் இவ்வுலகைக் காக்கவந்த கண்கண்ட தெய்வம்
எம்மதத்தோரும் சம்மதத்துடன் தம்மதத் தலைவனென
தொழுதேத்தும் தெய்வக் கமலக் கழல் தொழுவோம் வாரீர்!

கவிதை வரிகளைக் கண்ட பெரியவர், கண்ணதாசனைக் கனிவோடு நோக்கி, ‘அனந்த கோடி அற்புத லீலா சாகித்ய மாயமானுஷாய நமோ நமஹ, அர்த்தநாரி திருவண்ணாமலை சேஷாத்ரி மகானுக்கல்லவா இது பொருந்தும்’ என்று அருளாசிக் கூறி, ‘அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் நிர்மலப் பொருள் ஞானசூரியனாம், மதத்தின் பெருமையை எழுது’ என்று திருவாய் மலர்ந்தருள, அக்கணமே கண்ணதாசனின் மனதில் “அர்த்தமுள்ள இந்துமதம்” அழகாய் அரும்பி பலநாள் உழைப்பில் இதழ்விரித்து மணம் வீசியது.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

காஞ்சி மஹானை சந்தித்த ஸ்ரீ ஞானானந்தகிரி ஸ்வாமிகள் ( Shared from Shri. Bhaskaran Shivaraman )
---------------------------------------------------------------------------------

மஹான் களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது. ஆனால் அவர்களை வழிபடுபவர்களின் மனப்பக்குவத்தில் தான் வித்தியாசம் ஏற்படுகிறது. ஒரு குருநாதரை ஏற்று கொண்டு மற்றவரை வெறுக்காமல், மஹானுக்கு மஹான் வித்தியாசம் என்ற நிலை மேற்கொள்ளாமல் அனைவரும் சமம் என்று வணங்கவேண்டும் .

ஒரு சமயம் தபோவனத்தில் பகல் வேளையில் குருநாதர் (ஸ்ரீ ஞானானந்தகிரி ஸ்வாமிகள்) முன்னிலையில் அமர்ந்து பாடி கொண்டிருந்தோம். திடீரென்று எழுந்த ஸ்வாமிகள் உள்ளே சென்று பின் வெகு நேரமாகியும் வெளி வரவில்லை. நாங்கள் தொடர்ந்து பாடிகொண்டிருந்தோம். சுமார் 2 மணி நேரம் கழித்து அப்போது தான் குளித்துவிட்டு வந்தது போன்ற தோற்றத்துடன் வெளியே வந்தார். வந்தவுடன் சொன்னார் "அங்கே இளையாத்தங்குடியில் ஆச்சார்யாள் பெரிய பூஜை பண்றாங்க. அதுக்கு ஸ்வாமி யை கூப்பிட்டு இருந்தாங்க. போய் வர நேரம் ஆகிவிட்டது".

பலருக்கு அது ஸ்வாமியின் பல ஆச்சரிய லீலைகளில் ஒன்று என தோன்றினாலும் ஒரு சிலருக்கு மட்டும் சுவாமியின் வார்த்தைகளில் சந்தேகம் வந்தது. சிறிது நேரத்திற்கேல்லாம் பஜனை முடிந்தது. சந்தேகப்பட்ட நபர்கள் ஊர் திரும்பி செல்ல உத்தரவு வேண்டி நின்றனர். ஸ்வாமி அவர்களை "இருந்து விட்டு நாளை போகலாம்" என்று கூற அவர்களும் ஸ்வாமியின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு தங்கிவிட்டனர்.

மறுநாள் காலையில் தினசரி வழிபாட்டுக்கு ஒரு புதிய தம்பதியர் வந்தனர். ஸ்வாமி அவர்களை பார்த்து "நாம் எங்கிருந்து வருகிறது" என்று கேட்க அவர்கள் " இளையாத்தங்குடியிலிருந்து வருகிறோம்" என்றனர். அதற்க்கு ஸ்வாமி "அப்படியா! அங்கு என்ன விசேஷம் " என்று கேட்க அவர்கள் சொன்னார்கள் " நேற்று மஹா பெரியவர்கள் விசேஷ பூஜை பண்ணினார்கள். நைவேத்யம் செய்யும் சமயம் ஒரு ஆடு வந்தது. பெரியவாள் அந்த நைவேத்தியத்தை அதனிடம் காண்பிக்க அந்த ஆடு சிலவற்றை சாப்பிட்டவுடன் பெரியவாள் தீபாரதனை பண்ணினார்கள். பிறகு அந்த ஆடு அங்கிருந்து போய் விட்டது. அப்போது பெரியவாள் "இன்றைய பூஜைக்கு தபோவனம் பெரியவாளை கூப்பிட்டுருந்தேன். அவர்கள் தான் இப்போது வந்து சென்றார்க்ள்" என்று சொன்னவுடன் நாங்கள் ஊருக்கு கிளம்பும் சமயம் அவரிடம் தபோவனம் பெரியவாள் யார் ஸ்வாமி என்று கேட்க அவர் தங்களை பற்றி சொல்லி அவசியம் தரிசித்து வரவும் என்று ஆசிர்வதித்து அனுப்பினார் என்றனர்.

உடன் இருந்த அந்த சந்தேகப்பட்ட நபர்கள் நால்வரும் வெட்கி தலை குனிந்தனர்.

thanjavooran
Posts: 2986
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

சுமார் 60 வருஷங்களுக்கு முன்பு பரமாச்சாரியார் தஞ்சாவூர் ஜில்லாவில் திக்விஜயம் செய்து கொண்டிருந்த நேரம். மாயவரத்தில் பரமாச்சாரியாரின் பட்டணப் பிரவேசத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். பரமாச்சாரியாரின் பட்டணப் பிரவேசம் என்று சொன்னால் யானை, குதிரை எல்லாம் முன்னால் ஊர்வலமாக வரும். பரமாச்சாரியார் பல்லக்கில் வருவார்.

தருமபுரம் மடம் வழியாக பரமாச்சாரியாரின் பல்லக்கு வந்தது. அங்கே பூர்ணகும்ப மரியாதையுடன் தருமபுரம் ஆதீனத்துக்கு விஜயம் செய்தார் அவர். பண்டார சந்நிதி அவரை கெüரவம் செய்து மடத்திற்கு அழைத்துச் சென்றார். பிறகு மயிலாடுதுறைக்குள் நுழைந்தது பரமாச்சாரியாரின் பட்டணப் பிரவேச ஊர்வலம்.

நாகஸ்வர சக்ரவர்த்தி டி.என்.ராஜரத்தினம் பிள்ளை பெயரில் மட்டுமல்ல, நிஜமாகவே ஒரு ராஜாவைப் போல வாழ்ந்தவர். அவருடைய லெட்டர்பேடில் "அகில உலக நாகஸ்வர சக்கரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை அவர்கள்' என்றுதான் அச்சிடப்பட்டிருக்கும். கப்பல் போன்ற ஸ்டுடிபேக்கர் காரில்தான் பயணிப்பார். இந்த சந்தர்ப்பத்தில் வெளியூரில் கச்சேரி செய்துவிட்டு திருவாவடுதுறை திரும்பிக் கொண்டிருந்தார் டி.என்.ஆர்.

அந்த நாளில் மாயவரத்தில் பிரபலமான காளியாக்குடி ஹோட்டல் அருகில் உள்ள மணிக்கூண்டு வழியாக சென்று கொண்டிருந்த டி.என்.ஆர். கூட்டத்தைப் பார்த்துவிட்டு "என்ன விசேஷம்?' என்று வினவினார். பரமாச்சாரியாரின் பட்டணப் பிரவேசம் வந்து கொண்டிருக்கிறது என்றும் அடுத்த தெருவில் இருக்கிறது என்றும் கேள்விப்பட்டவுடன் வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தச் சொன்னார். சட்டையைக் கழற்றினார். அங்கவஸ்திரத்தை இடுப்பில் சுற்றிக் கட்டிக் கொண்டார். மணிக்கூண்டு அருகில் நின்று கொண்டு நாயனம் வாசிக்கத் தொடங்கிவிட்டார்.

இவரது நாயன சங்கீதம் காதில் விழுந்தவுடன், "ராஜரத்தினம் வாசிப்பு போலிருக்கிறதே, அங்கே போங்கோ' என்று பரமாச்சாரியார் உத்தரவிட்டு, பட்டணப் பிரவேச ஊர்வலத்துடன் பல்லக்கு மணிக்கூண்டை நோக்கி நகர்ந்தது. இதைத்தானே ராஜரத்தினம் பிள்ளை எதிர்பார்த்தார்! அவருக்கு பரம சந்தோஷம். உற்சாகம் தாங்கவில்லை. அடுத்த ஒன்றரை மணி நேரம் மணிக்கூண்டு அருகில் நின்றபடியே வாசித்துக் கொண்டிருந்தார் டி.என்.ஆர். மாயவரம் நகரமே அங்கே கூடிவிட்டது.
பரமாச்சாரியார் ராஜரத்தினம் பிள்ளையின் வாசிப்பை மெய்மறந்து கேட்டு ரசித்தார். அவருக்கு ஒரு சாத்துக்குடி பழத்தை ஆசிர்வாதமாக வழங்கினார். சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து விட்டு நாகஸ்வர சக்ரவர்த்தி சொன்னார்- "இந்த ஜென்மா சாபல்யம் அடைந்துவிட்டது!"

arasi
Posts: 16789
Joined: 22 Jun 2006, 09:30

Re: Kanchi Maha Periyava

Post by arasi »

pATTum bhakthiyum kalandu piravahitha paravasa nilai, ellOrukkumE AyiTRu!

thanjavooran
Posts: 2986
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

from my friend ;--
அவதார புருஷர்- பெரியவா

காஞ்சியில் ஒரு கோவிலில் பெரியவா எல்லாருக்கும் தர்சனம் குடுத்துக் கொண்டிருந்தார். அப்போது உணர்ச்சிப் பெருக்கை உடலால் சமாளிக்க முடியாமல் ஒரு தம்பதி தங்கள் பெண் குழந்தையுடன் வந்து பெரியவாளை நமஸ்கரித்தனர்.

அவதார புருஷர்- பெரியவா
அவதார புருஷர்- பெரியவா

”ஆந்த்ரப்ரபா” பத்திரிகையின் ஆசிரியரும், காந்திஜியின் நெருக்கமான தோழருமான நீலம் ராஜு வேங்கடஸேஷைய்யாவின; புதல்விதான் அந்த அம்மா. பெரியவா அவர்களுடைய க்ஷேம லாபங்களை விஜாரித்தார். அவர்கள் கண்களில் கண்ணீர் வழிந்தோட கூறியதை கேட்டு, சுற்றி நின்று கொண்டிருந்த அத்தனை பேருக்கும் மயிர்க்கூச்சல் எடுத்தது..
“இன்னிக்கு பெரியவாளோட க்ருபையாலதான் இங்க வந்திருக்கோம்…நாஙக லண்டன்ல இருக்கோம். கொஞ்ச நாளைக்கு முன்னால [ஏதோ ஒரு தேசத்தின் பெயரைக் கூறி] அந்த country க்கு flight ல போய்ண்டிருந்தோம். திடீர்னு இஞ்சின்ல ஏதோ பெரிய கோளாறு. அதுனால safe landing கூட முடியாது..ங்கற மாதிரி பைலட் எல்லாருக்கும் ரெட் சிக்னல் குடுத்தார். விமானத்துக்குள்ள இருந்த அத்தனை பேரோட மனநிலையும் சொல்லக் கூட முடியாது!

ஆனா, உயிரே போகப்போறது..ங்கற நிலைமைல எங்களால பெரியவாளைத் தவிர வேற எதையுமே நினைக்கத் தோணலை! பெரியவாளோட சரணங்களை மானசீகமா கெட்டியா பிடிச்சிண்டோம்! எங்களோட பயம் பயமாத் தெரியலை! எங்களோட டிராவல் பண்ணிக் கொண்டிருந்த அத்தனை வெளிநாட்டுக்காராளயும் தைரியமா இருக்கச் சொல்லி, “Sage of Kanchi ” ன்னு பெரியவாளை நாங்க தெய்வமாவே வர்ணிச்சு, ஆபத்பாந்தவர் அவரை வேண்டிண்டா, எந்த பெரிய விபத்தும் ஓடிப் போய்டும்ன்னு சொன்னதும், ப்ராணாபத்து வந்தா, பொழைக்கறதுக்கு எதைத்தான் பிடிச்சுக்க மாட்டா? அன்னிக்கி அந்த முழு விமானமும் பெரியவாளை த்யானிக்கற, பெரியவாளோட திருவடில தஞ்சமடையற த்யானகூடமாயிடுத்த

கொஞ்ச நேரத்துல பைலட்டுகளுக்கு cooperate பண்ணாத முக்யமான இஞ்சின்கள், கருவிகள் எல்லாமே ஏதோ அதிசயமா “miracle “ன்னு அத்தனை பேரும் [பைலட்டுகள் உட்பட] ஆச்சர்யப்படும்படி ரொம்ப லகுவா வேலை செய்ய ஆரம்பிச்சுடுத்து! சாவோட விளிம்புலேர்ந்து எங்க எல்லாரையும் பெரியவா காப்பாத்திட்டா! விமானம் கீழ இறங்கினதும், பைலட்டுலேர்ந்து அத்தனை பேரும் எங்களை சூழ்ந்துண்டு, Kanchi Sage க்கு லெட்டர் எழுதினாலோ, அவரை பார்த்தாலோ, எங்க எல்லாரோட இதயபூர்வமான நன்றியையும், நமஸ்காரத்தையும் கட்டாயம் அவருக்கு தெரிவிக்கணும்ன்னு ரொம்ப கேட்டுண்டா….எங்களு கோ ஒடனே இந்தியாவுக்கு வந்து பெரியவாளை தர்சனம் பண்ணி, அவருக்கு பாதபூஜை பண்ணனும்னு ரொம்ப தவியா தவிச்சு, நேரே இங்க வந்துட்டோம்…” என்று விம்மல்களுக்கிடைய சொல்லி முடித்தனர்.

ஆனால் பெரியவாளோ எப்போதும்போல் தனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி, தனக்கு அவர்கள் சொல்லித்தான் எதுவுமே தெரிந்தா மாதிரி மலர்ந்து சிரித்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தார். பாரிஷதரிடம் பாதுகைகளை கொண்டு வரச் சொல்லிவிட்டு, அவர்களுடைய சின்னப் பெண் குழந்தையை அருகில் அழைத்து, பெற்றோர் கொண்டுவந்திருந்த ஸ்வர்ணபுஷ்பங்கள், வாஸனை புஷ்பங்கள் எல்லாவற்றையும் அதன் குட்டி பூ போன்ற கைகளால் அள்ளி அள்ளி போடச் சொன்னார். அதுவும் அழகாக அர்ச்சனையாகவே பாதுகைக்கு புஷ்பங்களைப் போட்டது.

பெரியவா அந்த தம்பதியிடம் “நீங்க ரெண்டு பேரும் சேந்துதான் இந்தக் கொழந்தை. இது பண்ற பூஜை, நீங்களே பண்ணறதுதான்! அதோட ஒங்க கையால பண்றதை விட, இது குட்டிக் கையால பண்ணறச்சே நெறைய அர்ச்சனை, நெறைய நாழி நடக்கும்!” என்று தெலுங்கில் கூறினார். அன்று அங்கு எல்லோருமே அந்த ஆனந்தத்தை அனுபவித்தனர்.

அவதார புருஷர்களிடம் உண்மையான பக்தி கொண்டவர்கள், எங்கிருந்தாலும் எந்த ஆபத்திலிருந்தும் நிச்சயம் காப்பாற்றப் படுவார்கள்.

மோரின் தத்துவம் – மகா பெரியவர்

“எல்லோரும் ’ஈகோ‘வுடன் பிறக்கிறார்கள்.அதுதான் ஆரம்பம். அதையே முதலில் சாப்பிடும் ‘தானோடு‘சேர்ந்த குழம்பு காட்டுகிறது.பலவிதமாகக் குழம்புவதால் பிடிக்காமல் போகும் வாழ்க்கையே மனசு தெளிந்து விட்டால்,பிடித்துப் போகிறது. ரசமாகி இருக்கிறது. அதனால் பிறக்கும் ஆனந்தம்-இனிமை. இவைதான் பாயசம்,பட்சணம். இனிமையையே அனுபவித்துக் கொண்டிருந்தால் திகட்டிவிடுமே! அதற்கு மேல் போய் பிரும்மானந்தத்துடன் லயிக்க வேண்டாமா? அதுதான் ‘மோர்‘. அந்த நிலை சாஸ்வதமானது.

மஹா பெரியவா
மஹா பெரியவா

பாலை எடுத்துக் கொண்டால் அதிலிருந்து தயிர்,வெண்ணெய், நெய் என்று ஏதாவது மாறுதல் வந்து கொண்டே இருக்கிறது.
ஆனால், மோர் நிலையை அடைந்த பிறகு அதிலிருந்து எதையும் எடுக்கவும் முடியாது-கலக்கவும் முடியாது.அதுவே முடிவான நிலை.வெள்ளையாக இருக்கும்.சத்துவ மயமான பரமாத்மாவைக் கலந்த பிறகு மேலே தொடர எதுவுமில்லை. மோர் சாதம் முடிந்தபின் இலையை எடுத்துவிட்டு எழுந்திருக்க வேண்டியதுதான்!”

இப்படியாக மிகப் பெரிய விஷயத்தை ஒரு சாப்பாட்டு ராமனுக்கு மிக எளிமையாக உபதேசித்துவிடுகிறார் மகா பெரியவர்.

பெரியவா என்றால் யார் ?


– சதாசிவ சர்மா

ஒரு நாள் ஏகாந்தமாகவும் விஸ்ராந்தியாகவும் இருக்கும் பொழுது என்னுடன் பேசியது:

ஸ்ரீ பெரியவா:ஏண்டா, பெரியவான்னா என்ன?

நான்:(பதில் சொல்ல முடியாமல் முழித்தேன்)

ஸ்ரீ பெரியவா: தெரியலயா……… பெ ரி ய வா …..ன்னா என்ன? நான்: (உண்மையாகவே ஒன்றும் புரியாமல் இருந்தேன்)

பெரியவா :ரி ………..ரி-ன்னா ரிக் வேதம் ய …………ய -ன்னா யஜுர் வேதம் இப்ப வார்த்த முடியப் போறது ங்கற மாதிரி கடைசி வேதத்தின்……அதாவது அதர்வ வேதத்தின் கடைசி எழுத்தான ‘வ’.

இதை சேக்கறதுக்கு முன்னாடி சாம வேதத்துக்கு உயிர் நாடி கானம். அ…..அ…..அ… ன்னு நிறைய வரும். அது சேந்துண்டு இருக்கு. அதாவது ரி …….ய…….அ………வ. இப்ப அ+வ = வா……. இப்ப ரி ……ய…… வா சரியாய்டுத்தா..?

ஏதோ என்னால முடிஞ்சது பெரியவாளோட வேத சம்பந்தப்படுத்திட்டேன்னு பாக்கிறயா..?ஒரே ஒரு எழுத்து மிச்சமிருக்கே! ‘பெ’ அத என்ன பண்றது?.

(ஸ்ரீ பெரியவா என்னை நிமிர்ந்து பார்த்து என் பதிலை எதிர் பார்ப்பது போல் இருந்தது. நான் ஒன்றும் புரியாமலும், தெரியாததாலும் பதில் சொல்லாமல் இருந்தேன்) ஸ்ரீ பெரியவா: என்ன முழிக்கறே? ஒண்ணும் புரியாம, தெரியாம இருக்கறதுக்கு என்ன பெயர் தெரியுமா? அஞ்ஞானம்னு சொல்லுவா. அந்த அஞ்ஞானமா இருக்கறவாள பாத்து பேந்த்த பேந்த்த முழிக்கறத ‘பெ’ ன்னு முழிக்கறதா சொல்லலாம் இல்லையா? அப்போ ‘பெ’ ங்கறது அஞ்ஞான வார்த்தையாயிடறது.

இப்ப எல்லாதையும் சேத்தாக்க, அஞ்ஞானத்தோட இருக்கறவாளை வேதத்தோட சம்பந்தப்படுத்தறது தான் இந்த வார்த்தைன்னு தெரியறதா?.

அஞ்ஞானிகளை யார் ரிக், யஜுர், சாம அதர்வ வேத மார்க்கத்திலே மாத்தறாளோ அவாதான் “பெரியவா“

(எனக்கு இப்போதுதான் புரிந்தது அஞ்ஞானியான என்னை வேத மார்க்கத்தைக் காட்டியவராக இவர் இருப்பதினால்தான் நாம், ஏன், எல்லோருமே “பெரியவா” என்று கூப்பிடுகிறோம்னு.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

ஒரு பாதிரியார் பெரியவாளை தர்சனம் பண்ண வந்தார். ஒரு பெரிய தட்டு நிறைய பழங்களை சமர்ப்பித்து விட்டு, தங்கள் மத வழக்கப்படி தலை, மார்பு, தோள்கள் இவற்றை விரல்களால் தொட்டு, ஒரு கிராஸ் போட்டுவிட்டு தன் வணக்கத்தை தெரிவித்துக் கொண்டார். அவர் நிறைய படித்தவர்; அபரிமிதமான பேச்சாற்றலால், மதக் கொள்கைகளை அடுக்கிக் கொண்டே போனார். தங்கள் மதத்தைத் தவிர வேறு எந்த மதத்திலும் இப்பேர்ப்பட்ட அருமையான கொள்கைகள் இல்லவேயில்லை என்று நிலை நாட்ட விரும்பிய வேகம், வெறி அவர் பேச்சில் தொனித்தது......யாரிடம்?

"அன்புதான் எங்க கொள்கையில ரொம்ப முக்கியமானது; எல்லோரிடமும் வேற்றுமை பாராட்டாமல், அன்பு செலுத்தியவர் எங்கள் பிதா.." மேற்கொண்டு அவரை பேசவிடாமல் அவருடைய மனசாக்ஷியே தடுத்தது போல், பேச்சை நிறுத்திக் கொண்டார். காரணம், எங்கள் பிதா...என்று அவர் சொல்லி முடித்ததும் பெரியவா லேஸாக புன்னகைத்ததும், பாதிரியாரின் பேச்சு நின்றது.

"ஹிந்து மதத்லேயும் அன்புக்கு ரொம்ப முக்யத்வம் உண்டு! "அன்பே சிவம்"...ங்கறது பெரியவால்லாம் சொன்ன வாக்கு! திருமூலர்ன்னு ஒரு பெரியவர் திருமந்திரம்ன்னு ரொம்ப ஒசத்தியான புஸ்தகம் எழுதியிருக்கார். அதுல அன்பைப்பத்தி, மனித நேயத்தைப் பத்தி ரொம்ப அழுத்தமா சொல்லியிருக்கார்.

விஷ்ணு சஹஸ்ரநாமம்...ன்னு மஹாபாரதத்ல வருது. அதுல, "கரணம், காரணம், கர்த்தா, விகர்த்தா"ன்னு பகவானுக்கு பேர் சொல்லப்பட்டிருக்கு. நீங்களும் ஜீஸஸ்ஸை கர்த்தர்..ன்னு சொல்லறேள். உங்க மதத்துக்கு எத்தனையோ காலத்துக்கு முன்னாடியிலிருந்தே....நாங்க பகவானை "கர்த்தர்"ன்னு சொல்லிண்டிருக்கோம்!

ஒங்களோட மதப்ரசாரங்கள் எல்லாத்துலயும், எங்களோட மதம், இதிஹாஸ புராணங்கள்,கடவுள்கள் எல்லாத்தையும் நிந்தை பண்றேள்! ஆனா, நாங்க எந்த மதத்தையோ, மதத் தலைவர்களையோ, தெய்வத்தையோ நிந்தனையாவோ, கொறையாவோ பேசறதில்லை! ஏன்னா ஹிந்து மதம்தான் மிச்ச எல்லா மதங்களுக்கும் தாயார் மாதிரி ! ஒரு தாயார், தன்னோட கொழந்தை துஷ்டனா இருந்தாக் கூட திட்ட மாட்டா!.....

நீங்கள்ளாம் ஹிந்து சமயப் பண்டிதாளை மீட் பண்ணறதுக்கு விரும்பாம, எதுவுமே தெரியாத பாமர ஜனங்கள் கிட்டப் போய் வாசாலகமா [வாய் ஜாலமாக] பேசறேள் ! எங்களுக்கு அனுஷ்டானம் முக்யம் ; ஒங்களுக்கு ப்ரசாரம் முக்யம்; அதோட பாமர ஜனங்கள்..ட்ட போனதுமே ஒங்களோட மதத் தத்துவத்தை சொல்றதில்லை; பால் பவுடர், ரொட்டி, துணிமணி...ன்னு குடுத்து ஆசை காட்டி இழுத்துக்கறேள்! மொதல்ல அவாளுக்கு காப்பு மாதிரி பணம் குடுக்கறேள்... அப்றமா மதத்தைப் பத்தி பேசறேள்...."

பாதிரியார் சங்கடமாக நெளிந்தார்! உண்மையை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. ஆனாலும் பெரியவாளுடைய ஒவ்வொரு சொல்லும் அவரைக் கட்டிப் போட்டுவிட்டது!

"எங்கள் கர்த்தர்....தன் ரத்தத்தாலே பாவிகளின் பாவங்களைக் கழுவுகிறார்" கட்டக்கடைசியாக எதையோ சொல்ல வேண்டும் என்று சொன்னார்.

பெரியவா மறுபடியும் புன்னகைத்தார்.... "கர்த்தர்... ரொம்ப கருணையானவர்...ங்கற ஸ்துதி ஞாயந்தான்! ஆனா மத்தவாளை நிந்திக்கக் கூடாதுங்கறதும் ஞாயந்தானே ?...."

பாதிரியார், "நிந்தனை பத்தி என்னை சிந்தனை செய்ய வெச்சிட்டீங்க!.." என்று முக மலர்ச்சியோடு கூறவும், ஒரு பழத்தை ப்ரசாதமாக குடுத்தார் பெரியவா. அவருக்கும் திருக்கரத்தை உயர்த்தி ஆசி வழங்கினார்.

நம்முடைய மதத்தைப் பற்றி நாம் யாரிடமும் ப்ரசாரம் பண்ணி எதையும் ஸ்தாபிக்க அவச்யமேயில்லை! ப்ரசாரம் பண்ணுவதற்கு "இவ்வளவுதான் இதில் இருக்கிறது" என்ற full stop ப்பை நம்முடைய மத நூல்களுக்கு [இதிஹாஸ,புராணங்கள், சாஸ்த்ரங்கள் என்று நீண்டு கொண்டே போகும்] நம்மால் வைக்க முடியாது. சங்கரர், மத்வர், ராமானுஜர், ஆழ்வார்கள், நாயன்மார்கள் இன்னும் ஏகப்பட்ட பக்த சிரோன்மணிகள் கூட ப்ரசாரம் பண்ணாமல், சாஸ்த்ர சம்மதமான தங்கள் அனுஷ்டானத்தில் நமக்கெல்லாம் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.

எனவே அவரவர் எந்தக் கடமையை செய்ய வேண்டுமோ, அதை ஒழுங்காக பண்ணிக் கொண்டிருந்தாலே, நம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது என்பதே மஹான்களின் வாக்கு!

ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.

A share from Chandrasekar Venkatakrishnan

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

காஞ்சிப்பெரியவர் புனே அருகில், ஒரு மலையடிவார கிராமத்தில் முகாமிட்டிருந்தார். அங்கு திருவெண்காட்டைச் சேர்ந்த ஜெயராமன் வந்தார். அவரிடம் பரிவுடன், “”இந்த சின்ன கிராமத்திற்கு கூட வந்திருக்கியே. பரம சந்தோஷம்! ஒவ்வொரு நாள் காலை பூஜையின்போது நீ தீட்சிதர் கீர்த்தனைகளைப் பாடு. நாங்கள் எல்லோரும் கேட்கவேண்டும்,” என்றார்.

ஜெயராமனுக்கு பூரிப்பு. ஒருநாள் வெள்ளிக் கிழமை பூஜை… பூஜை முடிந்ததும் சுக்கிரவார கீர்த்தனையைப் பாடத்தொடங்கினார் ஜெயராமன். அன்று யாருக்கும் பெரியவர் பிரசாதம் கொடுக்கவில்லை. ஜெயராமனுக்கு மட்டும் பிரசாதம் கொடுத்து சென்னைக்கு கிளம்பிச் செல்ல உத்தரவிட்டார்.

பெரியவர் கண்டிப்பாக சொன்னதும் ஜெயராமனுக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் பெரியவர் சொல்வதில் ஏதோ உள்ளர்த்தம் இருக்கும் என்று மனதிற்கு தோன்றியது. மறுவார்த்தை பேசாமல் சென்னை சென்றுவிட்டார். வீட்டுக்கு வந்ததும் அவரது குருநாதர் மதுரை மணிஐயர் வீட்டிலிருந்து உடனே வரும்படி அழைப்பு வந்தது.

குருநாதருக்கு ஏதோ அவசரம் என்பதை உணர்ந்த ஜெயராமன் அவரது வீட்டுக்குக்குச் சென்றார். இரண்டு நாட்கள் இரவும் பகலும் குருநாதர் அருகில் இருந்து சேவை செய்தார். மதுரை மணி ஐயர் இறைவனடி சேர்ந்தார். தன் குருநாதரின் இறுதிக்காலத்தில், அவருக்கு சேவை செய்யும் பாக்கியத்தை அளிப் பதற்காகவே பெரியவர் தன்னை சென்னை அனுப்பினார் என்பதை அறிந்த ஜெயராமனின் உள்ளம் உருகியது.

SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGALE CHARANAM

shared from Balaji Kothandan FB

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

கண் கலங்கின மகா பெரியவா!

பெரியவாளை வந்து நமஸ்கரித்தாள் ஒரு வயஸான பாட்டி. அவள் கண்கள் மடையாக பெருக்கெடுத்தது. பெரியவா அவளுடைய மனஸின் வலியை உணர்ந்ததால், அவளாக அழுது ஓயட்டும் என்று பொறுமையாக இருந்தார்.
>
> "இத்தனை வயசுக்கப்புறம், எனக்கு இப்பிடி ஒரு புத்ரசோகத்தை தாங்கிக்கணுமா? எனக்கு கொள்ளி போட வேண்டிய கொழந்தை அவசர அவசரமா போய்ச் சேந்துட்டானே! எனக்கிருந்த ஒரே ஆதரவு அவன்தானே பெரியவா!...கொழந்தை மனசுல என்னென்ன ஆசைகளோட போனானோ தெரியலியே!....." கதறினாள். கலக்கம் என்பதே இல்லாத அந்த மஹா மனஸ் இப்போது கண்களில் துளிர்த்த கண்ணீரை அடக்க முடியாமல் வெளிவிட்டது.
>
> சன்யாசிகளின் கண்ணீர் பூமியில் விழக்கூடாது என்று சாஸ்த்ரம் சொல்லுவதால், சட்டென்று குனிந்து கண்ணீரை தன் மடியில் விழுமாறு செய்தார்.
>
> "எனக்கு இப்போ ஒண்ணே ஒண்ணுதான் பண்ணணும். அவனோட ஆத்ம சாந்திக்காக நா...ஏதாவது ஹோமம் பண்ணி அவனை த்ருப்திப் படுத்தணும். பெரியவாதான் எனக்கு கதி. நா என்ன பண்ணட்டும்? எனக்கு ஒரு வழி காட்டுங்கோ பெரியவா....."
>
> அமைதியாக, ஆதரவாக அவளிடம் கூறினார்.....
>
> "நீ எந்தக் கோவிலுக்கும் போவேணாம், எந்த ஹோமமும் பண்ணவேணாம். நீ கிராமத்துலேர்ந்துதானே வரே? அங்க வயல்வெளிகள்ள ஏர் உழுது, நாத்து நடற ஜனங்களை பாத்திருப்பியோன்னோ? பாவம். வேகாத வெய்யில்ல அவா படற ஸ்ரமத்தை நீ தீத்து வை! என்ன பண்ணறேன்னா....பானை நெறைய மோரை எடுத்துண்டு போய், அவாளுக்கெல்லாம் வேணுங்கறமட்டும் குடுத்து, அவாளோட தாகத்தை தணி! இது ஒண்ணுதான்...ஒம்பிள்ளையோட ஆத்மா சாந்தி அடையறதுக்கு ரொம்ப உத்தமமான வழி!.." என்று வெகு சுலபமான ஆனால் உன்னதமான பரிஹாரத்தை சொல்லிவிட்டார்.
>
> ஒரு சாதாரண நீர்மோர் எப்பேர்ப்பட்ட சாந்தியை குடிப்பவருக்கும், கொடுப்பவருக்கும் அளித்து விடுகிறது! இந்த சின்ன தர்மம் பெரியவா வாக்கில் வந்து பெரிய தர்மமாகிவிடுகிறது.

thanjavooran
Posts: 2986
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

shared from my friend

கவலை வேண்டாம் ….நாம சங்கீர்த்தனம் இருக்கே !!!!

வாழ்க்கைல எந்தக் கஷ்டத்தையும் பகவானோட நாமசங்கீர்த்தனம் போக்கிடும். கவலைப்படாதே!

1964ல் சோழவரத்தில் இருந்த ஒரு பள்ளி ஆசிரியர், வேலைப்பளு காரணமாக பெரியவாளை தர்சனம் பண்ண போகமுடியவில்லையே என்று ரொம்ப ஏங்கிக் கொண்டிருந்தார். அன்று காரடையார் நோன்பு. பங்குனி மாசம் ராத்ரி பிறந்ததால், நோன்பையும் ராத்ரி பண்ணிவிட்டு ரொம்ப நேரம் கழித்து அவர் மனைவி தூங்கப் போனாள். அவளுக்கு அற்புதமான ஒரு கனவு!

எந்த ஒரு அவதாரத்தால் காஷாயத்துக்குப் பெருமையோ, அந்த மஹா பெரியவா அந்த அம்மா முன்னால் நிற்கிறார். அவருடைய பாதங்களில் நமஸ்கரிக்கிறாள். பெரியவாளின் தெய்வீக குரல் ஒலிக்கிறது…..
“வாழ்க்கைல எந்தக் கஷ்டத்தையும் பகவானோட நாமசங்கீர்த்தனம் போக்கிடும். கவலைப்படாதே! நா……ஒன்னோட ஆத்துல பூஜை பண்ணுவேன்”…
சந்தோஷத்தில் திடுக்கென்று எழுந்தால், கனவு என்று உணர்ந்தாலும், மனஸ் ரொம்ப நிறைந்து இருந்தது. அடிக்கடி அந்தக் கனவை எண்ணி எண்ணி தம்பதிகள் மகிழ்வார்கள். “ஆனாலும், எனக்கு ரொம்ப பேராசைதான்… மஹா பெரியவா நம்மாத்துல பூஜை பண்றார்…ன்னு எப்பிடி ஆசைப்பட்டிருக்கேன்!..” மனைவி சொன்னாள்.
1965ல் நவம்பர் மாசம் ஏதோ ஒரு ஞாயிற்றுக்கிழமை. மத்யான்னம் அவர்கள் வீட்டு வாசலில் ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து பூணூல், சிகை வைத்துக்கொண்டு பஞ்சகச்சம் கட்டிக் கொண்டு ஒரு பெரியவர் இறங்கினார்.
“மீனாக்ஷி சுந்தரமையர்…..” பெயரைச்சொல்லி விஜாரித்தார்.
“நாந்தான்…..மீனாட்சிசுந்தரம். வாங்கோ! நீங்க யாருன்னு தெரியலியே!.”
“நா….ஸ்ரீமடம் முகாம்லேர்ந்து வரேன்..பெரியவா திருப்பதிலேர்ந்து மெட்ராஸ் வந்துண்டு இருக்கார்…ஒரொரு 15 மைலுக்கு ஒரு எடத்துல தங்கி பூஜை பண்ணிண்டு, மாஸக் கடைசீல மெட்ராஸ் போகணும்ன்னு உத்தேஸம்!….”
[அவர் அடுத்து சொன்ன செய்தியைக் கேட்டு தம்பதிகள் இருவரும் மயக்கம் போடாத குறைதான் !]
“….நவம்பர் 15 இங்க சோழவரத்துல தங்கப் போறா….அதான்….ஒங்களோட க்ருஹத்தை ரெண்டு நாளைக்கு கொஞ்சம் குடுத்தா…..பெரியவா இங்கேயே தங்கி பூஜை, அனுஷ்டானங்கள் பண்ணிப்பார்…..எப்டி, ஒங்களுக்கு சௌகர்யப்படுமா?.”
“சௌகர்ய…படு…மாவா? எங்களோட பரம பாக்யம்…ன்னா !! எத்தனை நாள் வேணாலும் பெரியவா தங்கிக்கலாம். என்ன ஏற்பாடு பண்ணணுமோ சொல்லுங்கோ!..” உணர்ச்சி வேகத்தில் அவர்கள் கண்களில் கண்ணீர் வழிந்தது.
“நாங்க மடத்துலேர்ந்தே எல்லா ஏற்பாடும் பண்ணிடுவோம். எடம் மட்டும் குடுத்தா போறும்..”
அன்று சாயங்காலமே ஊர் முக்யஸ்தர்களை கூப்பிட்டு பெரியவா தன் பரிவாரங்களோடு தங்க, தக்க ஏற்பாடுகளை வகுத்தார்கள். ஒரு தெருவையே மடத்துக்கென்று காலி பண்ணிக் குடுத்தார்கள். யானை, ஒட்டகம் கட்ட, ஆபீஸ், பாரிஷதர்கள் ஓய்வெடுக்க, சமையல் செய்ய, சாப்பாடு போட என்று ஒவ்வொருவரும் ஆசை ஆசையாய் ஏற்பாடு பண்ணினார்கள். சுற்று வட்டார க்ராம மக்கள், தான்யம், காய்கறி கொடுத்தனர். செட்டிநாடு ராஜா அரிசி மூட்டைகளை அனுப்பினார்.
நவம்பர் 14 அன்று பூர்ண கும்பத்தோடு பெரியவாளை ஊர் எல்லையிலிருந்தே தக்க மரியாதையோடு அழைத்து வந்தனர். மூன்று நாட்கள் தங்குவது என்று முடிவானது கடைசியில் ஐந்து நாட்கள் தங்கி அத்தனை பேர் மனங்களையும் குளிரப் பண்ணினார்.
——————————————————————
இப்படி ஊர் ஊராக, க்ராமம் க்ராமமாக பாதங்கள் தேய நடந்து, மூன்று கால பூஜை [அதுவும் க்ரமம் தப்பாத பூஜை], அனுஷ்டானம், சமையல் சாப்பாடு, நேரங்காலம் தெரியாமல் கோடிக்கணக்கான பக்தர்கள் குறைகளை கேட்பது, தீர்வு சொல்வது, பரிவாரங்களோடு, மடிசஞ்சி வைத்துக்கொள்ள கூண்டு வண்டி, வெய்யிலோ, மழையோ, அத்வானக்காடோ, ஆகாசம் பார்க்கும் குடிசையோ, கல்லோ, முள்ளோ எல்லாவற்றையும் “ஒன்றே” எனக்கொண்டு, பெரியவா எதற்காக, யாருக்காக தன்னை இப்படி வருத்திக் கொண்டார்? ”எல்லாம் நமக்காகத்தான்” என்பதை நாம் துளி உணர்ந்தால் கூட, அதுவே நாம் பெரியவாளுக்கு செய்யும் நமஸ்காரம், பூஜை.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Image

Parents:
Father...Subramaniya Sastrigal

Mother...MahaLakshmi

காண வேண்டி நின்ற நின்
புன்னகை தவிழும் முகத்தை
கண்டதும் கனவோ!
நீயே கதி என்று
உன்னருளை வேண்டி நின்ற வேங்கடவன்
என்னை அலைய விடுதல் முறையோ?
என் மனம் நிலையின்றி
தவிப்பது தான் உன் சித்தமா?
சொல்லிதான் புரியுமோ என் துயரம்?
ஆதாரம் நீயே என்று நித்தம் உன் நாமம்
துதித்திடும் அடியேனை கை துக்கி
விடுதல் நின் கடன் அன்றோ?
மெய்ப் பொருள் உரைத்திடும்
வேத வித்தகா!
குமரன் தன் குமாரா!
லஷ்மி தன் தனயா!
உன் பாத தரிசனம் கண்ட பின்னும் பயமேது?
venkat k

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

மாயை

பாலைவனங்களில் நிறைய மான் கூட்டங்கள் இருக்கும். அவற்றுக்கு வெயில் காலத்தில் ஹா ஹா என்று தாகம் எடுக்கும். ஆனால், பாலைவனத்தில் ஜலம் கிடைக்குமா? கிடைக்காவிட்டால் போகிறது... அங்கே ஜலமே கிடைக்காது என்பதாவது தெரிந்துவிட்டால் மான் கூட்டம் பாலைவனத்தை விட்டு வெளியிலே உள்ள நீர் வளமுள்ள நாட்டுக்கு ஓடிவந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். ஆனால், இதையும் செய்ய முடியாமல் ஜலமே இல்லாத பாலைவனத்தில் ஜலம் இருக்கிற மாதிரி ஒரு ஏமாற்று ஜாலம் நடக்கிறது. அதுதான் “கானல்நீர்’ என்பது. பிரதிபிம்பம் ஒளிச்சிதறல் “தியரி’களைக் கொண்டு ஸயன்ஸில் இதை விளக்குகிறார்கள். மொத்தத்தில் இது என்னவென்றால், பாலைவனம் மாதிரியான ஒரு விஸ்தாரமான வெளியில் ரொம்பவும் உஷ்ணம் ஏறிப்போய், காற்று ப்ரதேசம் லேசாகி விடுகிறபோது, தூரத்திலிருந்து பார்க்கிறவர்களுக்கு ஜலத்திலே ப்ரதிபிம்பம் தெரிகிறமாதிரி மண்ணிலேயே தெரிகிறது. தூரத்திலிருந்து பார்க்கிறபோது வெறும் மணற்பாங்கான பூமியே ஒரு நதி ஓடுகிற மாதிரி தெரியும். அதை நோக்கிப் போகப் போக, அதுவும் தள்ளிப் போய்க் கொண்டேயிருக்கும். இப்படிப்பட்ட கானல் நீரைப் பார்த்து மான்கள் வாஸ்தவமான ஜலம் என்று நினைத்து அதைத் தேடித் தேடி ஓடி கடைசியில் ஓட முடியாமல் களைத்து, வெயிலின் உஷ்ணம் தாங்காமல், ரொம்பவும் பரிதாபமாக ஜீவனை இழக்கும். சமஸ்கிருதத்தில் “ம்ருக்’ என்றால் “தேடுவது’ என்று அர்த்தம். ஓயாமல் எதையாவது தேடி ஓடிக் கொண்டே இருப்பதுதான் “ம்ருகம்’. கானல் நீரைத் தேடி ஓடி மடிவது மான் என்ற ம்ருகத்தின் பரிதாபமான கார்யமாக இருக்கிறது! லோகமெல்லாம் மாயை என்று அத்வைத சாஸ்திரத்தில் சொல்லி இரக்கிறது. “அதெப்படி மாயை? லோகம்தான் கண்ணுக்குத் தெரிகிறதே?’ என்று கேட்டால், “கானல் நீர் கூடத்தான் கண்ணுக்குத் தெரிகிறது. அதனால் அது நிஜமாகி விடுமா? அப்படித்தான் இந்த லோகமும் ஒரு கானல்நீர்’ என்று அத்வைத க்ரந்தங்களில் சொல்லி இருக்கிறது.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

thanjavooran
Posts: 2986
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

வேங்கடவா தங்களின் கோரிக்கை கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.. என்ன உருக்கமான வேண்டுகோள். கண்டிப்பாகவே அஞ்ச வேண்டாம்
தங்களின் பெற்றோருக்கு என்னுடைய தாழ்மையான வணக்கங்கள்.
தஞ்சாவூரான்
26 08 2013

thanjavooran
Posts: 2986
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

ராமேஸ்வரத்தில் செக்கு கிடையாது

தகவல்:மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்
காஞ்சி ஸ்ரீமடம் பாலு மாமா

ஒவ்வொரு க்ஷேத்திரத்திலும் தனிப்பட்ட வழிபாட்டு
முறைகள் வழக்கத்திலிருக்கும்.

அந்த க்ஷேத்திரத்தில் இருப்பவர்களுக்கு கூடத்தெரியாத
பல செய்திகள் பெரியவாளுக்குத் தெரிந்திருக்கும்

இராமேஸ்வரத்திலிருந்து வந்தார், ஒரு புரோகிதர் , 3
தலைமுறைகளாக அந்த ஊரிலேயே இருந்து வருவதாக
சொன்னார்.

" ராமநாதஸ்வாமி கோவிலில் நடராஜாவைப்
பாத்திருக்கியோ?"

"பாத்திருக்கேன், சேவார்திகளை அழைச்சுண்டு போய்
காட்டி இருக்கேன்."

"நடராஜாவுக்கு 7 திரைகள் உண்டோ?"

புரோகிதருக்கு குழப்பம் வந்துவிட்டது , என்ன பதில்
சொல்வதென்று புரியவில்லை

பெரியவா சொன்னார்கள்:

திருவாதிரை அன்னிக்கு, 7 படுத்தாக்கள் திரையாகப்
போட்டு, நடராஜருக்கு பூஜை செய்வார்கள், ஏழு திரை
விலகியதும், நடராஜாவை தரிசிக்கலாம்.....சரி அந்தக்
கோவிலில் எத்தனை நடராஜர் இருக்கு?"

ரமேஸ்வரத்தாருக்கு கொஞ்சம் நடுக்கம்

"நான் ஒரு நடராஜாவைத் தான் பாத்திருக்கேன் "

"மூணு நடராஜர் இருக்கு !... போய்ப் பார்....."

"பார்க்கிறேன்....."

" ராமேஸ்வரம் கோவிலில் குருவாயுரைப் போல் செக்கு
ஆட்டிய நல்லெண்ணெய் அபிஷேகம் செய்வது வழக்கமா?"

" ஆமாம்" என்று ஒரு போடு போட்டார், வந்தவர்.

" ராமேஸ்வரத்தில் செக்கே கிடையாது! அந்த க்ஷேத்திரத்து
ஸ்வாமி, மண்ணைப் பிடித்து வைத்து உருவாக்கப்பட்டவர்
செக்கு ஆட்டக்கூடாது என்று or ஐதீகம்

பின்னர், அந்த புரோகிதர் மனதில் ஒரு குறை இருக்கக் கூடாது
என்பதற்காக , குடும்ப க்ஷேமலாபங்கள் விசாரித்து பிரசாதம்
கொடுத்தார்கள் பெரியவா !!!!

thanjavooran
Posts: 2986
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

From: My Friend;---





Excellent explanation



"தங்கசாலைக்கு (வள்ளலார் நகர்) ஏன் அந்தப் பெயர்?
அறிவுக் களஞ்சியம் நம் ஸ்வாமிகள் சொன்னது."

கட்டுரையாளர்;ரா.கணபதி.
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
(கட்டுரையில் ஒரு பகுதி)


பெரியவரைப் பணிய வரும் பக்தர் அனைவரும்
அறிமுகம் செய்துகொள்கையில் ஓர் இளைஞர்
வள்ளலார் நகரிலிருந்து வருகிறேன் என்றார்.

"வள்ளலார் நகரா?"

"ஆமாம் தங்கசாலைக்குத்தான் அப்படி பெயர்
மாறியிருக்கிறது."

"வள்ளல் என்றால் பணத்தை வாரிக் கொடுக்க
வேண்டும்.பணம் அச்சுப் போட்ட சாலை இப்போது
வள்ளலாரின் ஊராகிவிட்டது!" என்கிறார்.
"தங்கசாலை என்றாயே, அப்படியென்றால் பணம்
அச்சுப் போடுகிற இடம் என்று தெரியுமோ?"
என்று அந்த அடியாரைக் கேட்கிறார்.

"தெரியாது" என்கிறார் இளைஞர்.

"தங்கத்தினால் ரோட் போட்டிருந்தது என்று
நினைத்தாயோ" என்று இனிய குறும்பாகக் கேட்கிறார்.

"ஸ்வாமிகள் சொல்லி இப்போதுதான் தங்கக்காசு
தயாரித்ததால் அந்த இடம் தங்கசாலை என்று
பெயர் பெற்றதாகத் தெரிகிறது" என்று அந்த
இளைஞர் சொல்கிறார்.

"அதுவும் தப்பு" 'தங்கசாலை; என்பதே தப்பு"
என்று சிரிக்கிறார் பெரியவர்.

(பின்-குறிப்பு) ஸ்வாமிகள் தொடர்பே இல்லாத
"ஸப்த விடங்க ஸ்தலம்"சொல்ல ஆரம்பிக்கிறார்.
கட்டுரை நீளம் அதிகம் போவதால் அதை நான்
டைப் செய்யவில்லை.மன்னிக்கவும்.)

"அதெல்லாம் சரி. இவற்றுக்கு விடங்க க்ஷேத்திரம்
என்று ஏன் பெயர் வரவேண்டும்?விடங்கம்
என்றால் என்ன?"

பெரியவரே விளக்குகிறார்கள்.

"டங்கம்,டங்கம் என்றால் உளி என்று அர்த்தம்.
கற்சிலை அடிக்கிற உளி மட்டுமில்லை.
தங்கத்திலும்,வெள்ளியிலும் பிரதிமைகள்,
நகைகள் செய்ய உபயோகமாகிற கருவிக்கும்
டங்கம் என்று பெயர்.தேவதச்சனான
விச்வகர்மா டங்கம் முதலிய எந்தக் கருவியும்
இல்லாமலே மனோசக்தியினால் எதையும்
செய்துவிடுவான். அப்படித்தான் வி-டங்கமாக,
அதாவது டங்கத்தின் உதவியில்லாமல் இந்த
இந்த பிம்பங்களையும் செய்திருந்தான்.அதனால்
மூர்த்திகளுக்கே விடங்கர் என்ற பெயர்
வந்து விட்டது"

கூடியிருந்தோரிடையே ஆஹாகாரம் எழும்புகிறது.

"தங்கசாலையைப் பற்றி கேட்டுவிட்டு விடங்க
புராணத்துக்கு ஏன் போனேன் தெரியுமா?" என்று
ஆவலைக் கிளருகிறார் கதாசிரிய ஆசாரியர்கள்.

"நாணயம் பண்ணுமிடத்தில் தங்கக்காசு செய்வதால்
அதற்குத் தங்கசாலை என்று பெயரென்று நினைத்தால்
அது தப்பு.இப்போது போல் தங்கம் அதிக விலை
விற்காத நாளில்கூடத் தங்கக் காசைவிட வெள்ளி,
தாமிரம் முதலான மற்ற உலோகக் காசுதான்
அதிகம் போட்டிருப்பார்கள். அதனால் தங்கசாலை
என்பதற்குக் காரணம் வேறே.

காசுகளில் சித்திரம்,எழுத்து இவற்றைப்
பொறிப்பதற்கும், அதன் மாற்று,எடை எல்லாம்
சுத்தமாய் இருக்கிறதா என்று தட்டிப் பார்த்தே
தெரிந்து கொள்வதற்கும் உப்யோகமாகிற
உளி போன்ற ஒரு கருவிக்கு "டங்கம்" என்றே
பெயர்.காசு பண்ணும் கிடங்கில் இதற்கெனவே
சிப்பந்திகள் உட்கார்ந்து கொண்டு, காசுகளை
டங்கத்தால் தட்டிக்கொண்டே சரி பார்ப்பார்கள்.
அந்த ஓசை ஜல்ஜல் என்று வெளியிலே ஓயாமல்
கேட்டுக் கொண்டிருக்கும்.அதனால் நாணயம்
செய்யுமிடத்துக்கே "டங்கசாலா" என்று பெயர்
வந்துவிட்டது. அது சம்ஸ்கிருதப் பெயர்,
வடதேசத்தில் கூட வழங்கும் பெயர்.
அதைத்தான் நாம் தங்கசாலை என்று சொல்கிறோம்!
தமிழ்ப்பெயர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்!

"பொருட் செல்வத்தைக் கொடுத்தவர்களையே
வள்ளல் என்பது வழக்கம்.அருள் செல்வத்தைத்
தந்தவர்களில் அருட்பா பாடினவரைத்தான்
"வள்ள"லுக்கு மரியாதைக ."யார்" சேர்த்து
"வள்ளலார்" என்கிறோம்.

அநித்தியமான பொருளைக் குறிப்பிடும்
தங்கசாலைப் பெயரும் அநித்யமாகப் போய்
விட்டது. நித்தியமான அருளைக் குறிக்கிற
வள்ளலார் பெயர் அதற்கு வந்திருக்கிறது"
என்று முடித்தார் காஞ்சி வள்ளற் பெருமான்.



Photo: "தங்கசாலைக்கு (வள்ளலார் நகர்) ஏன் அந்தப் பெயர்? அறிவுக் களஞ்சியம் நம் ஸ்வாமிகள் சொன்னது." கட்டுரையாளர்;ரா.கணபதி. தட்டச்சு;வரகூரான் நாராயணன். (கட்டுரையில் ஒரு பகுதி) பெரியவரைப் பணிய வரும் பக்தர் அனைவரும் அறிமுகம் செய்துகொள்கையில் ஓர் இளைஞர் வள்ளலார் நகரிலிருந்து வருகிறேன் என்றார். "வள்ளலார் நகரா?" "ஆமாம் தங்கசாலைக்குத்தான் அப்படி பெயர் மாறியிருக்கிறது." "வள்ளல் என்றால் பணத்தை வாரிக் கொடுக்க வேண்டும்.பணம் அச்சுப் போட்ட சாலை இப்போது வள்ளலாரின் ஊராகிவிட்டது!" என்கிறார். "தங்கசாலை என்றாயே, அப்படியென்றால் பணம் அச்சுப் போடுகிற இடம் என்று தெரியுமோ?" என்று அந்த அடியாரைக் கேட்கிறார். "தெரியாது" என்கிறார் இளைஞர். "தங்கத்தினால் ரோட் போட்டிருந்தது என்று நினைத்தாயோ" என்று இனிய குறும்பாகக் கேட்கிறார். "ஸ்வாமிகள் சொல்லி இப்போதுதான் தங்கக்காசு தயாரித்ததால் அந்த இடம் தங்கசாலை என்று பெயர் பெற்றதாகத் தெரிகிறது" என்று அந்த இளைஞர் சொல்கிறார். "அதுவும் தப்பு" 'தங்கசாலை; என்பதே தப்பு" என்று சிரிக்கிறார் பெரியவர். (பின்-குறிப்பு) ஸ்வாமிகள் தொடர்பே இல்லாத "ஸப்த விடங்க ஸ்தலம்"சொல்ல ஆரம்பிக்கிறார். கட்டுரை நீளம் அதிகம் போவதால் அதை நான் டைப் செய்யவில்லை.மன்னிக்கவும்.) "அதெல்லாம் சரி. இவற்றுக்கு விடங்க க்ஷேத்திரம் என்று ஏன் பெயர் வரவேண்டும்?விடங்கம் என்றால் என்ன?" பெரியவரே விளக்குகிறார்கள். "டங்கம்,டங்கம் என்றால் உளி என்று அர்த்தம். கற்சிலை அடிக்கிற உளி மட்டுமில்லை. தங்கத்திலும்,வெள்ளியிலும் பிரதிமைகள், நகைகள் செய்ய உபயோகமாகிற கருவிக்கும் டங்கம் என்று பெயர்.தேவதச்சனான விச்வகர்மா டங்கம் முதலிய எந்தக் கருவியும் இல்லாமலே மனோசக்தியினால் எதையும் செய்துவிடுவான். அப்படித்தான் வி-டங்கமாக, அதாவது டங்கத்தின் உதவியில்லாமல் இந்த இந்த பிம்பங்களையும் செய்திருந்தான்.அதனால் மூர்த்திகளுக்கே விடங்கர் என்ற பெயர் வந்து விட்டது" கூடியிருந்தோரிடையே ஆஹாகாரம் எழும்புகிறது. "தங்கசாலையைப் பற்றி கேட்டுவிட்டு விடங்க புராணத்துக்கு ஏன் போனேன் தெரியுமா?" என்று ஆவலைக் கிளருகிறார் கதாசிரிய ஆசாரியர்கள். "நாணயம் பண்ணுமிடத்தில் தங்கக்காசு செய்வதால் அதற்குத் தங்கசாலை என்று பெயரென்று நினைத்தால் அது தப்பு.இப்போது போல் தங்கம் அதிக விலை விற்காத நாளில்கூடத் தங்கக் காசைவிட வெள்ளி, தாமிரம் முதலான மற்ற உலோகக் காசுதான் அதிகம் போட்டிருப்பார்கள். அதனால் தங்கசாலை என்பதற்குக் காரணம் வேறே. காசுகளில் சித்திரம்,எழுத்து இவற்றைப் பொறிப்பதற்கும், அதன் மாற்று,எடை எல்லாம் சுத்தமாய் இருக்கிறதா என்று தட்டிப் பார்த்தே தெரிந்து கொள்வதற்கும் உப்யோகமாகிற உளி போன்ற ஒரு கருவிக்கு "டங்கம்" என்றே பெயர்.காசு பண்ணும் கிடங்கில் இதற்கெனவே சிப்பந்திகள் உட்கார்ந்து கொண்டு, காசுகளை டங்கத்தால் தட்டிக்கொண்டே சரி பார்ப்பார்கள். அந்த ஓசை ஜல்ஜல் என்று வெளியிலே ஓயாமல் கேட்டுக் கொண்டிருக்கும்.அதனால் நாணயம் செய்யுமிடத்துக்கே "டங்கசாலா" என்று பெயர் வந்துவிட்டது. அது சம்ஸ்கிருதப் பெயர், வடதேசத்தில் கூட வழங்கும் பெயர். அதைத்தான் நாம் தங்கசாலை என்று சொல்கிறோம்! தமிழ்ப்பெயர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்! "பொருட் செல்வத்தைக் கொடுத்தவர்களையே வள்ளல் என்பது வழக்கம்.அருள் செல்வத்தைத் தந்தவர்களில் அருட்பா பாடினவரைத்தான் "வள்ள"லுக்கு மரியாதைக ."யார்" சேர்த்து "வள்ளலார்" என்கிறோம். அநித்தியமான பொருளைக் குறிப்பிடும் தங்கசாலைப் பெயரும் அநித்யமாகப் போய் விட்டது. நித்தியமான அருளைக் குறிக்கிற வள்ளலார் பெயர் அதற்கு வந்திருக்கிறது" என்று முடித்தார் காஞ்சி வள்ளற் பெருமான்.

thanjavooran
Posts: 2986
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

shared from my friend

பிள்ளையார் கண் திறந்தாரா, இல்லையா ?


பல வருடங்களுக்கு முன் காஞ்சி மகா பெரியவர் தமிழகத்தின்
தென்பகுதிகளில் யாத்திரை மேற்கொண்டிருந்த சந்தர்ப்பம்.....
தஞ்சாவூர் ,திருச்சி, திருவானைக்காவல், ஸ்ரீரங்கம்,திண்டுக்கல்,
சோழவந்தான் ஆகிய ஊர்களுக்கு விஜயம் செய்துவிட்டு,
மதுரையை நோக்கித் தன் பரிவாரங்களுடன் வந்துகொண்டிருந்தார்.
ஸ்வாமிகள் . வழி நெடுகிலும் உள்ள கிராம மக்கள் தங்கள்
குழந்தை குட்டிகளுடன் திரளாக வந்து ஸ்வாமிகளை தரிசித்து
ஆசிபெற்றுச் சென்றனர். அவர்களுக்கெல்லாம் இன்முகத்தோடு
அருளாசி வழங்கினார். பழம்,கல்கண்டு ஆகியவற்றைப்
பிரசாதமாக கொடுத்துக்கொண்டே நடந்தார் ஸ்வாமிகள்.

மதுரை மாநகரை நெருங்கும் நேரம். அங்கிருந்த ஒரு கிராமத்து
ஜனங்கள் அனைவரும் ஒன்றுகூடி "பூர்ணகும்ப" மரியாதையுடன்
ஸ்வாமிகளை வரவேற்றார்கள்.அந்த ஜனங்களின் பக்தியையும்
ஆர்வத்தையும் பார்த்த ஸ்வாமிகளுக்கு ஏக சந்தோஷம்.
சாலையோரம் இருந்த ஓர் அரசுமரத்து வேரில் வந்து அவராகவே
அமர்ந்துகொண்டார் . அனைவரும் கீழே விழுந்து நமஸ்கரித்தனர்.

அந்த ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவர் மிகுந்த பக்தியுடன் ஸ்வாமிகளை
நமஸ்கரித்தார் . பிறகு, "பெரியவங்ககிட்ட ஒண்ணு
பிரார்த்திக்கிறோம் . நாங்க ஏழை சனங்கல்லாம் ஒண்ணா சேந்து,
பக்கத்துல ஒரு புள்ளயார் கோயிலை புதுசா கட்டி முடிச்சிருக்கோம்.
சாமி பாதம் அங்க படணும்னு வேண்டிக்கிறோம்....கருண பண்ணணும்!"
என்று கன்னத்தில் போட்டுக்கொண்டார்.

குதூகலத்தோடு எழுந்த ஆச்சார்யாள், "கோயில் எங்கே இருக்கு?"
என வினவினார்.

பஞ்சாயத்துத் தலைவர், "இதோ கூப்பிடு தூரத்திலதான் சாமி இருக்கு.
வந்து அருள் பண்ணணும்!" என்றார்.

ஸ்வாமிகள் மிக வேகமாக பிள்ளையார் கோயிலை நோக்கி நடந்தார்.
மேளதாள -பூரணகும்ப மரியாதையுடன் ஆச்சார்யாள் கோயிலுக்குள்
பிரவேசித்தார் . கர்ப்பக்கிருகத்துள் ஆறடி உயர சிலா ரூபமாக
விநாயகர் வீற்றிருந்தார். விக்கிரகம் கம்பீரமாக பளிச்சென்று
இருந்தது . வைத்த கண் வாங்காமல் சற்று நேரம் விநாயகரையே
பார்த்த பெரியவா,பஞ்சாயத்துத் தலைவரிடம்,
"கோயிலுக்கு கும்பாபிஷேகம் ஆயிடுத்தோ?" என்று கேட்டார்.

" இன்னும் ஆகலீங்க சாமி" என்றார் தலைவர்.

" அதான் எல்லாமே பூர்த்தியாகி இருக்கே...ஏன் இன்னும்
கும்பாபிஷேகம் நடத்தலே?" என்று கேட்டார் ஸ்வாமிகள்.

பஞ்சாயத்துத் தலைவர் பவ்வியமாக பதில் சொன்னார்.;
"எல்லாமே பூர்த்தி ஆயிடுச்சு சாமி. இன்னும் ஒரு மாசத்துக்குள்ளாற
மகாத்மா காந்தி இந்த வழியா மதுரைக்கு வாராறாம்.அவுரு
வர்றன்னிக்கு , 'அவருக்கு முன்னால வெச்சே கும்பாபிஷேகத்த
நடத்த ஏற்பாடு பண்ணித் தர்றோம்'னு மதுரையைச் சேர்ந்த சில
பெரிய மனுஷங்க உறுதி கொடுத்திருக்காங்க! அதனாலதான்
காந்தீஜீக்காகக் காத்துக்கிட்ருக்கோம்!"

ஆச்சார்யாள் தனக்குள் சிரித்துக்கொண்டார். இரண்டு நிமிஷம்
கண்ணிமைக்காமல் விநாயகரையே பார்த்துவிட்டுச் சொன்னார்.

" அதுக்கு அவசியம் இருக்காது போலத் தோண்றதே!
கணபதி கண்ணத் திறந்து நன்னா பாத்துண்ருக்காரே...இனிமே
கும்பாபிஷேகத்த தாமசப்படுத்தப்படாது. ஒடனேயே நல்ல நாள்
பார்த்து பண்ணிடுங்கோ."

உடனே பஞ்சாயத்துத் தலைவர், "இல்லீங்க சாமி! கண் தொறக்கிற
சடங்கு விநாயகருக்கு இன்னும் நடக்கலீங்க சாமி! நீங்க இப்படி
சொல்றத பாத்தா ஒண்ணும் புரியலீங்களே.." என்று குழம்பினார்.

ஸ்வாமிகள் மீண்டும் சிரித்துக்கொண்டே, "இது நானா சொல்லலே!
கணபதி கண்ணைத் திறந்து நன்னா "ஸ்பஷ்டமா" பார்த்துண்ருக்கார்.
சீக்கிரமே கும்பாபிஷேகத்துக்கு வேண்டிய ஏற்பாடுகள் பண்ணுங்கோ!
காந்தி வந்தா நன்னா தரிசனம் பண்ணிட்டுப் போகட்டுமே" என்று
கூறினார் . குழுமியிருந்த ஜனங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
அமைதியோடு காத்திருந்தனர்.

பஞ்சாயத்துத் தலைவருக்கும் குழப்பம் தீரவில்லை. உடனே
ஆளனுப்பி விநாயகர் சிலையை வடிவமைத்த ஸ்தபதியை
வரவழைத்தனர் .அவரிடம் ஆச்சார்யாள் சொன்ன விஷயம்
தெரிவிக்கப்பட்டது .

சிற்பியும் அடித்துச் சொன்னார்; "இல்லீங்க ஸ்வாமி..இன்னும்
விநாயகருக்கு கண் தொறக்கலீங்க. தொறந்தா விக்கிரகத்தச்
செதுக்கின நான்தானே தொறக்கணும்..இன்னும் அது ஆவுலீங்க.."

மூன்று தடவை ஆச்சார்யாள் காலில் விழுந்து கை கட்டி நின்றார் சிற்பி.

மீண்டும் ஒருமுறை விக்கிரகத்தையே உற்று நோக்கிய ஸ்வாமிகள்
"மகா கணபதிக்கு நன்னா கண் தெறந்தாச்சு! அவர் சந்தோஷமா
பாத்துண்டிருக்கார் . இனிமேலும் தாமதிக்கிறது நல்லதில்லே.
சீக்கிரமா ஒரு நல்ல நாள் பாத்து கும்பாபிஷேகத்த நடத்துங்கோ..
க்ஷேமம் உண்டாகும்" என்று சொல்லிவிட்டு வேகவேகமாகப்
புறப்பட்டுவிட்டார் ஆச்சார்யாள். பரிவாரம் பின்தொடர்ந்தது.
ஆச்சார்யாளை அந்த ஊர் எல்லை வரை சென்று வழி அனுப்பி
வைத்துவிட்டுத் திரும்பினர்,அத்தனை பேரும்.

சற்று நேரத்துக்கெல்லாம் அந்த ஊர் கிராமப் பஞ்சாயத்து சபை'
கூடியது . ஆச்சார்யாள் கூறிவிட்டுப் போன விஷயம் குறித்து
அலசி ஆராயப்பட்டது. விநாயகர் விக்கிரகத்தைச் செதுக்கிய
சற்று வயதான ஸ்தபதி அடித்துச் சொன்னார்.
"ஆச்சார்ய ஸ்வாமிங்களுக்கு ஞான திருஷ்டில எல்லா
விஷயங்களும் தெரிஞ்சுடும்.இருந்தாலும் எங்கையால் நான்
இன்னும் கண்ண தொறக்கலே.சாமி எப்டி சொல்றாங்கனு
தெரியலே .நானும்கூட விக்கிரகத்துகிட்ட போயி உன்னிப்பா
கவனிச்சுப் பாத்துட்டேன்.அப்டி ஆனதா தெரியலீங்க....
இப்ப என்ன பண்றது?"

அங்கே மௌனம் நிலவியது. ஒருவரும் வாய் திறக்கவில்லை.
திடீரென்று பன்னிரண்டு வயது மதிக்கத்தக்க உள்ளூர்ப் பையன்
ஒருவன் அந்த இடத்துக்கு ஓடி வந்தான்.கை கட்டி நின்றான்.

அவனைப் பார்த்த தலைவர், "தம்பி! ஏன் இப்படி ஓடி வர்றே?
என்ன விஷயம்?" என்று கேட்டார்.

உடனே அந்தப் பையன் "தலைவரே! கோயில் விநாயகர் சிலை
பத்தி எனக்கு ஒரு விஷயம் தெரியும்..சொல்லலாங்களா?"
என்று கேட்டான் பவ்யமாக.

" ஒனக்கு என்ன தெரியும்..சொல்லு தம்பி!" என்று மிக ஆர்வம்
காட்டினார் தலைவர். கூட்டமும் அந்தப் பையனையே
பார்த்துக் கொண்டிருந்தது.

பையன் பேச ஆரம்பித்தான்; "ஐயா தலைவரே! எனக்கு தெரிஞ்ச
உண்மையை சத்தியமா சொல்றேங்க. அந்த சாமியார் சாமி
[ஆச்சார்யாள்] 'புள்ளையாருக்கு கண் தொறந்தாச்சு'னு
சொல்லிட்டுப் போனது மெய்தாங்க! எப்படீன்னா ஒரு பத்து
நாளுக்கு முந்தி ஒரு நாள் உச்சி வெயில் நேரமுங்க.இதோ
ஒக்காந்துருக்காரே ..புள்ளையார் விக்கிரகத்தைச் செஞ்ச தாத்தா..
இவரோட பேரப் பையன்..என் சிநேகிதன். என்ன வேலை
பண்ணான் தெரியுமா? இவங்க தாத்தா சிலைகளின் கண்ண
தொறக்கறத்துக்கு வெச்சிருக்கிற சின்ன உளியையும்,சுத்தியையும்
எடுத்துக்கிட்டு ,எங்களையும் கூட்டிக்கிட்டு கோயிலுக்குப் போனான்.

" இதோ பாருங்கடா! எங்க தாத்தா இப்புடித்தான் சிலைங்க கண்ணைத்
தொறப்பாருன் 'ன்னு சொல்லிகிட்டே,'புள்ளையாரே,கண்ணத்தொற...
புள்ளையாரே ,கண்ணத் தொற!'னு அவனும் சொல்லி, எங்களையும்
ஒரக்க சொல்லச் சொல்லி, "டொக்கு..டொக்குனு" உளிய புள்ளயாரின்
ரண்டு கண்ணுலயும் வச்சு தட்டினான்.."புள்ளையாருக்கு கண்
தொறந்தாச்சு "னு எல்லாப் பசங்களும் குதிச்சு ஆடினோம்.இந்த
விஷயம் ஊர்ல ஒருத்தவங்களுக்கும் தெரியாது. நாங்களும் வெளியிலே
மூச்சு வுடலே! இது தாங்க நடந்துச்சு....எங்களை மன்னிச்சுருங்க."

பிரமிப்போடு அமர்ந்திருந்தது கூட்டம். பஞ்சாயத்துத் தலைவர் கண்களில்
நீர் சுரந்தது.ஆச்சார்யாளின் மகிமையைப் பார்த்து அந்த ஊரே வியப்பில்
ஆழ்ந்தது . சிற்பியின் பேரனுக்கு எட்டு வயதிருக்கும். பஞ்சாயத்து அந்தச்
அழைத்து விசாரித்தது. விநாயகருக்கு, தான் கண்களைத் திறந்துவிட்டதை
ஒப்புக் கொண்டான். எல்லோரும் கோயிலுக்கு ஓடிச் சென்று விநாயகரை
விழுந்து வணங்கினர். சிற்பி, ஒரு பூதக் கண்ணாடியின் உதவியோடு
கணபதியின் கண்களை நன்கு பரிசீலித்தார்.

மிக அழகாக "நேத்ரோன் மீலனம்" [கண் திறப்பு] செய்யப்பட்டிருந்ததைப்
பார்த்து ஆச்சர்யப்பட்டார்.

ஊரே திரண்டு ஆச்சார்யாள் சென்ற திசையை நோக்கி ஓடியது. அடுத்த
கிராமத்தில் சாலை ஓரமிருந்த ஒரு பெரிய ஆலமர நிழலில்
பரிவாரங்களுடன் இளைப்பாறிக்கொண்டு இருந்தார் ஸ்வாமிகள்.

அனைவரும் ஓடிப் போய் ஸ்வாமிகள் காலில் விழுந்து எழுந்தனர்.
அந்தப் பஞ்சாயத்துத் தலைவரும்,சிற்பியும் கேவிக்கேவி
அழ ஆரம்பித்துவிட்டனர்.

இவர்களைப் பார்த்த அந்த பரப்பிரம்மம் சிரித்துக்கொண்டே கேட்டது;
"புள்ளையாருக்குக் கண் தெறந்தாச்சுங்கறத பிரத்தியட்சமா
தெரிஞ்சுண்டுட்டேளோல்லியோ ? போங்கோ....போய் சீக்கிரமா
கும்பாபிஷேகத்த நடத்தி முடியுங்கோ. அந்த பிராந்தியத்துக்கே
க்ஷேமம் உண்டாகும்."

சிரித்தபடியே கை தூக்கி ஆசிர்வதித்தது அந்த நடமாடும் தெய்வம்.

thanjavooran
Posts: 2986
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

From my friend
நானே ப ாலாஜி!!!.... Periyivaa

காஞ்சி மஹான், மஹாராஷ்டிராவில் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்த நேரம்.
ஒரு ஜமீன்தார் மஹானுக்கு சகலவிதமான உபசாரங்களையும் குறைவில்லாமல் செய்து
கொடுத்துக்கொண்டிருந்தார். தனது ஊழியன் ஒருவனை பெரியவாளின் அருகிலேயே
இருந்து பார்த்துக்கொள்ளும்படி பணித்தார். அந்த இளைஞன் பெயர் பவார்
என்பதாகும். பணிவிடை என்றால் அப்படி ஒரு பணிவிடை. பெரியவாளுக்கு பரம
திருப்தி. முகாமை முடித்துக்கொண்டு புறப்படும்போது ஜமீன்தாரிடம்
கேட்டார்.

“இந்தப் பையனை நான் அழைத்துக்கொண்டு போகவா?”

ஜமீந்தாருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. தன ஊழியன் ஒருவன் மஹானுக்கு சேவை
செய்வது என்பது எவ்வளவு பெரிய விஷயம்?

“தாராளமாக அழைத்துப் போங்கள், அவனது குடும்பத்தை நான் பார்த்துக்கொள்கிறேன், அவர்களுக்கு வேண்டிய எல்லா சௌகர்யங்களையும் நான் செய்து கொடுத்துவிடுகிறேன். அவர் குடும்பத்தைப் பற்றி கவலைப்படவே தேவை
இல்லை அல்லவா?” என்றார் ஜமீன்தார்.

அன்றிலிருந்து அந்த வடநாட்டு இளைஞன் பவார் மடத்து சிப்பந்திகளில் ஒருவனானான்.

அடுத்த முகாம் எங்கோ ஒரு வசதியில்லாத பிரதேசத்தில்.

இரவு நேரம், மடத்து ஊழியர்கள் யாவரும் இரவு உணவை தயாரித்து உண்டு
முடித்துவிட்டனர். சாப்பாடு விஷயத்தில் மட்டும் யாருக்கும், எந்த விதத்திலும் குறை வைக்கக்கூடாது எனபது மஹாபெரியவாளின் கடுமையான கட்டளை.

எல்லோரும் சாப்பிட்டு முடித்தபின், உள்ளே வந்த மஹான் , ஒவ்வருவரிடமும்
“சாப்பிட்டாயிற்றா?” என்கிற கேள்வியை கேட்டு பதிலையும் பெற்றுக்கொண்டு
இருந்தார். கடைசியாக வெளியே வந்தார்.

பவார் முகாமின் காவலாளியாக வெளியே நின்றுகொண்டு இருந்தான். அவனுக்குத்
தமிழ் தெரியாதில்லையா?

“சாப்பாடு ஆயிற்றா?” என்று மஹான் சைகையினாலே கேட்க, “இல்லை” என்று
நிர்வாகியை அழைத்தார்.

“நம்மை நம்பி வந்திருக்கும் இவனுக்கு வேளா வேலைக்கு சோறு போடா வேண்டும்
என்கிற எண்ணம் உங்களுக்கு ஏன் இல்லாமல் போனது? அவனாக கேட்காவிட்டாலும்
நீங்கள் சைகை மூலமாக அவனிடம் கேட்டிருக்கக் கூடாதா? நீங்கள் சாப்பிட்டுவிட்டு சாப்பாட்டுக்கடையை மூடிவிட்டீர்கள். இந்தப் போட்டால் காட்டில் அவன் எங்கே போய் உணவைத் தேடுவான்…? என்று சரமாரியாக பொரிந்து தள்ளிவிட்டார். நிர்வாகி உடனே பவாருக்கு இரவு உணவை ஏற்பாடு செய்வதாக
பெரியவாளிடம் சொல்லிவிட்டுப் போனார்.

சில நிமிடங்களில் முகாமுக்கு அருகே சைக்கிளில் வந்த ஒரு நபர், முகாமில்
வெளிச்சம் தெரிவதைக் கவனித்து உள்ளே வந்துவிட்டார். அவர் கையில் ஒரு
சிறிய தூக்கு.

விசாரித்ததில் அருகில் இருக்கும் ஓரிடத்தில் உணவு கொண்டு போவதாகவும்,
வழியில் அப்படியே மஹானைப் பார்க்க வந்ததாகவும் சொல்கிறார் அவர்.

காஞ்சி மஹான் அவரிடம் கேட்கிறார்

“இதோ இருக்கும் நபருக்கு, ஏதாவது சாப்பிடக் கொடுக்க முடியுமா?” ஒரு
ஊழியனுக்கு கருணை வள்ளல் புதியவனிடம் விண்ணப்பம் போடுகிறார்.

“இதோ இந்தத் தூக்கில் இரவு உணவு இருக்கிறது, சாப்பிடச் சொல்லுங்கள். நான்
வேறு ஏற்பாடு செய்துகொள்கிறேன்” என்று தான் கொண்டு வந்த தூக்கை அங்கேயே
வைத்துவிட்டு போய்விடுகிறார். தூக்கைத் திறந்து பார்த்தால் வட இந்தியர்
சாப்பிடும் சப்பாத்தி, சப்ஜி எல்லாம் அதில் சுடச்சுட இருக்கிறது.

புன்னகையோடு பவாரை சாப்பிடச் சொல்கிறார் அந்த கருணை வள்ளல்.

தனக்காக யாரோ ஒரு வழிப்போக்கனிடம் உணவைப்ப் பெற்றுத்தருகிறாரே இந்த மஹான்> என்று நெகிழ்ந்து போனான் பவார்.

அதற்குப்பிறகு அந்த வழிப்போக்கன் முகாமின் பக்கமே வரவில்லை. தூக்கையும்
கேட்டு வாங்கிக்கொண்டு போகவில்லை.

பவார் மடத்தில் நிரந்தர ஊழியன் ஆனபிறகு, அவனுக்கு மஹான்தான் எல்லாம்.
மஹான் தனது மேனாவிற்குள் சென்று உறங்கும்வரை, பவார்தான் உடனிருந்து
கவனித்துக்கொள்வது வழக்கமாகிவிட்டது. பல வருடங்களுக்குப்பிறகு ஒரு தடவை
பவாரின் குடும்பம் அவரைப்பார்க்க காஞ்சிக்கு வந்திருந்தார்கள். இரண்டொரு
தினங்கள் மடத்தில் தங்கி காஞ்சி மஹானை ஆசைதீர தரிசனம் செய்தபிறகு,
அவர்கள் திருப்பதிக்குச் சென்று வரவேண்டும் என்கிற ஆசை. பவார் இதை
மஹானிடம் சொன்னபோது….

“தாராளமாக போய்வரட்டும்” என்று உத்தரவு கொடுத்தார். அவர்களுடன் தானும்
போகவேண்டும் என்று பவாருக்கு ஆசை.

ஆனால் மஹானின் உத்தரவு வேண்டும். இவனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும்
பொறுப்புகளை யார் பார்த்துக்கொள்வார்கள்? ஒரு நாளில் குடும்பத்தோடு
போய்விட்டு திரும்பி வந்துவிடலாம் என்கிற நப்பாசை. மனதில் தயங்கித்
தயங்கி மஹானிடம் தனது கோரிக்கையை சமர்ப்பித்தான்.

“பாலாஜியைத்தானே பார்க்கணும், நீயும் போய்வா” என்று வாய் மொழியாக மஹான்
சொல்லிவிடவே, பவாருக்கு அளவுகடந்த மகிழ்ச்சி.

மஹானின் “மேனா” வை இரவில் இழுத்து மூடுவதும், காலையில் அதை முதலில்
திறப்பதும் பவாரின் வேலைதான்.

அன்று காலை எல்லோரும் திருப்பதிக்குப் போக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வழக்கம்போல் மஹானின் “மேனா” வில் திரைச்சீலையை விலக்கிவிட்டு காலையில்
ஆற்றவேண்டிய சில கடைமைகளை செய்வதற்கு பவார் தன்னை தயார் செய்துகொண்டான்.

விடியற்காலை மஹானின் “மேனா” வின் திரையை விளக்கிப் பார்த்த பவார்
அதிர்சியுடன் கூட பக்திப் பரவசமானான். உள்ளே சாக்ஷாத் பாலாஜியாக மஹான்
அவன் கண்களுக்கு காட்சியளித்தார். தன கண்களையே அவனால் நம்பமுடியவில்லை.

“பாலாஜி இங்கேயே இருப்பது உனக்குத் தெரியாதா?” பவார் சாஷ்டாங்கமாக கீழே
விழுந்து வணங்கி எழுந்தபோது மஹான் அவனைப் பார்த்து கேட்ட கேள்வி இது.

பேசமுடியாமல் இரண்டொரு நிமிடங்கள் கலவரத்தோடு நின்ற பவார் மெதுவாக மஹானை
நோக்கி தன இரு கரங்களைக் கூப்பியவாறு “நான் திருப்பதிக்கு அவர்களுடன்
போகவில்லை” என்றான். சர்வ வல்லமை படைத்த மஹான் இங்கேயே இருக்கும்போது,
நான் ஏன் வேறு இடத்திற்கு கடவுளைத் தேடித் போகவேண்டும் என்று பவார்
தனக்குதானே கேள்வியை எழுப்பிகொண்டான், என்பது உண்மை.

இதே பவாருக்கு மஹான் வேறொரு தெய்வத்தின் தரிசனத்திற்கும் ஏற்பாடு செய்து
கொடுத்தார். வட இந்திய முகாமின்போது நடந்த சம்பவம் இது.

இடம் கிடைகாத பட்சத்தில் ஏதாவதொரு பகுதியில் நகரைவிட்டு சற்று தள்ளி
மஹான் முகாமை அமைப்பது வழக்கம் என்று சொன்னார்கள். அப்படிப்பட்ட இடம்…

ஒரு நாள் மாலை யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மஹான் நடக்க
ஆரம்பித்துவிட்டார். பவார் மட்டும் அவருக்கு வழித்துணை. வேறு யாரும் உடன்
வரக்கூடாது என்று உத்தரவு.

ஒற்றையடிப்பாதை வழியாக மழையின் அடிவாரத்தை அடைந்த மஹான், சற்றே மேலே ஏறத்
தொடங்கினார்.

சற்று தூரம் போனவுடன் சுற்றிலும் இருந்த செடி கொடிகளை ஒதுக்கிவிட்டுப்
பார்த்தபோது அந்த மலையில் ஒரு சிறிய குகை வாயில் தெரிந்தது.

ஒருவர் தாராளமாகப் போய்வரலாம்.

“உள்ளே போய் பார்த்துவிட்டு வரியா?” என்று மஹான் பவாரிடம் கேட்க, தான்
கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு…
“எனக்கு பயமாக இருக்கிறது, நான் போகவில்லை” என்று சொல்லிவிடவே, மஹான்
அவனைப் பார்த்து புன்னகை செத்தபின் குகைக்குள் நுழைந்தார்.

என்னவோ ஏதோ என்று கைகளைப் பிசைந்தவாறு பவார் குகைக்கு வெளியே
நின்றுகொண்டு இருந்தான். முகம், மனம் கவலையினால் நிரம்பி வழிந்தது.

சில நிமிடங்களுக்குப் பின் மஹான் சிரித்த முகத்துடன் வெளியே வந்தார்.
“இப்போ நீ போயிட்டு வரலாமே” என்றார். மஹாபெரியவாளே போய்விட்டு
வந்தபின்னர் இனி தான் பயப்படுவது நன்றாக இருக்காது என்று பவார் குகைக்குள் போனான்.

உள்ளே போனபிறகு, இருண்ட குகையில் திடீரென வெளிச்சம். அவன் கண் எதிரே ஒரு மேடை. மேடையில் ஆஞ்சநேயர் விஸ்வரூபத்துடன், கை கூப்பியவாறு நிஷ்டையில் இருந்தார். பவாருக்கு கண்கள் கூசின.தன்னையே நம்பாதவனாக, வாயுபுத்திரனை வணங்கிவிட்டு, பரவசத்தோடு வெளியே வந்து சேர்ந்தான்.
வெளியே வந்தபின் எல்லாம் வல்ல சர்வேஸ்வரனான மஹான், “பாத்துட்டியா?” என்ற
கேள்வியை மட்டும் அவனிடம் கேட்டார். கை கூப்பியவாறு அவன் தலையை fஆட்டவே,
இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர்.

இந்த பவார்தான் எவ்வளவு பாக்கியம் செய்தவன்...

thanjavooran
Posts: 2986
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

shared from my friend
குருவே சரணம்... திருவே சரணம்
இன்று ஆசிரியர் தினம். (குரு நாள்) 05-09-2013
'குரு’ என்றால் 'கனமானது’, 'பெரிது’ என்று அர்த்தம். அதாவது, பெருமை உடையவர், மகிமை பொருந்தியவர் என்று அர்த்தம். 'கு’ என்பது இருட்டு; 'ரு’ என்றால் போக்குவது. ரொம்பவும் இருட்டாக இருப்பதை கும்மிருட்டு என்போம். இதில் உள்ள 'கு’ இருட்டைக் குறிப்பதுதான். ஆக, இருட்டைப் போக்கடிப்பவர் என்பதே 'குரு’வுக்கான அர்த்தமாகிறது. ஒரு மஹானை குரு என்று ஒருவன் நாடிப்போய் அவரின் சிஷ்யனாகிவிட்டானேயானால், அவர் அவனுடைய உள் இருட்டைப் போக்கி ஞானம் தந்துவிடுவார்!’
'குரு’ என்ற பதத்துக்கு காஞ்சி மகாபெரியவா தந்த மிக அற்புதமான விளக்கம் இது. இதற்கு மிகச் சிறந்த உதாரணமும் அவரேதான்! தமது திருவடி நிழல் தேடி வந்த எத்தனையோ பக்தர்களுக்கு நிழல் தந்திருக்கிறது அந்தக் கருணாவிருட்சம். அவர்களது வாழ்க்கையில் துன்ப இருள் அகற்றி இன்ப ஒளியேற்றியிருக்கிறது அந்தச் சுடர் விளக்கு. அப்படியான சம்பவங்களும், காஞ்சி மகா பெரியவாளின் அணுக்கத் தொண்டர்களுக்கு மட்டுமே தெரிந்த அருளாடல்களும் ஏராளம் உண்டு.

காஞ்சி காமாட்சியம்மன் கோயில் பிரதான அர்ச்சகரும், மகா பெரியவாளின் அன்புக்கு உரிய அடியார்களில் ஒருவருமான நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகள், மகாபெரியவாளின் கருணைப் பிரவாகத்தை நம்மோடு பகிந்துகொள்கிறார்.

'மகா பெரியவாளிடம் சில வருடங்கள் பாடம் கற்றுக்கொண்டது என் பாக்கியம். அவருடைய ஞானம் ஆழமானது. அவரிடம் படித்த நாட்கள் எனக்கு இன்னமும் நன்றாக நினைவு இருக்கிறது. 'நீதி சதகம்’ எல்லாம் அவர் நேரிடையாக எங்களுக்குச் சொல்லித் தந்ததுதான்.
அவர் ஈஸ்வர அவதாரம். நாங்கள் பரம்பரையாக காமாட்சி அம்மன் கோயிலில் பூஜை செய்து வருகிறோம். பெரியவா என்னைப் பொறுப்பு ஏற்றுக்கொள்ளச் சொன்னது, எனக்குக் கிடைத்த பெரும்பேறு!'' என்று பழைய நினைவுகளில் மூழ்கிய நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகள், தொடர்ந்து பேசினார்...

'பெரியவாளுக்குக் கர்னாடக சங்கீதத்தில் மிகுந்த விருப்பம் உண்டு. நல்ல சங்கீதத்தைக் கேட்டால், நேரம் போவது தெரியாமல் ரசித்துக் கேட்பார்' என்றவர், அந்த நாட்களில் பெரியவாளை வந்து சந்தித்த பிரபல சங்கீத வித்வான்கள் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

'தன்னைச் சந்திக்க வருகிற வித்வான்களிடம் அவர்களுக்கே தெரியாத விஷயங்களை எல்லாம் எடுத்துச் சொல்வார் பெரியவா. சில பாடல்களுக்கு அவர் தரும் விளக்கத்தை வித்வான்களே வியந்து கேட்பார்கள்.
திருவையாற்றில் பகுள பஞ்சமி அன்றைக்குத் தியாகராஜரின் சமாதியில் எல்லா வித்வான்களும் கூடி பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடுவார்கள் அல்லவா? அதேபோன்று, காஞ்சிபுரத்திலும் தமிழ் வருடப்பிறப்பு அன்று விடியற்காலையில் ஆரம்பித்து பஞ்ச ரத்ன கீர்த்தனைகளைப் பாடச்
சொல்லிக் கேட்க வேண்டும் என்று பெரியவாளுக்கு ஆசை. அதற்குக் காரணம் இருந்தது. பெரியவா ஒரு தடவை சென்னைக்கு வந்திருந்தபோது, கோடம்பாக்கத்தில் தத்தாஜி என்பவர் வீட்டில் தங்கியிருந்தார். அப்போதுதான் திருவையாற்றில் தியாகராஜ ஆராதனை உத்ஸவம் நடந்து கொண்டிருந்தது. அதை ரேடியோவிலும் ஒலிபரப்பினர். காஞ்சிபுரத்திலும் அதுபோன்று நடத்தவேண்டும் என்கிற ஆசை அப்போதுதான் பெரியவாளுக்கு உண்டாயிற்று.
செம்மங்குடி சீனிவாச அய்யர் பெரியவாளை தரிசனம் பண்ண அடிக்கடி மடத்துக்கு வருவார். அவரிடம் தன் ஆசையைச் சொன்னார் மகா பெரியவா. பிறகென்ன... செம்மங்குடிக்கு ரொம்ப சந்தோஷம். அவர் உடனே அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், மகாராஜபுரம் விசுவநாத அய்யர் போன்றோரிடம் சொல்லி, அதற்கு ஏற்பாடு செய்து, காஞ்சிபுரத்தில் பிரமாதமாக நடத்தினார். அதை ரேடியோவில் ஒலி பரப்பவும் ஏற்பாடு செய்தார்.
எல்லோரும் பஞ்சரத்ன கிருதிகள் பாடி முடித்ததும், பக்கத்தில் இருந்த மகாராஜபுரம் விசுவநாதய்யரிடம், 'ஆரத்தியின்போது
நீங்கள் பாடணும்' என்று கேட்டுக் கொண்டார் பெரியவா. விசுவநாதய்யருக் குச் சந்தோஷம் தாளலை! அதுவும், பெரியவா முன்னால் பாடறதுங்கறது எவ்வளவு பெரிய விஷயம்! பக்திப் பரவசத்துடன், 'நி பஜன கான’ பாட்டை அருமையா பாடினார். பெரியவா, கண்கள் மூடி பாடலைக் கேட்டு ரசித்தார்.
'உன் பஜனையாகிற சங்கீதத்தில் ஈடுபடுகிறவர்களை இந்த உலகில் நான் எங்கே பார்ப்பேன்? லட்சுமி, சிவன், பிரம்மன், சசிதேவியின் பதியாகிய இந்திரன் முதலானவர்களால் வணங்கப் படுகிறவனே! சகுண- நிர்க்குண உபாசனை களின் உண்மை, பொய்களையும்... சைவம், சாக்தம் முதலான ஆறு சமயங்களின் ரகசியங்களையும், அணிமா முதலான அஷ்டஸித்திகளின் பகட்டையும் நீ விளக்க... நான் மகிழ்ச்சியுடன் அறிந்து கொண்டேன். நல்ல முகம் உடையவனே... உமது பஜனை என்னும் கானத்தில் லயித்து ரசிப்பவர்களை நான் எங்கே காண்பேன்?’ என்பது அந்தப் பாடலுக்கு அர்த்தம். மகா பெரியவாளுக்கும் ரொம்ப சந்தோஷம்!
ஒருமுறை, என்.சி.வசந்தகோகிலம் என்ற புகழ்பெற்ற பாடகி, மகா பெரியவாளைத் தரிசிக்க வந்திருந்தார். ஒரு கச்சேரிக்குப் போய்ப் பாடிய கையோடு, அங்கிருந்து நேராகக் காஞ்சி புரம் வந்திருந்தார் அவர். கச்சேரி செய்ததற்குக் கிடைத்த ஆயிரம் ரூபாயை அப்படியே பெரியவா முன்னால் வைத்து விட்டு, நமஸ்காரம் செய்தார். ஆயிரம் ரூபாய் என்பது அந்தக் காலத்தில் ரொம்பப் பெரிய தொகை. அவருக்கு ஆசி வழங்கிய பெரியவா அந்தப் பணத்தை என்ன செய்தார் தெரியுமா?
அங்கே பக்கத்து நிலத்தில் உழுது கொண்டிருந்த அத்தனை குடியானவர் களையும் வரச் சொன்னார். ஆயிரம் ரூபாயையும் அவர்களுக்குச் சமமாகப் பிரித்துக் கொடுத்து விட்டார். குடியான வர்களுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி! பணம் கிடைத்தது மட்டுமல்ல... மகா பெரியவாளின் ஆசியோடு கிடைத்த பணம் என்பதே அதற்குக் காரணம்.

இன்னொரு சம்பவம்... மகா பெரியவா இளையாத்தங்குடியில் முகாமிட்டிருந்தார். பக்கத்து ஊரில் அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் தங்கியிருப்பது பெரியவாளுக்குத் தெரிய வந்தது. அவரை, தான் இருக்கும் இடத்துக்கு வருமாறு தகவல் அனுப்பினார் மகா பெரியவா. அவரும் உடனே புறப்பட்டு வந்தார்.
'நீங்கள் ஸ்ரீசுப்ரமண்யாய நமஸ்தே கீர்த்தனையைப் பாடி, நான் கேட்கணும்னு எனக்கு ஒரு சின்ன ஆசை வந்துடுத்து. பாட முடியுமா?’ என்று பெரியவா கேட்டதும், ராமானுஜ அய்யங்கார் கண்ணில் நீர் ததும்பிடுச்சு. எப்பேர்ப்பட்ட பாக்கியம் அவருக்கு?!
'நான் கொடுத்து வைத்திருக்கிறேன் சுவாமி, பெரியவா முன்னால் பாடுவதற்கு' என்று பணி வுடன் சொல்லிவிட்டு, முத்துசாமி தீட்சிதரின் பிரபலமான
கிருதியான 'ஸ்ரீசுப்ரமண்யாய நமஸ்தே’ பாடலைப் பாடினார். அதை ரசித்துக் கேட்டதுடன், அந்தப் பாட்டுக்கு பெரியவா விசேஷ அர்த்தமும் சொன் னதைக் கேட்டு ராமானுஜ அய்யங்கார் சிலிர்த்துப் போயிட்டார். 'நீங்க ஆயிரம் பத்தாயிரம் பேர் இருக்கிற சபையில் பாடி, கைத்தட்டல் எல்லாம் வாங்கிருப்பீங்க. இங்கே நான் ஒரே ஒருத்தன் உங்கள் பாட்டைக் கேட்டது உங்களுக்கு எப்படியோ இருக்கோ?!' என்று பெரியவா தமாஷாக கேட்க, நெகிழ்ந்து போய்விட்டார் அரியக்குடி

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

காம்போஜி வந்தது எப்படி?

காஞ்சி மகா பெரியவர் தன்னை சந்திக்க வரும் குறிப்பிட்ட துறையில் சிறந்த வல்லுனர்களிடம் அவரவர் துறையில் ஏதாவது கேள்வி கேட்டு புதியதாக ஒரு தகவலையும் சொல்லுவார். அப்படி, ஒரு முறை இசை தொடர்பான சுவாரஸ்யமான தகவல் அவரிடம் இருந்து வெளிவந்தது. அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் ஒரு முறை மகா பெரியவரை சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென அவரிடம் காம்போஜி ராகம் எப்படி வந்தது தெரியுமா என்றார். கேட்டு விட்டு அவரே சொன்னாராம்......

காம்போதி என்று இப்போது சொல்கிறோமே? ஆனால், புத்தகப் பெயர் காம்போஜிதான். காம்போஜம் என்பது கம்போடியாங்கிறது பல பேருக்கு தெரிந்திருக்கும். அங்கே பாரத கலாசாரம் ரொம்ப ஆழமா பரவியிருக்கு.

ஒரு வேளை அந்த தேசத்திலிருந்து இறக்குமதி பண்ணின ராகம்தான் என்று நினைக்காதீர்கள்.பேராசிரியர் சாம்பமூர்த்தி நாம் எதுவும் அங்கிருந்து எடுத்துக் கொள்ளவில்லை என்று ஆராய்ச்சி பண்ணிச் சொல்லியிருக்கிறார். பின் ஏன் காம்போஜின்னு பேரு வந்தது?

கம்போடியா மட்டும் காம்போஜம் இல்லை.இந்தியாவின் வடக்கு எல்லையை ஒட்டினாற்போலிருக்கிற ஒரு பிரதேசத்தையும் காம்போஜம்னு சொல்லியிருக்கிறார்கள்.

ரகுவம்சத்தில் காளிதாசர், தேசம் தேசமாக விவரிக்கிறபோது சிந்து நதியைத் தாண்டி வடக்கே இமயமலையை ஒட்டினாற்போல் உள்ள காம்போஜத்தைக் குஇப்பிட்டிருக்கிறார்.

விசால இந்தியாவென்று சொல்லுகிற பிரதேசத்தில் ஹிந்துகுஷ் பிராந்தியத்தில் ஒரு காம்போஜம் இருக்கிறதா தெரிகிறது. அங்கே விசேஷமாக உள்ள ஒரு ராகத்திலிருந்து காம்போஜி வந்ததோ?

சௌராஷ்டிரம்,கன்னட, சிந்துபைரவி,யமுனா கல்யாணி.... இப்படி அந்த இடத்திலுள்ளவர்கள் அந்தந்த ராகத்தை மெருகேற்றியிருக்கலாமே?

[2012-ல் வெளியான இசை விழா மலர்[தினமணி] Shared from Vidyaraju..

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Rare and beautiful photo collection of Sri Maha Periva, depicting His every single movement from dawn to dusk - all photo movements matching the lyrics of the wonderful song "Paarthukittae Irukka Thonuthu". This wonderful song is written by Sri Agathiyanpally Krittinamoorthy and sung by Sri Mahesh Vinayakram, compiled and presented at the Holy Feet of Sri Maha Periva by Kanchi Periva Forum...

Listen at..Mahesh Vinayakaram..

http://www.youtube.com/watch?v=A1t5Q8mg-fQ

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

New series on Maha Periva

Post by venkatakailasam »

Image


By By: Krishnamurthy Krishnaiyer

ஸ்ரீமதி.ராஜலக்ஷ்மி மாமியின் மஹா பெரியவா அனுபவங்கள் - 1
September 20, 2013 at 5:01pm
திருமதி.ராஜலக்ஷ்மி விட்டல். மஹா பெரியவாளின் பரம பக்தை. அவரே எல்லாம் என்று, நம்மைப் போல் அல்லாமல், மிக வித்யாசமாக, வாழ்ந்து கொண்டிருப்பவர். அப்படியென்ன வித்யாசம்? நொச்சியம் (மாதவ பெருமாள் கோவில்) கொள்ளிடக் கரையில் ஒரு சின்ன இடத்தில், வேத பாடசாலை, கோ சாலை நடத்திக் கொண்டு, அதனினும் பெரிய ஆசையாக அம்பாள், கணபதி, சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, வேத வியாசர், ஆதி சங்கரர், நம் பெரியவாள் உள்ளடக்கிய கோவிலை கட்டி வருகிறார். இதற்கு அடுத்த கட்டமாக நாம் அங்கு போகும் போது தங்குவதற்கு 20 வீடுகளும் கூட. அதுவும், தனக்குப் பின்னால் ஆசிரமம் நல்ல படியாக நடக்க வேண்டும் என்பதற்காக. இவையனைத்தும் முடிந்த பின், அநாதை பிரேத சம்ஸ்காரம், ஞான வாபி, ஸ்ரார்த்த கட்டம் இவற்றை ஏற்படுத்தும் உத்தேசமும் உண்டு. அதற்கு வசதியாக ஆஸ்ரமத்தின் பின் புறத்தில் கொள்ளிடத்தின் வடகரை. இதையெல்லாம் செய்து கொண்டு வரும் இவர் வயது என்ன தெரியுமா? எண்பது ! சரி, இவருக்கு என்ன அப்படி ஒரு ஈர்ப்பு ஸ்ரீ பெரியவாளிடத்தில், அவருக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டுமென்று? இந்த கேள்விக்கு விடை காண ஐம்பத்திரண்டு ஆண்டுகள் பின் நோக்கி செல்வோம்.

1961. ஸ்ரீ பெரியவாள் பூந்தமல்லி ரோட்டில் கேம்ப். எந்த இடம் என்று மாமிக்கு ஞாபகம் இல்லை. 'அப்போ எனக்கு உலக அனுபவமே கெடயாது. ஒண்ணும் தெரியாது' என்று ஆரம்பிக்கிறார். 'ஒரு நாள் மத்தியான நேரம். எல்லாரும் பெரியவாளை பாத்து ஆசிர்வாதம் வாங்கறாளேன்னு நானும் போனேன். பெரியவா ஒரு பந்தல் கீழே உக்காந்துண்டு இருந்தா. பந்தல் ஒரே ஓட்டை. சூர்ய, சந்திராள் எல்லாம் அது வழியா அவர பாத்துட்டு போவா போல இருக்கு. சில குழந்தைகள் அவர சுத்தி விளையாடிண்டு இருந்தது. நான் ஒரு கம்பத்தை பிடிச்சுண்டு அவர பாத்துண்டே, மானசீகமா என் மனசுல இருந்ததை அவர்ட்ட சொல்லிண்டு, பிரார்த்தனை செஞ்சுண்டு இருந்தேன். அப்போ ஒருத்தர் குனிஞ்சு, தன்னோட வாயை கையால பொத்திண்டு, பெரியவா காதுல என்னவோ சொன்னா. பெரியவா சட்டுன்னு எழுந்துண்டா. விடு விடுன்னு நடந்தா. என்னை தாண்டி போகும் போது 'நீ அமோகமா இருப்பே'ன்னு சொல்லிண்டே வேகமா போய்ட்டா. அப்போ எனக்கு எதுவும் புரியல. அப்பிடியே நின்னுண்டு இருந்தேன். ஆனா, இப்போ நெனச்சு பாக்கறப்போ, பெரியவா என்னை இதுக்குத்தான் தயார் பண்ணிண்டு இருந்திருக்கான்னு தெரியறது. அப்புறம் கொஞ்ச வருஷத்துக்கு பெரியவா தன்னை எங்கிட்டேயிருந்து மறச்சுண்டுட்டா. குடும்ப வாழ்க்கைல என்னை ஈடுபடுத்தி, மாயையால அவரோட பிரக்ஞை இல்லமா பண்ணிட்டா. அதுக்கப்றம் பெரியவா என்னை எப்படி ஆட்கொண்டா அப்படிங்கறத சொல்றேன் கேளுங்கோ'.
பெரியவா தன்னை கொடுத்து, மாமியை தடுத்தாட்கொண்ட கதை வளரும்.
ஸ்ரீ மஹா பெரியவ திருவடிகள் சரணம். ஹர ஹர சங்கர, ஜய ஜய சங்கர.

பெரியவா பாத்துப்பா - 2 !

'மாமி, இன்னைக்கு மறுபடி உங்களைப்பத்தி வரிசை க்ரமமா, இன்னும் விரிவா, விட்டுப்போன முக்கியமான விஷயங்களை சேர்த்து, நீங்க சொன்ன திருத்தங்களை செஞ்சு எழுத ஆரம்பிச்சுருக்கேன், படிச்சு பாருங்கோ'. 'என்ன டைட்டில் வச்சிருக்கேள்?'. சொன்னேன். வேண்டாம். 'பெரியவா பாத்துப்பா'ன்னு வைங்கோ. 'ஏன் மாமி?'. இந்த ஆஸ்ரமம் தொடங்கினதுலேர்ந்து எல்லாரும் கேக்கற கேள்வி இதுதான் - எப்பிடி மாமி இந்த வயசுல உங்களால இத்தனையும் செய்ய முடியும்? நான் சொல்ற பதில் என்ன தெரியுமோ? 'நான் பெரியவாள நம்பறேன். அவா பாத்துப்பா'. 'அது சரி மாமி, எனக்கும் பெரியவாட்ட பக்தி இருக்கு, ஆனா, பிராக்டிகலா பாக்கறச்சே நம்ப முடியல, பயமா இருக்கு'. அதுக்கு நான் என்ன செய்ய முடியும்? இந்த ஆஸ்ரமம் ஆரம்பிக்கும் போது கூட எனக்கு வெறும் பாடசாலை மட்டும் தான் மனசுல இருந்தது. ஆனா, பெரியவா வேற பெரிசா முடிவு பண்ணிருக்கா. அவாதான் செய்யறா. எனக்கு என்ன தெரியும்? நான் வெறும் பொம்மை. அவர் ஆட்டுவிக்கறார், நான் ஆடறேன், அவ்ளோதான். ஒரு தடவை எங்கிட்ட பெரியவா சொன்னார் 'நான் ஏழை சந்நியாசி மா. நீ பின்னாடி பெரிய கார்யம் எல்லாம் செய்யப்போறே'ன்னு. நான் நெனச்சுண்டேன் 'பெரியவா எப்பிடி எங்கிட்ட நாடகம் ஆடறேள். என்னமா உங்களை மறைச்சுக்கறேள்'ன்னு. ஆனா, இப்போ புரியறது, பெரியவா எதை மனசுல வச்சுண்டு அப்பிடியெல்லாம் பேசினாள்னு. வேத பாடசாலை, கோசாலை, கோவில் வேலை, ஸ்தபதி வேலைன்னு இத்தனையும் நடக்கறதே, இதையெல்லாம் யார் பாத்துக்கறா? அவாதான். என்னால ஒரு சொம்பைக்கூட தூக்க முடியல. இந்த இடத்துலேர்ந்து கெளம்பினா என்னோட சக்தியெல்லாம் போய்டறது. அப்பிடிப்பட்ட என்னை ஒரு கருவியா வச்சுண்டு அவர் எல்லாத்தையும் நடத்திக்கறார். அதனால, 'பெரியவா பத்துப்பா'ன்னு தலைப்பு வைங்கோ. அது, அவரோட பக்தாள் எல்லாருக்கும் ஒரு நம்பிக்கையையும் கொடுக்கும்.

ஆகவே, மாமியின் அனுபவங்கள் இனி 'பெரியவா பாத்துப்பா' என்கிற டைட்டிலில்.

பெரியவா என்னை எப்படியெல்லாம் காப்பத்தி இங்க கொண்டு வந்து சேர்த்திருக்கார் தெரியுமா? 1965 - 70க்குள்ள நான் பம்பாய் போயிருந்தேன். ஸாண்டாக்ரூஸ்ல தான் என்னோட மச்சினர் வீடு. ஊருக்கு கெளம்பறதுக்கு முன்னாடி கொஞ்சம் சாமான்கள் வாங்கலாம்னு என்னோட ஓர்ப்படியும் நானும் போனோம். ரயில்வே லைன் கிராஸ் பண்ணும் போது பின்னாடி இருக்கற ஜனம் எல்லாம் எதோ ஹிந்தில கத்தறா. திரும்பி பாக்கறேன். கேட் அடைக்கற கட்டை கீழ இறங்கிடுத்து. ஒரு ஷணம் தான். என்னோட தலைல விழுந்திருக்கும்.அப்புறம், சாமான் எல்லாம் வாங்கிண்டு திரும்ப வரச்சே ரயில் ரொம்ப வேகமா பக்கத்துல வந்துடுத்து. என்னோட ஓர்ப்படி என்னை இழுத்து அந்த பக்கமா தள்ளினா. சிராய்ப்பு காயத்தோட தப்பிச்சேன். அன்னிக்கு தான் எனக்கு ஒரு சொப்னமும் வந்துது. என்னை ஏன் இப்பிடி இந்த சிறைல தள்ளி கஷ்டப்படுத்தறேள்னு கேக்கறேன். ராமனும், லக்ஷ்மணனுமா வந்து, பூட்டை தொறந்துட்டு போறா. ராமன் தான் பெரியவா. பெரியவா தான் ராமன்.

இன்னொரு சம்பவமும் சொல்றேன் கேளுங்கோ. இது, திருஆனைக்கா வந்தப்றம் நடந்தது. ஒரு நாள் கஸ்தூரி மஞ்சள் சாக்குப் பை மேல காயப் போட்டிருந்தேன். வேலைக்காரி மழை வந்துடுத்துன்னு சொன்னா. ஒடனே ஓடிப்போய் அப்பிடியே சாக்குப்பையை சுருட்டிட்டேன். உஸ்ஸ்ஸ் னு சப்தம் வந்தது. அது என்னன்னு புரியறதுக்குள்ள ஒரு இடுக்கு வழியா அஞ்சடி நீள பாம்பு கீழ விழுந்து சர சர ன்னு ஊர்ந்து போய்டுத்து. நான் பிரமிச்சுப்போய் பாத்துண்டே இருந்தேன்.

இன்னும் வரும்.


பெரியவா பாத்துப்பா - 3 !

அதி மஹா ருத்ரம் நடத்தி (1988) மூணு மாசத்துல கடன் எல்லாம் அடஞ்சுடுத்துன்னு மாமா சொன்னார். எனக்கு ஒரே ஆச்சர்யம். நான் பண்ணின பிசினஸ்ல நிச்சயமா அம்பத்தி ரெண்டாயிரம் ரூவா அத்தன சீக்கரத்துல லாபமா வந்திருக்காது. அப்பிடின்னா, பெரியவா தான் ராமன் தன்னோட தாசனுக்காக கடனை தீர்த்த மாதிரி ஏதோ பண்ணிருக்கான்னு புரிஞ்சுண்டேன். அதுக்கப்றம் எனக்கெதுக்கு பிசினஸ்? மிச்சம் இருந்ததையெல்லாம் என் ப்ரெண்ட் கிட்ட கொடுத்தேன். ஒரு லட்ஷம் கெடச்சுது. நான், என் மனசுக்குள்ள பெரியவாட்ட சொன்னேன் - பெரியவா, நீங்க ஏழை சந்நியாசி கிழவன்னு சொன்னேளே, இப்போ நீங்க லட்ஷாதிபதின்னு. அந்த பணத்தை என் பிள்ளையும், மாமாவுமா பல விதத்துல இன்வெஸ்ட் பண்ணி பெருக்கினா. அப்புறம் நானும் கொஞ்சம் கொஞ்சமா பணம் சேர்த்தேன். எல்லாமா போட்டுத்தான் இந்த இடத்தை வாங்கினேன். மாமா கூட கேட்டா 'இந்த வயசுல யானை வாங்கலாமா'ன்னு. நான் சொன்னேன் 'எல்லாம் பெரியவா பாத்துப்பா'ன்னு. நான் இங்க வந்து பாத்தப்போ அவ்ளோ லக்ஷ்மிகரமா இருந்தது. தென்னை, வாழை, பசு மாடு, கண்ணுக் குட்டி, சாணம், பின்னாடியே கொள்ளிடம்....எனக்கு ரொம்ப பிடிச்சுடுத்து. இங்க லலிதைக்கு கோவில் வரப்போறதுன்னு நெனைக்கும் போது சந்தோஷமா இருக்கு. ஆனா, முதல்ல எனக்கு ஆஸ்ரமம், பாடசாலை மட்டும் தான் மனசுல இருந்தது. அதுக்கு ஒரு ஸ்கெட்ச் போடச் சொல்லி பெங்களூருல அபர்ணாங்கற பொண்ணு கிட்ட சொன்னேன். அவ ஆர்க்கிடெக்சர் படிச்சுருந்தா. ஒரு காலேண்டர்ல ஆஸ்ரமம், சுத்திவர காடு, மான், முயல்கள் எல்லாம் படமா போட்டு இருந்தது. அதையும் அவகிட்ட கொடுத்தேன். அவ என்ன போட்டு கொண்டு வந்து கொடுத்தா தெரியுமா? அம்பாளோட ஸ்ரீ சக்ரம் ! இப்போ சொல்லுங்கோ, இதெல்லாம் யாரு பண்றா? நானா? எல்லாமே பெரியவாதான். அவர்தான் எல்லாத்தையும் பாத்துப் பாத்துப் பண்றார்.

நீங்களே சொல்லுங்கோ, யாராவது இந்த மாமிக்காக ஏதாவது பண்ணுவாளா? எல்லாரும் யாருக்காக பண்றா? பெரியவாளுக்காக. அவர்தான் சூட்ஷுமமா இருந்து இத்தனை கார்யங்களையும் கவனிச்சு நடத்திண்டு இருக்கார். இது ஒரு பெரிய அதிசயம் இல்லையா? எத்தனையோ இக்கட்டான சூழ்நிலையெல்லாம் வரது. ஆனா, ஒவ்வொரு தடவையும் பெரியவா தன்னோட பக்தாள்ல யாரையாவது அனுப்ச்சு வேண்டியதை செய்ய வச்சுடறா. அவா எல்லாம் எங்கிட்ட என்ன சொல்றா தெரியுமா? மாமி, நீங்க கவலை படாதீங்கோ. நாங்க பாத்துக்கறோம்னு. ராமாயணத்துல கிஷ்கிந்தா காண்டத்துலதான் ஹனுமார் ராமர்ட்ட அடைக்கலமாறார். அதுமாதிரி நானும் கிட்டத்தட்ட என்னோட முப்பதாவது ப்ராயத்துல தான் பெரியவாட்ட சரணடைஞ்சேன். ஆனா, அவரைப்போல வல்லமை எல்லாம் எனக்கு கெடயாது. இப்போ, நீங்களெல்லாம் அந்த வாயு புத்ரனோட சேர்ந்தவா எல்லாரும் ராம சேனைல சேர்ந்துண்ட மாதிரி பெரியவாட்ட சரணாகதி ஆயுட்டேள். எனக்கு இப்போ உங்களைப் போல கோடிக் கணக்கான குழந்தைகள். பெரியவா குடும்பம் பெரிசாய்டுத்து. அவாளுக்கு உங்களை எல்லாம் காப்பாத்தற பொறுப்பு வந்துடுத்து (இதை சொல்லும் போது சிரிக்கிறார்). நீங்களெல்லாம் தான் எனக்கு கெடச்ச பெரிய நிதி. நீங்க எல்லாரும் பரம ஷேமமா இருப்பேள்.

இன்னும், எத்தனையோ வருஷமா எனக்கு சப்போர்ட் பண்ணிண்டு இருக்கறவாள பத்தி சொல்லணும். இப்போ, பாராயணத்துக்கு நாழி ஆய்டுத்து. அப்புறம் பேசறேன்.

ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். ஹர ஹர சங்கர, ஜய ஜய சங்கர.

பெரியவா பாத்துப்பா - 4 !

மாமி, உங்களுக்கு ஆரம்ப காலத்துலேர்ந்தே பல விதத்துலயும் உதவியா இருந்தவா பத்தி சொல்றேன்னு சொன்னேள். அதுக்கு முன்னாடி, உங்களுக்கு எப்படி பெரியவாட்ட இவ்வளவு ஈடுபாடு வந்ததுன்னு சொல்லுங்கோ.

அதுவா, என்னோட நாத்தனார் குடும்பத்துல எல்லாருக்கும் பெரியவட்ட அப்படி ஒரு பக்தி. பீக்ஷாவந்தனம் செய்வா. பெரியவாளோடையே இருப்பா. எனக்கும் பெரியவாளுக்கு பீக்ஷாவந்தனம் செய்யணும்னு ஆசையா இருந்தது. அத என் நாத்தனார் கிட்ட சொன்னேன். அவாதான், மத்தூர் ஸ்வாமிகளோட பூர்வாச்ரம தாயார். அவா சொன்னா, எதுக்கு இவ்வளவு ஆதங்க பட்டுக்கற, உனக்கு தான் பெரியவாட்ட இத்தனை பக்தி இருக்கே, நிச்சயம் நடக்கும்னு. நான் முதல்ல சொன்னேனே, பெரியவா எனக்கு குடும்ப பொறுப்பை கொடுத்து தன்னை எங்கிட்டே இருந்து சில வருஷங்களுக்கு மறச்சுண்டுட்டான்னு, அந்த சமயம். இப்படி இருக்கறச்சே ஒரு நாள் எனக்கு சொப்பனம் வந்தது. யாரோ ஒரு சந்நியாசி, தெலுங்கு கட்டு வெள்ளை புடவைல இருந்த ஒரு இளம் வயசு மாதுவோட ஆத்துக்குள்ள நுழைஞ்சா. சந்யாசியை அடையாளம் தெரிஞ்சுது. மஹா பெரியவா! கூட வந்தவாளோட முகம் பரிச்சயமா இருந்தது. உத்து பாத்தேன். தாயார் ஆர்யாம்பாள்! நான் பெரியவாட்ட உங்களுக்கு பீக்ஷா வந்தனம் செய்யணும்னு சொல்றேன். பெரியவா சொல்றா 'ஏன் இவ்வளவு தாபப் படறே, எனக்கு மோர் சாதம் மட்டும் போரும்'னு. சட்டுன்னு எனக்கு முழிப்பு வந்துடுத்து. இந்த கனவுக்கு என்ன அர்த்தம்னு யோசிச்சு பாத்தேன். ஸ்ரீ ஆதி சங்கரர் தான் ஸ்ரீ மஹா பெரியவாளா அவதாரம் பண்ணி இருக்கார்னு புரிஞ்சுது. பெரியவா தான் சாக்ஷாத் பரமேஸ்வரனேன்னு எனக்கு உணர்த்தினா. அப்போ ஆரம்பிச்ச பீக்ஷா வந்தனம் மஹா பெரியவா சித்தி ஆறவரைக்கும் தொடர்ந்தது. அதுக்கப்றம், ஸ்ரீ மத்தூர் ஸ்வாமிகள் கிட்ட கேட்டேன், இனிமே என்ன பண்றதுன்னு. அவர்தான், பெரியவா ஜெயந்தி பன்னுங்கோன்னு சொன்னார்.


இவ்ளோ சொல்றச்சே, என் நாத்தனாரோட ஆத்துக்காரர், எங்காத்து மாப்பிள்ளையை பெரியவா எப்படி காப்பாத்தினா அப்டிங்கறதையும் சொல்லணும். அவர், பம்பாய்ல இருந்து எப்போ காஞ்சிபுரத்தை தாண்டி வர வேண்டி இருந்தா நிச்சயம் பெரியவாள பாக்காம போகமாட்டா. ஒரு தடவை திருச்சி ஜீய புரத்துல ஒரு கல்யாணத்துக்காக வரும் போது காஞ்சிபுரம் போனா. பெரியவா தரிசனம் முடிஞ்சப்புறம் கெளம்பறதுக்கு உத்தரவு கேட்டா. பெரியவா ஒண்ணுமே பேசாம எழுந்து உள்ள போய்ட்டா. இவரும், ராத்திரி அங்கேயே தங்கிட்டு, மறு நாள் காலைல குளிச்சு பெரியவா தரிசனத்துக்கு போனா. அப்போ பெரியவா யாரையோ ஒருத்தரை அன்னிக்கு பேப்பரை எடுத்துண்டு வரச் சொன்னா. அத இவர்ட்ட காட்டி, இந்த ரயில் ல தானே நீ போகறதுக்கு இருந்தேன்னு கேட்டா. அதுதான், அந்த அரியலூர் ரயில் விபத்து. எங்காத்து மாப்பிள்ளை, பெரியவா'ன்னு அவர் கால்ல விழுந்துட்டா.

இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா, நாம எப்பவுமே சித்த சுத்தி பண்ணிண்டே இருக்கணும். எல்லாருக்கும் எப்பவும் நல்லதுதான் செய்யனும். நம்மால யாருக்கும் ஒரு கஷ்டமும் வரக்கூடாது. அப்படித்தான் நம்ம கர்ம பலனை கொறச்சுக்க முடியும். பகவானும் ஓடோடி வந்து நம்மை ரட்ஷிப்பார்.

இன்னும் வரும்.
Last edited by venkatakailasam on 23 Sep 2013, 17:14, edited 1 time in total.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: New series on Maha Periva

Post by cmlover »

Blessed Woman!
Let her devotion and story continue!
Where is Nocchiyam?

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: New series on Maha Periva

Post by venkatakailasam »

This place is near Trichy...near the town Uthamar koil..around 10 KM from Trichi..

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: New series on Maha Periva

Post by venkatakailasam »

பெரியவா பாத்துப்பா - 5 !

இது ரொம்ப லக்ஷணமான, பரம பவித்ரமான எடம்னு சொன்னேன் இல்லையா, இங்க பெரியவாளை கூட்டிண்டு வந்த கதையை சொல்றேன் கேளுங்கோ. ஒரு டிராவல் கம்பெனி கார்ல பெரியவாளை வச்சுண்டு வந்தேன். அப்போ ராத்திரி ஏழு மணிக்கு மேல இருக்கும். அய்யன் வாய்க்கால் பக்கத்துல கும்மிருட்டு. வழி பூரா புதர் மண்டிக் கெடந்தது. போறாததுக்கு பாதை மேடும் பள்ளமுமா, கல்லும் மண்ணுமா இருந்தது. டிரைவருக்கு கண்ணு சரியா தெரியல. நான் சொல்லிண்டு இருக்கறச்சையே சடார்னு வாய்க்கால் சரிவுல வண்டிய எறக்கிட்டார். அவருக்கு காதும் கேக்கல போல இருக்கு. நான் பெரியவான்னு கத்திட்டேன். அதுக்குள்ளே என்ன நடக்கறதுன்னு புரிஞ்சுண்டு டிரைவர் காரை நிறுத்திட்டார். வண்டி குடை சாஞ்சு எப்ப உருளுமோன்னு இருந்தது. நான் மெதுவா கீழ இறங்கி டிராவல் கம்பெனிக்கு போன் பண்ணினேன். அவா வேற காரை அனுப்ச்சு, இத கட்டி இழுத்து மேல கொண்டு வந்தா. பெரியவாதான் அன்னிக்கு காப்பாத்தினார். இல்லை, அவர் அய்யன் வாய்க்கால்ல ஸ்நானம் பண்ண நெனச்சாரோ என்னவோ. ஏன் சொல்றேன்னா , இந்த வாய்க்கால் கோவிந்தையாங்றவர் முன்னூறு வருஷத்துக்கு முன்னாடி யாகம், யக்ஞம் பண்றதுக்காக காவேரிலேர்ந்து கொண்டு வந்தது. இதுக்கு உபய காவேரின்னு தான் பேரு. ஆனா, எல்லாரும் ஐயா வாய்க்கால்னு சொல்லிச்சொல்லி அய்யன் வாய்க்கால் ஆய்டுத்து. இவர், தான் போற வழியெல்லாம் யாகம் நடத்தி இருக்கார். இன்னமும் அய்யன் தெரு, அய்யன் குளம்னு இவரோட பேர்ல நெறைய இடம் இருக்கு.

இப்போது பின் நோக்கி செல்கிறோம்.

நான் முதமுதல்ல பெரியவாள 1961ல தரிசனம் பண்ணினது, அப்புறம் அவர் தன்னை எங்கிட்டேருந்து கொஞ்ச காலத்துக்கு மறச்சுண்டது, 65- 70 க்குள்ள சொப்னத்துல தாயார் ஆர்யாம்பாளோட தரிசனம் கொடுத்து தான் சாக்ஷாத் ஆதி சங்கரர், பரமேஸ்வரன்னு உணர்த்தினது, அதே காலத்துல ரெண்டு தடவை என்னை விபத்துலேர்ந்து காப்பாத்தினது, எல்லாம் வரிசையா சொல்லிண்டு வரேன். அடுத்தது, திருச்சில இருந்தப்போ இராமாயண ப்ரவச்சனம் வச்சு மழை கொட்டினத பத்தி இன்னும் கொஞ்சம் (ஏற்கனவே சொல்லிருக்கேன்) விளக்கமா சொல்லணும். அப்புறம், என் பொண்ணோட மச்சினர் ஆத்துல தங்கி இருந்த யதியை பத்தி பெரியவா விசாரிச்சதையும் சொல்லணும். ராம், ராம்.

ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். ஹர ஹர சங்கர, ஜய ஜய சங்கர.



பெரியவா பாத்துப்பா - 6 !

1968,69 ல திருச்சில இருந்தேன். மழையே இல்லை. சகல ஜீவ ராசிகளும் தண்ணிக்கு தவிச்சுது. ஜனங்களுக்கு லாரில தான் தண்ணி வரும். நம்ம குளிக்கறதே அதிர்ஷ்டம். மாடுகளை குளிப்பாட்ட முடியாது. என்னோட தேவைகளுக்கு கிணத்துலேர்ந்து இறச்சுப்பேன். எங்கயோ ஆழத்துல தண்ணி இருக்கும். பயிர்கள் எல்லாம் அழிஞ்சுது. எங்க பாத்தாலும் வறட்சி. கஷ்டம். நாட்டு நடப்பு நன்னா இல்லை. மக்கள் ரொம்ப அவதிப்பட்டா. அயோத்தியும் அப்படித்தான் இருந்தது. அதனாலதான் பரதனை சீக்கரமா அழைச்சுண்டு வரணும்னு சொன்னா. இதெல்லாம் யோசிச்சப்ப தான் இராமாயண பிரவசனம் வெச்சுக்கலாம்னு என்னோட குருவுக்கு கார்டு எழுதினேன். பண்ணுன்னு அவர் அனுக்ரஹம் செஞ்சார். அவர் சொன்னதன் பேர்ல அவரோட நேர் சம்பந்தி அரியூர் சுப்பிரமணிய கனபாடிகள் (ஹனுமான் காட், காசி) எங்க அகத்துலையே தங்கி பத்து நாளைக்கு இராமாயண பிரவசனம் பண்ண சம்மதிச்சார். அப்போ, என் அம்மா வந்திருந்தா. அவர், என்னோட அம்மா கிட்ட 'இந்த பொண்ணை எப்படி பத்து மாசம் வயத்துல வச்சுண்டு இருந்தே, ஒரு நிமிஷம் சும்மா இருக்க மாட்டேங்கறாளே ன்னு சொல்லுவார். மாமா, குழந்தைகள், வீடு, வாசல், மாடுன்னு இருந்துடுவேன். டைம் கெடச்சா ராமாயணம் படிக்க ஒக்காந்துடுவேன். அதையெல்லாம் என் பிள்ளை கிட்ட சொல்லுவேன். பின்னாடி ஆத்துல என்னைவிட வயசான மாமி இருந்தா. 'என்ன லக்ஷ்மி உன்னை ரெண்டு நாளா பாக்கவே முடியலை'ன்னு கேப்பா. நான் படிச்சத மாமிட்ட சொல்லுவேன். மாமியும் எனக்கு நெறைய சொல்லுவா. எனக்கு இந்த நகை, நட்டு, சினிமா, வம்பு எதுலயும் ஈடுபாடு கெடயாது. எப்பவும் பகவன் நாமாவ ஸ்மரிச்சுண்டு இருப்பேன். ராமாயணத்துல என்னை அப்பிடியே பிழிஞ்ச எடம் ஒண்ணு இருக்கு, அத அப்புறம் சொல்றேன்.

ப்ரவச்சனத்தோட ஒம்பதாவது நாள் வரைக்கும் மழை இல்லை. அப்போ கனபாடிகள் பகவானை பிரார்த்தனை பண்ணிண்டு, நான் இந்த ஊரை விட்டு கெளம்பறதுக்கு முன்னாடி மழை பெய்யலேன்னா, என்னோட வாக்கு பொய், ராமாயணம் பொய், பக்தியும் பொய்ன்னு ஆய்டும். அதுக்கப்றம் நான் இராமாயண பிரவசனம் பண்றத விட்டுடுவேன்னு சத்ய பிரமாணம் எடுத்துண்டார். ஆச்சு, அவர் கெளம்பற நேரமும் வந்துது. எல்லாருக்குமே மனசு பாரமா இருந்தது. அப்போ, மேகம் கருக்க ஆரம்பிச்சுது. சில நிமிஷத்துல இருட்டாய்டுத்து. கொஞ்சமா ஆரம்பிச்ச மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டி தீத்துது. ராமன், தானும் பொய் இல்லை, தன்னை நம்பின பக்தனும் பொய் இல்லைன்னு நிரூபிச்சான். நான் சுவாமி முன்னாடி உக்காந்துண்டு கதறினேன்.

அன்னிக்கு மட்டும் இல்லை, இன்னைக்கும் அதுதான் சத்யம். நாடு சுபிக்ஷமா இருக்கணும்னா தர்மம் தழைக்கணும். தர்மத்தை நாம ரக்ஷிக்கணும். நமக்கு நல்ல மனசு, புத்தி, சிந்தனை, வாக்கு, கார்யம் இருக்கணும்னு பகவானை ப்ரார்த்திக்கணும். எல்லார் கிட்டையும் அன்பு செலுத்தணும். ஞானம் வேணும்னு பகவான் கிட்ட கேக்கணும். அடக்கத்தோட இருக்கணும். அஹங்காரம், கோபம், துவேஷம், ஆசை, துரோகம், வக்ரம், பொய், பொறாமை, வேஷம் எல்லாத்தையும் விட்டுடணும். அப்போ பகவான் நம்மை நிச்சயமா ரக்ஷிப்பார். கை விட மாட்டார். தர்மத்தை காப்பாத்துங்கோ, அது உங்களை காப்பாத்தும். ஷேமமா இருங்கோ.

ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். ஹர ஹர சங்கர, ஜய ஜய சங்கர.

மாமியின் லட்சியமான லலிதைக்கு கோவில் எழுப்பும் பணியில் உங்களை இணைத்துக் கொள்வது உங்களுடைய விருப்பம். ஆனால், குறைந்த பட்ஷம் இந்த போஸ்டை ஷேர் செய்யலாம். 94433 70605 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மாமியுடன் பேசலாம், அவருடைய ஆசிர்வாதத்தை பெறலாம்.
By: Krishnamurthy Krishnaiyer
Last edited by venkatakailasam on 25 Sep 2013, 21:18, edited 1 time in total.

thanjavooran
Posts: 2986
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

Sharing from my friend's mail
பெரியவாளுடைய பரமபக்தர் ஒருவருக்கு காது கேட்காது! புஸ்தகம் படிக்க முடியாதபடி பார்வைக் குறைபாடு! எதிரில் நிற்பவர்கள் கூட ஏதோ நிழல் மாதிரித்தான் தெரிவார்கள். அந்த வயசான பக்தருக்கு ரொம்ப தீவிரமான ஆசை ஒன்று இருந்தது. ஏக்கம் என்று கூட சொல்லலாம்.அது அவருக்கு ஒரு விதத்தில் வெறியாகவே இருந்தது.பாவம்! "சரஸ்வதி"யிடந்தானே மனக்குறையை சொல்ல வேண்டும்? பெரியவாளிடம் ரொம்ப மனஸ் உருகி வேண்டினார்.

"பெரியவா...எனக்கு ராமாயணம், ஸ்ரீமத் பாகவதம், பகவத்கீதை, பதினெட்டு புராணங்கள் எல்லாத்தையும் படிச்சு என்னோட ஜன்மாவை கடைத்தேத்திக்கணும்....ஆனா, என்னால புஸ்தகம் படிக்க முடியாது. கண் பார்வை முக்காவாசி கெடையாது. காதால கேக்கலாம்..ன்னா காதும் கேக்கலை. நான் என்ன பண்ணுவேன்? பெரியவாதான் எனக்கு கதி"

அப்போது பெரியவாளை சுற்றி சில பண்டிதர்களும் அங்கே இருந்தார்கள். பெரியவா அவர்களிடம் "இவரோ ராமாயண, மஹாபாரதம்,புராணம் எல்லாத்தையும் படிக்கணும்ன்னு ரொம்ப ஆசைப் படறார்....கண் பார்வை செரியில்லே! என்ன பண்ணலாம்?" சர்வஞ்யத்வம் என்பதின் முதல் தகுதியே தனக்கு எல்லாம் தெரிந்தும், அதைப் பற்றி கொஞ்சங்கூட சட்டை செய்யாமல் [ஆஞ்சநேய ஸ்வாமி மாதிரி] மற்ற பேருக்கு முக்யத்வம் குடுப்பதுதான். பண்டிதர்களுக்கு சரியான பதில் சொல்ல முடியவில்லை. பெரியவாளே சொன்னார்......

"நைமிசாரண்யம்ன்னு ஒரு க்ஷேத்ரம் இருக்கு தெரியுமோ?"....

"தெரியும்"

"அங்க என்ன விசேஷம்?"

"அங்கதான் ரிஷிகள்ளாம் புராணங்கள் கேட்டா......"

"புராணங்களை எழுதினது யாரு?"

"வ்யாஸர்...."

"வ்யாஸாச்சார்யாள் புராணங்கள் எழுதின எடம்ன்னு ஒரு ஸ்தலம் இருக்கு. "வ்யாஸகத்தி" ன்னு பேரு!....."

பண்டிதர்களுக்கோ ஆச்சர்யம்! அவர்களுக்கும் இது புது விஷயமாக இருந்தது. நைமிசாரண்யம் போய்விட்டு வந்தவர்களுக்கு கூட இந்த இடம் பற்றி தெரிந்திருக்கவில்லை! ரொம்ப நுணக்கமான விஷயங்கள் கூட பெரியவாளுக்கு தெரியும்.

பக்தரை அருகில் அழைத்து "குடும்பத்தோட நைமிசாரண்யம் போயி, கொஞ்சநாள் அங்க தங்கு! வ்யாஸர் புராணங்கள் எழுதின எடத்ல விழுந்து விழுந்து நமஸ்காரம் பண்ணு! அப்புறம் ஒனக்கே எல்லாப் புராணங்களும் மனஸ்ல ஸ்புரிக்கும் !..."

நிச்சயமாக அந்த பக்தருக்கு ஸ்புரித்திருக்கும். பெரியவா சொன்னது அனுபவ ஸாத்யமான வழி! அநுக்ரஹ வழி!


வட இந்தியாவில் வேலை பார்க்கும் நம் ஊர்காரர் ஒருவர், மகாபெரியவா தரிசனத்துக்கு வந்தார்.

அவருக்கு ஒரு பிரச்சினை.

செவிகளில், எப்போதும் ஏதோ பேச்சு கேட்டு கொண்டே இருக்கிறது !
அந்தப் பேச்சு, ஆஞ்சநேயருடைய குரல் என்ற எண்ணம் எப்படியோ வந்துவிட்டது அவருக்கு.

இந்தத் தெய்வீக சக்தியை வைத்துக்கொண்டு சும்மா இருக்க முடியுமா ? நண்பர்கள் தான் சும்மா இருக்க விடுவார்களா ?

குறி சொல்வதற்கு என்று ஒரு நாளை ஒதுக்கினார்.

யாருக்குத்தான் கஷ்டங்கள் இல்லை ? எனவே கூட்டமான கூட்டம். அதிலும் கட்டணம் ஏதுமில்லை என்றால் கூட்டத்துக்குக் கேட்க வேண்டுமா ?

ஆனால் கூறி சொல்கிற அன்பருக்குத்தான் மன நிம்மதி இல்லை.

பெரியவாளிடம் வேண்டிக்கொண்டார் : “வடக்கே இருப்பதற்கு எனக்குப் பிடிக்கவில்லை. பெரியவா அனுக்ரஹத்தாலே, மெட்ராசுக்கு டிரான்ஸ்பர் கிடைக்கணும் ….”

“எங்கிட்ட என் சொல்றே ? உனக்குத்தான் ஆஞ்சநேயர் அருள் பரிபூரணமா இருக்கே … ஹனுமானிடமே பிராத்தனை பண்ணிக்கோயேன் ….”

அன்பர் ,அபப்டியே குறுகிப் போய்விட்டார்.

” ஆஞ்சநேயர் பேசுகிறார் என்பது நானாகச் சொன்னதுதான். என்ன துர்தேவதையோ தெரியவில்லை. என்னைத் தூங்கவிடமாட்டேன் என்கிறது.

அது சொல்கிற பதில் சிலபேர்களுக்குப் பலித்துவிடுவதால் எல்லோரும் நம்புகிறார்கள். எனக்குத்தான் நம்பிக்கையில்லை. பெரியவா என் கஷ்டத்தைப் போக்கணும் …”

பெரியவாள் சொன்னார்கள் :

“எப்போதும் ராமநாமா சொல்லிண்டு இரு. கும்பகோணம் பக்கத்துலே கோவிந்தபுரம் போதேந்திராள் அதிஷ்டானத்திலே கொஞ்சநாள் தங்கு. “

பத்து நாள்கள் கழித்து மகிழ்ச்சியோடு வந்து பெரியவாவை தரிசனம் செய்தார் அன்பர்.

“என்ன….ஆஞ்சநேய ஸ்வாமி, ராமசேவைக்குப் போயிட்டாரா ? ” என்று கேட்டார் பெரியவா குறும்புத்தனமாக.!!!!!!!!!!!!

மகாபெரியவாளின் ஆக்ஞைப்படி ( புரட்டாசி பௌர்ணமி திதியில் ஸ்ரீ போதேந்திர சுவாமிகளின் ஆராதனை ஒவ்வொரு வருடமும் கொண்டாடபடுகிறது.

thanjavooran
Posts: 2986
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

sharing from my friend's mail
பல வருடங்களுக்கு முன்… காஞ்சி மகா ஸ்வாமிகள், தன் பரிவாரங்களுடன் தஞ்சை மாவட்டப் பகுதிகளுக்கு விஜயம் செய்தார். அது, ஆனி மாதம். ஆடுதுறையில், பெரிய தர்மசத்திரம் ஒன்றில் முகாமிட்டிருந்த மகா பெரியவாளை, சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஜனங்கள், வந்து தரிசித்துச் சென்றபடி இருந்தனர்.ஆடுதுறையைச் சுற்றியுள்ள நடராஜபுரம், கோவிந்தபுரம், தியாகராஜபுரம், சாத்தனூர், திருமங்கலக்குடி ஆகிய ஊர்களைச் சேர்ந்த பிரமுகர்கள், தங்கள் ஊர் சார்பாக ஆச்சார்யாளுக்கு சமஷ்டி பிக்ஷா வந்தனம் (பல பேர் சேர்ந்து பிட்சை அளித்து வழிபடுவது) நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.ஆடுதுறையிலிருந்து தெற்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவில்தான் அடியேனின் சொந்த ஊரான மருத்துவக்குடி கிராமம் உள்ளது. என் தந்தையார் பிரம்ம சந்தான வாத்தியார், அப்போது அந்தப் பகுதியின் காஞ்சிமட முத்திராதிகாரியாக இருந்தார். எங்களது கிராமத்தின் சார்பாகவும் சமஷ்டி பிக்ஷா வந்தனம் நடத்த வேண்டும் என்று விரும்பினார் அவர். இதை, உள்ளூர் பிரமுகர்களும் ஏற்றுக் கொண்டனர்.மறு நாள் காலை. ஸ்வாமிகள் முகாமிட்டிருந்த சத்திரத்துக்குக் கிளம்பினார் என் தகப்பனார். என்னையும் உடன் அழைத்துச் சென்றார்.அவரைக் கண்டதும் மடத்துக் காரியஸ்தர், ”சாஸ்திரிகளே… நீங்க மருத்துவக்குடி பகுதி மடத்து முத்திராதிகாரிதானே? ஒரு நாளைக்கி உங்க ஊர் பிக்ஷை வெச்சுக்க வேண்டாமோ? வர்ற ஞாயித்துக்கிழமை உங்க ஊருல வெச்சுக்கோங்களேன்!” என்றார்.உடனே என் தந்தையார், ”நானும் அத கேட்டுண்டு போகத்தான் வந்தேன். ஞாயித்துக் கிழமையே வெச்சுண்டுடறோம். சுமாரா எவ்ளோ ரூவா செலவாகும்?” என்று அந்த காரியஸ்தரிடம் வினவினார்.காரியஸ்தர் சிரித்தபடியே, ”சொல்றேன்… மடத்துக் காணிக்கையா இருநூத்தம்பது ரூவா கட்டிப்டணும். அப்புறம் தேங்கா, பழம், காய்கறிகள்னு நீங்க வாங்கிண்டு வர்ற செலவு. எல்லாம் முடிஞ்சு, ஆச்சார்யாள்ட்ட பிரசாதம் வாங்கிக்கறச்சே… உங்க கிராம வசதிப்படி பாத சமர்ப்பணை (காணிக்கை)… அப்டி இப்டினு ஐநூறு, அறுநூறு ரூவா செலவு புடிக்கும்! உங்க ஊர்ல வசூல் ஆயிடுமோல்லியோ?” என்று கேட்டார்.சற்றும் தயங்காமல், ”பேஷா ஆயிடும்” என்ற என் தகப்பனார், ”அது சரி… மத்த ஊர்க்காராள்லாம் பாத சமர்ப்பணையா எவ்ளவு பண்றா?” என்று ஆவலுடன் கேட்டார்.”ஐநூறுலேர்ந்து ஆயிரம் வரை பண்றா” என்றார் காரியஸ்தர். தகப்பனார் யோசனையில் ஆழ்ந்தார்.சற்று நேரத்தில் ஆச்சார்யாளை தரிசித்த நாங்கள், அவரை நமஸ்கரித்து எழுந்தோம். என் தந்தையார் பிக்ஷா வந்தன விஷயத்தை ஸ்வாமிகளிடம் தெரிவித்தார்.”பேஷா நடக்கட்டுமே” என்று அனுக்கிரகித்த ஸ்வாமிகள், ”ஏகதேசம் (தனியாக) பண்றாப்ல நம்மூர்ல நிறைய தனிகாள்லாம் (பணக்காரர்கள்) இருக்காளோ?” என்று வினவினார்.உடனே என் தகப்பனார் குரலை தாழ்த்தி, ”மூணு நாலு பேர்வழிகள் இருக்கா. அவாள்ள ரெண்டு மூணு பேர், இப்போ மெட்ராஸ் போயிருக்கா. ஊர்ல எல்லாருமா சேர்ந்துதான் பெரியவாளுக்கு பிக்ஷா வந்தனம் பண்றதா உத்தேசம். ஆச்சார்யாள் அனுக்கிரகிக்கணும்” என வேண்டினார். புன்னகைத்தபடியே இரு கரங்களையும் தூக்கி ஆசீர்வதித்தார் ஸ்வாமிகள்.ஞாயிற்றுக்கிழமைக்கு இன்னும் நான்கு நாட்களே இருந்தன. வசூலை ஆரம்பித்தார் தகப்பனார். மூன்று அக்ரஹாரத்திலும் சேர்த்து சுமார் 30 வீடுகள் இருக்கும். வியாழக்கிழமை மாலை வசூல் முடிந்தது. 400 ரூபாய் சேர்ந்தது. என் தகப்பனாரும்ஊரிலுள்ள மற்ற வைதீகர்களும் சேர்ந்து நூறு ரூபாய் சமர்ப்பித்தனர். ஆக, மொத்த வசூல் 500 ரூபாய்! பிக்ஷா வந்தன செலவுக்கு இது போதும்.இனி, பெரியவாளின் பாத சமர்ப்பணைக் குத்தான் பணம் வேண்டும். ‘ஐநூறு ரூபாயாவது பாத சமர்ப்பணை பண்ண வேண்டும்’ என்பது என் தந்தையின் ஆசை. ஆனால் பணமில்லை. அன்றிரவு அவர், சரியாகவே தூங்கவில்லை.வெள்ளிக்கிழமை! ஆச்சார்யாளைத் தரிசிக்கச் சென்றோம். சத்திரத்து வாயிலில்- கீற்றுக் கொட்டகையில் அமர்ந்து தரிசனம் அளித்துக் கொண்டிருந்தார் ஸ்வாமிகள். கூட்டம் அலை மோதியது. நாங்கள், சற்றுத் தள்ளி ஓர் ஓரமாக… ஸ்வாமிகள் இருந்த இடத்தை நோக்கி கை கூப்பி நின்றிருந்தோம். நான் தகப்பனாரை பார்த்தேன். முகத்தில் கவலை தோய்ந்திருந்தது. ‘பாத சமர்ப்பணை ஐநூறுக்கு என்ன பண்ணப் போகிறோம்?!’ என்கிற கவலை அவருக்கு.திடீரென்று ஒரு கருணைக் குரல்: ”சந்தானம்! கிட்ட வாயேன்… ஏன், அங்கேயே நின்னுண்டிருக்கே?” – சிரித்தபடி ஜாடை காண்பித்து, அருகில் அழைத்தார் ஆச்சார்யாள். இருவரும் சென்று, சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து எழுந்தோம்.”என்ன சந்தானம்… நேத்திக்கு நீ கண்ணுல படவே இல்லியே! ஊர்ல ஏதாவது வைதீக ஜோலியோ?” என்று வினவினார் ஸ்வாமிகள்.”அதெல்லாம் ஒண்ணுமில்லே பெரியவா. ஞாயித்துக் கிழமை எங்க ஊர் சார்பா பிக்ஷா வந்தனம் பண்றமோல்லியோ… அது விஷயமா ஏற்பாடுகள் பண்ணிண்டிருந்தேன். அதனாலதான்…” என்று என் தகப்பனார் முடிப்பதற்குள் இடைமறித்த ஸ்வாமிகள், ”அது சரி சந்தானம்… லௌகிகமெல்லாம் (வசூல்) எதிர்பார்த்தபடி பூர்த்தி ஆச்சோல்லியோ?!” என சிரித்தபடியே வினவினார். இதற்கு பதில் சொல்லத் தயங்கினார் என் தகப்பனார்.அவர் ஏதோ சொல்ல வாயெடுப்பதற்குள்… ஸ்வாமிகள் எதையோ புரிந்து கொண்டவர் போல, ”ஒண்ணும் கவலைப்படாதே! சந்திரமௌலீஸ்வரர் கிருபையால எல்லாம் நீ நெனைச்சுண்டு இருக்கறபடியே நடக்கும்!” என வார்த்தைகளால் வருடிக் கொடுத்தார்.திடீரென, ”ஏன் சந்தானம்… இந்த ஊர் காவிரி நதியிலே இப்போ நெறய ஜலம் போறதோ… தெரியுமோ ஒனக்கு?” என்று கேட்டார். ‘காவிரி ஜலத்தைப் பற்றி பெரியவா ஏன் விசாரிக்கிறார்?’ என்று அனைவரும் குழம்பினர்.”போயிண்டிருக்கு பெரியவா” என்றார் தகப்பனார்.பெரியவா விடவில்லை: ”அது சரி! நீ எப்ப காவிரி ஸ்நானத்துக்குப் போயிருந்தே?””ஒரு வாரம் முன்னாடி பெரியவா!”- என் தகப்பனார் பதில் சொன்னார்.”அதிருக்கட்டும்… இப்ப ஜலம் போயிண்டிருக்கோ… தெரியுமோ?” – இது பெரியவா.உடனே அருகிலிருந்த உள்ளூர் அன்பர் ஒருவர் பவ்வியமாக, ”இன்னிக்குக் காத்தால நான் காவிரி ஸ்நானத்துக்குப் போயிருந்தேன். சுமாரா ஜலம் போறது பெரியவா” என்றார்.ஸ்வாமிகளுக்கு சமாதானம் ஏற்படவில்லை. ”சுமாரா போறதுன்னா… புரியலியே! அமிழ்ந்து ஸ்நானம் பண்றாப்ல போறதா, இல்லியானு எனக்குத் தெரியணும்” என்றவர், என் தகப்பனாரைப் பார்த்து, ”சந்தானம், நீ ஒரு காரியம் பண்ணு. நாளக்கி விடியக் காலம்பற காவிரி ஸ்நானத்துக்குப் போ. நன்னா முழுகி ஸ்நானம் பண்றாப்ல தீர்த்தம் போறதானு பாத்துண்டு வந்து சொல்லு!” என்று கூறிவிட்டு, ‘விசுக்’கென்று எழுந்து உள்ளே சென்று விட்டார்!‘தான் காவிரியில் ஸ்நானம் பண்ணிவிட்டு வருவதற் காகத்தான், இவ்வளவு விவரங்களையும் பெரியவா கேட்கிறார் போலும்’ என்று எண்ணியபடியே ஊர் திரும்பினோம்.சனிக்கிழமை! பொழுது விடிந்தது. மழை லேசாகத் தூறிக் கொண்டிருந்தது. பெரியவா ஆக்ஞைப்படி காவிரி ஸ்நானத்துக்குப் புறப்பட்டோம். அப்போது காலை ஏழு மணி. கரையில் என்னையும் தகப்பனாரையும் தவிர ஒரு ஈ, காக்கா கூட இல்லை. என் தகப்பனார் ஸ்நானம் பண்ணியபடியே சொன்னார்: ”நன்னா முழுகி ஸ்நானம் பண்றாப்லதான் ஜலம் போறது! பெரியவாகிட்ட போய் சொல்லணும்.”தொடர்ந்து, உரத்தக் குரலில் காவிரி ஸ்நான சங்கல்பம் சொல்ல ஆரம்பித்தார் என் தந்தையார். திடீரென கரையிலிருந்து, ”சாஸ்திரிகளே! கொஞ்சம் இருங்கோ. நானும் வந்துடறேன். எனக்கும் கொஞ்சம் ஸ்நான சங்கல்பம் பண்ணி வையுங்கோ… புண்ணியமுண்டு!” என்றொரு கணீர்க் குரல் கேட்டது. இருவரும் திரும்பிப் பார்த்தோம். சுமார் 55 வயது மதிக்கத் தக்க ஒருவர், ஜலத்தில் இறங்கிக் கொண்டிருந்தார். முன்பின் பார்த்திராத முகம்!சங்கல்ப ஸ்நானம் முடிந்து கரையேறினோம். உடை மாற்றிக் கொண்ட அந்த நபர், தகப்பனாருக்கு ஸ்நான சங்கல்ப தட்சணையாக ஐந்து ரூபாய் கொடுத்தார். அவரைப் பற்றி என் தகப்பனார் விசாரித்தார்.அவர் சொல்ல ஆரம்பித்தார்: ”எனக்கும் பூர்வீகம் மருத்துவக்குடிதான். என் அம்மா வழித் தாத்தாவும் இந்த ஊர்தான். அப்பா வழி தாத்தா வெங்கடாசலம் ஐயருக்கு மருத்துவக்குடியிலே சொந்த வீடு இருந்தது. எங்க தாத்தாவுக்கு அப்புறம் இங்கே ஒருத்தரும் இல்லே. பம்பாய் போயிட் டோம். திருநீலக்குடிக்கு அருகில் இருக்கிற மேலூர் சந்திரமௌலீஸ்வர ஸ்வாமிதான் எங்க குலதெய்வம். ‘நீ எப்ப நம்மூர் பக்கம் போனாலும் ஆடுதுறை காவிரியில ஸ்நானம் பண்ணிட்டு வா’னு எங்கம்மா அடிக்கடி சொல்லுவா. அந்த பாக்கியம் இன்னிக்குக் கிடைச்சுது. குடும்ப கேஸ் விஷயமா தஞ்சாவூர் போயிண்டிருக்கேன். இப்போ சங்கல்பத்தோடு காவிரி ஸ்நானம் கிடைச்சுதுல ரொம்ப திருப்தி!” என்றவர், ”ஆமா சாஸ்திரிகளே! ரயிலை விட்டு எறங்கி வர்றச்சே பார்த்தேன். நிறையப் பேர் மடிசாரும் பஞ்சகச்சமுமா போயிண்டிருக்காளே… இங்கே என்ன விசேஷம்?” என்று கேட்டார்.ஆச்சார்யாள் விஜயம் பற்றியும், கிராம பிக்ஷா வந்தனம் பற்றியும் தகப்பனார் அவரிடம் விவரித் தார். அவருக்கு பரம சந்தோஷம்.”கேக்கவே சந்தோஷமா இருக்கு. நம்மூர் சார்பா லோக குருவுக்கு நடக்கிற பிக்ஷா வந்தனத்துல என்னால கலந்துக்க முடியாத நிர்ப்பந்தம். இருந்தாலும் எங்க குடும்ப காணிக்கையா பிக்ஷா வந்தனத்துல இதையும் சேர்த்துக்கோங்கோ” என்ற படி என் தகப்பனாரை நமஸ்கரித்து, அவரது கையில் ஒரு கவரைக் கொடுத்தார். தகப்பனாருக்கு ஒன்றும் புரியவில்லை. கவரைப் பிரித்துப் பார்த்தார். அதில் 500 ரூபாய்!”நான் போயிட்டு வரேன் சாஸ்திரிகளே” என்று கிளம்பியவரைத் தடுத்து நிறுத்திய என் தகப்பனார், ”ஒங்க நாமதேயம் (பெயர்)?” என்று கேட்டார்.அவர் சொன்ன பதில்: ”சந்திரமௌலீ!”இருவரும் பிரமித்து நின்றோம்.பின்னர், நேராக சத்திரத்துக்குச் சென்றோம். அங்கே பெரியவா இல்லை. கோவிந்தபுரம் போதேந்திராள் மடத்துக்குச் சென்றிருப்பதாகச் சொன்னார்கள்.என் தகப்பனார் மடத்துக் காரியஸ்தரிடம் சென்று, ”பெரியவா, காவிரியில் அமிழ்ந்து ஸ்நானம் பண்றாப்ல, ஜலம் போறதானு பாத்துண்டு வரச் சொன்னா…” என்று முடிப்பதற்குள் அவர், ”பெரியவா விடியகாலம் நாலரை மணிக்கே காவேரில ஸ்நானம் பண்ணிட்டு வந்துட்டாளே” என முத்தாய்ப்பு வைத்தார். எங்களின் பிரமிப்பு அதிகரித்தது!ஞாயிற்றுக்கிழமை. பிக்ஷாவந்தனம் முடிந்தது. கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் பெரியவாளை நமஸ்கரித்தோம். தகப்பனார், பழத் தட்டில் பாத காணிக்கையாக அந்த 500 ரூபாயை வைத்து சமர்ப்பித்தார்.பழத் தட்டையே சற்று நேரம் உற்றுப் பார்த்த ஸ்வாமிகள் சிரித்துக் கொண்டே, ”என்ன சந்தானம்! சந்திரமௌலீஸ்வரர் கிருபையால உன் மன விருப்பம் பூர்த்தி ஆயிடுத்தோல்லியோ? காவிரி ஸ்நான பலனும் கெடச்சுடுத்தோல்லியோ” என்று வினவ, வியப்புடன் நின்ற அனைவரும் சாஷ்டாங்கமாக பெரியவா முன்னே விழுந்தோம்.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

கடைசி பாடல்

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!!

{ [இந்த பாடல்-சம்பந்தப்பட்ட ஒரு ரசமான சம்பவம்]
இது கணேச சர்மா உபன்யாசத்தில் சொன்னது


ஒரு நல்ல அந்தணர் (சங்கீத வித்வான்), காஞ்சி பெரியவாளை – சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளை தரிசிக்க வந்து இருந்தார். வறுமை நிலையில் குடும்பம். அந்த நிலையை போக்க, செல்வத்தை பெருக்க, ஏதாவது மந்திரம், தந்திரம், பிரார்த்தனை உண்டா என்று பெரியவாளிடம் வினவினார்.

பெரியவா : நான் சொல்வான் ஏன், உனக்கே தான் தெரியுமே, நீ தான் சங்கீத வித்வான் ஆச்சே

அந்தணர் : இல்லையே. நான் ஏதோ பாட்டு தான் பாட்டுவேன். மந்திரம், தந்திரம் எல்லாம் தெரியாது !

பெரியவா : திருபுகழ்ல உனக்கு பரிச்சியம் உண்டில்ல, நோக்கு கந்தர் அநுபூதி தெரியுமோ ?

அந்தணர் : ஓ, மனப்பாடமா, நான்னா தெரியும்…..

பெரியவா : அநுபூதியிலே அருணகிரிநாதரே அத கேக்குராரே !

அந்தணருக்கோ ஒரே அதிர்ச்சியாக இருந்தது, கந்தர் அநுபூதியோ ஞான மயமான நூல், அதில் இகத்துக்கு (பணத்துக்கு) என்ன கேட்டு இருக்க போறார்…..

அந்தணர் : எனக்கு புரியலையே, பெரியவாள் புரியற மாதிரி சொன்னால் சுபம்.

பெரியவாள் : எங்க கடைசி பாட்ட பாடு…

(எங்கும் நிசப்தம். வெண்கல குரல். ஸ்வரம், லயம் சேர்த்து அந்தணர் மேலே உள்ள பாடலை பாடுகிறார்….. நல்ல சாரீரம். கண்ணை மூடி ஆழ்ந்து ரசித்தார் பெரியவாள்)

பெரியவா : எங்க கடைசி வரிய சொல்லு…

அந்தணர் : குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

பெரியவாள் : பாத்தியா இதுல இருக்கு பாரு

அந்தணர் : …….!?!……. (அவருக்கு இன்னும் புரியல)

பெரியவாள் : மெல்ல கடைசி வரிய, ஒரு ஒரு வாரத்தையா திருப்பி சொல்லு.

அந்தணர் : குருவாய்….. வருவாய்….. அருள்வாய்….. குகனே!

பெரியவாள் : பாத்தியா ‘வருவாய் அருள்வாய் குகனே, வருவாய் அருள்வாய் குகனே’ அப்பிடீன்னு கேக்குறார்

அவர்க்கு ஆச்சரியமாக இருந்தது, நமக்கும் தான் !!! பதத்தை பிரித்து படியுங்கள், ’குருவாய்…, வருவாய் அருள்வாய் குகனே!’ {குருவாய், நீ வந்து வருவாய் (பணம்) தருவாய் குகனே}

பெரியவா : அவர் எப்படி வேணாலும் சொல்லி இருக்கட்டும், ஆனா நாம இப்படி கேக்கலாம்ல… அதே குருவான சுவாமிநாதன், நமக்கு பரத்துடன், இகத்தையும் கொடுத்து விட்டு போறார். அதுனால, இதுக்கு மேல என்ன பெரிய மந்திரம் வேணும். இதையே திரும்ப திரும்ப சொல்லி வா… உன்னுடைய கஷ்டம் எல்லாம் தீரும்

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: New series on Maha Periva

Post by venkatakailasam »

பெரியவா பாத்துப்பா - 7 !

ராமாயணத்துல, என் மனசை ரொம்ப பாதிச்ச இடம் பத்தி சொல்றேன் கேளுங்கோ. ராமர், மாய மான் மாரிச்சனை தேடிண்டு போய்டறார். கொஞ்ச நேரத்துல 'லக்ஷ்மணா'ன்னு அலறல் கேக்கறது. சீதை, 'அண்ணாவுக்கு ஆபத்து, உடனே போங்கோ'ன்னு சொல்றா. லக்ஷ்மணன், அண்ணாவை யாராலையும் ஒண்ணும் பண்ண முடியாது, உங்களுக்குத்தான் காவல் இருக்க சொல்லிருக்கார். நான் போகமாட்டேன்'னு சொல்றார். அப்போ, சீதை அவரை ரொம்ப கொறவா பேசிடறா. என் தம்பியை இப்படி பேசினையேங்கற கோபமும், தாபமும் தான் ராமர் அந்த பதிவ்ரதையை தீ குளிக்க சொல்றதுக்கு காரணம். தன்னை தேடிண்டு வந்த லக்ஷ்மணனை ராமர் கோபிச்சுக்கறார். ரெண்டு பேருமா ஆஸ்ரமத்துக்கு திரும்பி வரா. அந்த இடம் சூன்யமா இருக்கு. அதே நேரத்துல, ஜடாயு, சீதையை தூக்கிண்டு போற ராவணனோட சண்டை போடறார். ராவணன், அவரோட இறக்கையை வெட்டிடுறான். சீதை காட்டுக்குள்ள ஓடறா. ஹே, ரிஷிகளே, தேவதைகளே, யாராவது என்னை காப்பத்துங்களேன்னு கதறிக்கதறி அழறா. ஒருத்தரும் வரல. ஒரு மரத்தை கட்டி பிடிச்சுக்கறா. ராவணன், பின்னாடி லேர்ந்து அவளை இழுக்கறான். இந்த இடம் வரும் போது என் மனசை அப்படியே பிழியறது. இப்பிடியா பட்ட பத்தினி தெய்வத்துக்கா இத்தனை கஷ்டம்னு தாங்க முடியல. அப்பதான் ரிஷிகள் எல்லாம் சொல்றா 'ராவணா, நீ அழிஞ்சே'ன்னு (ஆச்சர்யம், எனக்கும் நெஞ்சை அடைக்கிறது). இப்படி, ராமாயணம் படிக்கறச்சே, ராமனோட சேர்ந்து போகணும். அவன் அனுபவிச்ச எல்லாத்தையும் நாமும் அனுபவிக்கணும். நானும் படிச்சேன்னு படிக்கக் கூடாது. நாம அப்படி லயிச்சு படிச்சோம்னா அது நம்மை மோக்ஷ சாம்ராஜ்யத்துக்கே கொண்டு சேர்க்கும்.

என் சம்பந்தி அகத்துல தங்கி இருந்த யதி பத்தி அப்றமா சொல்றேன். ஸ்தபதிகள் வந்திருக்கா. அவாட்ட பேசணும். ராம் ராம்.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: New series on Maha Periva

Post by venkatakailasam »

பெரியவா பாத்துப்பா - 8 !

1985.காஞ்சிபுரம். ஒரு நாள் பெரியவா கூட்டத்துல இருக்கறவாளை பாத்து 'என்ன மாதிரி வயசான யதி ஒருத்தர் இப்போ ஜீவ திசைல இருக்காறான்னு தெரியுமா?'ன்னு கேட்டா. யாரும் பதில் சொல்லலை. நான் 'ஆமாம் பெரியவா, என் பொண்ணோட மச்சினர் அகத்துல ஒரு சந்நியாசி இருந்தார், இப்போ ஜீவ தெசைல இருக்காறா தெரியலை, விசாரிச்சு சொல்றேன்'னு சொன்னேன். உடனே என்னை பாத்து 'நீ பிள்ளைக்கறி சாப்பிட்டு இருக்கியா?'ன்னு கேட்டார். எனக்கு பெரியவாளோட ஞான திருஷ்டியை நெனச்சு ஒரே பிரமிப்பு. நான், ஆமாம் பெரியவா அந்த பிரசாதம் சாப்டுருக்கேன். மேலப்பூதலூர்ல (நன்னிலம் அருகில்) என் சம்பந்தி ஆத்து பக்கத்து வீடுதான் பிள்ளைக்கறி சமைச்ச இடம். இப்பவும் அங்க சமைச்சுதான் திருசெங்காட்டாங்குடி கோவிலுக்கு நெய்வேத்யத்துக்கு எடுத்துண்டு போறா. அந்த வீடு காலியா இருந்ததால அங்கதான் அந்த சன்யாசியை தங்க வச்சிருந்தான்னு சொன்னேன்.

(அது என்ன பிள்ளைக்கறி? இப்போது எப்படி அதை சமைக்கிறார்கள்? இக்கதை அறிய, சுமார் 1300 வருடங்களுக்கு பின் நோக்கி செல்ல வேண்டும். பெரிய புராணமோ, சரித்திரமோ, அமரர்.கல்கியின் 'சிவகாமியின் சபத'மோ படித்திருந்தால் நிச்சயம் உங்களுக்கு இது பற்றி தெரிந்திருக்கும்.

திருசெங்காட்டன் குடியில் இருந்து பரஞ்சோதியாய் புறப்பட்டு, தொண்டை மண்டல சக்கரவர்த்தி மாமல்லன் நரசிம்ம பல்லவனின் படைத் தளபதியாய் உயர்ந்து, சாளுக்ய மன்னன் புலிகேசியை வென்று, வாதாபி அழித்து, அங்கிருந்து கொண்டு வந்த கணபதியை தன் சொந்த ஊரில் ஸ்தாபித்து, பின்னர் போர் வெறுத்து, சிவனடியார் சிறுத்தொண்டனாகி, தன் வீட்டிற்கு அமுது உண்ண பைராகியாய் வந்த சிவனுக்கு தன் பிள்ளை சீராளனையே கறியாய் சமைத்து அவருக்கு படைத்து, பின் பரமன் சீராளனை உயிர்ப்பித்து, உமையுடன் காட்சி தந்து, நாயனார், அவர் மனைவி, மகன் மூவரையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டதே அக்கதை.

இப்போது பிள்ளைக்கறி தேங்காய், மிளகு, பிள்ளை பெத்தவா சாப்படற மருந்து சாமான்கள் கலந்து, இடித்து, நெய் சேர்த்து மனித உடல் போல் உருவாக்கப்பட்டு ஈசனுக்கு நிவேதனம் செய்யப்படுகிறது. குழந்தை இல்லாதவர்கள் இதை உண்டால் புத்திர பாக்கியம் ஏற்படும் என்பது ஐதீகம்)

பெரியவா ஏன் இப்படி கேட்டான்னு யோசிச்சேன். மடத்துல உக்காந்துண்டே என் பொண்ணோட மூத்த மச்சினர், ஸ்ரீ.பாப்பா நடேசனுக்கு ஒரு கார்டு எழுதினேன். அங்க, அந்த யதி ஆத்த விட்டு கிளம்பி போயிருந்தார். அவா உடனே அவரை தேடிண்டு புறப்பட்டா. திருவாரூர்ல இருந்த அவர் கால்ல விழுந்து மறுபடி ஆத்துக்கு கூட்டிண்டு வந்து, அவர் சித்தி அடையற வரைக்கும் நல்ல படியா பாத்துண்டு, அப்புறம் பிருந்தாவனம் கட்டி, இப்போ வருஷா வருஷம் ஆராதனை நடந்துண்டு இருக்கு.

பெரியவா கேட்டதுக்கு வேற ஒரு காரணமும் இருக்கு. பெரியவாதான் அந்த யதிக்கு சன்யாசம் கொடுத்திருக்கார். என் பொண்ணோட மச்சினர் அடிக்கடி காஞ்சிபுரம் போய் பெரியவாளோடையே இருப்பார். அதுமட்டும் இல்லை, பெரியவா அவா ஆத்துலேயே மாச கணக்குல தங்கி இருக்கார். அவர் தான் என் பொண் மச்சினர்ட்ட இந்த யதியை பாத்துக்க சொல்லி இருக்கார். இதையெல்லாம் நெனச்சா, பெரியவா சாக்ஷாத் பரமேஸ்வரன் தான் அப்டிங்கறது நமக்கு நன்னா புரியறது. அவர் என்னதான் தன்னை மறச்சுண்டாலும் அவரோட பக்தாளுக்கு தெரியாமயா போய்டும்?

சரி, இப்போ முடிச்சுக்கட்டுமா? ராம், ராம்.

ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். ஹர ஹர சங்கர, ஜய ஜய சங்கர.

பி.கு : தயவு செய்து அனைவரும் பகுதி 1ல் இருந்து படியுங்கள். ஷேர் செய்யுங்கள். மாமியுடன் 94433 70605 என்ற எண்ணில் பேசுங்கள். அவருடைய ஆசிர்வாதத்தை பெறுங்கள். விருப்பம் இருப்பின் அவர் கட்டும் லலிதையின் கோவிலுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். அடுத்த மாதம் 18ம் தேதி நடை பெற இருக்கும் சண்டி ஹோமத்தில் பங்கு கொள்ளுங்கள். ராம், ராம்.

thanjavooran
Posts: 2986
Joined: 03 Feb 2010, 04:44

Re: New series on Maha Periva

Post by thanjavooran »

மாமியின் அனுபவங்கள் மெய் சிலிர்க்க வைக்கின்றன . அருமையான தொகுப்பு. நன்றி தொடரினை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன். அது சரி ஏன் 5 ம் பகுதி காணப்படவில்லை?

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: New series on Maha Periva

Post by venkatakailasam »

posted now..

thanjavooran
Posts: 2986
Joined: 03 Feb 2010, 04:44

Re: New series on Maha Periva

Post by thanjavooran »

இந்த தொகிப்பினை கண்ட என் நண்பரின் பின்னூட்டத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்
இதை படிக்கும்போது சுவாமிநாத ஆத்ரேயாவின் கதை ஞாபகம் வரது.தியாகராஜஸ்வமிகளின் மனைவிக்கு உடம்பு சரியா இல்லை அவருக்கு உதவி செய்துகொண்டு இருந்த மாத்வர் பகவான் ராமரிடம் வேண்டிகொண்டார் .அவர் ராமாயணம் பாராயணம் செய்பவர்இரண்டு மூன்று நாள் கழிச்சு அவர் சொன்னார் நான் பாராயணத்தை நிறுத்திட்டேன் ஏன்னா மாமிக்கு இன்னும் உடம்பு சர்யாகலையே ராமனிடம் வேண்டிண்டும் பாராயணத்தை எங்கே நிறுத்தினேன் தெரியுமோ ராவணன் சீதையை
தூக்கிகொண்டு போனப்பறம் ராமன் அழுது புலம்பராரோல்லியோ அங்கே nநிறுத்தினேன் நன்னா கஷ்டப்படட்டும் எங்க மாமி உடம்பை என்னிக்கி சரி பன்றாரோ அன்னிக்கி அன்னிக்கிதான் மறுபடியும் பாராயணம்.என்ன bhavam !இன்னும் சொல்லணுமா அடுத்த நாளே மாமி எழுந்து வேலை செய்ய ஆரம்பிசுட்டாள் ராமனுக்கு பாராயணம் முக்யமஆச்சே

Post Reply