Kanchi Maha Periyava

Post Reply
venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Periva Charanam..by Vinayakaram and party..vocal by Mahesh..

Listen at:

http://www.mediafire.com/watch/m5s95ju4 ... rty._1.avi

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

‎KANCHI ACHARYAS....FB Group
கனவும் விளையாட்டும்!

நிஜமாக இல்லாததை ஒன்று, கனா என்று சொல்வோம்; அல்லது விளையாட்டு என்போம்.

எதுவோ ஒன்று நிஜமாக நடக்கப்போகிறது என்று எதிர்பார்க்கிறோம். அது ஏமாற்றிவிட்டு ஓடிப்போய் விடுகிறது. ‘எல்லாம் கனவாப் போச்சு’ என்கிறோம். அந்தக் கனவான பொய் மாயமாகவே ஜகத்தைக் காட்டுகிறான் ஸ்ரீரங்கத்துத் தூக்கக்காரன்.

விளையாட்டு என்பது நிஜமில்லாததுதான். ஏதோ சின்ன சோப்பை, பொம்மையை பெரிய அண்டான் குண்டான் மாதிரி வேஷம் கொடுத்து வைத்து, பாலப்பிராயத்துக் குழந்தைகள் அம்மா - அப்பா, தாத்தா - பாட்டி என்று தங்களுக்கு வேஷம் கொடுத்துக் கொண்டு பண்ணுவதுதான் விளையாட்டு. பெரியவர்கள் ‘ஸ்போர்ட்ஸ்’ என்று பண்ணும் விளையாட்டுகளும் வாழ்க்கையின் நிஜமான ப்ரச்னைகளுக்கு ஸம்பந்தப்படாமல், ஏதோ ஒரு பந்தை ஏதோ ஒரு goal-க்கு அடிக்க வேண்டும் என்று, காரணம் சொல்ல முடியாததான, வாழ்க்கைக்கு அவசியம் என்று சொல்ல முடியாததான காரியங்களாக இருக்கிறவை தானே? ‘எதற்காக மண்டையை உடைத்துக் கொண்டு ‘செஸ்’ காய்களைத் தள்ள வேண்டும்?’ என்று கேட்டால் என்ன பதில் சொல்வது?

விளையாட்டுக்குச் சொன்னேன்: நிஜம்னு நினைச்சுட்டியா?" என்று கேட்கிறோமே, அங்கே நன்றாகவே தெரிகிற தோல்வியோ, விளையாட்டு என்கிறது நிஜமில்லை என்று! ‘விளையாட்டே வினையாச்சு’ என்றும் சொல்கிறோம். வினைதான் நிஜமாகவே நடப்பது. அப்படியானால், விளையாட்டு நிஜமில்லை என்றும், எதனாலோ அப்படிப்பட்டதுகூட நிஜமாகிவிட்டது என்றும்தானே அர்த்தமாகிறது?

‘மாயக்கனா’ என்கிறாற் போலவே ‘மாய விளையாட்டு’ என்று சொல்கிறதையும் கவனிக்க வேண்டும்.

இரண்டும் ஒன்றுதான் என்று ஆகிவிட்ட தோல்லியோ?

அதிலே கனாவைக் காட்டுகிறான் ஸ்ரீரங்கத்துத் தூக்கக்காரன். விளையாட்டைக் காட்டுகிறான் சிதம்பரத்து ஆட்டக்காரன்.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Sharing from my mail.....

பிரபல ஹரிகதா விற்பன்னர் ப்ரஹ்ம ஸ்ரீ டி எஸ் பாலக்ருஷ்ண சாஸ்திரிகள் சொன்னது

காஞ்சிபுரத்திலே இருக்காளே, காமகோடி பெரியவா...சர்வஞா அவா.

ஒரு தடவை கும்பகோணத்திலே, தர்சனத்துக்கு நாங்க எல்லாம் போயிருந்தோம். என் மாமனார் அழைச்சிண்டு போயிருந்தார்.

எனக்கா, மனசிலே ஒரு பயம். ஸ்வாமிகள் ரெண்டு, மூணு ன்னு பண்ணிடுவார், பூஜை முடிக்க. அப்புறம் நம்ப சாப்பிடறதுக்கு இன்னும் நேரம் ஆயிடும் ன்னு...
அதனால நான் பூஜைக்கு வரலை ன்னுட்டு மடத்துக்கு போகலே.

என் மாமனார் இதை திருத்த முடியாது ன்னுட்டு கிளம்பி போய்ட்டார். அங்கே பெரியவா, 'மாப்பிள்ளை (என்னைத்தான்!!) எங்கே?' ன்னுருக்கார்.
'அவருக்கு உடம்பு சரி இல்லே, ரூம்ல இருக்கார்' ன்னு சொல்லி இருக்கார் என் மாமனார்.

'அவரை இங்கே அழைச்சுண்டு வா' என்று சொன்னார் பெரியவாள். வந்து கூப்ட்டா.

எனக்கு கையும் ஓடலே, காலும் ஓடலே...

வெடவெடன்னுண்டு பெரியவா முன்னாடி போய் நின்னேன்.

'ஓடம்பு சரியில்லையோ?' அப்டின்னார் பெரியவா.

நான் மாமனாரை பார்த்தேன்.

'ஆமா, அவருக்கு உடம்பு சரி இல்லே....' ன்னு சொல்லிட்டு இது ஏன் இப்படி படுத்தறது என்கிற மாதிரி பார்த்தார் மாமனார் என்னை.

'ஆமாம் பெரியவா, எனக்கு உடம்பு சரி இல்லே'.

'குளத்துலே குளிச்சியோ?'

திரும்பவும் ஒரு முழி முழிச்சிட்டு, 'ஆமாம் பெரியவா, குளத்திலே குளிச்சேன்'.

'தண்ணி நிறையா இருக்கோ, ரொம்ப ஜில்லுன்னு இருக்கோ'.

'ஆமாம் பெரியவா' என்று சொன்னேன். என் மாமனார் தலையில் தான் அடித்துக் கொள்ள வில்லை என்னை பார்த்தார் பரிதாபமாக.

'ஜுரமோ, உடம்பு ரொம்ப சுடறதோ?' பெரியவா....

'ஆமாம் பெரியவா...' நான்.

'சரி, உடம்பு சரி இல்லேன்னா...ஒண்ணும் சாப்ட படாது. வயத்தை லங்கணம் போடறது தான் அதுக்கு நல்ல மருந்து. நானும் இன்னிக்கு பூஜை
ரொம்ப விஸ்தாரமாவே பண்ணப்போறேன்... அப்படியே ஒரு ஓரமா செவுத்துலே சாஞ்சு ஒக்காந்துக்கோ...மூணு நாலு மணி ஆயிடும்.

பூஜை முடிஞ்சா விட்டு, தீர்த்த பிரசாதம் தரேன். அதை வாங்கிண்டு அப்புறமா கொஞ்சமா ரசஞ்சாதமா சாப்பிடு. எல்லாம் சரியா போயிடும்'.

அத்தனையும் அவா கண்டுபிடிச்சிடுவா...

ஜெய ஜெய சங்கர!
ஹர ஹர சங்கர !

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

CHANDRASEKARENDRA SARASWATHI'S LIFE AND TEACHINGS.
நான் கொடுத்ததினால் ‘இனிமே இதை இன்னொருத்தருக்கு தானமாகக் கொடு ’ என்று சதாசிவம் எம்.எஸ்.ஸிடம் சொல்ல முடியாது இல்லையா !”
--------------------------------
R Veezhinathan..

‘காளிதாஸ் ஸம்மான்‘ என்று மத்தியப் பிரதேச அரசு வழங்கிய விருதுடன் ஒரு லட்ச ரூபாய் ரொக்கமும் அளிக்கப்பட்டது. அதைப் பெற்று வந்த அன்றே சதாசிவம் எனக்குப் ஃபோன் செய்து அவருக்கே உரிய முறையில் அழைத்தார்.
-
“வீழி! கார்த்தால இங்கே காஃபி சாப்பிட வந்துடேன்.”
-
போனேன். ஒரு லட்ச ரூபாய் பணத்தை அப்படியே மஹா பெரியவர்களிடம் தர வேண்டும் என்று சொன்னார்.
-
பெரியவர் காதில் விஷயத்தைப்-போட்டபோது,
-
“பணத்தை வைச்சுண்டு என்ன பண்றது ? எட்வர்ட் அரசன் முத்திரை போட்ட பவுனாக வாங்கிக் கொடுத்துவிடச் சொல்லு” என்று ஆணை பிறந்தது.
-
அதற்கு இணங்கி அன்றைய விலையில் ஒரு லட்ச ரூபாய் மதிப்புக்குப் பவுன் காசுகள் வாங்கிச் சமர்ப்பிக்கப்பட்டது. (அந்தக் காணிக்கையைப் பெரியவர் உரிய தர்ம காரியங்களுக்கு உபயோகப்படுத்திக் கொண்டார்.)
-
எம்.எஸ். சதாசிவத்தின் காணிக்கையைப் பெற்றுக் கொண்டவர், ஒரு தட்டு நிறைய குங்குமப் பிரசாத்தைப் போட்டுக்கொடுத்தார். குங்குமத்துக்கு அடியில் ஒரு அழகான பவுன் காசு மாலை.
-
அவர்கள் சென்ற பின்பு பெரியவர்-சொன்னார்கள். “அவர்களிடம் பவுன் பெற்றுக் கொண்டேன். அவர்களிடமே திருப்பிக் கொடுத்துள்ளேன். நான் கொடுத்ததினால் ‘இனிமே இதை இன்னொருத்தருக்கு தானமாகக் கொடு ’ என்று சதாசிவம் எம்.எஸ்.ஸிடம் சொல்ல முடியாது இல்லையா !”

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

While admiring Maha Periavaa for what He did to the mankind, we should also know the ordeal he went thro in his early days as Sankaracharya.

Here, Brahmashree Musiri Dikshitar recounts the early days of our beloved Maha Periyava.

Thenambakkam, Biksha time: the young soft voice asks : 'vaazhaipazham illaya ?' a curt 'no'. 'has not come yet?'. an indifferent 'no' 'poovan pazham kooda illaya?' asks our Maha Periyava who is saakshath Parameswaran, who sees to that every single soul gets its food everyday.'not that too' comes the reply in an emotionless voice.

Aduthurai, Bhiksha time : 'has not the juice of lemon added to kosmalli?'. 'no' 'has it not come ?' 'no'. 'you can get it in the Aduthurai shandy'. 'a lot of crowd. no one has the time to go and buy it'.

Mutt : 'ugranathukku poi krambu vaaindu va' (for HIS toothache). the man in charge of the kitchen :'no, don't have it'. ' i am not asking for myself. it is for Accharya'. ' look, its not as if i have it and don't want to give it. as i said i don't really have it' says the dry voice.the devotee comes back and says it politely to Maha Periyava. In a quiet voice HE says 'go and ask in some of the houses around. some one will give'.

Brahmashree goes on to add 'if Mahalakshmi thaayar had known how much her son would struggle to get even a banana, a lemon.......what a heart break it would have been for her. what a sacrifice she did, for the benefit of millions of people like us and what she got in return (She would have always seen HIM as her son)

Well, this is what HE really went through when HE was in the teens when the mutt was not doing well financially. HE went through all that, did tapas, adhered to virathas, sacrificed even the smallest of comforts and lived 100 years (and even after) to bless us all. BLESSED ARE WE. ( I am blessed too, to come back after a long gap and put up a post on HIM)

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

“சூரிய – சந்திரர்கள் உள்ள வரை உன் கியாதி (புகழ்) இருக்கும் !”
13-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்

நன்றி-பால ஹனுமான்.
A

Dr. வீழிநாதன் கூறுகிறார்…

மஹா பெரியவர் வழிகாட்டி, தேர்வு செய்த பல சுலோகங்களையும், கீதங்களையும் எம்.எஸ்.அம்மா பாடி ஒலிப்பதிவு செய்து அளித்துள்ளார். மேளராக மாலிகை இவர் உத்தரவின் பேரில்தான் பாடப்பட்டது. பாலாஜி பஞ்சரத்ன தொகுப்பில் சுலோகங்களும் அவர் தேர்வு பண்ணிக் கொடுத்தவைதான். உச்சரிப்பு திருத்தமாக உள்ளதா என்று சரி பார்ப்பதும் உதவுவதும் எனக்குத் தரப்பட்ட பணி. இதை ஒரு மிகப் பெரிய கௌரவமாக நான் கருதிச் செய்து வந்தேன்.

எத்தனை முறை திருத்தம் சொன்னாலும் மனதிலே சோர்வு இல்லாமல் திருத்திக் கொள்வார் அம்மா. ஸ்ரீரங்க கத்யம் மிகக் கடினமான உச்சரிப்பு கொண்டது. அதைத் துல்லியமாக பதம் பிரித்துப் பாட அம்மாவால் தான் முடிந்தது. அதிலே தோஷம் கண்டுபிடிக்க வேண்டும் என்று தேடினாலும் முடியாது! அப்படி ஒரு அப்பழுக்கில்லாத சுத்தம்.மேளராக மாலிகையின் வார்த்தைகள் அர்த்தங்களைப் பொதித்துப் பொதித்து அடக்கிய அமைப்பில் இருக்கும்.

‘கெளரிமனோஹர தம்பர சத்தம்‘ என்று வந்தால் ‘கௌரிமனோஹரி‘ என்பது ராகத்தைக் குறிக்கும். ‘ஹரதம்பர சத்தம்‘ என்பது பரமேசுவரனைக் குறிக்கும். (திக்கெல்லாம் தன் ஆடையாகக் கொண்டவன் என்று பொருள்) . இந்த இடத்தில் ஒரு கணத்துக்கும் குறைவாக இடைவெளி கொடுத்து இரண்டு அர்த்தங்களும் விளங்கும்படிப் பாட வேண்டும் என ஆணையிட்ட மஹா பெரியவர்களிடம் ‘இது எப்படி சாத்தியம் ?’ என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்னார்:
-
“நீயா பாடப் போறே…? அவா பாடிடுவா… நீ ஏன் கவலைப்படறே!”
-
அதேமாதிரி, பெரியவர்களின் ஆசி அனுக்கிரஹத்தால் உரிய முறையில் துல்லியமாக அந்த இடத்தில் எம்.எஸ்.அம்மா பாடியிருப்பது, கவனித்துக் கேட்டால் புலனாகும்.
-
இந்த ஒலிப்பதிவு முடிந்து காஸெட் வெளியாகிற தருணத்தில் மஹா பெரியவர் எம்.எஸ்.ஸிடம் என்ன சொன்னார் தெரியுமோ…?

“சூரிய – சந்திரர்கள் உள்ள வரை உன் கியாதி (புகழ்) இருக்கும் !” என்றார்.
-
இதை விட பெரிய அனுக்கிரஹம் என்ன வேண்டும் ?

மஹா பெரியவா அருள்வாக்கு : -

ஒவ்வொரு நாளும் சிறிது நேரமாவது மனத்தைச் சாந்தமாக வைத்துக்கொண்டு, வேறு நினைவுகளை மனத்தில் செலுத்தாமல், கடவுளது தியானத்தில் அமர வேண்டும். வேறு நினைவுகள் இல்லாமல் தியானம் செய்வதால் நாளடைவில் புத்தியானது தெளிவடையும். ஆசையையும் கோபத்தையும் அடக்குவதற்கு இது ஒரு சாதனம். இவ்வித சாதனையைப் படிப்படியாக மேற்கொண்டவனுக்குச் சீக்கிரமாக ஆத்ம ஞானம் உண்டாகும். குறைவில்லாத அந்த ஞானத்தைப் பெறுபவன்தான் உண்மையான சுதந்திரன்.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

பிறர்க்குரிமையாக்கும் பெம்மானே போற்றி

தங்களை எல்லாம் அழப் பண்ணுவதில் தான் எனக்கு என்ன அப்படி ஓர் ஆனந்தமோ?

ஆனால், இது ஆனந்தக் கண்ணீர்...இந்த கண்ணீர் நம் பாவங்களை எல்லாம் துடைத்து நம்மையெல்லாம் புனிதப் படுத்தும்...

மேலே படியுங்கள்...ஸ்ரீ ரா கணபதி அண்ணா அவர்கள், மைத்ரீம் பஜத புத்தகத்தில்...

பலமுறை நடந்த நிகழ்ச்சி...ஸ்ரீ சரணாள் கடும் அலுவல்கள் முடித்து அப்போது தான் விஸ்ராந்தி செய்து கொள்ளப் போயிருப்பார்.

அப்போது வரும் பக்தர்களிடம் கிங்கரர்கள், 'பெரியவாளைத் தொந்தரவு செய்வதற்கில்லை' என்று கூறி விடுவர். பக்தர்களும் மனிமில்லாமல் திரும்ப இருப்பர்.

சரியாக அச்சமயம் பார்த்து, உள்ளேயிருந்து பெரியவாள் வெளியே வந்து விடுவார்! அல்லது உள்ளேயே இருந்து கொண்டு குரல் கொடுப்பார் - 'யாராவது வந்திருக்காளா?', 'யாரோ வந்தாப்பல இருக்கே?', 'நெழல் ஆடித்தே?, யார் வந்தா? கூப்டுங்கோ அவாளை' - இப்படி ஏதேனும் சொல்லி, தமது ஸ்ரமத்திற்கு மெய்யான பரிஹாரமாக அவர் கருதிய குறை தீர்க்கும் படலத்தைத் தொடங்கி விடுவார்!

கிங்கரர்களிடம் 'என் சிரமத்தை நினைக்கிறீர்களே? வருகிறவர்களின் சிரமத்தையும் தான் நினைத்துப் பாருங்களேன்! எங்கெங்கே இருந்து எல்லாமோ, வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு, காசையும் பொழுதையும் செலவழித்துக் கொண்டு, பஸ்ஸில், ரயிலில் இடிபட்டுக் கொண்டு தானே வருகிறார்கள்? அவர்களில் பல பேருக்கு அவசர ஜோலி இருந்து உடனே திரும்பும்படி இருக்கலாம்.

எனக்கு சிரம பரிஹாரம் என்று சொல்லி, ச்ரமப்பட்டு, வந்திருக்கிற அவர்கள் மனசை உடைத்து இன்னும் ச்ரமப் படுத்தி அனுப்பலாமா?' என்பார்.

'பிறர்க்குரியாளர், பிறர்க்குரியாளர்; என்று ஒரு சொற்றொடர் அடிக்கடி கேட்கிறோமே, அதன் வார்ப்பு வடிவம் பெரியவாள் தான்!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Listen to a concert a day..any time
Concert 136-songs on Mahaperiva
Listen at

http://myblogkumara.blogspot.in/2014/02 ... t-iii.html

Concert details:
001-Brahma nadam-Udayalur Shri Kalyanaraman-Mahapriva
002-Vizhi Kidaikkuma..Alangudi Radhakalyanam- Melarcode Ravi
003-Bhajre gurunadham-Shri TMK
004-Chandrashekhara Saraswathiye charanam - Hindolam-M Santhanam-Own composition
005-A song on Paramacharia-MSS
006-Karunai Pozium Kangal-Dr Ganesh
007-Karunai ennum varithiye-MSS-thooran
010-Kaladiyail-udayalur kalyanaraman
011-Thamarai malar ondru kandenThilong-DKP
012-Sri chandrasekara-Shri TMK
013-Chandrasekaram-Shri TMK
014-Sada sada-Shri TMK
015-Chandrasekara kripanidhe-Shri TMK
016-Vandeham guruvaram-TMK
017-Anandavahena-TMK
018-Kanchi Maanagar Pogavendum.. Sattananda Bahavathar-Alangudi Radhakalyanam
For information:
Some of the songs by Shri TM Krishna are included in the concert with permission from
Sri Kanchi MahaswamiPeetarohana Shatapthi Mahotsav Trust who have released the songs..

As suggested by Shri TM Krishna, the above permission was obtained..from them.
Last edited by venkatakailasam on 18 Mar 2014, 07:24, edited 2 times in total.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kanchi Maha Periyava

Post by cmlover »

Good work authenticating!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

"வாக்குத் தவறாத நேர்மையும்,எளிமையுமே
.இரண்டு முக்கிய தேவைகள்.."
(வெள்ளம் போல் கொட்டித்தீர்த்த பெரியவாள்)

சொன்னவர்; ஓர் சம்பவம் (ஜே.டபிள்யூ எல்டர்)
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

ஜே.டபிள்யூ எல்டர் என்ற ஐரோப்பியர்,
பெரியவாள் தரிசனத்துக்கு வந்தார். அவர், ஹிந்து
சமயம்,பாரதப் பண்பாடு பற்றி நிறைய அறிந்திருந்தார்.
பாரதத்தில் பல துறவிகளையும்,மகான்களையும்
சந்தித்து வெகுநேரம் உரையாடியிருக்கிறார்.எல்லோரும்
அறிவுபூர்வமான பதில்களைச் சொன்னார்களே தவிர.
இதயபூர்வமான பதில்களைக் கூறவில்லை - என்று,
அவருக்குத் தோன்றியது. "என் சந்தேகத்துக்குத் தெளிவு
கிடைக்காமலே நான் திரும்பிப்போக வேண்டியதுதானா?"
என்று நொந்து கொண்டிருக்கும் வேளையில்,
பெரியவாள் தரிசனம் கிடைத்தது.

'பெரியவா சிரிக்கும்போது, குழந்தை கிறிஸ்து
சிரிப்பது போலிருக்கிறது!... மானுடத்தை விஞ்சிய
ஒரு தெய்வீக ஈர்ப்பு இருக்கிறது...'

இந்தக் 'குழந்தை' என் கேள்விகளுக்குப் பதில்
சொல்லுமோ?.. கேட்டுப் பார்க்கலாமே?

"சுவாமிஜி! ஹிந்து சமயக் கோட்பாடுகளில்,
எந்த இரண்டு தத்துவங்களை, இன்றைய
காலகட்டத்தில், அழுத்தமாக விளக்கிக் கூறி,
மக்கட் சமுதாயம் பயன் பெறச் செய்ய வேண்டும்
என்று தாங்கள் விரும்புகிறீர்கள்?"

பெரியவாள் நீண்ட நேரம் மௌனமாக இருந்தார்கள்.

ஐதரேயத்தின், 'ப்ரஜ்ஞானம் ப்ரஹ்ம' என்ற மகா வாக்யம்,
இந்த ஐரோப்பியனுக்குப் புரியவே புரியாது;

திடீரென்று பதில் வெளிப்பட்டது.

"பாரதம் சுதந்திரமடைவதற்கு முன், சுமாராகப்
பத்து சதவிகித மக்கள் தான் நேர்மை குறைந்தவர்களாக
இருந்தார்கள். எல்லாத் தொழிலாளர்களின் பேச்சிலும்
சத்தியமும் நேர்மையும் இருந்தன. கடன் கொடுத்தல்,
பண்டமாற்று முதலியன கூட, சொற்களின்
அடிப்படையிலேயே நடந்தன. பேச்சுத் தவறினால்,
பாவம் வந்து சேரும்; நமது சந்ததியினர்
துன்பப்படுவார்கள் - என்ற பயம் இருந்தது."

"இப்போது அதெல்லாம் போச்சு;..வயது வந்தவர்களுக்கு
வாக்குரிமை என்று சட்டம் போட்டார்கள். அந்த உரிமையைக்
கொடுக்குமுன், அதை அவன் எவ்வாறு உபயோகிப்பான்
என்று எண்ணிப் பார்க்கவில்லை. கல்வி அறிவில்லாத,
ஏழையான ஒருவனுக்கு, இவ்வளவு முக்கியமான உரிமை
கிடைத்தால் என்ன செய்வான்?..என்ன செய்வானோ,அதுவே
நடந்தது! வாக்குரிமை விலைபேசப்பட்டது."

"இது, முதலாவது வீழ்ச்சி."

'அடுத்து; புதிய கண்டுபிடிப்புகளால் ஏற்பட்ட
பொது நல விரோதச் செயல்கள்.

"போர்வெல் போட்டு நிலத்தடி நீரை உறிஞ்சி விட்டால்...
அப்புறம், தண்ணீர் ஆதிசேஷன் தலை வரை போய் விடுகிறது.
வருமானம் அதிகரித்து விட்டதால், ஆடம்பரமான
வாழ்க்கையில் மனம் ஈடுபடுகிறது."

"எது வாழ்க்கைக்குத் தேவை? எது, சுகபோகம்?"
என்ற உணர்வு மரத்துப் போய் எதைக் கண்டாலும்
அனுபவிக்க வேண்டும் என்ற அசுரத்தன்மை வந்து விடுகிறது.

"எளிமையான வாழ்க்கையை அமைத்துக் கொண்டால்,
அந்த வாழ்க்கை எல்லோருக்கும் நிச்சயமாகக் கிடைக்கும்.
ஆனால்,சுகபோகங்களை எல்லா ஜனங்களுக்கும் கிடைக்கச்
செய்ய முடியுமா? அவ்விதம் கிடைக்கப் பெறாதவர்கள்,
நேர்மையைக் கைவிடுகிறார்கள்.!"

"வாக்குத் தவறாத நேர்மையும்,எளிமையுமே
.இரண்டு முக்கிய தேவைகள்.."

அரைமணி நேரம், வெள்ளம் போல் கொட்டித்
தீர்த்து விட்டார்கள்,பெரியவாள்.

ஐரோப்பியர், ஆனந்த வெள்ளத்தில் மூழ்கித்
திக்குமுக்காடினார்.

சமுதாய நலனைப் பற்றி, இவ்வளவு ஆழமாகப்
பெரியவாள் சிந்தித்திருப்பது, மடத்துத்
தொண்டர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஒரு முக்கியமான விஷயத்தை மறந்து விடக்கூடாது.
ஐரோப்பியரின் கேள்வி,இன்றைக்கும் பொருந்தக்
கூடியது தான்.

பெரியவாள் கொடுத்த பதில்,என்றைக்கும்
பொருத்தமானதுதான்!.....

பாரிர் சிறந்த தயாபரா!
நீ ஒரு ராகமாலிகா!
கமகம் மாறா ராகம்!
மாசினை நீக்கும் மாயாமாளவம்
மங்களம் தரும் கல்யாணி!
சாந்தம் அளிக்கும் சங்கரன்!
வலிமை ஈந்தும் சண்முக பிரியன்!
நலிந்தவர்கும் அன்பும் பரிவும் ஈயும் மோகனன்!
கருணை மழையில் நனைக்கும் பிலஹரி!
ஆறுதல் சொல்லி அமைதியும்
நிம்மதியும் தரும் ஆனந்த பைரவன்!
கருணை வற்றாத சாகரம்
காருண்யம் பொங்கும் முகாரி
வறுமையை அகற்றும் ரதிபதி பிரியன்
அமைதி அளிக்கும் ஆபேரியின்
சிங்கார வேலன்.....

நீ என்றே உணர்ந்தேன்
வேங்கடவன் நானே!

venkat k

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: Kanchi Maha Periyava

Post by Pratyaksham Bala »

.
Extracts from the discussion between Dr. J.W. Elder and Sri Sankaracharya:-

Dr. Elder:
... what would you say are those elements within Hinduism that most need to be stressed today?

Sri Sankaracharya:
... the essential aspects within Hinduism that have to be stressed today are 1. Truthfulness, 2. Honesty, 3. Discrimination between the necessities and the luxuries and 4. Non-cheating of others.
.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Dr Padma Subramanian’s speech on Mahaperiyava

Found it from old archives! This is a good 90 mts speech….

How Periyava helped her with her doctoral research; padhuka incident (she breaks down when narrating this); her long desire for not dancing in front of Periyava etc…..

I never knew that she is such a great speaker. She is just outstanding. Don’t miss this!

http://mahaperiyavaa.wordpress.com/2014 ... aperiyava/

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kanchi Maha Periyava

Post by cmlover »

Great spontaneous emotional speech!
Thanks for sharing...

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Shri PV Narasima Rao PM with Periva

Image


thanjavooran
Posts: 2993
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share from my friend

பக்தனாய்ப் பரிணமித்த பாமரன்

1957- சென்னை மாநகரின் இந்த அரை நூற்றாண்டு சரித்திரத்தில் ஒரு பொற்காலம். கலியுகத்தில் நம் ஊனக்கண்களுக்கும் காட்சி அருளும் அவதார மூர்த்தி – காஞ்சி முனிவர் – பெரியவாள் என்றிந்தப் பார் புகழும் தவசிரேஷ்டன் தடுத்தாட்கொள்ளும் தயையால் சென்னையில் முகாம் இட்டிருந்த புண்ணிய மாதங்கள். பிரதானமாக மயிலாப்பூர் ஸம்ஸ்க்ருதக் கல்லூரியில், அன்று இளவரசரான புதுப் பெரியவாள் ஸ்ரீ ஜயேந்திரருடன், தங்கியிருந்த அருளாளன் திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், தொண்டையார்ப்பேட்டை, மாம்பலம் என்று மாநகரின் பல பகுதிகளிலும் தனது புனிதத் திருவடிகளைப் பதித்து, பண்டு தருமம் மிகுந்திருந்த சென்னையில் மீண்டும் தருமப் பயிர் தழைக்க அருள் மழை பெய்து மக்களை அனுக்ரஹித்தார்.

ஒரு நாள் அதிகாலையில் மாம்பலம் சிவா-விஷ்ணு ஆலயத்திலிருந்து ஸ்ரீ திரிபுரசுந்தரி அன்னையுடன் ஸ்ரீமருந்தீஸ்வரர் கோயில் கொண்டுள்ள திருவான்மியூருக்கு அண்ணல் பாதயாத்திரை புறப்பட்டிருந்தார். உடன் செல்லும் பாக்கியம் பெற்ற பக்தர் குழாமில் அடியேனும் இடம் பெற்றிருந்தேன். அன்று முதலமைச்சர் திரு பக்தவத்ஸலம் என்று நினைவு. காவல் துறையாளர் இரண்டு மூன்று பேரும் கூட நடந்தனர்.

சிறிது தூரம் சென்றதும் எதிர்திசையிலிருந்து வந்த ஒருவன் ஸ்ரீ பெரியவாளை நெருங்கினான். செருக்கு மிகுந்த நோக்கு. செருப்புகளைக் கழற்றாத பாதங்கள். அலட்சியமும் அவமரியாதையும் அன்வயமாகியிருந்தன அவனது தோற்றத்தில், தோரணையில்.

முனிபுங்கவர் மீது அவனது ஸ்பரிசம் படாது தடுக்க விரைந்த பக்தர்கள், கைகளால் அரண் கட்டினர். காவல் துறையாளரும் முன் வந்தனர். ஆனால் கருணாமூர்த்தி அவர்களை விலகச் சொல்லிவிட்டு கனிவோடு “உனக்கு என்ன வேண்டும்” என்று வினவினார்.

“எனக்கொண்ணும் வேண்டாம். சங்கராச்சாரியார் பெரியவர்ன்னு பேசிக்கிறாங்களே, அது நீங்கதானே?” என்று வினவினான்.

“அதிருக்கட்டும். உன்னோட பேரென்ன? இந்த விடியக்காலத்துலே எங்கே போயிண்டிருக்கே?” – சரணாகத வத்ஸலனின் பரிவான விசாரணை.

அவன் தன் பெயரைச் சொல்லிவிட்டு, “எனக்கு ஜோலியில்லையா? வேலைக்குப் போய்க்கினு இருக்கேன்” என்று அஸ்திரம் ஏவுவது போல் கூறினான். “நீங்கள் மடாதிபதிகள் சோம்பேறிகள். பயனுள்ள காரியம் ஏதும் செய்யாதவர்கள்” என்ற ஏளனம் – கண்டனம் – அவன் பதிலில் தொனித்தது.

“உனக்கு எங்கே வேலை?” தயாநிதியின் தொடர்ந்த விசாரணை.

“கிண்டியில்” என்று கூறியபின் “ஒண்ணு கேக்கறேன். இந்த இந்து மதத்தை யாரு உண்டாக்கினாங்க?” எனக் கேட்டான்; வினாவில் ஞானம் தேடும் விநயமோ அறிவு வேட்கையோ கடுகளவும் இல்லை.

ஸ்ரீபெரியவாளின் – ஞான மேருவின் – “தெரியாதப்பா” என்ற மறுமொழி ஏதோ வாதத்தில் வெற்றி கொண்ட இறுமாப்பை அவனுக்குத் தந்தது போலும்.

“தெரியாதுங்கிறீங்க; அப்புறம் சாத்திரம் அப்படிச் சொல்லுது, இப்படிச் சொல்லுது’ சிலைமேலே பாலை ஊத்து, நெருப்பிலே நெய்யை ஊத்துண்ணு சொல்றீங்களே? எப்படி, இதெல்லாம் நல்லதுக்குன்னு நம்பறது?” எனக் கணை தொடுத்தான்.

கொஞ்சமும் சலனமுறாமல் தயாபரன் “அதிருக்கட்டும், கிண்டிக்குப் போகணும்னியே, இந்த ரோடுல போனா கிண்டி வந்துடுமா?” என்று வீணை ஒலித் தண்குரலில் வினவினார்.

“அதானே நான் போய்ட்டிருக்கேன்” என்ற பதிலில் “இதென்ன அநாவசியக் கேள்வி” என்ற உதாசீனம்.

“ஆமா… இந்த ரோடு யாரு போட்டது?...” அந்தப் பாமரனின் இதய வீணையை மீட்ட முற்பட்டுவிட்டார் முனிபுங்கவர்.

“இது என்னோட பாட்டன், முப்பாட்டன், அவுங்களோட முப்பாட்டன் காலத்துலேருந்து இருக்கற ரோடு… இதை யார் போட்டிருந்தா என்ன? கிண்டிக்குப் போவுது; அம்புட்டுத்தானே வேணும்?”

“இது கிண்டிக்குப் போற ரோடுன்னு நிச்சயமாச் சொல்றியே”

“இதிலே என்னங்க சந்தேகம்? தினமுந்தான் போய்க்கினு இருக்கேனே… மேலாலும் உசரப் பாருங்க… எந்தெந்த சாலை எங்கே போவுதுன்னு கைகாட்டி போர்டு போட்டிருக்காங்களே சர்க்காரிலே”

மான் அன்பு வலையில் சிக்கிவிட்டது. ஆனால் இது சிறைப்படல் இல்லை; மீட்சி!

“நானும் உன்னைப் போலத்தாம்பா… இந்த ரோடு யாரு போட்டதுன்னு அலட்டிக்காம, மேலே இருக்கிற கைகாட்டி போர்டையும் நம்பி நீ போற மாதிரி, நான் இந்து மதம் யாரு உண்டாக்கியதுன்னு விசாரப்படாமே போறேன்… நீ இந்தக் கைகாட்டிய நம்பறே… அது கூட காத்துலே மழையிலே தெசை மாறலாம்; கீழே விழலாமே.. நானும் இந்த சாஸ்திரம், வேதம்ங்கிறதையெல்லாம் அப்படியே நம்பிப் போறேன். அதெல்லாம் என்னைவிட எவ்வளவோ பெரியவா, முப்பாட்டனில்ல ஆயிரம் ஆயிரம் வருஷங்களா நெலச்சிருக்கிறதை நம்பறேன்; நம்பச் சொல்றேன்” என்று பரிவு ததும்பும் குரலில் கூறிய தயாநிதி,
“சரி, உனக்கு ஜோலியிருக்கே…. என்னைப் போலயா?... ஜாக்ரதையாப் போய்ட்டு வாப்பா” என்று அபயக்கரம் உயர்த்தினார்.

அடுத்த வினாடி அவன் பாதரட்சைகளை உதறி விட்டு நெடுஞ்சாண்கிடையாக விழுந்து நமஸ்கரித்தான்.

“என்னை மன்னிச்சுடுங்க” என்று நாத்தழுதழுக்கக் கூறினான். கன்னங்களைக் கண்ணீர் நனைத்தது.

Those who came to scoff remained to pray (ஏளனம் செய்ய வந்தவர் பிரார்த்தித்து வணங்க அமர்ந்தனர்) என்ற ஆலிவர் கோல்ட் ஸ்மித்தின் (The village Preacher) (கிராம பூஜாரி) கவிதை வரிகள் நினைவுக்கு வந்தன.

அதன் பின் ஸ்ரீ பெரியவாளின் பல முகாம்களிலும் தரிசனத்துக்கு வந்தான் அந்தப் பரம பக்தன், ரஸவாதப் பரிணாமத்தால்!

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

arasi
Posts: 16794
Joined: 22 Jun 2006, 09:30

Re: Kanchi Maha Periyava

Post by arasi »

The one who thought he did not lead but was a follower, led--over and over again.
The one who rebelled, followed :)

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Image

மரகத வண்ணா!
மறையவர் புகழ் மகிபா! தயாளா!

அஞ்ஞானமகற்றி நீயே நானெண்ணும்
உணர்வை என்னுள் கூட்டி
குருவாய் தோன்றி குற்றம் பொறுத்து
குறை களைந்து ஏற்றம் தந்தருள்வாய்!

நின் சீ(ஷீ)ரடி தாள் பணிந்தேத்தும் ஆனந்தம் நிலைத்திட,
சாந்தி கிடைத்திட காந்தி பெருகிட
சரணம் சரணம் சங்கர குருவே சரணம்
venkat k

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Image

பெரியவா சரணம்

பரமாச்சாரிய சுவாமிகளின் சதாப்தி உற்சவத் தொடக்க விழா சென்னை அடையாறில் நடந்தது. அப்போது கமிட்டியின் தலைவர் முன்னாள் பாரத ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் கூறிய அனுபவம் இது….

“பரமாச்சாரிய சுவாமிகளைத் தரிசிக்க நான் போய் வருவதுண்டு. அது ஓர் அபூர்வமான அனுபவம். அவர்கள் மௌனமாகவே அமர்ந்திருப்பார்கள். கண்கள் மட்டுமே கருணை மழைபொழியும். நான் அவர்கள் எதிரே போய் வருவதுண்டு. என்னுடைய மனம் அமைதியும் நிறைவும் பெறும் வரையில் அமர்ந்திருப்பேன். பிறகு எழுந்து நமஸ்காரம் செய்துவிட்டுத் திரும்பி விடுவேன். அதுவே எனக்குப் போதுமானது.

ஒரு தடவை நான் அப்படி வணங்கி எழுந்து புறப்படும் வேளையில் அவர் என்னிடம் கேட்டார் “என்ன இது? நானும் கவனிச்சிண்டு இருக்கேன். நீ பாட்டுக்கு வர்றே. என் முன்னாலே பேசாம உட்கார்ந்து பார்த்துண்டே இருக்கே.அப்புறம் நீ பாட்டுக்கு எழுந்து போயிடறே! என்ன இதெல்லாம்?” கேட்கும் போதே அவருடைய இதழ்களில் புன்னகை அரும்பிற்று.

நான் கரங்களைக் குவித்துப் பணிவுடன் சொன்னேன்: “சுவாமி! கோயிலுக்குப் போகிறேன். கடவுளுக்கு முன்னால் நின்று விக்கிரத்தில் அவரைக் கண்டு மனப்பூர்வமாகப் பிராத்தனை பண்ணுகிறேன். கருணா கடாட்சம் வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். சுவாமி பேசுவதில்லை. என்னுடைய வேண்டுகோளை ஏற்றுக்கொண்டாரா இல்லையா என்று சொல்லுவதில்லை. ஆனால் என்னுடைய மனத்துக்கு நிம்மதியும் நிறைவும் கிடைக்கிறது. கீழே விழுந்து நமஸ்காரம் பண்ணிவிட்டுத் திரும்பிவிடுகிறேன்.

“சுவாமி! தங்கள் முன் அமரும்போதும், தியானிக்கும்போதும், வணங்கி விட்டு எழுந்து செல்லும் போதும் அதே அனுபவம்தான் எனக்குக் கிடைக்கிறது. இதை நான் வேறு எப்படி விளக்கிச் சொல்ல முடியும்?” என்றேன். பரமாச்சாரிய சுவாமிகள் புன்னகையுடன் கையைத் தூக்கி ஆசிர்வதித்தார்!


Hear is another Image Where PC Alexander was with paramachariar during 1988

Image

thanjavooran
Posts: 2993
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share from my friend

"போ" என்றார்;போயே போச்சு!

சொன்னவர்; எஸ்.பலராம ராவ்.காஞ்சிபுரம்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

(சற்று நீண்ட கட்டுரை)

சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் திருத்தணி
மலை மீது, பைரவ சுப்ரமணி ஐயர், பிரசாதக் கடை
நடத்திக் கொண்டிருந்தார்.அக்கடையில் வேலை செய்த
தொழிலாளர்களில் அடியேனும் ஒருவன். ஓய்வற்ற
வேலை செய்ததால் ஒரு சமயம் உடல் சுகமற்று படுத்து
விட்டேன். நேரம் ஆக,ஆக ஜுரம் அதிகமாகி விட்டது.
இரவு 10 மணிக்குள் வீட்டிற்கு சென்று விடலாம் என்று
முடிவு செய்து, மலையிலிருந்து கீழே வருவதற்குள்
தள்ளாடியவாறும்,அங்காங்கே அமர்ந்தும்,ஓய்வெடுத்து,
ஓய்வெடுத்து, மெதுவாக இறங்கி ஒருவழியாகக்
கடைசி படியில் வந்து நின்றேன்.

கீழே தெப்பக்குளத்துக் கரையில் ஒரு பல்லக்கு
இருந்தது.அப்போது என்னை நோக்கி வந்த ஒருவர்,
"நீங்கள் மலை மீது இருந்துதானே வருகிறீர்கள்?" என்றார்.
"ஆம்" என்றேன்."அப்படியென்றால், வாருங்கள்" என்று
என்னை அழைத்தவர் பல்லக்கின் அருகே கூட்டிச்
சென்றார். சற்றே பல்லக்கின் உள்ளே உற்று நோக்கினேன்.
அங்கே ஸ்ரீ மகா பெரியவர் அவர்கள் சாந்த ரூபமாய்
என் இருண்ட கண்களுக்கு காட்சி தந்தருளினார்.
மெய் மறந்து கை கூப்பி வணங்கி நின்றேன்.

"நீ மலையிலிருந்துதானே வருகிறாய்? கோயில்
திறந்திருக்கா?" என்று கேட்டார் ஸ்ரீ பெரியவர்.
மிக பவ்யமாய் "கோயில் சாத்தியிருக்கு சுவாமி!" என்றேன்.
"அங்கே ஒரு பிரசாதக் கடை இருக்குமே?'-ஸ்ரீ பெரியவர்.
"அதுவும் சாத்தியிருக்கு" என்றதும், சில வினாடிகள்
மௌனம். பிறகு, " என்னை சுமந்து வந்த இவர்கள்
மிகவும் பசியோடு இருக்கிறார்கள். புத்தூர், நகரியில் கூட
இவர்களுக்கு ஆகாரம் கிடைக்கவில்லை.திருத்தணிக்குப்
போனால் உங்களுக்கு கண்டிப்பாக ஆகாரம்
கிடைக்குமென்று சொன்னேன். இங்கே வந்து
தெப்பக் குளக்கரை பக்கமுள்ள ஓட்டல்களிலெல்லாம்
ஏறி இறங்கியும் ஆகாரம் ஏதும் கிடைக்கவில்லை"
என்று ஸ்ரீ பெரியவா சொன்னதும் எனக்கு ஒன்றுமே
புரியவில்லை.

ஜுரத்தோடு தள்ளாடிய நிலையில் இருந்த நான்,
நம் உடம்பைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று
நினைத்து, "மகா பெரியவா உத்தரவு இட்டால், அடியேன்
இவர்களுக்கு ஆகாரம் தயாரிக்க முடியும்" என்று
சொன்னதும், "இந்த ராத்திரியில் உன்னால் என்ன
செய்து விட முடியும்?" என்று ஆச்சரியமாக கேட்டார்,
ஸ்ரீ மகா பெரியவர்.

"நான் மலை மீது உள்ள பிரசாதக் கடையில்
இருப்பவன். இவர்களுக்குப் பசியாற வெண்பொங்கல்
செய்துதர முடியும்" என்றேன்.

ஸ்ரீ பெரியவர் "அப்படின்னா ரொம்ப நல்லதாப்போச்சு.
அவர்களை மலைப்பாதை வழியாக மேலே போகச்
சொல்லி, நான் படி வழியாக நடந்து வருகிறேன்.
நீ போய் சீக்கிரம் செய், போ "என்றார்.

அதுவரை நோயினால் அவஸ்தைபட்டிருந்த என்னுடைய
ஜுரம் 'போ' என்று ஸ்ரீ பெரியவர் சொன்னதும், எப்படிப்
போனதென்றே தெரியாமல் போய்விட்டது.நான்,
பந்தயத்தில் ஓடும் விளையாட்டு வீரனைப் போல ஓடி,
ஒற்றையடிப் பாதை வழியாக மலைக்கு வந்து சேர்ந்தேன்.

அன்று பிரசாதக் கடை முதலாளி இல்லை. அவரது
மனைவியிடம் நான் தகவலைச் சொன்னேன்.

அப்பெண்மணியோ "நீ டாக்டரை பார்க்கத்தானே கீழே
இறங்கினாய்? வைத்தியநாதனே உன்னை குணப்படுத்தி,
உனக்கு உத்திரவு கொடுக்க, என்னை வந்து கேட்கிறாயே!
எல்லோரும் நலமோடு இருப்பதற்காக அல்லவா இந்த
நிகழ்ச்சி நடந்திருக்கு! நீ போய் தாராளமாக ஆகாரம்
தயார் செய்!" என்றார். உடனே அடுப்பைப் பற்ற வைத்து
வெண் பொங்கல் தயாரித்தேன் நான். அதன் பிறகு,
அங்கு படுத்திருந்த ஒருவரை எழுப்பி, மர அகப்பை,
மந்தார இலைகள், பொங்கலுக்குத் தொட்டுக் கொள்ள
புளிக்காய்ச்சல் இவைகளை எடுத்துக் கொண்டு முருகனின்
த்வஸ்தம்பத்தின் அருகே வந்து நின்றேன் நான்.

சில நிமிடங்களில் ஸ்ரீ பெரியவர் மலையிலுள்ள
கோயிலை வந்தடைந்தார். எல்லா பிரகாரத்திலும்
மின்சார விளக்குகள் ஒளி வீச, வாத்தியங்கள் முழங்க
அதிகாரி கிருஷ்ணா ரெட்டியார், கோயில் நிர்வாகி
குலசேகர நாயுடு,இன்னும் பல ஊழியர்கள்,குருக்கள்
அனைவரும் சேர்ந்து அழைத்துச் செல்ல முற்பட்ட போது
ஸ்ரீ மகா பெரியவர் நான்கு பக்கமும் சுற்றிப் பார்த்தார்.
கைகூப்பி அவரெதிரில் வந்து நின்றேன்.

ஸ்ரீ பெரியவர் "ஆகாரம் தயார்தானே" என்றதும்,
"தயார் செய்து இங்கேயே கொண்டு வந்திருக்கிறேன்"
என்றேன்."சரி, இவர்களுக்குப் பரிமாறி விட்டு வா"
என்று உத்திரவிட்டார். ஸ்ரீ பெரியவர், பல்லக்கைத்
தூக்கியவர்களை உட்காரச் சொல்லி,எல்லோருக்கும்
இலை கொடுத்து வெண் பொங்கலைப் பரிமாறிய நான்,
"இதெல்லாம் உங்களுக்கென்று தயார் செய்தது.
புளிக்காய்ச்சல் இருக்கு. திருப்தியாக சாப்பிடுங்கள்.
நான் கோயில் சென்று பெரியவாளை தரிசிக்க வேண்டும்"
என்றேன். அவர்களும், "நீங்க போங்க நாங்க பார்த்துக்
கொள்கிறோம்" என்றதும் நான் கோயில் உள்ளே போனேன்.

அங்கே மூலஸ்தானத்தின் அருகே ஸ்ரீ ஸ்வாமிகள்
நின்றிருந்தார். அக்காட்சியைக் கண்ட நான்,
"யார் தணிகைமலை முருகன்? யார் பரமாசாரியார்?"
என்று கண்களைக் கசக்கிக் கசக்கி உற்றுப் பார்த்தேன்.

தெய்வ குருவாகவும், ஜகத்குருவாகவும்
ஸ்ரீ பெரியவர் இருந்த நிலை கண்டு, என் கண்களில் நீர்
மல்கிப் பெருக்கெடுத்து ஓடியது.தரிசனம் முடிந்தது.
ஸ்ரீ மகா ஸ்வாமிகள் வெளியே வந்தார்.

அவரை சேவித்து நின்ற கோவில் சிப்பந்திகள்
விலகிச் செல்ல நான் அவரெதிரில் கைகூப்பி நின்றேன்.

ஸ்ரீ பெரியவர் "அவாளெல்லாம் ரொம்ப சந்தோஷப்படறா.
ரொம்ப ருசியாகவும்,வயிறு நிரம்ப சாப்பிடவும் செய்தாயே!
ரொம்ப ரொம்ப சந்தோஷம் அவாளுக்கு. வயிறும் ரொம்பிப்
போச்சு" என்று சந்தோஷமாக ஆசிர்வதித்து நிற்கையில்,
கீழே விழுந்து நான் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து
எழுந்தேன்.

"நீ தினமும் தூங்கப் போகும்போது 'ராம' நாமாவை
சொல்லு" என்று ஆசிர்வதித்தார், ஸ்ரீ பெரியவா.
அப்போது நேரம் இரவு மணி ஒன்று.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kanchi Maha Periyava

Post by cmlover »

அங்கே மூலஸ்தானத்தின் அருகே ஸ்ரீ ஸ்வாமிகள்
நின்றிருந்தார். அக்காட்சியைக் கண்ட நான்,
"யார் தணிகைமலை முருகன்? யார் பரமாசாரியார்?"
என்று கண்களைக் கசக்கிக் கசக்கி உற்றுப் பார்த்தேன்.
சுவாமிநாதன் தானே மஹா பெரியவா!
அதிலென்ன சந்தேகம்!

thanjavooran
Posts: 2993
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

நெஞ்சை தீண்டிய குறிப்பு .
நன்றி .

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kanchi Maha Periyava

Post by cmlover »

I am sure Vijay TV will capitalize on these real touching documented episodes for their future
programs on Kanch Mahan |
Thanks Vkailasam for documenting assiduously...

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

29-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்
நன்றி-பால ஹனுமான்.

Periyavaa6

வருடம் 1975. லால்குடியும் அவரின் மனைவியும் காஞ்சி மகா பெரியவரைத் தரிசிக்க, தேனம்பாக்கம் கிராமத்துக்குப் போகிறார்கள். அங்கு சோகமான, வருத்தம் கலந்த சூழல் நிலவுகிறது. மடத்துச் சிப்பந்திகளில் ஒருவரின் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த பெரியவர், அறை ஒன்றில் தன்னை அடைத்துக்கொண்டு காஷ்ட மௌனத்தில் இருந்தார். ஆகாரம், தண்ணீர் கிடையாது. எதற்காகவும் யாரிடமும் பேசாமல் இருந்தார்.

வேறு வழியின்றி, பரமாச்சார்யரைத் தரிசிக்க வேண்டும் என்கிற தனது ஆவலை அடக்கிக்கொண்டார் லால்குடி. இருப்பினும், புறப்படும்முன், பாடல்கள் சிலவற்றை அந்த மகானுக்குச் சமர்ப்பிக்கத் தீர்மானித்தார்.

Lalgudi

காஞ்சிப் பெரியவருக்கு மிகவும் பிடித்தமான சாமா ராகப் பாடலுடன் தொடங்கினார். பின்னர், ஆபோகி ராகத்தில், ‘சபாபதிக்கு வேறு தெய்வம் சமானம் ஆகுமா?‘ பாடலை வாசிக்க ஆரம்பித்தார். ‘கிருபாநிதி இவரைப் போல‘ வரியை பல்வேறு சங்கதிகளுடன் லால்குடி மெய்மறந்து இசைத்துக் கொண்டிருக்க, பெரியவர் தங்கியிருந்த அறையின் ஜன்னல் கதவு திறந்து கொண்டது. பாடல் முடிவுக்கு வரும் வேளையில், அறைக் கதவும் திறந்தது. கையைத் தூக்கி வாழ்த்தியபடியே ஆச்சார்ய சுவாமிகள் வெளியே நடந்து வந்தார்.

லால்குடியும் அருகில் இருந்த மற்றவர்களும் சிலிர்த்துப் போனார்கள்.

மஹா பெரியவா அருள்வாக்கு : -

ஒரு செயலை ‘நான் செய்கிறேன்‘ என்ற மமதை எண்ணம் போய்விட்டால் அதுவே பகவானுக்கு நாம் செலுத்தும் நமஸ்காரம்தான்!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

பல்லவி.
"சந்திரசேகர சரஸ்வதியே சரணம்
ஸ்ரீ காஞ்சி வாழ் தயாநிதியே
அனுபல்லவி.
அந்தரங்கமுடன் உந்தன் அருளைப்பெறவே நான்
என்ன தவம் செய்தேனோ கருணைக் கடலே.
சரணம்
பக்தர்கள் செய்திட்ட பாக்யமாம் பாரில்
பரம் பொருள் ஆகவே அவதரித்தாய்
மா தவம்செய்திடும் மாணிக்கமாம்
ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதியை நீ அளித்தாய்
பந்த பாசம் வென்ற பாலயோகி சங்கர
விஜயேந்திர சரஸ்வதியை அளித்தாய்.

composed by Maharajapuram Santhanam..

Rendered by Shri TM Krishna
http://mfi.re/listen/fc0ccioi2k742z2/TM ... athiye.mp3

Some of the songs by Shri TM Krishna are included in the concert with permission from
Sri Kanchi MahaswamiPeetarohana Shatapthi Mahotsav Trust who have released the songs..

As suggested by Shri TM Krishna, the above permission was obtained..from them.

arasi
Posts: 16794
Joined: 22 Jun 2006, 09:30

Re: Kanchi Maha Periyava

Post by arasi »

VKailasam,
Thank you for the song. I have heard it sung only by Santhanam until now.
Any idea when this was recorded?

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

பெரியவாளுடைய இந்த அறிவுரை நம் எல்லோருக்கும் ஒரு சம்மட்டி அடி !

சிமிழி பிரஹ்மஸ்ரீ வெங்கட்ராம சாஸ்த்ரிகள் பெரியவாளுடைய அன்புக்கும் அபிமானத்துக்கும் ரொம்ப அருகதை உடையவர். அப்படியொரு அனுஷ்டானம் ! பெரியவாளிடம் பக்தி!

அவர் மறைந்ததும், அவருடைய பிள்ளைக்கு பால்யத்திலேயே ரெண்டு சன்யாசிகள் மூலமாக தேவி உபாசனை உபதேசிக்கப்பட்டது. பல ஆண்டுகள் உபாசித்தும் “உபாசனையில் வாக்கு, சரீரம் ரெண்டும் ஈடுபடர அளவு, மனஸ் ஈடுபட மாட்டேங்கறது. அதனால மனசுக்கு சாந்தி கெடைக்கவேயில்லை” என்ற இந்த உண்மையான எண்ணம் ரொம்ப வலுத்துக் கொண்டே போனது. பல வழிகளை கையாண்டும் ஒன்றும் பிரயோஜனமில்லை. பெரியவா மட்டுமே இதற்கு வழி காட்டமுடியும் என்ற நம்பிக்கையில் பெரியவாளிடம் வந்தார்.

கார்வேட் நகரில் ஒரு குளக்கரையில் அழகாக வேய்ந்திருந்த ஒரு சிறு கொட்டகையின் வாசலில் அமர்ந்திருந்தார். எத்தனைதான் அறிமுகம் இருந்தாலும், பூர்வர்கள் யார் யார் என்பதெல்லாம் தெரியாதது மாதிரி கேட்டுக் கொள்வார். நாம் இன்னாரது வம்சத்தில் வந்திருக்கிறோம் என்று சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்வதை அவர் மிகவும் விரும்புவதாக இருக்கும். இந்த உபாசகரும் தான் சிமிழி சாஸ்த்ரிகள் பிள்ளை என்று சொல்லிவிட்டு, தன் மனஸ் படும் கஷ்டத்தை சொல்லி, வழிகாட்ட வேண்டும் என்று வேண்டினார். அப்போது நடந்த சம்பாஷணை………..

“தேவி உபாசனை பல வர்ஷங்களா பண்ணிண்டு இருக்கேன். ஆனா, மனஸ் துளிகூட ஈடுபடலை. ரொம்ப உறுத்தறது. எனக்கு ஒரு வழி காட்டணும் பெரியவா”

“என்ன சொல்றே? அதனால என்ன தப்பு?”

“மனஸ் தனி வஸ்துவா இருக்கறதால, பூஜை முழுமையாகாத மாதிரி இருக்கு”

“அதுக்கு நா என்ன பண்ணறது?”

“மனஸ் ஈடுபட ஒரு வழி காட்டணும்”

“என்ன படிச்சிருக்கே?”

…………சொன்னார்.

“இத்தனை படிச்சும், ஒனக்கு விவேகமில்லே! ஒன் மனஸை நா திருத்த முடியாது”

“என்னாலேயே என்னை திருத்திக்க முடியலை. அதான் பெரியவாட்ட வந்தேன்”

“என்னை என்ன செய்ய சொல்றே?”

“மனஸ் சாந்தி அடையணும்”

“நீ என்ன பூஜை பண்றே?”

“அம்பாளை படத்துலேயும், விக்ரஹத்துலேயும், யந்த்ரத்துலேயும் பூஜை பண்ணறேன்”

“ரொம்ப சரி. படத்ல அம்பாள் இருக்கறதா நெனச்சுதான பூஜை பண்றே?”

“ஆமாம்”

“அப்போ…….இந்த கொறையைக் கூட அவகிட்டயே சொல்லியிருக்கலாமே? நெறைய படிச்சிருக்கே. படம், விக்ரஹம், யந்த்ரம்….ன்னு எல்லா எடத்துலேயும் அவ இருக்கறதா பூஜையும் பண்றே. ஆனா, ஒண்ணுலயும் ஒனக்கு பிடிப்போ, நம்பிக்கையோ இல்லை. அம்பாள் ஓங்காத்துலேயே, ஒன் பக்கத்துலேயே இருக்கறச்சே, ஒன் கொறையை அவட்ட சொல்லி அழத் தெரியலையே! இனிமே அவகிட்டயே சொல்லி அழு! இங்க வராதே. நான் என்ன பண்ண முடியும்?”

மிகவும் சூடாக பதில் வந்ததும், உபாசகர் விக்கித்து நின்றார். மனஸ் இந்த பேரிடியை தாங்கமாட்டாமல், கண்களில் ஜலம் முட்டி நின்றது. நமஸ்காரம் பண்ணிவிட்டு உத்தரவு வாங்கிக் கொள்ள யத்தனித்தார். அம்பாள் மனஸ் இறங்கினாள்………..

“ரொம்ப கோவிச்சுண்டுட்டேனா ! நீயே ரொம்ப ஆசையா அம்பாளை உபாசனை பண்றே! மனஸ் ஈடுபடலை..ன்னு ஒனக்கே தெரியறது. உபாசனை…ன்னா சமீபத்ல இருக்கறதுன்னு அர்த்தம். ஒனக்கு எப்பவுமே பக்கத்ல இருக்கறவள் கிட்டே ஒன்னோட கொறையை சொல்லாம, நீட்டி மொழக்கிண்டு எங்கிட்ட வந்தியே!….ங்கறதாலதான் கொஞ்சம் அப்பிடி ஒரைக்கறா மாதிரி சொன்னேன்.

இனிமே……….என்ன கொறையானாலும், எதுக்கும் அவளைத் தவிர வேற யார்கிட்டயும் சொல்லக் கூடாது ! நீ பூஜை பண்ற தெய்வத்துகிட்ட, அது அம்பாளோ, சிவனோ, விஷ்ணுவோ, பிள்ளையாரோ….யாரா இருந்தாலும் சரி, அவா கிட்டேயே கேட்டாத்தான் ஒன்னோட நம்பிக்கைக்கு ஏத்தா மாதிரி அனுக்ரகமும் கெடைக்கும். உன் உபாசனா தெய்வம் ஒன்னோட பேசும். என்ன? புரிஞ்சுதா?……..நம்பிக்கைதான் எல்லாம். அவளோட அனுக்கிரகம் ஒனக்கு நிச்சயமா உண்டு! கவலைப்படாதே…..க்ஷேமமா இரு!” என்று அபயஹஸ்தம் “கொடுத்தாள்” !

இனி ?…………. எனக்கென்ன மனக்கவலை? என் தாய்க்கன்றோ தினம் தினம் என் கவலை

jaya jaya sankara hara hara sankara
jaya jaya sankara hara hara sankara


"ஒளியைத் தேடிய ஒலி" - Isaignani Ilayaraja's experience ..

http://www.youtube.com/watch?v=sWEE-gVSdwc


jaya jaya sankara hara hara sankara
jaya jaya sankara hara hara sankara

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Image

கண்ணதாசன் பார்வையில் …மஹா பெரியவா ….

அதோ, போய்க்கொண்டு இருக்கிறார். – அர்த்தமுள்ள இந்து மதம் நிறைவு பகுதியில், கவியரசர் கண்ணதாசன் அவர்கள்.

….இப்படிப்பட்ட யோகம் கை வந்த ஒருவர், காஞ்சி பெரியவர்.
அதோ, அவர் எங்கே போகிறார் என்று சொல்லாமலேயே போய் கொண்டு இருக்கிறார். இந்த வயதிலும் எந்த வாகனத்திலும் ஏறாமல் போய்க்கொண்டிருக்கிறார்.
கைப்பிடி அவலில் காலமெல்லாம் வாழும் அந்த மகாயோகி தள்ளாத வயதிலும் வாலிபனை போல் புனித யாத்திரை தொடங்கி இருக்கிறார். தெய்வ நம்பிக்கை உச்சத்துக்கு போய் விட்டால் வயது தோன்றாது, பசி தோன்றாது.
உள்ளொளி ஒன்று பரவி விரவி நிற்கிறது. அதோ, அந்த ஒளியோடு அந்த மகாயோகி போய்க்கொண்டு இருக்கிறார். அது வெறும் மானிட ஸ்தூலத்தின் யாத்திரை அன்று. அது ஆன்ம யாத்திரை. லோகாதய சுகத்தை முற்றும் துறந்துவிட்டு தார்மீக வடிவெடுத்து அவர்கள் புறப்படும்போது தர்மம் நடைபாதை விரிக்கிறது. மகா யோகம் மலர்கள் தூவுகிறது. மகாராஜாக்களுக்கு இல்லாத மரியாதை அவர்களுக்கு கிடைக்கிறது.
ஆந்திராவில் ஒரு கோயில் கட்டப்படுகிறது. அதன் மூலஸ்தானத்தில் இன்னும் சிலை வைக்கப் படவில்லை. அங்கே போய் காஞ்சி பெரியவர் ஓரிரவு தங்கினாராம். சிலை பிரதிஷ்டை ஆகி விட்டது என்று ஆந்திர மக்கள் எல்லாம் மகிழ்ச்சி அடைந்தார்களாம்.
அவர் பிராமண ஜாதியின் தலைவரல்ல. பிராமணர்கள் அப்படி ஒரு நிலையை உண்டாக்க கூடாது.
உலகெங்கிலும் உள்ள அக்ஞாநிகளுக்கு ஞான கண் வழங்கும் பேரொளி. அவரது பெருமை இப்போது தெரியாது. இன்னும் ஐம்பது வருஷங்கள் போனால் ‘இந்து மதம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு ‘ஸ்ரீ சந்திர சேகர சரஸ்வதி சுவாமிகள் என்ற சங்கராச்சாரிய சுவாமிகள்’ என்று எதிர்கால மாணவன் பதில் எழுதுவான்.
அந்த ஞான பழத்தை தரிசித்தபோது நான் பெற்ற உள்ளொளியை விவரிக்க முடியாது. கோடியில் ஒருவரே எப்போதாவது இப்படி ஆக முடியும். செஞ்சி கோட்டைக்கு போகிறவன் எல்லாம் தேசிங்கு ராஜா அல்ல. காவி கட்டிய எல்லோருமே மகா யோகிகள் அல்ல. ஞானம், வித்தை, ஒழுக்கம், பண்பாடு ஆகிய அனைத்தும் சேர்ந்த மகாயோகி எங்கோ எப்போதோ அவதரிக்கிறார்.
அதோ, அவர் நடந்து போய் கொண்டு இருக்கிறார். இறைவன் கருணையினால் நமக்கு கிடைத்த அந்த வரம், இன்னும் பல்லாண்டு வாழ வேண்டும். தாய், குழந்தைக்கு தாலாட்டு பாடும் போது அவரை பற்றி பாட வேண்டும். பள்ளிக்கூட பாட புத்தகங்களில் அவரை பற்றி குறிக்க வேண்டும்.
ஒரு உத்தமமான யோகியை ‘பிராமணன்’ என்று ஒதுக்கி விடுவது, புத்தியுள்ளவன் காரியமாகாது. மேதைகளும் கற்பு அரசிகளும் எந்த ஜாதியிலும் பிறக்கலாம். யோகிகளில் ஒரு சாதாரண யோகியை கூட ஒதுக்க கூடாது என்றால், இந்த மகா யோகியை பிராமணர் அல்லாதார் ஒதுக்குவது எந்த வகையில் நியாயம்?
அதோ அவர், நடந்து போய் கொண்டு இருக்கிறார். புத்தன் சொன்னதை விட, அவர் நமக்கு அதிகமாக சொல்லி இருக்கிறார். இயேசுவின் தத்துவங்களை விட அதிகமான தத்துவங்களை வாரி இறைத்து இருக்கிறார். அவர் ஜாதி வெறியர் ஆகவோ, மத வெறியர் ஆகவோ, ஒரு நாளும் இருந்தது இல்லை. அரசியல் வில்லங்கங்களில் மாட்டி கொண்டது இல்லை.
பகவான் கீதையில் சொன்னது போல் வாழ்ந்து கொண்டு இருப்பவர் அவர் ஒருவரே.
அதோ, அவர் நடந்து போய் கொண்டு இருக்கிறார். அந்த காலடி சுவடுகளை தொடர்ந்து செல்லுங்கள். அதுவே உங்கள் யோகமாக இருக்கட்டும்...
jaya jaya sankara hara hara sankara
jaya jaya sankara hara hara sankara

மருந்து ஒன்று உண்டு..
காஞ்சியில் கிடைக்கும் அற்புத மருந்து
கூவி அழைத்தால் வந்து நிற்கும் தேனமுது
எளியவர்கும் எளியதாய் கிடைக்கும் மருந்து
பிரிந்தவர்களை கூட்டிவைக்கும் அருமருந்து
நாடியவர்களுக்கு நல்வாழ்வளிக்கும் நல் மருந்து
தேடி சென்று இன்னல் தீர்க்கும் இனிய மருந்து
நடந்ததை இயம்பும் மருந்து
வருவதை உணர்த்தும் மருந்து
இடர்களை களைந்திடும் மருந்து
அடியவர்களை காத்திடும் மருந்து
இச்சைகளை நீக்கும் மருந்து
பரமனிடம் அழைத்து செல்லும் மருந்து
வேங்கடவன் என்னை வாழ வைக்கும்
இனிய மருந்து!
venkat k

Image

thanjavooran
Posts: 2993
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share from my friend
நீங்கள் ம்ருத்யுஞ்ஜய ஜப-ஹோமம் செய்ய வேண்டாம்.உங்கள் வீட்டுக்கு ம்ருத்யு வரமாட்டான்;திரும்பிப்போங்கள்"


சொன்னவர்; ராயவரம் பாலு ஸ்ரீமடம்.



நெரூர் சதாசிவப் பிரும்மேந்திரர் அதிஷ்டானத்துக்கு, தரிசனத்துக்காகச் சென்றிருந்தார்கள், பெரியவாள்.

சதாசிவப் பிரும்மேந்திரரிடம், பெரியவாளுக்கு இருந்த பக்திக்கும்,மரியாதைக்கும் எல்லையே காண முடியாது. பிரும்மேந்திரர் பெயரைச் சொன்னாலும், கேட்டாலும், உருகிப் போய்விடுவார்கள்,பெரியவாள்.



அதிஷ்டானத்தில்,ஜபம் செய்வதற்கு உட்கார்ந்து விட்டார்கள், பெரியவாள். அதிஷ்டான அன்பர்களும், பெரியவாளுக்குக் கைங்கரியம் செய்யும் பணியாளர்களும், சற்றுத் தொலைவுக்குப் போய் நின்று கொண்டார்கள்.

பெரியவாள், அதிஷ்டானங்களுக்குள் சென்று ஜபம் செய்வதையோ, சந்யாஸ முறைப்படி வணங்குவதையோ யாரும் பார்க்கக்கூடாது என்பது,ஸ்ரீமடத்து சம்பிரதாயம். மானுட எல்லைகளுக்கு அப்பால் சென்று, தெய்வீகத்தின் நுழைவாயிலில் நிற்கும் அபூர்வ தருணங்கள், அவை.



இந்தக் கட்டுப்பாடு, பக்தர்களின் நலனை முன்னிட்டுத் தான் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. நூறு வாட்ஸ் மின்விளக்கையே பார்த்துப் பழகிய கண்கள் எதிரில், லட்சம் வாட்ஸ் மின் ஒளியைப் பாய்ச்சினால், எப்படித் தாங்கமுடியும்? அந்தச் சமயம் பார்த்து வெகு அவசரமாக வந்தார். ஓர் அன்பர் - ரங்கசாமி. "பெரியவாளை உடனே தரிசனம் பண்ணனும். பிரசாதம் வாங்கிக்கொண்டு உடனே புறப்படணும்". என்று, மனம் திறந்து தொண்டர்களிடம் முறையிட்டார்.



"சுவாமி, பெரியவாள், கதவை சார்த்திக்கொண்டு அதிஷ்டானத்துக்குள் ஜபம் செய்து கொண்டிருக்கா, இப்போ யாரும் அவாளைத் தரிசிக்க முடியாது. தியானம் கலைந்து பெரியவாள் தானாகவே வெளியே வந்தவுடன் முதன் முதலாக நீங்கள் தரிசனம் செய்து கொள்ளலாம்."

வந்தவர், இலேசுபட்டவர் அல்லர்; ரொம்பவும் அமுக்கமான பேர்வழி!.

தொண்டர்களின் பேச்சைக் கேட்டு சமாதானம் அடைந்துவிட்டாற்போல, பாவனை செய்து கொண்டிருந்தார்.

தொண்டர்களின் சுதந்திரமான வாய்வீச்சு, அடக்குவாரின்றி வெள்ளமாக ஓடிக்கொண்டிருந்தது. பேச்சு வெள்ளத்தில் மூழ்கித் திளைத்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள். கண்ணிமைக்கும் பொழுதில், புதிதாக வந்த அன்பர் ரங்கசாமி அதிஷ்டானத்தின் கதவுகளைத் திறந்து கொண்டு, உள்ளே சென்றுவிட்டார்!

இந்தத் தடாலடித் திட்டத்தை யாரும் எதிர்பார்க்காததால் எல்லோரும் குழம்பிப் போய் நின்றார்கள்.



அந்த நேரத்தில் அதிஷ்டானத்திலிருந்து பெரியவாளின் குரல், அதுவரையில் சிஷ்யர்கள் கேட்டறியாத ஒரு கம்பீரத்வனியில் தெளிவாகக் கேட்டது.



"நீங்கள் ம்ருத்யுஞ்ஜய ஜப-ஹோமம் செய்ய வேண்டாம். உங்கள் வீட்டுக்கு ம்ருத்யு வரமாட்டான்;திரும்பிப் போங்கள்" அன்பர் ரங்கசாமி கதவை மூடிவிட்டு, சட்டென்று வெளியே வந்தார். அணுக்கத் தொண்டர்கள் அவரை மொய்த்துக்கொண்டு விட்டார்கள். ரங்கசாமி ஒரு கதையே சொன்னார்.



அவருடைய நெருங்கிய உறவினருக்கு, திடீரென்று நெஞ்சுவலி. பரிசோதனை செய்த டாக்டர்கள், "நாற்பத்தெட்டு மணி நேரம் போனால்தான்,உறுதியாக சொல்ல முடியும்" என்று சொல்லிவிட்டார்கள். ஜோசியர், "உடனே ம்ருத்யுஞ்ஜய ஹோமம் செய்யுங்கள்" என்றார். உடனே போய், பெரியவாளிடம் தெரிவித்துப் பிரசாதம் வாங்கிக் கொண்டு வந்தால் நல்லது என்று ஒருவர் ஆலோசனை; வயதான மூதாட்டி ஒருவர், "பெரியவா, இதோ பக்கத்திலே, நெரூர்லே தானே இருக்கார். அவாகிட்ட சொல்லிவிடுங்கோ,அவா பார்த்துப்பா" என்று சொன்னதை எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள். அதன்படி தான், அன்பர் ரங்கசாமி அவ்வளவு அவசரப்பட்டிருக்கிறார்.



அவருடைய அதிர்ஷ்டம் தெய்வமே அவருக்கு அருள்வாக்குக் கூறிவிட்டது!

ரங்கசாமி வீட்டுக்குள் நுழைந்தபோது அந்த நோயாளி உறவினர், படுக்கையில் உட்கார்ந்து புன்முறுவலித்துக் கொண்டிருந்தார்.

"ஆமாம், இன்னும் ஒரு நூறாண்டு அவருக்கு காரண்டி!"

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

"மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நான் ஆட்சி செய்வேன்” என்று மட்டும் பெரியவரிடம் கூறிவிடுங்கள்"
31-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்
நன்றி-பால ஹனுமான்.

Periyavaa5

பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் கூறுகிறார்…

எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்த சமயம் – முதல்வராக பொறுப்பேற்பதற்கு முதல் நாள் ஒரு சம்பவம்! அப்போது மகாபெரியவர், மகாராஷ்டிர மாநிலம் சதாராவில் தங்கியிருந்தார். இதே சாதுர்மாஸ்ய விரதம்தான். எம்.ஜி.ஆரை வாழ்த்தி, ஆசி கூற விரும்பினார் பெரியவர். அதன் நிமித்தம் ஒரு பொன்னாடையுடன் காமாட்சியம்மன் பிரசாதத்தை வரவழைத்து ஆசீர்வாதத்துடன், அதை வைணவ சீலரான முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சாரியார் வசம் ஒப்படைத்து, “இதை மடத்து ஆசீர்வாதமாக முதல்வரிடம் சேர்ப்பித்துவிடு” என்று கூறி அனுப்பிவித்தார்.

முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சாரியாரும் ராமாவரம் தோட்டத்துக்கு வந்து காத்திருந்து, அந்த பிரசாதத்தை எம்.ஜி.ஆர். வசம் சேர்ப்பித்தார். பெரும் ஜனத்திரளுக்கு நடுவில் பிரசாதத்தை உரிய முறையில் சேர்க்க முடியுமா என்று சந்தேகம் இருந்தது. ஆனால், பெரியவர் கருணை அங்கே பரந்தாமன் எனும் அன்பர் மூலம் வழி நடத்தி பிரசாதத்தையும் சேர்த்துவிட்டது.

அவ்வேளையில், எம்.ஜி.ஆர் அவர்கள் லஷ்மி நரசிம்மாச்சாரியாரிடம் கூறியது ஒன்றுதான்: “மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நான் ஆட்சி செய்வேன்” என்று மட்டும் பெரியவரிடம் கூறி, என் பணிவான நமஸ்காரங்களையும் கூறிவிடுங்கள் என்றார்.

லஷ்மி நரசிம்மாச்சாரியாரும் மகிழ்வுடன் விடை பெற்றுக்கொண்டார். மறுநாள் எம்.ஜி.ஆர். பெரியவர் அணிவித்த சால்வையை அணிந்துகொண்ட பிறகே பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

சதாராவிலிருந்து பெரியவர் புரிந்த ஆசிகளும், கருணையும், எம்.ஜி.ஆருக்குள் இயல்பாகவே இருந்த உதாரகுணமும் ஒன்றிணைந்தன.

மஹா பெரியவா அருள்வாக்கு : -

ஆடம்பர பொருள்களைத் தேடிப் போவதால் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிடாது.

"உண்மையான தவசிக்கு மாற்றுக் கருத்து உடையவர்களும் சரி; மதித்து பின் தொடர்பவர்களும் சரி, ஒன்றுதான்."




32-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்
நன்றி-பால ஹனுமான்.
பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் கூறுகிறார்…
ஒரு புலவர், தன் குடும்பத்தவருடன் செட்டிநாட்டுப் பகுதியிலிருந்து பயணிக்கும்போது, வழியில் எங்குமே சாப்பிடக் கிடைக்கவில்லை. பசியோ குடலைப் பிடுங்கித் தின்கிறது. நேரமோ நள்ளிரவைத் தாண்டிவிட்டது. அப்போது, புதுக்கோட்டை அருகே ஒரு ஊரில் மகாபெரியவர் தங்கி இருக்கும் அறிவிப்பு அவர் கண்களில் படுகிறது.
உடனே காரை அங்கு விடச் சொல்கிறார். குடும்பத்தவர்களோ, ‘நள்ளிரவாகி விட்ட நிலையில், பெரியவர் தங்கி இருக்கும் இடத்துக்குப் போய், அவரை சிரமப்படுத்துவது சரியில்லை’ என்கின்றனர்.
நாம் சிரமப்படுத்த வேண்டாம். காலை அவரை தரிசித்துவிட்டு செல்வோம். இந்தப் பட்டினி அவருக்கான விரதமாக இருக்கட்டும்‘’ என்கிறார் புலவர். காரும் அந்த ஊரை நெருங்கி விட்ட நிலையில், மணி ஒன்று!
ஊர் எல்லையிலேயே ஒரு பிராமணர் காத்திருந்து, வழிமறித்து நிறுத்தி, ‘நீங்கள் தானே புலவர்?’ என்று கேட்கிறார். புலவருக்கோ பெரும் வியப்பு…!
அந்த நள்ளிரவில் புலவரின் காரை வழிமறித்து, நீங்கள்தானே புலவர்?” என்று அந்த பிராமணர் கேட்டபோது, அந்த புலவருக்கு பெரும் வியப்பு. ஏனென்றால், அவர் அங்கு பிரவேசம் செய்திருப்பதே எதிர்பாராத விதம்.
‘நான் வந்தபடி இருக்கிறேன்’ என்று கூற, இன்றுபோல கைபேசி வசதிகளும் இல்லாத காலம் அது. அப்படி இருக்க, இந்த பிராமணருக்கு தன் வருகை எப்படித் தெரிந்திருக்க முடியும் என்கிற கேள்வி, அந்த புலவருக்கு மட்டுமல்ல; புலவர் குடும்பத்தவர்க்கும் சேர்ந்தே ஏற்பட்டுவிட்டது.
அதைத் தொடர்ந்து நடந்தவைகளும் ஆச்சர்யமூட்டும் அனுபவங்கள்தான். அந்த பிராமணர், அவரை பெரியவர் தங்கியிருக்கும் படத்துக்கு அழைத்துப் போய், கைகால் கழுவி வரச் செய்து பின் அமர்வித்து தையல் இலை போட்டு, அதில் அரிசி உப்புமா, பிட்லே என்று சுடச்சுட பரிமாறியபோது புலவர் குடும்பம் சிலிர்த்துப் போனது. சாப்பிட்டு முடித்த கையோடு, பெரியவர் காத்திருப்பதாக கூறி, அவர்களை அழைத்துச் சென்று நிறுத்தியபோது பெரியவரும் விழித்திருந்தார்.
புலவரும் அவர் குடும்பத்தவரும் அந்த சாப்பாட்டையும் எதிர்பாக்கவில்லை – அந்த தரிசனத்தையும் எதிர்பாக்கவில்லை. புலவருக்கு ஆனந்தக் கண்ணீரே வந்து விட்டது.
இப்போது நடந்த அவ்வளவும் எங்கள் பாக்கியம். நாங்கள் துளியும் எதிர்பாராதது. எங்கள் வருகையும் சரி; பசியும் சரி; உங்களுக்கு எப்படித் தெரியும் என்றே தெரியவில்லை” என்றார் புலவர். அதற்கெல்லாம் எந்த பதிலையும் கூறவில்லை பெரியவர். ஒரு புன்னகைதான் பதில்.
சரி நாங்கள் இப்போதே தஞ்சாவூர் புறப்படுகிறோம்” என்று புலவர் கூறவும், படுத்து உறங்கிவிட்டு காலையில் போய்க்கொள்ளலாம்” என்று உறுதியாக கூறிவிட்டார் பெரியவர்.
படுக்கச் சென்ற இடத்தில் சூடாக பால் வேறு!
புலவர் கூட வந்தவர்களில் கைக்குழந்தை ஒன்றும் அடக்கம். அதற்கு பால்தானே சரியான உணவு!
புலவர், பெரியவரின் கருணையையும் உதவியையும் எண்ணி நெகிழ்ந்துபோனார்.
இந்தப் புலவர் யாரோ அல்ல. அந்த நாளில் புகழ்பெற்று விளங்கிய ஏ.கே. வேலன் என்பவர்தான் இவர். திராவிட இயக்கத் தொடர்போடு ஹிந்தி எதிர்ப்பு, விலைவாசி உயர்வு என்று பல போராட்டங்களில் கலந்துகொண்டவர். ஆன்மிகத்தில் நிறைய கேள்விகளை கொண்டிருந்தவர்.
இவரிடம் பெரியவர் எந்த உபன்யாசமும் செய்யவில்லை. அவர் போன வழியையும் தவறென்றோ சரியென்றோ கூறவில்லை. பெரியவர் மேல் புலவருக்கு ஒரு மதிப்பும் மரியாதையும் இருந்தது. இச்சம்பவத்துக்குப் பிறகு அது பக்தியாய் மாறிவிட்டது.
உண்மையான தவசிக்கு மாற்றுக் கருத்து உடையவர்களும் சரி; மதித்து பின் தொடர்பவர்களும் சரி, ஒன்றுதான்.
மஹா பெரியவா அருள்வாக்கு : -
* சுவரில் எறியும் பந்து மீண்டும் நம்மிடமே திரும்பிவிடும். அதுபோல, கோபத்தால் பிறரைத் தாக்கினாலும் மீண்டும் வந்து நம்மைத் தாக்கும்.
* உங்களது ஆசைகள் நிறைவேறத் தடையாக இருப்பவர்கள், நம்மை விடக் கீழ்ப்பட்டவர்களிடம் கோபத்தைக் காட்டாதீர்கள்.
* நிறைவேறாத ஆசை என்பது கோபம், வருத்தம் ஆகிய இருவிதங்களில் வெளிப்படுகிறது. இதில் வருத்தத்தை விட, கோபத்தால் நமக்கும் பிறருக்கும் பெரிய அளவில் துன்பம் உண்டாகிறது.
* யாரையும் கோபிக்கும் தகுதியோ உரிமையோ நமக்கு இல்லை என்பதை நினைவில் வையுங்கள். நாமும் பல சந்தர்ப்பங்களில் தவறு செய்திருக்கிறோம் என்ற உண்மை அவரவர் மனதிற்கு நன்றாகத் தெரியும்.
* பலவிதமான தீங்குகளில் தள்ளிவிடும் மோசமான எதிரி கோபம். அது நம்மை அண்டாதபடி விழிப்புடன் இருப்பது அவசியம்.
* கோபம் எதிராளியை மாற்றுவதில்லை. மாறாக இருவருக்கும் இடையே வெறுப்பை உண்டாக்கி பகையை வளர்ப்பது தான் அதன் பலன்.



"ஒளியைத் தேடிய ஒலி" - Isaignani Ilayaraja's experience ..

http://www.youtube.com/watch?v=sWEE-gVSdwc

thanjavooran
Posts: 2993
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share from my friend
மெய்சிலிர்க்கும் பெரியவாளின் அனுக்கிரகம்.!
இரண்டு கண் தெரியாத ஒரு பெண்மணிக்கு

[இந்த சம்பவத்தைப் படிக்கும் போது ஒரு
திகில் கதையைப் படித்த உணர்வு-வரகூரான்]

எஸ்.கணேச சர்மா எழுதியது.

தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

பெரியவா திருவிசநல்லூர் என்ற இடத்தில் இருந்தபோது
இரண்டு கண்ணும் தெரியாத ஸ்ரீவித்யா உபாசகி ஒருவர்
வந்தார். அது தெரிந்த பெரியவா தன்னிடம் கைங்கரியம்
செய்து வந்த கண்ணனை அழைத்து, அவருக்கு தங்க இடம்
முதலிய ஏற்பாடுகளைச் செய்யும்படிச் சொன்னார். மேலும்
அவர் மிகுந்த ஆசாரமுடையவர். ஆதலால்,"நீயே ஒரு
பலகாரம் செய்து கொடுத்துவிடு" என்றும் கூறினார்.

"நானாகவே அவர் இருக்குமிடம் சென்று தரிசனம்
தருகிறேன்.கண்தெரியாமல் அவர் என்னைத் தேடி
வர வேண்டாம்"என்றும் தெரிவிக்கச் சொன்னார்.
கண்ணன் அவ்வாறே செய்தார். சிறிது உப்புமாவைக் கிண்டி
அவளெதிரே வைத்து "சாப்பிடுங்கள்..." என்று உபசரித்த
கண்ணனுக்கு அதிசயம் ஒன்று காத்திருந்தது.

அதை நைவேத்தியம் செய்வது போல் சுற்றிவிட்டு
அந்த அம்மாள் தன் மார்பிலே கையை வைத்தார்.
உடனே அவள் கையில் ஒரு ஸ்ரீசக்கரம் வந்துசேர்ந்தது.
மறுபடியும் ஏதோ செய்தார். அது மறைந்துவிட்டது.
அதைப் பார்த்த கண்ணன், பெரியவாளை அவர்
தரிசனம் செய்யும்போது தானும் கூட இருப்பதென்று
முடிவு செய்தார்.

"இவர் என்ன மாய மந்திரங்கள் செய்யப் போகிறாரோ!
இவருக்கு சுவாமிகளிடமிருந்து என்ன கிடைக்கப்
போகிறதோ?" என்ற கேள்விக்குறிகளால் ஆவலுடன்
காத்திருந்தார். பெரியவாளிடம் போய் அவர் தரிசனத்துக்குக்
காத்துக் கொண்டிருப்பதாகச் சொல்லி, தான் எதிர்பார்க்கும்
சந்தர்ப்பம் சீக்கிரம் வராதா என்று ஏங்கினார்.

"ராத்திரி வரேன்னு சொல்லிவிடு" என்று அவரைப் பெரியவா
அனுப்பப் பார்த்தார். கண்ணனுக்கு ஒவ்வொரு விநாடியும்
யுகமாகக் கழிந்தது.எதிர்பார்த்திருந்த நேரமும் வந்தது.
இரவு. எலெக்ட்ரிக் விளக்குகள் இல்லாத காலம்.அங்கொன்றும்
இங்கொன்றும் முணுக்முணுக் என்று எரியும் கைவிளக்குகள்
ஒளியில் பெரியவா நடந்து வந்து அந்த அம்மாவின் எதிரில்
அமருகிறார்.

"நான் வந்துவிட்டேன்!" என்று குரல் கொடுக்கிறார்.அவளும்
நமஸ்கரித்து விட்டு உட்காருகிறாள். "எதற்கு வந்திருக்கிறாய்?"
என்று வினவுகிறார் எல்லாம் தெரிந்த சுவாமிகள்.
"உங்களுக்குத் தெரியாதா சுவாமி! எனக்கு இன்னும்
சஹஸ்ரகாரத்தில் ஜோதி தரிசனம் கிடைக்கவில்லையே!
எனக்கு அதுதான் வேணும்.அதற்காகத்தான் வந்தேன்!"என்கிறாள்.

"என்ன நடக்கப் போகிறதோ?" என்று கண்ணன் ஆவலுடன்
காத்திருக்க...பரமாச்சார்யாளோ, நிதானமாக,
"அப்படியா! நீ சிறுது நேரம் தியானம் பண்ணு!" என்றார்.

கண்ணனிடம், "நான் ஜாடை காட்டுவேன்.அப்போது எல்லா
விளக்குகளையும் அணைத்துவிடு" என்று கட்டளை இடுகிறார்.
காலை முதல் அந்த நொடிக்குக் காத்திருந்த கண்ணனுக்குப்
பெருத்த ஏமாற்றம்.கும்மிருட்டில் நடப்பது ஒன்றுமே தெரியாதே..
என்ன செய்வது? என்று ஏதுவுமே செய்ய முடியாதே!

பெரியவா சொன்னவுடன் விளக்குகள் அணைக்கப்பட்டன.
அடுத்த இரண்டாவது நிமிடம் அம்மையாரிடமிருந்து
பெரிய கூக்குரல் எழுந்தது.

"நான் ஜோதி தரிசனம் கண்டேன்;கன்டேன்!" என்று கூத்தாடினார்.
"போதும்!போதும்!காமாட்சி!நிறுத்திவிடு!நிறுத்திவிடு!"
என்று அலறினாள்.உடனே பெரியவா விளக்கையெல்லாம்
ஏத்தச் சொல்லிவிட்டு விடுவிடுவென்று நடந்து மறைந்துவிட்டார்.
போவதற்கு முன் கண்ணனிடம், "அந்த அம்மாவை ஊருக்கு
அனுப்பி விடு!" என்று சொன்னார்.

அந்த அம்மாள் கிளம்புமுன், கண்ணன் அவரிடம், "என்ன நடந்தது?
ஏன் கத்தினீர்கள்? நீன்ங்களாவது சொல்லி விட்டுப்போவீர்களா!"
என்று கெஞ்சினார்.அவரும், "நான் கேட்ட ஜோதி தரிசனம்
சஹஸ்ராரத்தில் கிடைத்துவிட்டது. அதை இரண்டு நிமிடத்துக்கு
மேல் என்னால் பார்க்க முடியாததால் நிறுத்தச் சொல்லி
அலறினேன்!" என்றார்.

எப்பேர்ப்பட்ட சக்தி வாய்ந்தவராக இருந்தால் இத்தனை எளிதில்
ஒருவருக்கு ஜோதி தரிசனம் காணும்படிச் செய்ய முடியும்?
பெரியவா இறைவன்தான் என்று நினைத்தால் மட்டுமே புரியும்!
தவிர, மனிதர்களால் இப்படி ஒரு சாதனையைச் செய்ய முடியாது.
எத்தனை பாடுபட்டாலும் பெற முடியாத ஒரு தரிசனத்தை,
ஒரு ரயிலில் வந்து பார்த்துவிட்டு, அடுத்த ரயிலில் ஊருக்குப்
புறப்படுகிறார் ஒரு பெண். அந்த அதிசயத்துக்கு வேறு எப்படி
விளக்கம் தர முடியும்.?.

அவரது அனுக்கிரகத்தால் உயர்ந்த ஒன்றக் கேட்டுப் பெறுபவர்களே
பாக்கியசாலிகள்.அந்த அம்மா பேறு பெற்றவள்.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Western Science will accept it only if it can be proved in a LAB..

It is enough if people who have faith accepts it..

Image

ஐயன் வரும் நேரமிது..
குயில்களே கூவி கூவி அழையுங்கள்!
மயில்களே சதிராடி பரவசமடையுங்கள்!
கருநிற முகில்களே திரண்டு வாருங்கள்!
ஐயன் வரும் நேரமிது..

நதிகளே உருண்டு வாருங்கள்!
கடல் அலைகளே யெம்பி யெம்பி நோக்குங்கள்!
இளம் தென்றலே பாத கமலத்தை வருடி செல்லுங்கள்
பசும் கொடிகளே தென்றலில் ஆனந்த நடனமாடுங்கள்
ஐயன் வரும் நேரமிது!

அதோ தொலைவில் தெரியுது ஒரு தோற்றம்!
வேங்கடவன் என்னை மகிழ்விக்கும் தோற்றம்!
இடையில் காவியும் கையில் தண்டமும் குவளையும் ஏந்தி
ஈரடியை ஓரடியாய் வைத்து நலிந்தவர்
இன்னலை தீர்க்க ஓடி வரும் தோற்றம்!
அதுவே அண்ணலின் அற்புத தோற்றம்!
venkat k

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

SAGE OF KANCHI---1894 TO 1994..

DEVOTION THROUGH MUSIC..

Read at :

http://anuradhamahesh.files.wordpress.c ... _urthy.pdf

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kanchi Maha Periyava

Post by cmlover »

Has anybody composed Maha PeriyavA sahasranAmam?

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதீச்வர ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி அஷ்டோத்தரசத நாமாவளி:

http://mahaperiyavaa.wordpress.com/2013 ... shtotrams/

Trishathi....

Part I: listen it here http://www.mixcloud.com/mahesh/mahaperi ... ource_link

Part II: http://www.mixcloud.com/mahesh/mahaperi ... ource_link

Rendered by Chinmaya Sisters...(Smt Uma & Radhika)

Trishathi Compiled by:: Sri Brahmendra Saraswathi Swamigal
Released by:: http://mahaperiyavaa.wordpress.com

Download link: http://maharudram.net/Audio/Mahaperiyava_Trishathi.pdf

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kanchi Maha Periyava

Post by cmlover »

Many many thanks.
It is a very beautifully rendered musically in sparkling ragas.
Also the akSharamAlika is very well composed.
Thanks for sharing...

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

பால லீலை 9
நம்முடைய "கிணி"க்கு அப்போது சுமார் மூன்று வயது இருக்கும். நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் ஏதோ சப்தம்! என்னவென்று புரியவில்லை! வீட்டுப் பெரியவர்கள் முழித்துக் கொண்டு விளக்கை சற்று பெரிசு பண்ணிக் கொண்டு, ஆளுக்கொரு விளக்கோடு என்னமோ ஏதோவென்று இங்கேயும் அங்கேயும் போனார்கள்.
அப்போதெல்லாம் எல்லா வீடுகளிலும் வாசல், ரேழி, கூடம், பின்கட்டு, அப்புறம் ரொம்பத் தள்ளி பாத்ரூம் இருக்கும். ஆனால் சப்தம் என்னவோ பின்கட்டுக்குள் சாமான்கள் போட்டு வைக்கும் அறைக்குள்ளிருந்து அல்லவோ வருகிறது. 'கொட கொட' வென்று ஏதோ பாத்திரத்தை உருட்டும் சப்தம்! ஆனால் யாரோ மனிதர்கள் நடமாடுவது போல் சப்தம் இல்லை. இங்கே விளக்கின் வெளிச்சமும், காலடி, பேச்சு சப்தமும் கேட்டு, அக்ரஹாரத்தில் எல்லாருமே ஏறக்குறைய முழித்துக் கொண்டு 'கிணி 'யின் வீட்டுக்குள் இருந்தனர்.
இரவு பூரா ஒரே அறைக்குள் பாத்திரத்தை உருட்டி லூட்டி அடிக்கும் நவீனத் திருடனைப் பிடிக்கவும், பார்க்கவும் கூட்டம் கூடியது. கிணியும் அம்மாவின் புடவைத் தலைப்பைப் பிடித்துக் கொண்டு, எதுவும் புரியாமல்!![அதுக்கா புரியாது?] நின்று கொண்டிருந்தது.
கையில் கோலுடன் ரெண்டு மூன்று பேர் ஸாமான் இருக்கும் அறையைத் திறந்து கொண்டு உள்ளே விளக்கோடு நுழைந்து பார்த்தால், மஹா கண்ணராவியான, பரிதாபமான காட்சி!
எறும்பு வராமல் இருக்க, மேலே உறியின் மேல் ஒரு தோண்டிக்குள் வெல்லத்தை வைத்திருகிறார்கள். ஏதோ பொந்து வழியாக அந்த அறைக்குள் நுழைந்த ஒரு மரநாய், வெல்லத்தை மோப்பம் பிடித்து எப்படியோ உறியை எட்டி, அந்தத் தோண்டிக்குள் தலையை விட்டு வெல்லத்தை ருசி பார்த்திருக்கிறது. பாவம்! அதன் தலை அதற்குள் மாட்டிக் கொண்டதால் வெளியே எடுக்க முடியாமல் தோண்டியோடு கீழே விழுந்து, அங்குமிங்கும் பயந்து ஓடி, தலையை வெளியில் எடுக்க ப்ரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தது.
உள்ளே நுழைந்த வீட்டார்க்கு, மரநாயின் தலையை எப்படி வெளியே எடுத்து விடுவது? என்பது ஒரே ப்ரச்சனை! யாராவது மரநாயை உடல்பக்கம் பிடித்துக் கொண்டால், இன்னொருத்தர் தோண்டியை இழுத்தால், விடுவித்துவிடலாம். எடுத்ததும் கடித்துவிட்டால்?
கிணிக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரேயடியாகப் புரியாமலும் இல்லை. மஹா தீக்ஷண்யமான புத்தி !நள்ளிரவிலிருந்து தூங்காமல் இருந்தாலும், கொட்டக் கொட்ட முழித்துக் கொண்டு இருக்கிறது. பின்னாளில் "குடாகேசனாக" பக்தர்களுக்காக இரவு பகல் தூங்காமல் எத்தனை நடை, எத்தனை அனுக்ரஹம், எத்தனை அனுஷ்டானம்!!!
மனது மட்டும் 'வெதுக்கு வெதுக்கு' என்று அடித்துக் கொள்கிறது. உள்ளுக்குள் ஏதோ ஒன்று இறுக்கிப் பிடித்து அழுத்தமாக நெறிக்கிறது. அப்போதே அத்வைதானுபவம்!! ஆம். "மரநாய்க்கும் தோண்டிக்குள்ளே மட்டிண்டா, இப்டித்தானே இறுக்கமா இருக்கும்?" என்ற கவலை. அப்போதிலிருந்தே சகல ஜீவராசிகளுக்காகவும் கவலைப் பட ஆரம்பித்துவிட்டது கிணி.
"இப்போ எடுக்கவே வராத தலையை, அப்போ மட்டும் எப்டி இவ்ளோவ் ஆழமா விட்டுது?" தனக்குத்தானே கேட்டுக் கொண்டது. உள்ளிருந்து பதிலும் வந்தது....
"வெல்லத்து மேல இருந்த ஆசைனாலதான்!"
அதுக்காக சித்திரவதைப்பட்டு, உயிரைக் கூட பணயம் வெச்சிடுத்து! இதுக்கெல்லாம் மூலக் காரணம், சபலம்! ஆசை!பேராசை! இந்த மரநாயின் சபலத்துக்காக, அதுவும் கஷ்டப்பட்டுக்கொண்டு, இரவு நேரத்தில் அக்ரஹாரத்தில் அத்தனைபேருடைய தூக்கத்தையும் கெடுத்திருக்கிறது.
ஒருவழியாக மரநாயிடம் கடிபடாமல், அதன் தலையை விடுவிக்க உபாயம் செய்தார்கள். அதை ஒரு தூணோடு சேர்த்துக் கட்டிவிட்டு, அந்தத் தோண்டியை ஒரு கயிற்றால் கட்டி, tug of war மாதிரி, இழுக்கவும், அப்பாடா! பட்டென்று தோண்டி தனியே வெளியே வந்து, மரநாய் நன்றாக மூச்சுவிட முடிந்தது! அதை மெல்ல கயிற்றோடு எங்கோ தொலைவுக்குக் கொண்டு சென்று, அவிழ்த்துவிட்டார்கள். தப்பித்தேன்!பிழைத்தேன்! என்று ஓடியது. மீண்டும் வராமலா இருக்கும்? ஆசை என்ன அவ்வளவு சுலபமாக போய்விடுமா?
கொஞ்சநேரம் அதைப் பற்றியே பேச்சாக இருந்தது, அப்புறம் அவரவர் படுக்கப் போய்விட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை, இது ஒரு ஸாதாரண நிகழ்வு! மீண்டும் அந்த மரநாய் இங்கேயோ, வேறு எங்கேயோ மாட்டிக் கொண்டால், அதை விடுவிக்க அவர்களுக்கு இப்போது ஒரு உபாயம் தெரிந்திருக்கிறது. அவ்வளவுதான். மரநாயும் நாமும் ஒன்றுதான்! எத்தனை அடிபட்டாலும், புத்தி வராமல், பாடம் கற்றுக்கொள்ளாமல் மீண்டும் மீண்டும் மாட்டிக் கொண்டு அவஸ்தைப்பட மட்டுந்தான் தெரியும்.
ஆனால் கிணி? சூடான மெழுகில் விழுந்த பூச்சி, அதற்குள் மூழ்கிவிடுவது போல், இந்த நிகழ்ச்சி அதன் மனஸில் ஆழமாகப் பதிந்தது. மரநாய், வெல்லம், தோண்டி எல்லாம் மறந்து விடலாம். ஆனால், அந்த நாய் ஓடிய ஓட்டம், மூச்சுவிடமுடியாமல் பட்ட அவஸ்தை இதை கிணியால் மறக்க முடியவில்லை.
பின்னாளில் கிணி ஆச்சார்யபீடத்தில் அமர்ந்தத போது, மரநாய் நிகழ்ச்சியின் ஆழத்தை, பாடத்தை பால ஸன்யாஸி வெகு அழகாக கற்றுக் கொண்டு அப்யஸிக்கவும் செய்தார். சபலம், ஆசை, பேராசை, பந்தம், பாசம், புலம்பல் எதுவுமே தம்மைச் சூழாதபடி காத்துக் கொள்ள ஹேதுவாக இருந்தது. மாறாக, இந்த விஷயங்களில் தன்னைப் பாறாங்கல் மாதிரி ஆக்கிக் கொண்டார்

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

காஞ்சி மஹாசுவாமிகள் மேல் கவிஞர் கண்ணதாசன் பாடிய கவிதை:

பார்த்த மாத்திரத்தில் பாவத்தை அலம்புகின்ற
தீர்த்தப் பெருக்கு திருவாசகத்தின் உட்கருத்து
கூர்த்த மதியால் மெய்ஞானக் கருத்துணர்த்தும் முழுமூர்த்தம்
கலிமொய்க்கும் இவ்வுலகைக் காக்கவந்த கண்கண்ட தெய்வம்

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

These postings do not fit in here..

Agreed
Moved them to short stories thread
[moderator]

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Image
டாக்டர், பத்மபூஷன் வை கணபதி ஸ்தபதி

சிறு வயதில் காஞ்சிப் பெரியவரை நான் சந்தித்தது மறக்க முடியாத அனுபவம். 1957ல் எனது தந்தையார் சிற்பக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி வந்தார். அப்போது திடீரென்று வாத நோய் அவருக்கு ஏற்பட்டது. இதை நான் எனது வளர்ப்புத் தந்தை கம்பனடிப்பொடி சா. கணேசன் அவர்களிடம் கூறியபோது அவர் காஞ்சி மகா பெரியவரைப் போய்ப் பார்க்கச் சொன்னார்.


அப்போது சுவாமிகள் இளையாற்றங்குடியில் தங்கியிருந்தார். அது ஒரு குக்கிராமம். நான் போகும்போதே மணி இரவு ஒன்பதாகி இருந்தது. சுவாமிகள் தங்கியிருக்கும் இடத்திற்குச் சென்று, மேனேஜர் மூலம் தகவல் தெரிவித்தேன். உடனடியாக என்னை அழைத்து வரச் சொன்னார்கள்.சுவாமிகளைச் சுற்றி நிறைய பக்தர்கள் கூட்டம் இருந்தது. அனைவரையும் விலக்கி என்னை அழைத்தார்கள். சுவாமிகளிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, என் தந்தையின் நிலையைப் பற்றிச் சொன்னேன். அவருக்கு குணமாகுமா, ஆகாதா, பலப்பல கோயில்களைக் கட்டிய இவருக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது என்றெல்லாம் சுவாமிகளிடம் கேட்டேன். சுவாமிகளோ அதற்கு பதில் ஏதும் கூறாமல், என்னைப் பற்றி, என் கல்வி பற்றி, நான் பார்க்கும் வேலை பற்றியே விசாரித்துக் கொண்டிருந்தார். எனக்கு மிகவும் கவலையாகி விட்டது. தந்தையைப் பற்றி இவர் எதுவுமே கூறவில்லையே அவருக்கு ஏதேனும் ஆகிவிடுமோ, உயிர் பிழைக்க மாட்டாரோ என்றெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் சுவாமிகளோ திடீரென்று ‘வா என்னுடன்’ என்று கூறி விட்டு நடக்கத் தொடங்கினார்.

வெகு தூரம் நடந்து மூத்த சுவாமிகளின் அதிஷ்டானம் அருகே சென்றவர், ‘இங்கேயே இரு’ என்று கூறிவிட்டு உள்ளே சென்று விட்டார். நான் வெகு நேரம் காத்துக் கொண்டிருந்தேன். மணி 12ஐக் கடந்து விட்டது. கூட்டம் கலைந்து சென்று விட்டது. நான் மட்டும் தனியே, வெளியில் காத்துக் கொண்டிருந்தேன். வெகு நேரம் சென்றிருக்கும், ‘எங்கே அந்தப் பையன்?’ என்று கேட்டுக் கொண்டே அதிஷ்டானத்தில் இருந்து வெளியில் வந்தார் சுவாமிகள். ‘இங்கே இருக்கிறேன் சுவாமி’ என்றேன் நான். சுவாமிகள் உள்ளே செல்லும் போது பாரம்பரிய தண்டத்தோடு மட்டுமே சென்றார். வரும்போது அவர் கையில் இரண்டு தேங்காய் மூடிகள் இருந்தன. வியப்புடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். பிரகாரத்தின் ஒரு மூலையில் நின்று, தண்டத்தைப் பிடித்துக் கொண்ட சுவாமிகள், என் தந்தையின் நிலையைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். நான் சொல்லச் சொல்லக் கேட்டுக் கொண்டவர், ‘உன் அப்பாவுக்கு வந்திருப்பது பிராரப்த கர்மாவால். நீ மிகவும் அமோகமாக இருப்பாய்’ என்று சொல்லி ஆசிர்வதித்தார். இரு தேங்காய் மூடிகளையும் என்னிடம் கொடுத்து, ‘இந்த வழியாகப் போ. போகும் போது ஆஃபிஸில் போய் மேனேஜரைப் பார்த்து விட்டுப் போ’ என்றார்.

அதுவோ பயங்கரமான இருள் பிரதேசம். சுவாமிகள் சொன்ன வழியில் எப்படிச் செல்வது என்று புரியாமல் திகைத்துப்போய் நின்று கொண்டிருந்த போது, ஒரு சிறுவன், சுமார் எட்டு வயதிருக்கும். குடுமி வைத்துக் கொண்டு முன்னால் வந்தான். முகத்தில் தெய்வீகக் களை. ‘ஸ்தபதி, இந்த வழியாக என் பின்னாலேயே வாருங்கள்!’ என்று சொல்லி நடக்கத் தொடங்கினான். எனக்கு மிகவும் ஆச்சரியம். யார் இவன், எங்கிருந்து வந்தான் என்று. ஏதாவது பேய், பிசாசாக இருக்குமோ என்று சற்று பயமாகக் கூட இருந்தது. மயானக் கரை வேறு அருகில் இருந்தது. ஆனாலும் அவன் பின்னாலேயே நடக்கத் தொடங்கினேன். அவன் உருவத்தைப் பார்க்கும்போது கோபுலு வரைந்த ஆதி சங்கரர் ஓவியம் நினைவுக்கு வந்தது. அந்த உருவமே நேரில் வந்திருப்பது போலத் தோன்றியது. சில நிமிடங்களில் மேனேஜர் இருப்பிடத்தை அடைந்ததும், அவரிடம் அந்தச் சிறுவன் ஏதோ கூறிவிட்டு இருட்டில் சென்று மறைந்து விட்டான்.


பின்னர் மேனேஜர் என்னிடம் ஒரு ரசீதில் கையொப்பமிட்டு ஐம்பது ரூபாயைப் பெற்றுக் கொள்ளும்படிச் சொன்னார். நான் மறுத்தேன். ‘இது சுவாமிகளின் உத்தரவு. அவசியம் வாங்கிக் கொள்ள வேண்டும்’ என்றார். நானும் மறுக்க மனமின்றி அதை வாங்கிக் கொண்டேன். அதன்பின் என்னை உள்ளே சென்று உணவருந்திவிட்டுச் செல்லுமாறு கூறினார். அப்போதோ நேரம் இரவு 1 மணிக்கு மேல் இருக்கும். நானும் நல்ல பசியில் இருந்தேன். உள்ளே சென்றால் சாதம், சாம்பார், ரசம் என எல்லாம் சுடச்சுட இருந்தது. சாப்பிட்டுவிட்டு, அகால வேளை என்பதால் அங்கேயே இரவு தங்கி விட்டுப் புறப்பட்டேன். பிற்காலத்தில் காஞ்சிபுரத்தில் சுவாமிகளிடம் இதைத் தெரிவித்த போது, ‘எங்களுக்கெல்லாம் கிடைக்காத பாக்கியம் உனக்குக் கிடைத்திருக்கிறது. நாங்கள் எல்லாம் சங்கரரைப் பற்றிப் படித்துத் தான் இருக்கிறோம். ஆனால் உனக்கு அவரைப் பார்க்கும் பாக்யமே கிடைத்திருக்கிறது’ என்று கூறி சிலாகித்தார்.

‘காமகோடி’ என்ற இதழில் இது குறித்து எழுதியிருக்கிறார்கள். இது என்னால் மறக்க முடியாத ஒரு அனுபவம்

- பத்மபூஷன் டாக்டர் வை. கணபதி ஸ்தபதி

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

ஜகத்குரு அருளிய அதிசய மந்திரம்!

[ரா.கணபதி]

ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக எனக்குள் ஒரு கேள்வி: ஒன்றேயான கடவுளின் பல வடிவங்களான பல தேவதைகளுக்குத்தான் மூல மந்திரங்கள் உள்ளனவே தவிர, மூலமான ஒரே கடவுளுக்கென அந்த மந்திரமும் இல்லாதிருப்பது ஏன் என்பதே கேள்வி.
ப்ரணவம் எனும் ‘ஓம்’ மூலக்கடவுளுக்கே உரித்தான மந்திரந்தான் ஆயினும் வேறு பல மகான்களின் கருத்துக்கு மாறாக, சாஸ்திரக் கருத்தையே மட்டுமே ப்ரணவ ஜபம் செய்யலாம், ஏனையோர் முதலில் ‘ஓம்’ என்று கூறி அதோடு குறிப்பிட்டதொரு தேவதைக்கான மந்திரத்தைச் சொல்லலாமே தவிர, தனியாக ப்ரணவ ஜபம் செய்யலாகாது என்று கூறி வந்துள்ளார்.
ப்ரணவம் எனும் ஓம்காரம் நமக்குள் தன்னியல்பாகவே இதயத்தை ஒட்டிய அநாஹத சக்கரத்திலிருந்து எழும் ஒலி; எனவே சிலருக்குத் தன்னியல்பாகவே ‘ஓம்’ என்பது ஒலிக்கும். அவர்கள் மட்டுமே துறவியாய் இல்லாவிடினும் ப்ரணவ ஜபம் செய்யலாம் என்பது ஸ்ரீ பெரியவாளின் கருத்து.
இவ்விஷயமாக ஸ்ரீ பெரியவாளையே கேட்டுத் தெளிவு பெறவேண்டும் என்ற எண்ணத்துடன் முப்பத்தேழு ஆண்டுகளுக்கு முன்பு, அப்பொழுது அவர்கள் முகாமிட்டிருந்த தேனம்பாக்கத்துக்குச் சென்றேன். நேரம்: மாலை ஐந்து மணி.
முகாமில் இருந்த கிணற்றின் ஒரு புறத்தில் இருந்த குடிலை ஒட்டிய பகுதியிலிருந்து ஸ்ரீபெரியவாள் தரிசனம் தருவார்கள்; கிணற்றின் மறுபுறத்திலி ருந்து மக்கள் தரிசனம் பெறுவார்கள்.

அன்றும் அப்படியே நடந்தது. நாங்கள் 40-50 பேர் இருந்தோம். வழக்கம் போல் அதில் பல்வேறு வயதினரும், பல்வேறு சமூகத்தினரும் இருந்தோம். ஓரிரு வெளிநாட்டவரும் இருந்தனர்.
தரிசனத்தின்போது ஓர் ஐயங்கார் மாது, நேற்றிரவு பெரியவாள் சொப்பனத்தில் வந்து ஏதோ ஒரு மந்திரம் உபதேசித்தீர்கள்; ஆனால் என் துரதிர்ஷ்டம். இன்று காலை அந்த மந்திரம் மறந்து போய்விட்டது! பெரியவாள் அவசியம் அந்த மந்திரத்தை மறுபடி உபதேசிக்க வேணும். எப்பொழுது மடியாக வந்து அந்தரங்கமாக உபதேசம் பெறலாம்?” என மிகவும் ஆதுரத்துடன் வினவினார்.

அப்பொழுது சாஸ்திரக் காவலரான ஸ்ரீ பெரியவாளா பேசுகிறார் என்று பேராச்சர்யம் அடையுமாறு அவர்கள் கூறிய மறுமொழி: மடியும் வேண்டாம்; அந்தரங்கமும் வேண்டாம்; பகிரங்கமாக எல்லோருக்குமாகச் (அம்மந்திரத்தை) சொல்கிறேன்.” – இப்படிச் சொல்லி கணீரென்ற தெய்வத்தின் குரலில், அம்பகவ”: அம் பகவ”: அம் பகவ”: என மும்முறை உபதேசித்தார்கள்.

இப்படியும் மந்திரமூர்த்தியே ஆகிய ஸ்ரீமஹாபெரியவாளிடமிருந்து கேளாமலே உபதேசமா என்ற பேருவகையுடன் அங்கு கூடியிருந்த எல்லோரும் ‘அம் பகவ’:மந்திரோபதேசம் பெற்றோம்.
ஆச்சர்ய உணர்வைத் தொடரும் விதத்தில் அவர்கள் ‘இதை ஜபிக்க எந்த நியமமும் (விதிமுறையும்) இல்லை. எவரும், எந்த நேரமும் ஜபிக்கலாம்’ என்றும் கூறினார்கள்.

மந்திரத்தின் உச்சரிப்பு: UMBHAGAVAHA (UMBRELLA என்பதிலுள்ள UM ஒலி) ‘பகவ’ என்பதன் முடிவான ‘வ’: என்பதை ‘வஹ’ என்று கூறவேண்டும். ஒலியியலின்படி ‘வ’ என்பதற்கும் ‘வஹ’ என்பதற்குமிடையே சிறு மாறுபாடு உண்டு. ஆனால் நாம் அதைக் கருத்தில் கொள்ள வேண்டியதில்லை. அன்று ஸ்ரீ பெரியவாளும் ‘வஹு’ என்றே ஸ்பஷ்டமாக மொழிந்தார்கள்.
ஆகக்கூடி எந்த மந்திர சாஸ்திர நூலிலும் காணப்படாத ‘அம் பகவ’: என்ற மகா மந்திரம் ஸ்ரீ பெரியவாளின் வாய்மொழியில் நமக்கெல்லாம் ஓர் அமுதச்சுனையாகக் கிடைத்துவிட்டது!

‘பகவ’: என்பதற்கு ‘பகவானே!’ என்று பொருள். ‘அம்’ என்பது ஒரு மங்கல அக்ஷரம்.
நெடுங்காலமாக எனக்குள் இருந்த கேள்விக்கான பதிலும் கிடைத்துவிட்டது! அனைத்து தெய்வங்களுமான மூலக் கடவுளுக்குரிய மந்திரம் ‘அம் பகவ!’எந்த தெய்வத்தை இஷ்டமூர்த்தியாகக் கொண்டவரும் இம் மந்திரத்தை அம்மூர்த்திக்குரியதாகக் கருதி ஜபிக்கலாம் என்றும், ‘பகவ;’ என்பது ஆண்பாலில் இருந்தாலும் பெண் தெய்வங்களை ஸ்மரித்தும் இதனை ஜபிக்கலாம் என்றுபெரியவரிடமிருந்து விளக்கம் பெற்றோம்.

ஸ்ரீபெரியவாள் தமது நீண்ட நெடிய நூறாண்டு வாழ்வில் அன்று ஒரே ஒருநாள்தான் இப்படியொரு மந்திரத்தை – அதுவும் பஹிரங்கமாக மொழிந்திருக்கிறார்கள் என்பது இன்னொரு பேராச்சர்யம்!
எல்லோருக்குமான இத் தங்கப் புதையலை 36 ஆண்டுகள் நான் எனக்குள் மட்டுமே வைத்திருக்கிறேன்! சென்ற ஆண்டிலிருந்துதான் எனக்குத் தெரிந்த மற்ற பலருக்கும் இதனைக் கூறி வருகிறேன். அவர்களில் ஸ்ரீ மகா பெரியவர்களையே இஷ்டதேவதையாகக் கொண்ட சிலர் இம்மந்திர ஜபத்தால் தங்களுக்கு விசேஷ மான பலன் கிடைப்பதாக உவகையுடன் கூறுகிறார்கள்.

[நன்றி – கல்கி]

thanjavooran
Posts: 2993
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share from my friend
பாரீசில் பாங்க் டைரக்டராக இருந்த வெள்ளைக்காரர் ஒருவர் யார் மூலமாகவோ பெரியவாளைப் பற்றி கேள்விப்பட்டதிலிருந்து பெரியவாளை தரிசனம் பண்ண தீவிரமாக ஆசைப்பட்டார். சென்னையில் இருந்த டாக்டர் ராகவனுக்கு அடிக்கடி போன் பண்ணி தன் ஆவலை வெளிப்படுத்துவார். ஒருநாள் "நான் பம்பாயில் இருக்கிறேன். மதராஸ் வந்து உங்களை சந்திக்கிறேன். பெரியவரை தரிசனம் பண்ணியே ஆகவேண்டும். ஏற்பாடு பண்ணுங்கள்" என்று தகவல் வந்தது. பெரியவா மைலாப்பூர் சம்ஸ்க்ருத கல்லூரியில் முகாம். இரவு பூஜை முடிந்ததும் " வெள்ளைக்காரனுக்கு கீழ உக்கார முடியாது. ஒரு நாற்காலி போடு. உபன்யாசம் முடிஞ்சதும் வந்து பாக்கறேன்" என்றார். எல்லாம் முடிந்ததும் "யாராவது வந்தாளா?" என்றார். "இல்லை பெரியவா".

அப்போது வேஷ்டி துண்டுடன் ஒருத்தர் வந்து பெரியவாளுக்கு நாலு நமஸ்காரம் பண்ணினார் [சன்யாசிகளுக்கு எப்போதும் நாலு நமஸ்காரம் பண்ணுவதுதான் சம்ப்ரதாயம்]. அவருக்குப் பின்னால், டாக்டர் ராகவன்! ஆம். அந்த வெள்ளைக்காரர்தான் வேஷ்டியில் கச்சிதமாக வந்து நாலு நமஸ்காரம் பண்ணியது!

"நாலு நமஸ்காரம் பண்ணனும்னு எப்பிடி தெரிஞ்சதுன்னு கேளு!"

"எல்லாரும் பண்ணறதைப் பார்த்து பண்ணினேன்"

பக்கத்திலிருந்த பாணாம்பட்டு கண்ணனிடம் " அந்த வெள்ளைக்காரனை மட்டும் அழைச்சிண்டு உள்ளே வா"

"அவர் பேசற இங்க்லீஷ் எனக்கு புரியாது. வேணா..........டாக்டர் ராகவனை கூப்பிடட்டுமா?"

"எல்லாம் ஒனக்கு தெரிஞ்ச இங்க்லீஷ் போறும். வா"

அந்த பிரெஞ்சுக்காரர் சொன்னார் " நான் கொஞ்ச காலமா வேதாந்தம் படித்துக் கொண்டிருக்கிறேன். திடீரென்று ஒருநாள் என் உடல் முழுதும் மரத்து விட்டது போலவும், நான் உடலை விட்டு வெளியே இருப்பது போலவும், என் உருவம் ஆகாசத்துக்கும் பூமிக்குமாக இருப்பது போலவும் தெரிந்தது. என் உடல் முழுக்க அண்டங்கள் தொங்குவது போலவும் தெரிந்தது. அந்த சமயம் எனக்கு மிகவும் ஆனந்தமாக இருந்தது. துக்கக்கலப்பே இல்லாத ஆனந்தம்! இந்த சம்பவத்துக்கு அப்புறம் என் வாழ்க்கையில் எந்த நிகழ்ச்சியும் என் மனஸில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. என் மனைவி, மகன் இறந்தபோது கூட என் மனஸில் எந்தவித சலனமும் இல்லை. எப்போதும் ஆனந்தமாகவே இருக்கிறேன்.......

ஆபீசில் என்னுடைய இந்த வினோதமான மனநிலையை பார்ப்பவர்கள் என்னை பைத்தியம் என்கிறார்கள். அதனால், என்னை ஆஸ்பத்திரியில் கம்பி அறைக்குள் அடைத்துவிடுவார்களோ? என்ற பயம் மட்டும் உள்ளூர இருக்கிறது" என்றார்.

நடமாடும் தெய்வம் மெதுவாக பேச ஆரம்பித்தது............"உள்ளே..ன்னா என்ன? வெளியே...ன்னா என்ன? எல்லாமே நாலு சுவருக்குள்ளதானே? ஆபீசும் நாலு சுவருக்குள்ளதானே?"

இந்த கேள்வி அந்த வெள்ளைக்காரரின் மனஸில் பெரிய மாற்றத்தை உண்டுபண்ணியது. " தாங்கள் எப்போதும் என் கூடவே இருக்க வேண்டும்" என்று வேண்டினார். தனக்கு ஏதாவது உபதேசம் பண்ணவேண்டும் என்று கெஞ்சினார்.

"நீ இப்போ பண்ணிண்டு இருக்கற த்யானத்தையே விடாமப் பண்ணிண்டு வா! ஒன்னோட attainment [சித்தி] வரைக்கும் ஒங்கூடவே இருக்கேன்" [என்ன ஒரு பாதுகாப்பு!} என்று சொல்லிவிட்டு, தான் கட்டிக்கொண்டிருந்த காவி வஸ்த்ரத்திலிருந்து ஒரு மூலையை கிழித்து அவரிடம் கொடுத்தார் " இதை எப்பவும் ஒன் கூடவே வெச்சுக்கோ!" [என்ன ஒரு அனுக்கிரகம்!! யாருக்குக் கிடைக்கும் இப்பேர்ப்பட்ட பாக்கியம்?] . வெள்ளைக்காரரின் ஆனந்தம் பன்மடங்கு பெருகியது. நமஸ்காரம் பண்ணிவிட்டு வெளியே வந்து டாக்டர் ராகவனிடம் "உங்களால்தான் எனக்கு இவ்வளவு பெரிய பாக்கியம் " என்றார்.

பாணாம்பட்டு கண்ணனின் மனஸில் ஆயிரம் கேள்விகள்! மறுநாள் காலை ஒருமணிநேர ஜபம் ஆரம்பிக்கும் முன் கண்ணனைக் கூப்பிட்டு "ஒனக்கு நாயன்மார்கள் எத்தனைன்னு தெரியுமோ?" என்றார்.

"அறுபத்து மூவர். கபாலீஸ்வரர் கோவில்ல உத்சவம் கூட நடக்கறதே!"

"கபாலி கோவில்ல போய் எண்ணிண்டு வா". போய் எண்ணினால்......அறுபத்தேழு!

"ஜாஸ்தியா இருந்த நாலு பேர் யார்? யார்? சொல்லு பாப்போம்"

போய் விஜாரித்துக் கொண்டு வந்தார். "அதுல ஒருத்தர் அப்பாலும் அடி சார்ந்தாருக்கடியார்"

"அதேதான். 'அப்பால்'...ன்னா தேசத்தால, காலத்தால அப்பாற்பட்டவா......காலத்தாலன்னா, இனிமேலும் பொறக்கப் போற அடியார்களுக்கு..ன்னு அர்த்தம். நேத்திக்கி வந்த வெள்ளைக்காரன் தேசத்தால அப்பாற்பட்டவந்தான். இவனுக்கு இன்னும் நாலு ஜன்மாதான் பாக்கி" என்றார்.

thanjavooran
Posts: 2993
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share from my friend
From one of the Great talks of Kanchi Periyava – short, simple yet profound, lucid, humorous too.
நாம அத்வைதத்த எடுத்துட்டாலும், த்வைதமா இருந்தாலும், விசிஷ்டாத்வைதமா இருந்தாலும் ஒரு ஜீவனுக்கு இறுதி இலக்கு பரமாத்மா தான். இதுல 'செகண்ட் தாட்' டே கிடையாது. ஆனா என்ன ஒவ்வொரு மார்க்கமும், ஒரு ஜீவாத்மா எப்படி, எந்த சூழ்நிலைல, என்ன வழிமுறைல பரமாத்மாவை அடையும்கறதுல வேறுபடறது.
இங்கே இருக்கற நிறைய பேர் கணிதம் படிச்சிருப்பீங்க என்ற நம்பிக்கைல சொல்றேன். மத்வாசார்யாரின் த்வைத மார்க்கம் கொஞ்சம் ஸ்ட்ரிட். சங்கரரின் அத்வைத மார்கத்துல பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் உள்ள தொடர்பு ஒரு சதுரத்தின் பக்கத்துக்கும் அதன் சுற்றளவுக்கும் உள்ள தொடர்பு மாதிரி. அதாவது பக்கத்தை மிகச் சரியாக நாலு மடங்கு செய்தால் அதன் சுற்றளவு வந்து விடும். நான்கு என்பது ஒரு RATIONAL நம்பர். எந்த Ambiguityயும் கிடையாது.
ஆனால் த்வைத மார்க்கத்தில் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள தொடர்பு ஒரு வட்டத்தின் விட்டத்துக்கும் அதன் சுற்றளவுக்கும் உள்ள தொடர்பு போன்றது. விட்டத்தை பை (Pi)மடங்கு பண்ணா அதன் சுற்றளவு வரும். ஆனால் நீங்க படிச்சிருப்பீங்க பை என்ற நம்பர் ஒரு Irrational number என்று. அதாவது அதை இரண்டு முழு எண்களின் விகிதமாக எழுத முடியாது. இருபத்து இரண்டு bi ஏழு அப்படீங்கறது ஒரு approximation தான். பை (Pi) என்ற இந்த விகிதம் முடிவில்லாமல் அனந்தமாகப் போய்க்கொண்டே இருக்கும் என்று உங்களுக்குத் தெரியும். மூணு புள்ளி ஒண்ணு நாலு அப்படீன்னு எழுதி அதற்குப் பிறகு கோடி கோடி இலக்கங்கள் போட்டாலும் பை (Pi) என்ற எண் முடிவு பெறாது. எனவே வட்டத்தின் சுற்றளவை அதன் விட்டத்தைப் போல இத்தனை மடங்கு அப்படீன்னு சரியாக, உறுதியா சொல்லவே முடியாது. விட்டத்தின் எல்லை அதன் சுற்றளவு தான். சுற்றளவு என்பது ஒரு முழுமையான எண். வட்டத்தின் விட்டமும் ஒரு முழுமையான எண். ஆனால் இவை இரண்டின் விகிதம் ஒரு முற்றுப்பெறாத எண். விட்டம் தான் ஜீவாத்மா, சுற்றளவு தான் பரமாத்மா என்று எடுத்துக் கொண்டால் பரமாத்மா ஜீவாத்மாவின் இலக்கு என்றாலும் அது ஜீவனின் இத்தனையாவது படிநிலை என்று உறுதியாக சொல்ல முடியாது. விட்டத்தின் ஏதோ ஒரு முடிவிலி மடங்கில் சரியாக வட்டத்தின் சுற்றளவு வரலாம். ஆனால் எத்தனை துல்லியமாக கணக்குப் போட்டாலும் (Pi)பையை கோடி தசம ஸ்தானம் வரை எடுத்துக் கொண்டாலும் விட்டத்தின் மடங்குக்கும் சுற்றளவுக்கும் ஒரு சிறிய மைன்யூட் வேறுபாடு இருந்து கொண்டே தான் இருக்கும். அதே போல ஜீவனின் இலக்கு பரமாத்மா என்று சொன்னாலும் பரமாத்வை அடைய (பரமாத்மாவாக மாற) ஜீவாத்மா எண்ணிலாத, கணக்கற்ற படிகளை கடக்க வேண்டி இருக்கிறது. ஒரு ஜீவன் சாதனைகளை செய்து படிப்படியாக எவ்வளவு தான் முன்னேறினாலும் அது சுற்றளவை நெருங்கலாமே தவிர சுற்றளவாக மாற முடியாது. த்வைதம் ஸ்ரீமன் நாராயணனை சுற்றளவாக நிர்ணயம் செய்கிறது. உலகின் எண்ணிறைந்த ஜீவன்கள் தான் வட்டத்தின் எண்ணிறைந்த விட்டங்கள். விட்டம் சுற்றளவாக மாற எண்ணிறைந்த முடிவிலியான படிநிலைகளைக் கடக்க வேண்டும். இதை தான் அவர்கள் தாரதம்யம் என்று அழகாகச் சொல்கிறார்கள். அதாவது ஒரு ஜீவாத்மா பரமாத்மாவாக முழுவதும் மாறி விடுவதை , எப்படி கணிதம் விட்டம் சுற்றளவாக மாறி விடுவதை தடை செய்கிறதோ , அப்படி த்வைதத்தின் பஞ்சபேத தத்துவம் தடை செய்கிறது. விட்டம் சுற்றளவா மாறுது அப்படீன்னா பை (Pi) அப்படீங்கறது ஒரு Rational நம்பர் அப்படீன்னு ஆயிரும். கணிதத்தின் முக்கிய எண்ணான பையின் அழகே அது கணிக்க முடியாமல் irrational ஆக இருப்பது தான். எனவே ஜீவன் மற்றும் பரமாத்வாவின் உறவும் இப்படி நிச்சயமற்று Irrational ஆக இருக்கிறது என்கிறார் மத்வாச்சாரியார்.
ஒரு சுவாரஸ்யம் என்ன அப்படீன்னா ஐன்ஸ்டீனின் ஈர்ப்பு பற்றிய சமன்பாடுகளிலும் இந்த பை அப்படீங்கற நம்பர் வருது. அப்படீன்னா நம்மால் பிரபஞ்சத்தில் எதையும் இது இதன் இத்தனை மடங்கு அப்படீன்னு சொல்ல முடியாது. எதிலும் ஒரு நிச்சயமின்மை இருக்கவே செய்யும். இதை தான் மத்வாச்சாரியார் பஞ்சபேதம் , அதாவது சமமின்மை என்கிறார். ஒரு ஜடப்பொருளும் ஜீவாத்மாவும் பேதப்பட்டது, ஏன் ஒரு ஜீவன் இன்னொன்றில் இருந்து பேதப்பட்டது. ஒரு ஜீவன் பரமாத்மாவிடம் இருந்து பேதப்பட்டது. என்கிறார். சங்கரர் மாதிரி சி இஸ் ஈக்குவல் டு ஃபோர் ஏ (C= 4A) அப்படீன்னு சொல்லிட்டா, பரமாத்வா ஜீவனின் இத்தனையாவது படி அப்படீன்னு சொல்லிட்டா நாம பரமாத்மாவை வரையறை செய்து ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள்ள அடைச்சுட்ட மாதிரி இருக்கும். ஆனால் வேதாந்தம் பரமாத்மாவை நி-சீமா , எல்லையற்றவன், வரம்பு வரையறை அற்றவன் என்று சொல்கிறது.
எனவே மத்வாச்சாரியார் ரொம்ப சைன்டிபிக்-கா சி இஸ் ஈக்குவல் டு பை டி அப்படீங்கறார். ஒரு சுவாரஸ்யம் என்ன அப்படீன்னா திரிகோணமிதில சைன் (sine) மற்றும் காஸ் (cos) மதிப்புகளை கண்டுபிடிக்கும் 'டைலர்' சீரீஸை அப்பவே கண்டுபிடித்தவர் மத்வாசாரியார். அவர் ஒரு பெரிய கணிதவியல் மேதை கூட .அவர் எவ்வளவு அழகா தன் சித்தாந்தத்தை கணிதத்தில் இருந்து, கணிதத்தின் ஒரு அழகான எண்ணில் இருந்து எடுத்திருக்கார் என்பது அற்புதம்.
சரி இங்க விசிஷ்டாத்வைதம் ,அதாவது ஆண்டாள் போன்ற ஆழ்வார்களின் நெறி என்ன அப்படீன்னா, பரமாத்மா என்பது வட்டம் போல மாயத்தோற்றம் காட்டும் ஒரு சதுரம் என்பது. இந்த மார்க்கம் த்வைதம் மற்றும் அத்வைதம் இரண்டையும் ஓரளவு ஒத்துக்கொள்கிறது. அரிஸ்டாடிலின் கோல்டன் மீன் (Golden Mean) அப்படீன்னு சொல்வாங்களே அது மாதிரி .ஒரேயடியாக ஒரு ஜீவனிடம் நீ தான் பரமாத்மா அப்படீன்னு சொல்ல முடியாது. அவனுக்கு மிதப்பு வந்து விடும். அதே போல உன்னால் எத்தனை சாதனை செய்தாலும் பரமாத்மாவாக எப்போதும் மாற முடியாது என்று சொன்னால் அவன் மனமுடைந்து விரக்தியாகி விடுவான். எனவே நீ அஞ்ஞானத்தில் இருக்கும் வரை பரம்பொருள் உனக்கு ஒரு குழப்ப வட்டம். நீ ஞானம் பெற்றால் அது உனக்கு ஒரு தெளிந்த சதுரம் என்று சொல்கிறது இந்த நெறி. அதாவது வெளியே குப்பன், சுப்பன், கந்தன், கண்ணன் என்று பலபேர்களில் அழைக்கப்படுபவர்கள் பஸ்ஸில் ஏறியதும் கண்டக்டருக்கு 'டிக்கெட்' ஆக மாறி விடுவது போல.
பெரியாவாளுக்கு நிகர் பெரியவாள்தான்.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

1981 கல்கி வார இதழ் என் சீனுவாசன். கண் கண்ட தெய்வம்.

இராணுவத் துறையில் சிவில் அதிகாரியாகப் பணி செய்து வந்த எனக்குத் திடீரென்னு ஒர் அதிர்ச்சி காத்திருந்தது. என்னுடைய கண்களின் பார்வை துரிதமாகச் சீரழிந்து அடியோடு பார்வை போய்விட்டது. சென்னையில் உள்ள பெரிய கண் சிகிச்சை நிபுணர்கள் கைவிரித்து விட்டார்கள். ஏழு வருடங்கள் ஓடின. இரு கண்களும் இல்லாத குருடனாய் பெரிய குடும்ப பாரத்துடன் தத்தளித்து கொண்டிருந்தேன். கையிலிருந்த பணமும் நகை நட்டுக்களும் கரைந்தன. வேலையும் போய்விட்டது. சொல்லொணாத் துயர்களை அனுபவித்துக்கொண்டு பெரியவாளையே தியானம் செய்து கொண்டிருந்தேன் தருணத்தில் அய்தராபத்திலிருந்து நண்பர் திடீரென்னு வந்து மறுநாள் கா’ஞ்சிபுரத்துக்குச் அழைத்துச் சென்றார்.. பெரியவர் அவரது கனவில் என்னை உடனே காஞ்சிபுரத்துக்கு அழைத்து வரும்படி ஆக்ஞாபித்ததைத் தெரிவித்தார். மறுநாள் உடனே காஞ்சிபுரத்துக்குச் செனறோம்.

ஶ்ரீபெரியவா சர்வ தீர்த்தத்திற்கு அருகில் பர்ணசாலை அமைத்து அதில் அமர்ந்திருந்தார். சமிக்ணை முலமாக அருகில் வரும்படி உத்தரவிட்டார். எனது நண்பர் என்னைக் கைப்பிடித்து கொண்டு பெரியவாளின் திவ்விய சமுகத்துக்கு அழைத்துச் சென்றார். என் மனைவியிடம் நீங்கள் யாவரும் சென்னைக்குத் திரும்புங்கள். சீனுவாசனின் இரண்டு கண்களும் ஆபரேசன் ஆகி நன்றாய்க் கண் தெரிந்தவுடன் வருவான் என்று அனுக்கிரகித்து நண்பர் முர்த்தியை உடனே அய்தராபத்திற்கு திரும்புபடி அனுக்ரகப் பிரசாத்துடன் உத்தரவிட்டார்.

காஞ்சிபுரத்திலேயெ தொழில் நடத்தும் டாக்டர் வெங்குடி பாலசுப்பிரமண்யத்திடம் அன்றே அழைத்துச் செல்லப்பட்டேன். அவர் பெரியவாளிடத்தில் தாம் கொண்ட பக்தியின் பலத்தால் சென்னையில் பிரபல நிபுணர்களால் கைவிடப்பட்ட எனக்குக் கண் ஆபரேசன் செய்ய ஆயத்தங்களை செய்து விட்டார். முதலில் வலக் கண்ணைத் தைரியமாக ஆபரேசன் செய்தார். கிட்டத்தட்ட 3 மணி நேரம் செய்தார். 3ம் நாள் கட்டை அவிழ:த்து பட்டை போட்டிருக்கும்போது மருத்துவமனை வாசலில் ;பெரியவா வந்து நின்று கொண்டு விசாரிக்க ஆச்சரியம் அடைந்த டாக்டர் மெதுவாகக் கைப்பிடித்து பெரியவாளின் அருகில் அழைத்துச் சென்று பட்டையை விலக்கி பார்க்கச் சொல்ல ஏழு வருஷங்களுக்கு பின் முதன் முதரலக நான் கண்ட காட்சி பெரியவாளின் திருவுருதான்!. என் மகிழ்ச்சியை எப்படி விவரிப்பேன்.

அடுத்த 15 நாட்களில் மறு கண்ணையும் ஆபரேசன் செய்ய டாக்டருக்கு உத்தரவு பிறப்பித்து விட்டார் பெரியவா. டாக்டர் அவ்வாறே செய்ய என்ன ஆச்சரியம். இரு கண்களிலும் புர்ண பிரகாசம் ஏற்பட்டு இழந்த பார்வையினை மீண்டும் பெற்றேன். மேஜர் ஆபரேசன் இருந்தும் ரணம் 3 அல்லது 4 நாட்கள் தான். எனக்கு சொஸதமாகிவிட்டது. பெரியவாளின் கருணையே கருணை.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Image

தண்ணொளி நிலவினில் நதிகரையில்
பூத்து குலுங்கும் செடி கொடிகள்
தலையசைக்க ….மணம் வீச
மணியான மதுர கீதம் தென்றலில்
மிதந்து வர, கண்களை இழந்தவர்க்கும்
கண்ணனாய் கருணை மிகு
என் ஐயன் தாளமிட…….

சுவாமிநாதன் புகழ் பாடும்
அரியதொரு காம்போஜி ராகபாடலை
ரசித்து மகிழ்ந்து கொண்டாடி…..

ஸ்ருதி சுத்த லயத்துடன்
யாழ் மீட்டி சாம கானம்
இசைத்து வித்யா மமதை நீக்கி…..

லீலா விநோதனும் சுந்தர கண்ணனும்
நல்லுருவை பேணும் ஐயனின் மைத்ரிம் பஜத பாடலை
கானக்குயிலின் குரலில் கேட்டு அகமகி்ழ்ந்து

இசை ஞானிக்கு கண்ணொளிகாட்டி
வான சாஸ்திரம் கற்று தந்து

வீணா வாதினியின் சிரசில்
சந்தன கிரீடம் சூட்டி மகிழ்ந்து

ரங்கன் பள்ளி கொண்ட காரணத்தை
வரிவாக விளக்கி கூறி

சாமா ராகப் பாடலில் மனமுருகி
ஜெய ராமனின் வில்
இசையில் மயங்கி

பிறர்க்குரிமையாக்கும் பெம்மானே! சபாபதி!!
கிருபாநிதி இவரைப் போல
வேறு தெய்வம் சமானம் ஆகுமா?
venkat k

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்

வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகம் கூறுகிறார்…

காஞ்சிப் பெரியவரைப் பற்றிப் பேசும்போதெல்லாம் சுப்பு ஆறுமுகத்தின் முகத்தில் அலாதி உற்சாகமும், குரலில் ஒரு பரவசமும் நெகிழ்ச்சியும் இழையோடுவதை உணரமுடிகிறது.

”காஞ்சி மகா சுவாமிகளை 1963-ல் தரிசிக்கும் பாக்கியம் கிடைச்சுது. மடத்தில் என் கச்சேரி நடந்தது. அடுத்த நாள் பெரியவா என்னிடம், ‘இதுக்கு முன்னே காஞ்சிபுரம் வந்திருக்கயா?’ என்று கேட்டார். அறிஞர் அண்ணா அவர்களைப் பார்ப்பதற்காக கலைவாணர் என்னை காஞ்சிபுரம் அழைத்து வந்திருந்தார். அந்தச் சம்பவத்தைச் சொன்னேன். உற்றுப் பார்த்துச் சிரித்தார். அந்தச் சிரிப்புக்கான அர்த்தம் பிறிதொரு நாளில்தான் எனக்குத் தெரிய வந்தது.

பின்பு, ‘உன் கச்சேரியில் புல்லாங்குழல் உண்டா?’ என்று கேட்டார். ‘அது வட இந்திய வாத்தியமாச்சே! வில்லுப்பாட்டு, தமிழகத்தில் திருநெல்வேலிப் பக்கம் உண்டான கலை! அதனால புல்லாங்குழல் வெச்சுக்கலை!’ என்றேன். கொஞ்ச நேரம் என்னையே மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தவர், பிறகு ஏதோ நினைத்துக்கொண்டு, மறுபடி சிரித்தார். பெரியவா சிரித்தால், காஞ்சி காமாட்சியே நம்மைப் பார்த்துக் கருணையோடு சிரிக்கிற மாதிரி இருக்கும். அதை அனுபவிச்சவங்களுக்குத்தான் தெரியும். சிறிது நேரம் கழித்து, ‘ஆமாமாம்… அது கிருஷ்ணனுடைய வாத்தியமாச்சே!’ என்றார் பெரியவா.

உடனே, அவர் முன் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தேன். ‘பெரியவா! நான் வட இந்திய தென்னிந்திய பேதம் பார்க்கிறேன். நீங்களோ சர்வ வியாபியான கிருஷ்ணனுடைய வாத்தியம் அது என்று சொல்லிவிட்டீர்கள். எனக்கு திசைதான் தெரிந்தது. உங்களுக்கோ தெய்வம் தெரிகிறது. இன்னும் எத்தனை தூரம் கடந்து வந்தாலும் உங்கள் பக்கத்தில்கூட வரமுடியாது என்பதை உணர்ந்து கொண்டேன்’ என்றேன். மறுபடியும் சிரித்து, கைகளை உயர்த்தி, ‘காமாட்சி உன் நாக்கில் குடியிருக்காடா. நீ க்ஷேமமா இருப்பே!’ என்று ஆசீர்வதித்தார்.

இன்னொரு சந்தர்ப்பத்தில், ‘கலவை’யில் எனது வில்லுப்பாட்டுக் கச்சேரி நடந்தது. அப்போது பெரியவா பக்தர்களுக்கு விபூதி கொடுப்பதைக்கூட நிறுத்திவிட்டு, சட்டென்று நான் பாடுவதையே உற்றுப்பார்த்தார். எனக்கோ உள்ளுக்குள் ஆச்சரியம்… எதற்காக இப்படி அந்த மகான் நம்மையே பார்த்துக்கொண்டிருக்கிறார் என்று! கச்சேரி முடிந்ததும் தோளில் இருந்த அங்கவஸ்திரத்தை எடுத்து இடுப்பில் பவ்யமாகக் கட்டிக்கொண்டு, பிரசாதம் வாங்க அவரிடம் சென்றேன். ‘நான் ஏன் உன்னை அப்படி உத்துப் பார்த்தேன்னு யோசிச்சியோ? அது வேற ஒண்ணுமில்ல. உன் வில்லைப் பார்த்தால், எனக்கு ஸ்ரீராமன் தெரியறார்; உடுக்கையைப் பார்த்தால், சிவன் தெரியறார். வில்லைப் பார்த்தால், ராமேஸ்வரம் தெரியறது; உடுக்கையைப் பார்த்தால், காசி தெரியறது. வில் தென்னிந்தியான்னா, உடுக்கை வட இந்தியா! சைவ- வைஷ்ணவ ஒற்றுமையை, தேசிய ஒற்றுமையையெல்லாம் உன் கையிலேயே வெச்சிண்டிருக்கியே, அதைத்தான் நான் உத்துப் பார்த்தேன்!’ என்றார். அவரது விளக்கத்தைக் கேட்டுச் சிலிர்த்துப் போனேன்’.


ஒருமுறை மனசு நிறைய கவலையோட கலவைக்குப் போனேன். பெரியவரை தரிசனம் பண்ணி, நமஸ்கரிச்சேன். மனசுக்குள் ‘காமாட்சித் தாயே! என் கவலைகளை உன் காலடியில் வைக்கிறேன்’னு அழுதேன். உடனே பெரியவா, ‘உன் கவலைல இருக்கிற ‘வ’வை அழிச்சுட்டு, அந்தக் காமாட்சியே உன் நாக்குல வந்து உக்கார்ந்துண்டுட்டாடா! நீ க்ஷேமமா இருப்பே!’ன்னு ஆசிர்வாதம் பண்ணினார். சிலிர்த்துப் போயிட்டேன். என் கவலைகளைப் போக்கி, கலையைத் தந்திருக்கிறாள் காமாட்சி என்பதை எத்தனை நுட்பமாகச் சொல்லியிருக்கிறார் பாருங்கள்! பெரியவாளின் ஆசீர்வாதத்தால்தான் நானும் என் குடும்பமும் இன்னிக்கு வரைக்கும் நல்லா இருக்கோம்” என்றார் நெகிழ்வுடன். தொடர்ந்து…

”ஒருமுறை, காஞ்சிபுரத்தில் ஒரு டாக்டர் வீட்டு கல்யாணத்தில் கச்சேரி முடித்துவிட்டு, நேரம் இருந்ததால் மடத்துக்குச் சென்று பெரியவாளை தரிசித்தேன். ‘எங்கே இவ்வளவு தூரம்?’ என்று விசாரித்தார். எனக்கு மனதில் ஒன்றும் வைத்துக் கொள்ளத் தெரியாது. உள்ளதை உள்ளபடி சொன்னேன். கருணை வெள்ளமெனச் சிரித்தவர், ‘சத்தியம் பேசறேடா! உனக்கு ஒரு குறைவும் வராது. இங்கே பட்டுப் புடவை, பட்டு வேஷ்டி வாங்க வரவாள்ளாம், பெரியவாளைத்தான் பார்க்கப் போயிருந்தேன்னு சொல்லிண்டிருக்கா!’ என்று சொல்லிவிட்டு, மீண்டும் குழந்தையெனச் சிரித்தார். அப்போதுதான், அன்று நான் அறிஞர் அண்ணாவைப் பார்க்கக் காஞ்சிபுரம் வந்ததாகச் சொன்னபோது, பெரியவா உற்றுப் பார்த்துப் புன்னகைத்ததன் அர்த்தம் புரிந்தது. பெரியவா நம்மிடம் எதிர்பார்ப்பதெல்லாம் சத்தியம், சத்தியம், சத்தியம் மட்டுமே!” என்றார்.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

கனகதாரா ஸ்தோத்திரம் தெரியுமோ?"

"அன்று பொன் மழை -காலடி ஆதி சங்கரர் , இன்றும் பொன் மழை காஞ்சி சங்கரர்"

கனகதாரா ஸ்தோத்திரம் தெரியுமோ?" "அன்று பொன் மழை -காலடி ஆதி சங்கரர் , இன்றும் பொன் மழை காஞ்சி சங்கரர்" காமாட்சி அம்மனுக்கு மேலே ஒரு காலத்தில் பொன்மயமாக இருந்த விமானம், தங்க ரேக்கெல்லாம் அழிந்து வெறும் செம்பாக இருந்தது. அந்த கால கட்டத்தில் மடத்துக்கு வசதி போதாது. அன்பர்களும்,பக்தர்களும் கொடுப்பதைவைத்து மடம் நடந்து கொண்டிருந்தது.பல நாட்கள் பிட்சா வந்தனத்துக்கு யார் வரப் போகிறார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பது கூட உண்டு.சந்நியாச தர்மப்படி அந்த பிட்சாவந்தனத்தை வைத்துத்தான் பெரியவாளுக்கு பிட்சையே நடக்கும்.எனவே "விமானத்துக்கு தங்கரேக்கைப் பயன்படுத்தாமல் ஏன் வெறும் செம்பாக வைத்திருக்கிறீர்கள்?" என்று பெரியவா மானேஜரைக் கேட்ட போது, "பண வசதி போதாது" என்று அவர் தெரிவித்து விட்டார். பெரியவா ஆசாரியை வரவழைத்து எவ்வளவு பவுன் ஆகுமென்று கேட்டார். விமானமெல்லாம் கழற்றிக் கீழே வைக்கப்பட்டது. பார்த்துவிட்டு,ஆசாரி பல பவுன்கள் வேண்டும் என்றார். "அதற்கு எங்கே போவது?" என்ற கேள்விக்குறி பெரியவா முகத்தில் பெரியவாளோ,"பண்ண ஆசையிருக்கு,எப்படி என்றுதான் தெரியலை?" என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.

அந்த சமயம் மகாராஜபுரம் விஸ்வநாதய்யர், பெரியவாளை தரிசனம் பண்ண உள்ளே வந்தார்.பெரியவா கட்டளைப்படி தேவகானம் பொழிந்தார் பெரியவா அவரிடம், "எனக்கு காமாட்சி அம்மனின் விமானத்தை தங்க ரேக்கால் ஒளி வீசச் செய்யணும்னு மிகவும் ஆசையாக இருக்கிறது.இவர்களெல்லாம் அது முடியாத காரியம்......பவுனுக்கு எங்கே போவது என்கிறார்கள். பெரிய குறையாக இருக்கிறது. ஆனால்,உன் பாட்டைக் கேட்டதும் அந்தக் குறை தணிந்துவிட்டது. உனக்குக் கனகதாரா தோத்திரம் தெரியுமோ?" என்று கேட்டார். "சுமாராகத் தெரியும்" என்றார் விஸ்வநாதய்யர்.

அங்கே வந்திருந்த பெண்மணிகளில் சிலர்,"எனக்குத் தெரியும்" என்று முன் வந்தனர்.எல்லோரும் சேர்ந்து கனகதாரா தோத்திரத்தை முழக்கினார்கள்.அதைச் சொல்லி முடித்தார்களோ இல்லையோ ஒரு அதிசயம் நடந்தது. அங்கேயிருந்த ஒரு தட்டில் அத்தனை பெண்களும் தங்கள் நகைநட்டுகளைக் கழட்டிப் போட்டனர். "ஆசார்யரது ஸ்லோகத்தை இன்றைக்குச் சொன்னாலும் பொன்மாரி பொழிகிறதே" என்று பெரியவர் புளகாங்கிதம் அடைந்தார்.அதை அப்படியே ஆசாரியிடம் அள்ளிக் கொடுத்து ஐந்து நாட்களுக்குள் தங்க விமானம் பண்ணி எடுத்து வா என்றார்.

அந்த பவுனை எடை போட்டுப் பார்த்தபோது ஆசாரி கேட்ட பவுனுக்கு ஒரு குந்துமணி கூடவுமில்லை,குறையவுமில்லை என்று அதிசயப்பட்டார் ஆசாரி. சர்வ வல்லமை படைத்த மகானான பெரியவா ஒன்று நினைத்தால் அது நடக்காமல் போய்விடுமா என்ன? ஆறே நாளில் தங்க விமானம் வந்து,கும்பாபிஷேகமும் அமோகமாக நடந்தேறியது. ஒரு ஏழைப் பெண்ணுக்காக அம்பாள்,அன்று பொன்மழை பொழிந்தாள். இன்று பல ஏழைப் பெண்மணிகள் மனதால் ஒன்றுபட்டு,அம்பாளுக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பியது போல் அந்த நிகழ்ச்சி அமைந்தது.

grsastrigal
Posts: 864
Joined: 27 Dec 2006, 10:52

Re: Kanchi Maha Periyava

Post by grsastrigal »

Asthikas who have been blessed by Mahaperiava and who are elated reading many articles here and elsewhere should be knowing Sri.Sivaraamakrishna Sastrigal, adyanta devotee of Mahaperiava. Mahaperiava called him many times for sadas. The shankara mutt at Tiruvanaikkovil, in trichy was given to Sri.SS and he lived many years before he moved to his son's house in srirangam.

There is a video in youtube which will tell you more about him.
It is sad to know that he passed away two days back in Trichirappalli. Hindu carries an article in Trichy edition today.

http://www.thehindu.com/todays-paper/tp ... 961662.ece

This may not be the forum to carry this article. But to make mahaperiava devotees know the fact that we have lost an important devotee of mahaperiava, (an important link between the bhaktas and periavA), I don't see any other place than this.

Today monring Sri.Krishna prEmi visited (cried) and narrated his relationship with mahaperiava and how best the scholar, in sanskrit, he was.
So many shishyas visited his place.

I equally feel so disturbed as he is the father-in-law of my younger brother (in trichy) and shared many memorable moments of Mahaperiava with him.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

I saw it in one of the FB groups..RIP

Image

அசைந்தாடி வருகிறான் என் ஐயன்
வேங்கடவன் என் மனம் கனிந்துருகவே!

விழி வழியே மொழி வழியே
வழி காட்டும் என் ஐயன்
அசைந்தாடி வருகிறான்!

செழுமதி முகத்தில் குரு நகை கூட்டி
தண்டமும் குவளையும் ஏந்தி
அலங்கார பதம் வைத்து
அசைந்தாடி வருகிறான்!

அண்டம் உய்ய அருள் வாக்கருளவே
அசைந்தாடி வருகிறான்!

சதா சிவம் காட்டி நித்யானந்தம் ஈய
என் ஐயன் அசைந்தாடி வருகிறான்!

முகத்திடை கடலிடை பகலவன் ஒளி வீச
என் ஐயன் அசைந்தாடி வருகிறான்!

தஞ்சம் தஞ்சம் என்னும்
அடியவர் துயர் தீர்க்கவே
என் ஐயன் அசைந்தாடி ஓடி வருகிறான்!

வரம் தரவே அபய கரம் தரவே
என் ஐயன் அசைந்தாடி வருகிறான்!
venkat k

thanjavooran
Posts: 2993
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share from my friend

Note: This MUST be read particularly by the self-styled secularists. A christian has u'stood Hinduism better than these Sickularists.
-----------------------------------------------------------------------
Fwd: Extract from the Speech of Dr P.C.Alexander governor of Tamilnadu on his meeting KANCHI ParamAchAryA

(Old but evergreen) My wife and I had the privilege of calling on His holiness on several occasions during our stay in Tamil Nadu. My wife met him once on her own also. I recall the first meeting I had with His Holiness within a few weeks of my taking over as Governor of Tamil Nadu. What amazed me was the utter simplicity of his presence. Here was a sage worshipped by millions of people as the embodiment of divine grace, a scholar respected all over the country for the depth of his erudition and wisdom a great saint whose very `darshan’ was considered adequate by thousands as a source of blessing and yet there he was sitting on the floor in the most austere surroundings, a few metres of saffron khadi cloth sparsely draped over his frail body. I felt very humble in his presence and I could see in that self imposed austerity, the majesty of the spirituality of the man. I have experienced the glow of spirituality wafting across the atmosphere whenever I visited his abode in Kancheepuram. My wife and I consider it one of the great privilege of our lives that we could have the opportunity to receive his blessings personally. In a way the Paramacharya’s simplicity and spirituality symbolise the strength of our civilization. You can see in him the manifestation of the essence of our civilization. Everyone calls him `Paramacharya’ or the supreme teacher. What does it really mean to be a supreme teacher? To be a religious teacher, it is not enough if one has indepth knowledge of one’s religion. It is not enough if one has mastered and assimilated the wisdom of the religions as well. The Paramacharya has done all that but there is something more than religious learning which has made him the supreme teacher and that is that he combines religious knowledge with religious experience. Sri Ramakrishna Paramhamsa, once talking about religious teachers, said that a teacher who tries to teach religion from mere book knowledge is like a man who tries to describe Banaras from his knowledge of seeing the map of the city. Very often people give sermons based on their knowledge of books, but what they lack is knowledge based on religious experience or spirituality. “Civilization is an act of spirit” said Dr.Radhakrishan “not of body or mind”. Achievements of knowledge and power are not enough; acts of spirit and morality are essential. The Paramacharya’s strength was the strength of a life of spirituality. EVER-GROWING SPIRITUAL FORCE What is the strength of the Hindu religion? When we speak of the greatness of Hinduism, often we speak of its assimilative character, its tolerance of other religions and its catholicity or universality. These are all no doubt, important factors contributing to its greatness, but the real greatness of Hinduism is in the fact that it is an ever-growing, ever evolving spiritual force. There is no full stop in the history of Hinduism. There is also no beginning for its history. You cannot say that Hinduism started with the Vedas. The Vedas embodied the eternal truths which were there without a beginning. The Vedas are called anadi because they did not come from any particular person’s mind or start at a particular point of time. The beauty of the Vedas or the Upanishads lies in the fact that they are a treasure house of truths which can guide man to the path of perfection and goodness. Those who preached the truth of the Vedas did not invent them, they only expounded them. Swami Ranganathananda, referring to Lord Krishna, says that even though he is the greatest preacher of the Vedas that existed, Krishna is not the authority of the Vedas but the Vedas are the authority of Krishna. What he means is that the Bhagvad Gita itself is an interpretation or exposition of the eternal truths embodied in the Vedas. They were relevant to the age in which Lord Krishna preached as they continue to have eternal relevance and validity. AMAZING PHENOMENON Take the teachings of the great Sankara of whom the Jagadguru is the spiritual heir. Sankara is an amazing phenomenon of Indian history. A great sage, mystic, philosopher, poet and a great scholar whose wisdom and erudition remained unmatched in his time and remain unmatched even today. And to think that all these he achieved in his short life of 32 years beats our comprehension. But Sankara did not claim that he was teaching a new religion or philosophy. All that he did was to guide people to the right path of goodness and perfection through the wisdom of Vedas, the Upanishads and the Gita. The lives of the great avataras like Lord Rama and Lord Krishna represented the truth of the Vedas in action. They demonstrated by their own lives how man can reach perfection and goodness; and in that manner they were proving the relevance and validity of the truths contained in the Vedas. Starting from the Vedas and the Upanishads or what we call the sruthis, Hindu religion continued to be renewed and enriched through the period of the Smritis, the Itihasas, the Purasanas, the Agamas, the Darshans and again through the lives of great seers like Adi Sankara and later in the modern period through Sri Ramakrishna Paramahamsa, Swami Vivekananda and other great men. That is the greatness of Hinduism. As Dr. Radhakrishnan said, hinduism is a living religion moving with the movement of life itself. Therefore, if anybody asks you what is the greatness of Hinduism, do no stop with saying that it is a tolerant religion, or that it had the truth of the Vedas for 5000 years or that it is catholic, but also say that it is a living spiritual force which moves with the movement of life itself. It is not necessary that every great sage or prophet should be a prolific writer or a great orator. In the history of human civilization you can find some sages whose lives speak more than their words. They might not have produced massive literature, but would have left behind an equally precious legacy namely their spiritual lives. What Swami Ranganathananda said about Sri Ramakrishna Paramhamsa is very relevant in this context and I quote: “He lived a life of the spirit in all its intensity and extensity. He showed the authenticity of man’s spiritual life”. Whenever I think of the sage of Kanchi these sentences come to me as most appropriate and relevant. I cannot describe the sage of Kanchi better than by underlining the words “the authenticity of man’s spiritual life”. There is no pretence about the man, he does not try to tell you something which you would like to hear, he does not say things to please you, he does not flatter you, sometimes he may not even talk to you, sometimes he may not even raise his hands to bless you. But he continues to live the life of the spirit in all `its intensity and extensity’ and demonstrates ` the authenticity of man’s spiritual life’. Our generation, particularly those who have had the privilege of meeting him should really feel blessed that in our times such a man continues to live in our midst and to bless us. Let us pray and wish that he lives up to 125 years. Sarve Bhavantu Sukhinah, Sarve Santu NiraamayaaSarve Bhadraani Pashyantu, Maa kascchid Dukh bhaagbhavet

May all become happy, may all be free from disease; May there be nothing but auspiciousness in everyone's lives; May no one undergo pain or suffering.

Post Reply