Teaching Instrumental Music

To teach and learn Indian classical music
Post Reply
vgovindan
Posts: 1866
Joined: 07 Nov 2010, 20:01

Teaching Instrumental Music

Post by vgovindan »

An interview with Kudamalur Janardhanan

நீங்கள் நமது மியூசிக் காலேஜுக்குப் போயிருக்கிறீர்களா? அங்கே மட்டுமல்ல, சங்கீதம் கற்றுக்கொடுக்கும் வேறு எந்த நிறுவனத்துக்குப் போனாலும் பார்க்கலாம். சரளி வரிசைகள், ஜண்டை வரிசைகள். பாடத்திட்டத்தில் இவைதாம் அடிப்படைப் பயிற்சிகளாகக் கொடுக்கப்பட்டிருக்கும். ஃப்ளூட் வாசிப்பவனும் இந்த வரிசையைத் தான் கற்றுக்கொள்ள வேண்டும். வயலின் வாசிப்பவனும் இந்த வரிசையைத்தான் கற்றுக்கொள்ள வேண்டும். வீணை வாசிப்பவனும் இந்த வரிசையைத்தான் கற்றுக்கொள்ள வேண்டும். வாய்ப்பாட்டு கற்பவனும் இந்த வரிசையைத்தான் கற்றுக்கொள்ள வேண்டும். வீணை மீட்டி வாசிக்கப்படுவது. புல்லாங் குழல் காற்றுக் கருவி. காற்றைக் கொடுத்து வாசிப்பது. வயலின் வில்லால் (bow) மீட்டி வாசிக்கப்படுவது. இந்தக் கருவிகளுக்கெல்லாம் அவற்றுக்கே உரிய தனித் தன்மைகள் இல்லையா? ஒரே அரிச்சுவடி மூலம் நம்மால் நான்கு மொழிகளைக் கற்றுக்கொள்ள முடியுமா? எத்தனை முட்டாள்தனமான கருத்து இது. வயலினில் நான்கு தந்திகள். வீணையில் ஏராளமான மட்டுகள். நாலு தந்திகளையும் இத்தனை ஸ்தாயிகளையும் வாசிக்கத் தோதான ஃபார்முலாவை உபயோகப்படுத்தாமல், இவர்களுக்குத் தெரிந்த வழிமுறை கீர்த்தனம் என்பதால் ‘அதையே வீணையில் வாசித்துக் கற்றுக்கொள், இதுதான் சங்கீதம்’ என்று கற்பிக்கிறார்கள். இதுதான் இங்கே இருக்கும் நிலைமை. நம்மைப் பேச அனுமதிக்காத பாஷையால் என்ன பிரயோஜனம்? வாத்தியத்துக்கு அதன் சாத்தியங்களை வெளிப்படுத்தக்கூடிய பயிற்சி முறை (சிட்சை) இருக்க வேண்டும்.


http://www.kalachuvadu.com/issue-132/page40.asp

English Translation - sorry if there are any errors in translation -

"Have you gone to Music College. Not only there, you can see this in any organisation that teaches music - Sarili Varisai, Jantai Varisai. These are the basic exercises in the syllabus. A student of flute also has to learn this; student of violin also has to learn these. student of vocal music also has to learn these; student of veena also has to learn these. Veena is played by plucking; flute is played by blowing air; violin is played by fingers. Don't these instruments have their own individuality? Can we learn four languages with the same alphabets? What a foolish thought is this? Violin has four strings; veena has many frets. Instead of using a formula in order to exploit these four strings and frets, just because they know only kIrtana, they teach the same for veena also stating that 'this is music'. This is the existing condition here. What is the use of such language which does not allow us to speak? The teaching of instruments should be such that they bring out their potentialities."

Food for thought!

Post Reply