KavithaigaL by Rasikas
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
கானக் குயிலொன்று மண்ணில் தோன்றிப் பறந்ததே!--இனிய இசை பாடி (கானக் குயில்)
வானிலெங்கும் திரிந்தே, வள மிகு மொழி பலவும் பாடிக் களி சேர்த்ததே--இனிய (கானக்குயில்)
ஏதோ அமுதக் கலசத்தோர் துளி உலகோர்க்கும் ஆனதே! தேவ (கானக் குயில்)
வீணயொலியில் சலங்கை குலுங்கலில், குழலொலி சூழலில் வளர்ந்ததே! மதுர (கானக் குயில்)
மங்கல நங்கை--திருமகள் வள்ளலாம், சுபலக்ஷ்மியெனும் வடிவாம்!
நாதமதின் நாடியாம், நம்மை ஈர்க்க வந்த ஆன்மீக உருவாம்--அருள் (கானக் குயில்)
....

Last edited by arasi on 17 Sep 2015, 18:47, edited 1 time in total.
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
The above song in rAgA valaji came to me days after MS made her way to heaven. When I mentioned this to her daughter in conversation, she wanted to hear it. I sang it, the grandson recorded it, asked for the lyric and soon after, in Chennai at the release of MS and Radha (penned by Gowri Ramnarayan) she sang it with Aishwarya.
Aishwarya has been singing it in the past years. Gives me goose bumps when I hear her...
Aishwarya has been singing it in the past years. Gives me goose bumps when I hear her...

-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
493
அண்ணலே வாழி !
அணைத்த அரவமும் அணையாச் சடையும்
அணைத்த பாதத்தில் அணைத்த காப்பொடு
அணையின்றி எம்மை அணைத்தே அருளி
அணையாது காத்திடும் அண்ணலே வாழி !
ப்ரத்யக்ஷம் பாலா,
17.09.2015.
அண்ணலே வாழி !
அணைத்த அரவமும் அணையாச் சடையும்
அணைத்த பாதத்தில் அணைத்த காப்பொடு
அணையின்றி எம்மை அணைத்தே அருளி
அணையாது காத்திடும் அண்ணலே வாழி !
ப்ரத்யக்ஷம் பாலா,
17.09.2015.
-
- Posts: 2498
- Joined: 06 Feb 2010, 05:42
Re: KavithaigaL by Rasikas
யுகம் யுகங்களில் மலரும் மலர் அது
பனிரெண்டு ஆன்டுகளுக்கொரு முறை மலரும் குறிஞ்சி அல்ல
மல்லி அது அசல் மதுரை மல்லி
மலருக்கொரு வாசம் இம்மலருக்கோ ஒன்றல்ல
பல ராகம் , இவ்வுலகையே திரும்பிக் கேட்கவைக்கும் ராகம்
சங்கீதத்தின் சிகரம் தொட்ட, மனித நேயம் மிகுந்த
மா பெரும் மங்கை அவர், வாரி வாரித்தான் அளித்தார், தன்
சங்கீதத்தையும் , தன் சம்பாதித்தியத்தையும்
அவரே மதுரை ஷண்முக வடிவு சுப்பலக்ஷ்மி
அல்ல அல்ல, மதுர சங்கீத வடிவு சுப்பலக்ஷ்மி

- Posts: 1951
- Joined: 07 Nov 2010, 20:01
இரக்கம்
https://www.facebook.com/vgvindan/video ... _processed
இயற்கைத் தாயின் ஈடற்ற அன்பு கண்டேன்;
இரைக்கும் இரங்கும் இயல்புதான் என்னே!
களங்கமில்லா அன்புக்கு இனவேற்றுமையுண்டோ?
கள்ளமற்ற உள்ளமே கடவுளின் இருப்பிடமன்றோ!
தத்துவமிதனைத் தெரிந்து கொள்ளா மனித இனமென்னே?
தன்னலமொன்றே பெரிதெனத் திரியும் பண்புதானென்னே?
மனித இனம் இவ்வேற்றுமைகளினின்று திசை மாறுமோ?
மனித நேயம் திரும்ப வேறூன்றுமோ, சொல்லடி, சிவசக்தி!
(பாரதி மன்னிப்பாராக)
இயற்கைத் தாயின் ஈடற்ற அன்பு கண்டேன்;
இரைக்கும் இரங்கும் இயல்புதான் என்னே!
களங்கமில்லா அன்புக்கு இனவேற்றுமையுண்டோ?
கள்ளமற்ற உள்ளமே கடவுளின் இருப்பிடமன்றோ!
தத்துவமிதனைத் தெரிந்து கொள்ளா மனித இனமென்னே?
தன்னலமொன்றே பெரிதெனத் திரியும் பண்புதானென்னே?
மனித இனம் இவ்வேற்றுமைகளினின்று திசை மாறுமோ?
மனித நேயம் திரும்ப வேறூன்றுமோ, சொல்லடி, சிவசக்தி!
(பாரதி மன்னிப்பாராக)
-
- Posts: 1951
- Joined: 07 Nov 2010, 20:01
அழுக்கு
உடல் அழுக்கைக் களைய, நீரும் சோப்புமுண்டு;
உள்ளத்தின் அழுக்கிற்கு, எந்த நீர்? எந்த சோப்பு?
கடல் நீரின் உப்பு, பகலவன் வெப்பத்தால் நன்னீராம்
கள்ளமெனும் உப்புக்கு எந்தப் பகலவன் வெப்பமோ?
உடலையும் உள்ளத்தையும் களங்கமின்றிப் பெற்றோமே;
உடலைக் கழுவிக் கழுவி பளிங்கு நிகராக்கினோமே;
உள்ளத்தின் அழுக்கை மறைத்து ஊரை ஏமாற்றினோமே;
உள்ளமே கோயிலெனும் உண்மையை மறந்தோமே.

- Posts: 809
- Joined: 03 Feb 2010, 11:36
Re: KavithaigaL by Rasikas
அன்பே சவர்க்காரம் ஆர்வமே நீராக
இன்புருகு சிந்தை இளவெயிலாய் - நன்புருகி
நேசக் குளியல் நிதம்செய்வோம் நம்முள்ளம்
மாசொன்றும் இன்றித் துலங்க
(பூதத்தாழ்வாருக்கு நன்றியுடன்)
இன்புருகு சிந்தை இளவெயிலாய் - நன்புருகி
நேசக் குளியல் நிதம்செய்வோம் நம்முள்ளம்
மாசொன்றும் இன்றித் துலங்க
(பூதத்தாழ்வாருக்கு நன்றியுடன்)
-
- Posts: 1951
- Joined: 07 Nov 2010, 20:01
பசி

என்ன நோக்கத்திற்காகப் பிறந்தோம் யாம்?
என்ன கண்டோம் இங்கு, பசியொன்றன்றி?
யார் செய்த பாவம், யார் அனுபவப்பதிங்கு?
யார் யாரோ வந்திங்கு சுருட்டிச் சென்றனரே!
எம்மை இந்நிலைக் கொணர்ந்துவிட்டு - தாம்
எக்கவலையுமின்றி ஏளனமாகச் சிரித்திடும்
இழிந்தோர் நிறை, இவ்வுலகு இருந்தாலென்ன?
இல்லாமற்போனாலென்ன? - சொல்வீர்.
தனியொருவனுக்குணவிலையெனில்,
ஜகத்தினையழித்திடுவோம் என்று பாடியவனுக்கு,
சமாதி கட்டிச் செவ்வனே வழிபடுவோம் - வாரீர்.
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
494
வெளிச்சம்
முடி போனதும் முடிச்சு போனதா ?
அடி போனதும் அல்லல் போனதா ?
பிரிவு போனதும் பரிவு விளையுதா ?
தெரியுதா ஒளி ? திரும்பாதே இனி !
ப்ரத்யக்ஷம் பாலா,
30.09.2015.
வெளிச்சம்
முடி போனதும் முடிச்சு போனதா ?
அடி போனதும் அல்லல் போனதா ?
பிரிவு போனதும் பரிவு விளையுதா ?
தெரியுதா ஒளி ? திரும்பாதே இனி !
ப்ரத்யக்ஷம் பாலா,
30.09.2015.
-
- Posts: 1951
- Joined: 07 Nov 2010, 20:01
பிரிவினை
என் பெற்றோரைக் கேட்டுக்கொண்டு நான் பிறந்தேனா?
என்னைக் கேட்டுக்கொண்டு பெற்றோர் என்னைப் பெற்றனரா?
எதற்கிந்தப் பெருமிதம் - நான் ஆணென்றும், பெண்ணென்றும்?
எதற்கிந்தப் பெருமிதம் - நான் இந்து என்றும், முஸ்லீமென்றும்?
எதற்கிந்தப் பெருமிதம் - நான் தமிழனென்றும், தெலுங்கனென்றும்?
எதற்கிந்தப் பெருமிதம் - நான் இன்னாட்டவன், இவ்வினத்தவனென்றும்?
எதற்கிந்தப் பிரிவினைகள் - வெறும் பிறவியினால் வந்தவற்றினால்?
எதற்கிந்தப் பிரச்சினைகள் - வெறும் பிறவியினால் வந்தவற்றினால்?
விலங்கிலிருந்து வந்த மனிதனுக்கு மட்டும் ஏனிந்த எண்ணங்கள்?
விலங்காகவே நாம் இருந்திருந்தால் இப்புவி உய்ந்திருக்குமே!
விலங்கினின்று மனிதனாக எம்மை ஏன் பிரித்தாய், இறைவா?
விலங்குகள் உன்னைப் புகழ்வதில்லை என்று எண்ணியதாலா?
வேண்டுதல் வேண்டாமையற்ற இறைவா, வேண்டுகிறேன் உன்னை;
வேண்டாத உளைச்சல்களால் அவதியுறும் மனிதனுக்கு என்ன விடிவு?
வேண்டுமொறு சமுதாயம் இவ்வேற்றுமைகள் இல்லாமலிங்கு;
வேண்டுகோளிதனை மறுத்திடாதே, அழிவை நோக்கி விரைகின்றோமே.

முன்னேற்றம்
நீதிக்கதைகள் நூறாயிரம் நமது பண்பாட்டிலே - பயன்?
நீதியென்றாலென்னவென்று கேட்கும் காலமாச்சே;
அறஞ்செய விரும்பென்ற ஆத்திச்சூடி வசனம் மாறி,
'பாபா ப்ளாக் ஷீப் ஹேவ்யூ எனிவுல்' குடிபுகலாச்சே;
தொட்டிலாட்டி, தாலேலோ பாடின காலம் மாறி,
தொலைக்காட்சிப்பெட்டி அலறல் தாலாட்டாச்சே;
இனிய தமிழில் இனித்திடப் பேசிய காலம் மாறி,
இந்தி நடிகை பேசும் தமிழ் வழக்குமொழியாச்சே;
கற்பூரத்தைச் சுமந்து செல்லும் கழுதை போன்று,
கற்ற கல்வியின் பயன் உணராச் சமூகம் உருவாச்சே;
வாழ்வில் வெற்றியொன்றே நோக்கமென்றாச்சே; - இல்
வாழ்க்கையின் நோக்கம் மாறி, வெறும் ஒப்பந்தமாச்சே.
நீதியென்றாலென்னவென்று கேட்கும் காலமாச்சே;
அறஞ்செய விரும்பென்ற ஆத்திச்சூடி வசனம் மாறி,
'பாபா ப்ளாக் ஷீப் ஹேவ்யூ எனிவுல்' குடிபுகலாச்சே;
தொட்டிலாட்டி, தாலேலோ பாடின காலம் மாறி,
தொலைக்காட்சிப்பெட்டி அலறல் தாலாட்டாச்சே;
இனிய தமிழில் இனித்திடப் பேசிய காலம் மாறி,
இந்தி நடிகை பேசும் தமிழ் வழக்குமொழியாச்சே;
கற்பூரத்தைச் சுமந்து செல்லும் கழுதை போன்று,
கற்ற கல்வியின் பயன் உணராச் சமூகம் உருவாச்சே;
வாழ்வில் வெற்றியொன்றே நோக்கமென்றாச்சே; - இல்
வாழ்க்கையின் நோக்கம் மாறி, வெறும் ஒப்பந்தமாச்சே.
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
"இனிய தமிழில் இனித்திடப் பேசிய காலம் மாறி,
இந்தி நடிகை பேசும் தமிழ் வழக்கு மொழியாச்சே;"
That, to start with
And the rest? You say it in your verses...
இந்தி நடிகை பேசும் தமிழ் வழக்கு மொழியாச்சே;"
That, to start with

And the rest? You say it in your verses...
-
- Posts: 1951
- Joined: 07 Nov 2010, 20:01
Re: KavithaigaL by Rasikas

வழித்துணை (22-10-15)
வாழ்வினில் ஏற்றத்திலும் தாழ்விலும்,
வழித் துணை நீயொன்றேயென்று,
அன்று பிடித்தேனடி உன் கையினை,
என்றும் விடேனென்று உறுதி கூறி;
காலம் கடந்துவிட்டது சடுதியிலே;
கால்கள் ஓய்ந்துவிட்டன - உண்மை;
பயணமே இலக்கெனக் கொண்டால்,
பயணத்திற்கேது முடிவு, சொல்லடி?
இல்லாத ஓர் ஊரினை இலக்காக்கி,
நில்லாமல் செல்வோம், சிவ சிவயென;
சேர்வதும் சேராமற் போவதும்,
சிவன் கையில் - சிந்தை ஏதுக்கடி?
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
மீள் பதிவு
சென்ற மார்கழியில் நான் எழுதிய பாட்டு சில update களுடன் .
தினம் தினம் அல்லலில் மிதக்கும் சென்னை வாசிகளுக்கு இசை விழா ஒரு சிறு relief. தெருக்களில் அவதிப்படும் பெண்களுக்கே இதை அற்பணிப்போம்.
தெருப்பாவை
மார்கழி திங்கள் பனி நிறைந்த நன்னாளில்
ஈர்க்கும் இசை கேட்க போதுவீர் கோணல் வகிட்டீர்
சீர் இழந்த பல கோடி சென்னை நகர் வாசிகாள் !
தார் ரோட்டில் சாக்கடையில் படகோட்டி உயிர் பிழைத்தீர் !
ஏர் ஆர்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்
பேர் கொண்ட வித்வான்கள் பல இடத்தில பாடுகின்றார்
நாராயணனே நமக்கே ஓசி பாஸ் தருவான்
பாரோர் பலர் வருவார் கிளம்பேலோ எம்பாவாய்.

தெருப்பாவை -2
வையத்து வாழ்வீர்காள் , யாமும் சென்னை வாசிக்குச்
செய்யும் உதவி பல கேளீரோ , வேர்க்கடலை
நெய்யுடன் பால் பொடியும் உணவு உடைகளும்
பைய ஒரு கப்பலில் பாங்காய் அனுப்பினோம்
பொய்யாய் துயிலும் பரமனை எவ்வாறு எழுப்ப ?
கைவசம் உள்ள டாலரில்,கச்சேரிக்கு ப் போக ,
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாறு எண்ணி வேண்டிடுவோம் எம்பாவாய்.
வேர்கடலை நெய் = peanutbutter
பால்பொடி = milk powder
வையத்து வாழ்வீர்காள் , யாமும் சென்னை வாசிக்குச்
செய்யும் உதவி பல கேளீரோ , வேர்க்கடலை
நெய்யுடன் பால் பொடியும் உணவு உடைகளும்
பைய ஒரு கப்பலில் பாங்காய் அனுப்பினோம்
பொய்யாய் துயிலும் பரமனை எவ்வாறு எழுப்ப ?
கைவசம் உள்ள டாலரில்,கச்சேரிக்கு ப் போக ,
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாறு எண்ணி வேண்டிடுவோம் எம்பாவாய்.
வேர்கடலை நெய் = peanutbutter
பால்பொடி = milk powder
-
- Posts: 1951
- Joined: 07 Nov 2010, 20:01
அலங்கோல அலங்காரம்
அழகான ஆடையுடுத்தி அலங்காரம் செய்து,
மிடுக்காகச் செல்வாரடி - ஒரு நாள் திருமணக் கூத்திற்கு;
அரை டிராயரும் பனியனும் அணிந்து,
அலங்கோலமாய் வருவாரடி, நித்திய கலியாணத்தோன் சன்னிதிக்கு;
சட்டமும் நீதிமன்றத்தீர்ப்பும் தான்
ஆடையை நியதிப்படுத்தத் தேவையென்றால்,
மனிதனின் மூளை ஏதுக்கடி?
மண்டைக்காய் ஊறுகாய் போடுதற்கோ?
மிடுக்காகச் செல்வாரடி - ஒரு நாள் திருமணக் கூத்திற்கு;
அரை டிராயரும் பனியனும் அணிந்து,
அலங்கோலமாய் வருவாரடி, நித்திய கலியாணத்தோன் சன்னிதிக்கு;
சட்டமும் நீதிமன்றத்தீர்ப்பும் தான்
ஆடையை நியதிப்படுத்தத் தேவையென்றால்,
மனிதனின் மூளை ஏதுக்கடி?
மண்டைக்காய் ஊறுகாய் போடுதற்கோ?
-
- Posts: 1951
- Joined: 07 Nov 2010, 20:01
மன்னுயிர் வேசியர்
காசுக்காக உடலை விற்போரை வேசியர் என
கூசாது வசை மொழி கூறும் காசினியோரே!
அடுத்த அறையில் பெற்ற மகவு பாலுக்கு
அழும் பரிதாபமும் உண்டென்று அறிவீரோ?
மனச்சாட்சியதனைத் தயங்காது நாளும் விற்று,
மனை மாட்சியுடன் வாழ்ந்து கொண்டிருக்கும்
மனிதரில் இழிந்தோரை என்னவென்றழைப்பீர்?
மன்னுயிர் வேசியரென்றோ, சிந்திப்பீர்.
கூசாது வசை மொழி கூறும் காசினியோரே!
அடுத்த அறையில் பெற்ற மகவு பாலுக்கு
அழும் பரிதாபமும் உண்டென்று அறிவீரோ?
மனச்சாட்சியதனைத் தயங்காது நாளும் விற்று,
மனை மாட்சியுடன் வாழ்ந்து கொண்டிருக்கும்
மனிதரில் இழிந்தோரை என்னவென்றழைப்பீர்?
மன்னுயிர் வேசியரென்றோ, சிந்திப்பீர்.
-
- Posts: 1951
- Joined: 07 Nov 2010, 20:01
நெஞ்சு பொறுக்குதில்லையே
அரசியல் வாதிகளிடம் பிச்சை போன்று பெற்ற
அரை கிலோ அரிசியும், வேட்டி, புடவையுடன்
பொங்கல் திருநாள் கொண்டாடியென்ன கண்டீர்?
பொதுமக்கள் பிச்சைக்காரரான அவலமென்னே!
போதுமிந்த இழிவும், தன்மானமற்ற வாழ்வும்;
போதுமடா போதும், நெஞ்சு பொறுக்குதில்லையே.
அரை கிலோ அரிசியும், வேட்டி, புடவையுடன்
பொங்கல் திருநாள் கொண்டாடியென்ன கண்டீர்?
பொதுமக்கள் பிச்சைக்காரரான அவலமென்னே!
போதுமிந்த இழிவும், தன்மானமற்ற வாழ்வும்;
போதுமடா போதும், நெஞ்சு பொறுக்குதில்லையே.
-
- Posts: 1951
- Joined: 07 Nov 2010, 20:01
அப்துல் கலாம்

(Umbrella Repair Shop - Brother of APJ)
வந்தவன் எவனும் இங்கிருந்தெதையும்
வாரிக்கொண்டு போனதாகச் சரிதமில்லை
நொந்தோர்க்குதவி நற்பணி செய்தென்றும்
செந்தாமரை இலைமேல் நீர்த்துளியென
பட்டும் படாமல் மட்டோடு வாழ்ந்திட்டு
கெட்டுப்போனோரிடையேயும் கெடாமல்
நிலையாக நின்று நற்பெயரீட்டினோரில்
நின்பெயர் நிலைத்திருக்கும், இஃதுறுதி
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
கெட்டுப்போனோர் இடேயும் கெடாமல்
Is his best virtue
Is his best virtue
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
Repetition Deleted
-
- Posts: 1951
- Joined: 07 Nov 2010, 20:01
உனது கடன்
பெற்றவளையும் பெற்றவள் நீ, கொற்றவள் நீ;
பெற்றவரற்ற அனாதை நீ, பேரில்லாதவள் நீ;
மற்றவரற்றவளும் நீ, மருளும் நீ, அருளும் நீ;
குற்றமெனும் தீயவனம் களைக் கோடரியும் நீ;
மட்டிலாப் பேரண்ட நாயகியும் நீ, மட்டும் நீ;
வெட்டவெளியில் ஒற்றையாய் நிலைபெற்ற,
கிட்டற்கரிய மாணிக்கமும் நீ, கடைநாயேன்
கிட்டத்திலும் கிட்டமாய் இருப்பவள் நீயெனக்
கண்டுகொண்டிங்கு, உய்யவோர் வழிசெய்து,
மீண்டிங்கு பிறப்பினும், உன் நினைவறாதிருக்க
வேண்டி நின்றேன், நல்லருள் புரிகுவையோ?
அண்டி வாராதேயெனத் தள்ளிடாதே, தாயே;
மெத்தனமும் எத்தமும் நீக்கித் தூயவனாக்கி,
சித்தமதனில் உனது நினைவென்றும் அகலா
உத்தியதனை உரைத்திடுவதுன் கடனம்மா;
சத்தியமே, நித்தியமேயென நாளுமுன்னை,
தொழுதேத்திடவும் சாத்தியமாமோ, சொல்.

.
தாப தாபம்
இல்லாததை இடு ;
இலச்சையை விடு !
ஈர்க்கும் கோடு கிழி !
காக்கும் வட மொழி !
ப்ரத்யக்ஷம் பாலா,
17.06.2015.
தாப தாபம்
இல்லாததை இடு ;
இலச்சையை விடு !
ஈர்க்கும் கோடு கிழி !
காக்கும் வட மொழி !
ப்ரத்யக்ஷம் பாலா,
17.06.2015.
-
- Posts: 1951
- Joined: 07 Nov 2010, 20:01
உரிமை
குடிமகனைக் கோமகனாக்குவதே குடியரசு - குடி மகனல்ல;
படியேறி வந்து வோட்டு கேட்டவன், கொடிகட்டிப் பறக்க,
விடியாத இரவாகி, நடு ரோட்டில், குடியானவன் தவிக்க,
கொடியேற்று விழா நடந்தென்ன? நடக்காமலிருந்தென்ன?
சிறிதேனும் மனச்சாட்சி உமக்கு மிஞ்சியிருக்குதெனில்,
நெறி கெட்டு, நேர்மை கெட்டு, தறிகெட்டக் காளை போல் - பண
வெறியாட்டம் ஆடும் அவலத்தைச் சற்றுக் கண்ணாரக் காணீர்;
பறிபோனதே சுய மரியாதை - வெற்று கோஷமாகிப் போனதே;
கடமையென்றால் வீசையென்ன விலை எனக்கேட்கலாச்சே;
கண்ணியம் பணப் புயற்காற்றில் பஞ்சாகப் பறக்கலாச்சே;
கட்டுப்பாடு வெறும் மக்கட் தொகைப் பெருகலில் என்றாச்சே;
பட்டுப்போனதே, வீரர்கள் போராடிப் பெற்றுத் தந்த சுதந்திரம்.
இரந்துண்ணலை இகழ்ந்திட்ட இந்த பாரதப் பூமிதன்னிலே
இரந்துண்போர் தெருவோரம் நடைபாதைகளில் உறங்கலாச்சே
இரவெல்லாம் குடிபோதையில் கும்மாளம் அடித்தவன்
இரக்கமற்ற மிருகம்போல் காரோட்டி அவரைக் கொல்லலாச்சே
ஏழை தன் ஏழ்மைதன்னை தன் தலைவிதியென நொந்து
கோழைபோல் வாழும்வரைதான் இந்தக் கும்மாளமெல்லாம்
விழத்தெழுந்து தன் உரிமைதன்னை மார்தட்டிக் கேட்பானாகில்
கொழுப்பேறிக் கொடுமை புரிவோர் கூண்டோடு கைலாசம்தான்.

செந்தூர்
கந்தமாதனம் எனும் திருச்செந்தூர் கடற்கரைதனிலே,
விந்தைகள் பல புரிந்து, வேண்டுவோர் துயரம் தீர்க்க,
அந்தமாக இரு மடந்தையரோடே குடிகொண்ட திரு
கந்தமாக்கடவுளே! நின்னை சொந்தமாகவோர் சொல் கேட்பேன்
இந்த மாது இன்னும் எத்தனை காலம் சிந்தை கலங்கிடவோ?
வந்திவளையும் உந்தனுக்கு உரிமை கொண்டாடுவதெப்போ?
முந்தை வினை முடித்திடுவதும், முருகா! உன் கடனென்றேன்;
தந்தையுனைத் தடுத்தானோ? தாயும்தான் வழிமறித்தாளோ?
அந்தகன் வந்தென்னை வைதரணியில் தள்ள விடுவாயோ?
முந்தை நீ காத்த வான் அமராவதி வாழ்வும் வேண்டேன்,
எந்தையே! சிந்தை தீர்த்தென்னை ஆட்கொள்ள வாராயோ?
ஏந்திக் கரமிரண்டினையும் உன் சன்னிதியில் வேண்டினேனே.
விந்தைகள் பல புரிந்து, வேண்டுவோர் துயரம் தீர்க்க,
அந்தமாக இரு மடந்தையரோடே குடிகொண்ட திரு
கந்தமாக்கடவுளே! நின்னை சொந்தமாகவோர் சொல் கேட்பேன்
இந்த மாது இன்னும் எத்தனை காலம் சிந்தை கலங்கிடவோ?
வந்திவளையும் உந்தனுக்கு உரிமை கொண்டாடுவதெப்போ?
முந்தை வினை முடித்திடுவதும், முருகா! உன் கடனென்றேன்;
தந்தையுனைத் தடுத்தானோ? தாயும்தான் வழிமறித்தாளோ?
அந்தகன் வந்தென்னை வைதரணியில் தள்ள விடுவாயோ?
முந்தை நீ காத்த வான் அமராவதி வாழ்வும் வேண்டேன்,
எந்தையே! சிந்தை தீர்த்தென்னை ஆட்கொள்ள வாராயோ?
ஏந்திக் கரமிரண்டினையும் உன் சன்னிதியில் வேண்டினேனே.
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
நல்ல ராகத்தில் அமைத்துவிட்டால் நாட்டியத்திற்கு புதிதாக ஒரு அருமையான பதம் முருகனை தலைவனாக வைத்து. பாராட்டுக்கள்.
-
- Posts: 1951
- Joined: 07 Nov 2010, 20:01
Re: KavithaigaL by Rasikas
பொன்பைரவி அவர்களே,
நன்றி.
நன்றி.
-
- Posts: 1951
- Joined: 07 Nov 2010, 20:01
கிட்டிப்புள்ளு
கிட்டிப்புள்ளு விளையாட்டுக்கு கிரிக்கட்டென்று பெயராம்;
சாலையோரமும் தோப்பிலுமல்ல ஸ்டேடியத்தில் நடக்குதாம்;
ஒரு மணி இரண்டு மணியல்ல ஐந்து நாட்கள் நடக்குதாம்;
புதிதாக ஐபிஎல்லென்று பகலிரவு ஆட்டமும் நடக்குதாம்;
அரை நிருவாணமாகப் பெண்கள் அணிவகுத்து ஆடுவராம்;
அவருக்கு சியர் லீடரென்று பெயரிட்டு வேடிக்கை பார்ப்பராம்;
ஆட்டத்தில் பங்கு பெறுவோரை ஏலத்தில் தேர்ந்தெடுப்பராம்;
முன்னாள் அடிமைகளை ஏலத்தில் எடுத்தது கேட்டுள்ளேன்;
இன்னாளும் ஐஸிஸ் பெண்களை ஏலம் போடுகின்றாராம்;
கிட்டிப்புள்ளுக்காரர் ஏலம் மிக்கு கௌரவமாக நடக்குதாம்;
கோடி கோடியாக பணம் கொடுத்து ஏலம் எடுக்குறாராம்;
இந்த அடிமைகளுக்கு பாரத ரத்னா விருதும் கொடுக்குறாராம்;
கோடி கோடியாகப் பணமீட்டும் அடிமைகள் வாழ் நாட்டினிலே,
இக்கேவலத்தைக் கண்டுகொண்டிங்கு இருக்கத்தான் வேண்டுமா?
எடுத்துக்கொண்டு போடா என்னை, எமனே! புழுக்கம் தாளேன்.

பாரதத் தாயே! உனக்கோர் கேள்வி
தான் பிறந்த மண்ணும் தன்னைப் பெற்ற தாயும்,
வானுலக வாழ்வினும் சாலச்சிறந்ததென்றாரே - ஆயின்
பிறந்த மண்ணை அழித்துவிட்டுத்தான் ஓய்வேன் என
பிறந்த மண்ணிலேயே கோஷமெழுப்புகின்றாரே இன்று;
கேட்பாரில்லையோ? தன்மானம்தான் செத்துவிட்டதோ?
நாட்டுப்பற்றுக்காக தன்னுயிரைப் பணயம் வைத்து,
வீட்டைத் துறந்து, மனைவி மக்களைத் துறந்து,
தோட்டாவை எதிர்கொண்டு, வெஞ்சிறையும் சென்று, அவர்
வாங்கித்தந்த சுதந்திரம், வெறும் கற்பனையோ? பொய்யோ?
தூங்கிக்கிடக்கும் மக்களைத் தட்டியெழுப்ப, இன்னுமோர்
பாரதி தோன்றுவதெப்போவெனக் கேட்கின்றேன்,
பாரதத்தாயே! யாமெல்லாம் உன் மக்களன்றோ? நவில்வாய்.
வானுலக வாழ்வினும் சாலச்சிறந்ததென்றாரே - ஆயின்
பிறந்த மண்ணை அழித்துவிட்டுத்தான் ஓய்வேன் என
பிறந்த மண்ணிலேயே கோஷமெழுப்புகின்றாரே இன்று;
கேட்பாரில்லையோ? தன்மானம்தான் செத்துவிட்டதோ?
நாட்டுப்பற்றுக்காக தன்னுயிரைப் பணயம் வைத்து,
வீட்டைத் துறந்து, மனைவி மக்களைத் துறந்து,
தோட்டாவை எதிர்கொண்டு, வெஞ்சிறையும் சென்று, அவர்
வாங்கித்தந்த சுதந்திரம், வெறும் கற்பனையோ? பொய்யோ?
தூங்கிக்கிடக்கும் மக்களைத் தட்டியெழுப்ப, இன்னுமோர்
பாரதி தோன்றுவதெப்போவெனக் கேட்கின்றேன்,
பாரதத்தாயே! யாமெல்லாம் உன் மக்களன்றோ? நவில்வாய்.
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
கரையான் தொல்லை !
மண்ணையே தின்று இம் மண்ணுக்குள்ளே யே ஒளிந்து
கண்ணுக்கு தெரியாமல் எண்ணற்று இனம்பெருக்கி
கண் கவர் சிற்பம் நிறை வீட்டு நுழைவாயில்
வண்ண காஷ்மீர கம்பளங்கள் வழிபாட்டு
நுண் கலையமரப்பொருள் நூல்கள் சுவடிகளை
மண்ணோடு மண்ணாக்கி மடிய ச்செய்திடும்
கண்ணிலா கரையான்களை திண்ணமாய் ஒழித்திட
மண்ணுண்ட வாயனும் மண் சுமந்த தலையனும்
விண் விட்டு இம் மண் காக்க விரைந் தெப்போ வருவாரோ ?

Last edited by Ponbhairavi on 16 Feb 2016, 12:28, edited 1 time in total.
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
பச்சை துரோகம்.
கொத்தும் பறவையின் பார்வை படாமல்
பச்சைப் புழுவுக்கு புகலிடம் தந்த இலை
தன் கீழ் தவழ விட்டு தாலாட்டி காத்தது- அவ்விலையுடன்
செடியையே அரித்து தின்று கொழுத்த தப்புழு!!
கொத்தும் பறவையின் பார்வை படாமல்
பச்சைப் புழுவுக்கு புகலிடம் தந்த இலை
தன் கீழ் தவழ விட்டு தாலாட்டி காத்தது- அவ்விலையுடன்
செடியையே அரித்து தின்று கொழுத்த தப்புழு!!
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
ஆஹா ! மிக்க அருமை !கரையான் தொல்லை !
சிறந்த கவிதை; ஏற்ற தலைப்பு !பச்சை துரோகம்
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
P .Bala,
மிக்க நன்றி மீண்டும் நன்றி -மற்றவர்களுக்கும் தான்.
ராஜகோபலன்
மிக்க நன்றி மீண்டும் நன்றி -மற்றவர்களுக்கும் தான்.
ராஜகோபலன்
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
இயற்கையின் நியதி
.........................
பிழைத்த புழு கொழுத்திருந்தது
செடியை சாய்த்த பின்னும்--
கொத்த வந்த பறவை காத்திருந்தது
மெத்தனம் கொண்ட புழுவைத் தாக்கி
தனதாக்கி உணவாய்க் கொண்டிட--
கன கர்வம் பிடித்த புழு நெளிந்தது
வளைந்த கிளை இலை தின்று தீர்த்தது
களைத்தே சற்று கண்ணயர்ந்தது--பறவை
சலிக்காததைத் துவையலாக்கித் தின்றது...
Loved your poem, Ponbhairavi. So this response...

இன்னுமொரு வால்மீகி உருவாகிக்கொண்டிருக்கின்றாரோ?
-
- Posts: 1951
- Joined: 07 Nov 2010, 20:01
என் கேள்விக்கென்ன பதில்?
பத்தாண்டுதானேயாச்சு உம்மோடு குப்பைகொட்டி;
புத்தம்புதிதாக இப்போ இன்னொண்ணு வேணுமோ?
அப்படியேயிருக்கேன் நான், என்ன குறைச்சலெனக்கு?
மங்கலாக உள்ளது கொஞ்சம் - அதனால்தான் புதுசு;
மங்கலாக நீங்களானால், உங்களை நான் மாற்றலாமோ?
இப்படி ஏடாகூடமாகப் பேசாதே, உன்னையும் வச்சுக்கறேன்;
அப்படியொரு எண்ணமோ உங்களுக்கு? நான் போகிறேன்
(என்ன பதில் சொல்வது என் மூக்குக் கண்ணாடிக்கு?)
புத்தம்புதிதாக இப்போ இன்னொண்ணு வேணுமோ?
அப்படியேயிருக்கேன் நான், என்ன குறைச்சலெனக்கு?
மங்கலாக உள்ளது கொஞ்சம் - அதனால்தான் புதுசு;
மங்கலாக நீங்களானால், உங்களை நான் மாற்றலாமோ?
இப்படி ஏடாகூடமாகப் பேசாதே, உன்னையும் வச்சுக்கறேன்;
அப்படியொரு எண்ணமோ உங்களுக்கு? நான் போகிறேன்
(என்ன பதில் சொல்வது என் மூக்குக் கண்ணாடிக்கு?)
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
"அடி, மூக்குக்காரி நீ, உனக்கு வாயெதற்கு?" என்றுதான் 

-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
aஅரசி நன்றி
உங்கள் வழியில் தொடர்கிறேன்.
இலையை தின்று களித்திருந்த கணப்பொழுதில்
என்பில் அதனை வெயில் சுட்டு வாட்டியது
போர்வையை தின்றுவிட்டு இனி புலம்பி யாது பலன்.?
வானத்தில் வட்டமிட்ட பறவையிதை பார்த்து
பாய்ந்து வந்திங்கு புழுவதனை விழுங்கியது
-அதன் வயிற்றில் இருந்த வாரிசுகளையும் சேர்த்து !!
என்பில் அதனை வெயில் போல காயுமே
அன்பில் அதனை அறம் ------குறள்
உங்கள் வழியில் தொடர்கிறேன்.
இலையை தின்று களித்திருந்த கணப்பொழுதில்
என்பில் அதனை வெயில் சுட்டு வாட்டியது
போர்வையை தின்றுவிட்டு இனி புலம்பி யாது பலன்.?
வானத்தில் வட்டமிட்ட பறவையிதை பார்த்து
பாய்ந்து வந்திங்கு புழுவதனை விழுங்கியது
-அதன் வயிற்றில் இருந்த வாரிசுகளையும் சேர்த்து !!
என்பில் அதனை வெயில் போல காயுமே
அன்பில் அதனை அறம் ------குறள்
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
வால்மீகி
புற்றின் பெயருடையோன் புத்தகம் எழுதினான்
பெற்றவன் புலம்ப, நாடு துறந்த வில்வீரன் கதை
இற்றைக்கும் எப்பிறவிக்கும் இதம் தரும் நாமமுடை
கொற்றவன் குணங்களுக்கு மற்றவையெவை இணை?
புற்றின் பெயருடையோன் புத்தகம் எழுதினான்
பெற்றவன் புலம்ப, நாடு துறந்த வில்வீரன் கதை
இற்றைக்கும் எப்பிறவிக்கும் இதம் தரும் நாமமுடை
கொற்றவன் குணங்களுக்கு மற்றவையெவை இணை?
-
- Posts: 13754
- Joined: 02 Feb 2010, 22:26
Re: KavithaigaL by Rasikas
Arasi - a question...why is it that you consider a pair of glasses to be female? 
(I hope I've understood you correctly!)

(I hope I've understood you correctly!)
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
Ravi,
engaL kAla (our times) pair--see how the conversation reveals who is male of the species and who the female.The 'nI, nIngaL' addressing 'spec'ifies the gender, and no 'spec'ulation there
engaL kAla (our times) pair--see how the conversation reveals who is male of the species and who the female.The 'nI, nIngaL' addressing 'spec'ifies the gender, and no 'spec'ulation there

-
- Posts: 1951
- Joined: 07 Nov 2010, 20:01
Re: KavithaigaL by Rasikas
Ravi,
On a serious note, the Western approach to women has been 'use and throw'; but Eastern, particularly Indian traditions, it has been more equitable commitment on either side. Yes, there has always been inequality - that inequality is built into the nature. See the herd of bull and cows, and other animals also. We humans are in no way different from our ancestors - animals. In fact our brains and intellect have worked in a way to be more out of tune with nature and more wicked. The stark difference and efforts to reconcile are clearly brought out in our epics - particularly Ramayana - the difference between Dasaratha and Rama. But humans, as we are, we choose what is pleasant to us and not what is good - SrEyas and prEyas - as kaThopanishad would call it.
Your question is loaded - though in a lighter vein. But it is for real.
Surely, the solution does not lie in the Western model of women. In fact, it is more denigrating women and womanhood. There is a limit to which humans can be out of sync with nature.

Sri Govindan,
I think your view of both Eastern and Western treatment of women is probably not entirely correct.
You will have to agree with me that while India has a great history of putting some women on a pedestal, for the most part, in real life, it's been 'use and abuse', even for the average middle class woman - both professionally and at home.
By the same token, while your view of how the west treats its women is true in some contexts, an average middle class woman is treated with a lot more respect than you've been led to believe.
And yes, my question was merely in jest.

- Posts: 3051
- Joined: 03 Feb 2010, 04:44
Re: KavithaigaL by Rasikas
பெற்றவன் புலம்ப, நாடு துறந்த வில்வீரன் கதை
அரசி அவர்களே,
என்ன ஒரு சொல்லாட்சி. ஒரு தாழ்மையான வேண்டுகோள். சில வரிகளில் ஏன் ராமகாதையை எழுத்து வடிவில் தாங்கள் புனையக்கூடது என்பதே.
வாழ்க வளமுடன்,
தஞ்சாவூரான்
18 02 2016
அரசி அவர்களே,
என்ன ஒரு சொல்லாட்சி. ஒரு தாழ்மையான வேண்டுகோள். சில வரிகளில் ஏன் ராமகாதையை எழுத்து வடிவில் தாங்கள் புனையக்கூடது என்பதே.
வாழ்க வளமுடன்,
தஞ்சாவூரான்
18 02 2016
-
- Posts: 3051
- Joined: 03 Feb 2010, 04:44
Re: KavithaigaL by Rasikas
பொன்பைரவி அவர்களே,
கரையான் தொல்லை ஒரு அருமையான படைப்பு. மிகவும் ரசித்தேன்.
வாழ்த்துக்கள்.
தஞ்சாவூரான்
18 02 2016
கரையான் தொல்லை ஒரு அருமையான படைப்பு. மிகவும் ரசித்தேன்.
வாழ்த்துக்கள்.
தஞ்சாவூரான்
18 02 2016
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
தஞ்சாவூராரே,
நன்றி!
புனையத் தக்க புலவி நானில்லை--
மனையாளும் நான் மனம் போனபடி
கதைப்பதெல்லாம், மிதக்குமே, இராம
காதை கற்றறிந்தோர் ஆழ் கருத்திலே!
கனைத்து வளைய வரும் கர்த்தபம் நான்--
தினையளவே என் அறிவு! அது திண்ணமே!
அரச சபையில் யாழெடுத்துப் பாடவுமாகுமோ
அரசிக்கு? ஒரு நரம்பு மீட்டிப் பாடும் யாசகியவள்!
நன்றி!
புனையத் தக்க புலவி நானில்லை--
மனையாளும் நான் மனம் போனபடி
கதைப்பதெல்லாம், மிதக்குமே, இராம
காதை கற்றறிந்தோர் ஆழ் கருத்திலே!
கனைத்து வளைய வரும் கர்த்தபம் நான்--
தினையளவே என் அறிவு! அது திண்ணமே!
அரச சபையில் யாழெடுத்துப் பாடவுமாகுமோ
அரசிக்கு? ஒரு நரம்பு மீட்டிப் பாடும் யாசகியவள்!
-
- Posts: 1951
- Joined: 07 Nov 2010, 20:01
Re: KavithaigaL by Rasikas
உண்மைதான், ஒரு நரம்பு மீட்டும் யாசகி - மீரா போன்று - எத்தகைய யாசகம்!!arasi wrote:ஒரு நரம்பு மீட்டிப் பாடும் யாசகியவள்!
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
thanks Thanjavooran,