KavithaigaL by Rasikas
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
"Unanimous chorus" ditty, icing on the cake!
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
யாரோ?
திருமண மேடையில் பாடுவார் - ஆங்கே
ஒருவித போதையில் ஆடுவார்.
நறுமண அரகஜா பூசுவார் - ஆனால்
வறுமையின் பிடியிலே கூசுவார்.
கடுக்கண் பெரிதென அணிவார் - ஆனால்
கொடுமைப் பசியிலே நலிவார்.
இசையை அமுதாய்ப் பொழிவார் - செல்லும்
திசையெலாம் புகழைச் சேர்ப்பார் !
ப்ரத்யக்ஷம் பாலா,
30.07.2013.
.
யாரோ?
திருமண மேடையில் பாடுவார் - ஆங்கே
ஒருவித போதையில் ஆடுவார்.
நறுமண அரகஜா பூசுவார் - ஆனால்
வறுமையின் பிடியிலே கூசுவார்.
கடுக்கண் பெரிதென அணிவார் - ஆனால்
கொடுமைப் பசியிலே நலிவார்.
இசையை அமுதாய்ப் பொழிவார் - செல்லும்
திசையெலாம் புகழைச் சேர்ப்பார் !
ப்ரத்யக்ஷம் பாலா,
30.07.2013.
.
Last edited by Pratyaksham Bala on 31 Jul 2013, 08:09, edited 2 times in total.
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
arasi,Cml,shankar,
thanks.Nothing to beat Cml's effortless spontaneity.Margazhi's "unanimous chorus" bhajan implies a" jalra" in all hands.
.-rajagopalan
thanks.Nothing to beat Cml's effortless spontaneity.Margazhi's "unanimous chorus" bhajan implies a" jalra" in all hands.
.-rajagopalan
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
Visual imagery is getting richer!
Sachi can conjure up an illustration, if he's looking in...
Sachi can conjure up an illustration, if he's looking in...
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
அதிதி (Aditi) - வயது ஒன்று.

யுகம்
கம்ப்யூட்டரைத் தொட்டால்
வம்பு வரும் என்றெல்லாம்
கிலி பிடித்து அலையாது
எலி பிடித்து விளையாடும் அதிதி !
ப்ரத்யக்ஷம் பாலா,
30.09.2013.
.
அதிதி (Aditi) - வயது ஒன்று.

யுகம்
கம்ப்யூட்டரைத் தொட்டால்
வம்பு வரும் என்றெல்லாம்
கிலி பிடித்து அலையாது
எலி பிடித்து விளையாடும் அதிதி !
ப்ரத்யக்ஷம் பாலா,
30.09.2013.
.
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
'eli piDithu viLaiyAdum' arumaip pEthi aditi, enRu ninaikkiREn...

-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
வெட்டி ஒட்டுதல் கம்ப்யுட்டரில் ஒரு உத்தி மட்டுமன்று.தற்கால ஓவியத்தில் ஒரு பாணியும் கூட (collage) .இந்த வெட்டி ஒட்டுதலை கவிதையில் புகுத்தியவர் Jacques Prévert.அதிகம் புழக்கத்தில் உள்ள இரண்டு சொற்றொடர்களை எடுத்துக்கொள்வார் .ஒன்றிலிருந்து ஒரு சொல்லை வெட்டி மற்றதிலும் அதிலிருந்து ஒரு சொல்லை வெட்டி இதிலும் மாற்றி போடுவார் . படிக்கும்போது சற்றே விபரீத மாகவும் நகை சுவையுடன் கூடியதாகவும் இருக்கும்
அவருடைய Cortège எனும் கவிதையிலிருந்து நான்கு வரிகளை கீழே தந்திருக்கிறேன்
Un vieillard en or avec une montre en deuil
Une reine de peine avec un homme d’Angleterre
Un professeur de porcelaine avec un raccommodeur de philosophie
Un côntroleur de la Table Ronde avec des Chevaliers de la Compagnie du Gaz de Paris
சொற்றொடர் அமைப்பு ஒவ்வொரு மொழிக்கும் தனித் தன்மை வாய்ந்தது .இருப்பினும் மேற்கண்ட வரிகளை ஓரளவிற்கு தமிழாக்க முயன்றிருக்கிறேன் :
தங்கத்தாலான முதியவரும் சோகமிகு கை கடிகாரமும்
வேலைக்கார ராணியும் இங்கிலாந்து ஆசாமியும்
பீங்கான் பேராசிரியரும் தத்துவ ஒட்டவைப்பவரும்
வட்ட மேசை ஆய்வாளரும் பாரிஸ் gas கம்பெனி குதிரை வீரர்களும்
இதே பாணியில் வெட்டி ஓட்டல் கவிதை தமிழில் செய்து பார்க்கத் தோன்றியது . இதோ :
சோழர் கால கிரிக்கட் ஆட்டக்காரரும் run outஆன சிற்பங்களும்
ராகம் கண்டுபிடிக்கும் எருமையும் கயிறை அறுத்துக்கொண்டு ஓடிய 3 வயது சிறுமியும்
நீச்சல் உடையில் பாகிஸ்தான் பயங்கர வாதிகளும் எல்லை தாண்டிய கவர்ச்சி நடிகையும்
பிணத்துக்கு பாராட்டு விழாவும் மந்திரிக்கு இறுதிச்சடங்கும்
நீங்களும் சில எழுதுங்களேன் !!

Last edited by Ponbhairavi on 14 Oct 2013, 08:02, edited 1 time in total.
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
Very interesting, ponbhairavi, this cut and paste--like a magnetic tile game (forget the name) which comes with many words with which you can create poetry on your refrigerator door!
Another angle: to see more sense than we see at a glance in these lines. For example:
miDas mannan, mudiyavan maNikkaTTil
maNiyAchu, enum maraNathin aRivippu...montre et mort
From your lines:
Makes a lot of sense--kuzhandai arumai theriyAdu, eRumai pOl oru appan, adODu viLaiyADi magizhAdu adai 'en' kuzhandai (adu kiDakkiRadu!) oru genius enRu sollikkoLLa
adai oru performing automaton AkkinAl, budhiSAlik kuzhandai kayiRai aRuthuk koNDu ODAdO?
Another uthi:
Transposing, with your other line:
pArATTu vizhAvukkup piNamum, (Aramba vizhAvukku varum) mandiri iRudich chaDangukkum
Another angle: to see more sense than we see at a glance in these lines. For example:
miDas mannan, mudiyavan maNikkaTTil
maNiyAchu, enum maraNathin aRivippu...montre et mort
From your lines:
Makes a lot of sense--kuzhandai arumai theriyAdu, eRumai pOl oru appan, adODu viLaiyADi magizhAdu adai 'en' kuzhandai (adu kiDakkiRadu!) oru genius enRu sollikkoLLa
adai oru performing automaton AkkinAl, budhiSAlik kuzhandai kayiRai aRuthuk koNDu ODAdO?

Another uthi:
Transposing, with your other line:
pArATTu vizhAvukkup piNamum, (Aramba vizhAvukku varum) mandiri iRudich chaDangukkum

-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
Arasi,
thanks. You have actually widened the vista of the collage poetry. In my earlier posting I have dabbled with newspaper headings. How about thirukkural?here is one:
கற்க கசடற கற்பவை கற்றபின்
அன்றே மறப்பது நன்று .
and the left overs:
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
நிற்க அதற்கு தக.

தீபாவளி மலரில் வந்த பேராசிரியர் பசுபதி அவர்கள் கவிதை மிக உயர்ந்தவை அதை வேறு ஒரு தடத்தில் படித்தபோது எனக்குத் தோன்றிய சில வரிகள் இவை.
திருப்பு முனைகளில் திசை திருப்பிய பெண்டிர்
விளையாட்டுப் பருவத்தோன் வில்லால் பட்ட அடி
களையாமல் உளம் வைத்து கான் ஏகச் செய்துவிட்டாள்
முடி சூடும் முதல் நாளே, மந்தரை தன் தந்திரத்தால்
அடி பட்ட பெண்மையின் ஆழ் மன ச் சீற்றமிது.
என்றோ தந்த வர மிரண்டை மன்றாடி ,கொண்டவனைக்
கொன்றேனும் அவை பெற்று நாடக மயிலானாள்.
போர்க்களம் என்ன பொழுது போக்கு பூங்காவா
சீர் மனையாளை அங்கே உடன் அழைத்து செல்வதற்கு ?
தார் வேந்தன் தசரதன் தந்த விலை தன உயிராம்
பெண்மையின் காதல் உணர்வினை கிண்டல் செய்து
ஆண்மையின் உருவான அவன் அவள் மூக்கறுததான்
சீறி எழுந்தது பெண்மை சினத்தோடு அவமானம்
சீர் அழிந்து போனது சீரிலங்கை பேரரசு
பங்க முற்ற பெண்ணொருத்தி பழிவாங்க திட்டமிட
மங்கல நாண் இழந்தாள் மாசிலா மண்டோதரி
தங்கத் தரம் கொண்ட தாரைக்கும் அதே கதி
பொங்கும் பெரு வெள்ளம் மான்களையும் மாய்ப்பது போல்
எண்ணிலா இன்னலுக் இலக்கான பெண்திலகம்
மண்ணின் மகள் தீக்குளித்து எழுந்த பின் தான்
ஏற்கும் இப்பாழ் உலகம் என்றாரோ சொல்வதற்கு
கற்பின் கனலி அவள் செய்திட்ட குற்றமென்ன?
"நாடக மயில் ", "கற்பின் கனலி" ;இவை கம்பன் தரும் அடை மொழி

Last edited by Ponbhairavi on 06 Nov 2013, 22:07, edited 1 time in total.
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
WOW!
மிக்க நன்றி பொன்பாரதி!
பசுபதி பா பாப்பா பாக்கி பா சமைத்தான் பொன்பைரவி
(can you figure out the meaning?)
மிக்க நன்றி பொன்பாரதி!
பசுபதி பா பாப்பா பாக்கி பா சமைத்தான் பொன்பைரவி
(can you figure out the meaning?)
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
my guess is
பாப்பா=பாவலர்கள் பா i e original story.
பாக்கி பா=other observations
அப்பாவி இப்பாவி எப்பா தப்பா புனைந்திடினும்
தப்பாது உவப்பார் cml அப்பப்பா!
பாப்பா=பாவலர்கள் பா i e original story.
பாக்கி பா=other observations
அப்பாவி இப்பாவி எப்பா தப்பா புனைந்திடினும்
தப்பாது உவப்பார் cml அப்பப்பா!
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
Pasupathy and Ponbhairavi,
rasithEn...
CMl,
um iDugaigaLum thAn.
pAppA=indak kavidai (pA-ip-pA) ??
rasithEn...
CMl,
um iDugaigaLum thAn.
pAppA=indak kavidai (pA-ip-pA) ??
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
பா = கவிதை
புணரியல் விதிப்படி
பசுபதி பா பாப்பா பாக்கி பா சமைத்தான் பொன்பைரவி becomes
பசுபதி பா பா அப்பா பா ஆக்கி பா சமைத்தான் பொன்பைரவி
பொருள்
பசுபதி பா பா = பசுபதியின் கவிதை (நல்ல) கவிதை
அப்பா பா ஆக்கி பா= அந்த (நல்ல) கவிதையை (மேலும் நல்ல) கவிதையாக ஆக்கி கவிதையாக
சமைத்தான் பொன்பைரவி
மேலெழுந்த வாரியாக இது 'வஞ்சப் புகழ்ச்சி அணி'.
புணரியல் விதிப்படி
பசுபதி பா பாப்பா பாக்கி பா சமைத்தான் பொன்பைரவி becomes
பசுபதி பா பா அப்பா பா ஆக்கி பா சமைத்தான் பொன்பைரவி
பொருள்
பசுபதி பா பா = பசுபதியின் கவிதை (நல்ல) கவிதை
அப்பா பா ஆக்கி பா= அந்த (நல்ல) கவிதையை (மேலும் நல்ல) கவிதையாக ஆக்கி கவிதையாக
சமைத்தான் பொன்பைரவி
மேலெழுந்த வாரியாக இது 'வஞ்சப் புகழ்ச்சி அணி'.
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
appppA! idaRku mEl enna Solla?
'mElum pA Akkip pArpadaRku Edu migudi?' enRu kETTal, migudiyAgavE (more) pADuvar nam kavirAyar anRO!
vAzhga!
'mElum pA Akkip pArpadaRku Edu migudi?' enRu kETTal, migudiyAgavE (more) pADuvar nam kavirAyar anRO!
vAzhga!
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
CML Arasi thanks..
நெஞ்சில் நஞ்சில்லாப்
புகழ்ச்சியில் வஞ்சமில்லை
மணியான சொல்லை
பணிவோடு அணிவோர்க்கு
(to justify Arasi's statement that it makes me to write more.)

translation of a french poem
உன் வாழ்வினை முடிப்பதற்காக நான வரவில்லை .
உன் வாழ்வினை முடிப்பதற்காக நான வரவில்லை
அதை உனக்கு வேறு ஒரு கோணத்தில் காண்பிக்கவே வந்திருக்கிறேன்
அது தான் கிராம புறத்தின் ஒளி கடலின் ஒளி என்றும் கூறலாம்
இரு புறமும் சுவர்கள் அடைத்த நீண்ட தாழ்வாரத்தில்
வெளியேற வழி தெரியாத வியூகத்தில் நீ
காலத்தைப் பின்தொடர்ந்து சென்றுகொண்டிருந்தபோது
அச்சுவர்களுக்கு மேல் இருந்து நான பார்த்துக் கொண்டிருந்தேன்
உன் தடம் வசந்த காலத்தில் போய்கொண்டிருந்தது
நேர்கோடான கனவின் முடிவில்
உன் இலக்கின் மையப் புள்ளியை குறிவைத்து அதுதான்
வான மேனும் மலையைக் குடைந்து சென்று
விண் முகட்டை அடையும் சுரங்கப் பாதை என நினைத்து
நடந்த விபத்துக்கள் உனக்கு நினைவில்லை
பேரிழப்பிற்குப் பின் காலால் நடந்து சென்றாய்
அனைத்தையும் இழந்துவிட்ட மனிதனைப்போல்
நாடு கடத்தப்பட்ட ஒருவன் மாலையில்
தன பழைய வீட்டின் வாயிலைததேடி தெருவில் வருதல் போல்
யாரேனும் ஒளிந்திருந்து பிடித்துவிடக்கூடும் என்பதைப்
பற்றிக் கூட அஞ்சாத அளவிற்கு ஒய்ந்து போய்
மனைவியையும் மக்களையும் ஒரு முறை காண்பதற்காக
அப்போதுகூட நான அங்கேதான் தடுப்புகளுக்குப் பின்னால் இருந்து
எல்லாச் ஜன்னல்கள் வழியேயும் செய்கை காட்டினேன்
பார்வை அற்றவன் போல் நீதான் திரும்பிக்கூட பார்கவில்லை
நான எங்கோ இறுதி நிலையில் இருப்பதாக எண்ணிக்கொண்டு
பாதை தவறியதற்குப்பின் என்னையும் உன் ஆன்மாவையும்
உன் ஜப மாலையின் அனைத்து மணிகளையும் ஒருமிக்க
இழந்துவிட்டதாகவும் எண்ணிக் கொண்டாய்
ஆனால் உலகத்தின் அரவம் இப்போது தான் உன் காதில் விழத் தொடங்கியிருக்கிறது
.நான அதனுள்ளும் இருக்கின்றேன்
தடுமாறித் திரிந்த பிறகு தான் நீ என்னுடன் வந்துகொண்டிருக்கிறாய்
Jean –Pierre Lemaire (1985)
நான எப்போதும் உன்னுடன் தான்இருக்கிறேன் நீ தான் கண்டுகொள்ளவில்லை அப்படி செய்திருந்தால் இந்த சூதாட்டத்தில் சகுனி வெற்றி பெற்றிருக்க முடியுமா என்று கிருஷ்ணன் யுதிஷ்டிரரை கேட்கும் மகாபாரத காட்சி நம் நினைவுக்கு வருகிறது

the french original is given below:
Je ne suis pas venue conclure ta vie.
Je ne suis pas venue conclure ta vie
Mais te la montrer dans une autre lumière
Celle de la campagne ou bien de la mer
Par-dessus le double mur du labyrinthe
Où tu poursuivais le temps dans un couloir
J’ai vu tes rails traverser le printemps
viser au bout d’un reve rectiligne
le noir de la cible,un tunnel à l’horizon
qui passerait sous la montagne du ciel
De l’accident ,tu ne te souviens plus
Tu vas a pied depuis la catastrophe
Comme un homme ruiné ,un proscrit le soir
Cherchant dans la rue son ancienne porte
Si las qu’il renonce à craindre l’embuscade
Pour revoir une fois sa femme et ses enfants
Pourtant,j’etais debout derrière les barriers
Je faisais signeà toutes les fenetres
Sans que se détournat ton profil aveugle
M’imaginant au loin ,à la derniere gare
Tu as cru me perdre avec ton che min
Ton ame et tous les grains de ton chapelet
Mais je m’insinue dans la rumeur du monde
Qui commence juste a te parvenir
Et c’est en errant que tu m’accompagnes
Jean-Pierre Lemaire,
visitation (1985

(277)
பிறவி
பதுமையாயிராதே எழு!
புதுமையாயினிதே உழு!
மதமாச்சரியங்களை விடு;
நிதமாச்சரியங்களைக் கொடு!
துன்பவினைகளைத் தடு;
அன்பினையெங்கும் நடு!
மனமொன்றி தினம் தொழு!
மன நிறைவுடனே விழு!
ப்ரத்யக்ஷம் பாலா
19.11.2013
பிறவி
பதுமையாயிராதே எழு!
புதுமையாயினிதே உழு!
மதமாச்சரியங்களை விடு;
நிதமாச்சரியங்களைக் கொடு!
துன்பவினைகளைத் தடு;
அன்பினையெங்கும் நடு!
மனமொன்றி தினம் தொழு!
மன நிறைவுடனே விழு!
ப்ரத்யக்ஷம் பாலா
19.11.2013
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(277)
பிறவி
பதுமையாயிராதே எழு!
புதுமையாயினிதே உழு!
மனமொன்றி தினம் தொழு!
மன நிறைவுடனே விழு!
ப்ரத்யக்ஷம் பாலா
19.11.2013
பிறவி
பதுமையாயிராதே எழு!
புதுமையாயினிதே உழு!
மனமொன்றி தினம் தொழு!
மன நிறைவுடனே விழு!
ப்ரத்யக்ஷம் பாலா
19.11.2013
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
vizhu avan pAdamE
thozhu avan nAmamE
uzhu anbu nilamonRE
ezhu enRum pudumaiyilE!
thozhu avan nAmamE
uzhu anbu nilamonRE
ezhu enRum pudumaiyilE!
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(278)
காலம்
வெற்றுச் சுவரிலே விந்தைகள் தெரியுது,
சற்றுமுன் பார்த்தது சட்டென மறக்குது,
உற்ற தோழனின் உருவம் மறையுது,
பெற்ற பிள்ளையின் பெயரும் மாறுது ...
..........-- பற்றுகள் அறுந்து பறக்கும் நேரமிது !
ப்ரத்யக்ஷம் பாலா
20.11.2013

(279)
குடும்பத் தலைவியின் தினப்படிச் செலவு
குடுகுடுப் பாண்டி வந்தார் - பின்
டுருடுரு உறுமி மேளம்!
அடுத்தது பூம்பூம் மாடு;
தொடர்ந்தது தொம்பங் கூத்து!
இல்லை எனச் சொல்லாது
எல்லார்க்கும் இட்ட பின்னே
மிஞ்சியதைக் கொடுத்தாள்
உஞ்சு வ்ருத்திக் கலைஞருக்கு.
ப்ரத்யக்ஷம் பாலா,
21.11.2013.
குடும்பத் தலைவியின் தினப்படிச் செலவு
குடுகுடுப் பாண்டி வந்தார் - பின்
டுருடுரு உறுமி மேளம்!
அடுத்தது பூம்பூம் மாடு;
தொடர்ந்தது தொம்பங் கூத்து!
இல்லை எனச் சொல்லாது
எல்லார்க்கும் இட்ட பின்னே
மிஞ்சியதைக் கொடுத்தாள்
உஞ்சு வ்ருத்திக் கலைஞருக்கு.
ப்ரத்யக்ஷம் பாலா,
21.11.2013.
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(280)
கூத்து
நல்லாயிருக்குதடீ நீ செய்யும் கூத்து - யாரும்
இல்லாத நேரத்தே இப்படியா அடம்பிடிப்பே?
பொல்லாப்பு வரும்முன்னே பழிவந்து சேரும்முன்னே
கல்லாத மாமன்நான் கரம்பிடிப்பேன் அழுவாதே!
ப்ரத்யக்ஷம் பாலா
22.11.2013.

(281)
வேலனருள்
காலை, மதியம், மாலை வேளையென
வேலனைப் போற்றும் வேள்வியை நடத்து!
கலைத்திறன் கூடும்; கவலைகள் மறையும்!
அலையெனத் தொடரும் அல்லல்கள் அகலும்!
இலையெனாதளிக்க இன்னருள் கிட்டும்!
நிலைபெறும் வெற்றி; நிம்மதி கிடைக்கும்!
ப்ரத்யக்ஷம் பாலா
23.11.2013
வேலனருள்
காலை, மதியம், மாலை வேளையென
வேலனைப் போற்றும் வேள்வியை நடத்து!
கலைத்திறன் கூடும்; கவலைகள் மறையும்!
அலையெனத் தொடரும் அல்லல்கள் அகலும்!
இலையெனாதளிக்க இன்னருள் கிட்டும்!
நிலைபெறும் வெற்றி; நிம்மதி கிடைக்கும்!
ப்ரத்யக்ஷம் பாலா
23.11.2013
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(282)
ம்...?
சொந்த பந்தங்கள் சுற்றிலும் நிற்பர்.
விந்தைக் காட்சிகள் விட்டத்தில் தெரியும் .
நிந்தனை செய்தவர் நினைவுக்கு வருவர் ..
வெந்தயக் கசப்பு வாயில் நிலைக்கும் ...
மந்திர ஓசைகள் மனதை மயக்கும் ...
சந்திர சூரியன் .மெ.ல்.லே ..ம..றை..யு...ம் ... ... !
ப்ரத்யக்ஷம் பாலா
24.11.2013.

(283)
நச்சரவு
பெருங்காயப் பையெடுத்துப் பொருள்வாங்கச் செல்லும்போது
...............பின்னாலே வந்து என்னைத் தொந்தரவு செய்கிறாளே!
திருக்கோயில் சென்றுவர நீறுபூசி நிற்கும்போது
...............முன்னாலே வந்து என்னை மனம்மயக்கப் பார்க்கிறாளே!
தெருவோர நடையோரம் தபால்வாங்கித் திரும்பும்போது
...............கண்ணாலே சாடைகாட்டிக் கீழுதட்டைக் கடிக்கிறாளே!
பெரும்பாடாய்ப் போச்சு இது; படிப்பெதுவும் ஓடவில்லை!
...............பின்னாலே நிற்கிறாளோ? படபடப்பாய் இருக்குதையே!
ப்ரத்யக்ஷம் பாலா
26.11.2013

(284)
நம்பிக்கை
அந்திப் பொழுதிலே அல்லாடும் போதிலே
தொந்தி கணபதி வந்தெனைக் காப்பான்!
விளையாடத் துணைக்கு ஏங்கிடும் போதிலே
இளையவன் கார்த்தி அக்கணம் தோன்றுவான்!
பேசிக் களித்திட துணைதேடும் போதிலே
மாசிலாக் கேசவன் ஓடோடி வருவான்!
அன்பான வார்த்தைக்குத் தவித்திடும் போதிலே
அன்னை பராசக்தி ஆறுதல் கூறுவாள்!
ப்ரத்யக்ஷம் பாலா,
27.11.2013.

(285)
உந்தல்
தஞ்சம் அடைந்திட்ட தலத்திலும் உணவில்லை
உஞ்சு விருத்தியிலும் ஒன்றும் கிட்டவில்லை
கொஞ்சம் இருந்த பழங் கஞ்சியும் தீர்ந்தது - ராமா!
பஞ்சத்தைப் பற்றி பாடுகிறேன் கேள்!
ப்ரத்யக்ஷம் பாலா,
28.11.2013.
உந்தல்
தஞ்சம் அடைந்திட்ட தலத்திலும் உணவில்லை
உஞ்சு விருத்தியிலும் ஒன்றும் கிட்டவில்லை
கொஞ்சம் இருந்த பழங் கஞ்சியும் தீர்ந்தது - ராமா!
பஞ்சத்தைப் பற்றி பாடுகிறேன் கேள்!
ப்ரத்யக்ஷம் பாலா,
28.11.2013.
-
- Posts: 1951
- Joined: 07 Nov 2010, 20:01
Re: KavithaigaL by Rasikas
சிரித்துக்கொண்டே அழுகின்றேன்,
அழுதுகொண்டே சிரிக்கின்றேன்,
போற்றத்தக்கோர் வீழ்ந்ததைக்கண்டு அழுகின்றேன்;
வீழ்ந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லையெனக்கேட்டு சிரிக்கின்றேன்
அன்றோர் நாளிருந்ததாம், கேட்டதுண்டு, கண்டதில்லை
கண்கூடக் காணக் கொடுத்துவைக்கவில்லை,
ஆகாயம் அளவிய புகழோடிருந்தனராம், பேர், ஊரில்லாத பெரியோர் ஒருவர்
ஊரெல்லாம் திரண்டுவந்து, 'காணக்கிடைக்குமா' என்று கண்டு பேறுபெற்றனராம்
கொடுக்கட்டுமா, கொடுக்கட்டுமா என்று கெஞ்சி நின்றனராம்
கொடுப்பதானால் அவனுக்குக் கொடு, அவனடியாருக்குக் கொடு என்று
கொடுத்தவனையும் தடுத்து, பிச்சைக்காரன் கொடுத்த சல்லிக்காசு பெரிதென
யாதும் கொள்ளாமல், 'அவன் இருக்கின்றான்' என்றிருந்தனராம்
நடமாடும் தெய்வமென்று, நாடும், உலகும் நண்ணிவந்து,
'நாலு சொல் சொல்லமாட்டாரா' என்று பழிகிடந்ததாம் தொண்டர் கூட்டம்
நாள் மாறியது, தலைமுறை மாறியது, அங்கோர் வெறுமை
வேதாந்தமும், நாதாந்தமும் பேசிய காலம் மாறி, பஞ்சாங்க விளக்கம் கூற
சரிதான், இது பழையகதை - கேட்டுப் புளித்த கதையென்று
உண்மைத் தொண்டர் விலகியோட, இதோ நான், இதோ நானென்று
பணப்பைகள் நாடிவந்து செல்வம் கொட்ட, மாடமென்ன, கூடமென்ன,
வானளாவிய மாளிகைகள் நிற்கலாயினவந்தோ
சேர்த்த பணத்தை வட்டிக்குவிட்டு, குட்டிபோட்டதே கோடிகோடியாம்
கடன்கார வேங்கடவனுக்கு ஆடையாபரணங்களிட்டனராம்,
அவன் கேட்டானா எனக்குக் கொடென்று? ஆங்கோர் ஏழைக்கு
அன்னதானம் செய்தால் கிட்டும் புண்ணியம், ஆண்டவனுக்கு
கோடிகோடியாகப் படையலிட்டாலும் கிட்டுமோ சொல்வீர்.
நான் பேசுவது நாத்திகமென்றால், நாத்திகன் நானய்யா
போமய்யா போம், பொன் திரட்டும் பணியே பொன்னம்பலத்தான்
பணியென நாளும் வாழ்ந்திடுவீர், உலகம் செழிக்கும் காணீர்.

(286)
சாகசம்
பிஞ்சுக் கரம் நீட்டி
அஞ்சும் முகம் காட்டி
கொஞ்சும் இதழ் மீட்டி
கெஞ்சும் அழகே தனி!
ப்ரத்யக்ஷம் பாலா,
28.11.2013.
சாகசம்
பிஞ்சுக் கரம் நீட்டி
அஞ்சும் முகம் காட்டி
கொஞ்சும் இதழ் மீட்டி
கெஞ்சும் அழகே தனி!
ப்ரத்யக்ஷம் பாலா,
28.11.2013.
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(287)
பஜகோவிந்தம் (18)
மரத்தடி படுக்கை! கோயிலில் இருக்கை!
தரையிலே தூக்கம்! தோலிலே ஆடையென
முற்றும் துறந்து போகத்தை விடுவீர் !
சற்றேனும் இதைவிட சுகமேதும் உண்டோ ?
ப்ரத்யக்ஷம் பாலா,
29.11.2013.
பஜகோவிந்தம் (18)
மரத்தடி படுக்கை! கோயிலில் இருக்கை!
தரையிலே தூக்கம்! தோலிலே ஆடையென
முற்றும் துறந்து போகத்தை விடுவீர் !
சற்றேனும் இதைவிட சுகமேதும் உண்டோ ?
ப்ரத்யக்ஷம் பாலா,
29.11.2013.
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(288)
சுவாமியே ஐயப்பா!
வண்ணத்தில் ஆடை கட்டி
எண்ணத்தைச் சீராய் வைத்து
தலையிலே மூட்டை தூக்கி
தொலைவிலே காட்டை நோக்கி
நடையிலே வேகம் கூட்டி
தடையெலாம் நேரே தாண்டி
வழியெலாம் கோஷம் போட்டு
எழிலுடை மலையை ஏகி
பதினெட்டாம் படியை எட்டி
கதிபெறக் கதறி நிற்போம்!
சுவாமியே ஐயப்பா !
ப்ரத்யக்ஷம் பாலா,
29.11.013
சுவாமியே ஐயப்பா!
வண்ணத்தில் ஆடை கட்டி
எண்ணத்தைச் சீராய் வைத்து
தலையிலே மூட்டை தூக்கி
தொலைவிலே காட்டை நோக்கி
நடையிலே வேகம் கூட்டி
தடையெலாம் நேரே தாண்டி
வழியெலாம் கோஷம் போட்டு
எழிலுடை மலையை ஏகி
பதினெட்டாம் படியை எட்டி
கதிபெறக் கதறி நிற்போம்!
சுவாமியே ஐயப்பா !
ப்ரத்யக்ஷம் பாலா,
29.11.013
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(289)
பக்தா! விடு தளை!
எத்தனை ஆண்டாக இவற்றைக் காக்கிறாய்?
இத்தனை பொருளிலும் ஆசையா உனக்கு?
செத்தபின் வருமா சொத்தும் புதையலும்?
பித்தனுக்கு அளித்திடு! பிறவிப் பயனுறும்!
ப்ரத்யக்ஷம் பாலா,
30.11.2013.

(290)
ஏமாற்றம்
மந்திரத்தைப் பலமுறை மனதுக்குள் சொன்னபடி
முந்திரித் தோப்புக்கு முனைப்புடன் சென்றான்.
காற்று வாங்கியிருந்துக் காத்ததுதான் மிச்சம்;
நேற்று பார்த்த கிளி நினைத்தபடி வரவில்லை!
ப்ரத்யக்ஷம் பாலா,
30.11.2013

(291)
அடிப்படை
எல்லே! இதைக் கேள்!
புல்லே ஆசனம்!
கல்லே ஆலயம்!
சொல்லே படையல்!
ப்ரத்யக்ஷம் பாலா,
01.12.2013.
அடிப்படை
எல்லே! இதைக் கேள்!
புல்லே ஆசனம்!
கல்லே ஆலயம்!
சொல்லே படையல்!
ப்ரத்யக்ஷம் பாலா,
01.12.2013.
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(292)
இனிதே!
கற்றவை எல்லாம் கருத்தில் வந்திடும்!
பெற்றவர் நினைவு பெரிதாய் நின்றிடும்!
உற்றவர் அனைவரும் இனிதாய்த் தெரிவர்!
பெற்ற வெற்றிகள் மனதை நிறைக்கும்!
பற்றிய பதங்கள் பரவசம் அளித்திடும் !
சுற்றிலும் வானவர் சூழ்ந்து வாழ்த்துவர் !!

(293)
தெளிவு
கண்ணை வெட்டிச் சிரிக்கிறாளே,
காலைக் கட்டிப் போட்டு விட்டால்?
கையைக் கட்டி வைக்க வேண்டும்;
நடையை எட்டிப் போட வேண்டும்!
ப்ரத்யக்ஷம் பாலா,
02.12.2013.
தெளிவு
கண்ணை வெட்டிச் சிரிக்கிறாளே,
காலைக் கட்டிப் போட்டு விட்டால்?
கையைக் கட்டி வைக்க வேண்டும்;
நடையை எட்டிப் போட வேண்டும்!
ப்ரத்யக்ஷம் பாலா,
02.12.2013.
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(294)
எதிர் கொள் !
மிரட்டும் மாடா? மடக்கி அடக்கலாம் !
திருகும் நோயா? துரத்த வழியுண்டு !
வரட்டும் பார்க்கலாம், பயந்து நடுங்காதே !
விரட்டத் தெரிந்தோரை வம்பு என் செயும் ?
ப்ரத்யக்ஷம் பாலா,
03.12.2013.

(295)
கூத்தன்
கோடித் தேனுடை மலர்கள்
தேடி, கார்குழல் சடையில்
சூடி, செந்தழல் கையோன்
ஆடும் கூத்துகள் பலகோடி!
ப்ரத்யக்ஷம் பாலா,
03.12.2013.
கூத்தன்
கோடித் தேனுடை மலர்கள்
தேடி, கார்குழல் சடையில்
சூடி, செந்தழல் கையோன்
ஆடும் கூத்துகள் பலகோடி!
ப்ரத்யக்ஷம் பாலா,
03.12.2013.
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(296)
உலகு
கெட்டி மேளம் கொட்டு; பட்டுத் துண்டு கிட்டும்.
வெட்டி விறகு போடு; சல்லாத் துண்டு கிட்டும்.
முட்டி தேய ஆடு; பெரும் கைத்தட்டு கிட்டும்.
ரொட்டி சுட்டுப் போடு; துட்டு வந்து கொட்டும்!
ப்ரத்யக்ஷம் பாலா,
04.12.2013.

(297)
ஆசைகள்
கயிலைத் தடாகத்தில் கிடந்து திளைக்கவேண்டும்!
மயிலில் பறந்துசென்று மதியைச் சூடவேண்டும்!
ஆதவன் அனலின் மீது ஆடி மகிழவேண்டும்!
மாதவம் செய்துநின்றால் மனமொப்ப நடந்திடுமோ?

(299)
ஐயம்
உற்ற தோழரை உதறித் தள்ளி
மற்றவர்களை மறந்து பின்னே
பெற்ற தாயையும் புறக்கணித்துப்
பற்றும் துறவறம் புனிதமானதோ?
ப்ரத்யக்ஷம் பாலா,
05.12.2013.
ஐயம்
உற்ற தோழரை உதறித் தள்ளி
மற்றவர்களை மறந்து பின்னே
பெற்ற தாயையும் புறக்கணித்துப்
பற்றும் துறவறம் புனிதமானதோ?
ப்ரத்யக்ஷம் பாலா,
05.12.2013.
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
முடிவில் காலை வெட்டிவிட்டால்
விடை கிடைக்கும்!
விடை கிடைக்கும்!
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(300)
சோமபானம்
மோனத்தில் விரியும் எண்ணத்தின் ஜாலம் - காலை
வானத்தில் விரியும் வண்ணத்தின் கோலம் - வேத
கானத்தில் விரியும் உண்மையில் நாட்டம் - சோம
பானத்தில் விரியும் எண்ணிலாக் கூட்டம்!
ப்ரத்யக்ஷம் பாலா,
05.12.2013.
சோமபானம்
மோனத்தில் விரியும் எண்ணத்தின் ஜாலம் - காலை
வானத்தில் விரியும் வண்ணத்தின் கோலம் - வேத
கானத்தில் விரியும் உண்மையில் நாட்டம் - சோம
பானத்தில் விரியும் எண்ணிலாக் கூட்டம்!
ப்ரத்யக்ஷம் பாலா,
05.12.2013.
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
Just passing by...
Some very good ones, PBala
CML,
An aside:
kAlai veTTinAl kalaiyAgum
vAlai veTTinAl kapi nammai okkum
nAm--in kAlai veTTinAlO?
nam* Agi viDum--Aga...
adu tholaikka avan vENDum...
meduvAi 'oven' aDuppil nam enbadai
vedu veduppAkki, padam paNNip
pADam kaRpOm--avaninRi EduNDu? mana
mADamdOrum madi viLakkETRiDuvOm!
*ego
Some very good ones, PBala

CML,
An aside:
kAlai veTTinAl kalaiyAgum
vAlai veTTinAl kapi nammai okkum
nAm--in kAlai veTTinAlO?
nam* Agi viDum--Aga...
adu tholaikka avan vENDum...
meduvAi 'oven' aDuppil nam enbadai
vedu veduppAkki, padam paNNip
pADam kaRpOm--avaninRi EduNDu? mana
mADamdOrum madi viLakkETRiDuvOm!
*ego
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
Thanks!arasi wrote:Some very good ones, PBala