KavithaigaL by Rasikas

Post Reply
vgovindan
Posts: 1951
Joined: 07 Nov 2010, 20:01

Re: KavithaigaL by Rasikas

Post by vgovindan »

Pratyaksham Bala wrote:373
நாட்டாண்மை

நல்லது செய்தால் தட்டிக் கொடுக்கணும்.
அல்லது என்றால் தட்டிக் கேட்கணும்.

ப்ரத்யக்ஷம் பாலா,
18.02.2015.
நல்லது செய்தாலும் அல்லது செய்தாலும்
நமக்கென்னவென்றிருப்போரைத் தட்டி எழுப்பணும்

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

மிக்க அருமை !

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

arasi wrote:கை தட்ட வேண்டியதொன்று...:)
THANKS!

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

374
காட்சி

அந்திப் பொழுதினில் ஆடும் களத்தினில்
நந்தி மேலொரு நாதனைக் கண்டேன் !
மந்திர கோஷங்கள் மேள தாளத்தொடு
விந்தைக் காட்சிகள் வீசிடக் கண்டேன் !

ப்ரத்யக்ஷம் பாலா,
19.02.2015.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

375
சேவை

பதுமநாபா ! பாம்பணை பரமா ! -- உமக்கு
இதுவரை இல்லாத இன்பெயரளிப்பேன்.
*மதுவொடு மாவும் மனமு வந்தளிப்பேன்.
எதுவும் வேண்டேன் ! எனக்கென் கவலை !

ப்ரத்யக்ஷம் பாலா,
19.02.2015.


*மது = தேன்
Last edited by Pratyaksham Bala on 19 Feb 2015, 16:26, edited 1 time in total.

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

மாதவனுக்கு முன் வைத்த மது, தேன் வண்டும் தேடும் மது
மாதவத்தோன் புத்தன் முன் டோக்யோவில் நான் கண்டதோ?
வாதும், வக்கில்லா வாக்கும் வளர்க்கும் குப்பியடைத்த மது!

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

376
வேண்டுதல் (1)

விரிந்த உறவு வேண்டும்;
விரியாது இருக்க வேண்டும்.


வேண்டுதல் (2)

இறக்கும் நேரம் வரையில்
இரவாது இருக்க வேண்டும்.

ப்ரத்யக்ஷம் பாலா,
19.02.2015.

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

வேண்டுதலே இல்லாவிடில், விரியும் உறவு
வேண்டி விட்டாலோ, விரிசல் கண்டிடுமோ?

இறக்கும் வரை இரக்காதிருந்தால்
பறக்கலாம் பரம பதத்திற்கே நாம்...

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

377
சரைவேதி! சரைவேதி!

செல்! செல்! நில்லாதே, சென்றுகொண்டேயிரு!
இல்லற போகம் இனித்தது போதும்!
நில்லாதே எங்கும், நீளட்டும் பயணம்.
பல்வழி பிடித்துப் பறந்து கொண்டேயிரு.
சொல்! சொல்! நானே பிரம்மமென்றுரக்க!
வல்லவனாவாய்! வெல்லலாம் பிறவி!

ப்ரத்யக்ஷம் பாலா,
21.02.2015.

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

அடுத்து varugiradhu
Last edited by Ponbhairavi on 21 Feb 2015, 17:30, edited 1 time in total.

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

வீரத்தால் உலகை அடிமைகொண்ட வேந்தர்கள்
பேரழகால் அவர்களை அடிமைகொண்ட மைவிழியர்
அறிவால் வாழ்க்கைக்கு வளம் சேர்த்த விஞ்ஞானிகள்
நெறியால் வாழ்கையின் பொருள் தேடிய மெய்ஞானிகள்
காலஞ சென்றபின் அவர் சென்ற விடம் யார் அறிவார் ?
காலம் நில்லாது தன் கதியில் செல்கிறதே !
காதலில் களிப்பவர் சற்றே நில் என்று சொன்னாலும்
வேதனையில் துடிப்பவர் விரைந்து செல் என்று சொன்னாலும்

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

378
ஸ்ரீலஸ்ரீ விளம்பர யுக்தி

மொட்டையை முழங்காலொடு முடி !
கற்பனைச் சரமெல்லாம் வெடி !
மேளதாளம் செவிகிழிய அடி !
கதையெலாம் உண்மையென நடி !

ப்ரத்யக்ஷம் பாலா,
21.02.2015
.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

379
காலம் முடிந்தபின் காணுமிடம் எது?

திருக் கயிலாயமென்பர்!
திருப் பரம பதமென்பர்!
கொண்டதைக் கூறுவர்;
கண்டவர் யாருளர்?

ப்ரத்யக்ஷம் பாலா,
21.02.2015.

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

ஒன்றுக்குள் இரண்டு
வடக்கே
காதலிக்குத் தான் எழிலாய் கட்டிய சமாதிக்குள்
பேதலித்து உட் புகுந்தான் ஓர் மாமன்னன்

தெற்கே
குருவின் சமாதிக்குள் குடி புகுந்த சிஷ்யை யின்
உருவம் பலபூசைஅறை உள்ளேயும் புகுந்ததேன்னே !
Last edited by Ponbhairavi on 22 Feb 2015, 16:25, edited 2 times in total.

vgovindan
Posts: 1951
Joined: 07 Nov 2010, 20:01

Re: KavithaigaL by Rasikas

Post by vgovindan »

கண்டவர் விண்டதில்லை
விண்டவர் கண்டதில்லை -
(எனக் கேள்வி - கண்டதில்லை)

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

காண‌ இருப்பதும்தான் என்ன?
மாணாக்கரே நாம் மண்ணிலே!

கண்ணிலே படுவதெல்லாம்
விண்ணிலே காண்பதெல்லாம் எனும்
எண்னிலட‌ங்கா விந்தைகள் விடுத்து
பண்ணும் காரிய்த்தின் எண்ணம் அறியாது
கண்ணும் மூடி இருந்திடுவோமோ?

எண்ணத்தில‌வன், எல்லாமேயவன்--
திண்ணமாயிது தெரிந்து விட்டால்,
திண்ணை பேச்செல்லாம் வெறும்
வண்ண வார்த்தைகளே--கை
வெண்ணையுருகாது கள்வன்
கண்ணனென்றும் தெரிவது போல்--

என்றுமுண்டு அவனருள் நமக்கே
வென்றிடுவோம் வெறும் ஐயமுமே
தொன்று தொட்டு வந்த உண்மையிது
என்றிருந்தால், சென்று சேர்வமே!

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: KavithaigaL by Rasikas

Post by sridhar_ranga »

கண்டவர் உண்டோ கயிலையை? ஆரேனும்
விண்டது போன்றதோ வைகுந்தம்? தொண்டனே
உண்ட மயக்கம் உனக்காம்! உலகிதனில்
கொண்டதே கோலமெனக் கூறு!!

vgovindan
Posts: 1951
Joined: 07 Nov 2010, 20:01

Re: KavithaigaL by Rasikas

Post by vgovindan »

http://thyagaraja-vaibhavam.blogspot.in ... -raga.html

கயிலாயமும், வைகுந்தமும் சுற்றுலாத் தலங்களல்லவய்யா
கயிலாயனும், வைகுந்தனும் தான் இங்கிருப்பதெல்லாமே.
கண்ணாகிக் காண்பதாகிக் காட்சியாகி, சாட்சியாகி நிற்கும் - அக்
கண்ணனை, முக்கண்ணனைக் காண்பதொன்றே காட்சி - அக்கள்ளினை
உண்டால் மயக்கம்தான் தீருமோ - கண்டவர்
கொண்ட கோலமே உலகிற்கோலமெனக் கூறடி கிளியே.
Last edited by vgovindan on 23 Feb 2015, 09:52, edited 1 time in total.

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

arumai, gOvindarE!

vgovindan
Posts: 1951
Joined: 07 Nov 2010, 20:01

poem

Post by vgovindan »

deleted

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

380
கண்டவர் விண்ட 'தில்லை' !

காடு தில்லையில் வேடுவன் அவன் !
நாடும் அன்பர்கள் கேடு தீர்ப்பவன் !

பீடு நடையுடை வேட மானிடர்
கூடும் கோயிலில் ஆடுவான் அவன் !

பாடுவோர் பலர், ஆடுவோர் பலர்,
போடும் கோஷங்கள் நாடு நிறைத்திடும்.

சாடும் பாவியர் தேடி மாறுவர் !
நாடிச் சூடுவர் ஆடுவோன் பெயர் !

ப்ரத்யக்ஷம் பாலா,
25.02.2015.

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: KavithaigaL by Rasikas

Post by sridhar_ranga »

அருமை, PBala ஐயா

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

sridhar_ranga:
நன்றி !

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

381
விழிப்பு

குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டி
அண்டை நடப்பு அறியாதிருப்பின்
சுண்டைக் காயென ஒதுக்கி விடுவர்.

உண்டு களித்து உருண்டது போதும்.
பண்டை முறைகளைக் கொண்டது போதும்.
உண்டு பலவழி ! உணர்ந்து வெற்றி கொள் !

ப்ரத்யக்ஷம் பாலா,
26.02.2015.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

382
ஆலயம் செல்வது சாலவும் நன்று

ஆலயம் இருக்கையில் ஆசிரமம் எதற்கையா ?
கோலத்தைக் கண்டு கைகட்டி நிற்கவா ?
சாமி இருக்கையில் சாமியார் எதற்கையா ?
சேமித்ததனைத்தும் தொலைத்து நிற்கவா ?

ஆலயம் செல்வது சாலவும் நன்று !

ப்ரத்யக்ஷம் பாலா,
27.02.2015.

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: KavithaigaL by Rasikas

Post by sridhar_ranga »

குருவின் பெருமை

கருவறை கொண்ட கடவுளின் கோயில்
அருஞ்சொற் பொதிந்த அறநூல் - பொருளை
குருவே உரைப்பார் கோனார் உரைபோல்!
திருவருள் காட்டும் தெளிவு!

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

வாலு போச்சு, கத்தி வந்தது, டும், டும், டும்!
--------------------------------------------------------------

திருவரங்க‌க் கோயில் மதில் மேலோடும்
குரங்கே, இRaங்கேன்! மனமிரங்கியே!--குரு
இங்கே வருமுன், குரங்காட்டியின் கோலுக்குக்
குலுங்கியாடும் உன் அண்ணன் போலே நானாடாதிருக்க--
மங்கிய மதியுடைய எனக்கே பாடம் சொல்லு, வா விரைந்தே!
*
*
*
*
*

அறிந்தேன், விட்டேன், மூட‌னாயவன் பின் செல்வதையுமே!
அறிவே தந்தாயெனக்கே, குருவே, குரங்கே! குல தெய்வமே!
அரி அரனிலும் அரிதாம் குரங்கே, அனுமன் கெட்டான், நீயே குருவே!
அரிதாம் குருவே! குரங்கே! குரங்கேயாவேன், மரம் இRaங்குவேனோ?
*
*
Last edited by arasi on 27 Feb 2015, 22:45, edited 1 time in total.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

sridhar_ranga:
கவிதை சாமியாரைப் பற்றி; குருவைப் பற்றி அல்ல!

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

383
சேட்டைச் சாமியார் !
( குரு அல்ல ! )

ஆட்டம் ஆடுவார்; வேடம் போடுவார்.
கூட்டம் கூட்டுவார்; நோட்டை நாடுவார்.
ஊட்டம் தேடுவார்; வேட்டை ஆடுவார் - எதிர்த்தால்
நீட்டிச் சாடுவார்; பின் ஓட்டம் பிடிப்பார் !

ப்ரத்யக்ஷம் பாலா,
27.02.2015.

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

'nOTTai nADuvAr' is a good one!

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: KavithaigaL by Rasikas

Post by sridhar_ranga »

ப்ரத்யக்‌ஷம் பாலா, சாமியார்கள் ஆசிரமம் அமைத்து தம்மை நாடி வரும் சீடர்களுக்கு குருகுலவாசம் மூலம் நல்வழி காட்டியதுண்டுதானே?

அரசி, :) உங்களால் பாடப்படும் அரும்பேறு பெற்ற அந்தக் குரங்கிற்குப் பெயரும் உண்டோ? ஒரு வேளை ரசிகாஸின் உறுப்பினரோ? :) அரங்கனிடமும் செல்ல விடாமல், குருவையும் நாட விடாமல் 'மதில் மேல் குரங்காய்' அலை பாயும் மனம் தானோ அது?

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

சிரிதரரே,
இவற்றிலொன்றாயிருக்குமோ?


யோக நிலை
------------------

என் மனக் குரங்கு கிளை கிளையாய்த் தாவி
இலை உலுப்பி, வால் வளைத்து எம்பு முன்--
இவ்வுலக மனிதக் குரங்குகள் --என்
சேட்டைகளுக்கு வலுவூட்டி வழி காட்டி
எனைப் பேயாய் அலைய வைக்கும்

பேய் பிடித்தவற்றில் எத்தனை வகை!
பயமுறுத்தும் சில, ஓடியாடி ஓயும் சில‌
அண்டமே தம் தலை மேல் எனத் திகைப்பவை--
எங்கு பார்த்தாலும் வெறித்த பார்வையாய்
ஏதோ இல்லாத ஒன்றைத் தீவிரமாய் ஆராய்பவை

சில கண் மூடி அசையாதிருப்பன--ஆ!
அந்த யோகம் எனக்கும் வேண்டுமே!

*

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

pazaiya sarakku :)
From my poetry collection: avaLgaLum, avangaLum, aduvum...

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

sridhar_ranga wrote:சாமியார்கள் ஆசிரமம் அமைத்து தம்மை நாடி வரும் சீடர்களுக்கு குருகுலவாசம் மூலம் நல்வழி காட்டியதுண்டுதானே?
யாரே மறுக்க இயலும்?

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

arasi wrote:'nOTTai nADuvAr' is a good one!
Thanks!

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

384
காதலி

செவ்வல்லி இதழ் விரித்துச்
சிந்ததினாள் மதுச் சிரிப்பு ;
கவ்வியது கள் கிரக்கம்
கருமேகத்திடை பறந்தான் !

ப்ரத்யக்ஷம் பாலா,
28.02.2015.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

385
சுடு தேங்காய்

சுட்டெரிக்கும் வெய்யிலில்
சுள்ளி அலைந்தெடுத்து
இட்டெரித்துச் சுட்டகாயின்
இனிமைக்கு ஈடுண்டோ ?

ப்ரத்யக்ஷம் பாலா,
28.02.2015.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

386
கோடை வந்தாச்சு

கடும் வெய்யில் காற்றில்
.....வரண்டது தேகம் !
.....இருண்டன கண்கள் !
சுடும் மணலில் தேடினான்
.....சுரந்தது தண்ணீர் !
.....தெரிந்தது சுவர்க்கம் !

ப்ரத்யக்ஷம் பாலா,
28.02.2015.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

387
பட்ஜெட்

வரவென்ன செலவென்ன திட்டத்தில் ?
அரசின் நிலை தெரியவரும் இன்று.
வரி கூடுமோ? வலி கூடுமோ?
வருமாண்டின் வழி தெரியுமின்று !

ப்ரத்யக்ஷம் பாலா,
28.02.2015.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

388
நசிகேதன்

காலன் வருகின்ற காலடி கேட்குது !
நசிகேதன் கதை நினைவில் வருகுது !
சுடர் ஒளித் தீயில் உடல் கருகப் போகுது !
ததாஸ்த்து.

ப்ரத்யக்ஷம் பாலா,
28.02.2015.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

389
கலை நேரம்

செவ்வானம் தோன்றும்; சிலிர்க்க வைக்கும்.
வெவ்வேறு கோலங்கள் விளையத் தொடங்கும்.
ஆதவன் முளைக்கும் ! ஆகாயம் விரியும் !
சாதகம் செய்வோர்க்கு சரியான நேரமது !

ப்ரத்யக்ஷம் பாலா,
28.02.2015.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

390
பாவம், யாரோ?

எதுகை ? எதுகால் ? என்றறியாத நிலை.
மதுவின் மயக்கமோ ? மோனக் கிறக்கமோ ?
பழுதா ? பாம்பா ? புரியாத குழப்பம்.
அழுதே சிரிக்கும் ! இதுவும் அதுவே !

ப்ரத்யக்ஷம் பாலா,
28.02.2015.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

391
செல்லுமிடம் இப்படியோ?

அனைவரும் அடையவொரு அண்டவெளி உண்டு; - அதற்கு
இணையிலாப் பெயர்களுடை வாயில் பல உண்டு !
அவரவர் வாயிலில் அவரவர்க்கு அனுமதி !
அவரவர் மனம்போல அவர் காட்சி தருவார் !

ப்ரத்யக்ஷம் பாலா,
28.02.2015.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

392
மறுபடி வாய்ப்பு

தில்லைத்திரு நகரிலே தெருவெங்கும் கூட்டம் !
அலையென அன்பர்தம் ஆரவார கோஷம் !
கலைவிழா ஆங்காங்கே ! கலைஞர்கள் கொண்டாட்டம்
உலையாய்க் கொதிக்கும் உள்ளத்தையும் தணிக்கும் !

ப்ரத்யக்ஷம் பாலா,
28.02.2015.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

393
இறுதி

புருவம் அடியோடு பொசுங்கும் முதலில்.
சுருங்கிய முகத்தோல் சூட்டில் எரியும்.
கருஞ்சாயம் கண்டு களைத்த முடியும்
நெருப்பில் நெளிந்து கருகிக் குலையும் ...

இப்படித் தொடரும் இவ்வுடலின் கதை.

ப்ரத்யக்ஷம் பாலா,
28.02.2015.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

394
தீவிரவாதம்

"ஒன்றே கடவுளென ஒருமித்து இருப்பினும்
நன்றே கூறுவீர் இப்பெயர் மட்டுமே.
அன்றே சொன்னது அதுவே சரியாம்;
இன்றே கொள்ளிதை; இல்லையேல் கொய்வோம்."

ப்ரத்யக்ஷம் பாலா,
28.02.2015.
Last edited by Pratyaksham Bala on 01 Mar 2015, 07:03, edited 6 times in total.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

...
வாழ்க ! வளர்க !

-o0o-

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

பாலா,

கவிதை வெள்ளமும்மில் காட்டாறாய்ப் பெருகும் தருணமிது--
எவ்விதமாயும் உம்மளவு எழுதுவதெமக்கெல்லாம் அரிது--

பலமிகு பாலா! எழுத்திலும், கலையிலும் கழிந்திடுமும் வாழ்வே
தலமெங்கும் செல்வீர், வலம் வருவீர், வரி வரியாய் வரைவீர் கவி!

கிட்டேயும் எட்டியும் பயணிப்பீர், பகிர்வீர், பல‌தும் கொணர்வீர்
விட்டிடுவீரோ போலித்தனம் பயில்வோரை? சாமியார் வேடங்களை?

குப்பை மேட்டிலிருந்து குமரன் கை வேல் வரை வர்ணிப்பீர்,
தப்பேயானால், கப்பெனப் பிடிப்பீர், தெய்வத் தலம் புகழ்வீர்

எப்பொருளாயினும், எங்கிருந்தோ கொணர்வீர்
செப்பிடு வித்தையாய் செயல் புரிவீர், செப்பிடுவேன்--

ப்ரத்யக்ஷமே உம் திறன், வலையலசி விரைந்தே
தக்ஷணமே விந்தையாய் பொருள் கொணர்vIr!

வாழ்க, வளர்க!

vgovindan
Posts: 1951
Joined: 07 Nov 2010, 20:01

பெறுமானம்

Post by vgovindan »

பழமும் பாலும் பல்வகையுண்டியும் - பெத்தவள் கைப்
பழைய சோற்றுக்கீடாமோ?
மாட மாளிகை வாசம் நேரினும் - பொத்தற்
குடிலும் அங்கு எட்டிப்பார்க்கும் நிலவு பெறுமோ?

அன்னத்தூளி மஞ்சப் படுக்கையமர்ந்திடினும்
என்னவள் மடி மெத்தைக்கீடாமோ?
சுற்றமும் சொந்தமும் ஊரும் உறவும்
பெற்ற மகவின் மழலைக் குரல் பெறுமோ?

பேரும் புகழும் பரிந்தென்னயே நாடினும்
பேராசையற்ற வாழ்க்கை அமர்ந்திடப்போமோ?

நாடி நான் கொண்ட செல்வம்
கோடி கோடியானாலும் -
நாடி தளர்ந்தேகும் நேரம் - தெருக்
கோடிவரையேனும் வந்திடுமோ, சொல்லடி கிளியே

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

vgovindan:
அருமை!

Post Reply