KavithaigaL by Rasikas
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
444
வேடதாரி
வடமொழியே சிறந்ததென வாய்கிழியப் பேசுவார்;
இடங்கொடுத்தால் அனைவரையும் இழிவாக ஏசுவார்.
பொருளேதும் அறியாது பெரும் குரலில் ஓதுவார்;
பொருளறிய வேண்டிநின்றால் பயம்பிடித்து ஓடுவார் !
ப்ரத்யக்ஷம் பாலா,
28.04.2015.

445
ஓடி வா !
நில்லாதே ஓடிவா ! இந்த நிர்மலனைக் காண வா !
கல்லழகர் வருமழகு கண்கொள்ளாக் காட்சியடா !
வில்லாதி வீரரவர் விரும்பியதைத் தந்திடுவார் !
பொல்லாத பழியழித்து புத்துயிர் அளித்திடுவார் !
ப்ரத்யக்ஷம் பாலா,
29.04.2015.

446
கோடை மலர்கள் !
அனல் வெய்யிலில் வாடாம(ல்) லிருக்க
புனல் அமைப்பாரோ சாலையோரத்தே?
ப்ரத்யக்ஷம் பாலா,
30.04.2015.
கோடை மலர்கள் !
அனல் வெய்யிலில் வாடாம(ல்) லிருக்க
புனல் அமைப்பாரோ சாலையோரத்தே?
ப்ரத்யக்ஷம் பாலா,
30.04.2015.
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
447
தடை ஏது ?
எரிக்கும் வெயில்பட்டு உடல் தகிக்கும்.
கரிக்கும் சொல்பட்டு மனம் தவிக்கும்.
கடும் வெயிலுக்குக் குடை உண்டு !
சுடும் சொல்லுக்குத் தடை உண்டோ ?
ப்ரத்யக்ஷம் பாலா,
30.04.2015.
தடை ஏது ?
எரிக்கும் வெயில்பட்டு உடல் தகிக்கும்.
கரிக்கும் சொல்பட்டு மனம் தவிக்கும்.
கடும் வெயிலுக்குக் குடை உண்டு !
சுடும் சொல்லுக்குத் தடை உண்டோ ?
ப்ரத்யக்ஷம் பாலா,
30.04.2015.
-
- Posts: 1951
- Joined: 07 Nov 2010, 20:01
Re: KavithaigaL by Rasikas
மூதேவி
இலக்குமிக்கு மூத்த தேவியை மூதேவியென்று இழிச்சொல்லாக்கி,
இலக்குமியின் அழகினை அழகுக்கு இலக்கணமாக்கி,
இலக்குமியுடன் ஒப்பிட்டு அவளை எழிலற்றவளென்று,
தொந்தியும் தொப்பையுமாய் அவளை வருணித்து,
துடைத்துப் பெருக்குதல் இழிதொழில் போன்று,
துடைப்பமொன்றைக் கையில் கொடுத்து,
இலக்குமி மாலவனுக்கு மாலையிட,
இவளை (யாரோ) சனியன் மணந்திடச் செய்த,
இத்தகைய தாறுமாறான எண்ணங்கள் நிறை,
மூட நம்பிக்கைகளுக்கு விடிவுகாலமில்லையோ, இவற்றை
மூட்டைகட்டி வைத்திட மொபைல் ஃபோன் காலத்திலும்
முடிந்திடப்போமோ, சொல்வீர்.

.
shrI sUktam (8)
Rishi of the mantra: MAHA VISHNU
Chhandas: Anustubh
Devata: MAHALAKSHMI
क्षुत्पिपासामलां ज्येष्ठामलक्ष्मीं नाशयाम्यहम् ।
अभूतिमसमृद्धिं च सर्वां निर्णुद मे गृहात् ॥
kSutpipAsAmalAm jyESThAmalakSmIM nAshayAmyaham
abhUtimsamrddhim ca sarvAm nirNuda mE grhAt
Meaning :-
8.1: (O Jatavedo, Invoke for me that Lakshmi) Whose Presence will Destroy Hunger, Thirst and Impurity associated with Her Elder Sister Alakshmi,
8.2: And Drive Away the Wretchedness and Ill-Fortune from My House.

ஆணிவேர்

ஆணியடித்து என் அங்கமெல்லாம் புண்ணாக்கினாய்;
ஆங்கே கசியும் என் கண்ணீரைப் பிசின் என்று விலையாக்கினாய்;
என்னினத்தினரை முன்னம் எரித்துக் கரியாக்கினாய்;
என்னினத்தையெல்லாம் சாய்த்தின்று குடியிருப்பாக்கினாய்;
ஆயிரம் ஆண்டுகள் நெடிதுயர்ந்த எம்மை நொடியில் வீழ்த்தினாய்;
அனைத்துயிர்களுக்கும் ஆதாரமாம் நீரை வேரினில் தேக்கும் எம்மை,
அழித்து நீ கண்டதென்ன, சொல், மனிதா? - உன்
அழிவுக்கு நீயே வழி தேடிக்கொண்டாயென இன்றும் உணராய்;
உனக்கும் எமக்கும் உள்ளிருக்கும் உயிரொன்றுதானென,
உணர்வு வாராமற்போனதென்னே, உலகையாளும் திமிரோ?
எமதினம் பட்டுப்போனால் மீண்டும் தழைத்திடுவம், உறுதி;
உமதினம் பட்டுப்போனால் மீண்டும் தழைக்கமாட்டீர், இதுவும் உறுதி.
"நாளைச் செய்குவம் அறமெனில் இன்றே
கேள்வி நல்லுயிர் நீங்கினு நீங்கும்
இதுவென வரைந்து வாழுநாளுணர்ந்தோர்
முதுநீர் உலகில் முழுவதுமில்லை" - நடுநற்காதை 179-182
http://tamilvu.org/slet/l3100/l3100uri. ... id=3000053
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
448
சிவ சிவ !
குழல் சடையிற் கொன்றை கொண்டோனை
தழல் கையுடை தகைமை கொண்டோனை
எழில் நடம்புரி இமய வரையோனை
தொழு ! வலம்வா ! திறனெல்லாம் அருள்வான் !
ப்ரத்யக்ஷம் பாலா,
17.05.2015.
சிவ சிவ !
குழல் சடையிற் கொன்றை கொண்டோனை
தழல் கையுடை தகைமை கொண்டோனை
எழில் நடம்புரி இமய வரையோனை
தொழு ! வலம்வா ! திறனெல்லாம் அருள்வான் !
ப்ரத்யக்ஷம் பாலா,
17.05.2015.
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
449
தீவிரம்
கண்டறியாக் கடவுளுக்கு கணக்கிலா நாமஞ்சூட்டி
கண்டபடி கற்பனையாய்க் கதைபல தீட்டிவைப்பர் - பின்னர்
போதகர்கள் பலர்கூடி போர்க் கொடிகள் செய்துவைத்து
"ஆதரித்தால் விட்டுவிடு ! இல்லையெனில் அழி !" யென்பர்.
ப்ரத்யக்ஷம் பாலா,
23.05.2015.
நாமம் = பெயர்
போதகர் = பிரசாரகர்

450
கிண்டல்
சொல்லால் சுட்டுபின்னே சிரித்திடு என்பர்.
எல்லாம் ரசித்திடவே இருமிங்கே என்பர்.
பொல்லாத கூட்டங்கள் பெருமளவு வேண்டா;
பல்லாண்டு பாடியழும் பழஞ்சோடி போதும் !
ப்ரத்யக்ஷம் பாலா,
26.05.2015.
பல்லாண்டு = பல ஆண்டுகளாக

451
தேராத ஜன்மம் !
ஓயாத சண்டை; உள்ளுக்குள் புகைச்சல்.
காயாத வன்மம்; கடைசிவரை மூர்க்கம் - 'பிறர்'க்கு
ஈயாத கொள்கை; இருட்டடித்த பார்வை.
சாயாத வரையில் சாமிசொல்லே வாக்கு !
ப்ரத்யக்ஷம் பாலா,
27.05.2015.

452
ஹே ! பரசுராமா !
பத்திலொன்று என்றெல்லாம் பல்லிடத்தில் பதிப்போர்
சத்திரியத் திமிரழித்த சாமியென்று சாற்றுவோர் - நீர்
நூற்றியெட்டு தலமமைத்து நாதனடி போற்றியதால்
ஆற்றொணாத் தவிப்பிலுமை அடியோடு தவிர்ப்பர்.
ப்ரத்யக்ஷம் பாலா,
29.05.2015.
நாதன் = சிவன்

- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
பத்தில் இரண்டு வரும் பழம் பெரும் காதையில்
பத்து ரதன் புத்திரனை பழித்து வழி மறித்தவன்
நூற்றெட்டு தலமமைத்து நாதனை போற்றியதை
சற்றே விரித்து சாற்றினால் புரிந்துகொள்வேன்
பத்து ரதன் புத்திரனை பழித்து வழி மறித்தவன்
நூற்றெட்டு தலமமைத்து நாதனை போற்றியதை
சற்றே விரித்து சாற்றினால் புரிந்துகொள்வேன்
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
453
சேவிப்போம் வாருங்கள் !
பல்லாண்டு பாடுவோம் ! பரமனைப் போற்றுவோம் !
நல்லோர்கள் இணைந்து நாதனைத் துதிப்போம் !
வல்லான் திருப் பாசுரங்கள் விண்ணதிர ஓதுவோம் !
தில்லைத்தலம் திருப்பதியின் தலைவனே துணை !
ப்ரத்யக்ஷம் பாலா,
30.05.2015.

#1815
சேவிப்போம் வாருங்கள் !
பாடல் விளக்கம் :-
பல்லாண்டு = சைவத் திருமுறைகளில் ஒன்றான திருப்பல்லாண்டு, சேந்தனார் அருளியது.
பரமன், நாதன் = சிவன்
வல்லான் = ஆடல்வல்லான்
பாசுரம் = சைவத் திருமுறை பாசுரங்கள், பதினொன்றாம் திருமுறை
சேவிப்போம் வாருங்கள் !
பாடல் விளக்கம் :-
பல்லாண்டு = சைவத் திருமுறைகளில் ஒன்றான திருப்பல்லாண்டு, சேந்தனார் அருளியது.
பரமன், நாதன் = சிவன்
வல்லான் = ஆடல்வல்லான்
பாசுரம் = சைவத் திருமுறை பாசுரங்கள், பதினொன்றாம் திருமுறை
-
- Posts: 1951
- Joined: 07 Nov 2010, 20:01
Re: KavithaigaL by Rasikas
108 Parasurama kshEtra -
http://www.shaivam.org/siddhanta/spke_108.htm
http://www.shaivam.org/siddhanta/spke_108.htm
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
பரசுராமன் சென்று தொழுத சிவாலயம் நூற்று எட்டை
நானும் ப்ரத்யக்ஷமாக கண்டேன் வரலாறும் அறிந்தேன்
கோவிந்தனுக்கு நன்றி
நானும் ப்ரத்யக்ஷமாக கண்டேன் வரலாறும் அறிந்தேன்
கோவிந்தனுக்கு நன்றி
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
454
சிவ ! சிவ !
எப்போதும் திருநாமம் சொல்லிநின்று
தப்பாமல் திருக்கோயில் சுற்றிவந்து
முப்போதும் திருமேனி கண்டுசேவி !
ஒப்பேதும் இல்லாது உயர்வாய் காண் !
ப்ரத்யக்ஷம் பாலா,
31.05.2015.
சிவ ! சிவ !
எப்போதும் திருநாமம் சொல்லிநின்று
தப்பாமல் திருக்கோயில் சுற்றிவந்து
முப்போதும் திருமேனி கண்டுசேவி !
ஒப்பேதும் இல்லாது உயர்வாய் காண் !
ப்ரத்யக்ஷம் பாலா,
31.05.2015.
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
பாலா,
என்றோ சொல்ல நினைத்தது...கவிதை வனத்துக்கு வரும்போதெல்லாம், உம் வாடாமல்லியும் ரோசாவும் மலர்ந்து முகமன் கூறுகின்றன.
நீர் வாடாமல்லிக்கு வர்ணம் சேர்த்தது மேலும் அழகு
என்றோ சொல்ல நினைத்தது...கவிதை வனத்துக்கு வரும்போதெல்லாம், உம் வாடாமல்லியும் ரோசாவும் மலர்ந்து முகமன் கூறுகின்றன.
நீர் வாடாமல்லிக்கு வர்ணம் சேர்த்தது மேலும் அழகு

-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
மிக்க நன்றி !
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
455
அரவுஅணி சூடியோன் !
நம்பியாண்டான் நம்பியின் நாமம் நினைந்து
தும்பிக்கையான் திருவைத் துதித்து நின்று
பிரபந்தம் படிப்போம் பரமனைப் போற்றுவோம் !
அரவுஅணி சூடியோன் அல்லல் அகற்றுவான் !
ப்ரத்யக்ஷம் பாலா,
01.06.2015.

456
மயக்கம் !
கண்ணன் பற்றிப் பாடிவிட்டால் கைகொட்டிக் களிப்பார்;
அண்ணன் இவர் அறிஞரென்று ஆடிப்பாடிக் குதிப்பார் !
கந்தன் பற்றிப் பாடினாலோ கைகட்டி வெறிப்பார்;
இந்தச் சந்தம் ஒப்பாதென்று எல்லைதாண்டி ஓடுவார் !
ப்ரத்யக்ஷம் பாலா,
02.06.2015.

இந்தச் சந்தம் ஒப்பாதென்று எல்லைதாண்டித் தெறிப்பார் !
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
457
அப்பாடி !
உஷ் என்றார் தலைவர்; ஒடுங்கியது கூச்சல்.
கஷ்டப் பட்ட காலம் கடந்தது நொடியில் !
ஏச்சுப் பேச்செல்லாம் இத்தோடு போகணும் !
போச்சு என் ஆட்டமென புலம்புவோர் இருப்பர்.
ப்ரத்யக்ஷம் பாலா,
05.06.2015.
அப்பாடி !
உஷ் என்றார் தலைவர்; ஒடுங்கியது கூச்சல்.
கஷ்டப் பட்ட காலம் கடந்தது நொடியில் !
ஏச்சுப் பேச்செல்லாம் இத்தோடு போகணும் !
போச்சு என் ஆட்டமென புலம்புவோர் இருப்பர்.
ப்ரத்யக்ஷம் பாலா,
05.06.2015.
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
ஆட்டம் ஆடுபவரெல்லாம் வாட்டம் அடைவரோ, பாலா--
நாட்டமெல்லாம் அவர் பாட்டுக்கு மதம் கொண்ட யானையாய்
காட்டினில், இல்லை, வீட்டினில், அல்லது தெருவினில்--பின்னும்
கூட்டம் கூடும் எவ்விடத்திலுமே அவர் தம் காட்டம் காட்டுவதே...
மற்றவரை மட்டமாய்ப் பேசுபவர்க்கே, தம் மட்டம் அடி மட்டம் என
உற்றுத் தம்மையே பார்த்தால் தெரியுமோ? தெரியாதோ? வாழ்வவrkகே
வற்றல் காடோ, வளம் சிறிதுமில்லையோ? சுற்றமுமவர் பேணுவரோ?
கற்றும் கல்லாதவரோ? நற் பெரும் தெய்வமவrkகே துணை தரட்டும், போம் !

458
உயிர்
ஆடு நனைந்தால் நரியழும் கதையாக
காடு அழிந்தால் கழுகழும் கதையாக
ஊடு பயிரழிய ஊளையிடும் மாடாக
வீடு விடுக்க ஓலமிடும் உயிர்.
ப்ரத்யக்ஷம் பாலா,
06.06.2015.
உயிர்
ஆடு நனைந்தால் நரியழும் கதையாக
காடு அழிந்தால் கழுகழும் கதையாக
ஊடு பயிரழிய ஊளையிடும் மாடாக
வீடு விடுக்க ஓலமிடும் உயிர்.
ப்ரத்யக்ஷம் பாலா,
06.06.2015.
-
- Posts: 1951
- Joined: 07 Nov 2010, 20:01
மனச்சாட்சி
எந்தக் குப்பையில் எந்த மாணிக்கமோ, எவரறிவார்?
எந்தத் திருப்பத்தில் எந்த விந்தையோ, எவரறிவார்?
எந்தக் குழப்பத்தில் எந்த விடிவோ, எவரறிவார்?
எந்தத் தொடக்கத்தில் எந்த முடிவோ, எவரறிவார்?
வேண்டிப் பெற்ற மழலையெல்லாம், நாம்
வேண்டும்போது அண்டி நிற்பதுமில்லை;
வேண்டாது வந்த சொந்தமெல்லாம், நாம்
வேண்டுமுன் வலிய வாராமற்போவதுமில்லை;
இனிப்பாக இன்று தோன்றும் பொருளெல்லாம்,
இறுதிவரையிலும் இனிப்பாக இருப்பதுமில்லை;
இன்று இனிக்காத பொருட்களெல்லாம்,
இறுதியில் இனிக்காமற்போனதுமில்லை;
நல்லது செய்யத் துணிந்து, நடுவில் தீங்கு நேரினும்,
நல்லது என்றும் முடிவில் நல்லதாகவே நிலைக்குமன்றோ? - தந்
நலம் கோரி நல்லதல்லாது செய்யத் துணிய, நேரும்
நன்மையெல்லாம் உண்மையில் நன்மையல்லவே;
நாளொரு மேனியாய், பொழுதோர் வண்ணமாய்,
நாம் உணராமலே நடந்திடும் உலக நிகழ்வுகளெல்லாம்,
நாம் வேண்டிச் செய்யும் செயல்களால் மட்டுமல்லவே;
நான் வேண்டிப் பிறந்தேனா? நான் வேண்டியே மரிப்பேனா?
நில்லாத உலகினில், நிலைப்பது அறமொன்றென்றிந்து,
நல்லதே செய்வோம், உலகோர் நன்மையே விழைவோம்,
அல்லது செய்வோரையும், அன்புடன் நோக்குவோம் - என
நம்முள்ளிருந்தெழும் நாதன் குரலென்றும் தவறாமோ?

- Posts: 3051
- Joined: 03 Feb 2010, 04:44
Re: KavithaigaL by Rasikas
அருமையான கருத்துக்கள் திரு ப்ரத்யக்ஷம் பாலா.
காளை உரக்க கனைத்தாலே போதும் வீட்டை விட்டுவிடும் உயிர்.
நன்றி
தஞ்சாவூரான்
07 06 2015
காளை உரக்க கனைத்தாலே போதும் வீட்டை விட்டுவிடும் உயிர்.
நன்றி
தஞ்சாவூரான்
07 06 2015
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
459
பரம்பொருள் !
அண்டமே பரமன்; ஆலயம் அதுவே !
கண்டதே காட்சி; கற்பனை எதற்கு ?
கொண்டதே கோலம்; காஷாயம் வேண்டா !
விண்டதே போற்றி ! வேறென்ன வேண்டும் ?
ப்ரத்யக்ஷம் பாலா,
07.06.2015.
பரம்பொருள் !
அண்டமே பரமன்; ஆலயம் அதுவே !
கண்டதே காட்சி; கற்பனை எதற்கு ?
கொண்டதே கோலம்; காஷாயம் வேண்டா !
விண்டதே போற்றி ! வேறென்ன வேண்டும் ?
ப்ரத்யக்ஷம் பாலா,
07.06.2015.
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
460
சேவகன்
தொல்லைப் பணிகள் துணிந்து சுமந்து
நில்லாது உழைத்து நிதி நிறைய சேர்த்து
இல்லாத பேர்களின் இடரெலாம் துடைத்து
பல்லாண்டு போச்சு; வந்தவேலை ஆச்சு.
ப்ரத்யக்ஷம் பாலா,
08.06.2015.
சேவகன்
தொல்லைப் பணிகள் துணிந்து சுமந்து
நில்லாது உழைத்து நிதி நிறைய சேர்த்து
இல்லாத பேர்களின் இடரெலாம் துடைத்து
பல்லாண்டு போச்சு; வந்தவேலை ஆச்சு.
ப்ரத்யக்ஷம் பாலா,
08.06.2015.
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
461
அருள்
திக்காய்த் திரிந்து தலமெலாம் புரள்வேன்.
செக்காய்ச் சுற்றுவேன்; சிவனடி போற்றுவேன் !
சுக்காய்க் காயினும் சுழிமழை வேண்டேன்.
சொக்கா ! உன்னருள் சுகமே போதும் !
ப்ரத்யக்ஷம் பாலா,
09.06.2015.

462
பூங்கா
எல்லோருக்கும் தெரிய வேணும் இந்த நல்ல சேதி :-
புல் முளைத்துப் போச்சு முள் இருந்த இடத்திலே.
நல்லோரெல்லாம் வரலாம்; நாலு பேச்சுப் பேசலாம் !
இல்லை இப்போ தொந்தரவு; எந்த வம்பும் இல்லை !
ப்ரத்யக்ஷம் பாலா,
10.06.2015.

463
பொற்காலம்
நற்காலம் வருமோயென்று நாளெல்லாம் காத்திருந்தோம்.
கற்காலம் போனதையா, கவலையெல்லாம் தீருதையா.
பொற்காலம் வந்தாச்சு, பொருளீட்ட வாய்ப்புண்டு.
தற்காலம் தொடரவேண்டும், தரணி சிறக்கவேண்டும் !
ப்ரத்யக்ஷம் பாலா,
11.06.2015.

464
இணை
அடுப்படியில் குழலூதி அவள் குமைந்து கிடப்பாள் - அவன்
மடுக்கரையில் மாடு மேய்த்துக் குழலூதிக் களிப்பான்.
இடுப்பொடிய வேலைசெய்து மனமொடிந்து கிடப்பாள் - அவன்
கடுப்படித்து களம் சென்று கொட்டமடித்திருப்பான்.
ப்ரத்யக்ஷம் பாலா,
12.06.2015.
இணை
அடுப்படியில் குழலூதி அவள் குமைந்து கிடப்பாள் - அவன்
மடுக்கரையில் மாடு மேய்த்துக் குழலூதிக் களிப்பான்.
இடுப்பொடிய வேலைசெய்து மனமொடிந்து கிடப்பாள் - அவன்
கடுப்படித்து களம் சென்று கொட்டமடித்திருப்பான்.
ப்ரத்யக்ஷம் பாலா,
12.06.2015.
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
வினை
கரியில்லை விறகில்லை ,கேஸ் நுண் அலை உண்டு ,
புகையில்லை குனிவதில்லை ஸ்மார்ட் கிட்சன் மேடையுண்டு
நடையில்லை சிரமமில்லை நாலுக்கும் ரிமோட் உண்டு
தடையில்லை ரிமோட்டில் செல்வாரோடு பேசச் செல் உண்டு
குறைவில்லை வசதிக்கு வாட்டும் நோய் பலவுண்டு
நிறைவில்லை மனதில் கை நிறையப் பணம் உண்டு
கரியில்லை விறகில்லை ,கேஸ் நுண் அலை உண்டு ,
புகையில்லை குனிவதில்லை ஸ்மார்ட் கிட்சன் மேடையுண்டு
நடையில்லை சிரமமில்லை நாலுக்கும் ரிமோட் உண்டு
தடையில்லை ரிமோட்டில் செல்வாரோடு பேசச் செல் உண்டு
குறைவில்லை வசதிக்கு வாட்டும் நோய் பலவுண்டு
நிறைவில்லை மனதில் கை நிறையப் பணம் உண்டு
-
- Posts: 1951
- Joined: 07 Nov 2010, 20:01
Re: KavithaigaL by Rasikas
நேரமில்லை சமைக்க, ஹோம் டெலிவரி உண்டு - வரும் நேரமாச்சு - டாடா
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
465
உள்ளடக்கம்
வரத்து கம்மியா ? - கூறு வலஞ்சுழி புனிதம் !
புரசு அக்னிக்கு - வேறு எதற்கும் உதவாதே !
துளசி தெய்வீகம் ! - பூச்சி பொட்டு அண்டாது.
அரவு நல்லதே - ஐயகோ, கடிக்காத வரையிலே !
ப்ரத்யக்ஷம் பாலா,
13.06.2015.

466
நிம்மதி
பல்லி தேடணும்; பலனைக் கேட்கணும்.
அல்லல் தீருமோ ? அமைதி கிட்டுமோ ?
தில்லைத் தலத்தின் தலைவனைக் கண்டு
எல்லை யில்லாத அமைதி வேண்டணும் !
ப்ரத்யக்ஷம் பாலா,
14.06.2015.
நிம்மதி
பல்லி தேடணும்; பலனைக் கேட்கணும்.
அல்லல் தீருமோ ? அமைதி கிட்டுமோ ?
தில்லைத் தலத்தின் தலைவனைக் கண்டு
எல்லை யில்லாத அமைதி வேண்டணும் !
ப்ரத்யக்ஷம் பாலா,
14.06.2015.
-
- Posts: 1951
- Joined: 07 Nov 2010, 20:01
ஏட்டுச் சுரைக்காய்
"கானப் பறவை கலகலெனும் ஓசையிலும்,
காற்று மரங்களிடைக் காட்டும் இசைகளிலும்,
ஆற்று நீரோசை அருவி யொலியினிலும், 30
நீலப் பெருங்கடலெந் நேரமுமே தானிசைக்கும்
ஓலத் திடையே உதிக்கும் இசையினிலும்,
மானுடப் பெண்கள் வளருமொரு காதலினால்,
ஊனுருகப் பாடுவதில் ஊறிடுந் தேன் வாரியிலும்,
ஏற்ற நீர்ப் பாட்டின் இசையினிலும், நெல்லிடிக்குங் 35
கொற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும்,
சுண்ண மிடிப்பார் தஞ்சுவை மிகுந்த பண்களிலும்,
பண்ணை மடவார் பழகுபல பாட்டினிலும்,
வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக்
கொட்டி யிசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும் 40
வேயின் குழலொடு வீணை முதலா மனிதர்
வாயினிலுங் கையாலும் வாசிக்கும் பல்கருவி
நாட்டினிலுங் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும்
பாட்டினிலும், நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்."
குயிலின் காதற்கதை - பாரதி
http://www.tamilvu.org/slet/l9100/l9100 ... 45&pno=167#
கானப்பறவை முதலாம் ஆற்று நீரும், நீலக்கடலும்,
மானிடரும், இசை வழி, ஊனுருகிக் கூறும் கூற்று யாவும்,
இசை பயின்றதனால் எனக்கொள்ளப்போமோ? - இவற்றின்
இசையினிலக்கணம் தேடின் காணப்பபோமோ?
படைத்தவனின் இலக்கணம் படைப்புக்கு விளங்குமோ?
படையாத நாதத்திற்கு சுரமேது, ராகமேது, தாளமேது?
மானின் துள்ளலையும், மயிலின் நடனத்தையும்
மானிடன் கற்பித்துச் செய்துகாட்டச் சிறக்குமோ?
உள்ளத்தின் ஆழத்தினின்று எழும் உணர்ச்சிகளை
உள்ளபடி உணராது உணர்த்திடும் திறன்,
கலைகள் அறுபத்து நான்கினையும் கற்றாலும்
கலைகளின் இலக்கணத்திற்குள் காட்டவியலுமோ?

467
தவிப்பும் நிறைவும்
போதுமென்னும் அளவில் பலவும் கொண்டபோதும்
போதாது போதாதென்று பரிதவித்திருக்கும் மனது.
ஏதொன்றும் இல்லை எனிலே ஏதேனும் கிடைத்தால் போதும்;
ஏதோவொரு பண்டம், ஏதோவொரு இடம், அதுவே நிறைவு.
ப்ரத்யக்ஷம் பாலா,
15.06.2015.
தவிப்பும் நிறைவும்
போதுமென்னும் அளவில் பலவும் கொண்டபோதும்
போதாது போதாதென்று பரிதவித்திருக்கும் மனது.
ஏதொன்றும் இல்லை எனிலே ஏதேனும் கிடைத்தால் போதும்;
ஏதோவொரு பண்டம், ஏதோவொரு இடம், அதுவே நிறைவு.
ப்ரத்யக்ஷம் பாலா,
15.06.2015.
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
அதாவது...
இருந்தால் இல்லை--
இல்லையென்றால் உண்டு...
இருந்தால் இல்லை--
இல்லையென்றால் உண்டு...

-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
468
கடன்
கரையில் விளைந்த சுடுதரையில்
கரை சேர்த்தான்; கிடைத்ததைக்
கரைத்தான். கரைந்து கரைந்தான்.
கரைந்தது ஒரு காகமும். கடனோ ?
ப்ரத்யக்ஷம் பாலா,
16.06.2015.
கடன்
கரையில் விளைந்த சுடுதரையில்
கரை சேர்த்தான்; கிடைத்ததைக்
கரைத்தான். கரைந்து கரைந்தான்.
கரைந்தது ஒரு காகமும். கடனோ ?
ப்ரத்யக்ஷம் பாலா,
16.06.2015.
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
கோவிந்தரே,
பாரதிக்கு என்றும் நன்றி. அவர் சுவடிலே சென்று நீர் சொன்னதற்கும் நன்றி
Your post #1841
பாரதிக்கு என்றும் நன்றி. அவர் சுவடிலே சென்று நீர் சொன்னதற்கும் நன்றி

Your post #1841
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
469
தாப தாபம்
இல்லாததை இடு ;
ஒச்சியத்தை விடு !
தினமும் கோடு கிழி
காக்கும் வட மொழி !
ப்ரத்யக்ஷம் பாலா,
17.06.2015.
தாப தாபம்
இல்லாததை இடு ;
ஒச்சியத்தை விடு !
தினமும் கோடு கிழி
காக்கும் வட மொழி !
ப்ரத்யக்ஷம் பாலா,
17.06.2015.
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
சற்றே விளங்க வைப்பீர் பாலா...
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
#1846
அவரவர் பார்வைக்கும் கொள்கைக்கும் அனுபவங்களுக்கும் ஏற்ப இதற்குப் பொருள் கொள்ளலாம் ! மேலும், பார்வையின் கோணத்தை மாற்றி, சிந்தனையைத் தூண்டி, பல புதிய விளக்கங்களைப் பெறவும் முடியும் ! முயன்று பார்க்கலாம் !

காண்க #1846.
அவரவர் பார்வைக்கும் நிலைக்கும் ஏற்ப இதற்குப் பொருள் கொள்ளலாம். உதாரணமாக :-
(1) லௌகீகம் - ஓவியர்
தீவிர (தாப) தவம் / முயற்சி (தாபம்)
இல்லாத ஒன்றை (இல்லாததை) ஓவியமாக வரை (இடு)
காண்பவர்கள் என்ன கூறுவார்களோ என்ற கூச்சத்தை (ஒச்சியத்தை) விடு (விடு)
தினமும் (தினமும்) விடாது படம் வரை (கோடு கிழி)
கூலியளித்துக் காப்பாற்றும் (காக்கும்) வேலை எனும் சங்கிலியை (வடம்) விடு (ஒழி) -- சுதந்திரப் படைப்பாளியாக மாறு.
(2) சன்யாசம்
சம்சாரத்தை விடுத்து காடு (தாப) செல்ல ஆவல் (தாபம்)
ஏதுமில்லாததையே (இல்லாததை) ஆடையாகக் கொள் (இடு)
வெட்கத்தை (ஒச்சியத்தை) விட்டொழி (விடு)
தினமும் (தினம்) மன விசாரங்களை (கோடு) அழி (கிழி)
காக்குமென்று நம்பும் (காக்கும்) பூணூலையும் (வடம்) களை (ஒழி).
இதுபோலவே நடைமுறை பழக்க வழக்கங்களுக்கு விளக்கம் கூறும் வகையிலும் உரிய பொருளைக் கொள்ளலாம் !

சுமைகள் சரிந்து விழட்டும், விரைவாகவே--
இமைக்குமுன் இறையின்பம் உமதாகட்டும்!
நாளுமொரு கவிதையெழுதும் உமக்கு--
தாளும் நிரம்பும் கோடுகளால், கேளீர்!
எண்ணங்களை வண்ணமாக்குவீர்--
வண்ணமாய் வாழ்வீர், கண்ணியம் கொண்டே!
இமைக்குமுன் இறையின்பம் உமதாகட்டும்!
நாளுமொரு கவிதையெழுதும் உமக்கு--
தாளும் நிரம்பும் கோடுகளால், கேளீர்!
எண்ணங்களை வண்ணமாக்குவீர்--
வண்ணமாய் வாழ்வீர், கண்ணியம் கொண்டே!

-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
470
இறையின்பம்
உறவுகள் சுமையாம்; துறந்திடு அனைத்தும்.
இறையே இன்பம் ! பிறந்ததே வீணோ ?
உடலே சுமையாம்; உடனே விடு அதை.
இறையே இன்பம் ! இமைக்கும் முன்னிற !
ப்ரத்யக்ஷம் பாலா,
19.06.2015.
இறையின்பம்
உறவுகள் சுமையாம்; துறந்திடு அனைத்தும்.
இறையே இன்பம் ! பிறந்ததே வீணோ ?
உடலே சுமையாம்; உடனே விடு அதை.
இறையே இன்பம் ! இமைக்கும் முன்னிற !
ப்ரத்யக்ஷம் பாலா,
19.06.2015.