Kanchi Maha Periyava

Post Reply
venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Image

This was taken in 1914 when Periva was Just 1914

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

காஞ்சி மகா ஸ்வாமிகள் சொல்லிய “விதி” பற்றிய ஓர் உண்மை நிகழ்வு

‘எண்ணூறு வருஷங்களுக்கு முன் பாஸ்கராசாரியார் என்று பெரிய கணித ஸித்தாந்தி ஒருவர் இருந்தார். நமக்கு என்னதான் கெட்டிக் காரத்தனம் இருந்தாலும், பகவத் ஸங்கல்பத்தை மாற்ற முடியாது என்பதற்குத் திருஷ்டாந்தமாக அவர் வாழ்க்கையில் ஒன்று நடந்தது.

அவருடைய பெண் லீலாவதிக்கு மாங்கல்ய தோஷம் இருப்பதை ஜ்யோதிஷப் புலியான பாஸ்கராசாரியார் அறிந்திருந்தார். ஆனாலும், தமது கெட்டிக்காரத் தனத்தினால் ஸகல க்ரஹங்களும் தீர்க்க ஸெளமங்கல்யத்தைத் தரும்படியான ஒரு லக்னத்தைக் கண்டுபிடித்து, அதிலே புத்திரிக்கு விவாஹம் செய்து விட்டால், அவளை தீர்க்க ஸுமங்கலியாக இருக்கச் செய்து விடலாம் என்று நினைத்தார். அந்த மாதிரியான ஒரு லக்னத்தில் லீலாவதிக்குக் கல்யாண முஹூர்த்தம் வைத்தும் விட்டார்.

அந்தக் காலத்தில் இப்போதுபோல் கடிகாரம் கிடையாது. ஆனாலும், வாஸ்தவ த்தில் அக்காலத்தில் இருந்ததுதான் அசல் கடிகா. கடம், கடிகா, கடிகை என்பதெல்லாம் பானை மாதிரியான தீர்த்த பாத்திரத்தைக் குறிக்கும். இப்படிப்பட்ட ஜல பாத்திரமே பூர்வகாலத்திய கடிகா அல்லது கடிகாரம். அதிலே மேல் பாகம், கீழ்பாகம் என்று பிரிந்திருக்கும். மேல் பாகத்தில் விட்ட ஜலம் ஒரு துவாரம் வழியாகக் கீழ் பாகத்தில் துளித்துளியாக விழும். மருந்து பாட்டிலில் டோஸ்மார்க் பண்ணியிருக்கிற மாதிரி, கீழ் பாகத்தில் அளவுக் கோடுகள் போட்டிருக்கும். துளித் துளியாய் விழும் ஜலம், இன்ன கோடு வரை வந்தால் இத்தனை நாழிகை என்று கணக்குப் பண்ணிவிடுவார்கள்.

அதிலுள்ள டோஸ்மார்க் ஒரு நாளில் அறுபதில் ஒரு பங்காகும். ‘நாழிகை’ என்று தமிழில் சொல்லப்படும் இந்தக் கால அளவுக்கு ஸம்ஸ்கிருதத்தில் ‘நாடிகா’ என்பதோடு ‘கடிகா’ என்றே இன்னொரு பெயர் உண்டு. அது 24 நிமிஷம் கொண்டது. Water -clock, water-glass என்று இங்கிலீஷிலும் சொல் வார்கள். ஜலம், சீதோஷ்ணத்தைப் பொறுத்து evaporate (ஆவி) ஆவதால், இதில் ஏதாவது கணக்குப் தப்பு வரும் என்று, பின்னர் மணல் கடிகாரம் பண்ணினார்கள்.

அந்நாள் வழக்கப்படி, லீலாவதி விளையாட்டுப் பெண்ணாக இரு ந்த சின்ன வயசிலேயே கல்யாணம் நிச்சயித்திருந்தது. அந்தக் குழந்தை, மேலே சொன்ன மாதிரியான ஜல கடிகாரத் திடம் வந்து, குனிந்து பார்த்து, ஏதோ சேஷ்டை பண்ணிற்று. அப்போது அதன் மூக்குத்தியில் இருந்து ஒரு சின்ன முத்து, கடிகாரத்துக்குள் விழு ந்து, மேல் பாகத்துக்கும் கீழ் பாகத்துக்கும் நடுவேயுள்ள துவாரத்தில் மாட்டிக்கொண்டுவிட்டது.

இதனால், விழுகிற துளி சின்னதாகிவிடும் அல்லவா? இப்படி, இருக்க வேண்டியதைவிடச் சின்னதான துளிகளாக விழுந்து முஹூர்த்த லக்னக் கோட்டுக்கு ஜலம் வந்தபோது, வாஸ்தவத்தில் அந்தச் சுப நேரம் தப்பி, அடுத்த லக்னம் வந்து விட்டது. அது கெட்ட லக்னம். அந்த லக்னத்தில் விவாஹமானதால் லீலா வதி ஜாதகப்படியே ரொம்பவும் பிஞ்சு வயஸில் பதியை இழந்து விட்டாள்.

முத்து விழுந்ததை அந்தக் குழந்தை உள்பட ஒருத்தரும் முதலில் கவனிக் காததால், இத்தனைப் பெரிய விபரீதம் நடந்துவிட்டது. அப்புறம் விஷயம் தெரிய வந்தபோது விதியை யாரும் மாற்ற முடியாது என்று தெரிந்து கொண்டார்கள்.

கணித சாஸ்திர விஷயமாகப் பிற்காலத்தில் பாஸ்கராசாரியார் ஒரு கிரந்தம் செய்ய வேண்டுமென்று நினைத்தார். சின்ன வயசிலேயே விதவையாகித் தம்மிடம் வந்துவிட்ட லீலாவதியை கணிதத்தில் பண்டிதை ஆக்கி, அவள் பெயரிலேயே தம் புஸ்தகத்தை எழுதினார். சாதாரணமாக ஒரு பரம்பரையில் பாட்டி, முப்பாட்டிகளின் பேரைக் குழந்தைக்கு வைத்து, அவர்களுடைய நினைவை நீடிக்கச் செய்கிறார்கள் அல்லவா? பாஸ்கராசாரியார் என்ன பண்ணினார் என்றால், குழந்தையே பெறாத தம்முடைய குழந்தையை, கணித மாணாக்க பரம்பரை முழுவதற்கும் ஓர் ஆதிப்பாட்டியாகச் சிரஞ்சீவித் துவம் பெறும் படியாகத் தம்முடைய புஸ்தகத்துக்கே ‘லீலாவதி கணிதம் ’ என்று அவள் பேரை வைத்து விட்டார்.

அதில் வியக்த கணிதம், பீஜ கணிதம் முதலிய பலவகைக் கணிதங்கள் இருக்கின்றன. ‘லீலா வதி கணக்கு’கள் கதை மாதிரியும், விடுகதை மாதிரியும், கவிதை மாதிரியும் சுவாரஸ்யமாக இருக்கும். கிரஹ ஸ்திதிகள், கிரஹங்களின் கதிகள் முதலியவற்றை நிர்ணயிப்பதற்கு உபயோகமாக ‘ஸித்தாந்த சிரோமணி’ என்ற ஒரு கிரந்தத்தையும் பாஸ்கராசாரியார் எழுதியிருக்கிறார்

thanjavooran
Posts: 3040
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share from my friend
சம்பிரதாயம் மீறாத வழி வைஷ்ணவ சம்பிரதாயத்தை சேர்ந்த ஒரு அம்மா பெரியவாளை தரிசனம் பண்ணி அவர்கள் மரபுப்படி நமஸ்கரித்து விட்டு நின்றாள்.
அவள் கண்களில் ஏதோ ஏக்கம், எதிர்பார்ப்பு, நம்பிக்கை.மெல்ல பெரியவாளிடம் விண்ணப்பித்தாள் ” குடும்பத்துல பலவித கஷ்டங்கள். வியாதி வெக்கை. ஒரு பொண்ணுக்கு கல்யாணம் ஆகி
ஏழெட்டு வருஷம் ஆகியும், குழந்தை இல்லை. இன்னொரு பொண்ணுக்கு வயசு எகிறிண்டே போறதே ஒழிய வரன் அமைய மாட்டேங்கறது.
பையனுக்கோ படிப்பே வரலை. பண கஷ்டம்………கேரளா போய் நம்பூதிரி கிட்டே பிரச்னம் பாத்தோம். பித்ரு தோஷமாம். பித்ரு கர்மாக்களை
ஒழுங்கா பண்ணாம விட்டதுக்கு ராமேஸ்வரம் போய் பரிகாரம் பண்ணணும்…ங்கறார். வைஷ்ணவ சம்பிரதாயப்படி, ராமேஸ்வர யாத்ரை,
பரிகார சடங்கு எதுவுமே பண்ணக் கூடாது. என்ன பண்ணறதுன்னே தெரியலை. பெரியவாதான் வழி காட்டணும்” என்றாள்.“நீங்க தென்கலையா?”“ஆமா”“உப்புச்சாறு, சாணிச்சாறு, சடைச்சாறு….ங்கற மூணும் தென்கலைக்கு கெடையாது…….”” ஆமாமா, எங்க அம்மா கூட உப்புச்சார், சாணிசார், சடைசார்…..ன்னு சொல்லுவா”“அதேதான். ராமேஸ்வர சமுத்ர ஸ்நானம், உப்புச்சாறு. பஞ்சகவ்ய பிராசனம் சாணிச்சாறு. கங்காஸ்நானம் சடைச்சாறு. ஏன்னா, பரமேஸ்வரனோட
சடையில் இருந்துதானே கங்கை வரது! அதுனால, சம்பிரதாய விரோதமா போகவேணாம். அதுக்கு பதிலா, நித்யம் சாளக்ராமம் [பெருமாள்]
திருவாராதனம் பண்ணி, திருமஞ்சன தீர்த்தம் சாப்பிடணும். அப்புறம், எகாதசியன்னிக்கு உபவாசம் இருங்கோ. பால், பழம், கிழங்கு சாப்பிடலாம்.
அன்னிக்கு ஓங்காத்துக்காரர் பன்னெண்டு திருமண் இட்டுண்டு திருவாராதனம் பண்ணணும். சரியா? மறுநா, த்வாதசியன்னிக்கி சீக்கிரமாவே
திருவாராதனம் பண்ணிட்டு, துளசி தீர்த்தம் சாப்டுட்டு பாரணை பண்ணணும். தெனமும் ஒரு பசுமாட்டுக்காவது ஒரு கைப்பிடி புல் தரணும்.
இப்பிடி பண்ணினா, சர்வ பிராயச்சித்தம் பண்ணினாப்ல ஆகும். பண்ணுவியா?”பெரியவாளோட உபதேசம் ஆக ஆக, அந்த அம்மா அழுகையை அடக்க முடியாமல் மாலை மாலையாக கண்ணீர் விட்டாள்.“பெருமாளே வந்து சொன்னா மாதிரி இருக்கு பெரியவா. என்னென்னமோ நெனச்சு குழம்பிண்டு இருந்தேன். ராமேஸ்வரம் போகத்தான்
வேணும்னு சொல்லுவேள்னு நெனச்சேன். பெரியவா சுத்த ஸ்படிகம். சம்பிரதாய விரோதமில்லாம வழி காட்டிட்டேள்! “காமத்தை வென்ற காமேஸ்வரனே நம்மை மாதிரி அல்பங்களுக்காக இறங்கி வந்து நாவினிக்க “நாராயண நாராயண” என்று சொல்லி
ஆசிர்வதிக்கும்போது, எல்லா சம்பிரதாயங்களும் அவனுள்ளே அடக்கம்தானே!

பெரியவரைக் கட்டிப் போட நினைத்த சித்து வசியக்காரர்… பெரியவர் மராத்தி மாநிலத்தில் பயணம், ஏதோ ஓர் ஊரில் (பூனா என்று சொன்ன ஞாபகம்) முகாம். அங்கு வாழ்ந்து வந்த
ஒரு அன்பர்(இப்போதைக்கு அவர் வம்பர், ஏன் என்றால் அவர் ஆபிசாரம் எனப்படும் வேலைகள் செய்து மக்களுக்கு மருந்து வைப்பது,
மந்திரம் வைப்பது, பில்லி சூனியம் என்று பணம் பண்ணுபவர், யாரிடம் நல்ல பெயர் இல்லாதவர்). பெரியவர் அங்கு வந்திருப்பது தெரிந்து சொல்லத்தகாத வார்த்தைகள் சொல்லி, ‘நான் பெரியவனா, இல்லை அவரா, பார்த்துவிடுகிறேன்
இன்று, என் சித்து மற்றும் வசியம் முன் அவர் என்ன செய்ய முடியும், இன்று அவரை என் வசியத்தால் கட்டிப்போடுகிறேன்’
என்றெல்லாம் கொக்கரித்து இருக்கிறார். அவர் குடும்பத்தார் மற்றும் பலர் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. அன்று பெரியவர் பூஜை பார்க்க ஆயிரக்கணக்கானோர் கூடினர். இந்த வம்பரும் சென்று ‘கடைசியில் கடைசியாய்’ இருந்து கொண்டு
கையில் மையை வைத்துக்கொண்டு என்னென்னவோ செய்தார் செய்தார் செய்தார்.அங்கே பெரியவரோ பூசையில் ஒன்றி விட்டார். பூசை முடிந்தது, திருநீர் பிரசாத விநியோகம் இனிதே நடந்தது.ஸ்வாமிகள் கை சொடுக்கி அழைத்தார் இவரை. இவருக்கோ ஒரே ஆச்சரியம்.
எப்படி இந்த ஆயிரம் ஆயிரம் சனத்தில் நம்மை குறி வைத்து அழைக்கிறார். குறி வைத்து தான் விட்டாரே…யாரை வசியப்படுத்துவேன் என்றாரோ,
அவரிடமே வசியப்பட்டு, யாரை பொம்மை ஆக்குவேன் என்றாரோ அவரிடமே பொம்மையென சென்றார், அமர்ந்தார்.பெரியவர் அவரை உற்று பார்த்தார். பின் மெல்ல பகர்ந்தார். ‘பின்னாடி திரும்பி பார்’. பார்த்தார் வம்பர்....... நடுநடுங்கினார்.பின்னால் இருந்த மொத்த அடியார் கூட்டமும், பெரியவராய் தெரிந்தது அவருக்கு. ஆம், அத்துணை அத்துணை பெரியவர்கள் மேலே, கீழே, இடது, வலது என்றெல்லாம் பார்க்க சொன்னார். எங்கெங்கு காணினும் பெரியவரடா… கதறி காலில் விழுந்தார். மன்னிக்க கோரினார். பாவமன்னிப்பு கேட்டார். சொன்னார் பெரியவர், ‘சித்து பெரிய விஷயமே இல்லே, ஒர்த்தர் கிட்ட கூட ஒனக்கு நல்ல பேரு இல்லே, கெட்ட வழிலே இவ்வளவு பணம்
பண்ணிருக்கே’. ‘அத்தனையும் விட்டுடறேன். பெரியவா கூட மடத்துக்கு வந்து சொச்ச காலத்தையாவது சேவகம் பண்ணி பாவம் போக்குகிறேன்’. ‘இல்லே, இன்னும் நிறைய இருக்கு ஒனக்கு. பாவ வழிலே சம்பாதிச்சாலும் பணம் பணம் தான். அதுனாலே அத்தனை பணத்தையும் நல்ல வழிலே
செலவு செய். நெறைய கல்யாணம் பண்ணி வை, ஏழை கொழந்தேளுக்கு. அவாள படிக்க வை, அம்பாளை ப்ரார்த்திச்சிண்டே இரு.
எல்லோரோட க்ஷேமத்துக்காகவும் பண்ணு, நீயும் க்ஷேமமா இருப்பே’. பார்த்த மாத்திரத்தில் பாவத்தை போக்குகின்ற தீர்த்த பெருக்கு.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

பக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா!
பெரியவாளுடைய கருணையைப் பற்றி, ஸ்ரீ எம்பார் விஜயராகவாச்சாரியார் என்பவர் கூறுகிறார்.
ப்ரவசன மேதை, ஆன்மீக சொற்பொழிவாளர் ஸ்ரீ எம்பார் விஜயராகவாச்சாரியாரை தெரியாதவர்கள் இல்லை. சைவ வைஷ்ணவ பேதம் அறியாதவர் என்பது மட்டும் இல்லாமல், பெரியவாளுடைய மஹா மஹா பக்தர்! தன்னுடைய ப்ரசங்கங்களில் பெரியவாளைப் பற்றி குறிப்பிடாமல் இருந்ததே இல்லை. முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் மாதிரி!
மெட்ராஸில் ஒரு சமயம் ப்ரவசனம் பண்ணிக் கொண்டிருந்த போது, பெரியவாளுடைய கருணையைப் பற்றி பேசுகையில், பல வர்ஷங்களாக ஒரு துளி கூட மழையே இல்லாத பல இடங்களில், பெரியவாளுடைய கருணையால், மழை பெய்து சுபிக்ஷமான, விஷயங்களை சொல்லிக் கொண்டிருந்தார். எல்லா இடத்திலும் விதண்டாவாதம் பண்ணும் ஆஸாமிகள் இருக்கத்தானே செய்வார்கள்? அந்த சபையிலும் ஒருவர் திடீரென்று எழுந்தார்………..” நீங்க அந்த ஸ்வாமிகள் மழையை பெய்ய வெச்சார்….ன்னு சொல்லறீங்களே! அது நெஜம்னா…….இன்னிக்கு இங்கே மெட்ராஸ்ல மழையை வரவழைக்க உங்க பெரியவங்களால் முடியுமா?” கேள்வியில் நையாண்டி, சவால், எகத்தாளம் எல்லாம் தொனித்தது.பெரியவாளுடைய கருணை உள்ளத்தைப் பற்றிப் பேசும்போதும், கேட்கும்போதும் மனஸ் நிரம்பி, கண்களில் நீர் தளும்பும் ஒரு “கத் கத”மான பரவஸ நிலை, சாதாரணமான பக்தர்களுக்கே உண்டு என்றால், எம்பார் போன்ற மஹா மஹா பக்தர்கள் எப்பேர்பட்ட நிலையில் இருந்து அதை அனுபவித்திருப்பார்கள்! உள்ளிருந்து பேச வைப்பதும் அவர்தானே?
“ஏன் பெய்யாது? பெரியவாளோட அனுக்ரகத்தால இன்னிக்கு நிச்சியமா மெட்ராஸ்ல மழை பெய்யும்!” அழுத்தந்திருத்தமாக, அடித்துச் சொல்லிவிட்டார். அப்போது ஒரு உத்வேகத்தில் அப்படி சொல்லிவிட்டாரே தவிர,” ஒரு வேளை மழை பெய்யலேன்னா.?……….பெரியவாளோட பேருக்கு ஒரு களங்கம் வந்துடுமே! நாராயணா! அனாவஸ்யமா இப்பிடி ஒரு விதண்டாவாதத்தை நான் கெளப்பி இருக்க வேண்டாமோ……….” என்று உள்ளூர ஒரே கவலை எம்பாருக்கு!ப்ரசங்கம் முடிந்தும் கூட அந்த விதண்டாவாதி அங்கேயே அமர்ந்திருந்தார்…………மழை வருகிறதா? என்று பார்க்க!பக்தனை பரிதவிக்க விடுவானா பகவான்? அங்கே காஞ்சிபுரத்தில் பெரியவா சுமார் ஒரு மணிநேரம் ஜபத்தில் இருந்தார். மெதுவாக கண்களைத் திறந்து அருகில் இருந்தவர்களிடம் சம்பந்தமே இல்லாத ஒரு கேள்வியைக் கேட்டார்…………
“ஏண்டா?…………இப்போ மெட்ராஸ்ல மழை பெய்யறதா?”
சுற்றி இருந்தவர்கள் மலங்க மலங்க முழிப்பதைத் தவிர ஒன்றும் பண்ணத் தெரியாமல் இருந்தனர்! ஆம். மெட்றாஸ் முழுக்க அப்போது மழை கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது! மஹா பக்தரான எம்பாரின் கண்களிலும் நன்றிக் கண்ணீர்! ஆனந்தக் கண்ணீர் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது!
அன்று அந்த விதண்டாவாதி, ஒன்று……….மழையில் தொப்பலாக நனைந்து கொண்டே வீடு போய் சேர்ந்திருப்பார். அல்லது, மழை நிற்க காத்திருந்து லேட்டாக வீட்டுக்கு போய் வீட்டுகார அம்மாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருப்பார்! யார் கண்டது? ஆனால், நிச்சயம் ஒன்று நடந்திருக்கும்……….அவரும் பெரியவா என்ற கருணைக் கடலில் ஒரு துளியாக அன்றே சேர்ந்திருப்பார்!
பக்தன் தன் மேல் கொண்ட த்ருட விஸ்வாசத்தால் க்ஷணத்தில் கொடுத்த வாக்கை நிறைவேற்ற, பெரியவா இயற்கையையே இசைய வைத்துள்ளார் என்றால், பகவானுக்கு பக்தன் மேல் உள்ள அன்பை என்னவென்று சொல்லுவது?
ANBUDAN
<>KVR<> received by mail from a relative....

thanjavooran
Posts: 3040
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share from my friend
புருஷனின் மாதா-பிதாக்களைச் சொன்னேன். ஸமீப காலம் வரையில் மாமியார் என்பவள் வேண்டாதவளாக இருந்தாள்; இப்போது வேண்டியவளாகிவிட்டாள்; ஆனால் இது நல்ல திருப்பம் என்று ஸந்தோஷப்படும்படி இல்லாமலிருப்பதுதான் பெரிய குறை. இப்போது மாமியார் எதற்குத் தேவைப்படுகிறாள் என்றால் மாட்டுப்பெண் ஆஃபீஸுக்குப் போயிருக்கிறபோது குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்காகத்தான்! பேபி-ஸிட்டர், க்ரெஷ் முதலானதுகளை விட மாமியார் கவனிப்பிலேயே சள்ளையும் குறைச்சல், செலவும் குறைச்சல் என்பதாலேயே அவளை வா, வா என்று கார்யார்த்தமாகக் கூப்பிட்டு வைத்துக்கொள்கிறார்கள். பெண்கள் உத்யோகம் பார்ப்பது ஸகலமான பேருக்கும் இப்போது பெருமையாக இருப்பதாலும், அது ரொம்ப அவச்யந்தான் என்று தோன்றுவதாலும், மாமியார்மார்களும், ஸந்தோஷமாகவே குழந்தைகளுக்கு ‘ஆயா பண்ண’ ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் வயஸு காரணமகா உடம்பு இடம் கொடுப்பதில்லைதான். அக்கடா என்று படுத்துக் கொண்டிருக்க மாட்டோமோ என்றுதான் உள்ளூர இருக்கும். ஆனாலும் இன்றைய போக்குக்கே அவர்களும் ஆதரவாக இருப்பதால் ச்ரமப்பட்டுக் கொண்டே பொறுப்பைச் சுமக்கிறார்கள். அம்மாவை விடப் பாட்டி என்றால் குழந்தைகளுக்கு ஸ்வாதீனம். ஜாஸ்தி; பயம் குறைச்சல். அதனால் படுத்தி எடுக்கத்தான் செய்யும். அதையும் பொறுத்துக்கொண்டுதான் பாட்டிமார்கள் செய்கிறார்கள். அவர்களே அப்படி ஸம்மதமாக இருந்தாலுங்கூட இப்படிப்பட்ட ஒரு நிலைமையை ஏற்படுத்துவது கொஞ்சமும் தர்ம ந்யாயங்களில் வராது. வயஸுக்காலத்தில் அவர்களைப் பிள்ளை-மாட்டுப்பெண் உட்கார்த்தி வைத்து சுச்ரூஷை செய்யவேண்டியதே தர்மமும் ந்யாயமும். அதற்கு நேர்மாறாக, தங்கள் பொறுப்பை அவர்களிடம் தள்ளி வேலை வாங்கினால் அது மஹா தோஷமாகும். அந்த வயஸுகட்டத்தில் வீட்டுப் பொறுப்பு முழுதையும் மாட்டுப்பெண்ணே வாங்கிக்கொண்டு சுற்றுக் கார்யம் சிலதற்குத்தான் மாமியாரை எதிர்பார்க்கலாம்.

ஒரு ஸ்த்ரீ க்ருஹிணியாக வீட்டோடேயே இருந்து கொண்டிருஇந்தால்கூட, புருஷன்-குழைந்தைகளின் ஆஃபீஸ்-ஸ்கூல் அவஸரத்தில் காலை வேளையில் அவள் அவஸரமாகவே ஆக்கிப் போட வேண்டியிருந்தாலும் ராத்ரியாவது அதற்குக் ‘காம்பன்ஸேட்’ பண்ண வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தேன்.

காலை வேளைச் சாப்பாடு எப்படிப் போனாலும் ஸாயந்திரம் பசங்கள் ஸ்கூல் விட்டு வந்ததும் தாயாரகப் பட்டவள் அதுகளுக்குப் புதிதாகத் தன்கையால் தினம் ஒரு தினுஸாக டிஃபன் பண்ணிப் போட்டு அந்த இளம் நெஞ்சுகள் ஸந்தோஷப் படுவதைப் பார்த்துத் தன் ஹ்ருதயமும் ஸந்தோஷப்படவேண்டும். அப்புறம் விளக்கேற்றி வைத்துவிட்டு, தெய்வ ஸ்தோத்ரம், பாராயண்ம் என்று கொஞ்சம் போது செலவு செய்துவிட்டு ராத்ரிச் சமையலுக்கு ஆரம்பிக்கவேண்டும்.

வயிற்றுக்குப் போடுவதோடு ஆத்மாவுக்குப் போடுவது

புருஷன் வைந்ததும் அவனையும் ஸந்த்யாவந்தனமோ – அவனுக்கான வழிபாடு வேறேயாக இருந்தால் அந்த வழியையோ பண்ணுவதற்கு அவனை ஊக்குவிக்க வேண்டும். இதுவும் ஒரு முக்கியமான பணி. ஸமீபகாலம் வரையில் நம்முடைய ஸ்த்ரீகள் வெகு அழகாகச் செய்து வந்த பணி. அன்ய மோஹத்தில் நம் மதாசரணைகளை அடியோடு விடத் துணிந்துவிட்ட புருஷர்கள் பலரைப் பொண்டாட்டிமார்கள்தான் திருப்பத் திரும்ப நச்சரித்துக் கொஞ்சத்தில் கொஞ்சமாவது மதத்தின் பக்கம் திருப்பி வந்திருக்கிறார்கள். அநேக வீடுகளில் அமாவாஸ்யை தர்ப்பணம், திவஸம்-திங்கள், பிள்ளைக்கு உபநயனம், தெய்வத்துக்கு வேண்டுதல் செய்வது முதலானவை ஸ்த்ரீகளின் ‘கம்பல்ஷ’னின் பேரிலேயேதான் புருஷர்கள் செய்திருக்கிறார்கள். வயிற்றுக்குப் போடுவதோடு, ஆத்மாவுக்கும் போடுவதான இந்த உத்தம கைங்கர்யத்தை எந்நாளும் ஸ்த்ரீ ப்ரஜைகள் தொடர்ந்து செய்ய வேண்டும்.
புருஷன் அந்த உபாஸனையை முடித்ததும், குடும்பம் முழுதுமாக – புருஷன், பெண்டாட்டி, குழந்தைகள் – எல்லாரும் பக்கத்திலிருக்கிற கோவிலுக்குக் காற்றாடப் போய்விட்டு வரலாம். பிள்ளையார் கோவில்கள்தான் மூலைக்கு மூலை இருக்கின்றனவே! அப்படியொன்றுக்கு குடும்ப ஸஹிதம் தினமும் போய்விட்டு வருவது மனஸுக்கு ஒரு பெரிய டானிக். இந்த டானிக்கை ப்ரிஸ்க்ரைப் செய்யும் டாக்டராகவும் பெண்களே இருக்கவேண்டும் என்பதுதான் என் ஆசை.

கோவிலிலிருந்து திரும்பி வந்ததும் சாப்பாடு. அப்புறம் கொஞ்ச நேரம் – கொஞ்ச நேரந்தான் – மனோரஞ்ஜகமாக டீவியில் ஆடல்-பாடல் பார்ப்பது. அப்புறம், எப்படியும் ராத்ரி 9.30 மணி 10 மணிக்கு முன்னால் நித்திரை போய்விடவேண்டும். அப்போதுதான் மறுநாள் விடிவதற்கு முன் பஞ்ச பஞ்ச உஷக்காலத்தில் எழுந்திருக்க முடியும். இப்போது ஒரே கோளாறாம். 11 மணி வரை கூட டீவி ப்ரோக்ராம் இருப்பதால் அதைப் பார்த்துவிட்டு, அந்த ஸ்ட்ரைன், ஆபீஸ் போய்விட்டு வந்த ஸ்ட்ரைன் எல்லாம் சேர்ந்து ஸ்த்ரீகளுக்கு விடியற்காலம், ஸூர்யோதயம் என்றாலே என்ன என்று தெரியாத தூக்கம் என்று ஆகியிருப்பதாகத் தெரிகிறது! * முன்னேயெல்லாம் விடிகிறதற்கு முந்தியே எழுந்து தெளித்து, மெழுகி, கோலம் போடுவார்கள். அது க்ருஹத்தை அழகு பண்ணுவது மட்டுமல்லாமல் க்ரஹிணியையும் நல்ல ஆரோக்கியத்துடனும் நல்ல மனத்தெளிவுடனும் இருக்கப் பண்ணிற்று. இப்போது இந்தப் பழக்கங்களெல்லாம் கொள்ளை போயிருப்பதைப் பார்க்க சொல்லி முடியாத கஷ்டமாக இருக்கிறது. இப்படி முழுக்க முழுக்க பணம், பதவி, அல்பமான லெளகிக ஸெளக்யங்கள் ஆகியவற்றுக்குப் பறப்பதாக் ஏற்பட்டு, நிஜமான ஸெளக்யத்தை – ஆத்ம ஸெளக்யம் மட்டுமில்லை; சரீர ஸெளக்யத்தையுமேகூட – காற்றிலே பறக்க விட்டிருப்பதாக ஏற்பட்டுவிட்டதே என்று வேதனையாயிருக்கிறது. தலைக்கு மேல் வெள்ளம் போய்விடவில்லை என்று சாஸ்திரீய வழியிலான நல்லதைச் சொல்கிறது. சொன்னால் ஆயிரம், பதினாயிரம், லக்ஷத்தில் ஒருத்தராவது கேட்டு அந்தப்படிப் பண்ணினால்கூட அது ஒரு லாபந்தான் என்பதால்தான் சொல்கிறது; புலம்புகிறது.

* (பல சானல்கள், கேபிள் டிவி முதலியன வந்து ஒரு நாளின் 24 மணி நேரமும் நிகழ்ச்சிகள் நடக்கத் தொடங்கியதற்கு முற்பட்ட காலத்தில் கூறியது.)

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

கர்ண யக்ஷிணி காதில் சொன்னதோ (Karna yakshini Kathil)

Varagoor Narayanan அவர் அனுமதியுடன் மறு பதிப்பு செய்யப்பட்டது..>>Mannargudi Sitaraman Srinivasan
புதுக்கோட்டையில் முகாம். மெயின் ரோடில் இருந்த பெரிய சத்திரத்தில் தங்கியிருந்தா பெரியவா. இரவுகால பூஜை முடிந்ததும் தனக்கு கைங்கர்யம் பண்ணும் நாகராஜனைக் கூப்பிட்டு " அப்பா நாகு! நாளக்கி விடிகாலம்பர மூணரை மணிக்கெல்லாம் நான் ஏந்திருந்து ஸ்நானம் பண்ணியாகணும்...........நீ ஞாபகம் வெச்சுக்கோ!" என்றார்.
"உத்தரவு பெரியவா. சரியா மூணரை மணிக்கு "ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர" ன்னு நாமாவளி கோஷம் பண்ணறேன் பெரியவா" என்றான் பவ்யமாக.
நமுட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டே "மூணரை மணிக்கு ஒங்கள எழுப்பி விட்டுடறேன்...ன்னு சொன்னா, அவ்வளவு நன்னா இருக்காதுங்கறதால....."ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர" சொல்லறேன்னு சொல்லறியாக்கும்? சரி அப்பிடியே பண்ணு"
ராத்திரி பதினோரு மணி. எல்லோரும் படுத்துக் கொண்டாயிற்று. பெரியவாளும் சயனத்துக்கு போய் விட்டார். நாகுவுக்கு ஒரே கவலை! அங்கே எங்கேயும் கடிகாரமே இல்லை! அவனிடம் இருப்பதோ, அவனுடைய மாமா "பூணூல்" கல்யாணத்துக்கு பிரசன்ட் பண்ணின பழைய வாட்ச்! அதுகூட பழைய டிரங்க் பொட்டிக்குள் இருக்கு. ஏனென்றால் பெரியவாளுடன் இருக்கும் போது கட்டிக் கொள்ளவது அவ்வளவு நன்றாக இருக்காது என்பதால்தான். தானும் படுத்து தூங்கிவிட்டால், பெரியவாளை எப்படி எழுப்ப முடியும்? என்ன பண்ணுவது?
நேராக போய் தன் பொட்டியில் இருந்த வாட்சை எடுத்துக் கொண்டான். சத்தமில்லாமல் விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம் பண்ண ஆரம்பித்தான். பல தடவை பண்ணினான். சரியாக மணி 3 . 30 ! கைகளை கட்டி கொண்டு பெரியவா சயன அறை வாசலில் நின்று கொண்டு சன்னமாக "ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர" என்று நாமாவளி போட்டான். சிறிது நேரத்தில் சாக்ஷாத் பரமேஸ்வரனான பெரியவா மந்தஹாசத்தோடு வெளியே வந்து அவனுக்கே அவனுக்கு மட்டும் "விஸ்வரூப" தரிசனம் குடுத்தார். எப்பேர்ப்பட்ட பாக்யம்!! ஸ்நானத்துக்கு ஏற்பாடு பண்ணினான் நாகு. அடுத்தடுத்த நாட்கள் இதே மாதிரி இரவு முழுக்க பாராயணம், சரியாக மூணரை மணிக்கு "ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர" நாமாவளி, பெரியவாளுடைய காணக் கிடைக்காத விஸ்வரூப தரிசனம் என்று நாகு திக்கு முக்காடித்தான் போனான்! ஆனால், பெரியவாளின் மேல் இருந்த ப்ரேமை அவனுக்கு பலத்தை குடுத்தது.
நான்காவது நாள் இரவு, வேஷ்டியில் வாட்சை சொருகிக் கொண்டு சஹஸ்ரநாம பாராயணம் பண்ணிக் கொண்டிருந்தவன், பாவம், தன்னை அறியாமல் தூங்கி விட்டான்! "ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர" மதுரமான தெய்வீக த்வனி, அவனை எழுப்பியது! தூக்கிவாரிப் போட்டபடி எழுந்தான்! எதிரே கருணை ததும்ப சிரித்தபடி, அவனை தேடி வந்து விஸ்வரூப தரிசனம் தந்தான் அந்த பரமேஸ்வரன்!!!
மிகுந்த வாத்சல்யத்துடன் "கொழந்தே! மணி சரியா மூணரை ஆறதுடா........ப்பா! அசதில பாவம் நீ தூங்கி போயிட்டே போலருக்கு! பாவம்.......ஒனக்கும் நாள் பூர கைங்கர்யம்..சரீர ஸ்ரமம் இருக்குமோன்னோ?" சிரித்தபடியே சொல்லிவிட்டு வாசல்பக்கம் போனார். வாட்சை பார்த்தால் மூணரை! இவனுக்கோ ஒரே ஆச்சர்யம்! வாட்சைப் பாக்காமலேயே பெரியவா எப்படி கரெக்டா மூணரை..ன்னு சொன்னார்!!
மறுநாள் பக்கத்தில் ஒரு பித்தளை சொம்பில் ஜலத்தோடு அமர்ந்தவன், கண்ணில் ஜலத்தை விட்டு அலம்பிக் கொண்டு பாராயணம் பண்ணிக் கொண்டிருந்தவன் ரெண்டரை மணி வரை ஒட்டிவிட்டான். பாவம். தன்னையறியாமல் தூங்கிவிட்டான். முந்தின நாள் போலவே பெரியவா வெளியில் வந்து இவன் தூங்குவதையும், பக்கத்தில் சொம்பில் ஜலம் இருந்ததையும் கண்டு சிரித்துக் கொண்டே நாமாவளி போட்டு அவனை எழுப்பினார். மணி சரியாக மூணரை!!ஆச்சர்யத்தின் உச்சிக்கே போய் விட்டான் நாகு! அன்று மத்தியான்னம் மெதுவாக பெரியவா முன்னால் போய் நின்றான். " என்னடா....நாகு! நமஸ்காரம் பண்ணிட்டு நிக்கறதைப் பார்த்தா, ஏதோ எங்கிட்ட கேக்கணும் போல இருக்கே!! என்ன தெரியணும்? கேளு..."
"அதெல்லாம் ஒண்ணுமில்லே பெரியவா..........."
"எனக்கு தெரியும். ரெண்டு நாளா நாம தூங்கிப் போயிடறோமே..........பெரியவா எப்டி அவ்வளவு கரெக்டா மூணரை மணிக்கு எழுந்துண்டு வரார்? அவர்கிட்ட கடிகாரம் கூட கெடையாதே!......எப்பிடி முழுசுக்கறார்...ன்னுதானே கொழம்பிண்டு இருக்கே? இல்லியா பின்னே?"
"ஆமா பெரியவா. என்னன்னே தெரியலை...........ரெண்டு நாளா என்னையும் அறியாம தூங்கிடறேன். பெரியவாதான் சரியா மூணரைக்கு ஏந்து வந்து என்னையும் எழுப்பி விடறேள்...எனக்கு ரொம்ப வெக்கமா இருக்கு. மூணரை மணி....ன்னு சரியா எப்டி பெரியவா.........."
அவன் முடிப்பதற்குள் "ஏதாவது கர்ண யக்ஷிணி எங்..காதுல வந்து "மணி மூணரை " ன்னு சொல்லறதோன்னு சந்தேகமோ ஒனக்கு?" கடகடவென்று சிரித்தார்.
"எங்..காதுல ஒரு யக்ஷிணியும் வந்து சொல்லலே.........மணி மூணரைன்னு எங்..காதுல வந்து சொன்னது "பஸ்". அதுவும் மதுரை டி.வி.சுந்தரம் ஐயங்காரோட டி.வி.எஸ் பஸ்!! ஆச்சர்யப்படாதே!! மொத நாள் சரியா மூணரைக்கு நீ "ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர" சொல்லி எழுப்பினேல்லியோ?.....அப்போ வாசப் பக்கம் வந்தேனா...........அப்போ ஒரு பஸ் சத்திர வாசலை தாண்டி, டவுனுக்குள்ள போச்சு! அடுத்த ரெண்டு நாளும் அதே பஸ்ஸை மூணரைக்கு பாத்தேன். அப்புறமா விஜாரிச்சா.......அது டி.வி.எஸ் கம்பெனியோட பஸ் ! மதுரைலேர்ந்து புதுக்கோட்டைக்கு விடியக்காலம் வர மொதல் பஸ்ஸுன்னும் சொன்னா..சத்திர வாசலை அந்த பஸ் விடியக்காலம் சரியா மூணரைக்கு தாண்டிப் போறது...ஒரு செகண்ட் அப்டி....இப்டி மாறல்லே...டி.வி.எஸ் பஸ் ஒரு எடத்துக்கு வர டயத்த வெச்சுண்டே......நம்ம கடியாரத்த சரி பண்ணிக்கலாம்னு சொல்லுவா...அது வாஸ்தவம்தான்! மூணு நாள் செரியா பாத்து வெச்சுண்டேன்! நாலாம் நாள்லேர்ந்து அந்த பஸ்ஸோட சத்தம் கேட்ட ஒடனேயே தானா.. எழுந்துட்டேன்........வேற பெரிய ரகஸ்யம் ஒண்ணுமே இல்லேடா...ப்பா நாகு!" பெரியவா மிகவும் ரசித்துச் சிரித்தார்.
ஒரு பஸ் போவதைக் கூட கவனிச்சு அதுவும் ஒருநாள் இல்லை, விடாமல் தினமும் கவனிச்சு, அதையும் ஸ்லாகித்துக் கூறும் நுணுக்கமான பேரறிவு, பெரியவாளுக்கு இருப்பதில் ஆச்சர்யம் இல்லை...... ஏனென்றால், பெரியவா என்றாலே பேரறிவுதானே!! P for "Perfection " - என்பதைவிட P for Periyava என்று சொல்லலாம்! நாமும் இந்த குணத்தில் துளியையாவது நம்முடைய தினசரி வாழ்க்கையில் கடைப்பிடிக்க பெரியவா அனுக்கிரகம் பண்ண பிரார்த்திப்போம்.


post courtesy Varagooran Narayanan

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

காஞ்சிப் பெரியவரை வந்து தரிசனம் செய்து பலனடைந்த சிலர் பற்றி நினைவு கூர்கிறார் மாங்காடு லக்ஷ்மி நாராயணன்…
”பெரியவா கும்பகோணம் பக்கத்தில் திருவிடைமருதூரில் வேத ரட்சண சமிதி சதஸ் நடத்திவிட்டு, திருவண்ணாமலை வழியாக, காஞ்சிபுரம் போகலாம் என்று அபிப்ராயப்பட்டார்.

திருவண்ணாமலைக்கு வந்துவிட்டு, கிரி பிரதட்சிணம் பண்ணாமல் போவதா என்று, காலையிலேயே தயாராகிக் கிளம்பிவிட்டார். மத்தியானம் மூன்று மணி ஆயிற்று கிரிவலம் வந்து முடிக்க.

வழியில் சில செடிகளைக் கிள்ளி, ”பாரு, இதில் ஏலக்காய் வாசனை வரதா?” என்று கேட்பார்.

இன்னொரு செடியைக் கிள்ளி இலையை எடுத்து, ”இதில் பார், பச்சைக் கற்பூர வாசனை வரும்!” என்று நீட்டுவார்.

இது மாதிரி அங்கங்கே நின்று சில குறிப்பிட்ட செடிகளின் இலைகளை மட்டும் கிள்ளி எடுத்துக் காண்பிப்பார். ”இங்கே அந்தக் காலத்திலே நிறைய சித்தர்கள் இருந்திருக்கா. அவாளுக்குத் தங்கம் எல்லாம் பண்ற ரசவாத வித்தை தெரிஞ்சிருந்துது. ஆனா, அந்த வித்தையை எல்லாம் அந்தச் சித்தர்கள் யாருக்கும் சொல்லிவிட்டுப் போகலே!” என்று சிரித்தார் பெரியவா.

அப்புறம், திருக்கோவிலூர் வழியாக யாத்திரை பண்ணி, காஞ்சிபுரம் வந்துவிட்டோம். காஞ்சிபுரத்திலும் அதிக நாள் தங்கவில்லை. அங்கே இருந்து கலவைக்கு வந்துவிட்டோம். அங்கேதான் பெரியவாளோட பரம குருவின் அதிஷ்டானம் இருக்கிறது.

கலவை முகாம்ல ஒரு விசேஷம். இந்திராகாந்தி, எம்.ஜி.ஆர். போன்ற வி.ஐ.பி-க்கள் எல்லாரும் கலவையில்தான் வந்து பெரியவாளை தரிசனம் பண்ணிவிட்டுப் போனார்கள்.
மதுரையில் ஒரு மீட்டிங்குக்குப் போய்விட்டு, சென்னைக்கு வந்தார் இந்திராகாந்தி. ரொம்பவும் படபடப்பாக இருந்தார்.

‘பெரியவாளைப் பார்த்து தரிசனம் பண்ணிவிட்டுத் தான் போவேன்’ என்று உறுதியாக இருந்தார். ‘அவர் மௌன விரதத்தில் இருக்கிறார். அவர்கிட்டே நீங்க எதுவும் பேச முடியாது. அவரும் பதில் எதுவும் சொல்ல மாட்டார்’ என்று அவரிடம் சொன்னோம்.

‘பரவாயில்லை. என் வேண்டுகோளை நான் மனதில் நினைத்துக் கொள்கிறேன். அப்படி, அவர் முன்னிலையில் நான் நினைத்துக் கொள்வதே போதும். அவர் பதில் ஏதும் சொல்ல வேண்டாம்!’ என்று கூறிவிட்டார் இந்திராகாந்தி.
அதே மாதிரிதான் நடந்தது.

ஒரு கிணற்றடியில் பெரியவா உட்கார்ந்து ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தார். அவரைப் பார்க்கிற மாதிரி இந்திராகாந்தி வந்து எதிரே உட்கார்ந்து கொண்டார். எதுவுமே பேசவில்லை!

இந்திராகாந்தி உத்தரவு வாங்கிக்கொள்ள எழுந்தபோது, பெரியவா ஒரு ருத்ராக்ஷ மாலையை எடுத்துக் கொடுத்தார். அதை ஒரு தட்டில் வைத்து இந்திரா காந்தியிடம் கொடுத்தோம். அந்த க்ஷணத்திலிருந்தே அதை அவர் அணிந்துகொள்ளத் தொடங்கி விட்டார்.

கர்நாடகாவில் அப்போது தேர்தல் நேரம். காங்கிரஸ் மந்திரி குண்டுராவ் அடிக்கடி பெரியவாளைப் பார்க்க வருவார். தேவகௌடா, நாகண்ண கௌடா என எல்லாருக்குமே பெரியவா மேல் பக்தி உண்டு.

குண்டுராவ் வந்து, ‘பெரியவா என்னை அனுக்கிரகம் பண்ணணும்’ என்று கேட்டுக் கொண்டார். ‘என்னோட அனுக்கிரகம் எதுக்கு? காமாட்சி அம்மனை வேண்டிக்கோ. உன் பிரார்த்தனை பலிக்கும்!’ என்றார் பெரியவா. அதே மாதிரி, அடுத்த ஒரு மாதத்தில் எலெக்ஷனில் குண்டுராவ் ஜெயித்து, கர்நாடகாவில் முதல் மந்திரி ஆகிவிட்டார். அவர் எப்போதும் வியாழக்கிழமை அஞ்சு மணிக்குத்தான் வருவார். வந்தால் அதிகம் பேச மாட்டார். அன்றைக்கு அவர் வருகிறபோது ஒரு மூட்டை அரிசியும், ஒரு மூட்டை சர்க்கரையும் கொண்டு வந்து, பிரசாதத்துக்கு வைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

77-ல் எலெக்ஷனில் தோற்றுப் போனார் இந்திராகாந்தி. அதற்கு அடுத்த வருஷம் கர்நாடகாவில் உள்ள சிக்மகளூரில் நின்றார். அப்போது காங்கிர ஸூக்குப் பசுமாடு – கன்று சின்னம் இருந்தது. ஆனால், அது வேண்டாம்; வேறு சின்னம் வேண்டும் என்று நினைத்தார் இந்திரா.
கலவையில் அவர் பெரியவாளைச் சந்தித்தபோது, பெரியவா கையை உயர்த்தி ஆசீர்வாதம் செய்தார் அல்லவா? அது அப்போது மனசில் வர, கையையே காங்கிரஸ் சின்னமாகத் தீர்மானித்துவிட்டார் இந்திரா. காங்கிரஸூக்குத் கை சின்னம் முத்திரையாகக் கிடைத்தது இப்படித்தான். சிக்மகளூரில் இந்திரா ஜெயித்துவிட்டார்.

ஒரு விசேஷத்துக்காக அகோபிலத்துக்குப் போகணும் என்று பெரியவா புறப்பட்டார். பெரியவா நடந்து வந்தாலும், மடத்துச் சிப்பந்திகள் ஒரு ஜீப்பில் சாமான்களை எல்லாம் கொண்டு வந்தார்கள்.
அகோபிலம் ஆந்திராவில் இருக்கிறது. அங்கே ஒன்பது நரசிம்ம க்ஷேத்திரங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வோர் இடத்தில் இருக்கும். போவதே கஷ்டம். ஒரே மூங்கில் காடாக இருக்கும். அப்படியே மூங்கிலால் பந்தல் போட்டதுபோல இருக்கும். அதில் சர்ப்பங்கள் தொங்கும். தாண்டிப் போகவே பயமாக இருக்கும். அந்தப் பக்கத்தில் துஷ்ட மிருகங்கள் எல்லாம் நிறைய நடமாடும். ஆதி சங்கர பகவத் பாதரே, தன்னைக் கொல்ல வந்த காபாலிகளை, அங்கே இருந்த நரசிம்ம சுவாமியை வேண்டிக்கொண்டு, வதம் பண்ணிய இடம் அது.

உக்ர நரசிம்மர் சந்நிதியை 6 மணிக்குக் கதவடைத்து விடுவார்கள். அதற்கப்புறம் அங்கே யாரும் வர முடியாது. பெரியவாளுக்கு அகோபிலம் போகணும் என்று தோன்றிவிட்டது. ஆனால், போகிற வழியை உத்தேசித்து எங்களுக்கெல்லாம் எப்படிப் போவது என்று பயம் வந்துவிட்டது. பெரியவாளுக்கு அந்த பயம் எல்லாம் கிடையாது. அவருடைய தபஸ் அப்படி. அவருக்கு மட்டுமல்ல, அவரோடு வருகிறவர்களுக்கும் எந்த ஆபத்தும் நேராமல் பார்த்துக்கொள்ளும் மகா சக்தி அவரிடம் இருந்தது!” என்கிறார் லக்ஷ்மி நாராயணன்.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kanchi Maha Periyava

Post by cmlover »

Vijay TV is running a series of episodes on Mha PeriyavAL.
The one on the early days are very interesting.
Are these authentic?

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

CML..
I saw first two episodes..I found lot of distortions.
It was felt the same way by members of kanchi sage..

It was felt that a wrong image is being sent of Maha Periva..

One member chose to sent a letter to vijay TV..Pointing out the errors..

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kanchi Maha Periyava

Post by cmlover »

That is sad!
They should post a disclaimer that it is purely for only entertainment!

vgovindan
Posts: 1950
Joined: 07 Nov 2010, 20:01

Re: Kanchi Maha Periyava

Post by vgovindan »

We have reduced Mahaperiava as a miracle-maker - in the same manner as Christians give recognition to 'saints' by miracles. This particular 'aura' around Mahaperiava performing miracles has completely overshadowed his message of AnmIka - like the one on 'paSu-pati-pASa'. The band-wagon of miracle seekers seems to be growing by day. Only Mahaperiava can save the situation through another miracle now.

Pratyaksham Bala
Posts: 4205
Joined: 21 May 2010, 16:57

Re: Kanchi Maha Periyava

Post by Pratyaksham Bala »

It is the compulsion of the day.
The focus had to be shifted!
There is no other way except to fall back on the past glory.
For many years to come the spotlight will be on Periyava and his Adishtanam.
Stories and exaggerations are essential parts of this grand game !


Hara Hara Sankara! Jaya Jaya Sankara !
HARA HARA SANKARA !
JAYA JAYA SANKARA !

:ymapplause: :)) :ymapplause: :)) :ymapplause: :)) :ymapplause:

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kanchi Maha Periyava

Post by cmlover »

Even educated folks fall for miracles!
The other day I performed a baffling parlour trick to a group of Indian guests mostly Ph Ds and MDs witha sweet talk that I have miraculous powers. They believed it and it hurt me finally to confess that it was just a trick.
If only I was wearing a saffron robe, I could have easily started a cult among them!

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Kanchi Maha Periyava

Post by Ponbhairavi »

Deleted
Last edited by Ponbhairavi on 01 Mar 2014, 22:27, edited 1 time in total.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Image


**’ராயபுரம் ஸ்ரீ பாலு’** அவர்கள் +
**’திருச்சி ஸ்ரீ. ஸ்ரீகண்டன்’** அவர்கள்
பற்றிய சில முக்கியமான செய்திகள்:

இருவருமே தங்கள் வாழ்க்கையில் திருமணம் செய்துகொள்ளாத பிரும்மச்சாரிகள். இருவருமே காசு பணத்தைத் துச்சமாக நினைத்தவர்கள். இடுப்பு வேஷ்டி துண்டு தவிர மற்ற எல்லாவற்றையும் உதறி எறிந்துவிடும் உத்தமர்கள். ஸ்ரீமடத்தில் சம்பளம் ஏதும் வாங்காமல் உண்மையான பக்தியுடன் கடைசிவரை உழைத்து பகவத் கைங்கர்யம் செய்தவர்கள்.

இருவருமே ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாஸ்வாமிகளுடன் கூடவே இருந்து, சுமார் 30 வருடங்களுக்கு மேல் [1965-1994] ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாஸ்வாமிகளுக்கு கைங்கர்யம் செய்து வந்தவர்கள். இது சாதாரணதோர் விளையாட்டு விஷயம் அல்ல. மிகவும் குறிப்பறிந்து நடக்க வேண்டிய கஷ்டமான வேலை.

இரவு பகல் எந்நேரமும் விழிப்புடன் இருந்து செயல்பட வேண்டும். பசிபட்டினி இருக்க வேண்டும். ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவாளுக்கு பிக்ஷை நடைபெறாமால், பிக்ஷை நடத்தி வைக்காமல் இவர்கள் எதையும் சாப்பிடவோ, தண்ணீர் அருந்தவோ கூட முடியாது. ஸ்வாமிகள் ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள் விரதம் பட்டினியென்றால் இவர்களும் பட்டினி இருக்கத்தான் வேண்டியிருக்கும்.

சித்தன் போக்கு சிவன் போக்கு என்பது போல ஸ்ரீ ஸ்வாமிகள் எப்போது எழுந்து நிற்பார், எப்போது எங்கே புறப்படுவார் என யாராலும் கேட்கவோ, சொல்லவோ, தீர்மானிக்கவோ, அனுமானிக்கவோ முடியாது.

அதனால் எப்போதுமே இவர்கள் இருவரும் மிகுந்த விழிப்புணர்வுடன் தான் இருக்க வேண்டும். ஸ்ரீ ஸ்வாமிகளுக்கு ஸ்நானத்திற்கான ஏற்பாடுகள், மடி வஸ்திரங்கள், தியானம், பூஜை, நித்யப்படி அனுஷ்டானங்கள் முதலியவற்றிற்கான அடுத்தடுத்த தேவைகளை கவனிக்க வேண்டியிருக்கும்.

திடீரென்று ஸ்வாமிகள் விடியற்காலம் 3 மணி சுமாருக்கு எங்கேயாவது புறப்பட்டால், இவர்களும் அதற்கெல்லாம் தயாராக இருக்க வேண்டும்.

சின்னக்காஞ்சீபுரம், தேனம்பாக்கத்தில் சிவாஸ்தானம் என்ற இடத்தில் ஸ்ரீ மஹாபெரியவா நீண்ட நாட்கள் தனியே, ஓர் கிணற்றடிக்குப்பின்புறம் கொட்டகை போட்டுக்கொண்டு தங்கியிருந்தார்கள். தரிஸனத்திற்கு வருவோர் அந்தக்கிணற்றுக்கு முன்புறம் நின்றே, கிணற்றுக்குப்பின்னால் உள்ள அவர்களை தரிஸிக்க வெண்டும் என ஏற்பாடுகள் செய்திருந்தார்கள்.

முதல் நாள் மாலை தரிஸனம் செய்த நானும் என் குடும்பத்தாரும் மறுநாள் காலையில் மீண்டும் தரிஸனம் செய்ய வேண்டும் என விரும்பியதால், அங்கே அருகில் இருந்த உபநிஷத் ப்ரும்மேந்திர மடம் என்னும் இடத்தில் ஸ்ரீ கோபால தீக்ஷதர் என்பவர் வீட்டில் ஓர் இரவு தங்க நேர்ந்தது.

அது மிகவும் குளிரான மார்கழி மாதம். விடியற்காலம் 4 மணிக்குள் வாசலில் ஒரே ஒரே பரபரப்பு. விடியற்காலம் 3.30 மணிக்கே ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா புறப்பட்டு, மிகப்பெரிய வரதராஜ பெருமாள் கோயிலின் வெளிப்பிரகாரத்தை படுவேகமாக பிரதக்ஷணம் செய்யக்கிளம்பி விட்டார்கள், எனக்கேள்விப்பட்டு நானும் ஓடினேன்.

விளக்கு வெளிச்சம் கொடுத்துக்கொண்டு இவர்கள் இருவரும் [ஸ்ரீ பாலுவும் ஸ்ரீ ஸ்ரீகண்டனும்] கூடவே ஓடுகிறார்கள். அதற்குள் நிறைய ஜனங்களும் தரிஸனத்திற்கு வந்து சேர்ந்து கொண்டு விட்டார்கள்.

ஜனங்கள் யாரும் நமஸ்காரம் செய்யவேண்டும் என்ற ஆர்வத்தில் ஸ்ரீ மஹாபெரியவா மேல் பட்டுவிடாதபடி, கட்டுப்பாடுகள் செய்ய வேண்டியதும் இவர்கள் வேலையாகவே இருந்தது.

பலர் வீடுகளில் வாசல் தெளித்து கோலம் போட்டு, ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளுக்கு பூர்ணகும்பம் கொடுத்து வரவேற்பதும், ஹாரத்தி சுற்றி கற்பூரம் ஏற்றுவதுமாக விடியற்காலம் நாலு மணிக்கே வெளிப்பிரகார நான்கு வீதிகளிலுமே ஒரே அமர்க்களமாக இருந்ததைக்கண்டு ரஸித்தேன்.

சிலசமயங்களில் ஸ்ரீ ஸ்வாமிகளை இவர்கள் இருவரும் உரிமையோடு கோபித்துக்கொண்டு, எப்படியாவது கொஞ்சம் ஆகாரம் அவர்கள் எடுத்துக்கொள்ள வைப்பது என்பது மிகவும் கஷ்டமான காரியம்.

சின்னக் கைக்குழந்தைக்கு அதன் தாய் வாத்சல்யத்துடன், விளையாட்டுக்காட்டி, செல்லமாக கோபித்து, சோறு ஊட்டுவது போல மிகவும் கஷ்டமான வேலை தான், ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவாளுக்கு பிக்ஷை செய்து வைப்பது என்பதும்.

அவர்களுக்கான உணவுகளில் நிறைய கட்டுப்பாடுகள் விதிமுறைகள் உண்டு. சில மாதங்களில் அரிசி, பருப்பு வகைகள் போன்ற தான்யங்களே எதுவும் சேர்க்கக்கூடாது. சிலமாதங்க்ளில் காய்கறிகள், சில மாதங்களில் பழ வகைகள், சில மாதங்களில் பால் தயிர் போன்றவை தள்ளுபடி செய்ய வேண்டியிருக்கும். அவரின் வாழ்நாளில் கடைசி காலங்களில் ஒரே ஒரு வேளை மட்டும், ஒரு கொட்டாங்கச்சி அளவு நெல் பொரியில் தயிர் சேர்த்து சாப்பிட்டு வந்ததாகச் சொல்வார்கள். அவர்களின் தபஸ் வலிமையினால் மட்டுமே நீண்ட காலம் ஆரோக்யமாக வாழ்ந்துள்ளார்கள்.

இந்த பாலுவும், ஸ்ரீகண்டனும் தனக்காகவே இப்படிப் பட்டினி கிடக்கிறார்களே என்று இரக்கப்பட்டு, ஸ்ரீ ஸ்வாமிகள் அவர்களும் பிக்ஷைக்கு அமர்வதும் நடைபெற்றதுண்டு எனக் கேள்விப்பட்டுள்ளேன்.

அதுபோல ஆயுர்வேத வைத்யமும், மருந்து தயாரிப்புகளும் தெரிந்துகொண்டிருந்த ஸ்ரீ ஸ்ரீகண்டன் அவர்கள், ஸ்ரீ பெரியவாளை மிகவும் கெஞ்சிக்கூத்தாடி வற்புருத்தி ஒருசில சூர்ணங்கள், லேகியங்கள், கஷாயங்கள் முதலியன, சிரத்தையாகத் தானே தன் கைப்படத் தயாரித்து ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளை அவ்வப்போது சாப்பிட வைப்பதும் உண்டு எனக்கேள்விப்பட்டுள்ளேன்.

இதுபோல கண்களை இமைகள் காப்பது போல ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளுக்கு இவர்கள் இருவரும் தூய அன்புடனும், வாத்சல்யத்துடனும், பக்தியுடனும் பகவத் கைங்கர்யம் செய்யும் பாக்கியம் பெற்றிருந்தார்கள். THEY WERE ONLY, LOOKING AFTER ALL THE PERSONAL NEEDS OF "HIS HOLINESS MAHA SWAMIGAL" FOR MORE THAN 30 YEARS FROM 1964 TO 1994.

இவர்கள் இருவரும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாஸ்வாமிகளுடன் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு சுவையான MIRACLE அனுபவங்களைச் சொல்லச்சொல்ல நான் அவற்றை மிகவும் ஆர்வமாகக்கேட்டு அறிந்து, மகிழ்ந்தது உண்டு.

இதில் ஸ்ரீ. ஸ்ரீகண்டன் என்கிற வைத்யலிங்க ஸர்மா பிறந்த ஊர் : காரைக்குடி அருகில் உள்ள வேலங்குடி என்ற கிராமம். அவர் பிறந்த நாள்: 04.04.1937. ஆனால் இவரின் சொந்த ஊர் : திருச்சி. பூர்வீகம்: லால்குடிக்கு அருகே உள்ள ஆங்கரை கிராமம்.

இவரும் பிறகு சந்நியாசம் வாங்கிக்கொண்டார். சந்நியாச ஆஸ்ரமம் காஞ்சீபுரம் காமாக்ஷி அம்மன் கோயில் குளத்தில் மேற்கொண்ட நாள்: 24.02.2002. அதுமுதல் ஸ்ரீ ஸதாசிவானந்த தீர்த்த ஸ்வாமிகள் என அழைக்கப்பட்டார்.

இவர் சந்நியாஸம் மேற்கொண்ட 24.02.2002 அன்று எடுக்கப்பட்ட புகைப்படம். அருகில் உயரமாக நிற்பவர் ராயபுரம் ஸ்ரீ. பாலு அவர்கள்.

இந்த ஸ்ரீ.ஸ்ரீகண்டன் என்று அழைக்கப்பட்ட ஸ்ரீ ஸதாசிவானந்த தீர்த்த ஸ்வாமிகள் ஸித்தியடைந்து ப்ருந்தாவனப்பிரவேசம் ஆன நாள்: 11.05.2003

இவரின் அதிஷ்டானம் திருச்சி லால்குடிக்கு அருகில் உள்ள ஆங்கரை என்னும் கிராமத்தில் காயத்ரி நதி என்ற வாய்க்கால் கரையோரம் அமைந்துள்ளது.

வரும் 21.04.2013 அன்று இவருக்கு திருச்சி டவுனில் 10ம் ஆண்டு நிறைவு ஆராதனையும், அதே தினம் ஆங்கரையில் அமைந்துள்ள இவரின் அதிஷ்டானத்திற்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளன.

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா குளத்தில் ஸ்நானம் செய்யும் போது
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டுள்ள புகைப்படம்.

உடன் இருக்கும் ஆறு பேர்களில் முதலில் இருப்பது ராயபுரம் ஸ்ரீ பாலு அவர்கள் மூன்றாவதாக இருப்பது திருச்சி ஸ்ரீ. ஸ்ரீகண்டன் அவர்கள்.

குளக்கரையில் தியானத்தில் / அனுஷ்டானத்தில்
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அமர்ந்துள்ளார்
அருகே நிற்பது ஸ்ரீ. ஸ்ரீகணடன் அவர்களும்
+ ஸ்ரீ. பாலு அவர்களும்

இது சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு
எடுக்கப்பட்டுள்ள புகைப்படம்.
பரிசலில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா பயணிக்க
இடது ஓரமாக ராயபுரம் ஸ்ரீ. பாலு அவர்களும்
வலது ஓரம் திருச்சி ஸ்ரீ. ஸ்ரீகண்டன் அவர்களும்
உடன் பயணம் செல்லுகிறார்கள்.

ஸ்ரீ ராயபுரம் பாலு என்பவர் சமீபத்தில், சென்ற மாதம் [மார்ச் 2013 முதல் வாரத்தில்] கும்பமேளா நடந்தபோது, அலஹாபாத் திரிவேணியில், சந்நியாஸம் மேற்கொண்டுள்ளார்கள். அவர்கள் இனி ஸ்ரீ ஸ்வாமிநாதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என அழைக்கப்படுவார்கள். இவர்கள் இப்போது ஸ்ரீ காஞ்சி சங்கரமடத்தில் உள்ள ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாஸ்வாமிகளின் அதிஷ்டானத்தின் அருகே ஓர் குடிலில் தங்கியுள்ளார்கள்.

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாஸ்வாமிகளுடன் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த பக்தகோடிகள் அனைவருக்குமே, இந்த ராயபுரம் ஸ்ரீ பாலு + திருச்சி ஸ்ரீ. ஸ்ரீகண்டன் ஆகிய இருவரையும் தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை.

அடியாருக்கு அடியாராக அருந்தொண்டுசெய்து வந்த இவர்கள் இருவரையும் பற்றி மற்ற அனைவரும் தெரிந்து கொள்ளட்டும் என எண்ணி இங்கு இவர்களைப்பற்றி சிறப்பித்து எழுதியுள்ளேன்.

சிவன் அடியார்களாக விளங்கிய 63 நாயன்மார்கள் பற்றி புத்தகங்களில் படித்துள்ளேன். அவர்களில் யாரையும் நான் நேரில் பார்த்தது இல்லை.

என்னைப்பொறுத்தவரை, பரமேஸ்வரனின் அவதாரமாகத் திகழ்ந்து வந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளுக்கு அருந்தொண்டு ஆற்றிய இந்த ராயபுரம் ஸ்ரீ. பாலு அவர்களையும், திருச்சி ஸ்ரீ. ஸ்ரீகண்டன் அவர்களையும் 64வது + 65வது நாயன்மார்களாகவே என்னால் நினைத்து மகிழமுடிகிறது.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

The experience one gets in the presence oh MahaPeriva are not miracle…He never said that he is capable of performing miracles..There is no need for him….

Read the latest episode (226)..

77-ல் எலெக்ஷனில் தோற்றுப் போனார் இந்திராகாந்தி. அதற்கு அடுத்த வருஷம் கர்நாடகாவில் உள்ள சிக்மகளூரில் நின்றார். அப்போது காங்கிர ஸூக்குப் பசுமாடு – கன்று சின்னம் இருந்தது. ஆனால், அது வேண்டாம்; வேறு சின்னம் வேண்டும் என்று நினைத்தார் இந்திரா.
கலவையில் அவர் பெரியவாளைச் சந்தித்தபோது, பெரியவா கையை உயர்த்தி ஆசீர்வாதம் செய்தார் அல்லவா? அது அப்போது மனசில் வர, கையையே காங்கிரஸ் சின்னமாகத் தீர்மானித்துவிட்டார் இந்திரா. காங்கிரஸூக்குத் கை சின்னம் முத்திரையாகக் கிடைத்தது இப்படித்தான். சிக்மகளூரில் இந்திரா ஜெயித்துவிட்டார்.
It is only an experience by the concerned..

குண்டுராவ் வந்து, ‘பெரியவா என்னை அனுக்கிரகம் பண்ணணும்’ என்று கேட்டுக் கொண்டார். ‘என்னோட அனுக்கிரகம் எதுக்கு? காமாட்சி அம்மனை வேண்டிக்கோ. உன் பிரார்த்தனை பலிக்கும்!’ என்றார் பெரியவா. அதே மாதிரி, அடுத்த ஒரு மாதத்தில் எலெக்ஷனில் குண்டுராவ் ஜெயித்து, கர்நாடகாவில் முதல் மந்திரி ஆகிவிட்டார்.

It is his experience..

Read post number 213…These are all individual experiences and are shared in a common forum..
There are plenty of his teaching both in the form of postings and at You Tube..
Only people should have the time and patience to go through them..

I have not expected CML to compare his off the cuff remark of comparing his trick to the experiences of a galaxy of people like Ariakudi, Neyveli Santhanam, vikky vinayakaram, MSS,, Rajaji, Baraneetharan, Ra. Ganapathy, E Gayathri, Madurai Mani, valaiyapatti, BVR.BVL, MGR,Kamaraj….Bakthavatsalam and many more….including some eminent foreigners ...
…disgussting..sorry for the epithet…..

All these find some place in the thread..
There were people who have spent their life in the services of Maha Periva
Like the one at post 234 expecting nothing in return…
See Post no., 234

Pratyaksham Bala
Posts: 4205
Joined: 21 May 2010, 16:57

Re: Kanchi Maha Periyava

Post by Pratyaksham Bala »

Vigorous propaganda and vicious outburst.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Image

Whom am I to do propaganda for Him??

What locusstandi have I

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kanchi Maha Periyava

Post by cmlover »

Dear Vkailasam
You appear to have misunderstood my posting.
I was reinforcing your statement that greatness does not depend on performing miracles.
In fact many miracles are cheap magic tricks used by unscrupulous God-men.
PeriyavAl is not a miracle performer, nor did he encourage it.
His teachings are the ones that make him great!
In fact that was the message I was trying to convey to my group of friends!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Image

Tanjore Subramaniam at Sage of kanchi. https://www.facebook.com/groups/Periyavaa/
Today evening a great event awaiting for people of coimbatore.Discourse on Mahaperiava

by Sri.Vikku Vinayagaram a blessed person of Mahaperiava, a event not to be missed.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

KANCHI PERIYAVAR SAYINGS…
காஞ்சி பெரியவர் ஆன்மிக சிந்தனைகள்
** நாம் இந்த உலகத்தை விட்டுப் போவதற்குள், "என்னிடம் பாவமூட்டை இல்லை' என்று சொல்லும்படி செய்து கொண்டு விட வேண்டும். அந்த நிலையை அடைந்துவிட்டால் எப்போதும் ஆனந்தமாக இருக்கலாம்.

* நம் துக்கங்களை எல்லாம் ஞானம் என்னும் தண்ணீரில் அமுக்கிவிட வேண்டும். அப்போது தண்ணீருக்குள் மூழ்கிய குடம்போல மனம் லேசாகி விடும்.

* எமன் ஒரு நொடிப்பொழுதைக் கூட வீணாக்குவதுஇல்லை. தினமும் நம்மை நெருங்கி வந்து கொண்டிருக்கிறான். எப்போது நம்மைப் பிடித்துக் கொள்வான் என்று தெரியாது. கோவிந்தனின் காலைக் கட்டிக் கொண்டால் என்றும் பயமில்லை.

* குழந்தையும் தெய்வமும் ஒன்று தான். குழந்தைகளிடம் காமகுரோத சிந்தனைகள் உண்டாவது இல்லை. "குழந்தையாக இரு' என்ற உபநிடதம் நமக்கு உபதேசிக்கிறது.

** துன்பத்தை மற்றவர்களிடம் எல்லாம் சொல்லிப் பயனில்லை. அவர்கள், அதை எப்படி எடுத்துக்கொள்வார்களோ தெரியாது. கடவுளிடம் சொல்லி முறையிட்டால் நிச்சயம் அது தீர்ந்து விடும்.

- காஞ்சிப்பெரியவர்

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Continuation of post 240....

Image

Tanjore Subramaniam..

Had a great evening at Sri Vikku Vinayagaram discourse and Ghatam performance at Coimbatore organized by Krishna Sweets. Vinayagram mama narrated in a big way on his experiences with Mahaperiava. What he is today is all due to periavas grace, starting from the way he got to meet Mahaperiava through his brother Pradosham Venkatrama Iyer and many occasions where the grace of Mahaperiava saved him from distress.Right from incident in Amsterdam,winning of Grammy Award,his performance at shaitya Nataka Academy and so on. One thing which came very clear was if you have true faith in Mahaperiava you will be taken care, he concluded the session with a Ghatam performance and also made the whole audience to do thala.
Over all very divine experience.Our humble pranams to great legend and Mahatma.
All his grace. Mahaperiava saranam.

36. காக்க காக்க குரு அருள் காக்க
வேங்கடவன் என் குரு வையம் காக்க
துன்பமகற்றி இன்பம்
தந்ததிடும் குரு அருள் காக்க
கர்ம வினை நீக்கிடும் குரு அருள் காக்க
குறை நீக்கும் குரு அருள் காக்க
வையம் போற்றும் குரு அருள் காக்க
மன மாசகற்றும் குரு அருள் காக்க
வேதம் பயில்விக்கும் குரு அருள் காக்க
தோஷங்கள் அகற்றும் குரு அருள் காக்க
லீலா வினோதனின் அருள் காக்க
அஞ்ஞானமகற்றும் பகலவன் அருள் காக்க!!
venkat K

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Image

Image

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kanchi Maha Periyava

Post by cmlover »

PB
I do not want to mess up Vkailasam's inspirational posts on PeriyavAl.
So in deference to his wish I have moved the posts to a separate topic
http://www.rasikas.org/forums/viewtopic.php?f=24&t=23101

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

அம்மா!
======
(இந்த வார கல்கி)

தாயன்பைப் போல கலப்படமே இல்லாத பூரணமான அன்பை இந்த லோகத்தில் வேறெங்குமே காணமுடியவில்லை. பிள்ளை எப்படி இருந்தாலும், தன் அன்பைப் பிரதிபலிக்காவிட்டாலும்கூட, தாயாராகப்பட்டவள் அதைப் பொருட்படுத்தாமல் பூரணமான அன்பைச் செலுத்திக் கொண்டேயிருக்கிறாள். ‘பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு’ என்று இதைத்தான் சொல்லுகிறோம். ‘தேவி அபராத க்ஷமாபன ஸ்தோத்திரம்’ என்று அம்பாளிடமே நம் குறைகளைச் சொல்லி மன்னிப்புக் கேட்டுக் கொள்கிற துதி ஒன்று இருக்கிறது. அதில் ‘துஷ்டப்பிள்ளை இருப்பதுண்டு. ஆனால் துஷ்ட அம்மா என்று ஒருத்தி கிடையவே கிடையாது’ என்று வருகிறது. பரிபூரணமாக அன்பையும், தன்னலமே இல்லாத உழைப்பையும், அம்மா ஒருத்தியிடம்தான் பார்க்க முடிகிறது.

கன்று ‘அம்மா’ என்று கத்துவதில் உள்ள ஆவல் மாதிரி வேறெங்கும் அன்பைப் பார்க்க முடியவில்லை. இதைப் பார்த்துத்தான் மநுஷ்ய ஜாதியே ‘அம்மா’ என்று கூப்பிட ஆரம்பித்ததோ என்று தோன்றுகிறது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மஹாராஷ்டிரம், கன்னடம் முதலிய பாஷைகளிலும் ‘அம்மா’ என்றே தாயாரைச் சொல்கிறார்கள்.

மலையாளத்தில் ‘அம்மை’ என்பார்கள். ஸம்ஸ்கிருதத்தில் ‘மா’ என்றும் ‘அம்பா’ என்றும் சொல்லுவதும் இதேதான். ஹிந்தியில் ‘மா’, ‘மாயி’ என்கிறார்கள். இங்கிலீஷ் மம்மி, மம்மா எல்லாமும் கன்று குட்டியின் அம்மாவிலிருந்து வந்தவைதான் போலிருக்கிறது.

இந்த அம்மாவின் அன்பு ஒரு பக்கம் இருக்கட்டும். இவள் இந்த சரீரத்திற்கு மட்டும்தான் அம்மா. அவளுடைய அல்லது நம்முடைய சரீரம் போன பிற்பாடு இந்த அம்மாவுக்கும் நமக்கும் சம்பந்தமே இல்லை. அப்புறம் வேறு கர்ப்பவாஸம். வேறே அம்மாள் வருவாள். இப்படிச் சரீரத்திற்கு மட்டும் அம்மாவாக இல்லாமல், உயிருக்கு அம்மாவாக இருக்கிற ஒருத்தி இருக்கிறாள். சரீரம் அழிகிற மாதிரி உயிர் அழிவதில்லை. இந்தச் சரீரம் போன பிற்பாடு அந்த உயிர் இன்னொரு சரீரத்திற்குப் போகிறது. இந்த உயிரின் அம்மாதான் நமக்கு சாசுவதமாக, நிரந்தரமாக, எந்நாளும் தாயாராக இருந்து கொண்டிருக்கிறாள்.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

Shared with Vidya Raju and Varagooran Narayanan.

erode14
Posts: 726
Joined: 21 Jan 2007, 21:43

Re: Kanchi Maha Periyava

Post by erode14 »

Wish to share a chat held between me and a friend of mine about some issues
1) P.Swaminathan who was a former editor of thrisakthi and who is giving lectures on mahA periyavA dharisana anubhavangaL. He had written certain lines with super ego about mEttoor svAmigaL. [now the post seems edited]. http://mahaperiyavaa.wordpress.com/2013 ... am-update/

5 November 2013
Friend: Nagu, he has just innocently meant to say HH Mettur Swamigal was closely associate with Mahaswamigal. I will just leave it there... :)))


may be, the forum is slowly getting filled with spam messages.


Completely understand Nagu! May I please request you to delete your comment, I am trying to avoid controversies :)))

me: someone posts sai baba, someone posts something else. let them post those things in the respective groups. why here? who moderates all this? already, extra build ups and sondha sAhithyangaL sEththu narrate paNNi, periyavALa paththi negative image is being created in the forum itself


I understand you! I am moderating constantly and have deleted that Shirdi Saibaba post
Had sent a message to that poster and he apologized

thank you

I am constantly watching things, thanks for being concerned

me: or instance andha keerai kadhai and one guy has posted, periyavA than naakkula thAnE soodu pOttundaannu

yes, please do not take them negatively
can you please remove your present comment?

me: already, maha periyavaa wordpress-la sila interviews-la brahmin-nnu superiority complex rombi vazhinjuNdu non-brahmin, muslim ellAm kaNdapadi pEsi
adha paakkaRavaa, periyavA solRaaLaa illa, adha vivarikkaRavar vArththaiyaannu தெரியாம போறது. அத எடிட் பண்றதும் இல்ல
உதாரணம் ஒரு கனபாடிகள்: மசூதில தொழுகை நடக்கறதே பக்கத்துலன்னதும் பரவாயில்லன்னு பெரியவா சொல்லிட்டா
அதோட முடிஞ்சுது. he adds: நாய அடிக்க துப்பாக்கி எதுக்கு
that remains unedited in the video

I will let '--------' know about that... I normally edit comments made to my posts in the blog.
And I am constantly monitoring SoK in facebook. Please do not worry. I do not want SoK to be a discussion forum as very soon things will get out of control. I strive to maintain harmony at any cost.

me: recently, கண்ணதாசன்’s lines have been published.
பள்ளிக்கூட பாட புத்தகங்களில் அவரை பற்றி குறிக்க வேண்டும். ஒரு உத்தமமான யோகியை ‘பிராமணன்’ என்று ஒதுக்கி விடுவது, புத்தியுள்ளவன் காரியமாகாது. மேதைகளும் கற்பு அரசிகளும் எந்த ஜாதியிலும் பிறக்கலாம். யோகிகளில் ஒரு சாதாரண யோகியை கூட ஒதுக்க கூடாது என்றால், இந்த மகா யோகியை பிராமணர் அல்லாதார் ஒதுக்குவது எந்த வகையில் நியாயம்?
but what happens in reality? even in our blog, videos like this are getting uploaded

Friend: True. :)))

சரி. பார்த்துக்க்கொள்ளுங்கள். A balanced growth of quality and quantity will do. "மது மாம்ஸம் சாப்டாதவாகிட்ட ரெண்டு ரூபா வாங்கிக்கொடு, அது போறும்’-னு சொன்ன பெரியவாளையும் புத்த மடங்களைப் போல் ஊருக்கு ஊர் மடாதிபதியை நியமிக்காமல் இந்தியா முழுவதற்கும் ஐந்து குருமார்கள் போதும் என தீர்க்கமாய் முடிவு செய்து நடத்திய ஆதி ஆச்சார்யாளையும் நினைத்துக்கொள்கிறேன்

'---------' has more say in the blog as to what can be posted and what not. Will inform him. Thanks for your concerns Nagu!

me: I can only be concerned and no other options prevail so far the guru-sishyA (periyavA and I) relationship is concerned
thank you..

bye for now
Friend


Thanks for your understanding, it is priceless for me! Good night and take care


மேட்டூர் ஸ்வாமிகள்: //மகா பெரியவா குறித்த செய்திகளை அவரது பக்தர்களிடம் இருந்து திரட்டி தொடர் எழுதி வருகிறேன்’ என்று சொன்னேன். ‘ரொம்ப கவனமா எழுதுங்கோ… ஆதாரமானதை மட்டும் எழுதுங்கோ’ என்று என் மேல் நம்பிக்கை இல்லாமலே பேசிக் கொண்டிருந்தார். ‘ஆத்மார்த்தமாகவும் ஓரளவு ஆதாரத்துடனும்தானே எழுதி வருகிறோம்… இவர் இப்படிச் சொல்கிறாரே?’ என்று ஒரு குழப்பத்துடன் நமஸ்காரம் செய்து விட்டு, திருப்தி இல்லாமலே திரும்பினேன்//

பிறகு என் சிஷ்யனின் அம்மாவுக்கு அனுப்பியதன் பிரதி: படிக்குமுன் இந்த வீடியோவைப் பார்த்துவிடுங்கள்.

http://www.youtube.com/watch?v=cQAH9qtAiNA

sAdhurmaasam (chAthurmAsyam) , ubavaasam(upavAsam), பெரியவா பிக்ஷாவந்தனம் பண்ணுவா (பிக்ஷை பண்ணுபவர் பெரியவா; பிக்ஷாவந்தனம் செய்பவர்கள் சிஷ்யர்களும் பக்தர்களும்)
என்னவெல்லாம் பேசுகிறார் பார். அதோடு ரா.கணபதி அண்ணா அழகா கூட்டவோ குறைக்கவோ செய்யாது எழுதிய ஒரு நிகழ்வை, எழுதிவைத்துப் படிக்கும்போதே எவ்வளவு சொந்த சாஹித்யம், தப்புத்தப்பாகவும் ரசக் குறைச்சலாகவும்.
Treasurer ஸ்ரீ ராமச்சந்திர ஐயர் என்று தெளிவாகவே குறிப்பிடப்பட்டு இருக்கும் பெயரை ஏனோதானோவெனக் சொல்லிக் கடந்துபோகும் அலட்சியம்...
Common sense-ஐக் கூட கழற்றிவைத்து விட்டுப் பேசுதல் // see from 2:45 to few minutes
*பிக்ஷா வந்தனத்திற்கு பெரியவாளுக்கு ஏற்பாடு பண்ணுவார் ஒருத்தர் (அட ராமா)
*நீ தான் பிக்ஷாவந்தனம் பண்ணி வெக்கணும். ஒக்கார் அங்கயே.. (ஒக்காந்தா எப்படிப் பண்ணிவெப்பார்?)
இதுபோல இன்னும் பல. முழுவதையும் பார்க்கவும்.
திரிசக்தி என்ற பத்திரிகையில் பெரியவா அனுபவங்கள் என்ற பெயரில் மர்ம நாவல் போல 65 வாரங்கள் எழுதிய மஹானுபாவர் இவர்தான். அதோடு zee tv யிலும் பேசுகிறார்.

Maha Periyava Speech by P Swaminathan1.3gp
http://www.youtube.com


kani varkkangaL (kani vargangaL)
gaali aayiduththu (kAli Ayiduththu)



* எடுத்துண்டு வாயேன், அதையும் ஒரு கை பார்க்கலாம் என்றாராம் பெரியவா. (தலையெழுத்து.. அவர் என்ன குஸ்தி வீரரா)
யாரைப் பற்றிப் பேசுகிறோம், அவர் தம் வாய்மொழி என்ன, ஞானியின் வாக்கு ஸத்தியவாக்கு என்பதை வாழ்ந்துகாட்டி உலகிற்குச் சொன்ன மஹாபெரியவாள் விஷயமாகப் பேசுகிறோமே என்ற அக்கறை இல்லாத நிலைமை...

சம்பந்தமேயில்லாமல் ஒரு அசட்டுக் கதையைச் சொல்லிவிட்டு, அது போல சாவின் பிடியிலிருந்து மகாபெரியவர் (மஹா அல்ல) பல பேரக்காப்பாதியிருக்கார் என்று சொல்கிறார்.
அந்தக் கதைக்கும் மஹாபெரியவாள் எவரையேனும் காப்பாற்றுவதற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? இல்லையெனில் எதற்கு அது போல என்று தமிழ் தொலைக்காட்சிகளில் Stand up காமெடி செய்வது போல ஒரு மொழி?

Friend: true, maybe Shri P Swaminathan did not mean it literally. They treat Him with respect only Nagu! Just their style of writing... like some people affectionately call God as நீ வா போ etc or use நிந்தா ஸ்துதி...

மெ: இவை சமாதானங்கள். மஹா பெரியவா விஷயாமாக தப்புந்தவறுமாய் செய்யப்படும் Documentation-க்கு நாம் துணைபோனால் அது மஹா பாபம் ஆகிவிடும். தவறானவர்களைக் கொண்டாடுவதல்ல நம் கார்யம்.

இன்னும் ஐம்பது ஆண்டுகள் கழித்து வரப்போகும் தலைமுறையினருக்கு என்னவிதமாய்ச் சொல்லப்போகிறோம் பெரியவாளை?

yes. but the problem is we cannot correct every poster in the world. We can surely delete the major offenders, but we cannot keep policing about every word, their intentions etc where there are thousands of posts and videos about Him every day!

me: திரிசக்தி பத்திரிகைக்கு நான் எழுதிய மின்னஞ்சல்: 22-8-2011

அன்புள்ள ஸ்ரீ சுவாமிநாதன் அவர்களுக்கு,

ஆகஸ்ட் 16-31, 2011 தேதியிட்ட திரிசக்தி இதழில் 'கணபதியும் காப்பியும்' என்ற நெருல் ராமகிருஷ்ணனின் (34-ஆவது பக்கம்) கட்டுரை கண்டு மிகுந்த வேதனையடைந்தேன். மகா பெரியவாள் திரும்பத் திரும்ப வலியுறுத்திய விஷயம் "காபி உடல் நலத்துக்கும் பொருள் சேமிப்புக்கும் க்ஷீணம்" என்பதே. அதோடு மதம், வேதம், ஹோமம் முதலிய விஷயங்களை கீழான விஷயங்களோடு ஒப்பிட்டோ அல்லது உவமையாகவோ சொல்வதைக் கண்டித்தவரும் கூட.

புகை பிடிப்பதை அக்னிஹோத்ரமென்றும் குதிரைப்பந்தயத்தை அஸ்வமேதமென்றும் சொல்லக்கூடாது என்று வலியுறுத்தியவர்கள் நம் பெரியவாள். இன்னும் கீழே போய், சில அசத்துகள் 'ஸ்ரீ சக்ரத்துல ஒக்கந்துட்டுவந்தேன், இப்பத் தான் நிம்மதியா இருக்கு', என்று (எதை அப்படிச் சொன்னார்கள் என்று புரியுமென நம்புகிறேன்) சொல்வதையும் நான் கேட்டும் கண்டித்துமிருக்கிறேன்.
பெரியவாள் மகத்துவத்தைப் பேசுகின்ற ஒரு 'இதழில்', அது புத்தகமாகட்டும் அல்லது வாயாகட்டும், இப்படி ஒரு விஷயத்தைப் பேசுவதும், அதைப் பலரும் படித்து நியாயப்படுத்திக்கொள்ள ஏதுவாய் அதை வெளியிட்டதும் சொல்லவியலாத மனவருத்தம் ஏற்பட்டது. மேலும், அதை endorse செய்வதைப் போல பெரியவாளின் ஒரு குறுநகை தவழும் முகத்தையும் பிரசுரித்தது இன்னும் வருத்தமே. பொதுவாக ஆஸ்திகர்கள் நல்லவர்களே. அதனாலேயே, அனுப்பு மேலிட்டு, அவர்கள் சொல்லப்படுகிற செய்திகளையும் சொல்கிற மனிதர்களையும் சந்தேஹிப்பதில்லை. ஆனால், அதைச் செய்தியை வெளியிட, அது ஆவணமாகிறது. எனவே தான் இந்த நினைவூட்டல், தாங்களறியாததல்ல.
மஹா பெரியவாளின் அத்யந்த சிஷ்ய வர்க்கத்தின் ஒரு குரலாய்,
இவண்,
ஈரோடு நாகராஜன்.
(கீழ்க்கண்ட லிங்க்-ல் என்னைப் பற்றிய விவரங்கள் உள்ளன).

http://ramsabode.wordpress.com/2006/10/ ... e-nagaraj/

பெரியவாள் அனுபவங்கள் பற்றிய என்னுடைய வலைப்பதிவுகள் இங்கே உள்ளன:

http://erodenagaraj.blogspot.com/search/label/periyava



பதில்: அன்புள்ள திரு நாகராஜன் அவர்களுக்கு
நமஸ்காரம்.
தங்களது மெயில் பார்த்தேன். உணர்வுகளைப் புரிந்து கொண்டேன். மகா பக்தர்களின் மனம் புண்படும் எந்த ஒரு செய்தியும் திரிசக்தியில் வராமல் பார்த்துக் கொள்கிறேன்.
தங்களின் அன்புக்கு நன்றி.
சுவாமிநாதன்
ஆசிரியர்
திரிசக்தி.

I continued discussing with my friend.

நானும் ஒத்துக்கொள்கிறேன்,
we cannot correct every poster in the world. We can surely delete the major offenders, but we cannot keep policing about every word, their intentions etc where there are thousands of posts and videos about Him every day!

Friend: everyone has different interpretations of every words. Some words which you dislike may not affect another person so much. So it is very subjective. Of course the obvious, blatant issues can be rectified but not the minor ones
My humble opinion is we need to know the overall intention of a poster and if it is good, we must move on!


me: ஆனால், நாம் இவற்றைப் பற்றி பெரியவாளின் பக்த சமூஹத்திற்கு எடுத்துச் சொல்ல முடியும். அதிலிருந்து இவர்கள் ஏனோதானோவென்று செய்யும் கார்யங்கள் குறையும். அதில் ஒரு ஜாக்ரதை உணர்வு வரும்.

நமக்கென்ன என்று இருந்துவிட்டால் it will result in proliferation of weeds

Friend: yes you can tell it to the concerned individuals like Shri P Swaminathan *privately*, but not in the public. Public discussions are a big distraction and very soon the harmony will be lost. Plus, one cannot convince another person of their mistakes. The feeling of guilt must come from within.

இதில் இருக்கும் அகந்தைத் த்வனியைப் பாருங்கள்:
என்னிடம் வந்து, ‘சார்… உங்களுக்கு ஞாபகம் இருக்கா? முதல் தடவை நீங்க மேட்டூர் ஸ்வாமிகளை தரிசிக்க வந்தப்ப உங்க ரெண்டு பேருக்கும் ஒத்துப் போகலை… ஆனால், அப்புறம்தான் உங்களை ஒவ்வொரு தடவையும் கூப்பிட்டுப் பேசிண்டிருந்தார். நீங்களும் வர ஆரம்பிச்சேள்.’

ஸ்வாமிகளைப் பற்றி யாரோ எப்பெடியோ கூறியதாக வைத்துக்கொண்டாலும், அதை ஆவணப்படுத்துகையிலாவது எழுதுவது யார் - யாரைப் பற்றி எழுதுகிறோம் என்ற ப்ரஞை இல்லாமல், அங்கும் தன்னைத் தானே உயர்த்திக் கொள்கிற கேவலம்.

இத்தைகையோர் வாசகராய் இருக்கலாம்; படைப்பாளிகளாய் இருக்கக்கூடாது. ஆகவே தான், குறிப்பிடுகிறேன்.

" முதல் தடவை நீங்க மேட்டூர் ஸ்வாமிகளை தரிசிக்க வந்தப்ப உங்க ரெண்டு பேருக்கும் ஒத்துப் போகலை…"


Friend: You are absolutely correct, like as if HH Mettur Swamigal and him are equal! :))) I also did not like the tone of the language Nagu! what to do...

------------------------------------------------------------------------

A few months later there was a photo in the forum (contd.)
Last edited by erode14 on 03 Mar 2014, 21:36, edited 1 time in total.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Nagaraj....Admin at this forum is very meticulous in editing and the postings in that group

can be depended upon..
Last edited by venkatakailasam on 04 Mar 2014, 05:59, edited 1 time in total.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

முல்லை கொடி ஒன்று கண்டேன்
அது பற்றிப் படர கண்டேன்!
பற்றட்டவரின் திருவடிகளை பற்றினேன்!
மலரின் மணம் மிதந்து வர கண்டேன்!
அதில் ஐயனின் நேசத்தைக் கண்டேன்
இளம் தென்றலில் அக்கொடி
நடனமாடக் கண்டேன்..
நடனமாடும் நடராஜனை கண்டேன்!
அதில் ஐயனின் எழில் உருவம் கண்டேன்!
கன்று ஒன்று திரியக் கண்டேன்
தாயை கூவி குரல் கொடுக்கக் கண்டேன்!
சேயை காண ஓடி வரக் கண்டேன்!
அடியவர்களை காண விரையும்
ஐயனின் பாசத்தை அங்கும் கண்டேன்!!
குஞ்சிற்கு உணவளிக்க விழையும்
பறவையைக் கண்டேன்...
நலிந்தவரை தேடி குறை தீர்க்கும்
அண்ணலை அதில் கண்டேன்!
கண்ணனின் நடிப்பையும் கண்டேன்
குமரனின் அருள் சொரியும்
கண்களையும் கண்டேன்
வேங்கடவன் நான் இத்தனையும் கண்டேன்!!!
venkat k
Last edited by venkatakailasam on 05 Mar 2014, 07:51, edited 1 time in total.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kanchi Maha Periyava

Post by cmlover »

Welcome Erode!
You are the person who personally experienced the blessings of periyavaL
This is the right place to share your memories and experiences!
Thanks..

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kanchi Maha Periyava

Post by cmlover »

Today's episode (Vijay TV) was musically oriented.
A haughty music teacher (Vainika) mistreats a talented boy employed as his servant. He visits Acharya to pay his homage and show off his son's vidvat.
Acharya is depicted as a versatile Vainika (I know he has outstanding CM knowledge, but veena skills I am not aware).
Acharya plays a small clip and asks the teacher or his son to guess the raga and they fail.
The servant guesses Pantuvarali start and Vasanta finish (pantuvarali OK but I could not get the Vasanta part!)
Then Acharya asks the boy to play a short piece.
Now my quiz (to those of you who watched) is what was the raga played?
The episode ends with Acharya advising the haughty teacher that it is his duty to recognize talent and encourage and not humiliate promising boys based on their social status....

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kanchi Maha Periyava

Post by cmlover »

Today's episode (Vijay TV) was musically oriented.
A haughty music teacher (Vainika) mistreats a talented boy employed as his servant. He visits Acharya to pay his homage and show off his son's vidvat.
Acharya is depicted as a versatile Vainika (I know he has outstanding CM knowledge, but veena skills I am not aware).
Acharya plays a small clip and asks the teacher or his son to guess the raga and they fail.
The servant guesses Pantuvarali start and Vasanta finish (pantuvarali OK but I could not get the Vasanta part!)
Then Acharya asks the boy to play a short piece.
Now my quiz (to those of you who watched) is what was the raga played?
The episode ends with Acharya advising the haughty teacher that it is his duty to recognize talent and encourage and not humiliate promising boys based on their social status....

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Image

Image

கருணை பார்வையில்...

காஞ்சி நாதனின் கருணை பார்வையில்
மலர்ந்தன மலர்கள்!
சிலிர்தன மரங்கள்!
பனித்தன செடி கொடிகள்!
இசைத்தன புள்ளினம்!
மயங்கின மக்கள் உள்ளம்!
சிரித்தன வறியவர் மனம்!
பொங்கின கடலலைகள்!
குளிர்ந்தன -
காடும் மலையும்
வெளியும் ஒளியும்
நீரும் நெருப்பும்
முகிலும் மழையும்
அருவியும் ஓடையும் !!
நெகிழ்தன சுருதியும் லயமும்!
திகைத்தனர் கயவர்கள்!
ஓங்கார நாதா...
நின் கருணை பார்வை
வேங்கடவன் என் மீதும் படர
அருள் புரிய வேண்டினேன்!!
venkat k
Last edited by venkatakailasam on 05 Mar 2014, 07:47, edited 2 times in total.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kanchi Maha Periyava

Post by cmlover »

Nice poem!
You mean
வறியவர் = poor/destitute
வரியவர் = tax payer/ appointed person...

Govindaswamy
Posts: 120
Joined: 21 Feb 2010, 06:55

Re: Kanchi Maha Periyava

Post by Govindaswamy »

#247 Postby venkatakailasam
முல்லை கொடி
அது பற்றி படர

முல்லைக்கொடி பற்றிப் படர என்பது தான் சரி. இப்பாடலில் இது போன்ற பல பிழைகள் உள்ளன. முல்லை கொடி என்று கூறினால் அது மலையாளம் போல் ஒலிக்கும்.
கோவிந்தஸ்வாமி

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Thank you Sirs..done..

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

குரல் தொகுத்தவரின் குரல் …

Let us listen to the “voice” of a great man who penned “Voice of God” (தெய்வத்தின் குரல் தொகுத்தவரின் குரல்).

We pay our homage to Sri Ra Ganapathi ( fondly known as “Anna” ) who attained siddhi on a Holy Sivarathri Day in 2012 . Among spiritual treatises bringing the words of a great Master to the world, “Deivathin Kural” has its own unique greatness and has no parallel!

This audio recording done almost six years back, was a casual conservation recorded when Sri Ra Ganapathi was unwell. Though the clarity of the audio is excellent, it is hard to follow without transcription. We are very thankful to Sri. Karthikeyan Nagaratnam for his meticulous efforts in transcribing this audio.

Below is the first set of audio clippings with a poetic prologue and tamizh transcription by Sri Karthi.

ஸ்ரீ ரா. கணபதி – அண்ணா

தமிழ், பக்தி, இலக்கியம் இம்மூன்று சொற்களும் இவ்விருபத்தொன்றாம் நூற்றாண்டில் ஓருருவம் தாங்கி வந்தால்?

வந்தது…ஸ்ரீ ரா கணபதி அவர்கள் உருவில்.

கடவுளின் எழுதுகோல் – PEN OF GOD என்று பக்த உலகில் எல்லோராலும் அறியப்பட்டவர் ஸ்ரீ அண்ணா.

‘மை’ நிரப்பி எழுதுவோர் மத்தியில் ‘மெய்’ மட்டுமே நிரப்பி எழுதியவர் ஸ்ரீ அண்ணா. அதனால் தானோ, என்னவோ, இன்று மெய்யாய் நிற்கிறார், நம்மிடையே…

வேதங்களை பகுத்துக் கொடுத்த வியாசருக்கு தொந்திக் கணபதி…

வேதங்களை பாதுகாத்துக் கொடுத்த நம் சங்கர வியாசருக்கோ, நம் பூஞ்சைக் கணபதி…

உருவத்தில் தான் பூஞ்சை…

உயிர் கரைக்கும் அவர் எழுத்துக்களில் அவர் பண்ணியதோ பூசை…

இன்று அவர் நினைவு தினம்…இன்று மட்டுமா? பக்த உலகில், குறிப்பாக ‘தெய்வத்தின் குரல்’ உலகின் ஏதாவது ஒரு மூலையில், யாராவது ஒரு பக்தனால் படிக்கப்படும் எல்லா தினமும் அவர் தினம் தான்…

அண்ணா…அண்ணாந்து பார்த்து வணங்குகிறோம்…

More at:

http://mahaperiyava.org/?p=2017

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

"Children should get moral education at home from elders!"
====================================

This happened in the year 1956-57, when H.H. Sri Kanchi Mahaswamigal was camping at the Madras Sanskrit College, Mylapore, Madras.

One evening, Mahaswamigal was about to address a huge gathering in which great personalities like Rajaji were present. He was contemplating about the topic he should speak on.

Suddenly, he called late Prof. Sankaranarayana Iyer, who was standing by the side of the dais and recited two lines of a Sanskrit verse. He asked the Professor if he remembered the remaining two lines of that verse. The Professor pleaded ignorance and got down from the dais.

This conversation took place before the mike, so audience gathered could easily hear its details. Dr. C. R. Swaminathan, the author of the article on Mahaperiyava, heard the beginning of the Sanskrit verse that Periyavaa recited. Since he happened to know the other two lines of the verse, he went to Prof. Sankaranarayana Iyer and told him those two lines.

The Professor went up the dais again and recited the lines before
MahaswamigaL.

Mahaperiyava asked him, "You said you did not know the lines. How come you know them now?"

The professor replied "Someone in the audience remembered it and told me."

Mahaperiyavaa inquired who was the person and told the Profession to call Dr. Swaminathan to the dais.

When he came, Paramacharya inquired about his name and occupation. Then the Sage asked, "Where did you study?"

Thinking that the question was about his academic education, Dr. Swaminathan replied that he studied in the Presidency College, Madras.

"Not that. Where did you learn this verse?"

Dr. C.R. said that his grandfather taught him the verse when he was a child. Paramacharaya inquired about his native place, his grandfather's name and his family details. The entire conversation was held before the mike, so the audience heard every bit of it.

The verse in question was the following:

arthathuranam na gurur na bandhu
kSudhAthuranam na ruciki na pakvam
vidyathurANAm, na sukham, na nidhrA
kamathuranam na bhayam na lajja

One who pursues wealth knows no guru or relations.
One who is hungry knows not taste or if the food was cooked well.
One who pursues knowledge knows neither comfort nor sleep.
One who has desires knows no fear or shame.

Later in the discourse, Paramacharya dealt with the Kenopanishad and explained how Goddess Parvati came as a teacher to enlighten the celestials about the supreme Brahmin.

When concluding the discourse, he referred to the earlier incident and said:

"Before I started delivering my discourse, I called a young man to the stage to know where from he learnt the subhashita verse, of which I recited the first half. I knew who he was."

"What I wanted him to tell you about his reciting the other two lines this moral verse was that he had learnt it, not from his school or college, but from his grand-father, and that during his childhood days."

"It was to impress upon you all that children should get moral education at home from elders because they cannot get it from the modern schools and colleges".

Dr. Swaminathan concluded his article with these words:

"I am recalling this incident to show that an insignificant person like myself, extremely nervous, while standing before H.H. on the dais, noticed by about thousands of people forming the audience, could be utilisied by the Acharya to drive home to the audience that

(a) a joint family system with elderly parents and grand parents can serve as a valuable supplement to the school education of young children

(b) the elders can usefully spend their time by narrating such stories and morals to the children and

(c) such teaching can be retained in one's memory only if imparted at the formative age."

The above incident happened 50 years before, but the message holds good even today and will stand for years to come!

*****

Narrated beautifully by Sri D. Sivasubramanian, Dy. Director Handloom (Retd.) TN Govt. ,now doing seva at Sri Matam Office in Kanchipuram.

grsastrigal
Posts: 884
Joined: 27 Dec 2006, 10:52

Re: Kanchi Maha Periyava

Post by grsastrigal »

Venkatji. Could you give me the sanskrit version of that slokas ? "arthathuranam"

Pratyaksham Bala
Posts: 4205
Joined: 21 May 2010, 16:57

Re: Kanchi Maha Periyava

Post by Pratyaksham Bala »

श्रीगरुडमहापुराणम्

अर्थातुराणां न सुहृन्न बन्धुः कामातुराणां न भयं न लज्जा ।
चिन्तातुराणां न सुखं न निद्रा क्षुधातुराणां न बलं न तेजः ॥ १,११५.६७ ॥

vgovindan
Posts: 1950
Joined: 07 Nov 2010, 20:01

Re: Kanchi Maha Periyava

Post by vgovindan »

pb has already posted the garuDa purANa version. I am giving hereunder certain variations as found some other websites -

अर्थातुराणां न गुरुर्न (सखा न) बन्धुः
क्षुधातुराणां न रुछिः न पक्वं (वेला)
विद्यातुराणां न सुखं न निद्रा
कामातुराणां न भयं (स्मृतिः) न लज्जा

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kanchi Maha Periyava

Post by cmlover »

अर्थातुराणां न गुरुर्नबन्धु:
क्षुधातुराणां न रुचिर्नपक्वं ।
विद्यातुराणां न सुखं न निद्रा
कामातुराणां न भयं न लज्जा ॥
(subhAShitAni: nIti shAstram)

Pratyaksham Bala
Posts: 4205
Joined: 21 May 2010, 16:57

Re: Kanchi Maha Periyava

Post by Pratyaksham Bala »

One more version found in महासुभाषितसंग्रह :-

२९५९-१ अर्थातुराणां न सुहृन्न बन्धुः कामातुराणां न भयं न लज्जा ।
२९५९-२ विद्यातुराणां न सुखं न निद्रा क्षुधातुराणां न वपुर्न तेजः ।।

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kanchi Maha Periyava

Post by cmlover »

Here is the copy cat :d
अर्थातुराणां न प्रियं न लज्जा
क्षुधातुराणां न शुद्धं न शौचं ।
विद्यातुराणां न TN न US
कामातुराणां परपत्नि वा वेश्या ।।

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Image

எது உயர்வு?

மஹா பெரியவா என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட காஞ்சிமாமுனிவர் வெறும் சாஸ்திர சம்பிரதயாத்தை மட்டும் போதிக்கவில்லை. அதற்கு மேலும் சென்று சிறந்த மனிதாபிமானியாகத் திகழ்ந்தார். அதற்குதானே வழிகாட்டியாகவும் வாழ்ந்து காட்டினார்!

ஒரு சமயம் திருவாடனை என்ற ஊரிலிருந்து பெரியவர்களின் பக்தர்கூட்டம் அவரை தரிசிக்க வந்தது. பெரியவர்கள் அன்று காஷ்ட மௌனம். பேசமாட்டார்கள்.

வாரத்தில் ஒருநாள் இது மாதிரி இருப்பார். 30 வருடங்களாக கடைபிடித்து வரும் விரதம். பிரதமராக இந்திரா காந்தி அவரைக் காண வந்தபோதும் இதை அவர் விட்டுக் கொடுக்கவில்லை. துறவிக்கு வேந்தன் துரும்பு தான்.

வந்திருந்தவர்களில் சங்கரனும் ஒருவர். அவர் தேசவிடுதலைக்காக போராடி ஆங்கிலேயரால் தடியடிபட்டு இருகண்களையும் இழந்தவர். மடத்து சிப்பந்தி ஒவ்வொருவரையும் பெரியாவாளுக்கு அறிமுகப்படுத்தினார் . அவர்களுக்கு மௌனமாக ஆசி வழங்கினார். சங்கரன் முறை வந்ததும் அவரையும் அறிமுகம் செய்தார்கள்.

ஸ்வாமிகளுக்கு சங்கரனை நன்றாகத் தெரியும். ஸ்வாமிகள் உடனே கம்பீரமான உரத்த குரலில் ""என்ன சங்கரா சௌக்கியமா? மனைவியும் குழந்தைகளும் சௌக்கியமா? இன்னும் விடாமல் தேசத்தொண்டு செய்து கொண்டு இருக்கிறாயா?"" என்று கேட்டார்.
சங்கரனுக்கு மிகவும் சந்தோஷம். பெரியவா பேசிவிட்டாரே என்று.

மடத்திலிருந்தவர்களுக்கு மிகவும் ஆச்சர்யமும் வருத்தமும் ஆச்சாரியர் தன்னுடைய விரதத்தை சங்கரனுக்குகாக முறித்து விட்டாரே என்று.
அவர்கள் எல்லோரும் பிரசாதம் வாங்கிக் கொண்டு சென்ற பிறகு மடத்து சிப்பந்திகள் ஸ்வாமிகளிடம் கேட்டார்கள் - எதற்காக மௌனத்திலிருந்து விடுபட்டு பேசவேண்டும்? எல்லாரையும் போலவே மௌனமாக அனுக்கிரஹம் செய்து இருக்கலாமே. சங்கரன் என்ன அவ்வளவு பெரியவனா?

ஸ்வாமிகள் சிரித்துக் கொண்டே சொன்னார்கள். ""எல்லோரையும் போல சங்கரனை நடத்தக்கூடாது. அவனுக்கு கண் தெரியாது. என்னைப் பார்த்து ஆசி வாங்க வந்திருக்கிறான். ஆனால் அவனால் என்னைப் பார்க்க முடியாது. நான் மௌனமாக ஆசீர்வாதம் செய்தால் அவனுக்குப் போய் சேராது. அவனுக்கு வருத்தமாக இருக்கும். நான் அவனைப் பார்த்தேனா ஆசீர்வாதம் செய்தேனா என்று. இந்த தேசத்துக்காக தன் கண்களையே தியாகம் செய்தவன் அவன்.அவனுக்காக நான் என்னுடைய ஆச்சாரத்தை கொஞ்சம் விட்டுக் கொடுத்தால் ஒன்றும் குறைந்து விடாது. அவனுடைய தியாகத்துக்கு முன்னால் என்னுடையது ஒன்றும் பெரிதல்ல"

இதைக்கேட்டதும் அங்கு கூடியிருந்தவர்கள் எல்லோரும் ஸ்வாமிகளின் மனிதாபிமானத்தை எண்ணி மகிழ்ந்தார்கள்.

என்னே காஞ்சி மாமுனியின் கருணை!

— with Aruna Gopal and 6 others.

https://www.facebook.com/pages/Chintham ... 6794886776

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

008 MAHA PERIAVAR 117 JAYANTHI=NEYVELI SANDHANA GOPALAN=ABOUT KANCHI PERIAVAR

http://www.youtube.com/watch?v=9aoZkXrb ... r_embedded#


கே: சென்னையில் உள்ள உங்கள் குருகிருபா பள்ளியைப் பற்றிக் கூற முடியுமா?

ப: காஞ்சி மகா பெரியவரின் ஆசியுடன் அவருடைய ஆன்மீக சிந்தனைகளையும் இசையுடன் சேர்த்துப் பரப்ப எண்ணி ஆரம்பிக்கப்பட்ட பள்ளி அது. இசையை வியாபார நோக்கோடு இல்லாமல் ஆத்மார்த்த மாக பக்தி மார்க்கத்தைப் பரப்ப வேண்டும் என்று அவர் சொன்னதை ஏற்றுக் கோயில்களில் மாணவர்களை பாடச் செய்வது, ஏழை மாணவர்களுக்கு இலவசமாக இசையைக் கற்றுக்கொடுப்பது என்று செய்து வருகிறோம். என்னைப்போல் பலருக்கும் அவரே மாதா, பிதா, குரு, தெய்வமாகவும் இருக்கிறார் என்பது பலரும் அறிந்ததுதான். அவர் எழுதிய தெய்வத்தின் குரலில் கூறியுள்ளபடி கடவுள் என்னை இசையின் மூலம் ஆன்மீகத்தைப் பரப்பச் சொல்லியுள்ளதாய் நினைத்துச் செய்து வருகிறேன்.

Source Balhanuman .Blog

Read more: http://www.periva.proboards.com/thread/ ... z2vBAee47o

Image

நடனமாடிய சேகரா உன்
பொற்பாதம் போற்றி!
தாயான தந்தையவன்
பொற்பாதம் போற்றி!
வில்வதளம் பொலிவுற சூடியவன்
பொற்பாதம் போற்றி!
அறம் வளர் நாயகன்
பொற்பாதம் போற்றி!

கதறி தொழுதிடுவார் குறை போக்கும் அண்ணலின்
பொற்பாதம் போற்றி!
வேதமும் நாதமும் நல் இசையும் போற்றும் வித்தகன்
பொற்பாதம் போற்றி!
வையம் புகழும் குணசீலன்
பொற்பாதம் போற்றி!
துயர் துடைக்கும் கருணா சாகரன்
பொற்பாதம் போற்றி!

தொண்டர்கள் தொழும் திருவடி
பூஜிக்கும் கமல திருவடி
பஜிக்கும் திருவடி
போற்றி!போற்றி!

அறியாமையை அகற்றும் ஐயன் திருவடி
மன களிற்றின் மதத்தை நீக்கும் திருவடி
நற்குண ஈசனின் தாமரை திருவடி
அரவிந்தம் அரும்பும் திருவடி
வேதனை விலக்கும் திருவடி
போற்றி!போற்றி!

ஒளிரும் மணியாகி அருளுக்கு உருவாகி நின்ற திருவடி
தாளைப் பணியும் வேங்கடவன் போற்றும் திருவடி
போற்றி!போற்றி!
venkat k
Last edited by venkatakailasam on 06 Mar 2014, 17:17, edited 1 time in total.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Sri Rathnagiriswarar Temple Sadas - Padmabushan Sri TN Seshagopalan

Description:
Sri Rathnagiriswarar Temple Sadas - Padmabushan Sri TN Seshagopalan Sri Mahaperiva HH Sri Chandra Sekarendra Saraswati Swamiji (Maha Swamiji) of Kanchi Kamakoti Peetham Shatabdi Celebrations - Vedic Sadas This Sadas got blessings from THEIR HOLINESS Sri Jayendra Saraswati Swamiji and Sri Vijayendra Saraswati Swamiji Kanchi Forum Appreciator: Kanchi Forum

http://www.youtube.com/watch?v=jd2EFhshOHA#t=159

Kindly do not fail to listen

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kanchi Maha Periyava

Post by cmlover »

Thanks for this valuable link...

priyaram78
Posts: 393
Joined: 03 Feb 2010, 08:57

Re: Kanchi Maha Periyava

Post by priyaram78 »

Sri Venkatakailasam sir, I have been silently enjoying all your posts here. Mostly the ones in English. wish I knew to read Tamizh. thanks for your enlightening posts. the above link is so valuable, so enlightening. The greatness of a Guru cannot be fully described ! keep sharing more for many like me. looking forward to more !

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Cho Ramaswamy - Engey Brahmanan- Supernatural powers of Kanchi maha Periyava

http://www.youtube.com/watch?v=FzheoegRTsc


Experience With Maha Periyava: Ahobilam Jeer swamigal

http://www.youtube.com/watch?v=K92VFt7rSb8

Experience with Mahaperiava - Sri Vikku Vinayakaram

http://www.youtube.com/watch?v=WUqgZ4wofoY

என் நெஞ்சில் இருப்பவன்
வேங்கடவன் நான் துதித்திடும்
காஞ்சி நகர ஈசன்
அவனே மௌலியின் நேசன்!
பாமரர் இதய வாசன்!
சதுர் வேத வித்தகன்!
கீதையின் சாரமானவன்
நாதத்தின் ஒலியானவன்
ராகத்தின் ஸ்வரமானவன்
தேவியின் உறுவானவன்
வருவதை அறிவான்!
தெரிவதை கூறுவான்!
இன்னலை தவிர்பான்!
உள்ளத்தில் உறைவான்!
எண்ணத்தில் உயர்வான்!
உலகாளும் காமாட்சி தன் மடியில் தவிழும்
கணநாயகனும் அவனே!
ஏகாம்பரனின் செவியில் பிரணவம் ஓதிய
குகனும் அவனே!
venkat k

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

ஸ்த்ரீகளுக்கு ‘எக்ஸ்க்ளூஸிவ்’ : மஹா பெரியவா..

உங்களுக்குத் தெரியாத விஷயம் சொல்கிறேன்: ‘சிவ என்கிறதில் முதல் அக்ஷரமான ‘சி’யில் ‘இ’காரம் இருக்கிறதல்லவா? ‘ச்’என்ற மெய்யெழுத்தோடு இந்த உயிரெழுத்தான ‘இ’ சேர்ந்துதானே ‘சி’ஆகியிருக்கிறது? இந்த ‘இ’, ‘ஈ’என்பதே அம்பாள் பேர்தான் மெய்யெழுத்துக்கள் சிவ அக்ஷரங்கள், உயிரெழுத்துக்கள் சக்தி அக்ஷரங்கள் என்று பொதுவிதி.

புருஷப் பெயர்களில் ‘அ’காரத்தில் முடிவதே ஜாஸ்தி இருக்கின்றன - சங்கர, நாராயண, ராம, க்ருஷ்ண, ஸுப்ரஹ்மண்ய, கணேச என்ற மாதிரி.

வெள்ளைக்காரர் பெயர்களிலும் பொம்மனாட்டிகளுக்கு மேரி, லூஸி, அன்னி, ஜூலி என்று ‘இ’காரப் பெயர்கள் நிறைய இருக்கின்றன.

‘சிவ’வுக்கு ‘சிவாநி’மட்டுந்தான் பெண்பால் என்றில்லை;’சிவா’என்றாலும் சிவ பத்னிதான். சிவன்-ஸ்வாமி, சிவா-அம்பாள். இப்படியே ராம-ராமா, க்ருஷ்ண-க்ருஷ்ணா. அதாவது அகராந்தப் புருஷப் பெயர் ஸ்த்ரீ பெயராகும்போது ஒன்று, ‘இ’ஆகிறது;இல்லாவிட்டால் ‘ஆ’ ஆகிறது. ‘ராம’ஆகாரமாக ‘ராமா’என்று ஆனாலும் ‘அபிராம’என்பது இகாரமாக அபிராமி என்று ஆகியிருக்கிறது.

‘இ-ஈ’க்களைப் போலவே ‘ஆ’வில் முடிவதாகவும் நிறையப் பெண்பால் பெயர்கள் இருக்கின்றன – உமா, ரமா, துர்கா, பாலா, லலிதா, சாரதா.

‘ஆ’காரம் ஸ்த்ரீ நாமங்களுக்கு மட்டுமே ஆனது. [சிரித்து]எக்ஸ்க்ளூஸிவ்! ‘ஆ’வில் முடியும் புருஷப் பேரே கிடையாது.

அந்நிய தேசங்களிலும் டயானா, ஜூலியானா, ஃபாதிமா, கதிஜா என்று ஸ்த்ரீகளின் பெயர்கள் ‘ஆ’வில் முடிவதாக நிறைய இருக்கின்றன. வெள்ளைக்கார ஸ்த்ரீ-புருஷப் பெயர்கள் பல தினுஸாக முடிகின்றன. ஆனால் அங்கேயும் ஒரு புருஷப் பெயரை ஸ்த்ரீ பெயராக்கும்போது ‘ஆ’காரமாக்கியே முடிக்கிறார்கள் – அலெக்ஸாண்டர்:புருஷப் பெயர்;அதையே பொம்மனாட்டிப் பேராக்கும் போது அலெக்ஸான்ட்ரா;விக்டர்-விக்டோரியா. நம்மில் அடியோடு ‘ஆ’காரந்தமாகப் புருஷப் பேரே இல்லையென்றால் அங்கேயும் அபூர்வமாகவே ஜோஷ§வா, ஜெரிமியா மாதிரி ஒன்று இரண்டு தவிர ‘ஆ’வில் முடியும் புருஷப் பெயரில்லை.

[முன்னேயே]சொன்னாற்போல் ‘அ’காரத்தில் முடியும் ஸ்த்ரீலிங்கப் பெயரும் இல்லை. ‘ஆ’காரத்தில் முடியும் புல்லிங்கப் பெயரும் இல்லை. இ-ஈ இரண்டிலும் முடிவதாக ஸ்த்ரீலிங்கப் பெயர்களே அதிகம் இருக்கின்றன.

புருஷர்கள்தான் ஸ்த்ரீகளைவிட நெட்டையாக இருப்பவர்கள். ஆனாலும் ஆனா ஆவன்னாவை எடுத்துக் கொண்டாலோ குட்டை [குறில்]அகாராந்தமே புருஷர்களுக்கு, நெட்டை [நெடில்] ஆகாராந்தம் ஸ்த்ரீகளுக்கு என்று இருக்கிறது. இங்கே ஸ்த்ரீகளைத்தான் புருஷர்களை விட [சிரித்து] ‘உயர்த்தி’ச் சொல்லியிருக்கிறது!

குட்டை நெட்டை இ-ஈ இரண்டுமே ஸ்த்ரீ பெயர் முடிவுகளில் அதிகம் இருக்கின்றன.

‘சக்தி’என்பதே ‘இ’யில் முடிவதுதான்!’தேவீ’, ‘ஈச்வரீ’என்பவை ‘ஈ’யில் முடிகின்றன. ‘அம்பா’வும் ‘அம்பிகா’வும் ‘ஆ’வில் முடிகின்றன.

‘சிவ’என்கிறபோது முதல் எழுத்தான ‘சி’யிலேயே அம்பாள் ‘இ’காரமாகப் பிரிவற ஒட்டிக்கொண்டு உயிர் தருகிறாளென்று சொல்ல வந்தேன்.

‘சிவ’த்தில் இந்த ‘இ’போய்விட்டால் என்ன ஆகும்?புருஷப் பெயராச்சே என்று இகாரத்தை அகாரமாக்கினால் என்ன ஆகும்?பரம மங்களமான சிவ நாமாவே பரம அமங்களத்தைக் குறிப்பதாகிவிடும்! ‘சி’யிலிருந்து ‘இ’யை மைனஸ் பண்ணினால் அது ‘ச’ என்றுதானே ஆகும்? அப்போது ‘சிவம்’?'சவம்’என்றல்லவா ஆகிவிடும்? ‘இ’என்ற உயிரெழுத்துதான் ஈச்வரனுக்கே ஜீவனை உயிரைத் தருகிறது. இது போனால் உயிர் போன சவம்தான்!

சக்தி இல்லாவிட்டால் சிவம் சவம் என்றால் என்ன அர்த்தம் [சிரித்து] யசமானியம்மாள் இல்லாமல் ஐயாவுக்குச் செயலே இல்லை என்று அர்த்தம்! பேச்சு வழக்கைக்கூடச் சொன்னேனே, ”உனக்குப் இதைப் பண்ண சக்தி இருந்தா பண்ணு!இல்லாட்டா சிவனேன்னு கிட”என்கிறோம்!செயல் புரியும் திறமை இருந்தால் ‘சக்தி’; ஒன்றும் செய்ய முடியவில்லை என்றால் ‘சிவனே’என்று!இதிலிருந்து அவளின்றி அவனுக்குச் செயலில்லை என்று ஆகிறதல்லவா?யாரானாலும் தங்களுடைய சக்தி ( energy ) போய்விட்டால் ஒன்றும் செய்யத்தானே முடியாது?ப்ரஹ்மமாகிற சிவத்துக்கும் அதன் சக்தி இல்லாவிட்டால் இப்படித்தானே இருக்கவேண்டும்?

Post Reply