cmlover wrote:PB
You are a time traveller to jump to 26.06.2011 on 22.06.2011

Tell us more about our future!
(143)
26.06.2411
நானூறாண்டு முன்னாலே நொடியிலே சென்றுவந்தேன்!
கூறாது இருப்பேனோ காலம்செயும் கோலத்தை?
கருநாடக இசையிலே கிடாருக்குத் தலைமையிடம்!
கடத்தைக் காணவில்லை, கஞ்சிரா காணவில்லை!
நாயனமும் மேளமும் நல்லாவே இருக்குதையா!
கண்ணனின் கதையின்னும் கொடிகட்டிப் பறக்குதையா!
ஊத்துக்காடு பாடலென்றால் ஊரெங்கும் கொண்டாட்டம்!
திருவாரூர் மூவரை தெரியவில்லை யாருக்கும்.
இன்னும்பல ராகங்கள் இருக்குதையா இப்போது;
காயத்ரி ராகமென்றால் கரகோஷம் வெடிக்கிறது!
உலகத்து மொழிகளுக்கு ஒரேயெழுத்து உள்ளதையா!
ரசிகாஸ் உறுப்பினர்கள் இரண்டுகோடி இப்போது!
ப்ரத்யக்ஷம் பாலா
26.06.2411.
.