Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post Reply
thanjavooran
Posts: 3041
Joined: 03 Feb 2010, 04:44

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by thanjavooran »

கல்கி, கலைமணி, தேவன், நாடோடி மற்றும் கோமதி சாமிநாதன் இவர்களின் படைப்புகள் எவ்வளவு ஆண்டானாலும் சுவை கூடுகின்றதே ஒழிய ஒரு போதும் குறைவதில்லை. தொகுப்பினை அளித்தமைக்கு நன்றி.
பி கு சாம்புவின் கூர் மூக்கு கோபுலுவின் கைவண்ணத்தில் திகட்டாத அழகு
தஞ்சாவூரான்
14 09 2014

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

சங்கீத சங்கதிகள் - 39

இசைக்கு ஒரு ராணி! --- டி.டி.கிருஷ்ணமாச்சாரி

http://s-pasupathy.blogspot.com/2014/09/39.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள் பதிவு:
எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி
40-களில் ‘கல்கி’யில் வந்த 3 கட்டுரைகள்
http://s-pasupathy.blogspot.com/2013/01/13.html

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Ponbhairavi »

யாரோ இவர் யாரோ-பாடியது இராமனா சீதையா ?
ஒரு புதிய நோக்கு




ஸ்ரீராமர் சீதையைக் கண்டு ஐயுறல்

விருத்தம் -13

இடமாம் விசுவா மித்திரன் இந்தச் சேதி உரைக்க லட்சுமண
னுடனே நடந்து மிதிலையிற் போய் ஒருமா மணிமே டையில் சீதை
மடவாள் காணத் தனையந்த மயிலைத் தானும் ரகுராமன்
கடல்வாய் வருசெந் திருவெனவே கண்டான் விரதம் கொண்டானே

தரு-12

சாவேரி ராகம் ஆதிதாளம்

பல்லவி

ஆரோ இவர் யாரோ-என்ன (ஆரோ)
பேரோ அறியேன்

அநுபல்லவி

கார உலாவும் சீர் உலாவும் மிதிலையில்
கன்னி மாடந்தனில் முன்னே நின்றவர் (ஆரோ)

1. பண்ணிப் பதித்தாற் போல் இரு ஸ்தனமும்-கூட
பாங்கியர்கள் இன்ன முந்துரைத் தனமும்
எண்ணத்தாலும் வண்ணத்தாலும் பங்கயப்
பெண்ணைப் போல் கண்ணிற் காணும் மங்கையர்(ஆரோ

2. பாக்கியம் என்ப திவர்தெரி சனமே-அதிங்கே
பலித்ததென்ன புண்ணியமோ மனமே
மூக்கும் முழியும் தீர்க்கமாய் இன்னமும் பெண்கள
பார்க்கப் பார்க்க நோக்கம் கொள்ளுமோ கண்கள் (ஆரோ)

3. சந்திர விம்பமுக மலராலே-என்னைத்
தானே பார்க்கிறார் ஒருகாலே
அந்த நாளில் தொந்தம் போலே உருகிறார்
இந்த நாளில் வந்து சேவை தகுகிறார் (ஆரோ)



:-B
முழு பாடல் கிழே தரப்பட்டுள்ளது 3 சரணங்கள் .கவிராயர் முழுவதும் ராமன் பாடியதாக சொல்லவில்லை . சீதையைகண்டு ஐயுறுதல் ( இலக்குமியோ என்று) என்று தான் சொல்கிறார் @ கடைசி சரணம்
பாடல் முழுவதையும் ஒருவரே பாடுவதாக கொள்வதை விட ,ஒரு டூயட் என கொள்வது பொருத்தமாக இருக்கிறது. ஒரு நாடகத்துக்கு எழுதப்பட்டது என்பதை நினைவில் கொள்வோம் .மேலும் இராமனும் சீதையும் ஒருவரை ஒருவர் பார்த்த உடனேயே மனம் கலந்து விடுவதால் இருவர் உள்ளங்களிலும் தோன்றுவதையும் ஒரே நேரத்தில் சித்திரிக்கிறார் ஆசிரியர் :
பல்லவி அனுபல்லவி -சீதை பாடுகிறாள்.கன்னிமாடம் முன்னே : எதிரே தெருவில். சீதை ஐயுறுகிறாள்.இந்த ஐயத்திற்கு பதில் அளிப்பது போல் விசுவாமித்திரன் ஜனகர் சபையில் இராமனை அறிமுகப் படுத்தும்போது "யாரோ என்று எண்ணாமலே " என்றுதொடங்குகிறார் ( சங்கராபரண கிர்த்தனை )

முதல் சரணம் இராமன் பாடுகிறார்
இரண்டாவது சரணம் சீதைபாடுகிறாள் "பார்க்கும் பெண்கள் மோகிக்கும் படியான சவுந்தர்யம் "மூன்றாவது வரி .
மூன்றாவது சரணம் இராமன் பாடுகிறான் . அந்த நாளில் சொந்தம் போல =வைகுண்டத்தில் துணைவியாய் இருந்தவள்
இந்த நாளில்வந்து "சேவை" தருகிறார் =தெய்வ தரிசனம்
இந்த காரணங்களினால் டூயட் என்பது பொருத்தம்.

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

அன்புள்ள பொன்பைரவி, தங்கள் ஆய்வு சுவையாக உள்ளது. :-) இக்காலத்தில் எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்! ஆனால், இருவர் மாறி மாறிப் பாடும் பாட்டென்றால், கவிராயர் அதைத் தனிப்பட்ட முறையில் குறித்திருப்பார் என்றே எனக்குத் தோன்றுகிறது. அவருடைய ‘ , ஸ்ரீராமருக்கும் பரசுராமருக்கும் சம்வாதம்’ , ‘கைகேயிக்கும் சக்கிரவர்த்திக்கும் (தசரதருக்கும்) சம்வாதம்’ என்று அவர் குறிப்பிடும் ‘இருவர் பாட்டிசை’ போல? அதனால், மற்ற பல பாடல்கள் போலவே -- default option போல-- இதுவும் ஒருவர் பாடினதாகத் தான் நான் கொள்கிறேன். ( நீங்கள் என் வலைப்பூவின் ச.ச.13 பதிவின் கீழ் இட்ட இரு பின்னூட்டங்களில் நீங்கள் எழுதாத பல வாக்கியங்கள்... தஞ்சாவூரான் அவர்கள் இங்கே எழுதியவை.... ஆங்கிலம் ..இப்படிப் பல ( copy and paste செய்வதால்?) வந்ததால், நான் அவற்றை உள்ளிடவில்லை. நீங்கள் எழுதின கடைசிப் பின்னூட்டத்தை மட்டும் அங்கிட்டேன். மன்னிக்கவும். )
Last edited by Pasupathy on 20 Sep 2014, 19:24, edited 1 time in total.

rshankar
Posts: 13754
Joined: 02 Feb 2010, 22:26

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by rshankar »

All of you are bulking up my tamizh-reading skills, with all the exercise I am getting!

I agree with Sri Pasupathy's take on this exactly for the reasons he states.

To me it is interesting that this sItA rAm milan doesn't feature in vAlmIki's AdikAvya, and kamban just mentions it through his famous 'aNNalum nOkkinAn, avaLum nOkkinAL' verses (Sri TNS renders this beautifully)*, and it is left to Sri Arunacala Kavi and Tulsidas to flesh this out much more...kavirAyar sets the meeting in front of the kanni mADam, while tulsidAsji sets it in a completely different context: as rAm and lakshmaN follow viSvAmitra and enter mithilA, sItA finishes her worship at the temple of her kuladeivam (bhavAni) and runs into the brothers (a set of beautiful verses that go 'kaNkaN kiNkiNi nUpur dhuni suni'...) - while lakshmaN remains blissfully unaware, a storm of emotions envelope sItA and rAm; rAm actually feels that the sounds of sItA's anklets were as if manmatha himself were playing the dundhubi - and reflecting on the experience as they are getting to sleep, tulsidAsjI describes how rAm feels deeply disturbed by his attraction to a girl for the first time, and eventually consoles himself that his feelings are not indicative of a looseness of character, but that fate would have a very good reason for arousing such feelings in him.

*: I am sure that kamban's terse 'pirindavar kUDinAl pesal vENDumO' was the inspiration for Sri Kannadasan's beautiful song in pAlum pazhamum - kAdal siRagai kATRinil virittu - in the last verse, he says, 'pirindavar mINDum sErdiDum pOdu azhudAl konjam nimmadi, pEsa maRandu silaiyAi irundAl adudAn deivattin/kAdal sannadhi'

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

Thanks, Ravi, for a nice analysis. There are unconfirmed stories that Saint Kumaraguruparar gave discourses about Kamban in Hindi in North India (or told Tulsidas Kamban's version ) and this influenced Tulsidas to follow Kamban in the 'rama-Sita' meeting!

rshankar
Posts: 13754
Joined: 02 Feb 2010, 22:26

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by rshankar »

I did not know that! Interesting, if it could be confirmed!

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

" It is said that Kumaraguruaparar also gave discourses on Kamban Ramayanam, and among those who got inspired by that were the famous Hindi poet Tulasi Das, who wrote Ram Charita Manas. "

See
http://murugan.org/bhaktas/kumaragurupara.htm

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by arasi »

Ravi,
Delighted to see you here!
How many treasures unfold here, thanks to Pasupathy.
You with your rich lode of mythology and fervor, can inspire him to share more such nuggets.

Tulasi hearing kumaraguruparar speak of kamban!

When Ponbhairavi speculated if yArO ivar yArO? was meant as a duet, I wondered.
To me, the song is like a sweeping wave of feelings in rAmA's heart on seeing sItA which flows into a song. No 'now it's your turn to say something' there!

maduraimini
Posts: 477
Joined: 22 Sep 2009, 02:55

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by maduraimini »

Sri Pasupathy,
It is nice you bring us all the famous stories and pictures of the bygone era. it is good to read Devan,Kalki etc., plus the pictures of artists Gopulu and Mali. You are doing a big service for people like me who grew up reading them. Thanks a lot and please keep bringing them.

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Ponbhairavi »

அன்புள்ள பசுபதி ,
என் ஆய்விலும் ஒரு சுவை கண்டமைக்கு நன்றி. உங்கள் முதல் போஸ்ட் இல் "பாடியது ராமனா சீதையா என்ற குழப்பம் இன்றும் நிலவுகிறது." என்று எழுதியிருந்தீர்கள். பாட்டில் ambiguity இருந்தால் ஒரு புது சிந்தனையை முன் வைக்கலாமே என்று தோன்றியது..உங்கள் முடிவை அதில் கண்டிருந்தால் நான் எழுதியிருக்கவே மாட்டேன் உங்கள் கருத்தை மறுக்க எனக்கு திறனோ தமிழ் புலமையோ இல்லை. இந்த பின்னணியில் மேலும் சில ஐயங்கள் உங்கள் முன் வைக்கிறேன்.
1-மற்ற சம்வாதங்களுக்கும் இதற்கும் இடையே ஒரு வேற்றுமை. மற்றவை ஒருவர் மற்றவாருக்கு கூறும் மறுமொழி டைலாக் .இப்பாட்டு இருவருடைய மனத்திலும் ஒரே சமயத்தில் தோன்றும்
எண்ண ஒட்டங்களின் குறிப்பு . As pointed out by arasi இதை டைலாக் என்று நான் எழுதியது தவறு.. தான் ( soliloqui or loud thinking என்று குறிப்பிட்டு இருக்கவேண்டும் ) ஒரு சினிமாவில்தெருக்கூத்து காட்சியில் சிவாஜியும் சாவித்திரியும் தம் மன எண்ணங்களை இவ்வாறு வெளியிடும் காட்சி என் நினைவுக்கு வருகிறது .அரசி கூறியது போல் ராமர் எண்ணத்தில் எழுந்த உணர்ச்சி அலைகள். என் கருத்தும் அதுதான் .சீதையின் மனத்திலும் அதே எண்ண ஒற்றுமை தோன்றி வெளியிடப்பட்டு இருக்கலாமோ என்பது என் speculation.
கன்னி மாடம்= இல்லம்.(கன்னிமாடம் தனில் காவல்களை மீறி....என்ற ஜி என் பி பாடல் "சொன்னதை செய்திட சாகசமா " என் நினைவுக்கு வாரு கிறது. உப்பரிகை = balcony.
முதல் சரணம் ராமன் சீதையை வருணனை செய்வது..இரண்டாவது சரணத் தை சீதை ராமனை வர்ணிப் பதாக கொள்ளாலமோ ?ஒரு முறை பார்த்தால் மீண்டும் பார்க்க தோன்றும் அழகு. பார்த்து பார்த்து என்று இரு முறை குறிப்பிடுகிறார் கவிஞர் .தோழியர்கள் கண் பட்டுவிடும் என்று சிதை அஞ்சுகிறாரோ
Last edited by Ponbhairavi on 21 Sep 2014, 16:39, edited 2 times in total.

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Ponbhairavi »

கண்ணோடு கண் கவ்வி ஒன்றை ஒன்று உண்ணவும் நிலைபெறாது இருந்த கவிதை நிலையை ஒரு பொது மக்கள் நாடக பாணியில் குறிப்பிடுகிறாரோ என்ற எண்ணம் தோன்றியது . இதற்கு ஏதாவது எதிர் குறிப்புகள் contra indication இருக்கிறதா என்று என்னை நானே கேட்டுக்கொள்கிறேன் .பாட்டில் சற்றேனும் குழப்பம் இருந்தால் இதையும் ஒரு கற்பனையாக கொள்ள இடமிருக்கலாம் என்று எனக்கு தோன்றியது.

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

Thanks, arasi, maduraimini, ponbhairavi.

Dear Ponbhairavi,

Thanks for the detailed reasoning. I'm sorry if my reply caused any misgivings or upset in your mind. Forgive me; that was not my intention.

The ambiguity in present-day people's minds may be due to many reasons: most of them have not seen/and will never see AK's original book of poems, mostly they hear only ladies singing this song (only with one charaNam) (which evokes image of Sita singing) , the image due to 'plural' 'ivar' etc. But, in my mind, there is no doubt as to what the AK, the poet originally intended and of course, no doubt in MS' mind and others when the record was released ( as can be seen from the disk-review in "Kalki" in the 40's .... ) .

Also, if AK had intended it as a 'duet' of thoughts or otherwise, he would have used a different terminolgy to describe the song...( not as "samvAdham" but by some other term...) ( in my reply, I did not mean to indicate he would have used the word "samvAdham"; I wanted to indicate that he would have used a similar term to indicate two-persons' thoughts ... )

But...this does not negate your view that it can be re-interpreted in a different way now. If I remember right, I think I have read about TNSeshagoplan ( in his RamayaNa discourse ) arguing similarly.... ( Someone can correct me if I am wrong.) This shows that great poets' words are ever-new , giving rise to newer thoughts all the time! But ..if the question arises to what the poet "originally" intended, I will have to say that it is clear from the original book that it is only Rama who is thinking aloud in this entire song .

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by arasi »

In a lighter vein, let's go to the expression duet--a word we use in tamizh mainly to refer to a cinema song.

I started wondering. When is a duet sung in a movie mostly? On the pair's first encounter? No (I am not that familiar with modern tamizh cinema, though). Going by the movies I have seen, on their first meeting when the eyes meet, they sing not. It's in the next few scenes that a duet is born.

Then, I think of this momentous instant, of the kAvya nAyakA meeting the embodiment of virtues and of unimaginable beauty. She is equally stunned, and the result would have been a moment of awe and speechlessness. Such a state can only produce an internalization of wonder--not of sharing mutual admiration in words of outward admiration.

Of course, 'our' imagination of the poet's imagination is yet another thing!

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள் பதிவு:
எம்.எஸ். பற்றி இன்னும் ஒன்று:

வாலி எம்.எஸ். ஸைப் பற்றி என்ன எழுதினார்?

http://s-pasupathy.blogspot.com/2013/07/18.html - இன் கடைசிப் பகுதியில் உள்ளது.

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by arasi »

Pasupathy.
Is any of Tarapuram Sundara rajan's singing available for us to hear?

Did VAli think of T.R. Rajakumariwhen he mentioned Vasanthakokilam ?

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

arasi wrote:Pasupathy.

Did VAli think of T.R. Rajakumariwhen he mentioned Vasanthakokilam ?
No,
NCV was Haridas' wife.(TRR was the courtesan/mistress)
See https://en.wikipedia.org/wiki/Haridas_(1944_film)

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

arasi wrote:Pasupathy.
Is any of Tarapuram Sundara rajan's singing available for us to hear?
some film songs are available.

See and hear him here:
https://www.youtube.com/watch?v=i3TGjFnYVLw

http://mio.to/artist/Dharapuram+Sundararajan

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by arasi »

Thanks!

rshankar
Posts: 13754
Joined: 02 Feb 2010, 22:26

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by rshankar »

Pasupathy wrote:http://s-pasupathy.blogspot.com/2013/07/18.html - இன் கடைசிப் பகுதியில் உள்ளது.
Interesting that Sri Vali (what was his real name?) says that even if sung with SRti Suddham, if the words are not pronounced correctly, the music will be lifeless!!

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

rshankar wrote:Interesting that Sri Vali (what was his real name?) says that even if sung with SRti Suddham, if the words are not pronounced correctly, the music will be lifeless!!
His real name was Rangarajan. There were three "famous" Rangarajans :
1) Raa.Ki.Rangarajan ( a senior Tamil writer...Kumudam Ass Editor etc...you can see several of his contributons in my Blog...
https://groups.google.com/forum/?hl=en# ... F0aYIB_AKM
) .

2)Because Raa.ki.Ra was already there, another 'Rangarajan' of Srirangam changed his name to 'Sujatha'.

3) Another Rangarajan of SriRangam called himself ''Vaali' ...since he was a fan of cartoonist/artist 'Maali' of Vikatan!

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

தென்னாட்டுச் செல்வங்கள் - 15
கங்கை கொண்ட சோழபுரம் -5
http://s-pasupathy.blogspot.com/2014/09/15.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள் பதிவு:

பாடலும் படமும் - 6: அபிராமி அந்தாதி -1

http://s-pasupathy.blogspot.com/2013/10/6-1.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள் பதிவு:
சொற்களைச் சுவைப்போம் - 3: வலிமிகாத ஆத்திசூடி
http://s-pasupathy.blogspot.com/2012/10/3.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

பாடலும் படமும் - 8 :

அபிராமி அந்தாதி -2


http://s-pasupathy.blogspot.com/2014/09/8-2.html

thanjavooran
Posts: 3041
Joined: 03 Feb 2010, 04:44

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by thanjavooran »

திரு பசுபதி,
தாங்கள் புனைந்துள்ள அபிராமி பட்டர் முழு முடுகு வெண்பா படித்தேன். அருமை. ரசித்தேன். பத்திரவு நாளில் அம்பாளின் அருள் அனைவருக்கும் கிடைக்க அபிராமி அம்மனை வேண்டுகிறேன். நன்றி
தஞ்சாவூரான்
29 09 2014

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

ரசித்தமைக்கு நன்றி, தஞ்சாவூரான்!

rshankar
Posts: 13754
Joined: 02 Feb 2010, 22:26

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by rshankar »

Pasupathy wrote:மீள் பதிவு:

பாடலும் படமும் - 6: அபிராமி அந்தாதி -1

http://s-pasupathy.blogspot.com/2013/10/6-1.html
Very nice...a couple of comments...for verse 28, I have a problem with the depiction of pArvati as a clinging, cloying woman - ardhanAri may have been a more forceful visualization of the 'word/meaning' inseparability. And I think the meaning provided for verse #50 may not be correct in one respect...As I understand it, mAtangi (matanga kanyA) refers to the birth of pArvati to a fisherman father, and he is supposedly different from matanga muni.

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

Thanks, Ravi.
:-) It is difficult to say what the viewpoint of Gopulu would have been when he was asked to draw for (28) ! Perhaps since all these verses of the Sakthar-Poet is about the "full" 'HER" ( and not 50% "HER"!) he decided to use " பூங்கொடியே” as the focus of his drawing!

mAtangi ...commentators for this verse generally say: One meaning is: The daughter of the Sage Matanga. Or one who was born in the "இசைபாடும் மதங்கர் குலப் பெண்’. ( In verse (70) the poet himself calls her " மதங்கர் குலப் பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டி”. ( Of course, mAtangi has all sorts of connotations.... from Buddhism to Hindusim etc...)

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள் பதிவு:
சூடிக்கொண்டவள்
லா.ச.ரா
நவராத்திரி சமயம். கோவில்களிலும், வீடுகளிலும் பலர் லலிதா சஸஸ்ரநாமம், அபிராமி அந்தாதி போன்றவற்றைப் படிப்பது வழக்கம். லா.ச.ரா வும் ஒரு முறை லலிதா சஸஸ்ரநாமம் படித்திருக்கிறார். என்ன நடந்தது? படியுங்கள்!
http://s-pasupathy.blogspot.com/2013/10/6-6.html

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by arasi »

பசுபதி,

இன்று நினைவுக்கு வருகிறது
அன்று படித்தது தந்த எழுச்சியும்தான்--

அவள்/அவன் விளக்கிலே வந்ததும்,
விளங்குமுன் மலர் சூடி மறைந்ததுமே--

பாராக் காட்சிகள், பாரா ஸைகாலஜியோ?
பார்த்தவை பின், ஃபான்டஸியோ?
கார் நிற வண்ணன் ஒளிர்வதும்,
பாரெல்லாம் நிறைவ‌தும், பின் மறைவதும்..
யாருக்கெல்லாமுமோ தெரியுமோ?

லால்குடியார் எழுத்தில் லாவண்யர்
கருத்தில் ஆவர்ணம்--சிந்தா நதிகள்
பெருகி வந்து சேரும் புகலிடம்--பின்
பால் வடியும் முக அன்னை, ஐயன்
சால் மிகு அவரைத் தேடி வாராரோ?

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

>>அன்று படித்தது தந்த எழுச்சியும்தான்->>
அரசியிடம்
இன்று நனவோடை எழுத்தாய்ப் பரிணமிக்கிறது!

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள்பதிவு:

சோழபுரத்துக் கஜலக்ஷ்மியும் சரஸ்வதியும்
http://s-pasupathy.blogspot.com/2014/07/11.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள்பதிவு:

மலர் அன்னை புகழ் பாடுவோம்
பாரதி
http://s-pasupathy.blogspot.com/2012/12/1_11.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள்பதிவு:

கர்ணார்ஜுனப் போர்!
‘சில்பி’
http://s-pasupathy.blogspot.com/2012/12/2.html

thanjavooran
Posts: 3041
Joined: 03 Feb 2010, 04:44

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by thanjavooran »

அருமையான கலை பொக்கிஷம். நன்றி
தஞ்சாவூரான்
08 10 2014

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

நன்றி, தஞ்சாவூரான். தொலைக்காட்சியில் ‘மகாபாரத’த் தொடரில் கர்ணன் நாகாஸ்திரம் விடும் காட்சியைப் பார்த்ததும், இந்தக் கட்டுரை எனக்கு நினைவு வந்தது!

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Ponbhairavi »

இலக்கிய விருந்துக்கு மிக்க நன்றி பசுபதி.
சிற்பங்கள்,தேவன் வருணனை,சிவா சூரியன் அவர்களின் மிகச்சிறந்த பாட்டுக்கள் எல்லாமே சுவையின் சிகரம்.அர்ஜுனன் தாடிக்கு அவ்ர் விளக்கம் ( எட்டாவது பாடு கவித்துவம் மிக்கது.எண்ணி எண்ணி இன்புறத்தக்கது.
ஒரு சந்தேகம்: அர்ஜுனன் பற்றிய மூன்றாவது பாட்டில் "அண்ணன் அயராமல் நிற்க கண்டும் ". போரின்போது அர்ஜூனனுக்கு கர்ணன் தன்அண்ணன் என்று தெரியும்போல் ஒலிக்கிறதே ?
கர்ணன் கை உடைந்த வில் பற்றி என் சிந்தனை.: குருவின் சாபம் ஒருபுறம் குந்தி போட்ட நிபந்தனை ஒரு புறமாக சேர்ந்து அவருடைய போர் ஆயுதத்தை மேலும் கீழுமாய் சிதைத்து விட்டதை சிற்பி உருவகமாய் காட்டி இருக்கிறாரோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது.
கர்ணனின் காது கவச குண்டலங்களை கூட அவன் சேவிக்கு மேற்பூரம் இரு குமிழ்கள் வைத்து அதிலிரிந்து குண்டலம் தொங்குவதை சிற்பி நுணுக்க மாக வடித்திருக்கிறார் .

thanjavooran
Posts: 3041
Joined: 03 Feb 2010, 04:44

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by thanjavooran »

திரு பொன்பைரவி அவர்கள்,
தங்களின் நுணுக்கமான குறிப்புகளை படித்து மீண்டும் சில்பி அவர்களின் கைவண்ணத்தை கண்டு அணு அணுவாக ரசித்தேன். நன்றி. கண்டிப்பாகவே சிந்தனைக்கும், கண்ணுக்கும் விருந்துதான்.
தஞ்சாவூரான்
08 10 2014

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

நன்றி, பொன்பைரவி, தஞ்சாவூரான்.

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Ponbhairavi »

தஞ்சாவூரான் மிக்க நன்றி
பசுபதி நன்றி. என் சந்தேகம்..? நீங்களே விளக்கலாம் அல்லது சிவ சூரியனாரிடமே கேட்டு பெற முடியுமா ? மணி மணி யான அக்கவிதை களில் தவறு கண்டுபிடிப்பது என் எண்ணமில்லை . பாரதத்தை ப்ற்றிய என் அறிவை தெளிவாக்கி கொள்வதற்கே. அதிக பிரசங்கி தனம் என்று பொருள் பட்டால் மன்னிக்க வேண்டுகிறேன்.

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

அன்புள்ள பொன்பைரவி,
உங்கள் கேள்வி மிக நியாயமானதே. கவிஞரிடம் உங்கள் ஐயத்தை அனுப்பி உள்ளேன். இன்னும் பதில் வரவில்லை.

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Ponbhairavi »

பசுபதி:
நன்றி

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

உ.வே.சா. வின் எல்லா நூல் முன்னுரைகளும் நூல் வடிவில் வர உள்ளன.
”தலைப்பாகை இல்லாத் தாத்தாவின்” அரிய நிழற்படத்துடன் வந்த அந்தக் கட்டுரை :
http://www.thehindu.com/news/national/t ... epage=true

அவரைப் பாகையில்லாக் கோலத்தில் மேனன் என்ற ஓவியர் ஓர் ஓவியத்தில் வரைந்திருக்கிறார் விகடனில், 1940-இல் : பார்க்க:
http://s-pasupathy.blogspot.com/2014/02/1.html

Ramasubramanian M.K
Posts: 1226
Joined: 05 May 2009, 08:33

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Ramasubramanian M.K »

Pasupathy/CMLover: I just discovered this section of the forum!! What a treasure trove of nostalgia/poems!!
As an avid Ananda Vikatan reader,I would love to get hold of the series of cartoons--Seema Series,Araikurai Padamum Avasara Pichuvum and also Devan's Syama-sastry-Bhagavathar conversations series. I am sure the Vikatan Press must have published these treasures!!
Dr.pasupathy: You have sparked my memories of Miss Malini--the songs and dialogues were outstanding!! Even today I can recite the City-village "duel: between Pushpavalli and Sundari Bai--the selection of the songs,the ragas, TV Rathnam's singing were superb!! Any recording available--Pushpavalli singing the glories of urban life, and Sundaribhai's counter to it extolling rural life. Kothamangalam Subbudu was great!!

Now that I have discovered--thanks to ARASI-- this "hidden recess" of this Treasure Chest"" let me add to it thro my contributions on Authors(/Celebrities I have come into contact with over 7 decades!!!

Can either of you help me

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

Thanks, MKRS. Please do share your memories of authors etc. Look fwd to it eagerly!

Hurried replies to your qns.
1) No, Vikatan has not published those treasures in full, though some appear in a Raju's Cartoon Book.
( I'll try to give some samples from my collection ...one of these days..)
2) Miss Malini...unfortunately , no print exists. It is considered lost.

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள் பதிவு:
’தேவன்’: துப்பறியும் சாம்பு - 3
http://s-pasupathy.blogspot.com/2012/06/3.html

thanjavooran
Posts: 3041
Joined: 03 Feb 2010, 04:44

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by thanjavooran »

ரசித்தேன். தொகுப்பினை அளித்தமைக்கு நன்றி திரு பசுபதி அவர்களே.
தஞ்சாவூரான்
15 10 2014

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

தென்னாட்டுச் செல்வங்கள் - 16
கங்கை கொண்ட சோழபுரம் -6

http://s-pasupathy.blogspot.com/2014/10/16.html

Post Reply