Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post Reply
Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

Pasupathy wrote:அன்புள்ள பொன்பைரவி,
உங்கள் கேள்வி மிக நியாயமானதே. கவிஞரிடம் உங்கள் ஐயத்தை அனுப்பி உள்ளேன். இன்னும் பதில் வரவில்லை.


அன்புள்ள பொன்பைரவி,

வெளியூருக்குச் சென்றிருந்த கவிஞரிடம் இருந்து இன்று பதில் வந்தது. என் பரிந்துரைப்படி, அந்த அடியை “ அம்புவி தன்னில் கர்ணன்
அயராமல் நிற்கக் கண்டும் “ என்று மாற்ற ஒத்துக் கொண்டார். யாப்பின் இலக்கணமும் மாறாது. கூர்ந்து கவனித்ததற்கு நன்றி.
பசுபதி

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள் பதிவு:

மலர் மோகம் : சிறுகதை
http://s-pasupathy.blogspot.com/2012/11 ... st_12.html

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by arasi »

சின்னஞ்சிறு கதையை வெகுவாக ரசித்தேன். நம் அந்த வயதின் 'முதலில் படித்து விட வேண்டும்' என்கிற ஆர்வத்தை இது நன்கு பிரதிபலிக்கிறது :) எனக்கும், தெரு முனையில் புத்தகப் பையனை மடக்கும் வித்தை தெரிந்திருந்ததால், மேலும் ரசித்தேன்!

அட்டவணையைக் காட்டி ஆசை காட்டிவிட்டீர்கள் :(

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Ponbhairavi »

Pasupathy ,
வாய்மையும் மரபும் காத்தான் என்று கம்பன் கூறுவான் தசரதனைபற்றி . புராண வாய்மை காத்த கவிஞர் சிவ சூரியனார்கும் இலக்கண மரபு காத்த உங்களுக்கும் மிக்க நன்றி

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Ponbhairavi »

Wபசுபதி ,
Last line superb.
அந்த மலர் இப்போது தங்கள் வசமிருந்தால் கடல் கடந்த இந்துக்கள் என்ற கட்டுரையை எடுத்து போடமுடியுமா ?1940 கும் 2015 கும் இடையே ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை பற்றி நினைக்கலாம்

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

Arasi, Ponbhairavi: Thanks. ( PB: Your Kamban-quote so great! Thanks)

Ponbhairavi: Unfortunately the article you wanted is not a 'good' one. Contains fanciful claims without any true evidence to back them.
( Very similar to Vaduvoor Doraiswamy Iyengar's book.... "The Marvellous Discoveries about the Aryans, Jesus Christ and Allah". )
( let me quote an example or two: Arabic = அரவம், தமிழின் ஒரு பிரிவு. divorce = த்வி விரிசல் . matador= மாட்டு தீரன் .... )So I am sorry .But republishing it is not a service at all. But..I'll try to publish some other excerpts from other articles in course of time.

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Ponbhairavi »

Thanks Pasupathy. I leave it to your discretion.I was lured by the title which sounds pompous

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

திருநாளுக் கேற்ற இரு பாடல்கள்!

http://s-pasupathy.blogspot.ca/2013/11/19.html

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by arasi »

Gayatri Venkataraghavan has sung the madhyamAvathi kruti last weekend here in north america.

Some years ago, Sanjay sang it on the radio around dIpAvali. Of course, its theme is specific but the song is a very good one--both with the lyrics and rAga bhAvam.


rshankar
Posts: 13754
Joined: 02 Feb 2010, 22:26

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by rshankar »

And we discussed it at Prashant's request many moons ago: http://rasikas.org/forums/viewtopic.php? ... avati.html

Isn't dIkshitar's 'mInAkshi mE mudam dEhi' a special song for this occasion too?

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

gangE mAm pAhi - cenjuruTi -Dikshitar

as sung by Gayathri V. at Toronto
#1 in http://www.rasikas.org/forums/viewtopic.php?f=13&t=24264
Or one can sing
http://www.youtube.com/watch?v=6rE3chAx5C0 :-)

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by arasi »

'ஊசிப் பட்டாசே' பலே ஜோர்!

அந்தக் குழந்தை பின்னால் நட்சத்திரம் ஆகியிருக்குமோ?

வி கே ராமசாமியின் இளமைத் தோற்றம்! தாத்தா யாரோ?

எம்.என். நம்பியார்தான் படத்தின் கதா நாயகர்!

புத்தம் புது ராஜகுமாரி தியேட்டர்--தீபாவளி ரிலீஸோ?

நினைவாவளி--பழமை நினைவுகளின் வரிசை...:)

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

arasi wrote:
புத்தம் புது ராஜகுமாரி தியேட்டர்--தீபாவளி ரிலீஸோ?
சபாஷ்! அங்கே தான் நான் படம் பார்த்தேன்! 50 -வாக்கில் ...மாதம் எப்போது என்று நினைவு இல்லை! ராஜகுமாரியில் அதுவே முதல் படம் என்று ஞாபகம்..... வடுவூர் கதை என்பதால் தனி மோகம்.... பிறகு அதைப் பற்றி வலைப்பூவில் எழுதுவேன்.....இதோ...உங்களுக்கு ஒரு தீவளி ட்ரீட்!
https://www.youtube.com/watch?v=NUDIPqIFfss

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by venkatakailasam »

Shri paupathi...

you must be having plenty of anecdotes in your armory about Smt Rajam Krishnan who died in a porur hospital to day uncared for..


http://timesofindia.indiatimes.com/City ... 904341.cms

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

Sri VK,

No... I was just an admirer of her "KalaimgaL" stories in the 50's-60's... after that I left India...and lost touch with that world .....and my "ninaivup pettakam" is rather empty.

Please read the article :
http://epaper.theekkathir.org/

The author S V Venugopal in another letter has narrated his journey to see RK's body . Therein he reports that the doctors and nurses really took very good care of her. A couple of sentences from his letter:
"
மருத்துவர் எஸ் மல்லிகேசன் அவர்கள் எப்படி நேரப்படி உணவு, மருந்து கொடுக்கப்படுவதை உறுதி செய்து கொண்டே இருப்பார், முக்கிய தினங்களில் தமது இல்லத்திலிருந்து உணவு எடுத்துக் கொண்டுவந்து ராஜம் கிருஷ்ணன் அவர்களுக்கு உண்ணக் கொடுப்பார், முந்தைய இரவு இப்படி நேரும் என்று எதிர்பாராது கலங்கிப் போனார் என்பதை அறிந்து மேலும் நெகிழ்ந்தேன்....நேற்று முன்தினம் இரவு அவரது பிரிவு நிகழ்ந்தபோது, மருத்துவர் எஸ் மல்லிகேசன் அவர்கள் மிகவும் நொறுங்கிப் போயிருக்கிறார். அத்தனை நெகிழ்ச்சியான அன்பு வளையத்திற்குள் தமது இறுதிக் காலத்தை நிறைவு செய்து மறைந்திருக்கிறார் ராஜம். "
I hope you will be reassured that she was well taken care in her last days.
Last edited by Pasupathy on 22 Oct 2014, 18:08, edited 1 time in total.

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

தீரக் கனல்
அம்மன் தரிசனம்’ 2001- ஆம் ஆண்டு தீபாவளி மலரில் வெளிவந்த ஒரு கவிதை.
http://s-pasupathy.blogspot.com/2012/11/blog-post.html

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by venkatakailasam »

Shri Pasupathi..

really, I am happy to see that she was well taken care off..

What prompted me to say that was the news item in Dinamani..:

" இவரது கணவர் கிருஷ்ணனுக்கு பக்கவாதம் வந்து நடக்க இயலாமல் தம் 90ம் வயதில் காலமானார். இந்தத் தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. பின்னர் முதுமையில் வறுமையால் வாடிய அவர், சென்னையில் விஷ்ராந்தி ஆதரவற்றோர்-முதியோர் இல்லத்தில் தங்கியிருந்தார். கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று(திங்கள் கிழமை) இரவு அவர் காலமானார்."

http://www.dinamani.com/latest_news/201 ... 486954.ece

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

>> முதுமையில் வறுமையால் வாடிய அவர், >>

Vk, there is a story ....very upsetting when it happened... behind this. She sold her house, but a trusted relative cheated her of the money. A prof and an IPS officer admitted her in old-age home . She did have many friends. At her request, her works were nationalized ( thanks to Karunanidhi, who understood her needs) though usually a living author's works are never nationalized . He handed over the money personally to her.

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by arasi »

மிகப் பெரிய இழப்பு...

கலைமகள் வாசகர்களையெல்லாம் தனதெழுத்தின் வன்மையினால் வளைத்துப் போட்டவர். நுண்ணிய நோக்கு, பகுத்தறியும் தன்மை. இயற்கையழகிலே ஈடுபட்டவர், மனிதப் பாங்குகளை நன்கு உணர்ந்தவர்.

நானும் அறுபதின் ஆரம்ப ஆண்டுகளிலே பாரதம் விட்டுப் பெயர்ந்ததில், அவரது எழுத்துகள் படிப்பது விட்டுப் போயிற்று. பிறகு, இரண்டாயிரங்களினிRuதியில் அவர் கட்டுரைகள் ஒன்றிரண்டு படிக்கக் கிடைத்தன. அவ‌ற்றின் தரமும் குணமும் என்னை வியக்க வைத்தன. அறிவிலே முதிர்ந்திருந்தாரே தவிர, வயோதிகத்திலும் அவர் மனதின் தீவிரம் மங்கவில்லை.

வயோதிகம் தவிர்க்க இயலாதது. அதன் வசத்தில் வசதியுள்ளவர்களுமே துயருறக் கூடும். உடல் நலம் குன்றிய போது
ஏமாற்று வித்தைக்காரர்களும் தேடி வந்து விட்டால்?

சமயத்திலே உதவிய மு. கருணா நிதிக்கு நன்றி செலுத்த வேண்டும்...

அவரை அன்போடு கவனித்துக் கொண்ட மருத்துவrukkum மற்றவrukkum தான்...

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

ராஜம் கிருஷ்ணனின் இரு சிறுகதைகள்:
http://www.sirukathaigal.com/tag/%E0%AE ... %E0%AF%8D/

அரசி, அவருடைய கட்டுரைகளை நான் படித்ததில்லை ...அவற்றை எங்கே படித்தீர்கள்? எதைப் பற்றி....? ( வலையில் கிட்டாத கட்டுரைகள் சில) கிடைத்தால் அவற்றை என் வலைப்பூவில் போடலாமே என்று நினைக்கிறேன்....

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by arasi »

Pasupathy,
They appeared in Dinamani as articles. I do not recollect now the subject matters--environment, education?

These two stories are touching, but she was capable of more, wasn't she? Her novels were even better, if I remember. See the way one reader has reacted on knowing that she wrote the story in 1963!

CML isn't around that much to add to these :(

Thank you for the youtube link of the movie digambara sAmiAr. I am watching it here and there (I am impatient to sit through a movie as a rule!)The titles reveal a lot, as usual.With a long list of pADalAsiriyar-s, Kannadasan's appears at the end. A blossoming lyricist he was then...

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

yes, arasi, I do remember some of her articles in Dinamani now....
Since her books are nationalized, you can find many here:
http://www.tamilvu.org/library/national ... hor-78.htm

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by venkatakailasam »

Some of her books can be purchased here:

http://www.noolulagam.com/?s=%E0%AE%B0% ... AF%8D&si=2


சூரியக் கதிர்கள் (ராஜம் கிருஷ்ணன்)

Download from here:

http://www.openreadingroom.com/tag/%E0% ... %E0%AF%8D/

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Ponbhairavi »

திரு பசுபதி , உங்கள் கவிதையை படித்த பின் எனக்கு தோன்றியது :


பதியோடு போர் களமேகிய திரு மாதர்கள் இருவர்
ததி சோரனின் *பிரியாள் சத்ய பாமா எனும் பெயராள்
எழிலாய் சமர் புரிந்தாள் அந நரகாசுரன் அழிந்தான்
அழியாப் புகழ் கொண்டாள் அது தீபாவளி திருநாள்

மட மயிலாள் **துணை புரிந்தாள் என்பதனால் வரம் பெற்றாள்
திட மைந்தனை மனையாளோடு நெடுங் கானகம் போக்கி
சீர் இலங்கா நகர் ***கொடுங் காவலன் முடி பத்தும் சிந்துவித்தாள்
பார் நல மேவிய செயலாகினும் பதி இழந்தாள் பழி சுமந்தாள்

பின் **** யுகமே போற்றிடுமே செயல் ஒன்றே தான் எனினும்
முன் யுகம் வாழ்ந்த ஓர் பெண்மைக்கு பழி யானது விதி வழியோ
* தயிர் திருடியவன் ** மயிலை சின்னமாக கொண்ட கேகய நாட்டு பெண் கைகேயி
***ஒரே சொற்றொடர் நேர் விரோதமான இரு பொருளில் : பெருமை துலங்காத நகர் - செல்வமிகு இலங்கை
****பின் யுகம் கிருஷ்ணாவதாரம் முன் யுகம். ராமாவதாரம்

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by venkatakailasam »

அஞ்சலி -ராஜம் கிருஷ்ணன்

By Jayamohan

" மகத்தான ஒருகாலகட்டத்தின் முகம் ராஜம்கிருஷ்ணன். நாம் இன்றிருக்கும் கனவுகளற்ற அரசியல் சூழலில் நீள்மூச்சுடன் நினைத்துப்பார்க்கவேண்டிய பல பெயர்களில் ஒன்று. அவர் ஈவிரக்கமற்ற முறையில் தூக்கி வீசப்பட்டது போல நாம் இன்றிருக்கும் காலகட்டத்தைச் சுட்டுவது இன்னொன்றில்லை. காந்தியையும் நேருவையும் தூற்றி மகிழும் தலைமுறை செய்தேயாகவேண்டிய ஒரு செயல் அது.

ராஜம் கிருஷ்ணனுக்கு அஞ்சலி"

http://www.jeyamohan.in/?p=63961

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

பொன்பைரவி, பாமைக்கும், கைகேயிக்கும் ஓர் ஒப்பீடு.... நல்ல கருத்தோட்டம்.

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

சங்கீத சங்கதிகள் - 40
சிவனின் தீபாவளிப் பாடல்கள்
http://s-pasupathy.blogspot.com/2014/10/40.html

thanjavooran
Posts: 3041
Joined: 03 Feb 2010, 04:44

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by thanjavooran »

Thanx Shri VK and Shri Pasupathi for sharing
Thanjavooran
24 10 2014

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Ponbhairavi »

Pasupathy, thanks

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள்பதிவு:

போ வேகமாகவே போ!

'அம்மன் தரிசனம்' 2002 தீபாவளி மலரில் வந்த கவிதை .

http://s-pasupathy.blogspot.com/2009/07/blog-post.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள் பதிவு

“ திருமால் மாருதி” : மாலை மாற்று
http://s-pasupathy.blogspot.com/2012/07 ... st_09.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

கவிதை எனக்கோர் ஆனந்தம் !

கோபுர தரிசனம் 2014 தீபாவளி மலரில் வந்த கவிதை

http://s-pasupathy.blogspot.com/2014/10/blog-post.html

vgovindan
Posts: 1950
Joined: 07 Nov 2010, 20:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by vgovindan »

கிட்டப்பா, MSS, நீதிபதி இஸ்மாயில் ஆகியோரைப் பற்றிய சில சுவையான தகவல்கள் -

"செங்கோட்டை திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த கங்காதர ஐயர் தன் புதல்வர்களாகிய காசி ஐயர், கிட்டப்பா, இருவரையும் நாகூர் தர்கா ஆஸ்தான வித்வானாக விளங்கிய உஸ்தாத் தாவுத் மியான் அவர்களிடம் இசை பயில அனுப்பி வைத்தார் என்ற உண்மை பலருக்கும் தெரிய நியாயமில்லை."

http://nagoori.wordpress.com/2012/06/11 ... %e0%ae%95/

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by venkatakailasam »

Thank you shri Govindan for sharing this vintage article...

Some more about the great:

" பேராசிரியர் கே.சுவாமிநாதன் என்ற புகழ்பெற்ற காந்தியவாதியைத் தெரியாதவர்கள் இருக்க இயலாது. தனிமனித ஒழுக்கத்தின் சிகரமாக தொண்ணூறு வயதுக்குமேல் நிறைவாழ்வு வாழ்ந்தவர். மகாத்மா காந்தி நூல்களைத் தொகுத்தவர். கல்லூரி நாள்களில் இஸ்மாயில் தனது அறிவுக் கூர்மை காரணமாக பேராசிரியர் சுவாமிநாதனின் பெறாத பிள்ளைபோல் ஆகிவிட்டார். காந்தியச் சிந்தனைகள் பலவற்றை அவர் உள்வாங்கிக்கொண்டது பேராசிரியரிடமிருந்துதான்.

இஸ்மாயிலின் உறவினர்கள் எல்லாம் அசைவம்தான். ஆனால், பேராசிரியரின் காந்தியத் தாக்கம் இஸ்மாயிலை முழு சைவமாக மாற்றிவிட்டது. (இளம் வயதிலிருந்தே காந்தியின் "ஹரிஜன்" இதழ்களை வால்யூம், வால்யூமாக பைண்ட் செய்து வைத்துக்கொண்டு தம் வாழ்நாளின் இறுதிவரை பாதுகாத்து வந்தார் இஸ்மாயில்.)

உணவில் சைவத்தைப் பின்பற்றிய அவருக்கு, மிகவும் பிடித்தது வைணவக் காப்பியமான கம்பராமாயணம். கம்பர் அவரது முழுமனதையும் கொள்ளை கொண்டுவிட்டார் என்றுதான் கூறவேண்டும். இஸ்மாயிலின் கம்பராமாயணச் சொற்பொழிவைக் கேட்ட தமிழ் அன்பர்கள், ஆய்வுச்சுவை தோய்ந்த அந்த இனிய தமிழில் சொக்கிக் கிறங்கினார்கள். இஸ்மாயில், பல இடங்களில் மீண்டும், மீண்டும் கம்பன் குறித்துப்பேச அழைக்கப்பட்டார். பலர் அவர் பேசிய அதே கம்பன் கருத்தை அதே சொற்களில் மறுபடி மறுபடி அவரிடமிருந்தே "நேயர் விருப்பம்"போல் கேட்க ஆசைப்பட்டார்கள்.

சொற்பொழிவாளராக இருந்த இஸ்மாயில், புகழ்பெற்ற பல பத்திரிகைகளின் தீபாவளி மலர் உள்ளிட்ட சிறப்பிதழ்களில் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். அவர் எழுதிய முதல் புத்தகம், "மௌலானா அபுல்கலாம் ஆசாத்" பற்றியது. அதற்கு முன்னுரை தந்து பெருமைப்படுத்தியவர் மூதறிஞர் இராஜாஜி.

கம்பன் கண்ட இராமன்
கம்பன் கண்ட சமரசம்
செவிநுகர் கனிகள்
வள்ளலின் வள்ளல்
மும்மடங்கு பொலிந்தன
பழைய மன்றாடி

என அடுத்தடுத்து இவரது பழந்தமிழ் ஆய்வு நூல்கள் நிறைய வெளிவரலாயின.

வாலிவதை பற்றிய இவரது "மூன்று வினாக்கள்" என்ற நூல், உலகப் புகழ்பெற்ற ஓர் ஆன்மிகப் பெரியவரைப் பெரிதும் கவர்ந்தது. அந்த நூலுக்காகவே இவருக்குப் பொன்னாடை அணியச் செய்து, பாராட்டி மகிழ்ந்த அந்தத் துறவி நூறாண்டு வாழ்ந்த காஞ்சி மகாபெரியவர் பரமாச்சாரியார்.

இஸ்மாயிலுக்கும், பரமாச்சாரியார் மேல் மிகுந்த மரியாதை உண்டு. "ஒருவர் எந்த மதத்தில் பிறந்தாரோ, அந்த மதத்தின் ஆன்மிக நெறிகளை அனுசரித்து வாழவேண்டும்", என்ற பரமாச்சாரியாரின் கருத்தை இஸ்மாயில் பெரிதும் போற்றியவர்.

இயல் செல்வம்
சேவாரத்தினம்
இராமரத்தினம்

முதலிய பல பட்டங்கள் இவரது இயல்புக்குப் பொருத்தமாக வழங்கப்பட்டன.

பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியாருக்கு இவர்மேல் அன்பும் மதிப்பும் உண்டு. இவருக்குக் கடிதங்கள் எழுதும்போது, "உலகம் போற்றும் உத்தம" என்று தொடங்கித்தான் கடிதம் எழுதுவாராம் அண்ணங்கராச்சாரியார்.

கம்பன் கழக நிறுவனர்களுள் ஒருவர் இஸ்மாயில்.

"தினமணி" முன்னாள் ஆசிரியர் ஏ.என்.சிவராமன்
கம்பன் அடிப்பொடி சா.கணேசன்
பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன்
சி.எம்.அழகர்சாமி
பழ.பழனியப்பன்

ஆகியோர் மற்ற நிறுவனர்கள்.

இப்போது கம்பன் கழகத்தின் தலைவராக இயங்குபவர் ஆர்.எம். வீரப்பன்.

கம்பராமாயண மூலநூலை, மெல்லிய உறுதியான தாளில் முழுமையான கையடக்க ஆராய்ச்சிப் பதிப்பாகப் பதிப்பித்த பெருமை இஸ்மாயிலுக்கு உண்டு.

தெ.பொ.மீனாட்சிசுந்தரம்
அ.ச.ஞானசம்பந்தன்
தெ.ஞானசுந்தரம்

முதலிய தமிழ் அறிஞர்கள் அந்தப் பதிப்புக் குழுவில் இடம்பெற்றிருந்தார்கள்.

இஸ்மாயிலின் மிகப்பெரிய சாதனை என்று இந்தப் பதிப்புப் பணியைச் சொல்லலாம்.

1976இல் நடைபெற்ற கம்பன் விழாவில் அதன் முதல் பதிப்பு வெளியாயிற்று. ஆயிரத்துக்கும் மேலான கம்பன் அன்பர்கள் அந்தப் பதிப்பை விலைகொடுத்து வாங்க வரிசையில் நெடுநேரம் நின்றார்கள். வாங்குவதில் பெரும் போட்டி இருந்ததால், காவல்துறையினர் தலையிட்டு வரிசையை ஒழுங்கு செய்ய வேண்டியிருந்தது.

மூதறிஞர் இராஜாஜி
தீரர் சத்தியமூர்த்தி
பெருந்தலைவர் காமராஜ்

ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் இஸ்மாயில்.

சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியாக விளங்கிய பெருமைக்குரியவர் இஸ்மாயில்.

1980இல், முந்தைய ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரிக்குப் பிறகு, தமிழகத்தின் தாற்காலிக ஆளுநராகவும் சிறிதுகாலம் பணியாற்றியிருக்கிறார்."

நன்றி:- தினமணி

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

நன்றி, கோவிந்தன் , வெங்கடகைலாசம்.
டொராண்டோவிற்கு இஸ்மையில் வந்தபோது கம்பன் பற்றிப் பேசியது நினைவுக்கு வருகிறது.

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by arasi »

ஒரு இஸ்மாயில், ஒரு கலாம்!

பசுபதி,
'போ, வேகமாகவே போ', முதல் பதிவிலேயே என்னை ஊக்கிற்று :) பொன்பைரவி ஒன்றெழுதி அதன் பின், நானும் ஒன்று எழுத முயன்றேன் என நினைவு.

'கீப் தெம் கமிங்'--உம் பணி தொடரட்டும்--என்பது தவிர வேறென்ன சொல்ல?

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Ponbhairavi »

ச. ரி க ம ப ம க ரி ச
ச ரி க ம க ரி ச
ரி க ம க ரி
க ம க

ஸ்வர குறைப்பில் மாலை மாற்று

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Ponbhairavi »

ச. ரி. க. ம. க. ரி. ச
மே வு. ஸ். வ ர. மே ழு. ( எனினும்)
ந. ல். லி. சை இ ல் லை. ( அதனால்)
வா,வே க. மா. க. வே,வா
நீ ரா க. மா க ரா* நீ

*தெலுங்கில். வா
முதலடியும் ஈற்றடி. இரண்டும் மாலைமாற்று

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

I'm sure Ramaswamy Dikshitar's "palindromic" kriti is well-known in this Group.

See: ( in Skt)
http://carnatica.net/lyrics/rd1.pdf

or ( in English)
http://carnatica.net/special/rdiksitar.htm

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

முல்லைத் திணை வாசன் : கவிதை

http://s-pasupathy.blogspot.com/2014/11/blog-post.html

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by arasi »

கும்மிக்கு இசைந்த பாடல். பைரவியிலே பாடிப் பார்த்தேன். அழகாக அமைந்திருக்கிறது.

முல்லைத் திணை வாசன் யாரோ? (பைரவியென்றதுமே யாரோ, இவர் யாரோ என்று கேட்கத் தோன்றுகிறது)...

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

arasi wrote:கும்மிக்கு இசைந்த பாடல். பைரவியிலே பாடிப் பார்த்தேன். அழகாக அமைந்திருக்கிறது.

.
நன்றி, அரசி. கும்மிக்கென்றே ஒரு யாப்பிலக்கணம் உள்ளது. அதை அனுசரித்து சிந்துவை இயற்றினால், கும்மி அப்படியே குதித்து வந்து கும்மாளம் போடும்!

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Ponbhairavi »

முத்தமிழ் மோகம் நிறைந்தவன்டி அவன்
முக்கண்ணன் பேரில் மறைந்தவன்டி
அள்ளும் பைரவியில் பாடுங்கடி உள்ளம்
துள்ளி எழ நடம் ஆடுங்கடி

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by sridhar_ranga »

பசுபதிக்கோர் (பொன்) பைரவிக் கும்மி! பலே பலே!!

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Ponbhairavi »

ஸ்ரீதர் ரங்கா
நன்றி

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

பொன்(னான)பைரவிக் கும்மி!

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Ponbhairavi »

Sri pasupathi,

Thanks
Rajagopalan

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள்பதிவு

இன்று சி.வி.ராமனின் பிறந்தநாள்.

ராமன் விளைவு : கவிதை

http://s-pasupathy.blogspot.com/2013/11 ... ost_7.html

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by arasi »

விளைவில் திளைத்தவன், ராமன்--
கிளையில் தொங்கும், மதுவனமழித்த‌
வானரர் போல் மதுவில் அழிவனோ?
வானரர் கோன், அந்த ராமனைப் போலவே?

Post Reply