Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post Reply
arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by arasi »

'வானவர் கோன்' என சொல்லப் போனது, தட்டும் போது 'வானரர் கோன்' என்றாகி விட்டது!

திருத்தவில்லை, அதுவும் சரிதானே என்று :)

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by arasi »

பரிசுக் கட்டின் (கட்டுக் கதைகளின்) கதையையும் ரசித்தேன் :) படத்தையும்தான்...

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

அரசியின் தண்டமிழைப் பார்ப்பதற்கே
அன்றாடம் போடணுமோ பதிவொன்றை ? :-)

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by arasi »

பதிவைப் பதிவாய்ப் போடுவார் பசுபதி
பதியாய் இவரைக் கொண்ட பைரவியும்

விரி படப் பாம்பணை சிரிதரனும் தான்
கிரி, மண், கடல் தாண்டி வலை வருவார்

பெயர் மகுடம் தரித்தாலும், நானோ
உயர் கவிகளுக்கு நடுவே வெறும் உவர்!

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by arasi »

பாட்டு விரும்பியைக் கண்டிலோம்-- நம்
நாட்டுப் பக்கம் வருவதும் எப்பொழுதோ? :(

'எதிர் வந்து நிற்கும் குமரன்' போலவே
புதிர் ஏதானாலும் விடை கொணர்பவருமே...

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள்பதிவு:
ஆரணியாரின் நூல்கள்
http://s-pasupathy.blogspot.com/2012/09/blog-post.html

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by arasi »

துப்பறியும் நவீன‌ங்களில் சிறு வயதில் எனக்கு அவ்வளவு ஈடுபாடு கிடையாது. ஆகையால் ஆரணியாரின் பரிச்சயம் அவ்வளவாக இல்லை. உங்கள் ஆனந்த ஸிங் பதிவை ரசித்தேன்.அவரது உயர்வைப் பற்றித் தெரிந்தது.

நம் சிறு வயதிலே வடுவூர் பிரபலமாக இருந்தாலும், அவர் எழுதிக் கொண்டிருக்கவில்லை ( இருந்தாரா என்றும் நினைவில்லை). அவருடைய வர்ணனைகள் சிரிக்க வைக்கும் அளவிற்கு ஓஹோ என்றிருக்கும். அவருடைய கௌன்ட்டர் பார்ட் வைமுகோ என்பது போல்...

வைமுகோவின் பெண்கள் முன்னேற்றம் பற்றிய விழிப்புணர்வும், சமூக நல ஆர்வமும் என்னைக் கவர்ந்திருந்தாலும், அவருடைய மெலோ ட்ராமா எழுத்து அலுப்பைத் தரும்! நேரிலே சில முறைகள் சந்தித்திருக்கிறேன். ஒன்பது கெஜ கதர் புடவை, ஸ்ரீ சூர்ணம் நெற்றியில், சிரித்த முகம், இனிய பழகு முறை என்று நினைவு...

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

ஆரணி குப்புசாமி முதலியார் (1866/67-1925) ; வடுவூர் கே. துரைசாமி அய்யங்கார் (1880-1942) . வடுவூராரின் சில நாவல்கள் படமாக்கப் பட்டது அவருக்கு மேலும் ’பேர் வாங்கிக் கொடுத்தது’. அவரைப் பற்றி எழுதுவேன். வை.மு.கோவைப் பற்றியும் எழுதவேண்டும்.
காந்தி, ராஜாஜி பேர்களைச் சேர்த்து ’ராஜ்மோகன்’ என்று ஒருவனுக்குப் பேர் வைத்தவராயிற்றே! மறக்க முடியுமா!

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

ஆரணியாரின் ‘ஆனந்தசிங்’ - 1

http://s-pasupathy.blogspot.com/2012/08/1.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

ஆரணியாரின் ‘ஆனந்தசிங்’ - 2
http://s-pasupathy.blogspot.com/2012/08/2.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

ஆரணியாரின் ‘ஆனந்தசிங்’ -3

http://s-pasupathy.blogspot.com/2012/08/3.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

கவிஞர் சுரபி - 1
நேரு எங்கள் மேரு
‘சுரபி’
http://s-pasupathy.blogspot.com/2014/11/1.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

ஆரணியாரின் ‘ஆனந்தசிங்’ - 4

http://s-pasupathy.blogspot.com/2012/08/4.html

thanjavooran
Posts: 3041
Joined: 03 Feb 2010, 04:44

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by thanjavooran »

திரு பசுபதி,
அளித்துள்ள தொகுப்புகள் அனைத்தும் ஓய்வாக ரசித்தேன். வெகு அருமை.
வாழ்த்துக்கள்.
தஞ்சாவூரான்
15 11 2014

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by arasi »

குழந்தைகள் தினம்...


நேருவை, உயர் நேருவை இன்று நினைந்தேன்
நேரில் கண்டதெல்லாம் மனம் கொணர்ந்தேன்

பொக்கை வாய் மோஹனருக்குப் பிறவா மகன்
தக்கை மன மனிதருக்கோர் சவால்! தந்த மேனி
வெக்கை தாங்குமோ என்றிருக்கும், கன்னம் சிவக்கும்
எக்கை மீறும் மன திடமுடன், உர‌மும் உறவாடும்!

சிறு குழந்தை மனம், துள்ளும் நடையில் சிறுவன்
இறுதி வரை இளமை குன்றா நினப்பும் நடப்பும்...
மறு முறையும் சொல்வேன்--இக்காலம் அறியுமா
உறுதி கொண்டவரை, அந்த உயர்ந்த நேருவை?


ஒற்றை ரோஜாவும், இன் முறுவலும் தரித்து
மற்றைய நாட்டு மக்களும் போற்றிய தலைவர்!
தலையாய தனி மனிதர் என இறுமாந்தோம்
மலையில் மேருவோ, இமயமோ இவரென்றுமே!

நேருவை, உயர் நேருவை இன்று நினைந்தேன்
நேரில் கண்டதெல்லாம் மனம் கொணர்ந்தேன்...

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by arasi »

Pasupathy,
I remember the name Surabhi associated with kavithaigaL, and no more. This poem on Nehru, on second and third reading makes it even more enjoyable.

A pity, we now live in a world where the kind of journalism which swamps us is the sensational kind which focuses on personalities--especially the negative aspects of them .

We were lucky to be growing up in the days of heroes and of national fervor. We saw ideals being put to action right in front of our eyes. In today's 'disenchanted' (cynical?) way of thinking, it is very difficult for the youngsters to see the world through our eyes.

Yet, how direly they need to have a taste of those times! They long for it, it seems. Otherwise, why would gurus of positive thinking be best sellers! :(

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

ஆரணியாரின் ‘ஆனந்தசிங்’ - 5

http://s-pasupathy.blogspot.com/2012/08/5.html

ஆரணியாரின் ‘ஆனந்தசிங்’ - 6

http://s-pasupathy.blogspot.com/2012/08/6.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

>>A pity, we now live in a world where the kind of journalism which swamps us is the sensational kind which focuses on personalities--especially the negative >>aspects of them

arasi,
Please read this. May make you feel better!
http://www.thehindu.com/opinion/lead/op ... epage=true

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by arasi »

Yes, I do!

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »


arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by arasi »

இந்த நிறம் சிறிதென்றும்...


வெண்ணையுண்ட வாயன், கண்ணன் கரியவன்
மண்ணை சுழற்றி வந்து பொழியும் கரு முகில்
வண்ணமே அவன்--எண்ணைத் திரி பொழியொளியில்
எண்ணிலாதவ‌னைக் கண்டு போகும் நபரெல்லாம்
திண்ணமாயவனை, மாயவனைத் துதித்தாலும், பின்னும்

பிள்ளைக்கென்னவோ 'நிறமா'கத்தான் பெண் வேண்டுமாம்
எனப் பெருமையுன் சொல்லிக் கொண்டால்-- என்ன‌ பதில் சொல்ல?

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

’தேவன்’: போடாத தபால் - 1
http://s-pasupathy.blogspot.ca/2012/09/1_19.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

’அட்டெண்டர்’ ஆறுமுகம்

சாவி

http://s-pasupathy.blogspot.com/2012/07 ... st_03.html

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Ponbhairavi »

அரசி :771
கவிதை நல்ல நயம் !
வெண்ணை உண்ட வாயன் அவன் மண்ணையும் உண்டவாயன் தான்
திண்ணமாய் +அவனை / திண்ணமாயவனை
எண்ணில்+ ஆதவனை எண்ணிப் பார்த்தால் திரி ஒளியில் காண்பதும் ஆதவன் ஒளி தானே !

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by arasi »

பொன் பைரவி,
பெயரிலேயே ஒளிர்பவர் நீர்!

பொன்னான மனம் கொண்ட பெண் போதாதோ?
மின்னி, சுருங்கி, மடியும் மேனி நிறம் இவர் கேட்பாரோ?

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Ponbhairavi »

கறுப்பு வேண்டாமே என்று அஞ்சுவது இங்கு மட்டும்தானா ?
ஆனால் அது வேறு கறுப்பு இது வேறு கறுப்பு போலும்

ஏரி கட்டை நெருப்பும் கறுப்பாகும் நீர் பட்டால்
கட்டை கரி யும் மீண்டும் எரிந்தால் வெண் சாம்பல்
இது அத்வைத விபூதி என்கிறார் ஆசாரியாள்

:-\

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

’சசி’ - 1 : பெயர் மாற்றம்!

http://s-pasupathy.blogspot.com/2012/06 ... st_22.html

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by arasi »

சசியின் நிமிடக் கதைகளை வெகுவாக ரசித்ததுண்டு. அவர் உம் ஆசிரியரா? !!

ஒரு பிடி கதைகளைக் கொணர்ந்ததற்கு நன்றி. புத்தக வடிவில் அவர் கதைகள் இல்லாதது ஓர் குறையே. கோமதி ஸ்வாமினாதன் பிற்காலத்திலும் பிரபலமாக இருந்தாரே? ஏன் அவர் எழுத்துக்களும் பிரசுரிக்கப்படவில்லை?

உங்கள் வாசகர்களில் ஒருவர் 'அஸ்கா சர்க்கரை' கதை பற்றிக் கேட்கிறார். அது இந்த வெள்ளை மணல் கதைதானோ?

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

ஆம், அரசி, அப்புறம்தான் கண்டுபிடித்தேன்...... சந்ததிகள் முயற்சி எடுத்துக் கொண்டால் தான் நூல்கள் வெளிவரும்..... இப்படிப் பலருடைய படைப்புகள் அச்சில் இல்லை....

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by arasi »

நீங்கள் சொல்வது சரிதான், ஆனாலும், அவற்றை வாங்கிப் படிப்பவர் எத்தனை பேர்!

என் புத்தகங்களை, காகிதத்திலே அச்சேறியவற்றை விட‌, வலையில் படித்தவர்களே அதிகம்! ''ஓய் பாரதியாரே!"--யதுகிரி அம்மாளின் புத்தகத்தின் தமிழாக்கத்தை* நான் புத்தகமாக வெளியிட்டிருந்தால் இந்த அளவு வாங்கிப் படித்திருப்பார்கள் என்று சொல்ல முடியுமா? ரஸிகாஸ். ஆர்க்--'குடும்பம்' அதைப் பரவலாகப் பலரும் படிக்க உதவியது :)

* Correction: I meant, the english translation of it :(

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

இக்காலத்தில் அவர்களின் படைப்புகளை பலரும் படிக்க வேண்டும் என்று குடும்பத்தினர் உண்மையில் விரும்பினால், பல வழிகள் உள்ளன. காப்புரிமையை நெகிழ்த்தினால், வெளியிடப் பதிப்பகங்கள் உள்ளன.
இலவச மின்னூல்கள் பிரபலமாகி வருகின்றன.
http://freetamilebooks.com/
வலைப்பூக்களிலும் இடலாம்....

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

தந்திரம் பலித்தது!

சசி
http://s-pasupathy.blogspot.ca/2012/07/blog-post.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

சாவி -11: 'அப்பச்சி' அருணாசலம்
'அப்பச்சி' அருணாசலம்
சாவி
http://s-pasupathy.blogspot.com/2014/11/11.html

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by arasi »

நன்றி, பசுபதி!
இதை முன்பு படித்த நினைவில்லை.

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

எனது மனமார்ந்த நன்றி
தேவன்
http://s-pasupathy.blogspot.com/2012/07 ... st_15.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

கல்கி - 6 : மாணிக்கத்தை இழந்தோம்
மாணிக்கத்தை இழந்தோம்
ராஜாஜி

http://s-pasupathy.blogspot.com/2014/12/6.html

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by arasi »

ஸம்பாதியின் தெவிட்டா, மறக்க முடியாத கட்டுரை.
கொணர்ந்ததற்கு நன்றி கூறப் போவதில்லை :)

ராஜாஜியின் நறுக்குத் தெறித்த நடையில்--ஓர் சீடனை, நண்பனை, அபிமானியை இழந்த சோகம் இழைந்தாலும், துறவித்தன்மையும் ஊடு பாய்கிறது...

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Ponbhairavi »

நன்றி பற்றிய தேவன் கட்டுரைக்கு ஒரு தொடர் சிந்தனை

சராசரி மனிதன் ஏன் நன்றி கெட்டவனாக இருக்கிறான் ?

ஒருவரிடம் பெற்ற உதவியின் காரணமாக ஆழ் மனதில் ஏற்படும் நன்றி உணர்வு ஒரு "கடனாக " சுமையாக சராசரி மனிதனை வாட்டுகிறது. ஆகவே தான் சாதாரண மனிதன் தான் யாரிடமிருந்து மிகுந்த பயன் அடைந்தானோ அவரைவிட தான் யாருக்கு ஒரு சிறிய உதவி செய்தானோ அவரிடமே உறவு ,ஒட்டுதல் காட்டுகிறான் என்கிறார் பிரெஞ்சு நாடகாசிரியர் LABICHE.
தற்கால உலகில் நம்மிடமிருந்து உதவி பெற்ற உறவினர்கள் நண்பர்கள் நம்மிடமிருந்து விலகி வேறு ஒருவரிடம் மிக ஒட்டுதலாக பழகுவதை புரிந்து கொள்ள உதவுகிறது இந்த ஆழ்ந்த கருது.

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Ponbhairavi »

செய்யுளுக்கு உரிய எதுகை மோனை இவற்றை வசனத்தில் அடுக்க மாட்டார் .இது ஆணுக்கு பெண் வேஷம் போடுவது போன்றது.
ராஜாஜியின் இந்த கருத்து அது வெளியிடப்பட்ட கால கட்டத்தின் பின்னணியில் வைத்து சிந்திக்கப்பட வேண்டியது . கல்கியின் எழுத்து நடையை இதை விட சுருக்கமாக யாரும் ஆராய்ந்து விட முடியாது.

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

அரசி : நல்ல அலசல். நன்றி.

பொன்பைரவி: நன்றி பற்றிய ஆழமான கருத்து. நான் பதிவில் இடுகிறேன்? சரியா? நன்றி.

ராஜாஜி ....அவர் ஒருவரே சொல்லக் கூடியதான சில வாக்கியங்கள் இதில் உள்ளன என்று “சுந்தா” எழுதியிருக்கிறார்.

கல்கியின் ஈமக் கிரியைகள் முடிந்ததும், மயானத்தின் இன்னொரு பக்கம் இரங்கற் கூட்டம். ம.பொ.சி தலைமை. ராஜாஜி துக்கம் சொல்லொணாதது என்று சொல்லிப் பேச மறுத்து விட்டார். பிறகு பிற்பகலில் ரேடியோ பிரதிநிதியாய் மீ.ப. சோமு கேட்டதின் பேரில், தன் உரையை ஒலிப்பதிவு செய்து கொடுத்தார். அதுவே இது. அதற்குப் பின் ம.பொ.சியின் உருக்கமான அஞ்சலி. ( என் பதிவில் அதுவும் இருக்கிறது...)

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Ponbhairavi »

பசுபதி . நன்றி. எனக்கு உங்கள் பதிவில் இட தெரியவில்லை. நீகள் தாராளமாக இடலாம் edit உம செய்துகொள்ளலாம்.. நன்றி நான் உங்களுக்கு சொல்லவேண்டும்.

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

நன்றி, பொன்பைரவி. ( அரசியின் பின்னூட்டமும் அங்கே இடப்பட்டுவிட்டது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்!)

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள்பதிவு:

சங்கீத ‘ஜோக்ஸ்’!

http://s-pasupathy.blogspot.com/2012/12/5_27.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

ராஜாஜி

சாவி

http://s-pasupathy.blogspot.com/2014/12/1.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

பி.ஸ்ரீ. -10: பாரதி விஜயம் -2
விருந்தும் மறுவிருந்தும்
பி.ஸ்ரீ
http://s-pasupathy.blogspot.com/2014/12/10-2.html

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by arasi »

பாரதி தினம், அவர் பாட்டு சுகம் இன்றைக்கு-- ந‌ம் கற்பனையின்
சாரதியவன், அவன் சாதித்ததில் ஒரு துளி நமக்காமோ? அவன்
வாரிதி, அதன் வடிகாலாவது நாமாவோமோ? அவன் களி சிறிதுமே
பாரிதில் நமக்காமோ, என நினைந்து நினைந்திடும் நன்னாள்!

ஆசார்யாவும் வந்தார்-- எத்தனையோ முறை, இவ்வரிகளை எப்படி
ஆச்சரியம் கொள் முறையிலே கவி முழ‌ங்கியிருப்பானெனவும்,
பாசுரம் பாடியவன் பாஞ்சாலி கதை எங்கனமுரைத்திருப்பானென்றும்
ஆயிரம் முறை நினைந்து நினைந்து செவி மடுத்ததுண்டு--இன்று...

அவனே வந்தது போலவும், அவன் குரல் கேட்டது போலவும்
உடனே வந்து, தான் பெற்ற விருந்தைப் பகிர்ந்து, என்இழப்பை
மிக நேர்த்தியானதோர் அனுபவ‌மாக்கிக் கொடுத்ததென்னே!
அழகிய தாமிர வர்ணிக் கரையிலே, நானாண்டுகள் கழிந்து பிறந்-
தழுதுதித்த இடத்தினருகாமையிலே அவன் அமுதூற‌ப் பாடியது
பழுதிலாது ஒலித்ததையெல்லாம், சுவை குன்றாத வகையிலவன்
எழுதிய பொன்னெழுத்தெல்லாம் மின்னிடக் கொணர்ந்தாரே பி ஸ்ரீ!
அழுதேன்--ஆனந்தக் கண்ணீரே, பாரதி பாடலெல்லாம் ஆனந்தமே!

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by arasi »

நன்றி கூறவில்லை, சம்பாதியின் குரல் சமீபத்திலே கேட்டதால்...:)

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

சங்கீத சங்கதிகள் -41

சங்கீத சீசன் 1955: ஆடல் பாடல் -1

http://s-pasupathy.blogspot.com/2014/12/41.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

ஸர்தார் வல்லபாய் படேல்
சுதந்திர இதிகாசத்தில் ஒரு கதை

http://s-pasupathy.blogspot.com/2014/12/blog-post.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள்பதிவு:

சங்கீத சீசன் 1953: ஆடல் பாடல் -1

http://s-pasupathy.blogspot.com/2012/12/1_15.html

Post Reply